தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நடன காசிநாதன் அவர்கள் காலமானார் என்ற துயரச்செய்தி கிட்டியது.
தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான இவர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குனராகப் பொறுப்பேற்றவர்.
தொல்லியல் அறிஞர்; காடு, மேடு, கடல் என விரிவான தளங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். தமிழ்நாட்டில் முதன் முதலில் பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வு இவரது தலைமையின் கீழ் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். அவரை 2018ஆம் ஆண்டு அவரது இல்லத்திற்குச் சென்றிருந்த போது ஒரு காணொளி பேட்டியைச் செய்திருந்தோம்.
(
https://www.youtube.com/watch?v=FPzNopns0Y8)
தமிழ்நாட்டின் தொல்லியல் துறையின் ஆய்வுத் தளத்தில் மறக்கமுடியாத ஓர் ஆளுமை. இவரது நூல்களை நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் கல்வெட்டு பயிற்சிக்கு அடிப்படை நூலாகப் பயன்படுத்துகின்றோம்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் அஞ்சலி!
துயருடன்
முனைவர் க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
--------------------------