“தமருவெட்டத் தூண் நிறுத்தி” ?
’தருவெட்டித் தூண் நிறுத்தி” என்பதோ?
நா. கணேசன்
On May 9, 12:50 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> கண்ணதாசன் புத்தகங்களில் (அவர் சினிமாப் பாடல்கள் தவிர்த்தவை) அடிக்கடி இத்தகைய
> பாடல்களை செட்டிநாட்டுத் தாய்க்குலம் தாங்களாகவே தமிழ் பாடுவதாகவும் அதைவிட
> சிறந்த தமிழை கேட்டறியேன் என்று எழுதுவார்.
>
செட்டிநாட்டுத் தாலாட்டுப் பாடல்கள் தொகுப்புகள் சில வெளியாகியுள்ளன.
பல்கலைக்கழகங்களில் சில ஆய்வேடுகளும் உள்ளன. தமிழண்ணல் (பேரா., மதுரை)
சில நூல்களை எழுதியுள்ளார். நெற்குப்பை அவர் ஊர். சோமலெ அவர்களும்
எழுதினார்.
இருவரும் ஒரே ஊர், தாயாதிகள்.
நா. கணேசன்
கவியரசர் தயாரித்து வெளியிட்ட சிவகங்கைச் சீமை படத்தில் இந்தக் கருத்தை
முன்வைத்து ஒரு நெகிழ வைக்கும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது.
அதே வகையில், இங்கே தாலாட்டுப் பதிவுகளில், பல ஏற்கெனெவே
அறிந்திருந்தாலும், இங்கே ஆச்சியின் சொந்த வார்த்தைகளும் சேர்ந்து ஒரு
புதிய சுவையைத் தாங்கி இருப்பதைப் பார்த்தேன்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
கணவன் வெளிநாட்டில் உள்ளான்;
மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள்
கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு
இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!!
இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக
அமைத்துள்ளேன்!
பெண்:
அழகிய கண்விருந்தே, அம்மாவின் அருமருந்தே
அணைச்ச கைய உதறாம, பிடிச்சுகிட்ட கண்ணுறங்கு..!
அக்கரைப் பச்சையின்னு அவசரமாப் போனவரே
அக்கரை இருந்தும் அக்கரையில் என்ன செய்வீர்?
ஆண்:
இன்பம் தந்த அற்புதமே, அப்பனுக்கு அச்சரமே
இலமறவு காய்மறவா இருக்குதடீ எந்தன் பணி
இக்கரைப் பச்சையின்னு இங்கு வந்த அப்புறந்தான்
இனிக்கப் பேசி இடித்துரைப்பார் எப்படின்னு நானறிஞ்சேன்!
பெண்:
உமக்கென்ன மகராசா குளிர்வசதி மச்சுவீடு
உய்யாரமாயுலவ உயர்தர பிளைமூத்தூ!
உக்கார்ந்து சாப்பிடவே உயர்ந்த ரகம் நாக்காலி
உலகம் மறந்திடவே ஒரு சாண் சொகுசு மெத்தை
ஆண்:
உண்மையை நானுரைச்சா, உன் தூக்கம் போகுமடி
உசுரிருந்தும் இல்லாதான் போல ஒரு வாழ்க்கையடி
உள்ள தள்ளும் உணவெல்லாம் உழைச்சு நான் பணிசெய்ய
உன்ன காண வாரையிலே, உன்னதப் பொன் சேர்த்திடவே..
பெண்:
புள்ள பேரு வெக்கையிலே, சோறூட்டும் போதினிலே
அள்ளிக் கொஞ்ச வாராம அய்ய என்ன வேலையதோ
தெள்ளுதமிழ் பேசுதய்யா, மழலை மழை பெய்யுதய்யா
கொள்ளையழகு காணவாச்சும் எப்போநீ வாரீக?
ஆண்:
காலையெது மாலையெது எக்கணமும் தெரியாம
வேலையொண்ணே வேதமென வேதனைகள் நான்மறந்து
லீலைசெய்யும் மாயமது கைநிறையக்காசிருந்தா
சோலையாகும் நம்வாழ்வு சொல்லிடுவேன் சத்தியமா
பெண்:
காசுமட்டும் போதாது கடுதாசு நிதம் போடுமய்யா
காதல்மட்டும் மாராம கவலைகள் ஏறாம
கானலிலே கால் பரப்ப கனிவுடனே போனமாமன்
கணநொடியில் வந்திடுவான் கண்மணியே கண்ணுறங்கு
ஆண்:
ஊர்பேச்சு கேக்காத, உடன்பிறந்தார் ஏசாத
உண்மையன்பு உள்ளமட்டும் உலகமது நம்ம கையில்
உயிர் உனையே உள்ளவெச்சு உமிழ்நீர் பருகிவர்றேன்
உடன் இருக்க ஓடிவர்றேன், பாப்பாகிட்டச் சொல்லிவெய்யி!
அடக்கமாக ஏதாவது செய்து கொண்டு இருப்பவர் நீங்கள். இப்படியொரு வலைப்பூ
உருவானதே இப்போதுதான் அறிந்தேன். பேத்திக்குப் பரிசு போலும்!
த.ம.அ `குரல்வளை` எனும் திட்டம் வரைந்து தமிழ் வட்டார வழக்கை, குரல்
பதிவாக்கியபோது மீனா செட்டிநாட்டு வழக்கைப் பேசி அனுப்பினார்.
அதே போல் இத்தாலாட்டுப்பாட்டையும் ஒலிப்பதிவு செய்து அனுப்பினால் நல்ல
சேகரமாக அமையும்!
ஆமாம், இப்பாடலில் வரும் `தளிகை` என்பது `சாப்பாடு` என்ற பொருளில்தானே
வருகிறது?
கண்ணன்
On May 9, 10:24 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> மீனா,
>
> இந்தப் பாடலை உங்கள் குரலிலேயே வாசித்து( /பாடி) அனுப்பி வையுங்களேன். மண்ணில்
> குரலில் பதிவு செய்து வைக்கலாம்.
>
> அன்புடன்
> சுபா
>
> 2009/5/9 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > அழகான தாலாட்டு - மீனா முத்து அவர்களே!
> >http://thalatu.blogspot.com/2009/05/blog-post.html- Hide quoted text -
>
> - Show quoted text -
தாலாட்டு மிக அருமை!
பிளைமூத்தூ! = Plymouthஆ? எங்களூரில் கண்ணிலேயே காண்பதில்லை.
ஆனால் இந்த செட்டிநாட்டுப் பெண் தானறிந்ததைச் சொல்லுகிறாள்.
அப்படித்தானே!
இப்படி ஒண்ணு சேத்துக்கலாமா?
ஆண்:
உய்யாரமாயுலாவ பிளைமூத்தும் பார்க்கவில்லை
உக்காந்து சாப்பிடவோ ஒரு நிமிஷ நேரமில்லை.
உள்ளதுவோ கைப்பெட்டி உடுத்துவது முழவேட்டி
உருக்குலைந்து போகுதடி உன்நினைவில் என்னுடம்பு.
ரெ.கா.
On May 10, 1:08 am, Chandra sekaran <plasticschan...@gmail.com> wrote:
> புலம்பெயர்ந்த தமிழர் தலைப்பில் ஒரு போட்டி இணையத்தில் வந்திருந்தது. ஒரு
> தாலாட்டு இயற்றி அனுப்பிவைத்தேன். பரிசும் அறிவிக்கவில்லை, செய்தியும் வெளி
> வரவில்லை. அந்தப் பாடல்:
> *புலம் பெயர்ந்த தமிழனின் தாலாட்டு*
> *சூழ்நிலை:*
>
> கணவன் வெளிநாட்டில் உள்ளான்;
> மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள்
> கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு
> இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!!
> இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக
> அமைத்துள்ளேன்!
>
> *பெண்:*
| |||
-------Original Message------- | |||