ஆன்மீக தலைவர்கள்

1,031 views
Skip to first unread message

yesu rajan

unread,
Jan 29, 2016, 2:22:43 AM1/29/16
to பண்புடன், mintamil

மகாவீரர்

Mahavira

சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின் உனையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும் வகையில், உலகெங்கும் உள்ள ஜைனர்கள் அவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதியை, ஒவ்வொரு வருடமும் ‘மகாவீரர் ஜெயந்தியாக’ கொண்டாடுகின்றனர். சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டு இல்லறவாழ்வினைத் துறந்து, துறவறம் மேற்கொண்ட மகாவீரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: கி.மு. 599

இடம்: குண்டா, வைசாலி, பீகார் மாநிலம், இந்தியா

பணி: மத குரு 

இறப்பு: கி. மு. 527

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘வர்த்தமானர்’ என்ற இயற்பெயர்கொண்ட “மகாவீரர்” கி.மு. 599 வருடம், இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகிலுள்ள “குண்டா” என்ற இடத்தில் சித்தாத்தர் என்பவருக்கும், திரிசாலாவுக்கும் மகனாக ஒரு அரசக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர்கள் இட்டப் பெயர் “வர்த்தமானர்” ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை

அரசக் குடும்பத்தில் பிறந்ததால், மிகவும் செல்வாக்காக வளர்க்கப்பட்டார். இருப்பினும் அச்சிறுவயதிலே ஆன்மீகநாட்டம் கொண்டவராகவும், தியானத்திலும், தன்னறிவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். பின்னர் யசோதரை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இல்லறவாழ்க்கையை நடத்தி வந்தார். சமணத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர், பிறகு இல்லற வாழ்விலிருந்து விலகி, தன்னுடைய முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் மேற்கொண்டார்.

மகாவீரரின் ஆன்மீகப் பயணம்

மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட மகாவீரர் அவர்கள், “சாலா” என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அவர் “மகாவீரர்” என அழைக்கப்பட்டார். மகாவீரர் என்றால், ‘பெரும்வீரர்’ என்று பொருள் ஆகும். தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய மகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார். வெறும் கால்களில், துணிகள் ஏதும் இன்றி, அவர் போதித்த போதனைகளைக் கேட்க அனைத்துத்தரப்பு மக்களும் திரண்டது மட்டுமல்லாமல், சமண சமயம் இந்தியாவெங்கும் தீவிரமாக பரவத்தொடங்கியது. இதனால், சமண மத குருமார்கள் வரிசையில் மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகப் போற்றப்பட்டார். இவரே சமண சமயத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரும் ஆவார்.

மகாவீரரின் போதனைகள்

இருபத்திநான்கு தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் என சமணர்களால் போற்றப்படும் மகாவீரரின் போதனைகள், அன்பையும், மனிதநேயத்தையும், அகிம்சையையும் போதிக்கும் உன்னத கோட்பாடுகளாக விளங்கியது. மகாவீரர், ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும், அது, தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக “கர்மா” என்னும் வினைப் பயன்களை அடைய நேரிடும்’ என போதித்தார். இதிலிருந்து விடுபட, மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ போன்றவற்றை கடைப்பிடித்தால், ‘சித்த நிலையை அடையலாம்’ எனவும் போதித்தார். மேலும், ‘எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், உண்மையை மட்டும் பேசுதல், திருடாமை, பாலுணர்வு இன்பம் துய்காதிருத்தல், பணம் பொருள் சொத்துகள் மீது ஆசை கொள்ளாமல் இருத்தல்’ என ஐந்து பண்புகளும் ஜைன மதத்தின் உறுதிமொழிகளாக விளங்கின. உண்மையை சொல்லப்போனால் மகாவீரர் அகிம்சையை தன்னுடைய கொள்கையாக போதித்த மாபெரும் சீர்த்திருத்தவாதியாக போற்றப்படுகிறார்.

இறப்பு

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகாட்ட வேண்டும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையும், கொல்லாமையுமே அறநெறி எனக் காட்டி அகிம்சை வழியையும், அன்பு வழியையும் மக்களுக்கு உணர்த்தி, சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் கி. மு. 527ல் பீகாரிலுள்ள “பாவா” என்னும் இடத்தில் தன்னுடைய 72வது வயதில் காலமானார்.

yesu rajan

unread,
Jan 29, 2016, 2:25:01 AM1/29/16
to பண்புடன், mintamil

கௌதம புத்தர்

Gautama-Budhdha

‘கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர், புத்தர். அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவருக்கு, அவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாக இருக்கிறது. புத்தரின் போதனைகளனைத்தும் ‘உள்ளார்ந்த சுயநிலையை உணர்ந்து இறுதியில் பேரின்பத்தை அடைவதையே’ உணர்த்துகிறது. எதிர்கால கர்மாவினை அதிகரிக்காமல் தடுத்து, நல்ல கர்மங்களை அதிகரித்து, மனதைத் தூய்மைப்படுத்தி, ஞானத்தை அடையும் பௌத்த போதனைகளை வகுத்த கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் உருவாக்கிய புத்தமத போதனைகள் பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.


பிறப்பு: கி.மு 563

பிறப்பிடம்: லும்பினி (இப்போது நேபாளில் உள்ளது)

இறப்பு: கி.மு 483

பணி: மதகுரு

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சித்தார்த்த கௌதமா அவர்கள், கபிலவஸ்து பேரரசரான சுத்தோதனா கௌதமா என்ற அரசருக்கும், மகாமாயா என்ற அரசிக்கும் மகனாக நேபாளில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். புத்தர் பிறந்த போது, அவரது வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தன. அவர் பிறந்து, ஏழு நாட்கள் கழித்து அவரது தாயார் இறந்ததால், அவர் மகாப்ரஜாபதி என்ற அவரது சகோதரியால் வளர்க்கப்பட்டார்.

 ஆரம்பகால வாழ்க்கை

சித்தார்த்தரின் ஜாதக கணிப்பின் போது, ‘அவர் உலகம் போற்றும் துறவியாக வருவார்’ என்று ஜோதிடர்கள் கூறியதால், அவரை சீரும், சிறப்போடு வளர்த்து அரசராக்க எண்ணிய அவரது தந்தை, அவருக்குக் கஷ்டம், பிரச்சனை மற்றும் கடின உழைப்பு போன்றவற்றிக்கு அர்த்தம் தெரியாத அளவிற்கு, அவரை அரண்மனையிலே வைத்து வளர்த்தார். தனது இளம் வயதில், செல்வ செழிப்பான ஆடம்பரமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார், சித்தார்த்தர். தனது இளமைப் பருவம் முழுவதும் அரண்மனையிலே செலவிட்டார்.

இல்லற வாழ்க்கை 

‘எங்கு தனது மகன் உலக இன்பங்களைத் துறந்து, துறவறம் பூண்டுவிடுவான்’ என்று அஞ்சிய அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.

துறவறம் மீது பற்று

அரண்மனை வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையும் வெறுத்துப் போனதால், உலகின் தனது இருத்தலுக்கானப் பொருளை அறிய வேண்டி, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், தனது தந்தையின் கட்டளைக்கு எதிராக அரண்மனையை விட்டு வெளியே சென்றார். ஜோதிடர்கள் கணித்தது போலவே, வழியில் அவர், ஒரு முடமான முதியவர், ஒரு நோயுற்ற மனிதன், ஒரு பிணம் மற்றும் இறுதியாக ஒரு அமைதியான துறவியைப் பார்த்தார். முதலில் கண்ட மூன்று பேரும், அவரைக் கலக்குமுறச் செய்தனர், மேலும் அவர்கள், ‘அழகு மற்றும் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல’ என்றும் புரிய வைத்தனர். ஆனால், அவர் இறுதியில் கண்ட துறவியின் முகத்திலோ அமைதி தெரிந்தது. இதனால், பிறப்பு, முதுமை, நோய், மற்றும் இறப்பு போன்ற பிரச்சனைகளுக்கான விடையைக் கண்டறிய அவர், தனது மனைவி, குழந்தைகள், அரண்மனை, ராஜ வாழ்வு போன்ற அனைத்து உலக உடைமைகளை விட்டு, துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். எனவே, அவர் ஒரு இருண்ட இரவில் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.

துறவறப் பயணம்

உலக உடமைகளைத் துறந்து, துறவறம் பூண்ட சித்தார்த்தர்,  தனது தலையை மொட்டையடித்து, மஞ்சள் நிற உடுப்பில், அரண்மனையை விட்டு வெளியேறி, மகதாவின் தலைநகரான ராஜ்க்ரஹா  என்ற இடம் நோக்கி முன்னேறினார். பின்னர், அந்த ராஜ்யத்திற்கு அருகே அமைந்துள்ள மலைகளில், துறவிகள் வாழும் குகைகளை நோக்கிச் சென்றார். அங்கு அவர், அலாமா கலாமோ என்ற துறவியிடம், தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் ஆன்மீகப் பின்தொடர்தலுக்காக மற்றொரு துறவியிடம் செல்ல முடிவு செய்தார். மேலும், அவர் உள்ளார்ந்த பேரின்பத்தை அடைவதற்காக யோகா மற்றும் சந்நியாசத்தின் தீவிர வடிவங்களைப் பயிற்சி செய்வதில் உறுதியாக இருந்தார். இந்தத் தொடர்ச்சியான சித்திரவதையால், அவர் முற்றிலும் உணவு உட்கொள்வதைத் தவிர்த்ததால், அவர் மிகவும் பலவீனமானார்.

ஒரு நாள், அவர் தியானம் செய்ய முயன்ற போது, சில நடனமாடும் பெண்கள் அவர் அமர்ந்த இடத்தைக் கடந்து சென்றனர். திடீரென்று அவர்கள் பாடிய பாடல் சித்தார்த்தருக்கு, ‘உண்மையான மகிழ்ச்சி அடைவதற்கு, உணவு உண்ணாமலிருப்பது போன்ற சுய சித்திரவதைகள் உதவப் போவது இல்லை’ என்று அவருக்குப் புரியவைத்தது. இதனால், அவர் தீவிர தியானம் மற்றும் பிற நடைமுறைகளைக் கைவிட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். அவர் ‘உடலும், மனமும் எவ்வித வலியும், சித்திரவதையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும்’ என்றும் உணர்ந்தார்.

 ஞானோதயம் கிடைத்த போதி மரம்

தனது கேள்விகளுக்கு பதில் தேடி பல்வேறு மடங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்ற கௌதமர், ‘உண்மையைக் கண்டறிய ஒரே வழி, தியானம் என்றுணர்ந்தார். பின்னர், பனாரஸ் அருகே உள்ள போத்கயா காட்டிற்குச் சென்று, போதி மரத்திற்கு அருகிலுள்ள ‘அஜபலா’ என்னும் ஆலமர நிழலில் தியானத்தில் அமர்ந்தார். முழு ஒளியூட்டத்தை அடைவதற்காக, தனது உயிரையே இழக்கத் தயாராக இருந்து, ஞானம் ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த கௌதமருக்கு, உலக மாயைகள் பல்வேறு விதமான இடையூறுகளும், தொந்தரவுகளும் கொடுத்தன. இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், 49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது. ஞானோதயம் கிடைத்தப் பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டகூடிய சமயபோதனைகளையும், உபதேசங்களையும் போதித்தார். சார்நாத்தில் உள்ள மான் பூங்காவில், அவரது பிரபலமான உபதேசம் நடைபெற்றது. அன்றிலிருந்து அவர், ‘கௌதம புத்தர்’ என்றும், ‘புத்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

புத்தர் தனது போதனைகளை போதிக்க, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். எண்ணற்ற சீடர்கள் அவரின் போதனைகளை ஆதரித்து, பின் தொடர்ந்தனர். இவரது போதனைகளுக்கு, இந்துக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

புத்த மதம் 

கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மனிதர்களை வாழ்வின் துன்பம் மற்றும் தவிப்பிலிருந்து விடுவிக்ககும் ஒரே நோக்கத்தைத் தழுவியது. ஆகவே, அவர் புத்தமதத்தை நிறுவினார். புத்தமதம், ‘ஆசையும், துன்பமுமே இந்த உலகத்தில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் முக்கிய காரணம்’ என்ற கருத்தை மனிதனுக்கு உரைக்கிறது. மேலும் அவர் எண்வகை வழிகளான ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்றவற்றை அனைவருக்கும் போதித்தார். இந்தப் பாதையில் சென்றால், ஒரு நிர்வாணத்தின் இறுதி நோக்கத்தை அடைய முடியும் என்றும் அவர் போதித்தார். அவரது போதனைகள் அனைத்தும் இந்து மதத்தின் சாதி முறைக்கு எதிராகவும், ஏழைகள், பணக்காரர்கள் என்ற பிரிவினை இல்லாமல் இருந்ததால், வெகுவாகப் பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்த்தது. மவுரியப் பேரரசரான அசோகர், புத்த மதத்திற்கு ஆதரவளித்தார். சார்நாத் மற்றும் போத்கயா புத்தமதத்தின் மிக முக்கியமான மையங்களாகக் கருதப்படுகிறது.

இறப்பு

புத்தர் அவர்கள், தனது சீடர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு உணவு உண்ணச் சென்றார். அந்த உணவில் அவரது சீடர் கலந்த விஷத்தால், அவர் நோய்வாய்ப்பட்டார். பின்னர், தள்ளாடி அவர், குஷிநாகா என்ற இடத்திற்குச் சென்றார். அவர், தனது இறுதி குளியலை காகுத்தா ஆற்றில் குளித்தார். இதையடுத்து சில நேர ஓய்விற்குப் பிறகு, அவர் இயற்கை எய்தினார்.

yesu rajan

unread,
Jan 29, 2016, 2:29:30 AM1/29/16
to பண்புடன், mintamil

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

Ramakrishna_Paramahamsa

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் மூலமாக உணர்ந்து, அதையே வலியுறுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: பிப்ரவரி 18, 1836

இடம்: காமர்புகூர், மேற்குவங்கம் மாநிலம், இந்தியா

இறப்பு: ஆகஸ்ட் 16, 1886

தொழில்: ஆன்மீகவாதி, துறவி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

‘ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்’ என அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள், 1836  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18  ஆம் நாள், இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் ‘குதிராம்’ என்பவருக்கும், தாயார் ‘சந்திரமணி தேவிக்கும்’ நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சிறுவயதில், ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு, கல்வி பயில்வதில் ஆர்வம் இல்லை. மேலும், ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, தமது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார். அங்கு, அவருடைய அண்ணன் ராஜ்குமார், தட்சினேஸ்வர் காளி கோயிலில் ஒரு புரோகிதராக வேலைப் பார்த்து வந்தார். சிறிதுகாலம் தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்த ராமகிருஷ்ணர், ராஜ்குமார் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீகப் பயணம்

தட்சினேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்துவந்த ராமகிருஷ்ணருக்கு, அவ்வப்போது பல சந்தேகங்கள் எழுவதுண்டு, ‘தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா கடவுள் என்று’ நினைத்த அவர், ‘காளி கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனைகளையும், தியானமும் செய்தார். எனினும் தன்னுடைய முயற்சிக்கு பலனில்லை என்பதை உணர்ந்த அவர், காளியின் கையில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். அத்தருணத்தில், தன்னுடைய சுயநினைவை இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும், பின்னர் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இவருடைய நடவடிக்கைகளைக் கண்ட ராமகிருஷ்ணரின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன் விளைவாக காமர்புகூர் அருகில் உள்ள ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் தனக்காக பிறந்ததாகவும், அப்பெண்ணே தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறி, அவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும், பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர்,  தாம்பத்தியம் ஏற்காமல் மனைவியைத் தாயாக மதித்து, தெய்வீக வாழ்வு நடத்தினார்.

பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்ரிகம் கற்றுத் தேர்ந்த அவர், பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தைக் கற்றார். இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்றில்லாமல், மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளைக் கண்டறிந்தவர் மட்டுமல்ல, பிறருக்கு அதை உணர்த்துவதிலும் வல்லமைப் படைத்தவராக விளங்கினார். பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார். இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவி, அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். மேலும், பலர் நாடி வந்து சீடர்களானார்கள். இவர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்புக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்

  • ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே, பிறருக்கு போதனை செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும்.
  • இல்லற வாழ்வில் இருந்தாலும், இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையைத் நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழவேண்டும்.
  • உலக வாழ்வில் ஈடுபட்டாலும், இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
  • சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.
  • மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை

இறுதி வாழ்க்கை

தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தியோடு இருப்பது என்றும், அவற்றைத் தானும் கடைபிடித்து வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார். அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவிலுள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். இருந்தாலும், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.

உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், இந்தியாவில் வாழ்ந்த “ஒப்பற்ற மனித தெய்வம்” ஆவார். இயற்கைப் பேரறிவும், செயற்கைப் பேரறிவும் ஒருங்கே பெற்ற அவர், இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் ஆன்மீக குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

Dhivakar

unread,
Jan 29, 2016, 3:01:37 AM1/29/16
to மின்தமிழ்
ஐயா,

தங்கள் கட்டுரையில் மகாவீரரும் கௌதம புத்தரும் மதங்களைத் தோற்றுவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் மதங்களைத் தோற்றுவித்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவர்களுடைய சீடர்கள்தான் அவரது பெயரில் மதங்களை நிறுவினார்கள். 

யாமார்க்கும் விதியல்லோம்
நமனை அஞ்சோம்

2016-01-29 12:52 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

yesu rajan

unread,
Jan 29, 2016, 3:26:25 AM1/29/16
to mintamil
ஒரு வழியை பற்றி போதித்தார்கள் அதை பின்பற்றுபவர்கள் அதிகமானதும் அதுவே மதம் ஆனது

yesu rajan

unread,
Jan 29, 2016, 3:27:33 AM1/29/16
to mintamil
அனைத்து கட்டுரைகளும் எடுத்த இடம் இதுவே

நன்றி இட்ஸ் தமிழ் நண்பர்களுக்கு

yesu rajan

unread,
Jan 29, 2016, 3:29:11 AM1/29/16
to mintamil, பண்புடன்

தயானந்த சரஸ்வதி

Dayanand Saraswati

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்து மதத்தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார். இந்து சமயத்தின் தீவிர சிந்தனையாளராகவும், உலகம் போற்றும் தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர். இந்து சமுதாயத்தில் இருந்து வரும் தீமைகளைக் களையவும், வேத சமுதாயத்திற்கு புத்துயிர் அளிக்கவும், இந்து மதத்தை மெருகேற்றிப் புதுப்பொலிவுடன் மிளிரச் செய்யும் “ஆரிய சமாஜம்” என்னும் அமைப்பை 1875 ஆம் ஆண்டில் உருவாக்கினார். சிறு வயதிலேயே சமய நம்பிக்கைகள் குறித்து பகுத்தறிவுடன் பல கேள்விகள் எழுப்பியது மட்டுமல்லாமல், இந்த உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் இறைவனைக் காணலாம் என்ற தத்துவத்தை வலியுறுத்தியவர். இல்லற வாழ்வினைத் துறந்து, கடைசி காலம் வரை இந்து சமுதாயத்தின் தீவிர சிந்தனையாளராக வாழ்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் வாழ்க்கை மற்றும் ஆன்மீகப் பணிகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

பிறப்பு: பிப்ரவரி 12, 1824

இடம்: டங்காரா, குஜராத் மாநிலம், இந்தியா

பணி: ஆன்மீக சிந்தனையாளர்

இறப்பு: அக்டோபர் 30, 1883

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

மூலசங்கரர் என்ற இயற்பெயர் கொண்ட சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், 1824  ஆம் ஆண்டு பிப்ரவரி 12  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “டன்காரா” என்ற இடத்தில் கர்சன் லால்ஜி திவாரி என்பவருக்கும், எஷோதாபாயிக்கும் மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை வரி சேகரிப்பு அலுவலராக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

மூலசங்கரர் அவர்கள் வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்ததால், வீட்டிலேயே மிகுந்த செல்வாக்கோடு வளர்க்கப்பட்டார். இதனால் இவருக்கு வீட்டிலேயே கல்வியும் சொல்லித்தரப்பட்டது. தன்னுடைய இளம் வயதிலேயே சமஸ்கிருதம், மதக்கருத்துகள் பற்றிக் கற்றுத் தேர்ந்தவராக வளர்ந்தார். ஒரு சமயம் தன்னுடைய சகோதரியும், மாமாவும் காலரா நோயால் இருந்ததைக் கண்டு, அவருடைய பெற்றோர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். இந்த நிகழ்வு சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் மனதில் பல கேள்விகளை எழுப்பியது மட்டுமல்லாமல், ஆன்மீக சிந்தனையில் ஈடுபடவும் வழிவகுத்தது. பிறகு அவருக்கு இருபது வயது இருக்கும் பொழுது பெற்றோர்கள் திருமணம் முடிக்க விரும்பினர். ஆனால், இல்லற வாழ்க்கையை விரும்பாத சுவாமி தயானந்த சரஸ்வதி 1846 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆன்மீகப் பயணம்

குடும்ப வாழ்கையை வெறுத்து, வீட்டை விட்டு வெளியேறிய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், இந்தியாவில் பல இடங்களுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டது மட்டுமல்லாமல், யோகா பயிற்சியிலும் ஈடுபட்டார். சுமார் 15 ஆண்டுகள் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட அவர், இறுதியில் மதுராபூரியில் வசித்துவந்த சுவாமிஜி வீராஜானந்தரிடம் சிஷ்யனாக சேர்ந்தார். வாழ்க்கையின் எதார்த்தத்தையும், வேதங்களையும் கற்றுக் கொண்ட சுவாமி தயானந்த சரஸ்வதி 1837 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கடவுளின் உருவ வழிபாடுகளின் மீது நம்பிக்கை இழந்து, சமயத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று வேலைகள், மோசடிகள் போன்றவைகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார். தான் கற்றுக்கொண்ட கல்வியையும், ஞானத்தையும் போதிக்க “ஆர்ய சமாஜம்” என்னும் அமைப்பையும் தொடங்கினார்.

ஆரிய சமாஜம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்து மீட்டுருவாக்க அமைப்புகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது “ஆரிய சமாஜம்” ஆகும். 1875 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் “ஆரிய சமாஜம்” என்னும் அமைப்பை சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் தொடங்கினார். அதாவது “ஆரியா” என்பதன் பொருள் ‘கடவுளின் குழந்தை’ ஆகும். இதன் விளக்கம், ‘அனைத்து ஆன்மாக்களும், கடவுளின் குழந்தைகள் மற்றும் அவை கடவுளுக்குக் கீழ்படிதல் உள்ளவையாக இருக்கவேண்டும் என்பது தயானந்தரின் கருத்து ஆகும். இந்துக்களின் தாழ்வு மனப்பான்மையை அகற்றி இந்து மதத்தை மெருகேற்றி புதுபொலிவுடன் மிளிரச் செய்யும் நோக்கத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை உருவாக்கினார். இதன் கொள்கைகள் மக்களிடையே தீவிரமாக பரவத் தொடங்கியது.

தயானந்த சரஸ்வதி மேற்கொண்ட சமுதாயப் பணிகள்

மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு போன்ற முற்போக்கு நடவடிக்கைகளுக்காகத் தீவிரமாக பாடுபட்ட தயானந்த சரஸ்வதி அவர்கள், அந்த காலத்தில் நடைபெற்று வந்த சிறுவயது திருமண முறையை முற்றிலுமாக எதிர்த்தார். மேலும் விதவைகள் மறுமணம் செய்துகொள்வதை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார். ஆங்கிலவழிக் கல்வியை நாடுமுழுவதும் பரப்பப் பாடுபட்ட இவர், “சத்யார்த் பிரகாஷ் அண்ட் பிரதிமா பூஜன் விச்சார்” என்னும் நூலையும் எழுதினார்.

இறப்பு

ஒரு முற்போக்கு சிந்தனையாளராக வாழ்ந்த அவர் இறுதி காலத்தில் ஜோத்பூர் அரசால் பல இன்னல்களை சந்தித்தார். இருந்த போதிலும் கடைசி வரை வேத சமயத்தை பரப்புவதிலும், இந்து சமயத்தின் தீவிர சிந்தனையாளராக வாழ்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் 1883 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் நாள் தன்னுடைய 59 வது வயதில் மரணமடைந்தார்.

காலவரிசை

1824 – பிப்ரவரி 12 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “டன்காரா” என்ற இடத்தில் பிறந்தார்.

1846 – இல்லற வாழ்க்கையை துறந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

1875 – ஏப்ரல் மாதம் “ஆரிய சமாஜம்” என்னும் அமைப்பை உருவாக்கினார்.

1883 – அக்டோபர் 30 ஆம் நாள் தன்னுடைய 59 வது வயதில் மரணமடைந்தார்

yesu rajan

unread,
Jan 29, 2016, 3:31:35 AM1/29/16
to mintamil, பண்புடன்

சுவாமி விவேகானந்தர்

Swami Vivekanandar

சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த  தேசிய உணர்வைத் தூண்டியது.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து,  வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: ஜனவரி 12, 1863

பிறந்த இடம்: கல்கத்தா, இந்தியா

இறப்பு: ஜூலை 4, 1902

தொழில்: தத்துவவாதி, துறவி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.

குழந்தைப் பருவமும், ஆரம்பகாலக் கல்வியும் 

ஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். ஒரு குழந்தையாக இருந்த போதே, சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.

உயர்கல்வியும், ஆன்மீக ஈடுபாடும்

சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார். அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும்  கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.

இந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். அவர் ராமகிருஷ்ணரிடம், “கடவுள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.

 ராமகிருஷ்ணர் மீது அவர் கொண்ட பற்று

எதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.

இந்தியாவில் அவரது பயணம்

 1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். அவரது இந்தபி பயணத்தின் போது அவர், வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். நல்லது மற்றும் கேட்டது என்று பகுத்தறியும் அவரது திறனுக்காக, மகாராஜா கேத்ரி என்பவர், இவருக்கு ‘விவேகானந்தர்’ என்று பெயரிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் பல வகையான மக்களிடம் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.

 சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.

 மேலைநாடுகளில் விவேகானந்தரின் சொற்பொழிவுகள்

 1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார். ஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார். அவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், ‘மார்கரெட் நிவேதிதா’. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.

 ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்

 மேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900  வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

 இறப்பு

மேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.

 காலவரிசை

1863: கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் பிறந்தார்.

1879: கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.

1880: கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.

1886: ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்களின் மறைவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.

1890: இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம்.

1892: கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார்.

1893: சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார்.

1897: இந்தியா திரும்பினார்

1897: “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1899: ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிருவவதற்காக கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார்.

1899 – 1900: ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1902: கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.

நன்றி:http://www.itstamil.com/swami-vivekananda.html

yesu rajan

unread,
Jan 29, 2016, 3:32:52 AM1/29/16
to mintamil, பண்புடன்

ராஜா ராம் மோகன் ராய்

Raja_Ram_Mohan_Roy

‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார். அவர், முதல் இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கமான ‘பிரம்ம சமாஜத்தை’ நிறுவியவர் ஆவார். நாட்டில் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், ஒரு பெரும் கல்வியாளராகவும், சுயாதீன சிந்தனையாளராகவும் இருந்தார். அவர் ஆங்கிலம், அறிவியல், மேற்கத்திய மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தேர்ந்து விளங்கினார். இதனாலேயே, ‘ராஜா’ என்ற பட்டத்தை, அவருக்கு முகலாய பேரரசர் வழங்கினார். நாட்டில் பெண்ணுரிமைக்காகப் போராடி, சதியை ஒழித்த அந்த மாபெரும் சீர்திருத்தவாதியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: மே 22, 1772

பிறந்த இடம்: ராதாநகர் கிராமம், ஹூக்லி, வங்காளம்

இறப்பு: செப்டம்பர் 27, 1833

தொழில்: கல்விமான், சீர்திருத்தவாதி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ராதாநகர் என்ற கிராமத்தில் மே 22, 1772 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை, ராம்காந்தோ ராய், ஒரு வைஷ்ணவர் மற்றும் அவரது தாய் தாரிணி, சைவம் மதம் பின்னணியில் இருந்து வந்தவர்.

ஆரம்ப வாழ்க்கை

உயர் படிப்புகளுக்காக ‘பாட்னா’ அனுப்பப்பட்ட அவர், பதினைந்து வயதிலேயே, பங்களா, பாரசீகம், அரபு மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

அவரது தந்தை ஒரு ஆச்சாரமான இந்துமத பிராமணராக இருந்தாலும், இவர் சிலை வழிபாடு மற்றும் ஆச்சாரமான இந்துமத சடங்குகளுக்கு எதிராகவே செயல்பட்டார். மேலும் அனைத்து வகையான சமூக மதவெறி, பழைமைபேண்வாதம் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து உறுதியாக நின்றார். இதுவே அவருக்கும், அவரது தந்தைக்குமிடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. இந்தத் தொடர் வேறுபாடுகளின் காரணமாக, அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் இமயமலையில் வழியறியாமல் அலைந்துத் திறிந்து, திபெத் சென்றார். விசாலமான பயணம் மேற்கொண்ட பின்னர், அவர் வீடு திரும்பினார்.

தொழில்

வீடு திரும்பிய அவருக்கு, அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு வாரணாசி சென்ற அவர், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்துமத தத்துவங்களை மிக ஆழமாகப் பயின்றார். 1803ல், அவரது தந்தை இறந்தவிடவே, அவர் மூர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார். பின்னர், கொல்கத்தாவில் உள்ள ஒரு வட்டிக்கடையில் பணியாற்றினார். 1809 முதல் 1814 வரை, அவர் கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.

சீர்திருத்தப் பணிகள்

சமூகத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டு வெகுண்டெழுந்த அவர், 1814ல், சமுதாயத்தில் சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியாக ‘ஆத்மிய மக்களவை’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். பின்னர், பெண்கள் உரிமைக்காகவும், விதவைகள் மறுமண உரிமைக்காகவும், பெண்களுக்கான சொத்து உரிமைக்காகவும், பல பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அவர் அக்காலத்தில் பெண்களுக்கு கட்டாய பழக்கமாக இருந்த  உடன்கட்டை ஏறுதல் மற்றும் பலதார மணம் புரிதல் போன்ற நடைமுறைகளைத் தீவிரமாக எதிர்த்தார்.

பெண்களுக்கானக் கட்டாயக் கல்வி முறைக்குப் பெரிதும் ஆதரவு காட்டிய அவர், பாரம்பரிய இந்திய கல்வி முறையை விட ஆங்கில மொழி கல்வி மேன்மையானது என்று நம்பினார், அதுமட்டுமல்லாமல், சமஸ்கிருதம் கற்றுத் தரும் பள்ளிகளில், அரசாங்க நிதிகளை பயன்படுத்தக் கூடாது என்று மிகக் கடுமையாக எதிர்த்தார். மேலும் 1822 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்.

பிரம்மா சமாஜ்

1828ல், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை  நிறுவினார். பிரம்மா சமாஜ் மூலம், அவர் போலித்தனமான மத பாசாங்குகளை அம்பலப்படுத்தவும், இந்து மத சமூகத்தின் மீது கிறித்துவம் அதிகரித்து வரும் செல்வாக்கை சரிபார்க்கவும் எண்ணினார். மேலும் இந்த அமைப்பின் மூலம், பலதார மணம், சாதி அமைப்பு, குழந்தை திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்கள் தனிமைப்பட்டிருப்பது, பர்தா முறை போன்ற சமூக முறைகேடுகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

‘கடவுளைத் தந்தையாகவும், மனித குலத்தில் சகோதரத்துவத்தை மேலோங்கச் செய்வதே’ பிரம்ம சமாஜின் தலையாய கொள்கையாகும். மேலும் இவர், மனிதர்களிடையே அன்பு செலுத்த வேண்டும்; மற்றும் சிலை வழிபாட்டை நிறுத்தி, கோயில்களில் பிரசாதம் வழங்குவதையும், விலங்குகளை பலி கொடுப்பது போன்ற பிற சடங்குகளை நிறுத்த வேண்டுமென்று போதித்தார். இந்த பிரம்மா சமாஜம், மனிதர்களிடையே தர்மம், நீதி, கடவுள் பக்தி, கருணை, நல்லொழுக்கம் மற்றும் அனைத்து மதத்தவரிடையே உள்ள பாச உணர்வைத் தூண்டி, அவர்களின் பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு தூண்டுகோலாக இருந்தது.

சதி ஒழிப்பு

பிரம்ம சமாஜ் மூலம், சமூகத்தில் நிலவும் மோசமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், இந்து மத இறுதி நடைமுறையான கணவரின் இறப்புக்குப் பின்னர், மனைவி அவரின் சிதையில் உயிருடன் விழ வேண்டுமென்ற ‘சதி’ என்னும் உடன்கட்ட ஏறும் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க எண்ணினார். அவரது அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றிக் கிட்டும் வகையில், 1833ல், அப்போது ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் ஒரு சட்டம் இயற்றி, அதன் மூலம் சதி முறையை ஒழித்தார்.

இறப்பு

நவம்பர் 1830ல், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், தனது ஓய்வூதிய மற்றும் உதவித்தொகைகளைப் பெறுவதற்காக, முகலாய பேரரசரின் ஒரு தூதராக ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணித்தார். பின்னர், அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.

காலவரிசை:

1772: வங்காளத்திலுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் இருக்கும் ராதாநகர் என்ற கிராமத்தில் மே 22, 1772 ஆம் ஆண்டு பிறந்தார்.

1803: அவரது தந்தையின் மறைவின் காரணமாக மூர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார்.

1809 – 1814: கிழக்கு இந்திய நிறுவனத்தின் வருவாய்த் துறையில் பணியாற்றினார்.

1814: ‘ஆத்மிய மக்களவையை’ உருவாக்கினார்.

1822: ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் ஒரு பள்ளியை நிறுவினார்.

1828: ‘பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை நிறுவினார்.

1833: ‘சதி என்னும் உடன்கட்டை ஏறுதல்’ என்ற இந்துமத நடைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது

1830: முகலாய பேரரசரின் ஒரு தூதராக ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணித்தார்.

1833: மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.

yesu rajan

unread,
Jan 29, 2016, 3:33:33 AM1/29/16
to mintamil, பண்புடன்

சத்திய சாய் பாபா

Satya_Sai

ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள், ஒரு இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்பட்டவர் ஆவார். இவருடைய ஆன்மீகப் பற்றில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் அவரை, கடவுளின் அவதாரமாகவே கருதினர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் ஏராளமான இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவைகள் புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகம்முழுவதும் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் முன்னணி ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் பகவான் சத்திய சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகப் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 23, 1926

பிறப்பிடம்: புட்டபர்த்தி (அனந்தபூர் மாவட்டம்), ஆந்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: ஆன்மீகவாதி, சமூக சேவகர்

இறப்பு: ஏப்ரல் 24, 2011

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சத்திய நாராயண ராயூ என்ற இயற்பெயர்கொண்ட இவர், 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள “புட்டபர்த்தி” என்ற இடத்தில் பெத்தவெங்கம ராயூ என்பவருக்கும், ஈசுவராம்மாவுக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சத்ய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர். புட்டபர்த்தியில் உள்ள ஒரு பள்ளியில் தன்னுடைய ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர், இளம் வயதிலேயே பக்திமார்க்கம் சார்ந்த நாடகம், இசை, நடனம், மற்றும் கதை எழுதுதல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

சாய் பாபா செய்த வியக்கதக்க அற்புதங்கள்

அவர் படிக்கும் பொழுது, தன்னுடைய நண்பர்கள் ஏதாவது கேட்டால் உடனே அதை வரவழைத்து நண்பர்களுக்குக் கொடுப்பார். இதனால் அவரை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். ஒரு நாள் தன்னுடைய வீட்டில் இருந்தவர்கள் முன், கையில் கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை அவரை கண்டித்தார். ஆனால் அவர் நான்தான் “சாய் பாபா” என்றும், ‘சீரடிசாய் பாபாவின் மறுஜென்மம் நானே!’ என்றும் கூறினார். அவருடைய பேச்சும், செய்த அற்புதங்களும் மக்களிடையே பரவத் தொடங்கியது. அவர் பலரும் வியக்கதக்க வகையில் “விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம்” போன்றவற்றை வரவழைத்து அற்புதங்கள் நிகழ்த்தியதால்,  பக்தர்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். மேலும், பக்தர்களுக்கு வியக்கதக்க வகையில் விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம் போன்றவற்றை வரவழைத்து னார்.

சாய் பாபாவின் ஆன்மீகப் பயணம் மற்றும் சமூக சேவைகள்

1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். அவருடைய ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பக்தர்கள், அவரை ‘கடவுளின் அவதாரம்’ எனக் கருதி, 1944 ஆம் ஆண்டு அவருக்கு கோயில்கள் எழுப்பினர். பின்னர் 1954 ஆம் ஆண்டு, அங்கு ஒரு சிறு மருத்துவமனையைத் தொடங்கி, அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். மேலும், இவருடைய பெயரில் பல தொண்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், குடிநீர் வழங்குதல் எனப் பல்வேறு திட்டங்களில் சேவைப் புரிந்து வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகில் சுமார் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் இவருடைய பெயரில் தொண்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவைகள் புரிந்து வருகிறது. தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் பல கிராமங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தெலுங்கு-கங்கை திட்டத்தினை சீர் செய்து, மக்களின் தாகத்தினை தீர்த்து வைத்தார். பிறகு 1968 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நைரோபி, உகாண்டா போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

இவர் மீது நடந்த கொலைமுயற்சி

ஜூன் 6, 1993 ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் உள்ள அவருடைய இல்லத்திற்குள் நான்கு இளைஞர்கள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்து, கொலை செய்ய முயன்றனர். இதில் இரு பணியாளர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். அத்துமீறி நுழைந்த நால்வரும், காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் இவர் மீது நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது.

இறப்பு

ஸ்ரீ சத்திய சாய் பாபா தன்னுடைய இறுதிகாலத்தில், உடல் நலக் குறைவு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சத்திய சாய் மருத்துவக்கழக மருத்துவமனையில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 28 தேதி அனுமதிக்கப்பட்டார். பிறகு அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டனர். இருந்தபோதும் 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் இயற்கை எய்தினார்.

பகவான் சத்திய சாய் பாபா அவர்களுக்கு சுமார் 100 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் உலகம் முழுவதும் காணப்படுவதாக கூறப்படுகிறது. இவருடைய ஆன்மீக பக்தியில் ஈடுபாடு கொண்ட பல தலைவர்களும், பிரதமர்களும், கிரிக்கெட் வீரர்களும், திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளும், வர்த்தகர்களும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் மேலும் கோடிக்கணக்கான பக்தர்களும் இவரை இன்றைக்கும் கடவுளாக வழிபாடு செய்து வருகின்றனர்.

காலவரிசை

1926 – நவம்பர் 23 ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள “புட்டபர்த்தி” என்ற இடத்தில் பிறந்தார்.

1954– புட்டபர்த்தியில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.

1968 – நைரோபி, உகாண்டா போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

1993 – இவர் மீது நடந்த கொலைமுயற்சி தடுக்கப்பட்டது.

2011 – மார்ச் 28 தேதி உடல் நலக் குறைவு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2011 – ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் மரணமடைந்தார்.

yesu rajan

unread,
Jan 29, 2016, 3:35:04 AM1/29/16
to mintamil, பண்புடன்

சீரடி சாயி பாபா

Shirdi-Sai-Baba

சீரடி சாயி பாபா, 20 ஆம்  நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர்.   இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித சீரடி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 28, 1838

இடம்: சீரடி, அகமது நகர் மாவட்டம், மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா

பணி: இந்திய குரு

இறப்பு: செப்டம்பர் 20, 1928

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு பற்றிய தகவல்

சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு மகானாக சீரடி சாயி பாபா

அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.

இறப்பு

இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

நன்றி :http://www.itstamil.com/shirdi-sai-baba.html

yesu rajan

unread,
Jan 29, 2016, 3:57:12 AM1/29/16
to mintamil, பண்புடன்
இதில் புத்தரின் வாழ்க்கை படங்களுடன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது


சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.


சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார்.

ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.

துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.

தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவா்த்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்த சமய நூல்களில் அழைக்கப்படும். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.







































கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

புத்தரின் கூற்றுக்கள்

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.

நன்றி:http://www.tamilvaasi.com/2010/12/buthar.html

Suba.T.

unread,
Jan 29, 2016, 6:50:29 AM1/29/16
to மின்தமிழ், Subashini Tremmel
திரு,யேசுராஜன்,

பகிர்வுகளுக்கு நன்றி.

இரண்டு ஆலோசனைகள்.

1. ஒரே நாளில் 10 பதிவுகளை வழங்குவதை விட ஒரு நாளைக்கு ஒன்று என வழங்கினால் வாசிப்போருக்கு சுலபமாக இருக்கும்.

2. புதிய பதிவைப் போடும் போது முந்தைய பதிவை அழித்து விட்டு போட்டால்.. வால் போல கீழே நீளமாக வரும் ஏனைய பதிவுகளை மின்னஞ்சலில் தவிர்க்கலாம். இது மின்னஞ்சலின் அளவையும் குறைக்கும். வாசிப்போருக்கும் உதவியாக இருக்கும்.  உதாரணமாக, தயானந்த சரஸ்வதி பதிவைப் பாருங்கள். அதன் கீழ் என் பின்னூட்டம் மற்றும் மகாவீரர் பதிவு என்பன உள்ளன. இவற்றை அழித்து விட்டு இன்று பதிய விரும்புவதை மட்டும் பதிந்தால் மடலின் அளவு குறைவாக இருக்கும்.

சுபா

 

Innamburan S.Soundararajan

unread,
Jan 29, 2016, 9:32:09 AM1/29/16
to mintamil, Subashini Tremmel
மேலும் அவர் இவற்றை 'சுட்டது' என்கிறார். ஆதாரத்தையும் சுட்டுவது நற்பண்பு; உதவி; நலம் பயக்கும்.

--

Suba.T.

unread,
Jan 29, 2016, 9:49:53 AM1/29/16
to Innamburan S.Soundararajan, mintamil
2016-01-29 15:31 GMT+01:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
மேலும் அவர் இவற்றை 'சுட்டது' என்கிறார். ஆதாரத்தையும் சுட்டுவது நற்பண்பு; உதவி; நலம் பயக்கும்.


​அவர் லிங்கை அளித்திருக்கின்றாரே.
ஒவ்வொரு பதிவிலும் அது வருகின்றதே.

சுபா
 

Innamburan S.Soundararajan

unread,
Jan 29, 2016, 10:04:20 AM1/29/16
to Suba.T., mintamil
என் கணினியில் தென்படவில்லை.

yesu rajan

unread,
Jan 29, 2016, 11:17:06 PM1/29/16
to mintamil, Suba.T.
திருமதி சுபா உங்கள் ஆலோசனைகளை ஏற்று கொள்கிறேன்

இன்னம் பூரான் அய்யா பதிவின் கடைசியில் சுட்டி இருக்கிறது

தேமொழி

unread,
Feb 1, 2016, 8:26:18 PM2/1/16
to மின்தமிழ்
திரு. யேசுராஜன்,

மகாவீரர்
கௌதம புத்தர்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
சுவாமி விவேகானந்தர்
தயானந்த சரஸ்வதி
ராஜா ராம் மோகன் ராய்
சீரடி சாயி பாபா
சத்திய சாய் பாபா

ஆகியோர் பற்றிய  கட்டுரைகளைப் பகிர்ந்து கொண்டீர்களே,
இயேசு கிறிஸ்து 
நபிகள் நாயகம் 
குரு நானக் 
மாட்டின் லூதர் கிங் 

ஆகியோர் கட்டுரைகள் கிடைத்தாலும் இதே இழையில் பகிர்ந்து கொள்ளுங்களேன்...


..... தேமொழி 



On Friday, January 29, 2016 at 8:17:06 PM UTC-8, yesu rajan wrote:
திருமதி சுபா உங்கள் ஆலோசனைகளை ஏற்று கொள்கிறேன்

இன்னம் பூரான் அய்யா பதிவின் கடைசியில் சுட்டி இருக்கிறது
2016-01-29 20:33 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
என் கணினியில் தென்படவில்லை.


2016-01-29 20:19 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:


2016-01-29 15:31 GMT+01:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
மேலும் அவர் இவற்றை 'சுட்டது' என்கிறார். ஆதாரத்தையும் சுட்டுவது நற்பண்பு; உதவி; நலம் பயக்கும்.


​அவர் லிங்கை அளித்திருக்கின்றாரே.
ஒவ்வொரு பதிவிலும் அது வருகின்றதே.

சுபா
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

yesu rajan

unread,
Feb 1, 2016, 11:11:57 PM2/1/16
to mintamil
நிச்சயமாக  செய்கிறேன் திருமதி தேமோழி

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

yesu rajan

unread,
Feb 1, 2016, 11:25:20 PM2/1/16
to mintamil

ஸ்ரீ அரவிந்தர் கோஷ்

Aurobindo-Gosh

அரவிந்த கோஷ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், யோகி, தத்துவஞானி எனப் பன்முகம் கொண்ட மானுட அறிஞர் ஆவார். விடுதலைப் போராட்ட வீரராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, ஆன்மீகவாதியாக வாழ்ந்த அரவிந்த கோஷின் வாழ்க்கை வரலாறு மற்றும் பங்களிப்பை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 15, 1872

இடம்:  கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம், இந்தியா

பணி: விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர்

இறப்பு: டிசம்பர் 05, 1950

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட அரவிந்த கோஷ் அவர்கள், 1872  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15  ஆம் நாள் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் கிருஷ்ண தன கோஷுக்கும், ஸ்வர்ணலதாவிற்கும் மூன்றாவது குழந்தையாக ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஸ்ரீ அரவிந்தர், தன்னுடைய தொடக்க கல்வியை டார்ஜிலிங்கிலுள்ள “லோரெட்டோ கான்வென்ட்டில்” தொடர்ந்தார். பிறகு 1879 ஆம் ஆண்டு, சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்ற அவர், கல்வியை அங்கு தொடர்ந்தார். லண்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இளங்கலை கல்வியைத் தொடங்கி பட்டமும் பெற்றார். படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, புரட்சிகரமான சிந்தனையாளராக விளங்கிய அரவிந்த் அவர்கள், உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கினார்.

சுதந்திரப்போராட்டத்தில் அரவிந்தரின் பங்கு

தன்னுடைய 21 வயது வரை, இங்கிலாந்தில் தங்கி, கல்வி பயின்ற ஸ்ரீ அரவிந்தர், 1893 ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பினார். இந்தியா திரும்பிய அவர், பரோடா சமஸ்தானத்தில் அரசப் பணியில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றிய  பிறகு, வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராக பணியைத் தொடர்ந்தார். இந்தியாவில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் ஏற்பட்ட வங்கப் பிரிவினையை கண்டு கொதித்துப்போன அரவிந்தர் அவர்கள், விடுதலைப் போராட்டாத்தில் தன்னை ஈடுபத்திக்கொண்டது மட்டுமல்லாமல், கர்சனின் வங்கப் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தார். தேச விடுதலைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், “வந்தேமாதரம்” என்ற இதழை ஆரம்பித்த பின், சந்திரபாலுடன் இணைந்து பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு, ஆங்கில அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனால், அரவிந்த் அவர்கள் ஆங்கில அரசால் 1907லிலும், 1908டிலும் இருமுறை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், “கர்மயோகி” என்ற ஆங்கிலப்பத்திரிக்கை மூலமும் “தர்மா” என்ற வங்காள மொழி பத்திரிக்கை மூலமும் மக்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டும் கட்டுரைகளை எழுதி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு

சிறையில் இருந்த நேரங்களில் அவர் கீதை, வேதங்கள் என ஆன்மீக நூல்களைப் படித்த அவருக்கு, யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. 1909 சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற அரவிந்தர், தன்னுடைய முழுகவனத்தையும் யோக நெறியில் ஈடுபடுத்திக்கொண்டார். 1910 ஆம் ஆண்டு, ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அங்கிருந்து தப்பித்து சந்திர நாகூருக்கு சென்று, பிறகு புதுச்சேரியை வந்தடைந்தார். அவரை மகாகவி பாரதியார் தலைமையிலான தமிழர்கள் வரவேற்று, ஒரு சீமானின் வீட்டில் தங்கவைத்தனர். இதையடுத்து, தனது அரசியல் நடவடிக்கைகளை முழுவதுமாகக் கைவிட்டு முழு ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிறகு, அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும், யோகத்திலும் ஈடுபட்டார். அதுமட்டுமல்லால், தனது யோகத்தின் நோக்கத்தை விளக்கிடும் “சாவித்திரி” என்னும் மகா காவியத்தையும் ஸ்ரீ அரவிந்தர் படைத்தார்.

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீக சிந்தனைகள்

‘உலகத்தைத் துறந்து, இறைவனை அடையவேண்டும். யோகத்தினால் கிடைக்கும் வலிமையைக் கொண்டு நாட்டு மக்களை விடுவிக்க வேண்டுமென்பதோடு’ மட்டுமல்லாமல், தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளை “ஆர்யா” என்ற ஆன்மீக இதழில், 1914 முதல் 1921 வரை எழுதினார். அவருடைய தத்துவங்கள், உண்மைகளை அடிப்படையாக கொண்டவையாக அமைந்தது.

இறப்பு

‘இந்த மானுட வாழ்வு, தெய்வீக வாழ்வாக மலர வேண்டும்’ என உழைத்த ஸ்ரீ அரவிந்தர் அவர்கள், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். ஒரு சுதந்திர போராட்ட வீரராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு மகா யோகியாகவும், ஞானியாகவும், மகானாகவும் வாழ்ந்தவர். “பூரண யோகம்” என்ற உத்தியைப் பரப்பி, எல்லோரிடமும் ஆன்மிகம் மலரச்செய்த ஒரு மகான் ஆவார். இறைவனின் வழிகாட்டுதலில் படி, ஆன்மீக பாதையை தழுவி மாபெரும் சாதனை புரிந்து, உலகின் ஆன்மீக ஒளிவிளக்காய் திகழ்ந்த ஸ்ரீ அரவிந்தரின் பணி போற்றத்தக்க ஒன்றாகும்.

yesu rajan

unread,
Feb 1, 2016, 11:28:12 PM2/1/16
to mintamil

பாபா ராம்தேவ்

Baba-Ramdev

மூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை, அரசியல் எனப் பல துறைகளில் செயல்பட்டு, கறுப்புப் பணத்திற்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருபவர், பாபா ராம்தேவ் அவர்கள். ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து, சன்யாசம் பூண்டு, யோகா முகாம்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக ஆரோக்யத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர், இந்தியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடும் அமைப்பான ‘பாரத் சுவாபிமான் ஆந்தோலனை’ நிறுவியவர். ‘இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும்’ என்றும், ‘இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும்’ என்ற கொள்கைகள் உடைய அவர், ‘சுதேசி சிக்சா’ மற்றும் ‘சுதேசி சிகித்சா’ என்ற முழக்கங்களுடன் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார். பல உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தி, ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் போராடி வரும் அவர் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். சமூக நலனில் அக்கறை மிகுந்தவராகத் திகழும் பாபா ராம்தேவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போராட்டங்களையும், யோகா பயிற்சிகளையும் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 25 டிசம்பர், 1965

பிறப்பிடம்: அலிப்பூர், மகேந்திரகர், அரியானா, இந்தியா

பணி: ஆன்மீகத் தலைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

பாபா ராம்தேவ் அவர்கள், இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்திலிருக்கும் மஹேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் என்னும் கிராமத்தில், ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபோ தேவி தம்பதியருக்கு மகனாக டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

அலிப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். எட்டாம் வகுப்பு வரை, அப்பள்ளியில் பயின்ற அவர், பின்னர் குருகுலத்தில் சேர்ந்தார். அவர், பல்வேறு குருக்குலங்கில் சேர்ந்து, இந்திய இலக்கியம், யோகா மற்றும் சமஸ்க்ருதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருக்குலங்களில் சன்யாசிகளிடம் பாடம் கற்ற அவர், அவர்களைப் போலவே மாற விரும்பினார். இதன் வெளிப்பாடாக, அவர் காவி உடைத் தரித்து, துறவறம் பூண்டார். ராமகிருஷ்ண யாதவாகப் பிறந்த அவர், ‘பாபா ராம்தேவ்’ என்று அன்றுமுதல் அழைக்கப்பட்டார்.

துறவியாக பாபா ராம்தேவ்

ஹரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் கல்வா குருகுலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர் அங்குள்ள கிராம மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளித்தார். பின்னர், பண்டைய இந்திய வேதங்களைக் கற்கும் நோக்கமாக அவர் ஹரித்வாரில் உள்ள குருகுல் காங்க்ரி விஸ்வவித்யாலயாவிற்குச் சென்றார். அங்குப் பல ஆண்டுகள் செலவிட்ட அவர், அரபிந்தோ கோஷின் ‘யோகிக் சதன்’ என்ற புத்தகத்தைப் படித்தார். அரிய புத்தகமான ‘யோகிக் சதனை’ படித்தப் பிறகு, அவர் இமயமலைக் குகைகளுக்குச் சென்று, சுய கட்டுப்பாடு மற்றும் தியானம் போன்றவற்றில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார்.

யோகாவும், ராம்தேவும்

சுய கட்டுப்பாடு மற்றும் தியானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், ‘திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட்’ என்ற அமைப்பை, ஆச்சார்யா நிதின் சோனி அவர்களின் நிறுவனத்துடன் இணைந்து நிறுவினார். முதன்முதலில், அவரது யோகா பயற்சி ‘ஆஸ்தா தொலைக்காட்சியில்’ ஒளிபரப்பானது. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததால், அவரைப் பலரும் பின்பற்றத் தொடங்கினர். அவர், திரைப்படப் பிரமுகர்களான அமிதாப் பச்சன், ஷில்பா ஷெட்டி, மற்றும் பலருக்கும் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும், அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும், முஸ்லீம் மத குருக்களின் கல்லூரியிலும் யோகா பயிற்சியளித்திருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் யோகா பயிற்சியளித்து பிரசித்தி பெற்ற அவரின் பதஞ்சலி யோகபீடத்திற்கு, ஸ்காட்லான்டடில் ஒரு தீவை, இந்தியாவில் இருந்து சென்று அங்கு குடிபெயர்ந்த தம்பதியர்கள் பரிசாக்கினர். மேலும், அவரது பிராணயாமா பயிற்சிகளாலும், ஆயுர்வேத முறைகளாலும் பல நோய்கள் குணமடைவதை உணர்ந்த அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் சம்பந்தமான பாடங்களை அறிமுகப்படுத்தியது.

அரசியல் மற்றும் சமூக பிரச்சாரங்கள்

பாபா ராம்தேவ் அவர்கள் ஊழலுக்கு எதிராகவும், கருப்புப் பணத்திற்கு எதிராகவும் பல போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் நடத்தியும், ஈடுபட்டும் உள்ளார். அவர், 2011ஆம் ஆண்டில் நடந்த ‘ஜன லோக்பால்’ போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பிப்ரவரி மாதம், 27 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டில், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 1 லட்சம் மக்கள் கொண்ட பெரிய பேரணியை வழிநடத்தினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜூன் 4, 2011 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க விருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் அரசுக்கு, கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும், ஒழிக்கவும் அவர் பல வழிகளைப் பரிந்துரைத்தார்.இதனால், போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், 15 நாட்கள் கழித்து, விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்விளைவாக, ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். பெங்களூர், மும்பை, ஹைதெராபாத், ஜம்மு மற்றும் லக்னோ போன்ற இடங்களில் போராட்டங்களை நிகழ்த்திய அவர், பல சமூக ஆர்வலர்களின் விண்ணப்பங்களை ஏற்று 9 வது நாள் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

சர்ச்சைகளும், விமர்சனங்களும்

பாபா ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, அவர் மீதும், ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பதஞ்சலி யோகா டிரஸ்ட் மீதும் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன.

மேலும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், அவர் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பொருள்களை, இறக்குமதி செய்ததாகவும், ஆச்சார்யா பாலகிருஷ்ணா அவர்கள், நேபாளில் இருந்து இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த நேபாளி குற்றவாளி என்றும், அவர் ஆயுத சட்டம், 1959 ஐ மீறியுள்ளார் என்றும் பல குற்றங்கள் அவர்கள் இருவரின் மீதும் சாட்டப்பட்டது.

மேலும், இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக, மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார். பின்னர், அரசு ஆய்வகங்களில் இதனை சோதித்து, ஆயுர்வேத மருந்துகளில் வெறும் மூலிகைகள் மட்டுமே இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தது.

yesu rajan

unread,
Feb 2, 2016, 2:23:29 AM2/2/16
to mintamil
லியோனோர்டா டாவின்சி வரைந்த யேசுகிறித்து படம்


Leonardo_da_Vinci_or_Boltraffio_(attrib)_Salvator_Mundi_circa_1500.jpg

தேமொழி

unread,
Feb 2, 2016, 2:46:33 AM2/2/16
to மின்தமிழ்


On Monday, February 1, 2016 at 11:23:29 PM UTC-8, yesu rajan wrote:
லியோனோர்டா டாவின்சி வரைந்த யேசுகிறித்து படம்
 


அறிவியல் ஆய்வாளர்கள் கொடுத்த ஜீசஸ் படம்.....



Forensic Facial Reconstruction Expert Reveals What Jesus Would REALLY Have Looked Like


..... தேமொழி

yesu rajan

unread,
Feb 2, 2016, 3:24:00 AM2/2/16
to mintamil
எதன் அடிப்படையில் இப்படி சொல்றாங்க தேமோழி

--

தேமொழி

unread,
Feb 2, 2016, 3:48:46 AM2/2/16
to மின்தமிழ்


On Tuesday, February 2, 2016 at 12:24:00 AM UTC-8, yesu rajan wrote:
எதன் அடிப்படையில் இப்படி சொல்றாங்க தேமோழி

ஏசு "வாழ்ந்த பகுதியில்" ...
ஏசு "வாழ்ந்த காலத்தில்" ... அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 
ஏசுவின்  இனத்தை சார்ந்தவர்கள் மண்டை ஓடுகளைக் கொண்டு, கணினி மூலம் முப்பரிமாணத் தகவல்களை சேகரித்து 
இந்த மாதிரியை செய்துள்ளார்கள் ...
என்று நான் கொடுத்த சுட்டியின் கட்டுரை தெரிவிக்கிறது ...

[...]

The traditional image that most of us have of Jesus is derived from a number of famous artworks, including the likes of Leonardo da Vinci’s The Last Supper and Diego Velazquez’sCristo Crucificado. As a consequence, he is often pictured as tall and fair-skinned with long, flowing, fair hair. Yet the reality is that men from the region of Galilea – now in northern Israel – during the time that Jesus is reported to have lived did not adhere to this image at all.

To help clear up the mystery of what he might have looked like, back in 2002 a forensic facial reconstruction expert and former medical artist from the University of Manchester named Richard Neave recreated the face of a typical resident of Jesus’s home region in the first century C.E.

Working with Israeli archaeologists, Neave obtained three Galilean Semite skulls that had been found in the area around Jerusalem. He then used computerized tomographyto create 3D cross-sectional images of these skulls in order to reveal their full structure. This enabled a computer program to generate a mock-up of what the fully-fleshed faces may have looked like.

Armed with this information, Neave was able to build a 3D cast of a typical skull of a man from Jesus’s region and time period. Layers of clay were then added to this, in accordance with the precise information provided by a computer program designed to determine the thickness of soft tissue at certain points on human faces.

While this enabled Neave to produce a model of what Jesus’s face may have looked like, he and his team had to rely on ancient drawings found at archaeological sites throughout the region in order to estimate the appearance of his hair, eyes, and skin tone. The final product can be seen in the Tweet above.

Naturally, this should not be taken as a definitive historical model of what Jesus looked like, but simply represents an accurate depiction of how he may have appeared. Furthermore, perhaps the results would be slightly different using more advanced techniques, since the study is more than a decade old. 

[...] 
On Tue, Feb 2, 2016 at 1:16 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, February 1, 2016 at 11:23:29 PM UTC-8, yesu rajan wrote:
லியோனோர்டா டாவின்சி வரைந்த யேசுகிறித்து படம்
 


அறிவியல் ஆய்வாளர்கள் கொடுத்த ஜீசஸ் படம்.....



Forensic Facial Reconstruction Expert Reveals What Jesus Would REALLY Have Looked Like


..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

ponvenkatesan64

unread,
Feb 2, 2016, 6:35:50 AM2/2/16
to மின்தமிழ், panb...@googlegroups.com
மிக அருமையான கட்டுரை

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 5, 2016, 4:30:51 AM2/5/16
to mintamil
வணக்கம்.

On 2 February 2016 at 14:18, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Tuesday, February 2, 2016 at 12:24:00 AM UTC-8, yesu rajan wrote:
எதன் அடிப்படையில் இப்படி சொல்றாங்க தேமோழி

ஏசு "வாழ்ந்த பகுதியில்" ...
ஏசு "வாழ்ந்த காலத்தில்" ... அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 
ஏசுவின்  இனத்தை சார்ந்தவர்கள் மண்டை ஓடுகளைக் கொண்டு, கணினி மூலம் முப்பரிமாணத் தகவல்களை சேகரித்து 
இந்த மாதிரியை செய்துள்ளார்கள் ...
என்று நான் கொடுத்த சுட்டியின் கட்டுரை தெரிவிக்கிறது ...
சில வாரங்களுக்கு முன் காதில் கேட்ட தொலைக்காட்சிச் செய்தி ஒன்று...

கணவன் மனைவிக்குள் குடும்பச் சண்டடை,
மனைவி காணாமல் போகிறாள், 
சில தினங்கள் கழித்து அருகில் உள்ள ஊரில் ஒரு பெண் சடலம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறது.
இந்தப் பெண்ணின் எலும்புகளைக் கொண்டு, அவளது முக அமைப்பு உருவாக்கப்படுகிறது.

அந்த முக அமைப்பு, காணாமல் போனவரின் முகம் போன்று உள்ளது.
இச் செய்தி அறிந்த மனைவியின் வீட்டார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
கணவன் கைது செய்யப்படுகிறான்.
அறிவியல் அடிப்படையில் உருவம் ஒத்து இருப்பதால், 
நீதிமன்றம் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறது.

நான்கு ஆண்டுகள் கழிந்த பின் ஒரு நாள் காணாமல் போன அந்த மனைவி ஊருக்கு வந்து சேர்கிறார்.  காவல் நிலையம் செல்கிறார்.  தான் கொலை செய்யப்படவில்லை என்று பதிவு செய்கிறார்.  இவரை நீதிமன்றம் விசாரிக்கிறது.  கணவனை விடுதலை செய்கிறது.
தவறாகத் தண்டனை பெற்றவருக்கு அரசு ஏதேனும் பொருளுதவி செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.

பாவம் அந்தக் கணவன்.

இந்த உண்மை நிகழ்வின் அடிப்படையில்,
இங்கே குறிப்பிடப்படும் எலும்புகளைக் கொண்டு முகத்தோற்றத்தை வரையும் முறையை நான் ஏற்க வில்லை.

ஏசுவின் உருவம் கற்பனையானதே.
அதை வரைந்தவர் அறிவியல் அடிப்படையில் வரைந்ததாகக் கூறினாலும் அதுவும் அவரது கற்பனையே ஆகும்.

ஒரே ஊரில், ஒரே இடத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்வோர் எல்லாம் ஒரே முகத்தோற்றத்தைக் கொண்டிருந்தனர்  அல்லது கொண்டிருக்கின்றனர் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை.

ஏசுவின் உருவம் தவறானதே... என்பது எனது கருத்து.

அன்பன்
கி.காளைராசன்

[...]

The traditional image that most of us have of Jesus is derived from a number of famous artworks, including the likes of Leonardo da Vinci’s The Last Supper and Diego Velazquez’sCristo Crucificado. As a consequence, he is often pictured as tall and fair-skinned with long, flowing, fair hair. Yet the reality is that men from the region of Galilea – now in northern Israel – during the time that Jesus is reported to have lived did not adhere to this image at all.

To help clear up the mystery of what he might have looked like, back in 2002 a forensic facial reconstruction expert and former medical artist from the University of Manchester named Richard Neave recreated the face of a typical resident of Jesus’s home region in the first century C.E.

Working with Israeli archaeologists, Neave obtained three Galilean Semite skulls that had been found in the area around Jerusalem. He then used computerized tomographyto create 3D cross-sectional images of these skulls in order to reveal their full structure. This enabled a computer program to generate a mock-up of what the fully-fleshed faces may have looked like.

Armed with this information, Neave was able to build a 3D cast of a typical skull of a man from Jesus’s region and time period. Layers of clay were then added to this, in accordance with the precise information provided by a computer program designed to determine the thickness of soft tissue at certain points on human faces.

While this enabled Neave to produce a model of what Jesus’s face may have looked like, he and his team had to rely on ancient drawings found at archaeological sites throughout the region in order to estimate the appearance of his hair, eyes, and skin tone. The final product can be seen in the Tweet above.

Naturally, this should not be taken as a definitive historical model of what Jesus looked like, but simply represents an accurate depiction of how he may have appeared. Furthermore, perhaps the results would be slightly different using more advanced techniques, since the study is more than a decade old. 

[...] 
On Tue, Feb 2, 2016 at 1:16 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, February 1, 2016 at 11:23:29 PM UTC-8, yesu rajan wrote:
லியோனோர்டா டாவின்சி வரைந்த யேசுகிறித்து படம்
 


அறிவியல் ஆய்வாளர்கள் கொடுத்த ஜீசஸ் படம்.....



Forensic Facial Reconstruction Expert Reveals What Jesus Would REALLY Have Looked Like


..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Feb 5, 2016, 12:13:27 PM2/5/16
to மின்தமிழ்


On Friday, February 5, 2016 at 1:30:51 AM UTC-8, kalai wrote:
ஏசுவின் உருவம் கற்பனையானதே.
அதை வரைந்தவர் அறிவியல் அடிப்படையில் வரைந்ததாகக் கூறினாலும் அதுவும் அவரது கற்பனையே ஆகும்.

ஒரே ஊரில், ஒரே இடத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்வோர் எல்லாம் ஒரே முகத்தோற்றத்தைக் கொண்டிருந்தனர்  அல்லது கொண்டிருக்கின்றனர் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை.

ஏசுவின் உருவம் தவறானதே... என்பது எனது கருத்து.

பல இனங்களும் வாழும் இடத்தில் இதற்கு விளக்கம் தேடலாம். 

நமக்கு சீனர்கள் அனைவரின் முகங்களும் ஒன்றே போலத் தெரியலாம் அவர்களுக்குள் வேறுபாடுகள் இருக்கும், அது நம்மைவிட அவர்களுக்கு அது தெளிவாகப் புரியும். அதே போல பிற இனங்களும் கூட. 

நமக்கு இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர், இவர் வட நாட்டவர் எனச் சிறிய சிறிய வேறுபாடுகள் மூலம் சொல்ல முடியும். ஆனால் பிற இனத்தவருக்கு அந்த வேறுபாடுகள் புரியாது அது போலத்தான். 

ஐரோப்பியர்கள் தங்கள் கற்பனையில் வரையும் பொழுது தங்கள் இனத்தவர் ஒருவர் போல படம் வரைந்து, சிலை வடித்ததை பொதுவாக அனைவரும் பின்பற்றும் வழக்கம் வந்துவிட்டது. வேறு சிலநாடுகளில் மேரி, ஜீசஸ் உருவங்களை தங்கள் இனமக்கள் முகம் போல வடிவமைத்து வைத்திருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். 

மண்டையோடு கொண்டு அதே முகத்தைக் கொண்டுவரும் அறிவியல் வளர்ந்து வருவது. பிற்காலத்தில் மரபணு உதவிகொண்டு மேலும் கூட துல்லியமாகும் முறை வரலாம். 

ஆனால் இந்த ஏசு உருவம் அந்தப் பகுதியில் வாழும் ஒருவரின் சாயலை காட்டுவது ஒப்புக்கொள்ளத் தக்கது என்பது என் கருத்து. 
..... தேமொழி

yesu rajan

unread,
Feb 6, 2016, 5:32:07 AM2/6/16
to mintamil
//

ஏசுவின் உருவம் கற்பனையானதே.
அதை வரைந்தவர் அறிவியல் அடிப்படையில் வரைந்ததாகக் கூறினாலும் அதுவும் அவரது கற்பனையே ஆகும்.

ஒரே ஊரில், ஒரே இடத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்வோர் எல்லாம் ஒரே முகத்தோற்றத்தைக் கொண்டிருந்தனர்  அல்லது கொண்டிருக்கின்றனர் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை.

ஏசுவின் உருவம் தவறானதே... என்பது எனது கருத்து.
//

ஏசு என்று ஒருவர் வாழவே இல்லைன்னு கூட பலர் சொல்றாங்க அவங்க கிட்ட போய் என்ன சொலல் முடியும்

Reply all
Reply to author
Forward
0 new messages