தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - டிசம்பர் 2025

167 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 19, 2025, 5:23:58 PMNov 19
to மின்தமிழ்

heritage tour december 2025.jpg

📌அறிவிப்பு📌

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் ஒரு நாள் வரலாற்று மரபுப் பயணம் – மரக்காணம், கடலூர் சோழமண்டலக் கடற்கரை நகர வரலாறு

நாள்: 28.டிசம்பர்.2025 (ஞாயிறு) காலை 5:15 - இரவு 9:00

எயிற்பட்டிணம் என சங்கத்தமிழ் புகழ்ந்து பேசும் மரக்காணம் தமிழ்நாட்டின் ஒரு தொன்மையான கடற்கரையோர நகரம். இங்கு உப்பு உற்பத்தி செய்யப்படுவதை நேரில் பார்வையிடுதல்
அதுமட்டுமல்ல.. ஆலம்பரா கோட்டை அதன் அருகிலேயே உள்ளது. அதனையும் பார்வையிடல்.

மரக்காணம் முடித்து இப்பயணத்தில் நாம் செல்லவிருப்பது கடலூர்.

* கடலூர் அருங்காட்சியகம்
* தென்பெண்ணை நதி
* கெடிலம் ஆறு
* டேவிட் கோட்டை
* பிரிட்டிஷ் மாளிகை
* மீனவர் கிராமம்

தமிழ்நாட்டின் கடற்கரையோர வரலாற்றை அறிந்து கொள்ள நீங்களும் இப்பயணத்தில் இணைந்து கொள்ளலாம்.
20 பேர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் இப்பயணம் வடிவமைக்கப்படுகிறது.
 
இப்பயணத்தில் இணைந்து கொள்ள https://shorturl.at/HDh64 லிங்க் வழி பதிவு செய்டு விடுங்கள்.

பயண கட்டணம்: ₹1600 / Person  (காலை உணவு + காலை தேநீர் உள்பட)
GPay Number: 7094141476

-மரபுப் பயண ஏற்பாட்டுக் குழு

தேமொழி

unread,
Dec 2, 2025, 7:15:19 PMDec 2
to மின்தமிழ்
392.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி  திசைக்கூடல் - 392
____________________________________________________

தலைப்பு:
விக்கிமீடியாவும் பல்லூடக ஆவணப்படுத்தலும்

சிறப்புரையாளர்:
திரு. நீச்சல்காரன், தமிழ் விக்கிமீடியர்,
முதலமைச்சர் கணினித் தமிழ் விருதாளர்

நோக்கவுரை:
முனைவர் க. சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

நாள்: டிசம்பர் 6, 2025, சனிக்கிழமை
இந்திய நேரம்  மாலை 6.00 மணி

Join Zoom Meeting:
https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்
____________________________________________________

தேமொழி

unread,
Dec 2, 2025, 10:53:01 PMDec 2
to மின்தமிழ்
heritage tour.jpg
----------------

 

தேமொழி

unread,
Dec 4, 2025, 5:38:31 PMDec 4
to மின்தமிழ்

ஆறு ஆண்டுகள்  கடந்து விட்டன.. தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுச் சாதனை படைத்த ஒரு நாள் இன்று. 4.12.2019, ஜெர்மனி.
---
திருக்குறள் உலக மக்களை ஒன்றிணைக்கும் பாலம்.
4ம் தேதி டிசம்பர் மாதம் - இதே நாளில் 2019ம் ஆண்டு ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ஜெர்மனியின் மிகப்பெரிய ஆசிய அரும்பொருட்களைப் பாதுகாக்கும் லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவருக்கு 2 ஐம்பொன் சிற்பங்களை நிறுவி தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தது தமிழ் மரபு அறக்கட்டளை.
உள்ளூர் ஜெர்மானிய, தமிழ் மக்களும் ஐரோப்பா முழுவதிலுமிருந்து தமிழ்ச்சங்கங்களின் தலைவர்களும்,  இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர்.தொல்.திருமாவளவன்,  ஜெர்மனிக்கான மூன்சன் பகுதி இந்தியத் தூதர், திரு.பாலச்சந்திரன் இஆப, திரு.கௌதம சன்னா, சிற்பி சந்துரு,   மற்றும் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநில அதிகாரிகள் வந்து கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்த திருநாள் இது.  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வரலாற்றில் சிறப்பு பெரும் ஒரு நாள்.
தமிழ்க்  குழந்தைகள் தமிழர் மரபு நடனங்களை வழங்கினர். குழந்தைகள் மழலை மொழியில் திருக்குறள் கூறினர். தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள் வாழ்த்து கூறினர்.  "தமிழும் அறிவோம்" என்ற குழந்தைகளுக்கான மென்பொருள் வெளியீடு கண்டது.
இதே நாளில் திருக்குறள் ஜெர்மானிய மொழிபெயர்ப்புகளான 1803ம் ஆண்டு காமரர் மொழிபெயர்த்த நூலும் 1856ல் கார்ல் கிரவுல் மொழி பெயர்த்த நூலும் எனது ஆங்கில முன்னுரையுடன் மறுபதிப்பு கண்டன.
ஆண்டுக்கு 1.5 மில்லியன் வருகையாளர் வந்து செல்லும் இந்த மாபெரும் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் புகழ் ஒலிக்கின்றது.
3 அடியில் தமிழ் மரபு உடையுடன் கூடிய ஒரு சிலையும் எல்லிஸ் அவர்கள் வெளியிட்ட தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்ட வடிவம் அதாவது திருவள்ளுவருக்கு  கொடுக்கப்பட்ட முதல் உருவம், 1 1/2 அடியிலும் என்ற வகையில் இரண்டு ஐம்பொன் சிலைகள் இந்தக் கூடத்தை அலங்கரிக்கின்றன.
இந்த மாபெரும் பணியைச் சாத்தியமாக்க உழைத்த தமிழ் மரபு அறக்கட்டளையின் உலகளாவிய  உறுப்பினர்கள், ஐரோப்பியக் கிளை பொறுப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு வந்து பெருமை சேர்த்த பிரமுகர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கின்றோம்.
புலம்பெயர்ந்து தம் தாயகத்தை விட்டு அயல்நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளுக்கு மொழியின் பால் கொள்ளும் பற்றும் வரலாற்றுத் தெளிவும் தான் உறுதியான பண்பாட்டு  அடித்தளத்தை அளிக்கக்கூடியன.  மதம், சாதி, இனம் கடந்து நற்சிந்தனைகளால் உலக மக்கலை ஒன்றிணைக்கும் திருக்குறளைப் போற்றுவோம். திருவள்ளுவரை நினைவு கூறுவோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - குறள் 972
டாக்டர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.
4.12.2021
valluvar.jpg

தேமொழி

unread,
Dec 5, 2025, 2:30:19 PM (13 days ago) Dec 5
to மின்தமிழ்
வருகின்ற செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 
நந்தனம் அரசு கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு. 
வாய்ப்புள்ளவர் நேரில் வந்து கலந்து கொள்க!
-- சுபா 

Guest speaker : Dr. Subashini Kanaga Sundaram
Founder & Chairman,
Tamil Heritage Foundation of International Organization, Germany

TITLE: "Worldwide Tamil Contributions of Prof. Xavier S.Thaninayagam"


thaninayagam.jpg
--------- 

தேமொழி

unread,
Dec 7, 2025, 4:50:42 AM (12 days ago) Dec 7
to மின்தமிழ்
392.jpg
விக்கிமீடியாவும் பல்லூடக ஆவணப்படுத்தலும்
—விக்கிமீடியர்  நீச்சல்காரன்
திசைக்கூடல் - 392 [டிசம்பர் 6, 2025]
https://youtu.be/f8b6vyzTZs0

--

தேமொழி

unread,
Dec 8, 2025, 2:59:10 PM (10 days ago) Dec 8
to மின்தமிழ்

thaninayagam.jpg
Tuesday, December 9, 2025 @ 10:00 AM
சென்னை நந்தனம் கல்லூரியில்..
ஆர்வம் உள்ளோர் இணைந்து கொள்க.
Guest speaker : Dr. Subashini Kanaga Sundaram
Founder & Chairman,
Tamil Heritage Foundation of International Organization, Germany
TITLE: "Worldwide Tamil Contributions of Prof. Xavier S.Thaninayagam"




​​​​​​​​​​​​-------------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 9, 2025, 4:34:45 PM (9 days ago) Dec 9
to மின்தமிழ்
suba - thaninayagam speech.jpg

கல்லூரி மாணவர்களுக்கு வரலாறு சார்ந்த விழிப்புணர்வு மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கத்தில் இன்று (09-12-2025) அரசு கலைக் கல்லூரி, நந்தனம், சென்னையில் அக்கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கம் அரங்கேற்றப்பட்டது. இக்கருத்தரங்கத்தின் ஒரு சிறப்புரையாக "டாக்டர் சேவியர் எஸ். தனிநாயகம் அவர்களின் உலகளாவிய தமிழ் பங்களிப்பு" என்னும் தலைப்பில் முனைவர் க. சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, அவர்கள் உரையாற்றினார். இவ்வுரையானது தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழா ஆண்டில் தனிநாயகம் அவர்களின் தமிழ்ப்பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்த செயல்பாடுகளில் ஒன்றாகும்.

மற்றொரு சிறப்புரையாக முனைவர் கௌதம சன்னா, எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் (சென்னை உயர்நீதிமன்றம்), அவர்கள் "மனித உரிமைகள் பிரகடனமும் இந்திய மனிதனும்" என்கிற தலைப்பில் ஓர் எழுச்சியுரையை வழங்கினார். நாளை (10-12-2025) உலகமெங்கும் மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. சன்னா அவர்களின் உரை இக்கொண்டாட்டத்தின் பின்னணியை விளக்கம் வகையாக அமைந்தது.

முன்னதாக சிறப்புரையாளர்களை வரவேற்ற கல்லூரியின் முதல்வர் முனைவர் தங்கராஜன் அவர்கள் மற்றும் வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் பீர்முகமது அவர்கள் கல்லூரியின் தொடர்ச்சியான செயல்பாடுகள் மற்றும் இம்மாதிரியான கருத்தரங்குகள் அரங்கேற்றுவதன் வழியாக மாணவர்கள் மத்தியில் கல்லூரியின் மதிப்பு உயர்கிறது என்று வெளிப்படுத்தினார்கள்.

சுபாஷிணி அவர்கள் அறிவுரையாகக் கூறும்போது கல்விதான் மாணவர்களை படிப்படியாக உயர்த்தும் என்று தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்தார். அதிலும் குறிப்பாக 20 முதல் 30 வயது வரையில் கடின உழைப்பு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைத்தார். மேலும் தனிநாயகம் அவர்களை உதாரணமாகக் குறிப்பிடும்போது அவர் வழியில் அவர் செய்ததைக் காட்டிலும் இன்று நாம் அதிகமான தமிழ்ப்பணிகள் மேற்கொள்ள முடியும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். 

ஒரு முன்னால் மாணவனாகத் தான் இக்கல்லூரியில் வரலாற்றுத்துறைக்காக உரையாற்றுவது பெருமையாக உணர்வதாக சன்னா அவர்கள் நெகிழ்ச்சி அடைந்தார். மேலும் மனித உரிமைகள் பற்றிப் பேசும்போது நாம் எல்லோரும் மனிதர்கள் தான் என்று நமக்கும் நாம் ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலாக அடிப்படை உரிமைகளைப் பிரகடனப்படுத்துவதற்குப் பின்னால் 2000 ஆண்டுக்கால உழைப்பு இருப்பதைத் தெரியப்படுத்தினார். அவ்வகையில் அம்பேத்கர் இந்தியாவை மனிதர்கள் வாழும் நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக வகுத்த சட்டத்திட்டங்களைப் பற்றி சன்னா அவர்கள் எடுத்துக்கூறினார்.

நல்ல உரையாடல்களுடன் கூடிய இக்கருத்தரங்கில் பங்கேற்றது சிறப்புரையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. பல்வேறு துறைசார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இறுதிவரை ஆர்வத்தோடு பங்கேற்று இக்கருத்தரங்கத்தின் மூலம் சிறந்த வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொண்டனர். 

ஜெரின்
தமிழ் மரபு அறக்கட்டளை
09-12-2025

Message has been deleted

தேமொழி

unread,
Dec 11, 2025, 12:14:37 AM (8 days ago) Dec 11
to மின்தமிழ்
temple.jpg

இந்தோனேசிய-சுமத்ரா தீவில் உள்ள பன்டா ஆச்சே நகர் தமிழர்கள் - பழனி ஆண்டவர் கோயில்: முனைவை க. சுபாஷிணி
https://youtu.be/0CZS43iYOtY


இந்தோனேசியா ஆச்சே நகரில் 1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழனி ஆண்டவர் கோயில்
இந்தோனேசிய-சுமத்ரா தீவில் உள்ள பன்டா ஆச்சே நகர் தமிழர்கள்

நன்றி:
திருமிகு ராதாகிருஷ்ணன், ஜெயஸ்ரீ
நேர்காணல்: முனைவை க. சுபாஷிணி 
தமிழ் மரபு அறக்கட்டளை
டிசம்பர் 2025 

தேமொழி

unread,
Dec 11, 2025, 8:45:54 PM (7 days ago) Dec 11
to மின்தமிழ்
சுமத்ரா தீவில் உள்ள பன்டா ஆச்சே பழனி ஆண்டவர் கோவில்.jpg
சுமத்ரா தீவில் உள்ள பன்டா ஆச்சே பழனி ஆண்டவர் கோவில்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி  வெளியீடு
https://youtu.be/54xlnduUJWk

நன்றி:
திருமிகு ராதாகிருஷ்ணன், ஜெயஸ்ரீ
நேர்காணல்: முனைவை க. சுபாஷிணி 
தமிழ் மரபு அறக்கட்டளை
டிசம்பர் 2025 

Message has been deleted
Message has been deleted

தேமொழி

unread,
Dec 15, 2025, 1:22:03 AM (4 days ago) Dec 15
to மின்தமிழ்
visagan title.jpg

தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தோனேசியாவின் வரலாறு, மற்றும் தமிழ்ப்பள்ளி தொடக்கம் குறித்த ஆய்வுப்பயணம்

- இந்தோனேசியா ஆசியத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் டாக்டர் விசாகன் உரை

தேமொழி

unread,
Dec 15, 2025, 10:42:13 PM (3 days ago) Dec 15
to மின்தமிழ்
field research.jpg
வருகின்ற 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை 
சென்னை பல்கலைக்கழகத்தில் 

நடைபெற உள்ள இந்த ஆய்வுரை நிகழ்ச்சியில் பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் உங்கள் மாணவர்களைக் கலந்து கொள்ள அனுப்பி வைக்கலாம்.

தொடர்புக்கு இணை பேராசிரியர் டாக்டர் சங்கரநாராயணன். @+91 90800 07010 

தேமொழி

unread,
Dec 17, 2025, 12:41:52 AM (2 days ago) Dec 17
to மின்தமிழ்
☘️ இன்னும் ஐந்து இடங்களே உள்ளதால் விரைந்து ஆர்வம் உள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்☘️

heritage tour.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
----

தேமொழி

unread,
Dec 17, 2025, 1:30:44 AM (2 days ago) Dec 17
to மின்தமிழ்

C.jpg
இந்தோனேசியா பின்ஜாய் நகரின் மாரியம்மன் கோயில் 
- Sri Mariamman Koil, Binjai, Indonesia

தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி  வெளியீடு

தேமொழி

unread,
Dec 17, 2025, 5:08:43 PM (2 days ago) Dec 17
to மின்தமிழ்
அனைவருக்கும் வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் முனைவர் க .  சுபாஷினி அவர்களுக்குப் பாராட்டு விழா வரும் ஞாயிறு அன்று  21.12.2025 மாலை 4 மணி முதல் 7 மணி வரை வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ள மணியம்மை துவக்கப்  பள்ளியில் நடைபெற இருக்கிறது . வெள்ளி விழா நாயகிக்கான பாராட்டு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .
_______________________________

பாராட்டு விழா அழைப்பிதழ்

வரவேற்புரை:
திருமதி அ. கலைச்செல்வி

வாழ்த்துரை வழங்குவோர்:
பெரியார் நெறியாளன்
பி.வரதராசன்,
தாளாளர்,
மணியம்மை பள்ளி, மதுரை

வழக்குரைஞர்
ச.மாரியப்பமுரளி,
செயலாளர்,
நான்காம்
தமிழ்ச்சங்கம், மதுரை

வாழ்த்துக்கவிதை -
கவிஞர் கோ. சிவகாமி பிரியா

வாழ்த்துப்பாடல் -
கௌ ஹுஸ்னாரா பானு,
ஆசிரியை , மகாத்மா பள்ளி

பாராட்டு நிகழ்வு
 &
கலந்துரையாடல்

நன்றியுரை -
திருமிகு செல்வம் ராமசாமி சமூக ஆர்வலர்

அழைப்பில் மகிழும்
திருமதி மு.சுலைகா பானு
தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக் கிளைப் பொறுப்பாளர்
_______________________________

தேமொழி

unread,
Dec 18, 2025, 2:09:07 AM (yesterday) Dec 18
to மின்தமிழ்
1.jpg
2.jpg
3.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நமது வெள்ளி விழா தொடக்க நிகழ்வில் ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த வெள்ளி விழா ஆண்டு முழுவதும் டாக்டர் சேவியர் எஸ்.தனிநாயகம் அவர்களது தமிழ்ப்பணிகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலும் பலகலைக் கழகங்களிலும் பொது மக்களிடையேயும் விரிவாக்கம் செய்யும் பணியைச் செயல்படுத்தும் என்ற செய்தியை எனது உரையில் வெளியிட்டிருந்தேன். 

அதன் அடிப்படையில் தமிழறிஞர் டாக்டர் சேவியர் தனிநாயகம் அவர்கள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கை நாங்கள் முன்னெடுக்கின்றோம் என முதன் முதலில் முன் வந்தவர் சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரி முதல்வர் முனைவர் முத்துராமலிங்க ஆண்டவர் அவர்கள். 

இந்த ஆண்டு நவம்பர் தொடங்கி முதலில் . . . 
சென்னை பல்கலைக்கழகத்தில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம் ஒன்றை 28 நவம்பர் அன்று நிகழ்த்தினோம். 

அதன் தொடர்ச்சியாக 9 டிசம்பர் அன்று . . . 
சென்னை நந்தனம் கல்லூரியில் டாக்டர் சேவியர் தனிநாயகம் அவர்களது தமிழ்ப்பணிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். 

இன்று அதன் தொடர்ச்சியாக . . . 
சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கமாக டாக்டர் சேவியர் தனிநாயகம் அவர்களது தமிழ்ப் பணிகள் என்ற பொருளில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன் தொடக்க விழாவில் தனிநாயகம் அவர்களது தமிழ்ப் பணிகள் பற்றி சிறப்புரை வழங்கினேன்.

இன்று நாள் முழுதும் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வறிஞர்கள் டாக்டர் சேவியர் தனிநாயகம் அவர்கள் பற்றிய பல்வேறு செய்திகளை ஆய்வுக் கட்டுரைகளாகச் சமர்ப்பிக்க உள்ளனர். 

இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே மட்டுமின்றி பேராசிரியர்கள் மத்தியிலும் டாக்டர் சேவியர் தனிநாயகம் அவர்கள் பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்க்கும்.
-சுபா
18.12.2025 

தேமொழி

unread,
Dec 18, 2025, 4:53:49 AM (21 hours ago) Dec 18
to மின்தமிழ்

1.jpg
மேடானுக்கு தமிழர்கள் புலம்பெயர்ந்த வரலாறு-களப்பணி பதிவு
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி  வெளியீடு
---
Reply all
Reply to author
Forward
0 new messages