கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?

129 views
Skip to first unread message

செல்வன்

unread,
Sep 2, 2011, 11:25:05 PM9/2/11
to mintamil, தமிழ் சிறகுகள், தமிழமுதம்

கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?

விஞ்ஞானி க.பொன்முடி

http://chennaiscientist.blogspot.com/

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=299&Itemid=139

ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் சுமத்ரா, ஜாவா, பாலி, லம்போக், சும்பவா, புளோரஸ், திமோர் என வரிசையாகப் பல தீவுகள் அமைந்திருக்கின்றன. இதில் புளோரஸ் என்ற தீவில் உள்ள ஒரு குகையில் இருந்து பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, மூன்று அடி உயரமேயுள்ள கற்காலக் குள்ள மனிதர்களின் எலும்புகளையும் அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளையும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சியில் எடுத்திருக்கின்றனர்.

       ஏற்கனவே திமோர் தீவில் இருந்தும் தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாவில் இருந்தும் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்களின் எலும்புகளையும் கற்கருவிகளையும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்திருக்கின்றனர். ஆனால் புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளை அடைவது அவ்வளவு சுலபம் அல்ல.

       குறிப்பாக லம்போக் சும்பவா புளோரஸ் திமோர் ஆகிய தீவுகள் நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கின்றன. முக்கியமாக பாலி தீவில் இருந்து லம்போக் தீவு, முப்பது கீலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே “சேப்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமும் ஓடுகிறது. எனவே பாய்மரக் கப்பல் அல்லது இயந்திரப் படகு மூலமாகவே இக்கடல் பகுதியைக் கடக்க முடியும். எனவே கற்கால மனிதர்கள் எப்படி இந்த ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து புளோரஸ், திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் சென்றார்கள் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் எழுந்திருக்கின்றன.

       அறுநூறு அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலும் இலங்கையிலும் கூட கற்கால மனிதர்களின் எலும்புகளும், கற்கருவிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்றிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

       அதன் பிறகு கடல் மட்டம் அறுநூறு அடி உயர்ந்ததற்கு நிலத்தின் மேல் இருந்த பனி உருகிக் கடலில் கலந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் ஆனால் நாலாயிரம் அடி வரை ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் கற்கால மனிதர்கள் எப்படி சென்றார்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

       டிம் வைட் என்ற ஆராய்ச்சியாளர், புளோரஸ் தீவிற்கு கற்காலக் குள்ள மனிதர்கள் பாலி தீவில் இருந்து சுனாமி அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக் கிளைகள் மூலம் வந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

       ஆனால் ராபர்ட் பெட்நரிக் என்ற ஆராய்ச்சியாளரோ இந்தோனேசியத் தீவுகளுக்கு இடையே ஓடும் கடல் நீரோட்டங்களை, கட்டுமரம் போன்ற மரக் கலங்கள் மூலமாக, துடுப்பு போட்டு வலிந்து கடந்தால்தான் கடக்க முடியும் என்று கூறுகிறார். கூறியதோடு நிற்காமல் அவர் சோதனை முயற்சியாக கட்டுமரம் மூலம் பாலி தீவில் இருந்து லம்போக் தீவிற்கு சில மாதிரிப் பயணங்களையும் மேற்கொண்டார். அவரது கட்டுமரக் கடல் பயணத்தை பி.பி.சி. செய்தி நிறுவனமும். நேஷனல் ஜியாகிரபிக் சேனலும் செய்திப் படமாகத் தயாரித்தன.

              முக்கியமாக கட்டுமரம் முழுக்க முழுக்க கற்கருவிகளைக் கொண்டுதான் தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் கல்லைக் கொண்டு மூங்கில்களை வெட்டும் பொழுது மூங்கில்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இது போன்ற மூங்கில்களைக் கொண்டு கட்டுமரம் செய்தால் அந்தக் கட்டுமரம் கடலில் மிதக்காமல் மூழ்கி விடும். எனவே முக்கிய நிபந்தனை விலக்கிக் கொள்ளப்பட்டு, இரும்புக் கருவிகள் மூலம் கட்டுமரம் செய்யப்பட்டது. அதே போல் கல்லைக் கொண்டு ஒரு துடுப்பைக் கூட செய்ய முடியவில்லை.

       கட்டு மரம் தயாரானதும் பாலி தீவில் இருந்து அதிகாலை ஆறு முப்பது மணிக்கு உதவிக் கப்பல்கள் புடை சூழ, கட்டுமரம் கடலில் இறங்கியது. மொத்தம் பனிரெண்டு பேர், முதலில் மூவர் மட்டுமே துடுப்பு போட்டனர். மூன்று மணி நேரத்தில் அவர்கள் களைத்ததும் அடுத்த மூன்று பேர் துடுப்பு போட்டனர். உச்சி வெய்யிலில் அவர்களும் சோர்ந்து விட, உடன் அடுத்த செட் பணியைத் தொடங்கியது. அதே நேரத்தில் கட்டுமரம் ஆழமான கடல் பகுதியை அடைந்தது. இது வரை முன்னேறிக் கொண்டு இருந்த கட்டுமரத்தை கடல் நீரோட்டம் பக்க வாட்டில் இழுத்தது.

       இருப்பினும் விடாப்பிடியாகத் துடுப்பு போட்டதில் ஒருவர் மயங்கி விழ, அவருக்குப் பதிலாக உதவிக் கப்பலில் இருந்து வந்த ஒருவர் மூலம் மறுபடியும் கட்டுமரம் செலுத்தப்பட்டது. அதற்குள் கடல் நீரோட்டம் கட்டுமரத்தை வெகு தூரம் இழுத்துச் சென்றதில், இது வரை எதிரில் தெரிந்த தீவே கண்ணில் இருந்து மறைந்துவிட்டது. எனவே கட்டுமரம் பழைய இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு, மறுபடியும் துடுப்பு மூலம் செலுத்தப் பட்டது.

       ஆனாலும் கட்டுமரம் அங்குலம் அங்குலமாகவே முன்னேறியது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக காற்று திசை மாறி வீசிய பொழுது, கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முன்னேறியதில் மாலை ஆறு முப்பது மணிக்கு லம்போக் தீவிற்கு, முன்பே இருக்கும் ஜிலி என்ற தீவில் கட்டுமரம் கரை ஒதுங்கியது. “ஓரிரு நிமிடங்கள் நாங்கள் ஓய்வு எடுத்து இருந்தாலும் எங்களால் கரையை அடைந்திருக்க இயலாது” என்று கட்டுமரத்தை செலுத்தியவர்கள் மூச்சிரைக்கக் கூறினார்கள். ஆக மொத்தம் பனிரெண்டு மணிநேரம் தொடர்ந்து துடுப்பு போட்டும் லம்போக் தீவை அடையும் முயற்சி தோல்வியடைந்தது.

       தற்கால மனிதர்களாலேயே கடக்க இயலாத கடல் பகுதியை கற்கால மனிதர்கள் எப்படி கடந்திருப்பார்கள்?

       இது குறித்து லாயின் டேவிட்சன் என்ற ஆராய்ச்சியாளர், கடந்த இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமின்றி ஒரே மாதிரி காணப்படுகின்றன. எனவே கற்கால மனிதர்களின் அறிவு நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே கற்கால மனிதர்கள் நீண்ட காலத் திட்டம் போட்டு தொலை தூரக் கடல் பயணங்களை மேற்கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்று டேவிட்சன் கூறுகிறார்.

       எல்லாவற்றுக்கும் மேலாக திமோர் தீவில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டம் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பதால், திமோர் தீவில் இருந்து பார்த்தால் ஆஸ்திரேலியக் கண்டம் இருப்பது கண்ணுக்கே தெரியவில்லை. எனவே கண்ணுக்கே தெரியாத ஒரு இலக்கை நோக்கி கற்கால மனிதர்கள் கடல் பயணம் மேற்கொண்டிருப்பார்களா? அது மட்டுமல்லாது திமோர் தீவிற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் இருக்கும் ஆழ் கடல் பகுதியைக் கடக்கவே பெட் நரிக் குழுவினருக்கு ஆறு நாட்கள் ஆனது. இது போன்ற பகல் இரவுப் பயணங்களை அதுவும் “கடலில்” கற்கால மனிதர்கள் மேற்கொண்டிருப்பார்களா? ஆறு நாட்களுக்கு கற்கால மனிதர்கள் உணவுக்கும் முக்கியமாக குடி நீருக்கும் என்ன செய்திருப்பார்கள்?

“காட்டு மிராண்டிகள் கடல் பயணம் செய்ய வில்லை. கடல் மட்டம் தான் நாலாயிரம் அடி தாழ்வாக இருந்திருக்கிறது.”

       எனவே ஆசியக் கண்டத்திலிருந்து நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்தில், நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்களின் எலும்புகளும் கற்கருவிகளும் காணப்படுவதற்கு, நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியப் பகுதியில் கடல்மட்டம் நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததே காரணம்.

       எனவே நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது. அதன் வழியாகவே கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்திலிருந்து ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு நடந்தே தான் சென்றிருக்கிறார்கள். அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது அதே நேரத்தில் நிலப் பகுதியும் ஆங்காங்கே உயர்ந்ததால் தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதி பல துண்டுகளாக உடைந்ததுடன், கடல் மட்டமும் உயர்ந்ததால் பல தீவுகளாக உருவானது. அதனால் கற்கால மனிதர்களால் தீவை விட்டு வெளியேற இயலாமல் தீவுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

நிலம் ஏன் உயர்ந்தது? கடல் மட்டம் ஏன் உயர்ந்தது?

       பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவானது. இந்நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் எண்ணெயும் பிரிந்ததால் பாறைத் தட்டு அடர்த்தி குறைந்ததாக உருவானது. இதனால் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததால் நிலப் பகுதிகள் உயர்ந்தது. அதே நேரத்தில் பாறைக் குழம்பு குளிர்ந்த பொழுது அதிலிருந்து பிரிந்த நீர், ஆழ் கடல் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக கடலில் சேர்ந்ததால் கடல் மட்டம் நாலாயிரம் அடி உயர்ந்தது.

       இவ்வாறு நிலப் பகுதிகள் உயரும்பொழுது தான் நில அதிர்ச்சி நிலச் சரிவு சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன.

கண்டங்கள் நகர்கின்றன என்று கூறுவது சரியல்ல.

       கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்தது. அதன் வழியாக விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு இடம் பெயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கண்டங்கள் கடல் பகுதியால் பிரிக்கப்பட்டன.

       எனவே ஒரே வகை விலங்கினங்கள் கடல் பகுதியால் பிரிக்கப்பட்ட பல்வேறு கண்டங்களில் காணப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததே காரணம். ஆனால் ஒரே வகை விலங்கினங்கள் பல கண்டங்களிலும், தீவுகளிலும் காணப்படுவதற்கு, ஒரு காலத்தில் இந்த நிலப்பகுதிகள் யாவும் ஒன்றாக இணைந்து ஒரு பெரியகண்டம் இருந்ததாகவும் அதன் பிறகு அந்தப் பெருங்கண்டம் பல துண்டுகளாக உடைந்து பல்வேறு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று கற்பனையாக ஒரு விளக்கம் கூறப்படுகிறது.

       குறிப்பாக அட்லாண்டிக் கடலால் பிரிக்கப்பட்ட தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் மெசோசாரஸ் என்ற நிலத்தில் வாழ்ந்த விலங்கின் எலும்புகள் காணப்படுவதற்கு, முன்பு ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்தன என்றும் பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் முற்றிலும் தவறான ஒரு விளக்கம் கூறப்படுகிறது.

       ஆனால் உண்மையில் நிலம் உயர்ந்து கொண்டிருக்கிறது அதன் காரணமாகவே நில அதிர்ச்சி ஏற்படுகின்றது.

 -  விஞ்ஞானி க.பொன்முடி. ( g.po...@yahoo.com)

--
செல்வன்

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

www.holyox.blogspot.com

http://twitter.com/#holyox

https://profiles.google.com/holyape/buzz

https://www.facebook.com/holyape

sk natarajan

unread,
Sep 3, 2011, 1:54:43 PM9/3/11
to tamizhs...@googlegroups.com, mintamil, தமிழமுதம்
அருமையான  அலசல்
  ஆனால் உண்மையில் நிலம் உயர்ந்து கொண்டிருக்கிறது அதன் காரணமாகவே நில அதிர்ச்சி ஏற்படுகின்றது.

நிலத்தடி நீர் அதிகமாக எடுப்பதினால் பல்வேறு அடுக்குகளில் இடையிடையே  உள்ள நீர்ந குறைந்து பாறைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் நில நடுக்கம் ஏற்படுவதாகவும்  சொல்வார்களா
அது உண்மை இல்லையா
 
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/9/3 செல்வன் <hol...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Sep 5, 2011, 11:37:09 AM9/5/11
to mint...@googlegroups.com
கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?
 
வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன
 
பொன்முடி அவர்களின் கட்டுரையில் வட தமிழகத்தில் கடலை ஒட்டி வாழ்ந்த கற் கால மக்களுக்கும் அங்கு முட்டை இட வரும் ஆமைகள் மற்றும் இந்திய பசிபிக்  தீவுகளில் வாழ்ந்த ஆதி வாசிகளை பற்றியும் அதிகம் குறிப்பிட வில்லை
 
இணையத்தில் அதிகம் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதால் பிறகு விரிவாக எழுதுகிறேன்
 
N. Kannan

unread,
Sep 6, 2011, 8:10:43 AM9/6/11
to mint...@googlegroups.com
இல்லையெனில் ஈஸ்டர் தீவில் எப்படிக் குடியேறி இருக்க முடியும்?

ஆசியாவிலிருந்து தென்னமெரிக்காவிற்கு பழைய காலத்துக் கப்பலில் பயணம்
செய்து காட்டியுள்ளார்களே!

உங்க ஆமை கதையே சொல்லுமே! கடல் நீரோட்டத்தை அறிந்து கொண்டால் கட்டு சோறு
கட்டிக்கொண்டு ஓடத்தில் சும்மா இருந்தால் கூட கடல் தாண்டிப்போய்
விடலாமென்று :-) (கடற் குப்பைகள் ஓடமிட்டா கரை சேருகின்றன?)

க.>

2011/9/6 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

coral shree

unread,
Sep 6, 2011, 8:19:15 AM9/6/11
to mint...@googlegroups.com
சுவையோ சுவையான ஆய்வுதான்.........

2011/9/6 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

s.bala subramani B+ve

unread,
Sep 6, 2011, 10:28:08 AM9/6/11
to mint...@googlegroups.com

உங்க ஆமை கதையே சொல்லுமே! கடல் நீரோட்டத்தை அறிந்து கொண்டால் கட்டு சோறு
கட்டிக்கொண்டு ஓடத்தில் சும்மா இருந்தால் கூட கடல் தாண்டிப்போய்
விடலாமென்று :-) (கடற் குப்பைகள் ஓடமிட்டா கரை சேருகின்றன?)

க.>
    கண்ணன் அவர்களுக்கு
   
     முற்றிலும் உண்மை
 
பசிபிக் தீவு கூட்டங்களில் இருந்து நியூஜீலாந்து பகுதிக்குள்  zeal india  http://en.wikipedia.org/wiki/Zealandia_(continent) என்ற இடத்தில்   மீன் பிடிக்க வரும் தீவு மக்கள் தான் வந்த இடத்தில் இருந்து திரும்பி செல்ல வருடங்கள் பல ஆகின்றதால் ,தான் வசிக்கும் தீவுகளில் இருந்து  வரும் ஆமைகளின் முதுகில் தான் இருக்கும் இடத்தை குறித்த குறி பெயிண்ட் செய்யும்   வழக்கம் இன்று வரை இருக்கிறது
     அங்கு வான்கரை http://en.wikipedia.org/wiki/Whangarei  என்ற பகுதிக்கு சென்று வந்த என் நண்பர் கன்னிய்குமரியை சேர்ந்த ராஜேஷ் கொடுத்த  தகவல்
 
      என்னை மேலும் இயங்க வைத்தது
 
    கடலில் மூழ்கி உள்ள இடங்களை கண்டு பிடிக்க ஆமைகள் சங்குகள் எறாக்கள் ,அம்மா மீன்கள் எனக்கு      மிகவும் உதவி  செய்தன
அந்த ஆய்வுகளும் ஒரிசாவில் கிடைத்த ஆமைகள் தொடர்பான அனுபவங்களும் என்னை ஆமைகளின் உலகாளவிய பயணங்களையும் அதை கண்டு கொண்ட நமது கட்லோடிகளையும் பற்றிய ஆய்வில் தள்ளியது
 
கடலில் செல்லும் மக்கள் தாங்கள் திரும்பி வரும் காலம் அறியாதளால் அதற்கு ஏற்ற உணவுகளையே கொண்டு செல்கிறார்கள் குறிப்பாக குறு மிளகு 
அது கிடைக்கும் இடத்தை இன்றளவும் கன்னியாகுமரியில் குறுநாடு என்று அழைகிறார்கள்
 
ஆமைகள் குறித்த மற்றும்  மூழ்கிய நிலங்களை குறித்த  என்னுடிய  ஆய்வுகள் இந்த நிலத்தை அதில் வாழ்ந்த மனிதர்களை  குறித்த புதிய சிந்தனையை
அளித்து வருகிறது .
 
கரு கொண்ட ஆமைகள் தன்னுடிய முட்டைகளை பாதுகாப்பான இடத்தில் இட தேடி கன்னியகுமரியில் இருந்து ஒரிசா வரை செல்லும் காட்சி
 
காசில்லாமல் மருத்தவமனை தேடி அலையும் ஏழை தாய்மார்கள் நினைவுக்குள் அடிக்கடி வருகிறார்கள்
 
பல ஆயிரம் கிலோமீட்டர் நம் கடற்கரைக்கு அந்த நண்பர்கள் வர என்ன காரணம் இயற்கையே அறியும்
 
அதை பின் தொடர்ந்து சென்ற நம் கடலோடிகள் சென்ற நிலத்திற்கு அதன் தட்ப வெப்ப  நிலையை  ஒட்டி  உருவம் மாறி மறுபடியும் தாய்  மண்ணிற்கு திரும்பும் போது இங்கு உள்ளவர்கள் அவர்களை அயல்  மனிதராக தான் பார்கிறார்கள்
 
இன்று தமிழ்நாட்டில் ஆமைகள் குறித்த விழிப்புணர்வு உண்டாகி வருகிறது
 
N. Kannan

unread,
Sep 6, 2011, 11:38:01 PM9/6/11
to mint...@googlegroups.com
2011/9/6 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

> பல ஆயிரம் கிலோமீட்டர் நம் கடற்கரைக்கு அந்த நண்பர்கள் வர என்ன காரணம் இயற்கையே

> அறியும்
>
> அதை பின் தொடர்ந்து சென்ற நம் கடலோடிகள் சென்ற நிலத்திற்கு
> அதன் தட்ப வெப்ப  நிலையை  ஒட்டி  உருவம் மாறி மறுபடியும் தாய்  மண்ணிற்கு
> திரும்பும் போது இங்கு உள்ளவர்கள் அவர்களை அயல்  மனிதராக தான் பார்கிறார்கள்
>
> இன்று தமிழ்நாட்டில் ஆமைகள் குறித்த விழிப்புணர்வு உண்டாகி வருகிறது
>

ஆமையைத் தெய்வமென்று (கூர்ம அவதாரம்) சொன்ன பின்னும் கொல்கிறார்கள்.

யார் சொன்னது God is dead என்று? நீஷேயா? :-))

க.>

செல்வன்

unread,
Sep 6, 2011, 11:44:19 PM9/6/11
to mint...@googlegroups.com

2011/9/6 N. Kannan <navan...@gmail.com>

ஆமையைத் தெய்வமென்று (கூர்ம அவதாரம்) சொன்ன பின்னும் கொல்கிறார்கள்.

வராகத்தையும்,மீனையும் கூடதான் தெய்வம் என்றோம்.

கொல்லாமலா இருக்கிறார்கள்?

--
செல்வன்

ரிக் பெர்ரி 2012

s.bala subramani B+ve

unread,
Sep 7, 2011, 1:31:49 AM9/7/11
to mint...@googlegroups.com
2011/9/6 N. Kannan <navan...@gmail.com>
ஆமையைத் தெய்வமென்று (கூர்ம அவதாரம்) சொன்ன பின்னும் கொல்கிறார்கள்.

தமிழக கடற்கரை ஓரத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் (காஞ்சியில் கூட ) ஆமைகளை கச்சேச்வர் கமுடேச்வர் என்று சைவ வைணவ கோயில்களில் வணங்க தான் செய்கிறார்கள்
 
ஆந்திராவில் ஸ்ரீ குர்மம் என்ற இடத்தில் ஆமைகளை  வளர்க்கிறார்கள்
 
பல்லவர் காலத்தில் படுவூர் கோட்டத்து மேல் அடையாறு  நாட்டில் உள்ள ஆமியூர் ஆமையூர் என்றும்
திருவான்மியூர் என்றும்
 
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆமந்துறை என்றும் பல பல செய்திகள் ஆமைகள் தொடர்பாக உள்ளன
 
என் ஆய்வில் பெரும்பாலம் மருத நில மக்களுக்கு ஆமைகளை உண்ணும் பழக்கம் இருந்து இருக்கிறது
 
நெய்தல் மக்கள் இன்றும் ஆமைகளை கடவுளாக தான் பார்கிறார்கள்
 
ஆமைகள் தான் அவர்கள் முன்னோர்களுக்கு நீந்தவும் துடுப்பு போடவும் சொல்லி கொடுத்தது  என்ற தகவலை
நாகை கடற்கரைகளில் பல ஊர்களில் கேட்டு இருக்கிறேன்
 
தோணி ஆமைகள்,
பண்ணி ஆமைகள்
எழு வரி ஆமைகள்
என்று தொண்டை ,சோழ பாண்டி நாட்டு  மக்களால் அழைக்கப்படும் ஆமைகள்
 
கடலில் செல்ல மூதாதையர்களை தூண்டி இருக்கலாம்
 
மருத நிலம் நெய்தலாகி  போன இடங்களில் ஆமைகளை  உண்ணும் பழக்கம் இருக்கிறது
 
செட்டிகுளம் கடற்கரையில் இருந்து தேரசபுரம் வரை பல இடங்களில் மருதம்  நிலம் நெய்தல் நிலமானத்தை நேரில் பார்க்கலாம்
 
அங்கு கூட்டம் கூட்டமாக ஆமைகளை சந்தைக்கு ஒட்டி சென்றவர்களை சந்தித்து பல தகவல்களை பெற்றேன்
 
இன்னும் நிறைய இருக்கிறது
 
அன்புடன்
 
சிவ பாலசுப்ரமணி
 
செல்வன்

unread,
Sep 7, 2011, 1:35:17 AM9/7/11
to mint...@googlegroups.com
http://www.youtube.com/watch?v=SvGU0wy6IOQ

ஆமைக்கறி தின்பது எப்படி?

விளக்குகிறார் ஆண்ட்ரூ ஸிம்மர்ன்
--
செல்வன்

ராஜ்யமா இல்லை இமயமா?
எங்கிவன் நாளை எங்கிவன்?
மன்னனா இல்லை மவுல்வியா?
யாரிவன் நாளை யாரிவன்?

s.bala subramani B+ve

unread,
Sep 7, 2011, 1:49:23 AM9/7/11
to mint...@googlegroups.com
நன்றி 
 
நான் கடந்த சில வருடங்களாக கடல் உணவுகளை தொடுவதல்லை
 
நண்பர்களை கொல்ல முடியுமா
 
வாரம் தோறும் செஞ்சி காடுகளில் வேட்டைக்கு செல்லும் வேட்டை காரருக்கு மகனாய் பிறந்தவன்
வேட்டைக்கும் சென்று வந்தவன்
 
அப்பாவுடன் மற்றும் ஒரிசா தால்ச்சர் ,மதன்பூர்  அரச குடும்பத்துடன் 
 
 எல்லா நாளும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிட்டு வந்தவனுக்கு
 பிற் காலத்தில் பிராமின் பெண்ணை மணந்து வீட்டில் சைவமும் வெளியில் பிடித்த கடல் உணவுகளை
வெளுத்து கட்டி கொண்டு தான்  இருந்தேன்

புதுவை கடலில் டைவிங்  செய்யும் வரை

20  மீட்டர் ஆழ்த்தில் மிக பெரிய மீன் கூட்டம் (பாடு௦ ) என்னை பார்த்துகொண்டே  அருகில் வந்து
தொடாமல் விலகி சென்றதில் இருந்து
(எப்படி கதி கலங்கி போனேன் என்பது எனக்கு தான் தெரியும் )
 
2011/9/7 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Nagarajan Vadivel

unread,
Sep 7, 2011, 1:57:45 AM9/7/11
to mint...@googlegroups.com
இ்ந்தோனேசியாவில் கிழக்குக் கலிமந்தானில் மஹாகம் நதியில் பட்டுப்பாதை வழியில் பயனம் போனபோது என்னுடன் படகில் வந்தவர்கள் கரையில் ஆமை முட்டை பச்சையாக அப்படியே உடைததுச் சாப்பிட்டார்கள்.  செயற்கைக்கோள் மூலம் Surdface accoustic wave chip மூலம் கீழ்த்திசைக் கடல் பகுதியில் ஆமைகளின் நடமாட்டத்தைப் படிக்கலாம்.  பட்டுப்பாதையுடன் ஒப்பு நோக்கு செய்யலாம்
பசிபிக் கடலில் ஆமைகள் நடமாட்டம் செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்யப் படுகிறது
ஒரிஸ்ஸா பகுதியில் ஆமைகள் நடமாட்டம் பற்றிச் சில ஆய்வறிக்கைகள் காணக்கிடைக்கும்
நாகராசன்்
 
2011/9/7 செல்வன் <hol...@gmail.com>
--

s.bala subramani B+ve

unread,
Sep 7, 2011, 2:08:28 AM9/7/11
to mint...@googlegroups.com
 
ஒரிசாவில் மற்றும் தென் கிழக்கு இந்தியாவின்  உள்ள அனைத்து  இடங்களுக்கும் சென்று இருக்கிறேன் 
 
இந்திய கடற்கரைகளில் ஆமைகள் தொடர்பாக ஆய்வு செய்பவர்கள் அனைவரும் இப்பொழுது தொடர்பில் இருக்கிறோம்
 
2011/9/7 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Sep 7, 2011, 2:21:23 AM9/7/11
to mint...@googlegroups.com
செயற்கைக்கோள் மூலம் Surdface accoustic wave chip மூலம் கீழ்த்திசைக் கடல் பகுதியில் ஆமைகளின் நடமாட்டத்தைப் படிக்கலாம்.  பட்டுப்பாதையுடன் ஒப்பு நோக்கு செய்யலாம்
 
இந்த வருடம் அதிக  அளவில் RFID ஆமைகளின்   முதுகில்  வைக்க  போகிறோம் 
 
பட்டு பாதைகளின் கடல் வழிகளும் ஆமைகளின்  வழிகளும் பொருந்துகின்றன 
 
மெக்ஸிகோ,    சீனா ,எகிப்து, சுமர் , நுபியானஸ் சியாம்   நாகரிகத்துக்கு இணையான் பாண்டிய நாகரிகம் பற்றிய
ஆய்வுகள் தொடர்கின்றன
 
2011/9/7 செல்வன் <hol...@gmail.com>
http://www.youtube.com/watch?v=SvGU0wy6IOQ

ஆமைக்கறி தின்பது எப்படி?

விளக்குகிறார் ஆண்ட்ரூ ஸிம்மர்ன்
--
செல்வன்

ராஜ்யமா இல்லை இமயமா?
எங்கிவன் நாளை எங்கிவன்?
மன்னனா இல்லை மவுல்வியா?
யாரிவன் நாளை யாரிவன்?
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Sep 7, 2011, 1:45:36 AM9/7/11
to mint...@googlegroups.com
ஆமையைத் தெய்வமென்று (கூர்ம அவதாரம்) சொன்ன பின்னும் கொல்கிறார்கள்.
வராகத்தையும்,மீனையும் கூடதான் தெய்வம் என்றோம்.
கொல்லாமலா இருக்கிறார்கள்?
 
இது ஒரு சிறு கூட்டத்தின் கருத்தாக்கம் அதைப் பெருவாரியான மக்கள் மீது திணிக்கலாகுமா? பண்ட மாற்று வழங்கிய போது மீனும், பன்றியும் மாறுகொள்ளப் பயன்பட்டன அவை மக்களால் புசிக்கப்படுவதால். மதம் உண்மையில் மக்களின் பொருளியலைச் சீர்குலைத்தது என்பதற்கு ஒரு நல்ல சான்று சமண மதம், கட்ந்த ஆண்டு (2010 பெபரவரி) நான் ஒரு நிதி முதலீட்டு நிறுவனத்தால் மூன்று நாள்களுக்கு கொச்சியில் பரிசளிப்பு விழாவிற்கு அவர்களுடைய செலவில் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்குள்ள நெட்டூரில் Le Meridien விடுதியில் நாளொன்றுக்கு ஒரு அறைக்கு  உரூ 18,000/-  வாடகையில்  உணவுடன் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  படகு உலாவும் அதில் அடங்கும்.. இறுதி நாளில் உணவு விடுதியில் உணவின் போது Jain Food  என்ற பலகை என் கண்ணில் பட்டது.  நாங்கள் பலரும்  சைவ உணவைத்தான் உண்டு கொண்டிருந்தோம்.. எனினும் எதற்கு இப்படி சமணர்களுக்கு என்று தனி அறை ஏற்பாடு? நாம் உண்ணும் சைவ உணவிற்கும் சமண உணவிற்கும் என்ன வேறுபாடு என அறியும் ஆர்வ மேலீட்டால்  அங்கு திரிந்து கொண்டிருந்த  வரவேற்பாளரிடம் சமண உணவு என்பது எதைக் குறிக்கிறது என்றேன் ? நாங்களும் சைவ உணவு தானே உண்டு கொண்டிருக்கிறோம் என்றேன். அதற்கு அந்த வரவேற்பாளன் அல்லை! ஐயா! அதில் நிலத்தடியில் விளையும் காய்கறிகள் இடம்பெறா. உங்கள் சைவ உணவில் அவை இடம்பெறுகின்றன என்றான். அதனால் அதில் முள்ளஙகி, உருளை. கேரட்டு, சக்கரைக்கிழங்கு, சேனைக்கிழங்கு கருணைக்கிழங்கு ஆகியன தவிர்ககப்பட்டுள்ளன என்றான். இதைக் கேட்டதும் சமணத்தின் கோட்பாடு பொருளியலுக்கும்  மக்களின் பண்ட மாற்று  வாழ்விற்கும் எத்தகு கேடானது என்பதை உணர்ந்தேன். சமணர்கள் உழவில் ஈடுபட்டால் நில்த்தில் உள்ள மண்புழுக்கள் கொல்லப்பட்டு விடும் என்பதற்காக  உழவைத் தவிர்த்து  வணிகத்தில்  ஈடுபட்டனர்.  புலால் உணவு தவிர்ப்பில் ஏற்படும் பொருளியல் பாதிப்பை விட நிலங்கீறுதல்( ஏர்ஓட்டுதல்) தவிர்ப்பு என்பது அதிக பொருளியல் பாதிப்பை ஏற்படுத்தும். இது தான் சமணத்தால் நிகழ்ந்தது. 
    
செல்வன்

ரிக் பெர்ரி 2012

செல்வன்

unread,
Sep 7, 2011, 2:54:05 AM9/7/11
to mint...@googlegroups.com

2011/9/7 seshadri sridharan <ssesh...@gmail.com>

புலால் உணவு தவிர்ப்பில் ஏற்படும் பொருளியல் பாதிப்பை விட நிலங்கீறுதல்( ஏர்ஓட்டுதல்) தவிர்ப்பு என்பது அதிக பொருளியல் பாதிப்பை ஏற்படுத்தும். இது தான் சமணத்தால் நிகழ்ந்தது. 

உங்கள் பொருளாதார கொள்கைகளை நீங்கள் நிறைய மறுபரிசீலனை செய்யவேண்டும்.

சமணர்கள் அரிசி,கோதுமையை எல்லாம் உண்ணதான் செய்கிறார்கள்.அவை எல்லாம் நிலம்கீறுதலால் விளைபவைதான்.

--
செல்வன்

ராஜ்யமா இல்லை இமயமா?
எங்கிவன் நாளை எங்கிவன்?
மன்னனா இல்லை மவுல்வியா?
யாரிவன் நாளை யாரிவன்?

prakash sugumaran

unread,
Sep 7, 2011, 8:27:32 AM9/7/11
to mint...@googlegroups.com
தென் இந்திய சமணர்கள் அல்லது திகம்பரர்கள் இன்றும் பெரிய நிலக் கிழார்கள். வட இந்திய ஜெயின்கள், மார்வாடிகள் அல்லது ச்வேதம்பரர்கள் மட்டுமே வணிகர்கள். தமிழக மற்ற வேளாளர்களுக்கும், சமண வேளாளர்களுக்கும் உள்ள வித்தியாசம், சமணர்கள் பழைய முறையில் மட்டுமே பயிர் செய்பவர்கள், மற்ற சமூக வேளாளர்கள் புதிய புதிய முறைகளை முயற்சி செய்பவர்கள்.

2011/9/7 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
prakash sugumaran

visit my blog
http://thamizharkoodu.blogspot.com/
see me at THF Hub
http://image-thf.blogspot.com/

seshadri sridharan

unread,
Sep 8, 2011, 10:27:04 AM9/8/11
to mint...@googlegroups.com
உங்கள் பொருளாதார கொள்கைகளை நீங்கள் நிறைய மறுபரிசீலனை செய்யவேண்டும். எதன்படி அல்லது எப்படி என்று சொல்லுங்கள்..

சமணர்கள் அரிசி,கோதுமையை எல்லாம் உண்ணதான் செய்கிறார்கள்.அவை எல்லாம் நிலம்கீறுதலால் விளைபவைதான்.
ஆம் உண்ணாது போனால் உயிர் வாழ்வது எப்படி. அதற்காக உண்ணுகிறார்கள். ஆனால் அந்த நிலங்கீறும் வேலையில் இவர்கள் ஈடுபடுவதைத் தவிர்த்தார்கள். கால ஓட்டத்தில சமணத்திற்கு ஆதரவு குன்றிய வேளையில், இவர்களின் தொகை மிகவும் அருகிவிட்ட  இககாலத்தில்  இவர்களில் சிலர் நிலமுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மை.  அது கால சூலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளுதல் என்பதன் பால் படும். சிலப்பதிகாரக் காப்பிய நாயகன் வணிகன் தானே. 
சோத்திரி

செல்வன்

ராஜ்யமா இல்லை இமயமா?
எங்கிவன் நாளை எங்கிவன்?
மன்னனா இல்லை மவுல்வியா?
யாரிவன் நாளை யாரிவன்?

செல்வன்

unread,
Sep 9, 2011, 5:16:12 PM9/9/11
to mint...@googlegroups.com

2011/9/8 seshadri sridharan <ssesh...@gmail.com>

ஆம் உண்ணாது போனால் உயிர் வாழ்வது எப்படி. அதற்காக உண்ணுகிறார்கள். ஆனால் அந்த நிலங்கீறும் வேலையில் இவர்கள் ஈடுபடுவதைத் தவிர்த்தார்கள். கால ஓட்டத்தில சமணத்திற்கு ஆதரவு குன்றிய வேளையில், இவர்களின் தொகை மிகவும் அருகிவிட்ட  இககாலத்தில்  இவர்களில் சிலர் நிலமுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மை.  அது கால சூலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளுதல் என்பதன் பால் படும். சிலப்பதிகாரக் காப்பிய நாயகன் வணிகன் தானே. 

நானும் தான் நிலம்கீறும் வேலையை தவிர்க்கிறேன்.நீங்களும் நிலம்கீறும் வேலையில் இல்லை என நினைக்கிறேன்.அதனால் பொருளாதாரம் எதுவும் பாதிக்கபட்டதாக தெரியவில்லை.நாடு நன்றாகதான் உள்ளது.

--
செல்வன்

கடவுளை மறுத்திவன் நாள்தோறும் கூறினானே நாத்தீகம்
பகுத்தறி வாளனின் நெஞ்சினிலே பூத்ததென்ன ஆத்திகம் ?
திருமகன் வருகிறான் திருநீறை நெற்றி மீது தினம் பூசி
அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி ?

seshadri sridharan

unread,
Sep 10, 2011, 7:02:50 AM9/10/11
to mint...@googlegroups.com

2011/9/10 செல்வன் hol...@gmail.com

நானும் தான் நிலம்கீறும் வேலையை தவிர்க்கிறேன்.நீங்களும் நிலம்கீறும் வேலையில் இல்லை என நினைக்கிறேன்.அதனால் பொருளாதாரம் எதுவும் பாதிக்கபட்டதாக தெரியவில்லை.நாடு நன்றாகதான் உள்ளது.
 
நாம் இருவரும் நிலம்கீறுதலில் ஈடுபடவில்லை என்பதால் நாம் அதற்கு எதிலானவர் அல்லோம்!  அத்தகு கொள்கையும் நமக்கு இல்லை என்பது உறுதி. ஆனால் சமணக் கோட்பாட்டை அவ்வாறு கொள்வதற்கு இல்லை. நம்முடைய கருத்தாடல் சமணம்  எதிர்க்கும் நிலத்தடிவிளை காய்கறி களைப் பற்றி என்பதை ஈண்டு நினைவூட்டி மேலும் தொடர்கிறேன். மக்களுக்கு தேவையான  புரதம், உயிர்ச்சத்து, கனிமம் ஆகியன காய்கறிகளில் கிடைக்கினறன. இவற்றுள் நிலத்தடிவிளை  காய்கறிகளும் அடங்கும். இக்காய்களை விளைப்பதால் அண்ணளவில் (Maximum) நிலம் பயனுக்குக் (utilisation) கொண்டுவரபபடுகிறது. அதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிட்டுகின்றது. இதனால்  இது பொருளியல் முகாமை (importance) வாய்ந்தது.  மேலும் மக்கள் உணவுத் தேவையை நிலத்தடிவிளை காய்கறிகள் கணிசமான அளவில் நிறைவு செய்கின்றன. நீர் மேலாண்மை வளர்ந்து உள்ள இக்காலத்தில் வேர் ஆழமாய் ஊன்றாத கத்தரி போன்ற காய்கறிப் பயிரின்  அடியில் ஏதேனும் கிழங்கைப் பயிர் செய்து ஒரே பாயச்சனத்தில் இரு பயிர்களை விளைத்து  (மேலே கத்தரி  கீழே கருணைக்கிழங்கு) நீர் வீணே  மண்ணுக்குள உறிஞ்சப்படுவதை  தவிர்ந்து பயனடையும் முறையை பிரபாத் ரஞ்சன் சர்ககார் அறிமுகப்படுதினார். சமணர் போன்று மக்கள் நிலத்தடிவிளை காய்களை தவிர்த்தால்  இத்தகு  இரு பயிர் நீர் மேலாண்மையின் பயனை நுகர முடியாது  போகும்.   இதனால் கூடுதல் நீர்ச்  செலவு தவிர்த்தல்  என்பது இயலாததாகிப் போகும்.  இப்போது நான் உணர்த்தும் பொருளியல்  உங்களுக்குப புரிந்திருக்க வேண்டும் என நம்புகிறேன்.
 
    சேசாத்திரி
 
-
செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Sep 10, 2011, 9:03:32 PM9/10/11
to mint...@googlegroups.com

2011/9/10 seshadri sridharan <ssesh...@gmail.com>

நீர் மேலாண்மை வளர்ந்து உள்ள இக்காலத்தில் வேர் ஆழமாய் ஊன்றாத கத்தரி போன்ற காய்கறிப் பயிரின்  அடியில் ஏதேனும் கிழங்கைப் பயிர் செய்து ஒரே பாயச்சனத்தில் இரு பயிர்களை விளைத்து  (மேலே கத்தரி  கீழே கருணைக்கிழங்கு) நீர் வீணே  மண்ணுக்குள உறிஞ்சப்படுவதை  தவிர்ந்து பயனடையும் முறையை பிரபாத் ரஞ்சன் சர்ககார் அறிமுகப்படுதினார். சமணர் போன்று மக்கள் நிலத்தடிவிளை காய்களை தவிர்த்தால்  இத்தகு  இரு பயிர் நீர் மேலாண்மையின் பயனை நுகர முடியாது  போகும்.   இதனால் கூடுதல் நீர்ச்  செலவு தவிர்த்தல்  என்பது இயலாததாகிப் போகும்.  இப்போது நான் உணர்த்தும் பொருளியல்  உங்களுக்குப புரிந்திருக்க வேண்டும் என நம்புகிறேன்.

ஆக உங்கள் பிரபாத் ரஞ்சன் சர்க்காரின் விவசாயமுறைக்கு சமணம் ஒத்துவருவதில்லை என்பதால் அவர்கள் மேல் உங்களுக்கு கோபம்:-)

சமணம் நிலத்தடியில் விளையும் காய்களை எதிர்ப்பதில்லை.சமணர்கள் அதை சாப்பிடுவதில்லை.அவ்வளவுதான்.சமணர் அல்லாதவர்கள் அதை சாப்பிட்டால்,அல்லது விளைவித்தால் அவர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.

யூதர்கள் ஷெல்ஃபிஷை உண்பதில்லை,இந்துக்கள் மாடு உண்பதில்லை,முஸ்லிம்கள் பன்றி தின்பதில்லை,இந்தியர்கள் தாய்லாந்து மக்களை போல தேள்,பூச்சிகளை தின்பதில்லை.அமெரிக்கர்கள் குதிரைமாமிசம் தின்பதில்லை...

இப்படி ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு இனம்,ஜாதியிலும், தனிமனித அளவிலும் உணவை பொறுத்தவரை விருப்பு வெறுப்புகள் உள்ளன. இந்துக்கள் மாடு தின்னாததால் மாடுவிற்பவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது, அமெரிக்கர்கள் குதிரை மாமிசம் தின்னாததால் குதிரைவளர்ப்பவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என கூறுவதில் எதாவது பொருள் உண்டா?

சமணர்கள் எண்ணிக்கை நாட்டில் மிக குறைவு.அவர்கள் பழக்க வழக்கம் எல்லாம் நாட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தபோவதில்லை.மக்களின் வாழ்க்கைமுறைக்கும்,கலாசாரத்துக்கும் ஏற்ப வளைந்து கொடுப்பதுதான் பொருளாதாரத்துக்கு அழகே இன்றி, பொருலாதாரத்துக்கு ஏற்ப மக்கள் தம் கலாசாரத்தையும், வாழ்க்கைமுறையையும் மாற்றிகொள்லவேண்டும் என்பது செருப்பின் அளவுக்கு தக்கபடி காலை வெட்டுவதுக்கு ஒப்பானதாகும்.

--
செல்வன்

கடவுளை மறுத்திவன் நாள்தோறும் கூறினானே நாத்தீகம்
பகுத்தறி வாளனின் நெஞ்சினிலே பூத்ததென்ன ஆத்திகம் ?
திருமகன் வருகிறான் திருநீறை நெற்றி மீது தினம் பூசி
அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி ?

rajam

unread,
Sep 10, 2011, 9:15:47 PM9/10/11
to மின்தமிழ், செல்வன்

On Sep 10, 2011, at 6:03 PM, செல்வன் wrote:

இப்படியெல்லாம் நிதானமாகப் பார்ப்பது நம் செல்வனுக்கே உரிய தனிப் பண்பு! எனக்குப் பிடிச்சிருக்கு!

கடவுளை மறுத்திவன் நாள்தோறும் கூறினானே நாத்தீகம்
பகுத்தறி வாளனின் நெஞ்சினிலே பூத்ததென்ன ஆத்திகம் ?
திருமகன் வருகிறான் திருநீறை நெற்றி மீது தினம் பூசி
அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி ?

செல்வன்

unread,
Sep 10, 2011, 9:39:44 PM9/10/11
to மின்தமிழ்
நன்றி அம்மா.

--
செல்வன்

seshadri sridharan

unread,
Sep 11, 2011, 6:10:59 AM9/11/11
to mint...@googlegroups.com, செல்வன்

ஆக உங்கள் பிரபாத் ரஞ்சன் சர்க்காரின் விவசாயமுறைக்கு சமணம் ஒத்துவருவதில்லை என்பதால் அவர்கள் மேல் உங்களுக்கு கோபம்:-)
ஒரு புது வேளாண் முறையை யார் அறிமுகப்படுத்தினால் என்ன? அதன் பயன் குமுகத்திற்குத் தானே.  மக்கள் தொகை கட்டுக்கடங்காது பெருகி வரும் இக்காலத்தில் வேளாண் விளைச்சலை எவ்வம் இரு மடியாகக்குவது என்று பல அரசுகளும் எண்ணித் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன    அதற்கு ஒரு வடிகால் தான் இந்த இரு பயிர்முறை. 
சமணம் நிலத்தடியில் விளையும் காய்களை எதிர்ப்பதில்லை.
              இத்தொழீலைத் தவிர்ப்பதன்  நோக்கம் அது அவர்களது கொல்லாமைக்கு எதிரானது என்பது தான்  எனவே அது உழவுத் தொழிலை புறக்கணிக்கிறது.
.சமணர் அல்லாதவர்கள் அதை சாப்பிட்டால்,அல்லது விளைவித்தால் அவர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.
சமணர்கள் நிலத்தின் மேல் விளையும் காய் கனி கறிகளையும்  புறக்கணித்து எப்படி வாழ்வது. அதனால் தாம் தவிர்க்கும் உழவை அடுத்தவர்  செய்து புழுக்களைக் கொன்றாலும் கொல்லட்டும் அதன் பயனை மட்டும் நாம் நுகர்ந்து கொள்ளவோம் என்று தம் கொல்லாமைக் கொள்கையை சற்றே விலக்கி வைக்கினறனர்.
சமணர்கள் எண்ணிக்கை நாட்டில் மிக குறைவு.அவர்கள் பழக்க வழக்கம் எல்லாம் நாட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தபோவதில்லை.மக்களின் வாழ்க்கைமுறைக்கும்,கலாசாரத்துக்கும் ஏற்ப வளைந்து கொடுப்பதுதான் பொருளாதாரம்
இக்கால் சமணர் தொகை குறைவே ஆனால் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் அது கோலோச்சி இருந்த போது  இவ்வாறான தொழில் புறக்கணிப்பால் மக்கள் பொருளியல் தொல்லைகளை கட்டாயம் எதிர் நோக்கி இருப்பர். அதனால் எழுந்ததே சமண சைவப் போராடடம் என நான் கருதுகிறேன். ஒரு பேச்சுக்கு 30% மக்கள் சமணராகி விட்டிருந்தனர் எனக் கொண்டால் உழவைப் புறக்கணித்த இந்த 30 % மக்களுக்கான உணவுத் தேவையை நிறைவு செய்யும் சுமை எஞ்சிய சமணரல்லாத உழவர் மீது தானே விழுந்திருக்கும். இதன் எதிரொலியாகவே சமணம் தமிழகத்தில் வீழ்ந்தது. பிராமணர்களும் இதே வகையில் தான் குமுகத்திற்கு சுமையாக இருந்தனர் ஏதொரு உற்பத்தியிலும் ஈடுபடாமல். இக்காலத்தே பெரியார் பார்ப்பனிய ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்ய  மேற்கொண்ட ஒரு குமுகப்  போராட்டத்தைத் தான் சைவ  நாயன்மார் அக்காலத்தே சமணர்க்கு எதிராக  மேற் கொண்டு சமணத்தை வலுவிழக்கச்  செய்தனர். எல்லாம் பொருளியல் விளைத்த வினை  அதனால் எழுந்தது தான்  குமுக  வெடிப்பு.   இன்னும் புரியவில்லையா இந்த பொருளியல்  பாடம்?
 
சேசாத்திரி  

--
செல்வன்

இப்படியெல்லாம் நிதானமாகப் பார்ப்பது நம் செல்வனுக்கே உரிய தனிப் பண்பு! எனக்குப் பிடிச்சிருக்கு!

கடவுளை மறுத்திவன் நாள்தோறும் கூறினானே நாத்தீகம்
பகுத்தறி வாளனின் நெஞ்சினிலே பூத்ததென்ன ஆத்திகம் ?
திருமகன் வருகிறான் திருநீறை நெற்றி மீது தினம் பூசி
அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி ?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Sep 11, 2011, 11:34:42 AM9/11/11
to mintamil

வலுவிழக்கச் செய்ய  மேற்கொண்ட ஒரு குமுகப்  போராட்டத்தைத் தான் சைவ  நாயன்மார் அக்காலத்தே சமணர்க்கு எதிராக  மேற் கொண்டு சமணத்தை வலுவிழக்கச்  செய்தனர். எல்லாம் பொருளியல் விளைத்த வினை  அதனால் எழுந்தது தான்  குமுக  வெடிப்பு.   இன்னும் புரியவில்லையா இந்த பொருளியல்  பாடம்?

உழவுதொழிலை செய்யாமல் இருந்தால் வேறு ஏதோ தொழிலை செய்திருக்க வேண்டும்.வருமானம் வரும் தொழிலை செய்பவர்கள் யாரும் சமூகத்துக்கு சுமை இல்லை.ஜைனராக மாறீயவர் தம் நிலத்தை சைவருக்கு விற்பார்.ஜைனருக்கு கிடைத்த வேலை சைவர்களுக்கு கிடைக்கும்.இழப்பு ஜைனர்களுக்கு தான்.சைவர்களுக்கு அல்ல.

பாரம்பரியமாக நிலங்களில் வேலை செய்தவர்கள் தலித்துகள்.நில உடமை மட்டும் ஜைனர்கலிடமிருந்து சைவர்கள் கைக்கு மாறி இருக்கலாம்.இதனால் உற்பத்தி இழப்பு எதுவும் நேர்ந்திருக்க போவதில்லை.10 ஏக்ராவில் விவசாயம் செய்த சைவ வேளாளர், ஜைனரிடமிருந்து இன்னொரு 10 ஏக்ராவை வாங்கி இருபது ஏக்கரில் விவசாயம் செய்ய போகிறார்.நிலகூலி வேலைபார்ப்பது இந்து தலித்துகள்.அவர்கள் சமணத்துக்கு பெருமளவில் மாறினதாக எனக்கு தெரியவில்லை.ஆக விவசாய உற்பத்தி விழுந்திருக்காது.

சரி அதை விடுங்கள்.....ஜைனர்கள் உழவு தொழில் செய்யவில்லை எனில் அப்புறம் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" என வள்ளுவர் கூறீய குறள் திருக்குறள் சமண நூல் இல்லை என தானே காட்டுகிறது?:-))
--

--
செல்வன்

Dependency is death to initiative, to risk-taking and opportunity. It's time to stop the spread of government dependency and fight it like the poison it is~ Mitt Romney

வருங்கால துணை ஜனாதிபதி?

Raja sankar

unread,
Sep 11, 2011, 12:42:15 PM9/11/11
to mint...@googlegroups.com
செல்வன்,

சமணர்களில் குடும்பஸ்தர்களுக்கு ஒரு விதி. துறவிகளுக்கு ஒரு விதி. குடும்பஸ்தர்கள் ஆடை அணியலாம். துறவிகள் இல்லை. அதிலே உழவுத்தொழிலும் அடக்கம்.

எதையுமே கொல்லக்கூடாது என்றால் அரிசியும் உயிர்தான். வாழைப்பழமும் உயிர் தான் அப்புறம் எப்படி உயிர் வாழ்வது? தாவரங்கள் போல் தானா கார்பன் உற்பத்தி செஞ்சாத்தான் உண்டு.

சமணர்கள் உழவுத்தொழில் இல்லை. மரவேலை செய்வோர் உழவுத்தொழில் இல்லை. துணி துவைப்போர், கணக்கு எழுதுவோர், ஆட்சியாளர் இவர்கள் எல்லாம் உழவுத்தொழிலில் இல்லாத்தால் தான் சமூகம் கெட்டது என்ற லாஜிக் அருமையோ அருமை.

அதற்கும் நீங்கள் மெனக்கெட்டு பதில் போடும் பொறுமை பிடிச்சிருக்கு. ஆவ்சம் அமெரிக்காவில் விவசாயம் செய்வோர் எவ்வளவு சதவீதம் என கொஞ்சம் விளக்குங்கள் அப்போதாவது புரிகிறதா என பார்ப்போம்.

ராஜசங்கர்

2011/9/11 செல்வன் <hol...@gmail.com>

seshadri sridharan

unread,
Sep 12, 2011, 8:38:43 AM9/12/11
to mintamil
உழவுதொழிலை செய்யாமல் இருந்தால் வேறு ஏதோ தொழிலை செய்திருக்க வேண்டும்.வருமானம் வரும் தொழிலை செய்பவர்கள் யாரும் சமூகத்துக்கு சுமை இல்லை.ஜைனராக மாறீயவர் தம் நிலத்தை சைவருக்கு விற்பார்.ஜைனருக்கு கிடைத்த வேலை சைவர்களுக்கு கிடைக்கும்.இழப்பு ஜைனர்களுக்கு தான்.சைவர்களுக்கு அல்ல.
வேத நெறிப்பரவலால் குமுக ஒதுக்குதலுக்கும், இழிவிற்கும் ஆளான தலித்துகள் சமணம், பௌத்தம் உண்டான போது அதைத் தழுவினர். இசுலாம் வந்த போதும் அதைத தழுவினர், கிறித்தவம் வந்த போதும் அதைத் தழுவினர்.  வாழும் முறை வேறு, மதக் கோட்பாடு வேறு இவை இரண்டனுக்கும் முரண் எழும் போது அதனால் பாதிப்புக்குள்ளானவர்கள் இந்த மதம் மாறிய தலித்துகள்தாம். அவ்வாறு உழவை இந்த மதம்மாறிகள் கைவிட்டதால் அவர்களின் சோற்றுச் சுமை  உழவில் ஈடுபடும் மற்ற தொகை குறைந்த மக்கள் மீதே விழுந்தது.
பாரம்பரியமாக நிலங்களில் வேலை செய்தவர்கள் தலித்துகள்.நில உடமை மட்டும் ஜைனர்கலிடமிருந்து சைவர்கள் கைக்கு மாறி இருக்கலாம்.இதனால் உற்பத்தி இழப்பு எதுவும் நேர்ந்திருக்க போவதில்லை.10 ஏக்ராவில் விவசாயம் செய்த சைவ வேளாளர், ஜைனரிடமிருந்து இன்னொரு 10 ஏக்ராவை வாங்கி இருபது ஏக்கரில் விவசாயம் செய்ய போகிறார்.
    இன்று போல் உழுபொறி கொண்டு உழவில்லை கலப்பையும், எருதும் எருமையுமே  அவர்களுடைய உழவுக் கருவிகள். ஆள் பற்றாக்குறை கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.
சரி அதை விடுங்கள்.....ஜைனர்கள் உழவு தொழில் செய்யவில்லை எனில் அப்புறம் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" என வள்ளுவர் கூறீய குறள் திருக்குறள் சமண நூல் இல்லை என தானே காட்டுகிறது?:-))
வள்ளுவர் சமணர் அல்லர். என்னுடைய இந்த பேச்சையே அவருடைய மேற்சொன்ன குறள் அடிப்படையில் தான் கட்டி  உள்ளேன்.
 
     சேசாத்திரி
செல்வன்

Dependency is death to initiative, to risk-taking and opportunity. It's time to stop the spread of government dependency and fight it like the poison it is~ Mitt Romney

வருங்கால துணை ஜனாதிபதி?

செல்வன்

unread,
Sep 12, 2011, 11:17:50 AM9/12/11
to mint...@googlegroups.com

2011/9/11 Raja sankar <errajasa...@gmail.com>

சமணர்கள் உழவுத்தொழில் இல்லை. மரவேலை செய்வோர் உழவுத்தொழில் இல்லை. துணி துவைப்போர், கணக்கு எழுதுவோர், ஆட்சியாளர் இவர்கள் எல்லாம் உழவுத்தொழிலில் இல்லாத்தால் தான் சமூகம் கெட்டது என்ற லாஜிக் அருமையோ அருமை.

அதற்கும் நீங்கள் மெனக்கெட்டு பதில் போடும் பொறுமை பிடிச்சிருக்கு. ஆவ்சம் அமெரிக்காவில் விவசாயம் செய்வோர் எவ்வளவு சதவீதம் என கொஞ்சம் விளக்குங்கள் அப்போதாவது புரிகிறதா என பார்ப்போம்.

சங்கர்,

கரெக்டுதான்.நான் இனி இந்த இழையில் எதுவும் எழுதபோவதில்லை.வேலை நிரைய இருக்கு:-)

seshadri sridharan

unread,
Sep 13, 2011, 7:28:45 AM9/13/11
to mint...@googlegroups.com
சமணர்கள் உழவுத்தொழில் இல்லை. மரவேலை செய்வோர் உழவுத்தொழில் இல்லை. துணி துவைப்போர், கணக்கு எழுதுவோர், ஆட்சியாளர் இவர்கள் எல்லாம் உழவுத்தொழிலில் இல்லாத்தால் தான் சமூகம் கெட்டது என்ற லாஜிக் அருமையோ அருமை.
உழுதுணடு  வாழ்வாரே வாழ்பவநீரைப் பாய்ச்சுவான்ர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்பது இந்த ஊழியப் பணியாற்றுவோரைத் தானே.

 ஆவ்சம் அமெரிக்காவில் விவசாயம் செய்வோர் எவ்வளவு சதவீதம் என கொஞ்சம் விளக்குங்கள் அப்போதாவது புரிகிறதா என பார்ப்போம்.
    40 ஆண்டுகளுக்கு முன்னம் வரை மின்நீரேற்றுப் பொறி  மூலம் நீர் இரைக்கப்படவில்லை. ஏற்றப் பாசனம் தான் ஒரு ஆள் ஏற்றத்தின் மேல் ஏறி நடந்தபடி  இருப்பான் மற்றொருவன்  கிணற்றில் பொருத்தப்பட்ட இணைக் கட்டைகளின் மீது நின்று மூங்கில் கொம்பை அழுத்தின் சாலை நன்றாக நீர் மொள்ளும்படி  முகிழ்த்தி நீரை அள்ளி சாலை மேலேற்றி சாலில் உள்ள நீரைத் தொட்டியில் இரைப்பான். அதே நேரம் ஒருவன் வயல் பாத்திகளில் மடையை திறந்தும் அடைத்தும் வயலுகளில் நீர் பாய்ச்சுவான். இந்த மூவரும் வைகறை முதல் மாலை வரை மிஞ்சிப் போனால் 10 ஏக்கர்  வரை தான் நீர் பாய்ச்ச இயலும். என்றால் கணக்குப் போடுங்கள் தமிழகத்தில் அன்று ஆற்றுப் பாசனம் நீங்கலாக கிணற்றுப் பாசனம் மட்டும் வழங்கிய இடங்களில் எத்தனை ஆள்கள் தேவைப்பட்டிருப்பர் என்று. இது போக நாற்றங்கால் நடவு, களை  எடுப்பு,  அறுவடை, போரடித்தல், நெல்லுக் குத்தல், அளநது மூட்டைக் கட்டுதல் என பலர் தேவைப்பட்டனர். 70  களைத் தொடர்ந்து   மின்நீரேற்றுப் பொறி, உழுபொறி (Tractor), அறுவடைப் பொறிகள், அரிசி ஆலைகள் என வந்து ஆள் தேவையை குறைத்து விட்டன. இது தான் ஆவ்சம் அமெரிக்காவில் நமக்கும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருக்க  வேண்டும். சமணம் வழங்கிய காலத்தில் கட்டாயம்  ஆவ்சம் அமெரிக்கா நிலை  இல்லை என்பது உறுதி.  நமக்கும் மேல் அகவை முதிர்ந்தோர்  இதைத தம் வாணாளில் கண்டிருப்பர். எனவே அவர்கள் நம்முடைய இந்த சமணரின் உழவுப் புறக்கணிப்புப் பேச்சை நன்கு  புரிந்து கொண்டிருப்பர். இனி  அவர்கள்  தம் கருத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும்.
 
   ஆவ்சம் அமெரிக்கா தன்னுடைய 1% க்கும் குறைவான வேளாண் பணியாளர்களை அத்துறையிலேயே இருத்திக் கொள்ள மானியம் வழங்குகிறது. இந்த மானியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் உழவுத் தொழிலை விட்டு வேறு துறைக்குப் போய் விடுவர். பின்பு அமெரிக்காவின் கதி அதோ கதி தான். மற்ற ஊழியத்  தொழிலர் சோற்றுக்குத் தொழுது தொழுது யார் பின் செல்வது? அப்படி சென்றாலும் புகுவாய் (புவ்வா) கிட்டாது. அமெரிக்கா அதற்கு அடுத்த நாட்டைத் தான் நம்ப வேண்டும் ஒவ்வொரு நாளும். அந்த நாட்டிலும் நிலைமை மாறிவிட்டால் இன்னொரு நாடு. இப்படியாக உலகப் பொருளியில் இந்த வரம்பற்ற  ஊழியத் தொழில் பெருக்கத்தால் விளிம்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. உணவுத் தட்டு உலகோர் கழுத்தை நெரிக்கப் போகின்றது.
 
சேசாத்திரி
சங்கர்,

கரெக்டுதான்.நான் இனி இந்த இழையில் எதுவும் எழுதபோவதில்லை.வேலை நிரைய இருக்கு:-)

--
செல்வன்

Dependency is death to initiative, to risk-taking and opportunity. It's time to stop the spread of government dependency and fight it like the poison it is~ Mitt Romney

வருங்கால துணை ஜனாதிபதி?

Reply all
Reply to author
Forward
0 new messages