Potoing pasir sivan kovil # 2
தென்கிழக்காசியாவிலே சிறந்த மையமாக விளங்கும் சிங்கப்பூரிலே மண்ணுமலை (இப்போது பொத்தோங் பாசிர்) என்ற இடத்தில், கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், இராஜகோபுரம் என்று சிற்ப சாஸ்திரப்படி அமைந்துள்ளது சிவன் கோவில்.
1962- ஆம் ஆண்டு வாக்கில், திரு.பி. ரெங்கநாதன், திரு.அருணாசலம் போன்ற பெரியவர்கள் தங்கள் சொந்தச் செலவிலேயே இரதம் ஒன்று கட்டிக் கொடுக்க, திரு. கே.கே. இராமசாமி என்ற பக்தரின் பெருமுயற்சியால்,
இரத ஊர்வலத்துடன் காமன் பண்டிகை போன்ற பெருவிழாவினைக் கொண்டாடி வந்திருக்கிறார்கள்.
1965-ம் ஆண்டு வாக்கில் மன்மதன் கோயில் என்ற பெயரில் உரிமம் பெற்று, புதிய அமைப்பில், கோயில் கட்ட எண்ணினார்கள் ஆலய நிர்வாகிகள். நாகரீகமும், அறிவு வளர்ச்சியும், இன்றைய மறுமலர்ச்சிக்கும், சமுதாய தேவைக்கும் ஏற்ப கோவில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் புதிய கோவில் கட்டுவதற்கு அரும்பாடு பட்டிருக்கிறார்கள்.
.கோயில் தர்மகர்த்தாவாக இருந்த திரு. வீ.ஆர். கோபால் சாமி அவர்களின் சேவை பெரிதாக அமைந்துள்ளது.
தனது சொந்தச் செலவிலேயே துர்க்கா லட்சுமி சிலை அமைத்து, அதன் கும்பாபிஷேகமும் செய்துள்ளார்.
நகர மறுசீரமைப்பு வீடமைப்பு நிலம் அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டதால் இப்போதுள்ள பொத்தோங் பாசிரில்
பகுதியில் 1000 சதுர மீட்டர் நிலத்தினை 280,000 வெள்ளிக்கு வாங்கப்பட்டது. புதிய இடத்தில் வேத
முழக்கத்தோடு 22.1.1983 - ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.அரசாங்கத்தின் முழு உரிமம் பெற்ற இவ்வாயலம் 27 1-1991-ம் ஆண்டு, ஞாற்றுக்கிழமை மிக விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தேறியது.
கோயில் அமைப்பு.
கோயில் அமைப்புகள் பொதுவாகப் பேரண்ட சிற்றண்ட அமைப்பின் பின்னணியொத்தது. பேரண்டம் என்பது பிரபஞ்சத்தையும், சிற்றண்டம் என்பது மனித உடலையும் குறிக்கும். பேரண்டத்திலுள்ள எல்லாம் சிற்றண்டத்திலும் உள்ளது. பிரபஞ்சத்தின் சிறு வடிவம்தான் மனிதன். பேரண்டத்தின் ஜீவ சக்தி ஈஸ்வரன். அவனே பிரபஞ்சத்தில் மனிதனின் ஆத்மாவாகவும் இருக்கிறான்.
புதனே சுவாசப்பை, சுக்கிரனே இருதயம், சூரியனே மூளை, அங்காரகன் கை, சந்திரனே வயிறு, குரு குறி,
சனி கால்கள், கோயில்களே சிவம். இத்தகைய கோயில் பொதுவாகக் கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம்,
நிருத்த மண்டபம், விருஷ மண்டபம், பிரகாரம், பலிபீடம், கொழி மரம், பரிவார ஆலயங்கள், கோபுரம், திருக்குளம்,
மதில் ஆகிய அங்கங்கள் உடையதாக இருக்கும். அந்த அமைப்பில் அமைந்த ஆலயமே இவ்வாலயம்.
அர்த்த மண்டபம் கர்ப்பக் கிரஹத்தோடு ஒட்டி முன்புறத்தில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் அம்மன் தெற்கு
நோக்கியும், நிருத்த கணபதி தெற்கு நோக்கி நிருத்த (நாட்டிய) நிலையிலும், விஷ்ணு துர்க்கை வடக்கு நோக்கியும்அமைந்துள்ளன.`மூலஸ்தானத்தை ஒட்டியதாகக் கிழக்கு நோக்கி அமைந்துள்ள பீடத்தில் முருகர் ஆலயம் அழகிய கட்டிடக்கலையுடன் அமைந்துள்ளது. இடது பாகத்தில் மூலவரை நோக்கி சண்டிகேஸ்வரர், ஈசான்ய பகுதியில் நவக்கிரங்களும், இடது பாகத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் தெற்கு நோக்கிய நிலையில் சிறு அளவாக அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் முக்கிய கடவுளாக வழிபடக்கூடிய துர்க்கை அம்மன் தெற்கிலிருந்து வடக்காக இருக்கிறது.
கோபுரத்தின் முன் ஆலயத்தைக் காவல் காக்கும் இரண்டு துவார பாலகர்கள் கருங்கல்லினால் வடிக்கப்பட்டுள்ளன.
இவ் வாலயத்தில் முக்கிய, விஷேச பூசையாக இராகுகால துர்க்கா பூசையும்,வழிபாடுகளும் நடக்கிறது.அடுத்து
சிவராத்தியின் போது நான்கு கால பூசைகள் சிறப்பாக கொண்டாப்படுகிறது.
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/