டிஸ்கி: மண்டையைச் சுவற்றில் மோதிக்கொண்டு குடியைப் பிய்த்துக்கொண்டு எழுதப்பட்டது. படிக்கும் உங்களுக்கும் இதே கதி ஏற்பட்டால் அதற்கு சவடால் பொறுப்பல்ல
இதற்காக நீங்கள் ஒரு 33 நிமிடம் இந்த விழியக் காட்சியைப் பார்த்துத் தொலைக்க வேண்டும். இதற்கப்புறமும் பாரதியார் ஒரு நல்ல பிள்ளை என்று நீங்கள் கருதினால் அதற்கும் சவடால் பொறுப்பல்ல
City Talk: Speaking Swadeshi: Vernacular Political Meetings in Madras, 1905-1908, Talk by Barney Bate
By the end of 1907 the British Government passed the Prevention of Seditious Meetings Act, 1907. The Act was written to counter a new kind of political practice associated with the Swadeshi movement, which emerged across British India in 1905 following the partition of Bengal. For the first time in India, a new and younger group of political actors were systematically taking to public spaces and speaking to larger and larger crowds in vernacular languages such as Bengali, Marathi, Telugu and Tamil. In Madras city, the meetings took place mostly in the Moore Market, and the South Beach, opposite Presidency College and Triplicane where many of these brash young men journalists, pleaders, vaikils, student leaders, and at least one major poet, had their headquarters. These were not the Mylapore or Egmore cliques of established groups of lawyers, government officials, and other professionals who for several generations made up the leadership of the Madras Presidency Congressmen in the well-established Madras Mahajana Sabha. The new people constituted what we might call the Triplicane group who would shortly come to call themselves the Chennai Jana Sangam (NB: the status distinction between: mahajana vs. jana). For a very brief period, perhaps about eighteen months, these young men were an upstart presence in Madras and at least from the points of view of both the officers in the Secretariat and the vernacular newspapers, dominated common discourse and imaginations in 1907 and 1908 until they were all either arrested or fled into exile in Pondicherry or abroad. This paper will offer an account of this first flush of vernacular political oratory in Madras and formation of new kinds of public spaces and publicity in the city.
Speaker Bio: Barney Bates is an author of Tamil Oratory and the Dravidian Aesthetic at Columbia University. He is currently working on a genealogy of vernacular political oratory and the formation of the modern Tamil World
புரட்சிக் கவிஞரா அல்லது அரசியல் தீவிரவாதியா
பாரதியார் படித்த இந்துக் கல்லூரி (அப்போதெல்லாம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கல்லூரி என்றழைக்கப்பட்டது). அக்கல்லுரியின் முதல்வர் முதன்முறை கூடிய காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரதிநிதியாக்ச் சென்றார். இந்துக்கல்லூரி மாணவர்கள் சுதந்திர உணர்வு ஊட்டப்பட்டவர்களாக இருந்துள்ளனர். பாரதியார் மெட்ரிகுலேசன் செலக்ஷனில் தேர்வாகாமல் போனதற்கும் சுதந்திர இயக்க உணர்வுக்கும் தொடர்பிருந்திருக்கலாம்
காசிக்குச் சென்றவர் அங்கே தேசிய நீரோட்டதில் கலக்க அதிகம் வாய்ப்பிருந்தது. ஊர் திரும்புவதற்குமுன் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்துவிட்டு எட்டயபுரம் திரும்புகிறார். அரசவைக் கவிஞராக இருப்பதில் நாட்டம் இல்லாமல் இருந்தவர் எந்தப் பொது நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளாமல் அமைதி காக்கிறார். மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியமர்த்தப்பட்ட நிலையில் அவர் சுதேசமித்திரன் ஆசிரியரைச் சந்திப்பது திட்டமிட்ட நிகழ்வாகவே தோன்றுகிறது. மேட்டுக்குடிக்குமட்டும் சென்றடைந்த சுதந்திர உணர்வை ஊட்டும் கருத்துக்கள் பாமரர்களுக்கும் நாட்டுப்புற மக்களுக்கும் சென்றடையச் சரியான ஆள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை வருகிறார்
அடுத்தடுத்து காங்கிரஸ் மாநாட்டில் கல்ந்துகொண்டு காங்கிரஸ் பிளவுபட்டபோது திலகர் அணியில் இணைந்த வ.உ.சியுடன் சேர்ந்து இருந்தவர் பாரதியார். சுய ஆட்சிக்குமுன் சுதேசி உணர்வை வளர்க்க எழுத்தும் பேச்சும் புதிய பாணியில் இருக்கவேண்டும் என்று நினைக்கும் பாரதியார் சுரேந்திர ஆர்யா, சர்க்கரைச் செட்டியார், ஆகியவர்களுடன் இணைந்து சென்னை ஜனசங்கத்தைத் தொடங்குகிறார். சுதேசச் சிந்தனைகள் நான்கு திசைகளிலும் இருந்து தமிழுக்கு வரவேண்டும் அது கடைக்கோடி மக்களைச் சென்றடையவேண்டும் என்று பாரதியாரும் ஆர்யாவும் திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். அவர்களுடைய தீவிரவாதத்துக்கான களம் சென்னை அல்ல என்பதை உணர்ந்து பாண்டிச்சேரிக்கு அரவிந்தரும் சுப்பிரமணிய சிவாவும் புலம் பெயர்ந்தது தீவிர வாதத்தின் அடுத்த கட்டமாகத்தான் கருத வேண்டியுள்ளது
மிதவாதிகளின் கோட்டையாக விளங்கிய சென்னையில் தீவிரவாத அரசியலுக்கு வித்திட்டவர் பாரதியார். சென்னை ஜன சங்கத்த்தின் துணைகொண்டு தமிழில் தெருமுனைக் கூட்டங்களையும் பாமரர் புரிந்துகொள்ளும் எளிய தமிழிப் படைப்புகளையும் படைத்த பாரதியாரை காங்கிரசின் தீவிரவாதப்பிரிவில் இருந்தவரை ஒரு பயங்கரவாதியாகச் சித்தரித்தவர்கள் சென்னையில் இருந்த சக்திமிக்க மிதவாதிகளே என்று பாரதி குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்
பஜனை பக்திப்பாடல்கள் பள்ளு கும்மி என்று பாமரர்களுக்கு தீவிரவாதத்தைக் கொண்டு செல்லத் திட்டமிட்ட பாரதியின் கைகள் கட்டப்பட்டு அவர் ஒரு சமய வாதியாகவும் தத்துவ வாதியாகம் மாற்றப்பட்டார்
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் 125 ஆண்டுகள் நிறைவை ஒட்டி அப்பள்ளி பத்திரிக்கைகளுக்கு அடித்த தகவலில் பாரதியார் ஆங்கில அரசுக்கெதிரான தீவிர வாதத்தில் ஈடுபட்டவர் என்று பிரிட்டிஷ் அரசால் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பட்டது
பாரதியின் மனைவி 1901-ல் பாரதிக்கு எழுதிய கடிதத்தில் அவர் நடவடிக்கைகள் அச்சம் ஊட்டுவதாகவும் தீவிர வாதம் சார்ந்திருப்பதாகவும் கேள்விப்பட்டதாக எழுதுகிறார்
:'