தமிழர் நிதி நிர்வாகம் : தொன்மையும் தொடர்ச்சியும்https://tamildigitallibrary.in/Articles/தமிழர்%20நிதி%20நிர்வாகம்%20தொன்மையும்%20தொடர்ச்சியும்தமிழர் நிதி நிர்வாகம்சங்க காலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி நிர்வாகச் சித்திரத்தைத் தீட்டும் நூல்தான் 'தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்'. பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், நிதிக் கொள்கைகள், காலனியக் கால நிதி நிர்வாக நடைமுறைகள், நவீனத் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன. அரிய தகவல்களும் தரவுகளும் நிறைந்திருக்கும் இந்நூல், பல்வேறு நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகிவந்த வரலாற்றையும், தமிழ்நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் குறித்த ஆழமான கண்ணோட்டத்தை வழங்குகிறது. தமிழர்களின் நிதி நிர்வாகத்திலும் தமிழ்ப் பண்பாடு உண்டு, தனித்துவம் உண்டு என்பதை எடுத்துரைக்கும் அழகிய ஆவணம் இது.