கண்ணதாசன்

252 views
Skip to first unread message

Dhivakar

unread,
Jun 24, 2011, 6:50:53 AM6/24/11
to மின்தமிழ்
http://geethamanian.sulekha.com/blog/post/2011/06/birthday-tribute-to-kaviyarasar-kannadasan/comment/2093988.htm

சில பேரை மட்டும் வெகு சீக்கிரம் இறைவன் தன்னிடம் அழைத்துக் கொள்கிறான். பாரதியும் கண்ணதாசனும் அதில் சேர்த்தி. எனக்கு கண்ணதாசனின் தனிக் கவிதைகள் மிகவும் விருப்பம் - திரைக் கவிதைகளை விட. ராஜாஜி மறைந்த போது எழுதிய கவிதை - தள்ளாத வயதில் மிகவும் மூத்தவர் வாழ்ந்து முடிந்துதான் போய்விட்டார் என்று சமாதானம் செய்து கொள்வதையும் மீறி மனதைத் தொட்ட கவிதை. அடடே. இப்படிப்பட்ட மூதறிஞர் மறுபடியும் பிறக்கமாட்டாரே என்ற வருத்தத்தையும் தந்த கவிதை. நேரு இறந்த போது ‘சாவே.. உனக்கு சாவு வராதா’ என்ற கவிதை, ஏன் தன் மரணத்துக்கும் இரங்கள் பாடிக் கொண்டு எழுதிய கவிதை. எத்தனையோ.. 

மிகவும் தாழ்ந்து பணிந்து போதல் கூட நல்லதல்ல என்பதனை கண்ணதாசன் அவர் பாணியில் சொன்னவிதம் அருமை.

குடை நனைகிறதே என
குடைக்கே நான் குடையாகி
குனிந்து சென்றேனே..

பல சமயங்களில் மனம் ஏங்குகிறது.
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Geetha Sambasivam

unread,
Jun 24, 2011, 6:57:50 AM6/24/11
to mint...@googlegroups.com
அழகான நினைவூட்டல் கட்டுரை. கண்ணதாசனுக்கு அஞ்சலி.

2011/6/24 Dhivakar <venkdh...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

coral shree

unread,
Jun 24, 2011, 7:28:31 AM6/24/11
to mint...@googlegroups.com
அன்பின் திவாகர் சார்,

நல்ல பகிர்விற்கு முதலில் நன்றி. எப்ப கேட்டாலும் கண்கள் கலங்கச் செய்கிற பாடல்கள். பட்டி தொட்டியெல்லாம் பரவி வெற்றி கண்ட அவரோட பாடல்கள் அனைத்தும் பேச்சு மொழியிலேயே இருந்தது தானே காரணம். இன்னுமெத்தனை காலம் ஆனாலும் அழியாத காவியம்! அவருக்கு நம்முடைய நினைவஞ்சலிகளை தெரிவித்துக் கொள்வோம்.பட்டினத்தார் பாடல்களின் சாயல் அதிகம் அவருடைய பெரும்பாலான சோகப் பாடல்களில்.மெய்மறந்து கேட்கச் செய்யும் பாடல்கள்!

2011/6/24 Dhivakar <venkdh...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

N. Ganesan

unread,
Jun 24, 2011, 8:59:03 AM6/24/11
to மின்தமிழ், santhav...@googlegroups.com, housto...@googlegroups.com

On Jun 24, 5:50 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
http://geethamanian.sulekha.com/blog/post/2011/06/birthday-tribute-to-kaviyarasar-kannadasan/comment/2093988.htm
>
>

கவியரசின் மீதான கட்டுரை வலைவரிக்கு நன்றி, திவாகர்.
சொடுக்கி படித்துப் பாட்டும் கேட்டேன்.

(1) கோயம்புத்தூர் மீது கவியரசர்:
http://nganesan.blogspot.com/2008/01/2.html

(2) சங்கிலி அரசனின் வீணைக்கொடி:
http://nganesan.blogspot.com/2008/12/yaazh-flag-sangili-mannan-jaffna.html

(3) நகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்:
http://nganesan.blogspot.com/2009/02/nagesh.html

நா. கணேசன்

Dhivakar

unread,
Jun 24, 2011, 12:08:01 PM6/24/11
to mint...@googlegroups.com
எனக்கு மிகவும் பிடித்த கவியரசின் மொழிபெயர்ப்புக் கவிதை இது.

காலமெனும் தேவியவள்
  ஆடுகின்ற மேடைதனில்
     காற்று மழை கோடை மலரும்

கால்மிதியில் ஓரடி உன்
 ஆயுளை அறுப்பதெனக்
    காலம் வரும்போது புரியும்

காலை வரும் மாலை வரும்
 இரவு வரும் உன் வயதின்
   கணக்கிலே ஒன்று குறையும்

கற்பனையில் ஊறிவரும்
 சிற்றறிவை விட்டுவிடு 
   கடவுளவன் பாதை தெரியும்

ஆலிலையைப் போல ஒரு
   நூலிழையில் உனது உயிர்
     ஆடுவதில் என்ன பயன்

அஞ்சுதலை வென்றவனை
  ஆதிமறை மூலவனை
     அனுதினமும் பாடு மனமே

இதன் மூலம் ஆதிசங்கரரின் பஜகோவிந்த பாடல் - 12

தினயாமின் யௌ சாயம் ப்ராத:
சிசிர - வஸந்தௌபுனராயாத்:
கால கிரீடதி கச்சத்யாயுஸ்
த்த்பி நமுந்சத் - யாசா வாயு:

(பொருள்) பகலும் இரவும் மாலையும் காலையும் குளிர்காலமும் வசந்தகாலமும் மீண்டும் மீண்டும் வருகின்றன. காலம் விளையாடுகின்றது. ஆயுள் செல்லுகின்றது என்றாலும் ஆசாபாசங்கள் விடுவதில்லை)

மாயாதத்துவத்தை விளக்கிய ஆதிசங்கரரின் அருமையான வாசகம் கவியரசன் தமிழோடு கலந்தவுடன் எப்படியெல்லாம் இனிக்கிறது பாருங்கள். , 

Reply all
Reply to author
Forward
0 new messages