சங்க இலக்கியத்தில் உலகியல்

100 views
Skip to first unread message

கல்பனாசேக்கிழார்

unread,
Oct 3, 2010, 9:38:18 AM10/3/10
to மின்தமிழ்
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறநானூறு,76)


சாதலும் புதுவதன்றே ; வாழுதல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே;முனிவின்
இன்னாது என்றலும் இலமே( புறநானூறு, 192)

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண பனிவார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப்பணிபி லாளன்!(புறநானூறு,194)


இன்னாது அம்ம! இவ்வுலகம்;
இனியகாணக,இதன் இயல்பு உணர்ந்தோரே (புறநானூறு,194)

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்,
நண்பகல் அமையமும் இரவும் போல,
வேறுவேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து,
உளவென உணர்ந்தனை ( அகநானூறு,327)


மகளிர் தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர நீத்தலும்,
நீள்சுரம் போகியார் வல்லைவந்து அளித்தலும்,
ஊழ்செய்து,இரவும் பகலும்போல்,வேறாகி,
வீழ்வார்கண் தோன்றும்,தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்க்கு எல்லாம் வரும் ( கலித்தொகை 145)

Innamburan Innamburan

unread,
Oct 3, 2010, 9:45:38 AM10/3/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
நல்லதொரு தொகுப்பு. நல்வரவு. சுருக்கமாக பொருள் கூறின், நலம் பெருகுமே.
"...இன்னாது அம்ம! இவ்வுலகம்;
இனியகாணக,இதன் இயல்பு உணர்ந்தோரே (புறநானூறு,194)..."
இது புரிந்து நடந்தோமானால், நம் சிறப்பு மிகுமே.
இன்னம்பூரான்

2010/10/3 கல்பனாசேக்கிழார் <kalpanas...@gmail.com>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages