ஒரு திடீர்த் தொடரடைவு

56 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Jun 30, 2023, 11:25:44 AM6/30/23
to மின்தமிழ்
அன்புடையீர்,

எனக்கு நீண்ட நாட்களாக ஓர் ஆசை. ஒரே நாளில் ஒரு நூலுக்குத் தொடரடைவு உருவாக்கவேண்டும்.

அப்படியானால் அந்த நூல் மிகச் சிறியதாக இருக்கவேண்டும். குறைந்தது 100 பாடல்களாவது இருந்தால்தான் அது நூல் எனப்படும்.

நான் ஏற்கனவே தொடரடைவு உருவாக்கிய கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களில் 100-க்கும் சற்று அதிகமான பாடல்கள் உண்டு.

ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் தொடரடைவு உருவாக்க நான்கைந்து நாள்கள் தேவைப்பட்டன.

கடைசியாக நான் தொடரடைவு உருவாக்கிய நூல் பாண்டிக்கோவை. 29-06-2023 -ஆம் நாள் மதியம் 3 மணி அளவில்
அதற்குரிய தொடரடைவு ஆக்கப்பணிகளை முடித்துப் பதிவேற்றம் செய்துவிட்டுத் தூங்கப்போய்விட்டேன்.

பின், இரவு உணவுக்குப் பின் 8:30 மணியளவில் அபிராமி அந்தாதி என்ற நூலைத் தெரிவுசெய்து அதற்குரிய தொடரடைவுப் பணிகளைத் தொடங்கினேன். அதில் 102 பாடல்கள் உள்ளன. ஏற்கனவே ஏறக்குறைய முழுமையாகச் சொற்பிரிப்பு செய்யப்பட்ட நூல் இணையதளத்தில் கிடைத்தது. என்னுடைய கணினி நிரல்களுக்கேற்ற வகையில் அதனை உருமாற்றம் செய்தேன். மற்றப் பணிகள் மளமளவென்று முடிந்தன.
இன்று 30-06-2023 இரவு 8:30 மணியளவில் எல்லாப்பணிகளையும் முடித்து என் இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துவிட்டேன்.

ஆக, ஒரே நாளில் (24 மணி நேரம்) ஒரு தொடரடைவு உருவாக்கவேண்டும் என்ற என் அவா இன்று நிறைவுற்றது.

இந்த அபிராமி அந்தாதித் தொடரடைவு என்னுடைய 93 =ஆவது நூல்.

இறைவனுக்கு மிக்க நன்றி.

ப.பாண்டியராஜா


தேமொழி

unread,
Jun 30, 2023, 11:56:07 AM6/30/23
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா🙏

Dr. Mrs. S. Sridas

unread,
Jun 30, 2023, 5:22:55 PM6/30/23
to mint...@googlegroups.com
பாராட்டு, ஐயா.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d1941508-a587-4e20-9be3-805156af560en%40googlegroups.com.

Chandrika Subramaniyan

unread,
Jun 30, 2023, 8:48:29 PM6/30/23
to mint...@googlegroups.com
சிறப்பு ஐயா 

Dr Chandrika Subramaniyan

Solicitor   Mediator  Academic  Journalist  Speaker  

+61433099000   lawyer.c...@gmail.com     

Premier’s Harmony Medal Winner   2019 - NSW State

Citizen of the Year 2019  - Cumberland Council

Women of the West   2012  - University of Western Sydney 

Highly commended Award 2011  – Women Lawyers Association

Nominee Justice Medal 2009  - Justice Foundation

 www.successlawyers.com.au




Gowri Vimalendran

unread,
Jul 1, 2023, 2:06:16 AM7/1/23
to mint...@googlegroups.com
வாழ்த்துக்கள்.

Sent from my iPad

On 1 Jul 2023, at 06:18, Chandrika Subramaniyan <lawyer.c...@gmail.com> wrote:



Kanda Samy

unread,
Jul 1, 2023, 7:42:16 AM7/1/23
to mint...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா

P.Kandasamy

Reply all
Reply to author
Forward
0 new messages