@ நீட்டலளவு..
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
@ பொன்நிறுத்தல்..
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
@ பண்டங்கள் நிறுத்தல்..
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
@ முகத்தல் அளவு..
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
@ பெய்தல் அளவு..
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
____________ ______
கால அளவு..
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
____________ ______
எண்ணல் அளவை..
ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின்
பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
ஏன் இவ்வளவு நுண்ணிய அலகுகள் தேவைப் பட்டன என்று தெரிய வில்லை. இவற்றைக்
கொண்டு எவற்றை அளந்தனர்...?!
கொரியாவில் எல்லாம் 10,000தின் மடங்காகக் கணக்கிடப்படும் போது, இவர்கள்
கடுகைத்துளைத்து அதில் ஏழ் கடலைப் புகுத்த முற்படுவானேன்?
ஐரோப்பிய/அரபிக் கணக்கில் 0 என்பது இல்லாமல் இருந்திருக்கிறது. அது இந்தியக்கொடை.
கணிதர் இராமானுஜம் அவர்களைப்பற்றிய ஒரு நூல். அமேரிக்காவில் வாசித்தேன்.
ஒரு அமெரிக்கப் பேராசிரியர் எழுதியது. 'அலகிலா அளவையும் அறிந்த அறிஞர்'
என்பது புத்தகப்பெயர்.
இத்தனை அலகுகளையும் வைத்துக்கொண்டு என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
ஒரு புறம் நானோ டெக்னாலஜிக்கு தேவையான அலகுகள்.
மறுபுறம். விண்ணியலுக்கான அலகுகள்!
ம்ம்ம்..
க.>
2010/1/6 வி. சு. <vijayakuma...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
விண்னையும் மண்னையும் அளந்தார்கள்
. நம் முன்னோர்கள் அறிவுடையவர்கள் என்பதற்கு இதை விட சான்றிதழ் வேண்டுமோ. அந்த காலத்திலே கால் வாய்ப்பாடு அறை வாய்ப்பாடு எல்லாம் அத்துபடி, இப்ப கால்கூலேட்டர் உதவி இல்லாமல் கணிதம் வராது நம்ம குழந்தைகளுக்குகே
.வீ.விக்னேஷ்சென்னை
அதற்காக எனக்குத்தான் தெரியும்
என்று கண்டதையும் அளக்கக் கூடாது.
ஒரு மனிதனின் மகிழ்ச்சியின் அளவு x, x
ன் ஆயிரம் மடங்கு y, y ன் ஆயிரம் மடங்கு z என கணக்கு சொல்லிக் கொண்டே
போவது முட்டாள்தனமாகத் தோன்றுகிறது.
ஏதோ ஒரு உபநிடதத்தில் இதைப் பார்த்த
நியாபகம். :-)
அதாவது 0.1 நானோமீட்டர் என்கிறது,
Henry F. Holtzclaw & William R. Robinson. General Chemistry.
Lexington, MA: Heath, 1988: 98.
நம்மவர் 30 நானோமீட்டர் என்று கணக்கிட்டுள்ளனர் என்கிறது உங்கள் கணக்கு.
அதாவது 300 மடங்கு அதிகமாக உள்ளது. ஆயினும் நானோமீட்டர் ரேஞ்சில்
இருப்பது அதன் சிறப்பு.
இதே போல் 'பை' யின் அலகை மிகத்துல்லியமாக நம்மவர் கணக்கிட்டுப்பதை
அறிந்திருப்பீர்கள்.
உலகம் தோன்றிய காலக்கட்டத்தை மிகத்துல்லியமாக கணக்கிட்டுள்ள ஒரு புத்தகம்
சரஸ்வதி மகால் நூலகத்தில் கண்டேன். இது பற்றிய குறிப்பை இணையத்தில்
பலமுறை சொல்லியிருக்கிறேன். தேட வேண்டும்.
என் ஆர்வமெல்லாம், முதலில் நம் வசம் இருந்த அறிவியல் பின்புலத்தைத் தேடி
சேகரிக்க வேண்டும். பின் அலசி, எது அறிவியல், எது மூட நம்பிக்கை என்று
கூறு போடலாம். சேகரமாவதற்குள் பல ஓலைச்சுவடி சாஸ்திரங்கள் அழிந்து
போய்விட்டன/போய் கொண்டிருக்கின்றன.
பொதுவாக, உங்கள் "நோய் நாடி" சூத்திரத்தை ஒத்துக் கொள்கிறேன். பொத்தாம்
பொதுவாய் நமக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வது அழகல்ல.
நம்மிடம் ஏதோ அபூர்வமான அணுகுமுறை (pedagogy) ஒன்று இருந்திருக்கிறது.
அதைத் தவறவிட்டிருக்கிறோம். மீண்டும் கிடைக்குமா பார்ப்போம்!
இத்தகவல் எனக்கு forward message-ஆக வந்தது. முதலில் அனுப்பியர் Konkuk
University வேலை செய்யும் டாக்டர் ரமேஷ்.
க.>
மேலும் சில சுவாரசியமான தகவல்: http://our_legacy.pitas.com/
2010/1/8 S.Partha sarathy <spsar...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கால அளவு..
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
///
ஒரு நாள் 24 மணி நேரம்; இரு பொழுது பகல், இரவு, ஒவ்வொன்றும் பன்னிரண்டு
மணிநேரம். 15 நாள் ஒரு பக்கம், வளர்பிறை, தேய்பிறை; 2 பக்கம் ஒரு மாதம்.
6 மாதம் 1 அயனம், உத்ராயணம், தக்ஷ்னாயணம். 2 அயனம் ஒரு ஆண்டு, 60 ஆண்டு
ஒரு வட்டம்; ஒருவரின் ஆயுள் 2 வட்டம் (?).
60 நாள், இரண்டு மாதங்கள் ஒரு பருவம்; ஒரு ஆண்டில் 6 பருவகாலங்கள்.
ஒரு பொழுது 4 யாமம், ஒரு நாளில் 8 யாமம். 2 முகூர்த்தம் 1 யமம், ஒரு
நாளில் 16 முகூர்த்தம்.
ஒரு நாளில் 60 நாளிகை, எனவே ஒரு முகூர்த்தம் என்பது மூனே முக்கால் (3
3/4) நாளிகை, ஒன்னரை (1 1/2) மணி நேரம்.
ஒரு நாளில் 60 நாளிகை; ஒரு நாளிகை 24 நிமிடம், 1440 விநாடிகள்; ஒரு மணி
நேரத்தில் இரண்டரை (2 1/2) நாளிகை, எனவே ஒரு மணி நேரம் = ஒரு ஓரை.
ஒரு நாளிகையை (24 * 60 விநாடிகள்) அறுபதாக பிரிக்கக் கிடைப்பது 24
விநாடிகள் ( பெயர் என்ன ? ஒரு தமிழ்-விநாடி-நாளிகை ), இதை (24 * 1000
மில்லி விநாடிகள்) அறுபதாக பிரிக்கக் கிடைப்பது 0.4 மில்லி விநாடிகள்
( பெயர் என்ன ? ஒரு தமிழ்-விநாடி ).
12 சணிகம் ஒரு தமிழ்-விநாடி-நாளிகை (தமிழ்-விநாடி ஆக இருந்தால் மிகவும்
நுண்ணிய அளவாகிவிடும், பின் மாத்திரை, கண்ணிமையுடன் ஒப்பிட இயலாது) என்று
நினைக்கிறேன். ஒரு நிமிடத்தில் இரண்டரை ( 2 1/2 ) தமிழ்-விநாடி-நாளிகை,
30 சணிகம், 60 உயிர், 120 குரு, 240 மாத்திரை, 480 கைநொடி, 960 கண்ணிமை.
விநாடி அளவில், 24 விநாடி 1 தமிழ்-விநாடி-நாளிகை, 2 விநாடி 1 சணிகம், 1
விநாடி 1 உயிர், அரை விநாடி 1 குரு, கால் விநாடி 1 மாத்திரை, ...
கணக்கில் ஏதோ குளறுபடி..
இப்போது, தெரிந்த அளவிலிருது தொடங்கலாம்..
கைநொடிக்கும் அளவும், கண்ணிமைக்கும் அளவும் ஒரு மாத்திரை என்பதால் இவை
மூன்றுமே ஒரே கால அளவைகள்தான். ஒன்றினும் மற்றது நுண்ணியதா எனத்
தெரியவில்லை. இவை 1 விநாடி கால அளவிலானவை. 2 மாத்திரை, 2 விநாடி 1 குரு;
4 விநாடி, 1 உயிர்; 8 விநாடி 1 சணிகம், 96 (12 * 8) விநாடி 1 தமிழ்-
விநாடி. இதுவும் சரியான கணக்கீடு என்று சொல்ல முடியாது...
http://valavu.blogspot.com/2008/06/blog-post_29.html ன்படி,
ஒரு நாளில் 60 நாளிகை, ஒரு நாளிகை (24 நிமிடங்கள்) 60 விநாளிகை, ஒரு
விநாளிகை (24 நிமிடங்கள்) 60 துடி, ஒரு துடி (0.4 மில்லி விநாடிகள்) 60
கணம். இரண்டரை துடி ஒரு விநாடி, எனவே ஒரு விநாடியில் 150 கணங்கள்.
இந்த அளவீட்டிற்கும் மாத்திரைக்கும் உள்ள ஒப்புமை தெரியவில்லை.
ஒரு விநாளிகை (24 விநாடிகள்) 60 துடி
ஒரு துடி (400 மில்லி விநாடிகள், அல்லது 0.4 விநாடிகள்) 60 கணம்
d = 10
r = 5
2.pi.r = 31.4
--
2.pi.r = 31.4
p.r = 31.4 / 2
5.pi.r/8 = (31.4 / 2) * (5/8) = 9.812
--
d = 10
5.pi.r/8 = 9.8
d = 5.pi.r/8
அடடே!
d = 5*pi*r/8
pi = 8*d/5*r
pi = 8*(2*r)/5*r
pi = 16/5
pi = 3.2
:-)
மலையாளத்தில் அடிக்ககடி சொல்லப் படும் 'பக்க்ஷே' இதுதானா...?!
மலையாளத்தில் அடிக்ககடி சொல்லப் படும் 'பக்க்ஷே' இதுதானா...?!
எது முதலில் வந்தது கோழியா ? முட்டையா ?
தமிழ் பக்கத்திலிருந்து சமஸ்கிருத பக்ஷம் வந்ததா ?
இல்லை, சமஸ்கிருத பக்ஷத்திலிருந்து தமிழ் பக்கம் வந்ததா ?
:-)
தமிழாக்கம் செய்யப்பட்ட / தமிழ் பெயர் இடப்பட்ட அலகுகள்!
சங்க இலக்கியத்தில் அத்தகைய பிரயோகங்களுக்கு ஆதாரம் இல்லை.
On Jan 6, 1:22 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/
10 கோன் - 1 நுண்ணணு
சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சதகூறுஇட்டகோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்றதூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மைகாணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் நக்கான்.என்பதில் உள்ளது பாருங்கள், அந்தக் கோண்தான் இது. அபிதான சிந்தாமணியைப் பார்த்த பிறகு மற்ற எண்களைப் பற்றிச் சொல்கிறேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒன் நிமி்ட்? அதற்கும் குறைச்சல்.இ
ஒருநிமிடப் போதில் ஓர்பத்தொன்பாயிரமாம் காதம்’ என்றல்லவா பாடியிருக்க வேண்டும்?
ஒன் நிமி்ட்? அதற்கும் குறைச்சல்.இ
அம்பாளை அந்தம்மா என்றால் என்னவோ போல இல்லை?!! -
ஒன் நிமி்ட்? அதற்கும் குறைச்சல்.இ
ஆனால் அவள் முன்னால் போனபோது ஒன்றுமே கேட்க தோன்றவில்லை - எவ்வளவு முயன்றும். :))
From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 15 January, 2010 8:52:27 PM
Subject: Re: [MinTamil] தமிழ் அலகுகள் (units)
2010/1/15 Innamburan Innamburan <innam...@googlemail.com>
ஒன் நிமி்ட்? அதற்கும் குறைச்சல்.இநிமிஷம் அப்படின்னா எவ்ளோ நேரம் தலீவா?உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி:அப்படின்னா, அந்தம்மா அறுவது செகண்டு கண்ண மூடிட்டு இருந்தா புவனம் எல்லாம் அழிஞ்சுரும்னு அர்த்தமா?- இந்த நாமத்திற்க்கு அப்படியா அர்த்தம்? ஓரு நிமிஷத்தில் இந்த அண்ட பகிரண்டங்களை (இதைப் போல பல்வேறு புவனங்களை) உருவாக்கிடுவாள் என்று இல்லையா ஸ்ரீ அண்ணா (ராமசந்த்ரா மிஷன்) சொல்கிறார்...
(அம்பாளை அந்தம்மா என்றால் என்னவோ போல இல்லை?!! - அவள் ஒருவருக்கு மட்டும் தனிச்சொத்தில்லை தான் - அவளை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று வரையரையும் இல்லை என்றறிவேன் - தடங்கலுக்கு மன்னிக்கவும் :))
உங்களுடைய பக்தி உயர்வானது. அதனால் உங்களால் ‘அந்தம்மாவை‘ பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் எங்கம்மாவை அந்தம்மா என்றேன். உங்க அம்மாவை அம்பாள் என்று சொல்வதில் எனக்கு ஆட்சேபணையே இல்லை. எனக்கு அவள் அம்பாள், ஆத்தா, அம்மா, ஆயி, அன்னபூரணி, அடியே மீனாச்சி எல்லாமும்தான். உங்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மன்னிக்கவும்.
ஆனால் நெருக்கமானவற்றை ஒற்றைப்படையில் விளிப்பது மரபு. `அவனுக்கு` அதுவே
உவப்பு என்பது சம்பிரதாயம் :-))
க.>
2010/1/16 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
* தமிழில் எண்கள் 1) மேல் வாயிலக்கம்
2) கீழ் வாயிலக்கம்
3) கீழ் வாய்ச்சிற்றிலக்கம்
என்னும் மூவகைப் பாகுபாட்டில் கையாளப்பட்டன.
கீழ் வாயிலக்கம் என்பது பின்னம்; இதில் மிக நுண்ணிய சிற்றிலக்கம் 1/320
* கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தின் மிகச் சிறிய கூறு 1/3,22,56,000
* 1,00,00,000 மாதிரியான பெரிய இலக்கங்களையும் ’0’ வின் துணையின்றி
எழுத்தாகவே சுருக்கமான முறையில் குறிக்கும் வழக்கம் இருந்துள்ளது. (இது
ஒருங்குறியில் இடம் பெறவில்லை; காரணம் தமிழறிஞர் பலருக்கும் இம்முறை
தெரியாது)
* கணக்கதிகாரம் – இது 18ம் நூற்றாண்டில் தோன்றிய கணித நூல்
* கணித திவாகரம், கணித ரத்னம், புவந தீபம், ஹேரம்பம், த்ரிபுவந திலகம்,
ஆஸ்தாந கோலாஹலம் – இவை கணித நூல்கள்; வடமொழித் தலைப்பிருந்தாலும்
இவற்றில் பல தமிழ் நூல்களே.
இக்குறிப்புகள் ‘தமிழ்ச் சுவடிகளில் எண் கணிதம்’ என்னும் நூலிலிருந்து
எடுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் : புலவர்.மா.கண்ணையன்
வழங்கியவர் : திரு.V.சந்திரசேகரன்
மின்னாக்கம் செய்தவர் : திரு. நடராஜன் ஸ்ரீநிவாசன்
எண் : 158
http://www.tamilheritage.org/old/text/ebook/old-tamilleter-lesson.pdf
தேவ்
மரபு நூலகத்திலுள்ள நூல்களை வாசிப்போர் உங்களைப் போல் சேதிப் பகிர்வு,
review, திறனாய்வு போன்றவற்றில் ஈடுபட வேண்டும். அப்போது, அந்நூல்களின்
பயன் அதிகரிக்கும். உதாரணமாக முத்துகண்ணப்பரின் எளிய தமிழ் இலக்கண நூல்
மின்தமிழில் மின்னச்சாக வந்த போது பலருக்கும் பயன்பட்டு, ஊடாடி புரிந்து
கொள்ள முடிந்தது.
மின்தமிழ் அன்பர்கள் இவ்வாணி காரியத்தில் உடனே இறங்கி புண்ணியம் பெற வேண்டும்.
நுழைவாயில்: http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html
க.>
2010/1/16 devoo <rde...@gmail.com>:
> இந்த இழைக்குத் தொடர்புடைய சில செய்திகளை தமிழ் மரபு அறக்கட்டளை
> மின்னூலகம் நமக்குத் தருகிறது –
>
ஏன் இல்லை? `தாயார்` என்று சொல்லும் மரபில் `அவளை` `அவர்` என்று சொல்லும்
வழக்கமுண்டு. அம்பாள் என்றால் `அம்மா` என்று பொருள். அம்மாவைத் `தாயார்`
என்னும் போது `ஆர்` விகுதி வந்து மரியாதை சேர்ந்துவிடுகிறது ;-)
ஆனால் நெருக்கமானவற்றை ஒற்றைப்படையில் விளிப்பது மரபு. `அவனுக்கு` அதுவே
உவப்பு என்பது சம்பிரதாயம் :-))
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
////
'தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்றவேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில் வேளைஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர் அச்சம்தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர் அம்மா!(பெண்ணே நீர் என்னைத்) தோற்கச் செய்துவிட்டீர். (கேவலம், எனக்கு அடிமையான) சந்திரன், என் உடலை தகிக்கும்படி செய்துவிட்டீர்; தென்றல் வீசும்போது கூட எனக்கு வியர்வை தோன்றும்படியாகச் செய்துவிட்டீர்; வன்மை பொருந்திய என் வைரத் தோளை இளைக்கச் செய்துவிட்டீர்; வேனிலைத் தனது தூதுவனாகக் கொண்ட மன்மதன் என்மேல் போர்தொடுத்து ஆர்ப்பரிக்குமாறு செய்துவிட்டீர்; துன்பம் என்றால் எவ்வாறிருக்கும் என்பதையே அறியாதவனாகிய எனக்குத் ‘துன்பம் என்பது இப்படித்தான் இருக்கும்’ என்று அறிமுகம் செய்துவைத்தீர்; (இப்படியெல்லாம் நடக்கின்றபடியால் ஒருவேளை நான் இறந்தாலும் இறந்துவிடுவேன். ஆகையாலே) தேவர்கள் இதுவரையில் என்னிடம் கொண்டிருந்த அச்சம் போய்விடும்படியாக அதைத் தீர்த்தும் வைத்துவிட்டீர். இன்னமும் என்னவெல்லாம் செய்த பின்னர் ஓயப்போகிறீர் அம்மா!><<>><<><<<><><<<
யார், யாரைப் பாத்து சொல்றது தெரியுமா? ராவணன் சீதையைப் பார்த்துச் சொல்கிறான்.சரி, அதுதான் போகட்டும். ராம நாடகக் கீர்த்தனையிலிருந்து இந்தப் பாட்டைப் பாருங்கள்:ஆரோ இவர் யாரோ--என்னபேரோ அறியேனே<<<>
காருலாவும் சீருலாவும் மிதிலையில்கன்னி மாடந்தனில் முன்னே நின்றனர் (ஆரோ)இந்தக் கீர்த்தனையில் உள்ள ர் விகுதியின் அடிப்படையில் ராயர் காபி கிளப்பில் இரா முருகன் தொடங்கி வைத்த விவாதம் பழைய இணைய நண்பர்களுக்கு நினைவிருக்கும். இந்தப் பாடலை யாரும் முழுசாகப் பாடுவதில்லை. அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று எலி கரண்டற மாதிரி கரண்டித் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அதனால், இந்தப் பாடலை சீதை, ராமனைப் பார்த்துப் பாடுவது என்று தீர்மானித்து ஒரு கோஷ்டியும்><><>>
(இவர் யாரோ, கன்னி மாடம் முன்னே நின்றனர் என்றெல்லாம் ரொம்ப மரியாதையா அவதானே அவனைப் பாத்து சொல்வா, ஆகையாலே) சர்வ நிச்சயமாக இது சீதை, ராமனைப் பார்த்துப் பாடியதுதான் என்று வாதிட்டுக் கொண்டிருந்தது என்று சொல்லி இரா முருகன் அந்த இழையைத் தொடங்கிவைத்தார்--ஒரு இசைப் பருவத்தில் (அடங்க...மீஸிக் ஸீஸன்ஙகோ...)பிறகு, ஒருத்தரும் பாடாமல் ஸ்கிப் பண்ணிக்கொண்டே போகும் அந்த முக்கியமான சரணத்தை எடுத்துப் போட்டேன்.பண்ணிப் பதித்தாற்போல் இரு ஸ்தனமும் - கூடபாங்கியர்கள் இன்ன முத்துரைத் தனமும்எண்ணத்தாலும் வண்ணத்தாலும் பங்கயப்பெண்ணைப் போல் கண்ணிற் காணும் மங்கையர் (ஆரோ)<<<>>
சுருக்கிப் பாடறேன் பேர்வழி என்று இப்படி கொறித்துக் கொறித்துக் குதறினால், ரசிகன் என்ன பண்ணுவான் பாவம்! குழம்பித்தான் போவான். ராமன் சீதையைப் பார்த்துப் பாடிய கீர்த்தனைதான் இது.என்ன சொல்ல வர்ரேன்னா, பெண்களை (மனைவியாகப் போகின்றவளாகவே இருந்தாலும், மனைவியான பிற்பாடும் கூட) அவர் இவர் என்று ஆண்கள் குறிப்பிட்டுக் கொண்டிருந்ததும் உண்டு. அன்பின் மிகுதியினாலே தாயையும் அவள் இவள் என்று குறிப்பிட்ட சமயங்களும் உண்டு. அதது அந்தந்த சமயத்துக் தக, உள்ளே பொங்கும் உணர்வுகளுக்குத் தக. பெண்களுக்கு ஆர் விகுதி பொருந்தாது என்று சொல்ல முடியாது. >><>>
அப்புறம் திருவாட்டி ஸ்வர்ண லக்ஷ்மிக்கு ஒரு சிறிய குறிப்பு. உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளி என்ற நாமத்தின் விளக்கத்தை ஸெளந்தர்ய லஹரீ 55ம் ஸ்லோகத்தில் காணலாம். ‘நீ கண்ணை இமைத்தால் இந்த புவனங்களெல்லாம் அழிந்துவிடும் என்ற காரணத்தால் அல்லவோ நீ கண்ணை இமையாமல் இருக்கிறாய்!’ என்றும், கண் இமைப்பதனால் ஒரு புவனம் அழிந்து, இன்னொரு புவனம் ஆவதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். உங்களிடம் ஸெளந்தர்ய லஹரி இருக்கும் என்பதனாலும் இந்த இழைக்குத் தொடர்பில்லாததைப் பேசுகிறேன் என்று ஒருசிலர் ஞைஞை என்று பிடித்துக்கொள்வார்கள் என்பதனாலும் இத்தோட இத்த உட்டேன். குறிப்பிட்ட அந்த இடத்தை நீங்கள் பாருங்கள்.
<<>>பார்த்துட்டேன், நீங்க சொன்னபடியே அர்த்தம் இருக்கு! போனவார கல்கில ’லஜ்ஜா ’ க்கும் அருமையான விளக்கமுடன் குறிப்பிட்டதையும் படித்தேன் நம்மபேரோட சம்பந்தமா இருக்கேன்னு!--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> சமீபத்தில் தெரிந்த ஒருகுடும்ப நண்பரைப்பார்க்கப்போனோம் அந்த குடும்பத்தலவர்
> மனைவியை வாங்கபோங்ன்னுதான் அழைச்சிட்டு இருந்தார் அந்த நாள் காதல்திருமணாமாம்
> மனைவி அவரைவிட 5வயதுமூத்தவங்களாம்!:)
>>
வடநாட்டில் உறவுகளிடையே எப்போதுமே மரியாதை விளிச்சொல் உண்டு.
தாயை மாதாஜி என்பது, மனைவி கணவன் கேட்டால், ‘ஜி’ என்பது, கணவனும் ‘ஜி’
என்பது. ஏன் குழந்தைகளிடம் கூட இதே மரியாதைதான். இதைக் கொஞ்சம், கொஞ்சம்
ஸ்ரீலங்கா தமிழர்களிடம் காண முடிகிறது. வயதாய் இருந்தால்தான் ‘ஜி’ என்பது
எப்போது தமிழ் மண்ணில் வந்தது?
க.>
வயதாய் இருந்தால்தான் ‘ஜி’ என்பது
எப்போது தமிழ் மண்ணில் வந்தது?
ஹரிஅண்ணா(ர்) இங்க அழகாகச்சொல்லி இருக்கார்(விரல் நுனில ராமாயணம் இருக்குமோ?) ஒன்ஸ் மோர்!
ஆரோ இவர் யாரோ--என்னபேரோ அறியேனே<<<>யாரோ இவர் யாரோன்னுதானே எங்க பாட்டு டிச்சர் ஸ்ரீரங்கம்ல சொல்லிக்கொடுத்தாங்க?!
சிவாஜி வந்தபோது வந்திருக்கும்!
:-))
ச்சும்மா! மரியாதை இருந்தால் தானே வரும். குழந்தை பிறந்த பின் மனைவியையே அம்மாடி ன்னு கூப்பிடறதில்லையா?
திவாஜி
ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமாபரகதி கிடைக்க வேறு புண்யம் பண்ணவேணுமாஅப்படின்னு பாடறாங்க. அர்த்தம் உதைக்குதே! அதை ஒர்த்தரும் கண்டுக்கறதில்லை. போதுமா, வேணுமா அப்படின்னு ரைம் வருதாம்...
2010/1/17 shylaja <shyl...@gmail.com>ஹரிஅண்ணா(ர்) இங்க அழகாகச்சொல்லி இருக்கார்(விரல் நுனில ராமாயணம் இருக்குமோ?) ஒன்ஸ் மோர்!லஜ்ஜாம்பாள்,ராமாயணம் எப்பவும் மனசுலேயே இருக்கு. பல சமயங்களில் பாடலின் நினைவு இருக்கும். பாடல் நினைவிருக்காது. அர்த்தம் நினைவிருப்பதால் கான்டெக்ஸ்ட் வச்சு இன்ன இடத்தில் இருக்கிறது என்று புத்தகத்தை எடுத்துப் பார்த்து, இல்லாட்டா டிஜிடல் வர்ஷனைப் பாத்து போடுவேன். ஆனாலும் அங்க இருக்கு அப்படிங்கறது இஙங்ங்க (தொப்பிக்கு அடில மொட்டையா இருக்கற மண்டைல) இருக்கு. பல சமயங்களில் மனப்பாடமாகவே பாடலைச் சொல்வதும் உண்டு. ரெண்டும்.<<<>>>>>
சரஸ்வதி கடாஷம் தான்!///அம்மாடீ, சரஸ்வதி மஹால் பதிப்பித்திருக்கும் ராமநாடகக் கீர்த்தனைகளில் ஆரோ இவர் யாரோ அப்படின்னுதான் இருக்கு. ‘இதென்னடா இது....யாரோ இவர் யாரோ’ இல்லியோ என்று நினைத்துக் கொண்டேன்.
சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லைசபாபதிக்கு வேறு தெய்வம்... பாட்டைக் கேட்டிருக்கீங்களா? ஒண்ணுபோல எல்லாரும்ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமாபரகதி கிடைக்க வேறு புண்யம் பண்ணவேணுமாஅப்படின்னு பாடறாங்க. அர்த்தம் உதைக்குதே! அதை ஒர்த்தரும் கண்டுக்கறதில்லை. போதுமா, வேணுமா அப்படின்னு ரைம் வருதாம்.... எனக்குக் கேவாம்தான் வருது. ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே அப்படிங்கறதுதான் சரியான பாடம். என்ன பண்றது! சுதா ரகுநாதன் எவ்ளோ பாடல்களை இப்படித் தப்பா பாடறாங்க தெரியுமா? பாம்பே சிஸ்டர்ஸும் விதிவிலக்கில்லை.<<<<>>>>>>>>>>
அப்படித்தான் ஆரோ இவர் யாரோ மாறிப் போயிருக்குப் போலிருக்கு. போகட்டும். அர்த்தமாவது கெடாமல் அப்படியே இருக்கே...அந்த மட்டுக்கும் ராமர் பொழச்சார்.. >>>> :)
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
----- Original Message -----From: Hari KrishnanSent: Saturday, January 16, 2010 1:26 PMSubject: Re: [MinTamil] தமிழ் அலகுகள் (units)
----- Original Message -----From: Hari Krishnan
Sent: Sunday, January 17, 2010 10:37 AMSubject: Re: [MinTamil] தமிழ் அலகுகள் (units)