தேவீ மாஹாத்ம்யத்தில் ஒரு கேள்வி

92 views
Skip to first unread message
Message has been deleted

N. Ganesan

unread,
Oct 10, 2010, 8:36:03 PM10/10/10
to மின்தமிழ், Santhavasantham

சீரியஸான ஒரு வினா, ஆய்வுத் துணைக்கு.

தேவி புராணங்களில் மகிஷனுடன் போரிடும்போது
துர்க்கைக்குத் துணையாய் பெண் தேவதைகள்
போரிடுவதாக இருகிறதா? அப்படி இருந்தால்
அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படுகிறதா?
அல்லது பொதுவில், தேவியின் தோழியர்கள்
என்று மாத்திரம் சொல்கிறார்களா?

தகவலுக்கு நன்றி,
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Oct 10, 2010, 9:50:46 PM10/10/10
to santhav...@googlegroups.com, மின்தமிழ்


2010/10/11 N. Ganesan <naa.g...@gmail.com>

மஹிஷாசுர மர்த்தினியைக் கேட்கிறீர்களா, அல்லது பண்டாசுர வதத்தைக் கேட்கிறீர்களா?  முன்னது என்றால், லலிதா ஸஹஸ்ரநாமத்தில் குறிப்பிட்ட இந்தப் பகுதியைப் பார்க்கவும்.  போர்க்கோலமும் துணை நின்றவர்களும் குறிக்கப்படுகிறார்கள்: 

 65   Bhandasura vadodyuktha shakthi sena samavitha – She who is surrounded by army set ready to kill Bandasura
  66   Sampathkari samarooda sindhoora vrija sevitha – She who is surrounded by Sampathkari (that which gives wealth) elephant brigade
  67   Aswaroodadishidaswa kodi kodi biravrutha – She who is surrounded by crores of cavalry of horses
  68   Chakra raja ratha rooda sarvayudha parishkridha – She who is fully armed and rides in the Srichakra chariot with nine stories
  69   Geya chakra ratha rooda manthrini pari sevitha – She who rides in the chariot with seven stories and is served by manthrini who is the goddess of music
  70   Giri chakra ratharooda dhanda natha puraskrutha – She who rides in the chariot with five stories and is served by goddess Varahi otherwise called Dhanda natha
  71   Jwalimalika ksiptha vanhi prakara madhyaka – She who is in the middle of the fort of fire built by the Goddess Jwalamalini
  72   Bhanda sainya vadodyuktha shakthi vikrama harshitha – She who was pleased by the various Shakthis(literally strength but a goddess) who helped in killing the army of Bhandasura
  73   Nithya parakamatopa nireekshana samutsuka – She who is interested and happy in observing the valour of Nithya devathas (literally goddess of every day)
  74   Banda puthra vadodyuktha bala vikrama nandhita – She who was pleased by the valour of Bala devi(her daughter) in destroying the sons of Banda
  75   Manthrinyamba virachitha vishangavatha Doshitha – She who became happy at seeing Goddess Manthrini kill Vishanga(this ogre (brother of Banda) represents our desires for physical things)
  76   Vishuka prana harana varahi veeerya nandhitha – She who appreciates the valour of Varahi in killing Vishuka (another brother of Banda-he is personification of ignorance)
  77   Kameshwara mukaloka kalpitha sri Ganeshwara – “She who created God Ganesh by the mere look of the face of her Lord , Kameshwara”
  78   Mahaganesha nirbhinna vignayanthra praharshitha – She who became happy at seeing Lord Ganesha destroy the Vigna Yanthra (contraption meant to delay ) created by Vishuka
  79   Banda surendra nirmuktha sashtra prathyasthra varshani – She who rained arrows and replied with arrows against Bandasura
  80   Karanguli nakhothpanna narayana dasakrithi – “She who created the ten avatharas of Narayana from the tip of her nails (when Bandasura send the Sarvasura asthra (arrow), she destroyed it by creating the ten avatharas of Vishnu)”
  81   Maha pasupathasthragni nirdagdhasura sainika – She who destroyed the army of asuras by the Maha pasupatha arrow.
  82   Kameshwarasthra nirdhagdha sabandasura sunyaka – She who destroyed Bandasura and his city called sunyaka by the Kameshwara arrow.


பண்டாசுர வதத்தில் பயன்பட்ட படைகளும் கருவிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாலா, வாராஹி, மந்த்ரிண்யம்பா, ஜ்வாலாமாலினி.  இவர்களில் ஜ்வாலாமாலினி, லலிதையின் அக்னிக் கோட்டைக்கு அதிபதி.  (சமணர்களுக்கு ஒரு ஜ்வாலினி, ஜ்வாலாமாலினி உண்டு.  அவளும் அக்னிக் கோட்டைவாசி என்று நினைவு.  உங்களுடைய ஆய்வின் மூலமாக, லலிதா தேவியே சமணர்களுக்கு உரியவள் என்று நிறுவினாலும் சரியே.  பத்மா, பத்மமாலினி என்பதெல்லாம் கூட லலிதாவுக்கும் பெயர்; சமணப் பெண் தெய்வங்களுக்கும் பெயர்.  ஆகவே, சமண தெய்வங்களைத் திருடிக் கொண்டுவிட்டார்கள் என்று வேண்டுமானாலும் ஆராயலாம்.  :D வள்ளுவரை படுத்தற பாட்டை லலிதாவையும் படுத்தினா என்ன குறை?  பாரா (அட....நம்ம பா ராகவன் இல்ல...பானுகுமார் ராஜேந்திரன் வந்து என் சட்டயப் பிடிக்கறதுக்கு முன்னால நான் ஜூஊட்....)

சாக்தத்தில் மிக்க தேர்ச்சி பெற்ற பெரியவர்கள் வந்து மற்றதைச் சொல்வார்கள்.  என் பங்கைச் சொல்லி விடை பெறுகிறேன்.  (பின் குறிப்பு: பானுகுமார் ராஜேந்திரன் நல்ல நண்பர்.  எனக்கு இன்னொரு friend-in-law.  ஆகவே, இங்கே அவரைப் பற்றிச் சொல்லியிருப்பது நட்புரிமையால் மட்டுமே.  வம்பு ஏதும் இல்லை என்பது இதனால் சகலவிதமானவருக்கும் அறிவிக்கப்படுகிறது.)

--
அன்புடன்,
ஹரிகி.

karuannam annam

unread,
Oct 10, 2010, 11:26:30 PM10/10/10
to mint...@googlegroups.com
  உங்களுடைய ஆய்வின் மூலமாக, லலிதா தேவியே சமணர்களுக்கு உரியவள் என்று நிறுவினாலும் சரியே.  
 
வள்ளுவரை படுத்தற பாட்டை லலிதாவையும் படுத்தினா என்ன குறை?  

நல்ல நண்பர் = friend-in-லா?. 

--
அன்புடன்,
ஹரிகி.

இரசிக்க வைக்கும் ஹரிகி முத்திரை!

 அன்புடன்
 சொ.வி.
 

Hari Krishnan

unread,
Oct 10, 2010, 11:34:07 PM10/10/10
to mint...@googlegroups.com


2010/10/11 karuannam annam <karu...@gmail.com>

நல்ல நண்பர் = friend-in-லா?. 

மனைவி அல்லது கணவரின் சகோதரர் ப்ரதர் இன் லா; சகோதரி சிஸ்டர் இன் லா; தந்தை ஃபாதர் இன் லா; தாய் மதர் இன் லா.  அது மாதிரி நெருங்கிய நண்பரின் நெருங்கிய நண்பர் ப்ரெண்ட் இன் லா.  அவ்ளாதான்.  (பானுகுமார் ராஜேந்திரனுடைய மதிப்புக்குரிய, சமண சமய நூல்களில் அத்தாரிடியான, ஜினாலய அர்ச்சகரின் மகனான, தற்போது டெல்லியிலோ வேறு எங்கோ பேராசிரியராக விளங்கும் சி. தேவகுமார் எனக்கு ஒரு வருஷம் சீனியர்.  பி எஸ்சி படித்துக்கொண்டிருந்த போது நாங்கள் குடியிருந்த வீட்டின் மாடியில் குடியிருந்தவர்.)   அதான் ஃப்ரெண்டின்லா.

Dhivakar

unread,
Oct 11, 2010, 12:53:18 AM10/11/10
to mint...@googlegroups.com
அடடே, இப்படி க்ளூ கொடுக்கலாமா ஹரிகி?
இனிமேல் பாருங்கள் எத்தனை ஆங்கில நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டப்படப்போகின்றன, அதாவது லலிதா சமணம்  என்பதற்கு.. (:-

தி

2010/10/11 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

devoo

unread,
Oct 11, 2010, 1:32:26 AM10/11/10
to மின்தமிழ்
சிந்து சமவெளிக் குறிப்பிலும் மந்த்ரிணி, தண்டினி எல்லாம் உண்டாம்

தேவ்

On Oct 10, 11:53 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> அடடே, இப்படி க்ளூ கொடுக்கலாமா ஹரிகி?
> இனிமேல் பாருங்கள் எத்தனை ஆங்கில நூல்களில் இருந்து மேற்கோள்கள்
> காட்டப்படப்போகின்றன, அதாவது லலிதா சமணம்  என்பதற்கு.. (:-
>
> தி
>

> 2010/10/11 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
> > 2010/10/11 karuannam annam <karuan...@gmail.com>

Swarna Lakshmi

unread,
Oct 11, 2010, 5:13:54 AM10/11/10
to mint...@googlegroups.com
>>முன்னது என்றால்
 
பின்னது!! (பண்டாசுர வதம்)
 
மேலும் ஒரு தகவல்.
மந்த்ரிணீ (திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஸ்வரூபம்), தண்டினி/ வாராஹி (மீனாக்ஷீ ஸ்வரூபம் - மதுரை கதம்ப வனம்) - லலிதா த்ரிபுரசுந்தரி (காமாக்ஷி ஸ்வரூபம் - காச்மீர தேசம் என்று காஞ்சி பிரதேசத்துக்கும் பெயர், காஞ்சி நகரமே ஸ்ரீ நகரமாகும் - இன்றைக்கு அழுக்கும் pollution ம் தான் இருக்கிறது)...
 
காஞ்சியை மத்திய ஸ்தானமாகக் கொண்டு திருமுல்லை வாயில், திரு மயிலை, திருவான்மியூர் ஆகிய தலங்களை பிந்து முக்கோணத்தின் மூன்று ஆதாரங்களாக சொல்வதுண்டு.
>>வள்ளுவரை படுத்தற பாட்டை லலிதாவையும் படுத்தினா என்ன குறை?
 
எனக்கு இதில் ஒரு கேள்வி - திருவள்ளுவர் சமணரென்றால் எதற்காக மெனக்கெட்டு ஓதுவதைப்பற்றியும் (ஓத்து என்றாலே வேதம், ஓதுதல் என்று வேதம் ஓதுதற்கே பெயர்). அந்தணனைப் பற்றியும், அவர்தம் கடமை பற்றியும் அங்கங்கே விளக்கமாகப் பேசுகிறார்?? சமணத்தில் வேதம் உண்டா என்ன??
 
ஸ்வர்ணா


From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: santhav...@googlegroups.com
Cc: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Mon, 11 October, 2010 7:20:46 AM
Subject: [MinTamil] Re: தேவீ மாஹாட்ம்யத்தில் ஒரு கேள்வி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Oct 11, 2010, 7:38:13 AM10/11/10
to மின்தமிழ்

இலளிதையின் சகசிரநாம விளக்கத்துக்கு மிக நன்றி, திரு. ஹரி.

மயிடவதத்திலும் தோழியர் கொற்றவையுடன் உள்ளனர்.

சிவகணங்கள் பின்னால், முன்னால் பெண்கள்:
சிங்கத்தின் கீழே, வில்லின் இடப்புறம் - பாருங்கள்.
மாமல்லைச் சிற்பம்:
http://en.wikipedia.org/wiki/File:Durga_Slays_Mahisasura.jpg


அன்புடன்,
நா. கணேசன்


On Oct 10, 8:50 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/10/11 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > சீரியஸான ஒரு வினா, ஆய்வுத் துணைக்கு.
>
> > தேவி புராணங்களில் மகிஷனுடன் போரிடும்போது
> > துர்க்கைக்குத் துணையாய் பெண் தேவதைகள்
> > போரிடுவதாக இருகிறதா? அப்படி இருந்தால்
> > அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படுகிறதா?
> > அல்லது பொதுவில், தேவியின் தோழியர்கள்
> > என்று மாத்திரம் சொல்கிறார்களா?
>
> மஹிஷாசுர மர்த்தினியைக் கேட்கிறீர்களா, அல்லது பண்டாசுர வதத்தைக்
> கேட்கிறீர்களா?  முன்னது என்றால், லலிதா ஸஹஸ்ரநாமத்தில் குறிப்பிட்ட இந்தப்
> பகுதியைப் பார்க்கவும்.  போர்க்கோலமும் துணை நின்றவர்களும்
> குறிக்கப்படுகிறார்கள்:
>

>  65   Bhandasura vadodyuktha shakthi sena samavitha – She who is* surrounded
> by army *set ready to kill Bandasura
>   66   *Sampathkari *samarooda sindhoora vrija sevitha – She who is
> surrounded by *Sampathkari *(that which gives wealth) elephant brigade
>   67   *Aswaroodadishidaswa *kodi kodi biravrutha – She who is surrounded by


> crores of cavalry of horses

>   68 *  Chakra raja ratha rooda *sarvayudha parishkridha – She who is fully
> armed and rides in the *Srichakra chariot* with nine stories
>   69   *Geya chakra ratha rooda *manthrini pari sevitha – She who rides in
> the *chariot with seven stories* and is* served by manthrini* who is the


> goddess of music
>   70   Giri chakra ratharooda dhanda natha puraskrutha – She who rides in

> the *chariot with five stories and is served by goddess Varahi otherwise
> called Dhanda natha*
>   71   *Jwalimali*ka ksiptha vanhi prakara madhyaka – She who is in the
> middle of the fort of fire built by the Goddess *Jwalamalini*


>   72   Bhanda sainya vadodyuktha shakthi vikrama harshitha – She who was
> pleased by the various Shakthis(literally strength but a goddess) who helped
> in killing the army of Bhandasura
>   73   Nithya parakamatopa nireekshana samutsuka – She who is interested and

> happy in observing the valour of *Nithya devathas* (literally goddess of
> every day)
>   74   Banda puthra vadodyuktha *bala *vikrama nandhita – She who was
> pleased by the valour of *Bala devi*(her daughter) in destroying the sons of
> Banda
>   75   *Manthrinyamba *virachitha vishangavatha Doshitha – She who became


> happy at seeing Goddess Manthrini kill Vishanga(this ogre (brother of Banda)
> represents our desires for physical things)

>   76   Vishuka prana harana *varahi *veeerya nandhitha – She who appreciates
> the valour of *Varahi *in killing Vishuka (another brother of Banda-he is

Innamburan Innamburan

unread,
Oct 11, 2010, 10:32:24 AM10/11/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
புவனேஸ்வரத்துக்கு அருகில், ஹீராபூர் என்ற இடத்தில் 64? யோகினிகளுக்கு
கோயில் உள்ளது. அது பற்றி என் மகன் இயற்றிய கட்டுரையை தேடிக்கொண்டு
இருக்கிறேன். அந்த மாதிரியான யோகினிக்கோயில் ஒன்று, ஜபல்பூர் சலவைக்கல்
குகைக்களுக்கு அருகில் உள்ளது. உலகிலேயே, இவை இரண்டும் மட்டுமே யோகினி
மந்திரங்கள் என்று, அவற்றை தரிசித்தபோது, கேள்விப்பட்டிருக்கிறேன்.
மேலதிக விவரங்கள் தேவை.

இன்னம்பூரான்

2010/10/11 N. Ganesan <naa.g...@gmail.com>:

sharadha subramanian

unread,
Oct 11, 2010, 11:19:50 AM10/11/10
to mint...@googlegroups.com



From: Innamburan Innamburan <innam...@googlemail.com>
To: mint...@googlegroups.com
Cc: Innamburan Innamburan <innam...@googlemail.com>
Sent: Mon, 11 October, 2010 8:02:24 PM
Subject: Re: [MinTamil] Re: தேவீ மாஹாத்ம்யத்தில் ஒரு கேள்வி

புவனேஸ்வரத்துக்கு  அருகில், ஹீராபூர் என்ற இடத்தில் 64? யோகினிகளுக்கு
கோயில் உள்ளது. அது பற்றி என் மகன் இயற்றிய கட்டுரையை தேடிக்கொண்டு
இருக்கிறேன். அந்த மாதிரியான யோகினிக்கோயில் ஒன்று, ஜபல்பூர் சலவைக்கல்
குகைக்களுக்கு அருகில் உள்ளது. உலகிலேயே, இவை இரண்டும் மட்டுமே யோகினி
மந்திரங்கள் என்று, அவற்றை தரிசித்தபோது,  கேள்விப்பட்டிருக்கிறேன்.
மேலதிக விவரங்கள் தேவை.

இன்னம்பூரான்
வணக்கம்,ஆதிபராசக்த்தியிங்கடாஷத்தை,முழுமயாகப்பெறசாக்த்தம்ந்திரங்கள்,கௌல்மார்க்ம்,மிஸ்ரமார்கம்,
 
சமயமார்க்கம் 3வ்கைகளுண்டு,இவை தாந்திரீகபூஜையில்ம்ஹாபஞ்சஹம் எனப்படும் பைரவ வழிபாடு ம்றறூம் 64யேஈஹினிவழிபாடு இருந்த்ள்ளதுஇவை மிஹவும் உக்கிர்ஹமான வ்ழி முறை என்றூம் கூறூவர்கள் 
3

சாரதா





2010/10/11 N. Ganesan <naa.g...@gmail.com>:

devoo

unread,
Oct 11, 2010, 11:34:27 AM10/11/10
to மின்தமிழ்
”மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகிநீ கண ஸேவிதா”

கலிங்கத்துப்பரணி யோகினியைச் சொல்கிறது.

ஹிராபுர் 64 யோகினி / 9ம் நூற்றாண்டு -

http://www.youtube.com/watch?v=1bT1egHiE3E


ஜபல்புர் அருகிலுள்ள நர்மதைக் கரையிலுள்ள bhedaghat யோகினி
சாலீவாஹநனுடன் தொடர்புடையது என்பர்

தேவ்


On Oct 11, 9:32 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

> 2010/10/11 N. Ganesan <naa.gane...@gmail.com>:

devoo

unread,
Oct 11, 2010, 12:03:29 PM10/11/10
to மின்தமிழ்
>>மேலதிக விவரங்கள் தேவை<<

http://www.khandro.net/dakini_the64.htm


On Oct 11, 9:32 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

> 2010/10/11 N. Ganesan <naa.gane...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Oct 11, 2010, 2:33:02 PM10/11/10
to mint...@googlegroups.com

தவம் செய்த தவம்
டாக்டர். இரா. நாகசாமி

64 யோகினிகள் அமர்ந்த கோயில்

 

நர்மதை ஆற்றங்கரையில் பைரவ கட்டத்தில் நின்று கொண்டிருந்தான் சாலிவாஹனன். அந்தக் கரையின் இருமருங்கிலும் பளிங்குப் பாறைகள். அவற்றின் மீது நர்மதையின் துல்லியமான நீர் வீழ்ந்து சிதறி மேலே திவளைகளாகப் பறப்பதை என்றும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அழகுக்கு ஈடான இடம் இவ்வுலகில் எங்கும் இல்லை என்பதில் ஐயமில்லை. அத்துடன் பவன்கங்கா என்ற மற்றொரு ஆறும் சங்கமம் ஆகும் இடம் அது. கேட்க வேண்டுமா? சாலிவாஹனது படை காசியிலிருந்து வாரணாசி பைரவகட்டம் வரை தில்லி அரசனது படையை துரத்தியடித்துக் கொண்டு வந்துள்ளது. தோற்று ஓடிய தில்லிப்படை நர்மதை ஆற்றைக் கடந்து அக்கரைக்கு ஓடிவிட்டது. அப்படையை நிர்மூலமாக்க வேண்டும் என்ற வேகத்தில் தனது படையை நர்மதையாற்றில் இறக்கி அக்கறை செல்ல பணித்துக் கொண்டிருந்தான். ஆனால் என்ன ஆச்சரியம் அவனது படைகள் அனைத்துமே நீரில் இறங்கியவுடன் மாயமாக மறைந்துவிட்டன. சாலிவாஹனன் மட்டும் தனி ஒருவனாக கரையில் நின்றான். அப்பொழுதுதான் அவனுக்கு சிவபெருமான் குறிப்பிட்டிருந்த எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. அவனது படைகள் யார்? அவன் தான் யார்?
காசியில் வாழ்ந்த செல்வந்தனின் அருமை மகளாகப் பிறந்தவள் அவனது தாய். மிகவும் எழில் வாய்ந்தவள். பருவமடைந்த அவ்வெழில் நங்கை கங்கையில் குளிக்கச் சென்றாள். அவளது அழகில் மயங்கியது மக்கள் மட்டுமல்ல. ஒரு சர்ப்பம் கூட! அவளைப் பின்தொடர்ந்தது. பயந்து ஓடினாள் நங்கை. ஆனால் அந்த சர்ப்பம் ஆண் உருக்கொண்டு அவளை பலாத்காரமாகப் பற்றி இன்பம் துய்த்தது. கருவுற்றாள் அப்பெண். அறிந்த பெற்றோர்கள் அவளை வீட்டை விட்டு துரத்தினர். அவ்வபலைப் பெண்ணுக்கு புகலிடம் அளித்தான் ஒரு வயதான கிழவன். அங்கு அவள் ஒரு ஆண் மகவை ஈன்றாள். குயவன் மகனாக வளர்ந்தான் குழந்தை. ஏழு ஆண்டுகள் நிறைந்தன.
தில்லியின் அரசன் காசிமீது படையெடுத்து ஏராளமான கப்பம் அளிக்க வேண்டும் என்று காசி மன்னனை அச்சுறுத்தினான். செய்வதறியாது ஆலோசனை நடத்தினான் மன்னன். அப்பொழுது கலயங்கள் கொடுக்க வந்த அச்சிறுவன் போரிடுவதே சிறந்தது எனக் கூறினான். அன்றுமாலை விளையாட்டாக காட்டுக்குள் சென்றவன் இருளில் சிக்கி கொண்டான். திரும்பவழி தெரியாத திகைத்தது ஒருபுறம். மறுபுறம் தம்மன்னனை போரிடச் சொல்லிவிட்டு தான் ஏதும் செய்ய முடியாது போய்விட்டதே என்ற ஏக்கம் வேறு! சிறுவனாதலால் "ஓ" வென்று கதறினான். சிவபெருமானும் பார்வதியும் அவன் முன் தோன்றினர். அவன் திரும்புவதற்கு வழிகாட்டி ஒருவரமும் அளித்தனர். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் மண் பொம்மைகள் மீது விபூதியைத் தூவினால் ஒன்று ஆயிரம் வீரராக மாறி அவனுக்கு உதவுவர் என்று கூறினர். ஒன்றில் மட்டும் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் மண்ணில் இருந்து தோன்றியவர்கள் ஆதலால் நீரில் இறங்கினால் கரைந்து விடுவர் என்று கூறி சிவபெருமான் தேவியுடன் மறைந்தார். மறுநாள் சாலிவாஹனன் தனது மண் பொம்மைகளை வீரர்களாக மாற்றி தனது அரசனுக்காக தில்லி அரசனுடன் போரிட்டான். தில்லிப்படை தோற்று ஓடி நர்மதையின் கரையை தாண்டியது. வெற்றிப் பெருமிதத்தில் என்ன செய்கிறோம் என்று எண்ணாமல் தன் படையை ஆற்றில் இறக்கினான் சாலிவாஹனன். முடிவு! அவனது வீரர்கள் ஆற்றில் கரைந்து போயினர். காசிக்குத் திரும்பினான். காசிமன்னன் அவனது உதவியை மெச்சி அவனை பதல்கார் பகுதியின் அரசனாக்கினான். சாலிவாஹனன் நர்மதைக் கரையில் உள்ள பைரவ கட்டடத்துக்கு மீண்டும் வந்து நன்றி பெருக்கோடு சிவபெருமானுக்கு ஒரு கோயில் எடுத்தான்.
இது சரித்திரம் அல்ல கதை. நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் ஜபல்பூரிலிருந்து 20 கல் தொலைவில் உள்ள பேராகாட் என்ற இடத்தில் உள்ள ஒரு விசித்ரமான கோயிலைக் காணச் சென்றபோது அந்தக் கோயிலாப் பற்றி மக்கள் கூறிய கதைதான் இது. இதை அவர் குறித்து வைத்துள்ளார்.
இங்குள்ள கோயில் இப்பொழுது உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. மற்ற கோயில்களைக் காட்டிலும் மாறுபட்டது. வட்டமான மண்டலம் போல் ஒரு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றில் 64 பெண் தேவதைகளின் உருவங்கள் உள்ளன. இந்தப் பெண் தெய்வங்களை யோகினிகள் என்பர். ஆதலால் இக்கோயிலை 64 யோகினிகளின் கோயில்கள் என்று "சௌளஷட் யோகினி மந்திர்" என்று அழைக்கிறார்கள். இது போன்ற யோகினி கோயில்கள் இந்தியாவிலேயே 5 கோயில்கள் தான் இருந்ததாக தெரிய வருகிறது. இங்கு வழிபாடு வாமாசார வழியில் ரகசியமாக நடைபெறும். இந்த மண்டலத்தில் நடுவே ஒரு ஆலயம் இருந்தது. அதில் வைரவக் கடவுள் வைரவியுடன் இருந்திருக்கக் கூடும். இந்தக் கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் இராஜராஜன் தஞ்சாவூரில் பெரியகோயிலைக் கட்டுவதற்கு ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்பொழுது இந்தப் பகுதியை கலசூரி வம்சத்து அரசர் ஆண்டார். தமிழ்நாட்டில் சோழர், பாண்டியன், பல்லவர் போல மிகவும் புகழ் வாய்ந்தவர்களாக கலசூரி அரசர்கள் கி.பி. 850 லிருந்து 1350 வரை 500 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் இக்கோயிலை போற்றியிருக்கிறார்கள்.
இங்கு வாமமார்க்கத்தில் வழிபாடு நடைபெற்றது என்று கூறினேன். வாமமார்க்கம் என்றால் தேவியை முழுமுதல் கடவுகளாகக் கொண்டு வழிபடுவது. இதையே சாக்த வழிபாடு என்பர். இந்த வாமமார்க்கத்தை கௌளலமார்க்கம் என்றும் கூறுவர். லலிதா திரிபுரசுந்தரியை போற்றும் லலிதா சஹஸ்ரநாமத்தில் தேவியை 64 வகையான உபசாரங்களால் பூஜிக்கப்படுகிறாள்; 64 கலைகளின் உருவமாகத் திகழ்பவள்; 64 கோடி யோகினி கணங்களால் ஸேவிக்கப்படுபவள் என்று
சதுஷ் ஷஷ்டி உபசாராட்யா
சதுஷ் ஷஷ்டி கலா மயீ
மஹா சதுஷ் ஷஷ்டி கோடி யோகீனி கண ஸேவிதா


என்றும் கூறுகிறது. யோகினிகள் என்ற பெண் தேவதைகள் தேவியை உபாஸிக்கும் தேவதைகள். இவர்கள் எப்பொழுதும் கூட்டமாக ஒரு வட்டமாக கைகோத்து செல்வர். ஆடிப் பாடிக் கொண்டிருப்பார்கள். ஆகாயமார்க்கமாகச் செல்லும் இவர்கள் பயங்கரமான சக்தி வாய்ந்தவர்கள். எதிரிகளை சின்னாபின்னமாக மிகவும் கொடூரமாக அழித்து விடுவர். ஆயினும் தமது அன்பர்களை அன்னை போல காத்தளிக்க வல்லவர்கள். 64 வகையான கலைவடிவில் நீ திகழ்கிறாய் என்று திரிபுரசுந்தரியை லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுவதிலிருந்து, 64 யோகினிகள் என்ற உருவங்கள் கலைகளின் அம்சங்கள் என்று தெரிய வருகிறது. ஒப்பற்ற முனிவர்களின் மனத்தில் ஒவ்வொரு கலையும் ஒரு தேவதையாக உருவகிக்கப்பட்டு வழிபடப் பட்டிருக்கக் கூடும். இத்தேவதை வழிபாட்டில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ரகசியமாக மது, மத்ஸ்யம், மாம்சம், முத்திரை, மைதுனம் என்னும் பஞ்சமகாரங்களால் உபாசிப்பது. மற்றொன்று இவை அனைத்தையும் துறந்து யோகமார்க்கத்தில் மனத்திலே பராசக்தியை ஆவஹித்து, அவளுக்கு துணையாக 64 யோகினிகளை அங்கங்களில் ஆவஹித்து, யோகியாகி, ஞானியாகி மலர்தலாகும். இவ்விரு மார்க்கங்களில் ஞானயோக மார்க்கமே சிறந்தது என்பது இவ்வழிபாட்டின் உண்மை தத்துவம்.
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் உள்ள யோகினிகளின் சிற்ப உருவங்கள் கலை வரலாற்றில் மிகச் சிறந்த இடம் பெறுகின்றன. எழிலான உடற்கட்டும், வெவ்வேறு நிலைகளும், வாஹனங்களும், யோகியரும், முனிவர்களும் கரம் கூப்பி வணங்கும் பாங்கும், அருள் ததும்பும் முகங்களும் உடையவையாக இவை திகழ்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வடித்தெடுக்கபட்ட இவை கடைந்தெடுத்த அழகு என்பார்களே அப்படித் திகழ்கின்றன. அதனால் தான் இவற்றின் அழகை உலகம் முழுவதும் புகழ்கின்றன. இவற்றில் பல சிற்பங்களின் அடியில் அந்தந்த யோகினிகளின் பெயர்கள் எழதப் பட்டுள்ளன. காமதா, அந்தகாரி, சர்வதோமுகி, மண்டோதரி, அஜிதா, ஆனந்தா, இந்திரஜாலி, என்றெல்லாம் பெயர்கள் உள்ளன. மகிஷாசுரமர்த்தினியாகிய துர்க்கை "தெரம்சா" என்று அழைக்கப்படுகிறாள். திரி அம்பா என்பதின் திரிபாக இது தோன்றுகிறது. இந்த யோகினிகளின் உருவைத் தவிர ஸப்தமாதாக்கள், நடனமாடும் நிருத்த கணபதி முதலிய உருவங்களும் உள்ளன. கங்கை, யமுனை, ஸரஸ்வதி, நர்மதை ஆகிய நதி தெய்வங்களும் இங்குள்ளன.
நர்மதை ஆற்றங்கரையில் மனதுக்கு இன்பமான ஒரு பளிங்கு குன்றை தேர்ந்தெடுத்து அதன் உச்சியில் இந்தக் கோயிலை கட்டியிருக்கிறார்கள். சாக்த வழிபாட்டில் மிகச் சிறந்த கோயிலாகத் திகழந்த இந்தக் கோயிலை அது தோன்றி 200 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி.1155 ம் ஆண்டில் கலசூரி அரசன் நரசிம்மன் என்பவனின் தாய் அல்லன தேவி என்பவள் திருப்பணிசெய்து இந்த மண்டலத்தின் நடுவில் பைரவருக்கு பதிலாக உமையொருபாகனாக சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்தாள். அதை கௌளரீசங்கர் என்று வணங்குகிறார்கள். வாமமார்க்கம் மறைந்து சைவக் கோயிலாக அதுமாறிய போதினும், யோகினிகளின் வழிபாடு தொடர்ந்தது.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வந்தானய்யா பாவிகள்! வேறு சமயத்தான். இந்த வழிபாட்டைப் பாராட்ட வேண்டாம். இதன் கலையாவது ரஸிக்கக் கூடாதா ஒரு சிற்பம் விடாது காலையோ கையையோ மூக்கையோ உடைச்சே தீர்த்தான். அவ்வளவு வெறி! இந்த பின்னமான நிலையில் கூட இவை எவ்வளவு எழில் சிற்பங்களாக பொலிகின்றன பாருங்கள்.
யோகினிகளுக்கென்று தனித்தன்மை வாய்ந்ததாக கட்டப்பட்ட கோயில் "பேராகாட்" சௌளஷட்யோகனி கோயில். ஒன்று சொல்ல மறந்து விட்டனே! தமிழ் நாட்டில் இது போன்ற கோயில் இருந்ததா? கோயம்பத்தூருக்கு அருகில் வட்டமான யோகினி கோயில் ஒன்று நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக குறித்துள்ளார்கள். அது எங்கிருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சியம், தமிழ்நாட்டிலும் யோகினிகளை போற்றியிருக்கிறார்கள். தக்கயாகப்பரணி என்னும் நூலில் ஒட்டகூத்தர் யோகினிகளை குறித்துள்ளார்.
அடையாளமுளரித் தலைவி ஆதிமடவார்
உடைய திருவகம்படியில் யோகினிகளே


என்றும் இன்னும் பலவாகப் பாடியுள்ளார். காஞ்சீபுரத்துக்கு அருகில் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் இது போன்ற ஒரு கோயில் 8ம் நூற்றாண்டில் இருந்தது. அதை அலங்கரித்த சிற்பங்களை சுமார் 70ம் ஆண்டுகளுக்கு முன்னர் மேலை நாடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டனர். பாரீஸ், லண்டன், நியூயார்க் என பல மியூசியங்களில் இவை உள்ளன.
தேவியைத்தான் எத்தனை கோலங்களில் உருவகித்து கற்பித்து தாயாகப் போற்றியுள்ளது இந்த பாரத புண்ணிய பூமி! காண்பதெல்லாம் தெய்வம். செயலனைத்தும் அதன் வழிபாடு என உணர்ந்து வழிபட்ட ஞானபூமி இது.

நன்றி  திரு நாகசாமி அவர்களுக்கு

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/11 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net


Innamburan Innamburan

unread,
Oct 12, 2010, 12:21:33 AM10/12/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
'மேலதிக விவரங்கள் தேவை' என்றால், மேலுக்கு மேல் உன்னதமான தகவல்கள்,
விளக்கங்கள், ஆதாரங்கள், படங்கள் எல்லாம், தத்க்ஷணமே அளித்த திருமதி.
சாரதா சுப்ரமண்யத்துக்கும், தேவுக்கும், தமிழ்த்தேனிக்கும் நன்றி.
தமிழ்த்தேனிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ், ஒரு அருமையான வரவை அளித்ததற்கு. URL
சுட்டவும்.
நன்றி, வணக்கம்,

இன்னம்பூரான்

2010/10/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

s.bala subramani B+ve

unread,
Oct 12, 2010, 4:51:49 AM10/12/10
to mint...@googlegroups.com

ஒரிசாவில்
 அறுபத்து  நான்கு யோகினிகள் கோயில் இரண்டு
ராணிப்பூர் ஜ்ஹரியால் என்று போலன்கிர் மாவட்டத்திலும் குர்த மாவட்டத்தில் ஹீரபூர்  என்ற இடத்திலும் உள்ளது .
 http://en.wikipedia.org/wiki/Historic_sites_in_ஒரிசா
 
ஒரிசா போவது என்றால் சொல்லவும்
 

Geetha Sambasivam

unread,
Oct 12, 2010, 7:10:25 AM10/12/10
to mint...@googlegroups.com
ஸ்வர்ணா,

திருவானைக்காவல் பற்றித் தெரியலை.  ஆனால் மதுரையில் மீனாக்ஷி மந்த்ரிணியாக, மனோன்மணியாக, ச்யாமளையாக இருக்கிறாள் என்பார்கள். ஆகவே வாராஹி நிச்சயம் இல்லை.  கதம்பவனம் சரியே.

2010/10/11 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
>>முன்னது என்றால்
 
பின்னது!! (பண்டாசுர வதம்)
 
மேலும் ஒரு தகவல்.
மந்த்ரிணீ (திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஸ்வரூபம்), தண்டினி/ வாராஹி (மீனாக்ஷீ ஸ்வரூபம் - மதுரை கதம்ப வனம்) - லலிதா த்ரிபுரசுந்தரி (காமாக்ஷி ஸ்வரூபம் - காச்மீர தேசம் என்று காஞ்சி பிரதேசத்துக்கும் பெயர், காஞ்சி நகரமே ஸ்ரீ நகரமாகும் - இன்றைக்கு அழுக்கும் pollution ம் தான் இருக்கிறது)...

ஸ்வர்ணா




Swarna Lakshmi

unread,
Oct 12, 2010, 11:37:29 AM10/12/10
to mint...@googlegroups.com
கீதா, நான் அறிந்தவரை மந்த்ரிண்யம்பாவாக இருக்கிற மீனாக்ஷி தான் போர்க்கோலம் பூணும் போது வாராஹியாகிறாள், அவளே ஞான ரூபிணியாக, கலைகளை அருளும் ச்யாமளையாக இருக்கிறாள்.
 
திருவானைக்காவல் பற்றி உறுதியாகக் கூற முடியும்.
 
நன்றி
ஸ்வர்ணா


From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tue, 12 October, 2010 4:40:25 PM
Subject: Re: [MinTamil] Re: தேவீ மாஹாட்ம்யத்தில் ஒரு கேள்வி

Swarna Lakshmi

unread,
Oct 12, 2010, 12:30:42 PM10/12/10
to mint...@googlegroups.com
sorry - குழப்பி விட்டேன். மந்திரிண்யம்பா: அகிலாண்டேஸ்வரி - தண்டினி: மீனாக்ஷீ


From: Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
To: mint...@googlegroups.com
Sent: Tue, 12 October, 2010 9:07:29 PM

Subashini Tremmel

unread,
Oct 12, 2010, 2:04:21 PM10/12/10
to mint...@googlegroups.com
தேனீயார்,
 
நன்றி. தவம் செய்த தவம்  என்பது நூலின் பெயரா? டாக்டர். இரா. நாகசாமியின் எந்த நூலில் இந்தத் தகவல்கள் இடம் பெறுகின்றன என்று தெரிவிக்க முடியுமா?
 
-சுபா


 
2010/10/11 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

devoo

unread,
Oct 12, 2010, 2:10:28 PM10/12/10
to மின்தமிழ்
வலைத்தளம் -

http://tamilartsacademy.com/books/tavam/chapter13.xml


On Oct 12, 1:04 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> தேனீயார்,
>
> நன்றி. தவம் செய்த தவம்  என்பது நூலின் பெயரா? டாக்டர். இரா. நாகசாமியின் எந்த
> நூலில் இந்தத் தகவல்கள் இடம் பெறுகின்றன என்று தெரிவிக்க முடியுமா?
>
> -சுபா
>

> 2010/10/11 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>

> ...
>
> read more »

Tthamizth Tthenee

unread,
Oct 12, 2010, 2:13:56 PM10/12/10
to mint...@googlegroups.com
 
ஆமாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Oct 13, 2010, 12:50:07 AM10/13/10
to mint...@googlegroups.com
http://maduraiyampathi.blogspot.com/2008/04/blog-post_26.html

ஈரேழு புவனங்களையும் ஆளும் அன்னை, தனக்கு மந்திரியாக கொண்ட சக்திக்கு மந்த்ரிணி என்று பெயர். 'மந்த்ரிணியஸ்த ராஜ்யதா'  என்று ஒரு நாமம் இருக்கிறது.அதாவது தனது மந்திரியான மந்திரிணியிடம் ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கொடுத்து விடுகிறாளாம். இந்த மந்த்ரிணியின் ரூபந்தான் மதுரை மீனாக்ஷி. இந்த மந்த்ரிணியின் ரதத்தின் பெயர் 'கேயசக்ர ரதம். இவள் தனது பரிவாரங்களுடன் அன்னையை பணிகிறாள் என்பது தான் 'கேயசக்ர ரதாரூட மந்த்ரிணி பரிசேவிதா'.

தண்டம் என்றாலே சைன்யம் என்று பெயர். சைன்யங்களின் தலைவர் தண்ட நாதா, அதாவது சேனாபதி. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தண்டநாதா என்று கூறுவர். அன்னையின் இந்த வடிவமே வாராஹி என்றும் கூறுவது உண்டு. இவள் கிரிசக்ரம் என்ற ரதத்தை உடையவள். இங்கு கிரி என்பதற்கு மலை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. கிரி என்பதற்கு குதிரை என்றும் ஒரு பொருளுண்டு. புலன்களையும் கிரி என்பதுண்டு. தண்டநாதா அன்னை கையில் இருக்கும் பஞ்சபாணங்களிலிருந்து உதித்தவள் என்பர். 'கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா' என்பது நாமம். அதாவது கிரிசக்ர ரதத்தில் வந்து அன்னையை சேவிப்பதாக சொல்லப்படுகிறது.

மேற்கண்ட வலைப்பதிவில் எழுதும் அன்பர் ஒரு சாக்த உபாசகர். மேலும்  நான் மதுரையில் பிறந்து வளர்ந்த காலத்திலேயே மீனாக்ஷியை இப்படித் தான் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  பரமாசாரியாரும் இதைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதாய் தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி (?) யில் படித்த நினைவு.  அதையும் பார்க்கிறேன்.  ஆனால் நூறு வருடங்களுக்கு முன்னர் மீனாக்ஷி சந்நிதியில் ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றிற்குச் சிறப்பு வழிபாடு நடந்து வந்திருக்கிறதாயும் என் தந்தை சொல்லி இருக்கிறார்.  ஒரு வேளை அதனால் வாராஹி என்று இருந்ததோ தெரியவில்லை.  எதுக்கும் இது பற்றித் தீர விசாரிக்கிறேன் ஸ்வர்ணா. நன்றி. ஆவலைத் தூண்டி விட்டது.

2010/10/12 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
sorry - குழப்பி விட்டேன். மந்திரிண்யம்பா: அகிலாண்டேஸ்வரி - தண்டினி: மீனாக்ஷீ


From: Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
To: mint...@googlegroups.com
Sent: Tue, 12 October, 2010 9:07:29 PM

Subject: Re: [MinTamil] Re: தேவீ மாஹாட்ம்யத்தில் ஒரு கேள்வி

கீதா, நான் அறிந்தவரை மந்த்ரிண்யம்பாவாக இருக்கிற மீனாக்ஷி தான் போர்க்கோலம் பூணும் போது வாராஹியாகிறாள், அவளே ஞான ரூபிணியாக, கலைகளை அருளும் ச்யாமளையாக இருக்கிறாள்.
 
திருவானைக்காவல் பற்றி உறுதியாகக் கூற முடியும்.
 
நன்றி
ஸ்வர்ணா


From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tue, 12 October, 2010 4:40:25 PM
Subject: Re: [MinTamil] Re: தேவீ மாஹாட்ம்யத்தில் ஒரு கேள்வி

ஸ்வர்ணா,

திருவானைக்காவல் பற்றித் தெரியலை.  ஆனால் மதுரையில் மீனாக்ஷி மந்த்ரிணியாக, மனோன்மணியாக, ச்யாமளையாக இருக்கிறாள் என்பார்கள். ஆகவே வாராஹி நிச்சயம் இல்லை.  கதம்பவனம் சரியே.

2010/10/11 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
>>முன்னது என்றால்
 
பின்னது!! (பண்டாசுர வதம்)
 
மேலும் ஒரு தகவல்.
மந்த்ரிணீ (திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஸ்வரூபம்), தண்டினி/ வாராஹி (மீனாக்ஷீ ஸ்வரூபம் - மதுரை கதம்ப வனம்) - லலிதா த்ரிபுரசுந்தரி (காமாக்ஷி ஸ்வரூபம் - காச்மீர தேசம் என்று காஞ்சி பிரதேசத்துக்கும் பெயர், காஞ்சி நகரமே ஸ்ரீ நகரமாகும் - இன்றைக்கு அழுக்கும் pollution ம் தான் இருக்கிறது)...

ஸ்வர்ணா


Geetha Sambasivam

unread,
Oct 13, 2010, 5:14:51 AM10/13/10
to mint...@googlegroups.com
மூலாதாரத்திலிருந்து
பிரம்மரந்திரம் வரை ஷட்-சக்ரம் (ஆறு சக்ரம்) என்று பொதுவில் சொல்கிறோம். இன்னும்
ஸ¨க்ஷ்மமாக அலசிக்கொண்டு போகிறபோது, கடைசியில் வரும் ஆஜ்ஞா சக்ரத்திற்கும்
ஸஹஸ்ரார சக்ரத்திற்கும் நடுவிலேயே பன்னிரண்டு ஸ்தானங்கள் சொல்லியிருக்கிறது.
அவற்றில் உச்சியில் ஜீவ-ப்ரம்ம ஐக்கிய ஸ்தானமாக இருப்பதுதான் த்வாதசாந்தம்.
'த்வாதசாந்தம்'என்று தந்திர சாஸ்திரங்களில், யோக சாஸ்திரங்களில் உச்சி நிலையாகச்
சொல்லியிருப்பது மதுரைதான் என்று சொல்லி, மதுரை "த்வாதசாந்த«க்ஷத்ரம்"என்பார்கள்
இங்கே லோகத்தின் ப்ரம்மரந்திரத்தில் ப்ரம்மானந்த ஸ்வரூபிணியாக மீனாக்ஷி இருக்கிறாள்


'ச்யாமளா தண்டகம்'என்று காளிதாஸன் செய்திருக்கிற பிரஸித்த ஸ்துதியில் சொன்ன
ச்யாமளர்தான் மீனாக்ஷி. ச்யாமளா, மாதங்கி, மந்த்ரிணி என்றெல்லாமே மந்திர தந்திர
சாஸ்த்ரங்களில் மீனாக்ஷிக்குப் பேர். ஸங்கீதத்துக்கு அதிதேவதையாக எப்போதும் மாணிக்க
வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறவள் அவள். கானாம்ருதத்தாலேயே மோக்ஷா£ம்ருதத்தை
ஸாதித்துத் தருகிறவள்.
குறிப்பாக "ச்யாமளா தண்டக"த்தில்
மாதா மரகத ச்யாமா மாதங்கீ மதசாலிநி *
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவநவாஸிநீ **
என்று வருவது, மரகதப் பச்சையாக ஜ்வலிக்கிற மீனாக்ஷியைச் சொல்வதாகவே இருக்கிறது.
'கதம்ப வனம்'என்பதுதான் மதுரை. 'கடம்ப வனம்'என்று தமிழில் சொல்வார்கள்

ஆதாரம்: தெய்வத்தின் குரல், மூன்றாம் பாகம்  தெய்வ தத்வங்கள், தெய்வம் என்ற தலைப்பின் கீழ், மீனாக்ஷி என்று அம்பாள் பெயரிலேயே வரும் அத்தியாயம்.

2010/10/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>
http://maduraiyampathi.blogspot.com/2008/04/blog-post_26.html

ஈரேழு புவனங்களையும் ஆளும் அன்னை, தனக்கு மந்திரியாக கொண்ட சக்திக்கு மந்த்ரிணி என்று பெயர். 'மந்த்ரிணியஸ்த ராஜ்யதா'  என்று ஒரு நாமம் இருக்கிறது.அதாவது தனது மந்திரியான மந்திரிணியிடம் ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கொடுத்து விடுகிறாளாம். இந்த மந்த்ரிணியின் ரூபந்தான் மதுரை மீனாக்ஷி. இந்த மந்த்ரிணியின் ரதத்தின் பெயர் 'கேயசக்ர ரதம். இவள் தனது பரிவாரங்களுடன் அன்னையை பணிகிறாள் என்பது தான் 'கேயசக்ர ரதாரூட மந்த்ரிணி பரிசேவிதா'.

தண்டம் என்றாலே சைன்யம் என்று பெயர். சைன்யங்களின் தலைவர் தண்ட நாதா, அதாவது சேனாபதி. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தண்டநாதா என்று கூறுவர். அன்னையின் இந்த வடிவமே வாராஹி என்றும் கூறுவது உண்டு. இவள் கிரிசக்ரம் என்ற ரதத்தை உடையவள். இங்கு கிரி என்பதற்கு மலை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. கிரி என்பதற்கு குதிரை என்றும் ஒரு பொருளுண்டு. புலன்களையும் கிரி என்பதுண்டு. தண்டநாதா அன்னை கையில் இருக்கும் பஞ்சபாணங்களிலிருந்து உதித்தவள் என்பர். 'கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா' என்பது நாமம். அதாவது கிரிசக்ர ரதத்தில் வந்து அன்னையை சேவிப்பதாக சொல்லப்படுகிறது.

மேற்கண்ட வலைப்பதிவில் எழுதும் அன்பர் ஒரு சாக்த உபாசகர். மேலும்  நான் மதுரையில் பிறந்து வளர்ந்த காலத்திலேயே மீனாக்ஷியை இப்படித் தான் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  பரமாசாரியாரும் இதைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதாய் தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி (?) யில் படித்த நினைவு.  அதையும் பார்க்கிறேன்.  ஆனால் நூறு வருடங்களுக்கு முன்னர் மீனாக்ஷி சந்நிதியில் ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றிற்குச் சிறப்பு வழிபாடு நடந்து வந்திருக்கிறதாயும் என் தந்தை சொல்லி இருக்கிறார்.  ஒரு வேளை அதனால் வாராஹி என்று இருந்ததோ தெரியவில்லை.  எதுக்கும் இது பற்றித் தீர விசாரிக்கிறேன் ஸ்வர்ணா. நன்றி. ஆவலைத் தூண்டி விட்டது.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Oct 13, 2010, 6:32:05 AM10/13/10
to mint...@googlegroups.com
எல்லாம் சரி. இழையைத் துவக்கியவர் 3 நாட்களாகியும் சைலன்டாவே இருக்கிறாரே, ஏன்? :((

அன்புடன்,

தி.பொ.ச.

2010/10/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages