சாயங்காலம் < -- > சாயுங்காலம்

9 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Nov 13, 2025, 2:18:21 AM (yesterday) Nov 13
to மின்தமிழ்
நாம் அன்றாட வாழ்வில் மாலைநேரத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல் சாயங்காலம். (பலர் ஈவ்னிங் என்றுதானே சொல்கிறார்கள் என்கிறீர்களா? இது அவர்களுக்கானது அல்ல)

இந்தச் சாயங்காலம் என்பது உண்மையில் சாயும் காலம், அதாவது சூரியன் மறையும் காலம் – அதுவே மருவி, பேச்சுவழக்கில் சாயங்காலம் என்று ஆனது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் அவ்வாறே நினைத்துக்கொண்டிருந்தேன்.

இப்போது நிகண்டுகளுக்கான தொடரடைவுகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தச் சொல் மீண்டும் மீண்டும் வரக் கண்டேன்.

சாயங்காலம் என்பது உண்மையில் சாயம் காலம் என்றுதான் பிரிக்கப்படவேண்டும் என்று நிகண்டுகள் கூறுகின்றன.

சாயம் என்பதற்கு அவை அந்தி, மாலை என்று பொருள் கூறுகின்றன.

இதோ பாருங்கள்:-

1. பிங்கல நிகண்டு
சந்தி மாலை #சாயம் என்று இவை - 2.வானவர் :2 125/1

2. சூடாமணி நிகண்டு
இலகிய மாலை #சாயம் சந்தி ஆம் யாமம் சாமம் - 1.தேவப்பெயர்:1 92/3

3. ஆசிரிய நிகண்டு
வரைகொள் #சாயம் சந்தி அந்தி ஒரு மூன்றுமே மாலை அம் பொழுதின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 30/7

4. நாமதீப நிகண்டு
அந்தி சந்தி மாலை #சாயம் சாமம் யாமம் நென்னல் - 34.அஃறிணையுயிரில்-காலம்:34 8/1

எனவே, சாயங்காலம் என்பதே சரி என்பது இதனால் உறுதிப்படுகின்றது.

ப.பாண்டியராஜா

Reply all
Reply to author
Forward
0 new messages