*நாகம்பட்டி கல்லூரியில் வ. உ. சி. யின் படைப்பும் பதிப்பும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியிடுதல்*

12 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Nov 20, 2025, 10:26:37 PM (3 days ago) Nov 20
to
*நாகம்பட்டி கல்லூரியில் வ. உ. சி. யின் படைப்பும் பதிப்பும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியிடுதல்*

 

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வ. உ. சி. யின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘*வ. உ. சி. யின் படைப்பும் பதிப்பும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியிடுதல்*     , பிப்ரவரி 06, 2026 இல் நடைபெற உள்ளன. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து செய்து வருகின்றன.

வ. உ. சி. சுதந்திரப் போராட்ட வீரர், காலனியாதிக்கக் காலத்தில் இந்திய கப்பல் போக்குவரத்தை முன்னிறுத்த சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவியவர் மட்டும் அல்ல! மிகச் சிறந்த படைப்பாளி, பதிப்பாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். அவரைப் பற்றி முழுமையாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் யாவரும் அறியும் பொருட்டு இக்கருத்தரங்கம்  மற்றும் நூல் வெளியிடுதல் நடைபெற உள்ளன.

வ. உ. சி. யின் படைப்புகள் / பதிப்புகள் / மொழிபெயர்ப்புகள் / அவர் குறித்த நூல்கள் பற்றிக் கட்டுரை அமைய வேண்டும். A4 தாள் அளவில் 6 பக்கங்களுக்கு மிகாமல் Arial Unicode font இல் இருக்க வேண்டும்.   ஆய்வுக் கட்டுரை சொந்த முயற்சியாகவும், இதற்கு முன்னர் வேறெங்கும் பிரசுரிக்கப்படாததாகவும், தரம்மிகு கட்டுரையாகவும் இருக்க வேண்டும்.  அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தம் கட்டுரையினை எழுதலாம்.   மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் & தமிழ் ஆர்வலர்கள் ஒரு பேராசிரியரை நெறியாளராகத் தேர்ந்தெடுத்து, கட்டுரையை நெறிப்படுத்தி அனுப்ப வேண்டும். நெறிப்படுத்தும் பேராசிரியருக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.  *இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் யாவரும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.*  ISBN எண்ணிடப்பட்ட கருத்தரங்க நூல் (Hardcover Book), சான்றிதழ், வழங்கப்படும்.   கட்டுரையை vocconfe...@gmail.com / crse...@gmail.com   என்கிற இரண்டு  மின்னஞ்சல் முகவரிக்கும் Word file and PDF ஆக, டிசம்பர் 31, 2025 க்குள் அனுப்ப வேண்டும். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ.ஆ.ப., திருவெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இயக்குநர் முனைவர் அ. வெளியப்பன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மா. முருகானந்தம் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், இணை ஒருங்கிணைப்பாளர் பவானி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.



MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433



From: புவியைக் காப்போம் ஆரோக்கியமாய் வாழ்வோம் <crse...@gmail.com>
1 News MSUC Nagampatti(2).pdf
1 News MSUC Nagampatti(2).docx
Reply all
Reply to author
Forward
0 new messages