அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இணைந்து வழங்கும் "நூல் தத்தெடுத்தல்" முன்னெடுப்பு.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL) ஒரு நூலகம், காப்பகம், அருங்காட்சியகம் மற்றும் ஆய்வு மையங்களை உள்ளடக்கியது. 1994-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நூலகத்தில் 5,00,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. 30 இலட்சம் பக்கம் மற்றும் படங்களை இந்நூலகம் மின்மயமாக்கி பாதுகாத்துள்ளது. மேலும், இது ஒரு மின்நூலகத்தை உருவாக்கி உலகத்தமிழர்களையும் தமிழ்நூல்களையும் இணைக்கும் பாலமாய் செயல்பட்டு வருகிறது.
இந்த நூலகத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, பொதுமக்களை நூல்களைத் தத்தெடுக்கச் செய்து அவர்களின் நன்கொடை மூலமாக நூல்களைப் பாதுகாப்பதாகும்.
இந்த சிறப்பான திட்டத்தில் நம் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கமும் இணைந்து செயல்பட இருக்கிறது. இதனால் நம் அட்லாண்டா வாழ் தமிழ்மக்களும் இந்தத்திட்டத்தில் பங்கேற்று நன்கொடை வழங்கலாம்.
நூல் தத்தெடுத்தல்:
‘நூல் தத்தெடுத்தல்’ திட்டத்தின்மூலம் புரவலர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களைப் பாதுகாக்கலாம். ஒரு நூலைப் பாதுகாக்க ரூபாய் 8000 - வரை செலவாகும். தனிநபர்களும் பெரு நிறுவனங்களும் இத்திட்டத்தில் இணைந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நூல்களை தத்தெடுக்கலாம் அல்லது மாதம் ஒரு நூலை தத்தெடுக்கலாம்.
தத்தெடுக்கப்படும் நூல், உயர்தரத்தில் எண்ணிமப்படுத்தப்பட்டு, காகிதத்தில் உள்ள அமிலத்தன்மை நீக்கப்பட்டு, தேவையிருப்பின் சிதிலமடைந்த காகிதங்களை ஜப்பானிய இழை காகிதம் கொண்டு வலுபடுத்தி, தூசி படிவதைத் தடுக்க ஒரு அமிலத்தன்மை அற்ற காகித உறையில் வைத்து பாதுகாக்கப்படும்.
எப்படி தத்தெடுப்பது:
கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பவும்
தங்கள் விவரங்கள் RMRL நிறுவனத்தாரிடம் வழங்கப்படும்
அவர்கள் உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு "நூல் தத்தெடுக்கும்" விவரங்களையும் நூல்களின் பட்டியலையும் வழங்குவார்கள்
அதிலிருந்து விருப்பமான நூல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்
எத்தனை நூல் தத்தெடுக்க வேண்டுமோ அதற்கான நன்கொடையை காசோலையாகவோ, பணமாகவோ வழங்கலாம். இந்திய வங்கிகளிலிருந்து செலுத்தப்படும் நிதிப் பங்களிப்புகள் வருமான வரிச் சட்டம் பிரிவு 80G இன் கீழ் வருமான வரி விலக்கு பெறுகின்றன
நன்கொடையைப் பெற்றவுடன், ஒரு உறுதிப்படுத்தல் மின்னஞ்சலும் பாதுகாத்தலுக்கான காலநிரலும் வழங்கப்படும்
பாதுகாக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல்/அட்டை/உரையில் உங்கள் பெயர்/நிறுவனம் குறிப்பிடப்படும்
நூற்பட்டியிலும், இணையதளத்திலும் நீங்கள் தத்தெடுத்த புத்தகத்தின் கீழ் உங்கள் பெயரை எல்லோரும் பார்க்கும் வகையில் சேர்க்கப்படும். ஆண்டு அறிக்கையிலும் உங்களது நல்கை குறிப்பிடப்படும்.
இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த காணொளியைக் காண்க:
https://www.youtube.com/watch?v=Jia6xr8ofYE இந்த பெருமுயற்சியில் நீங்கள் பங்கெடுக்க விரும்பினால் கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பவும்.
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இணைந்து மேற்கொள்ளும் இந்த நல்ல முயற்சியில் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு நம் பொக்கிஷங்களாகிய நம் தமிழ் அச்சு நூல்களைப் பாதுகாக்க வேண்டுகிறோம்! நன்றி!
பின் குறிப்பு: இதில் உறுப்பினர் அல்லாதோரும் பங்குகொள்ளலாம்
-------
Adopt a Book Initiative
Jointly Presented by the Greater Atlanta Tamil Sangam & the Roja Muthiah Research Library (RMRL)
The Roja Muthiah Research Library (RMRL) is a world-renowned institution that brings together a library, archive, museum, and research centers. Established in 1994, it houses an extraordinary collection of over 500,000 items representing the richness of Tamil heritage and civilization. To date, RMRL has digitally preserved more than 3 million pages and images, and continues to serve as a vital bridge connecting Tamils across the globe with our invaluable literary legacy.
One of the hallmark initiatives of RMRL is the “Adopt a Book” program, which allows individuals and organizations to directly contribute to the preservation of rare and precious Tamil works.
The Greater Atlanta Tamil Sangam is proud to partner with RMRL in this noble endeavor, offering our community the opportunity to take part in safeguarding the treasures of Tamil literature for generations to come.
About the Adopt a Book Program
Through this initiative, patrons can sponsor the preservation of books of their choice.
Adoption Cost: ₹8,000 (approx. per book)
Who Can Participate: Individuals, families, and organizations are all welcome
Options: Adopt one or multiple books, or choose to adopt one book every month
Each adopted book will undergo professional preservation, including:
High-quality digitization
De-acidification to prevent deterioration
Reinforcement with Japanese tissue paper for fragile pages
Protective storage in acid-free covers to safeguard against dust and deterioration
How It Works
Complete the below adoption form below.
Your details will be shared with RMRL.
RMRL will contact you via email with program information and a catalogue of available books.
Select the book(s) you wish to adopt.
Contribute your donation via cheque or cash. (Donations are tax-deductible under Section 80G of the IT Act).
Receive a confirmation email along with the preservation timeline
Your name/organization’s name will appear:
On the cover/sleeve of the preserved book
In the official catalogue on their website
In RMRL’s annual report
Why This Matters
By joining this initiative, you will help ensure that our treasured Tamil printed heritage is preserved, protected, and made accessible to future generations worldwide.
📽️ To learn more, watch this video:
https://www.youtube.com/watch?v=Jia6xr8ofYE 👉 If you would like to participate, please fill out the form below.
The Greater Atlanta Tamil Sangam and the Roja Muthiah Research Library warmly invite you to be a part of this distinguished initiative. Together, let us protect and preserve the priceless legacy of Tamil literature.
Note: Participation is open to both members and non-members.