கணினி சிஸ்ட கவசம்

2 views
Skip to first unread message

vj kumar

unread,
Nov 30, 2009, 4:53:20 AM11/30/09
to mintamil
Got this as a forward.

கணினி சிஸ்ட கவசம்
 
Set in the meter of Kandar Sashti Kavacham - it helps if you are a regular listener - you can hum in the same tune :))
 
துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்ட அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸhர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.


N. Kannan

unread,
Nov 30, 2009, 5:56:57 AM11/30/09
to mint...@googlegroups.com
சூப்பர் விஜய் :-))

நம்ம ஹரிகி உள்ளே வந்தால் இன்னும் கூட செறிவு பெறும்.

இன்னும் முயலலாமென்று தோன்றுகிறது.

இன்னும் அல்லல் படுத்தும் அடங்காமுனிகள், ஸ்பாம், பாம் (மெக்கிண்டாஷ்)
இன்னபிற தொல்லைகள் பற்றிப் பேசலாம்.

முதல் முயற்சி நிச்சயம் வெற்றி :-)

க.>

2009/11/30 vj kumar <vj.ep...@gmail.com>:

Hari Krishnan

unread,
Nov 30, 2009, 6:30:28 AM11/30/09
to mint...@googlegroups.com


2009/11/30 N. Kannan <navan...@gmail.com>

சூப்பர் விஜய் :-))

நம்ம ஹரிகி உள்ளே வந்தால் இன்னும் கூட செறிவு பெறும்.

இன்னும் முயலலாமென்று தோன்றுகிறது.


ம்க்கும். இப்படி என்னை உஸ்ப்பேத்தி விட்டுடுங்க.  நானும் கையில உள்ள வேலையை எல்லாம் தொங்கலில் விட்டுவிட்டு உடனே உக்காந்துவிடுவேன். :-))  

இப்போது முடியாது.  கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  ஒரு புத்தகத்தை முடித்துவிட்டேன். இரண்டாவதற்கு கடைசிகட்ட ஒப்பனை நடந்துகொண்டிருக்கிறது.  நாளைக்குள் கொடுக்காவிட்டால் கொலைவி\ழும் என்று கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த சிஸ்ட கவசம் ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னாலேயே இன்னமும் பெரிதாக வந்தது இல்லையோ?  அகத்தியரா அல்லது ஃபோரம்ஹப்பா நினைவில்லை.  இதைப் படித்துச் சிரித்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது.

 


--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Nov 30, 2009, 7:52:21 AM11/30/09
to மின்தமிழ்
நல்லது விஜய்குமார். இதுமாதிரி பல வேடிக்கைப்பாட்டு
துக்ளக்கில் வருமே. ‘செயலலிதா ஆட்சியில் அவர்மேல்
நவரத்தின மாலை என்று போட்டிருந்தார்கள். தமிழ்.நெட் காலத்தில்
பேசினோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்தெனக்கு நல்குவாய் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நான்தந்தேன்
சங்கத்தமிழ் மூன்றும் தான்!

என்றுகூட எழுதியிருக்கிறேன் :) விலைவாசி பருப்பை எங்கோ
கொண்டுபோகிதே.

-------------

பல்லவரைப் பற்றி விரிவாகப் படிப்போம்.

அவர்களின் ஆதி வரலாறு பற்றிய குறிப்புகள்
இக்கட்டுரையிலும் காண்க:
http://groups.google.com/group/mintamil/msg/8b700a0f756a40ab

மைக்கேல் லாக்வுட் (சென்னை கிறித்துவ கல்லூரி. இப்போது பாஸ்டன் ஓய்வு)
கட்டுரைகள் - பல்லவா ஆர்ட் என்று புத்தகமாய் வந்துள்ளது.
நண்பர் மைக்கேல் ராபே (சிக்காகோ. கோடைக்கானலில் பள்ளியில் படித்தவர்)
எழுதிய மாமல்லபுரம் அருமையான புத்தகம். ஏற்கெனவே பார்க்கச்
சொல்லியிருக்கிறேன்.

இ-மெயில்களில் காலவிரயம் செய்யாமல் இருந்தால் ஏதாவது நல்ல கட்டுரைகளாய்ச்
செய்யலாம். தெலுங்குநண்பர்கள் சிலர் ஒரு ஜர்னல் ஆரம்பிக்கலாம்
என்று தினமும் கூப்பிடுகிறார்கள் (சுரேஷ் கொலிசால, சீனிவாசு
பர்சூரி, .... இருப்பார்கள்).
நாசா தலைமை டெக்னாலஜிஸ்ட் குமார் கிருஷன் (நல்ல காஷ்மீர சைவர்)
வீட்டுக்கு நேற்றிரவு வந்தார். இஸ்ரோ-நாசா கூட்டுறவை மேம்படுத்த
எது வேண்டுமானாலும் செய்துதருகிறேன் என்கிறார். டாக்டர் அண்ணாதுரையுடன்
(பெங்களூர்) பேசினோம். ஒபாமா பேச்சிலே அமெரிக்க-இந்திய வானியல் ஆய்வு
உறவுகள் அதிகம் ஆகும் என்று குறிப்பிட்டார் ....

கிருஷ்ணகிரி மாவட்டம் பற்றிய நூல்கள் சிலவற்றை செல்வமுரளிக்கு முதலில்.

நா. கணேசன்

On Nov 30, 3:53 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> *Got this as a forward.
>
> கணினி சிஸ்ட கவசம்*
>
> *Set in the meter of Kandar Sashti Kavacham - it helps if you are a regular
> listener - you can hum in the same tune :))*
>
> *துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்


> பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
> கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
> பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
> உன்னிப்புடன் நெஞ்சே குறி!

> **

> சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.*

Hari Krishnan

unread,
Nov 30, 2009, 9:30:07 AM11/30/09
to mint...@googlegroups.com


2009/11/30 N. Ganesan <naa.g...@gmail.com>

நல்லது விஜய்குமார். இதுமாதிரி பல வேடிக்கைப்பாட்டு
துக்ளக்கில் வருமே. ‘செயலலிதா ஆட்சியில் அவர்மேல்
நவரத்தின மாலை என்று போட்டிருந்தார்கள். தமிழ்.நெட் காலத்தில்
பேசினோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்தெனக்கு நல்குவாய் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நான்தந்தேன்
சங்கத்தமிழ் மூன்றும் தான்!

என்றுகூட எழுதியிருக்கிறேன் :) விலைவாசி பருப்பை எங்கோ
கொண்டுபோகிதே.


இதற்கு ஒரு பழைய வேரியன்ட் உண்டு கணேசன்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துநான் தந்ததைத்தா - வேலயத்த
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீதந்த
சங்க)த்)தமிழ் மூணுமிந் தா.

விக்கற வெலைக்கு உனக்கு குடுத்துக் கட்டுப்படியாவது.  நான் குடுத்ததைத் திருப்பிக்கொடு. நீ குடுத்தது வேணாம் நீயே வச்சிக்கோ.  

எப்போதோ சின்ன வயசில் ஏதோ பத்திரிகையில் படித்தது.  

Tirumurti Vasudevan

unread,
Nov 30, 2009, 10:43:42 AM11/30/09
to mint...@googlegroups.com


2009/11/30 Hari Krishnan <hari.har...@gmail.com>
ஆனால் இந்த சிஸ்ட கவசம் ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னாலேயே இன்னமும் பெரிதாக வந்தது இல்லையோ?  அகத்தியரா அல்லது ஃபோரம்ஹப்பா நினைவில்லை.  இதைப் படித்துச் சிரித்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது.

வேற யாருண்ணா? பாக்கியம் ராமசாமிதான்.
இங்கே இன்னும் இருக்கு பாருங்க!
http://www.appusami.com/HTML/htmlv24/main/kandsasti.asp

இப்ப வந்து இருக்கறது அப்டேடட் வெர்ஷன் போல இருக்கு!
திவாஜி

--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

srirangammohanarangan v

unread,
Nov 30, 2009, 12:01:01 PM11/30/09
to mint...@googlegroups.com
அது   சரி   சாமீ!    இந்த   மானிட்டர்    பராபலத்துக்கும்    எதுனாச்சும்     கவசம்   கேடயம்  கீதா?
 
காக்க   காக்க
மானிட்டர்  காக்க
கதிரெவேல்   என்னொட
ஸ்க்ரீன  காக்க
சுச்சைப்  போட்டால் 
தாமதம்  ஆகி
தட்டிக்கொட்டித்
தடபுட  ப்ரட்டிப்
பக்க  வாட்டில் 
பலமுறை  கொட்டி
கைவலிக்க 
அசந்து  போனால்
ஆறு  முகனார்
அருளொடு  காக்க
கூறு  படவே 
மானிட்டர்  உடைக்க
கோபம்  வருமுன்
குமரன்  காக்க
டெச்க்டாப் ஸ்க்ரீன் சைஸ்
பாம்ரீடர்  கணக்காய்
சுருங்கிய  கணக்கை
குகனார்  நோக்க 
 
இப்படி  எதுனாச்சும்  இருந்தா    சொல்லுங்க  தலீவா!!

 

Tirumurti Vasudevan

unread,
Nov 30, 2009, 6:17:17 PM11/30/09
to mint...@googlegroups.com
:-))
ரங்கனாரே,
மானிட்டரில் சின்ன பாகம் ஏதாவது பழுது ஆகி இருக்கும். சர்வீஸ் ஆசாமியை கூப்புடுங்க. சரி பண்ணிடுவாரு.
கணினில இது ஒண்ணுதான் சரி பண்ணக்கூடிய வன்பொருள். மத்ததெல்லாம் கழட்டி கடாசிட்டு வேற போட்டுடுவாங்க. இப்படித்தான் ஒரு காலத்தில என்னோட சாம்சங் எல்சிடி மானிட்டர் துவங்க 5 நிமிஷம் ஆச்சு. செர்வீஸ் ஆசாமி சரி பண்ணார்.
திவாஜி

2009/11/30 srirangammohanarangan v <ranga...@gmail.com>

N. Kannan

unread,
Nov 30, 2009, 6:17:39 PM11/30/09
to mint...@googlegroups.com
பாருங்க! இதுக்குப் பெயர்தான் அருளிச்செயல் என்பது.
அவஸ்தையில் வரவேண்டும் கவிதை :-))

க.>

2009/12/1 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Nov 30, 2009, 6:35:24 PM11/30/09
to mint...@googlegroups.com
சாக்கிரதை, ரங்கனாரே. அவர் கடலூரார். தருமமிகு சென்னை செர்வீஸ் ஆசாமிங்க சொன்னதை செய்யாமாட்டாங்க; செய்ததை சொல்லமாட்டங்க. விசித்திரப்பிராணிகள். ஆமாச்சுவிடம் கேட்டு, நல்ல செர்வீஸ் ஆசாமி தேடவும்.
இன்னம்பூரான்

2009/12/1 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages