ஆய்வு சூடி - தமிழண்ணல்

109 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 15, 2024, 10:56:25 PM8/15/24
to மின்தமிழ்
ஆய்வு சூடி 

- தமிழண்ணல்

பார்க்க: ஆய்வியல் வழிகாட்டி - பக்கம்: 68-71


அறிவியல் முறை பேண்
ஆய்வறம் கைவிடேல்
இகழ்ச்சி தவிர்
ஈடுபட் டுழை
உண்மையைத் தேடு

ஊன்றிய மனங்கொள்
எழுத்தச்சம் தவிர்
ஏதுக் காட்டு
ஐயம் அகற்று
ஒவ்வொன்றாய் விரி

ஓய்வின்றிப் படி
ஔவியம் எழுதேல்
வெஃகுதல் விடு
சிக்கலைத் தேர்வு செய்
தெங்கெனப் பயன் செய்

அச்சுப் பிழை தவிர்
வஞ்சினம் கூறேல்
பட்டம் உயர்த்து
எண்ணப் பயிற்சி செய்
புத்தகத் துணைகொள்

சிந்தனை வளம் சேர்
தப்பின்றி வரை
மும்முறை செம்மைசெய்
ஆய்வடங்கல் நிறைவுசெய்
சார்புகள் நீக்கு

சொல்லில் உயர்வு செய்
வெவ்வுரை வீண்
ஆழ்ந்தாழ்ந்து செல்
தெள்ளிதின் விளக்கு
கற்றதை விரித்துரை

என்றும் விழித்திரு
கருதுகோள் தொடங்கு
காட்டுடன் நிறுவுக
கிடைப்பதெலாம் தொகு
கீழ்மை திருடுதல்

குறிப்பட்டை பெருக்கு
கூர்மையாய் விளக்கு
கெடுதி மமதை
கேள்விமேல் கேள்வி கேள்
கைவிடேல் இயைபினை

கொள்கைகள் படை
கோவையாய் எழுது
கௌவிட நினையேல்
சமயம் அறிந்து செய்
சான்றுகள் அடுக்கு

சிறப்பையே நாடு
சீர்மை வெல்லும்
சுருங்கச் சொல்
சூழ்ந்தபின் செயற்படு
செயல்துணைப் பட்டி சேர்

சேர்த்தவை ஒழுங்குசெய்
சைனர் போல் நோன்புகொள்
சொற்பொருள் விளக்கு
சோர்வை அகற்று
சௌகரியம் தேடேல்

ஞமலியின் உய்த்துணர்
ஞாலத்திற் குதவிசெய்
ஞிமிறெனத் தேடு
ஞெகிழிபோல் பற்றுக
நேயமுடன் அணுகு

ஞொள்கிடேல் முகத்தை
தலைப்பைத் தேர்ந்தெடு
தானினைந் தெழுது
திறமை வெளியிடு
தீர்வுகள் கண்டு சொல்

துருவனாய்த் துலக்கு
தூய மொழிபயில்
தெருட்டுக ஐயம்
தேடுக நூலகம்
*தையல்போல் முனைந்துழை

தொகுத்துரை வழங்கு
தோல்வியை வெற்றிகொள்
தெளவைபோல் இரேல்
நயமாய் மறு
நாட்டம் வளர்ச்சியே

நினைத்துப் பழகு
நீள நினை
நுட்பங் காண்
நூலக உறவு கொள்
நெருடிடம் விளக்கு

நேர்மை வழிச் செல்
நைவது கைவிடு
நொறுக்குக தீமையை
நோன்புபோல் பயின்றிடு
நெளவி எனத்திரி

படர்க்கை நடைநவில்
பாட்டை புதுக்கு
பிற்சேர்க்கை கருது
பீடுற எடுத்துரை
புதியன கண்டு சொல்

பூவுல குயர்த்து
பெட்புற வாது செய்
பேணுக மொழிநலம்
பையவெனல் கேடு
பொருளில புகுத்தேல்

போர்த்திறம் காட்டு
பௌவக் கரைகட
மயங்கக் கூறேல்
மாறுகொளக் கூறேல்
மிகைபடப் புனையேல்

மீப்புகழ் வேண்டா
முன் வரலாறறி
மூன்று படி எடு
மெய்ம்மைகள் கண்டுரை
மேற்கோள் எடுத்துரை

மையல் விடுதி
மொழித்திறன் காக்க
மோதினும் பதறேல்
மௌனமாய் நினைவுகூர்
யான்என தகற்று

யுகம் ஒன்று படை
யூகம் விடுவி
யோகம் எனப்பயில்
யௌவனத்தில் பட்டம்பெறு
வரையறை செய்

வால்போல் நீட்டேல்
விட்ட இடம் தொடர்
வீண் பெருமை தீது
வெற்றியில் மனம்வை
வேண்டாதன விடு

வைப்புமுறை போற்று
வெளவ நினையேல்

*சிறப்பு 👏👏🙏

தேமொழி

unread,
Sep 4, 2024, 6:42:37 PM9/4/24
to மின்தமிழ்
ஆத்திசூடி பாடியோர்

https://ta.wikipedia.org/s/6iry


தமிழில் ஆத்திசூடிகளை பாடிய ஆசிரியர்களும் நூல்களும்

  1. அவ்வையார் - ஆத்திசூடி
  2. பாரதியார் - புதிய ஆத்திசூடி
  3. பாரதிதாசன் - ஆத்திசூடி
  4. டாக்டர் வ. சுப. மாணிக்கம் - தமிழ்சூடி
  5. கவிஞர் ந. ர. நாச்சியப்பன் - நெறிசூ்டி
  6. முனைவர் ச. மெய்யப்பன் - அறிவியல்சூடி
  7. டாக்டர் தமிழண்ணல் - ஆய்வுசூடி
  8. பேரா சோம. இளவரசு - நீதிசூடி
  9. ரெ. முத்துகணேசன் - முத்துசூடி
  10. இராம பாரதி - ஆத்திசூடி வெண்பா
  11. வாணிதாசன் - ஆத்திசூடி
  12. சுத்தானந்த பாரதியார் - ஆத்திசூடி
  13. முனைவர். ந. சஞ்சீவி - ஆத்திசூடி
  14. முனைவர். மு. வரதராசன் - ஆத்திசூடி
__________________________________________________________________
Reply all
Reply to author
Forward
0 new messages