அண்ணா நகர் தமிழ்ப் பேரவையின் இவ்வார நிகழ்வாக, ஆன்மீகப் பேருரை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அண்ணாநகர் லியோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவில், பாவலர் சீனி பழனி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் செ சு நா சந்திரசேகரன் தலைமை உரையாற்றினார்.
அண்ணாநகர் தமிழ்ப் பேரவையின் தலைவர் பேராசிரியர் முனைவர் ம. இளங்கோவன் அவர்கள் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை எனும் தலைப்பில் பேருரை ஆற்றுவதாக இருந்தது.. மழையின் காரணமாக தலைவர் அவர்களினால் வர இயலவில்லை.
எனவே, பாவலர் சீனி பழனி அவர்கள் சிலப்பதிகாரத்தின் மறுபக்கம் என்ற தலைப்பில், சில வரலாற்றுக் குறிப்புக்களையும் அதன் செயலாற்று பின்புலக் கூறுகளையும். விளக்கம் கூறி உரையாற்றினார். 'சிலப்பதிகாரத்தில் கண்ணகி என்பவள் திட்டமிட்டு, மனித நிலையில் இருந்து இறைவன் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது எவ்வாறு' என்று சிலப்பதிகாரத்தை அடிப்படையாக வைத்து செய்திகளைப் பரிமாறினார்கள்....
பொறியாளர் பாலுச்சாமி அவர்கள் திருக்குறளின் நயம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
தொண்டர் திலகம் திரு சுதாகர் அவர்கள் வழக்கம் போல் தனக்கே உரித்தான தனித்தன்மையில் நன்றியுரை ஆற்றினார்கள் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.
தொடர்ந்து நிகழ்வுகளுக்குத் தமிழ் ஆளுமைகள் அனைவரும் வரவேண்டும் என்றும் நிகழ்வில் பேசப்பட்டது.

