மெஷின் லேங்குவேஜ்

4 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Feb 20, 2026, 2:39:17 AM (yesterday) Feb 20
to மின்தமிழ்
மெஷின் லேங்குவேஜ்
________________________________

கணிதம்
ஒரு நுண்ணிய குகையில்
குடி கொண்டிருக்கிறது.
அது ஒரு புழுக்கூட்டு வழி
என்று
புதிர் மொழி காட்டிவிட்டு சென்றார்
ஐன்ஸ்டீன்.
பெருக்கலும்
பெருக்கலின் பெருக்கலும்
மற்றும்
எக்ஸ்பொனென்ஷியல் எனும்
வானமே பொத்துக்கொண்டு போகும்
சங்கிலிப்பெருக்கலும்
கணிதத்தை
நம் மண்டை உடையச் செய்து விட்ட பிறகு
"ஹில்பர்ட்ஸ் நுண் வெளி"
எல்லையின்மையை
ஒரு இல்லை இன்மையாய்
நம் கையில் உருட்டித்தந்து
பந்து விளையாடச்சொல்லி விட்டது.
கடவுள்களும்
பில்லியன் பில்லியன்
தலைகள் முளைத்த‌
பூச்சிகளாய்
மினுக்கி இருட்டி
பிதுக்கும் கண்களின்
ஃபோட்டான்களில்
குவாண்ட அண்டங்களின்
சமன்பாடுகள் புரியாமல்
தவித்துக்கிடக்கின்றன.
அந்த ஹில்பர்ட் ஸ்பேஸ் கெர்னல்களின்
சோழிக்குலுக்கல் ஒலிகள்
நம் நிகழ்தகவு இருத்தலியங்களை
பூச்செண்டுகள் ஆக்கி
புல்லரிக்க
வைத்துக்கொண்டிருக்கின்றன.
____________________________________________
சொற்கீரன்.




Reply all
Reply to author
Forward
0 new messages