எங்கள் பாவம், ஈசனே!

52 views
Skip to first unread message

Dev Raj

unread,
May 7, 2015, 11:35:38 PM5/7/15
to mint...@googlegroups.com

டாக்டர் ஜெய பாரதி :


தமிழ்நாட்டு சைவ ஆதீனங்களுக்கெனப் பல சம்பிரதாயங்கள் இருந்தன. அவர்களுக்கென Hierarchy எனப்படும் அதிகார/அந்தஸ்துத் தட்டுக்கள் இருந்தன. 
அப்போதெல்லாம் ஆதீனங்களில் hierarchy நிறைய உண்டு. சாமியார்களிலேயே பண்டார சன்னிதி எனப்படும் ஆதீனகர்த்தர். அவருக்கு அடுத்தபடியாக தலைமைத்துவத்துக்கு வரவேண்டிய அடுத்த பட்டம் அல்லது இளையபட்டம் அல்லது இளவரசு; பின்னர் தகுதி, பதவி, அதிகாரம் முதலியவற்றின் அடிப்படையில் உள்ள ஸீனியர் சுவாமிகள், ஜூனியர் சுவாமிகள், ஸப் ஜூனியர் சுவாமிகள் என்றெல்லாம் ஏணிப்படிகள் இருந்தன. ஸீனியர்கள் முதலியோரைத் தம்பிரான் என்று சொல்வார்கள். 


பெரிய ஆதீனங்களுக்கு வெவ்வேறு இடங்களில் சொத்துக்கள் இருந்தன. கோயில்களும் இருந்தன. அவற்றை நிர்வகிப்பதற்கு ஆங்காங்கு கிளை மடங்கள் இருந்தன. அவற்றை நிர்வகிப்பதற்கு தனித்தம்பிரான்கள் இருந்தனர். அவர்களைக் 'கட்டளைத் தம்பிரான்கள்' என்பர். ஸப்ஜூனியர் சுவாமிகளை 'குட்டி'கள் என்று அழைப்பார்கள். அவர்களில் சிலர் மடத்திலேயே ஸீனியர் தம்பிரான்களிடமோ அல்லது ஆதீனப் புலவர்களிடமோ அல்லது அவ்வப்போது அங்கு அழைப்பின்பேரில் வரக்கூடிய பெரும்புலவர்களிடமோ படித்தனர். அவ்வாறு படிப்பவர்களைக் 'கற்றுக்குட்டி'கள் என்று குறிப்பிடுவார்கள். 


சாமியார்கள் தவிர மேல்காட்டு உத்தியோகம், ராயசம், காறுபாறு, கற்றுச்சொல்லி, கணக்கர், தவசிப்பிள்ளை, ஓடும்பிள்ளை, எடுபிடி என்று பலவகையான வேலைகளில் இருப்பவர்களும் இருந்தார்கள். இவர்களையும் அங்கு வந்து செல்லும் சன்னியாசம் வாங்காதவர்களையும் 'வெள்ளைவேட்டிக்காரர்கள்' என்று அழைத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் மரியாதை, அதிகாரம். அதற்கேற்ப சாப்பாட்டுப்பந்தியிலும் வரிசை; வரிசையில் இடம்; இப்படியிருக்கும்.
பெரிய சன்னிதானம் சாப்பிட ஆரம்பித்த பின்னரே மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அவர் சாப்பிட்டுவிட்டு எழும்போது அனைவரும் இலையைவிட்டு எழுந்துவிடவேண்டும். சாப்பிட்டுமுடிக்கவில்லையானால் அது அவனவன் தலையெழுத்து. 


சிவப்பிரகாசர் ஒரு ஜூனியர் சுவாமிகளாக இருந்தபோது அவர் இருந்த மடத்திற்கு கோயம்புத்தூர்ப்பக்கத்திலிருந்து ஒரு சமையற்காரன் வந்திருந்தான். 
பெரிய சுவாமிகள் அனைவருக்கும் நல்ல அரிசியையும் மற்றவர்களுக்குக் குறுணை அரிசியையும் போட்டுச் சோறாக்கி வைத்திருந்தான்.
பந்தி ஆரம்பமாகியது. இலை போட்டாயிற்று. சோறு பரிமாறப்பட்டது. குறுணை [நொய்] அரிசிச்சோறு; குழைந்தும் போயிருந்தது. நெல்லும் கல்லும் இடையிடையே. 


பார்த்தார் சிவப்பிரகாசர்; திகைத்தார்; தயங்கினார். பின்னர் சொன்னார்..... "கொங்கன் வந்து பொங்கினான் கொழியரிசிச் சோற்றினைஅருகில் அமர்ந்திருந்த ஒரு ஜூனியர்சுவாமிகள், அவரைப் பார்த்து ஜாடையாக எச்சரித்தார்,"சங்கமங்கள் கூடியே சாப்பிடத்தொடங்கினஅருகில் அமர்ந்திருந்த மற்றொரு ஜூனியர் சுவாமிகள், "இங்கும் அங்கும் பார்க்கிறீர்; இலையிலே கண்ணில்லையே!" என்று அங்கலாய்த்தார்.பயந்துபோனார், சிவப்பிரகாசர். மற்றவர்கள் உண்டு முடித்து எழுந்துவிடுவார்கள்; தயங்கி நின்ற சிவப்பிரகாசர் பட்டினியாக எழவேண்டியிருக்குமே! எப்படியும் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும். சாப்பிடாமல் இருந்தால் இரவில்தான் மறு உணவு. நடுவில் எதுவும் கிடைக்காது. அதுவும் ஏதாவது இரவு விரதமாக இருந்தால் அதுவும் கிடையாது. முழுப்பட்டினிதான். ஆகவே,"எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள்பாவம், ஈசனே!என்று சொல்லிமுடித்து சிவனேயென்று சோற்றை விழுங்கிவைத்தார்.


இது பிற்காலத்தில் தர்மபுர ஆதீனத்தில் வழங்கப்படும் ஒரு பாடலாகிவிட்டது. One of the "Sagas of Dharmapura Adheenam".

முழுப்பாடல் இதோ:


கொங்கன் வந்து பொங்கினான், கொழியசிரிச் சோற்றினை:
சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கின!
இங்கும் அங்கும் பார்க்கிறீர்! இலையிலே கண்ணில்லையே!
எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள் பாவம், ஈசனே!



[தொழிலில் தேர்ச்சி பெறாதவரை ‘கத்துக் குட்டி’ என்று சொல்லும் வழக்கம்

இன்றும் உள்ளது; ’காரோபார்’ எனும் உர்துச் சொல் தமிழில் ‘காறுபாறு’

ஆகியது]


தேவ்

Meenavan M

unread,
May 8, 2015, 1:15:44 AM5/8/15
to mint...@googlegroups.com
அன்புள்ள தேவ
இதனைத் தொடங்கி வைத்துப் பாடியவர் மாதவச் சிவ்ஞான யோகிகள் என்று சொல்வார் உண்டு
மீனவன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 8, 2015, 1:22:08 AM5/8/15
to mint...@googlegroups.com


On Thursday, May 7, 2015 at 10:15:44 PM UTC-7, meenavan2 wrote:
அன்புள்ள தேவ
இதனைத் தொடங்கி வைத்துப் பாடியவர் மாதவச் சிவ்ஞான யோகிகள் என்று சொல்வார் உண்டு
மீனவன்

உவேசா அப்படித்தான் எழுதினார். வெள்ளைக்காரர்களுக்கு முன்னரே
தமிழ் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்ததன்று என நிறுவ பல ஆதாரங்கள்
கொடுத்தவர். மிகச் சிறுவயதில் சிவலோகம் சென்றுவிட்டார். 
மணவாள மாமுனிகள் தொடங்கிவைத்த ஆராய்ச்சியை மேலெடுத்தவர்
மாதவச் சிவஞான யோகிகள். பின்னர் எல்லிஸ், கால்ட்வெல், ...
இப்போது இருப்போரில் ஐராவதம், ஹார்ட், பார்ப்போலா நினைவுக்கு
வருகின்றனர்.

நா. கணேசன்

Dev Raj

unread,
May 8, 2015, 5:30:10 AM5/8/15
to mint...@googlegroups.com
On Thursday, 7 May 2015 22:15:44 UTC-7, meenavan2 wrote:
இதனைத் தொடங்கி வைத்துப் பாடியவர் மாதவச் சிவ்ஞான யோகிகள் என்று சொல்வார் உண்டு


அப்படியா !
டாக்டர் ஜெயபாரதி அவர்கள் சொல்லிய சிவப்பிரகாசர்தான்
‘ஏசுமத நிராகரணம்’ ‘சைவ தூஷண நிக்ரஹம்’ நூல்களை
எழுதியவர் என நினைக்கிறேன். Constanzo Beschi பாதிரியார்
இந்நூல்களை எரித்ததாகச் சொல்வர்


தேவ்

sethu

unread,
May 8, 2015, 7:03:19 AM5/8/15
to mint...@googlegroups.com
மூன்றாம்வரியில் இலையில்என்பதற்குப்பதில்அமுதினில்என்றும்இருந்த து.
Reply all
Reply to author
Forward
0 new messages