த.ம.அ அக்ட்- நவம் 2018 நிகழ்வுகள்

311 views
Skip to first unread message

Suba

unread,
Oct 12, 2018, 4:12:21 AM10/12/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
வணக்கம் நண்பர்களே. ப்ராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து தமிழகம் புறப்படுகிறேன். அடுத்த சில வாரங்கள் மின்னஞ்சல் பார்க்க வாய்ப்பு மிகக்குறைவு. குழும செய்திகளைப் பார்ப்பதற்கும் நேரம் குறைவாக அமையலாம். 

வலைப்பக்க அப்டேட் தொடர்பான அனைத்து தேவைகளுக்கும்,  மின்தமிழ் தொடர்பான தகவல்களுக்கும் முனைவர் தேமொழியைத் தொடர்பு கொள்க!

சந்திக்க வாய்ப்பமைந்தால் தமிழகம் / பினாங்கு / இலங்கையில் நேரில் சந்திப்போம். 

அன்புடன்
சுபா

Innamburan S.Soundararajan

unread,
Oct 12, 2018, 5:19:57 AM10/12/18
to mintamil
நல்வரவு ஆகுக, சுபாஷிணி.

Malarvizhi Mangay

unread,
Oct 12, 2018, 6:38:06 AM10/12/18
to mint...@googlegroups.com
வருக தமிழ் மகளே' ...1.

On Fri 12 Oct, 2018, 2:49 PM Innamburan S.Soundararajan, <innam...@gmail.com> wrote:
நல்வரவு ஆகுக, சுபாஷிணி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Oct 13, 2018, 10:20:23 PM10/13/18
to மின்தமிழ்

புதுக்கோட்டை ஞானாலயாவில் இன்று ...


______________________________________________________________

தேமொழி

unread,
Oct 14, 2018, 4:56:22 PM10/14/18
to மின்தமிழ்

பிறந்த நாள் வாழ்த்து கூறி எனை வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் இனிதே தொடரும். 🌹

இன்று சென்னையில் நமது த.ம.அ ஏற்பாடு செய்து நிகழ்த்திய நாட்டார் கலைகள் என்ற பொருளிலான கலந்துரையாடல் நிகழ்வு மன நிறைவு அளிக்கும் வகையில் அமைந்தது. நீண்ட கால களப்பணி அனுபவமும் ஆய்வு மற்றும் துறை சார்ந்த ஆசிரியப் பணி அனுபவமும் கொண்ட பேராசிரியர்கள் முனைவர்.செல்லன், பேரா.அமைதியரசு, பேரா. பழனி, பேரா.சீனிவாசன் ஆகியோருக்குத் த.ம.அ- வின் நன்றி. பாடல்களை வழங்கி கருத்துக்களையும் வழங்கி கூடுதல் சிறப்பு சேர்த்த முனைவர்.க.வெங்கடேசனுக்கு என் நன்றி. பறை இசை, பாடல்களை வழங்கி சிறப்புச் சேர்த்த திரு.ஆனந்தன் (முரசு) குடும்பத்தினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கி ஆழமான அதிலும் மிகக்குறிப்பாக தற்கால தமிழகத்திற்கு ஏற்ற மிக முக்கியக்கருத்துக்களைப் பகிர்ந்த பாலச்சந்திரன் இ.ஆ.ப (ஓய்வு) அவர்களுக்கு என் நன்றி. நிகச்சியைத் தொகுத்தளித்த ஸ்ரீதேவி உதயனுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் உதவிய திரு.காந்தி திரு.கௌதம சன்னா ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி.

நிகழ்ச்சிக்கு வருகையாளராக வந்திருந்தாலும் பல பணிகளை முன்னெடுத்து செய்த அசோக், சிவரஞ்சனி, செழியன், நானா ஆகியோரின் அன்பிற்கு என் நன்றி.

கலந்துரையாடலில் கலந்து கொண்டதோடு நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட முனைவர்.சந்திரபோஸ், திரு.கவியாழி கண்ணதாசன், திரு.இன்னம்பூரான், திரு.குமரகுருபரன, திரு.சுந்தரராஜன் ஆகியோருக்கும் என் நன்றி.

இனி நாட்டுப்புறக் கலைகள் எனக் கூறாமல் 
நாட்டுக்கலை
அல்லது மக்கள் கலை 
என சொல்வோம்!

இன்றைய நிகழ்வு ஏற்படுத்திய கருத்தாக்கங்களைக் கொண்டு அடுத்த ஆண்டு ஒரு கண்காட்சியோடு கூடிய கருத்தரங்கை ஏற்பாடு செய்யத் திட்டமிடுவோம்.

இந்த நிகழ்ச்சியைப் பயனுள்ள ஒரு நிகழ்ச்சியாக மாற்றிய பெருமை இன்று வந்து கலந்து சிறப்பித்த அனைவரையுமே சாரும். அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை





********************************************************************************

Rathinam Chandramohan

unread,
Oct 14, 2018, 6:57:44 PM10/14/18
to mint...@googlegroups.com
படங்கள் மிக நன்று. இ ஐயா அவர்களுக்கு என் வணக்கங்கள் 
"Have a great Day. 

2.1 billion people lack access to safely managed drinking water services. Let’s look to nature for solutions. Improving the health of lands around water sources through reforestation, smart agriculture and restored wetlands can help provide water security.
-Support UN Environment
"There is Plenty of room at the bottom" Richard Feynman
நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற -குறள் 710
  "You say so small and intricate, but with eyes only: though true, Beyond the power of an eye there is plenty of room "Thirukural 710
The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and  nothing else
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
Like letters came from Sound of first vowel,  The world originated from a big sound 'Big Bang"
“ 
Dr.R.Chandramohan
Principal  Retd.
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India


--

தேமொழி

unread,
Oct 15, 2018, 5:08:41 AM10/15/18
to mint...@googlegroups.com
Published on Oct 14, 2018


Keezhadi Excavation | கீழடி : புதைக்கப்பட்டதா தமிழர் வரலாறு ? முனைவர் க. சுபாஷினி | SunNews





தேமொழி

unread,
Oct 15, 2018, 4:51:42 PM10/15/18
to மின்தமிழ்
மேலும் படங்கள் சில....

நேற்றைய தமிழர் பண்பாட்டில் நாட்டார் கலைகள் கருத்துரையாடல் நிகழ்வின் சில புகைப்படங்கள்..

*******************************************************************************

N D Logasundaram

unread,
Oct 16, 2018, 2:10:43 AM10/16/18
to mint...@googlegroups.com, vallamai
நூ த லோ சு
மயிலை

பங்குபெற்ற  மின்தமிழ் உறுப்பினர்கள் சிலர்
suba -koottam.jpg

தேமொழி

unread,
Oct 16, 2018, 12:23:30 PM10/16/18
to மின்தமிழ்


தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கும் தீர்மானங்கள்:


          வரலாற்றுக் காலம் முதல் தற்காலம் வரை தமிழ் மரபு பல்வேறு கூறுகளோடும் பல்வேறு மாற்றங்களோடும் பல்வேறு உள்வாங்கல்களோடும், சிறப்புக்களோடும், வீழ்ச்சிகளோடும், எழுச்சிகளோடும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பழங்குடி சமூகங்களாக இருந்து  நாகரிகமடைந்து அரசுகளும் பேரரசுகளும் நகரக் கட்டுமானங்களும்  புனிதச் சின்னங்களும் இலக்கிய வளங்களும் கொண்ட தமிழர்களின் வரலாறு, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், தொல்லியல் ஆய்வுகள், வழக்காறுகள், நாட்டார் கலைகள், வாய்மொழி இலக்கிய வகையினங்கள், கோயில்கள், குலமரபுச் சின்னங்கள், இலக்கியங்கள் மற்றும் நவீனக் காலத்திற்குத் தம்மை உருமாற்றிக் கொண்ட  ஆவணங்களாகச் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை ஒருமுகப்படுத்தித் தொகுத்து பரந்து பட்ட ஆய்விற்கு உட்படுத்துவதின் மூலமே துல்லியப்படுத்தப்பட்ட தமிழர்களின் வரலாறு கிடைக்கும். இதன் மூலம் மட்டுமே உலக அரங்கில் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவத்துவத்தை உறுதி செய்ய முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டோடு தனது பயணத்தைத் தொடர்ந்து  தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுக்கிறது. 


1. தமிழர் வரலாறு மற்றும் மரபுகளைப் பாதுகாக்கின்ற வகையில்  தமிழகத்தின் கிராமங்கள், சிற்றூர்கள், நகரங்கள், பெரு நகரங்கள் ஆகிய பகுதிகளில் அருங்காட்சியகங்களை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட வேண்டும். கல்லூரிகளில் உள்ள வரலாற்றுத் துறை, தமிழ்த்துறை,  ஓலைச்சுவடி மற்றும் அரிய ஆவணங்கள் துறை, கடலாய்வுத் துறை போன்ற துறைகளின் மாணவ மாணவியரிடையே செய்முறைப் பயிற்சியில் உள்ளுர் அருங்காட்சியக பராமரிப்பு என்பது அறிமுகப்படுத்தப்பட்டுச் சேர்க்கப்பட வேண்டும். அப்படிச் சேர்க்கப்படுமாயின் தமிழகத்தின் வட்டாரங்கள் அளவில் அருங்காட்சியகங்களை உருவாக்க முடியும். தமிழகத்தின் எல்லாக் கலை, வாழ்வியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் உலகத்திற்கும் கொண்டு சேர்க்க முடியும். இந்த வட்டார அருங்காட்சியகங்களைக் கல்லூரிகளிலோ அல்லது அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலோ ஒரு சிறிய இடத்தில் அமைப்பதின் மூலம் உருவாக்கலாம். கடந்த ஈராண்டுகளில் தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக சில கல்லூரிகளிலும் தனியார் பள்ளிகளிலும் இந்த அருங்காட்சியகத் திட்டத்தைத் தன்னார்வமாகச் செயல்படுத்தி வருகிறோம் என்பதை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறோம். வட்டார அருங்காட்சியகங்களில் கிராமப்புற வாழ்வியல்  தகவல்கள், கைவினைப் பொருட்கள் மட்டுமின்றி, மக்கள் பண்பாட்டு நடவடிக்கைகளான கூத்து, பாடல்கள், நடனங்கள், கதைகள் மற்றும் நிகழ்த்துக் கலைகளில் விழியப் பதிவுகளின் (வீடியோ) படிகள் வைக்கப்பட வேண்டும். 
 
2. தமிழகத்திற்கு வெளியே அயல்நாடுகளில் உள்ள ஆவணப்பாதுகாப்பகங்களில் பாதுகாக்கப்படுகின்ற  ஓலைச்சுவடிகள் அங்கு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டாலும் அவை தொடர்பான ஆய்வுகள் நிகழ்த்தப்படாமலேயே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் தமிழக மற்றும் தமிழர் வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தக்கூடிய முக்கிய ஆவணங்களாகும்.  தமிழ் மரபு அறக்கட்டளை இதுவரை ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ள ஐரோப்பிய ஆவணப்பாதுகாப்பகங்களிலுள்ள தமிழ் அரிய ஆவணங்கள் முறையாக மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு அவை தமிழக பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

3. கல்வெட்டு, ஓலைச்சுவடி வாசிப்பு என்பது தற்போது கல்லூரிகளின் தமிழ்த்துறைகளில் ஒரு பாடமாக இல்லாத நிலை இருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கல்வெட்டுக்களையும் ஓலைச்சுவடிகளையும் வாசிக்கும் திறன் படைத்தோர் இல்லாத நிலை உருவாகும் அபாயகரமான சூழல் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் கல்லூரிகளில் துணைப்பாடமாக அல்லது பட்டயப் பாடமாகத் தொல்லியல் பாடத்தை அறிமுகம் செய்யும் முயற்சியைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

4. தமிழர் மரபு விளையாட்டுக்களையும் வீர விளையாட்டுக்களையும் உலகம் தழுவிய வகையில் மீள் அறிமுகம் செய்யப்படவேண்டியது அவசியம். உடலுக்கு ஊக்கத்தையும் உள்ளத்திற்கு மலர்ச்சியையும் தரக்கூடியன தமிழர் மரபு விளையாட்டுக்கள். இப்பாரம்பரிய விளையாட்டுக்களைப் பற்றிய அறிமுகம் இல்லாத தலைமுறையாக இன்று நமது இளம் தலைமுறையினர் வளர்வதும் இவ்விளையாட்டுக்களைப் பெரியோரும் படிப்படியாக வழக்கில் இருந்து ஒதுக்கி வருவதும் கண்கூடு. நுணுக்கமான தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை நாம் மறப்பது நமது பாரம்பரியத்தில் ஒரு பகுதியை இழப்பதற்குச் சமமாகும்.     தமிழ் மரபு அறக்கட்டளை இதனைக் கருத்தில் கொண்டு தமிழர் வழக்கில் இருந்த பல்வேறு விளையாட்டுக்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இதனை இவ்வாண்டின் முக்கிய நடவடிக்கையாக மேற்கொண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை அறிந்து கொள்வது அவற்றை இல்லங்களில் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது என்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற கருத்தினை முன் வைக்கின்றது.

5.  தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சித் துறையாக மாற்றப்பட்டு கீழடி உள்ளிட்ட அனைத்து அகழ்வாராய்ச்சிப் பணிகளையும் சுயமாக மேற்கொள்ள வேண்டும். இந்த அகழ்வாய்வுத் துறையில் அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர்கள்,  வரலாற்று ஆய்வாளர்கள்,  கல்வெட்டு ஆய்வாளர்கள், வரலாற்று பொறியியல் ஆய்வாளர்கள், நாணயவியல் ஆய்வாளர்கள், சுவடி ஆய்வாளர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வு ஆணையம் (Tamil Nadu History Research Council/Commission) தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பின் கீழ் தமிழகத்தின் வரலாற்று ஆய்வு மற்றும் தொகுப்பு நிகழ்த்தப்பட வேண்டும்.

6.  வைகை நதிக்கரை நாகரிகம் தொன்மையானது. இந்தியத் தொல்லியல் துறையின் பணியை மேற்கொண்டு தமிழகத்தின் வைகை நதிக்கரையோரத்துப் பகுதியில் அகழ்வாய்வுகளை 2014 முதல் மத்திய தொல்லியல் துறையின் சார்பில் நடத்தி சங்க கால நகரமொன்றினைத் தனது ஆய்வின் வழி வெளிப்படுத்தினார் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன். 

இந்த அகழாய்வில் குறிப்பிடத்தக்க பெரும் எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழகத்தில் முதன்முறையாகச் சங்க கால நகரமொன்று இந்த ஆய்வின் வழி கண்டறியப்பட்டது. வீடுகள், கிணறுகள், தொழிற்கூடங்கள், அலங்காரப் பொருட்கள், வடிகால்கள் எனப் பல தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இக்கண்டுபிடிப்பானது சங்ககாலத்தில் தமிழகத்தில் வளமான நகர நாகரிகம் இருந்ததை உறுதிசெய்வதாக அமைந்தது. கரிமவேதியல் ஆய்வின் படி இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. 

காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு, பின்னர் ஆதிச்சநல்லூரில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்விற்குப் பின்னர் மிகப்பெரிய அளவில் பேசப்படுகின்ற ஒரு அகழ்வாய்வாகக் கீழடி அகழ்வாய்வு அமைகின்றது.  

ஆதிச்சநல்லூரில் ஜெர்மனியின் டாக்டர்.யாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். இங்குக் கிடைத்த அகழ்வாய்வுச்சான்றுகள் அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அறிகின்றோம். பின்னர் லூயிஸ் லப்பிக் என்ற பிரஞ்சுக்காரர் 1904லும், அலெக்ஸாண்டர் ரீ என்ற ஆங்கிலேயர் 1905லும்  அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர் என அறிகின்றோம். இவை சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படாமல் பாதுகாப்பில் மட்டும் இருப்பதாக அறிகின்றோம். 2004ல் இந்திய அரசின் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டவை பற்றிய அறிக்கை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த அகழாய்வில் கி.மு1800 என அறியப்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. இறந்தோருக்கான முறையான ஈமச்சடங்குகள் நடந்தமையை உறுதி செய்யும் தாழிகள் கிடைக்கப்பட்டன  அவற்றில் உள்ள எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு அவை தொல்தமிழ் எழுத்துக்கள் என்றும் கண்டறியப்பட்டன. இங்குக் கண்டெடுக்கப்பட்ட தாழிகளைக் காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது என்ற போதிலும் அது இன்று செயல்படாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. 

உலகளாவிய அளவில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடைபெறும் இடங்களில் அங்குக் கிடைக்கப்பெற்ற அரும்பொருட்களைக் காட்சிப் படுத்துவதுதான் இயல்பு. ஆனால் இன்று நாம் ஆதிச்சநல்லூரிலும் சரி கீழடியிலும் சரி இங்குக் கிடைத்த அரும்பொருட்களைக் காட்சிப்படுத்த வாய்ப்பில்லாமல் இருப்பது வரலாற்றின் மேல் நமக்கு அக்கறையில்லாத தன்மையினை தான் வெளிப்படுத்துகின்றது. மிக இயல்பாக நடைபெற வேண்டிய விசயங்களுக்குக்குக் கூட போராட வேண்டிய சூழ்நிலை எழுவது ஏன் என்ற கேள்வியே மேலோங்குகின்றது. 

கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வில் நமக்கு மேலும் ஏறக்குறைய 7000 சங்ககால அரும்பொருட்கள் கிடைத்திருக்கின்றன என்பது இந்த ஆய்வு மேலும் வைகை நதிக்கரை பகுதியில் விரிவாகவும் விரைவாகவும் தொடரப்பட வேண்டும் என்ற கருத்தினையே வலியுறுத்துகிறது.  

இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டுகள் வாக்கில் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வாழ்வியல் அமைப்புக்களின் வெளிப்பாடுகளைக் கீழடி அகழ்வாய்வு புலப்படுத்தியுள்ளது. இவை வெளிப்படுத்தும் முறையான கட்டுமான அமைப்பு பண்டைய தமிழர்தம் வாழ்வியல் மேன்மையை உலகுக்கு அறிவிப்பதாக அமைகின்றது. ஆக கீழடியில் அகழ்வாய்வினை மேற்கொண்டு இச்செய்திகளை வெளியிட்ட திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் கீழடி தொடர்பான ஆய்வறிக்கைகள் வெளியிடப்படுவதில்  தடைகள் ஏற்படக்கூடாது என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலியுறுத்துகிறது. 

இதன் தொடர்ச்சியில், கீழடியில் இங்குக் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் காட்சிப்படுத்தும் ஒரு பிரத்தியேக அருங்காட்சியகம் கீழடியிலேயே அமைக்கப்பட வேண்டும் என்பதையும் தமிழ் மரபு அறக்கட்டளைக் கேட்டுக் கொள்கின்றது. இதே போல ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் முறையாகச் செயல்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது. இவை மட்டுமன்றி தமிழகத்தின் பண்டைய கடற்கரை நகரங்களில் விரிவான் தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்படத் தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்றும் தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது.




வெளியீடு
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
14.10.2018

தேமொழி

unread,
Oct 16, 2018, 12:25:53 PM10/16/18
to மின்தமிழ்

தந்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று காலை.. தலைமை தொகுப்பாசிரியர் (Chief Bulletin Editor) திரு.உமாபதி கிருஷ்ணன் அவர்களுடன்.... நேர்க்காணல் பதிவாகியுள்ளது. வரலாற்றுச் செய்திகள் தொடர்பான நேர்க்காணல். பதிவு வெளிவரும் போது தகவல் பகிர்கிறேன்.


**************************************

தேமொழி

unread,
Oct 16, 2018, 12:27:19 PM10/16/18
to மின்தமிழ்

சன் தொலைக்காட்சியில் வருகின்ற அக்டோபர் 19 வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு...
நெறியாளர் திரு ராஜா திருவேங்கடம் எடுத்த நேர்காணல் ஒளிபரப்பாகும்.


***********************************


தேமொழி

unread,
Oct 16, 2018, 3:04:25 PM10/16/18
to மின்தமிழ்

அழைப்பிதழ்:


Tamil traditional games.jpeg

_______________________________________________________

தேமொழி

unread,
Oct 17, 2018, 3:32:50 AM10/17/18
to மின்தமிழ்

சென்னை விமான நிலையத்திலிருந்து பினாங்கு (மலேசியா) புறப்படுகிறேன். அடுத்த சில நாட்கள் பினாங்கு மாநில அரசின் அழைப்பில் சில சந்திப்புக்களும் நிகழ்வுகளும் ஏற்பாடாகியுள்ளன. அதில் ஒரு நிகழ்ச்சியாக அமைகிறது தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழர் மரபு விளையாட்டுக்கள் மீள் அறிமுகம் என நிகழ்ச்சி. இது பினாங்கில் அண்மையில் தொடங்கப்பட்ட இந்தியப் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.

பினாங்கு இந்து அறநிலையத்துறை ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்வை பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேரா.முனைவர் ராமசாமி அவர்கள் தொடக்கி வைக்கின்றார்.

எனது சொற்பொழிவு இடம்பெறுகின்றது.


Tamil traditional games.jpeg

தேமொழி

unread,
Oct 17, 2018, 3:43:58 PM10/17/18
to mint...@googlegroups.com
Published on Oct 16, 2018

Tamil manuscripts preserved in the countries of the world - Trying to save manuscripts

*****************************

Dr.Chandra Bose

unread,
Oct 17, 2018, 11:52:45 PM10/17/18
to mint...@googlegroups.com
பலருக்கு இது புதிய தகவலாக இருக்கும். மகிழ்ச்சியையும் தரும்.
நகலெடுத்துக் கொண்டேன். மிக்க நன்றி.

பெ.சந்திர போஸ்
சென்னை

On Thu, Oct 18, 2018 at 1:14 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
Published on Oct 16, 2018Tamil manuscripts preserved in the countries of the world - Trying to save manuscripts | ThanthiTV


Tamil manuscripts preserved in the countries of the world - Trying to save manuscripts

Satish Kumar Dogra

unread,
Oct 18, 2018, 5:14:28 AM10/18/18
to mint...@googlegroups.com
சொற்களுக்கு அப்பாற்பட்டது இச்சாதனைகள். இந்த ஓலைச்சுவடிகள் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றனவா?

Suba

unread,
Oct 18, 2018, 5:51:46 AM10/18/18
to மின்தமிழ்
On Thu, Oct 18, 2018 at 11:14 AM Satish Kumar Dogra <dogra...@gmail.com> wrote:
சொற்களுக்கு அப்பாற்பட்டது இச்சாதனைகள். இந்த ஓலைச்சுவடிகள் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றனவா?

சில வெளிவந்துள்ளன. உதாரணம் தன்வந்திரி உடற்கூறு - பாரிஸ் அரச நூலகத்தில் மின்னாக்கம் செய்தது. 
ஏனையவை தமிழக கல்லூரிகள் ஆராய்ச்சி செய்து வெளியிட வேண்டும் என்ற நோக்குடன் மின்னாக்கப் படிவங்களை வைத்துள்ளேன். 

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

தேமொழி

unread,
Oct 18, 2018, 2:20:04 PM10/18/18
to மின்தமிழ்
தமிழ்ப் பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள் கருத்தரங்கம் - நிகழ்வுத் தொகுப்பு


இரா.குமரகுருபரன்



எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று உலகப்பொதுமறை கூறும். தமிழகத்து நாட்டுக்கலைகளில் சதிர் மறைந்து பரதநாட்டியம் வளர்ந்தது.  சமஸ்கிருதம் நல்ல கலை இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து வெற்றிகண்டது. பரதக்கலை இதைப்பின்பற்றியது. சரித்திரமற்ற அகதிகளாக நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருவது போன்று, பூர்வகுடித்தொடர்பின்றி  உள்நாட்டில் தமிழ்மக்கள் அகதிகளானோம்! நம்மை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டாயத்தில் உள்ளோம்.

தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவ‌ர் சுபாஷிணி ஐடி துறை சம்பாத்தியத்தில் தமது நேரம் சக்தியைச் செலவிடுவதற்குப் பதிலாக தமிழ்ச்சேவை செய்து வருகிறார்!... அவருடன் நானும் அமெரிக்காவின் 'பெட்னா' கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இந்திய ஆட்சிப் பணி வகிக்கும் திரு. த. உதயச்சந்திரன் பள்ளிக்கல்வித்துறை வந்து எதிர்கால சந்ததியினருக்கு பயன்பெறும் வகையில் பாடத்திட்டத்தை அளித்துவிட்டு, தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டு, கீழடி ஆய்வுக்கு நிதியுதவி பெற்றுத் தந்திருக்கிறார்!... தமிழக அமைச்சர் மாண்புமிகு பாண்டியராஜன் அவர்களும் கீழடியில் தனிக்கண்காட்சிக்கூடம் அமைய இடமொதுக்கி உதவிவருகிறார்.
 
கீழடி மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு. இங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் நாட்டியப்பெண், கொற்றவை சிற்பங்கள் கிடைத்துள்ளன. வீரமிகு பெண்கள் வழிபாடு  இது. மூத்தோர் வழிபாடு வேறு, மதநம்பிக்கை வேறு. ஆய்வுகள் மூலம் உண்மைகள் வெளிவரும். 

திருவள்ளுவர் சமணத்துறவி என்று ஆய்வுகள் கூறுகின்றன. 'இலக்கியம் இருண்ட காலம்' என்பதாகச் சொல்லப்படும் களப்பிரர் காலகட்டத்தில்தான் திருக்குறள், சமணக்காப்பியங்கள் சிலப்பதிகாரம், வளையாபதி, பவுத்தக் காப்பியமான மணிமேகலை எழுதப்பட்டன!

மொட்டையடித்த சமணத்துறவிகள் சிலைகள் முருகன்- வள்ளி -தெய்வானை என்று மாற்றப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.  ஆளுகின்ற அரசு ஆதரவுடன் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. இங்கு மட்டுமல்ல, ரோமிலுள்ள பாந்திய மதக் கோவில், கிறித்தவ தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது! சமுதாயச் சூழலில் என்னென்னவோ மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

பல்துலக்க உப்பும் சாம்பலும் உபயோகித்த நமது மக்களைக் கிண்டல் பண்ணிவிட்டு, "உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறதா?" என்று கேட்டு வசதியாக விற்பனை செய்கிறது நவீன மார்கெட்டிங் தொழில்நுட்பம்!... இதையும் நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம்!... தற்காப்புக் கலையான சிலம்பம் பொழுதுபோக்குக் கலையானது!"புதியன புகுதலும் பழையன கழிதலும்!"... எதை ஏற்பது? எதைக் கழிப்பது? இது எளிதான காரியமல்ல. 

"பாரடைஸ் லாஸ்ட்" காவியக்கவிதை எழுதிய ஆங்கிலக் கவி ஜான் மில்டன்  சொல்வது போல, 'தேர்ந்தெடுத்த அறிஞர்கள்' மூலம் நம்மை நாமே மீட்டெடுக்கும் முயற்சிகள் கட்டாயம் தேவை. மனதில்  உறுதியுடன் பயணிப்போம்." என்ற திருமிகு கோ.பாலச்சந்திரன், இ.ஆ.ப. (ஓய்வு)  வாழ்த்துரையுடன் தமிழ் மரபு அறக்கட்டளை, சங்கம் -4 ஒருங்கிணைப்பில் "தமிழ்ப்பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள்" கருத்துரையாடல் நிகழ்வு, ஆனந்தன் (முரசு) குடும்பத்தினர் பறையிசை முழங்க,  சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையிலமைந்த தமிழ் மையத்தில், அக்டோபர் 14, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கியது.
தமது நெறியாள்கையில், "நல்ல தெளிவுடன் தமிழுக்கான சிறந்த முன்னெடுப்பு, நாட்டுக்கலை பற்றிய திருமிகு பாலச்சந்திரன்  அவர்கள் ஆற்றிய உரை" என்று தமிழ்மரபு  அறக்கட்டளைத் தலைவர் முனைவர் சுபாஷிணி குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், "தமிழ்புராதனச் சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வை  தமிழகம் மட்டுமின்றி மலேசியா, ஐரோப்பிய நாடுகள், கனடா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் ஏற்படுத்துவதில் தமிழ்மரபு  அறக்கட்டளை எடுத்து வருகிறது. தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் கிடைக்கும் தமிழ்மரபுச் சுவடுகள் மூலம் முன்னோடிகள் பங்களிப்பை அறியமுடிகிறது. அமெரிக்காவின் பெட்னா நிகழ்வில் பறையிசையுடன் தொடங்கியதைப்போல இங்கும் நிகழ்ந்திருக்கிறது.

காந்தி, கவுதம சன்னா  உள்ளிட்ட வழக்கறிஞர்கள்  சான்றுகளுடன் ஆராய்ந்து,  உண்மைகளை வெளிக்கொணர்கின்றனர். இது வரப்பிரசாதம். நாடகக்கலையில் கவுதம சன்னா எழுதிய "மத்தவிலாச மறுப்பு என்னும் சுத்த விலாச விவேகம்" எனும் மறுப்பு நாடகப்பனுவலின் பகுதிவாசிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ள மு. புருஷோத்தமன், பேரா. டே. ஸ்டான்லி, க.வெங்கடேசன், கவிஞர் முத்துக்கந்தன் பேரா. பிரபாகரன் ஆகியோரை வரவேற்கிறேன். ஓவியர் 'சந்ரு' வரைந்த ஓவியங்களுடன் எனது முன்னுரையுடனும் தயாராகிக் கொண்டிருக்கும் நூல் அது" என்று தெரிவித்தார். பிரஹசனம் இலக்கியத்தில் கேலி வகைமையில் அமையும். கி.பி. 590-630 ஆண்டுகளில் மகேந்திரவர்மபல்லவன் எழுதிய மத்தவிலாச பிரஹசனம் நாடகப்பனுவலில் காபாலிகர்கள், பவுத்த பிக்குகள், காளாமுக சைவர்கள் பாத்திரங்கள்  இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பனுவல் வாசிப்பு நிகழ்ந்தது.  

"தமிழ்ப்பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள்" கருத்துரையாடலில்  சென்னைப் பல்கலைக்கழகம்-தமிழிலக்கியத் துறை  இணைப்பேராசிரியர் கோ. பழனி, திருப்பூர் எல்ஆர்ஜி. அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் ஜா. அமைதி அரசு, சென்னை மாநிலக் கல்லூரிப்பேராசிரியர் இரா. சீனிவாசன், கரந்தைத் தமிழ்ச் சங்கக்கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் மு. செல்லன், செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் க.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.  
"கண்ணப்பத் தம்பிரான் வழிவந்த சம்பந்தன் இரணியவதம் தஞ்சை மாவட்டப் பதிவு ஆகும்.  தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வ. அய். சுப்பிரமணியன் துணை வேந்தராக இருந்த காலத்தில் கேரள கதகளியானாலும் யக்ஷகானம் ஆனாலும் கலைஞர்களுக்குப் பாகுபாடின்றி ₹ 6000 வழங்கி, கூத்து, அடவுகளை
ஆவணப்படுத்தினார். தப்படிக்கும் ஆதிக்கலை நாடகாசிரியர் சே. இராமானுஜம் முன்முயற்சியில் கல்லூரிகளில் பிரபலமானது. நந்தன் கதை நாட்டார் கலையானது. குடவாயில் பாலசுப்பிரமணியன் பங்களிப்பும் முக்கியமானது.  மனுநீதி ராஜா கதை மீட்டுருவாக்கம் காத்திரமானது.  இழவுவீட்டில் தப்பு அடிப்பவன் காசு கொடுப்பவன் முகம் பார்த்துக் கொண்டே அடிக்கவில்லை என்றால் பிழைப்பில்லை...இது தெரிவது அவசியம்...பிரகலாத சரித்திரம் அமுதுப்படையல், அரவான், அரிச்சந்திரன் குறித்த பதிவுகள் உண்டு. பாடல்கலைஞர்கள் ஏற்பாட்டில்  'தவளை பஸ்கி', கம்பு சுற்றுதல், பின்னல்  ஆட்டம். மார்ஷல் கலைகள், சவுராஷ்டிரர்களின் பஜனைமடம், ருக்மாங்கதன் ஏகாதசிப் பட்டினி (மாமியார் மருமகள்) ஆகிய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என்று அமைதி அரசு வலியுறுத்தினார். 

கோ. பழனி கருத்துரையில் "அருகிவரும் லாவணிக்கலை குறித்து அக்கறை தெரிவித்தார். சடங்கிலிருந்து விலகிச் சென்றால் இக்கலையைக் காப்பாற்ற முடியாது. வடிவம் சார்ந்த மாற்றம் புதுப்பித்தலில் கவனம் வேண்டும்.வடக்கத்தி, தெற்கத்தி, மேற்கத்திய பாணிகள் உள்ளிட்ட உட்பிரிவுகள் இதில் உண்டு.  107  கலைஞர்கள் களஞ்சியத்தை நான் தொகுத்துள்ளேன். அறியப்படாத படைப்பாளிகள்,  36  பழங்குடியின மக்கள் மொழிகள் ஆவணப்படுத்தப்படவில்லை" என்று குறிப்பிட்டுப் பேசினார். 

இரா. சீனிவாசன் கருத்துரையில்,  "நாட்டுப்புறக் கலை ஆய்வுகள் பனுவலாகவும் காட்சிவடிவக் கலைகளாகவும் பதியப்படவேண்டும். கோட்பாட்டுச் செல்நெறிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். எம்.டி. முத்துக்குமாரசாமி (நாட்டாரியல் மையம்) பங்களிப்பு காத்திரமானது. நரிக்குறவர் குடும்பங்களுக்குப் பயிற்சி, ஒப்பனை, கலைவடிவக் கருவிகள் செய்ய ஏற்பாடு, ஆபரணப் பனுவல்த் தொகுப்புருவாக்கம் உள்ளிட்ட அடிப்படை நடவடிக்கைகள் தேவை. வட்டார அளவில் கலைகள் பராமரிப்பது அவசியம். லாவணியில் 100  பாணிகள்  உண்டு. அறிவுபூர்வமாக அறிவார்ந்த புலமை தானாகத் தோற்றுவாயிலிருந்து உருவாக வேண்டும். எனது ஆய்வு  தொண்டை மண்டல கதைப்பாடல்களில்தாம். முத்துப்பட்டன் கதை, கதைப் பாடல்களாக (ballads) வழங்கப்படுகிறது. தோற்பாவைக்கூத்துக் கலைஞர்கள் இரவு பத்து மணிக்குத் தொடங்கி, காலை ஐந்து மணிக்கு முடிப்பதுண்டு...ஒரே கலைஞரும் இதைச்செய்வதுண்டு!  பெண்கள் பகுதிக் கதைப்பாடல்களில் மூக்குச்சந்திரன் உருப்பாட்டு முக்கியமானது.  இதில் பனுவலை  உளவியல் ரீதியாக  மேம்படுத்துவது (improvisation) பெண்களே" என்று குறிப்பிட்டார்.
 
செல்லன் தமது கருத்துரையில், "உள்ளூர்க்கதை மறைக்கப்படுதலைப் பாளையங்கோட்டை நாட்டாரியல் மையம் கூத்துக் களஆய்வு செய்து தெரிவித்துள்ளது. சமகாலச் சிந்தனை மாற்றம் முக்கியமான விஷயம். தோலினால் பறைசெய்யப்படுவது மறைந்து, செயற்கைத்தோலினால் (fibre) ஆக்கப்படுகிறது. கூத்து 'காஸ்ட்யூம்' ஆய்வில் வைக்கோல் ஆடைகள், கஞ்சிப்பசையிட்ட பருத்திச்சேலைகள் வரவு ஆகியவற்றால் அரை கிலோவாகக் குறைந்து பிளாஸ்டிக் வடிவில் வந்து விட்டது தெரியவருகிறது. இனக்குழு வகைமை பரிணாமம் 
( Ethnic type evolution) ஏற்பட்டுவிட்டது.  ஆற்காட்டுப் பாணி தெருக்கூத்துக்கலை திரௌபதையம்மன் கோவில் இருக்குமிடங்களில் ஜீவிக்கிறது. பத்தாயிரம் கலைஞர்கள் உண்டு. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கடலூர், விழுப்புரம், புதுவை, அரியலூர் (ஒருபகுதி ), ஆந்திரா, ஈழம்(வடமொழி,தென்மொழி, மலையகத்தமிழர் கூத்துகள் ) உள்வேறுபாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இதில் கல்வராயன் மலைக்கூத்துக் குழுக்கள் கோவையிலும், கன்னடம் பேசும் கலைஞர்கள் நிகழ்த்தும் கூத்துகளில் இரணியன் கூத்திலும் வேறுபாடு ஏற்பட்டது. குரும்ப இளைஞர்கள் ரத்தத்திலேயே கூத்து கலந்துள்ளது. ஒருசிலரே பெண் கலைஞர்கள்;  அரவாணிகள் பெண்பாத்திரங்கள் தாங்கி நடிக்கின்றனர்!" என்று குறிப்பிட்டார். 

நாட்டார் பாடல்களைப்பாடி விளக்கத்துடன் தகவல்களை வழங்கினார் க.வெங்கடேசன். 

தகவல் வங்கி, இணைந்தவகைச் செயல்பாடு (Network), கல்லூரிகளில் நான்கு அல்லது ஐந்து துறைகள் இணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்துவது, வாட்ஸப் குழு அமைப்பு, 'தமஅ' தொழில்நுட்பப் பயிற்சி நடத்துவது, புலம்பெயர்ந்தோருக்கான குழு அமைப்பு, விழிப்புணர்வுக் கருத்தரங்கம், கருவிகள்/காட்சிப்படுத்துதல், மரபுவிளையாட்டுக் கலைக்கண்காட்சி, பேருந்து ஏற்பாடு ஆகிய முதல்கட்ட நடவடிக்கைகளை எடுக்க, தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் தலைவர் முனைவ‌ர் சுபாஷிணி முன்மொழிந்தார்.  இன்னம்பூரான், சந்திரபோஸ், சவுந்தரராஜன்,  குமரகுருபரன், லோகநாதன் ஆகியோர் உரிய ஆலோசனைகளை வழங்கினர். ஸ்ரீதேவி உதயன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.  காந்தி, கவுதம சன்னா ஆகியோர் ஏற்பாடு உதவி செய்தனர். அசோக்,  சிவரஞ்சனி, செழியன், நானா ஆகியோர் அரங்கப்பணியில் உதவினர்.

அரங்கம் ஏற்பாடு செய்து உதவிய ஜகத் கஸ்பர், நிகழ்வுக்கு உதவிய கோ. பாலகிருஷ்ணன், இஆப உள்ளிட்ட ஆளுமைகளுக்கும் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும்  முனைவர் சுபாஷிணி நன்றி கூறினார். 


தேமொழி

unread,
Oct 18, 2018, 2:23:39 PM10/18/18
to மின்தமிழ்

பினாங்கு மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு பேரா.முனைவர்.ராமசாமி அவர்களுடன் இன்று காலை ஒரு சந்திப்பு. இந்து அறநிலையத்துறையினர் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.


_______________

தேமொழி

unread,
Oct 18, 2018, 2:27:06 PM10/18/18
to மின்தமிழ்

மலேசியத் தமிழர் வரலாற்று ஆவணப்படுத்தல் தொடர்பான சீரிய கலந்துரையாடலுக்குப் பிறகு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு பேரா.முனைவர்.ராமசாமி அவர்களுடனும் பினாங்கு இந்து அறநிலையத்துறை செயலவையினருடனும் மதிய உணவு விருந்து.





______________________________________



தேமொழி

unread,
Oct 20, 2018, 1:23:34 AM10/20/18
to மின்தமிழ்



https://www.youtube.com/watch?v=hj7XPjnqZ-0


https://www.youtube.com/watch?v=hj7XPjnqZ-0

தமிழர் வரலாற்றை அழிக்கப்பார்க்கிறதா மத்திய அரசு ? - 
முனைவர் க.சுபாஷினி , தமிழ் மரபு அறக்கட்டளை
__________________________________________________________________

தேமொழி

unread,
Oct 20, 2018, 2:37:35 AM10/20/18
to மின்தமிழ்
இப்பொழுது சன் நியூஸ் முழு நீளக் காணொளியும் வெளியிட்டுள்ளனர் ~ 24:00 நிமிடங்கள்.

https://www.youtube.com/watch?v=u6mSxk1RjNI


Special Interview| தமிழர் வரலாற்றை அழிக்கப் பார்க்கிறதா மத்திய அரசு? சுபாஷினி, தமிழ் மரபு அறக்கட்டளை

_________________________________________

Satish Kumar Dogra

unread,
Oct 20, 2018, 3:50:35 AM10/20/18
to mint...@googlegroups.com
சிக்கலான கேள்விகளுக்கு சொல்லாமல் சொல்லும் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த நேர்காணலை வைத்துக் கொள்ளலாம்.

தேமொழி

unread,
Oct 23, 2018, 5:36:10 AM10/23/18
to மின்தமிழ்

📌 25.10.2018 கைத்தறி அணிவோம் நிகழ்ச்சி

இடம் : சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை

நேரம்: காலை 9:30- 12:00

இந்த நிகழ்வை தமிழ் மரபு அறக்கட்டளையும் Traditional India அமைப்பும் எத்திராஜ் கல்லூரியின் பெண்ணியத்துறையுடன் இணைந்து நடந்துகிறோம்.

கைத்தறி பற்றிய விழிப்புணர்வு, நூல் தயாரிக்கும் முறை, நெசவாளர்களின் உரைகள், கைத்தறி சேலை பவனி.. என பல அம்சங்கள் இந்த நிகழ்வில் இடம் பெறுகின்றன.

வந்து கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க அழைக்கின்றோம்.

நன்றி
ஏற்பாட்டாளர்கள்!


___________________

தேமொழி

unread,
Oct 23, 2018, 5:54:55 PM10/23/18
to மின்தமிழ்

____________________________

தேமொழி

unread,
Oct 24, 2018, 11:31:04 PM10/24/18
to மின்தமிழ்

இன்று காலை 9:30 மணிக்கு சென்னை எத்திராஜ் கல்லூரியில் த.ம.அ ஏற்பாட்டில் கைத்தறி அணிவோம் நிகழ்வு நடைபெறுகிறது. ஆர்வமுள்ளோர் வருக!

N D Logasundaram

unread,
Oct 25, 2018, 9:57:10 AM10/25/18
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com
நூ த லோ சு
மயிலை
 இன்று காலை 9:30 மணிக்கு சென்னை எத்திராஜ் கல்லூரியில் த.ம.அ ஏற்பாட்டில் கைத்தறி அணிவோம் நிகழ்வு நடைபெற் றது. நகரிலேயே வாழ்பவன் என்னும் நிலயில் ஆர்வமுள்ளோன்னாக கலந்து கொண்டேன்  

கைத்தறி பற்றிய விழிப்புணர்வு, நூல் தயாரிக்கும் முறை, நெசவாளர்களின் உரைகள், கைத்தறி சேலை பவனி.. என பல அம்சங்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் கண்டவாறே நடை  பெற் றன 


நகரின் மிக மிக நாகரீக மாக  உடையணியும் கல்லூரி மாணவிகளிடை தமிழர் பா ரம்பரை புடைவை பற்றி மீட்டுணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துரைகளுக்கும் முப்பரிமாண உலகில் சில  கல்லூரி மாணவிகளின் 18 பேரின் 
  அன்னநடை  நிகழ்ச்சியும் நடைபெற்றாது மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்தது 
உலக அழகிகள் போட்டியில் உள்ளதுபோல் பங்குபெற்றோரி ன் அழகு நளினம் மட்டுமல்ல 
அவர்களின் உண்மை அறிவு முதிர் ச்சி நிலையம் கணக்கில் கொண்டு திரு மதி  சுபா அவர்கள் 
நீதிபதியாக இருந்து பரிசளித்தமை மிக  சிறப்பாக இருந்தது 

அன்னநடை பயின்றவர்கள் எல்லோ ரும் ஒருமுகமாக இடங்கலையாகவே புடைவைகளை
அணிந்தது வந்தது சிறப்பானதாக அமைந்தது கண்டேன் என்றால் மிகையாகாது  அந்த நளின
அன்னநடை எ ல்லாம் என கருவியில் இருந்தாலும் அவைகள் இங்கு வைக்க ஜிமடலின் இணைப்பு நிலை
இடம்தகராது எனினும் ஒவ்வொருவராகவந்து கைத்தறி பருத்தி ஆடைகளின் மீதுதா ங்கள் கொண்டுள்ள 
அறிவுநிலை கருத்துக்களை பகிர்ந்து ஒன்றே பரிசுக்கு முடிவாயத்தில் முதல் நிலை பெற்றதால் அவை
களைமட்டும் மற்றவற்றுடன் காணலாம் 
என்னுடைய கருவியின் தரம் என்னால் முடிந்தவரை கொடுத்துள்ளேன் இணைப்பினுக்காக குறைக்கப்
பட்ட தரத்தினுக்கு மன்னிக்க 


hkaithaRc.jpg
hkaithaRil.jpg
hkaithaRiln.jpg
hkaithaRilp.jpg
hkaithaRilm.jpg
hkaithaRilq.jpg
hkaithaRilr.jpg
hkaithaRils.jpg
hkaithaRilt.jpg
hkaithaRilu.jp9m.jpg
hkaithaRilu.jpg
hkaithaRib.jpg
hkaithaRilu.jpgv.jpg
hkaithaRilu.jpgw.jpg
hkaithaRilu.jpgx.jpg
hkaithaRilu.jpgz.jpg
hkaithaRilu.jpgy.jpg
hkaithaRilu.jpgz1.jpg
hkaithaRilu.jpgz2.jpg
hkaithaRilu.jpgz3.jpg
hkaithaRilu.jpgz4.jpg
hkaithaRilu.jpgz5.jpg
hkaithaRie.jpg
hkaithaRilu.jpgz6.jpg
hkaithaRilu.jpgz7.jpg
hkaithaRilu.jpgz8.jpg
hkaithaRilu.jpgz9.jpg
hkaithaRilu.jpgz9a.jpg
hkaithaRilu.jpgz9b.jpg
hkaithaRilu.jpgz9c.jpg
hkaithaRilu.jpgz9d.jpg
hkaithaRilu.jpgz9e.jpg
hkaithaRilu.jpgz9f.jpg
hkaithaRia.jpg
hkaithaRilu.jpgz9g.jpg
hkaithaRilu.jpgz9h.jpg
hkaithaRilu.jpgz9i.jpg
hkaithaRilu.jpgz9l.jpg
hkaithaRilu.jpgz9k.jpg
hkaithaRilu.jpgz9m.jpg
hkaithaRilu.jpgz9j.jpg
hkaithaRilu.jpgz9n.jpg
hkaithaRilu.jpgz9q.jpg
hkaithaRilu.jpgz9p.jpg
hkaithaRid.jpg
hkaithaRilu.jpgz9r.jpg
iniyaneru+collge dignitory.jpg
iniyanerutocollge dignitory.jpg
suba 2collge dignitory2.jpg
suba 2collgeprincipal.jpg
suba 2collge dignitory.jpg
hkaithaRif.jpg
hkaithaRig.jpg
hkaithaRih.jpg
hkaithaRik.jpg

தேமொழி

unread,
Oct 25, 2018, 4:27:55 PM10/25/18
to மின்தமிழ்

எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு அறக்கட்டளையும் Traditional India அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த கைத்தறி அணிவோம் நிகழ்ச்சியின் சில புகைப்படங்கள். News 18 செய்தியிலும் காணுங்கள்.


காணொளி:  


___________________________________________________

தேமொழி

unread,
Oct 25, 2018, 4:35:33 PM10/25/18
to மின்தமிழ்

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இன்று மிக விமரிசையாக நடைபெற்ற கைத்தறி அணிவோம் நிகழ்ச்சியின் சில புகைப்படங்கள்.


_________________________________________

தேமொழி

unread,
Oct 26, 2018, 12:11:01 AM10/26/18
to மின்தமிழ்

இலங்கையை நோக்கிய பயணம். அடுத்த சில நாட்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ... தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கை கிளை அமைப்பு. வரலாற்று பதிவுகள்..சில சந்திப்புக்கள்...


மதுமிதா + சுபா 

தேமொழி

unread,
Oct 26, 2018, 3:37:24 PM10/26/18
to மின்தமிழ்

தமிழகத்தில் நான் பயணித்த எந்த விமானத்திலும் தமிழில் அறிவிப்பு பார்த்ததில்லை..கேட்டதில்லை... ஏர் லங்கா விமானத்தில் தமிழில் அறிவிப்பு இருக்கின்றது.

-----


தேமொழி

unread,
Oct 26, 2018, 3:41:14 PM10/26/18
to மின்தமிழ்
கொழும்பு வந்தடைந்தோம். எல்லா கட்டிடங்களிலும, பேருந்துகளிலும், சாலைகளிலும்் மூன்று மொழிகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.

________________ 

தேமொழி

unread,
Oct 26, 2018, 3:44:09 PM10/26/18
to மின்தமிழ்

கொழும்பு 6 பகுதியில் தோழர் திவ்யா இல்லத்தில்..



_________________________

தேமொழி

unread,
Oct 26, 2018, 3:48:02 PM10/26/18
to மின்தமிழ்

கொழும்பு தமிழ்சங்க அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது இங்குள்ள நூலகம். பல்வேறு பகுதிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவுகள் நிகழ்கின்றன.



_______________________________________________

தேமொழி

unread,
Oct 26, 2018, 3:50:26 PM10/26/18
to மின்தமிழ்

பாத்திமா - மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர், கொழும்பு நகரில் சமூக சேவகி.
துவாரகி - கிளிநொச்சி யௌச் சேர்ந்தவர். போர்க்காலத்தின் தாக்கத்தை முழுமையாக நேரடியாகக் கண்டவர். ஊடகவியலாளார்.
இந்த இரண்டு பெண்களுடனும் இன்றைய மாலை நேரம் அருமையாகச் செல்கின்றது.


_______________________________

தேமொழி

unread,
Oct 26, 2018, 3:51:06 PM10/26/18
to மின்தமிழ்

அதிர்ச்சியளிக்கும் செய்தி!

//
*BREAKING:* - News 24

*இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.*

*பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுள்ளார். அதிபர் சிறிசேனாவின் கட்சியும் இலங்கை அரசில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*

*ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*

*எனது நண்பர் ராஜபக்சே இலங்கையின் பிரதமராக தற்போது* *பதவியேற்றுள்ளார்”*
*சுப்ரமணியன் சுவாமி*

---

தேமொழி

unread,
Oct 28, 2018, 6:17:37 PM10/28/18
to மின்தமிழ்

நேற்று மாலை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஒரு விவாத மேடை நிகழ்வு நடைபெற்றது. இரண்டு அணிகளில் 4 ஆண்கள் 4 பெண்கள் என விவாதித்தனர். அனைவரும் 20 வயதுகளில் உள்ள இளையோர். தலைப்பு இலங்கை அரசில் தமிழ்க் கட்சிகளில் நிலைப்பாடு பற்றியது. 
விவாதித்தோரின் தமிழ் ஆளுமை, உச்சரிப்பு, சமகால அரசியல் அறிவு, சமூக சிந்தனை என்னை வியக்க வைத்தது.

நிகழ்ச்சியைப் பார்க்க வந்தோரில் 50 விழுக்காடு இளையோரே. இதுவும் எனக்கு ஒரு வியப்பு. ஒரு உரை நிகழ்ச்சியைக் காண ஆர்வத்துடன் இளையோர் வந்து அமர்ந்திருப்பது அவர்களுக்கு அரசியல் சிந்தனைகள் சமூக நலனுக்கு முக்கியம் என்ற உணர்வு இருப்பதை வெளிப்படுத்துவதைக் காண்கிறேன்.

இந்த இளையோருக்கு என் பாராட்டுக்கள்.


-----------------------------------------

தேமொழி

unread,
Oct 28, 2018, 6:18:42 PM10/28/18
to மின்தமிழ்

யாழ்ப்பாணம் வந்தடைந்தோம். காலை மணி 5:35.
பார்க்குமிடமெங்கும் தமிழ்.
நல்லூர் கோயிலைக் கடந்து தின்னவேலி பகுதியைக் கடந்து உரும்பிராய் வந்தடைந்தோம்.
முருங்கை, தென்னை மரங்களின் பசுமை
தோழி வல்ன்ரீனாவின் அன்பான கணிவான வ்ரவேற்பு..

தமிழ் மண்ணில் கால் பதிப்பதில் பெருமை!!

தேமொழி

unread,
Oct 28, 2018, 6:23:02 PM10/28/18
to மின்தமிழ்

பெண்களே நடத்தும் தின்னவேலி பகுதி் "அம்மா ஆச்சி" உணவகத்தில் இன்று காலை உணவு சுவைத்தோம். இதே பகுதியில் விவசாயக் கல்லூரியும் உள்ளது.

தேங்காய்ப்பால் அப்பம்
குண்டு தோசை
குரக்கண் ரொட்டி
தொதோல்
பயித்தம் உருண்டை
பல்லு கொளுக்கட்டை
மரக்கறி ரொட்டி..
இஞ்சி தேயிலை + பணஞ்சீனி
தோசை

எல்லாவற்றிலும் கொஞ்சம் சாப்பிட்டு சுவைத்தோம்.

இதனை நடத்தும் பெண்கள் போர்காலத்தில் கணவனை பறிகொடுத்தவரகள் என்று எங்கள் ஆட்டோ ஓட்டுநர் குறிப்பிட்டார்.


------------------------------------------



தேமொழி

unread,
Oct 28, 2018, 6:25:08 PM10/28/18
to மின்தமிழ்

யாழ்ப்பாணக் கோட்டை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறைத்தலைவர்.பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களுடன் வரலாற்றுப் பதிவுகள்.

----------------------------------------

தேமொழி

unread,
Oct 28, 2018, 6:28:05 PM10/28/18
to மின்தமிழ்

யாழ் நூலகத்தில் இன்று எனது "உ.வே.சா வுடன் ஓர் உலா" நூலை நூலகச் சேகரிப்பிற்காகப் பரிசளித்தேன். என் நூலை நூலகர் சுகந்தி சதாசிவமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

யாழ் நூலகத்தில் இருந்த தருணங்கள் என் வாழ்வின் மறக்க முடியாதவை.


-----------------------------------------------

தேமொழி

unread,
Oct 28, 2018, 6:29:27 PM10/28/18
to மின்தமிழ்

27.10.2018

யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு சில முக்கிய வரலாற்றுப் பகுதிகளுக்குச் சென்று பதிவுகளை செய்தோம். குறிப்பாக:

-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் வரலாற்று தொல்லியல் துறை ஆய்வுகள் பற்றிய தகவல்கள். பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் ப.புஷ்பரட்ணம் அவர்களுடன் சந்திப்பு.

-யாழ்ப்பாண தேசிய அருங்காட்சியகம்

-யாழ் நூலகம்

-யாழ்ப்பாணம் கோட்டை

-நல்லூர் கந்தசாமி கோயில்

-சிவபூமி திருவாசக அரண்மணை – 108 சிவலிங்க வடிவங்கள் சூழ தெட்சிணாமூர்த்தி சிலை கருவறையில் அமைக்கப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட கோயில்.

-யமுனா ஏரி

-சங்கிலியான் அரண்மனை

-சங்கிலியான் குளம்

-சங்கிலியான் மனை

-மந்திரி மனை

நாளை மேலும் சில இடங்களுக்கான பயணம் திட்டமிட்டுள்ளோம்.

இன்று மலை 7 மணிக்கு பின்னர் கடும் மழை பெய்தது . இன்று நாள் முழுவதும் நல்ல இதமான தட்பவெப்ப நிலை இன்றைய அனைத்து வரலாற்றுப் பதிவுகளுக்கும் உதவியது.

-சுபா

------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Oct 28, 2018, 7:31:44 PM10/28/18
to மின்தமிழ்

யாழ்ப்பாணம் உரும்பிராய் இன்று் காலை 6:30 காட்சிகள்.. சாலைகளில் குப்பைகள் இல்லை. தூய்மையாக இருக்கின்றது.


--------------------------

தேமொழி

unread,
Oct 28, 2018, 7:34:34 PM10/28/18
to மின்தமிழ்

இலங்கை தமிழ் இனப்படுகொலை போரின் சாட்சிகளாக.. 
காலையும் கண்களையும் இழந்தோர், சேதமடைந்த வாழ்விட பகுதிகள், சேதமடைந்த மாவிட்டபுரம் கோயில்


-----------------------------------

தேமொழி

unread,
Oct 28, 2018, 7:40:07 PM10/28/18
to மின்தமிழ்

நல்லூர் கந்தசாமி முருகன் கோயிலின் பிரம்மாண்டத்தை விவரிக்க சொற்கள் இல்லை.

தேமொழி

unread,
Oct 28, 2018, 7:47:04 PM10/28/18
to மின்தமிழ்

இன்று யாழ்ப்பாணத்தில் நான் கலந்து. கொள்ளும் நிகழ்ச்சி.

--------------------------

தேமொழி

unread,
Oct 28, 2018, 7:53:59 PM10/28/18
to மின்தமிழ்

தற்போது.. குரும்பசிட்டி நகரில் வருடாந்திர பரிசளிப்பு விழா, தமிழ்த்தின விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக ..

குரும்பசிட்டி 30 ஆண்டுகள் இராணுவக்கட்டுப்ப்பாட்டில் இருந்த பகுதி. இப்பகுதி போரின் போது முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு பகுதி. வீடுகள், பள்ளிகள் கோயில்கள், மக்கள் உயிர்சேதம் என மிக மோசமான நிலையை அனுபவித்த ஒரு பகுதி. இன்று இங்கு ஒரு கல்விக்கோயில் எழும்பியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பொருளாதார உதவியுடன் இங்கு பாடசாலை எழுப்பப்பட்டுள்ளது.

தன்னலம் மறந்த , பொதுநல சிந்தனை மட்டுமே கொண்டு செயல்படும் கிராமத் தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியை வலன்ரீனா மற்றும் ஏனைய ஆசிரியர் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்.

இப்பள்ளி மென்மேலும் வளர்ச்சியுற வேண்டும். அதற்கு பொருளாதார உதவி அடிப்படை தேவை..

உலகத் தமிழர்களே...இப்பள்ளி வளர உங்களால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்வோம். இப்பகுதி இளம் தலைமுறை நம் குழந்தைகள். இவர்கள் நல்வாழ்வு நமது நல்வாழ்வு!

-சுபா

காணொளிப்பதிவு:  https://www.facebook.com/subashini.thf/videos/2288477798062271/

______________________________________

தேமொழி

unread,
Oct 28, 2018, 7:56:55 PM10/28/18
to மின்தமிழ்

தற்போது யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம் , கலைத்தூது அழகியல் கல்லூரியில் ..
கூத்துக்கலையை சிறப்பாக வளர்க்கும் பணியை தொடர்ந்து பல்லாண்டுகளாகச் செய்து வரும் பன்மொழிப் புலவர் பாதிரியார் மரியசேவியர். அவரோடு இன்று இணைந்து செயல்படும் இளம் ஆய்வாளர்கள் + கூத்துக் கலைஞர்களுடன் இன்று மாலை ஒரு கலந்துரையாடல்.

போர்க்காலத்திலும் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வுகளை இவரது அமைப்பு செயல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. விரிவான பதிவினை செய்துள்ளோம். பின்னர் அது வெளியிடப்படும்.



____________________________________

தேமொழி

unread,
Oct 28, 2018, 11:36:45 PM10/28/18
to மின்தமிழ்
1 hr

28.10.2018 (ஞாயிறு)

யாழ்ப்பாணத்தின் சில முக்கிய வரலாற்றுப் பகுதிகளுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் சென்றிருந்தோம். அதில் குறிப்பாக:

கந்தரோடை – தமிழ் பௌத்தம் நிலைபெற்றிருந்த பகுதியாக அறியப்படும் தொல்பழங்கால மனிதர்கள் வாழ்விடம். அகழ்வாய்வுகள் செய்யப்பட்ட ஒரு பகுதி இது. இங்கு பேரா.புஷ்பரட்ணம் அவர்களது பேட்டி ஒன்று இப்பகுதி பற்றிய விளக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டது. 
(இப்பகுதியில் தற்சமயம் இலங்கை இராணுவத்தினர் இருக்கின்றனர். நான் சென்றிருந்த சமயத்தில் இரண்டு இராணுவத்தினர் வருவோர் போவோரிடம் சிங்களத்தில் பேசினர். எங்களிடமும் வந்து பேசினர். இப்பகுதியை விரிவாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியரிடம் சிங்களத்தில் கூறினர். பேருந்துகளில் சிங்களவர்கள் வந்து இப்பகுதியைப் பார்த்துச் செல்கின்றனர். )

கந்தரோடை செல்லும் சாலையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கடந்து சென்றோம். தற்சமயம் சாலையின் இரு பக்கங்களிலும் புதிய வீடுகள் தென்படுகின்றன. இவை இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகள் என ஒருவர் குறிப்பிட்டார். வீடுகளின் தரம் மிக எளிமையானதாக உள்ளது. 10 ஆண்டுகள் இவை தாங்குமா என்பதே சந்தேகம் எனும் வகையில் இவ்வீடுகள் காட்சியளிக்கின்றன.

கீரிமலை சிவாலயம் – இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழம் கோயில் என அறியப்படுகின்றது. போரில் மிகுந்த சேதம் அடைந்து கடந்த ஆண்டு முழுமையாக புதிதாக கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது இவ்வாலயம். கோயிலின் உள்ளே சிவபுராணக் காட்சிகள் சுவர்களில் ஓவியங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மாவட்டபுரம் கந்தசாமி கோயில் – இது கீரிமலை கோயில் அருகிலேயே இருக்கும் ஒரு சிவாலயம். போரினால் மிகுந்த சேதம் அடைந்த சிவாலயங்களில் ஒன்று இது. தற்சமயம் இக்கோயில் புணரமைக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் துர்க்கையம்மன் கோயில். இங்கு போரின் போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு இயங்குகின்றது. சைவ ஆராய்ச்சி நூலகம் ஒன்றும் இவ்வளாகத்தில் உள்ளது. துர்க்கைக்கான அர்ச்சனையாக இங்கு மனநலம் பாதிக்கபப்ட்ட பெண்களின் பெயர்கள் வரிசையாக வாசிக்கப்பட்டு அவர்களுக்கான போற்றி பாடல் இங்கு வழிபாட்டில் ஓதப்படுகின்றது.

மதியம் குரும்பையூர் (குரும்பசிட்டி) கிராமத்தில் ஏற்பாடாகியிருந்த பரிசளிப்பு விழா, தமிழ்த்தினவிழாவில் கலந்து கொண்ட்டோம். முற்றிலும் அழிக்கப்பட்ட, 30 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கிராமம் இது. இங்குப் புது குடியேற்றம் தொடங்கியுள்ளது. இங்கு ஒரு பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு அங்கு வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் உள்ள மக்களின் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். குழந்தைகளின் நலனுக்காக பெரும் சேவையாற்றும் ஆசிரியை வலன்ரீனா, பள்ளி அதிபர் திரு.ரவிச்சந்திரன் ஆகியோருடன் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம்.

மாலை திருமறை கலாமன்றம், கலைத்தூது அழகியல் கல்லூரியில் பன்மொழிப்புலவர் பாதிரியார் மரியசேவியர் அவர்களையும் அவரது அமைப்பின் குழுவினரையும் சந்தித்து கலந்துரையாடினோம். பேட்டி ஒன்று பதிவாக்கப்பட்டது.

-சுபா


_____________________

dorai sundaram

unread,
Oct 29, 2018, 12:09:48 AM10/29/18
to mint...@googlegroups.com
இலங்கைப் பயணப் பதிவுகள் அருமையாக உள்ளன.
சுந்தரம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Oct 29, 2018, 12:57:38 AM10/29/18
to மின்தமிழ்

28.10.2018 -திங்கள்

யாழ்ப்பாணத்தில் இன்றைய நிகழ்ச்சிகள்

காலை 10-12: யாழ் பல்கலைக்கழகத்தில் த.ம.அ கிளை அமைப்பு

மதியம் 2- 5 கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி


------



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 29, 2018, 12:59:20 AM10/29/18
to மின்தமிழ்
அது தட்டுப்பிழை !!!  >> 29.10.2018 -திங்கள்

தேமொழி

unread,
Oct 29, 2018, 3:09:27 AM10/29/18
to மின்தமிழ்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை அமைப்பாக்க நிகழ்வும் தொடக்கவிழாவும், வரலாற்றுப் பயிலரங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 200 ஆய்வாளர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கால் பங்கு கொள்கின்றனர்.




______________________________

thirumo...@gmail.com

unread,
Oct 29, 2018, 2:46:02 PM10/29/18
to mint...@googlegroups.com
Vanakam 1958 thiriplicane police station arugil annapurnam enra megalir canteen onru 
Irunthathu 

Sent from my iPad
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 29, 2018, 4:42:45 PM10/29/18
to மின்தமிழ்

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை.

1923ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இது. 1995 முதல் 2002 வரை இராணுவக்கட்டுப்பாட்டில் இக்கல்லூரியின் வளாகம் இருந்தாலும் கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெறுவதாக அறிந்தேன்.

கோலாட்டம் ஆடி எங்களை மகிழ்வித்து அழைத்துச் சென்றனர் இந்த வருங்கால ஆசிரியர்கள்.



_________________________________

தேமொழி

unread,
Oct 29, 2018, 4:46:00 PM10/29/18
to மின்தமிழ்

கற்பகவல்லி நின் 
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா..!

இப்பாடலையும் மேலும் பல தமிழிசைப்பாடல்களையும் இயற்றிய வீரமணி ஐயர் ஆசிரியராகப்பணிபுரிந்த கல்லூரி என்பது தனிச்சிறப்பு.

மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.


________________________________________

தேமொழி

unread,
Oct 29, 2018, 4:49:21 PM10/29/18
to மின்தமிழ்

புன்னாலைக்க்கட்டுவன் கிராமம் போரின் போது முற்றிலும் சேதப்பட்ட ஒரு கிராமம். இங்கு மாலை நேரப்பள்ளியை இலங்கை ஐயை குழுமம் இலவசமாக மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வருகின்றனர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வி தனுசியா தேசிய அளவில் பளு தூக்கும் போட்டியில் வெற்றி்பெற்று விரைவில் ஆசிய அளவிலான போட்டியில் பங்கு பெற மலேசியா செல்கின்றார்.



______________________________________________

தேமொழி

unread,
Oct 29, 2018, 4:54:01 PM10/29/18
to மின்தமிழ்
3 hrs

இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையத்தின் பொறுப்பாளர்களுடன் இன்று மாலை ஒரு சந்திப்பு.


_____________________________

தேமொழி

unread,
Oct 29, 2018, 10:50:09 PM10/29/18
to மின்தமிழ்
54 mins

29.10.2018 (திங்கட்கிழமை)

காலை நிகழ்வு
************************
இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விரிவுரைமண்டபம் இல.408ல், காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடைற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் திரு.சிவகணேசன் வரவேற்புரையாற்றினார்.

யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம் தலைமையுரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்குத் துணைவேந்தரின் பிரதிநிதியாக வந்து வாழ்த்துரை வழங்கினார் சித்தமருத்துவத்துறையின் தலைவர் பேரா.மிகுந்தன்.

கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.சுந்தர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை கிளை அமைத்து செயல்படுவதை பல்கலைக்கழகம் வரவேற்கின்றது எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து த.ம.அவின் பேராசிரியர்.நா.கண்ணன் “அயலகத் தமிழர் வரலாறும் இலங்கைத் தமிழர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
”இலங்கைத் தமிழர் வரலாற்றினை ஆவணப்படுத்தலின் தேவைகள்” என்ற தலைப்பில் இந்த நிகழ்வின் நோக்கவுரையை வழங்கி தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக்கிளை அமைப்பைத் தொடக்கி வைத்தார் த.ம.அ தலைவர் கலாநிதி க.சுபாஷிணி.

யாழ் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் கருத்துரை வழங்கினார். 
நிகழ்ச்சியின் தொகுப்புரையை வழங்கினார் த.ம.அ செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் மதுமிதா.

நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவுக்குக் கொண்டு வந்தார் வரலாற்றுத்துறை பேராசிரியர் திருமதி.சாந்தி அருளானந்தம்.

மதிய நிகழ்வுகள்
******************
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா மதியம் 2லிருந்து 5 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் குழுவினர் முனைவர்.க.சுபாஷிணி, முனைவர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா ஆகியோர் உரையாற்றினர்.

மாலை 6 மணிக்கு புன்னாலைக்கட்டுவன் கிராமத்தில் செயல்படும் சனசமூக நிலையத்திற்குத் த.ம.அ வின் முனைவர். க.சுபாஷிணி, எழுத்தாளர் மதுமிதா ஆகியோர் வருகை புரிந்தனர். போரினால் முற்றிலும் சேதமடைந்த இக்கிராமத்தை மீட்டெழுப்பும் பணியில் இங்குள்ள சமூக அமைப்பான ஸ்ரீ துர்கா அமைப்பும், இலங்கை ஐயை குழுமமும் செயல்படுகின்றனர். காலை நேர, மாலை நேர வகுப்புக்களை இவர்கள் இலவசமாக நடத்தி வருகின்றனர். தேசிய அளவில் பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற இக்கிராமத்தைச் சேர்ந்த தனுசியாவையும், ஆசிரியர்களையும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு செய்து கவுரவித்தனர்.

மாலை 7 மணிக்கு இணுவில் பொது நூலக சனசமூக நிலையத்திற்கு த.ம.அ குழுவினர் சென்றிருந்தோம். நூலகத்தின் சேகரத்தை பார்வையிட்டதோடு நூலகத்தின் செயல்பாடுகள், அதன ஆரம்பகால வரலாறு பற்றி கேட்டறிந்து பதிவு செய்தோம்.
-சுபா

தேமொழி

unread,
Oct 30, 2018, 4:33:56 AM10/30/18
to மின்தமிழ்

சர் பொன் இராமநாதன் அவர்கள் ஏற்படுத்திய கல்லூரிக்கு இன்று சென்றிருந்தோம். இந்த வளாகத்தில்,
-பெண்கள் கல்லூரி
-இராமநாதன் இல்லம்
-சமாதி கோயில்
-அலுவலகம் 
ஆகியன உள்ளன.

சர்.பொன்.இராமநாதன் அவர்கள் ஆண்களுக்கான பரமேஸ்வரா ( இன்னாளைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கல்லூரியும் பெண்களுக்காக இக்கல்லூரியையும் உருவாக்கினார். அவரைப் பற்றியும் இக்கல்லூரி பற்றியும் விரிவான பேட்டி பதிவு ஒன்றினைச் செய்துள்ளோம்.

தேமொழி

unread,
Oct 30, 2018, 3:00:46 PM10/30/18
to மின்தமிழ்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு விக்ணேஸ்வரன் அவர்களுடன் சந்தித்து உரையாடினோம். தற்கால அரசியல் நிலைத்தன்மை, தமிழர்களின் நிலை பற்றிய பேட்டி பதிவு ஒன்றினைச் செய்தோம்.


_______________________________

தேமொழி

unread,
Oct 30, 2018, 3:04:57 PM10/30/18
to மின்தமிழ்

சங்கமித்திரை இலங்கை வந்தடைந்த இடம் எனக் கருதப்படும் மாதகல் சிற்றூரில்..


________________________________________

தேமொழி

unread,
Oct 30, 2018, 10:39:27 PM10/30/18
to மின்தமிழ்

யாழ்ப்பாணத்திற்கான 4 நாள் பயணம் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்தப் பயணத்தில் எங்களுக்கு எல்லா வகையிலும் ஏற்பாடுகளில் உறுதுணையாக இருந்து செயலாற்றிய தோழர் வலண்ரீனா இளங்கோவன் அவர்களுக்கும் எங்களை மிகுந்த அன்புடன் கவனித்து உபசரித்ததோடு ஏராளமான வரலாற்று ஆய்வுத்தகவல்களை நம் பதிவுகளுக்காக வழங்கிய பேரா.முனைவர்.புஷ்பரட்ணம் அவர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.

அடுத்த சில நாட்கள் மலையகத்தில்.


Image may contain: 2 people, including Subashini Thf, people smiling
Image may contain: 1 person, standing, outdoor and nature



கந்தன் சாமி சத்திவேல்

unread,
Oct 31, 2018, 7:45:50 AM10/31/18
to மின்தமிழ்
நெருப்பிலே பூத்த மலர் நின்மலமாய் நிற்கிறது.
On Friday, 12 October 2018 13:42:21 UTC+5:30, Dr.K.Subashini wrote:
வணக்கம் நண்பர்களே. ப்ராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து தமிழகம் புறப்படுகிறேன். அடுத்த சில வாரங்கள் மின்னஞ்சல் பார்க்க வாய்ப்பு மிகக்குறைவு. குழும செய்திகளைப் பார்ப்பதற்கும் நேரம் குறைவாக அமையலாம். 

வலைப்பக்க அப்டேட் தொடர்பான அனைத்து தேவைகளுக்கும்,  மின்தமிழ் தொடர்பான தகவல்களுக்கும் முனைவர் தேமொழியைத் தொடர்பு கொள்க!

சந்திக்க வாய்ப்பமைந்தால் தமிழகம் / பினாங்கு / இலங்கையில் நேரில் சந்திப்போம். 

அன்புடன்
சுபா

தேமொழி

unread,
Oct 31, 2018, 5:00:40 PM10/31/18
to மின்தமிழ்
Subashini Thf
14 hrs

மலையகத்தில்..
ஹட்டன் நகரில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் பதிவு.. இப்போது.


____________________________________________

தேமொழி

unread,
Oct 31, 2018, 5:03:44 PM10/31/18
to மின்தமிழ்

மலையக மக்களின் வரலாறு...
திரு . ராஜசேகரின் சேகரிப்பிலிருந்து சில முக்கிய ஆவணங்கள் மின்னாக்கம் செய்தோம்.


______________________________________________

தேமொழி

unread,
Oct 31, 2018, 10:29:09 PM10/31/18
to மின்தமிழ்

நேற்று நம் த.ம.அ ஆவணப்பதிவாக்கத்தின் இடையே மலையகத்தின் ஹட்டன் நகரின் சுற்றுப்புற கிராமங்களின் எழில் காட்சிகளில் சில..


___________________________________

தேமொழி

unread,
Nov 1, 2018, 1:24:20 AM11/1/18
to மின்தமிழ்

ஹட்டன் நகரிலிருந்து நுவரிலியா புறப்பட்டோம். எங்களுக்கு நேற்று முழுமையும் ஆட்டோ பயணத்தில் உதவியவர் தம்பி நிஸாம். அவரது ஆட்டோவுடன்..




__________________________________________________

தேமொழி

unread,
Nov 1, 2018, 11:52:53 AM11/1/18
to மின்தமிழ்

மலையகம் பற்றி...சில தகவல்கள்.



காணொளிப்பதிவு:  https://www.facebook.com/subashini.thf/videos/2290888627821188/

தேமொழி

unread,
Nov 1, 2018, 11:54:21 AM11/1/18
to மின்தமிழ்

இலங்கை முன்னாள் கல்வித்துறை அமைச்சர் ஐயா டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களது அலுவலகத்தில் சிறிய கலந்துரையாடல். கடந்த 
26.10 இலங்கை அரசியல் திடீர் மாற்றத்தில் இவரது பதவி பாதிப்புக்குள்ளானது.


_____________________________


தேமொழி

unread,
Nov 1, 2018, 11:58:47 AM11/1/18
to மின்தமிழ்

நியூ பீக்கோக் தேயிலை எஸ்டேட் ராமன் துறை பகுதியில் அருங்காட்சியகம் மற்றும் ஆவணப் பாதுகாப்பகம் .
திரு. சந்தனம் சத்தியனாதன்.

இங்குள்ள அருங்காட்சியகம் மலையகத் தமிழர் வாழ்வை ஆவணப் படுத்தும் முயற்சியை செயல்படுத்திவருகிறது. 
பாராட்டுதலுக்குறிய முயற்சி.

-சுபா


__________________________________

தேமொழி

unread,
Nov 1, 2018, 12:17:21 PM11/1/18
to மின்தமிழ்




கைத்தறி ஆடைகளின் முக்கியத்துவம், 

முனைவர் சுபாஷினி | Importance of Handloom


உதவி: 
வலைத்தமிழ் 
#கைத்தறி #handloom சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற "கைத்தறி தொழில் முனைவும் கண்காட்சியும்" நிகழ்ச்சியில் முனைவர் சுபாஷினி (தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை) அவர்களின் உரை.

___________________


On Thursday, October 25, 2018 at 6:57:10 AM UTC-7, selvi...@gmail.com wrote:
நூ த லோ சு
மயிலை
 இன்று காலை 9:30 மணிக்கு சென்னை எத்திராஜ் கல்லூரியில் த.ம.அ ஏற்பாட்டில் கைத்தறி அணிவோம் நிகழ்வு நடைபெற் றது. நகரிலேயே வாழ்பவன் என்னும் நிலயில் ஆர்வமுள்ளோன்னாக கலந்து கொண்டேன்  

கைத்தறி பற்றிய விழிப்புணர்வு, நூல் தயாரிக்கும் முறை, நெசவாளர்களின் உரைகள், கைத்தறி சேலை பவனி.. என பல அம்சங்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் கண்டவாறே நடை  பெற் றன 


நகரின் மிக மிக நாகரீக மாக  உடையணியும் கல்லூரி மாணவிகளிடை தமிழர் பா ரம்பரை புடைவை பற்றி மீட்டுணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துரைகளுக்கும் முப்பரிமாண உலகில் சில  கல்லூரி மாணவிகளின் 18 பேரின் 
  அன்னநடை  நிகழ்ச்சியும் நடைபெற்றாது மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்தது 
உலக அழகிகள் போட்டியில் உள்ளதுபோல் பங்குபெற்றோரி ன் அழகு நளினம் மட்டுமல்ல 
அவர்களின் உண்மை அறிவு முதிர் ச்சி நிலையம் கணக்கில் கொண்டு திரு மதி  சுபா அவர்கள் 
நீதிபதியாக இருந்து பரிசளித்தமை மிக  சிறப்பாக இருந்தது 

அன்னநடை பயின்றவர்கள் எல்லோ ரும் ஒருமுகமாக இடங்கலையாகவே புடைவைகளை
அணிந்தது வந்தது சிறப்பானதாக அமைந்தது கண்டேன் என்றால் மிகையாகாது  அந்த நளின
அன்னநடை எ ல்லாம் என கருவியில் இருந்தாலும் அவைகள் இங்கு வைக்க ஜிமடலின் இணைப்பு நிலை
இடம்தகராது எனினும் ஒவ்வொருவராகவந்து கைத்தறி பருத்தி ஆடைகளின் மீதுதா ங்கள் கொண்டுள்ள 
அறிவுநிலை கருத்துக்களை பகிர்ந்து ஒன்றே பரிசுக்கு முடிவாயத்தில் முதல் நிலை பெற்றதால் அவை
களைமட்டும் மற்றவற்றுடன் காணலாம் 
என்னுடைய கருவியின் தரம் என்னால் முடிந்தவரை கொடுத்துள்ளேன் இணைப்பினுக்காக குறைக்கப்
பட்ட தரத்தினுக்கு மன்னிக்க 


தேமொழி

unread,
Nov 1, 2018, 1:27:49 PM11/1/18
to மின்தமிழ்



காணொளி: https://www.youtube.com/watch?v=57pVWtSE6AY


கைத்தறி ஆடையில் கலக்கிய மாடர்ன் மாணவிகள் | Minnambalam Stories

நன்றி:
Published on Nov 1, 2018

எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ‘கைத்தறி ஆடைகள் முனைவு கண்காட்சி’யில், எத்திராஜ் கல்லூரியின் மாணவிகள் கைத்தறி ஆடையில் வலம்வந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். மொழி தெரியாத மாடல்களைக் கொண்டு நடைபெறும் பல கண்காட்சிகளுக்கு மத்தியில், கைத்தறி ஆடைகளின் அருமை புரிந்து, தெளிவாகப் பேசி பார்வையாளர்களை உற்சாகப்படுத்திய கண்காட்சியின் தொகுப்பு. வரவேற்புரை: முனைவர் அரங்க மல்லிகா, இயக்குநர்- மகளிர் கல்வி மையம். எத்திராஜ் மகளிர் கல்லூரி. தலைமை உரை: திரு வி.எம்.முரளிதரன், நிர்வாகக் குழு தலைவர். எத்திராஜ் மகளிர் கல்லூரி. சிறப்புரை: முனைவர் சுபாஷினி, தலைவர் - தமிழ் மரபு அறக்கட்டளை(ஜெர்மனி).
_________________________________________________

தேமொழி

unread,
Nov 1, 2018, 10:25:48 PM11/1/18
to மின்தமிழ்

30,31-10.2018

இரண்டு நாட்கள் மலையகப் பகுதிகளின் பல்வேறு பகுதிகளில் தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவுகளைச் செய்தோம். அதில் குறிப்பாகச் சில தகவல்கள்:

கி.பி 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இலங்கைக்குக்கு வந்த தமிழ் மக்கள் இராமேஸ்வரம் வழியாக மரக்கலங்களில் பயணித்து பின்னர் மன்னார் வந்தடைந்து அங்கிருந்து கால் நடையாகவே மலையகம் வரை வந்திருக்கின்றனர். இது மிகக்கடினமான ஒரு பாதை. ஆயிரக்கனக்கான உயிரிழப்புக்கள் இதன் போது நிகழ்ந்திருக்கின்றன. அப்படி வந்த தமிழ் மக்கள் வந்து ஒன்று கூடிய முக்கிய இடமாக “மாத்தளை” கருதப்படுகின்றது.

எங்கள் பயணத்தில் மாத்தளைக்குச் செல்ல கால அவகாசம் கிட்டவில்லை. ஆயினும் ஹட்டன், நுவரலியா, பத்தனை, வட்டகொட, நியூ பீக்கோக் எஸ்டேட், சோகம் எஸ்டேட், புஸ்ஸல்லாவ மற்றும் அதன் அருகாமை கிராமங்களில் எங்கள் பதிவுகளை மேற்கொண்டோம்.

எமது பதிவில் கண்ட சில முக்கியக் கூறுகள்:

-மலையகத்தமிழர்களின் முக்கிய தொழிலாக அமைவது தேயிலைத் தோட்டத்தைச் சார்ந்ததாகவே அமைகின்றது.

-ஆண்களும் பெண்களும் சலிக்காது உழைக்கின்றனர்.

-பெருமாபாலான தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்களாக ஆங்கிலேயர்களும், இந்தியர்களும், சிங்களவர்களும் இருக்கின்றனர்.

-மலையகத்தமிழ் மக்களின் பொதுப்பிரச்சனையாக அமைவது தங்களுக்கு சொந்த வீடு இல்லாமையும், ஓய்வூதியச் சலுகைகள் ஏதும் இல்லாமையும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையும் எனலாம்.

-இஸ்லாமியர்கள் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்கின்றனர். சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் அனைவரிடையே நட்புணர்வு வெளிப்படுகின்றது. தமிழ் பேசும், எழுதும் சிங்களவர்கள் சிலரை தோட்டங்களில் நேரடியாகக் கண்டு உரையாட முடிந்தது.

-பெரும்பாலான தமிழ் மக்கள் சிங்கள மொழியும் பேசுகின்றனர்.

-தமிழ் மக்கள் வழிபடும் தெய்வங்களாக, பிள்ளையார், மாரியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள் அதிகமாக உள்ளன.

-யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஊர் நூலகங்களைப் பார்த்தோம். ஆனால் மலையகப் பகுதியில் நூலகங்களை அதிகம் காண முடியவில்லை. அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளே இங்கு அதிகமாக மக்களை வாட்டும் நிலை இருப்பதால் இந்த நிலையோ என எண்ணத் தோன்றுகிறது.

-மலையகம் முழுமையுமே தூய்மையாக உள்ளது.

-தமிழக வகை உணவுகளை இங்கே கடைகளில் காண்கின்றோம்.

-தமிழ்ப்பள்ளிகள் அனைத்துமே “வித்யாலயா” என்ற சமஸ்கிருத பெயருடனேயே வழக்கில் உள்ளன. தமிழகத்தில் 1950களின் காலகட்டத்து மணிப்பிரவாள் நடைபோல பல சமஸ்கிருத பயன்பாடு இருப்பதை இலங்கையில் காண்கிறேன்.

-பேருந்து பயணங்கள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்லும் முக்கிய போக்கு வரத்துச் சாதனமாக உள்ளது.

-தோட்டத்தில் தேயிலைப் பறிக்கும் தொழிலில் தமிழ்ப்பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். கால்களில் அட்டை கடித்து துன்பப்படுவது என்பது அவர்களது வாழ்க்கையின் இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டதால் பலரது கால்விரல்கள் மிக மோசமான நிலையில் இருப்பதைக் கண்டோம்.

-இன்று நமக்குக் கிடைக்கின்ற பல ப்ரேண்ட்களில் உள்ள தேயிலைகளை உருவாக்கி நமக்குச் சுவையான தேநீரை வழங்குபவர்களாக இலங்கை மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவு கூற வேண்டியது அவசியம்.

தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாடு அவர்களது கல்வி மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியப்படும்!

-முனைவர்.க.சுபாஷிணி


____________________________________________

தேமொழி

unread,
Nov 2, 2018, 2:45:20 AM11/2/18
to மின்தமிழ்

கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரிய ஓலைச்சுவடிகள் ஆவணப் பாதுகாப்பகத்திற்குச் சென்றிருந்தோம். இங்குள்ள கி.பி 1302ம் ஆண்டு , அதாவது இன்றைக்கு 726 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடி - திரிபிடக நூல் - சிங்கள மொழி சுவடியை கைகளில் வைத்திருப்பதைக் காணலாம்.


_________________________________________

தேமொழி

unread,
Nov 2, 2018, 3:23:41 PM11/2/18
to மின்தமிழ்

இப்போது கண்டியில்...
நிகழ்வு தொடங்குகின்றது.


______________________________

தேமொழி

unread,
Nov 2, 2018, 7:06:16 PM11/2/18
to மின்தமிழ்
3 hrs

இன்று கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துறை அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. நூலகர் திரு.மகேஸ்வரனின் திடீர் ஏற்பாட்டில் எங்கள் உரை நிகழ்வு நிகழ்ந்தது.

அனைவரும் சிங்களவர்கள். அவர்களுடன் ஆவணப்பாதுகாப்பில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்க செயல்பாடுகள் பற்றி உரையாடினோம்.



_____________________________________

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Nov 3, 2018, 12:08:39 AM11/3/18
to mint...@googlegroups.com
தமிழ் மரபு அறக்கட்டளை டாக்டர் சுபாஷினியின் அறிமுகம் வெகுசிறப்பு - அழைப்பிதழலில் 

சனி, 3 நவ., 2018, முற்பகல் 4:36 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jKm9M8QOJko/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 3, 2018, 1:30:50 AM11/3/18
to மின்தமிழ்

கொழும்பு நகரில் இன்று.. 
ஆதவன் தொலைக்காட்சிக்காக நேருக்கு நேர் நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டி..
தோழர் திவ்யா வீட்டில் விடைபெற்ற போது..

இன்று தமிழகம் திரும்புகிறேன்.

Rathinam Chandramohan

unread,
Nov 3, 2018, 3:18:20 PM11/3/18
to mint...@googlegroups.com
kalakkal. velha payanam

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 3, 2018, 11:09:14 PM11/3/18
to மின்தமிழ்
12 hrs

2.10.2018
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் எங்களின் இந்த காலைப்பொழுது தொடங்கியது. அங்கு விருந்தினர் தங்கும் விடுதியில் தங்கியிருந்தோம். காலை உணவுக்கு மாணவர்கள் வந்து பசியாறும் பகுதிக்குச் சென்றோம். இதுவரை நான் பெயர் கேள்விப்படாத பல பலகார வகைகளை அங்கு காண முடிந்தது. அதில் சோயா தோசையும் சில பலகாரங்கரங்களையும் வாங்கி சுவைத்தோம்.

17,000 மாணவர்கள், 3000 ஆசிரியர்கள், 2400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட வளாகம் பேராதனை பல்கலைக்கழகம்.
எங்களின் பெரும்பாலான நேரம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்திலேயே கழிந்தது. தமிழ் நூல் பகுதிக்குச் சென்றிருந்தோம். தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் தொகுப்பினைப் பார்வையிட்டோம்.

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் சிங்கள நூலக ஊழியர்களுக்கு ஆவணப்பாதுகாப்பில் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக ஆங்கிலத்தில் உரையாற்றினோம்.

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் அரிய சேகரிப்பில் உள்ள ஓலைச்சுவடிகளை நேரில் கண்டோம். நூலகத்தின் அடித்தளத்தில் உள்ல பாதுகாப்பு அறைக்கும் திரு.மகேஸ்வரன் அவர்களுடன் சென்று அங்குள்ள பாதுகாக்கப்படும் நூல்களைப் பார்வையிட்டோம்.

இலங்கையில் பதிப்பிக்கப்படும் வெளியிடப்படும் ஒவ்வொரு நூலின் 5 படிவங்கள் 5 பகுதிகளுக்குச் சென்று பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ள சட்டம். அந்த ரீதியில், வெளியிடப்படும் ஒவ்வொரு நூலின் ஒரு படிவம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் சேகரப்பிற்காக இணைக்கப்படுகின்றது.

மதியம் கண்டி முத்தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் எனது உரை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நடனமாடிய சிறுமிகளின் பாவனையும் நடன அமைப்பும் மனதை விட்டு அகலவில்லை. நிகழ்ச்சிக்குத் தலைமையுரையாற்றிய கலாநிதி துரை மனோகரன் அவர்களின் அருமையான வழிகாட்டுதலில் இந்த அமைப்பு சீரிய செயல்பாடுகளை முன்னெடுக்கின்றது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இங்கு கண்டியில் தான் பிறந்தவர் என்ற கூடுதல் செய்தியையும் அறிந்து கொண்டேன். முத்தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு மென்மேலும் சிறப்புடன் செயல்பெற தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துக்கள்.

கண்டியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததோடு சிறந்து விருந்துபசரிப்பையும் வழங்கிய பேராதனை பல்கலைக்கழக நூலகர் திரு.மகேஸ்வரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி.

தேமொழி

unread,
Nov 3, 2018, 11:11:13 PM11/3/18
to மின்தமிழ்

3.11.2018

26ம் தேதி அக்டோபர் தொடங்கி இன்று வரை இலங்கையில் 9 நாட்கள் எனக்கு பல்வேறு புதிய அனுபவங்களை அளித்தது. பயணத்தில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கானப் பணிகளின் திட்டங்கள் பலரது ஒத்துழைப்பாலும் உழைப்பாலும் சிறப்பாக தொடக்கம் கண்டிருக்கின்றது. புதிதாக அறிமுகமானாலும் கூட, பேஸ்புக் பக்கத்தில் மட்டுமே பார்த்திருந்தாலும் கூட, என்னைக் காணத் தேடி வந்து பேசி என்னை அன்பில் ஆழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்க வேண்டியது என் கடமை. அதில் சிலரது செயல்பாடுகள் த.ம.அ இலங்கை கிளை அமைப்பின் வளர்ச்சிக்கும் உதவுவதால் அவர்களைப் பெயர் குறிப்பிட்டு வாழ்த்த விரும்புகிறேன்.

ஆசிரியை வாலண்ரீனா – யாழ்ப்பாணத்தில் த.ம.அ குழுவினருக்குப் பலவகையில் எல்லா ஏற்பாடுகளிலும் உறுதுணையாக இருந்தவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரா.கலாநிதி புட்பரத்தினம் – இலங்கை வரலாற்றினை ஆவணப்படுத்துதலில் ¬வரலாற்றுத் தகவல்களை வழங்கியதோடு எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கமாகிய த.ம.அ இலங்கை கிளை அமைப்பை உறுதி செய்தி செயல்படுத்தியவர்.

மலையகத்தில் த.ம.அ குழுவினரை வரவேற்று எங்களுக்குத் தேவையான சில தகவல்களை வழங்கியவர் ஹட்டன் பகுதி திரு.தியாகு.

ஹட்டன் பகுதியிலிருந்து வல்லக்கோட்ட பகுதிக்கு களப்பணி சென்றபோது எங்களுக்கு ஆட்டோ ஓட்டி வந்த தம்பி நிஜாம். எங்களில் ஒருவராகவே இணைந்து கொண்டு அவரும் மின்னாக்கத்தில் ஈடுபட்டது, காரணம் தெரிந்தால் பொதுமக்களும் ஆவணப்படுத்துதலில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்தது.

கண்டியில் மட்டுமே முதலில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தாலும் எனது நூலகம் மட்டும் அருங்காட்சியகம் தொடர்பான ஆர்வத்தை அறிந்து கொண்டு தக்க தகவல்களை வழங்கிய பேராதனைப் பல்கலைக்கழக நூலகர் இரா. மகேஸ்வரன். எல்லா வகையிலும் முற்றும்முழுமையுமாக உதவியதோடு பல புதிய நண்பர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.

வட்டக்கொடை ராஜசேகர் அவர்கள் – தனிமனிதராக ஆவணங்களைச் சேர்த்துத் தொகுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது சேகரிப்பில் உள்ள ஆவணங்களை த.ம.அ பொது மக்களின் நலனிற்காக மின்னாக்கம் செய்து வெளியிடலாம் என பொது நலச் சிந்தனையுடன் எங்களை வரவேற்று தகவல் பரிமாறிக் கொண்டார்.

கண்டியில் சந்தித்த தம்பி லக்ஷ்மணன். மலையக மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் சமூகச் சேவையாளர்.

நியூ பீக்கோக் பகுதி மலையக மக்களின் வாழ்வியல் அருங்காட்சியகத்தின் சந்தனம் சத்தியநாதன். இவர் போன்றவர்கள் தான் மலையக மக்களின் வரலாற்றை இன்று உலகிற்கு வெளிச்சப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கொழும்பு நகரில் திவ்யா, ஐயா மற்றும் அம்மா விமலேந்திரன் குடும்பத்தினர். கொழும்பு நகரில் எங்களை வரவேற்று பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்த அன்புள்ளங்கள்.

கொழும்பு திரு.யோகராஜ், திரு.இராமன் – தக்க நேரத்தில் எங்களை இரவில் வரவேற்று பத்திரமாக அனுப்பி வைத்த சகோதரர்கள். திரு.யோகராஜ் ஏற்பாடு செய்து அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் – அவருடன் பயணித்த பொழுதுகளில் கொழும்பு மக்களின் மனம், அவர்களின் ஒற்றுமை பற்றி அறிய முடிந்தது. 
நேற்று இரவு பேருந்தில் சந்தித்த திரு.உமா மகேஸ்வரன் – நமது பணிகளில் ஆர்வம் கொண்டு அவர் கூறியவை..

துவாரகியின் அன்பு இனிமை.

இன்று இறுதியாக எங்களை கொழும்பு நகரிலிருந்து ரமாடா ஹோட்டல் வரை அழைத்து வந்த சிங்கள ஆட்டோ ஓட்டுநர்…..
இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.

இலங்கையில் நான் சந்தித்த மக்கள் - தமிழ்மக்கள், சிங்களவர், இசுலாமியர் அனைவருமே எங்களுடன் அன்புடனும் அக்கறையுடனும் பழகினர்.

பல்வேறு புதிய அனுபவங்களை சுமந்து சென்னை பயணிக்கின்றேன். மீண்டும் விரைவில் சந்திப்போம்.

“மதங்கள் துறந்து மனிதம் பிறக்கட்டும்
அன்பும் அறனும் ஓங்கட்டும்”

-சுபா


_____________________________________________________


தேமொழி

unread,
Nov 7, 2018, 5:22:37 PM11/7/18
to மின்தமிழ்

முதன் முதலாக தமிழகத்தில் தீபாவளியை நேற்று கொண்டாடினேன். கோயில் வழிபாடு சுவை மிகுந்த உணவு நண்பர்களின் வாழ்த்துக்கள் பட்டாசு சத்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மாலை நேர பட்டாசு வேடிக்கை இந்த ஆண்டு தீபாவளி குதூகலமாக அமைந்தது.

பட்டாசுகளை வெடித்த பின்னர் அதன் குப்பைகளைப் பொருட்படுத்தாது மக்கள் செல்வதை பார்த்தேன். ஓரிரு வீடுகளில் மட்டும் பட்டுச் சேலை கட்டிய பெண்மணிகள் வீட்டு வாசல்படி தெருவையும் கூட்டி தூய்மைப்படுத்தினர். பல இடங்களில் சாலையில் துப்புரவு தொழிலாளர்கள் ஆங்காங்கே தங்கள் பணியைத் தொடங்கியதையும் கண்ணுற்றேன்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு அவர்கள் அன்றாடம் செய்கின்ற பணிகளை விட கூடுதல் பணி தான். அதைவிட வெடிக்காத சில பட்டாசுகள் சாலையைப் பெருக்கும் போது வெடித்தால் அது அவர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எனக்கு இருந்தது.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெடிச்சத்தம் மற்றும் காற்றில் மாசு குறைவு என்று நண்பர்கள் கூறிக் கொண்டனர் . இது ஒரு நல்ல அறிகுறியே. வருகின்ற ஆண்டுகளில் பட்டாசு வெடிப்பவர்கள் தாங்களே சாலைகளையும் தூய்மைப் படுத்தி விட்டால் மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி... தூய்மைக்குத் தூய்மை..என்ற நிலையும் ஏற்படும்.

-சுபா

தேமொழி

unread,
Nov 7, 2018, 5:28:04 PM11/7/18
to மின்தமிழ்

இனிய நண்பர் தோழர் முனைவர்.திருமாவளவன் அவர்களுடன் ..

சந்திப்பில் சென்னைப் பல்கலைகழக மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்களும்.


_____________________


தேமொழி

unread,
Nov 7, 2018, 11:27:22 PM11/7/18
to மின்தமிழ்

வருகின்ற சனிக்கிழமை 10.11.2018 அன்று திருவண்ணாமலை அரசு கல்லூரியில் மாணவர் மரபு மையம் தொடக்க விழா காண்கிறது. ஆர்வமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்க. 
நிகழ்ச்சியில் தொடர்ந்து நடைபெறும் பயிலரங்கம் தமிழக தொல்லியல் துறை அறிஞர்கள் வழங்கும் ஆய்வுரைகளும் இடம் பெற உள்ளன.


__________________________


தேமொழி

unread,
Nov 7, 2018, 11:42:36 PM11/7/18
to மின்தமிழ்

____________________________________________________________________

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Nov 8, 2018, 9:30:02 AM11/8/18
to mint...@googlegroups.com
தமிழ் மரபை போற்றிக்காக்கவேண்டும் என்கிற விழிப்புணர்வை தங்கள் பயணங்கள் ஏற்படுத்தியிருக்கிறது.   நல்லோர்களாதறவுடன   நன்றிகள் பல. 

வியா., 8 நவ., 2018, முற்பகல் 3:52 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/jKm9M8QOJko/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 8, 2018, 3:14:43 PM11/8/18
to மின்தமிழ்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் வரலாற்றுத்துறையால் ஒழுங்குபடுத்தப்பட்ட “தமிழ் மொழியும் தமிழ்மொழி சார்ந்த மரபுரிமைகளும்” என்ற தலைப்பில் கடந்த (29.10.2018) அன்று நடைபெற்ற பயிலரங்கம் இலங்கைத் தமிழரின் மரபுரிமை அடையாளங்களைச் சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 
....
அவற்றுள் இலங்கைக்கான தமிழர் மரபுரிமை மையத்தின் கிளையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கு அவர்கள் எடுத்த தீர்மானம் எமது பல்கலைக்கழகத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய அங்கிகாரமாகப் பார்க்கிறேன். இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து கிழக்கிலங்கை, தென்கிழக்கு, கண்டி, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களும், மலையகம் உட்பட இலங்கையிலுள்ள பொது அமைப்புக்களும், மரபுரிமை ஆர்வலகர்களும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இலங்கைக்கான சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் கிளை நிறுவனம் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.



தேமொழி

unread,
Nov 8, 2018, 3:19:35 PM11/8/18
to மின்தமிழ்

ref:   http://www.virakesari.lk/article/44031



“தமிழ் மொழியும் தமிழ்மொழி சார்ந்த மரபுரிமைகளும்” - பயிலரங்கம்

Published on 2018-11-07 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் வரலாற்றுத்துறையால் ஒழுங்குபடுத்தப்பட்ட “தமிழ் மொழியும் தமிழ்மொழி சார்ந்த மரபுரிமைகளும்” என்ற தலைப்பில் கடந்த (29.10.2018) அன்று  நடைபெற்ற பயிலரங்கம் இலங்கைத் தமிழரின் மரபுரிமை அடையாளங்களைச் சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 

இப்பயிலரங்கிற்கு ஜெர்மனியைத் தலமையகமாகக் கொண்டு இயங்கும் “சர்வதேச தமிழ் மரபுரிமைமையத்தின்” நிறுவனரும், தலைவருமான கலாநிதி சுபாஜினி, பேராசிரியர் நாரயணன் கண்ணன், திருமதி மதுமிதா ஆகியோர் வருகை தந்து பெறுமதியான கருத்துரைகளை வழங்கியமை இப்பயிலரங்கின் முக்கிய நிகழ்வாக இருந்தது. 

இந்நிகழ்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதில் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரனும், கலைப்பீடாதிபதி கலாநிதி சுதாகர் அவர்களும் மிகுந்த அக்கறை காட்டியதுடன் அதற்கு வேண்டிய உதவிகளையும் வழங்கியிருந்தனர். 

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் ஆசிரியர்களும், மாணவர்களும், கலைப்பீட ஆசிரியர்கள் மற்றும் யாழ்ப்பாண தொல்லியற் திணைக்கழக மற்றும் மத்திய கலாசார நிதிய ஆய்வு உத்தியோகத்தர்கள் உட்பட 200 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை தமிழரது மரபுரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வத்தையும், அக்கறையையும் காட்டுவதாக இருந்தது. 

இந்நிகழ்வில் தொடக்க உரைநிகழ்த்திய பதில் துணைவேந்தர் பேராசிரியர் மிகுந்தன், முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும் மூத்த பேராசிரியருமான சிவலிங்கராஜா, கலைப்பீடாதிபதி கலாநிதி சுதாகர் ஆகியோரின் ஆழமான கருத்துக்கள் தமிழர்களின் மரபுரிமைகளின் சிறப்புக்களையும், அவற்றை பாதுகாத்து ஆவணப்படுத்துவதில் பல்கலைக்கழகங்களுக்கு இருக்கவேண்டிய கடமைப்பாடுகளையும் வெளிப்படுத்துவதாக இருந்தன.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வெளிவந்த வெகுசாதனத் தொடர்புச் சாதனங்கள் இலங்கைத் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களும், மரபுரிமை அடையாளங்களும் மறைந்து வருகின்றன.

அவை குறைந்த விலைக்கு விற்கப்பட்டு பிற இடங்களுக்கும், பிற நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன என்ற செய்திகளை வெளிப்படுத்தி வந்தன. அச்செயற்பாடுகள் 2009 ஆண்டின் பின்னர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இவற்றைத் தடுப்பதற்கும் மக்களிடையே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் சில முயற்சிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையாலும், பொது நிறுவனங்களாலும் எடுக்கப்பட்டாலும் அவை யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய சிறிய முயற்சியாகவே இருந்து வருகின்றது. 

இந்நிலையில் ஜேயர்மனியைத் தலமையகமாகக் கொண்ட சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் செயற்பாடுகள் மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களை மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் பின்பற்றும் பாரம்பரியங்களையும், மாறிவரும் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களையும், கண்டறிந்து அவற்றைச் சமகால நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் ஊடாக ஆவணப்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. பேராசிரியர் கண்ணன், கலாநிதி சுபாஜினி ஆகிய இருவரின் தனிப்பட்ட முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட இச்சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் செயற்பாடுகள் இன்று உலகத் தமிழர் மத்தியில் அவர்களுக்கு புதிய முகவரியைத் தேடிக்கொடுத்திருப்பதை அவர்களின் இலங்கை வருகையின் பின்னர் முகநூல்களில் வெளிவந்து கொண்டிருக்கும் பாராட்டுச் செய்திகள் உறுதி செய்கின்றன. அவற்றுள் இலங்கைக்கான தமிழர் மரபுரிமை மையத்தின் கிளையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கு அவர்கள் எடுத்த தீர்மானம் எமது பல்கலைக்கழகத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய அங்கிகாரமாகப் பார்க்கிறேன். இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து கிழக்கிலங்கை, தென்கிழக்கு, கண்டி, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களும், மலையகம் உட்பட இலங்கையிலுள்ள பொது அமைப்புக்களும், மரபுரிமை ஆர்வலகர்களும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இலங்கைக்கான சர்வதேச தமிழ் மரபுரிமை மையத்தின் கிளை நிறுவனம் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

தேமொழி

unread,
Nov 8, 2018, 3:21:30 PM11/8/18
to மின்தமிழ்

**மின்னாக்கப் பணிக்கு பணியாளர்கள் தேவை**
(தமிழகம் - புதுக்கோட்டை பகுதியில்)

தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் புதுக்கோட்டையில் நூல்களை மின்னாக்கம் செய்வதற்கான பணியாளர்கள் தேவை. இந்தப் பணி ஒரு வருட காலம் நீடிக்கும். தகுந்த மாத ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: அடிப்படை கணினி பயன்பாடு, தமிழும் ஆங்கிலமும் வாசிக்கவும் கணினியில் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். புதிதாக கல்லூரியில் இளங்கலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணியாளர்கள் புதுக்கோட்டையிலேயே இப்பணியைச் செய்ய வேண்டியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் myth...@gmail.com என்ற மின்னஞ்சலில் வழியாக தொடர்பு கொள்ளவும். விண்ணப்பிப்பவர்கள் தங்களுடைய சுயவிபர குறிப்புக்களை புகைப்படத்துடன் மேற்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். இந்தப் பணி வருகின்ற 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கி 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெறும்.

தேமொழி

unread,
Nov 8, 2018, 9:23:09 PM11/8/18
to மின்தமிழ்

நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இரண்டு நிகழ்ச்சிகள் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன . காலையில் திருவண்ணாமலை அரசு கல்லூரியில் தமிழ் மாணவர் மரபு மையம் தொடக்க விழா நடைபெற உள்ளது. ஆரணி நகரில் நாளந்தா நாடக குழுவோடு இணைந்து ஒரு கலந்துரையாடல் - பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது . அதன் அழைப்பிதழை கீழே காணலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிக்கவும்.


________________________________________________________________


தேமொழி

unread,
Nov 9, 2018, 6:07:02 PM11/9/18
to மின்தமிழ்

"யாழ்ப்பாண அரச பரம்பரை" - இந்த நூலை எழுதியவர் கலாநிதி குணராசா.

இந்த நூலில் வருகின்ற ஒரு பகுதி,பக்கம் 4,5 .

//எனவே குடிசார் வரலாற்று புவியியல் அடிப்படையில் திராவிட இனத்தின் பாரம்பரிய இலங்கை தனது ஒரு பெரும் பகுதியில் புதியதொரு இனத்தினைச் சேர்த்துக் கொண்ட சம்பவம் கிமு 483 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்த லாடா நாட்டின் மன்னன் தன் நாட்டிற்கு உதவாதவர்கள் எனக் கருதிய தன் மகன் சிங்ஹள விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் மரக்கலம் ஒன்றில் ஏற்றி நாடு கடத்தி விட்டான். (மகாவம்சம் பக்கம் 53,54 )அவர்கள் தாமிரபரணி என்ற கொணாநதிக்கும் கதம்பனதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வந்து சேர்ந்தனர் . சிங்கள விஜயனின் வருகையுடன் இலங்கையில் சிங்கள மக்களது தோற்றம் ஆரம்பமானதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. அவை கூறிய செய்திகள் என்னவென்றால் விஜயனும் அவனது தோழர்களும் இலங்கையின் கரையில் இறங்கியபோது இலங்கையில் நாகரிகத்தில் முன்னேறிய ஒரு மக்கள் கூட்டமும் பண்டைய வாழ்க்கை முறையை கைக் கொண்டு வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டமும் வாழ்ந்து வந்துள்ளன என்பதாம்.//
- சுபா


____________________


தேமொழி

unread,
Nov 10, 2018, 8:22:33 PM11/10/18
to மின்தமிழ்

ஆரணியில்.... இப்போது


_______________________


தேமொழி

unread,
Nov 10, 2018, 8:25:12 PM11/10/18
to மின்தமிழ்

தமிழ் நாடகத்தில் பெண் புனைவு

ஒப்பனை நேரத்திலும், ஒப்பனைக்குப் பின்னும்

____________________________

தேமொழி

unread,
Nov 10, 2018, 8:27:52 PM11/10/18
to மின்தமிழ்

தமிழ் நாடகத்தில் பெண் புனைவு..
கலைஞர்களுக்கு விருது வழங்கிய தருணம்.

தேமொழி

unread,
Nov 11, 2018, 5:37:37 PM11/11/18
to மின்தமிழ்

தென்னிந்திய பௌத்த சங்க அறக்கட்டளை, பெரம்பூர் , பந்தர் சாலை, தமிழகம்.

தமிழகத்தில் பௌத்தத்தின் நிலைப்பாடு குறித்து சங்க அமைப்பாளர்களுடன் ஒரு சந்திப்பு.


_______________________________

Suba

unread,
Nov 13, 2018, 2:16:21 AM11/13/18
to மின்தமிழ்

அண்மைய இலங்கை பயணத்தின்போது மலையக ஊர்களில் ஒன்றான சீதா எலியா நகரில் அமைந்திருக்கும் சீதா அம்மன் ஆலயம் பற்றி நண்பர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தனர். ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட சீதை இந்த வனத்தில் தான் அமர்ந்திருந்தார் என்றும் அன்னை சீதாவை காண வந்த அனுமன் இங்குதான் அவரைக் கண்டார் என்றும் இங்குள்ள மக்கள் நம்புகின்றனர் . சீதா அம்மன் ஆலயம் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்று அறிந்துகொள்ள எனக்கும் அதிக ஆர்வம் ஏற்படவே நுவராலியா வந்த பின்னர் இப்பகுதிக்கு நாங்கள் வந்தடைந்தோம்.


மேலிருந்து பார்க்கும் பொழுது ஒருபொற்கோயில் போல வடிவமைக்கப்பட்ட இக்கோயில் தெரிகின்றது. பின்னே அருவியின் சத்தம் காதுகளுக்கும் கண்களுக்கும் இனிமை சேர்க்கிறது. கோயில் சிறப்பாகவே அமைக்கப்பட்டிருக்கின்றது . சென்று உள்ளே இருக்கும் சீதா அம்மனைக் காண தேடினேன்.


ஆனால் கோயிலில் தனி சன்னதிகளில் சீதைக்கு தனி சன்னதி ஏதும் இல்லை. மூல பிரகாரத்தில் இராமர் சீதை இலக்குவன் சிற்பங்கள் உள்ளன . தனியாக அனுமனுக்கு ஒரு சந்நிதி உள்ளது. ஓரத்தில் பிள்ளையாருக்கு சந்நிதி இருக்கிறது. கோயிலுக்குப் பின்னால் ஓடும் அருவிக்கு மேலே சிறிய அளவில் சீதை அமர்ந்திருக்க கீழே மண்டியிட்டு அனுமன் அவரிடம் உரையாடுவது போன்ற ஒரு காட்சி சிற்ப வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றது . ஆனால் கோயில் முழுக்க சீதைக்கு என்று தனியாக ஒரு சன்னிதி இல்லை .


சீதை அம்மன் கோயில் என்று கேள்விப்பட்டபோது இதற்கென்று ஒரு தனி சன்னிதி அமைத்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது என்று நான் எண்ணினேன் . கோயிலுக்குள் தனி சன்னிதி இல்லாதது ஏமாற்றத்தையே அளித்தது . புராணகால சீதை அனுபவித்த துன்பங்கள் சீதையின் வாழ்வின் இறுதிக்காலம் வரை நீடித்தன . புராணத்தில் சீதைக்கு துன்பம் நிறைந்த வாழ்வு.இன்று நிஜத்தில் சீதைக்காண ஒரு பகுதியாக கருதப்படும் இடத்தில் சீதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இக்கோயிலை அமைத்திருக்கலாம்.


பெயரில் மட்டுமே சீதை அம்மன் கோயில் என இருக்கும் இக்கோயில் ஒரு ராமர் கோயில் தான் என்று மனதில் எழும் எண்ணங்களைத் தவிர்க்கமுடியவில்லை.



-சுபா

Suba

unread,
Nov 13, 2018, 2:18:40 AM11/13/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram

திருவண்ணாமலை அரசு கல்லூரியில் கடந்த 10.11.2018 சனிக்கிழமை மாநில அளவில் நடைபெற்ற வரலாற்றுப் பயிலரங்கம் தொடர்பான பத்திரிக்கைச் செய்திகள்.


இந்து - தமிழ்


தினத்தந்தி


தினகரன்


தினமணி


Satish Kumar Dogra

unread,
Nov 13, 2018, 4:40:20 AM11/13/18
to mint...@googlegroups.com
சுபாஜீ,
ஒரு பொது இடத்தில் --- சாலையோரமாகவோ, பூந்தோட்டத்திலோ --- "வைதேகி காத்திருந்தாள்", என்பது போல் வெறும் கலைபொருளாக ஒரு சிலை வேண்டுமென்றால் அமைக்கலாம். ஆனால், கோயிலுக்குள் கணவருக்காக நிரந்தரமாகக் காத்திருக்கும் ஒரு சீசை கோயிலுக்கு பெருமை சேர்க்காது. கோயிலில் நிற்கும் ராமரோ, சீதையோ கதாபாத்திரங்களோ, வரலாறு மனிதர்களோ அல்ல.  கோயிலில் சீதை கடவுளாகிய ராமரின் பெண்சொரூபமாக நின்றால்தான் ராமரும் நிறைவு பெறுவார் கோயிலும் நிறைவு பெறும். தனியான ராமர் சிலையுடன் ஏங்கோர் கோயில் இருக்கிறதா? தெரியவில்லை.

It is loading more messages.
0 new messages