பொதுமக்கள் சேவைக்கான இடங்களைத் தரைதளத்தில் வைத்தால் என்ன?

20 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 17, 2025, 1:08:35 AM6/17/25
to மின்தமிழ்
இன்று நான் வெள்ளாஞ்சேரி கனரா வங்கிக்கு சென்றிருந்தேன். 25 படிகள் முடியாமல் ஏறினேன். பொதுமக்கள் சேவைக்கான இடங்கள் தரைதளத்தில் இருக்கக் கூடாதா என்ற கேள்வியோடு சென்றடைந்தேன்.  பின்னர்  தெரிந்தது
என்னை விட வயதில் பெரியவர்கள் நடக்க இயலாதவர்கள் மிகுந்த சிரமத்துடன் மேலே ஏறி வந்தார்கள். என் வலி சிறிதாகி போனது பாலச்சந்தரின் இரு கோடுகள் போல.
பணம் எடுக்க போட என்ற எல்லா காகிதங்களும் ஹிந்தி ஆங்கிலம் இரண்டில் மட்டுமே உள்ளது . இதையெல்லாம் தமிழக மக்கள் நிறைய பேசி விட்டார்கள். ஆனாலும் விடிவு வரவில்லை. ஐந்து பேருக்கு எழுதி கொடுத்தேன். என்னால் முடிந்தது அதுதான் . ஒரு பெரியவர் அவரின் பெயரை எப்படியோ எழுத கற்றுக் கொண்டார் எந்த எழுத்தை எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும் என்று எழுதத் தெரியவில்லை ஆனால் அந்த உருவம் தான் அவருடைய பெயர் என்பது மட்டும் அவருக்கு தெளிவாக தெரிந்தது. மிகச் சிறிய தொகை எடுக்க வேண்டும் தள்ளாமல் மேலே வந்து உதவி கேட்டு எழுதி எடுத்துக்கொண்டு போனார். இன்னொருவருக்கு சின்ன தொகை போட வேண்டும் அவர் விஷயத்தில் விளையாடியது கம்ப்யூட்டர் அக்கவுண்ட் எண் சரியாக தெரியவில்லை அவரிடம் கண்ணாடியும் இல்லை உதவி கேட்டு எழுதி கொண்டு பணத்தை போட்டு சென்றார். நான் இருந்த ஒரு பத்து நிமிடத்தில் இத்தனை பேர் உதவி கேட்க்கிறார்கள். அவர்களுக்கு உதவியது எனக்கு மனதிருப்தியை கொடுத்தாலும் இப்படி ஒரு நிலை இருக்கிறது என்ற வருத்தம் தான் மிஞ்சியது.
மொழி ரீதியாக மாநிலங்களை பிரித்த இந்திய தலைவர்களுக்கு தேசிய வங்கிகள் அந்தந்த மாநிலத்தில் தனக்குத் தேவையான ஃபார்ம்களை அச்சிட்டு கொள்ள அனுமதிக்க இயலாதா?
பொதுமக்களுக்கான சேவை மையங்கள் தரைதளத்தில் இயங்க இயலாதா?
கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு உதவ வங்கிகள் ஓரிருவரை நியமிக்க கூடாதா? என்ற கேள்விகளோடு அடுத்த பணியை நோக்கி.....

#வாட்சப்  
தோழர் ஒருவரின் மனக்குமுறல் 
Reply all
Reply to author
Forward
0 new messages