வெட்டுங்க வெட்டுங்க நல்லா வெட்டுங்க

1,169 views
Skip to first unread message

செல்வன்

unread,
Feb 16, 2015, 1:29:01 AM2/16/15
to mintamil, vallamai

வெட்டுங்க வெட்டுங்க நல்லா வெட்டுங்க 


BY: S A Thirumalai
-----------------------------------------------------------------

மரம் நடுகிறார்களோ இல்லையோ மரத்தை வெட்டுவதில் தமிழர்கள் முன்ணணியில் இருக்கிறார்கள். ஆம் அதில் தனி மனிதர் முதல் அரசாங்கம் வரை ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. தமிழர்களுக்கு டி வி சீரியல்களுக்கு அடுத்ததாகப் பிடித்த பொழுது போக்கே மரத்தை வெட்டுவதுதான். குறிப்பாக பக்கத்து வீட்டு மரங்களை வெட்டுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளும் அவர்கள் பங்குக்கு எங்கு மரம் வளர்ந்தாலும் அந்த இடத்துக்கு உடனடியாக ஆஜராகி அதன் உரிமையாளரை மிரட்டி வளரும் மரத்தை வெட்ட உத்தரவு போடுகிறார்கள். ஆம் இது உண்மைதான்.

வீடுகளில் மரம் வளர்ந்து காம்பவுண்டுச் சுவரைத் தாண்டியவுடனேயே பக்கத்து வீட்டுக்காரர்கள் குப்பை விழுவதாகப் புகார் சொல்லி கடும் சண்டைக்கு வருகிறார்கள். அடுத்த வீட்டு மரத்தின் நிழல் கூட தங்கள் நிலத்தில் விழக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் பெரும்பாலான அக்கம் பக்க வீட்டுச் சண்டைகள் அனைத்தும் மரம் வெட்டும் பிரச்சினையில்தான் நிகழ்கின்றன. மரத்தின் இலைகள் தங்கள் வீட்டுப் பகுதிக்குள் விழுவதை மிகப் பெரிய பாவமாகவும் பக்கத்து வீட்டுக்காரனைக் கொலை செய்ய நியாயமுள்ள குற்றமாகவும் கருதுகிறார்கள். இந்த முறை எனக்கே மூன்று நேரடி அனுபவங்கள் கிட்டின.

மதுரையில் எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அங்கு யாரும் வசிப்பதில்லை. அதன் உரிமையாளர் பெண்மணி வந்து அவர்கள் நிலத்தில் எங்கள் வீட்டு மாவிலை விழுவதாகக் கூறி பெரும் சண்டைக்கு வந்தாள். ஆவேசம் வந்து சாமி வந்தது போல பேயாட்டம் ஆடினாள். உடனடியாக கிளைகளையெல்லாம் வெட்டினோம். மறு நாள் வந்து மரத்தையே வெட்டினால்தான் விடுவேன் என்று பெரும் சண்டைக்குத் தயாரானாள். வேறு வழியில்லாமல் இருபதாண்டுகள் வளர்ந்த மாமரங்களை வெட்ட வேண்டியதாகப் போயிற்று. இன்னொரு பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி என்னை அன்பாக வீட்டுக்கு வரச் சொல்லி எங்கள் வீட்டுத் தென்னை மரக் கீற்று ஒன்று அவர்கள் வீட்டுப் பகுதியில் விழுந்து விட்டதை ஏதோ அணு உலைக் கசிவு ஏற்பட்டது போல பதறி தென்னை மரங்களை உடனடியாக வெட்டி விட்டு ஊருக்குப் போகுமாறு கேட்டுக் கொண்டார். அதைத்தான் ஆளை வைத்து எடுத்து விட்டோமே மேலும் கிளைகளையும் வெட்டியாயிற்றே என்றாலும் கேட்ட் பாடில்லை மொத்த மரத்தையும் வெட்டினால்தான் தான் நிம்மதியாக அங்கு வசிக்க முடியும் என்று கூறினார். இது அனேகமாக மரம் உள்ள அனைத்து வீடுகளிலும் நிலவும் இந்தியா பாக்கிஸ்தான் யுத்தம். சுற்று வட்டாரத்தில் மரங்களே இல்லாமல் மூளியாக இருந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி பிறக்கிறது. பாலைவனங்களை உருவாக்குவதில் மிகுந்த அக்கறை கொள்கிறார்கள். 

அப்படியே அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பெரிய மனது பண்ணி மரத்தை வளர அனுமதித்து விட்டாலும் மின்சார வாரியம், தண்ணீர் வாரியம், தொலைபேசி நிறுவனம் ஆகியவற்றின் ஊழியர்கள் அடுத்து மரம் வெட்டக் கிளம்பி விடுகிறார்கள். அதிலும் மின்சார வாரிய ஊழியர்கள் கம்பிகளுக்கு இடையூறாக வரும் மரக் கிளையை மட்டும் வெட்டச் சொல்வதில்லை. ஒட்டு மொத்த மரத்தையும் வெட்டி அந்த இடம் சூனியமாகப் போனால்தான் திருப்தி அடைகிறார்கள்.

அப்படி அண்டை அயலார் அரசு ஊழியர் ஆகியோர் பெருந்தன்மையுடன் மரம் வளர்க்க அனுமதித்தாலும் கூட சில அனூகூலச் சத்ருக்கள் வீட்டுக்குள் இருந்தே அடுத்துக் கிளம்பி விடுகிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்தே அந்த மர விரோதிகள் உருவாகுகிறார்கள். தென்னை மரம் வளர்ந்தால் வீட்டின் அஸ்திவாரத்தைப் பெயர்த்து வீட்டுச் சுவர்களில் கீறல் விழுந்து வீடு இடிந்து விடும் ஆகவே தென்னையை வெட்டு, மாமரத்தில் பூ பூக்கவேயில்லை பூ பூக்காத மரம் இருந்தால் வீட்டுக்காகாது ஆகவே மாமரத்தை வெட்டு, பன்னீர் மரம் வளர்த்தால் பாம்பு வரும் ஆகவே பன்னீரை வெட்டு, நாவல் மரம் வைத்தால் நாய் வரும், பலா மரம் வைத்தால் பேய் வரும், என்று ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு பழமொழி கண்டு படித்து வைத்திருக்கிறார்கள் அந்த வாஸ்து சாஸ்திரப் படி எந்த மரத்தையும் இந்த வீட்டின் நலம் விரும்பிகள் வளர விடுவதில்லை. அதை வெட்டி அந்த இடம் வெட்ட வெளியானவுடன் இப்ப பாத்தியா எவ்வளவு வெளிச்சம் கிடைக்கிறது இது நாள் வரை இந்தப் பாழாய்ப் போன மரத்தால் வீடே இருண்டு போய் கிடந்தது என்று அகமகிழ்ந்து போகிறார்கள்.

கிராமத்தில் அக்கம் பக்கத்து வீடுகளுக்குப் பொதுச் சுவர் இருக்கும் இடை வெளி இருக்காது. ஒரு வீட்டில் மாடி கட்டினால் அந்த மாடியில் ஜன்னல் வைக்க அனுமதிக்கவே மாட்டார்கள் தன் வீட்டுக்குள்ளும் காற்றும் வெளிச்சமும் வரக் கூடாது அடுத்தவன் வீட்டுக்குள்ளும் காற்றும் வெளிச்சமும் வரக் கூடாது என்று மனதையும் அடுத்த வீட்டுக்காரனின் ஜன்னலையும் பூட்டிவிடுகிறார்கள். அத்துடன் அடுத்த வீட்டில் மரம் வளர்ந்தால் உடனடியாக ஆவேசத்துடன் சண்டைக்குக் கிளம்பி விடுகிறார்கள். அப்படி கிராமத்து வீட்டின் பக்கத்து வீட்டுப் பெண்மணி பத்ரகாளியாக சாமி வந்து ஆடிய செய்தி வந்தபடியால் ஊருக்குப் போய் வீட்டின் பின்னால் வளர்ந்திருந்த வேப்ப மரத்தையும், முருங்கை மரத்தையும், மாமரத்தையும் கிளை திருத்த ஆள் தேடினால் கிளை வெட்ட மட்டும் 4000 ரூபாய்கள் கேட்டார்கள். ஆனால் மொத்த மரங்களையும் இலவசமாக வெட்டித் தருவதாகச் சொன்னார்கள். காசு போனாலும் பரவாயில்லை கிளைகளை மட்டுமே வெட்ட வேண்டும் என்று கண்டிப்பாக எச்சரித்து கூட இருந்து கவனித்து வெட்ட வைத்தேன். பெரும்பாலான வீடுகளின் பின்கட்டில் காலி இடம் இருந்தும் கூட யாரும் மரம் வளர்க்க விரும்புவதில்லை. பூச்சி வரும், கொசு வரும், பேய் தங்கும் வீட்டைக் கவுத்தி விடும் என்று வீண் காரணங்கள் சொல்லி ஏற்கனவே இருக்கும் வளர்ந்த மரங்களையும் வெட்டி விடுகிறார்கள். பக்கத்து வீட்டில் மரம் இருந்து அது இவர்கள் வீட்டில் எட்டிப் பார்க்கா விட்டாலும் கூட அஸ்திவாரத்தை பாதித்து விடும் என்று காரணம் காட்டி அவனுடன் சண்டை போட்டு மரத்தை வெட்டச் சொல்கிறார்கள். கூடிய வரையில் தன் வீட்டின் முன்னும் பின்னும் அக்கம் பக்கத்திலும் மரம் ஏதும் வளர்ந்து விடாமல் கவனமாக வீட்டைப் பாதுகாக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் தமிழ் வளர்ப்போம் என்பது போலவே மரம் வளர்ப்போம் என்பதும் வெட்டிக் கோஷமாக ஒலிக்கிறது. தமிழ் வளர்ப்போம் என்று சொல்லிக் கொண்டே தமிழை ஒழிப்பது போலவே மரம் வளர்ப்போம் என்று சொல்லிக் கொண்டே மரம் வெட்டுவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். சமீபத்தில் கோவைக்குப் போயிருந்த பொழுது மரங்கள் அடர்ந்த சோலையாக இருந்த பல தெருக்கள் வெறிச்சென்று காணப் பட்டன. செம்மொழி வளர்க்க செம்மரங்களை வெட்டியிருக்கிறார்கள் பாவிகள். தமிழ் நாட்டின் பாலை வெளிகளில்தான் இந்தப் பிரச்சினை மதுரை போன்ற பாலைவனங்களில் அதன் வறட்சியான மண் போலவே மனிதர்களின் மனமும் மரத்துப் போய் விட்டிருக்கின்றன. நாகர்கோவில் பகுதிகளில் மரங்கள் செழிப்பாக வளர்ந்து காணப் படுகின்றன. அரசாங்கம் லட்சம் மரம் வளர்ப்பது எல்லாம் வீண் பேச்சு மரக் கன்றுகளுக்குப் பிடித்த கேடு மட்டுமே. தொடர்ந்து வேலி போட்டுத் தண்ணீர் விட்டு கிளை வெட்டிப் பராமரிக்காவிட்டால் லட்சம் மரங்களில் ஒன்றிரண்டு மட்டுமே அதிர்ஷ்டம் இருந்தால் வளரும்.

தமிழ் நாட்டின் மாநில மரம் சீமக் கருவேல மரம் மட்டுமே. பிற மாநிலங்களில் காண முடியாத இந்த விஷ விருட்சம் தமிழ் நாட்டில் மட்டும் எந்த வித கவனிப்பும் இன்றி செழித்து வளர்கிறது. அதை அரசாங்கமே நதிகளிலும், கண்மாய்களிலும் வளர்த்து விடுகிறது. தமிழ் நாட்டின் கட்சிகள் போலவே இந்த விஷச் செடிகளும் படு வேகமாக தமிழகம் முழுவதும் ஆக்ரமித்துள்ளன. தமிழ் நாட்டைப் பிடித்த மாபெரும் பீடைகளில் ஒன்று இந்தச் சீமைக் கருவேல மரங்கள். அதை வெட்டுவதற்குப் பதிலாக பசு மரங்களை வெட்டுகிறார்கள். ஆபத்தான இந்த மரங்களைப் பற்றி எவரும் கவலைப் படுவதில்லை



--

Geetha Sambasivam

unread,
Feb 16, 2015, 6:31:15 AM2/16/15
to மின்தமிழ்
அப்படியே எங்களோட அனுபவங்கள்! :( சென்னையை வெறுத்ததற்கு இந்த மரம் வெட்டுதலும் ஒரு காரணம். அதிலும் மல்லிகைச் செடிகள், முல்லைக் கொடிகளை எல்லாம் பாம்பு வரும்னு வெட்டச் சொல்வாங்க. அப்புறம் மழை எப்படிப் பெய்யும்? தண்ணீர்ப் பற்றாக்குறை எப்படித் தீரும்?  எங்க வீட்டு மரத்தின் குப்பைகளை நாங்களே அங்கே சென்று பெருக்கிச் சுத்தம் செய்து கொடுத்துவிட்டு வருவோம். 

துரை.ந.உ

unread,
Feb 16, 2015, 7:08:44 AM2/16/15
to வல்லமை, mintamil
2015-02-16 11:58 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

வெட்டுங்க வெட்டுங்க நல்லா வெட்டுங்க 

மரம் நடுகிறார்களோ இல்லையோ மரத்தை வெட்டுவதில் தமிழர்கள் முன்ணணியில் இருக்கிறார்கள்.


 

Oru Arizonan

unread,
Feb 16, 2015, 7:19:57 AM2/16/15
to mintamil
எங்கிருந்து நல்ல நல்ல படங்களை எடுத்து அனுப்புகிறீர்கள்?  படக் களஞ்சியம் வைத்திருக்கிறீர்களா?

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 16, 2015, 9:20:50 PM2/16/15
to Minthamil
ஒரு பட்ட மர்த்தின் பரிதவிப்பு

வண்ண வண்ண பூக்களென்ன

வாய் சுவைக்கும் காய்களென்ன

ஒட்டு மாங்கனிகளென்ன

கொட்டுமாம் புளியுமென்ன

கோடி கோடி கொடுத்திட்டோம்

கூறுமையா உம் பதிலை.

 

சிறகு கொண்ட பறவை பல                 

வாழுமிடம் எம்மிடையே.

பகமை கொண்ட மான் புலியும்

படுத்துறங்கும் எம் மடியில்

கொடுத்து வந்தோம் குளிர் நிழலை

கூறுமையா உம் பதிலை.

 

மது கொடுக்கும் போதையினை மனதிலே கொண்டுமிங்கு

பசு மரத்தின் பட்டையினை வெட்டுகின்றார் பாரிலின்று

உயிருடனே தோல் உரிக்கும் உத்தமரே உரைத்திடுவீர்

குற்றமென்ன யாம் புரிந்தோம் கூசாமல் கூறிடுவீர்.

 

தோலுரித்த மயிலென்றும் தோகை விரித்தாடாது

பட்டைபோன பசு மரமும் பட்டுத்தான் போகுமையா

மரம் காத்த மண் வளமும் நிழல் காத்த நீர் வளமும்

நிமிடத்தில் போய்விடுமே நிச்சயமாய் சொல்லுகின்றோம்.

 

வாயற்ற சீவனை நீர் வாட்டுதல் முறையன்று

சாய்வுற்ற மரமெல்லாம் சாபமிடும் மறக்காதீர்

நீர் செய்த காரியத்தை நீரேதான் நினைத்துப் பாரும்

தீயவைகள் தொன்றிடுமுன் திருந்திடுவீர் நல்வழிக்கே.

 

மொட்டையான மரமெல்லாம் கெட்டகால அறிகுறியே

பட்ட மரம் மரமல்ல பாலைவனம் சோலையல்ல

விட்டு விடும் இத்தொழிலை வீறுகொண்டு இக்கணமே

நட்டுவிடும் நன் மரத்தை நாற்றிசையும் யாங்கணுமே.

 

நட்டால் மட்டும் போதாது

நலமாய்க் காத்து நாள்தோரும்

பட்டால் பாடு பலனுண்டு

நன்றிக் கடனும் எமக்குண்டு.

 

பட்ட கடன் தீர்த்திடவே

நல்ல பயன் யாம் தருவோம்

வெட்ட வெளி வெயிலதனின்

வேதனை இனி என்றுமிறா.

 

 



(கருப்பு வெள்ளை படம் க.ந.நடராஜன்)

                                           

ஆற்றங்கரை ஆலமரம்

 

 

 

ஆற்றங் கரையி லோர் ஆல மரம்

நேற்று வரை நின்றிருந்தது

போற்றிடும் எழிலுடனே அது

 

பல வண்ணப் பறவைகள் பழந் தின்று

இசை பாடி மகிழ்ந்த மரம்

விழுதுகள் பல விட்டே

கம்பீரமாய் நின்ற தம்மரம்

 

தொங்கிடும் விழுதுகளிலே

தொங்கியே ஆடி மகிழ்வார்

அங்கு வந்தே

எங்களூர் சிறார் பலர்

 

வறுத் தெடுக்கும் வெய்யிலில்

கருத்து வந்த வழிப் போக்கர்

களைப்பு தீர ஆற்று நீர் பருகியே

படுத் துறங்குவார் அதன் குளிர் நிழலில்

 

எங்கிருந்தோ வந்தா ரிருவர்

கையில் வாளும் அறுவாளும் கொண்டு

வெட்டிச் சாய்த்தார் கிளை கிளையாய்

அழகு தந்த அந்த மரம்

 

வேண்டுமா மிந்த இடம்

உல்லாசப் பயணிகளுக்கு

விடுதி யொன்று கட்டிடவே

தங்குவோர் ரசிப்பாராம்

இயற்கையின் எழிலினை!

 

வீடழித்துக் காப்போரோ

வீதியின் அழகு தனை

எங்கு போய்ச் சொல்வேன்

இந்த அவலம் தனை?

 

(படத்திற்கு நன்றி நவில வேண்டும் விக்கிமீடியாவிற்கு)

 

  நடராஜன் கல்பட்டு

 

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Reply all
Reply to author
Forward
0 new messages