சோழர் காலத்திய சமயம்

1,597 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
May 23, 2012, 5:48:13 AM5/23/12
to மின்தமிழ்
மின் தமிழ் நண்பர்களுக்கு,

டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதிய சோழர் காலத்துச் சமயம் பற்றிய கட்டுரைத் தொடரை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டுரையின் ஒரு பகுதி இப்போது இடப் படும். கொஞ்சம் கொஞ்சமாய் மற்றப் பகுதிகளும் இடம் பெறும். கட்டுரைகள் மரபு விக்கியிலும் சேர்க்கப் படுகிறது. இங்கே படிக்க இயலாதவர்கள் அங்கே படித்து இன்புறலாம். நன்றி.

சோழர் காலச் சமயம் 

எழுத்து:  டாக்டர் பத்மா

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவின் ஒரு பகுதியை ஆண்டவன் பல்லவ மன்னன் திரிலோசன பல்லவன். இவன் சமணர்களை அழித்தான். வேதமல்லாச் சடங்குகளை நீக்கிவிட்டு வேதச் சடங்குகளையே கடைப்பிடித்தான். கோயில்களில் வழிபாடு செய்து கொண்டிருந்த பிராமணர் அல்லாதவரை நீக்கிவிட்டு வட நாட்டிலிருந்து அழைத்து வந்த பிராமணர்களை நியமித்தான்.*1 இந்த வடநாட்டு பிராமணர் என்பவர்கள் காளாமுக, பாசுபத, காபாலிக சைவத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் பரவிய இம்மதங்கள் அங்கு இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அச்சைவம் தமிழகத்தில் நுழைந்தது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அப்பர் பாடல்களில் நாகப்பட்டினம் கோயிலை நாகைக் காரோகணம் என்று பாடுகிறார்.*2 இவரது காலம் மகேந்திர வர்மனின் காலம். அதாவது கி.பி. 600--630 ஆகும். திரிலோசன பல்லவன் கல்வெட்டுகள் ஆந்திராவில் கி.பி. 470 முதல் 490 வரை கிடைத்துள்ளன*3 எனவே. திரிலோசன பல்லவன் காலத்திற்குப் பின்னரும் மகேந்திர வர்மன் காலத்திற்கு முன்னரும் சற்றேறக் குறைய கி.பி. 500 முதல் 600-க்குள் வடநாட்டு சைவம் தமிழகத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும்.

அப்பர் நாகப்பட்டினத்தை நாகைக் காரோகணம் என்றும் குடந்தைக் காரோகணம் என்றும் கச்சிக் காரோகணம் என்றும் பாடியுள்ளார். வட நாட்டில் காரோகணம் என்ற இடத்தில் பிறந்த லகுளீசரின் சித்தாந்தத்தைப் பின்பற்றும் மதம் பாசுபதம். இந்த லகுளீசர் பிறந்த இடமான காரோகணம் ஒரு தலையாய பாசுபதர்களின் மையமாகத் திகழ்ந்தது. எனவே மேற்கூறிய தமிழ்நாட்டுக் காரோகணங்கள் லகுளீச சித்தாந்தத்தைப் பின்பற்றும் பாசுபத சைவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அப்பர் தம் திருவாரூர்ப் பதிகத்தில் பாசுபத, காளாமுக, காபாலிகர் உலவும் திருவாரூர் வீதியைப் பாடுகிறார். அவரது சமகால மகேந்திரவர்மனும் காபாலிகர்களையும் பெளத்தர்களையும் தமது மத்த விலாச பிரகடனம் என்ற நூலில் கேலி செய்து எழுதியுள்ளார்.

சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்து சமண மதத்தைத் தழுவிப் பின்னர் தீவிர சைவ சமயத்தவராக மாறிய அப்பர் தாம் தழுவியிருந்த சமண மதத்தைக் கடுமையாகத் தாக்குகின்றார்.*4 சம்பந்தரும் அவ்வாறே தாக்கியிருக்கின்றார். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுகின்ற போது தீவிரமாவது மனித இயல்பு. அதுபோல வயதில் மூத்த அப்பர் மிகவும் தீவிர பக்தராக மாறுகிறார். சமண பெளத்த பாழிகள் இடிக்கப் பட்டிருக்கின்றன. சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. *5 அப்பரின் பாடல்கள் காபாலிக சைவர்களின் சிவ உருவ வழிபாடுகளும், சிவன் கபாலத்தை கையிலேந்தியவனாக, கால காலனாக, பைரவனாக, பிக்‌ஷாடனராக, மேனியெங்கும் திருநீறு பூசியவனாகக் கூறுவதிலிருந்து தீவிர சைவர்களான காபாலிகர்களின் சைவ சமயத் தாக்கம் அப்பரிடம் அதிகமிருந்திருக்கிறது. மனித உயிர்பலி செய்யும் காபாலிகத்தைப் பின் பற்றியதால் தான் மதுரை, திருவோத்தூர் போன்ற இடங்களில் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்லப் பட்டனரோ என எண்ண வேண்டியுள்ளது. *6

இவ்வாறு நாயன்மார், ஆழ்வார்கள் காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தால் சமண, பெளத்தர்களின் ஆதிக்கம் பொருளாதாரத்திலும், கல்வி, மருத்துவ, சமூக சேவைகளிலும் கட்டாயமாகப் பறிக்கப் பட்டது. அதற்கு மாற்றாக சைவ வைணவ மதங்கள் மக்கள் மத்தியில் முன் வைக்கப் பட்டு அவ்விடங்களை நிரப்ப முயற்சி செய்தன. முடிவில் வெற்றியும் பெற்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு சைவ சமய மறுமலர்ச்சியில் வேளாளரான அப்பரும் பிராமணரான சம்பந்தரும்,பங்கு பெற்றிருந்தனர். இவர்களுக்குப் பின்னர் வந்த பிராமணராகிய சுந்தரரும், எனவே. வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின் பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம். சமணர்களின் செல்வாக்கும் செல்வமும் வணிகர்களின் வியாபார ரீதியில் அமைந்தது.வணிகர்கள் ஆதரித்த மதம் சமண மதம். சமண முனிவர்கள் நல்லவர்களாக இருந்தும் சமூகத் தொண்டுகள் பல செய்தும் நீர்ப் பாசனத்திற்கு வேண்டிய குளம், தூம்பு, போன்றவை செய்து கொடுத்தும் நல்ல மனத்தவர்களாக இருந்திருந்தும், விவசாயத்தை முன்னிலைப் படுத்தித் தங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்த்தார்களில்லை. தமிழ்நாடோ ஒரு சிறந்த முழு விவசாய நாடு. விவசாய வளர்ச்சியில் தான் உழுகுடி மக்களின், பிற தொழிலாளிகளின் வாழ்வும் உயர்வும் அடங்கியிருந்தது. எனவே சமண மதத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து--விவசாய நாடாக நிலவுடமைச் சமுதாயமாக அச்சமுதாயத்தின் கருவூலமாகக் கோவில்களை அமைத்து மக்களின் அன்றாட வாழ்வில் கோயிலோடு அதாவது சைவ மதத்தோடு தொடர்பு படுத்தியதாகவும் அமைக்கப் பட்ட அரசமைப்பே பிற்காலச் சோழ வரலாற்றின் சாராம்சமாகும்.விவசாயத்தைப் பெருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன என்பதை நோக்கினால் மிகவும் பிரமிப்பாக இருக்கும். நீர்ப்பாசனத்திற்கு அவர்கள் செய்த செயல்களைக் கல்வெட்டுக்களில் படிக்கும்போது பெரு வியப்பை ஏற்படுத்தும்.

பிற்காலச் சோழராட்சியில், கி.பி. 9--ஆம் நூற்றாண்டில் அந்தணர்களும், வேளாளர்களும் மிக உயர்ந்த பதவியை வகித்தனர் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கி.பி. 6--ஆம் நூற்றாண்டில் அவர்கள் நடத்திய போராட்டத்தின் பலனை 9-ஆம் நூற்றாண்டில் மிக நன்றாகவே அனுபவித்தார்கள்.அமைச்சர்களாகவும் பிரமதேய சதுர்வேதி மங்கலங்களின் சபை நிர்வாகிகளாகவும் படைத் தளபதிகளாகவும் கோயில் அதிகாரிகளாகவும் நீதி வழங்குபவர்களாகவும் முக்கிய பதவிகளில் அமர்ந்திருந்த அவர்கள் மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர்.அவர்கள் சைவக் கோயில்களுக்குத் தங்கள் செல்வத்தின் காரணமாக ஏராளமான பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினர். செப்புத் திருமேனிகளை எழுந்தருளிவித்தனர். ஏன் கோயில் பலவும் கட்டியிருக்கின்றனர். நல்ல வளமிக்க ஊர்கள் பிரமதாயமாகவும் சதுர்வேதி மங்கலங்களாகவும் அந்தணர்களுக்கு அளிக்கப் பட்டன.

இந்த இரு குலத்தவரும் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தாலும் கல்வி கேள்விகளிலும் நாட்டின் கருவூலங்களாக ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் கோயில்களின் கருவூலத்திலும், நிர்வாக அமைப்புக்களிலும் முதன்மை பெற்று விளங்கியவர்கள் அந்தணர்கள்.இறையிலியாக பிரமதேய சதுர்வேதி மங்கல நிலங்கள் வழங்கப் பட்டது அந்தணர்களுக்குத் தான். வளமிக்க அவ்வூர்களுக்கு சபை அதிகாரிகள் அல்லது அங்கத்தினர்கள் அவர்கள் தாம். இந்த அளவுக்கு வேளாளர்கள் செல்வாக்குப் பெற்றிருக்க வில்லை. அரசர்களிடம் அமைச்சர்களாகவும், மிகவும் குறைந்த அளவில் ஆங்காங்கே கி.பி. 11--ஆம் நூற்றாண்டின் சித்ரமேழி பெரிய நாடு என்னும் அமைப்பிலும் அவர்கள் அதிகாரிகளாக இருந்தார்களே தவிர, ஊர் நிர்வாகத்தில் அந்தணர்களைப்போல அதிகமான செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. முதலாம் இராஜ இராஜ சோழன் காலத்தில் அமணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணன் ராமன் குடும்பத்தார் எந்த அளவுக்கு பரம்பரை பரம்பரையாக சோழர்களுக்கு அதிகாரிகளாக இருந்தார்கள் என்பதை திரு ஒய். சுப்பராயலு அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். *7

அந்தணர்களின் இந்த வளர்ச்சியும், செல்வாக்கும் நிலவுடமைச் சமுதாய வளர்ச்சியின் உச்சகட்டத்தை எய்திய முதலாம் இராஜராஜனின் செல்வாக்கிற்கு ஏற்றாற்போல அவன் காலத்தில் உயர்ந்திருந்தது. அந்தண சமூகத்தினரின் இந்த வளர்ச்சி ராஜராஜ சோழனின் போக்கையே திசை திருப்புமளவு காணப்பட்டது. ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளை ஊன்றிப் பார்க்கின்றபோது அவன் அந்தணர்களின் செல்வாக்கினைக் குறைக்க அவர்களே அறியாத வகையில் புத்திசாலித் தனமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றான். தந்தை சுந்தர சோழன் காலத்தில் பிரம்மாதிராயர்களாகிய அந்தண உயர் அதிகாரிகளால் தமையன் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட செய்தி அந்தணர்களின் ஆதிக்கத்தின் உச்ச கட்டமாக இருந்திருக்க வேண்டும். இத்தகைய காலகட்டத்தில் தான் ராஜராஜ சோழனின் சிந்தை வேறுவிதமாகச் செயல் பட்டது. 

இச்சமயத்தில்--சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர், சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. இவர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன் எடுத்த கோயில்களிலோ பாண்டிய நாட்டிலோ அகோர உருவங்கள் இல்லை. இக்கால கட்டங்களில் எடுத்த கோயில்களே நமக்குக் கிடக்கும் காலத்தால் முந்திய கோயிலும் உருவங்களுமாகும். அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான் சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.

Dhivakar

unread,
May 23, 2012, 6:32:19 AM5/23/12
to mint...@googlegroups.com
>>கோயில்களில் வழிபாடு செய்து கொண்டிருந்த பிராமணர் அல்லாதவரை நீக்கிவிட்டு வட நாட்டிலிருந்து அழைத்து வந்த பிராமணர்களை நியமித்தான்.*1 இந்த வடநாட்டு பிராமணர் என்பவர்கள் காளாமுக, பாசுபத, காபாலிக சைவத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் பரவிய இம்மதங்கள் அங்கு இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அச்சைவம் தமிழகத்தில் நுழைந்தது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அப்பர் பாடல்களில் நாகப்பட்டினம் கோயிலை நாகைக் காரோகணம் என்று பாடுகிறார்.*2 இவரது காலம் மகேந்திர வர்மனின் காலம். அதாவது கி.பி. 600--630 ஆகும். திரிலோசன பல்லவன் கல்வெட்டுகள் ஆந்திராவில் கி.பி. 470 முதல் 490 வரை கிடைத்துள்ளன*3 எனவே. திரிலோசன பல்லவன் காலத்திற்குப் பின்னரும் மகேந்திர வர்மன் காலத்திற்கு முன்னரும் சற்றேறக் குறைய கி.பி. 500 முதல் 600-க்குள் வடநாட்டு சைவம் தமிழகத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும்.<<

கீதாம்மா!

பத்மாவதி அம்மா இங்கு (மின் தமிழில்) இருக்கிறார்களா? அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அந்த மரியாதையை உள்ளத்தில் கொண்டுதான் கீழ்க்கண்டவாறு எழுதுகிறேன்.

1. வடநாட்டு பிராம்மணர் என்றழைக்கப்படுவோர் காபாலிகத்தில் இல்லை. எனக்குத் தெரிந்து பாசுபதம் மட்டுமே பிராம்மணர் கடைபிடித்தார்கள். காளாமுகம் எல்லா குலமும் கலந்தது. பிராம்மணருக்கு மட்டுமே சொந்தமில்லை.

2. Bபோயர்கள் (ஆதிவாசிப் பிரிவினர்) காசி சென்று வேதம் பயின்று ஆந்திராவில் வேத மதத்தைத் தழைத்தோங்கச் செய்தனர். இது நடந்த காலம் கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு. மடிபோயர் என்பவ்ர் மடிசர்மா என மாற்றிக்கொண்டதற்கான சான்று உண்டு. இவர்கள் பல்லவர்களுக்கு நெருங்கிய தோழர்கள். (என்னுடைய விசித்திர சித்தன் கதைக்காக நான் ஆழமாகத் தேடிய வரலாறில் இவர்களும் உண்டு)

ஆனால் இவர்கள் (போயர்கள்) நீக்கப்பட்ட காலம் 5 ஆம் நூற்றாண்டு இல்லை.. ஒன்பதாம் நூற்றாண்டு கீழைச் சாளுக்கியர்கள் செய்தனர். வடநாட்டு பிராம்மணர்கள் ஆந்திராவுக்கு அழைத்து வரப்பட்டதில்லை.. தமிழ்நாட்டு தமிழ்ப் பிராம்மணர் மட்டுமே குடும்பம் குடும்பங்களாகவே தருவிக்கப்பட்டனர். இதற்கு பல சான்றுகள் உள்ளன. இவர்களுக்கு நிவந்தங்கள் அளித்த செப்புப் பட்டயங்களும் உள்ளன. தெய்வத்தின் குரல் முதலாம் தொகுதியில் கூட காஞ்சி மகாமுனிவர் இந்தச் செய்தியை எழுதி இருக்கிறார்கள்.

3. திரிலோசன பல்லவன் காலத்தில் கல்வெட்டுகளா? அம்மாதான் பதில் சொல்லவேண்டும்.

4. தமிழகத்தில் சைவம் நுழைந்தது கி.பி.500க்கு பிறகுதான் என்பது ஒப்புக்கொள்ளமுடியாத தியரி. மாணிக்கவாசகர் காலம் விவாதத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும் காரைக்கால் அம்மையார் போன்றோர் இரண்டாம் நூற்றாண்டு காலத்திலேயே இருந்தனர். சுமார் 20 சிவன் கோயில்களைப் பற்றிய ஐயடியார் காடவர்கோன் திருமுறைப் பாடல்கள் இந்த 500-600 காலத்திலேயே உள்ளன. பதினோராம் திருமுறைப்பாடல்களில் இவை உள்ளன. ஐயடியார் காலம் பற்றிய அனுமானம் பலரிடத்தே உண்டு. சிம்மவர்மன் (530-60) எனும் பல்லவ மன்னரின் தம்பியாக இவரை அடையாள்ம் செய்த திரு தி.ந. சுப்பிரமணியம், இவரால்தான் சிம்மவர்மன் தன் சர்மவியாதி நீங்கப்பெற்று தில்லையில் பொற்கூறை அமைத்தான் என்று எழுதி இருக்கிறார்.
சிவன் கோயில்கள் கட்டப்பட்ட நிலையில் சைவம் எப்போதோ தமிழகத்தில் நுழைந்திருக்கவேண்டும்.,  இந்தக் காலம்தான் அது என வரையறுக்கமுடியாது. 

சைவம் தமிழகத்தில் ’நுழைந்திருக்க’ வேண்டும் என்பதே ஒப்புக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. தென்னாடுடைய சிவனே போற்றி!

நான் இன்னமும் முழுக்கட்டுரையும் படிக்கவில்லை. படித்த பின்னர் மேலும் எழுத வேண்டுமெனில் எழுதுகிறேன். சுபா மூலமாக என் வணக்கத்தையும் திருமதி பத்மாவதி அம்மா அவர்களுக்கு சொல்லும் அதே நேரத்தில் ஆந்திர வரலாற்றை தமிழர்கள் சரிவரியாகவோ கோர்வையாகவோ ஆராயவில்லை என்ற என் வருத்தத்தையும் தெரிவித்து விடுங்கள்!!

அன்புடன்
திவாகர்

2012/5/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Geetha Sambasivam

unread,
May 23, 2012, 7:30:26 AM5/23/12
to mint...@googlegroups.com
திவாகர்,

தட்டச்சும்போது உங்களை நினைத்துக் கொண்டே தான் தட்டச்சினேன்.  இதிலே பல செய்திகளில் எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு.  இப்போது தான் முதல் கட்டுரை பாதி தட்டச்சி இருக்கேன்.  மொத்தமும் பார்க்கலாம். 

2012/5/23 Dhivakar <venkdh...@gmail.com>

கீதாம்மா!

பத்மாவதி அம்மா இங்கு (மின் தமிழில்) இருக்கிறார்களா? அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அந்த மரியாதையை உள்ளத்தில் கொண்டுதான் கீழ்க்கண்டவாறு எழுதுகிறேன்.

1. வடநாட்டு பிராம்மணர் என்றழைக்கப்படுவோர் காபாலிகத்தில் இல்லை. எனக்குத் தெரிந்து பாசுபதம் மட்டுமே பிராம்மணர் கடைபிடித்தார்கள். காளாமுகம் எல்லா குலமும் கலந்தது. பிராம்மணருக்கு மட்டுமே சொந்தமில்லை.

2. Bபோயர்கள் (ஆதிவாசிப் பிரிவினர்) காசி சென்று வேதம் பயின்று ஆந்திராவில் வேத மதத்தைத் தழைத்தோங்கச் செய்தனர். இது நடந்த காலம் கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு. மடிபோயர் என்பவ்ர் மடிசர்மா என மாற்றிக்கொண்டதற்கான சான்று உண்டு. இவர்கள் பல்லவர்களுக்கு நெருங்கிய தோழர்கள். (என்னுடைய விசித்திர சித்தன் கதைக்காக நான் ஆழமாகத் தேடிய வரலாறில் இவர்களும் உண்டு)

ஆனால் இவர்கள் (போயர்கள்) நீக்கப்பட்ட காலம் 5 ஆம் நூற்றாண்டு இல்லை.. ஒன்பதாம் நூற்றாண்டு கீழைச் சாளுக்கியர்கள் செய்தனர். வடநாட்டு பிராம்மணர்கள் ஆந்திராவுக்கு அழைத்து வரப்பட்டதில்லை.. தமிழ்நாட்டு தமிழ்ப் பிராம்மணர் மட்டுமே குடும்பம் குடும்பங்களாகவே தருவிக்கப்பட்டனர். இதற்கு பல சான்றுகள் உள்ளன. இவர்களுக்கு நிவந்தங்கள் அளித்த செப்புப் பட்டயங்களும் உள்ளன. தெய்வத்தின் குரல் முதலாம் தொகுதியில் கூட காஞ்சி மகாமுனிவர் இந்தச் செய்தியை எழுதி இருக்கிறார்கள்.

3. திரிலோசன பல்லவன் காலத்தில் கல்வெட்டுகளா? அம்மாதான் பதில் சொல்லவேண்டும்.

4. தமிழகத்தில் சைவம் நுழைந்தது கி.பி.500க்கு பிறகுதான் என்பது ஒப்புக்கொள்ளமுடியாத தியரி. மாணிக்கவாசகர் காலம் விவாதத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும் காரைக்கால் அம்மையார் போன்றோர் இரண்டாம் நூற்றாண்டு காலத்திலேயே இருந்தனர். சுமார் 20 சிவன் கோயில்களைப் பற்றிய ஐயடியார் காடவர்கோன் திருமுறைப் பாடல்கள் இந்த 500-600 காலத்திலேயே உள்ளன. பதினோராம் திருமுறைப்பாடல்களில் இவை உள்ளன. ஐயடியார் காலம் பற்றிய அனுமானம் பலரிடத்தே உண்டு. சிம்மவர்மன் (530-60) எனும் பல்லவ மன்னரின் தம்பியாக இவரை அடையாள்ம் செய்த திரு தி.ந. சுப்பிரமணியம், இவரால்தான் சிம்மவர்மன் தன் சர்மவியாதி நீங்கப்பெற்று தில்லையில் பொற்கூறை அமைத்தான் என்று எழுதி இருக்கிறார்.
சிவன் கோயில்கள் கட்டப்பட்ட நிலையில் சைவம் எப்போதோ தமிழகத்தில் நுழைந்திருக்கவேண்டும்.,  இந்தக் காலம்தான் அது என வரையறுக்கமுடியாது. 

சைவம் தமிழகத்தில் ’நுழைந்திருக்க’ வேண்டும் என்பதே ஒப்புக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. தென்னாடுடைய சிவனே போற்றி!

நான் இன்னமும் முழுக்கட்டுரையும் படிக்கவில்லை. படித்த பின்னர் மேலும் எழுத வேண்டுமெனில் எழுதுகிறேன். சுபா மூலமாக என் வணக்கத்தையும் திருமதி பத்மாவதி அம்மா அவர்களுக்கு சொல்லும் அதே நேரத்தில் ஆந்திர வரலாற்றை தமிழர்கள் சரிவரியாகவோ கோர்வையாகவோ ஆராயவில்லை என்ற என் வருத்தத்தையும் தெரிவித்து விடுங்கள்!!

அன்புடன்
திவாகர்

Seethaalakshmi Subramanian

unread,
May 23, 2012, 10:30:03 PM5/23/12
to mint...@googlegroups.com
திவாகர், தொடர்ந்து உங்கள் ஆய்வுக் குறிப்புகளையும் எழுதுங்கள். நமக்குத் தெரிந்த பல வரலாற்று ஆய்வாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் சான்றுகளுட்ன் பேசுவார்கள். இது நல்ல தொடர். தொடரட்டும். படுத்துக் கிடந்தவளை வரலாற்று எழுப்பிவிட்டிருக்கின்றது. நன்றி
சீதாம்மா

2012/5/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

Dhivakar

unread,
May 24, 2012, 1:35:46 AM5/24/12
to mint...@googlegroups.com
The article is totally one-sided. biased. Sorry to say this has come from a scholar like Dr. Padmavathi, 

>>அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான் சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.<<

அப்பர் சுவாமிகள் காலத்தில் ஏற்கனவே முன்னூறுக்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் (வைப்புத் தலங்கள் உட்பட) இருந்ததாக அவர் பாடல்கள் மூலம் தெரிய வருகின்றது. தட்சிணாமூர்த்தியும் அகோரமூர்த்தியும் அப்பர் காலத்துக்கு முற்பட்டவை. திருவெண்காடு கோயிலில் மிகப்பழமையான அகோரமூர்த்தி அர்ச்சா ரூபம் சன்னிதியே உள்ளது.  இக்கோயிலும் அப்பர் காலத்துக்கு முற்பட்டவையாகும். தில்லை நடராஜர் அர்ச்சா ரூபம்தானே! சிவ மகேஸ்வர ரூபங்கள் வழிபாட்டில் ஏற்கனவே வந்ததால்தானே அப்பர் சிவஸ்வரூபத்தை எத்தனையோ பாடல்களில் வர்ணனை செய்து பாடியிருக்கிறார்? அப்பர் பாடல்களைக் கூர்ந்து படித்தால் அவைகளில் மிகச் சிறிய 5% அளவுக்கே சமண-புத்த ப்ரதிவாதம் இருக்கும். ஏனைய 95% பாடல்களும் சிவனைப் பற்றிய வர்ணனைகளும், சிவபுராணங்களின் மேன்மையும் மிக அதிகமாகக் காணப்படும். தட்சிணாமூர்த்தி ரூபம் குருமுகத்துக்கான தோற்றமாக அப்பர் காலத்துக்கு முன்பே வந்துவிட்டதாக நாகசாமி உட்பட பல கட்டுரையாளாகள் எழுதியுள்ளார்கள்.

 >>ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளை ஊன்றிப் பார்க்கின்றபோது அவன் அந்தணர்களின் செல்வாக்கினைக் குறைக்க அவர்களே அறியாத வகையில் புத்திசாலித் தனமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றான். தந்தை சுந்தர சோழன் காலத்தில் பிரம்மாதிராயர்களாகிய அந்தண உயர் அதிகாரிகளால் தமையன் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட செய்தி அந்தணர்களின் ஆதிக்கத்தின் உச்ச கட்டமாக இருந்திருக்க வேண்டும். இத்தகைய காலகட்டத்தில் தான் ராஜராஜ சோழனின் சிந்தை வேறுவிதமாகச் செயல் பட்டது. <<

இந்தக் கருத்து தனிப்பட்ட முறையில் டாக்டர் பத்மாவதி அவர்களின் கருத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமைப் படுத்த முடியாது. அவருக்கு ராஜ ராஜன் மீதும் பிராம்மணர்கள் மீதும் என்ன கோபமோ.. 

ராஜராஜ சோழன் எனும் அரசன் சரித்திரத்தைப் பார்க்கும்போது அவனை முதலில் சோழ நாட்டுக்கு அதிபதியாகப் பார்க்கவேண்டும். அவன் அண்ணனைக் கொல்வதற்காக, பாண்டியநாட்டு அரசனுக்காகப் பணியாற்றிய சோழநாட்டு பிரம்மணர்களும் அவர்தம் உறவினர்களும் என்பது உடையார்குடி கல்வெட்டு (துரோகிகளான ரவிதாஸனாகிய பஞ்சவன் பிரும்மாதிராஜனும் அவன் சகோதரர்கள் சோமன் சாம்ப்வன்...) விவரங்களிலிருந்து தெரியவரும். இவர்கள்தான் கொன்றார்களா இல்லையா என்பது தெரியாத பட்சத்தில் இவர்களின் நிலம் வீடுகள், உறவினர்களின் வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அக்கல்வெட்டு சொல்கிறது.  துரோகிகள் எனும் வார்த்தையிலிருந்தே இவர்கள் எதிரி நாட்டைச் சேர்ந்தோர் இல்லை என்பதும் தம் நாட்டைச் சேர்ந்தோர் என்பதாலும் பிராம்மணர்களுக்குத் தரவேண்டிய தண்டனைகளை ராஜராஜன் தருகிறான். ஒருவேளை எதிரிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் சிரச்சேதம் செய்யத் தயங்கவில்லை என்பது ராஜராஜனின் விழிஞம் யுத்தத்தில் தெரிய வரும். சேரநாட்டுப் பிராம்மணர்கள் இங்கே அழிக்கப்படுகிறார்கள். அந்தண அதிகாரிகளால் ஆதித்தன் கொலையுண்டதால் அந்தணர்களின் ஆட்சி அந்தக் காலக் கட்டத்தில் உச்சகட்டம் என பத்மாவதியார் கூறுவது கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதை அவர்தான் இன்னமும் விளக்க வேண்டும். ஏனெனில் முதலில் ஆதித்த கரிகாலனைக் கொன்றோர் அந்தணர்கள்தான் என்பது எங்கும் எந்தக் கல்வெட்டு மூலமாக நிரூபிக்கப்படவில்லை என்பது பத்மாவதியார் அறியாததா?.. உடையார் குடி கல்வெட்டு அவர் அறியாததா? தவிர ’அந்தணர் என்போர் அறவோர்’ என்ற சொல்லுக்கு சென்ற நூற்றாண்டு வரை பாரதத்தில் இருந்த எந்த அரசாங்கமும் மதிப்பும், மரியாதையும் கொடுத்தேப் பார்த்தது என்பதும் சரித்திரம் அறிந்த சான்றோரான அவருக்குத் தெரியாததா?

அந்தணர்களை அவர்களே அறியாமல் திட்டங்கள் போட்டதாக ராஜராஜனைப் பற்றி எழுதியிருக்கிறார் டாக்டர் பத்மாவதி அம்மா. ஒருவேளை தில்லை தீட்சிதர்களை தன் திட்டத்துக்கு உட்படுத்த - தில்லைக் கோயில் அறையில் திருமுறை ஓலைகள மீட்டெடுக்க ராஜராஜன் மேற்கொண்ட மூவர் முதலிகளின் உற்சவ விக்கிர வழிபாட்டைப் பற்றிச் சொல்கிறார் என எடுத்துக் கொண்டால் கூட, இது பிராம்மணர்களை, அவர் சொல்வது போல, அவர்களே அறியாத வகையில் திட்டம் போடுவது இல்லை. தில்லையில் மூவர் பிராண ப்ரதிஷ்டை என்பது எல்லோரும் அறிந்த, தெளிந்த ஆகம விஷயமே. இது தெளிந்த ஆகம விஷயமாக இருப்பதால் மட்டுமே எல்லோராலும் ஏற்கப்பட்டது. தில்லை மூவாயிரவர் விஷயத்தில் எல்லா அரசாங்கங்களுமே பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். அங்கே அந்தணர்கள் வாக்கை பொதுவாக எந்த அரசும் மீறவில்லை (இருமுறை - அச்சுத ராயர் காலத்திலும், இதோ இன்றைய கால கட்டத்திலுமே மீறப்பட்டுள்ளது) என்பதும் அவருக்கு நிச்சயமாக தெரிந்திருக்க, இப்படித் தெரிந்தும் ஒரு அபாண்டமான பழியை ஒரு குலத்தினர் மேல் போடலாமோ.. ஏன் ?

இன்னமும் நிறைய எழுதுவதற்கு இருக்கிறது. எனக்குள்ள நேரப் பற்றாக்குறையால் சில விஷயங்களில்தான் என் கருத்தைத் தெரிவித்தேன். பத்மாவதியார் அதிகம் படித்து உணர்ந்தவர், இருந்தும் இப்படிப்பட்ட ’ஒரு பக்க நோக்கான விஷயமாக’ ஒரு படைப்பை ஏன் மரபு விக்கிக்கு வழங்கவேண்டும் என்று தெரியவில்லை.

மரபு விக்கியில் பதிப்போருக்கு, என்னுடைய கருத்து (ஏற்கவேண்டும் என்ற அவசியமாக இல்லையென்றாலும்) என்னவென்றால் இந்தக் கட்டுரையை தலைப்பு சற்று மாற்றி டாக்டர் பத்மாவதியின் பார்வையில் சோழர் காலத்தில் சமயங்கள்’ என்று மரபு விக்கியில் இணைக்கலாம் -. இல்லையென்றால்பொதுமையாக சோழர்காலத்து சமயங்கள் என்று வைத்தால் நாளை ஆராய்ச்சிக்காக எதிர்காலத்தினர் எடுத்துக் கொள்ளப்படும்போது மாற்றுக்கருத்துகள் கொண்ட தகவல்களால் ஆராய்ச்சி முடிவுகள் எடுப்பதற்குக் கடினமாக இருக்கும்.

நான் யாரையும் மனம் நோகடிக்க இக்கருத்துகளை எழுதவில்லை. பிழையான கருத்துகளைப் போட்டு மனம் நோகடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சீதம்மாவுக்கு,

நன்றி! நீங்கள் மேலே கண்ட விஷயங்களை திரு ராமச்சந்திரன அவர்களிடமோ வரலாறு குழிவினரிடமோ கேட்கலாம். நிச்சயமாக அவர்கள் மேலே கண்ட கருத்துகளை ஏற்பார்கள். 

2012/5/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>
மின் தமிழ் நண்பர்களுக்கு,

டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதிய சோழர் காலத்துச் சமயம் பற்றிய கட்டுரைத் தொடரை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டுரையின் ஒரு பகுதி இப்போது இடப் படும். கொஞ்சம் கொஞ்சமாய் மற்றப் பகுதிகளும் இடம் பெறும். கட்டுரைகள் மரபு விக்கியிலும் சேர்க்கப் படுகிறது. இங்கே படிக்க இயலாதவர்கள் அங்கே படித்து இன்புறலாம். நன்றி.

சோழர் காலச் சமயம் 

எழுத்து:  டாக்டர் பத்மா

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவின் ஒரு பகுதியை ஆண்டவன் பல்லவ மன்னன் திரிலோசன பல்லவன். இவன் சமணர்களை அழித்தான். வேதமல்லாச் சடங்குகளை நீக்கிவிட்டு வேதச் சடங்குகளையே கடைப்பிடித்தான். கோயில்களில் வழிபாடு செய்து கொண்டிருந்த பிராமணர் அல்லாதவரை நீக்கிவிட்டு வட நாட்டிலிருந்து அழைத்து வந்த பிராமணர்களை நியமித்தான்.*1 இந்த வடநாட்டு பிராமணர் என்பவர்கள் காளாமுக, பாசுபத, காபாலிக சைவத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் பரவிய இம்மதங்கள் அங்கு இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அச்சைவம் தமிழகத்தில் நுழைந்தது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அப்பர் பாடல்களில் நாகப்பட்டினம் கோயிலை நாகைக் காரோகணம் என்று பாடுகிறார்.*2 இவரது காலம் மகேந்திர வர்மனின் காலம். அதாவது கி.பி. 600--630 ஆகும். திரிலோசன பல்லவன் கல்வெட்டுகள் ஆந்திராவில் கி.பி. 470 முதல் 490 வரை கிடைத்துள்ளன*3 எனவே. திரிலோசன பல்லவன் காலத்திற்குப் பின்னரும் மகேந்திர வர்மன் காலத்திற்கு முன்னரும் சற்றேறக் குறைய கி.பி. 500 முதல் 600-க்குள் வடநாட்டு சைவம் தமிழகத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும்.

அப்பர் நாகப்பட்டினத்தை நாகைக் காரோகணம் என்றும் குடந்தைக் காரோகணம் என்றும் கச்சிக் காரோகணம் என்றும் பாடியுள்ளார். வட நாட்டில் காரோகணம் என்ற இடத்தில் பிறந்த லகுளீசரின் சித்தாந்தத்தைப் பின்பற்றும் மதம் பாசுபதம். இந்த லகுளீசர் பிறந்த இடமான காரோகணம் ஒரு தலையாய பாசுபதர்களின் மையமாகத் திகழ்ந்தது. எனவே மேற்கூறிய தமிழ்நாட்டுக் காரோகணங்கள் லகுளீச சித்தாந்தத்தைப் பின்பற்றும் பாசுபத சைவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அப்பர் தம் திருவாரூர்ப் பதிகத்தில் பாசுபத, காளாமுக, காபாலிகர் உலவும் திருவாரூர் வீதியைப் பாடுகிறார். அவரது சமகால மகேந்திரவர்மனும் காபாலிகர்களையும் பெளத்தர்களையும் தமது மத்த விலாச பிரகடனம் என்ற நூலில் கேலி செய்து எழுதியுள்ளார்.

சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்து சமண மதத்தைத் தழுவிப் பின்னர் தீவிர சைவ சமயத்தவராக மாறிய அப்பர் தாம் தழுவியிருந்த சமண மதத்தைக் கடுமையாகத் தாக்குகின்றார்.*4 சம்பந்தரும் அவ்வாறே தாக்கியிருக்கின்றார். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுகின்ற போது தீவிரமாவது மனித இயல்பு. அதுபோல வயதில் மூத்த அப்பர் மிகவும் தீவிர பக்தராக மாறுகிறார். சமண பெளத்த பாழிகள் இடிக்கப் பட்டிருக்கின்றன. சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. *5 அப்பரின் பாடல்கள் காபாலிக சைவர்களின் சிவ உருவ வழிபாடுகளும், சிவன் கபாலத்தை கையிலேந்தியவனாக, கால காலனாக, பைரவனாக, பிக்‌ஷாடனராக, மேனியெங்கும் திருநீறு பூசியவனாகக் கூறுவதிலிருந்து தீவிர சைவர்களான காபாலிகர்களின் சைவ சமயத் தாக்கம் அப்பரிடம் அதிகமிருந்திருக்கிறது. மனித உயிர்பலி செய்யும் காபாலிகத்தைப் பின் பற்றியதால் தான் மதுரை, திருவோத்தூர் போன்ற இடங்களில் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்லப் பட்டனரோ என எண்ண வேண்டியுள்ளது. *6

இவ்வாறு நாயன்மார், ஆழ்வார்கள் காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தால் சமண, பெளத்தர்களின் ஆதிக்கம் பொருளாதாரத்திலும், கல்வி, மருத்துவ, சமூக சேவைகளிலும் கட்டாயமாகப் பறிக்கப் பட்டது. அதற்கு மாற்றாக சைவ வைணவ மதங்கள் மக்கள் மத்தியில் முன் வைக்கப் பட்டு அவ்விடங்களை நிரப்ப முயற்சி செய்தன. முடிவில் வெற்றியும் பெற்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு சைவ சமய மறுமலர்ச்சியில் வேளாளரான அப்பரும் பிராமணரான சம்பந்தரும்,பங்கு பெற்றிருந்தனர். இவர்களுக்குப் பின்னர் வந்த பிராமணராகிய சுந்தரரும், எனவே. வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின் பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம். சமணர்களின் செல்வாக்கும் செல்வமும் வணிகர்களின் வியாபார ரீதியில் அமைந்தது.வணிகர்கள் ஆதரித்த மதம் சமண மதம். சமண முனிவர்கள் நல்லவர்களாக இருந்தும் சமூகத் தொண்டுகள் பல செய்தும் நீர்ப் பாசனத்திற்கு வேண்டிய குளம், தூம்பு, போன்றவை செய்து கொடுத்தும் நல்ல மனத்தவர்களாக இருந்திருந்தும், விவசாயத்தை முன்னிலைப் படுத்தித் தங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்த்தார்களில்லை. தமிழ்நாடோ ஒரு சிறந்த முழு விவசாய நாடு. விவசாய வளர்ச்சியில் தான் உழுகுடி மக்களின், பிற தொழிலாளிகளின் வாழ்வும் உயர்வும் அடங்கியிருந்தது. எனவே சமண மதத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து--விவசாய நாடாக நிலவுடமைச் சமுதாயமாக அச்சமுதாயத்தின் கருவூலமாகக் கோவில்களை அமைத்து மக்களின் அன்றாட வாழ்வில் கோயிலோடு அதாவது சைவ மதத்தோடு தொடர்பு படுத்தியதாகவும் அமைக்கப் பட்ட அரசமைப்பே பிற்காலச் சோழ வரலாற்றின் சாராம்சமாகும்.விவசாயத்தைப் பெருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன என்பதை நோக்கினால் மிகவும் பிரமிப்பாக இருக்கும். நீர்ப்பாசனத்திற்கு அவர்கள் செய்த செயல்களைக் கல்வெட்டுக்களில் படிக்கும்போது பெரு வியப்பை ஏற்படுத்தும்.

பிற்காலச் சோழராட்சியில், கி.பி. 9--ஆம் நூற்றாண்டில் அந்தணர்களும், வேளாளர்களும் மிக உயர்ந்த பதவியை வகித்தனர் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கி.பி. 6--ஆம் நூற்றாண்டில் அவர்கள் நடத்திய போராட்டத்தின் பலனை 9-ஆம் நூற்றாண்டில் மிக நன்றாகவே அனுபவித்தார்கள்.அமைச்சர்களாகவும் பிரமதேய சதுர்வேதி மங்கலங்களின் சபை நிர்வாகிகளாகவும் படைத் தளபதிகளாகவும் கோயில் அதிகாரிகளாகவும் நீதி வழங்குபவர்களாகவும் முக்கிய பதவிகளில் அமர்ந்திருந்த அவர்கள் மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர்.அவர்கள் சைவக் கோயில்களுக்குத் தங்கள் செல்வத்தின் காரணமாக ஏராளமான பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினர். செப்புத் திருமேனிகளை எழுந்தருளிவித்தனர். ஏன் கோயில் பலவும் கட்டியிருக்கின்றனர். நல்ல வளமிக்க ஊர்கள் பிரமதாயமாகவும் சதுர்வேதி மங்கலங்களாகவும் அந்தணர்களுக்கு அளிக்கப் பட்டன.

இந்த இரு குலத்தவரும் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தாலும் கல்வி கேள்விகளிலும் நாட்டின் கருவூலங்களாக ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் கோயில்களின் கருவூலத்திலும், நிர்வாக அமைப்புக்களிலும் முதன்மை பெற்று விளங்கியவர்கள் அந்தணர்கள்.இறையிலியாக பிரமதேய சதுர்வேதி மங்கல நிலங்கள் வழங்கப் பட்டது அந்தணர்களுக்குத் தான். வளமிக்க அவ்வூர்களுக்கு சபை அதிகாரிகள் அல்லது அங்கத்தினர்கள் அவர்கள் தாம். இந்த அளவுக்கு வேளாளர்கள் செல்வாக்குப் பெற்றிருக்க வில்லை. அரசர்களிடம் அமைச்சர்களாகவும், மிகவும் குறைந்த அளவில் ஆங்காங்கே கி.பி. 11--ஆம் நூற்றாண்டின் சித்ரமேழி பெரிய நாடு என்னும் அமைப்பிலும் அவர்கள் அதிகாரிகளாக இருந்தார்களே தவிர, ஊர் நிர்வாகத்தில் அந்தணர்களைப்போல அதிகமான செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. முதலாம் இராஜ இராஜ சோழன் காலத்தில் அமணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணன் ராமன் குடும்பத்தார் எந்த அளவுக்கு பரம்பரை பரம்பரையாக சோழர்களுக்கு அதிகாரிகளாக இருந்தார்கள் என்பதை திரு ஒய். சுப்பராயலு அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். *7

அந்தணர்களின் இந்த வளர்ச்சியும், செல்வாக்கும் நிலவுடமைச் சமுதாய வளர்ச்சியின் உச்சகட்டத்தை எய்திய முதலாம் இராஜராஜனின் செல்வாக்கிற்கு ஏற்றாற்போல அவன் காலத்தில் உயர்ந்திருந்தது. அந்தண சமூகத்தினரின் இந்த வளர்ச்சி ராஜராஜ சோழனின் போக்கையே திசை திருப்புமளவு காணப்பட்டது.

இச்சமயத்தில்--சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர், சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. இவர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன் எடுத்த கோயில்களிலோ பாண்டிய நாட்டிலோ அகோர உருவங்கள் இல்லை. இக்கால கட்டங்களில் எடுத்த கோயில்களே நமக்குக் கிடக்கும் காலத்தால் முந்திய கோயிலும் உருவங்களுமாகும். அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான் சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
May 24, 2012, 2:51:05 AM5/24/12
to mint...@googlegroups.com
உங்களோட ஆலோசனைகளும், கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன திவாகர்.  கட்டுரை இன்னமும் இருக்கிறது.  அடுத்த பாகம் இன்று மதியம் வெளியிடுகிறேன்.  அதே சமயம் எனக்கும் இந்தக் கருத்துகளின் உடன்பாடு கிடையாது.  மரபு விக்கியில் தலைப்பு மாற்றுவது பற்றியும் யோசிக்கிறேன்.  நன்றி.

2012/5/24 Dhivakar <venkdh...@gmail.com>
The article is totally one-sided. biased. Sorry to say this has come from a scholar like Dr. Padmavathi, 

>>அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான் சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.<<

360.gif

Nagarajan Vadivel

unread,
May 24, 2012, 3:11:06 AM5/24/12
to mint...@googlegroups.com
ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் கருத்து பொதுக் கருத்தன்றித் தனியார் கருத்து என்று அழைக்க முடியாது.  அவர் மேற்கோளாகக் காட்டியிருக்கும் ஆதாரங்கள் சான்றுகள் தகவில என்றோ அவர் முன் வத்த கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து உள்ளது என்றோ ஆவண அடிப்படையில் முன் வைக்கப்படும் மற்ற பொதுக் கருத்துக்களையும் மரபு விக்கியில் வெளியிடலாம்
மரபு விக்கிக் கருத்துக்களம் புலன் சார் புலமை வாய்ந்த அறிஞர்கள் எழுதி வெளியிடப்படும் கட்டுரைகளைச் சேமித்து வெளியடப்படும் தளம்.  தரவுகள் தகவல் மூலம் அக்கருத்துக்களுக்கான மாற்றுக்கருத்தை இன்னொரு அறிஞர் வெளிட்டால் அதையும் மரபு விக்கியில் சேர்க்கவேண்டும்
நாகராசன்

2012/5/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
360.gif

Geetha Sambasivam

unread,
May 24, 2012, 3:13:28 AM5/24/12
to mint...@googlegroups.com
கட்டாயமாய்ச் சேர்க்கப் படும். சந்தேகமே வேண்டாம்.  திவாகரிடம் கேட்டிருக்கேன்.  அவர் கொடுத்ததும், அதையும் சேர்க்கிறேன்.  நன்றி.

2012/5/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் கருத்து பொதுக் கருத்தன்றித் தனியார் கருத்து என்று அழைக்க முடியாது.  அவர் மேற்கோளாகக் காட்டியிருக்கும் ஆதாரங்கள் சான்றுகள் தகவில என்றோ அவர் முன் வத்த கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து உள்ளது என்றோ ஆவண அடிப்படையில் முன் வைக்கப்படும் மற்ற பொதுக் கருத்துக்களையும் மரபு விக்கியில் வெளியிடலாம்
மரபு விக்கிக் கருத்துக்களம் புலன் சார் புலமை வாய்ந்த அறிஞர்கள் எழுதி வெளியிடப்படும் கட்டுரைகளைச் சேமித்து வெளியடப்படும் தளம்.  தரவுகள் தகவல் மூலம் அக்கருத்துக்களுக்கான மாற்றுக்கருத்தை இன்னொரு அறிஞர் வெளிட்டால் அதையும் மரபு விக்கியில் சேர்க்கவேண்டும்
நாகராசன்

Banukumar Rajendran

unread,
May 24, 2012, 3:20:49 AM5/24/12

சரியான கருத்து.

இரா.பானுகுமார்,
சென்னை

360.gif

Geetha Sambasivam

unread,
May 24, 2012, 5:27:02 AM5/24/12
to மின்தமிழ்
அப்பர், சம்பந்தரின் இந்த நடவடிக்கைகள் ராஜராஜனைக் கவர்ந்திருக்கின்றன. அவனது மனப்போக்கு திசை திரும்பியது என்பதற்கான ஆதாரங்கள் பல. அவை;

1. ராஜராஜன் திருமுறைகளைத் தேடி எடுத்துத் தொகுக்கச் செய்தான். இதனால் ராஜராஜ சோழனுக்குத் தேவாரத் திருமுறைச் சுவடிகள் தில்லையில் இருக்கும் செய்தி முன்பே தெரிந்திருக்கிறது. புதிதாகக் கண்டு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. தெரிந்த செய்தியாக இருந்திருந்தும் ராஜராஜனுக்கு வரலாற்றுக்குத் தேவையான ஒரு சூழ்நிலை அப்போது தான் ஏற்பட்டது. நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு திருமுறைகளைத் தொகுக்கச் செய்ததின் மூலம் சைவ சமயத்தின் அடிப்படையில் மலர்ந்த காபாலிக பாசுபத காளாமுக மதங்களுக்குத் தமிழகத்தில் மீண்டும் புத்துணர்ச்சியைக் கொடுத்தான்.

2. மூவர் முதலிகளின் சிலைகளைக் கோயிலில் எடுக்கச் செய்தான். *8

3. மூவர் பாடிய பாடல்களுக்குத் தேவாரம் என்ற பெயர் சூட்டித் தான் வணங்குவதற்கென்றே தேவாரதேவர் என்ற சந்திரசேகரரைப் பிரதிஷ்டை செய்தான். *9

4. தான் கட்டிய பெரிய கோயிலில் வேதங்களை ஓதி வழிபாடு செய்யாது மூவரின் தேவாரங்களை ஓதி வழிபாடு செய்ய 48 ஓதுவார்களை நியமித்தான். *10

5. ராஜராஜ சோழன் காலம் முதல் அனைத்துக் கோயில்களிலும் தேவாரம் பாட ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. மூவர் முதலிகளின் சிலைகள் பிரதிஷ்டைச் செய்யும் வழக்கம் பரவியது.

6. பெரிய கோயிலைக் கட்டும்போது அவனுக்கு ராஜகுருவாக இருந்தவர் ஈசான சிவ பண்டிதர். தஞ்சைக் கோயிலின் கலசத்தை தானமளித்தவர். இவர் வடநாட்டைச் சேர்ந்தவர். இவரது தத்துவ ஆலோசனைப் படியே ராஜராஜ சோழன் தஞ்சைக் கோயிலை எடுத்திருத்தல் வேண்டும்.*11

7. பெரிய கோயிலுக்கு முன்பே ராஜராஜன் கட்டிய கோயில் நெல்லை மாவட்டம் திருவாலீஸ்வரத்திலுள்ள கோயிலாகும். இக்கோயிலைக் கட்டிய ராஜராஜன் இக்கோயில் கருவூலத்தை மூன்று கை மகா*12 சேனை என்னும் படையைக் காவல் காக்கும்படிச் செய்தான். இக்கோயில் கட்டிய ஊர் ராஜராஜ சதுர்வேதி மங்கலமாகும். இந்த ஊரில் உள்ள நிலங்கள் படிப்படியாக வெள்ளான் வகை நிலமாக மாற்றப் பட்டிருக்கிறது என்பதை இவனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களின் கல்வெட்டுக்களை ஆய்ந்தால் புரிந்து கொள்ளலாம்.*13 எனவே இம்முயற்சி ராஜராஜசோழன் காலத்திலேயே இப்பகுதியில் எடுக்கப் பட்டிருந்தது எனலாம். இக்கோயிலிலுள்ள சிற்பங்களை இக்கட்டுரையாசிரியர் ஆய்வு செய்தபோது, இவை காளாமுக பாசுபத சமயங்களின் அடிப்படையில் தத் புருஷம், அகோரம், வாமனம் ஆகிய தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. இக்கருத்துக்கு உதவுவது போல் இவ்வூரில் ராஜராஜ சோழனால் கோளகி மடம் என்றொரு மடம் நிறுவப் பட்ட செய்தியும் இவ்வூர்க் கல்வெட்டில் காணப்படுகின்றது. அப்பர் தம் தேவாரப் பதிகமொன்றில்,

"பாசுபதம் பார்த்தர்க்கு அளித்தார் போலும்"*14

எனப் பாடியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

8. ராஜராஜ சோழன் காலம் முதல்தான் வட நாட்டு சைவர்கள் ராஜகுருக்களாக இருந்தனர். அதற்கு முன் இல்லை என்கிறார். கே. கே.பிள்ளை.*15

9. K.R. சேதுராமன் என்பவர் தஞ்சைப் பெரிய கோயிலைத் தென்னாட்டு சோமநாதபுரம் என்கிறார்.*16 கர்நாடக நாட்டிலுள்ள சோமநாதபுரக் கோயில் காளாமுக பாசுபதர்களின் மையம் என்பது யாவரும் அறிந்த செய்தியாகும்.

10. வைதீக சமயத்தின் செல்வாக்கைக்குறைக்க, காளாமுக, பாசுபத, காபாலிகத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்த இராஜராஜன் வைதீகர்களின் எதிரிமதங்களாகிய சமண, பெளத்த மதத்திற்கும் ஏராளமான நன்கொடைகள் அளித்து ஆதரித்தான். அவன் கட்டிய பெரிய கோயிலில் சமணச் சிற்பமும், பெளத்தச் சிற்பமும் மிகச் சிறிதாக இடம் பெற்றிருக்கின்றன.

11. நாகப்பட்டினத்தில் கடாரத்து அரசனால் எடுக்கப்ப்பட்ட பெளத்த விகாரத்திற்கு ஆனை மங்கலம் என்ற ஊரையே தானமளித்தான். தன் ஆட்சியில் தமக்கை குந்தவையாரைக் கொண்டு திருமலையிலும் அச்சிறுபாக்கம் அருகே ராஜராஜபுரம் என்ற ஊரிலும் சமணக் கோயிலை எடுக்கச் செய்து மகிழ்ந்தான்.

12. அந்தணர்களின் செல்வாக்கைக் குறைக்க, அவர்கள் உணராத வண்ணம் மிக புத்திசாலித்தனமாக ராஜராஜன் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகத் தான் இவனுக்குப் பிற்காலத்தில் அந்தணர்களின் ஆதிக்கம் குறைந்து வேளாளர்களின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இக்கருத்து கல்வெட்டுக்களை ஆய்வு செய்கின்ற அறிஞர்களுக்கு உடன்பாடான ஒன்றேயாகும்.

13. ராஜராஜனைத் தொடர்ந்து மகன் ராஜேந்திரனுக்கு சர்வசிவ பண்டிதர் குருவாக இருந்ததோடு லகுளீச பண்டிதர் என்பவரும் குறிக்கப் படுகிறார்.*17 சென்னை திருவொற்றியூரிலுள்ள கற்கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப் பட்டது. இக்கோயில் காளாமுக, பாசுபத, காபாலிகர்களின் மையமாகச் செயல்பட்டது. இங்குள்ள லகுளீசர் உருவம் சிறப்பு வாய்ந்தது. இங்கு காபாலிகர்களது சித்தாந்தமாகிய சோமசித்தாந்தம் எடுத்துரைக்கப் பட்டதற்கு ஆதாரமாகக் கல்வெட்டுள்ளது.*18 எனவே இக்கோயிலில் பாசுபத, காளாமுகக் கடவுளான லகுளீசர் உருவமும், காபாலிகர் சித்தாந்தமும் காணப் படுவதால் கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில், தனித்தனியாகச் செயல்பட்டு வந்த அம்மதங்கள் ஒன்று கலந்திருந்தன என்பது தெரிய வருகிறது.

14. சோழர் காலத்தில் ராஜ ராஜ சோழன் காலத்திற்குப் பிறகு தான் மடங்கள் காணப்படுகின்றன. அதற்குப் பின்னர் ஏராளமான மடங்களைக் காணலாம்.ராஜராஜன் காலத்திற்கு முன் மடங்களைக் காண்பது அரிதாக உள்ளது.வடநாட்டிலிருந்து அதாவது வாரணாசி, கெளடதேசம், ராட தேசம்(ஒரிஸ்ஸா)மடங்களிலிருந்து தென்னகம் வந்த சைவ மதத்தினர் தமிழக்த்திலும் மடங்களை நிறுவி தம் மதங்களை வளர்த்தனர்.  மடங்களே மத நிர்வாக மையமாகவும் கல்விச் சாலைகளாகவும், அன்னதானச்சத்திரங்களாகவும் அதூல சாலைகளாகவும் இயங்கின. இத்தகைய மடங்கள் ராஜ ராஜன் காலத்திலும், அவனுக்குப் பின்னர் ஆட்சி புரிந்தோர் காலத்திலும் ஏராளமாகக் காணப்படுகின்றன.

மேற்கூறிய இக்காரணங்கள் மட்டுமல்ல ராஜராஜன் எடுத்த பெரிய கோயிலே காபாலிக, காளாமுக மதங்களின் அடிப்படையில் எடுத்த கோயிலாகவே தோன்றுகிறது.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டளவிலேயே தமிழகத்தில் காபாலிக, காளாமுகத் தாக்கம் அதிகமிருந்தது என்பதைக் கண்டோம். கி.பி.10 ஆம் நூற்றாண்டளவில் ஒன்றுக்கொன்று கலந்து விட்டன. ராஜராஜ சோழன் எடுத்த கோயிலையே இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.  பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு முகங்கள் உள்ளதாகத் தத்துவம். லிங்கத்திற்கு ஐந்து முகங்களை வைப்பதற்குப் பதிலாகக் கருவறையைச் சுற்றியுள்ள உள் பிரகாரத்தில் முழு உருவங்களாக அதே தத்துவ அடிப்படையில் சிற்பங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும் இங்குள்ள சிற்பங்களையும் செப்புச் சிலைகளையும் காண்கின்றபோது இக்கோயிலில் பிக்ஷாடனர், பைரவ, க்ஷேத்ரபாலர், சிறுத் தொண்டர், சீராள தேவர் ஆகியோர் உருவங்களைப் பிரதிஷ்டை செய்யப் படவேண்டிய காரணமென்ன? பைரவர்--காபாலிகர்களின் கடவுள். பிள்ளைக்கறி சமைத்து இறைவனுக்குக் கொடுத்தவர் சிறுத் தொண்டர். நரபலியிடும் காபாலிக சமய இறைவனுக்குப் பிள்ளையைக் கறியாக்கிக்கொடுத்தார் அவர்.இம்மதங்களை ஆதரித்த அப்பர், சம்பந்தருக்குச் சிலை வைத்து அவர்கள் இயற்றிய பாடல்களையே கோயிலில் பாட வைக்க 48 ஓதுவார்களை நியமித்த ராஜராஜன், வேதங்களுக்குப் பதிலாக தேவாரப் பாடல்களையும் அந்தணர்களுக்குப் பதிலாக ஓதுவார்களையும் நியமித்திருக்கின்றான்.இதோடு பைரவர், க்ஷேத்ரபாலர் ஆடையின்றி உலவும் காபாலிகக் கடவுளான பிக்ஷாடனர் ஆகியோரைப் பிரதிஷ்டை செய்து வணங்கிய ராஜராஜனின் சமயக் கொள்கையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பைரவர் வழிபாடு ராஜராஜன் காலத்திற்கு முன் சோழநாட்டில் இருந்ததா என்பது கேள்விக்குறியாகும். இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. காபாலிகர்கள் நரபலி நம்பிக்கை உடையவர்கள். சுடுகாட்டில் ஆடும் இறைவனைப் பிணத்தின் சாம்பலைப் பூசி, மண்டையோடுகளை அணிந்து திரியும் இறைவனை வணங்குபவர்கள்.காபாலிகர்களும் கபாலத்திலேயே உண்பர். உடலெங்கும் நீறு பூசிக் கொள்வர். இக்கருத்தோடு பிக்ஷாடனரை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் மண்டையோட்டு மாலையையும் பிணத்தினைத் தோளிலும் இட்டுக் கொண்டு முனிவர் பத்தினிகள் புடை சூழ அதாவது தாந்திரிகத் தத்துவத்தோடு நடந்து வரும் அந்த உருவத்தைக் காபாலிகத் தத்துவத்தோடு ஒப்பிட வேண்டும். காபாலிகர்கள் வழிபாட்டில் பெண்களுக்கு முக்கியப் பங்குண்டு; அவர்கள் மது, மாமிசம், பெண்கள் இவற்றோடு தான் வழிபாடு நடத்துவர். ரிஷிபத்தினியர் இறைவனின் பின்னால் ஆடையின்றிச் செல்லுதலை நோக்க பிக்ஷாடனர் முழுக்க முழுக்கக் காபாலிக மதக் கடவுள் என்பது தெளிவாகும்.

முதலாம் ராஜராஜ சோழனுக்கு ராஜகுருவாக இருந்து கோயிற்பணியை முடித்து வைத்தவர் வடநாட்டிலிருந்து இங்கு வந்து பணி புரிந்த ஈசான சிவ பண்டிதர் ஆவார். இவர் முற்றிலும் சைவத் தொடர்புடையவர்.

காந்தளூர்ச் சாலை என்னும் கடிகையை (கல்லூரி) ராஜராஜ சோழன் வென்றான். சேர நாட்டிலும் தொண்டை மண்டலத்திலும் கடிகை என்னும் சாலைகள் வைதீகச் சமயத்தினரின் உயர்கல்விக்கூடங்களாகச் செயல்பட்டன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கருநன் தடக்கன் என்ற ஆயகுல மன்னன் ஒருவன் பார்த்திவ சேகரபுரத்தில் ஒரு விஷ்ணு கோயில் கட்டி, அதற்கு ஏராளமான நிலங்களை தானமளித்தான். அக்கோயிலில் கடிகை அமைத்து, அதில் ரிக், யஜுர், சாம வேதங்களும், அது தொடர்பான மீமாக்சம், வியாகரணம் போன்றவைகள் கற்றுத் தர ஏற்பாடு செய்தான். இங்குள்ள கடிகை அல்லது சாலை காந்தளூர்ச் சாலையைப் போல அமைந்ததாகவும் ஆய் மன்னன் தனது பாரத்திவேந்திரபுரச் செப்பேட்டில் கூறுகிறான். இக்கடிகையில் படிக்கும் சட்டரக்ள் (மாணவர்கள்) தங்கள் ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்ளக் கூடாது. கூட்டமாக உள்ள இடங்களுக்கு ஆயுதந்தாங்கிச் செல்லக் கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தமை அச்செப்பேட்டின் மூலம் தெரிகிறது. எனவே கல்வியும் ஆயுதப் பயிற்சியும் தரப்பட்டு, வீரர்களை உருவாக்கிக் கொண்டிருந்தன கடிகைகள்.

அதனால் கடிகைகள் அரசியலில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தன. அரசனை ஆக்குவதில் முக்கியப் பங்கு பெற்றிருக்கும் அரசின் (state) அங்கமாகத் திகழ்ந்தன.

அதன் கொட்டத்தை அடக்கி, அச்சாலையைக் கைப்பற்ற நினைத்தான் ராஜராஜன்.

தமது முன்னோர்கள் பலமுறை சேரநாட்டையும், பாண்டிய நாட்டையும் வென்றும் அரசாள முடியாமற் போனதற்குக் காரணம் இந்தக் கடிகையின் வலிமை தான்.தம் தந்தை காலத்தில் தம் தமையன் இறப்பிற்கும் அவர்கள் நினைத்தபடி ஒரு அரசனைச் சோழ அரியணையில் அமர்த்தியதும் இந்தக் கடிகைகளும், கடிகைகளில் கற்று அதன்படி நடந்த உயர் அதிகாரிகளும் தான் என்பதால் கடிகையை வென்று, அங்கு பயிற்சி பெற்ற அந்தண அதிகாரிகளையும், பிரமதேயங்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்து பேரரசனாக உயர்ந்தான் ராஜராஜன்.

கன்னிப்போர் செய்தருளிக் காந்தளூர்ச் சாலையை கலமறுத்தருளினான் ராஜராஜன். சமய நிறுவனத்தின் உயர்ந்த பீடமாக விளங்கிய ராஜகுரு அந்தஸ்தில் ஒரு வைதீக பிராமணரை அல்ல, ஒரு சிவ பண்டிதரை அமர்த்தி ஆலோசனையைப் பெற்று நாட்டை ஆட்சி செய்தான் இராஜராஜன்.

அடிக்குறிப்பு:

1. Religion of Andhra, B.S.C. Hanumantharao, 1973.

2. 4: 7: 1--10

3. E.g., Vpl. XXIX p. 229

4. 4:5:1--10;  4:102; 1--10

5. சமணமும் தமிழும்---மயிலை சீனி வேங்கட சாமி

6. மேற்படி நூல் மற்றும் தக்கயாகப் ப்ரணி.

7.Sidelight on chola official dom---Y. Subbarayalu p. 357 SRINIDHI--Shri, K.R. Srinivasan, Fest Shrift (1983)

8. S.I.I.Vol. II Part II no. 38

9. Ibid

10. Ibid No. 65

11. Are 24/1897

12. Are 120/1905 & Thd Colas, K.A.N. Sastri, p. 455.

13.முதலாம் இராசேந்திர சோழனின் எசாலம் செப்பேடு மற்றும் மன்னர் கோயில் கல்வெட்டைக்காண்க.

14. அப்பர் தேவாரம் 6: 242:  2

15. தமிழக மக்கள் வரலாறும் பண்பாடும் கே.கே. பிள்ளை:  பக் 298.

16. செளராஷ்ட்ர மணி--தீபாவளி மலர் (1982) 14..11..1982

17.S.I.I. Vol. III No. 18

18.  ARE 1912/300 & Introduction p.67

19. S.I.I. Vol. II part I No. 3

2012/5/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 24, 2012, 5:29:06 AM5/24/12
to மின்தமிழ்
இந்தக் கட்டுரைப்பகுதியின் கீழ்க்கண்ட தகவலில் எனக்குச் சந்தேகம்.  கர்நாடகத்திலும் சோமநாதபுரக் கோயில் உண்டா? எனக்குத் தெரிந்தது குஜராத்திலுள்ள சோமநாதம் தான். தெரிந்தவர்கள் விளக்கவும்.

//கர்நாடக நாட்டிலுள்ள சோமநாதபுரக் கோயில் காளாமுக பாசுபதர்களின் மையம் என்பது யாவரும் அறிந்த செய்தியாகும். //

N. Kannan

unread,
May 24, 2012, 6:37:00 AM5/24/12
to mint...@googlegroups.com
கீதா!

விக்கியில் கட்டுரைக் கருத்துக்கு ஆசிரியரே பொறுப்பு எனும் பொது வாசகம்
போதும். அப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆரம்பிக்கும் போது சொன்னது.
(ஆசிரியர் தரும் தலைப்பை மாற்றுவது சரியில்லை!)

நா.கண்ணன்

2012/5/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
May 24, 2012, 8:21:10 AM5/24/12
to mint...@googlegroups.com
நன்றி கண்ணன். 

2012/5/24 N. Kannan <navan...@gmail.com>
கீதா!

விக்கியில் கட்டுரைக் கருத்துக்கு ஆசிரியரே பொறுப்பு எனும் பொது வாசகம்
போதும். அப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆரம்பிக்கும் போது சொன்னது.
(ஆசிரியர் தரும் தலைப்பை மாற்றுவது சரியில்லை!)

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
May 24, 2012, 8:44:21 AM5/24/12
to mint...@googlegroups.com
பிற்காலச் சோழர் காலத்தில் சமயங்கள் நின்று நிலவியதைப் பற்றிய ஒரு தகவல் கீழே:

http://en.articlesgratuits.com/the-last-years-of-cholas-the-decline-and-fall-of-a-dynasty-id1804.php

It may be interesting to scan through their history from 7th century onwards. During the seventh century A.D, the non-vedic buddist and jain cults, died out as a result of powerful empires like pallavas and cholas banning them and also due their influential clergy losing out to advaitism. During their rise to power in 9th and 10th centuries cholas had fought a lot wars with a host of kingdoms. Many of these wars were savagely cruel and conducted with great impunity, displaying the fiery elegance of cholas. Though None of these had religious motives,none of these were intended to spread chola culture and societal norms, and were mostly imperial expansionist ventures they indirectly resulted in the end of kingdoms which were great patrons and active supporters of Buddhism and Jainism. For example a chola invasion of Srilanka under Raja Raja, was so severe that as the buddhist chronicle mahavamsa notes the cities were utterly destroyed in every manner. Similarly, the defeat of Ganga and northern Chalukya kingdoms of Karnataka by cholas greatly affected Jainism, as these kingdoms were patrons and supporters of the same. Chola invasions of chalukyan territories were especially severe and saw the destruction of the territory entirely. Cholas were inheritors of ancient Indian tradition of kingship and in many ways acted as the custodians of the same. They nurtured a society which was very cosmopolitan and creative. The literature of their period speak of merchant caravans plowing their way through dense forests and of merchant navy ships unloading large amounts of wealth brought from far off lands. Many of their ideals like individualism, democratic self governance, yearly declaration of assets, land survey and taxation systems has no parallels in history and are perfectly implementable even in this age. Though according to an ancient tradition the chola clan owed subservience and servility to Lord Siva at Chidambaram who was their kuladeivam( clan deity), they were also great worshippers of Lord Vishnu and other deities and persecution just because of religious persuasion was unknown throughout their reign.

Late in the 12th century A.D there was a philosopher called Ramanuja born near kanchipuram, who commited heresy by openly criticizing the four fold caste system prevalent from ancient times. He also proposed the scrapping of ritualistic worship at temples undertaken by Brahmins through ages and with supportive documentations, in order to accommodate lower castes into priesthood. His other activities like persuading people to stop worshipping Lord Siva etc clearly signalled conspiracy against the empire which led to his banishment from chola territories. Most of his activities are well documented. Unlike the great nayanmar saints of saivite persuasion or the previous pantheon of vaishnavite alwars who strictly restricted themselves to servitude of god and whose experiences with the almighty was real and natural, Ramanuja’s activities were mostly political. We hear of no divine intervention in his life as we see in lives of great nayanmar and alwar saints. It is anybody’s guess that those who had been at the receiving end with cholas during previous centuries would have joined and supported such movements. His starting of the cult of srivaishnavas led to the formation of populist communities and groups that indulged in subversive activities and periodically rebelled against chola Government.

நாகராசன்

2012/5/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>
நன்றி கண்ணன். 

--

Geetha Sambasivam

unread,
May 24, 2012, 11:04:25 AM5/24/12
to மின்தமிழ்
டாக்டர் பத்மாவதியின் கட்டுரை ஒன்று மரபு விக்கியில் "அரசாட்சி" என்னும் பகுப்பில் கீழ்க்கண்ட சுட்டியில் இணைக்கப் பட்டுள்ளது.

http://tinyurl.com/7yp6uls

2012/5/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 24, 2012, 4:39:25 PM5/24/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நல்லதொரு கட்டுரையை இணைத்திருக்கின்றோம். 
இக்கட்டுரையில் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களின் தொடர்பில் இந்த இழையில் நாம் உரையாடலாம்.

சுபா

2012/5/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
N. Ganesan

unread,
May 24, 2012, 4:45:29 PM5/24/12
to மின்தமிழ்

On May 24, 2:29 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> இந்தக் கட்டுரைப்பகுதியின் கீழ்க்கண்ட தகவலில் எனக்குச் சந்தேகம்.
>  கர்நாடகத்திலும் சோமநாதபுரக் கோயில் உண்டா? எனக்குத் தெரிந்தது
> குஜராத்திலுள்ள சோமநாதம் தான். தெரிந்தவர்கள் விளக்கவும்.
>

> //*கர்நாடக நாட்டிலுள்ள சோமநாதபுரக் கோயில் காளாமுக பாசுபதர்களின் மையம் *என்பது

> யாவரும் அறிந்த செய்தியாகும். //
>
>

இருக்கிறது. ஹொய்சளர் கட்டியது. காவிரிக்கரையில்.

நா. கணேசன்

Banukumar Rajendran

unread,
May 25, 2012, 12:49:32 AM5/25/12
to mint...@googlegroups.com
தொ.பா அவர்களின் செவ்வி!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19877

இரா.பா,
சென்னை

2012/5/25 N. Ganesan <naa.g...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 26, 2012, 3:14:29 AM5/26/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்புள்ள திரு.திவாகர்,

டாக்டர்.பத்மாவதி அவர்கள் மின் தமிழில் உறுப்பினர் இல்லை. ஆனால் நிச்சயமாக உங்கள் கருத்துக்களையும் அவரிடம் அடுத்த முறை பேசும் போது சொல்வேன். தமிழகத்தில் உள்ள நண்பர்கள் அவருடன் எப்போதும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். தற்சமயம் கூட மிக அருமையான ஒரு பணியில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் பணி ஓய்வு பெற்ற பின்னரும் கூட. அவர் மாற்றுக் கருத்துக்களை நிச்சயம் வரவேற்பவரும் கூட. அவரது கட்டுரை கல்வெட்டு ஆய்வுகளின் அடிப்படையாக  அமைந்ததே. அவருக்கு ராஜராஜன் மேலோ பிராமணர்கள் மேலோ கோபம் இல்லை என்பதை அவரிடம் பல முறை நேரில் பேசியவர்கள் உணர முடியும். கல்வெட்டு சொல்வதை கட்டுரையாக்கித் தருகின்றார். அவ்வளவே. முழு கட்டுரையும் வாசித்து முடிக்கும் போது தேவாரப்பாடல்களுக்கு ராஜராஜன் முன்னுரிமை கொடுத்து அவற்றை பிரதானமாக்க எடுத்த முயற்சிகள் பற்றிய விளக்கத்தத் கல்வெட்டுச் சான்றுகளோடு அவர் வழங்கியிருப்பதைக் காணலாம்.  இவற்றினை ஒட்டி மாற்றுக் கருத்துக்கள் வரக்க்கூடாது என்பதல்ல நம் எண்ணம். புதிய புதிய கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன. புதிய ஆழ்ய்வுகள் தொடர்ந்து வெளிப்படுகின்றன. ஆக உங்கள் ஆய்வுக் கருத்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே நமது அவா.

அன்புடன்
சுபா

2012/5/24 Dhivakar <venkdh...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
May 26, 2012, 3:38:03 AM5/26/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/5/24 Seethaalakshmi Subramanian <seethaa...@gmail.com>
... தொடரட்டும். படுத்துக் கிடந்தவளை வரலாற்று எழுப்பிவிட்டிருக்கின்றது. நன்றி
சீதாம்மா

சீதாம்மா - கேட்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்கள் எழுத்துக்களை விரைவில் காண வெகு ஆவல்.

இந்த கட்டுரைகள் அடங்கிய நூலைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு தருகின்றேன்.  
நூலின் பெயர் சோழர்காலம்.

இதில் 11 கட்டுரைகள் உள்ளன. பல்வேறு கல்வெட்டுக்கள் செப்பேடுகள், அகழ்வாய்வுக் குறிப்புக்களின் அடிப்படையில் இந்த 11 கட்டுரைகளையும் டாக்டர்.பத்மாவதி எழுதியிருக்கின்றார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்திய செய்திகள் கல்வெட்டுக்கள் பல இக்கட்டுரைகளில் குறிப்பிடப்படுகின்றன. சோழர் கிரந்தம் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா,  இந்திர விழா, மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கூறும் சதுக்க பூதம் என பல விஷயங்களை ஆய்வு செய்யும் கட்டுரைகள் உள்ளன.

அன்புடன்
சுபா

DEV RAJ

unread,
May 26, 2012, 4:06:10 AM5/26/12
to மின்தமிழ்
> கர்நாடகத்திலும் சோமநாதபுரக் கோயில் உண்டா?

http://www.youtube.com/watch?v=Onml8zPbCFo

On May 24, 2:29 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:

> இந்தக் கட்டுரைப்பகுதியின் கீழ்க்கண்ட தகவலில் எனக்குச் சந்தேகம்.
>  கர்நாடகத்திலும் சோமநாதபுரக் கோயில் உண்டா? எனக்குத் தெரிந்தது
> குஜராத்திலுள்ள சோமநாதம் தான். தெரிந்தவர்கள் விளக்கவும்.
>

> //*கர்நாடக நாட்டிலுள்ள சோமநாதபுரக் கோயில் காளாமுக பாசுபதர்களின் மையம் *என்பது

> யாவரும் அறிந்த செய்தியாகும். //
>
>
>
>
>
>
>
> > மின் தமிழ் நண்பர்களுக்கு,
>

> >> டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதிய *சோழர் காலத்துச் சமயம் *பற்றிய கட்டுரைத்

> >> தொடரை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டுரையின் ஒரு
> >> பகுதி இப்போது இடப் படும். கொஞ்சம் கொஞ்சமாய் மற்றப் பகுதிகளும் இடம் பெறும்.
> >> கட்டுரைகள் மரபு விக்கியிலும் சேர்க்கப் படுகிறது. இங்கே படிக்க இயலாதவர்கள்
> >> அங்கே படித்து இன்புறலாம். நன்றி.
>

> >> *
> >> *

Dhivakar

unread,
May 26, 2012, 5:08:14 AM5/26/12
to mint...@googlegroups.com
மிகவும் இதமாகவும் பதமாகவும் வந்துள்ளது சுபாவின் பதில். 

நன்றி! 

திருமதி பத்மாவதி அம்மையாரின் பணிகளை நாடு போற்றுக!! 

தேவாரம் என்று திருமுறைக்கு எப்படிப் பெயர் வந்தது என்பது பற்றி ஒரு கட்டுரை ஒன்று வடித்துக் கொண்டிருக்கிறேன். நான் சொந்தமாக கற்பனை செய்தெல்லாம் கட்டுரைகள் வடிப்பதில்லை. கட்டுரையில் அந்தக் கல்வெட்டின் எண் போடாமல் அதன் செய்திகள் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும். இதுவரை நான் படித்த வரையில் தேவாரம் எனும் சொல்வழக்கு ராஜராஜன் காலத்தில் இருந்தாலும் திருமதி பத்மாவதி அவர்கள் சொல்வது போல ராஜராஜன் திருமுறைக்கு தேவாரம் என்று பெயர் வைக்கவில்லை. அப்போது திருமுறைப்பாடல்களின் பெயர் 'திருப்பதியம்' தான்.  அவனுக்குப் பிறகு 250 ஆண்டுகள் கழித்து தேவாரம் எனும் பெயர் திருமுறைக்கு வைக்கப்பட்டு அது பாடல் வடிவத்திலும் கல்வெட்டாக எடுக்கப்பட்டது. இப்பாடலும் எம் கட்டுரையில் இடம் பெறும். 

நன்றி 
வணக்கம் 
திவாகர்

2012/5/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
May 26, 2012, 7:57:58 AM5/26/12
to mint...@googlegroups.com
2012/5/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

> அவருக்கு ராஜராஜன் மேலோ பிராமணர்கள் மேலோ கோபம் இல்லை
> என்பதை அவரிடம் பல முறை நேரில் பேசியவர்கள் உணர முடியும்.

டாக்டர். பத்மாவதிக்கும் சோழர்களுக்கும் பூர்வ ஜென்மத்தொடர்பு அல்லவோ!
ஒருமுறை முனைவர் நாகசாமியோடு களப்பணி செய்துவிட்டு புரியாத புதிர்
ஒன்றைச் சிந்தித்த வண்ணமே தூங்கப்போக ராஜேந்திர சோழன் கனவில் வந்து
விளக்கியதாக ஒரு கதை சொல்லியிருக்கிறார்!!

மார்க்சீய சிந்தனைவாதியான அவர் வாழ்வின் பெரும் பகுதி கோயில்களில்தானே
செலவழிந்து இருக்கிறது. நண்பர் ஸ்ரீதரன் ராகவன், அவர் துணைவியார்,
என்னுடன் பலமணி நேரம் திருமழிசையில் திருமஞ்சனம் கண்டு களிக்க. ஆண்டாள்
என்கிற அவரது தோழி இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, ‘என்னடீ? இப்படி பக்தையாக
மாறிவிட்டாய்?’ என்று கேலி செய்ய!! பின்னரும் இரவுப் பொழுதான பின்னும்
எங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் வந்து எம்பெருமானார் சேவை சேய்வித்து விட்டு
பின்னரே வீடு சென்றார்.

அவர் த.ம.அ தோழமையில் தோற்றம் முதல் இன்று வரை இருப்பது எம் பாக்கியம்!

நா.கண்ணன்

DEV RAJ

unread,
May 26, 2012, 8:42:47 AM5/26/12
to மின்தமிழ்
On May 24, 2:27 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
>>> அப்பர் தம் தேவாரப் பதிகமொன்றில்,
"பாசுபதம் பார்த்தர்க்கு அளித்தார் போலும்"*14
எனப் பாடியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது <<<

இங்கு சொல்லப்படும் ’பாசுபதம்’
பாசுபத அஸ்த்ரத்தைக் குறிப்பது.
பாசுபத மதப் பிரிவிற்கும் இதற்கும்
தொடர்பில்லை. கட்டுரைக்குப்
பொருந்தாத மேற்கோள்.

சிவபெருமானது 25 மூர்த்தங்களுள்
‘கிராத மூர்த்தம்’ ஒன்று. வேட
வடிவுகொண்டு பார்த்தனுக்கு
அருளியதைக் குறிப்பது

தேவ்

> 2012/5/23 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>> மின் தமிழ் நண்பர்களுக்கு,
>
> > டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதிய *சோழர் காலத்துச் சமயம் *பற்றிய கட்டுரைத்

> > தொடரை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டுரையின் ஒரு
> > பகுதி இப்போது இடப் படும். கொஞ்சம் கொஞ்சமாய் மற்றப் பகுதிகளும் இடம் பெறும்.
> > கட்டுரைகள் மரபு விக்கியிலும் சேர்க்கப் படுகிறது. இங்கே படிக்க இயலாதவர்கள்
> > அங்கே படித்து இன்புறலாம். நன்றி.
>

> > *
> > *

Geetha Sambasivam

unread,
May 26, 2012, 8:59:42 AM5/26/12
to mint...@googlegroups.com
இங்கு சொல்லப்படும் ’பாசுபதம்’
பாசுபத அஸ்த்ரத்தைக் குறிப்பது.//

தட்டச்சுகையிலேயே கவனித்தேன்.  எனினும் திருமதி பத்மா தான் இதற்கு விடையளிக்க வேண்டும். 

2012/5/26 DEV RAJ <rde...@gmail.com>
On May 24, 2:27 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
>>> அப்பர் தம் தேவாரப் பதிகமொன்றில்,
"பாசுபதம் பார்த்தர்க்கு அளித்தார் போலும்"*14
எனப் பாடியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது <<<

இங்கு சொல்லப்படும் ’பாசுபதம்’
பாசுபத அஸ்த்ரத்தைக் குறிப்பது.
பாசுபத மதப் பிரிவிற்கும் இதற்கும்
தொடர்பில்லை. கட்டுரைக்குப்
பொருந்தாத மேற்கோள்.

சிவபெருமானது 25 மூர்த்தங்களுள்
‘கிராத மூர்த்தம்’ ஒன்று. வேட
வடிவுகொண்டு பார்த்தனுக்கு
அருளியதைக் குறிப்பது

தேவ்

360.gif

DEV RAJ

unread,
May 26, 2012, 9:24:36 AM5/26/12
to மின்தமிழ்
On May 24, 5:44 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
>>> Late in the 12th century A.D there was a philosopher called Ramanuja born
near kanchipuram, who commited heresy by openly criticizing the four
fold
caste system prevalent from ancient times.<<<
> http://en.articlesgratuits.com/the-last-years-of-cholas-the-decline-a...<<

It is evident the author of this article has not read
Sri RAmAnuja’s bhAshya on Bhavad GItA.
There was no adverse criticism about
the four fold caste system anywhere
In his gloss on GItA

Dev

On May 24, 5:44 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> பிற்காலச் சோழர் காலத்தில் சமயங்கள்
நின்று நிலவியதைப் பற்றிய ஒரு தகவல் கீழே:
>
> http://en.articlesgratuits.com/the-last-years-of-cholas-the-decline-a...
> 2012/5/24 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > நன்றி கண்ணன்.
>
> > 2012/5/24 N. Kannan <navannak...@gmail.com>
>
> >> கீதா!
>
> >> விக்கியில் கட்டுரைக் கருத்துக்கு ஆசிரியரே பொறுப்பு எனும் பொது வாசகம்
> >> போதும். அப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆரம்பிக்கும் போது சொன்னது.
> >> (ஆசிரியர் தரும் தலைப்பை மாற்றுவது சரியில்லை!)
>
> >> நா.கண்ணன்
>
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

DEV RAJ

unread,
May 27, 2012, 12:47:34 PM5/27/12
to மின்தமிழ்
On May 23, 2:48 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
>>> சமணர்களை அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர
உருவங்களைத் தானே வருணிக்க முடியும் <<<

டாக்டர் பத்மாவதி அவர்களின் கவனத்துக்கு:

அழிக்கும் கடவுளைச் சமய குரவர் போற்றிய விதம் -

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே.

பொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிக ளோடுந் நாள்விழ மல்கு குற்றாலம்
கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்
அடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

அயர்வுளோம் என்றுநீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே.

வானமார் திங்களும் நீரும் மருவிய வார்சடையானைத்
தேனமர் கொன்றையினானைத் தேவர் தொழப்படுவானைக்
கானமரும் பிணை புல்கிக் கலைபயிலுங் கடம்பூரில்
தானமர் கொள்கையினானைத் தாள்தொழ வீடெளிதாமே.

>>> அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான்
சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன<<<

முற்றிலும் ஆதாரமற்ற கருத்து;
ஆலய அமைப்பும், இறைத் திருமேனிகள் அமைப்பும்
காமிகம், மகுடம் போன்ற ஆகமங்களின் அடிப்படையில்;
அப்பரடிகள் காலத்திற்கு மிகவும் பிற்பட்ட தென்காசி ஆலயத்தில்
ஒரே ஒரு பைரவ மூர்த்தம் மட்டுமே அர்தஜாம வழிபாட்டில்.
பல ஆலயங்களிலும் இப்படியே.

ஈரோடு ஆர்த்ர கபாலீசுவரர் ஆலயத்திலும்
கோர வடிவங்கள் கிடையா.

கோர வடிவங்கள் அமைந்துள்ள ஆலயங்களைப்
பட்டியலிட்டுச் சுட்டுவது இவர்தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும்

தேவ்

On May 23, 2:48 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> மின் தமிழ் நண்பர்களுக்கு,
>
> டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதிய *சோழர் காலத்துச் சமயம் *பற்றிய கட்டுரைத்
> தொடரை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டுரையின் ஒரு
> பகுதி இப்போது இடப் படும். கொஞ்சம் கொஞ்சமாய் மற்றப் பகுதிகளும் இடம் பெறும்.
> கட்டுரைகள் மரபு விக்கியிலும் சேர்க்கப் படுகிறது. இங்கே படிக்க இயலாதவர்கள்
> அங்கே படித்து இன்புறலாம். நன்றி.
>

> *சோழர் காலச் சமயம் *
> *
> *
> *எழுத்து:  டாக்டர் பத்மா*

>
> கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவின் ஒரு பகுதியை ஆண்டவன் பல்லவ மன்னன்
> திரிலோசன பல்லவன். இவன் சமணர்களை அழித்தான். வேதமல்லாச் சடங்குகளை

> நீக்கிவிட்டு வேதச் சடங்குகளையே கடைப்பிடித்தான். கோயில்களில் வழிபாடு செய்து

> கொண்டிருந்த பிராமணர் அல்லாதவரை நீக்கிவிட்டு வட நாட்டிலிருந்து அழைத்து வந்த

> பிராமணர்களை நியமித்தான்.*1 இந்த வடநாட்டு பிராமணர் என்பவர்கள் காளாமுக,
> பாசுபத, காபாலிக சைவத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில்

> ஆந்திராவில் பரவிய இம்மதங்கள் அங்கு இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன.
> கி.பி. 5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அச்சைவம் தமிழகத்தில் நுழைந்தது. கி.பி.
> 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அப்பர் பாடல்களில் நாகப்பட்டினம்
> கோயிலை நாகைக் காரோகணம் என்று பாடுகிறார்.*2 இவரது காலம் மகேந்திர வர்மனின்
> காலம். அதாவது கி.பி. 600--630 ஆகும். திரிலோசன பல்லவன் கல்வெட்டுகள்
> ஆந்திராவில் கி.பி. 470 முதல் 490 வரை கிடைத்துள்ளன*3 எனவே. திரிலோசன பல்லவன்

> காலத்திற்குப் பின்னரும் மகேந்திர வர்மன் காலத்திற்கு முன்னரும் சற்றேறக்

> குறைய கி.பி. 500 முதல் 600-க்குள் வடநாட்டு சைவம் தமிழகத்திற்குள்
> நுழைந்திருக்க வேண்டும்.
>

> அப்பர் நாகப்பட்டினத்தை நாகைக் காரோகணம் என்றும் குடந்தைக் காரோகணம் என்றும்
> கச்சிக் காரோகணம் என்றும் பாடியுள்ளார். வட நாட்டில் காரோகணம் என்ற இடத்தில்

> பிறந்த லகுளீசரின் சித்தாந்தத்தைப் பின்பற்றும் மதம் பாசுபதம். இந்த லகுளீசர்
> பிறந்த இடமான காரோகணம் ஒரு தலையாய பாசுபதர்களின் மையமாகத் திகழ்ந்தது. எனவே
> மேற்கூறிய தமிழ்நாட்டுக் காரோகணங்கள் லகுளீச சித்தாந்தத்தைப் பின்பற்றும்

> பாசுபத சைவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அப்பர் தம் திருவாரூர்ப்

> பதிகத்தில் பாசுபத, காளாமுக, காபாலிகர் உலவும் திருவாரூர் வீதியைப்
> பாடுகிறார். அவரது சமகால மகேந்திரவர்மனும் காபாலிகர்களையும் பெளத்தர்களையும்
> தமது மத்த விலாச பிரகடனம் என்ற நூலில் கேலி செய்து எழுதியுள்ளார்.
>
> சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்து சமண மதத்தைத் தழுவிப் பின்னர் தீவிர சைவ
> சமயத்தவராக மாறிய அப்பர் தாம் தழுவியிருந்த சமண மதத்தைக் கடுமையாகத்
> தாக்குகின்றார்.*4 சம்பந்தரும் அவ்வாறே தாக்கியிருக்கின்றார். ஒரு
> மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுகின்ற போது தீவிரமாவது மனித இயல்பு.
> அதுபோல வயதில் மூத்த அப்பர் மிகவும் தீவிர பக்தராக மாறுகிறார். சமண பெளத்த

> பாழிகள் இடிக்கப் பட்டிருக்கின்றன. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்

> பட்டிருக்கின்றன. *5 அப்பரின் பாடல்கள் காபாலிக சைவர்களின் சிவ உருவ
> வழிபாடுகளும், சிவன் கபாலத்தை கையிலேந்தியவனாக, கால காலனாக, பைரவனாக,
> பிக்‌ஷாடனராக, மேனியெங்கும் திருநீறு பூசியவனாகக் கூறுவதிலிருந்து தீவிர

> சைவர்களான காபாலிகர்களின் சைவ சமயத் தாக்கம் அப்பரிடம் அதிகமிருந்திருக்கிறது.

> மனித உயிர்பலி செய்யும் காபாலிகத்தைப் பின் பற்றியதால் தான் மதுரை,
> திருவோத்தூர் போன்ற இடங்களில் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்லப் பட்டனரோ என எண்ண
> வேண்டியுள்ளது. *6
>
> இவ்வாறு நாயன்மார், ஆழ்வார்கள் காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தால் சமண,

> பெளத்தர்களின் ஆதிக்கம் பொருளாதாரத்திலும், கல்வி, மருத்துவ, சமூக சேவைகளிலும்

> கட்டாயமாகப் பறிக்கப் பட்டது. அதற்கு மாற்றாக சைவ வைணவ மதங்கள் மக்கள்
> மத்தியில் முன் வைக்கப் பட்டு அவ்விடங்களை நிரப்ப முயற்சி செய்தன. முடிவில்
> வெற்றியும் பெற்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு சைவ

> சமய மறுமலர்ச்சியில் வேளாளரான அப்பரும் பிராமணரான சம்பந்தரும்,பங்கு

> பெற்றிருந்தனர். இவர்களுக்குப் பின்னர் வந்த பிராமணராகிய சுந்தரரும், எனவே.
> வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய
> ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம்
> நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின்
> பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம்.
> சமணர்களின் செல்வாக்கும் செல்வமும் வணிகர்களின் வியாபார ரீதியில்

> அமைந்தது.வணிகர்கள் ஆதரித்த மதம் சமண மதம். சமண முனிவர்கள் நல்லவர்களாக

> இருந்தும் சமூகத் தொண்டுகள் பல செய்தும் நீர்ப் பாசனத்திற்கு வேண்டிய குளம்,
> தூம்பு, போன்றவை செய்து கொடுத்தும் நல்ல மனத்தவர்களாக இருந்திருந்தும்,
> விவசாயத்தை முன்னிலைப் படுத்தித் தங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின்
> பொருளாதாரத்தையும் வளர்த்தார்களில்லை. தமிழ்நாடோ ஒரு சிறந்த முழு விவசாய நாடு.
> விவசாய வளர்ச்சியில் தான் உழுகுடி மக்களின், பிற தொழிலாளிகளின் வாழ்வும்
> உயர்வும் அடங்கியிருந்தது. எனவே சமண மதத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து--விவசாய
> நாடாக நிலவுடமைச் சமுதாயமாக அச்சமுதாயத்தின் கருவூலமாகக் கோவில்களை அமைத்து

> மக்களின் அன்றாட வாழ்வில் கோயிலோடு அதாவது சைவ மதத்தோடு தொடர்பு

> படுத்தியதாகவும் அமைக்கப் பட்ட அரசமைப்பே பிற்காலச் சோழ வரலாற்றின்
> சாராம்சமாகும்.விவசாயத்தைப் பெருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன
> என்பதை நோக்கினால் மிகவும் பிரமிப்பாக இருக்கும். நீர்ப்பாசனத்திற்கு அவர்கள்
> செய்த செயல்களைக் கல்வெட்டுக்களில் படிக்கும்போது பெரு வியப்பை ஏற்படுத்தும்.
>
> பிற்காலச் சோழராட்சியில், கி.பி. 9--ஆம் நூற்றாண்டில் அந்தணர்களும்,
> வேளாளர்களும் மிக உயர்ந்த பதவியை வகித்தனர் எனச் சொல்லித் தெரிய
> வேண்டியதில்லை. கி.பி. 6--ஆம் நூற்றாண்டில் அவர்கள் நடத்திய போராட்டத்தின்
> பலனை 9-ஆம் நூற்றாண்டில் மிக நன்றாகவே அனுபவித்தார்கள்.அமைச்சர்களாகவும்
> பிரமதேய சதுர்வேதி மங்கலங்களின் சபை நிர்வாகிகளாகவும் படைத் தளபதிகளாகவும்
> கோயில் அதிகாரிகளாகவும் நீதி வழங்குபவர்களாகவும் முக்கிய பதவிகளில்
> அமர்ந்திருந்த அவர்கள் மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர்.அவர்கள் சைவக்
> கோயில்களுக்குத் தங்கள் செல்வத்தின் காரணமாக ஏராளமான பொன்னையும், பொருளையும்
> வாரி வழங்கினர். செப்புத் திருமேனிகளை எழுந்தருளிவித்தனர். ஏன் கோயில் பலவும்

> கட்டியிருக்கின்றனர். நல்ல வளமிக்க ஊர்கள் பிரமதாயமாகவும் சதுர்வேதி

> மங்கலங்களாகவும் அந்தணர்களுக்கு அளிக்கப் பட்டன.
>
> இந்த இரு குலத்தவரும் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தாலும் கல்வி கேள்விகளிலும்
> நாட்டின் கருவூலங்களாக ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் கோயில்களின்
> கருவூலத்திலும், நிர்வாக அமைப்புக்களிலும் முதன்மை பெற்று விளங்கியவர்கள்
> அந்தணர்கள்.இறையிலியாக பிரமதேய சதுர்வேதி மங்கல நிலங்கள் வழங்கப் பட்டது
> அந்தணர்களுக்குத் தான். வளமிக்க அவ்வூர்களுக்கு சபை அதிகாரிகள் அல்லது

> அங்கத்தினர்கள் அவர்கள் தாம். இந்த அளவுக்கு வேளாளர்கள் செல்வாக்குப்

> பெற்றிருக்க வில்லை. அரசர்களிடம் அமைச்சர்களாகவும், மிகவும் குறைந்த அளவில்
> ஆங்காங்கே கி.பி. 11--ஆம் நூற்றாண்டின் சித்ரமேழி பெரிய நாடு என்னும்

> அமைப்பிலும் அவர்கள் அதிகாரிகளாக இருந்தார்களே தவிர, ஊர் நிர்வாகத்தில்

> அந்தணர்களைப்போல அதிகமான செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதை அறிய

> முடிகிறது. முதலாம் இராஜ இராஜ சோழன் காலத்தில் அமணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணன்

> ராமன் குடும்பத்தார் எந்த அளவுக்கு பரம்பரை பரம்பரையாக சோழர்களுக்கு

> அதிகாரிகளாக இருந்தார்கள் என்பதை திரு ஒய். சுப்பராயலு அவர்கள் எழுதிய

> கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். *7
>
> அந்தணர்களின் இந்த வளர்ச்சியும், செல்வாக்கும் நிலவுடமைச் சமுதாய வளர்ச்சியின்
> உச்சகட்டத்தை எய்திய முதலாம் இராஜராஜனின் செல்வாக்கிற்கு ஏற்றாற்போல அவன்
> காலத்தில் உயர்ந்திருந்தது. அந்தண சமூகத்தினரின் இந்த வளர்ச்சி ராஜராஜ சோழனின்

> போக்கையே திசை திருப்புமளவு காணப்பட்டது. ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளை ஊன்றிப்
> பார்க்கின்றபோது அவன் அந்தணர்களின் செல்வாக்கினைக் குறைக்க அவர்களே அறியாத

> வகையில் புத்திசாலித் தனமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றான்.
> தந்தை சுந்தர சோழன் காலத்தில் பிரம்மாதிராயர்களாகிய அந்தண உயர் அதிகாரிகளால்
> தமையன் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட செய்தி அந்தணர்களின் ஆதிக்கத்தின் உச்ச
> கட்டமாக இருந்திருக்க வேண்டும். இத்தகைய காலகட்டத்தில் தான் ராஜராஜ சோழனின்

> சிந்தை வேறுவிதமாகச் செயல் பட்டது.
>
> இச்சமயத்தில்--சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர்,

> சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க

> அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. இவர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன்

> எடுத்த கோயில்களிலோ பாண்டிய நாட்டிலோ அகோர உருவங்கள் இல்லை. இக்கால
> கட்டங்களில் எடுத்த கோயில்களே நமக்குக் கிடக்கும் காலத்தால் முந்திய கோயிலும்

> உருவங்களுமாகும். அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான்

> சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை

> அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர
> உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.

DEV RAJ

unread,
May 29, 2012, 3:21:22 AM5/29/12
to மின்தமிழ்

>>>> சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது.
இவர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன் எடுத்த கோயில்களிலோ
பாண்டிய நாட்டிலோ அகோர உருவங்கள் இல்லை. இக்கால
கட்டங்களில் எடுத்த கோயில்களே நமக்குக் கிடக்கும் காலத்தால் முந்திய
கோயிலும்
உருவங்களுமாகும். அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில்
தான்
சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம்
பெறுகின்றன.சமணர்களை
அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர
உருவங்களைத் தானே வருணிக்க முடியும். <<<<<

அப்பர் பெருமான் காட்டும் இறைமையில்
கொடுமை இல்லை -

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே

தமிழகச் சைவம் இறைமை கருணையே வடிவானது
என்று கூறுகிறது; செருக்கை அழிப்பதும், தீமையைக்
களை கட்டுவதும் இறைவனின் பொறுப்பு. இறைவன்
மேற்கொள்ளும் ஐந்தொழில்களும் உயிர்களை
உய்விப்பதில் நோக்கம் கொண்டவை.
அவற்றையே அடியார்கள் பாடியுள்ளனர்.
மெய்யடியவர்கள் பெறும் பேறு ’அறக்கருணை ’
என்றும், தீயோர் பெறும் தண்டனை ’மறக்கருணை ’
என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டிலும் சீவர்கள்
உய்வு பெறுவதே நோக்கம்.

செருக்கடைந்த பிரமனும், தக்ஷ ப்ரஜாபதியும்,
இராவணனும், தாருக வனத்தின் முனிவர்களும்
இறைவனிடம் பாடம் பெற்றனர்.

காமனது ஆற்றலும், காலனது வலிமையும்
இறைமையின்முன் செயலொழிந்தன.

வீரட்டத் தலங்கள் இறைவன் செய்த மறக்கருணையை
நினைவுறுத்துவன.

ஆலவாய், அன்பில்,குடமூக்கு, திருவண்ணாமலை,கருகாவூர், சிராப்பள்ளி,
நல்லம்,
பெண்ணாகடம், மறைக்காடு, திருப்பருப்பதம், கோகர்ணம், இராமேசுவரம்,
பாதிரிப்புலியூர் போன்ற 52 தலங்களை அப்பரும், சம்பந்தரும் சேர்ந்து
பாடியுள்ளனர்.
முனைவர் பத்மாவதியின் கருத்துப்படி இந்த ஆலயங்களில் சிவபெருமானின் கோர
வடிவங்கள்
இடம் பெற வேண்டும்; ஏனெனில் இவற்றில் பல சமய குரவர் காலத்திற்குப்பின்
விரிவாக்கம் பெற்றவை. தம் கருத்தை உறுதிப்படுத்த இதைச் செய்ய வேண்டிய
கடமை
அவருக்கிருப்பதால் இந்த ஆலயங்களில் கோர வடிவங்கள் , கோரமான வழிபாடுகள்
உள்ளன என்பதை டாக்டர் பத்மாவதி அவர்கள் நிறுவ வேண்டும், மிக முக்கியமாக
சிவ ராஜதானியான தில்லை ஆலயத்தில் .

(திருமிகு கீதா சாம்பசிவம் அவர்கள் தில்லை ஆலயத்தைப் பற்றி
நன்கு அறிவார்; அவரே விளக்கம் கூறலாம்)

நெடிய வரலாறு கொண்ட தாமிர சபையில் (நெல்லை)
கோர வடிவங்களை வழிபடுகின்றனரா ? (சமய குரவர்
காலத்துக்குப் பின்னும் விரிவாக்கம் பெற்ற மிக முக்கியமான
பாண்டிநாட்டுத் தலம்)

சமய குரவர்களைப் பெரிதும் போற்றிய தெய்வச் சேக்கிழார் சமைத்த
குன்றத்தூர் சிவாலயத்தின் கண்ணும் அரனாரின் கோர வடிவங்கள்
இருக்க வேண்டும், இல்லையா ?

பைரவ சந்நிதிகள் (க்ஷேத்ர பாலர்) ஆகமம் வற்புறுத்துவதால் ஏற்பட்டவை.
அதைச் சேர்க்க இடமில்லை.

அன்பு செய்த எறும்புக்கும், யானைக்கும், சிலந்திக்கும்,
நாரைக்கும் உய்வு கிடைத்ததாகச் சிவநெறி சொல்கிறது;
சாக்கிய நாயனாரையும் சைவம் ஏற்றது.
எல்லை கடந்து அப்பாலும் அடி சார்ந்தாரையும்
ஒதுக்காமல் இறை வடிவாகப் போற்றுகிறது.

காபாலிகம், காளாமுகம், பாசுபதம் என்றெல்லாம்
சொல்லி அம்மையார் அச்சுறுத்துவது மிகவும்
புதுமையாக உள்ளது

Geetha Sambasivam

unread,
May 29, 2012, 3:25:35 AM5/29/12
to mint...@googlegroups.com
திருமிகு  கீதா சாம்பசிவம் அவர்கள் தில்லை ஆலயத்தைப் பற்றி
நன்கு  அறிவார்; அவரே விளக்கம் கூறலாம்) //

நேரிலே பார்த்தப்போவே இது குறித்துப் பேசினோம். அவங்க என்னோட கருத்துக்களை ஒத்துக்கலை.  அவங்க கட்டுரையின் கருத்துகளோட எனக்கும் மாறுபட்ட கருத்துக்களே உள்ளன.  அவங்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்கலாம்.  கணினிப் பயிற்சி போதலைனு வருத்தப்பட்டாங்க.  அதனாலும் பதில் கொடுக்க முடியலைனு நினைக்கிறேன்.  

அதிலும் வேதகாலச் சமயம் முழுக்க முழுக்க  தெளிவான கருத்து இல்லை.(என்னைப் பொறுத்தவரை) தவறான புரிதல் நிறைய இருக்கு.  அவங்க உசாத்துணைக்கு எடுத்துக்கொண்டிருக்கும் நூல்கள் நான் படித்ததில்லை என்பதால் எதுவும் கூற முடியவில்லை. அவை எல்லாம் படிக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமானே தெரியலை. :(((

2012/5/29 DEV RAJ <rde...@gmail.com>

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
360.gif

N. Kannan

unread,
May 29, 2012, 4:17:29 AM5/29/12
to mint...@googlegroups.com
அன்பின் கீதா:

மோகன ரங்கன் அவர்களுடன் பேசிய போதும் அவரது வேதாந்த் புரிதலை
மறுதலித்தார். அவர்கள் மார்க்சீய சிந்தனையில் குமுகாய வளர்ச்சியைக்
காண்கின்றனர். ஒரு பக்தன் இறைமையைக் காண்பதும், ஒரு அறிவுஜீவி அதைக்
காண்பதற்கும் வேறுபாடுள்ளது. அன்று, ‘தன்னிலை அறியா, தொன்மிகு பெருமர’
என்பது போன்ற வசனங்களை ஒரு பக்தன் எப்படி புரிந்து கொண்டு ஆறுதல்
அடைகிறான், ஒரு அறிவாளி (பண்டிதன்) எப்படிக் குழப்பிக் கொண்டு கொதிநிலை
அடைகிறான் என்று அன்று பேசினோம். இல்லையா?

எப்படியாயினும் டாக்டர் பத்மா பழகுவதற்கு இனியவர். கேள்விகளுக்குப்
பயப்படாதவர். :-)

க.>

2012/5/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

> நேரிலே பார்த்தப்போவே இது குறித்துப் பேசினோம். அவங்க என்னோட கருத்துக்களை ஒத்துக்கலை.  அவங்க கட்டுரையின் கருத்துகளோட எனக்கும் மாறுபட்ட கருத்துக்களே உள்ளன.  அவங்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்கலாம்.  கணினிப் பயிற்சி போதலைனு வருத்தப்பட்டாங்க.  அதனாலும் பதில் கொடுக்க முடியலைனு நினைக்கிறேன்.

Geetha Sambasivam

unread,
May 29, 2012, 4:22:49 AM5/29/12
to mint...@googlegroups.com
புரிந்தது கண்ணன்.  டாக்டர் பத்மாவதியால் கணினியில் பதிலளிக்கும் அளவுக்குத் தேர்ச்சி இல்லை என்பதை என்னிடம் நேரிலேயே சொன்னார்கள்.  ஆகவே அவர்கள் பதில் வரத் தாமதம் ஆகலாம்.  மெதுவாக வரட்டும்.  அவர்கள் பார்க்கும் கோணத்தைச் சொல்கின்றார்கள். என்னளவில் அவ்வளவே!  என் கோணம் வேறு! 

2012/5/29 N. Kannan <navan...@gmail.com>
அன்பின் கீதா:

மோகன ரங்கன் அவர்களுடன் பேசிய போதும் அவரது வேதாந்த் புரிதலை
மறுதலித்தார். அவர்கள் மார்க்சீய சிந்தனையில் குமுகாய வளர்ச்சியைக்
காண்கின்றனர். ஒரு பக்தன் இறைமையைக் காண்பதும், ஒரு அறிவுஜீவி அதைக்
காண்பதற்கும் வேறுபாடுள்ளது. அன்று, ‘தன்னிலை அறியா, தொன்மிகு பெருமர’
என்பது போன்ற வசனங்களை ஒரு பக்தன் எப்படி புரிந்து கொண்டு ஆறுதல்
அடைகிறான், ஒரு அறிவாளி (பண்டிதன்) எப்படிக் குழப்பிக் கொண்டு கொதிநிலை
அடைகிறான் என்று அன்று பேசினோம். இல்லையா?

எப்படியாயினும் டாக்டர் பத்மா பழகுவதற்கு இனியவர். கேள்விகளுக்குப்
பயப்படாதவர். :-)

க.>

360.gif

DEV RAJ

unread,
May 29, 2012, 6:16:55 AM5/29/12
to மின்தமிழ்
>>> ஒரு பக்தன் இறைமையைக் காண்பதும், ஒரு அறிவுஜீவி அதைக்
காண்பதற்கும் வேறுபாடுள்ளது.<<<

வரலாற்று நிகழ்வு இருவருக்கும் ஒன்றுதான்;
அறிவு ஜீவி என்றாலும் ஒரு முடிவுக்கு வர
வேண்டுமென்றால் ஆதாரம் காட்ட வேண்டிய பொறுப்பு
உண்டு. வெற்று ஊகம் உண்மையாகாது.

அகோர - இதற்குரிய பொருளைத் தெரிந்துகொண்டுதான்
டாக்டர் பத்மாவதி அவர்கள் எழுதுகிறாரா ?

அகோர (aghora) - கோரமற்றது

अघोर : (H1) अ-घोर [p= 7,1] [L=1392] mfn. not terrific
http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/

”யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது..”
என்றுபாடிய அப்பரடிகளாரைக் காபாலிகத்தில் சேர்ப்பதுதான்
மிகவும் கோரமாக உள்ளது.

காபாலிக, பாசுபத சமயங்கள் தமிழகத்தில்
இருந்துள்ளன என்றாலும் அவற்றால் மக்களின்
வரவேற்பைப்பெற்று இங்கு வேரூன்ற முடியவில்லை.

ராசிபுரம், ஈரோடு பிராந்தியத்தில் அம்மதங்கள்
இருந்துள்ளன. கபாலீசுவரம், பசுபதீசுவரம்
போன்ற பெயர்கள் ஊகத்துக்கு வலிமை
சேர்ப்பன. ஆனால் சமய குரவர் காலத்தில்
நெறிப்படுத்தப்பட்டன.

அருவுருவத் திருமேனியான இலிங்க வழிபாட்டுக்கு
அடுத்ததாகத் தமிழக ஆலயங்களில் முதன்மை பெற்று
விழாக் காண்பது ஆடல் வல்லானின் மூர்த்தமே;
பிக்ஷாடநர் ஒரு நாள் உலா வருவார். குறுநகை தவழும்
இவ்விரு மூர்த்தங்களையும் கோர வடிவத்தோடு
சேர்க்க இயலாது

தேவ்

On May 29, 1:17 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அன்பின் கீதா:
>
> மோகன ரங்கன் அவர்களுடன் பேசிய போதும் அவரது வேதாந்த் புரிதலை
> மறுதலித்தார். அவர்கள் மார்க்சீய சிந்தனையில் குமுகாய வளர்ச்சியைக்
> காண்கின்றனர். ஒரு பக்தன் இறைமையைக் காண்பதும், ஒரு அறிவுஜீவி அதைக்
> காண்பதற்கும் வேறுபாடுள்ளது. அன்று, ‘தன்னிலை அறியா, தொன்மிகு பெருமர’
> என்பது போன்ற வசனங்களை ஒரு பக்தன் எப்படி புரிந்து கொண்டு ஆறுதல்
> அடைகிறான், ஒரு அறிவாளி (பண்டிதன்) எப்படிக் குழப்பிக் கொண்டு கொதிநிலை
> அடைகிறான் என்று அன்று பேசினோம். இல்லையா?
>
> எப்படியாயினும் டாக்டர் பத்மா பழகுவதற்கு இனியவர். கேள்விகளுக்குப்
> பயப்படாதவர். :-)
>
> க.>
>

> 2012/5/29 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>

Banukumar Rajendran

unread,
May 29, 2012, 7:27:30 AM5/29/12
to mint...@googlegroups.com
The Kapalikas and Kalamukhas - David N. Lorenzen

http://www.scribd.com/doc/61589580/The-Kapalikas-and-Kalamukhas-Two-Lost-Saivite-Sects-D-lorenzen-Delhi-1991

RBK

2012/5/29 DEV RAJ <rde...@gmail.com>
--

DEV RAJ

unread,
May 30, 2012, 4:59:13 AM5/30/12
to மின்தமிழ்
>>>> ....... பதில் வரத் தாமதம் ஆகலாம். மெதுவாக வரட்டும்.

அவர்கள் பார்க்கும் கோணத்தைச் சொல்கின்றார்கள் <<<<

காரைக்கால் அம்மையார் செய்த மூத்த திருப்பதிகம் :

எட்டி, இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.

நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும் நோக்கிச் சுடலை நவிழ்த் தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.

செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே.

இதை எந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும் ?

டாக்டர் . பத்மாவதி அவர்களின் கருத்துப்படி காரைக்கால் அம்மையார்
பாசுபத, லகுலீச, காளாமுக, காபாலிகப் பிரிவுகளில்
எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் ?

விடை மெதுவாகவே வரட்டும்

தேவ்

On May 29, 1:22 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> புரிந்தது கண்ணன்.  டாக்டர் பத்மாவதியால் கணினியில் பதிலளிக்கும் அளவுக்குத்
> தேர்ச்சி இல்லை என்பதை என்னிடம் நேரிலேயே சொன்னார்கள்.  ஆகவே அவர்கள் பதில்
> வரத் தாமதம் ஆகலாம்.  மெதுவாக வரட்டும்.  அவர்கள் பார்க்கும் கோணத்தைச்

> சொல்கின்றார்கள். என்னளவில் அவ்வளவே!  என் கோணம் வேறு! [?][?][?][?]
>
> 2012/5/29 N. Kannan <navannak...@gmail.com>

>
>
>
>
>
>
>
> > அன்பின் கீதா:
>
> > மோகன ரங்கன் அவர்களுடன் பேசிய போதும் அவரது வேதாந்த் புரிதலை
> > மறுதலித்தார். அவர்கள் மார்க்சீய சிந்தனையில் குமுகாய வளர்ச்சியைக்
> > காண்கின்றனர். ஒரு பக்தன் இறைமையைக் காண்பதும், ஒரு அறிவுஜீவி அதைக்
> > காண்பதற்கும் வேறுபாடுள்ளது. அன்று, ‘தன்னிலை அறியா, தொன்மிகு பெருமர’
> > என்பது போன்ற வசனங்களை ஒரு பக்தன் எப்படி புரிந்து கொண்டு ஆறுதல்
> > அடைகிறான், ஒரு அறிவாளி (பண்டிதன்) எப்படிக் குழப்பிக் கொண்டு கொதிநிலை
> > அடைகிறான் என்று அன்று பேசினோம். இல்லையா?
>
> > எப்படியாயினும் டாக்டர் பத்மா பழகுவதற்கு இனியவர். கேள்விகளுக்குப்
> > பயப்படாதவர். :-)
>
> > க.>
>
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>

>  360.gif
> < 1KViewDownload

Subashini Tremmel

unread,
May 30, 2012, 5:29:21 AM5/30/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
திரு.தேவ், திருமதி.கீதா,திரு திவாகர் 
நீங்கள் கூறியுள்ள கருத்துக்களை அடுத்த வார இறுதியில் நிச்சயமாக டாக்டர்.பத்மாவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இந்த வாரம் வேலை அலைச்சல்.. பின்னர் வார இறுதியில் த.ம.அ நிகழ்ச்சிக்காக லண்டன் பயணம் .. ஆக பதில் வர தாமதமாகும்..பொறுத்துக் கொள்க :-)

சுபா

2012/5/30 DEV RAJ <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Reply all
Reply to author
Forward
0 new messages