அம்மா

91 views
Skip to first unread message

Ponnaiah Thirunavukkarasu

unread,
Mar 17, 2009, 8:57:31 AM3/17/09
to minT...@googlegroups.com
1. அம்மா என்ற சொல்லின் பெருமைகள் .

உலகில் தமிழ் சொற்களுக்கு மட்டும் தனி தன்மைகளும் பெருமைககளும் உண்டு . அம்மா என்ற சொல்லின் தனி தன்மைகளை பார்போம் . ஈன்றவள் தான் உலகின் முதல் என்பதை உணர்த்த மொழியின் முதல் எழுத்தை வைத்தே (அகரத்தை) வைத்தே அழைக்கபடுகிறாள் அம்மா. உலகில் திராவிட மொழியை தவிர்த்து அம்மா அகரகதை கொண்டு தொடங்குவது இல்லை . எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் "மம்மி" என்று பதிமூன்றாவது எழுத்தில் தொடங்குகிறது . அம்மா என்பது அழைக்கவும் , தாய் என்பது குறிக்கவும் பயன்படுகிறது. (இது முறையே ஆங்கிலத்தில் "மம்மி" மற்றும் "மதர்" என்று உள்ளது ).

ஒவ்வொரு மொழியிலும் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் வகைபடுத்தபடுகிறது . தமிழில் அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
உயிர்மெய் எழுத்துகள் : 216 மற்றும் ஆய்த எழுத்து ஒன்றும் சேர்ந்து 217 எழுத்துகள் தமிழில் உள்ளன .

ஆனால் தமிழில் மட்டும் தான் அம்மா என்ற சொல்லில் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் மூன்றும் வருவது போல் அமைக்கபட்ட்ளது.
அதேபோல் ஒவ்வொரு மொழியிலும் குறில் மற்றும் நெடில் எழுத்தகள் வகை படுத்தப்படுகிறது . அம்மா என்ற சொல்லில் குறில் மற்றும் நெடில் வருவது மாதிரி அமைத்து இன்னும் தனித்தன்மையை காட்டுகிறது இந்த சொல் .

எந்த இடைச்சொல் சேர்ந்தாலும் அம்மா என்ற மூல சொல் சிதைவதில்லை .

எடுத்துகாட்டாக சில இடைசொற்களை சேர்த்து பார்போம்
வேற்றுமையுருபுகள் : அம்மாவை,அம்மாவுக்கு,அம்மாவின
்,அம்மாவுடைய , அம்மாதான் மற்றும்
"வினா இடைசொல் : அம்மாவோ? " இவை யாவிலும் அம்மா என்ற மூல சொல் சிதையவே இல்லை . அதுமட்டும்மல்ல பன்மையாக மாற்றினாலும் சிதையாது . "அம்மாக்கள்" .


இப்படி பட்ட தனித்தன்மை சொல்லை மேலும் பெருமை படுத்த தமிழர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் . ஈன்றவளை மற்றும் அழைக்க பயன்படுத்தாமல் ,தன் சகோதரிகளை அழைக்கவும் பயன்படுத்த ஆரம்பித்தான். தன் மகளை ,சகோதரியை ..
"என்னம்மா எப்போ வந்தே?" ,"கொஞ்சம் சாப்பிடும்மா" என்று விளிப்பதை அறிவோம் .
தன் அம்மாவின் வயதொத்த பெண்களையும் அறிமுகம் இல்லாவிட்டால் கூட அம்மா என்று அழைக்க ஆரம்பித்தான் .
வேறு எந்த மொழிலும் மகளை,சகோதரியை,தோழியை அல்லது இவர்கள் வயதொத்த பெண்களை "அம்மா" அன்ற சொல்லை வைத்து அழைப்பதில்லை
பெண்களை மட்டும் இல்லாமல் , ஆண்களையும் , ஏன் எதிரிகளை கூட புண்படுத்தாமல் தாழ்மையுடன் நடத்தப்படவேண்டும் என்பதற்காக அம்மா என்ற சொல்லை பயன்பாடு கொள்வாரும் உண்டு . எடுத்துகாட்டாக
"என்னம்மா கண்ணு ,எப்படியிருக்கு உடம்பு ?" என்று விளிப்பர் எதிரியை பார்த்து .

உலகில் எந்த மொழியிலும் எதிரியை அழைக்க "அம்மா" என்ற அந்த மொழியின் நிகரான சொல் பயன்படுத்து வதுஇல்லை .

இந்த பெருமையெல்லாம் வேறு எந்த மொழியுளும் அம்மாவை அழைக்கும் சொல்லுக்கு இல்லை . ஒரே சொல்லில் மொழியின் பல தனித்தன்மைகளை அடக்கி அதை "அம்மா" என்று அழைத்து சொல்லையும், மொழியை மட்டும் அல்லாமல் ஈன்றவளையும் பெருமை படுத்துகிறது தமிழ் .


கட்டுரை ஆக்கம் -ஆழை ரவி

Thanks to yarz
--
Right Faith.,
Right Knowledge.,
Right Action.,

Yours.,
Pon.Thirunavukkarasu.,                          (பொன் .திருநாவுக்கரசு)

Rita Rudner  - "Before I met my husband, I'd never fallen in love. I'd stepped in it a few times."

Narayanan Kannan

unread,
Mar 17, 2009, 9:26:27 AM3/17/09
to minT...@googlegroups.com
தாய்க்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.

அப்படித்தான் தமிழும் ;-)

கொரியமொழியில் அன்னையை அம்மா அல்லது ஒம்மா என அழைக்கிறார்கள். சீனர்கள்
ஏறக்குறைய 'அம்மா' என்றுதான் அழைக்கிறார்கள்.

பொதுவாக தாயை அழைக்க ஆகப்பெரும்பான்மையான மொழிகளில் 'மா' என்ற சொல்
அமைகிறது. அதன் பல்வேறு வடிவுகள்தான் நாம் பார்ப்பவை.

நாம் அம்மாவை 'அன்னை' என்றழைக்கிறோம். துருக்கியரும் அம்மாவை 'அன்ன(னை)'
என்றே அழைக்கின்றனர். தேடினால் நிறைய ஒற்றுமை காணமுடியும்.

மனிதனுக்கு தொப்புள் இருப்பதே அவன் பிறருடன் தொடர்புடையவன் என்று காட்டத்தான்.

தமிழ் தொப்புள் இல்லாத குழந்தை என்று சொல்வதில் பலருக்கு ஆசை வருவதுண்டு ;-)

க.>

2009/3/17 Ponnaiah Thirunavukkarasu <ponn...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Mar 17, 2009, 9:46:57 AM3/17/09
to minT...@googlegroups.com

            " ஏன் இப்படி'

திருமணம் ஆன  புதிது, இணை பிரியாத மனது
உன் பெயர் சொல்லி  என் அம்மா
அழைத்தவுடன் ஒன்றுமே நடவாதது போல்
ஒரு நொடியில் சுதாரித்து சரி செய்து கொண்டு
குரலில் ஒரு எளிமையை வரவழைத்துக் கொண்டு
இதோ வந்துவிட்டேன் அம்மா
என்று வெகு இயல்பாக அம்மாவிடம் சென்று ,
கூப்பிடீர்களா அம்மா ? சரியான கள்ளி நீ

எத்தனை முக்கியமாய் இருந்தாலும் 
ஒன்றுமில்லை  நீ  அவனைக் கவனி என்று
உன்னை மீண்டும் அறைக்கு  அனுப்பிவிட்டு
முகத்தில் புன்னகையோடு தன் காரியத்தை
தொடர்வாள் என் அம்மா,
நம் வயதைத் தாண்டித்தானே வந்திருக்கிறாள்
அம்மா, அவளுக்குத் தெரியாததா..?

அம்மா எத்தனை அனுபசாலி, அன்பான அம்மா
கொடுத்து வைத்தவர்கள் நாம் என்று
நீ விமர்சிக்கும் போது கூட,அதைவிட
முக்கியமாய் உன் அருகாமை,என்னை மூழ்கடித்தது
திருமணம் ஆன  புதிது, இணை பிரியாத மனது

மருமகளாய் நினைக்காமல் தன் மகளாய் அம்மா
உன்னை நடத்துகையில் நானே அம்மாவுக்கு
அன்னியப் பட்டுப் போனேன்,சில நேரங்களில்
என்னையே பொறாமைப் பட வைத்தது
உங்கள் அன்னியோன்னியம்

கண்களில் காதலைத் தேக்கி சீக்கிரம்
வந்துவிடுங்கள் என்கிற அழைப்பையும் அதில்தேக்கி
புன்சிரிப்போடு நீ கை அசைக்கையில் பணிக்கு
செல்லக் கூட  மனம் வருவது இல்லை
 
மனமில்லாமல் பணிக்குச் சென்றாலும்
அத்தனை பக்கங்களிலும் உன் முகம்
எப்படி வேலை செய்வேன் நான்
அறை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு
அம்மாவிடம் என்ன காரணம் சொல்லுவது
என்று யோசித்துக் கொண்டே வீடு வந்தவுடன் ,

என்னடா கண்ணா  தலை வலியா  என்று
அம்மா கேட்டவுடன்--,ஆ...ஆமாம் தலை வலி
என்று சமாளித்தேன்,  நமட்டுச் சிரிப்புடன் நீ!!!
ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல்
பரிசு வாங்கிய நான்,
உள்ளுக்குளே மனசாட்சி உறுத்தல்,
திருமணம் ஆன  புதிது, இணை பிரியாத மனது

நாட்டு மருந்துக் கடையில் வாங்கி வைத்திருந்த
சுக்கை எடுத்து கல்லில் உரசி,பத்து போட்டாள் அம்மா,
ஒரு நல்ல காபி கொடுத்தனுப்பினாள் உன்னிடம்
என்னையே பார்த்துக் கொண்டிருந்த அம்மா
கண்ணா அவளையும் அழைத்துக் கொண்டு
எங்காவது வெளியே போய்விட்டு வா
எல்லாம் சரியாகி விடும்,கவனமாகப் போய்விட்டு
வாருங்கள், என்று  அம்மா சொன்னவுடன்
சரிம்மா என்று அப்பாவியாய் முகம் காட்டி
இருவரும் புறப்பட்டோம் வெளியே.
திருமணம் ஆன  புதிது, இணை பிரியாத மனது

சிலு சிலுவென்ற காத்து மீண்டும்
மீண்டும் வந்து போகும் கடலலை
கடலை விற்பவன் தொந்தரவு
இத்தனையும் நம்மை  எதுவுமே
செய்ய முடியாமல் கனவுலகில் நாம்...

வாசலில் ஒரு அழைப்பு மணீ
ஒரு நல்ல தூக்கம் கலைந்த எரிச்சலில்
யாரது என்று கேட்டுக் கொண்டே
வாசற்கதவைத் திறந்தேன்
என் பேரு  கல்யாணம்,, இவ என் பொண்ணு
நேத்து கோயிலில் எங்களை பார்த்து
அம்மா இன்னிக்கு வரச்சொன்னாங்க
என்றார் உன் அப்பா
கண்ணா அவங்களை வலது காலெடுத்து
வைத்து உள்ளே வரச் சொல்லு என்றாள்
என் அம்மா...!!!!
உனக்குத் தெரியுமா !!!!!
என் அம்மாவுக்கும் தெரியுமா !!!!!!!
என் கனவுக் கன்னி  நீதானென்று!!!!!!!?

நம் வயதைத் தாண்டித்தானே வந்திருக்கிறாள்
என்  அம்மாவும், அவளுக்குத் தெரியாததா..?

அன்புடன்
தமிழ்த்தேனீ


2009/3/17 Narayanan Kannan <nka...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages