மாதரசன் பட்டணம், சதிரானபட்டணம், புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம் - இதெல்லாம் எங்கே இருக்கு?

53 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 26, 2018, 8:56:19 AM7/26/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, K Rajan, rajavel subramani, dorai sundaram
அன்பின் பேரா. ராஜவேலு அவர்களுக்கு

வணக்கம். மாதப்பன் என்ற பெயர் இன்றும் பல தமிழர்களுக்கு வழங்கும் பெயர்.

மதிராஜா, மாதிராஜா கூடூர் என்ற ஊர்கள் இன்னும் நெல்லூர் மாவட்டத்தில் உள்ளன.
முதிராஜா, மூதிராஜா என்பன மாறியிருக்கலாம். புல்லி > பல்லி, நுணா > நணா, ...
 மூத்தரையன்/முத்தரையன் “விருத்தராஜா” என வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என இரா. நாகசாமி
விளக்கி ஒரு கட்டுரை எழுதினார் பல ஆண்டு முன்னர்.

மூதரசர்/முத்தரசர் என்னும் பெயர்கள் தென்னிந்தியாவில் புகழ்பெற்றவை.
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நாலடியார் ஜைந முனிவர் பாடல்களைத்
தொகுத்து நூலாகச் செய்தோர். சோழருடன் மணவினை புரிந்தோர் முத்தரையர்கள்.

உள்நாட்டு சிற்றரசர்கள் முத்தரரசன்/மூதரசன்கள்  கடற்கரையில் வாழ்ந்து வரிவசூலித்தனர் - 
கடல்வாணிகத்தைக் கண்காணித்தனர் என்பதற்கு நல்ல சான்று. சுல்கம்/உல்கு
- சுங்கச் சாவடிகளின் மேலாண்மைக்காக வந்திருக்க வேண்டும்.

பாண்டியர்கள் மதுரையில் இருந்து கொற்கை, சோழர்கள் உறையூரில் இருந்து
பூம்புகார், நாகை துறைமுகங்கள், சங்க காலத்தில் வஞ்சி என்னும் தலைநகர்
கருவூரில் இருந்து முசிறி, நறவு, தொண்டி துறைமுகங்களுக்கு சென்றதுபோல,
சங்கம் மருவிய காலத்தில் கர்நாடகத்தில் இருந்து பரவிய முத்தரசர்கள்
காலப்போக்கில் சென்னை, நெல்லூர் போன்ற தூறைமுகங்களை ஆண்டுள்ளனர்
என இப்பெயர்களால் தெரிகிறது.

இன்னும் விரிவாகப் பார்க்கவேண்டும். முத்தரையர்கள் பற்றிய
தொண்டைமண்டலக் கல்வெட்டுகள் - தமிழ், வடமொழி இரண்டு மொழிகளிலும்
பார்த்தால் இன்னும் பல செய்திகள் கிடைக்கும் என நம்புகிறேன்.

2014-ல் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி ‘தி ஹிண்டு’ இதழ்க் கட்டுரை:




பழமையான நகரம் ‘மாதரசன்பட்டணம்’ எனும் சென்னை: 651 வயதைக் கடந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தகவல்

நா. கணேசன்

Posted Date : 19:16 (07/09/2017)Last updated : 19:16 (07/09/2017)

மாதரசன் பட்டணம், சதிரானபட்டணம், புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம் - இதெல்லாம் எங்கே இருக்கு?

'ல்வெட்டுகள் வரலாற்றின் ஆன்மா' என்று சொன்னால்,  மிகையல்ல. தமிழர்களின் தொன்மையான வரலாற்றுக்குச் சான்றாக இருப்பவை  கல்வெட்டுகள் தான். எங்கெல்லாம் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்தார்களோ, அங்கெல்லாம் தங்களது நிர்வாக ரீதியான செயல்பாடுகளை கல்வெட்டுகளாகவே செதுக்கி வைத்திருக்கிறார்கள். 

மாதரசன் பட்டணம் பற்றிய கல்வெட்டுகள்

இந்தியாவில் இதுவரை கிடைத்துள்ள 1,00,000 கல்வெட்டுகளில், 60,000 கல்வெட்டுகள் தமிழ் எழுத்துருக்களைக் கொண்டவை. இவற்றில் பெரும்பாலான கல்வெட்டுகள்  கோயில்கள் தான் கிடைத்திருக்கின்றன. கோயில்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் ஒரு நெருங்கிய பிணைப்பு உண்டு. காரணம், கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி வரலாற்றுக் கூடங்களாகவும்  இருந்துள்ளன.  

அரசர்கள் காலத்தில், பெரும்பாலான அரச நடவடிக்கைகள்   கோயில்களில்  கல்வெட்டுக்களாக செதுக்கி வைக்கப்பட்டன.  அந்தக் கல்வெட்டுகளே நம் தொன்மையான வரலாற்றுக்கான ஆதாரங்களாக இருக்கின்றன.  பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள், கலை, பண்பாட்டு, கலாச்சார விழுமியங்கள்  அனைத்தும் நமக்குக் கிடைத்த கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. 

தேர்தல் முறையில் உலகுக்கே முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு உத்திரமேரூர் கல்வெட்டுகளே சாட்சி. தேர்தல் எப்படி நடக்க வேண்டும், தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் யார் என்றெல்லாம் கல்வெட்டுகளில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.  தங்கள் வளங்கள் அனைத்தையும் இழந்த தமிழ்ச் சமூகத்துக்கு வரலாறுதான் இளைப்பாறுதல் தந்து கொஞ்சம் கொஞ்சமாக முன் நகர்த்திக் கொண்டிருக்கிறது. 

தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னை பற்றி பலர் தவறான கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். இந்நகரத்தின் வரலாறு ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகே உருவாகிறது என்று சிலர் எழுதுகிறார்கள். ஆனால், சமீபத்தில் கிடைத்த கல்வெட்டுத் தகவல்படி இந்நகரம் 16 லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று தெரியவந்துள்ளது.

பெண்ணேஸ்வரர் கோயில்

சென்னையின் பழமை பற்றி ஆய்வு செய்துவரும்  தொல்லியல் ஆய்வாளரும், தஞ்சாவூர்  தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜவேல், " தற்போதைய தலைமைச் செயலகம் உள்ள பகுதி மட்டுமே 1639 ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில்பேராசிரியர் ராஜவேலுஉருவாக்கப்பட்டிருக்கிறது. இது சென்னப்ப நாயக்கரால் ஆங்கிலேயருக்கு வழங்கப்பட்ட பகுதி என்பதால் இந்தப் பெயரால் அழைக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக பல பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று மாதரசன் பட்டணம்.." என்கிறார் . அதற்கு சான்றாக ஒரு கல்வெட்டை முன்வைக்கிறார் அவர். 

"கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே, பெண்ணையாற்று மடம் என்ற ஊர் உள்ளது. இங்கே பெண்ணேஸ்வரர் ஆலயம் ஒன்றும்  இருக்கிறது.  ஆற்றுக்கும், ஆலயத்துக்கும் நடுப்பகுதியில் இருக்கும் குன்றின் அடிவாரத்தில் சிலக் கல்வெட்டுக்கள்  கிடைத்துள்ளன. அவை,  1367 ஜூலை 21 - ம் தேதி விஜயநகர மன்னன் கம்பண்ண உடையாரால் உருவாக்கப்பட்டவை.  அதில் 'மாதரசன் பட்டண'த்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன.

சென்னை, ஒரு காலத்தில் நெய்தலும் மருதமும் கலந்த நிலப்பகுதியாக  இருந்துள்ளது. மாதரசன் பட்டணம், சதிரானபட்டணம் , புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம், கோவளம் மற்றும் பல  பெயர்களிலும் அழைக்கப்பட்டிருக்கிறது. 

கல்வெட்டு எழுத்துக்கள்

இன்றைய சென்னைத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள ராயபுரம் பகுதிதான் மாதரசன் பட்டணம். இது மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக இருந்துள்ளது.  மாதரசன் பட்டணம்தான் நாளடைவில் மதராசப்பட்டணம் என்றும் பிறகு 'மெட்ராஸ்' என்றும் ஆனது .  இது, போர்ச்சுக்கீசிய மன்னரின் பெயர் என்றும், அரேபியக் கல்விச்சாலைகள் இருந்த பகுதி என்றும், போர்ச்சுக்கீசிய மாலுமியின் பெயர் என்றும் பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. இவையனைத்தும் உண்மை அல்ல. இது ஓர் அரசனின் பெயர்.

ராயபுரம் பகுதியைத் தலைநகராகக் கொண்ட பல பாக்கங்கள் இருந்துள்ளன.  மதராசப்பட்டணத்தைச் சுற்றி பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்கள் இருந்திருக்கின்றன. திருவல்லிக்கேணி,  திருவான்மியூர், திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, வளசரவாக்கம் , வேளச்சேரி, தரமணி, கோடம்பாகம், புரசைவாக்கம், எழுமூர், அயன்புரம் போன்ற  பெயர்களே கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

நீர் நிலைகள் ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பாக்கம் என்றும், ராணுவத் தளவாடங்கள் இருந்த பகுதி பாடி என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

பெண்ணையாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டுக்கு வந்த கடற்பயணி தாலமி, மயிலாப்பூர்  துறைமுகத்தைப் பற்றித் தனது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள ஊர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உள்ளது. ஆனால், நாம் திருவல்லிக்கேணியை 'ட்ரிப்பிளிகேன்' என்றும், எழும்பூரை 'எக்மோர்' என்றும் அழைத்து வரலாற்றை அழித்து வருகிறோம். வரலாற்றைக் காக்காவிட்டாலும் அழிக்கும் வேலையையாவது செய்யாமலிருப்பது நல்லது" 

ஆதங்கம் தொனிக்க சொல்கிறார்  ராஜவேல்! 


N. Ganesan

unread,
Jul 28, 2018, 10:31:30 AM7/28/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, K Rajan, rajavel subramani, Ramachandran Nagaswamy, Subbarayalu Yellava, Indo_YS, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, sirpi balasubramaniam, Mohan Nagaswamy, Uma Suresh
தினமணி 26/10/1988 கட்டுரை, இரா. நாகசாமி, முத்தரையர்
(பின்னர் ‘தவம் செய்த தவம்’ நூலில்.).

அப்போது, புலவர் செ. ராசு, தமிழ்ப் பல்கலை எழுதிய கருத்து:
முத்தரையர் பற்றிய இரா.நாகசாமி அவர்களின் கட்டுரை முத்தரையர் ஆராய்ச்சியில் ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
முத்தரையர் என்ற சொல் தொடர் இரண்டு சொற்களால் ஆனது. திருமய்யம் கல்வெட்டு முத்தரையத் தலைவன் ஒருவனை "அரைசன்" என்று குறிக்கிறது. குன்னாண்டார் கோயில் கல்வெட்டில் பல்லவ நந்திவர்மன் காலத்தில் முத்தரையரின் பணியாளன் ஒருவன் "அரையர்கள் அடியான் வாலிவடுகன் ஆன கலிமூர்க்க இளவரையன்" என அழைக்கப்படுகின்றான். திருநெய்த்தானக் கல்வெட்டிலும் இவன் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளான்.
தென் சிறுவாயி நாட்டாரும் இந்நாட்டு அரையர்களும்
தென்மலை நாட்டு வந்தாண்டார் கோட்டை அரையர்களில்
வாரப்பூர் அரையர்களில் ஒட்டையன் வாரப்பூர் நாடாழ்வான்

என நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் அரையர் என்ற சொல்லைக் காணுகின்றோம். புதுக்கோட்டை அரசர்களும் அவர்கள் முன்னோர்களும் அரையர் மக்கள் எனப்பட்டனர். கொங்கரையர், ஈழத்து அரையர், பல்லவரையர், விழுப்பரையர், கங்கரையர், கலிங்கரையர் என அரசியல் தலைவர்களும் அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களிலும் அரையர் என்ற பெயரைக் காணுகின்றோம். எனவே முத்தரையர் என்பதிலும் ஈற்றில் உள்ள சொல் அரையர் என்பதில் ஐயமில்லை.
சிலர் முதற் சொல்லை மூன்று என்று கொள்கின்றனர். தொல்காப்பியம் நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி விதிப்படி மூன்று+அரையர் = முவரையர் என்றே ஆகவேண்டும். அவர்கள் மூவரையர் என எங்கும் அழைக்கப்பட்டதில்லை முத்தரையர் என்றே குறிக்கப்பெறுகின்றனர். முத்து + அரையர் எனவும் வருவதற்கு இல்லை. இவர்கட்கும் முத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆகவே முதற்சொல்லை முது அல்லது மூத்த என்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குடுமியாமலை போன்ற சில இடங்களில் இவர்கள் பெயரைக் கல்வெட்டுக்கள் மூத்த அரையர் எனப் பிரித்தே குறிக்கிறது. இதனை மூத்த + அரையர் எனப் படிக்க இயலாது. கல்வெட்டு மரபுப்படி இவ்விடங்களில் மூத்த அரையர் என்றே படிக்க வேண்டும்.
முத்தரையர் கர்நாடகத் தொடர்புடையவர்களே, பகாப்பிடுகு முத்தரையன், பெரும்பிடுகு முத்தரையன் என்று முத்தரையர் பெயர்களில் காணப்படும். பிடுகு என்ற சொல் இடி என்னும் பொருளுடைய கன்னடச் சொல்லே.
பிற்காலத்தில் முத்தரையர் என்பது அரசர் அளிக்கும் பட்டப் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது. முத்தரையர் அல்லாதவர்களும் அரசன் அளித்த சிறப்புப் பெயராகப் பூண்டனர். கல்வெட்டுக்கள் இதனை மிகத் தெளிவாகக் குறிக்கின்றன.

புலவர். செ. இராசு
தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்
---------------

மூதரையன்/மூதரசன் > மாதரசன் என்பது இயல்பாக ஏற்படும் மாற்றம். முக்கியமான காரணம், மூதி என்பது இழிபொருள் தந்துவிட்டதால் (In the Second Millennium CE). பார்க்க: http://mudiraja.com/mudiraju_cities.html

புலவர் செ. இராசுவிடமும், டாக்டர் ரா. நாகசாமி அவர்களிடமும் மாதரசன் பட்டினம் என்பது மூதரசன்/முத்தரசன் பட்டினம் என்பதன் மரூஉ எனக் குறிப்பிட்டிருக்கிறேன். மலைமண்டலப் பெருமாள் கோவில் சதுரானன பட்டினத்தில் இருப்பதும் முத்தரசர்களின் கர்நாடகத் தொடர்பை விளக்குகிறது. மலைமண்டலம் ஆகிய காவிரியின் கங்க ராஜ்ய மன்னர்கள் பெயர் தென்மொழி/வடமொழி ஆய்வால் விளங்குகிறது. 1988-ல் டாக்டர் இரா. நாகசாமி அவர்களின் கட்டுரை.

நா. கணேசன்

----------------
முத்தரையர்
[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி] (1988)

கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர். "முத்தரையர்" என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு காலம் ஆண்டார்கள்? இப்பொழுதுள்ள முத்தரையர் என்ற பெருங்குடி மக்களுக்கும், அக்கால முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு? முத்தரையர் என்ற சொல் எதைக் குறிக்கிறது? என்றெல்லாம் மிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்த ஆசிரியப் பெருமக்கள் உண்டு. இந்த ஆராய்ச்சியை அண்மையில் நான் மேற்கொள்ள நேர்ந்த போது தமிழக வரலாற்றில் இதுகாறும் தெளிவாராத பல உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு; "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். இவர்கள் வேங்கடத்தை ஆண்ட சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள். கி.பி. 4ஆம் நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து.

முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர்.
ஏறக்குறைய 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்). சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ஸ்ரீமத் கொங்கணி விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன) என்று குறிக்கறான்.

இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது "கொங்கணி முத்தரசரு" என்று கூறுகிறான். இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் சிவமாறன் என்ற கங்கமன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் "நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி" (அகம் 44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத் தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடி சூட்டியுள்ளார்கள்.

கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும், சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.

அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா) என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்" என்றும், தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம்.

N. Ganesan

unread,
Aug 22, 2018, 10:46:16 AM8/22/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, K Rajan, rajavel subramani, dorai sundaram
கேரளாவில் அடைமழை. படுமழை. மூன்றாண்டு பெருவறட்சியாய் இருந்த பாலக்காடு, கோவை மாவட்டங்களில் இப்போது பெருவெள்ளம்.
கேரளா எல்லையில் எங்கள் தோட்டங்கள். கட்டிடங்கள் மிகப் பெரிதாக ஆதலால், கதனை வேட்டு வைத்துப் பெரும்பாறைகளைப்
பிளந்து கற்களும், செய்மணலும் செய்கின்றன. இந்த டைனமைட்டிங் செய்வதால், அடைமழை பெய்யும் போது மண் குசிந்து
பொலபொலவென்று வீழ்ந்துவிடுகிறது. காடுகளும் வெட்டப்படுகின்றன. எனவே தான், செந்தண்ணியாய் பெருவெள்ளம், சேதம்.
இப்பொழுது மோயாற்றில் பெருவெள்ளம், பெருஞ்சேதம் என்றார்கள். பவானி சாகர் இதனால் நிரம்பி விட்டதாம்.

மூய் என்றால் மூடுதல், முடிதல். கலியாணம் மூய்ச்சாச்சு என்பது கொங்குவழக்கு. கலியாணம் முடிந்துவிட்டது எனப்பொருள்.
மூய் = மூடி - சங்க இலக்கியத்தில் உண்டு.
ஊட்டியின் அடிவாரத்தில் தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் பிரிக்கும் எல்லையாக இருப்பது மோயாறு(மூயாறு).
அதாவது, அடவிக் காடுகள் (Tropical rain forests) மூடிக் கிடக்கும் பகுதியில் பாயும் ஆறு மோயாறு. இதனை மாயாறு எனவும் வழங்குவர்.
மொய்த்தல்/மூசுதல். மோயாறு - காடுகள் மூயும் (மூடிக்) கிடக்கும் ஆறு. 
மூயாறு/மோயாறு > மாயாறு என்றாதல் போல, மூதரசன்  > மாதரசன். மூத்தரையன் என்பது முத்தரையன்/முதிராஜா > மதிராஜா
- ஆந்திரா, கர்நாடகா பகுதியில் பெரிய சமூகம்.

நா. கணேசன்


2018-07-26 5:55 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
Reply all
Reply to author
Forward
0 new messages