மூதாய் - தம்பலப் பூச்சி - இந்திரகோபம்

322 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 14, 2016, 9:25:04 AM6/14/16
to வல்லமை, மின்தமிழ், Santhavasantham, மு இளங்கோவன்
கல்பட்டு திரு. நடராஜன்  துரை கொடுத்திருந்த நாட்டோடு (அ) கொசவனோடு என்றழைக்கப்படும் ஓடுகளால் வேய்ந்த கூரைப் படத்திற்கு எழுதியிருந்தததைப் படித்தேன்,
இன்னொரு ஓடு உண்டு. அதனை தச்சோடு (அ) டச்சோடு என்போம். டச்சுக் காரர்கள் கேரளாவை ஆண்டபோது அறிமுகம் செய்த தட்டையான ஓடு அது.
குசவன் ஓடு - சில ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுவது, native tiles.

திரு. துரை வெல்வெட் பூச்சி (அ) தம்பலப் பூச்சி படமும், இளமையில் எடுத்து விளையாடும் பூச்சி - கொடுத்திருந்தார்.
இதன் நல்ல தமிழ்ப் பெயர் மூதாய். முதை என்னும் சொல்லில் இருந்து தோன்றுவது. புதை என்னும் மூலத்தில் இருந்து
Adjutants என்னும் பறவைப் பெயர்கள் புதா, போதா உருவாவதுபோல். அகில், யா மரம் (shorea robusta) போன்ற தாவரங்கள் 
தமிழகத்தில் மறைந்துவிட்டன. ஆனால், வடக்கே வங்காளம் போன்ற மாகாணங்களில் இன்னமும் இருக்கிறது.
அதுபோலத் தான் புதா ( = போதா) தமிழ்நாட்டில் இல்லை. சில ஆயிரம் பறவைகள் மட்டுமே கிழக்கிந்தியாவில் உயிர் வாழ்கின்றன.
முற்றிலும் அழிந்துவிடலாம். ஆனால், மூதாய் (தம்பலப் பூச்சி) இன்னமும் மழைக்காலத்தில் இருக்கிறது.

மூதாய் என்னும் இந்திரகோபம் பற்றி ஏராளமான பாடல்கள் சங்க இலக்கியத்திலும் பின்னரும் இருக்கிறது.
கல்பட்டாரின் இழை - மூதாய் பற்றியது (2014). 2013-ல் விரிவாக CTamil லிஸ்ட்டில் பேசப்பட்டது:

நான் ரசித்த இந்திரகோபம்/மூதாய் - துரை எடுத்துக்காட்டிய படம்: 

































மூதாய் பற்றிய பாடல்களைத் தொகுப்போம்.

நா. கணேசன்




Pandiyaraja

unread,
Jun 14, 2016, 10:54:48 AM6/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, santhav...@googlegroups.com, muela...@gmail.com
இந்திரகோபம் பற்றிய எனது விரிவான விளக்கத்தை, sangacholai.in என்ற என் இணையதளத்தில், கட்டுரைகள் என்ற தலைப்பின் கீழே, பத்துப்பாட்டு - 10 கட்டுரைகள் என்ற குறுந்தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் பத்துக் கட்டுரைகளில் முதலாவது கட்டுரையில் காணலாம்.
நன்றி,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Jun 15, 2016, 9:35:07 AM6/15/16
to வல்லமை, மின்தமிழ், Santhavasantham


On Tuesday, June 14, 2016 at 7:55:44 AM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
அன்பு கணேசன் இதோ தம்பலப் பூச்சி பற்றிய எனது படைப்பு கீழே:


நன்றி. பட்டுப் பூச்சி - Silk worm, butterfly என இருப்பதைக் கணக்கில் எடுத்தால் மயக்கம் தவிர்க்கலாமே.
 தம்பலப் பூச்சி (அ) மூதாய் (அ) கோவம் எனலாம்.
உங்கள் பழைய மடலையும் குறிப்பிட்டிருந்தேன்.

மூதாய் பற்றி இங்கே ஒரு மடல்:

வடமொழியில் இந்திரகோபம் என்று பெயர். தமிழில் கோவம் என்று வரும்.
கொவ்வைச் செவ்வாய், கோவைக்காய் என்பதால் இந்த்ர-கோபம் என்ற பெயர்
உருவாகியுள்ளது என கருதுகிறேன். மழைக்கு அதிபதி இந்திரன். எனவே
இந்திர - கோவம் வடமொழியில் இந்த்ர-கோபம் ஆகிவிட்டது.

(1) மாமரம் மலர்:அலர் போல, ஆமரம் (ஆம்ர) என்று ஆகியுள்ளது போல்.
(2) வடம் போன்ற விழுதுகள் கொண்ட மரம் வடமொழியில் வடவ்ருக்ஷம் ஆகியதுபோல்
மழைக்காலத்தில் கோவைப் பழம் போல் நிறமுள்ள இந்திரகோவம் > இந்த்ர கோபம்   எனக் கொள்க.

பிற பின்,
நா. கணேசன்

 

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்

(54) பட்டுப் பூச்சி





மழை நின்ற மறு நாள் தோட்டத்தில் காணலாம் சுருக்கங்கள் மிகுந்த சிவப்பு வெல்வெட் போன்ற உடல் கொண்ட ஒரு சிறிய பூச்சியினை.  பார்க்க மிக அழகாக இருக்கும் இந்தப் பூச்சியின் பெயர் ஆங்கிலத்தில் “ரெட் வெல்வெட் பக்” என்பதாகும்.  விஞ்ஞான ரீதியாய் இதற்கு அளிக்கப் பட்ட பெயர் ட்ராம்பிடியும் ஹோலோசெரிகம் (Trombidium holosericeum.).

 

இந்தப் பூச்சியை விவசாயியின் தோழன் என்று சொல்ல வேண்டும்.  காரணம் இது பல சிறு பூச்சிகளையும் தன் உணவாக்கிடும் ஒன்று.

 

வட இந்தியாவில் இதன் பெயர் பீர் பஹூதி.  இதற்கு அங்கு மவுசு அதிகம்.  காரணம் இது ஆணின் வீரியத்தினை அதிகரிக்கும் என்னும் எண்ணமும், இதன் எண்ணை பக்க வாதத்தியனை பறக்கச் செய்திடும் என்னும் நம்பிக்கையும்.

 



மசாலா தடவி வறுத்த கடலை அல்ல இது.  வெய்யிலில் காய வைத்த பட்டுப் பூச்சிகள் இது!

 

மடலாடல் குழு ஒன்றில் அன்பர் ஒருவர் சொன்னார், “பாசக்கார புள்ளைங்க மதுரெக்கார புள்ளைங்க” என்று.

 

பட்டுப் பூச்சியை, “பாசாங்குக் காரப் புள்ளைங்க” என்று நான் சொல்வேன்.  காரணம் தெரிய வேண்டுமா?  கவிதை வடிவில் தந்திருக்கிறேன் அதை இங்கு.  மேலே படியுங்கள்.

 

மழை நின்றிடத் தோட்டத்தில்

கண்டேன் உன்னை நான்

கண்டதும் கொண்டேன் காதல்

உன் அழகின் மேல்

 

பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி

பட்டுப் போல் உந்தன் மேனி

பட்டு ரோஜா உந்தன் நிறம்

சட்டெனப் பிடித்தேன் உன்னை யுன்

அழகில் மயங்கியே நான்

 

பெட்டிக்குள் வைத்தே

எண்ணிடும் போதெல்லாம் உன்

அழகினைக் பார்க்க நினைத்தேன்

 

நெருப்புப் பெட்டியுள் புல் பரப்பியே

மெத்தையாய் உனக்கு நான்

பத்திரமாய் அதன் மேல் விட்டேன்

மென்மையான என் கரங்களால் உன்னை

 

பெட்டி திறந்தால் பார்த்திட

கிடக்கின்றாய் நீ மல்லாந்து

மடங்கிய உன் கால்கள்

வானம் நோக்கிட

 

முன்னமே தெரிந்திருந்தா லிது

சின்னக் குழந்தை எனக்கு

சிறை வைத்திருப்பேனா

பெட்டியுள் உன்னை?

 

துக்கம் பீரிடக்

கண்களில் கண்ணீர் தளும்பிட

மெல்ல எடுத்துத் தோட்டத்தில் விட்டேன்

மறு கணம் திரும்பியே நேராய்

ஓடி மறைந்தாய் ஓரு வங்குள்

மாய் மாலக் கள்ளி நீ

 

(படங்கள் விக்கிபீடியா தளத்தில் இருந்து.

கவிதை பிறந்தது சொந்த அனுபவத்தில் இருந்து))

 

                                     நடராஜன் கல்பட்டு

 

 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


N. Ganesan

unread,
Jun 15, 2016, 9:58:55 AM6/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, santhav...@googlegroups.com, muela...@gmail.com


On Tuesday, June 14, 2016 at 7:54:48 AM UTC-7, Pandiyaraja wrote:
இந்திரகோபம் பற்றிய எனது விரிவான விளக்கத்தை, sangacholai.in என்ற என் இணையதளத்தில், கட்டுரைகள் என்ற தலைப்பின் கீழே, பத்துப்பாட்டு - 10 கட்டுரைகள் என்ற குறுந்தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் பத்துக் கட்டுரைகளில் முதலாவது கட்டுரையில் காணலாம்.
நன்றி,
ப.பாண்டியராஜா



 இந்திரகோபம் பற்றி தமிழில் உள்ள சிறந்த கட்டுரை எழுதியுள்ளீர்கள். அனைவரும் படிக்கவேண்டும்

பி. எல் (லூர்து) சாமி, ஐ. ஏ. எஸ், (பாண்டிச்சேரி நிதிச்செயலராக இருந்தார்) தமிழின் மூதாய் பற்றி எழுதினார்.
Sigfried Lienhard வடமொழியில் தமிழ்/த்ராவிட மொழிகளின் பங்கு பற்றிப் பல கட்டுரைகள் எழுதினவர்.
அவரது இந்திரகோபம் பற்றிய கட்டுரையை CTamil லிஸ்ட்டில் சிலமுறை தந்துள்ளேன்.

Sigfried Lienhard  - மூதாய்/இந்த்ரகோபம் (< கோவம்)  கட்டுரையைக் குறிப்பிட்டுள்ளீர்கள்:
www.indologica.com/volumes/vol06/vol06_art14_Lienhard.pdf
Siegfried : ON THE MEANING AND USE OF THE WORD INDRAGOPA

மூதாய் - ஒரு காமிக்:

Thanks to The Oatmeal, I learned that Giant Red Velvet Mites (Trombidium Grandissimum) are real. They are called Bhir-buti in Hindi, which translates to “Rain’s Insect”. They live in soil and semi-desert areas of Northern India and spend most of their time hiding until the rain softens the soil for them to come out. T. grandissimum is one the largest known mites and can reach a size of around half an inch or so. The Giant Red Velvet Mite is exposed to hundreds of bacteria, worms, bugs and fungi on a daily basis and secretes anti-fungal oil. The mites circulatory fluid, hemolymph (a kind of bug blood) is also anti-fungal. Its poisonous nature would explain why its deep bright red; to ward off any predators. Its fuzzy body would also make it distasteful to any creature that dare make the mite its prey.

நா. கணேசன்


ஆமோதகம், ஆகாசம் என்பதுபோல ஆருத்ர என்னும் வார்த்தையில் ஆ - முன்னொட்டசை.
ருத்ர = சிவப்பு. கோவம் என்பதும் கோவைப்பழம் போல் சிவப்பு. (கோவைச் செவ்விதழ், கொவ்வைக்கனிவாய்  ... )
தெலுங்கானத்தில்  மூதாய் விற்பனை:
Arudra Purugulu being weighed at a village near Alair in Nalgonda district on Tuesday.–Photo: Singam Venkataramana

N. Ganesan

unread,
Jun 17, 2016, 10:14:04 AM6/17/16
to வல்லமை, mint...@googlegroups.com, minT...@googlegroups.com, santhav...@googlegroups.com, muela...@gmail.com

ஆமோதகம், ஆகாசம் என்பதுபோல ஆருத்ர என்னும் வார்த்தையில் ஆ - முன்னொட்டசை.
ருத்ர = சிவப்பு. கோவம் என்பதும் கோவைப்பழம் போல் சிவப்பு. (கோவைச் செவ்விதழ், கொவ்வைக்கனிவாய்  ... )
தெலுங்கானத்தில்  மூதாய் விற்பனை:
Arudra Purugulu being weighed at a village near Alair in Nalgonda district on Tuesday.–Photo: Singam Venkataramana


புழுக்கள் என்பதை தெலுங்கில் “புருகளு” என்கிறார்கள். ப்ருவ்வு என்பதும் புருகளு < புழுக்கள்.
வ்ராலு - வரையல்/வரி- என்பதன் திரிபாய் தெலுகில் வழங்குவதுபோல், புழு ப்ருவு ஆகிவிட்டது.
DEDR 4312 Ta. pur̤u

4312 Ta. pur̤u worm, maggot; (-pp-, -tt-) to breed worms, be worthless (as a worm-eaten thing); pur̤uppu breeding of worms. Ma. pur̤u worm, caterpillar, maggot, grub, moth, mite; pur̤ukka to be eaten or infected by worms, putrefy, rot. Ko. pu· worm, maggot. To. puf worm, intestinal worm; worm in skin, brain, or body (not intestinal) (< Badaga h&udieresisside;; Emeneau, Language, 15. 45); poṛy stink of a corpse (or with 3999 Ta. par̤a). Ka. pur̤u, pur̤a worm, insect in general, snake; pur̤i to be eaten or infected by worms, get worm-eaten, putrefy; pur̤icil rottenness, cariousness; pur̤uku that is eaten by vermin, state of being worm-eaten or decayed, ulcer, sore; purcu ruin, wickedness. Koḍ. puḷu worm; puŋg- (puŋgi-) (meat) becomes slightly decomposed, (sore) festers a little. Tu. puri worm, mite, moth, skin parasite; pura, puru snail; purigaṇṭů anything eaten or perforated by worms, worm-eaten; purkuni to rot, decay, become putrid; purṅguni, puruṅguni to ferment, decompose, decay; purṅgelů fermented, decayed, mouldy; purṅgaṭů id.; fermentation, decay; puppi, puppu decay, rottenness. Te. pur(u)gu, pur(u)vu, pruvvu worm, any insect or reptile, snake; p(r)uccu to rot, be putrefied, decay; p(r)uppi rottenness, decay; (K.) pruṅguḍu leucoderma. Kol. purre worm. Nk. purre id. Nk. (Ch.) pur(r)e worm, insect. Pa. puṛut (pl. puṛtil) worm. Ga. (S.) puḍut insect. Go. (Tr.) puṛī (pl. puṛk), (W.) puṛi worm, insect; (A. Ch.) puṛi (pl.puṛk); (Ph.) puṛī, purī, (Mu.) puṛi, puṛuy (pl. puṛk) worm (Voc. 2316); (Tr.) puṛītānā, (Mu.) puṛ- to breed worms; (Ch.) puṛi- to be worm-eaten (Voc. 2311). Konḍa piṛiyu (pl. piṛku), (BB) piṛi (pl. piṛku) snail; piṛvu (pl. piṛku), (BB) piṛu worm. Pe. pṛī (pl. pṛiku) worm, insect. Kui pṛiu, pṛīu (pl. pṛīka), piṛu (pl. piṛka) wingless insect, worm, maggot. Kuwi (F.) prīyūli (pl. prīka) caterpillar; (S.) pliguli insect; (Su. Isr.) pṛiyuli (pl. pṛīka) worm; (S.) plīginai to infest. Kur. pocgō worm, caterpillar, fleshy larva esp. of beetle; poccnā (puccyas) to engender worms (as a wound, rotten cheese, etc.); rot, fester. Malt. pocru worm, caterpillar; posg̣o weevil. Br. pū worm, maggot, caterpillar; pul-mak(k)ī tapeworm (makī intestinal worm < Pers.). ? Cf. 4353 Ta. pūcci. / Cf. Skt. pīlu- worm, H. pillū id. (Turner, CDIAL, no. 8240); Skt. puṇḍra- id.; Skt. pulaka- a kind of insect or vermin, Pali puḷava- worm, maggot; Skt. phullaka- worm, H. phūl maggots hatched in meat. DED(S) 3537.


நாள் என்றால் கருமை, இருள், இரவு.’ திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன’ - தொல்காப்பியம். இங்கே நாள் - இரவில் தோன்றும் நக்ஷத்திர மீன்கள்.
நாளணன் > நாடணன் திரிந்து நாரணன் (நாராயணன்). நாளப்பன் என்ற பெயரும் தமிழில் உண்டு. (2) சோழன் > சோடன் > சோரன் (3) கோழி > கோடி .... போல
புழு திரிந்து புரு/ப்ருவு என தெலுங்கில் வழங்குகிறது.

முதையில் வாழும் மூதாய் - தெலுங்கில் ஆருத்திர புருவுகளை எல்லாம் பிடித்துக் கொன்று அறபிநாடு, மும்பை என அனுப்பி வைத்தால்,
அவை தென்னிந்தியாவில் அழிந்துவிடும். மண்வளம் மிகக் குன்றும்:

”The oil from the red velvet mite  Trombidium grandissimum  (Arudra Purugulu)  is used in traditional Indian medicine to treat paralysis. Also, considered as an aphrodisiac,  Trombidium  mites are referred in several websites as Indian Viagra. These agents have made some villages in Alair, Yadagirigutta, Rajpet, Turkapally mandals as their home to collect the Arudra Purugulu. Since the collection of Arudra Purugulu is fetching more money than daily wage, for over a week now a large number of labourers and farmers have lined for picking them.

The agents have appointed one sub-agent in each village in these parts of the district to collect the insects from labourers.

A labourer at Saigudem village of Alair said that sub-agents are being paid Rs. 1,500 to Rs. 2,000 per kg by the agents of industries. However, the labourers had no clue why the agents are buying Arudra Purugulu. Since the Arudra Purugu is very crucial in maintaining the soil fertility and controlling the pest on crops, the development is worrying the farmers and agriculture officials.

An agriculturist in Yadagirigutta said that Arudra insect feeds on the harmful pests at larva stage to help the farmer to control pest. On the condition of anonymity, a sub-agent said that the agents boils the insects alive and pack into kg bags after drying up for transportation to Bangalore, Mumbai, Kolkata, Hyderabad and some other Arab countries. The farmers and agriculture officials want the State government to take stern action against the mafia to protect the insects.”


நா. கணேசன்


 

N. Ganesan

unread,
Jun 23, 2016, 10:21:58 AM6/23/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, santhav...@googlegroups.com, muela...@gmail.com

தம்பலம், தாம்பூலம்/தாம்பூரம்

-         A reply to Thomas Zumbroich’s thoughts on tāmbūla” in India

 

சங்க இலக்கியத்தில் மூதாய் என வழங்கப்பெற்ற தாம்பூல நிறத்தில் இருப்பதால் மக்கள் தம்பலப் பூச்சி என்கின்றனர். தாம்ரம் என்னும் வடசொல் செம்பு உலோகமாகும். தாம்பிரம்/தாம்பூரம் என்பவையும் பழைய சமுதாயங்களின் சுவடிகளில் தாமிரத்தைக் குறிக்கும். தும்-/துவ்-/துப்- என்னும் வேர்ச்சொல் சிவப்பு நிறத்தைச் சுட்டும். Salt உவரி, உப்பு, உமணர் என்ற சொற்களோடு தொடர்பு உடையது. உம்-/உவ்-/உப்- உறவு Salt தொடர்பாக இருப்பது போல,

செந்நிறத்துக்கு உறவாக தமிழில் தும்-/துவ்-/துப்- எனத் தொடங்கும் சொற்கள் இருக்கின்றன. கோயம்புத்தூர் > கோயம்பத்தூர் (Coimbatore), சுவரைப் புல்லுகிற புல்லி > பல்லி என ஆவதுபோல, தும்- ‘red’ > தம்- என்றாகும் சொற்கள் தமிழில் மிகப்பல. அவ்வாறு, செந்நிறத்தைக் குறிக்க உருவாவதே தம்பரம்/தம்பலம், தாம்பூரம்/தாம்பூலம்/தாம்பிரம். வடமொழியில் தாம்ர- என்ற செம்பிற்கான வார்த்தைக்கும் தம்- என்னும் வேர்ச்சொல்லே ஊற்றுக்கண். பொதியில் மலையை சிவந்த மலை என்று கிரேக்கம் முதலிய மொழி ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். அம்மலையில் இருந்து பிறக்கும் தம்பொருனை தாம்ரபரணி ஆகியுள்ளது. இங்கும் தம்- என்னும் சொல் சிவந்த என்னும் பொருளிலே வழங்குவது காணலாம்.

 

அடைக்காய் என்பது areca nut என்று எழுதுகின்றனர். மரங்களில் குலையாய்ப் பூக்கும் மரம் அடைக்காய் எனும் பூகம்/பாக்கு மரம். குலை குலையாய் உள்ள பூ சில வாரங்களில் அடைகாய்களாக மாறுகிறது. அதாவது, கொத்துக்கொத்தாய் குலைகுலையாய் பூக்கள் மெல்லமெல்ல காய்களாய் மாறுவதை பாக்குத் தோப்பில் பார்க்கலாம். எனவே, அடைக்காய், பூகம். இந்தப் பூக்கம் > பாக்கு ஆகிவிட்டிருக்கிறது. தென்னாட்டில் இருந்து பூகமும் (=பாக்கு), தம்பலம் என்று வழங்கும் தாம்பூலத்திற்கான வெத்திலையும் பயிரிட வடக்கே சென்றிருக்கவேண்டும். தென்கிழக்கு ஆசியாவின் தாவரங்கள் தென்னை, சந்தனம், போன்றனவும் தென்னிந்தியா முதலில் வந்து வடக்கே சென்றவை. நாகலதை என்று வெற்றிலைக் கொடிக்கு ஒருபெயர். நாக பாம்பின் படம் போல வெற்றிலை இருப்பதால் நாகலதா என ஒரு பெயர்.

 

சிந்து சமவெளி நாகரீகம் ஒரு தாம்பிர நாகரீகம், அதாவது இரும்பு வழக்கில் இல்லாத நாகரீகம். அந்நாகரீகத்தில் பயன்படுத்தப்பெற்ற உலோகம் தாமிரம். தாம்பிரம், தாம்பூரம் என்று சுவடி, கல்வெட்டுகளில் பயில்வது. வட இந்தியாவில் தாம்ர என்பது அடிப்படையில் தும்- > தம்- என்ற  தமிழ் வேர்ச்சொல்லைக் கொண்டது என்னும் உண்மை முக்கியமானது. ஆங்கில ஆய்வறிஞர் பலருக்கும் தும்-/தம்- என்னும் செந்நிறம் காட்டும் மூலச்சொற்களோ, அதனை அடிப்படையாய்க் கொண்ட தாம்ர/தாம்பூர, தாமரை, தம்பலம்/தாம்பூலம் சொற்களின் பிறப்போ அறியாதவர்கள். ஓர் உதாரணம் கொண்டு விளக்குகிறேன்:

 

தாமஸ் ஃசும்பிராய்ச்  டெக்ஸாஸ்காரர். ஆஸ்டினில் வசிப்பவர். அவர் எருதந்துறை (ஆக்ஸ்போர்ட்) பல்கலையில் பணிபுரிகிறார். அப்போது எழுதிய கட்டுரையில் தாம்பூலம் என்ற சொல்லை கம்போடியா போன்ற மான் – க்மெர் மொழிக் குடும்பம் வழி வந்தது என்ற கருத்தை முன்வைக்கிறார். இக்கருத்து புதியதல்ல - Jean_Przyluski  என்னும் பிரெஞ்சுநாட்டு அறிஞர் முதலில் சொன்னதுதான். http://www.encyclopedia.com/article-1G2-3424502525/przyluski-jean.html https://en.wikipedia.org/wiki/Jean_Przyluski

தாம்பூலம் மான் – க்மெர் மொழி வார்த்தை என்றால் தொடர்புடைய தம்பலம்/தம்பரம், தாம்பூரம், தாமரை, தம்மி, தும்ப அரத்தை மற்றும் தும்-துவ்-துப்- என தொடங்கும் தமிழ்ச் சொற்களின் ஆழமும், வியாபகமும் தமிழில் இருப்பது தெரியாமல் இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகள் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது எழுதியது இன்னமும், ஐரோப்பிய அறிஞர்களிடையே தாம்பூலம் என்ற வார்த்தையை தென்கிழக்கு ஆசியச் சொல் எனக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரிகிறது. அது மொழியியல் அறிஞர்கள் கட்டுரை எழுதி 20-30 வார்த்தைகளாவது தும்-துவ்-துப்- என்னும் சொற்கள். தும்மி > தம்மி ’lotus’ என்பது த்ராவிடம் என விளக்கவேண்டியது கடமை. தாமஸ் ஃசும்பிராய்ச் 

எழுதுகிறார்:

The origin and diffusion of betel chewing: a synthesis of evidence from South Asia, Southeast Asia and beyond

                                                          THOMAS J. ZUMBROICH

Zumbroich, Thomas, 2007–8. ‘The origin and diffusion of betel chewing: a synthesis

of evidence from South Asia, Southeast Asia and beyond’, eJournal of Indian

Medicine, 1, pp. 87–140

 

”Turning to the linguistic history of betel chewing terminology in Indo-Aryan languages, the most widely represented language family in South Asia,178 the Old-Indo-Aryan form pūga ‘areca nut’ is thought to be derived from the Dravidian *pānkk.179 The form tāmbūla ‘betel leaf’ on the other hand appears to be a loan from an Austroasiatic source reflect-ing *ml[əw] (or *bl[əw]),180 even though the initial tām- remains so far unexplained.181 In support of the Austroasiatic origin of tāmbūla one can also adduce Indo-Aryan *bār ‘betel’ that is reflected in Sanskrit and Bengali, e.g. in bārui ‘caste of the betel leaf growers’.182 On phonologi-cal grounds it has been argued that tāmbūla reached Sanskrit by way of one of the Munda languages spoken by hill tribes in Eastern and parts of Central India,183 but in light of the absence of any cognate Munda forms,184 a Mon-Khmer language must be considered the most likely source. “

 

ஆனால், தமிழின் சிவப்பு நிறம் குறித்த வார்த்தைகளை ஆராய்ந்தால் தம்பலம்/தாம்பூலம் பிறப்பு விளங்கும். தாமஸ் ஃசும்ப்ராய்ச் குறிப்பிடும் தாம்பூலத்தின் “தாம்/தம்” என்ன என்று தனக்குத் தெரியவில்லை என்பதற்கு அவருக்கும், அவரைப் போன்ற அறிஞருக்கும் விடையும் கிட்டும்.

 

தும்மி (= தாமரை) > தம்மி. கம்பன் பாடல்: http://www.tamilvu.org/slet/l3710/l3710ine.jsp?x=760

தோள் மிடைந்தன. தூணம் மிடைந்தென;
வாள் மிடைந்தன. வான்மின் மிடைந்தென;
தாள் மிடைந்தன. தம்மி மிடைந்தென;
ஆள் மிடைந்தன. ஆளி மிடைந்தென;

 

தெலுங்கிலே தியாகராஜர் ‘தம்மி’ என்பதைப் பல இடங்களில் ஆள்கிறார்:

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/08/emi-jesite-raga-todi.html

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/11/3-pahi-kalyana-sundara-raga.html

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/05/kaaru-velpulu-raga-kalyani.html

 

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/app/brown_query.py?qs=tammi

1) కెం (p. 307) keṃ ...kempu+cāya.] n. Red colour. kendammi (kempu+tammi) n. Red lotus. kendāmara ken-dāmara. [ 
2) 
చెందమ్మి (p. 426) cendammi chen-dammi. [Tel. cennu+tammi.] n. The red lotus. errakaluva. 
3) 
తమ్ముల (p. 510) tammula The plu. infl. of tammuḍu of tammi a lily, and of tāmu themselves. tammula vindu tammula-vindu. [Tel... 
4) 
తమ్మి (p. 510) tammi tammi-kanṭi. n. A fair eyed person, A translation of the Sanskrit word పుండరీకాక్షః, a name of Vishṇu. తమ్మికెంపు tammi-kempu... 
5) 
నెత్తమ్మి (p. 675) nettammi net-tammi. [Tel. nēla+tammi.] n. The meadow lotus, a flower that resembles the aquatic lotus, Hibiscus mulabiles, sthalapadmamu. nettammi

 

குலத்தல்/குலைத்தல் = கலத்தல் (cf. துளிர்/தளிர், குட்டை/கட்டை, புல்லி/பல்லி ...). இவை போல, தும்மி > தம்மி.

இங்கே, தம்மி ‘lotus’ < தும்மி. தும்- சிகப்பு; தெலுங்கில் பரவலாகவும், தமிழில் சில இடங்களிலும் தாமரையை தம்மி என்கின்றனர். தாமரஸ என்று தாமரை வடமொழியில் வழங்கும். Alpinia Galangal அல்லது Pink Galangal இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்த்து. தும்ப ராஸ்னா/ராஷ்டிரம்/ராஷ்டகம் (orchid) என்று தெலுங்கில் வழங்கப்படும் பெரிய அரத்தை (அ) தும்பரத்தை. அரத்தை என்பதே இதன் சிவப்பு/ரத்த நிறம் சுட்டும் பெயர்தான். தும்ப ராஷ்டகம் என்று சிவப்பின் பெயரால் வழங்கும் Alpinia Galangal தாவரம் போலவே, சிவப்பான காய்களைக் கொண்ட அத்திக்காய் (< அரத்திக்காய். ஒருத்தர் > ஒத்தர் போல, அரத்தி > அத்தி) தும்பரங்காய் என்பதும் உண்டு. உடும்பரம் என வடமொழியில் மரக்கிளைகளில் உடும்புபோல் ஒட்டிக்கொண்டிருக்கும் அத்திமரப் பெயர். பேரரத்தை – தும்பரத்தை – சிவப்பு. தொடர்புடைய சிற்றரத்தை – சன்ன அரத்தை (Lesser Galangal),

 

தும் - > தம்-/தாம்- என்னும் தமிழ்ப் பெயரே தம்பலம், தாம்பூலம், தாமிரம் போன்ற மிக முக்கியமான சொற்களில் வட இந்தியாவில் வழங்குவது. அவை தென்கிழக்கு ஆசியச் சொற்கள் அல்ல. பூகம் (> பாக்கு), வெற்றிலை தென்கிழக்கு ஆசிய (உ-ம்: பிலிப்பைன்ஸ்) தாவரங்கள் என்பது மெய்யே. ஆனால், சந்தனம், தென்னை, … போல தம்பலம்/தாம்பூலம், வெற்றிலை, அடைகாய், பூகம்/பாக்கு இவை தமிழ்ப் பெயர்கள் வடக்கே சென்றும் புழங்குகின்றன.

 

“தாமரை: தும்-துமர்-துவர்=சிவப்பு, துவர்-துவரை=செம்பயறு. துமர்-தமர்(தமரை)-தாமரை= செந்நிற நீர்ப்பூவகை. இச்சொல் இன்று தன் சிறப்புப் பொருளிழந்து, அவ்வகையின் இருநிற மலர்க்கும் பொதுப்பெயராக வழங்குகின்றது. தாமரை-தாமரஸ(.). “ (பாவாணர்).

 

ஆங்கிலத்தில் எழுதும் தாவரவியல், இந்தியவியல் அறிஞர்கள் கவனித்து எழுதுவார்களாக. நன்றி.

 

நா. கணேசன்

 

தும்-/துவ்-/துப்- “சிவப்பு” பற்றிய சொற்களை தேவநேயப் பாவாணர் தொகுத்து ஆராய்ந்துள்ளார். அதை நினைக்கும்போது தாமஸ் ஃசும்ப்ராய்ச் போன்றோர் தாம்பூலம், தாம்ரம் … என்ற சொற்களை ஆராய்கையில் பயன்படுத்தவேண்டும். அச் சொற்பிறப்புகள் துலக்கமடையும்.

 

http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=211&pno=8

தும் = செம். தும்-தும்பு-துப்பு = சிவப்பு, பவழம், அரக்கு.

     தும்பு-தும்பரம் = சிவப்பு, சிவப்பான அத்திப்பழம்.

     தும்-(துமர்)-துவர் = சிவப்பு, பவழம், காவி, துவரை, துவர்ப்பு 
     (காசுக் கட்டி). துவர்த்தல் = சிவத்தல், துவர்ப்புச் சுவையாதல்.

     துவர்-துவரை = செம்பயறு, செப்புக்கோட்டை நகர்.

     துவர்-துகிர் = பவழம்.

     துமர்-தமர்-தாமரம் = செம்பு. தாமரை = செம்முளரி, முளரி.

     தாமரஸ என்னும் வடசொல் வடிவைத் தாம+ரஸ என்று பகுத்துப் 
பகல் முளரி என்று பொருள் கூறுவர். ஆயின், தாம என்னுஞ் சொற்கு 
மூலமாகக் கொள்ளும் தம என்னுஞ் சொற்கோ, இருள் அல்லது இரவு 
என்றுதான் பொருள். இனி, இக் குழறுபடியைப் பெருக்கற்குத் தம் என்பதை 
அடி மூலமாகக் காட்டுவர். அதற்குத் திணறுதல் அல்லது திக்குமுக்காடுதல் 
என்பது பொருள். இங்ஙனம் வடவர் திணறித் திண்டாடுவதெல்லாம், 
வேண்டுமென்றே மெய்ம்மையைப் புறக்கணித்துப் பொய்ம்மையை 
மேற்கொள்வதன் விளைவே.

தாமரம்-தாம்ர

 

 

http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=193&pno=50

தும்பரம் - தம்பரம் - தாம்பரம் =செம்பு (பதார்த்த.1170)

தாம்பரம் -. தாம்ர.

தம்பரம் - தம்பர் = வெற்றிலை தின்றுசிவந்த எச்சில் (மாறனலங்.470, உதா.)

தம்பரம்=தம்பலம்=1. வெற்றிலை தின்றுசிவந்த எச்சில். "தில்லைநல் லார்பொதுத்தம்பலங் கொணர்ந்தோ" (திருக்கோ.396)தெ.தம்ம. 2.வெற்றிலை பாக்கு. "தையால் தம்பலந்தின்றியோ" (கலித்.65) .3. தம்பலப் பூச்சி.

தம்பலம் - . தாம்பூல.

தம்பலப் பூச்சி = தம்பலம்போற்சிவந்த மூதாய்.

தம்பலம் - தம்பல் = வெற்றிலை தின்றுசிவந்த எச்சில்.

"வெள்ளிலைத் தம்பல்" 

(கம்பரா.வரைக்கா.49)

தம்பலம் - தம்பலை = சிவந்த இலந்தைப்பழம், அது பழுக்கும்

முட்செடி.

துமர் - தமர் - தமரை = தாமரை =செம்முளரி.

தாமரை என்னுஞ் சொல் இன்று தன்சிறப்புப் பொருளிழந்து, பொதுப்பொருளில்வழங்குகின்றது. அதனால், செம்முளரியைக் குறிக்கச்செந்தாமரை என்று மிகைபடக் கூறலாகச் சொல்லவேண்டியுள்ளது. இது, அரைஞாண் கொடி, குளிர்ந்ததண்ணீர் என்பன போன்ற வழு வழக்கே.

தாமரை - வ. தாமரஸ.

இதுகாறுங் கூறியவற்றால்,வடசொல்லாகக் கருதப்படும் தாம்பரம், தாமரைஎன்னுஞ் சொற்களும் தென்சொல்லே யென்றும்,இங்ஙனமே நூற்றுக்கணக்கான தென்சொற்கள்வடமொழியில் இனம்மறைந்து வழங்குகின்றனவென்றும், தமிழ் உண்மையில் திரவிடத் தாயும்ஆரிய மூலமும் ஆகுமென்றும் அறிந்துகொள்க.


Let me quote some important paragraphs of Taambuula attestation in old Buddhist texts from Thomas Zumbroich’s paper:


”7.3.1. Despite claims to the contrary,185 none of the works of the Vedic period which ended around 700 B.C.E. contain any convincing refer-ences to the betel habit. Such references are also absent from the later and rather encyclopedic epic Mahābhārata. Only in a single edition of a subrecension of the Rāmāyaa is the term tāmbūlika ‘betel seller’ pre-sent,186 but this variant reading is of a relatively late date.187 In its archetypal form the Rāmāyaa reflects the time period between 750 and 500 B.C.E. before the rise of Buddhism and the imperial dynasty of Magadha in their capital Pāṭaliputra [16].188 Notions of southern peninsular India or Sri Lanka are vague in the epos189 which might explain why betel chewing is omitted in any descriptions of southern scenes or characters. We may also speculate that at the time of the composition of the Rāmāyaa betel chewing had not made its way to the Ganges watershed where some of the events in the older parts of the epic take place, even though it is impossible to attach any specific date to this hypothesis.

 

7.3.2. The Sri Lankan Chronicles Dipavasa (Chronicle of the Island, after third century C.E.)190 and Mahāvasa (Great Chronicle, ca. fifth century C.E.)191 provide the first textual evidence on betel ingredients in northern India. These chronicles make reference to Ashoka of Pāṭaliputra since he sent the first Buddhist missionaries to the island. The following passage of the Dipavasa details the legendary events surrounding Ashoka’s consecration around 270 B.C.E.:192

 

‘At that time the gods always brought the celestial tooth-sticks193 and the betel leaves,194 fragrant, grown on the mountain, soft, glossy, sweet, full of juice and pleasing ... [and] the celestial sugar-cane, a quantity of areca nut195 and a yellow cloth.’196

This description is echoed by another one, set four years after Ashoka’s coronation on the occasion of his conversion to Buddhism when he is said to have distributed large amounts of ‘tooth-sticks and betel leaves’197 to the monastic community. These passages, mainly intended to illustrate Ashoka’s wealth and generosity, imply that a supply of the ingredients of the betel quid was available in Pāṭaliputr

For Sri Lanka, too, the Mahāvasa,198 which chronicles events on the island beginning with the legendary arrival of the Indo-Aryan prince Vijaya on the day of the demise of the Buddha,199 provides the first ref-erence to betel chewing.200 During the construction of the Mahāthūpa (Great Stupa) in Anurādhapura, king Duṭṭhagāmaṇī rewarded the workers not just with money, clothing, food and drink, fragrant flowers and sugar, but also with mukhavāsakapañcaka, the five perfumes for the mouth.201 These are explained in a commentary as betel with additional aromatic ingredients such as camphor.202 If this event in the middle of the second century B.C.E. is indeed relayed authentically,203 it constitutes the earliest reference anywhere to betel chewing in conjunction with other flavourants."

 

198. Different references from the Mahāvasa that Lewin (1880): 8, gives for the earliest accounts of betel chewing have been frequently quoted, e.g. Hartwich (1911): 586, Burton-Bradley (1979): 481; Rooney (1983): 14. However, the story of a gift of betel leaves by a princess to her lover as part of the legend of Paṇḍukābhaya ‘from around the year 504 B.C.E’, in reference to Mahāvasa 9.16. cannot be considered authen-tic for either date or details of the event (Compare the translations by Turnour (1909): 37 and Geiger (1964): 66). Lewin also relates an episode from Duṭṭhagāmaṇī fight against the Tamils ‘in 161 B.C.E.’, during which his enemies noticed Duṭṭhagāmaṇī’s ‘blood-red’, betel-stained lips and spread the rumour that he was wounded. We have been unable to find the source of this story.  "

dorai sundaram

unread,
Jun 23, 2016, 11:44:17 AM6/23/16
to mintamil
அற்புதமான சொல்லாய்வு. 
சுந்தரம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 18, 2017, 3:25:45 AM1/18/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, muela...@gmail.com, guna thamizh
திரு. மோகனரங்கன் மூதாய்ப் பூச்சியின் இந்திரகோபம் என்னும் பெயர் சங்க இலக்கியத்தில் உண்டா எனக் கேட்டிருந்தார்:

On Thursday, January 12, 2017 at 7:39:47 AM UTC-8, Pandiyaraja wrote:
>>சங்க இலக்கியத்தில் இந்திரகோபம் என்ற சொல்லாட்சி இல்லை ஐயா! கோபம், கோவம் என்றுதான் இது வருகிறது. இதுவே ஈயல் மூதாய் என்ற பெயரிலும் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. ப.பாண்டியராஜா


On Thursday, January 12, 2017 at 12:36:41 AM UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
>ஐயா! ஓர் ஐயம். 

> தங்களுடைய தளத்தில் இந்திரகோபம் பற்றிப் படித்தேன். 

> சங்க இலக்கியத்தில் ‘இந்திரகோபம்’ அல்லது ‘இந்திரகோவம்’ என்ற சொல்லாட்சி உள்ளதா? அல்லது வெறுமனே கோபம் அல்லது 
கோவம் என்று மட்டுமே சொல்லாட்சி உள்ளதா? 

> ஏனெனில் இந்திரகோபம் என்னும் பயன்பாடு உரையாசிரியர்கள் எழுத்துகளில் மட்டுமே உள்ளதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டி. 

***

மூதாய், தம்பலப்பூச்சி (இடைக்காலம்) என்னும் இந்திரகோபம் பற்றிய பழைய இழைகள். முதலில் இதுபற்று ஜார்ஜ் ஹார்ட்
CTamil குழுமத்தில் கேட்டிருந்தார். அங்கு பலர் பேசினர். முதை என்னும் சொல்லில் இருந்து பிறப்பது மூதாய் என்றும்,
ஈற்று யகரமெய், மூதா (முதிய மாடு) என்பதனின்றும் வேறுபடுத்தச் சேர்த்திருக்கவேண்டும் என்பதும் எழுதினேன்.

வடமொழியில் இந்திரகோபம் என்று பெயர். தமிழில் கோவம் என்று வரும்.
கொவ்வைச் செவ்வாய், கோவைக்காய் என்பதால் இந்த்ர-கோபம் என்ற பெயர்
உருவாகியுள்ளது என கருதுகிறேன். மழைக்கு அதிபதி இந்திரன். யானையையும், மேகத்தையும்
ஒன்றாக இந்திய செம்மொழிகள் இரண்டின் இலக்கியங்களிலும் சொல்வர். மேகவாகனன்
என்று இந்திரனுக்கு ஒரு பெயர். இந்திரன் ஏவலால் மழைபெய்யும். அவ்வாறு அடைமழை
பெய்யக் குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் கண்ணன். மழைக் காலங்களில் மட்டும் நிலமெங்கும்
திரிவன கோவம் என்னும் மூதாய்ப் பூச்சிகள். மழை = இந்த்ர- என்ற முன்னொட்டுச் சேர்ந்து
இந்திர - கோவம் வடமொழியில் இந்த்ர-கோபம் ஆகிவிட்டது.
(1) மாமரம் மலர்:அலர் போல, ஆமரம் (ஆம்ர) என்று ஆகியுள்ளது போல்.
(2) வடம் போன்ற விழுதுகள் கொண்ட மரம் வடமொழியில் வடவ்ருக்ஷம் ஆகியதுபோல்
கோவம் > கோபம் > இந்த்ர-கோபம் என தமிழ்ச்சொல் வடசொல் ஆனது எனக் கொள்க.
கோவம் வடமொழிகளுக்கு தமிழ்வழங்கிய கடன்சொல் (loan word).

கல்பட்டு நடராஜன் ஐயா தொடங்கிய இழை:

சங்க இலக்கியத்தில் விந்தைப் பூச்சி (1981)

மூதாய் - தம்பலப் பூச்சி - இந்திரகோபம்

தம்பலப் பூச்சி (=மூதாய்) பற்றிய சில ரசிக்கத்தக்க பாடல்களும், புகர் என்றால் தம்பலப் பூச்சியின் சிவப்பு நிறம்
என்று தெளிவாகக் காட்டும் சங்க இலக்கியங்களையும் பார்ப்போம்.

தமிழ்ப் பேரா. குணசீலன், நற்றிணைப் பாடல் ஒன்றை நயமாக விளக்கியுள்ளார். களவு என்பது என்ன? -என்று
புரியவைக்கும் பாடல். மூதாய்ப் பூச்சியும் பாட்டில் குறிப்பிடப்படுகிறது.

நா. கணேசன்

http://www.gunathamizh.com/2013/01/blog-post_6088.html

மாமலையும் ஓர் கடுகாம் !


இலக்கியத்தையும் - வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை புலப்படும்.

ஒரு காதலர் புலம்புகிறார்..
கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

இதோ ஒரு சங்ககால காதல் இணையரைப் பாருங்கள்..
தலைமக்கள் பெற்றோருக்குத் தெரியாமல் உடன்போக்கில் சென்றனர். நீண்டதூரம் சென்றதால் தலைவி வருத்தமடைந்தாள் என்பதை உணர்ந்த தலைவன்,
“அன்பே மேகம் முதல் மழையைப் பொழிந்ததால் இந்த அழகிய காட்டில்தம்பலப் பூச்சிகள் (பட்டுப் பூச்சிகள்) எங்கும் பரவின. அவற்றைப் பார்த்தும், பிடித்தும் நீ சிறிது நேரம் விளையாடிக்கொண்டிரு. நான் இளைய யானைகள் தம் உடலைத் தேய்த்துக்கொள்ளும் பருத்த அடியுடைய வேங்கை மரத்தின் பின்புறத்தில் அமர்ந்திருக்கிறேன். அப்போது வழிப்பறி செய்வோர் வந்தால் அவர்களுடன் அஞ்சாது போரிட்டு அவர்களை ஓடச் செய்து உன்னைக் காப்பேன். ஒருவேளை உன்னைத் தேடி உன் உறவினர் வந்தால் நீ வருந்தாமலிருக்க அவருடன் போரிடாது மறைந்துகொள்வேன்“
என்கிறான் தலைவன். பாடல் இதோ..

வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.

நற்றிணை -362. மதுரை மருதனிள நாகனார்

இப்படி பெற்றோருக்கு அஞ்சி வாழ்வதால் தான் இந்தக் காதலை நம் தமிழர்கள் களவு என்றார்கள். இந்தப் பாடலைப் படிக்கும்போது காட்சிகள் கண்முன் விரிகின்றன.
கொடிய கள்வர்களுக்குக் கூட அஞ்சாத காதலன், தலைவியின் உறவினர்களுக்கு அஞ்சுவேன் என்று கூறும் பாங்கு நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

N. Ganesan

unread,
Jan 19, 2017, 12:28:54 AM1/19/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com
கார் நாற்பது:

இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந் 
தவழுந் தகைய புறவு.

(ப-ரை) பகழிபோல் - அம்புபோலும், உண் கண்ணாய் - மையுண்ட கண்களையுடையாய், ஈண்டை - இவ்விடத்து, பவழம் சிதறியவை போல - பவழம் சிந்தியவை போல, புறவு - காடுகள், கோபம் தவழும் தகைய - இந்திர கோபங்கள் பரக்குந் தகைமையை உடையவாயின ; (ஆதலால்), இகழுநர் சொல் அஞ்சி இகழ்வார் கூறும் பழிக்கு அஞ்சி ; சென்றார் - பொருள் தேடச்சென்ற தலைவர், வருதல் - மீளவருதல், பொய் அன்மை மெய்யாம். எ-று.

தமது தாளாண்மையாற் பொருள்தேடி அறஞ்செய்யாதார்க் குளதாவது பழியாகலின் ‘இகழுநர் சொல்லஞ்சி' எனப்பட்டது. வடிவானும் தொழிலானும் கண்ணுக்குப் பகழி உவமம். பொய்யன்மை - மெய்ம்மை. ஈண்டைப் பவழஞ் தறியவை என்றமையால் தலைமகள் வருத்த மிகுதியால் தான் அணிந்திருந்த பவழவடத்தை அறுத்துச் சிந்தினாளென்பது கருதப்படும். ஈண்டை - குற்றுகரம் ஐகாரச் சாரியையேற்றது. கோபம் - கார்கலத்தில் தோன்றுவதொரு செந்நிறப்பூச்சி; தம்பலப்பூச்சி யென்பர்.



இப்போதைய வசனகவிதை: தம்பலப் பூச்சி

https://kovaikkavi.files.wordpress.com/2014/01/enna-peyar.jpg


(5)

N. Ganesan

unread,
Jan 19, 2017, 12:48:37 AM1/19/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com
தம்பலப்பூச்சி எனப் பேர்வைத்தவர் கம்பர்:

எள் இட இடமும் இன்றி
      எழுந்தன இலங்கு கோபம்,
தள்ளுற, தலைவர்தம்மைப்
      பிரிந்தவர் தழீஇய தூமக்
கள்ளுடை ஓதியார் தம்
      கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பை
      சிதர்ந்தென, விரிந்த மாதோ.


--------------

இன்னொரு கம்பர் வர்ணிப்பு:

கொவ்வை நோக்கிய வாய்களை.
   இந்திர கோபம்
கவ்வி நோக்கின என்றுகொல் -
   காட்டு இன மயில்கள்.
நவ்வி நோக்கியர். நலம் கொள்
   மேகலை. பொலஞ் சாயல்-
செவ்வி நோக்கின திரிவன
   போல்வன. திரிந்த.
தாம்    கவர    வேண்டுமென்று    கொவ்வைப்பழம்    கருதியிருந்த
பெண்களின்     செவ்வாய்   அழகை   இந்திர    கோபப்   பூச்சிகள்
கவர்ந்துள்ளன  என்று   காட்டு  மயில்கள்  கருதியதால்தானோ  அந்த
இந்திரகோபங்களை  உண்ண  விரும்பித்   தாம்  அதற்காகத்  திரிவது
தோன்றாதவாறு  அப்பெண்களின்  சாயல்  அழகைக்  காணத்  திரிவன
போலத் திரிந்தன என்பது. http://www.tamilvu.org/slet/l3700/l3700ur1.jsp?x=906

------------------

கம்பருக்கு வழியமைத்த சிந்தாமணிப் பாடல் ஒன்றில்:

1819பைந்துகின் மகளிர் தேன்சோர்
  பவளவாய் திகழ நாணிச்
சிந்தித்துக் கூந்தல் வாங்கிச்
  செவ்வணந் துடைப்ப தேபோ
லிந்திர கோபங் கௌவி
  யிறகுளர் கின்ற மஞ்ஞை
யந்தரத் திவர்ந்த பாய்மா
  வரும்பொற்றா ரரவத் தாலே.

   (இ - ள்.) பைந்துகில் மகளிர் தேன் சோர் பவளவாய் திகழ நாணி - பைந்துகிலுடுத்த மங்கையர் தம்முடைய தேன் பொழியும் பவளம் போலும் வாய் சிவந்து விளங்க அதற்கு நாணுற்று; சிந்தித்து - அது தீரும்படியை ஆராய்ந்து ; கூந்தல் வாங்கி - தம் கூந்தலைக் குலைத்து; செவ்வணம் துடைப்பதே போல் - அச்சிவந்த வண்ணத்தைத் துடைப்பதைப்போல; இந்திர கோபம் கௌவி - இந்திர கோபம் என்ற பூச்சிகளைப் பற்றியவாறு; இறகு உளர்கின்ற மஞ்ஞை - இறகைக் கோதுகிற மயில்கள்; பாய்மா அரும் பொன் தார் அரவத்தால் - குதிரைகளின் கழுத்திற் கட்டிய அரிய பொன்னாலான கிண்கிணி மாலையின் ஒலியாலே; அந்தரத்து இவர்ந்த - வானிலே பறந்து சென்றன.

   (வி - ம்.) தேன் சோர்வாய், பவளவாய் என ஒட்டுக. செவ்வணம் - சிவப்பு நிறம். இந்திரகோபம் - ஒரு புழு. பாய்மா : வினைத்தொகை, பொற்றார் அரவத்தால் மஞ்ஞை அந்தரத்து இவர்ந்த என்க.


N. Ganesan

unread,
Feb 20, 2017, 10:22:37 AM2/20/17
to வல்லமை, மின்தமிழ்


On Friday, January 20, 2017 at 10:05:43 AM UTC-8, DEV RAJ wrote:
On Wednesday, 15 June 2016 19:28:56 UTC+5:30, N. Ganesan wrote:
ஆமோதகம், ஆகாசம் என்பதுபோல ஆருத்ர என்னும் வார்த்தையில் ஆ - முன்னொட்டசை.
ருத்ர = சிவப்பு. கோவம் என்பதும் கோவைப்பழம் போல் சிவப்பு. (கோவைச் செவ்விதழ், கொவ்வைக்கனிவாய்  ... )

>>> ஆருத்ர என்னும் வார்த்தையில்..<<<

அப்படி ஒரு வார்த்தை சங்கதத்தில் உள்ளதா ? தெரியுமா ?
அகராதியிலிருந்து எடுத்துக்காட்ட இயலுமா ?


ருத்ர என்றால் சிவப்பு எனப் பொருள். அழுதலுக்கும் ருத்ர.

ஆ! ருத்ர = ஆர்த்ர என்று வடமொழியில் ஆனது எனக் கருதுகிறேன்.
ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா என்னும் எழுத்தாளர்.

காயம் என்ற சொல் ஆகாயம், ஆகாசம் என வடமொழியில் ஆதற்போல
ஆருத்ர என்ற சொல், ஆர்த்ர என்றாகியது, சுருங்கி ஆதிரை என பிராகிருதம், தமிழில்.

ஆருத்ரா நக்ஷத்ரத்திற்கு தேவதை ருத்ரன். சிவப்பு, கண்ணீர் இரண்டுடன் தொடர்பு ருத்ரனுக்கும், ஆருத்ரை விண்மீனுக்கும் உண்டு.


ஆதிரை நட்சத்திரம் வெடிக்க இன்னும் ஒரு லட்சம் வருஷம் இருக்கிறது:

நா. கணேசன்

 

தேவ்
 
Reply all
Reply to author
Forward
0 new messages