‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’

நமது இந்தியாவில் பல மாற்றங்கள் ஏற்படப்போவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. தேசிய தேர்தல் இந்த வருடமே நடந்தாலும், நடக்கலாம். தற்காலத்திய ‘அரசியல்’ கட்சிகள் சுயமுன்னேற்ற முஸ்தீபுகளை கனஜோராக துவக்கி விட்டன. இத்தருணம், பொது ஜனம் சுதாரித்துக்கொண்டு, தேசாபிமானமும், சமுதாயம் ஓங்கி வளர்வதும், மக்களின் சுய முன்னேற்றமும் ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டு இயங்கினால், நாடு பிழைக்கும்; சமுதாயம் செழிக்கும்; தனி நபர்களுக்கும் நல்ல காலம் பிறக்கலாம். முந்திய பதிவு ஒரு பீடிகை மட்டுமே, ஒரு கல்லை விட்டெறிந்து.
பொது ஜனம் என்ற மாபெரும் சமூகத்தில் அங்கத்தினர்களான தனி நபர்கள் ஒவ்வொருவரும் சேவை செய்யவேண்டிய அத்யாவசியத்தை அடிகோடிட்டு கூறவும் வேண்டும். அதனுள் கல்லுக்குள் தேரையாக உறையும் சுயமுன்னேற்றத்தைத் தெளிவுபட எடுத்துக்கூறவும் வேண்டும். ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற பொன்வாக்கு ஒரு கைவிளக்கு. நமது நினைவலைகள் மறக்காத விடுதலை வேள்வி வீரர்களின் வரலாற்றை வாக்களிக்கப்போகும் இளைய/முதிய சமுதாயத்துக்கு எடுத்துக்கூறுவதால் மூன்று ஆதாயங்கள்.
~ நாட்டுப்பற்று பற்றிக்கொள்ளும்.
~ படிப்பினைகள் விழிப்புணர்ச்சியை தூண்டும்.
~ வாக்காளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள கிட்டும் ஒவ்வொரு வாய்ப்பும், ஜனநாயகத்துக்கு இடும் உரம்.
அவரவரது ஊர்களிலும், பேட்டைகளிலும் தோன்றி, மறைந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பணி, தியாகம், பட்ட துன்பங்கள், எதிர்ப்புக்கள், சந்தித்த இன்னல்கள், சிறை வாசம் ஆகியவை தான் நமக்கு அஸ்திவாரம். அதை பராமரிக்காமல் இருந்து விட்டோம். நாளொரு அவமானமும், பொழுதொரு பொய்யும், புனைசுருட்டுமாக, பாரத விலாசம் என்ற உப்பரிகையை உடைத்து வருகின்றன என்று தேம்பி அழுவதுடன் நிற்காமல், நாம் ஒவ்வொருவரும் ஆக்கப்பூர்வமாக இயங்க முடியும். உதாரணமாக, மஹாகவி பாரதியார் சொன்னதை சற்றே காது கொடுத்துக் கேட்போம்.
~ “வந்தே மாதரம் என்போம் எங்கள் மானிட தாயை வணங்குதும் என்போம்” என்று அடியெடுத்துக் கொடுத்தார். பெற்ற தாயை அனவரதமும் வணங்கும் போது, பொய் பேச மனம் வருமா?
~ “வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே“ என்று ஜயபேரிகையை,இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு பல்லாண்டுகள் முன்பே, முழங்கினார். அதை மறந்து விட்டு, ஏன் இந்த ஒப்பாரி பாடும் ஆயாசம், நமக்கு?
~ “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என்று, அடக்குமுறை பேயாட்டம் ஆடிய காலத்திலேயே, துணிச்சலுடன் சூளுரைத்தார். சுதந்திர இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களை தட்டிக்கேட்க ஊடகங்கள் தயங்குகின்றன. அத்தனை பீதியா, நமக்கு?
~ நனவின் பிரதிபலிப்பாக, “வெள்ளி பனி மலையின் மீது உலாவுவோம் - அடிமேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்”என்று என்றோ ஒரு நாள் கனவு கண்டார். ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கிக்கப்பல் ஊழல், வான் அலை வரிசை ஊழல், மண்ணுள் எண்ணெய் ஊழல் என்று எங்கெங்கும் பேச்சு. கண்ணியமான தீர்வு நாட மக்களுக்கு பீதி. நாம் இதை மாற்றவேண்டாமோ?
அவருடைய தீர்க்கதரிசனங்களை வைத்தே நாம் பாரதமாதாவின் ரக்ஷனை செய்யலாம்.
எனினும் இத்துடன், இரு காரணங்களுக்காக, இப்போதைக்கு நிறுத்துகிறேன். நான் பின்னூட்டம் கேட்க வில்லை. சான்றோர்கள் ஆக்கப்பூர்வமாக எது சொன்னாலும், கேட்டு பயன் பெற விரும்புகிறேன். இரண்டாவதாக, உங்கள் ஒவ்வொருவரிடமும் தாழ்மையுடன் ஒரு கேள்வி. நம் நாட்டில் கல்வி செழிக்க, நீங்கள் தனி நபராக என்ன செய்யப்போகிறீர்கள்/
பிற பின்னர்.
அன்புடன்,
இன்னம்பூரான்
26 03 2013
சித்திரத்துக்கு நன்றி: http://4.bp.blogspot.com/-PGCvuiKzJlg/TlGycC1ws3I/AAAAAAAAAVk/wGbEU0J_klU/s300/Bharathi%2Bsong.jpg
*
முந்திய பதிவு.
‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1}
தேசாபிமானமும், சமுதாயம் ஓங்கி வளர்வதும், சுய முன்னேற்றமும் ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பது உறுதி. அவை ஒட்டு -மாங்கனிகள். தற்கால இந்தியாவில் தேசாபிமானத்துக்குப் போட்டியாக பிரிவினை வாதங்கள் வலுத்து வருகின்றன, மொழி வாரியாகவும், மற்றபடியும் நாட்டை கூறு போட்ட பின்னும். சமுதாயம் மங்கி தேய்ந்து வருகிறது. துண்டாட்டம் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகிறது. மாநிலங்கள் தோறும் ‘அன்னியர்கள்’ சிதற்தேங்காய். பொறுக்கி தின்பவர்கள் நிழல் மனிதர்கள். பினாமி-பேமானி, ரவுடி-கேடி ஆகியோர் பரிபாலனத்தின் மீது கை வைத்து விட்டனர். ஏழை-பாழை, தலித் போன்ற நசுக்கப்பட்டோர் சுயமுன்னேற்றம் நாடுவதிலிருந்து வழி மறிக்கப்படுகிறார்கள். இந்த சூழலும் நாட்டுப்பற்றை அடகு வைப்பதும், சமுதாய இழப்புகளும், சுயநலமும் ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, பாரத தேசமென்று பெயர்சொல்லப்படும் நம் நாட்டை போற்றி, மனித நேயம் என்ற உரமிட்டு, மக்கள் நலனை காப்பாற்றி, அந்த அடித்தளங்களின் நல்வரவாக அவரவர் தனக்கு மேன்மை நாடமுடியும், அதற்கு மக்கள் தொகை முழுதும் மெனக்கடவேண்டும் என்று உரைக்கவே, இந்தத்தொடர்.
இப்போதெல்லாம் இந்தியா வெளிநாடு ஊடகங்களில் தினந்தோறும் இருவகையில் பேசப்படுகிறது. 1. பல துறைகளில் இந்திய தனிமனிதர்களின் அபார சாதனை. 2. போகிறப்போக்கைப்பார்த்தால் இந்தியா உருப்படுமா? என்ற ஐயம். அந்த அலசல்களை, குறிப்பாக நடுவுநிலையுடன் அக்கரையுடன் எழுதப்பட்டவை நாம் உன்னிப்பாக படிப்பது நலம் பயக்கும். மார்ச் 23, 2013 இதழில் லண்டன் எகானமிஸ்ட் இந்தியாவை பற்றி மூன்று கட்டுரைகள் உளன. அவற்றில் ஒன்றை பற்றி, இன்று பேச்சு.
ஆங்கிலேய கலோனிய ஆட்சி நம்மை சுரண்டுவதற்கு முன் பாரத வர்ஷத்தில் சுபிக்ஷம் நிலவியது என்பார்கள், ஒரு சாரார். தாதாபாய் நெளரோஜி அவர்கள் இந்திய ஏழ்மை பற்றி எழுதிய வியாசம் இன்றைக்கு அப்பட்டமாக பொருந்தும். அதிகப்படியாகவே. ஏனெனில், இங்கு தற்காலம் இரு ஆளுமைகள். அரசு பட்ஜெட்டுக்களும், நிழல் மனிதர்களின் கறுப்புப்பணமும். 2010 வருடம் உலக வங்கி செய்த 151 நாடுகளில் செய்த ஆய்வுப்படி, இந்தியாவின் கறுப்பு பட்ஜெட், வெள்ளை பட்ஜெட்டின் ஐந்தில் ஒரு பாகம். அரசின் வெள்ளை பட்ஜெட்டுக்கு எந்த அளவு கறுப்பின் பரிமாணம் தெரியும் என்பது மர்மமாக இருப்பதால், கறுப்பின் வியாபகம் மிக அதிகம் என்று தான் ோன்றுகிறது. செல்வம் கொழிக்கும் நாடுகளிலும் கறுப்பு விளையாடுகிறது. இந்த அளவு இல்லை. மற்ற பேத்துமாத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், நிலைமை படு மோசம். 1980க்கு பிறகு லஞ்சலாவண்யம் பெருவாரி வியாதியாகிவிட்டது.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 42,800 பேர்கள் தான் வருமானம் காட்டி வரி செலுத்துகிறார்கள் என்கிறார் நிதி அமைச்சர், கேலி செய்தவாறு. நாடு அழுகிறது, இந்தப் பித்தலாட்டத்தைக்கண்டு. வருமான வரி கட்டும் அசடுகள் 2.5%. வரவேண்டியதில் மூன்றில் ஒரு பங்கு கூட வரி வசூல் ஆவதில்லை என்கிறார்கள், ஆய்வாளர்கள். அடுத்தபடியாக, கோடானுகோடி ரூபாய்கள், வீடு, மனை, பொன் ஆகியவற்றில். வரவு/செலவு எல்லாம் காசு. அது முழுங்குவது நாட்டின் செல்வநிலையில் 14%. ‘ஸ்விஸ்’ என்ற சொல் வெளி நாடுகளில் நம் செல்வத்தை பதுக்குவதைப் பற்றி. கறுப்பப்பண ஓடை மாரிஷியஸ் வழியாக, பெருக்கெடுத்து ஓடுகிறது. கிட்டத்தட்ட பூண்டியாகி விட்ட அரசு, கறுப்புப்பணத்தை மீட்ட முஸ்தீபுகளை தொடுங்குகிறது என்று அந்த கட்டுரை சொல்கிறது. அரசியல் வாதிகளுக்குத்தான் கறுப்புப்பண மோகம் என்பதையும் சொல்ல, அது மறக்கவில்லை. இத்தனை எழுதுவதின் பின்னணி: மார்ச் 13 அன்று நாகபூஷணம் என்ற இதழ் ஒரு ஒற்றன் வேலை செய்து மூன்று பிரபல வங்கிகளில் சட்ட விரோதமான பணமாற்றம் நடப்பதை ஊதி விட்ட நிகழ்வு.
என் கருத்து:
“ அரவம் தீண்டியது கறுப்பையோ, அதன் நிழலையோ அல்ல. நிழலின் நிழலை படம் பிடித்தது. இதெல்லாம் பல நாள் கூத்து. தமிழில் ‘வேலியே பயிரை மேய்ந்தது’ என்ற உவமை உண்டு. இங்கு கொட்டை போட்டவர்கள் அதை செய்கிறார்களாம்.”.
படித்த கட்டுரை:
பிற பின்னர்.
அன்புடன்,
இன்னம்பூரான்
நம் நாட்டில் கல்வி செழிக்க, நீங்கள் தனி நபராக என்ன செய்யப்போகிறீர்கள்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
எனினும் இத்துடன், இரு காரணங்களுக்காக, இப்போதைக்கு நிறுத்துகிறேன். நான் பின்னூட்டம் கேட்க வில்லை. சான்றோர்கள் ஆக்கப்பூர்வமாக எது சொன்னாலும், கேட்டு பயன் பெற விரும்புகிறேன். இரண்டாவதாக, உங்கள் ஒவ்வொருவரிடமும் தாழ்மையுடன் ஒரு கேள்வி. நம் நாட்டில் கல்வி செழிக்க, நீங்கள் தனி நபராக என்ன செய்யப்போகிறீர்கள்/
பிற பின்னர்.
அன்புடன்,
இன்னம்பூரான்
26 03 2013
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
//15 வயதில் இருக்கும் ஒரு பையனுக்கு இந்நூலில் உள்ள சில தேர்ந்தெடுத்த வழக்குகளை அறிமுகப்படுத்தினால் அவன் நிச்சயம் இந்திய தேசியத்தின் பக்கம் வர வாய்ப்புள்ளது. இந்தியாவா, இன்னும் இருக்கிறதா, இன்னும் இருக்கணுமா என்ற ஃபேஸ்புக் புரட்சியாளர்களுக்கு மத்தியில் இது போன்ற புத்தகங்களைப் படிப்பது மட்டுமே இந்திய தேசியத்தை மாணவர்கள் மனத்தில் பிடித்துவைக்கும். நாட்டுப்பற்று என்பது பிற்போக்குத்தனமானது அல்ல, இந்திய தேசியம் என்பது வாய்ப்பந்தல் வழியே எதிர்கொள்ளமுடிந்துவிடும் சிறுமைகொண்ட கற்பிதம் அல்ல, அது உயர்வானது என்பது புரிய வழிவகுக்கும். நம் மாணவர்கள் திடீர் குபீர் இடதுசாரிக் கருத்துகள் வழியே (நாசமாகப்) போகாமல் இருக்க நாம்தான் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். கூடவே நூலில் தெரியும் சில செக்யூலர்த்தனமான வாசகங்களையும் பொறுத்துக்கொள்ளவேண்டும்.//
திரு ஹரன் பிரசன்னா அவர்களின் இந்தப் புத்தகத்தைக் குறித்த விமரிசனத்தின் கடைசிப் பத்தி மேலே காண்பது.
கீழே புத்தகம் கிடைக்கும் இடமும், தொலைபேசி எண்களும், இன்றைய இளைஞர்களின் நிலை கவலை அளிக்கக் கூடியதாகவே உள்ளது. ஆகவே இந்த மாதிரியான புத்தகங்கள் ஒவ்வொரு பள்ளியிலும் பாடமாக வைக்கலாம்.
சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள், அலைகள் வெளியீடு, சிவலை இளமதி, 240 ரூ.
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-814-1.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234
‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 3
http://2.bp.blogspot.com/_gWdyNag85kA/TKrx-HJ9VQI/AAAAAAAAB2g/YAtOZhoCNZA/s320/penn3.jpg

‘பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!’
மஹாகவி பாரதியாரின் பொன்மொழிகளை மட்டும் எடுத்தோதினால் போதும். பாரதமாதாவை வணங்குவது அன்றாட வழக்கமாகிவிடும்; பாரத தேசமென்று பெயர் சொல்வது, அஷ்டோத்தரமாகவும், சஹஸ்ர நாமாவளியாகவும், லக்ஷார்ச்சனையாகவும், பல்லாயிரம், பல்லாயிரம், பலகோடி நூறாயிரமாகவும் மனனமாகிவிடும். அவருடைய தொலைநோக்கின் பரிமாணத்தைச் சொல்லி மாளாது. தேசாபிமானம், செந்தமிழ், பட்டொளி என்றெல்லாம் தீவகமாக ஒளி பரப்பிய அந்த தேசபக்தர் பாரத சமுதாயத்தை வாழ்த்திய பாடலில் இருக்கும் உருக்கமும், கருத்துச்செறிவும், சிந்தனை அலைகளும், நம்மை ஆலிங்கனம் செய்து கொள்ளும் கனிவும், இன்றைய பாரத சமுதாயத்துக்கு வழித்துணை என்க. அதை பற்றி விரிவாக இன்று எழுதாதற்கு நான்கு காரணங்கள் உளன.
‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
என்றல்லவா விண்ணப்பம் செய்துகொண்டார், நம்மிடம்.
பொது:
பாரத சமுதாயத்தில், இந்த இழையில் மடலாடி, அதன் பயனாக தன்னார்வப்பணியில் இறங்குபவர்கள், ஒரு உன்னத சமுதாயமே. எல்லரும் வாருங்கள். எந்த மொழியிலும் எழுதுங்கள்.
தேமொழி:
‘பிரதம்’ என்ற தன்னார்வகுழு கல்வியை பற்றி பொறுப்பான ஆய்வுகளை தருகிறது. அதன் ஆய்வுப்படி, தமிழகத்தில் கல்வி செழிப்பாக இல்லை. என் அனுபவமும் அது தான். படித்து வேlai தகுதி வேறு. வித்யா எனப்படும் கல்வி அதை விட பன்மடங்கு மேன்மையானது. அது வேண்டும். மனித மனம்/ நாட்டுப்பற்று/சமூக சேவை எல்லாமே சுருங்கினால் செத்து விடும். உங்கள் பிள்ளைகளின் படிப்பு முக்கியம். அதில் ஐயமே இலை. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு வித்யா தானம் செய்யவேண்டும். உங்கள் ஆசிரியர் வகுப்பறை நடத்தியது போல. கட்டுரை நீண்டு விட்டது. இணையத்தில் இலவசமாக கல்வி போதனை மும்முரம். நேற்றுக்கூட புதிய மாடல்கள் வந்துள்ளன. அடுத்த கட்டுரையில் அது பற்றி எழுதுகிறேன்.
காளைராஜன்:
நீங்கள் எனக்கு அளித்த கொடை இது வாழ்க. என்றும் உங்களுக்கு உதவ நான் காத்திருக்கிறேன். 1942ல் ஆங்கிலேயர் ஆட்சியில், உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்கள், அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் அரிக்கேன் லைட்டு வச்சு பாடம் எடுப்பார்கள். அரசு ஆதரவு அபரிமிதம்.
எஸ்.கே.நடராஜன்:
உமது ஊழியம் பெருமிதத்துக்கு உரியது. மேற்படி, தன்னார்வப்பணியாக என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.
ஷைலஜா:
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
ஓடு! ஓடு! இன்னம்பூர் எழுத்தறிவுநாதரின் ஆணை என்று ஒரு ஏழையை படிக்கவை.
கீதா சாம்பசிவம்:
நல்ல காரியம் செய்கிறீர்கள், பண உதவி மூலம். வாழ்த்துக்கள். ஆன்மீகம் நல்லது தான். மூளைச்சலவையாளர்களும், போலிகளும் நிறைந்திருக்கும் பிராந்தியம். அது தான் என் கவலை. உங்கள் பதிவுகள் போன்றவை நன்மை பயக்கும். நீங்கள் சொன்ன நூலுக்கு ஒரு விமர்சனம் இங்கு எழுதுங்களேன். அவசரமில்லை.
பிறபின்னர்
இன்னம்பூரான்
27 03 2013
சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/_gWdyNag85kA/TKrx-HJ9VQI/AAAAAAAAB2g/YAtOZhoCNZA/s320/penn3.jpg
தேமொழி:
‘பிரதம்’ என்ற தன்னார்வகுழு கல்வியை பற்றி பொறுப்பான ஆய்வுகளை தருகிறது. அதன் ஆய்வுப்படி, தமிழகத்தில் கல்வி செழிப்பாக இல்லை. என் அனுபவமும் அது தான். படித்து வேlai தகுதி வேறு. வித்யா எனப்படும் கல்வி அதை விட பன்மடங்கு மேன்மையானது. அது வேண்டும். மனித மனம்/ நாட்டுப்பற்று/சமூக சேவை எல்லாமே சுருங்கினால் செத்து விடும். உங்கள் பிள்ளைகளின் படிப்பு முக்கியம். அதில் ஐயமே இலை. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு வித்யா தானம் செய்யவேண்டும். உங்கள் ஆசிரியர் வகுப்பறை நடத்தியது போல. கட்டுரை நீண்டு விட்டது. இணையத்தில் இலவசமாக கல்வி போதனை மும்முரம். நேற்றுக்கூட புதிய மாடல்கள் வந்துள்ளன. அடுத்த கட்டுரையில் அது பற்றி எழுதுகிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அவரவரது ஊர்களிலும், பேட்டைகளிலும் தோன்றி, மறைந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பணி, தியாகம், பட்ட துன்பங்கள், எதிர்ப்புக்கள், சந்தித்த இன்னல்கள், சிறை வாசம் ஆகியவை தான் நமக்கு அஸ்திவாரம். அதை பராமரிக்காமல் இருந்து விட்டோம்.
‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4
http://eluthu.com/images/poemimages/k/106995.gif

தேசமுன்னேற்றத்துக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும், தனிமனிதர்களின் வாழ்வாதாரத்துக்கும் கல்வி தான் அடித்தளம் என்பது கண்கூடு. மற்றும் பல பண்புகளும் அத்தியாவசியம் என்பதிலும் ஐயமில்லை. அவை யாவற்றையும், ஒன்றன் பின் ஒன்றாக நாம் கலந்தாலோசிப்போம். கல்வியை பற்றி சில சிந்தனைகள்:
திரு. சந்திரமோஹன்:
வாணிபம் செய்பவர்கள் விலை போகும் சரக்கைக் கையாள்வார்கள். கல்வி விலைபோகும் சரக்கு. அருமையாக சொன்னீர்கள்: ‘... Speak the real value every where. Identify valuable personalities who are still remaining uncorrupt and back them. Continue sponsoring poor students. Show them gentle and noble gestures and direct them to a right guru. This is the need of the hour...’. நீங்கள் நாள்தோறும் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வகையில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
சுபாஷிணி:
உமது கேள்வி நியாயமானது. எனக்கு உடன்பாடு தான். விடுதலை வீரர்களின் வரலாறு பரவ வேண்டும். அது தேசாபிமானம், சமுதாய மறுமலர்ச்சி ஆகியவற்றை உந்தவேண்டும் என்பது என் கருத்து. சிலைகள் தேவையில்லை. ஆனால், சந்ததி வறுமையை பற்றி சில வரிகள்:
சுருங்கச்சொல்லி, சுபாஷிணி, ஒவ்வொருவரின் நிலைமையும் வேறு, வேறு. தாரதம்யம் தேவை.
தியாக உள்ளம் படைத்தவர்கள் பிற்காலமும் இருந்தனர்: எஸ்.ஆர்.சங்கரன் ஐஏஎஸ் போன்ற சிலர். விரல் விட்டு எண்ணி விடலாம். 1947க்கு முன்னால் கணக்கில் அடங்காத தேசாபிமானிகள். சமுதாய நலன் ‘சிறுதுளி பெருவெள்ளத்திற்கு’ சரியான உதாரணம். நம்மில் யாவரும் கடுகளாவது சமுதாய நலனுக்கு உழைக்க முடியும். அது போதும். ஒரு ராஜாராம் மோஹன் ராய், ஒரு திரு.வி.க., ஒரு மஹாத்மா பூலே;
பிற பின்னர்.
இன்னம்பூரான்
28 03 2013
சித்திரத்துக்கு நன்றி: http://eluthu.com/images/poemimages/k/106995.gif
மிக்க நன்றீயுடன்தி.ஜ.ரங்கநாதன் பெயர்திR.SATHYABAMA
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 5
http://www.wespeaknews.com/wp-content/uploads/2012/07/Indian-Schools-RTE.jpg
ஆகஸ்ட் 15,1947 அன்று இந்திய விடுதலை. பிரதமர் நேரு ‘ஒளி படைத்தக் கண்ணிணாய், வா! வா!’ என்று பாரதமாதாவின் புகழ் பாடினார். அதன் மீது நமக்கு பிராது யாதுமில்லை. ஜனவரி 26, 1950 அன்று நமது அரசியல் சாஸனத்தை அரியணையில் அமர்த்தினோம். அதன் மீது நமக்கு பிராது யாதுமில்லை. அந்த புனித சாஸனத்தில், டாக்டர். அம்பேத்கார் வற்புறுத்திய இரு சீர்திருத்தங்கள் நீர்த்துப்போயின. 1. அடிப்படை கல்வி உரிமையின் தரம் தாழ்த்தப்பட்டது. 2. தணிக்கைத்துறையின் முக்கியத்துவம் தணிக்கப்பட்டது. விளைவு: ஜனநாயகத்துக்கு ஏகப்பட்ட இன்னல்கள். அதன் மீது எமக்குப் பிராது.
பங்குச்சந்தையின் வீழ்ச்சியைப்போல இவ்விழையும் தட்டுத்தடுமாறினாலும், ஒரு சிலர் தன்னார்வத்துடன் கல்விப்பணி செய்வது பற்றி அறிந்து மகிழ்ந்தேன். மூன்று வருடங்கள் முன்னால், ஏப்ரல் 1, 2010 அன்று, 60 வருடங்கள் கும்பகர்ணோத்ஸவம் செய்த இந்திய/மாநில அரசுகள், RTE Act என்ற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தன. அதன் பிரகாரம், ஒவ்வொரு சிறுவர்/சிறுமியருக்கும் எட்டு வருட பள்ளிக்கல்வி கட்டாயம் & இலவசம். அந்த இலக்கை அடைய சட்டம் விதித்த கெடு நேற்றுடன் முடிந்தது. சில ஆய்வுகள் மூலம், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் 99% கிராமங்களில் பள்ளிகள் உள்ளனவாம். 1.1 கோடி சிறார்கள் பள்ளிகளில் படிக்கிறார்களாம். ஆனாலும் 80 லக்ஷம் சிறார்கள் பள்ளி செல்வதில்லை. வயதுக்கேற்ற படிப்பு அளிப்பதில் இடர்ப்பாடுகள், பல. லக்ஷக்கணக்கான சிறுவர்கள் பாதியில் படிப்பை உதறி விடுகிறார்கள்.
அது மட்டுமல்ல. கற்றுக்கொள்ளவேண்டியதை அவர்களுக்கு உகந்த முறையில் போதிக்கப்படுவது இல்லை. சிறார்கள் சமூகத்தின் பல தளங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்குள் இயல்பான உறவு ஏற்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. வகுப்பறையும், பாடப்புத்தகங்களும், பிரம்பும் மட்டும் போதாது. மாணவர்களின் நேசத்தை ஆசிரியர்கள் நாடுவதில்லை. படிப்பு - மனனம் - மார்க். அத்துடன் சரி. அது போதுமா?சொல்ல பல விஷயங்கள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் அடி கோடிட்டு விட்டு, உங்கள் தீர்வுக்கு விட்டு விடுகிறேன்.
இந்த சட்டத்தின் அடித்தளமே, பள்ளிகளை நடத்துவதில் சமூக ஈடுபாடு. ஆந்திரபிரதேசத்தில், இதற்காகவே பிரசாரம் நடைபெறுகிறது. அஸ்ஸாமில் அன்னைமார் சங்கங்கள் பள்ளிகளை நடத்துவதில் பங்கு கொள்கின்றன.
கெடு முடிந்த பின்னும் உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும்.
என்ன செய்யப்போகிறீர்கள்?
இன்னம்பூரான்
01 04 2013
சித்திரத்துக்கு நன்றி: http://www.wespeaknews.com/wp-content/uploads/2012/07/Indian-Schools-RTE.jpg
ஆர்.சத்யபாமாவிடமிருந்து எப்போது இந்த மடல் வந்தது, தமிழ்த்தேனி. அவருடைய விலாசமும், கைபேசி நம்பரும் தரவும்.இன்னம்பூராம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
'Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could.' is a fallacy.
‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 6
ஜனவரி 8, 2013 அன்று திரு. ஶ்ரீரங்கம் மோஹனரங்கம் ஹிமாலய மலைச்சாரலில், ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் சிறார்கள் பள்ளி செல்லும் கடினமான பாதையை பற்றியும், தந்தையர்களின் கல்வி அளிப்பதில் உள்ள ஈடுபாட்டைப் பற்றியும் ஒரு அருமையான விழியத்தை காண்பித்து, ‘... இந்தக் குழந்தைகளும், அவர்களது தந்தையும் கல்விக்காகச் செய்யும் சாதனையைவிட உலகில் வேறு எந்தச் சாதனையும் எனக்குப் பெரிதாகப் படவில்லை... எந்த நேரமும் பனித் தரை உடையலாம். அது முழுக்க ஆறு. ஆழமான ஆறு. அதன் உறை படலத்தின் மீதுதான் நடந்து வரவேண்டும். ஏதாவது எக்குத்தப்பாய் கால் வைக்கும் போது உடைந்தால் ஆற்றின் ஆழம் பனிக்கல்லறை...’ என்று வியந்து பேசினார். அவர் கூறியதை வழிமொழிந்து, அதே விழியத்தை நம் எல்லாருக்கும் முன்னுதாரணமாக, இத்துடன், நன்றி கூறி, இணைக்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியின் மேன்மையை பற்றியும், அதனுடைய ஆசிரிய பெருமக்களின் வேள்வியை பற்றியும் நண்பர் கதிர் எழுதிய மடல் மகிழ்ச்சி அளித்தது. பத்து வருடங்களாக, பெங்களூரு கோரமங்கலா பகுதியில் இயங்கி வரும் ராயல் பரிக்கிரமா பள்ளியை பற்றி ஒரு ஊடகச்செய்தி: எல்.கே.ஜி. யிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வந்த வி.ஐ.பி. விருந்தினருடன் சகஜமாக அளவளாவினர்; அவர்களில் பெரும்பாலோர் சமுதாயத்தின் விளிம்பில் உள்ளோர் (marginalized) வீட்டு சிறார்கள்; வந்தவர்,அவர்களின் தட்டுத்தடுமாறாத ஆங்கில உரையாடலையும், பல விஷயங்கள் அறிய விரும்பும் ஆர்வத்தையும் கண்டு வியந்து போனார். அந்த தன்னார்வபள்ளியின் இலக்கு, சமுதாயத்தின் விளிம்பில் உள்ளோர் வீட்டு சிறார்களுக்குக் கல்வி அளிப்பதில் புரட்சிகரமான ஆக்கப்பூர்வ வழிமுறைகளைக் கையாளுவதே. அதன் நிறுவனர் சுக்லா போஸ் அவர்கள் பள்ளி அறை, வசதி, கணினி ஆகியவை போதாது; ஆர்வமும், சூழலும் தான் முக்கியம் என்கிறார். அந்த பள்ளிக்கு நான்கு கிளைகள்; மூன்று அனாதை இல்லங்களிலிருந்து, 69 சேரிகளிலிருந்தும் மாணவர்கள் படிப்பதாக, ஹிந்து இதழ் கூறுகிறது. மாணவர்களுக்கு இலவச கல்வியும், சத்துணவும், அடிப்படை மருத்துவ வசதியும் அளிப்பதோடு நிற்காமல், வயது வந்தோர்களுக்குக் கல்வியும், தையல் வகுப்புகளும் நடத்துகிறார்கள். கடும்போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவர் முதல் தர வழக்கறிஞர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாராம். இவர்களில் சிலர் மத்திய/மாநில அரசுகளின் உயர் பதவில் வகித்தால், சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்று எழுத நினைத்தவுடன் மற்றொரு செய்தி.
ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு முஸொளரியில் ஒரு பள்ளி இருக்கிறது. அங்கு பாடம் எடுத்தது ஒரு படிக்காத மேதை; ஆந்திர விவசாயி திருமதி. ஐதலா லலிதாம்மா அவர்கள். அவருடைய திறனும், அனுபவமும்: பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயம், மழைநீர் சேகரிப்பு; தரமான இயற்கை உரமும், வித்துக்கள் தயாரிப்பு. செல்வமும் ஈட்டினார். இதையெல்லாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.
இந்த செய்திகள் ‘பாரத தேசமென்று பெயர் சொல்ல’ துணிவை கொடுக்கின்றன.
‘இந்த சட்டத்தின் (RTE Act) அடித்தளமே, பள்ளிகளை நடத்துவதில் சமூக ஈடுபாடு. ஆந்திரபிரதேசத்தில், இதற்காகவே பிரசாரம் நடைபெறுகிறது. அஸ்ஸாமில் அன்னைமார் சங்கங்கள் பள்ளிகளை நடத்துவதில் பங்கு கொள்கின்றன.’ என்று போன இழையில் சொன்ன நான், அநாவசியமாக அருமை நண்பர் செல்வனுடன் முட்டி மோதியதால், திசை மாறிய இழை குலைந்தே போய் விட்டது. தவறு என்னுடையது; ஆர்வமிகுதியின் விளைவு. மேலும், சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு, ‘...மார்ச் 31 கெடு முடிந்த பின்னும் உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும். என்ன செய்யப்போகிறீர்கள்?...’ என்று கேட்க எனக்கு உரிமை யாதும் இல்லை. திரு.செல்வனிடமும், மடலாடும் தோழர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அந்த சட்டத்தின் அடிப்படையை அரசு தளத்திலிருந்து எடுத்து, இணைப்பதுடன், என் தற்காலிக பணி முடிந்தது; அடுத்து இவ்விழை தொடர்ந்தாலும், கல்வி உரிமையை பற்றி பேசுவதை தவிர்த்து விடுகிறேன்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 04 2013
விழியம்: http://www.youtube.com/watch?feature=endscreen&NR=1&v=3pDMmcIGDQQ
கடும்போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவர் முதல் தர வழக்கறிஞர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாராம்.
உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும். என்ன செய்யப்போகிறீர்கள்?...’
நானும் அப்படியே கருதுகிறேன். இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் வழியாக நான்
அறிந்து கொண்டது. கோவைப்பகுதியில் 10 பொறியியற் கல்லூரிகள் உட்பட 100
கல்லூரிகள் விற்பனைக்கு உள்ளனவாம். ஏனென்றால் அவ்வளவாக மாணவர் சேர்க்கை
இல்லையாம்.
நாட்டிற்குத் தேவை சமூகச் சீர்திருத்தம். அவை நல்ல கலை, இலக்கியத்தால்
மட்டுமே முடியும். ஊடகங்கள் அதற்குத் துணை புரிய வேண்டும். நூல்கள்
வாசிப்பதை ஊக்கப்படுத்தலாம். தனிமனிதனாக எனது வீட்டாருக்கும், என்னை
அண்டியுள்ளவர்களிடத்திலும் எனது கருத்தினைப் பகிர்ந்து விவாதத்திற்கு
அவர்களை ஆட்படச் செய்ய முடியும். அதுவே எனக்கான பெரிய வெற்றி!!
கல்வியை தவிர பல விஷயங்களிலும் பிரிதினித்துவ குடியரசு பொய்த்து விட்டது.
கல்வித் துறையும் வியாபார நோக்கில்தான் நடத்தப் படுகிறது
அன்புடன்தமிழ்த்தேனீ
2013/4/12 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
கல்வியை தவிர பல விஷயங்களிலும் பிரிதினித்துவ குடியரசு பொய்த்து விட்டது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
#விளங்கும் கல்வி!!
On Apr 13, 4:42 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> தேர்வு முறைகளே
>
> புரிந்து கொண்டு படித்தல் என்னும் சிறந்த முறையைக் கடைப்பிடிக்காமல்
>
> மனப்பாடம் செய்து யார் அப்படியே விடை எழுதுகிறார்களோ அவர்களுக்கு உயர்ந்த
> மதிப்பெண் என்கிற முறையிலே இருக்கிறது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 2013/4/13 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > On Sat, Apr 13, 2013 at 6:30 AM, Tthamizth Tthenee <rkc1...@gmail.com>wrote:
>
> >> கல்வியை தவிர பல விஷயங்களிலும் பிரிதினித்துவ குடியரசு பொய்த்து விட்டது.
>
> >> கல்வித்
> >> துறையும் வியாபார நோக்கில்தான் நடத்தப் படுகிறது
>
> > கல்வித்துறை கூட தேர்வு எனும் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து
> > செயல்படுவதாகத்தான் நான் காண்கின்றேன். மாணவர்கள் பொது அறிவு, கல்வித்திட்டம்
> > காட்டும் வரையறயை மீறி தேடல், பல நூல்கள் பல்வேறு துறையில் வாசித்தல் என்ற
> > வகையில் அழைத்துச் செல்லாத கல்வித்திட்டமாகத்தான் உள்ளது.
>
> > சுபா
>
> >> அன்புடன்
> >> தமிழ்த்தேனீ
> >>
>
> >> 2013/4/12 Innamburan S.Soundararajan <innambu...@gmail.com>
>
> >> கல்வியை தவிர பல விஷயங்களிலும் பிரிதினித்துவ குடியரசு பொய்த்து விட்டது.
>
> >> --
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
> >> ---
> >> You received this message because you are subscribed to the Google Groups
> >> "மின்தமிழ்" group.
> >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> >> email to mintamil+u...@googlegroups.com.
> >> For more options, visithttps://groups.google.com/groups/opt_out.
>
> > --
> > Suba Tremmel
> >http://subastravel.blogspot.com-சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
> >http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!
> >http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!
> >http://ksuba.blogspot.com- Suba's Musings
>
> >http://tamilheritagefoundation.blogspot.com- த.ம.அ செய்திகள்
> >http://voiceofthf.blogspot.com- மண்ணின் குரல்
> >http://video-thf.blogspot.com- விழியக் காட்சிகள்
> >http://image-thf.blogspot.com- மரபுப் படங்கள்
> >http://kanaiyazhi-ezine.blogspot.com- கணையாழி
>
> > --
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Apr 13, 8:28 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> //பிரசன்னா – சிநேகாவை காண மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள்
> உட்பட ஏராளமானோர் கல்லூரி வளாகத்தில் குவிந்திருந்தனர். இதனால் தள்ளு
> முள்ளு ஏற்பட்டது.//
>
> இந்தத் தள்ளு முள்ளுவில் பேராசிரியர்களும் முதல்வரும் இருந்தார்களா?
>
> கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க ப்ளீஸ்
>
> நாகராசன்
>
> 2013/4/14 பழமைபேசி <pazamaip...@gmail.com>
> > > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > >> send email to minT...@googlegroups.com
> > > >> To unsubscribe from this group, send email to
> > > >> minTamil-u...@googlegroups.com
> > > >> For more options, visit this group at
> > > >>http://groups.google.com/group/minTamil
> > > >> ---
> > > >> You received this message because you are subscribed to the Google
> > Groups
> > > >> "மின்தமிழ்" group.
> > > >> To unsubscribe from this group and stop receiving emails from it,
> > send an
> > > >> email to mintamil+u...@googlegroups.com.
> > > >> For more options, visithttps://groups.google.com/groups/opt_out.
>
> > > > --
> > > > Suba Tremmel
> > > >http://subastravel.blogspot.com-ச<http://subastravel.blogspot.xn--com--evl>ுபாவின்
> > பயணங்கள் தொடர்கின்றன..!
> > > >http://subahome2.blogspot.com-ஜெர்மனி நினைவலைகள்..!
> > > >http://subaillam.blogspot.com-மலேசிய நினைவுகள்..!
> > > >http://ksuba.blogspot.com-Suba's Musings
>
> > > >http://tamilheritagefoundation.blogspot.com-த.ம.அ செய்திகள்
> > > >http://voiceofthf.blogspot.com-மண்ணின் குரல்
> > > >http://video-thf.blogspot.com-விழியக் காட்சிகள்
> > > >http://image-thf.blogspot.com-மரபுப் படங்கள்
> > > >http://kanaiyazhi-ezine.blogspot.com-கணையாழி
>
> > > > --
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay
> > like
> > > > to visit our Muthusom Blogs at:
> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
> > > > ---
> > > > You received this message because you are subscribed to the Google
> > Groups
> > > > "மின்தமிழ்" group.
> > > > To unsubscribe from this group and stop receiving emails from it, send
> > an
> > > > email to mintamil+u...@googlegroups.com.
> > > > For more options, visithttps://groups.google.com/groups/opt_out.
>
> > --
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at: