வாழவைக்கும் காதலுக்கு ஜே!

29 views
Skip to first unread message

foryouths beyouths.com

unread,
Feb 13, 2009, 10:47:05 AM2/13/09
to beyouths groups, umt...@gmai.com

வாழவைக்கும் காதலுக்கு ஜே!











காதலை ஆதரிக்கிறவர்களைப் பற்றி நாம் இங்கே கவலைப்படப் போவதில்லை.அது நமக்கு தேவையுமில்லை.


காதலை எதிர்க்கிறவர்களைப் பற்றித் தான் இனி இங்கே பார்க்கப் போய்கிறோம்.


காதலர் தினம் நம் தமிழ்க் கலாச்சாரத்திற்கு ஏற்றது இல்லை. அது நம் இந்திய கலாச்சாரத்தை, அதாவது இந்துக் கலாச்சாரத்தை அழிக்கிறது என்றும், இன்னும் ஒருபடி மேலே போய் காதலையும் விபச்சாரச் சட்டத்தில் சேர்த்து காதலிப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், காதலர் தினத்தன்று கட்டாயத் தாலி கட்டச் சொல்லி கலாட்டா செய்ய வேண்டும் என்று இந்தியா முழுவதும் வேறு வேறு
பெயர்களில் இயங்குகிற,இந்து மதம் சார்ந்த அமைப்புகள் கூச்சலிடுகின்றன.


பொது இடத்தில் நாகரீகம் இல்லாமல் காதலர்கள் நடந்து கொள்கிறார்கள் அதனால்தான் அதை எதிர்க்கிறோம் என்கிறார்கள். இந்த நல்ல விஷயத்தை நாமும் வரவேற்போம்.


அதற்கு முன்னால் காதல் திருமணம் எப்படி நல்லது,எப்படி கெட்டது? என்பதை கொஞ்சம் பார்த்து விடுவோம்.


ஒரு புதிய வகுப்பறைக்குள் நுழைகிற ஆணோ, பெண்ணோ,அந்த வகுப்பு முழுவதும் நிரம்பி இருப்பவர்களில் மிகச் சிலரைத் தான், தன் நண்பர்களாக தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்ள முடிகிறது.


அதில் பெரும்பாலும் ஒரே ஒரு நண்பனை மட்டும் தான் தேர்ந்தெடுத்து, நம் சுகத் துக்கங்ளை பகிர்ந்து கொள்கிறோம்.


அந்த உயிருக்கு உயிரான நட்பு, ஆணை நோக்கியும் ,பெண்ணை நோக்கியும், இடம் மாறி நகரும்போது,அது காதலாகி விடுகிறது.


 தனக்காக உருகி வழிகிற அந்த ஆண், பெண்ணின் தூய நட்புக்கு முன்னால்,அந்த காதலுக்கு முன்னால்...


போலித்தனமாக மனிதர்களை பிரித்து வைத்திருக்கும்...

சாதி,மதம்,பணம்,படிப்பு,தகுதி,வரதட்ணை,ஆண், பெண் என்கிற வித்தியாசங்களை எல்லாம் தோற்றுப் போய் ஓடிவிடுகின்றன.
காதலிக்கும் காலங்களில் தான், ஒருவரை புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து, மனசளவில் முழுமனிதர்களாகிறார்கள்.

இந்த பக்குவத்தை நமக்குக் காதல் தான் கற்றுத் தருகிறது.


காதல் தான் எங்கே அழ வேண்டுமோ,அங்கே அழக் கற்றுத் தருகிறது.


எங்கே சிரிக்க வேண்டுமோ அங்கே சிரிக்கக் கற்றுத் தருகிறது.


வாழ்க்கையை முழுதாக காதலிக்கக் கற்றுத் தருகிறது.


மொத்தத்தில் வாழ்க்கையை வாழக் கற்றுத் தருகிறது...!





மதம் மாறி, சாதி மாறி திருமணம் செய்து கொள்வதை கலப்புத் திருமணம் என்று சொல்வதைக் கேட்டு நம் அறிவுத் தாத்தா பெரியார் கோபமாக் கேட்டார்.


"என்ன ஆட்டுக்கும்,மாட்டுக்கும் நடக்கிற திருமணமா?கழுதைக்கும் குதிரைக்கும் நடக்கிற திருமணமா?மனிதனுக்கும் மனிதனுக்கும் நடக்கிற,பெண்ணுக்கும் ஆணுக்கும் நடக்கிற திருமணம் எப்படி கலப்புத் திருமணமாகும்?" என்று கேட்டார்.


இனி பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கிற திருமணம் பற்றியும் கொஞ்சம் பார்த்து விடுவோம்...


சொந்தங்கள், பந்தங்கள்,உற்றார் ,உறவினர்களுக்கு பிடித்துப் போயிருந்தால், கடைசியாக பெண்ணிடம் இந்த மாப்பிள்ளைய உனக்குப் பிடிச்சிருக்கா? என்று போனால் போகிறதென்று சும்மா பெயருக்கு கேட்டு வைப்பார்கள்.


எல்லா தகுதிகளையும் பார்ப்பவர்கள்.


மாப்பிள்ளையின் குணமும்,பெண்ணின் மனசும் ஒத்துப்போகுமா?என்பதைப் பற்றி கடைசிவரைக்கும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.


மாப்பிள்ளையை தனக்குப் பிடித்திருக்கிறதா,பிடிக்க வில்லையா என்ன சொல்வது தெரியாத குழப்பமான மனநிலையில் இருக்கும் போதே, பெண்ணின் கழுத்தில் தூக்குக் கயிறாக தாலி ஏறும்...


நல்லவனோ,கெட்டவனோ அவனையே கடைசிவரை கட்டி அழ வேண்டும்...


அப்படித்தான்...


என் அப்பாவைப் பெற்ற பாட்டி,தாத்தா எதிரில் வந்தால் எண்ணெய்யில் இட்ட கடுகாக வெடிப்பாள். தாத்தா சாவுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடவில்லை.


நிறையப் பிள்ளைகள்.


இரவில் மட்டும் கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு, என் பாட்டியும் போய்ச் சேர்ந்து விட்டாள்...


இனி அப்படியே காதலர் தினத்தை எதிர்ப்பவர்களின் பின்னணி பற்றி கொஞ்சம் பார்ப்போம்...

1. உலகத்திலேயே உன் கடவுளை நீ தொடக் கூடாது என்கிற இந்து மதம் தான் புனிதமான மதம் என்பவர்கள்.


2.  மதத்தின் பெயரால், சோதிடத்தின் பெயரால் மனிதர்களை நரபலி கொடுக்கலாம் தப்பில்லை என்பவர்கள்.


3. பெண் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும் அதுதான் இந்திய கலச்சாரம் என்பவர்கள்.

4. பொய்யையும்,மூடத்தனத்தையும் விற்று காசாக்கி ,அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்.


5.  இந்தியாவை மதந்தான் ஆள வேண்டும் மனிதர்கள் ஆளக்கூடாது என்பவர்கள்.


6. மனிதன் முக்கியமா, மதம் முக்கியமா என்றால் மதந்தான் முக்கியம் என்பவர்கள்.

7. காதலித்தவர்களை ஒன்று சேர்ப்பதற்காக உயிர் விட்ட வாலண்டைன் என்ற கிறிஸ்துவ சாமியார்,கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக எதிர்க்கிறார்கள்.


இரத்தம் வெளுத்த,  காவி   நிற ரத்தக் கூட்டம் இப்படித்தான் யோசித்து தொலைக்கும்....!

-ஆதிசிவம்.










--
2/13/2009 08:29:00 PM அன்று விழி,எழு,செயல்படு! (foryouths) இல் *அதிசிவம்@சென்னை* ஆல் இடுகையிடப்பட்டது



இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
 
எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு மீள...
http://feedproxy.google.com/beyouths/bImA
 
 
 "நகர்ந்து கொண்டிருப்பதே...... நதி!
 
இயங்கிக் கொண்டிருப்பவனே..... இளைஞன்!"
 
 

 
    my  web page locating address:
    
             www.beyouths.co.cc

          e m@il: beyo...@yahoo.com
 
 
உங்கள் மின்னஞ்சல் பூக்கூடையில்,
என் வலைப் பூக்களைப் பெற...
 
http://feedburner.google.com/fb/a/mailverify?uri=beyouths/bImA
 
 
 
இமெயில் குழுவில் இணைய...
உங்கள் அன்புக்கு நன்றி!
 
 
       Thanks!  
   ஆதிசிவம், சென்னை. நன்றி!...
 
 
 If you have problem in reading this mail in Tamil, Right click on mail and click Encoding>Select Unicode (UTF-8)
 

Kannan Natarajan

unread,
Feb 13, 2009, 6:07:53 PM2/13/09
to minT...@googlegroups.com
ஆதலினால் மாந்தர்களே காதல் செய்வீர்...

காதலும் வீரமும் பாரதப் பண்பாட்டின் பிரிக்கமுடியாத அங்கங்களாகும். தொன்மைக் காலம் தொட்டு நம் மூதாதையர்களால் இவை இரண்டும் போற்றி வளர்க்கப்பட்டு வருகின்றன.

  • அறம்
  • பொருள்
  • இன்பம்
  • வீடு
என நமது வாழ்வின் நெறிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். தமிழர்தம் அகவாழ்வில் காதல் சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அகநானூற்று பாடல்களில் தெரிந்து கொள்ளலாம். புறவாழ்வில் வீரம் போற்றப்பட்டுள்ளது என்பதை புறநானூற்று பாடல்களில் தெரிந்து கொள்ளலாம்.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் காதலுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப வாழ்க்கை முறைக்கு வலுசேர்ப்பதாக நம் நாட்டு காதல் திகழ்ந்து வருகிறது. கற்பு நெறிமுறைகளும் காதலின் மிக முக்கியமான அம்சங்களாகக் கருதப்பட்டு போற்றப்பட்டன.

  • பார்வதி - பரமசிவன் காதலும்
  • இராமர் - சீதை காதலும்
  • கண்ணன் - இராதை காதலும்
  • முருகன் - வள்ளி காதலும்
புராணங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

காதல் தெய்வங்களாக மன்மதனும் இரதி தேவியும் வணங்கப்பட்டுள்ளனர்.

நம் நாட்டுக் காவியங்களும் இலக்கியங்களும் காதலைப் போற்றியுள்ளன. முப்பால் நூலாகிய திருக்குறளில் காமத்துப்பால் என ஓர் அதிகாரமே படைக்கப்பட்டுள்ளது. காதலை மிகப் புனிதமானதாகப் பண்டைத் தமிழனின் நாகரிகம் கருதியது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள்.

தற்போது புனிதமான காதலைக் கொச்சைப்படுத்தும் முறையில் காதலர் தின கொண்டாட்டங்கள் அமைந்து வருகின்றன. அந்தரங்கமாக நடைபெறும் செயல்களை பொது இடங்களில் அரங்கங்கள் மூலம் அரங்கேற்றும் சீரழிவு நடவடிக்கைகள் பெருகி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக காதலர் தினக் கொண்டாட்டங்கள் திட்டமிட்ட முறையில் பெருகி வருகின்றன. இது முழுக்க முழுக்க மேற்கத்திய கலாசாரத் திணிப்பு என்பதுடன் வியாபார உள்நோக்கம் கொண்ட சில பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் இலாபத்தைப் பெருக்கிக் கொள்ள கடைப்பிடிக்கும் மலிவான தந்திரம் என்பதுதான் முகம் சுளிக்க வைக்கிறது. புனிதமான காதலைக் கொச்சைப்படுத்தி, கேளிக்கைப் பொருளாக்கி, அதன் மூலம் இலாபமடையும் கீழ்த்தரமான வியாபாரத் தந்திரமாக்கி இருப்பதுதான் அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.

கி.பி. நான்காம் நூற்றாண்டில் "வேலண்டைன்" என்னும் பெயர் கொண்ட ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ரோம் அரசாங்கத்தின் தடை உத்தரவை மீறி ஏராளமான காதலர்களுக்கு இரகசியமான முறையில் திருமணம் செய்து வைத்து காதலை அங்கீகரித்த காரணத்தினால் அவர் இறந்த பிப்ரவரி 14ம் தேதியை "காதலர் தினம்" என கிறிஸ்தவ மதத் தலைவர்கள் தேவாலயங்களில் கொண்டாடுகின்றனர். துவக்கத்தில் இது கிறிஸ்தவ மதப் பண்டிகைகளில் ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது.

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோதுகூட இந்த பழக்கம் நம்மைத் தொற்றிக் கொள்ளவில்லை. நம் நாட்டில் 1969 முதல் வேலண்டைன் தின வாழ்த்து அட்டை விற்பனை சூடு பறக்கத் துவங்கியது. காதலை வெளிப்படுத்தும் வகையில் வாழ்த்து அட்டைகளில் ஆபாசமான படங்களும், அருவெறுக்கத்தக்க வாசகங்களும் விற்பனை உள்நோக்கத்துடன் ஏராளமாக இடம்பெறத் துவங்கின.

காதலர் தின பரிசுப் பொருள்கள் விற்பனைக்காக காதலர் தினம் திட்டமிட்ட வகையில் விளம்பரப்படுத்தப்பட்டது. இதற்கு உலகமயமாக்கல், தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஆகியவை துணை நின்றன. நம் நாட்டை மேற்கத்திய மயமாக்கும் இத்தகைய முயற்சிக்கு இளம் பருவத்தினர் ஏராளமாகப் பலியாகத் துவங்கினர்.

இந்த சீரழிவு கலாசாரம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் தற்போது பள்ளி மாணவர்களிடம் கூட வேகமாகப் பரவி வருகிறது.

மேலை நாடுகளில் பொது இடங்களில் ஆணும் பெண்ணும் கட்டி அணைத்துக் கொள்வதும், முத்தங்களைப் பரிமாறிக் கொள்வதும் சகஜமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் நமது நாட்டில் அருவெறுக்கத்தக்கது என இன்றளவும் கருதப்படுகிறது. தற்போது காதலர் தின கொண்டாட்டம் என்ற பெயரில் இளம் ஜோடிகள் பொது இடத்தில் கூடுவதும், அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதும் பெருகி வருவது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக, இத்தகைய கொண்டாட்டங்களுக்கு யாரும் தங்கள் மனைவியையோ அல்லது உண்மைக் காதலியையோ அழைத்து வருவதில்லை. காதலர் தினம் என்கிற போர்வையில் காமக் களியாட்டங்களை அரங்கேற்றுவதற்காக நெறிதவறிய உறவுகளையே அழைத்து வருகின்றனர்.

இத்தகைய கொண்டாட்டங்கள் தற்போது நல்ல ஒழுக்கமான குடும்பப் பெண்களையும், இளம் பருவத்தினரையும் பெரிய அளவில் பாதிக்கத் துவங்கியுள்ளன. குறிப்பாக பல குடும்பங்களில் இத்தகைய கொண்டாட்டங்களின் மூலம் குடும்பமே சீர்குலைந்து போகும் அளவுக்குப் பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன.

ஊடகங்களும் வியாபார உள்நோக்கத்துடன் இத்தகைய கலாசார சீரழிவுக்கு பெருமளவில் துணை புரிந்து வருகின்றன. சில தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணுக்கு தொலைபேசி மூலம் காதலை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் எவ்வித தடையும் இன்றி குறுந்தகவல்களை அனுப்ப முடிகிறது. அதுவும் தொலைக்காட்சிகளில் வெளிப்படையாக ஒளிப்பரப்பாகிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியாவதோடு குடும்பங்களில் பெரும் பிரச்னைகளும் உருவாகின்றன. சில செல்போன் நிறுவனங்கள் காதலர் தினத்தை முன்னிட்டு விஷேச சலுகைகளை அறிவிப்பதன் காரணமாக ஏராளமான குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. பெரும்பாலும் செல்போன்கள் மூலம் ஆபாசமான குறுந்தகவல்களும் வக்கிரமான படங்களுமே வாழ்த்து என்னும் பெயரில் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக காதலர் தினத்தன்று செல்போன் நிறுவனங்கள் நல்ல இலாபம் பெற்று வருகின்றன.

தனியார் பண்பலை வானொலிகள் நேரடி ஒலிபரப்பு என்ற பெயரில் முன்பின் அறிமுகம் இல்லாத இளம் பருவத்தினரை ஒருவருக்கொருவர் பேச வைக்கின்ற காரியங்களில் வெளிப்படையாக ஈடுபடுகின்றன. இதுவும் பல குடும்பங்களில் பெரும் பிரச்னைகளைத் தோற்றுவிக்கிறது.

காதலர் தினத்தை மையமாக வைத்து தற்போது இளம் பருவத்தினர் அதிகமாக உபயோகிக்கும் வலைதளங்களில் ஏராளமான ஆபாசப் படங்கள் வெளியிடப்படுகின்றன.

மின்னஞ்சல் மூலம் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் தங்களுக்குள் ஆபாசத் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். காதலர் தினம் என்ற போர்வையில் காமக் களியாட்டங்களே ஓங்கி நிற்கின்றன.

மேலும் சில நட்சத்திர விடுதிகளில் காதலர் தின கொண்டாட்டம் என்ற பெயரில் விருந்துகளும், நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது அப்பட்டமாக விபசாரத்தை அரங்கேற்றும் நிகழ்ச்சியாகத் தான் உள்ளது. ஆக, காதலர் தின கொண்டாட்டம் என்பது நமது நாட்டில் பல குடும்பங்களில் பிரச்னைகளைத் தோற்றுவிப்பதோடு சட்டவிரோத காரியங்களுக்குத் துணைபோவதாகவே அமைந்துள்ளது.

தற்போது இளம் பருவத்தினரை தங்கள் வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்கள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதைப் போல அன்றாடம் பயந்து, பயந்து வாழ வேண்டிய சூழ்நிலையிலும் தங்களது சந்ததியரின் எதிர்காலம் குறித்த அச்சத்திலும் உள்ளனர்.

நம் நாட்டில் நடைபெறுகின்ற பல்வேறு விதமான பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நல்ல பண்பாட்டையும், கலாசாரத்தையும் மக்கள் மனதில் விதைப்பதாக இருந்தன. நம் நாட்டில் பன்னெடுங்காலமாக;
  • சாவித்திரி நோன்பு
  • நவராத்திரி விரதம்
ஆகியவை தம்பதிகளுக்கு மத்தியில் ஆழ்ந்த காதலையும், அன்பையும் விதைப்பதாக இருந்தன. குடும்ப முறை இதன் காரணமாக வலிமை பெற்றுவந்தது.

ஆனால், இந்த காதலர் தின கொண்டாட்டங்கள் அருவறுக்கத்தக்க ஆபாசமான அநாகரிக செயல்களுக்கே வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன.

நம் நாட்டில் "இந்திர விழா" என்ற பெயரில் காதலுக்கு விழா எடுக்கப்பட்டு வந்தது. புதிதாக நமக்கு காதலர் தினம் என்று தனியாக ஒன்று தேவையில்லை. தினம், தினம் ஒவ்வொரு குடும்பத்திலும் தம்பதிகளுக்கு மத்தியில் காதலர் தினமாகவே நம் நாட்டில் கருதப்பட்டு வருகிறது. நமது நாட்டில் காதல் திருவிழாக்கள் குடும்ப உறவை வலிமைப்படுத்துவதாக இருந்தன. ஆனால், இந்த மேற்கத்திய பிப்ரவரி 14 காதலர் தின கொண்டாட்டம் குடும்ப உறவைச் சிதைப்பதாக அமைந்துள்ளது.

சமீபகாலமாக இத்தகைய கலாசார சீரழிவு நடவடிக்கைகளுக்கு எதிராக இந்து அமைப்புகள் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாகவும், பொது இடங்களில் இத்தகைய அருவெறுக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் பிடித்து காவல் துறையில் ஒப்படைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளன.

இந்து அமைப்புகள் இப்படி அறிவித்த உடனேயே இந்து அமைப்புகளுக்கு எதிராக உள்ள ஏனைய பல்வேறு விதமான அமைப்புகளும் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறோம் என்கிற போர்வையில் ஊக்குவிக்கத் துவங்கியுள்ளன.

காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்ப்போர், உண்மைக் காதலை எதிர்க்காமலும், காதலர் தின கொண்டாட்டங்களை ஆதரிப்போர் நெறி தவறிய காதலை ஆதரிக்காமலும் நம் பண்பாட்டின் வேர்களைக் காப்பாற்ற வேண்டும். இதுவிஷயத்தில் இருதரப்பாரும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும்.

இதுவிஷயத்தில் கலாசார சீரழிவுக்கு துணைபோகாமல் ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் காதல் புனிதமானது, காதல் தெய்வீகமானது, ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாதது. எனவேதான் மகாகவி பாரதியார், "ஆதலினால் மாந்தர்களே காதல் செய்வீர்," என காதலைப் போற்றியுள்ளார்.

புனிதமான காதலைக் கொச்சைப்படுத்தும், குடும்ப உறவுகளைச் சிதைக்கும், கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும் காதலர் தினக் கொண்டாட்டங்களைப் புறக்கணிப்போம்! உண்மைக் காதலை ஆதரிப்போம்!!

அர்ஜுன் சம்பத்

நன்றி: தினமணி

அரவிந்தலோசனன்

unread,
Feb 13, 2009, 9:47:21 PM2/13/09
to மின்தமிழ்
The Soul of Love
by Deepak Chopra


Adapted from Grow Younger, Live Younger, by Deepak Chopra (Three
Rivers Press, 2001).

Our soul is the weaving of our memories and desires, providing the
template for all our aspirations, choices and experiences in life. We
can look at the soul as a confluence of contexts and meaning. Context
entails a set of relationships and meaning is the way we interpret the
relationships. Our lives are a river of relationships and meaning.

Each of us is continuously re-enacting one of the perennial themes of
love—trust and betrayal, requited love and forbidden lust,
unconditional love and calculating neediness. From Adam and Eve to
Judas and Jesus, the most powerful stories we tell each other across
time and culture are love stories. Love is the primal force on earth
and beyond all the obvious and stated reasons, behind every action is
love.

Striving for good grades in school, doing well in a job, creating a
great work of art, composing a beautiful symphony, writing a great
novel, winning the Nobel Prize—if you dig deep enough you will see
that all these stories are love stories in disguise. In actuality, the
only reason we do anything is for more love, although we may go to
considerable lengths to conceal our true motivations.

Our discussion of love leads to a simple conclusion: For the benefit
of your physical, emotional, and spiritual well-being, generate more
love in your life. Each morning when you awaken, ask youself, “How can
I create more love today? How can I express more love today? How can I
be open to receiving more love today?” In every interaction ensure
that some exchange of love takes place.

devoo

unread,
Feb 13, 2009, 11:10:02 PM2/13/09
to மின்தமிழ்
// Feb 13, 8:47 pm, "foryouths beyouths.com"

இனி அப்படியே காதலர் தினத்தை எதிர்ப்பவர்களின்

பின்னணி பற்றி கொஞ்சம் பார்ப்போம்...//

ராஜா பர்த்ருஹரி சிருங்கார சதகமும் எழுதினார்;
வைராக்ய சதகமும் எழுதினார்.
கஜுரஹோ ஆலயம் உலகப்புகழ் பெற்றது.
பாரத சமுதாயம் சிருங்கார சதகத்திற்கு நெருப்பு வைக்கவில்லை;
கஜுரஹோ ஆலயத்தைத் தகர்க்கவில்லை.
அதிவீர ராம பாண்டியரைப் பழிக்கவில்லை.
அந்த அந்த இடம் அததற்கு.
பின்னணி ஆராய்ச்சி என்றால் அனைவரின் பின்னணியும்
வெளிவரும்.

தேவ்

Kannan Natarajan

unread,
Feb 13, 2009, 11:19:35 PM2/13/09
to minT...@googlegroups.com
காதல் செய்ய நிபந்தனை: வைரமுத்து வேண்டுகோள்

பெயரில் உயிர், கலாசாரம், தமிழ் உள்ளது. எனவே தமிழ்ப் பெயர் சூட்டுங்கள். குழந்தைக்கு தமிழ்ப் பெயர் வைத்தால் காதலிப்போம் என பெண்கள் கூற வேண்டும்.

காதலிக்கும்போதே காதலர் மறுத்துவிட்டால் போகட்டும் என விட்டுவிடுங்கள். தமிழ்ப் பெயரையே வைக்காதவரா நம் தமிழ்ப் பெண்ணை வைத்துக் காப்பாற்றுவார்! 

இவ்வாறு, மதுரை காமராஜ் பல்கலை.,யின் தமிழ்ப் பேரவை செம்மல் விருது வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து நேற்று (13/02/09) பேசினார்.

நன்றி: தினமலர்

Narayanan Kannan

unread,
Feb 13, 2009, 11:53:31 PM2/13/09
to minT...@googlegroups.com
2009/2/14 devoo <rde...@gmail.com>:

> ராஜா பர்த்ருஹரி சிருங்கார சதகமும் எழுதினார்;
> வைராக்ய சதகமும் எழுதினார்.
> கஜுரஹோ ஆலயம் உலகப்புகழ் பெற்றது.
> பாரத சமுதாயம் சிருங்கார சதகத்திற்கு நெருப்பு வைக்கவில்லை
> கஜுரஹோ ஆலயத்தைத் தகர்க்கவில்லை.
> அதிவீர ராம பாண்டியரைப் பழிக்கவில்லை.

அக்கால தமிழ்/இந்திய சூழலில் செமித்தியப் பண்பாட்டின் 'தூய்மை வாதம்'
(puritanical approach) இல்லாமல் இருந்தது. அதனால்தான் திருவாய்மொழி
வியாக்கியானம் பல அந்தரங்கமான விஷயங்களை பொதுவில், அதுவும் கோயிலில்,
அதுவும் இறைவனை வைத்துக்கொண்டு (பெருமாள் உற்சவத்தை விட்டு வியாக்கியானம்
கேட்டிருக்கிறார்) பேசமுடிந்திருக்கிறது.

ஆயிரம் சங்கப்பாடல்களை மேற்கோள் காட்டுவர். ஆனால் அடிமனதில் worst
conservative ஆக இருப்பர். இது எலிசபெத்தியன், இஸ்லாம் தாக்கம். நம்மை
அறியாமலே நம் சங்க வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டோம்.

மங்களூரில் ஒரு டிஸ்கோவிற்குள் இந்துசேனா புகுந்து ஆடிக்கொண்டிருந்த
பெண்களை வெளியே இழுத்துப்போட்டு அடித்திருக்கின்றனர். வீடியோ பார்த்தேன்.
குமுறியது. ஒரு பக்கம் தேவி என்று கோயிலில் வைத்துக் கும்பிடுகின்றனர்,
இன்னொரு பக்கம் ஆண்கள் விரும்புவதைத்தான் செய்ய வேண்டும் எனும்
ஆணாதிக்கம்! இந்தியா ஒரு முரண்பாட்டு மூட்டையாகிப் போனது.

மேலை நாடுகளைக் குற்றம் சொல்வது வழக்கமாகிவிட்டது இவர்களுக்கு. மேற்கில்
ஏதோ கற்பே இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனது "நெஞ்சு
நிறைய" கதை படிக்க வேண்டும் இவர்கள். எல்லா உலகிலும் காதல் என்பது
இருமனச் சேர்க்கையாகவே உள்ளது. செக்ஸ் விஷயத்தில் இந்தியாவில் ஆணுக்குரிய
சுதந்திரம் பெண்களுக்கு இல்லை.

தமிழ்ப்பண்பாட்டின் கற்பு என்பதைப் பெண்கள்தான் காக்க வேண்டும் எனும்
ஆணின் எதிர்பார்ப்பு கேலிக்குரியது!

க.>

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2009, 12:16:39 AM2/14/09
to minT...@googlegroups.com
காதல்  என்பது இரு மனங்கள் ஒன்றை ஒன்று பூரணமாகப் புறிந்து கொள்ளல்  
 
அது இந்த உலகத்தில் இது வரை ஏற்படவே இல்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/2/14 Narayanan Kannan <nka...@gmail.com>

Kasumi chan

unread,
Feb 14, 2009, 12:27:38 AM2/14/09
to மின்தமிழ்
Reasons to Have Sex Today!
by Veronica Peterson


What would Valentine’s Day be without an opportunity to mention the
three-letter word that gets everyone so riled up? Yes, you guessed it–
I’m talking about at a little S-E-X. So, let’s chat, shall we? Beyond
being just one-heck-of-good-time, medical studies report that an
active sex life contributes to a longer and more fulfilling life. So
come on, everybody’s doing it (or at least the lucky ones), and here
are five reasons for you to join in:

1. Sex boosts your immune system. “Honey, I have a headache,” may now
be the best reason to have sex! A startling number of physicians are
now recognizing how sexual and emotional health affect our entire well
being. In other words, how our brain directly impacts our immune
system. “We know that people who enjoy a regular, satisfying sex life
(i.e. regular orgasms) are less stressed, less depressed and generally
more well physically, mentally and emotionally,” says Wendy Strgar,
loveologist and CEO of Good Clean Love. In a recent article, Dr. Paul
Pearsall, director of Behavioral Medicine at Detroit’s Beaumont
Hospital, concludes that many of his patients had experienced sexual
dissatisfaction prior to a heart attack. He also claims that sexual
contentment leads to less severe headaches and reduced discomfort from
arthritis in both genders.

2. Sex burns calories. Oh yeah, forget those fad diets and get busy
gettin’ busy. A mere 30-minutes of sex burns 90 calories and while
that may not sound impressive, at an average of three times a week,
you’re burning 5 pounds in a year! Or, according to Forbes magazine,
having sex just twice a week for a year will burn off the equivalent
of seven huge spaghetti dinners. Seconds, anyone?

3. Sex relieves pain. Orgasm is one serious narcotic! Oxytocin, a
naturally occurring chemical in the body surges during and after
climax while working in conjunction with a few other endorphins to
make sure you feel no pain. In his book, How to Treat Arthritis,
rheumatologist Carter V. Multz asserts that sex can reduce pain,
swelling, and inflammation associated with arthritis, headaches and
menstrual cramps.

4. Sex decreases aging. “Use it or lose it” has never been more
applicable. Regular sex releases a plethora of “happy” chemicals into
your bloodstream, including testosterone. As we age, our testosterone
levels decrease. Sex is a wonderful way to build your reserves back
up, helping build new bones and muscles while putting a youthful glow
on your face. According to a study by Dr. David Weeks, a clinical
neuropsychologist at the Royal Edinburgh Hospital in Scotland and co-
author of Superyoung, men and women who reported having sex an average
of four times per week looked approximately 10 years younger than they
really were.

5. Sex is great for depression. “The release from orgasm does much to
calm people. It helps with sleep, and that is whether we talk about
solo sex or sex with a partner,” says Jennifer Bass, the head of
information services at the Kinsey Institute for Research in Sex,
Gender and Reproduction in Bloomington, Ind., in a recent MSNBC
article. Researchers believe that sex helps the brain produce
serotonin which, in turn, prompts new neurons to grow. Most chemical,
antidepressant medications, like Zoloft, work to increase serotonin
levels. These drugs take three to four weeks to begin working–about
the same amount of time required for new neurons to form. One reason
these drugs could be an effective treatment is because they increase
cell growth–just as sex does.

Kannan Natarajan

unread,
Feb 14, 2009, 1:59:57 AM2/14/09
to minT...@googlegroups.com
>தமிழ்ப்பண்பாட்டின் கற்பு என்பதைப் பெண்கள்தான் காக்க வேண்டும் எனும் ஆணின் எதிர்பார்ப்பு கேலிக்குரியது!

பெண் இனத்திற்கு தான் தமிழ் பண்பாட்டின் மேன்மை புரியும் என்பதனால். மாகவி தொடங்கிய புதுமைப் பெண் முதல் இக்கால உயிர்த்தியாகம் செய்யும் பெண்கள் வரை, செயல் வீரர்களாக உள்ளனர். ஆனால், ஆண்களோ!!

தாய்நாடு, தாய்மொழி, தாயன்பு, தாயுமானவர்கள்.

தமிழ் என்றாலே - தாய் அல்லவா, ஆக முதல் வேண்டுகோள் பெண் இனத்திற்கு. கடைப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை மிகுதியால்.

ஆணின் எதிர்பார்ப்பு கேலிக்குரியது அல்ல, ஊக்கம் ஏற்படுத்த. பாட மதிப்"பெண்"கள் தான், பெண்களின் உறைவிடமாகவிட்டது. "பண்" "பாட்டிலு"ம் - பெண்களின் ஆவல் முகுதியாகவுள்ளதால், தமிழ் பண்பாட்டின் காவலர்களிடம் தான் முறையிட இயலும். ஏவலர்களிடம் இயலுமா:-))

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்


Va.Mu.Se. Kavi Arasan

unread,
Feb 14, 2009, 10:04:28 AM2/14/09
to minT...@googlegroups.com
எது தமிழ் எல்லை? எது தமிழ் இல்லை?
மத உணர்வாளர்கள், அவர்கள் மதத்தைப் பரப்ப
பிறமொழி உணர்வாளர்கள், அவர்கள் மொழியைப் பரப்ப
திரைத்துறையினர்________________________
 
எது தமிழ் இல்லை? எது தமிழ் எல்லை?
அவரவர் தன் கருத்தைப் பரப்ப மட்டுமே தமிழைப் பயன்படுத்துகின்றனர்.
 
திரு ரெ,கா. மீண்டும் மன்னிக்க, 
 
"தமிழ் அறிந்தவர் அனைவரும் தமிழர் அல்ல,  தமிழர் அனைவரும் தமிழ் அறிந்தவர் அல்ல."
 
அன்புடன்
.கவி.
 
--- On Fri, 2/13/09, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:

வேந்தன் அரசு

unread,
Feb 14, 2009, 10:05:36 AM2/14/09
to minT...@googlegroups.com


On Sat, Feb 14, 2009 at 12:27 AM, Kasumi chan <kasum...@gmail.com> wrote:



4. Sex decreases aging. "Use it or lose it" has never been more
applicable.

அதுக்காக நாம் தசரத மன்னன் போல் வாழ வழி கிட்டுமா?


> men and women who reported having sex an average
of four times per week looked approximately 10 years younger than they
really were.

அதுக்காக என்னை நேரில் பார்த்து தப்பா எடை போடதீங்க.
நான் அடாது மழை பெய்தாலும் விடாது நடை போகும் வழக்கம் கொண்டவன்

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2009, 10:57:44 AM2/14/09
to minT...@googlegroups.com
கற்பு எனப்படுவதே ஆண் ஆணாக, பெண் பெண்ணாக இயல்பு நிலை கெடாமல் இருப்பதே

அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/2/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

MANI KANDAN

unread,
Feb 13, 2009, 11:13:56 PM2/13/09
to minT...@googlegroups.com

Narayanan Kannan

unread,
Feb 14, 2009, 9:07:03 PM2/14/09
to minT...@googlegroups.com
2009/2/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>> 4. Sex decreases aging. "Use it or lose it" has never been more
>> applicable.
>
> அதுக்காக நாம் தசரத மன்னன் போல் வாழ வழி கிட்டுமா?
>

அப்படியெல்லாம் அக்கட்டுரை சொல்லவில்லை. காதலியிடம் உறவு கொள் என்று
சொல்கிறது. சொல்பவள் பெண் எழுத்தாளர்.

'ஆதலினால் காதல் செய்வீர்! வேந்தர் பெருமானே!'

க.>

வேந்தன் அரசு

unread,
Feb 14, 2009, 9:10:36 PM2/14/09
to minT...@googlegroups.com


2009/2/14 Narayanan Kannan <nka...@gmail.com>

கண்ணன் நம் முன்னோர்கள் சிற்றின்பம்  தவிர்க்கணும், குண்டலினி எழுப்பணும் என்கிறார்கள்.

எதிர்கருத்தாக இருக்கே?

Narayanan Kannan

unread,
Feb 14, 2009, 9:17:38 PM2/14/09
to minT...@googlegroups.com
2009/2/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> கண்ணன் நம் முன்னோர்கள் சிற்றின்பம் தவிர்க்கணும், குண்டலினி எழுப்பணும்


> என்கிறார்கள்.
>
> எதிர்கருத்தாக இருக்கே?
>

ஆகா! வந்திட்டீங்களா ;-)

இரண்டு கருத்தும் இந்தியாவில் உண்டு. யயாதிகளும் உண்டு (இல்லையெனில்
முப்பது கோடி சனங்களுக்கும் என்றிருந்த இந்தியா இன்று 100 கோடி சனங்களாக
எப்படி மாறியது?;-), யோகிகளும் உண்டு.

கலவி என்பது குண்டலியின் குட்டி!! ஒட்டு மொத்தமாகத் தந்தால் இவன் மண்டை
வெடித்து செத்துவிடுவான் என்று தினம் கொஞ்சம் மூலிகை, அதுவும் தேனில்
இழைத்த மூலிகை என்பதே கலவி இன்பம். கலவியும் குண்டலினியே! இக்கட்டுரை
ஆசிரியர் பேசும் அத்துணை நல்லதும் குண்டலினியால் விளைவதே.

சித்தர்களில் ஒரு சாரார் இதை 'வாலைத் தெய்வம்' என்பர். பாரதி கூட
கண்ணனைப் பாடும் போது (கண்ணம்மாவாக பாவித்து) 'வாலைக்குமரியடி கண்ணம்மா,
மருவக்காதல் கொண்டேன்' என்பான்.

கலவி ஆரோக்கியமானது. ஆதலினால் காதல் செய்வீர்!!

க.>

வேந்தன் அரசு

unread,
Feb 14, 2009, 9:32:25 PM2/14/09
to minT...@googlegroups.com


2009/2/14 Narayanan Kannan <nka...@gmail.com>
2009/2/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


கலவி ஆரோக்கியமானது. ஆதலினால் காதல் செய்வீர்!!

காதலுடன் கூடிய கலவிதான் ஆரோக்கியமானது. கடனுக்கு செய்யும் கலவி அல்ல. எனெனில், காதல் பெருக்கில் விந்து சுரப்பும் பெருகும்

உண்மையில் இளைஞர்கள் அதிக கற்பனை வளத்துடன் இருப்பதற்கு அவர்கள் சிந்துவதை விட அதிகம் சுரக்கிறார்கள். எனவே அது குருதிவழி ஓடி மூளையின் சிந்தனை திறனை பெருக்குகிறது.  வயது கூடிவிட்டால் பை கூட நிறையாது என்றால்  குருதியில் கலக்குவது எங்கனம்?. எனவே விந்தை அடக்குவதுதான் வயதானவருக்கு நன்மை.

Narayanan Kannan

unread,
Feb 14, 2009, 9:59:32 PM2/14/09
to minT...@googlegroups.com
>> கலவி ஆரோக்கியமானது. ஆதலினால் காதல் செய்வீர்!!
>
> காதலுடன் கூடிய கலவிதான் ஆரோக்கியமானது. கடனுக்கு செய்யும் கலவி அல்ல. எனெனில்,
> காதல் பெருக்கில் விந்து சுரப்பும் பெருகும்
>
> உண்மையில் இளைஞர்கள் அதிக கற்பனை வளத்துடன் இருப்பதற்கு அவர்கள் சிந்துவதை விட
> அதிகம் சுரக்கிறார்கள். எனவே அது குருதிவழி ஓடி மூளையின் சிந்தனை திறனை
> பெருக்குகிறது. வயது கூடிவிட்டால் பை கூட நிறையாது என்றால் குருதியில்
> கலக்குவது எங்கனம்?. எனவே விந்தை அடக்குவதுதான் வயதானவருக்கு நன்மை.
>

நல்ல கருத்துக்கள்.

சமகால மேலை மருத்துவம் அக்கட்டுரை பேசும் போக்கில்தான் உள்ளது. இந்திய
மருத்துவம் என்ன சொல்கிறது என்று தெரியவில்லை.

இந்த அடக்குவது குறித்து இந்தியா பேசி வருகிறதே தவிர
நடைமுறைப்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. இந்திய ஜனத்தொகை நிரம்பி
வழிகிறது. கட்டுமானத்துடனான கலவிக்கல்வி இந்தியாவில் இல்லை. மேலை
நாடுகளில் free sex இருந்தாலும் ஜனத்தொகை குறைவாகவே உள்ளது. அங்கு
குடும்பம் என்பது திட்டமிடப்படுகிறது. இந்தியாவில் sex education
இல்லாததால் கட்டுப்பாடற்ற ஜனத்தொகைப் பெருக்கம் நடந்துள்ளது. அங்கு
பிறப்பு என்பது ஒரு விபத்து. திட்டம் அல்ல. எனக்குத்தெரிந்தவரை கல்யாணம்
ஆகும் வரை ஆணும், பெண்ணும் பெரும் அவஸ்தையில் உள்ளார்கள். கல்யாணம்
ஆனவுடன் அது கட்டுக்கடங்காமல் ஓடுவதைக் காண்கிறோம்.

பண்டைய காமன்விழா சரியான நெறிப்படுத்தல் என்றே தோன்றுகிறது. இந்துசேனாக்
குண்டர்கள் தனிம்னைத சுதந்திரத்தில் தலையிடுவது அவர்கள் இந்து
தர்மங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. நீங்கள்
மிகச்சரியாக சுட்டியது போல் அவர்கள் இந்து 'தாலிபான்' கள்தான்!

க.>

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2009, 10:04:27 PM2/14/09
to minT...@googlegroups.com
வாரம் இரு முறையாவது  முறையான  கலவியில் ஈடுபடும் தம்பதிகள்
மற்றவரை விட 10 வயது இளமையாக காட்சி அளிக்கிறார்களாம்
இது ஒரு மருத்து விஞ்ஞான ஆய்வு
 
 
காதல் என்பது அன்பு மட்டுமல்ல காமமும் கூடத்தான்
காமம் என்பது இச்சை மட்டும் அல்ல உடல் மனம் பயிற்சியும் தான்
 
அதலினால் காதல் செய்வீர்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/2/15 Narayanan Kannan <nka...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 14, 2009, 11:00:59 PM2/14/09
to minT...@googlegroups.com


2009/2/14 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

வாரம் இரு முறையாவது  முறையான  கலவியில் ஈடுபடும் தம்பதிகள்
மற்றவரை விட 10 வயது இளமையாக காட்சி அளிக்கிறார்களாம்
இது ஒரு மருத்து விஞ்ஞான ஆய்வு
 
 
காதல் என்பது அன்பு மட்டுமல்ல காமமும் கூடத்தான்
காமம் என்பது இச்சை மட்டும் அல்ல உடல் மனம் பயிற்சியும் தான்
 
அதலினால் காதல் செய்வீர்


தேனி ஐயா
பரத்தையர்கள் எல்லாம் பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு வாழணுமே. ( 40 க்கு மேல் வாடிக்கை வற்றிபோவதால் அற்ப ஆயுளாராகி விடுவாரா?)

வேந்தன் அரசு

unread,
Feb 14, 2009, 11:30:34 PM2/14/09
to minT...@googlegroups.com


2009/2/14 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

வாரம் இரு முறையாவது  முறையான  கலவியில் ஈடுபடும் தம்பதிகள்
மற்றவரை விட 10 வயது இளமையாக காட்சி அளிக்கிறார்களாம்
இது ஒரு மருத்து விஞ்ஞான ஆய்வு
 
 

நல்ல ஆரோக்கியம் இருந்தால்தானே வாரம் இருமுறை ஈடுபடமுடியும். ஆரோக்கியம் இருந்தால் இளமையாகவே இருப்பார்கள்.

'கோ ஃபார்  எ லாங் வால்க் எவரி டே.

Narayanan Kannan

unread,
Feb 14, 2009, 11:43:16 PM2/14/09
to minT...@googlegroups.com
> தேனி ஐயா
> பரத்தையர்கள் எல்லாம் பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு வாழணுமே. ( 40 க்கு மேல்
> வாடிக்கை வற்றிபோவதால் அற்ப ஆயுளாராகி விடுவாரா?)
>

குமரன் சொல்வது சரிதான்! மிகவும் வித்தியாசமான கோணம்.

இது குறித்த பரத்தையர் ஆய்வுகள் எம்மொழியிலேனும் உண்டா என்று
தெரியவில்லை. நெத்தியடிக் கேள்வியாகக் கேட்டுவிட்டீர்கள் ;-)

நம்மூர் பரத்தையர் (அக்காலத்து) கர்பமுறாமல் தவிர்க்கும் வழியாது என்பது
ஒரு மருத்துவக்கேள்வி எனக்கு. அதுவொரு தொழில் ரகசியமாக இருந்து
ஒழிந்துவிட்டது போலும். ஒரு மருத்துவமுறை அழிந்துவிட்டது!

க.>

kra narasiah

unread,
Feb 15, 2009, 12:28:27 AM2/15/09
to minT...@googlegroups.com
There is an excellent book by Sriram V "The Devadasi and the Saint - The life and times of Bangalore Nagarathnamma" on this subject
narasiah

--- On Sat, 2/14/09, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
From: Narayanan Kannan <nka...@gmail.com>
Subject: [MinTamil] Re: வாழவைக்கும் காதலுக்கு ஜே!
To: minT...@googlegroups.com

Narayanan Kannan

unread,
Feb 15, 2009, 12:35:04 AM2/15/09
to minT...@googlegroups.com
2009/2/15 kra narasiah <nara...@yahoo.com>:

> There is an excellent book by Sriram V "The Devadasi and the Saint - The
> life and times of Bangalore Nagarathnamma" on this subject
> narasiah

சில நேரம் ஆச்சர்யமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் செய்யும் தொழிலே
தெய்வம்! அதில் திறமைதான் நமது மையம்! என்றொரு professionalism
இருந்திருக்கிறது. இப்போது ஏன் அது போய் திருப்பதி மொட்டை போன்ற
கதையாகிவிட்டது என்று தெரியவில்லை;-)

64 கலைகள் கற்றவள் தேவதாசி. அவளுக்கு மருத்துவமும் தெரியும்.
சாதுர்யமாகப் பேசவும் தெரியும். அமெரிக்காவில் பேசப்படும் 'ஹூக்கர்'
எனும் பெண்ணிற்கு 'அதை'த்தவிர ஒன்றும் தெரியாது. எல்லாவற்றிலும் ஒரு கலை
நுணுக்கம் இருந்திருக்கிறது அந்த மண்ணில். அந்த அழகியலை எப்போது நாம்
தொலைத்தோம்? ஏன்?

க்.>

devoo

unread,
Feb 15, 2009, 1:18:28 AM2/15/09
to மின்தமிழ்
// Feb 14, 8:05 pm, வேந்தன் அரசு
அதுக்காக என்னை நேரில் பார்த்து தப்பா எடை போடதீங்க.//

எதைத் தப்பு என்கிறீர்?
அப்படியே எடைபோட்டு விட்டாலும் அதில் என்ன தவறு?
முற்போக்குச் சிந்தனையிலும் பாசாங்கு பிடித்துக் கொள்வதேன்?


தேவ்

kra narasiah

unread,
Feb 15, 2009, 1:31:58 AM2/15/09
to minT...@googlegroups.com

வேடிக்கையாக உள்ளது. ஒருதடவை நான் "மறையும் மறையவர்கள்" என்ற நூலுக்கு விமர்சனம் எழுத, அதைத் தாக்கி ஒரு துவேஷி, பொதிகைச் சித்தர் என்ற பெயரில், நான் தேவதாசிகளுக்கு வக்காலத்து வாங்குவ்தாகவும் பிராமண்ர்கள் சத்தியமூர்த்தி காலத்திலிருந்து இதையே செய்து வ்ருவதாகவும் சாடியிருந்தார்! என்க்கு அதைப்பற்றிக் கவலையில்லை; ஆனால் என் எழுத்தைச் சரியாக்ப் புரிந்து கொள்ளாமல் பிராமண்த்துவேஷம் ஒன்றையே கருத்தில் கொண்டு, தாக்குவது நியாயமற்றது என்று மட்டும் தோன்றிற்று.
நரசய்யா
  
--- On Sat, 2/14/09, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Feb 15, 2009, 2:09:25 AM2/15/09
to minT...@googlegroups.com
இது தமிழகத்து இலக்கிய நோய்!

எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும்....

என்று உரத்து சொல்லிக்கொண்டே, "பேசுவது யார்? நம்ம சாதிப்பயலா?
வேத்தாளா?" என்று வேண்டியரிடம் கேட்டுக்கொண்டிருக்கும் சமூகம்
தமிழ்ச்சமூகம்!

ஆச்சர்யமாக இருக்கும்! எப்படி சாதீயம் என்பது ஒரு மனிதனனின் உலகு காணலையே
(world view)வக்கிரமாக்கிவிடுகிறது! என்று. இலக்கியம் மனிதனை அவன்
தளைகளிலிருந்து விடுவிக்க வேண்டும. அதைச் செய்யாத இலக்கியம் இலக்கியமே
அல்ல.

தமிழன் போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

மின்தமிழ் தளைகளற்ற ஒரு தமிழ் சமுதாயத்தை உருவாக்கும் மின்னுதாரணமாக
(model) அமைய வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

மின்வெளிக்குள் வரும் சில பொழுதுகளாவது நமது கசடுகளைக் களைந்துவிட்டு,
புதிய மனிதனாக அவதாரிக்கமுடியுமா? என ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.

இதுவொரு லீலாவிபூதி. இங்காவது நீங்கள் ஒரு இலட்சிய மனிதனாக வாழமுயலுங்கள்.

நான் பேசுவது யாருக்காவது புரிகிறதா? ;-))

க.>

2009/2/15 kra narasiah <nara...@yahoo.com>:

Kannan Natarajan

unread,
Feb 15, 2009, 2:18:06 AM2/15/09
to minT...@googlegroups.com
> நான் பேசுவது யாருக்காவது புரிகிறதா? ;-))

சிந்திக்கவைக்கும் மின்தமிழுக்கு ஜே:-))

பீடு பெற நில்!

Narayanan Kannan

unread,
Feb 15, 2009, 2:37:11 AM2/15/09
to minT...@googlegroups.com
2009/2/15 Kannan Natarajan <thar...@gmail.com>:

> பீடு பெற நில்!

பன்ஞ்ச் (punch) !!

க.>

வேந்தன் அரசு

unread,
Feb 15, 2009, 11:23:08 AM2/15/09
to minT...@googlegroups.com


2009/2/15 devoo <rde...@gmail.com>

ஹிஹி

என் இளமைக்கு காரணம் வாரம் இருமுறைனு தப்பா நினைச்சுக்கூடாதுன்னுதானுங்கோ

என் இளமைக்கு காரணம் (அப்படி நினைத்தால்) நடை, நடை ,நடை

வேந்தன் அரசு

unread,
Feb 15, 2009, 11:30:49 AM2/15/09
to minT...@googlegroups.com


2009/2/15 kra narasiah <nara...@yahoo.com>


வேடிக்கையாக உள்ளது. ஒருதடவை நான் "மறையும் மறையவர்கள்" என்ற நூலுக்கு விமர்சனம் எழுத, அதைத் தாக்கி ஒரு துவேஷி, பொதிகைச் சித்தர் என்ற பெயரில், நான் தேவதாசிகளுக்கு வக்காலத்து வாங்குவ்தாகவும் பிராமண்ர்கள் சத்தியமூர்த்தி காலத்திலிருந்து இதையே செய்து வ்ருவதாகவும் சாடியிருந்தார்! என்க்கு அதைப்பற்றிக் கவலையில்லை; ஆனால் என் எழுத்தைச் சரியாக்ப் புரிந்து கொள்ளாமல் பிராமண்த்துவேஷம் ஒன்றையே கருத்தில் கொண்டு, தாக்குவது நியாயமற்றது என்று மட்டும் தோன்றிற்று.
நரசய்யா

பரத்தையருக்கு அவரது தொழில் செய்யும் உரிமை வேண்டும்.
வள்ளுவர்கூட பரத்தையரை குறைசொல்ல வில்லை. வாடிக்கையாளரையே குறை சொன்னார்." என்று ஒருமுறை எழுதிய போது பலரும் கோவப்பட்டார்கள்.

பரத்தையரால்  தீங்கு இல்லை.
ஆனால் இக்காலத்தில் பரத்தையரை  வைத்து தொழில் செய்வோரால் சமூகத்தில் மிகப்பெரிய தீங்குகள் விளைகின்றன.

அதானால் அது நல்லதா கெட்டதா என்ற முடிவுக்கு வர இயலாது

Tthamizth Tthenee

unread,
Feb 15, 2009, 11:36:15 AM2/15/09
to minT...@googlegroups.com
முறையான  கலவியில் ஈடுபடும் தம்பதிகள்

2009/2/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

Tthamizth Tthenee

unread,
Feb 15, 2009, 11:39:36 AM2/15/09
to minT...@googlegroups.com
ஒரு ஆணின் துணை இல்லாமல் பரத்தை தொழில் நடக்காது

அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/2/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages