அன்புள்ள பானுகுமார் அவர்களுக்கு,
தேவாரத்தில் ,
அதாவது மூவர் முதலிகள் எனப்படும் அப்பர் சம்பந்தர் சுந்தரர்
அருளிய (கிடைத்து பண்ணமைக்கப் பட்டவை = choreographed + பிற்சேர்க்கைகள் )
799 பதிகங்களில் (386 + 313 + 100 = 799)
8274 பாடல்கள் (4180 + 3068 + 1026 )
இவைகளில் ஐந்து முகம் எனும் கருத்து காணவில்லை
ஆனால்
ஐந்து தலை நாகம் (பார்சுவனதர் தொடர்புடன் உள்ளது போல்)
சிவன் தொடர்புடன் நூற்றுக்கனகான பாடல்கள் உள்ளன
மேலும்
பிரமனுக்கு 5 தலைகள் இருந்து அதனில் ஓர் தலையை சிவா பெருமான்
கிள்ளியதாக 2 ஆசிரியர்கள் பாடிய 3 பாடல்களில் உள்ளன கீழே காண்க
கறுத்தான் கனலால் மதில் மூன்றையும் வேவச்
செறுத்தான் திகழுங்கடல் நஞ்(சு) அமுதாக
அறுத்தான் அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்
பொறுத்தானிடம் பூம்புகலிந்நகர் தானே 1.30.7 திருப்புகலி சம்பந்தர்
சங்கரன்காண் சக்கரமாற்(கு) அருள்செய்தான் காண்
தருண் ஏந்து சேகரன் காண் தலைவன்தான் காண்
அங்கமலத்(து) அயன்சிரங்கள் ஐந்தில் ஒன்றை
அறுத்தவன் காண் அணிபொழில்சூழ் ஐயாற்றான் காண்
எங்கள்பெருமான் காண் என் இ¢டர்கள் போக
அருள் செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும்
செங்கமல வயல் புடைசூழ் திருவாரூரில்
திருமூலத்தானத்(து) எம் செல்வன் தானே 6.30.6 திருவாரூர் / அப்பர்
ஆதியனை எறிமணியின் ஓசையானை
அண்டத்தார்க்(கு) அறிஒண்ணா(து) அப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச்
சுரும்(பு) அமரும் மலர்க்கொன்றைத் தொல்நூல் பூண்ட
வேதியனை அறம் உரைத்த பட்டன் தன்னை
விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்
சேதியனைத் திருஆனைக்கா உளானைச்
செழுநீர்த் திரளைச் சென்(று) ஆடி னேனே 6.63.7 திருஆனைக்கா / அப்பர்
-அறிவீர்கள் ஏழூர்கள் (சப்தஸ்தனத் தலங்கள் = திருவையாறு+6) எனவும்
சிவன் தன எட்டு வீரச்செயல் தொடர்புடன் அட்ட வீரட்டம் எனும் தொகையிலும்
காணும் திருக்கண்டியூர் இந்த பிராணம் தலை கொய்த வீரச் செயலுடன் காட்டப்படுகின்றது
மேலும்
எட்டாம் நூற்றாண்டு மாணிக்க வாசகர் அருளிய திரு வாசககீர்த்தித் திருவகலில்மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 18
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும்
-----------------------------------
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே 10.708
பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம் ஐந்து முக்கண் முகம்தொறும்
நாகம் உரித்து நடம் செய்யும் நாதர்க்கே 63
ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
அம்முத லாகி அவர்க்குஉடை யாள்தனை
மைம்முத லாக வழுத்திடு நீயே 10.1334
வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே 10.1731
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில்
உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம்
அத்தரு கோரம் மருடத்துஈ சானனே 10.1741
மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே 10.1776
சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
நவம்அவை யாகி நடிப்பவன் தானே 10.1807
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயைiல் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே 10.2419
மணிவாசகர் அருளிய திருவாசகம்
8.2 கீர்த்தித் திரு அகவல்
தில்லையில் அருளியது- நிலைமண்டில ஆசிரியப்பா
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5
என்னுடை இருளை ஏறத்துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10
கல்லா டத்துக் கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15
விராவு கொங்கை நல்தடம் படிந்தும்
கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும் 20
நந்தம் பாடியில் நான் மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்
வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசை
- - - - - - - -
- - - - - - - -
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்ந்திட் டம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய
அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி
காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் 20
பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்
காணினும் கேட்பினும் கருதினுங் களிதரும்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர 25
- - - - - - - -
- - - - - - - - பட்டினத்துப் பிள்ளையார்
திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி