Re: சித்திரை மாதத் துவக்க 60 மீள்சுழற்சித் தமிழாண்டுப் பெயர்கள்

20 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Apr 22, 2018, 11:23:09 PM4/22/18
to mintamil
அன்புடன் ஜெயபாரதன் சார் அவர்களுக்கு ,..
வரலாறு என்பது அதிகார வர்க்கத்தின் ஆவணமாக இருந்து ..........20ம் நூற்றாண்டில் மக்கள் தொடர்பு சாதனத்தின்(media) பிடியில் வடிவம் பெற்றது.
 21ம் நூற்றாண்டில் அது தகவல் தொடர்பு சாதனத்தின் பிடியில் உள்ளமை தெளிவு
 என்னைப் போன்றோர் ......அதனால் தான் எல்லாக் கொள்கைகளையும் பாரபட்சமின்றி ஏற்றுக் கொண்டாடி விடுவோம்.
ஆம் ---தை 1ல் பொங்கல் வைத்துக் கொண்டாடினால் ,சித்திரையில் கோடி உடுத்திக் கொண்டாடுவோம்.....இன்னும் ஆடி என்று ஒரு கொள்கை அடிபட்டதே !
அப்போது குடும்பத்தோடு ஏதாவது ஒரு தலத்திற்கு ... கோயிலுக்குச் சென்று முன்னோரை நினைத்து  விளக்கேற்றிக் கொண்டாடுவோம்.
  
உங்கள் விருப்பப்படி நீங்கள் பெயர் மாற்றம் செய்வது .......யாரும் தடுக்க இயலாது..........ஆனால் யார் பின்பற்றுவார்கள்?..........எப்படிக் கொண்டு சேர்ப்பீர்கள்?
நீங்கள் அளித்திருக்கும் பட்டியலில் மன்னர்கள் எல்லோரும் ஒரே குழுவாக வரிசைப் படுத்தப் படவில்லை.இடையிடையே இலக்கிய பாத்திரங்கள் ....
சேரன்,சோழன் ,பாண்டியன் ,பல்லவன் .......ஒரே குழுவாக அடுத்தடுத்து இடம் பெறலாம்.
திருமலை ஆண்டு எதற்கு?..........அது மட்டும் தனித்து நிற்கிறது.
நக்கீரர் ,காக்கைப்பாடினி இருவரையும் பிற புலவர்களோடு சேர்த்து நிறுத்துங்கள்.
கண்மணி 













   
 







2018-04-23 6:01 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
அன்பு ஜெயபாரதன் ஐயா,

அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஏற்கனவே தமிழ்ப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.


எனவே இவற்றிற்கு மீண்டும் வேறு தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது தேவையற்ற வீண் முயற்சி என்பது என் கருத்து.

அன்புடன்,
மேகலா

2018-04-22 15:22 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நன்றி ஐயா, எனக்கு தொடராண்டு முறை மட்டுமே ஏற்புடையது.
திருவள்ளுவராண்டு 1.2.3......2049 என்பதும்  ...
ஆங்கிலத்தில் Sunday, April 22, 2018  என்பதில் மற்றொரு சுழற்சி ஆண்டு குறிப்பு இல்லை என்பது போல  ...
இன்று திருவள்ளுவர் ஆண்டு 2049, சித்திரைத் திங்கள் 9ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை  என்ற குறிப்பு மட்டுமே போதும் என்பது எனது கருத்து. 

60 ஆண்டுகளை மொழிமாற்றம்... பெயர் மாற்றம்... செய்து நமக்கு ஆகப் போவது நடைமுறையில் ஒரு பலனும் இல்லை என்பதால் அந்த முயற்சி தேவையும் இல்லை.

நான் தமிழாண்டு முறையில் நாள் குறிப்பிட்டதாக நினைவுமில்லை.

திருமணமோ, குழந்தை பிறப்பு ஜாதகமோ நம் ஊரில் ஐயரிடம் போய் கேட்டுத்தான் நாள்குறித்து, ஜாதகம் கணித்து வருவார்கள்.

அது அவர்கள் கையில் போய்விடுவதால் அவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் குறித்துத்  தருவார்கள், நம் ஆட்களும் அதற்கு மேல் சிந்திக்காமல் அப்படியே பயன் படுத்துவார்கள்.

முதலில்...  திருவள்ளுவர் ஆண்டு 2049, சித்திரைத் திங்கள் 9ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை    என்று குறிப்பிட்டால் அது என்ன நாளைக் குறிக்கிறது என்பது அனைவருக்கும் புரியும்.  மேற்படி ஒரு 60 ஆண்டின்  பெயர் எந்த ஒரு தேவையான  விளக்கமும் தரவில்லை என்பதுதான் எனது கருத்து.  தேவையற்ற ஒன்றை உருவாக்கி மனனம் செய்வதில் பயனும் இல்லை. 


மேலும் அவ்வாறு தமிழறிஞர் பெயர்கள் தேர்வு செய்தால் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி யு போப், ஜார்ஜ் ஹார்ட்  போன்ற அயலகத் தமிழ் அறிஞர்களுக்கும் இடம் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 
திருவள்ளுவராண்டு  வரிசையில் மற்றொரு வள்ளுவர் பெயர் தவிர்க்கலாம்.


..... தேமொழி




2018-04-22 10:44 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
தேமொழி, மேகலா, கண்மணி

60 ஆண்டு சுழற்சித் தமிழாண்டுகளின் பெயர்களுக்கு 

உங்கள் ஆலோசனைகள் தேவை.

சி. ஜெயபாரதன்

++++++++++


முதலாண்டு :  ஔவை ஆண்டு

இரண்டாம் ஆண்டு : வள்ளுவர் ஆண்டு

மூன்றாம் ஆண்டு : தொல்காப்பியர் ஆண்டு

நான்காம் ஆண்டு :  அகத்தியர் ஆண்டு

ஐந்தாம் ஆண்டு : இளங்கோ ஆண்டு

ஆறாம்  ஆண்டு : கம்பர் ஆண்டு

  :  ஒட்டக் கூத்தர் ஆண்டு.

  :  காளமேகம் ஆண்டு  

 : சேக்கிழார் ஆண்டு


     :  ஆண்டாள் ஆண்டு

   : கண்ணகி ஆண்டு

   : மணிமேகலை ஆண்டு

+++++++++++

    :  பாரி ஆண்டு  [கடையேழு வள்ளல்கள்]

    : ஓரி  ஆண்டு

   : காரி ஆண்டு

    : அதியமான் ஆண்டு

     : பேகன் ஆண்டு 
    
      : ஆயவன்  ஆண்டு.

     :நள்ளி ஆண்டு
 
+++++++++++++

     :அப்பர் ஆண்டு
  
     : சுந்தரர் ஆண்டு

    : சம்பந்தர் ஆண்டு

    : வாசகர் ஆண்டு

     :  குமணன் ஆண்டு

    :  பட்டினத்தார் ஆண்டு

   :   கபிலர் ஆண்டு

    : சுந்தரனார் ஆண்டு

     : பாண்டியன் ஆண்டு

   :  சோழன் ஆண்டு

    : சேரன் ஆண்டு    

     :  திருமலை ஆண்டு

    : மறைமலை ஆண்டு

    : பல்லவர் ஆண்டு

     :காவிரி ஆண்டு

     : வைகை ஆண்டு

     : பாலாறு ஆண்டு

     : குமரி ஆண்டு

     : தாமிரபரணி ஆண்டு

     : திருத்தணி ஆண்டு

     : பெரியார் ஆண்டு

     :  வரதராசர் ஆண்டு

      :  பரிதிமால் ஆண்டு

      :  நக்கீரர் ஆண்டு

      : சித்தர் ஆண்டு 

      :  காக்கைப்பாடினி ஆண்டு

         :  சிதம்பரனார் ஆண்டு

     :  பாரதியார் ஆண்டு

   : பாரதிதாசன் ஆண்டு

  : இராமலிங்கர் ஆண்டு








தேமொழி

unread,
Apr 23, 2018, 12:46:37 AM4/23/18
to மின்தமிழ்
மேலும் சுழற்சியாண்டுகள் என்பது  நடைமுறையில் கணக்கிடுதலுக்கு இடையூறாகவும் உள்ளது.

காட்டாக, நான் எனக்கு  அட்சய ஆண்டு தைத்திங்கள்  திருமணம் நடந்தது, எனது  முதல் குழந்தை மாதவி பிறந்தது விபவ ஆண்டு சித்திரைத் திங்கள் என்று கூறினால் எத்தனைப் பேரால் திருமணம் நடந்த ஆண்டு, குழந்தை பிறந்த ஆண்டு, இவற்றுக்கு இடையே உள்ள கால இடைவெளி, மற்றும்  இன்று  மாதவியின் வயது  போன்றவற்றை உடனே புரிந்து கொள்ள இயலும்?

இந்தத் தகவல்களை ஆங்கில நாட்காட்டி வழியாகச் சொன்னால்  (அல்லது தமிழக அரசு பின்பற்றும் தமிழ்த் திருவள்ளுவராண்டு தொடராண்டுக்  கணக்கிலோ சொன்னாலும்) புரிந்து கொள்ள முடியும்.

அத்துடன் நடைமுறை வாழ்க்கையில் இரயில் பயணத்திற்கு, பள்ளியில் தேர்வு நாள் அறிவிப்பிற்கு,  அதையும்விட பள்ளியில் சேர்க்கும் பொழுது பிறந்தநாள் குறிப்பு ஆகிய ஆவணங்களில் நாம் ஆங்கில ஆண்டு  முறைப்படி (மெட்ரிக் அளவு போல) உலகத்துடன் இசைந்து  பின்பற்றுகிறோம்.

இந்திய நடுவண், மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் ஒரு ஆர்வக்கோளாரில் பழைய பஞ்சாங்க நாட்குறிப்பிடும் முறைகளை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதையும் கைவிடுதல் நல்லது.

நாட்காட்டி ஒப்பீடுகளை வரலாறு தொல்லியல் துறையினர் மட்டும் ஆவணப்படுத்த ஒப்பிட, குறிப்பிடக் கையாளுவதுடன் நாம் நிறுத்திக் கொள்வது இந்த மில்லியனத்தில் பொருத்தமாக இருக்கும்.  இன்று அரசுகள் மேற்கொள்ளும் வழக்கத்தில் உள்ள முறையில், வாங்கும் பொழுது  அரைகிலோ அரிசி என்றும்,  அது  எத்தனைப் படி அரிசி என்றும் வேலை மெனக்கெட்டு அடுத்தடுத்து  குறிப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது. 

அடுத்தவர் வழியில் சித்திரை வைகாசி என்பதற்கும் ... ஏப்ரல் மே என்பதற்கும் என்ன வேறுபாடு?  எல்லாமே  கடன் வாங்கியவை.  ஒன்று பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய கடன், மற்றொன்று சில நூறு ஆண்டுகளுக்கு  முன் வாங்கிய கடன். 

ஆமாம்   நாம் வாங்கியது கடன்தான்  என்று விஜய் மல்லையா போல அதைப் பொருட்படுத்தாமல் போய் விடுவோமே. 

..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages