பழைய தமிழ்த் திரைப்படங்கள்

263 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 25, 2014, 2:51:47 PM10/25/14
to mintamil, housto...@googlegroups.com
இப்பொழுது இணையத்தில் ஏராளமான தமிழ் சினிமாக்கள் முழுதுமாய்
1940கள் தொடங்கிக் கிடைக்கின்றன. யுட்யூப் உபயம்.
முழுப் படங்களின் வலைத்தொடுப்பு நீங்களும் அளித்தால்
இவ்விழை சிறப்புறும். நல்ல காட்சிகளின் நிமிஷம் சொன்னாலும்
பார்க்கலாம். நன்றி.

அரிசோனன் எழுதினார்:
>நீண்ட நாள்களுக்குப் பின்னர் நாடோடி மன்னனை (Prisoner of Zendaவின் தமிழாக்கம்) மீண்டும் பார்க்க 
>வாய்ப்புக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.  பாட்டுக்கள் மிக அருமையாக இருக்கும்.

> முடிந்தால் "நாடோடி மன்னன்" படத்தைப் பாருங்கள்.  அவரது இயல்பான குரலைக் கேட்கலாம்.

நாடோடி மன்னன் முழுப்படமும் இங்கே பார்க்கலாம்: 
 
நா. கணேசன்

Krishnan S

unread,
Oct 26, 2014, 3:45:41 AM10/26/14
to mint...@googlegroups.com
அரிசோனன் எழுதினார்:
>நீண்ட நாள்களுக்குப் பின்னர் நாடோடி மன்னனை (Prisoner of Zendaவின் தமிழாக்கம்) மீண்டும் பார்க்க 
>வாய்ப்புக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.  பாட்டுக்கள் மிக அருமையாக இருக்கும்.
> முடிந்தால் "நாடோடி மன்னன்" படத்தைப் பாருங்கள்.  அவரது இயல்பான குரலைக் கேட்கலாம்.

 1960.- ல்  நாடோடி மன்னனை  ஜொகூர் பாருவில் ( மலேசியா}  முதல் இரவு காட்சி கண்டு
  மகிழ்ந்தேன்.
   மீண்டும் இப்போது பார்த்த போது..., 
        நீண்ட நாள் எனக்குள் இருந்த ஒரு வினா, சந்தேகம் மீண்டும் எழுந்தது.
அது...,
               எம்.ஜி, ஆரும், சரோஜா தேவியும்  ஒரு கனவு காட்சியில்  “”
                  “ கண்ணில் வந்து மின்னல் போல்” என்ற பாடுவார்கள்.
             அதில் ஒரு வரி..,
                        ” சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல.....” என்ற வரி வரும்.
                       சுடர் விடும் மின்னலை கண்டு  தாழை மலர்ந்து என்று பொருள்.
                    இந்த “தாழை ” எனபது என்ன தாவரம் எது?
                    இந்த தாழை மின்னலை  கண்டுதான் மலருமா?

    எம்.ஜி, ஆர் தமது படங்களில் அவருக்காக எழுதும் பாடலை மிக கவனமாக கவனிப்பார்.
      பாடலாசியர் யார் என்று எனக்கு நினைவில்லை,
           
     எம்.ஜி, ஆர்..., பாடலாசியரை....,  தாண்டி இந்த வரி வந்திருக்காது,
எனது நீண்ட நாளையா ஐயத்தினை தெரிவர்கள் விளக்க வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்
அன்பொடு,
கிருஷ்ணன்
சிங்கை
       
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

Oru Arizonan

unread,
Oct 26, 2014, 8:46:40 PM10/26/14
to mint...@googlegroups.com
தாழை என்பது முட்கள் உள்ள ஒரு பூ.
அது மிகவும் கிறங்க அடக்கும் வாசம் உள்ளது.
அதன் இதழைப்பிரித்து, பெண்கள் கூந்தலில் பின்னிக்கொள்வார்கள்  என் தங்கைக்கு என் தாயாரும், பாட்டியும் தாழம்பூப் பின்னல் பின்னிவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.
தாழையின் நறுமணத்திற்கு அதில் மிகச் சிறிய பூநாகம் வரும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.  இது எவ்வளவு தூரம் உண்மை என்று நான் அறியேன்.
சிவபெருமானுக்கு இத்தாழம்பூ விலக்கப்பட்டது.

இப்பொழுது தாழம்பூ இந்தியாவில் கிடைக்கிறதா, அதைப் பெண்கள் சூடிக்கொள்கிறார்களா?

ஒரு அரிசோனன்
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Oct 26, 2014, 9:30:37 PM10/26/14
to மின்தமிழ்
கொண்டையில் தாழம்பூ பாடல் 

தாழம்பூ எனற தமிழ்த் திரைப்படம்

இன பனா அனா

தேமொழி

unread,
Oct 26, 2014, 10:54:30 PM10/26/14
to mint...@googlegroups.com

கவிஞர் சுரதா எழுதிய வரிகள்  இவை...

சுரதா நன்கு தெரிந்த ஒன்றிற்கு யாருக்குமே தெரியாத ஒன்றை உவமையாக்குவார். 'சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே' என்று ஒரு பாடலில் அவர் பயன்படுத்திய உவமை அத்தகையதுதான். 

இது போன்றே  ...

மேகத்துக்குள் மின்னல் போல நின்றாயே
மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் வந்தேனே

[சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்]

என்ற திரைப்பாடலிலும் வருகிறது. 

செந்தாழம்பூ (வில் வந்தாடும் தென்றல்) வெண்தாழம்பூ என இரு வகை உண்டு.  செந்தாழம்பூ மஞ்சள் நிறமாக இருக்குமாம்.  
எனக்கு தலையில் வைத்துப் பின்னி சடை போட்டுவிட்டிருக்கிறார்கள்.  அதிக நறுமணம் தலைவலி கொண்டு வரும் ..ஒரு சிலருக்கு.  

திரைப்பாடலில் பல முறை கேட்டிருக்கிறேன் ...தாழம்பூவின் நறுமணத்தில்....தாழம்பூவே வாசம் வீசு.....தாழையாம் பூமுடிச்சி .....ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்....

இலக்கியத்தில்....
மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்
-ஔவையார்

கைதை, தாழை என தாழம்பூ இரு பெயர்களில் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.

புராணக் கதையில் ....சிவனின் முடியைக் கண்டதாக பிரம்மாவிற்காக பொய்சாட்சி சொன்னதால் சிவனுக்கு அர்ப்பணிக்கும் தகுதியை இழந்த மலர். 

அறிவியலில்....
கீழே தாழை  மலரும்... மரமும், "மின்னலைக்கண்டு இந்த மலர் மலரும்", "இதில் பூநாகம் குடியிருக்கும்" என்ற தகவல்கள் உண்மையா எனத் தெரியாது.
 தாவரவியல் பெயர் Pandanus tectorius [http://en.wikipedia.org/wiki/Pandanus_tectorius]
ஆங்கிலத்தில் Fragrant Screwpine

இம்மலருக்கு மருத்துவப் பண்புகளும் குறிப்பிடப்படுகிறது.

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 27, 2014, 1:45:41 AM10/27/14
to மின்தமிழ்
மின்னல் கண்டு தாழை மலர்வதாகச் சொல்வதை கவிமரபு, என்று சொல்வதும் உண்டு. வைரமுத்து, 'மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்' (பாடல்: வெள்ளி மலரே..படம்:ஜோடி), என்றும், விவேகா "மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட" (பாடல்: இப்பவே இப்பவே..படம்: ராமன் தேடிய சீதை (சேரன் நடித்தது)  என்றும் எழுதியிருக்கிறார்கள்.

 திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பி, " கொண்டல் கொண்டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறும் கண்டல்வெண் சோறளிக்குங்கடற் காழி" என்று சீர்காழியைக் குறிக்கிறார். கவி காளிதாசனும் இந்த உவமையை மேகதூதத்தில் கையாண்டிருக்கிறார்.

சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை.  கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே  தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. மதுரை ஸ்பெஷல் தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றது. அர்ச்சனைக்கு இதை உபயோகப்படுத்துவது வழக்கம்.

வரலக்ஷ்மி விரத பூஜையில் தாழை மலர் கண்டிப்பாக இடம் பெறும். பூஜை நிறைந்த பின், மறு நாள் மாலை, பூஜையில் வைத்த தாழை மலரைக் கொண்டு எங்களுக்கு ஜடை பின்னுவார்கள். பொட்டி ஜடை (தாழை மடல்களை உட்புறமாக மடக்கி வைத்து ஜடையில் தைப்பது), கத்தி ஜடை (மடல்கள் வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருக்குமாறு வைத்துத் தைப்பது) என்று ஜடையில் இருவகைகள் உண்டு. அம்மன் அலங்காரத்தின் போதும் இம்மாதிரி சவுரி முடியில் தைத்து கலசத்தின் பின்புறம் வைத்து அலங்கரிப்பது வழக்கம்.

இந்தப் படத்தில் செயற்கை பூக்களால் செய்யப்பட்டிருப்பதைப் போல், தாழம்பூ ஜடையாலும் செய்யலாம்.

படம் உபயம் கூகுளார்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-10-27 8:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
       
Krishnan S

unread,
Oct 27, 2014, 2:10:58 AM10/27/14
to mint...@googlegroups.com
தாழம்பூ, (தாழை ) பூவிற்க்கு பலவிதங்களில் நல்ல விளக்கமளித்த..,
திரு, கணேசன்,
திரு, ஒரு அரிசோனன்,
திரு, நடராஜன்
திருமதி, தேன் மொழி,
திருமதி, பார்வதி இராமசந்திரன்
 __ ஆகியோருக்கு  தமியேனின் நேசமெல்லாம் நிறைந்த நன்றிகள்.
அன்பொடு,
கிருஷ்ணன்
சிங்கை
2014-10-26 2:51 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Oct 27, 2014, 2:15:40 AM10/27/14
to mint...@googlegroups.com

///
சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை.  கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே  தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. 
///

கைதை  என்பதற்கும் கேதகி என்பதற்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தோன்றுகிறது...
.............................................................................
கைதைப் பூ.
இந்தப் பூ வைத் தாழம் பூ என்றும் அழைப்பர் .
Posted Image
தாழை மலர் தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது. வழுவழுப்பான மரத்தை வாழை என்பது போன்று தாழந்து தொங்கும் மடல்பூவைத் தாழை என்றனர். நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.
கைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை , கைதை ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன.
............................................................................................

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Oct 27, 2014, 4:21:36 AM10/27/14
to மின்தமிழ்
என்னை ஆட்டத்தில் சேத்துக்காம ஒதுக்கீட்டீங்களே அய்யா ஒதுக்கீட்டீங்களே

இனா பனா அனா

தேமொழி

unread,
Oct 27, 2014, 4:45:12 AM10/27/14
to mint...@googlegroups.com

பின்னே ...இப்படி அடிக்கடி பெயர் மாற்றினால் யாரால்தான்  நினைவு வைத்துக் கொள்ள முடியுமாம் பேராசிரியரே?

முடிந்தவரை நினைவிற்கு கொண்டு வந்து, ஒரு  குத்து மதிப்பாக நடராஜன் எனப் போட்டிருக்கிறார் சிங்கையார். 

..... தேமொழி 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Oct 27, 2014, 4:57:58 AM10/27/14
to mint...@googlegroups.com
தாழம்பூவைப் பற்றி  நான் எழுதிய கட்டுரை கீழே படிக்கலாம்

                ” மார்கழிப் பூவே’’

மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து ,அருகிலிருக்கும் ஆலயத்திலிருந்து ஒலிபெருக்கி மூலமாக ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பக்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே விடியற்காலையில் என் பெண் எங்கள் வீட்டு வாசலில் போடும் கோலங்களையும்  ரசித்துக் கொண்டும், உபன்யாசங்கள்,முடிந்த போது இசைவிழாக் கச்சேரிகள் கேட்டுக்கொண்டும்,நம் அறிஞர்கள் எழுதிய இசைமறுவறல்கள் படித்தும், இத்தனை நாட்கள் எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி அனைத்து அறிஞர்களும் எழுதிய அமிர்தம் போன்ற விளக்கங்களப் படித்தும், முழுவதும் அனுபவித்து ஆனந்தமடைந்தேன்,

நாளை வைகுண்ட ஏகாதசி ,எல்லா வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட வாசல் திறக்கும்,வைகுண்ட வாசல்திறக்கும் அந்த சுபமுகுர்த்த வேளையில் மானுடர்களாகிய நாம் மனதும் உடலும் சுத்தமாக, அந்த வாயிலின் வழியே நுழைந்து அங்கு இறைவனை தரிசனம் செய்தால் வைகுண்டம் செல்லலாம் என்னும் ஆத்திக அன்பர்களின் நம்பிக்கையின் படி அனைத்து மக்களும் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் நாள்,

உத்திரமேரூரிலிருந்து  ஒரு உறவுக்காரப் பெண் என் மனைவிக்கு தாழம்பூவை அனுப்பி இருந்தாள்

தாழம்பூ வாசனைக்கு பாம்பு வரும் என்று சொல்லுவார்கள்,மின்னல் தெறிக்கும் வேளையிலே தாழை மடல் விரியும் என்றும் தாழம்பூ பூக்கும் என்றும் சொல்லுவார்கள், அது மட்டுமல்ல தாழம்பூவில் சிறு நாகம் என்று சொல்லக்கூடிய சிறு பாம்பு இருக்கும்,அந்தப் பூநாகம் கடித்தால் பிழைப்பது கடினம் என்றும் சொல்லுவார்கள் ஆகவே தாழம்பூவை நன்கு சோதித்துப் பிறகே கூந்தலில் சூடவேண்டும் என்று என் அன்னையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்

,

பொதுவாக என் வீட்டில் இறைபக்தி உண்டு என்னும் காரணத்தால் புதிய துணிமணிகள், நகைகள், வீட்டிலே சமைக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தையுமே ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு அதன் பின்னர் உபயோகிப்பது வழக்கம், அதேபோல் தாழம்பூவையும் ஸ்வாமிக்கு அணிவித்து பிறகு வீட்டில் உள்ள பெண்மணிகள் சூடிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன், ஆகவே என்னுடைய இயல்பான எச்சரிக்கையான குணத்தினால் அந்த தாழம்பூவை பிரித்து அதில் நன்கு சோதனையிட்டு பிறகு என் மனைவியிடம் கொடுத்தேன்,

பாசத்தோடு தாழம்பூவை அனுப்பி இருக்கும் அந்தப் பெண்ணின் அன்பில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் அந்தப் பெண்ணிற்கு தாழம்பூவின் இயல்புகள் தெரியுமோ தெரியாதோ என்னும் எண்ணத்தில்தான் சோதனை செய்தேன், ஒரு எச்சரிக்கைதான் இதற்கும் காரணம், ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கும் என் சுயநலத்தை எண்ணிப் பார்த்தேன் வெட்கமாக இருந்தது,

நான் என் மனைவியிடம் சொன்னேன் எதற்கும் தாழம்பூவை ஸ்வாமிக்கு சார்த்தி அணிவித்த  பிறகு நீ சூடிக்கொள் என்று,

தாழை மடலில்  ஒரு செடிக்கு 20 கிளைகள் இருக்கும்

ஆனால் ஐந்து மொக்குகள் மட்டும் தான் இருக்கும்

இது போல்பல செடிகளில் இருக்கும் அத்தனை மொக்குகளும்

மின்னல் அடிக்கும் வேளையிலே ஒரே நேரத்தில் மலரும்

ஒரு பூவில் 20 இதழ்கள் இருக்கும்

சூரிய வெளிச்சம் அந்தச்செடிக்கு போதாது

ஆகவே மின்னலின் ஒளியில்தான் பூக்கும்

மின்னலின் ஒளி தரியில் பட்டுத்தெரித்து தண்ணீரில் பட்டு அந்தப் பூவின் மேல் படும் போது அதிலிருந்து கிடைக்கும் சக்தியை வைத்து தாழம்பூ பூக்கும்

தாழம்பூவின் மகரந்த்த்தை வைத்து வாசனாதி திரவியங்கள் செய்வர்

எப்பொருளையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகு நாம் உபயோகிப்பது என்ன காரணத்தால் என்று எண்ணிப் பார்க்கையிலே

அனேக காரணங்கள் தோன்றினாலும்  நமக்கு  ஒரு பிறப்பையும் தந்து நமக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அளித்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு நிவேதனம் செய்து விட்டு உபயோகிக்கிறோம் என்பது ஒரு காரணம்

பொதுவான நம்பிக்கை என்னெவென்றால் நாம் உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அவைகளை ஸ்வாமி நீக்கிவிட்டு நமக்கு நன்மை அளிக்கக் கூடிய ப்ரசாதமாக மாற்றித் தருவார் என்னும் ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் எல்லாவற்றையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்கிறோம் என்பது பொதுக் கருத்து

இப்படிப் பார்க்கும் போது இறைவனை தோஷங்கள் எதுவும் தாக்காது, அவன் சர்வ வல்லமை படைத்தவன் என்று நாம் மதிக்கிறோம் என்று தோன்றினாலும், நாம் செய்வது சரியா என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது, ஏனென்றால் என் தாயார் குளித்து சுத்தமாக தன் கையாலே சமைத்த உணவுப் பொருட்களை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகே எங்களுக்கு அளிப்பார்கள், அது வரை என்னதான் பசித்தாலும் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்னும் வழக்கத்தை எங்களிடையே விதைத்தார்கள்

அந்த வழக்கத்தினால், பசித்திரு ,தனித்திரு,விழித்திரு என்று விவேகானந்தர் கூறிய என்னும் மூன்று சொற்களின் பயன் என்னவென்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, நல்ல வேளை என் மனைவியும் அதே வழக்கத்தை கடைப்பிடிக்கிறாள்

ஆனால் புதியதாக திருமணம் ஆன என் மகள் சமைத்துக் கொண்டிருக்கும் போது அவள் சமைக்கும் ஒவ்வொரு உணவுப் பண்டத்தையும் முதலில் கொஞ்சம் ருசிபார்த்துவிட்டு வைப்பதைப் பார்த்து அவளிடம் கேட்டேன், முதலில் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யாமல் இதுபோல நீ ருசித்துப் பார்க்கிறாயே இது நியாயமா என்று கேட்டேன்

அதற்கு அவள் சாமர்த்தியமாக என்னிடம் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது, அப்பா நானே சமையல் கலைக்கு புதியவள் ஏதோ ஒரு தைரியத்தில் சமைக்கிறேன் ,அதன் ருசி சரியில்லாமல்,என் கணவருக்கு அளிப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை,நாம் மரியாதை அளிக்க நினைப்பவருக்கு பதமான சுவையோடு கூடிய குற்றமில்லாத உணவை அளிப்பதுதானே நியாயம்அதனால்தான் நான் ருசித்து விட்டு அந்த உணவுப் பொருட்களில் இருக்கும் குறைகளைக் களைந்து சுவையாக மாற்றி பிறகு அவருக்கு அளிக்கிறேன் என்றாள்,

சாதாரண மானுடப் பெண்ணிற்கே தான் காதலிக்கும் தன்  கணவன் மேல் உள்ள மரியாதையாலும் தன்னுடைய அக்கரையினாலும் கணவனுக்கு எந்த விதத்திலும் ஒரு குறையும் வந்துவிடக் கூடாது என்று , தான் ருசி பார்த்துவிட்டு குற்றம் களைந்து பிறகு கணவனுக்கு அளிக்கவேண்டும் என்னும் நல்லெண்ணம் இருக்கிறதே!!

அப்படியானால் ஆண்டாள் எப்படியெல்லாம் அரங்கனை போற்றி இருப்பாள் என்று நினைக்கையிலே மனம் தழுதழுக்கிறது,

ஆத்மார்த்தமாக காதலித்து, பக்தி செய்த அடியவர்களான ஆழ்வார்கள் இறைவனை, மூலப்பொருளை எவ்வளவு உயர்வாக வைத்திருந்தார்கள், என்பதைக் காட்டும் இலக்கியங்கள் நமக்கு பக்தியை உணர்த்துகின்றன,

தான் கடித்துப் பார்த்துவிட்டு குற்றம் நீக்கி ஸ்ரீராமனுக்கு  வண்ணமாகவே ,சபரி அவைகளை அளித்தாள் என்பதில் வியப்பேதுமில்லை, குற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது,

இச்செய்கை சபரியின் அளவிடமுடியாத பக்தியைக் காட்டுகிறது,

அனைவரும் என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தும் ,நம் வீட்டுக்கு வா கண்ணா ,என்று பக்தியுடன் அழைத்த விதுரரின் அழைப்பை ஏற்று, அவர்தம் குடிலுக்கு சென்ற பகவான் கிருஷ்ணனைக் கண்ட விதுரர் தன்னை மறந்த நிலையில் வாழைப்பழத் தோல்களை கிருஷ்ணனுக்கு அளித்து பழத்தை கீழே போட்டுவிட்டு நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் வழிய பரவச நிலையிலிருந்த விதுரரின் நிலையை எண்ணிப்பார்த்து பரவசமடைந்தேன், அப்படி பக்தியோடு அடியவன் அளித்த பழத்தோல்களை சற்றும் முகம் சுளிக்காமல், திருப்தியோடு உண் வெண்ணையுண்ட வாயன் கிருஷ்ணனின் லீலை நம்மை வியக்கவைக்கிறது,

சுய நிலை அடைந்து பதறிப்போய் தான் செய்த தவறுக்கு வருந்தி விதுரர் பூரண உணர்வோடு பழத்தை அளித்த போது அதை மறுத்து, தன்னை மறந்த நிலையில் விதுரர் அளித்த வாழைப்பழத்தோலே தனக்கு உவப்பானது என்று அருளி, அடியவர்களின் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குணர்த்திய கிருஷ்ணனின் லீலையை அனுபவிக்கிறோம்,

அப்படி இருக்க ஸ்ரீரங்கன்  மேல்பக்தியும் , அளவிடமுடியாத காதலும் கொண்ட ஆழ்வார் ஆண்டாள் திருவரங்கனுக்கு எந்த ஒரு தீங்கும் வந்து விடக் கூடாது என்று எண்ணம் கொண்டதால்தானோ தான் சூடி மாலை அவனுக்களித்தாளோ என்று தோன்றுகிறது

என்னதான் பெரியாழ்வார் பக்தியோடு சுத்தம் செய்த மலர்களைக் கொண்டு மாலை கட்டி இருந்தாலும் அம்மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சற்றும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து பிறகு ஸ்ரீரங்கனுக்கு அளிக்கலாமே என்னும் எண்ணத்தால் தான் சூடி மாலை தந்தாளோ கோதை என்று தோன்றுகிறது

இன்னமும் அந்த மாலைகளில் ஏதேனும் குற்றம் இருந்து விடப் போகிறதே,அந்தக் குற்றங்கள் தன்னை பாதித்தாலும் பரவாயில்லை, அரங்கனைப் பாதித்து விடக்கூடாது, அதனால் குறைகளைக் கண்டுணர்ந்து களைய வேண்டுமே என்று நினைத்து குறை ஒன்றுமில்லாத கோவிந்தனுக்கு குறை களைந்து தான் சூடி மாலைதனை அளித்தாளோ ஆண்டாள் என்று தோன்றுகிறது

ஸ்ரீரங்கனுக்கு ஆண்டாள் ஆழ்வாரா,இரண்டறக் கலந்த பாகம் பிரியாளா, அல்லது தாய்மையோடு கூடிய பாசத்தோடு கூடிய தாயாகவும் ஆனாளோ ஆண்டாள்

அவன் மடியில் தழும் சேயாகவும் ஆனாளோ ஆண்டாள்

அடடா என்னே பெரியாழ்வார் கண்டெடுத்த சின்னாழ்வார் ஆண்டாளின் பெருமை..?

அதனால்தான் தாய்க்குப் பின் தாரம் என்னும் சொல்வழக்கு ஏற்பட்டதோ என்று தோன்றுகிறது

அன்புடன்

தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திவாஜி

unread,
Oct 27, 2014, 5:52:37 AM10/27/14
to mint...@googlegroups.com

2014-10-27 11:45 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கைதை  என்பதற்கும் கேதகி என்பதற்கும்
​​

​கய்தே தானே? 

Nagarajan Vadivel

unread,
Oct 27, 2014, 6:26:11 AM10/27/14
to மின்தமிழ்
சிங்கப்பூர் வானொலியில் தாழம்பூ பற்றி

இனா பனா அனா

2014-10-27 11:40 GMT+05:30 Krishnan S <krishna...@gmail.com>:

N. Ganesan

unread,
Oct 27, 2014, 10:47:38 AM10/27/14
to mint...@googlegroups.com, vallamai, thami...@googlegroups.com, housto...@googlegroups.com

On Sunday, October 26, 2014 11:15:40 PM UTC-7, தேமொழி wrote:

///
சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை.  கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே  தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. 
///

கைதை  என்பதற்கும் கேதகி என்பதற்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தோன்றுகிறது...

ஆம். கைதை என்பது அடிப்படையில் நீர்ப்பாங்கான சதுப்பு நிலம், வயல் (பிங்கலந்தை).
மணல் மேட்டுகளில் இன்னும் ஏராளமாக வளர்வது. பாலன், பாலகன் என்று
கப்பிரத்யம் பெறுவது போல, கைதை (சதுப்புநிலம்) வளரும் தாழை கைதகை என்று
அழைக்கப்படுகிறது. கைதை என்றால் சதுப்பில் வளரும் ஒரு மரத்துக்கும் பேருண்டு.
கைதகைக்கு என்ன மூலம் என்று பார்த்து கேதகை என்றும் ஒரு பெயர் ஏற்பட்டுள்ளது.
கேதகைமுனிவார் வெங்கைவாணர் (வெங்கைக் கோ. 319). தாழம்பூ
பற்றி லிங்கோற்பவ புராணத்தில் சைவக்கதை ஒன்றுண்டு. அதனால் தாழை மலர்
சிவனுக்கு ஆகாது என்ப. முதலில் - தேவார காலத்தில் - ஆத்தி சிவன் திருமேனியில் 
இல்லை (தீர்த்தங்கரருக்கு மலர் அது), பின்னால் சோழன் குலப்பூ ஆனதால் ஏறியிருக்கிறது
என ஓம்சக்தி 2014 தீபாவளி மலர், ஜெர்மனி ஹம்நகர தமிழ்மாநாடு கட்டுரையில் ஆராய்ந்துள்ளேன் -
அதுபோல, இன்றும் தாழை சிவனுக்கு இல்லை. இனி மாறலாம்.

நீண்ட கால நண்பர் சிங்கை கிருஷ்ணன் ஐயா இவ்விழையை வளர்த்தெடுக்க முன்வந்திருப்பது
மக்ழிச்சி. முன்பொருமுறை ஆண் பனை (ஏற்றை), பெண் பனை (பெண்ணை) பற்றி
எழுதியபோது பாரிஸ் தமிழறிஞர் ஃழான் தாழையிலும் பால்பாகுபாடு இருப்பது பற்றியும்,
அதைப் பற்றி எழுதுக என்றும் இங்கே கூறினார். அப்போதே எழுத நினைத்தேன். இன்னும் செய்யலை.
எப்போதும் பார்ப்பது: அனந்தராமையரின் அருமையான கலித்தொகைப் பதிப்பு.
தாழை பற்றி அங்கே பார்க்கவும். டிவிஏ-வில் உண்டு. யாராகிலும் தரலாம்.

தாழை இருக்கா-னு அரிசோனன் கேட்கிறார். நிறை இருக்கு. 
ஹுட்ஹுட் பறவை தமிழில் (1) கொண்டைலாத்தி (2) எழுத்தாணிக்குருவி என்றும்,
க்ரௌஞ்சம் (1) < கரிஞசம் (2) அன்றில் என்றும் அதன் வண்ணத்தால் இரு பெயர்கள்
பெற்று தமிழில் வழங்குவது போல,
ஸ்க்ருபைன் (1) தாழை (2) கைதை (> கேதகை) என்னும் பெயர்களால் தமிழில் 
வழங்கிவருகிறது.

சிங்கை கிருஷ்ணன் ஐயா சொன்ன நாடோடிமன்னன் பாட்டு மாத்திரம் தனியாக
யுட்யூபில் இருக்கிறதா? எந்த மணி, நிமிஷம் முழுப்பட யுட்யூபில் வருகிறது? - என சொல்லமுடியுமா?

மலையாளிகளுக்கு தாழை இன்றும் கைதை தான்.

பிற பின்!
நா. கணேசன்

தேமொழி

unread,
Oct 27, 2014, 11:24:05 AM10/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Monday, October 27, 2014 7:47:38 AM UTC-7, N. Ganesan wrote:

சிங்கை கிருஷ்ணன் ஐயா சொன்ன நாடோடிமன்னன் பாட்டு மாத்திரம் தனியாக
யுட்யூபில் இருக்கிறதா? எந்த மணி, நிமிஷம் முழுப்பட யுட்யூபில் வருகிறது? - என சொல்லமுடியுமா?
 
Krishnan S

unread,
Oct 27, 2014, 9:34:58 PM10/27/14
to thami...@googlegroups.com, mint...@googlegroups.com
அன்பார்ந்த திரு,நா. கணேசன் அவர்களுக்கு,
மிக்க நன்றி தங்க்ளின் இனிய நினைவலைக்கு.

https://www.youtube.com/watch?v=H6ADyXXtfn4#t=11432
இந்த சுட்டியில் மூன்று மணி நேர “ நாடோடி  மன்னனை ‘’ கண்டு களிக்கவும்.
சமீபத்தில் M G R -ன் பழைய பேட்டினை ஒன்றினை செவியுற்றேன்.
அதில், படம் வெற்றி பட்டால் நான் மன்னன்..., தோல்வி அடைந்தால் நாடோடி’’’ என்பார்.
படத்தினை கண்டு மகிழவும்
அன்பொடு,
கிருஷ்ணன்
சிங்கை

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 27, 2014, 9:47:13 PM10/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
பாட்டு வரிகள்:

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Oct 27, 2014, 11:21:44 PM10/27/14
to mint...@googlegroups.com, vallamai

On Sunday, October 26, 2014 10:45:41 PM UTC-7, tsparu2001 wrote:
மின்னல் கண்டு தாழை மலர்வதாகச் சொல்வதை கவிமரபு, என்று சொல்வதும் உண்டு. வைரமுத்து, 'மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்' (பாடல்: வெள்ளி மலரே..படம்:ஜோடி), என்றும், விவேகா "மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட" (பாடல்: இப்பவே இப்பவே..படம்: ராமன் தேடிய சீதை (சேரன் நடித்தது)  என்றும் எழுதியிருக்கிறார்கள்.

 திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பி, " கொண்டல் கொண்டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறும் கண்டல்வெண் சோறளிக்குங்கடற் காழி" என்று சீர்காழியைக் குறிக்கிறார். கவி காளிதாசனும் இந்த உவமையை மேகதூதத்தில் கையாண்டிருக்கிறார்.

சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை.  கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே  தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. மதுரை ஸ்பெஷல் தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றது. அர்ச்சனைக்கு இதை உபயோகப்படுத்துவது வழக்கம்.

எஸ். ராமச்சந்திரன் சொல்கிறார்:
அபாம் நபாத் எனப்பட்ட மின்னல் கொடியின் ஒளியில் காட்டு மலர்கள் மலர்வது இயல்பு. குறிப்பாக, மின்னல் ஒளி பட்டுத்தான் தாழை மடல் விரியும். மின்னலைக் குறிக்கும் கேது என்ற சொல்லுடன் தொடர்புடையதே "கைதை" என்ற சொல்லாகும். சமஸ்கிருதத்தில் கேதகி என்றும், மராட்டி மொழியில் கேட்கி என்றும் இச்சொல் வழங்கும். ”

கேது என்றால் மின்னல் என்ற பொருள் வடமொழியில் இல்லை. கைதை சதுப்புநிலம். கைதகை (= தாழை)
கண்ணகம் தாமரைப் பொகுடு. அதிலிருந்து கண்ணகை கண்ணகி ஆதற்போல், கைதகை கைதகி (கேதகி).

நா. கணேசன்

மேகதூதத்தில் மின்னல் கண்டு தாழை மலரும் என்றுள்ளதா?? காளிதாசருக்கு பல தமிழ் மரபுகள் தெரியும்.

Suba.T.

unread,
Oct 28, 2014, 3:26:18 AM10/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
இந்த இழையின் தலைப்பைப் பார்த்ததால் கேட்கிறேன்..

யாராவது அபூர்வ ராகங்கள் முழு திரைப்படத்தை நெட்டில் பார்த்தால்  எனக்கு லிங் அனுப்பி வைக்கவும். 

நன்றி
சுபா

N. Ganesan

unread,
Oct 28, 2014, 7:35:55 AM10/28/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

On Tuesday, October 28, 2014 12:26:18 AM UTC-7, Suba.T. wrote:
இந்த இழையின் தலைப்பைப் பார்த்ததால் கேட்கிறேன்..

யாராவது அபூர்வ ராகங்கள் முழு திரைப்படத்தை நெட்டில் பார்த்தால்  எனக்கு லிங் அனுப்பி வைக்கவும். 
 
அபூர்வ ராகங்கள் (1975) - முழுத் திரைப்படமும் இங்கே காணலாம்.
 
(அல்லது)
 
(அல்லது)
 
நா. கணேசன்
 
நன்றி
சுபா

Dev Raj

unread,
Oct 28, 2014, 7:51:50 AM10/28/14
to mint...@googlegroups.com
On Monday, 27 October 2014 20:21:44 UTC-7, N. Ganesan wrote:
கேது என்றால் மின்னல் என்ற பொருள் வடமொழியில் இல்லை. 

ஒளி, தழல் எனும் பொருள் உண்டு  -

केतु [ ketu ] bright appearance , clearness , brightness ,lamp , flame , torch 

தேவ் 

N. Ganesan

unread,
Oct 28, 2014, 7:54:31 AM10/28/14
to mint...@googlegroups.com
yes. but not lightning.
 
தேவ் 

Suba.T.

unread,
Oct 28, 2014, 8:02:16 AM10/28/14
to N. Ganesan, Subashini Tremmel, மின்தமிழ்
​நன்றிங்க.

சுபா
 
நன்றி
சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
N. Ganesan

unread,
Oct 29, 2014, 8:31:15 AM10/29/14
to mint...@googlegroups.com

On Sunday, October 26, 2014 10:45:41 PM UTC-7, tsparu2001 wrote:
மின்னல் கண்டு தாழை மலர்வதாகச் சொல்வதை கவிமரபு, என்று சொல்வதும் உண்டு. வைரமுத்து, 'மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்' (பாடல்: வெள்ளி மலரே..படம்:ஜோடி), என்றும், விவேகா "மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட" (பாடல்: இப்பவே இப்பவே..படம்: ராமன் தேடிய சீதை (சேரன் நடித்தது)  என்றும் எழுதியிருக்கிறார்கள்.

 திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பி, " கொண்டல் கொண்டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறும் கண்டல்வெண் சோறளிக்குங்கடற் காழி" என்று சீர்காழியைக் குறிக்கிறார். கவி காளிதாசனும் இந்த உவமையை மேகதூதத்தில் கையாண்டிருக்கிறார்.

சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை.  கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே  தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. மதுரை ஸ்பெஷல் தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றது. அர்ச்சனைக்கு இதை உபயோகப்படுத்துவது வழக்கம்.

வரலக்ஷ்மி விரத பூஜையில் தாழை மலர் கண்டிப்பாக இடம் பெறும். பூஜை நிறைந்த பின், மறு நாள் மாலை, பூஜையில் வைத்த தாழை மலரைக் கொண்டு எங்களுக்கு ஜடை பின்னுவார்கள். பொட்டி ஜடை (தாழை மடல்களை உட்புறமாக மடக்கி வைத்து ஜடையில் தைப்பது), கத்தி ஜடை (மடல்கள் வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருக்குமாறு வைத்துத் தைப்பது) என்று ஜடையில் இருவகைகள் உண்டு. அம்மன் அலங்காரத்தின் போதும் இம்மாதிரி சவுரி முடியில் தைத்து கலசத்தின் பின்புறம் வைத்து அலங்கரிப்பது வழக்கம்.

பொத்திச் சடை, கத்திச் சடை என்று நாட்டுவழக்கில் பூக்கட்டிப்பண்டாரங்கள் சொல்வது. பொத்தி வைத்தல் - மடக்கிப் போர்த்திவைத்தல்.
கத்திச்சடை பற்றிய நாட்டார் பாட்டு ஒன்று:
காட்டு நெமிலி என்னும் ஊரில் களப்பயணத்தில் கிடைத்ததாம்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages