நம் தமிழ் மொழியில் 'வல்லினம்' 'மெல்லினம்' 'இடையினம்' என மூன்று இன எழுத்துக்களை பயன்படுத்துவது அறிந்த ஒன்று.
கருத்தியல் ரீதியிலும் சரி -தர்க்க ரீதியிலும் சரி..
வலுத்தது முதலிலும் , இளைத்தது ஈற்றிலும், மத்திமமானது இடையிலும் இருக்கவேண்டும்.
அதாவது வல்லினம்.இடையினம், மெல்லினம் என்ற வரிசையில் இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் வல்லினம்., மெல்லினம், இடையினம்..எனும் அமைப்பில் இடையில் இருக்க வேண்டிய இடையினம் கடைக்கு சென்றது ஏன்..?
நான் சிறிய வயதாய் இருந்தபோது எங்கள் வீட்டிற்கு நிறைய தமிழறிஞர்கள் வருவார்கள். அப்போது ஒரு முறை என் தந்தையார் இவ்வாறு சொல்ல கேட்டிருக்கிறேன்" " தமிழ்" என்கிற சொல்லில்
த -வல்லினம்
மி -மெல்லினம்
ழ் - இடையினம்
இந்த அமைப்பினையொட்டியே இலக்கணம் வகுத்தவர்கள்- எழுத்தையும் வரிசைப்படுத்தியிருக்க வேண்டும் " என்று.
இந்த அழகியலான கற்பனை சரியா..? அல்லது வேறு குறிப்பிட்ட காரணம் ஏதும் உண்டா..?
மின் தமிழ் அறிஞர்கள் விளக்கலாமே...!
என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!
தமிழ்'அழகி'யுடன்
வெங்கட்.தாயுமானவன்
செந்தமிழை செழுந்தமிழாக்க (
http://free.azhagi.com) easy tamil transliterator.(அழகிய தமிழ்மகள்)
என் தமிழோடு கைகுலுக்க
(
www.kvthaayumaanavan.blogspot.com)