Re: வேளாண் மரபுகள்

516 views
Skip to first unread message
Message has been deleted

தாரகை

unread,
Mar 5, 2010, 4:09:34 PM3/5/10
to மின்தமிழ்
மின்தமிழ் அரங்கத்தில் (மோகன) அழகுச் சேர்க்கும் அரங்கனாரின் மரபுச்
செய்திகளின் வழியில் நம் விழியிருக்கும்:-)

> தொடங்கி வைத்து நாம், பலரும் சேர்ந்து பேசுவோம்.

N. Kannan

unread,
Mar 5, 2010, 9:17:03 PM3/5/10
to mint...@googlegroups.com
ம்ம்ம்ம்..நீரும்தான் எப்படியோ மின்தமிழை `நித்ய` ஈர்ப்பிலிருந்து மற்ற
முயல்கிறீர்கள்;-) பதப்படுத்தப்பட்ட உள்ளம் வளமடல் சார்ந்தே உலாவுகிறது,
என்ன செய்ய? கோடி, கோடி ஜென்ம வாசனை :-))

வேணாண்மை ஒரு சுவாரசியமான துறை. கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் பண்டைய
விவசாய முறை இயற்கை சார்ந்து `சுழற்சி` முறையில் அமைந்திருப்பதைக்
காணலாம். எத்தனையோ கோடி நூற்றாண்டுகளாக இயற்கை `தன்னைத்தானே`
தளிர்பித்துக்கொள்ளும் முறையை அறிந்து வைத்திருக்கிறது. நேஷனல்
ஜியாகிரபிஃக் பார்த்தால் புரியும். உணவுச் சுழற்சி என்பது எவ்வளவு
நுணுக்கமான முறை என்று.

ஆனால் இப்போதுள்ளது அவசர விவசாயம். இயற்கை தளிர்பிக்க அவகாசம்
கொடுக்காமல் உரமிட்டு வேளாண்மை செய்வது. உரங்கள் செயற்கை வேதிமங்கள்
என்பதால் வழிந்தோடும் நீர், ஏரி, குளம், கடல் என்று சேரும் நீரையும்
உரமிட்டு தேவையில்லாத பாசிப்பெருக்கத்தை உருவாக்கி, மீன்களுக்கு உயிர்வளி
இல்லாமல் செய்து கொன்று பல்வேறு வேண்டாத ஊறுகளைச் செய்கின்றன. இதை
உரவளமிடுதல் என்பர் (eutrophication).

ஜப்பானில் ஒருமுறை One Straw Revolution என்ற தத்துவார்த்த வேளாண்மை நூல்
எழுதிய Fukuoka Masanobu ஐ பார்த்து வந்தேன்
[http://en.wikipedia.org/wiki/Masanobu_Fukuoka]. அவர் இயற்கை
சுழற்சியைப் பயன்படுத்தி உரமில்லாமலே அதிக நெல் மகசூல் செய்து
காட்டினார்.

நம்ம ஊரில், சோழர் காலத்திற்கு ஏன் போக வேண்டும்? செங்கல்பட்டு
மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்ட மகசூலை நாம் இன்னும்
எட்டவில்லை! எப்படி என்று கேட்கிறீர்களா? எல்லாம் ஓலைச்சுவடி சேதிதான்.
ஆங்கிலேயர்கள் அத்தனை வருவாய்துறை சேதிகளையும் பனை ஓலையில் எழுதி
வைத்துவிட்டுப் போயிருக்கின்றனர்!

கண்ணன்

2010/3/6 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> அதில்   சிந்திக்க  வைக்கும்  ஒரு  கருத்து  -- இப்பொழுது   தமிழ்  நாட்டில்
> சராசரி  நெல்  விளைச்சல்   ஏக்கருக்கு    1400 கிலோவாம்.    இத்தனைக்கும்
> ரசாயன  உரங்கள்  யூரியா,   டிஏபி   பொட்டாஷ்  எண்டோசல்பான்   எல்லாம்
> போட்டு  வதக்கி  வர   விளைச்சல்.     கரிகால்  சோழன்  காலத்தில்   இந்த
> ரசாபாசம்  எல்லாம்  கிடையாது.    இயற்கை   உரங்களே    முழுக்க  முழுக்க.
> அனால்   விளைச்சல்    எவ்வளவு  தெரியுமா?     ஏக்கருக்கு    4883  கிலோ.
>

N. Ganesan

unread,
Mar 5, 2010, 10:09:39 PM3/5/10
to மின்தமிழ்

On Mar 5, 3:09 pm, தாரகை <thara...@gmail.com> wrote:
> மின்தமிழ் அரங்கத்தில் (மோகன) அழகுச் சேர்க்கும் அரங்கனாரின் மரபுச்
> செய்திகளின் வழியில் நம் விழியிருக்கும்:-)
>

மோகனரங்கரே,

பரம்பரையான வேளாண்மை எங்கள் குலத்தொழில்.
படிக்க இன்பமாக உள்ளது.

நன்கு தொடருங்கள்,
நா. கணேசன்

devoo

unread,
Mar 5, 2010, 10:13:58 PM3/5/10
to மின்தமிழ்
நல்ல இழை; கேரளீயர்கள் மின் குழுமம் அமைத்து வேளாண்மையை அலசுகின்றர்;
நமக்கு நடிகையரின் அங்கலாவண்யத்தை அலசவே நேரம் போதவில்லை; பிற மொழிகளை
ஏசித் தமிழ் வளர்த்தாக வேண்டிய பெரும்பொறுப்பு வேறு சேர்ந்து கொள்கிறது.

இயற்கை வேளாண்மைக்கு பூமி மறுபடியும் பக்குவப்படுவது உடனே நிகழ்ந்து
விடாது; அரசு முனைந்து மானியம் போன்ற ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும்.

அரசின் பொறுப்பின்மை, சந்தைப் படுத்துவதில் சிக்கல், ஆள் பற்றாக்குறை
போன்ற பல காரணங்கள் வேளாண்மையில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. ஊரகப்
பகுதிகளில் முன்பு விளைபொருள் பற்றிப்பேசுவர்; மழை, நீர்வரத்து இவைகளைச்
சுற்றிப் பேச்சு இருக்கும்; தற்போது ஊர் வாரியாக பூமி என்ன விலை போகும்
என்று பேசுகின்றனர்; சூழல் உழவர்களைத் தரகர்களாக மாற்றி விட்டது. ஆயினும்
ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் இதில் ஈடுபடத் தொடங்கியுள்ளது ஆறுதல் தரும்
செய்தி

தேவ்

Selva Murali

unread,
Mar 5, 2010, 10:53:23 PM3/5/10
to mint...@googlegroups.com
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் சார்.
மிக அருமையான  இழையை ஆரம்பத்திருக்கிறீர்கள்.
சமீபத்தில் கூட ஒரு புத்தகத்தில் படித்தேன்.
இந்தியாவில் முதன் முதலாக டிராக்டர் கொண்டுவந்தபோது அதை பார்த்த காந்தியடிகள் இந்த டிராக்டர் , சாணமிடுமா என்று கேட்டிருந்தார்.
சில நேரங்களில் அடியேனும் வருந்தியது உண்டு.ஏனெனில் விவசாய நிலங்களை அரசாங்கம் பேக்டரிகள் கட்ட பிடுங்கிக்கொள்ளும் காட்சியையும் கண்டிருக்கிறேன்...
நல்ல இழை... தொடர்ச்சியாக தாங்க
அடியேனும்தெரிஞ்சிக்கிறேன்

2010/3/6 srirangammohanarangan v <ranga...@gmail.com>
>>ஊரகப்
பகுதிகளில் முன்பு விளைபொருள் பற்றிப்பேசுவர்; மழை, நீர்வரத்து இவைகளைச்
சுற்றிப் பேச்சு இருக்கும்; தற்போது ஊர் வாரியாக பூமி என்ன விலை போகும்
என்று பேசுகின்றனர்; <<
 
so  touching!    and  so   true.   It   is   pathetic.   And   do  you  know  who  buy  the  lands  mostly?:--((((

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com

srirangammohanarangan v

unread,
Mar 5, 2010, 11:07:39 PM3/5/10
to mint...@googlegroups.com
செல்வரே!    எனக்குத்    தெரிஞ்ச   அறியாமையை   சும்மா   நகாஸ்   வேலை  பண்ணி   ஆரம்பிச்சுருக்கேன்.    இந்தத்  துறையில்   நன்கு  விவரம்  தெரிந்தவர்கள்    இனிதான்  உள்  நுழைய  வேண்டும்.
 
இந்த  உண்மையை   உங்களுக்கு  மட்டும்  ரகசியமா  சொல்லியிருக்கேன்.   யார்  கையிலயும்  சொல்லிப்  பிடாதீங்க:--)))))

 

தாரகை

unread,
Mar 5, 2010, 11:25:56 PM3/5/10
to மின்தமிழ்
> நல்ல இழை; கேரளீயர்கள் மின் குழுமம் அமைத்து வேளாண்மையை அலசுகின்றர்;
> நமக்கு நடிகையரின் அங்கலாவண்யத்தை அலசவே நேரம் போதவில்லை; பிற மொழிகளை
> ஏசித் தமிழ் வளர்த்தாக வேண்டிய பெரும்பொறுப்பு வேறு சேர்ந்து கொள்கிறது.


திரு தேவ் அவர்களே, ஒரு நல்ல அறுவடையைக் காண, சில தேவையற்ற பயிர்களை
நட்டு, உழவர்கள் எப்படி தங்கள் விளைநிலத்தை செறிவூட்டுகிறார்களோ, அதுபோல
தான் இணையக்குழுமத்தில் உள்ள சில கருத்திழைகளும். ஒரு நல்ல கருத்துப்
பரிமாற்றம் மலர, சிலருக்கு முக்கியமளிக்காத இழைகள் வலம் வருவது இயல்பு.
வடுச்சொற்களாலோ அல்லது ஊக்குவிக்காதச் சொற்களை நாம் கூறுவதாலோ, அவ்வாறான
இழைகள் நிறைவடைய போவதுமில்லை. இருப்பினும், மின்தமிழ், சில நேரங்களில்
மீள் தமிழாக அருந்தொண்டாற்றி வருகிறது. அரங்கனாரின் இப்புதிய இழையிலாவது
அரசு,அரசியல்,தனித்தமிழ்,தனியார் நிறுவனங்களைச் சாடுவது என்றில்லாமல்,
இக்குழுமத்தில் உள்ள அன்பர்களால் வேளாண்மையின் பெருமைகளை அறிந்து கொள்வது
மட்டுமின்றி, வருங்காலத்தில் எவ்வாறு விளைநிலத்திற்கோ அல்லது உழவர்
பெருமக்களுக்கோ பயனுள்ளவர்களாக இருக்கவியலும் என காணலாமன்றோ!

வேளாண்மை என்றாலே விருந்தோம்பல் என்ற பொருள்ளும் உள்ளதன்றோ. அதை
பேணிக்காக்க இவ்விழை உதவிப் புரியும் என்கிற நம்பிக்கையில்.....

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

devoo

unread,
Mar 5, 2010, 11:50:32 PM3/5/10
to மின்தமிழ்
Mar 5, 10:25 pm, தாரகை

>> வடுச்சொற்களாலோ அல்லது ஊக்குவிக்காதச் சொற்களை நாம் கூறுவதாலோ,<<

இந்தக் குழுமத்தை மட்டும் கருத்தில்கொண்டு பேசவில்லை ஐயா, இணையத்
தரத்தைக் கருத்தில்கொண்டு பேசுகிறேன். நல்லதொரு தொழில் நுட்பமும், இளைய
தலைமுறையின் இணையற்ற ஆற்றலும் நாசமாகின்றன. பல்துறைத் தேர்ச்சி
மிக்கோரும் சமயங்களில் சரியான தடத்தில் வழி நடத்தத் தவறுகின்றனர்.

குழுமத் தலைவர் மாறனடியவர்; இக்குழுமமும் இணையப் போக்கிலிருந்து
மாறுபட்டிருப்பதையே விரும்புவார் என நம்புகிறேன். ஆதங்கத்தில் பேசுவது;
தவறாயின் மன்னிக்க

தேவ்

karthi

unread,
Mar 6, 2010, 12:32:47 AM3/6/10
to mint...@googlegroups.com
ரங்கன்,
 
நான் ஓராண்டுக்கு முன்பு தற்செயலாக மக்கள் தொலைக்காட்சியில் "மலரும் பூமி"
பார்த்தேன். அதன் ஈர்ப்பால் தொடர்ந்து பார்த்து வந்தேன். கடந்த சில மாதங்களாக
அந்த வழக்கம் கொஞ்சம் விட்டுப் போய் விட்டது.
 
தமிழ்நாட்டில் இயற்கை உரப் பயன்பாடு பரவலாக இருப்பது போலத்தான் அந்த நிகழ்ச்சிகள்
தோற்றம் தந்தன. ஆனால் அவற்றில் பேசப்படுபவையெல்லாம் சிறு சிறு வேளாண்மை நிலங்கள்
எனப் பின்னர் ஊகித்துக் கொண்டேன். ஆகவே பெரிய அளவில் (corporate scale) செய்யப்படும்
வேளாண்மை செயற்கை உரத்தைச் சார்ந்திருக்கலாம். அது பற்றி "மலரும் பூமி" பேசுவதில்லை.
பெருவர்த்தக நிறுவனங்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்பதனால் அவர்கள்
அந்தத் திசையில் கண் வைக்காமல் இருக்கக் கூடும். (பெரு வர்த்தக நிறுவனங்கள்
மக்கள் தொலைக்காட்சியை உள்ளே அனுமதிக்குமா என்பதும் சிந்திக்கத் தக்கது.)
 
பழந்தமிழ் இலக்கியத்தில் சொல்லப் பட்டுள்ள வேளாண்மை கருத்துக்கள் மேலே
சொன்னது போலச் சிறு சிறு தோட்டங்களுக்குப் பொருந்தி வரலாம். பெரிய அளவில்
விவசாயம் செய்யும் தேவை உள்ளபோது இந்த முறைகள் பொருந்தி வருமா என்பதில்
எனக்கு சந்தேகம் உள்ளது. அப்படிப் பொருந்தி வருமானால் - அது இலாபகரமாகவும்
இருக்குமானால் பெரு விவசாய நிறுவனங்கள் அவற்றை ஏன் மேற்கொள்வதில்லை
என்னும் மேற்கேள்வியும் இருக்கிறது. தமிழ்நாடு/இந்தியாவில் மட்டுமல்ல; மேலை
நாடுகளிலும் கூடத்தான். (காந்தியப் பொருளாதாரம் பற்றி முன்பு நடந்த உரையாடலையும்
நினைவு கூருகிறேன்.)
 
இப்போது பேரங்காடிகளில் இயற்கைக் காய் கறிகள் தனி கௌண்டரில் விற்கிறார்கள்.
அவற்றின் விலை 4/5 மடங்கு அதிகம். ஆகவே சிறிய அளவில்தான் இருக்கின்றன.
விலை பற்றிக் கவலையில்லாத சிலர் அவற்றை வாங்குகிறார்கள்.
 
வேளாண்மை பற்றி நாம் பேசும்போது இவையும் உடன் சிந்திக்கத் தக்க விஷயங்களே!
 
ரெ.கா.
 
 
----- Original Message -----
Sent: Saturday, March 06, 2010 4:02 AM
Subject: [MinTamil] வேளாண் மரபுகள்

நானும்   பொறுமையாகக்  காத்திருந்து  பார்த்தேன்.   சுகுமார்ஜி    இந்த  இழையை  ஆரம்பிப்பார்   என்று.     ஆனால்  இன்னும்  காணோம்.   இருந்தால்  என்ன ?   தொடங்கி  வைத்து  நாம்   பலரும்   சேர்ந்து  பேசுவோம்.     
 
வேளாண்  மரபுகள்   என்றால்    பல  வித    மரபு  சார்ந்த   வேளாண்  முறைகள்.    பல  நாடுகளில்    கைக்கொள்ளப்  படுபவை.   நம்  நாட்டிலேயே  இருந்து    மெல்ல  மெல்ல  காணாமல்  போனவை.    பழம்   நூல்களில்  இருந்து    நாம்  கண்டு  கொள்ளாமல்  இருப்பவை.     பகட்டும்,    மினுக்கும்   உள்ள    சினிமா  கவர்ச்சியில்   நம்  சிந்தையைப்  பறி  கொடுத்து    நமது   வேர்கள்    பதிந்து  இருக்கும்    வேளாண்  உலகத்தை   நாம்    திரும்பிக்  கூட  பார்க்காத   காரணத்தால்     அங்கு  நடக்கும்   எத்தனையோ   மாற்றங்கள்,  சாதனைகள்,   மீள்  மரபுகள்,   நசிக்கும்  பல   வழிவழி   நன்மைகள்  ---  இப்படி  எத்தனையோ    இருக்கின்றன    வேளாண்  மரபுகளைப்  பற்றி    நாம்    பேச    முடிவெடுத்தால்.  
 
இது  வரையில்    இலக்கிய  நூல்களை மட்டுமே   பார்ப்பேன்   என்று   அட்ம்  பிடிப்பவர்கள்    அப்படியே   அடம்  பிடிக்கட்டும்.   தவறில்லை.   ஆனால்  என்ன.  அவ்வப்பொழுது    வேளாண்   கருத்துகள்    காவியங்களிலும்    இலக்கிய  நூல்களிலும்   எப்படி    கையாளப்  படுகின்றன    என்று  சொல்லட்டுமே. 
 
ஒரு  சமயம்  தொடர்ந்து    வானொலியில்    வேளாண்மைச்  செய்திகள்   கலந்துரையாடல்களாகக்  கேட்டுக்கொண்டிருந்தேன்.    அப்பொழுதுதான்  தெரிந்தது    எவ்வளவு   பயனுள்ள    ஒரு   ஒலிபரப்பை,  ஒரு கல்வியை   நாம்    பரபரப்பூட்டும்   மற்ற  விஷயங்களில்   கவனத்தைச்  செலுத்தி   இழந்து   வந்திருக்கிறோம்  என்று.    இப்பவும்    அந்தக்  குறிப்பெடுத்த    நோட்  புக்  இருக்கிறது.   (உனக்கு  வேற   வேலை  இல்லையா?  என்கிறீர்களா)  
 
சமீபத்தில்    என்  நண்பர்   திரு  குருராஜ்   அவர்களிடம்   பேசிக்கொண்டிருந்த  பொழுது,  நல்லதொரு   தொழில்  முனைவோரான    அவர்   கூறினார்,  ‘சார்!    இந்த  ரசாயன  உரங்கள்   போட்டு    நம்  உணவுகளே    பாழாகி  விட்டன.   இயற்கை  உரங்கள்தான்    சரி.    இந்தப்  பாருங்க.    பசுமை   விகடன்   என்ற  இதழில்    10--10--2009ல்    முதல்வருக்கு  நம்மாழ்வார்  கடிதம்  என்ற  இந்தக்  கட்டுரையைப்  படிங்க’  என்று  கொடுத்தார்.    சங்கத்  தமிழே   பங்கம்  தவிர் -  என்ற  அந்தக்  கட்டுரை   நல்லதொரு  கட்டுரை. 
 
அதில்   சிந்திக்க  வைக்கும்  ஒரு  கருத்து  -- இப்பொழுது   தமிழ்  நாட்டில்   சராசரி  நெல்  விளைச்சல்   ஏக்கருக்கு    1400 கிலோவாம்.    இத்தனைக்கும்     ரசாயன  உரங்கள்  யூரியா,   டிஏபி   பொட்டாஷ்  எண்டோசல்பான்   எல்லாம்    போட்டு  வதக்கி  வர   விளைச்சல்.     கரிகால்  சோழன்  காலத்தில்   இந்த    ரசாபாசம்  எல்லாம்  கிடையாது.    இயற்கை   உரங்களே    முழுக்க  முழுக்க.   அனால்   விளைச்சல்    எவ்வளவு  தெரியுமா?     ஏக்கருக்கு    4883  கிலோ.    
 
எதை  வைத்துச்  சொல்கிறார்   திரு  நம்மாழ்வார்?    முடத்தாமக்  கண்ணியார்   பாடிய    பொருநராற்றுப்படையில்   வரும்   வரிகள்.   ‘சாலி  நெல்லின்  சிறை  கொள்  வேலி   ஆயிரம்   விளை  உட்டாக   காவிரி  புரக்கும்    நாடு  கிழவோனே’      அதாவது   ஒரு  ஹெக்டேருக்கு    12,800   கிலோ  நெல்.   ஏக்கருக்கு   4,886  கிலோ. 
 
என்ன  அப்பொழுது  மட்டும்    உழவில்   பூச்சி  கிருமி  பிரச்சனைகள்  இல்லையா?     இருந்தது.   அதனை  சமாளிக்க    இயற்கை   மருந்துகள்,    ஜீவாம்ருதக்  கரைசல்,   முட்டைக்கரைசல்,     பஞ்சகவ்யா     போன்றவை   கையாளப்பட்டன.  
 
இயற்கைச்  சீற்றங்கள்,   உரங்கள்   என்பனவற்றால்    ஏற்படும்  பிரச்சனை   உப்பு  நிலம்  எனப்படும்  களர்  நிலம்.   பொதுவாகக்  களர்  நிலத்தை   நல்ல  நிலமாக  மாற்றத்   தக்கைப்  பூண்டுகள்  பயன்படும்   என்கிறார்   ‘தமிழ்நாடு  இயற்கை  விவசாய  இயக்கத்தின்’  இயக்குநரான   ரேவதி   அவகள். 
 
நன்கு   விளைந்த   வயலோ   காலங்  கெட்ட  காலத்தில்  பெய்யும்  மழை,  அதைவிட   அன்றாடம்    மேய  வரும்  விலங்குகள்   போன்ற   ஆபத்துக்களை   எதிர்நோக்கிய  படியே   நிற்கும்.    விலங்குகளைத்  தடுக்க    அழுகின  முட்டை,  பொறிச்ச   முட்டை   ஓடுகள்    ஆகியவை  கொண்ட  கரைசலை  வேலியோரமாகத்   தெளித்து   அதன்  மூலம்    விலங்குகளை   விலகச்  செய்யலாம்   என்கிறார்  பேராசிரியர்  டாக்டர்   டி  நரஹரி.    மின்வேலியெல்லாம்   போட்டு    துரத்துவதைவிட   இது  எவ்வளவோ  மேல்  ஆச்சே!    உரத்துக்கு  உரமும்  ஆச்சு.  
 
நமது   சொல்லேர்  உழவரான   திருவள்ளுவனார்    உழவு  என்பதைப்  பற்றிக்  கூறியிருக்கும்  கருத்துகள்தாம்    எவ்வளவு    தற்காலப்  பொருத்தம்  உடையன!   
 
1037)  தொடிப்புழுதி   கஃசா   உணக்கின்    பிடித்து எருவும் 
          வேண்டாது    சாலப்  படும்.  
 
பரிமேலழகர்   உரை --   
 
தொடிப்புழுதி    கஃசா   உணக்கின் --  ஒரு  நிலத்தினை   உழுதவன்   ஒருபலப்  புழுதி   கஃசாம்   வண்ணம்    அதனைக்   காய  விடுவானாயின்;  
 
ப்டித்து   எருவும்  வேண்டாது    சாலப்படும் -- அதன்கட்  செய்த  பயிர்   ஒரு  பிடியின்  கண்  அடங்கிய   எருவுமிட   வேண்டாமற்   பணைத்து   விளையும். -- 
 
(கஃசு  -- பழங்கால   அளவை,   கால்  பலம்) 
 
1038)  ஏரினும்   நன்றால்   எருவிடுதல்   கட்டபின் 
          நீரினும்   நன்றதன்    காப்பு.  
 
பரிமேலழகர் --- ஏரினும்    எரு  இடுதல்  நன்று  --- அப்பயிர்க்கு    அவ்வுழுதலினும்    எருப்பெய்தல்   நன்று;   கட்டபின்    அதன்   காப்பு  நீரினும்   நன்று  ---  இவ்விரண்டும்   செய்து  களைகட்டால்    அதனைக்  காத்தல்    அதற்கு    நீர்கால்   யாத்தலினும்   நன்று.  
 
காத்தல் --  பட்டி  முதலியன   மேயாமல்   காத்தல். 
 
(உழவின்   அடிப்படையான    ஐந்து    செயல்கள் --- உழுதல்,   எருப்பெய்தல்,   களைகட்டல்,   நீர்கால்  யாத்தல்,   காத்தல்  என்பன)  
 
பட்டி  மேய்தல்    என்றவுடன்   அக்காவின்    வரிகள்    ஞாபகத்துக்கு   வரவேண்டுமே!     நாச்சியார்  திருமொழி  14. 1,   ‘பட்டி   மேய்ந்தோர்   காரேறு   பலதேவற்கு   ஓர்   கீழ்க்கன்றாய்    இட்டீறிட்டு   விளையாடி    இங்கே  போதக்  கண்டீரே!’   
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

devoo

unread,
Mar 6, 2010, 2:32:38 AM3/6/10
to மின்தமிழ்
Mar 5, 11:32 pm, "karthi"

>தற்செயலாக மக்கள் தொலைக்காட்சியில் "மலரும் பூமி"
> பார்த்தேன்.<


http://makkalmalarumbhoomi.blogspot.com

karthi

unread,
Mar 6, 2010, 4:58:18 AM3/6/10
to mint...@googlegroups.com
மிக்க நன்றி தேவ். மெதுமெதுவாகப் பார்ப்பேன்.

ரெ.கா.

srirangammohanarangan v

unread,
Mar 6, 2010, 5:54:33 AM3/6/10
to mint...@googlegroups.com
அது இலாபகரமாகவும்
இருக்குமானால் பெரு விவசாய நிறுவனங்கள் அவற்றை ஏன் மேற்கொள்வதில்லை
என்னும் மேற்கேள்வியும் இருக்கிறது. தமிழ்நாடு/இந்தியாவில் மட்டுமல்ல; மேலை
நாடுகளிலும் கூடத்தான். (காந்தியப் பொருளாதாரம் பற்றி முன்பு நடந்த உரையாடலையும்
நினைவு கூருகிறேன்.)
********************
 
திரு  ரெ கா,
 
ஆம்  அந்த  உரையாடலுக்கான   சுட்டி   இங்கே
 

Venkatachalam Subramanian

unread,
Mar 6, 2010, 6:00:23 AM3/6/10
to mint...@googlegroups.com
வேளாண்மை இயல்.
 சில நடைமுறை முதுமொழிகள்:
  • அகல உழுவதிலும் ஆழ உழுவதே மேல்
  • ’ஆடு பயிர்காட்டும்; ஆவாரை நெற்காட்டும்’.ஆட்டு உரத்தினால் பயிர் செழித்துவளரும். ஆவாரைப் பசுந்தழை உரமாக இட்டால் நெல் மணி பருத்து சிறக்க மகசூல் கிட்டும்.எனவே ஆட்டு உரமும்(பிழுக்கையும்) , ஆவாரை போன்று பசுந்தழை உரமும் இட்டால்,கால் நடைகளுக்கும் மனிதர்களுக்கும் உகந்ததாகும்.
  • ’வெட்டிக் கெட்டது வேம்பு; வெட்டாமல் கெட்டது பூவரசு.’ சிறிய ரம்பம் போன்ற இலைகள் கொண்ட வேப்பமரம் கிளைகளை வெட்டினால் விரைவில் பட்டுவிட வாய்ப்புண்டு.. அகலமான இலைகளைக் கொண்ட பூவரசு மரத்தின் கிளைகள் அரியப்படாவிட்டால் பட்டுப்போகலாம்.
  • ’செல்வம் கொழிக்கின்றது; சீரகம் நெற்று விடுகிறது’. சீரகம் விளைந்து  முற்றி நெற்று ஆகும் போது அங்கு வாணிபம் செழித்து வரவு சீர்படும்.
  • விதைக்கும் போது ஊர்வழிசென்றால், அறுவடைக்கு வரவேண்டியிருக்காது.
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் விதைக்குக் கூட மிஞ்சாது.
  • முன் ஏர் போன வழி பின் ஏர் போகும்.
  • கலப்பையை ஆயுதமாகக் கொண்டவர் பலராமன்.
  • மேழிச் செல்வம் கோழை படாது.
  • நன்கு  விளைந்த நெற்கதிர்கள் தலை வணங்கி நிற்கும்.
  • என் மகள் சிறுமியாக இருந்தபோது சொல்லுவாள்,” வயலும் வாழ்வும்’ பொய்கையில் பார்ப்பவர் என் அப்பாதான். அதில் குறிப்புகளும் எழுதிக்கொள்வார்! வேடிக்கை” என்பாள்.
  • வெ.சுப்பிரமணியன்.
  • ஓம்

2010/3/6 karthi <karth...@gmail.com>
Message has been deleted

devoo

unread,
Mar 6, 2010, 8:28:31 AM3/6/10
to மின்தமிழ்
Mar 6, 5:38 am, srirangammohanarangan v

/// ”பூமிக்கு மருந்து போட்டு மலடாக்கவும் வேணாம். அது உள்ளாற
இருக்கிற ஜீவ ஊற்றுகளோட மண்டலங்களை முறிக்க வேண்டாமய்யா!
தாற்காலிக லாபம் நெடுங்காலக் கணக்கில் பார்த்தால் பெருத்த
நஷ்டமாக முடியும். மேல் எழுந்த வாரியாக பிரச்சனை இல்லாதது
போல் தோன்றுவது பெரும் அழிவை ஆழ்ந்து சிந்தித்தால்தான்
புலப்படுத்தும் . இன்றைய பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டி
எதிர்காலத்திற்குத் தீரா பிரச்சனைகளை ஏற்படுத்தும் முறைகளைக்
கைக்கொள்வதை விட, பாதிப்பற்ற நல்ல வழிமுறைகள் தோன்றும் வரை
இருக்கும் பிரச்சனைகளை சகிப்புத்தன்மையுடன்
சமாளித்துக்கொண்டிருத்தல் சாலச் சிறந்தது." என்பன போன்ற
விவேகங்கள் அன்று ஒலிக்காமலா இருந்திருக்கும்? ///

Dr. Richharia's story - Crushed, but not defeated

The late Dr. R H Richharia was one of the leading experts on rice in
India. He documented and collected an amazing 19,000 rice varieties
during his career. As per his estimation, India was home to 200,000
varieties of rice. Dr. Richharia's career was however cut short and he
was treated very unfairly by the government in India because he stood
up to the International Rice Research Institute's machinations in the
country. While we do not agree with the hybridisation programme or in
the use of chemicals that was part of Dr. Richharia's work, there are
two aspects in his story which are noteworthy - the first was his work
with indigenous rice varieties, and the second was the role "foreign
powers" and large corporations play in agribusiness and the business
of feeding the world. Dr. Richharia came in their way, the rest is
history.

http://www.satavic.org/richharia.htm

Dr.R.H. Richaria புதுரகக் கண்டுபிடிப்புகளுக்குப் பாதுகாப்புச் செலவு
அதிகம்; உரத்தேவையும் மிகுதி என்றார். வடபுலத்தில் பசுக் கொலைக்கு
எதிராகக் குரல் கொடுத்து வந்தனர்; பழைய ‘கல்யாண்’ இதழ்களில் ரசாயன இடு
பொருள் குறித்த எச்சரிக்கைகளைக் காணலாம். அக்கருத்துக்கள் பிற்
போக்குத்தனம் என்று முத்திரை பெற்றன; இயற்கை வேளாண்மை முறையில் மேழிச்
செல்வம் கோழை படாமல் இருக்கக் கால்நடைகள் கட்டாயம் தேவை.

தற்போது வளர்ந்த நாடுகள் இயற்கை விளைபொருளுக்குக் கொடுக்கும்
முக்கியத்துவத்தைப் பார்த்தாவது நாம் வேளாண்கொள்கைகளை மறு பரிசீலனை
செய்து கொள்வது நல்லது


தேவ்


தாரகை

unread,
Mar 6, 2010, 5:32:51 PM3/6/10
to மின்தமிழ்
1. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
2. மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
3. வேளாண் அறிவியல் நிலையம்

ஆகியவை ஏற்பாடு செய்திருந்த நவீன தொழில்நுட்ப வார விழாவில் தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பா.முருகேசபூபதி பேசியதாவது:-

இது தமிழ்நாட்டில் நடத்தப்படும் 7வது தொழில்நுட்ப வார விழாவாகும்.
இதில்,விவசாயிகள் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டுள்ளது
வரவேற்கத்தக்கது.

1. மாறிவரும் பருவநிலை
2. விவசாய சாகுபடி பரப்பு குறைந்து வருவது
3. வேலைக்குப் போதிய ஆள்கள் கிடைக்காமை

போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தைத்
தெரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த முன்வரவேண்டும்.

செம்மை நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்பு தயக்கம் காட்டி வந்தனர்.
ஆனால், அதில் அதிக மகசூல் கிடைப்பதை அடுத்து, இப்போது அதில் ஆர்வம்
காட்டி வருகின்றனர்.

இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. இயற்கை
உரங்களுடன், இரசாயன உரங்களையும் சேர்த்து போட்டால் உற்பத்தியைப் பெருக்க


முடியும்.

விவசாயிகளுக்கு வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மூலம் தகவல்களும்,
பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக மண்டல திட்ட இயக்குநர் ச.பிரபுகுமார்
பேசுகையில், தமிழ்நாட்டில் வேளாண் அறிவியல் மையங்களை நிறுவ நடவடிக்கை
எடுக்கப்பட்டு, இதுவரை 30 மாவட்டங்களில் 15ல் வேளாண் அறிவியல் மையங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் வேளாண் தொழில்நுட்ப பூங்காக்கள் ஏற்படுத்தவும்
திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ரூ. 14 இலட்சத்தில் மண் தர நிர்ணய சோதனை ஆய்வு மையம்
அமைக்கப்பட உள்ளது என்றார்.

இவ்விழாவில் வேளாண் விற்பனை வாரியத் தலைவர் கே.பி.டி. கணேசன், மதுரை
மாநகராட்சி துணைமேயர் பி.எம். மன்னன், வேளாண் விரிவாக்கக் கல்வி
இயக்குநர் பா. கலைச்செல்வன், மதுரை மனையியல் கல்லூரி முதல்வர் ப.பானுமதி,
இணை வேளாண் இயக்குநர் பா.சங்கரலிங்கம், கொடிக்குளம் ஊராட்சித் தலைவர்
சந்தானலட்சுமி பாபு உள்ளிட்டோர் பேசினர்.

தொழில்நுட்ப வாரவிழாவையொட்டி நடைபெற்ற கண்காட்சியை துணைவேந்தர்
முருகேசபூபதி திறந்துவைத்தார். விழாவில் விவசாயிகளுக்கு பயனளிக்கும்
கையேடுகள் வெளியிடப்பட்டன.

விவசாயப் பிரதிநிதிகள் உசிலம்பட்டி மருதநாயகம், ஜெயராமன் ஆகியோர்
தங்களது அனுபவங்களை விவரித்தனர். சிறப்பாக சாகுபடி செய்த விவசாயிகள்
கௌரவிக்கப்பட்டனர்.

முன்னதாக, வேளாண் கல்லூரி முதல்வர் க.வைரவன் வரவேற்றார். திட்ட
ஒருங்கிணைப்பாளர் சு. குமார் நன்றி கூறினார்.

நன்றி:- தினமணி

srirangammohanarangan v

unread,
Mar 6, 2010, 7:11:05 PM3/6/10
to mint...@googlegroups.com
>> மாறிவரும் பருவநிலை
 விவசாய சாகுபடி பரப்பு குறைந்து வருவது
 வேலைக்குப் போதிய ஆள்கள் கிடைக்காமை><<

>>இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. இயற்கை
உரங்களுடன், இரசாயன உரங்களையும் சேர்த்து போட்டால் உற்பத்தியைப் பெருக்க
முடியும்.<<
 
 
தாரகை  சாரே!   நீங்கள்  தந்திருக்கும்   தினமணிக்   கட்டுரையில்  சம்பந்தமுள்ள  பகுதிகளாக   மேலே   கொடுத்திருக்கும்   காட்டுகள்தாம்   படுகின்றன.     இந்தக்  காட்டுகளின்  மீது    உங்கள்   கருத்துகள்   என்ன ? 
 
பருவ  நிலை  மாறி  வருவது  என்பது    மீப்பொது  பிரச்சனை.  ஆனால்   மற்றவை?



 

தாரகை

unread,
Mar 6, 2010, 7:32:10 PM3/6/10
to மின்தமிழ்
இப்போதுள்ளச் சூழலை சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பா.முருகேச பூபதி.

அக்காலத்தில், நம் மரபில் இவ்வாறான >> மாறிவரும் பருவநிலை,வேலைக்குப்
போதிய ஆள்கள் கிடைக்காமை << பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்கள் எவ்வாறு
இருந்துள்ளன? ஏதாவது குறிப்புகள் உள்ளனவா என்று அறிய ஆவல்.

> இயற்கை உரங்களுடன், இரசாயன உரங்களையும் சேர்த்து போட்டால் உற்பத்தியைப்
> பெருக்க முடியும்.

காலத்திற்கு ஏற்ற கருத்தென்றாலும், இப்போதையச் சூழலில் உயிர்களினால்
உண்டாக்கும் கரிம உரங்களைப் பயன்படுத்துவதில் உலகளாவிய விழிப்புணர்வு
மேலோங்கி வருகிறது. அவ்வாறானச் செயற்பாடுகளைப் பற்றி நம் மரபுகளின்
வழிகாட்டு முறைமைகள் இந்த கருத்திழைக்கு எவரேனும் வழங்கினால், நன்மை
பயக்கும்.

karthi

unread,
Mar 6, 2010, 7:58:12 PM3/6/10
to mint...@googlegroups.com
தாரகையைக் கேட்டீர்கள். பதில் வரும்போது வரும்.
இதோ மின்மினியின் கருத்துக்கள்:
 
மாறி வரும் பருவ நிலை, சாகுபடிப் பரப்புக் குறைதல்,
வேலைக்குப் போதிய ஆட்கள் கிடைக்காமை இவை நிதர்சன
உண்மைகள். இந்த அறைகூவல்களுக்கு அறிவியல் சார்ந்த
தீர்வுகள்தாம் காண வேண்டும்.
 
ஏற்கனவே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
பசுமைக் குடில் (green house) அமைத்துப் பருவ நிலையைச்
சீர்படுத்தலாம்; குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சலுக்கான
சாத்தியங்கள் உள்ளன; hydrophonic என்ற நீரில் சாகுபடி செய்யும்
முறையும் உள்ளது; அடுக்குமாடிக் கட்டிடங்களிலும் விவசாயம் செய்யப்பட
முடியும். இவற்றின் மூலம் தேவைப்படும் ஆள்பலத்தையும்
குறைக்கலாம். (இந்த முயற்சிகள் உள்ளன என்று தெரியும். இவற்றின்
ஒட்டுமொத்த வெற்றி என்ன எனத் தெரியாது.)
 
இயற்கை உரங்களுடன் இரசாயன உரங்களையும் அளவோடு (பெட்டிகளில்
எழுதப்பட்டுள்ள செயல் முறைகளைக் கவனமாகப் பின் பற்றி)
பயன்படுத்தினால் விளைவு நல்லதாகத்தான் அமையும் என்றே நினைக்கிறேன்.
 
மொத்தத்தில் துணைவேந்தர் பா.முருகேசபூபதியின் குரல், காரணகாரியத்தை
அனுசரிக்கும் குரல் என்றே நினைக்கிறேன்.
 
ரெ.கா.
 
 
----- Original Message -----

srirangammohanarangan v

unread,
Mar 6, 2010, 8:56:02 PM3/6/10
to mint...@googlegroups.com
நன்றி   மின்மினியாரே!    தாரகை  என்று  சொன்னது   அனைவருக்கும்   பொது   என்ற  பொருளில்தான்.  
 
தாங்கள்   சொல்வது    நிதர்சனத்தை   முன்வைத்து.    நிதர்சனம்  என்பது    அறிவை  அப்படி  இப்படி  கேள்வி  கேட்க  ஒட்டாமல்    கட்டிப்  போட்டு  விடும்    தன்மையது.   பல  நேரம்   நல்லதும்  கூட.     ஆனால்    நிதர்சனங்கள்     சமுதாய  உளவியலை   நன்கு    தேர்ந்த    காரணிகளால்     கட்டமைக்கப்  பட்டதாக    இருப்பின்    அந்த    நிதர்சனத்தில்   கட்டுண்ட  அறிவே    இது   ஒரிஜினல்    நிதர்சனம்,   இது    உள்  நோக்கம்  பாதி    நிதர்சனம்  பாதி  என்று  கட்டமைக்கப்  பட்ட   நிதர்சனம்    என்ற   வித்யாசத்தைக்  காட்ட   வல்லதா? 
 
இந்த   வகையிலும்    தங்கள்   சிந்தனைகளை    எங்களோடு    பகிர்ந்துக் கொள்ளுங்களேன். 
 
இப்படித்தான்    நாம்    பிரச்சனைகளை   அணுக  முடியும்  என்பது  ஒன்று. 
 
இப்படித்தான்    நாம்   பிரச்சனைகளை    அணுகுவோம்   என்று    மற்றவர்    எதிர்பார்ப்பது  ஒன்று.
 
இப்படித்தான்   பிரச்சனைகள்  அணுகப்படும்    என்று   முன்கணித்து    பிரச்சனைகள்    அதற்கேற்ற     வடிவாக்கமாகத்   தரப்படுவது   ஒன்று. 
 
மக்கள்    இனி    தரப்படும்   காட்சிகளைப்   பார்வையாளர்    அரங்கில்    தம்  இருக்கையில்  அமர்ந்து    மேடையில்    வந்து   சேரும்   காட்சிகளையும்  சலனங்களையும்    மட்டும்    பார்ப்பது   என்பது  மாறி,     காட்சி  உருவாக்கம்,    ஒத்திகைக்  கூடம்,    ஒப்பனை   அறை   எல்லாவற்றிலும்   புகுந்து   நோக்கக்   கற்றல்   நல்லது. 
 
நிதர்சனம்   மக்கள்   பார்வைக்குத்   தரப்படும்    காட்சியும்   நிகழ்ச்சியும்    கலந்தே  இருக்கிறது.

 

N. Kannan

unread,
Mar 6, 2010, 9:05:44 PM3/6/10
to mint...@googlegroups.com
2010/3/6 devoo <rde...@gmail.com>:

> குழுமத் தலைவர் மாறனடியவர்; இக்குழுமமும் இணையப் போக்கிலிருந்து
> மாறுபட்டிருப்பதையே விரும்புவார் என நம்புகிறேன். ஆதங்கத்தில் பேசுவது;
> தவறாயின் மன்னிக்க

இடிப்பார் இல்லா அரசு தன்னியல்பாய் மடியும் என்பது வள்ளுவம். மின்தமிழ்
வளர்ச்சி பற்றிய அக்கறையுள்ளோர் சொல்லிற்கு எப்போதும் மதிப்புண்டு.
மேலும், உங்களுக்கில்லாத உரிமையா ;-)

க.>

karthi

unread,
Mar 6, 2010, 9:43:56 PM3/6/10
to mint...@googlegroups.com
நிதர்சனம் என்று நான் சொல்வது "இது இப்போது இப்படித்தான் இருக்கிறது"
என்பதுதான்.
 
"மாறி வரும் பருவ நிலை, சாகுபடிப் பரப்புக் குறைதல்,
வேலைக்குப் போதிய ஆட்கள் கிடைக்காமை" ஆகியவை
இப்போது இருக்கின்ற நிலைமைகள்தாம். இது உள்நோக்கத்தால்
கட்டமைக்கப்பட்டுள்ளது என எனக்குத் தெரியவில்லை.
இருக்குமானால் சொல்லுங்களேன். தொடர்ந்து சிந்திப்போம்!
 
ரெ.கா. 

N. Kannan

unread,
Mar 6, 2010, 9:44:42 PM3/6/10
to mint...@googlegroups.com
நான் தூங்கி விழிப்பதற்குள் நீங்கள் விழித்து தூங்கிவிட்டீர்கள் ;-)
அவ்வளவு அலசல். எனவே எம்மடலுக்கு இந்த பதில் என்றில்லாமல், சில பொதுவான
கருத்துக்கள்.

நான் agricultural entomology ஐ விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தவன்.
தமிழக வேளாண் கல்லூரிகளின் தரம், மிக, மிக உயர்வானது. பசுமைப்புரட்சிக்கு
அடிகோலிய நிறுவனங்கள் அவை. அவர்கள் பேச்சைக் கேட்பது நல்லது.

அதே நேரத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட எத்தொழிலிலும் முழுச்சுதந்திரம்
என்பது கிடையாது, எனவே மாற்றுக்கருத்துக்களை முன் வைப்பது பொது நன்மை.

இந்தியாவின் பசியை நினைத்தால் நமது வேளாண்மை போதுமா? என்ற கேள்வி வரும்!
ஆயினும் கொரியா, ஜப்பான் போன்ற இயற்கை வளமற்ற நாடுகளைக் கண்ணுறும் போது
நமது வளர்ச்சி நிறைவாகவே உள்ளது.

விவசாய நிலங்கள் `பட்டா` போடப்பட்டு விற்பனை ஆவது வருத்தமளிப்பது.
இந்தியா போன்ற பெரிய நாட்டிலேயே அது வருத்தமளிக்கும் விஷயமென்றால் கொரியா
போன்ற சிறு நாடுகளில் அத்தகைய நிகழ்வுகளின் தாக்கம் என்னவென்று
யோசிக்கலாம்.

ஆனால் இவர்கள் கவலைப்படுவதாகத்தெரியவில்லை. காரணம் பொருளாதார முன்னேற்றம்
தடைபடாமல் இருந்தால் உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பது இவர்கள்
வாதம். இந்தியாவில் கூட நெல் இறக்குமதி சீனா, தாய்லாந்து போன்ற
நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகிறது என்பது செய்தி.

வேளாண்மை என்பது முழுவதும் இயந்தரமாகப்பட்டது ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா
நாடுகளில். ஆனால், நிலப்பரப்பும், நிலச்சொந்தமும் பிரிபட்டுள்ள ஆசிய
நாடுகளில் அவ்வளவு தீவிரமான இயந்திரப் பயன்பாடில்லை. ஆயினும் நவீன
விவசாயமுறைகளே உலகெங்கும் நடப்பு. ஆனால் அவை விளைவிக்கும் கேடுகள் பற்றிய
விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது.

அடுத்த வேளைக்கு சோறா இல்லை இயற்கைப் பாதுகாப்பா என்றால் நாம் நம்
சாப்பாட்டுக்கடையைத்தான் கவனிப்போம், இல்லையா? அதுதான் நிதர்சனம்
இப்போது.

ஆனால் adaptive technological innovations நடந்து கொண்டுதான் உள்ளது.
மின்மினி சுட்டியபடி, பசுமையகம் (green house), drp irrigation,
hydrophonics, vertical irrigation (in towers), hybridization போன்றவை.
அறிவியல் புதிய வழிகள் காணும் என்பதில் எச்சந்தேகமும் இல்லை. அதே போல்
தொழில்நுட்பம் தன் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் (technology fixes
itself with newer technologies) என்பதும் உண்மை.

ஆனால் மனிதத்துயரங்களுக்குக் காரணம் அறிவியல் அல்ல. அறியாமையும்,
அருதப்பழசான இறையாண்மையும்தான் காரணம். யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!
என்பது இறையாண்மையின் அடிப்படையாக வேண்டும். A grand global governing
where every resource in the planet is carefully managed and harvested.
இது உடோப்பியக் கருதுகோள் அல்ல. இதைச் செயல்படுத்தும் தொழில்திறம்
நம்மிடம் உள்ளது. ஆனால் மனோதிடம் இல்லை. மனிதன் இன்னும் உள்ளுக்குள்
காட்டுவாசி என்று சொன்னால் பலருக்குக் கோபம் வரும். எனவேதான் உளவியல்
என்பது என்னை வெகுவாகக் கவர்கிறது. மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சி அவன்
எவ்வளவு தூரம் தனது மனத்தை அறிந்து செயல்படுகிறானோ அவ்வளவு தூரம் என்பது
என்னைப் பொறுத்தவரை வெள்ளிடை மலை.

சரி, அதுவரை,

இந்தியா சோயா, தானியங்கள் போன்ற மாற்று உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியா முழுக்க, முழுக்க சைவ உணவு நாடாக வேண்டும். அப்போதுதான்
பிழைக்கும். (தரை வேளாண்மையை கருத்தில் கொண்டால்)

கடலிலிருந்தும் பயிர் செய்யலாம். இதை Aquaculture என்பர். எனவே நம்மவர்
மாற்று உணவிற்குப் பழக வேண்டும். இந்தியா போன்ற நாட்டில் ஜைன
உணவுமுறைக்குப் பழகமுடியாவிடினும், இந்து சமவிகித உணவில் கடல்வாழ்
புரதத்தை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் வரவேண்டும்.

புவியன்பு செய்யும் நம் மரபைப் பேண வேண்டும். சும்மா, சும்மா
எதற்கெடுத்தாலும் ஆண்டிபயாடிக் எடுத்துக் கொண்டால் இயல்பான எதிர்புச்
சக்தி உடலில் குறைந்துவிடும். அதுபோல்தான் புவியும். எதற்கெடுத்தாலும்
உரம், வேதிமம் என்று போய்விடாமல் புவி தன்னை தளிர்பித்துக் கொள்ள அவகாயம்
கொடுத்து விவசாயம் செய்ய வேண்டும். முருகபூபதியின் சிபாரிசு சரியென்றே
படுகிறது.

க.>

2010/3/7 karthi <karth...@gmail.com>:

devoo

unread,
Mar 6, 2010, 10:07:56 PM3/6/10
to மின்தமிழ்
Mar 6, 6:58 pm, "karthi"

>>பசுமைக் குடில் (green house) அமைத்துப் பருவ நிலையைச்
>>சீர்படுத்தலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இம்முறையில் ரோஜா பயிராகிறது, ஏற்றுமதிக்காக.
லடாக் பகுதியிலும் பரவலாகி வருகிறது; ஊட்டியிலும் பின்பற்றத்
தொடங்கியுள்ளனர் மானிய உதவியுடன். வேளாண் சமுதாயத்தில் பலரின் கவனத்தை
இது இன்னும் ஈர்க்கவில்லை


தேவ்

> ...
>
> read more »

karthi

unread,
Mar 6, 2010, 10:39:13 PM3/6/10
to mint...@googlegroups.com
நான் தலைவணங்கி ஏற்கும் அருமையான கருத்துக்கள்.
முழுக்கவும் ஒப்புகிறேன்.

சிலருக்கு அறிவியல் முறையான முன்னேற்றங்களில்
உள்ளார்ந்த ஐயம் இருக்கிறது. கவனம் தேவையே.
ஆனால் பயமும் நிராகரித்தலும் தேவையில்லை.
Technology fixes itself with newer technologies என்பதிலும் எனக்கு
மிகுந்த நம்பிக்கை உண்டு.

A grand global governing where every resource in the planet is carefully
managed and harvested

மிகவும் தேவை. உங்கள் வேட்கை பலிக்குமாக!

ரெ.கா.


----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Sunday, March 07, 2010 10:44 AM
Subject: Re: [MinTamil] Re: வேளாண் மரபுகள்

devoo

unread,
Mar 6, 2010, 10:53:23 PM3/6/10
to மின்தமிழ்
Mar 6, 8:44 pm, "N. Kannan"

>> தமிழக வேளாண் கல்லூரிகளின் தரம், மிக, மிக உயர்வானது <<

இக்கருத்தின் மற்றொரு பக்கம், இணையத்திலிருந்து -

தமிழக அரசின் ஆதரவுடன் விவசாயிகளிடம் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டு
வரும் ""செம்மை நெல் சாகுபடி'' என்ற வேளாண் தொழில்நுட்ப முறை, எந்தவொரு
விவசாயப் பல்கலைக் கழகத்தாலோ, விவசாய நிறுவனங்களாலோ
கண்டுபிடிக்கப்பட்டதன்று; மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள்
சொந்த அனுபவ அறிவின் மூலம் கண்டுபிடித்ததாகும்.
இன்று விவசாயிகளால் இரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துக்கு மாற்றாகப்
பயன்படுத்தப்படும்
"பஞ்ச கவ்யா'' எனப்படும் இயற்கையான, உயிரி பூச்சிக் கொல்லி மருந்தைக்
கண்டுபிடித்தவர், க.நடராசன் என்ற அலோபதி மருத்துவர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்களைக் கரம்பாகப் போடுவதைத் தவிர வேறு
வழியில்லை என வேளாண் அதிகாரிகள் கைவிட்டுவிட்ட நிலையில், அந்த நிலங்களில்
சணப்புப்பயிரைத் தொடர்ச்சி யாகப் பயிர் செய்து, அந்நிலங்களின் உப்புத்
தன்மையைக் குறைக்கலாம் என்ற ஆக்க் பூர்வமான மாற்று வழியை இயற்கை
வேளாண்மையை ஆதரிக்கும் விவசாயிகள்தான் முன் வைத்துள்ளனர்.

இப்படி இயற்கை வேளாண்மையைப் பின்பற்றும் விவசாயிகளோ, சமூக ஆர்வலர்களோ
இயற்கை வேளாண்மை குறித்த நுட்பங்களைத் தமிழக விவசாயிகளுக்கு ஆலோசனைகளாக
வழங்குவதற்கு வேளாண் தொழில் ஆலோசகர் சட்டம் தடை போடுகிறது; மீறினால்,
ஜெயில் களியைத் தின்ன வேண்டியிருக்கும் என மிரட்டுகிறது,

இவர்களுக்கு பதிலாக, இந்த இயற்கை வேளாண்மை குறித்த நுட்பங்களை கோவை
வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களோ, வேளாண் துறையைச்
சேர்ந்த விரிவாக்க அதிகாரிகளோ கற்றுக் கொடுப்பார்களா என்றால்,
அந்நிறுவனங்கள் இரண்டும் இயற்கை வேளாண்மையை மாற்றந்தாய்
மனப்பான்மையுடன்தான் அணுகுகின்றன. குறிப்பாக, *கோவை வேளாண்
பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வேளாண் நிறுவனமான மான்சாண்டோ, ஃபோர்டு
பவுண்டேஷன் ஆகியவற்றின் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு அவற்றின் கிளை
போலச் செயல்படுகிறது என்னும் குற்றச்சாட்டுக்கு* உள்ளாகிறது.

http://www.tamilcircle.net

தேவ்

> 2010/3/7 karthi <karthige...@gmail.com>:

N. Kannan

unread,
Mar 6, 2010, 11:56:12 PM3/6/10
to mint...@googlegroups.com
தேவ் சார்:

இதற்குப் பதில் என்மடலில் இருக்கிறதே! நிறுவனப்படுத்த எந்த இயக்கமும்
100% பூரணத்துவத்துடன் இயங்க முடியாது என்று! மின்தமிழையே எடுத்துக்
கொள்வோமே? நம்மால் எக்கருத்துடனும் ஒருமித்துப் போகமுடிகிறதா? நாலுபேர்
சேர்ந்து இயங்குவதுதானே நிறுவனம்? அதுமட்டும் பூரணமாக இயங்க வேண்டும்
என்று எப்படி நாம் எதிர்பார்க்கலாம்?

குடிக்கல்விக்கு மாற்றுதான் பொதுவழிக்கல்வி. விவசாயம் பற்றிக்
குடியானர்கள்தான் பேச வேண்டுமெனில், அப்பெருமை அவர்களை மட்டுமே சேர
வேண்டும் என் எதிர்பார்த்தால் இராஜாஜி காலத்திற்குப் போகவேண்டும் ;-)
ஊரேறு உழவர் கொம்பொடித்த கணேசனார் விவசாயம் பற்றி இங்கு பேசாமல் வானேறு
ஊர்தி பற்றி ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார். ‘குளித்து மூன்றனலை
யோம்பும் பழுதிலா வொழுகலாற்று பலசதுப்பேதிமாரார்கள்’ அதை விடுத்து இங்கு
விவசாயம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் பூரணத்துவத்துவத்தை எப்படி
எதிர்பார்க்க முடியும்?

பூமியே கொஞ்சம் கோணலாய்த்தான் சுற்றுகிறது. என்ன செய்ய? ;-)

க.>

2010/3/7 devoo <rde...@gmail.com>:

karthi

unread,
Mar 7, 2010, 12:28:46 AM3/7/10
to mint...@googlegroups.com
‘குளித்து மூன்றனலை
யோம்பும் பழுதிலா வொழுகலாற்று பலசதுப்பேதிமாரார்கள்’

இந்தப் பெயர் எனக்கும் பொருந்துமா?

ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Sunday, March 07, 2010 12:56 PM
Subject: Re: [MinTamil] Re: வேளாண் மரபுகள்

N. Kannan

unread,
Mar 7, 2010, 12:49:11 AM3/7/10
to mint...@googlegroups.com
2010/3/7 karthi <karth...@gmail.com>:

> ‘குளித்து மூன்றனலை
> யோம்பும் பழுதிலா வொழுகலாற்று பலசதுப்பேதிமாரார்கள்’
>
> இந்தப் பெயர் எனக்கும் பொருந்துமா?

:-) ஏன் பொறுந்தாது ரெ.கா?

வேதம் பயில்தல் என்பதுதான் பொதுக்கல்வி ஆகிவிட்டதே!!

ரங்கனார் பேசுகின்ற பல விஷயங்கள் ரகஸ்ய கிரந்தங்கள் என்று போர்த்தி,
போர்த்தி வைத்துச் சொன்ன காலங்களுண்டுதானே! தொண்டரடி பேசுகின்ற காலம்
வேறு. நாமெல்லாம் Post-Ramanuja வேதியர்கள்!!

க.>

தாரகை

unread,
Mar 7, 2010, 1:08:53 AM3/7/10
to மின்தமிழ்
> ஊரேறு உழவர் கொம்பொடித்த கணேசனார் விவசாயம் பற்றி இங்கு பேசாமல்
> வானேறு ஊர்தி பற்றி ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார். ‘குளித்து மூன்றனலை
> யோம்பும் பழுதிலா வொழுகலாற்று பலசதுப்பேதிமாரார்கள்’ அதை விடுத்து இங்கு
> விவசாயம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அட! மின்தமிழும் ஒரு "சமத்து"வபுரமாக உருமாறி வருகிறதா:-)

வாழ்க!

karthi

unread,
Mar 7, 2010, 3:17:08 AM3/7/10
to mint...@googlegroups.com
பேஷ் பேஷ்! அப்ப உபநயனம் எப்ப வச்சிக்கலாம்?

ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Sunday, March 07, 2010 1:49 PM
Subject: Re: [MinTamil] Re: வேளாண் மரபுகள்

devoo

unread,
Mar 7, 2010, 4:18:37 AM3/7/10
to மின்தமிழ்

Mar 6, 10:56 pm, "N. Kannan"

>>விவசாயம் பற்றிக் குடியானர்கள்தான் பேச வேண்டுமெனில், <<

அப்படி யாரும் இங்கு சொல்லவில்லையே ! இராமபிரான் பரதாழ்வானிடம் வேளாண்மை
குறித்து வினவுகிறார். நம்பி மூத்தபிரான் கலப்பையை, அரசாளும் காலத்திலும்
கழற்றி வைக்கவில்லை;
J Farm அநந்தராமரின் முயற்சி; விகடன் ஆசிரியரும் பண்ணை அமைத்துள்ளார்.
இன்னும் சொல்லலாம். இன வாதம் தலை தூக்குகிறது என்று பழிக்கக் கூடாது.

”சுழன்றும் ஏர் பின்னது உலகம்” ’பஹ்வந்நம் குர்வீத’ என்று ஓரினம்
நோக்கி மறை ஆணையிடவில்லை; அது ஒரு சமுதாயக் கடமை;

Mega level thinkersக்கு வேளாண் புரட்சியைக் காட்டிலும் சமுதாயப்
புரட்சிக் கருத்துக்கள் பொழுது போக்கைத் தருவன போலும் !

தேவ்

N. Kannan

unread,
Mar 7, 2010, 4:21:08 AM3/7/10
to mint...@googlegroups.com
2010/3/7 karthi <karth...@gmail.com>:

> பேஷ் பேஷ்! அப்ப உபநயனம் எப்ப வச்சிக்கலாம்?

அதைவிட உயர்ந்த பேறு ஒன்று உண்டு. அதுதான் சங்கு, சக்கரத்தை நம் தோளில்
தாங்குதல். பூணூல் யாருக்கு வேண்டும் :-))?

வானுளா ரறிய லாகா
வானவா! என்பராகில்
தேனுலாந் துளப மாலைச்
சென்னியாய்; என்பராகில்
ஊனமா யினகள் செய்யும்
ஊனாகா ரகர்களேலும்
போனகம் செய்த சேடம்
தருவரேல், புனிதமன்றே!

கண்ணன்

பிகு: இழை திசை திரும்பிவிடுமோ என்ற பயம். மீண்டும் எனக்குத்தான்
திட்டுக் கிடைக்கும் :-(

N. Kannan

unread,
Mar 7, 2010, 4:26:03 AM3/7/10
to mint...@googlegroups.com
இல்லை ஸ்வாமி!

அறிவியலை உள்வாங்கிக் கொண்டு நமது வேளாண்மை நகர வேண்டுமெனில் வேளாண்
பல்கலைக்கழகம் அவசியம். நான் அவை தரத்தில் உயர்தவை என்று ஏன் சொல்கிறேன்
எனில் எவ்வளவு அறிவுச் செறிவு அவ்வளாகங்களில் உள்ளது தெரியுமா? ஒரு
விவசாயி ஒரு வாழ்நாளில் இத்தனை தகவல்களைச் சேகரம் செய்ய முடியாது.
Educational Institutions are the upkeepers of our accumulated
knowledge. அதில் இரண்டாம் பேச்சிற்கு இடமில்லை. நமது வேளாண் கல்லூரிகள்
இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென தாங்கள் எதிர்பார்ப்பதில்
தவறில்லை.

க.>

2010/3/7 devoo <rde...@gmail.com>:
>


> Mar 6, 10:56 pm, "N. Kannan"

> ”சுழன்றும் ஏர் பின்னது உலகம்”    ’பஹ்வந்நம் குர்வீத’  என்று ஓரினம்

தாரகை

unread,
Mar 7, 2010, 4:38:55 AM3/7/10
to மின்தமிழ்
> Mega level thinkersக்கு வேளாண் புரட்சியைக் காட்டிலும் சமுதாயப்
> புரட்சிக் கருத்துக்கள் பொழுது போக்கைத் தருவன போலும் !

எந்த ஒரு புரட்சியாக இருப்பின், ஏர்-கலப்பையின் நீட்சியும்,
தமிழெத்துகளுக்கு இ-கலப்பையின் ஆட்சியும் இருக்கும்போது கருத்துக்கள்
பொழுதை மட்டுமின்றி காலத்தையும் மாட்சி பொருந்திய மெய்க்காட்சியாகவும்
மாற்றவல்லது என்று அறியாதவரில்லை தே(வ்)வரீர்:-)

devoo

unread,
Mar 7, 2010, 6:32:44 AM3/7/10
to மின்தமிழ்
Mar 7, 3:38 am, தாரகை

>>கருத்துக்கள் பொழுதை மட்டுமின்றி காலத்தையும் மாட்சி பொருந்திய மெய்க்காட்சியாகவும் மாற்றவல்லது <<

இதுவே வேண்டுவது

தேவ்

Subashini Tremmel

unread,
Mar 8, 2010, 3:20:25 PM3/8/10
to mint...@googlegroups.com
இந்தக் கட்டுரை தொடருக்குப் பொறுத்தமாக நமது வலைபக்கத்தில் உள்ள உழவுத் தொழில் ஒலிப்பதிவுகளையும் கேட்டுப் பாருங்கள். அனுபவப் பகிர்வாகப் பேச்சுத் தமிழில் திருமதி.வசந்தா பல செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றார். http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=132&Itemid=178
 
-சுபா
குறிப்பு. திரு.சுகுமாரனுக்காகக் காத்திருந்து இளைக்க வேண்டாம்,,:-) அவர் ஓலைகளைத் தேடி பணி செய்யப் புறப்பட்டு விட்டார்..!
2010/3/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>
நானும்   பொறுமையாகக்  காத்திருந்து  பார்த்தேன்.   சுகுமார்ஜி    இந்த  இழையை  ஆரம்பிப்பார்   என்று.     ஆனால்  இன்னும்  காணோம்.   இருந்தால்  என்ன ?   தொடங்கி  வைத்து  நாம்   பலரும்   சேர்ந்து  பேசுவோம்.     
 
வேளாண்  மரபுகள்   என்றால்    பல  வித    மரபு  சார்ந்த   வேளாண்  முறைகள்.    பல  நாடுகளில்    கைக்கொள்ளப்  படுபவை.   நம்  நாட்டிலேயே  இருந்து    மெல்ல  மெல்ல  காணாமல்  போனவை.    பழம்   நூல்களில்  இருந்து    நாம்  கண்டு  கொள்ளாமல்  இருப்பவை.     பகட்டும்,    மினுக்கும்   உள்ள    சினிமா  கவர்ச்சியில்   நம்  சிந்தையைப்  பறி  கொடுத்து    நமது   வேர்கள்    பதிந்து  இருக்கும்    வேளாண்  உலகத்தை   நாம்    திரும்பிக்  கூட  பார்க்காத   காரணத்தால்     அங்கு  நடக்கும்   எத்தனையோ   மாற்றங்கள்,  சாதனைகள்,   மீள்  மரபுகள்,   நசிக்கும்  பல   வழிவழி   நன்மைகள்  ---  இப்படி  எத்தனையோ    இருக்கின்றன    வேளாண்  மரபுகளைப்  பற்றி    நாம்    பேச    முடிவெடுத்தால்.  
 
இது  வரையில்    இலக்கிய  நூல்களை மட்டுமே   பார்ப்பேன்   என்று   அட்ம்  பிடிப்பவர்கள்    அப்படியே   அடம்  பிடிக்கட்டும்.   தவறில்லை.   ஆனால்  என்ன.  அவ்வப்பொழுது    வேளாண்   கருத்துகள்    காவியங்களிலும்    இலக்கிய  நூல்களிலும்   எப்படி    கையாளப்  படுகின்றன    என்று  சொல்லட்டுமே. 
 
ஒரு  சமயம்  தொடர்ந்து    வானொலியில்    வேளாண்மைச்  செய்திகள்   கலந்துரையாடல்களாகக்  கேட்டுக்கொண்டிருந்தேன்.    அப்பொழுதுதான்  தெரிந்தது    எவ்வளவு   பயனுள்ள    ஒரு   ஒலிபரப்பை,  ஒரு கல்வியை   நாம்    பரபரப்பூட்டும்   மற்ற  விஷயங்களில்   கவனத்தைச்  செலுத்தி   இழந்து   வந்திருக்கிறோம்  என்று.    இப்பவும்    அந்தக்  குறிப்பெடுத்த    நோட்  புக்  இருக்கிறது.   (உனக்கு  வேற   வேலை  இல்லையா?  என்கிறீர்களா)  
 
சமீபத்தில்    என்  நண்பர்   திரு  குருராஜ்   அவர்களிடம்   பேசிக்கொண்டிருந்த  பொழுது,  நல்லதொரு   தொழில்  முனைவோரான    அவர்   கூறினார்,  ‘சார்!    இந்த  ரசாயன  உரங்கள்   போட்டு    நம்  உணவுகளே    பாழாகி  விட்டன.   இயற்கை  உரங்கள்தான்    சரி.    இந்தப்  பாருங்க.    பசுமை   விகடன்   என்ற  இதழில்    10--10--2009ல்    முதல்வருக்கு  நம்மாழ்வார்  கடிதம்  என்ற  இந்தக்  கட்டுரையைப்  படிங்க’  என்று  கொடுத்தார்.    சங்கத்  தமிழே   பங்கம்  தவிர் -  என்ற  அந்தக்  கட்டுரை   நல்லதொரு  கட்டுரை. 
 
அதில்   சிந்திக்க  வைக்கும்  ஒரு  கருத்து  -- இப்பொழுது   தமிழ்  நாட்டில்   சராசரி  நெல்  விளைச்சல்   ஏக்கருக்கு    1400 கிலோவாம்.    இத்தனைக்கும்     ரசாயன  உரங்கள்  யூரியா,   டிஏபி   பொட்டாஷ்  எண்டோசல்பான்   எல்லாம்    போட்டு  வதக்கி  வர   விளைச்சல்.     கரிகால்  சோழன்  காலத்தில்   இந்த    ரசாபாசம்  எல்லாம்  கிடையாது.    இயற்கை   உரங்களே    முழுக்க  முழுக்க.   அனால்   விளைச்சல்    எவ்வளவு  தெரியுமா?     ஏக்கருக்கு    4883  கிலோ.    
 
எதை  வைத்துச்  சொல்கிறார்   திரு  நம்மாழ்வார்?    முடத்தாமக்  கண்ணியார்   பாடிய    பொருநராற்றுப்படையில்   வரும்   வரிகள்.   ‘சாலி  நெல்லின்  சிறை  கொள்  வேலி   ஆயிரம்   விளை  உட்டாக   காவிரி  புரக்கும்    நாடு  கிழவோனே’      அதாவது   ஒரு  ஹெக்டேருக்கு    12,800   கிலோ  நெல்.   ஏக்கருக்கு   4,886  கிலோ. 
 
என்ன  அப்பொழுது  மட்டும்    உழவில்   பூச்சி  கிருமி  பிரச்சனைகள்  இல்லையா?     இருந்தது.   அதனை  சமாளிக்க    இயற்கை   மருந்துகள்,    ஜீவாம்ருதக்  கரைசல்,   முட்டைக்கரைசல்,     பஞ்சகவ்யா     போன்றவை   கையாளப்பட்டன.  
 
இயற்கைச்  சீற்றங்கள்,   உரங்கள்   என்பனவற்றால்    ஏற்படும்  பிரச்சனை   உப்பு  நிலம்  எனப்படும்  களர்  நிலம்.   பொதுவாகக்  களர்  நிலத்தை   நல்ல  நிலமாக  மாற்றத்   தக்கைப்  பூண்டுகள்  பயன்படும்   என்கிறார்   ‘தமிழ்நாடு  இயற்கை  விவசாய  இயக்கத்தின்’  இயக்குநரான   ரேவதி   அவகள். 
 
நன்கு   விளைந்த   வயலோ   காலங்  கெட்ட  காலத்தில்  பெய்யும்  மழை,  அதைவிட   அன்றாடம்    மேய  வரும்  விலங்குகள்   போன்ற   ஆபத்துக்களை   எதிர்நோக்கிய  படியே   நிற்கும்.    விலங்குகளைத்  தடுக்க    அழுகின  முட்டை,  பொறிச்ச   முட்டை   ஓடுகள்    ஆகியவை  கொண்ட  கரைசலை  வேலியோரமாகத்   தெளித்து   அதன்  மூலம்    விலங்குகளை   விலகச்  செய்யலாம்   என்கிறார்  பேராசிரியர்  டாக்டர்   டி  நரஹரி.    மின்வேலியெல்லாம்   போட்டு    துரத்துவதைவிட   இது  எவ்வளவோ  மேல்  ஆச்சே!    உரத்துக்கு  உரமும்  ஆச்சு.  
 
நமது   சொல்லேர்  உழவரான   திருவள்ளுவனார்    உழவு  என்பதைப்  பற்றிக்  கூறியிருக்கும்  கருத்துகள்தாம்    எவ்வளவு    தற்காலப்  பொருத்தம்  உடையன!   
 
1037)  தொடிப்புழுதி   கஃசா   உணக்கின்    பிடித்து எருவும் 
          வேண்டாது    சாலப்  படும்.  
 
பரிமேலழகர்   உரை --   
 
தொடிப்புழுதி    கஃசா   உணக்கின் --  ஒரு  நிலத்தினை   உழுதவன்   ஒருபலப்  புழுதி   கஃசாம்   வண்ணம்    அதனைக்   காய  விடுவானாயின்;  
 
ப்டித்து   எருவும்  வேண்டாது    சாலப்படும் -- அதன்கட்  செய்த  பயிர்   ஒரு  பிடியின்  கண்  அடங்கிய   எருவுமிட   வேண்டாமற்   பணைத்து   விளையும். -- 
 
(கஃசு  -- பழங்கால   அளவை,   கால்  பலம்) 
 
1038)  ஏரினும்   நன்றால்   எருவிடுதல்   கட்டபின் 
          நீரினும்   நன்றதன்    காப்பு.  
 
பரிமேலழகர் --- ஏரினும்    எரு  இடுதல்  நன்று  --- அப்பயிர்க்கு    அவ்வுழுதலினும்    எருப்பெய்தல்   நன்று;   கட்டபின்    அதன்   காப்பு  நீரினும்   நன்று  ---  இவ்விரண்டும்   செய்து  களைகட்டால்    அதனைக்  காத்தல்    அதற்கு    நீர்கால்   யாத்தலினும்   நன்று.  
 
காத்தல் --  பட்டி  முதலியன   மேயாமல்   காத்தல். 
 
(உழவின்   அடிப்படையான    ஐந்து    செயல்கள் --- உழுதல்,   எருப்பெய்தல்,   களைகட்டல்,   நீர்கால்  யாத்தல்,   காத்தல்  என்பன)  
 
பட்டி  மேய்தல்    என்றவுடன்   அக்காவின்    வரிகள்    ஞாபகத்துக்கு   வரவேண்டுமே!     நாச்சியார்  திருமொழி  14. 1,   ‘பட்டி   மேய்ந்தோர்   காரேறு   பலதேவற்கு   ஓர்   கீழ்க்கன்றாய்    இட்டீறிட்டு   விளையாடி    இங்கே  போதக்  கண்டீரே!’   
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
        

--
Message has been deleted

தாரகை

unread,
Mar 11, 2010, 4:43:58 AM3/11/10
to மின்தமிழ்
ஊட்டம் தரும் "உரம் டீ"!

தமிழக விவசாயிகள் நடவு செய்யும் பயிரில், தோட்டங்களில் வாட்டம்
காணப்பட்டால் தழைச்சத்து தரும் யூரியா உரங்களை அதிகளவு பயன்படுத்துவது
நடைமுறையில் உள்ளது.

இதனால், குறுகிய கால வளர்ச்சி பயிரில் காணப்பட்டாலும் பூச்சிகள் மற்றும்
நோய்த் தாக்குதலால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி மற்றும் இழப்புகளை
சந்திக்கின்றனர். இத்தகைய சூழலில் அதிக மகசூல் மற்றும் இலாபம் தரும்
இயற்கை உர டீ பற்றி தமிழக விவசாயிகள் தெரிந்துகொள்வது அவசியம்.

தயாரிக்கும் முறை:-

விவசாயிகள் தங்கள் தோட்டங்களில், வயல்களில் சுற்றி கிடைக்கும் 5 வித இலை,
தழைகள் - 5 கிலோ, 5 கிலோ சாணம், அரை கிலோ நாட்டுச் சர்க்கரை இவை
அனைத்தையும் ஒரு சணல் சாக்கில் மூட்டையாக கட்டிக் கொள்ளவும், இத்துடன்
அரை கிலோ கல்லையும் சேர்த்து விடவும், பின்னர் இந்த மூட்டையை ஒரு
பிளாஸ்டிக் கேனின் உள்ளே கவிழ்த்து வைக்கவும்.

மூட்டை மூழ்கியிருக்கும் வரை தண்ணீர் ஊற்றவும், இந்த மூட்டையை மேலும்,
கீழும் அசைப்பது போலாக கயிறு கட்டியிருக்க வேண்டும், தினமும் விவசாயிகள்
அதை அசைத்தால் மூட்டைக்குள்ளிருக்கும் சாறு, கேன் தண்ணீரில் கலக்கும்.

அது அடுத்த இரண்டு வார காலத்தில் உரம் டீயாக தயாராகிவிடும். 10 லிட்டர்
நீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து எல்லாவிதமான
பயிர்களுக்கும், மரங்களுக்கும் இதை தெளிக்கலாம்.

பிற பயன்கள்:-

உரம் டீ விவசாய பொருள்களைக் கொண்டே தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல்
மாசுபடுவது கிடையாது. விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல், லாபம்
இயற்கையில் பெற முடியும். பயிர்களுக்கு உரம் டீ கொடுத்தால் பயிர்கள்
வேகமாக வளர்வதாக பாரம்பரியமிக்க விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, குறைந்த செலவில் அதிக இலாபம் பெற இயற்கை உரம் டீயை தங்களது
தோட்டத்திலேயே தயாரித்து வளம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்
விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி. இராஜ் பிரவீன் தெரிவித்துள்ளார்.

பயிர்களுக்கு தெளிக்க தயாரிக்கப்பட்டுள்ள இயற்கை உரம் டீ.

http://www.dinamani.com/Images/article/2010/3/11/10agri1.jpg


ஜி.சுந்தரராஜன்

தாரகை

unread,
Mar 11, 2010, 4:46:50 AM3/11/10
to மின்தமிழ்
பருப்பு உற்பத்தியை பெருக்கும் பொருட்டு, இந்திய மத்திய அரசு உதவியுடன்
செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய பயறுவகை அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,
பயறுவகைகளுக்கு பல்வேறு மானியங்களை வேளாண் துறை வழங்கி வருகிறது.

மேலும், ஜிப்சம், பயிர் பாதுகாப்பு கருவிகள், குறிப்பிட்ட இரக உரங்கள்
ஆகியனவும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த
பயிர் பாதுகாப்புக்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தின் பருப்பு தேவைக்கும், கிடைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள
இடைவெளியை குறைக்க மத்திய அரசு உதவியுடன் தேசிய பயறுவகை அபிவிருத்தி
திட்டத்தை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது.

ரூ.51 மானியம்:-

இத்திட்டத்தின் கீழ் பயறுவகை பயிர்களை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு
விதை கொள்முதலின் போது கிலோவுக்கு ரூ.41 முதல் ரூ.51 வரை மானியம்
வழங்கப்படுகிறது. ஆதார விதை மற்றும் சான்று விதைகளை உற்பத்தி செய்ய கிலோ
ஒன்றுக்கு ரூ.5 மானிய உதவியாக வழங்கப்படுகிறது.

மேலும், இதுதொடர்பாக பயிற்சியும் உழவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த பயறு வகைகள் நன்றாக வளர நுண்ணூட்டச் சத்து இடுவதற்கு 50 சதவீத
மானியம் அல்லது, ஹெக்டேருக்கு ரூ.200 வீதம் வழங்கப்படுகிறது. ஜிப்சம்
இடுவதற்கு 50 சதவீதம் மானியம் அல்லது ஹெக்டேருக்கு ரூ.500 வீதம்
வழங்கப்படுகிறது.

பயிர் பாதுகாப்பு கருவிகளான கைத்தெளிப்பானுக்கு ரூ.800ம், விதைத்
தெளிப்பானுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மானிய உதவிகள் வழங்கப்படுகிறது.

தெளிப்பு நீர் பாசன கருவிகளுக்கு 33 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் வீதம்
மானிய உதவிகள் வழங்கப்படுகிறது. ரைசோபியர் உள்ளிட்ட பூச்சி
மருந்துகளுக்கு 50 சதவீதம் வீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இதுதொடர்பான மானிய உதவிகள் தேவைப்படுவோர் அந்தந்த ஒன்றியத்தைச் சேர்ந்த
வேளாண் உதவி இயக்குநரையோ, வேளாண் அலுவலர்களை தொடர்புகொள்ளலாம் என்று
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் அய்யாதுரை தெரிவித்துள்ளார்.

தாரகை

unread,
Mar 11, 2010, 4:50:53 AM3/11/10
to மின்தமிழ்
ஊசி போட்டு பயிர் வளர்க்கலாம்!

நோய் பாதித்தவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாய் வழியாகக்
கொடுப்பதற்கும், ஊசி வழியாக அளிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஊசி
வழியாக மருந்து கொடுத்தால் விரைவாக நரம்பு மண்டலத்தை அடைந்து நிவாரணம்
உடனடியாகக் கிடைக்கும்.

இப்படி உரத்தைத் தாவரங்களுக்கு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான
கருவியை உருவாக்கியுள்ளார் புதுச்சேரி செல்லஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி
ஆர்.வெங்கடகிருஷ்ணன் (49).

http://www.dinamani.com/Images/article/2010/3/11/10agri.jpg

டி.ஏ.பி உள்ளிட்ட உரங்களை மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு ஸ்பிரே
செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகள்
அப்படி செய்யாமல் அந்த உரங்களைக் கையால் தூவுகின்றனர். இதனால் அதிகமாக
உரம் செலவாகிறது.

இதைத் தவிர பயிர்களுடன் புல், பூண்டு உள்ளிட்ட களைகளும் செழித்து
வளருகின்றன. இது போன்ற உரங்கள் நேரடியாக தாவரங்களுக்குக் கிடைக்கும்
வகையில் செய்தால் என்ன என்ற உந்துதல் காரணமாக புதிய கருவியை
வடிவமைத்துள்ளார் இந்த விவசாயி.

இவர் பி.எஸ்.சி கணிதப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்.

கருவியின் வடிவமைப்பும் செயல்பாடும் இந்தக் கருவியில் ஏற்கெனவே
மார்க்கெட்டில் உள்ள ஸ்பிரேயரில் உள்ள டேங்க் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டேங்கில் நீரில் கரையும் உரம் வடிகட்டி ஊற்றப்படுகிறது. அந்த
டேங்கில் இருந்து உரம் வெளியேற சிறிய டியூப் இருக்கிறது.

இந்த டேங்கில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
சிறிய டியூப் மற்றும் பேட்டரியில் இருந்து ஆன், ஆப் சுவிட்சுக்கான வயர்
இரண்டும் சேர்ந்து சிறிய அளவிலான பைப்பில் உள்புறமாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைப் முனையில் கூர்மையான ஊசி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊசியின் இரண்டு பக்கங்களில் சிறிய துளை இருக்கிறது. இந்தச் சிறிய
பைப்பை பிடித்துக் கொள்ள சைக்கிளில் பயன்படுத்தப்படும் ஹேண்டல்பார் போன்ற
பொருள் இருக்கிறது. உரத்தை கரைத்து காபி வடிகட்டுவது போன்று வடிகட்டி
டேங்கில் ஊற்றியப் பிறகு தோளில் மாட்டிக் கொண்டு தேவையான இடங்களில் ஊசி
போன்ற வடிவத்தை தாவரத்துக்கு அருகில் வேர் மண்டலம் இருக்கும் பகுதியில்
அழுத்தி ஆன் செய்யும் சுவிட்டை அழுத்தினால் சிறிய பைப் வழியாக ஊசி
முனையில் திரவ வடிவில் உரம் வந்து மண்ணில் பீச்சி அடிக்கிறது.

இது போன்று உரத்தை திரவ வடிவில் வேர் மண்டலத்துக்கு நேரடியாகப்
பாய்ச்சுவதால் தாவரத்தின் வளர்ச்சி விரைவாக இருக்கும். தோட்டக்கலை
பயிர்களுக்கும், தோப்புப் பயிர்களுக்கும் இது உகந்த கருவி என்கிறார்
புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியல் நிபுணர்
விஜயகுமார்.

மேலும் புல், பூண்டு உள்ளிட்ட களைகளுக்கு உரம் சென்று சேராமல் அதைக்
குறைக்க முடியும் என்றும் அவர் சொல்கிறார். இந்த நிலையத்தின் வாழையியல்
நிபுணர் நரசிம்மன் கூறுகையில், இந்தக் கருவி விவசாயிகளுக்கு உதவியாக
இருக்கும். மேலும் பயிர் மேலாண்மைக்கு உகந்தது. தாவரத்தின் வேர்
பகுதியில் உரம் செல்வதால் விரைவான வளர்ச்சி இருக்கும் என்கிறார்.

"என்னுடைய வயலில் 12 ஏக்கரில் சவுக்குப் பயிரிட்டுள்ளேன். இந்தக் கருவியை
உருவாக்கியப் பிறகு சவுக்குப் பயிருக்கு நீர் உரமாக பாய்ச்சினேன். அதன்
விளைவு 6 நாளில் நல்ல மாற்றத்தை சவுக்குப் பயிரில் காண முடிந்தது. இது
போன்று என்னுடைய உறவினர் ஒருவரின் வாழை பயிருக்கும் இந்தக் கருவியைப்
பயன்படுத்தி நீர் உரம் பாய்ச்சினேன். அந்த வாழை பயிரும் நன்றாக செழிப்பாக
இருக்கிறது",என்கிறார் இந்தக் கருவியை வடிவமைத்துள்ள விவசாயி.

பயிர்களுக்குக் கையால் உரத்தைத் தூவும்போது ஓர் ஏக்கருக்கு 90 கிலோ உரம்
தேவைப்படும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி உரம் நீரில் கலந்து
பாய்ச்சும்போது 3ல் ஒரு பங்கு உரம் இருந்தால் போதும். மேலும் இந்தக்
கருவியைப் பயன்படுத்தினால் களை கொத்தவும் தேவையில்லை.

இந்தக் கருவியைப் பயன்படுத்தி உரம் பாய்ச்சும்போதும் குறிப்பிட்ட வயல்
ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் கருவில் உள்ள ஊசி
போன்ற பாகம் மண்ணில் எளிதில் இறங்கும் என்கிறார் இந்தக் கருவியை
வடிவமைத்துள்ள விவசாயி வெங்கடகிருஷ்ணன்.

ந. குப்பன்

தாரகை

unread,
Mar 11, 2010, 4:53:39 AM3/11/10
to மின்தமிழ்
இயற்கை வளம் பேணும் வேளாண் தொழில்நுட்பங்கள் அவசியம்!

இயற்கை வளம் பேணும் வேளாண் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம் என
வேளாண் பல்கலை. பதிவாளர் ப.சுப்பையன் வலியுறுத்தினார்.

கோவை வேளாண் பல்கலை.யில் சனிக்கிழமை (6/3/10) நடந்த இயற்கை வள ஆதாரம்
காக்கும் வேளாண்மை பயிற்சி துவக்க விழாவில் அவர் பேசியது:-

இனி வரும் காலங்களில் சுமார் 320 மில்லியன் டன் அளவுக்கு உணவு தானிய
உற்பத்தி செய்ய வேண்டி உள்ளது. தற்போது, வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும்
நிலம், நீர் போன்ற இயற்கை ஆதாரங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் புள்ளி விவரப்படி நிலத்தடி
நீர் வேளாண்மைக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் ஒவ்வொர்
ஆண்டும் 3.8 பில்லியன் டன் நீர் உபயோகப்படுத்தப்படுகிறது. அதில், சுமார்
70 விழுக்காடு வேளாண்மைக்கு பயன்படுகிறது.

2025ல் இந்த நீர் தேவை இன்னும் 15 விழுக்காடு கூடுதலாக வாய்ப்பு உள்ளது.
மேலும், தீவிர வேளாண்மையால் வேளாண் நிலங்களின் கரிம அளவு குறைந்து
வருகிறது. மண் வளம் பாதிப்பு, புவி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகளால் 30
முதல் 50 விழுக்காடு வரை மண்ணில் கரிம இழப்பு கடந்த நூற்றாண்டில்
ஏற்பட்டது. இதுபோன்ற குறைபாடுகளைத் தவிர்த்து எதிர்கால வேளாண்மையை
வளமாக்க இயற்கை வளங்களை பேணுகின்ற வேளாண்மையில் ஈடுபட வேண்டும்.
அதற்கேற்ப தொழில்நுட்பங்களையும் கண்டறிந்து செயலாக்க வேண்டும்.

இதுபோன்ற இயற்கை வளம் பேணும் வேளாண் தொழில்நுட்பங்கள் கடந்த 30
ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டிருந்தும் கடந்த 10 ஆண்டுகளில் தான்
அவற்றின் முக்கியத்துவம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.

இதுபோன்ற வேளாண்மை உலகளவில் சுமார் 80 நாடுகளில் 80 மில்லியன்
எக்டருக்கும் மேலான நிலப்பரப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும்,
நிலத்தை தேவையற்ற முறையில் உழவு செய்யாமல் இருத்தல், வேளாண்மையில்
கிடைக்கக் கூடிய உபபொருள்களை சரிவர பயன்படுத்துதல், மண்ணின் வளம்
காக்கக்கூடிய பயிர்கள், பயிர்த் திட்டங்கள், மாற்றுப் பயிர்கள் போன்ற
சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களை
பின்பற்றுதல் போன்ற மாற்று முறைகள் இப்புதிய வேளாண் அணுகுமுறையில்
உள்ளடங்கும்.

இயற்கை வள ஆதாரங்களைப் பாதுகாத்து மனித குலத்துக்கு உணவு அளிக்கக் கூடிய
அளவுக்கு இப் புதிய வேளாண் அணுகுமுறை சிறந்ததாகும்.

இதன்மூலம், குறைந்த உற்பத்திச் செலவு, குறைவான களைகள், நீர் மற்றும்
சத்துக்களைப் பாதுகாத்தல் பயிரில் இருந்து கிடைக்கும் உபரிப் பொருள்களை
சிறந்த முறையில் பயன்படுத்துதல், மண்ணின் உயிர் வளம் காத்தல் போன்ற
நன்மைகள் கிடைக்கும் என்றார் அவர்.

மண் மற்றும் பயிர் மேலாண்மை மைய இயக்குநர் சி.ஜெயராமன், உழவியல் துறைத்
தலைவர் பு.முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாரகை

unread,
Mar 11, 2010, 4:59:19 AM3/11/10
to மின்தமிழ்
நூல்கோல் சாகுபடியில் அசத்தும் விவசாயி!

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் வடமாநில குளிர் பயிரான
நூல்கோல் வெற்றிகரமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலை. கிராமப்புற வேளாண் விரிவாக்கத் திட்டத்தின் கீழ்
கிளேடிஓலஸ் வண்ண மலருடன் ஊடுபயிராக நூல்கோல் அறிமுகம் செய்யப்பட்டு
சாகுபடி செய்யப்பட்டது.

1. வெயில் வியன்னா
2. பர்பிள் வியன்னா

என்ற நூல்கோல் இரகங்களின் விதைகள் ஜம்மு மாநில வேளாண்துறை மூலம்
பெறப்பட்டு சிதம்பரத்தை அடுத்த முன்னோடி விவசாயி பானுசந்தர் தோட்டத்தில்
சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டது.

http://www.dinamani.com/Images/article/2010/3/10/noolkol.jpg

ஜம்மு மாநில வேளாண் விஞ்ஞானி மனோஜ் நாசர், அண்ணாமலைப் பல்கலை.
வேளாண்மைத்துறை விரிவுரையாளர் தி.இராஜ் பிரவீன் ஆகியோர் தொழில்நுட்ப
ஆலோசனையுடன் நாற்றங்கால் அமைத்து சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது வடமாநில குளிர் பருவ நூல்கோல் நன்றாக வளர்ந்து இன்னும் சில
வாரங்களில் அறுவடை செய்ய தயாராக உள்ளது. தற்போது வெளி மாவட்டங்களில்
இருந்து நூல்கோல் கொண்டு வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை


செய்யப்படுகிறது.

சி.முட்லூரில் சாகுபடி செய்யப்படும் நூல்கோல் சிதம்பரம், கடலூர்,
பண்ருட்டி, விருத்தாசலம் சந்தைகளில் விற்பனை செய்யும் போது விவசாயிகள்
அதிக இலாபம் பெற முடியும். அண்ணாமலைப் பல்கலையில் அதிக வெளி-மாநில
மாணவர்கள் பயின்று வருவதால் சிதம்பரம் பகுதியில் வடமாநில உணவு விடுதிகள்
அதிகரித்துள்ளன. அவர்களுக்கு இந்த நூல்கோல் அவசியமாக தேவைப்படுவதால்
சந்தையில் நூல்கோல் விற்பனையில் அதிக லாபம் கிடைக்கும் என விவசாயி
பானுசந்தர் தெரிவித்தார்.

மேலும் குளிர்ப்பதன வசதியுடன் சி.முட்லூர் பகுதி விவசாயிகள் காய்கறிகள்
மற்றும் பூக்கள் ஆகியவற்றை அதிக நாள்கள் பாதுகாத்து விற்பனை செய்ய
வளர்ச்சித் துறைகள் மற்றும் வங்கியுடன் இணைந்து விரிவாக்கப் பணிகள்
மேற்கொள்ள உள்ளன என்று உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர்
பி.இரவீந்திரன் தெரிவித்தார்.

தாரகை

unread,
Mar 11, 2010, 5:03:34 AM3/11/10
to மின்தமிழ்
புது​தில்​லி​யில் உள்ள இந்​திய நூற்​பு​ழு​வி​யல் கழ​கம் வழங்​கும் பேரா​
சி​ரி​யர் எச்.எம்.ஷா நினைவு விருது,​​ கோவை வேளாண்
பல்​க​லைக்​க​ழக பேரா​சி​ரி​யர் ஏ.ஐ.ஜோனத்​த​னுக்கு ​வழங்​கப்​பட்​டுள்​
ளது.

அ​வர் கோவை வேளாண் பல்​க​லை​யின் பயிர் பாது​காப்பு மைய இயக்​கு​ந​ராக
உள்​ளார்.​ நூற்​பு​ழு​வி​யல் துறை​யில் மேற்​கொண்ட பல்​வேறு ஆராய்ச்​சி​
க​ளுக்​காக இவ்​வி​ருது வழங்​கப்​பட்​டுள்​ளது.​ இவர் இது​வரை ரூ.1 கோடி
மதிப்​பி​லான 5 ஆராய்ச்​சித் திட்​டங்​க​ளுக்கு முதன்மை ஆய்​வா​ள​ராக செய​
லாற்​றி​யுள்​ளார்.

1. வாழை
2. தக்​காளி
3. கரு​மி​ளகு
4. வெற்​றிலை

போன்ற பயிர்​க​ளில் நூற்​புழு மேலாண்​மைக்கு

அ) பேசில்​லஸ் சப்டி​லிஸ்
ஆ) சூடோ​மோ​னாஸ் புளு​ர​சன்ஸ்

போன்ற நன்மை செய்​யும் பாக்​டீ​ரி​யாக்​களை பயன்​ப​டுத்​து​வது குறித்து
இவர் ஆராய்ச்சி செய்​துள்​ளார்;

இது​வரை நான்கு புத்​த​கங்​கள்,​​ 75 ஆராய்ச்​சிக் கட்​டு​ரை​களை வெளி​
யிட்​டுள்​ளார்.

தாரகை

unread,
Mar 11, 2010, 5:13:18 AM3/11/10
to மின்தமிழ்
போதிய மழையின்றி கண்மாய்கள் நிரம்பாததாலும் அறுவடை நேரத்தில்
நெற்கதிர்களில் பூச்சித் தாக்குதல் காரணமாகவும் தமிழகத்தின் இராமநாதபுரம்
மாவட்டம் வறட்சி மாவட்டமாகி வருகிறது.

கடந்த 2009 - 2010ல் இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பருவத்தில்
மாவட்டத்தின் நெற்களஞ்சியம் எனக் கூறப்படும்

1. திருவாடானை
2. இராமநாதபுரம்
3. பரமக்குடி
4. கமுதி
5. கடலாடி
6. முதுகுளத்தூர்

ஆகிய 6 தாலுகாக்களிலும் சுமார் 3 இலட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில்
நெல் சாகுபடி நடந்தது.

காலதாமதமாக பருவமழை துவங்கினாலும் விவசாயப் பணிகள் மாவட்டம் ​முழுவதும்
முழுவீச்சில் தீவிரமாகவே நடந்துவந்தன.

1. இராமேசுவரம்
2. இராமநாதபுரம்

தாலுகாக்களில் நல்ல மழையும்,

3. திருவாடானை

தாலுகாவில் சுமாரான மழையும் பெய்து வந்தது.

​1. களை எடுத்தல்
2. உரமிடுதல்
3. மருந்து அடித்தல்

என விவசாயிகளும் கடன் வாங்கியும்,​​ நகைகளை அடகு வைத்தும் ஒரு சிலர்
வங்கிக் கடன் பெற்றும் ஒரு ஏக்கருக்கு சுமார் 7000 முதல் 10 ஆயிரம் வரை
செலவு செய்து நெல் சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில்,

1. கமுதி
2. கடலாடி
3. முதுகுளத்தூர்

ஆகிய 3 பகுதிகளிலும் இந்த ஆண்டு சிறிதளவு தான் மழை பெய்தது.​ கண்மாய்கள்
நிரம்பவில்லை.

இதனால் நெற்கதிர்கள் பரியும் நிலையில் தண்ணீரின்றி பயிர்கள் சேதம்
அடைந்தன.​ பம்புசெட் வைத்திருந்த விவசாயிகள் மட்டும் விவசாயத்தை ஒரளவு
பாதுகாத்துக்கொண்டனர்.

​பரமக்குடி தாலுகாவில் பெரும் பகுதியில் விளைச்சல் இல்லை.

கமுதி,​​ கடலாடி,​​ முதுகுளத்தூர் பகுதிகளைப் பொறுத்தவரை கடந்த 15
ஆண்டுகளாக போதிய மழையின்றி தொடர்ந்து விவசாயிகள் பாதிப்பையே
சந்தித்துவருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க இராமநாதபுரம் மாவட்டக் குழுச்
செயலாளர் எம்.முத்துராமு கூறியதாவது:-

கமுதி, ​​ கடலாடி,​​ முதுகுளத்தூர் தாலுகாக்கள் தொடர்ந்து மழையின்றி
பலத்த பாதிப்பை சந்தித்திருப்பதால் மேற்கண்ட மூன்று தாலுகாக்களையும்
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

​இராமநாதபுரம், ​​ பரமக்குடி,​​ திருவாடானை தாலுகாக்களில் விவசாயப்
பணிகள் நல்ல முறையில் துவங்கி நல்ல விளைச்சல் ஏற்பட்டிருந்த நேரத்தில்
அறுவடைக்கு சில ​தினங்களே இருந்த நிலையில் நெற்கதிர்களில் நெற்பழ நோய்,​​
புகையான் நோய்,​​ குலைநோய் தாக்குதல் ஏற்பட்டு வயல்கள் முற்றிலும்
அழிந்துபோயின.

விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ​
பார்வையிட்டு,​​ அதன் விவரங்களை மாவட்ட ஆட்சியருக்கும் வேளாண்துறை
மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்திருக்கிறோம்.

அதிகாரிகளும் இப்வபகுதியில் சுமார் 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நோயால்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.​ எனவே,​​ மாவட்டத்தில் நோய்
தாக்குதலாலும்,​​ போதிய மழையின்றி கடும் வறட்சியாலும் மாவட்டம் முழுவதும்
விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

​எனவே மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும்
நிவாரணம் வழங்கவேண்டும் என்றார் எம்.முத்துராமு.

Swarna Lakshmi

unread,
Mar 12, 2010, 5:46:24 AM3/12/10
to mint...@googlegroups.com
இது போன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக கிராமப்புறங்களில் வாழ்பவர்கள் dealership/ distributor ship/ publicity  போன்றவற்றில் உதவலாம். இயற்கை உரங்களையும், கருவிகளையும், பூச்சிக்கொல்லிகளையும் சிறு தொழில்களாக உருவாக்கி வினியோகிக்கலாம். ஒரே கல்லில் பல மாங்காய்கள்.
 

 


From: தாரகை <thar...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Thu, 11 March, 2010 3:20:53 PM
Subject: [MinTamil] Re: வேளாண் மரபுகள்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it NOW!.

தாரகை

unread,
Mar 13, 2010, 8:22:06 PM3/13/10
to மின்தமிழ்
விவசாயிகளுக்கு ஓர் ஏணி - எதிர்நோக்கு சந்தை!

அறுவடை நேரத்தில் அதிகமான விளை பொருள்கள் மார்க்கெட்டுக்கு வருவதால்
வியாபாரிகள் உணவுப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்களின்
சேமிப்பு கிடங்குகளில் பதுக்கி வைத்து விடுகின்றனர்.

அறுவடை சீசன் முடிந்து உணவுப் பொருள்களுக்குக் கிராக்கி ஏற்படும்
மாதங்களில் பதுக்கி வைக்கப்படும் பொருள்கள் குறிப்பிட்ட
வியாபாரிகளுக்குப் பணமாக கொழிக்கின்றன.

இந்த நிலையை மாற்றி அறுவடை நேரத்தில் விளைபொருள்களைப் பாதுகாப்பாக
கிடங்குகளில் வைத்திருந்து விலை உயர்வுக்குப் பிறகு விற்பனை செய்யும்
உத்தியை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுக்கவும் முறைப்படுத்தவும் நம்
நாட்டில் எதிர்நோக்குச் சந்தை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

ஒரு குறிப்பிட்ட விளை பொருள்களுக்கு இன்னும் 2, 3, 6 மாதங்கள் கழித்து
என்ன விலை கிடைக்கும் என்று கணித்து அதற்கான தகவல்களை விவசாயிகளுக்கு
இந்த ஆணையம் அளிக்கிறது. புதுச்சேரிக்கு இந்த ஆணையத்தின் தலைவர்
பி.சி.கத்துவா ஒரு பயிலரங்கில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

தினமணி நிருபரிடம் அவர் கூறியது:-

இந்த ஆணையத்தில் நாடு முழுவதிலிருந்து 4,200 பேர் உறுப்பினர்களாகப் பதிவு
செய்துள்ளனர். விவசாயிகள் இப்படி பதிவு செய்த உறுப்பினர்களிடம் ஒப்பந்தம்
செய்து கொண்டு தங்கள் விளை பொருள்களை விற்பனை செய்யலாம். பயிர்
செய்யும்போதே அறுவடை நேரத்தில் தங்களுடைய விளை பொருள்களை இந்த
விலைக்குத் தான் விற்பனை செய்ய முடியும் என்று விவசாயிகள் இந்த
உறுப்பினர்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

இது போன்று விவசாய விளைபொருள்களுக்கு எதிர்நோக்கு சந்தை இருப்பது
விவசாயிகளுக்கு நல்லது. அறுவடை நேரத்தில் என்ன விலைக்கு தங்கள் பொருள்களை
விற்பனை செய்யப் போகிறோம் என்பதை இப்போதே விவசாயிகள் முடிவு செய்து
விடுகிறார்கள்.

இது போன்ற எதிர்நோக்குச் சந்தைக்கு அதிக அளவில் விளைபொருள்கள்
தேவைப்படுகிறது. அதனால் விவசாயிகள் 30, 40 பேர் குழுக்களாக இணைந்து
தங்களின் விளைபொருள்களைத் திரட்டி இந்தச் சந்தையில் விற்பனை செய்தால்
அதிக விலைக்குப் போகும் சூழ்நிலையும் இருóக்கிறது.

விளைபொருள்களை அரசின் கிடங்குகளில் சேமித்து வைத்து அதற்கான இரசீது
பெற்றுக் கொள்ளலாம். அந்த இரசீதைக் காட்டி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில்
கடன் வசதியும் பெறலாம்.

எதிர்நோக்கு சந்தை கடந்த 6 ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.

Raja sankar

unread,
Mar 14, 2010, 8:59:39 AM3/14/10
to mint...@googlegroups.com
முன்பு பணப்பயிர்களில் மட்டும் இருந்த நடைமுறை இப்போது உணவுப்பயிர்களுக்கும் வந்திருக்கிறது. விலைவாசி ஏன் ஏறுகிறது என இப்போது புரிந்து இருக்குமே. :-)

ராஜசங்கர்



2010/3/14 தாரகை <thar...@gmail.com>

தாரகை

unread,
Mar 18, 2010, 1:30:04 PM3/18/10
to மின்தமிழ்
பசுமைப்புரட்சியால் மண்வளம் பாதிப்பு!

பசுமைப் புரட்சி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயத்தில் மண்
வளத்தையும், நீர் வளத்தையும் சீரழித்து விட்டார்கள்.​ ஆகையால் விவசாயத்தை
மீண்டும் சீரமைத்தால் மட்டுமே இந்தியாவில் உணவு பற்றாக்குறையை போக்க
முடியும் என்று கூறினார்,​​ இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.

"பாலாறு வடிநில பகுதியில் சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பு மற்றும் நிலைத்த
வேளாண்மை" என்ற தலைப்பில்,​​ தமிழ்நாடு நீர்வள,​​ நிலவளத் திட்டம்
சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு கிராமத்தில் உள்ள செல்வம் மண் புழு
பண்ணையில் புதன்கிழமை (17/03/10) நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு
பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ந.கணேசன் தலைமை வகித்தார்.​
செயற்பொறியாளர் க.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.​ நீர்வள ஆதாரத்
துறை செயற்பொறியாளர் இரா.இளங்கேவன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து
பேசினார்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் கோ.நம்மாழ்வார் கருத்தரங்கில் கலந்து
கொண்டு பேசியது:-

இரசாயனப் பூச்சி மருந்துகளும்,​​ களைக்கொல்லிகளும் செயற்கை உரங்களும்,​​
மண்ணில் உழவர்களின் நண்பர்களான மண்புழுக்கள்,​​ தட்டான்கள்,​​
நுண்ணுயிரிகளை அழித்து விட்டன.

உழவு,​​ உணவு,​​ உடல் நலம் ஆகிய மூன்றையும் நாம் பிரித்து பார்க்கக்
கூடாது.

உணவுத் தட்டுப்பாடு மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு
மூலகாரணம் விவசாய நிலங்கள்,​​ மக்களின் அடிப்படைத் தேவையான உணவு
உற்பத்திக்கு போதுமான அளவு பயன்படாதது தான்.

விவசாய மேலாண்மை மற்றும் நிலப் பயன்பாட்டை முறைப்படுத்தினாலே இந்தியாவில்
உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இயற்கை வேளாண்மை முறையை நமது முன்னோர்கள் சிறப்பாகக் கடைபிடித்து
வந்தனர்.

ஆனால் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்தி பாரம்பரிய வேளாண்மை முறையை
தகர்த்து மண் வளத்தையும்,​​ நீர்வளத்தையும் பாதிப்படையச் செய்து
விட்டார்கள்.

உழவர்கள் தங்கள் நிலத்தில் இருந்து சமூக மாற்றத்தை இயற்கை வேளான்மை மூலம்
ஏற்படுத்த வேண்டும்.​ உடல் நலம் காக்கும் உழவு மூலம் உணவில் தன்னிறைவு
அடைய வேண்டும்,​​ என்றார்.

செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் மூலம் ஏற்படும் மண்வள
பாதிப்பை தடுத்து நிறுத்த முடியும் என்பதை,​​ இயற்கை விவசாயி ப.செல்வராஜ்
விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தின் மூலம் கருத்தரங்கில் விளக்கினார்.

கோவை அக்கறை அறக்கட்டளை இயக்குனர் சி.மா.பிரிதிவிராஜ் "இன்றைய
விவசாயத்தில் ​ நெருக்கடிகள்" எனும் தலைப்பில் பேசினார்.

​பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ப.இளங்கோவன் நன்றி கூறினார்.

Message has been deleted

devoo

unread,
Mar 18, 2010, 2:38:27 PM3/18/10
to மின்தமிழ்
க்யூபாவின் வேளாண் முறைகளைச் சொல்வது இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமாக
இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்நாட்டின் வேளாண் வரலாறு ஐந்து நூற்றாண்டுகளுக்குள் ஐந்து முறை மாற்றம்
பெற்றுள்ளது; அந்நாடு தன் சூழலுக்கேற்ற வேளாண் முறைகளைப் பின்பற்றிப் பிற
நாடுகளின் சார்பை, முதலீட்டைத் தவிர்ப்பதில் வெற்றி கண்டுள்ளது; இயற்கை
வேளாண் முறையின் தொடக்க கால இழப்பீடுகளையும் திறமையுடன் சமாளித்தது.

ஒரு நாடு இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினால் முதலில் இருந்த உற்பத்தி
அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் பிடிக்கும். வளம் இழந்த மண்
மீண்டும் வளம் பெறவும், இயற்கை யாகவே பூச்சி மட்டும் நோய்களைக்
கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப் படும். ஆனால்,
க்யூபாவால் இக்கால அவகாசத்திற்காகக் காத்திருக்க இயலாது. ஆகவே க்யூபாவின்
அறிவியல் அறிஞர்களும், திட்டமிடுவோரும் புதிய வழிமுறைகளை இயற்கை
வேளாண்மையில் புகுத்தி இந்த கால அளவைக் குறைக்க முயன்றனர்.

1989 – 1990 தொடங்கி காடு வளர்ப்பில் அவர்கள் மிகவும் கவனம் செலுத்தினர்.
இன்று காடுகளின் அளவு 18% அதிகமாக உள்ளது. மற்ற லத்தீன் அமெரிக்க
நாடுகளில் காடுகளின் அளவு விரைவாகக் குறைந்து வருகிறது. க்யூபா கையாண்ட
முறை பாரம்பரிய விவசாய அறிவும், தற்பொழுதுள்ள வேளாண் அறிவியலின் புதிய
முறைகளும் சேர்ந்த ஒரு தொகுப்பாகும். மிகப்பெரிய அளவில் க்யூபாவில்
இயற்கை வேளாண்மைக்கு மாறாமல் இருந்திருந்தால், சோமாலியாவில் ஏற்பட்ட
உணவுப் பற்றாக்குறை நிலைதான் க்யூபாவிலும் ஏற்பட்டிருக்கும்.

பசுமைப் புரட்சியை அடுத்து உடனே பாரதமும் க்யூபாவைப்போல் மாற்று வழிகளில்
சென்றிருந்தால் பல இடர்களைத் தவிர்த்திருக்க முடியும்

தேவ்

தாரகை

unread,
Mar 18, 2010, 3:08:11 PM3/18/10
to மின்தமிழ்
சுவிட்சர்லாந்துடன் இணைந்து சாம்பல் சத்தின் முக்கியத்துவம் குறித்த
ஆராய்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை,
சுவிட்சர்லாந்தில் உள்ள உலக பொட்டாஷ் நிறுவனத்துடன் இணைந்து, 'மஞ்சள்
பயிரில் மகசூல் பெருக்க சாம்பல் சத்தின் முக்கியத்துவத்தை கணித்தல்' என்ற
தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக, உலக பொட்டாஷ் நிறுவனம்
3,450 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சியில் அண்ணாமலை
பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் கார்த்திகேயன் மற்றும் துறைத்
தலைவர் இரவிச்சந்திரன் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி தமிழகத்தின்
பல்வேறுபட்ட விவசாய நிலங்களில் சாம்பல் சத்து மூலம் மகசூலை பெருக்க
முடிவுகளை அளிக்கிறது.

நன்றி:- தினமலர்

N. Kannan

unread,
Mar 19, 2010, 1:53:47 AM3/19/10
to mint...@googlegroups.com
2010/3/19 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> நன்றி  திரு தாரகை.   திரு நம்மாழ்வார்   தீவிரமாகக் கூறுகிறார்   இயற்கை
> வேளாண்மையின்  நன்மைகளை.

இயற்கை வேளாண்மையின் சிறப்பை ஜப்பானில் முதன்முறை சொன்னபோது மாசனோபு
ஃபுக்குவோக்கா (Masanobu Fukuoka) வை யாரும் நம்பவில்லை. ஆயின் அவரது
முறையை ஆராய கலிபோர்னிய வேளாண்பல்கலைக்கழகங்கள் முன்வந்தன. அதன் சிறப்பை
உணர்ந்து அதை Integrated Pest Management என்று அமெரிக்காவில்
அறிமுகப்படுத்தியது. உண்மையில் அவரை யாருக் கண்டு கொள்ளாமல் இருந்த
காலத்தில் நம் ராஜீவ் காந்தி வரவேற்க, சாந்தினிகேதன் அவருக்கு
சிறப்புச்செய்தது. இந்திய அரசின் சிபாரிசில் அவருக்கு மக்சேசே விருதும்
கிடைத்தது.

நம்மாழ்வாரை ஆதரிக்க வேண்டியது நம் கடமை அல்லவோ?;-)

க.>

Message has been deleted

N. Kannan

unread,
Mar 19, 2010, 7:49:06 PM3/19/10
to mint...@googlegroups.com
ரங்கன்:

ஃபுக்குவொக்காசான் தனது வேளாண் தத்துவங்களை ‘ வைக்கோல் புரட்சி’ எனும்
நூலில் அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார். எல்லோரும் படிக்க வேண்டிய எளிய
நூலது.

நான் வாழ்ந்த மட்சுயாமா (மட்சு=pine tree யாமா=மலை) எனும் ஊருக்கு
அருகில் அவர் ஒரு சிறுமலையை தனது பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டார்.
அங்கிருக்கும் அவர் குடிலுக்கு நான் சென்றுள்ளேன். அது ஒன்றுக்கும்
உதவாது என்று கிடந்த குன்று. அங்கு இவர் சென்று மலையெங்கும் raddish,
கேரட் போன்ற காய்கறிகளை விதைத்தார். அவை விளைந்த போது அவைகளை அறுவடை
செய்யாமல் அப்படியே விட்டார். இப்படி இரண்டொரு சுழற்சியில் மண்ணின்
உரத்தன்மையைக் கூட்டினார். பின், அந்த மண்ணில் நெல் விதைகளைத் தூவினார்.
நெல் வளர்ந்த போது களை எடுக்கவில்லை. காரணம், பொதுவாக நெல்லை உண்ணும்
பூச்சிகளுக்கு புல், பூண்டுகள் உணவாகின. பின் நெல்லை மட்டும் அறுவடை
செய்தார். ஆச்சர்யம்! இவரது மகசூல், உரம், பூச்சி கொல்லி போட்டு செய்த
நவீன வேளாண்மை தந்த மகசூலுக்கு நிகராக நின்றது. இதைத்தான் கலிபோர்னியா
வேளாண் கழகங்கள் ஆர்வத்துடன் கவனித்தன. இயற்கையின் விதியை நன்கு
அறிந்தவர் ஃபுக்குவொக்காசான். இயற்கை யார் வயிற்றிலும் அடிப்பதில்லை.
எல்லோருக்கும் ஏற்ற உணவை அது வழங்குகிறது. யானை போடும் லத்தியை
நம்பித்தான் dung beetle எனும் வண்டினமே வாழ்கிறது. இயற்கையில் எல்லாத்
தாவர, விலங்கினத்திற்கும் ஒரு மதிப்புண்டு. ஒன்றை விட ஒன்று உயர்ந்ததல்ல.
ஆனால் ஒன்றை ஒன்று நம்பி வாழ்வன. ஆனால் மனித நாகரீகத்தில் எல்லாம்
தலைகீழ். அடுத்தவன் வயிற்றில் அடிப்பதே இவன் வேலையாக உள்ளது. இல்லையெனில்
மானுடம் முழுமைக்கும் உணவளிக்கும் திறனிருந்தும் பட்டினிச்சாவு ஏன்?

நமது சூழலுக்கு ஏற்றவாறு நாமும் வைக்கோல் புரட்சி செய்ய முடியும் (அவர்
வைக்கோலையும் மண்ணில் போட்டு மக்க விடுவார்). நம்மாழ்வார் பேசும்
வேளாண்மை பற்றிச் சொல்லுங்கள்.

சிவம் வாழத்தக்க வகையில் நாம் வாழப்பழகுவோம்!

நா.கண்ணன்

2010/3/19 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> மசநோபுவின்   முறைகளையும்  சிறிது   சொல்லுங்களேன்.

govindasami kannan

unread,
Mar 19, 2010, 8:48:36 PM3/19/10
to mint...@googlegroups.com
பசுமைப்புரட்சியால் மண்வளம் பாதிப்பு!

அரசியல்/மணல் கொள்ளையால் அனைத்துமே அல்லவா பாதிப்பு !
பகல் கொள்ளை ! கொள்ளையோ கொள்ளை ! காவிரியில் மணல் கொள்ளை !


"பாலாறு வடிநில பகுதியில் சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வேளாண்மை" என்ற தலைப்பில்,​​ தமிழ்நாடு நீர்வள,​​ நிலவளத் திட்டம் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரும் கலந்து கொண்டார் !

மண் வளத்துடன், சுற்றுச் சூழல் , நீர் பாதுகாப்பு "   எனக் கொடுக்கப்பட்ட தலைப்பின் ஒரு பகுதியில் வரும் மணல் கொள்ளை பற்றி எல்லா கூடங்களிலும் பேசுக ! எல்லா விவசாயிகளிடமும்  பேசுக !    எல்லாருடனும் பேசுக ! அவசரம் ! மிக அவசரமே !

தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய நாடுகள் என மூன்றாகப் பிரிந்து கிடந்தது அன்று !

ஆனால் இன்று !  மூன்றாக , சென்னை, திருச்சி, மதுரை என மூன்றாகப் பிரித்தனர் மணல் கொள்ளையர் அரசியல் கூட்டுடன் !

 
03-02-2010 - தேதியிட்ட  டைம்சு ஆப் இந்தியா  ஆங்கில நாளிதழில் சொல்கிறார்கள் ! நான் சொல்லவில்லை ! வாருங்கள் இயற்கை விவசாய ஆர்வலர்களே ! என் வலைப் பூவின் முகவரி கீழே : உள் நுழைக !
http://thamizhinezhuchi.blogspot.com/2010/02/blog-post_22.html

காவிரித்தாயின் அவலத்தை அவள் விடும் கண்ணீரைக் காணுங்கள் !
மற்ற ஆறுகளான  : பாலாறு, அமராவதி, பவானி, வைகை, தாமிரபரணி இவைகளுக்கும் அதே கதி ! அதோ  கதி !

என் மற்ற வலைத்தளங்களுக்கும் அழைக்கிறேன் உங்களை ! மண்ணின் மைந்தரை அழைக்கின்றேன் ! வருக ! வருக !

என்னுடைய "தாய்த் தமிழின் எழுச்சி காண்போம் " வலைப்பூவிற்கு அன்புடன் அழைக்கிறேன் ! இத் தமிழ்ப் பணியில் ஆர்வமிருப்பின் நீங்களும் பங்குபெற அழைக்கிறேன் ! வலைப்பூவில் நீங்கள் யாரென்று குறிப்பிட்டு ஒவ்வொரு தலைப்பின் கீழும் கருத்தினை பதிவு செய்தால் நலம் பயக்கும் . உங்கள் மேலான சிந்தனைகள் இருப்பின் அதனையும் பதிவு செய்க .

என்  வலைப்பததிவுகளின் முகவரி :

http://thamizhinezhuchi.blogspot.com/2010/02/blog-post_21.html
http://thamizhinezhuchi.blogspot.com/2010/02/blog-post_22.html
http://thamizhinezhuchi.blogspot.com/2010/03/blog-post.html
http://thamizhinezhuchi.blogspot.com/2010/03/blog-post_04.html
http://thamizhinezhuchi.blogspot.com/2010/03/blog-post_05.html
http://thamizhinezhuchi.blogspot.com/2010/03/blog-post_05.html

கோவிந்த கண்ணன்

2010/3/18 தாரகை <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
கோவிந்த  கண்ணன்

சிந்தனையை பொதுவில் வைப்போம்!
தமிழிலேயே பேச முயற்சிக்கலாமே !  வீட்டிற்குள்ளாவது !  நண்பர்களுக்கு இடையேயாவது  !
தாய்த் தமிழில் தமிழ் நாட்டில் மட்டுமாவது !



தாரகை

unread,
Mar 20, 2010, 1:17:06 AM3/20/10
to மின்தமிழ்
> என்னுடைய "தாய்த் தமிழின் எழுச்சி காண்போம் " வலைப்பூவிற்கு அன்புடன்
> அழைக்கிறேன் ! இத் தமிழ்ப் பணியில் ஆர்வமிருப்பின் நீங்களும் பங்குபெற
> அழைக்கிறேன்.

கோவிந்த கண்ணன் அவர்களே, மின்தமிழ் உறுப்பினர்களை உங்கள்
வலைத்தளங்களுக்கு அழைப்பது நல்லது. இருப்பினும், மின்தமிழ் குழுமம் ஒரு
குடும்ப விளக்காக அமைகிறது. தனிப்பட்ட வலைப் பக்கங்கள்
இருப்பினும்,இக்குழும அன்பர்கள் அவ்வப்போது மின்தமிழ் அவையில் தங்கள்
எழுத்துக்களைப் பதிய ஆர்வம் காட்டுவது ஒரு தாய்வீட்டில் உரிமையோடு
கிடைக்கும் அரவணைப்பு, ஆதரவு,பரிவு,உவகை மற்றும் பாராட்டுக்கள் மற்றயை
தமிழ்க் குழுமங்களுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு.

மின்தமிழ் அரவணைப்பால் நம்தமிழர் அடைவர் உளக் களிப்பு:-)

govindasami kannan

unread,
Mar 20, 2010, 1:57:42 AM3/20/10
to mint...@googlegroups.com
தாரகை  அவர்களே !
தங்களிடம் எனது கருத்தைக் கூறிய  அடுத்த நொடி வெங்கடாசலம் சுப்ரமணியன் ஆயுர்வேத தொடர்பை கீழ்க் கண்டவாறு : 
http://ayurvedamaruthuvam.blogspot.com/
வலைத்தள அழைப்பை மின் தமிழின் முன் அனுதியுடன் கொடுத்திருப்பார் என்றே கொள்கிறேன் . ஆயின் நானும் என்கருத்தை எவ்வாறு மின்தமிழ் குடும்பத்தினருடன் பரிமாறிக்கொள்வது ?


2010/3/20 தாரகை <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
கோவிந்த  கண்ணன்

govindasami kannan

unread,
Mar 20, 2010, 1:37:19 AM3/20/10
to mint...@googlegroups.com
தாரகை அவர்களே !
மின் தமிழ் ஏன்! வலைத்தள , மினம்பலம் , வலைப்பூ , எல்லாவற்றிற்கும் புதியவனாகையினால் இத் தடு மாற்றம் ! பொறுத்தருள்க ! சிந்தனையின் வெளிப்பாடான கருத்துக்களைப் பரவலாக்குவதும், அனைத்துத் தமிழுள்ளங்களையும் , ஒருமித்து , ஆங்கிலத் தாக்கத்திலிருந்து நான் உள்ளிட்ட அனிவரும் விடுபட முயலும் ஆரம்பச் சூரத்தனம் எனவும் கொள்ளப்படலாம் ! இயல்புதானே !
என் வலைத்தளத்துக்கு அழைப்பது அவ்வளவு சரியில்லையோ என நயத்தகு நாகரீகத்துடன் எனக்கு உணர்த்தப்பட்டாகவே கொள்வேன் !

மின்தமிழில் நான் பதிவு செய்து கணக்கிலடங்க மின்னஞ்சலைப் பெறுகிறேன் யான் ! அனுபவமும் நன்றாகவே உள்ளது ! கருத்தின் தொடர்பாக என் வலைத்தள அறிவிப்பாவது செய்திட மின்தமிழில் வாய்ப்பு உளதா ?
என்றும் அன்புடன்

கோவிந்த கண்ணன்

   

2010/3/20 தாரகை <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
கோவிந்த  கண்ணன்

இரும்புக்கை மாயாவி

unread,
Mar 19, 2010, 9:27:27 PM3/19/10
to mint...@googlegroups.com
மணல் திருட்டு மிக மிக அநியாயம். நம் கண்முன்னே நடக்கும் பகல் கொள்ளை. 

இதற்குத் தீர்வு 

1. நம்முடைய கட்டுமானத் தொழில்நுட்பம் மாற வேண்டும். ஆற்று மணல் தேவைப்படாத அளவிற்கு.

2. ஆற்றில் எப்போதும் தண்ணீர் இருந்தால் இப்பிரச்சனை இல்லை.  


2010/3/19 govindasami kannan <govindas...@gmail.com>

N. Kannan

unread,
Mar 20, 2010, 3:56:14 AM3/20/10
to mint...@googlegroups.com
அன்பின் கோவிந்த கண்ணன்:

உங்கள் வலைப்பதிவு பற்றிக் கூற தங்களுக்கு எல்லா உரிமையுமுண்டு. டாக்டர்
கண்ணன் சொல்ல வருவது, ஒரு இழையில் கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கும்
போது உங்கள் கருத்தையும் சுருக்கமாகச் சொல்லி, பின் மேல் விவரங்கள்
குறிப்பிட்ட வலைத்தளத்தில் காணலாம் என்று சொல்வது ஒரு வலை நாகரீகம்.
அவ்வளவுதான்.

மேலும், மின்தமிழில் ‘மிகை’ உணர்ச்சியைக் குறைத்துக் கொண்டு முடிந்தவரை
அறிவு பூர்வமாக ஒரு பொருளைப் பற்றிப் பேசிப்பழக வேண்டும். கடந்த ஒரு
நூற்றாண்டாக தமிழ் இனம் மிக மோசமான பொய்களை மூளைச்சலவை போல் செய்து
நம்மைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அதிலிருந்து நாம் விடுபட
வேண்டுமெனில் மிகவும் நிதானமாக இருக்க வேண்டும் நமது அணுகுமுறை. தமிழினம்
உண்மையான சுதந்திரத்தை எப்போது காணுமெனில், இந்த பதப்படுத்தல் விலகும்
போதுதான் என்பது வெள்ளிடை மலை.

நிறைய சிந்தியுங்கள். எழுதுங்கள். ‘போயிற்று வல்லுயிர் சாபம்’ என்று
மாறன் சொல்வது போல், எங்கள் தலைமுறையோடு இப்பதப்படுத்தல் போகட்டும்.!

நா.கண்ணன்

2010/3/20 govindasami kannan <govindas...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Mar 20, 2010, 8:35:44 PM3/20/10
to mint...@googlegroups.com
'...இயற்கையில் எல்லாத்

தாவர, விலங்கினத்திற்கும் ஒரு மதிப்புண்டு. ஒன்றை விட ஒன்று உயர்ந்ததல்ல.
ஆனால் ஒன்றை ஒன்று நம்பி வாழ்வன. ஆனால் மனித நாகரீகத்தில் எல்லாம்
தலைகீழ். அடுத்தவன் வயிற்றில் அடிப்பதே இவன் வேலையாக உள்ளது...'

இது உண்மை நிலையை சிசனத்துடன் தெரிவிக்கிறது.
இன்னம்பூரான்


2010/3/20 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.



--
இன்னம்பூரான்

Innamburan Innamburan

unread,
Mar 20, 2010, 8:36:50 PM3/20/10
to mint...@googlegroups.com
'விசனத்துடன்' பிழை நேர்ந்துவிட்டது.

2010/3/20 Innamburan Innamburan <innam...@googlemail.com>

N. Kannan

unread,
Mar 20, 2010, 10:39:37 PM3/20/10
to mint...@googlegroups.com
நான் சினத்துடன் என்று வாசித்தேன்.
தார்மீகக்கோபம் ;-)

க.>

2010/3/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Venkatachalam Subramanian

unread,
Mar 21, 2010, 7:35:13 AM3/21/10
to mint...@googlegroups.com

 

Thanks to: vij...@yahoo.com in other yahoo group

 

Subject:  The Chengalpattu records: Startling features of Tamil society in the 18th century emerge from palm leaf accounts

India – Once Plentiful: Records reveal British schemes diminshed crops and dismantled a native system of abundance

http://www.infinity foundation. com/mandala/ t_es/t_es_ crops_frameset. htm

Most of us college-educated Indians were taught that inefficient technologies and low productivities pervaded through long ages in practically all parts of India," states Dr. S.K. Bajaj, director of the Centre for Policy Studies, a Chennai think tank. In the 1920s Gandhi's Young India presented some proof of a rich and prosperous pre-British India.

Then in the 1960s, the Centre's founder, historian Sri Dharampal, discovered at the Thanjavur Tamil University a set of palmleaf records documenting a British survey of 2,000 villages of Chengalpattu, a large area surrounding present-day Chennai. "Startling features of Tamil society in the 18th century emerge from these palm leaf accounts," said Bajaj. "Between 1762 and 1766 there were villages which produced up to 12 tons of paddy a hectare. This level of productivity can be obtained only in the best of the Green Revolution areas of the country, with the most advanced, expensive and often environmentally ruinous technologies. The annual availability of all food averaged five tons per household; the national average in India today is three-quarters ton. Whatever the ways of pre-British Indian society, they were definitely neither ineffective nor inefficient. "

Food production is just one aspect of the colonial impact being addressed by the Centre. The Chengalpattu records are part of Dharampal's research which has uncovered a politically, technologically and economically vibrant Indian society of the 18th century. "That society was dismantled and atomized by the British, by force," states the Centre's brochure, "and the diverse

skills of the Indian people were pushed out of the public sphere and made to rust and decay. For India to become a vibrant and dynamic nation again, we only need to re-awaken the political, economic and technological skills of our people." The records are especially useful for understanding how Hindu religious institutions were originally supported, and why they declined under British rule.

Dharampal believes Indians must rediscover their nation's traditional sense of chitta, mind, and flow of time, kala. "Since we have lost practically all contact with our tradition, and all comprehension of our chitta and kala, there are no standards and norms on the basis of which to answer questions that arise in ordinary social living. Ordinary Indians perhaps still retain an innate understanding of right action and right thought, but our elite society seems to have lost all touch with any stable norms of behavior and thinking. The present attempt at imitating the world and following every passing fad can hardly lead us anywhere. We shall have no options until we evolve a conceptual framework of our own, based on chitta and kala, to discriminate between right and wrong, what is useful for us and what is futile."

The Centre's three main researchers are: M.D. Srinivas, a theoretical physicist teaching at the University of Madras, who specializes in Indian science; T.M. Mukundan, a mechanical engineer specializing in technologies such as water management and iron smelting; and J.K. Bajaj, also a

theoretical physicist, now involved in economy, agriculture and energy.

The Chengalpattu data was a Godsend for the Centre, and has allowed them to support many of their central theories about pre-British India. The accounts detail a complete economic, social, administrative and religious picture of the society. Every temple, pond, garden and grove in a locality is listed, the occupation, family size, home and lot size of 62,500 households meticulously recorded. Crop yields between 1762-66 are tallied. Per capita production of food in this region (which is of average fertility) was more than five times that achieved on average today.

Bajaj and his associates didn't do all their work in a library. The team set off in person across the Chengalpattu region to verify the picture presented in the leafs. They found most of these villages deserted--perhaps since the beginning of the 19th century--by all who had any resources, education or skills. Inhabitants had left behind their palatial houses, their temples and groves. Abandoned as well were the eyrs--the irrigation tanks and channels--often cut across by British-built roads which left dry land on one side and stagnant water on the other. Their on-the-ground inspection confirmed many aspects of the inscribed leaves.

Of importance to Hindu history is how the religious institutions were maintained. Lands called manyam were assigned for the support of various functions, including religious activities. Certain percentages of the production from this land were divided among the various public functions, such as administration, army, education and religious institutions. Small temples received income from nearby villages. Larger ones, such as those of the great center of Kanchipuram, received income from over a thousand villages. The amount dedicated to religion from the manyam lands, according to the leaves, was a substantial four percent of the total produce of the region. It supported temples, academies of learning, dancers and musicians. A portion was also provided for Muslim and Jain institutions. This system resulted in the vast network of temples, most now neglected, seen across South India.

The British government changed this system. In some areas they calculated a percentage figure of total tax revenue going to the institutions and fixed it as a dollar amount, in 1799 dollars. Some institutions still receive this same government allotment--worth next to nothing today. Others became owners of the land from which a share of production once came. This introduced its own set of problems, also still with us today, where temples are unable to collect the rent. The collective result was that the great religious and cultural institutions of the 18th century decayed and lost touch with the community. The British taxes were so high there was no money left to support the administration or cultural establishments. School teachers, musicians, dancers, and keepers of the irrigation works, moved away, or took to farming. By 1871, 80% of the area was engaged in agriculture (up from less than 50% earlier), and many of the services and industrial activities that dominated the Chengalpattu society of the 1770s ceased to exist. The value of the Centre's research is obvious: India, and Hinduism with it, flourished in the not-so-distant past--without the Green Revolution or the Industrial Revolution or the Worker's Revolution. Dharampal, Bajaj and their associates want India to look back at this time, dissect and understand it, and use that indigenous knowledge to reinvigorate the world's largest democracy.

How the Green Revolution failed

Dr. Ramon De La Peña of the University of Hawaii is one of the world's foremost experts on rice. He also happens to be a neighbor of the ashram from which Hinduism Today is produced. Asked to comment on the Chengalpattu reports, he said: "Such yields as 12 tons per hectare were definitely possible with the old methods and two crops a year. The best modern US production is eight to nine tons per hectare (one annual crop). The world average is presently three to five tons/hectare. Before the Green Revolution [which introduced new, high-yielding strains] the average was one to one-and-a-half tons/hectare. The Green

Revolution worked in some areas but not in others. The short variety of rice developed for it grew just one meter high. To be productive, it needed fertilizer, and the fields had to be kept weed free. The old varieties were two meters high, not so suspectible to weed competition, resistant to insects and did not need fertilizer. If the new varieties are not managed correctly--with fertilizers, pesticides and insecticides- -the harvest is less than with the old methods of minimum input. New is not always better."

Dharma's Foundation

Dr. J.K. Bajaj lauds duty to create and share abundance.

All reliable statistics indicate that the average availability and consumption of food in our country is among the lowest in the world. We on the average eat at least one-third less of staple foods than the norm in almost every other part of the world. And India is perhaps the only major country of the world where cattle do not share in the produce of the lands. The Indian people and cattle are living in a state of hunger while highly fertile Indian lands, even those that fall in the plains of the great life-giving rivers, such as the Ganga, are lying idle.

This has been the situation of India for about two hundred years.

India was never so callous about scarcity and hunger. Growing an abundance of food and sharing it in plenty, annabahulya and annadana, have always constituted the foundation of dharma. All else, even the search for moksha, liberation, is built on this foundation. We believe that if India is to come into her own and assert her civilizational greatness in the present-day world, then first of all we have to overcome scarcity and recover the traditional discipline of ensuring plentiful food to share with all.

In order to propagate and make this discipline a national priority, we invited prominent saints to the temple of Sri Tirumala, Andhra Pradesh, on October 11, 1996. Srimat Kaliyan Vanamamali Ramanuja Jeer Swami told our gathering that scarcity in India is not merely an economic failure, it is a moral failure. Sri Kanchi Kamakoti Shankaracharya said we neither need to learn anything fresh from anywhere, nor establish any new institution. We only have to recollect the memory of the discipline that has always been with us. Tirumala-Tirupati Devasthanam' s executive officer, M.K.R. Vinayak, said annadana was discontinued not due to a lack of foodgrains, but a lack of moral values. The assembled saints unanimously blessed the release of our book, Annan Bahu Kurvita, in Hindi, Tamil and English, which treats all aspects of annabahulya and annadana.

"Annan Bahu Kurvita" is available from: Centre for Policy Studies, 2, Thyagarajapuram, Mylapore, Chennai, 600 004, India.


devoo

unread,
Mar 21, 2010, 8:05:06 AM3/21/10
to மின்தமிழ்
*அந்நம் பஹு குர்வீத*

Just before this final unravelling of the ultimate reality for a
seeker who has been intensely educated and rigorously prepared for the
darsana, the Upanisad prescribes a number of vratas, inviolable rules
of living, for such a seeker to follow. And these are:

annam na nindyat. tadvratam.

(Do not look down upon anna. That is the inviolable discipline of life
for the one who knows.)

annam na paricaksita. tadvratam.

(Do not neglect anna. That is the inviolable discipline of life for
the one who knows.)

annam bahu kurvita. tadvratam.

(Multiply anna many-fold. Ensure an abundance of food all around. That
is the inviolable discipline of life for the one who knows.)

na kamcana vasatau pratyacaksita. tadvratam. tasmadyaya kaya ca
vidhaya bahvannam prapnuyat. aradhyasma annamityacaksate.

(Do not turn away anyone who comes seeking your hospitality. This is
the inviolable discipline of the one who knows. Therefore, obtain a
great abundance of anna, exert all your efforts to ensure such
abundance; and welcome all seekers with the announcement that the food
is ready, partake of it.)
Such is the discipline of abundance and sharing that the
Taittiriyopanisad teaches. And the Rgveda emphasizes the discipline in
even stronger terms, saying:

moghamannam vindate apracetah. satyam bravimi vadha itsa tasya.
naryamanam pusyati no sakhayam. kevalagho bhavati kevaladi.

(Food that comes to the one who does not give is indeed a waste. This
is the truth. I, the rsi, say it. The food that such a one obtains is
not only wasted, in fact it comes as his very death. He feeds neither
the devas, the upholders of various aspects of creation, nor the men
who arrive at his door as friends, seekers and guests. Eating for
himself alone, he becomes the partaker of sin alone.)

The discipline of growing an abundance of food and sharing it in
abundance that is taught in the sruti, like the Rgveda and the
Taittiriyopanisad, is of course emphasized again and again in the
smrti texts like the Mahabharata, the Ramayana, the various puranas
and the dharmasastras of different times and communities.

The Mahabharata recalls the greatness of food and the giving of food
in a particularly imposing manner. As is well known, in the
Mahabharata, Bhisma Pitamaha, the grand wise old man of Kuruvamsa,
gives a long discourse instructing Yudhisthira in great detail about
all aspects of dharma. This discourse runs to about 25,000 verses and
forms nearly a quarter of the epic. Bhisma dies almost immediately
after the end of this discourse, and Yudhisthira after much persuasion
undertakes to perform an asvamedhayajna. After accomplishing the yajna
and being relieved of the great effort and activity that such an
observance involves, Yudhisthira requests Srikrsna to let him know the
essence of the entire teaching of Bhisma. Srikrsna, in response,
utters just 15 verses, the first ten of which lay down the centrality
ofannadana, the giving of food, in the life of a disciplined
householder and the next five celebrate the greatness of food, its
emergence out of the vital essences of the earth and its intimate
connection with all life.
The first verse Srikrsna utters while summarizing the teachings of
Bhisma for Yudhisthira is:

annena dharyate sarvam jagadetaccaracaram
annat prabhavati pranah pratyaksam nasti samsayah

(The world, both animate and inanimate, is sustained by food. Life
arises from food: this is observed all around, there can be no doubt
about it.)
And he ends his discourse on annadana with:

annadah pranado loke pranadah sarvado bhavet
tasmadannam visesena datavyam bhutimicchata

(The giver of food is the giver of life, and indeed of everything
else. Therefore, one who is desirous of well-being in this world and
beyond should specially endeavour to give food.) The Bhavisyapurana in
its chapter on annadanamahatmya, the greatness of the giving of food,
while probably recounting this incident from the Mahabharata, renders
the teachings of Srikrsna in the cryptic commanding phrase:

dadasvannam dadasvannam dadasvannam yudhisthira

(O Yudhisthira! Give food! Give food! And, keep
giving!)


The Indian Tradition of Growing and Sharing Food
J.K. Bajaj and M.D. Srinivas

On Mar 21, 6:35 am, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:
> Thanks to: viji...@yahoo.com in other yahoo group


>
> Subject:  The Chengalpattu records: Startling features of Tamil society in
> the 18th century emerge from palm leaf accounts
>
> India – Once Plentiful: Records reveal British schemes diminshed crops and
> dismantled a native system of abundance
>

> http://www.infinityfoundation. com/mandala/ t_es/t_es_ crops_frameset. htm

Innamburan Innamburan

unread,
Mar 21, 2010, 8:13:32 AM3/21/10
to mint...@googlegroups.com
கூகள் ஆண்டவனே அல்ல.
இ இ

2010/3/20 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

devoo

unread,
Mar 21, 2010, 6:05:25 PM3/21/10
to மின்தமிழ்

*இயற்கை வேளாண்மை எல்லாருக்கும் சோறு போடுமா ?*

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பலகாலமாக தீவிர இயற்கை விவசாயம் செய்பவர்.
ஐ.நா. சபையின் உணவு மற்றும் உழவு அமைப்பின் ஆய்வை முன்னே வைக்கிறார்.
அவர் சொல்வது இதுதான்-

* பொலிவியா நாட்டில் இயற்கை வழி விவசாயம் மூலம் ஹெக்டேருக்கு 15 டன்கள்
உருளைக்கிழங்கு விளைவித்துள்ளார்கள். அதற்கு முன்பு ஹெக்டருக்கு 4
டன்கள் மட்டுமே கிடைத்து வந்தது.

* இயற்கை விவசாயத்தின் மூலம் கியூபாவில் காய்கறிகளின் விளைச்சல் இரு
மடங்கானது.

* பஞ்சத்தில் சிக்கித் தவித்த எத்தியோப்பியாவில் சர்க்கரை வள்ளிக்
கிழங்கின்
விளைச்சல் ஹெக்டருக்கு 6 டன்னிலிருந்து 30 டன் என்று உயர்ந்தது.

* கென்யாவில் மக்காச்சோள விளைச்சல் ஹெக்டருக்கு 2.25 டன்னிலிருந்து 9 டன்
என்று உயர்ந்தது.

* பாகிஸ்தானில் மாம்பழ விளைச்சல் 7.5 டன் என்பதில் இருந்து 22 டன் ஆக
உயர்ந்தது.

மேற்கண்ட எல்லா இடங்களிலும் ஏதோ 10%, 20% என விளைச்சல் உயரவில்லை 3
மடங்கு முதல் 6 மடங்கு வரை உயர்ந்திருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டிய
அம்சமாகும்.

இவ்வளவு ஏன், நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திராவில் நாகரத்தின நாயுடு
ஒற்றை நாற்று, இயற்கை விவசாயம் மூலம் ஏக்கருக்கு 6,900 கிலோ நெல்
விளைவித்துள்ளார். இந்தச் சாதனைகளெல்லாம் இயற்கை விவசாயத்தின் மூலம்
நடந்தவைதான்.

http://organicananth.blogspot.com/2009/12/blog-post_4093.html

The Prince believes strongly in the clear advantages of organic
farming.
In 1986, The Prince decided to convert the Duchy Home Farm to a
completely organic system
to demonstrate the environmental and commercial benefits.

Twenty years later, Home Farm is not only a successful and viable
working farm, but is a flagship for the benefits of an organic,
sustainable form of agriculture.

Rare Breeds
The Prince is Patron of the Rare Breeds Survival Trust and has worked
for many years to help preserve the rare native breeds of the UK,
which have been replaced over the years by foreign breeds and breeding
programmes more suited to intensive farming methods. Animals such as
Tamworth and Large Black pigs, Irish Moiled, Gloucester, Shetland and
British White cattle, as well as Hebridean and Cotswold sheep feature
at the farm, and are highly prized by The Prince for the quality of
their produce and their natural affinity with the British farming
landscape.

Duchy Originals
The first product in the Duchy Originals range was the Oaten biscuit
made with organic oats from Home Farm in 1992. Years later, the
organic food business sells a range of products from garden furniture
to jams. All profits go to The Prince's Charities Foundation.

Education and Research
Home Farm has links with the Soil Association and Garden Organic and
is one of the Elm Farm Research Centre’s network of 12 demonstration
farms for those interested in converting to the organic system.
Visits, literature and workshops are used to promote the links between
food, farming, health and the environment.

Vegetable box scheme
The Farm now runs a successful vegetable box scheme providing locally
sourced and fresh organic produce to over 140 families in the area.
The Prince encourages the growth of heritage seeds for the box scheme,
sometimes just on a very small plot just to keep the gene pool alive.

http://www.princeofwales.gov.uk/personalprofiles/residences/highgrove/homefarm/

தேவ்

N. Kannan

unread,
Mar 22, 2010, 4:22:17 AM3/22/10
to mint...@googlegroups.com
2010/3/21 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:

> India – Once Plentiful: Records reveal British schemes diminshed crops and
> dismantled a native system of abundance

> Most of us college-educated Indians were taught that inefficient


> technologies and low productivities pervaded through long ages in
> practically all parts of India," states Dr. S.K. Bajaj, director of the
> Centre for Policy Studies, a Chennai think tank. In the 1920s Gandhi's Young
> India presented some proof of a rich and prosperous pre-British India.


இது பற்றி நான் இவ்விழையில் முன்பே சுட்டிக்காட்டியிருந்தேன். Centre for
Policy Studies பெருமக்கள் தஞ்சை பல்கலைக்கழக சுவடிகளை மின்வருடல் செய்து
இவ்வுண்மையைக் கண்டு கொண்டபோது, நானிருந்தேன். அவர்களை வீடியோ பேட்டி கூட
எடுத்துள்ளேன்.

http://www.tamilheritage.org/old/video/moindex.html

இங்கு போய் கடைசி வீடியோதத் தட்டுங்கள்!

நமது முதுசொம்மில் இல்லாதது எது? ;-)

கண்ணன்

devoo

unread,
Apr 8, 2010, 2:29:15 AM4/8/10
to மின்தமிழ்
*ஒற்றை நாற்று நடவு முறை*

நெல் சாகுபடியில் ஒற்றை நாற்று நடவு முறை என்பது, அதிக இடை
வெளியில் ஒரு குழிக்கு ஒரே ஒரு நாற்று மட்டும் நடவு செய்வதே.

இம்முறையில் விதைத்தேவை குறைகிறது; பூச்சித் தொல்லை குறைகிறது;
விளைச்சல் அதிகம்.

பள்ளிபாளையம் வட்டாரத்தில் 1,800 ஹெக்டேர் பரப்பில் செம்மை நெல்
சாகுபடித் திட்டத்தின் கீழ் ஒற்றை நாற்று நடவு முறையை விவசாயிகள்
ஆர்வத்துடன் பின்பற்றுகின்றனர்.ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை மட்டுமே
பயன்படுத்தி ஒரு நாற்றினை சதுர நடவு முறையில் மார்க்கர் என்ற நடவு
அடையாளமிடும் கருவி மூலம் நடவு செய்தனர். களைகளை கோனோவீடர்
என்ற கருவி மூலம் நடவு செய்த 10ம் நாள் முதல் 4 முறை 10 நாட்கள்
இடைவெளியில் வயலிலேயே மிதித்துவிட்டனர். ஒருங்கிணைந்த தானிய
அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 50 இடங்களிலும், தேசிய அபிவிருத்தி
திட்டத்தின்
கீழ் 100 இடங்களிலும் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டன.
மார்க்கர் கருவி 150, கோனோவீடர்கள் 150 மானிய விலையில்
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

செம்மை நெல் சாகுபடி திடல்களில் உற்பத்தி தூர்கள் 60 முதல் 100 வரை
இருந்தன. கதிர்களில் மணிகள் சராசரியாக 150 முதல் 250 மணிகள் இருந்தன.
பூச்சி நோய்த் தாக்குதல் செம்மைநெல் சாகுபடியில் மிகக்குறைவாகவே
இருந்தது.
நடனசபாபதி என்பவர் செம்மை நெல் சாகுபடி வயலில் ஒரு ஏக்கரில்
61 மூட்டை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவது, செம்மை நெல் சாகுபடி
என்ற ஒற்றை நாற்று முறைக்கு மாறுவது, மாவட்ட அளவில்
விதை வங்கி வைப்பது, இயற்கை முறையில் வீட்டுத் தோட்டத்தில்
வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரி்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள்
பெண் விவசாயிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மதுரையில் அக்ரோ க்ளப் வேளாண்மையில் உதவி வருகிறது.

http://www.infotamil.agriinfomedia.com


வெள்ளை மாளிகையில் இயற்கை வேளாண்மை -

http://www.inhabitat.com/2010/03/31/obamas-expanding-the-white-house-organicgarden

அமெரிகாவின் முதல் பெண்மணி மேற்கொண்ட சிறு முயற்சி ஆயினும், இது ஒரு
சிறந்த முன்னுதாரணம். டாக்டர் கலாம் அவர்களும் குடியரசுத் தலைவராக
இருந்தபோது
வேளாண்மையில் ஆர்வம் காட்டியவர்;
விவசாயிகளை ராஷ்ட்ரபதி பவனுக்கு வரவழைத்தார்


தேவ்


On Mar 21, 8:42 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஒற்றை  நாற்று, இயற்கை விவசாயம் மூலம் <,
>
> இந்த  ஒற்றை  நாற்று   இயற்கை  விவசாய  முறையை   SIR  முறை  என்கிறார்கள்.
> SYSTEM OF RICE INTENSIFICATION.   தெரிந்தவர்கள்   இதைப்பற்றிச்  சொன்னால்
> நலம்.  இல்லையேல்    இருக்கவே  இருக்கிறது   நம்ம   அரைகுறைப்  படிப்பு,
> கேள்விஞான   கச்சேரி.:--))))

> >http://www.princeofwales.gov.uk/personalprofiles/residences/highgrove...
>
> > தேவ்

தாரகை

unread,
Apr 8, 2010, 3:34:53 AM4/8/10
to மின்தமிழ்
அதிக மகசூல் தரும் இயற்கை விதை நேர்த்தி!

பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து
பாதுகாக்கவும்,​​ அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை
வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமிழக
விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வேதியியல் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள்,​​
பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது பயிர்கள் பூச்சி
மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும்,​​
நிலமும் விஷத்தன்மை மற்றும் மாசு அடைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.​
இத்தகைய சூழலில் விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்,​​ அதிக இலாபம்
மற்றும் மகசூல் பெறவும் இயற்கை விதை நேர்த்தி செய்வது மிகவும் பயனுள்ளதாக
அமையும்.

http://www.dinamani.com/Images/article/2010/4/7/08magasul.jpg
இயற்கை விதை நேர்த்தி முறையில் விதைகளை ஆட்டூட்டக் கரைசலுடன் ஊற வைத்து ​
பதப்படுத்தும் விவசாயி.

இயற்கை விதை நேர்த்தி முறை:-

விவசாயிகள் தங்களின் விதைகளை இயற்கை முறையில் தயார் செய்யப்படும்

ஆட்டூட்டக்கரைசல் ​(ஆட்டுப்புழுக்கை,​​ ஆட்டு சிறுநீர்,​​ ஆட்டுப்பால்,​​
ஆட்டுத்தயிர்,​​ வாழைப்பழம்,​​ இளநீர்,​​ கடலைப் பி(பு)ண்ணாக்கு,​​
கரும்புச்சாறு மற்றும் கள் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் கலவை)

அல்லது

பஞ்சகவ்யா கலவையை ​(சாணம்,​​ மாட்டு சிறுநீர்,​​ பால்,​​ தயிர்,​​
நாட்டுச்சர்க்கரை,​​ வாழைப்பழம்,​​ கரும்புச்சாறு,​​ கள்,​​ ஈஸ்ட்
மற்றும் கடலைப் பி(பு)ண்ணாக்கு)​ 300 மில்லி கிராம் என்ற அளவில் 10
இலிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்திக்கு பயன்படுத்தலாம்.

நெல் மற்றும் கடினமான தோலுடைய விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து
விதைக்கலாம்.

இவ்வாறு விதை நேர்த்தி செய்தபின் விதைகளை நிழலில் நன்றாக உலர்த்திய
பின்பே விதைக்க வேண்டும்.​ இவ்வாறு இயற்கை முறையில் விதை நேர்த்தி
செய்வதால் நாற்றுகள் நன்றாக வாளிப்பாக வளரும்.​ அதிக எண்ணிக்கையில் வேர்
பிடிப்பு காணப்படும்.​ பயிர்கள் நன்றாக வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை
பெறும்,​​ பூச்சிகள்,​​ நோய் தாக்குதல்கள் இருக்காது.

அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகளை பஞ்சகவ்யா அல்லது ஆட்டூட்டக்
கரைசலில் நனைத்து நிழலில் காய வைத்து விவசாயிகள் எளிதாக சேமிக்கலாம்.​
இதன் வாயிலாக விதைகளை பூச்சிகளும்,​​ நோயும் தாக்காது.​ முனைப்புத்
திறனும் அடுத்த பருவத்திலும் குறையாமல் பாதுகாக்கப்படும்.

பிற பயன்கள்:​​-

நெல்,​​ தக்காளி நாற்றுகளை,​​ வாழைக் கன்றுகளை பஞ்சகவ்யா மற்றும்
ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நடவு செய்யும் போது பூஞ்சானம்,​​ வைரஸ்
மற்றும் வேர் புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.​ குறைந்த
செலவில் விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை வேளாண் பொருள்களை கொண்டு
செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும்.

மேலும் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் இலாபம் பெற முடியும்.​ எனவே தமிழக
விவசாயிகள் இயற்கை விதை நேர்த்தி வாயிலாக அதிக இலாபம் பெறலாம் என
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர்
தி.இராஜ்பிரவின் தெரிவித்துள்ளார்.

ஜி.சுந்தரராஜன்

தாரகை

unread,
Apr 8, 2010, 3:41:37 AM4/8/10
to மின்தமிழ்
கத்​த​ரி​க்காய் "தானே" என்று கண்​டு​கொள்​ளா​மல் இருந்​தால்,​​ நாளை
அனைத்து தாவ​ரங்​க​ளுக்​கும் மர​பணு மாற்​றப்​ப​டும் ஆபத்து ஏற்​ப​டும்.​
எனவே,​​ பி.டி.​ கத்​தரி நாட்​டில் நுழை​வதை மக்​களை கடு​மை​யாக எதிர்த்​
துப் போராட வேண்​டும் என்​றார் இயற்கை வேளாண் விஞ்​ஞானி கோ.​ நம்​மாழ்​
வார்.

த.மு​.எச,​​ தமிழ்​நாடு அறி​வி​யல் இயக்​கம் சார்​பில் தஞ்​சா​வூ​ரில்
சனிக்​கி​ழமை (03/04/10) இரவு நடை​பெற்ற மக்​கள் சந்​திப்​புக் கூட்​டத்​
தில்,​​ பேரா​சி​ரி​யர் வெ.​ சுகு​மார் எழு​திய மர​பணு தொழில்​நுட்​ப​
மும் பி.டி.​ கத்​த​ரி​யும் என்ற நூலை வெளி​யிட்டு அவர் மேலும் பேசி​யது:​
-

வெள்​ளம் ஏற்​ப​டும் ​போ​தெல்​லாம் திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் சுமார் 2
இலட்​சம் ஏக்​கர் பயிர்​கள் மூழ்கி அழி​வது வாடிக்​கை​யாக உள்​ளது.​ நான்
சிறு​வ​னாக இருந்​த​போது,​​ இப் பகு​தி​யில் மடுவு முழுங்கி,​​ தங்​கச்
சம்பா போன்ற நெல் இரகங்​கள் இருந்​தன.​ அந்த இரகங்​கள் ஒரு ஆளை​விட அதிக
உய​ரம் வள​ரும்.​ தண்​ணீர் மட்​டம் உயர உயர அது​வும் வள​ரும்,​​ கதி​ரும்
பாதிக்​காது.

இதன் ​மூ​லம் வைக்​கோல் அதி​க​மா​கக் கிடைத்து,​​ அவற்​றைத் தின்ற மாடு​க​
ளின் எண்​ணிக்​கை​யும் அதி​க​மாக இருந்​தன.​ பாலும்,​​ இயற்கை உர​மும்
அதி​க​ள​வில் கிடைத்து,​​ மக்​கள் வள​மாக இருந்​த​னர்.

ஆனால்,​​ தற்​போது பயிர்​க​ளின் வளர்ச்சி முக்​கால் முழம் அள​வி​லேயே உள்​
ளது.​ மாடு​க​ளுக்​கும் தீனி கிடைக்​க​வில்லை.​ இரத்​தச் சோகை​யால் உல​
கில் அதி​கம் பாதிக்​கப்​பட்​டோர் நமது கிரா​மங்​க​ளில்​தான் உள்​ள​னர்.

இந்​தி​யா​வில் மட்​டும் 30,000க்கும் மேற்​பட்ட நெல் இரகங்​கள் இருந்​
தன.​ விவ​சா​யி​கள் ஒரு​வ​ருக்கு ஒரு​வர் இவற்​றைப் பரி​மா​றிக் கொண்​ட​
னர்.​ பசுமை புரட்​சிக்​குப் பின்​னர் ஐ.ஆர்.​ 20,​ ஐ.ஆர்.​ 50 போன்ற 4
நெல் இரகங்​கள்​ தான் இருந்​தன.​ பின்​னர் அவை​யும் காணா​மல் போய்​விட்​
டன.

அன்று விவ​சா​யத்​துக்கு வெளியி​லி​ருந்து எந்த முத​லீ​டும் வர​வில்லை.​
இன்றோ,​​ ​ எல்​லா​வற்​றை​யும் வெளியி​லி​ருந்தே வாங்​கு​கின்​ற​னர்.​
நிலைத்தை விற்​றுக் கடனை அடைக்​கின்​ற​னர்.​ நிலை கைமீ​றும்​போது தற்​கொ​
லை​யும் செய்து கொள்​கின்​ற​னர்.

இந்​தி​யா​வில் கடந்த சில ஆண்​டு​க​ளில் மட்​டும் 2 இலட்​சத்​துக்​கும்
அதி​க​மான விவ​சா​யி​கள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ள​னர்.​ ஆசைப்​பட்டு
இந்த முடிவை அவர்​கள் ​ எடுப்​ப​தில்லை.​ வாழ முடி​யாது என்ற நிலை​
யில்,​​ அவர்​கள் எடுக்ó​கும் முடி​வால்,​​ அவர்​க​ளின் குடும்​பங்​களே
சிதை​கின்​றன.

விவ​சா​யி​க​ளுக்கு நன்மை செய்​வ​தற்​காக பசு​மைப் புரட்சி கொண்டு வரப்​ப​
ட​வில்லை.​ 2ஆம் உல​கப் போர் நின்ற பின்​னர்,​​ அது​வரை போரில் பயன்​ப​
டுத்​தப்​பட்டு வந்த இரசா​ய​னங்​களை,​​ பூச்​சிக்​கொல்லி என்ற பெய​ரில்
இந்​திய வயல்​க​ளில் ​ கொட்​டு​வ​தற்​கா​கவே பசு​மைப் புரட்சி கொண்​டு​வ​
ரப்​பட்​டது.​ இதன் மூலம் அமெ​ரிக்​கா​வின் ஹென்றி போர்டு,​​ இராக்​பெல்​
ல​ரின் இரசா​யன நிறு​வ​னங்​கள் கொள்ளை இலாபம் அடைந்​தன.

அதே​போ​லத்​தான்,​​ தற்​போது மர​பணு மாற்று கத்​த​ரியை நம் நாட்​டில்
நுழைக்​கப் பார்க்​கின்​ற​னர்.​ அதற்கு கோவை வேளாண் பல்​க​லைக்​க​ழ​கம்
போன்​றவை துணை போகின்​றன.

தமி​ழ​கத்​தில் ஒவ்​வொரு ஊருக்​கும் ஒரு கத்​தரி வகை உள்​ளது.​ சுவை​யும்
ஊருக்கு ஏற்ப மாறும்.​ இந்​தி​யா​வில் 3,000 வகை கத்​த​ரி​கள் உள்​ளன.​
பி.டி.​ கத்​த​ரியை அனு​ம​தித்​தால் நாட்​டில் ஒரு கத்​தரி வகை மட்​டும்​
தான் இருக்​கும்.​ நாடு முழு​வ​தும் எதை உற்​பத்தி செய்ய வேண்​டும்;​ எதை
உண்ண வேண்​டும் என்​பதை ஒரு கம்​பெனி முடிவு செய்​யும் நிலை உரு​வா​கி​வி​
டும்.

புழு​வுக்கு எதி​ரி​யாக இருக்​கும் பிடி கத்​தரி மனி​தர்​க​ளுக்​கும் எதி​
ரி​தான்.​ இதை உண்​டால் புற்று நோய்,​​ ஆண்,​​ பெண் மலட்​டுத் தன்மை போன்​
றவை ஏற்​ப​டு​வ​தோடு,​​ தாவ​ரங்​க​ளின் செல் கட்​ட​மைப்பே குலைந்து
விடும்.

அறி​வி​யல் கண்​டு​பிப்​பு​கள் எல்​லாம் நன்மை செய்​யும் என்று ஏமாற வேண்​
டாம்;​ தீமை​யும் செய்​யும்.​ பி.டி.​ கத்​தி​ரி​யால் விவ​சா​யி​க​ளின்
வறுமை போக்​கப்​ப​டும் எனக் கூறு​கின்​ற​னர்.​ தொழில்​நுட்​பம் மட்​டும்
பட்​டி​னி​யைப் போக்​காது,​​ அர​சின் மக்​கள் நலன் சார்ந்த கொள்​கை​
யும்,​​ சீரான உற்​பத்தி,​​ விநி​யோ​க​மும்​தான் இதைச் சாத்​தி​யப்​ப​
டுத்​தும் என்​றார் நம்​மாழ்​வார்.

​கூட்​டத்​துக்கு தமீம் அன்​சாரி தலைமை வகித்​தார்.​ ம.​ சந்​தி​ர​
மெளலி,​​ வழக்​கு​ரை​ஞர் வெ.​ ஜீவக்​கு​மார் உள்​ளிட்​டோர் பேசி​னர்.​
நூலை நம்​மாழ்​வார் வெளி​யிட,​​ டெல்டா ரோட்​டரி சங்​கத் தலை​வர் ஏ.​
சீனி​வா​சன் பெற்​றுக்​கொண்​டார்.​ பெ.​ விஜ​ய​கு​மார் நன்றி கூறி​னார்.

தாரகை

unread,
Apr 8, 2010, 3:46:34 AM4/8/10
to மின்தமிழ்
இயற்கை வேளாண் முறையில் நெல் சாகுபடி செய்த பாளையங்கோட்டை விவசாயிக்கு
ஹெக்டேருக்கு 11,215 கிலோ மகசூல் கிடைத்துள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி கர்னல் தேவதாஸ். இவர் பாறைக்குளம்
வருவாய் கிராமத்தில் சுமார் 13 ஏக்கர் பரப்பில் 3 ஆண்டுகளாக அங்கக வேளாண்
முறையில் நெல் சாகுபடி செய்து நல்ல மகசூல் பெற்று வருகிறார்.

இவர் தனது வயலில் பசுமாட்டு சாணம், கோமியம் மற்றும் இயற்கை இடுபொருள்
கொண்ட கலவைகளை உரமாக இட்டு வந்ததால் நெற்பயிரில் எவ்வித பூச்சி நோய்
தாக்குதல் இன்றி வளமையான பயிராகவும் கதிர்கள் திரட்சியாகவும் அதிக
மணிகள் கொண்டதாகவும் இருந்தது.

இந்த விவசாயி இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்த கிச்சடி சம்பா என்ற
நெல் இரகம் மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அறுவடை
செய்யப்பட்டது. இந்த நெல் இரகத்தில் ஹெக்டேருக்கு 11,215 கிலோ மகசூல்


கிடைத்தது.

இதுபோன்று நெல்லை மாவட்ட விவசாயிகள் அனைவரும் அங்கக வேளாண் முறையினைக்
கடைபிடித்து மண்வளத்தை பெருக்கி இடுபொருள்களின் செலவைக் குறைத்து அதிக
இலாபம் ஈட்ட வேண்டும் என திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் ச.
சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாரகை

unread,
Apr 8, 2010, 3:50:31 AM4/8/10
to மின்தமிழ்
தண்ணீர் குறைவான பகுதியிலும் அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்ய உகந்ததாக
"சொட்டு நீர்ப் பாசன முறை" திகழ்கிறது.​ இப்போது இப் பாசன முறை "துல்லிய
வேளாண் திட்டம்" என்ற அடிப்படையில் விவசாயிகளிடம் பிரபலமாகி வருகிறது.​ ​
இதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

இத் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ​(1 ஹெக்டேர் என்பது இரண்டரை
ஏக்கர்)​ ரூ.1.5 இலட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.​ சொட்டு
நீர்ப் பாசனம் செய்வதற்கான இயந்திரம் வாங்க ரூ.1 இலட்சமும்,​​ நீரில்
கரையக்கூடிய உரங்களுக்காக ரூ.50 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.​
இந்த ரூ.1.5 இலட்சமும் விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் முழுவதும்
இலவசமாகக் கிடைக்கிறது.

இதன் காரணமாக ​ புதுச்சேரியில் விவசாயிகளிடம் பிரபலமாகி வரும் இத்
திட்டத்தின் கீழ் இதுவரை 200 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டு
வரப்பட்டுள்ளது.​ மேலும்,​​ இன்னும் 5 ஆண்டுகளில் 1000 ஹெக்டேர்
நிலப்பரப்பை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் கரும்பு,​​ வாழை,​​ காய்கறி பயிர்களான
கத்திரி,​​ அவரை,​​ வெண்டை போன்றவை பயிரிடப்படுகின்றன.​ சொட்டு நீர்ப்
பாசனம் செடிக்கு நேரடியாக வேர் பகுதிகளில் நீர்,​​ மற்றும் நீரில்
கரையக்கூடிய உரங்கள் கிடைக்கச் செய்கிறது.​ இதன் மூலம் ஓர் ஏக்கர்
நிலப்பரப்புக்குத் தேவையான ​நீரை 5 ஏக்கருக்குப் பயன்படுத்த முடியும்.

வயலில் செடிகள் எண்ணிக்கை அதிக அளவில் நடப்படுகிறது.

இதனால் விளைச்சல் அதிகம்.​ சாதாரண நிலத்தில் கிடைக்கும் விளைச்சலைக்
காட்டிலும் 40 சதவீதம் விளைச்சல் அதிகம்.​ நீர் வீணாகாமல்
பாதுகாக்கப்படுவதால் களை வருவதும் தவிர்க்கப்படுகிறது.​ இதனால் களை
எடுக்க தொழிலாளர்களுக்கான கூலி மிச்சம்.

செடியின் வேருக்கு நேரடியாக நீரும்,​​ நீரில் கரையும் உரங்களும் போய்ச்
சேருவதால் மார்க்கெட்டுக்குத் தேவையான கத்தரி உள்ளிட்ட வீரிய இரக
காய்கறிகளைப் பயிரிடலாம்.​ ​காய்கறி சாகுபடி உள்ளிட்ட பயிர்களுக்கு
துல்லிய வேளாண் திட்டத்துக்காக இன்னும் 2 ஆண்டுகளுக்கு இலவசமாக
இடுபொருள்கள் வழங்கப்படும் என்று முதல்வர் வைத்திலிங்கம் பட்ஜெட் உரையில்
அறிவித்துள்ளார்.

இதனால் புதுச்சேரியில் காய்கறி சாகுபடி உள்ளிட்டவை அதிக அளவில் விளைச்சல்
இருக்கும்.​ இத் திட்டத்தின் கீழ் பயன் பெற புதுச்சேரியில் உள்ள
பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி விண்ணப்பம்
பெற்று,​​ அதை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து,வேளாண் அலுவலர்கள் ஆய்வுக்குப் பிறகு அவர்களின்
பரிந்துரை அடிப்படையில் ​ இத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தேர்வு
செய்யப்படுவர்.​ இத் திட்டத்துக்காக புதுவை மாநிலத்தில் ஆண்டுதோறும் ரூ.
1.16 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.​ ​ இத் திட்டத்தின் கீழ் தண்ணீர்
சேமிக்கப்படுவதுடன் மின்சார செலவும் மிச்சமாகிறது.​ மின் தடை அடிக்கடி
ஏற்படும் நிலையில் இத் திட்டம் இப்போது அவசியத் தேவையாக உள்ளது.

தாரகை

unread,
Apr 8, 2010, 3:51:15 AM4/8/10
to மின்தமிழ்
http://www.dinamani.com/Images/article/2010/4/7/08sottu.jpg

சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்க்கப்படும் கத்தரிச் செடிகள்.​ (உள்படம் )
சொட்டு நீர்ப் பாசன இயந்திரம்.

devoo

unread,
Apr 9, 2010, 2:34:15 PM4/9/10
to மின்தமிழ்
தாரகையார் க்ருஷி வர்ஷமாகப் பொழிந்து விட்டார்; அடுத்து வரும் விக்ருதி
ஆண்டில் நல்ல விளைச்சல் இருக்குமாம் - க்ஷேமோ அஸ்து ந:


>> இந்த முறையைப் பற்றிப் பண்டைய தமிழகத்தில் அறிந்திருந்தனரா? <<

முடிச்சுகளுடன் வயலின் அகலத்தில் உள்ள கயிற்றை இருவர் பிடித்துக் கொள்ள
முடிச்சை ஒட்டியே நாற்று நட்டுக்கொண்டு செல்வதைப் பார்த்துள்ளேன்.
நடுகை முடிந்ததும் வரிசை கோணாமல் நாற்று நடப்பட்டிருக்கும். ஆனால்
இது ஒற்றை நாற்று முறையா கவனித்ததில்லை. தற்போதுள்ள முறையில்
இயந்திரங்கள் பயனாகின்றன


தேவ்


On Apr 9, 1:15 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஒற்றை நாற்று முறை பற்றி   நல்ல தகவல்களைத்  தந்த திரு தேவ் அவ்ர்களுக்கு
> நன்றி.  ஆனால்  இந்த முறையைப் பற்றிப் பண்டைய தமிழகத்தில் அறிந்திருந்தனரா?
> இயற்கை வேளாண் இருந்த அளவிற்கு இந்த அதிகத் திறன் வழிமுறைகளும் பேணப்படாமல்
> போயிருக்க வாய்ப்பில்லையே.  கொஞ்சம் பொறுமையாகத் தேடவேண்டும்.
>
> இயற்கை வேளாண் பற்றியும் பயனுள்ள இடுகைகளைக் கொணர்ந்து நமது கவனத்திற்கு
> வைக்கின்றார் திரு தாரகை. அவர்க்கு நம் நன்றிகளை உரித்தாக்குவோம். இந்த இழை
> ஆரம்பித்து மெதுவாக நகரினும் ஒரு நல்ல மாதிரி இழையாகக் கல்வி அம்சம் சிறந்து
> விளங்கக் காண்கின்றோம். அதற்குப் பெரும் பங்கு திரு தேவ், திரு தாரகை, திரு
> கண்ணன், திரு ரெ கா இன்னும் பலருடையது எனலாம்.

> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>

> > To unsubscribe, reply using "remove me" as the subject.

தாரகை

unread,
Apr 11, 2010, 11:04:00 PM4/11/10
to மின்தமிழ்
அலட்சியத்தால் அல்லாடும் நிலம் - நீர் - உணவு!

"உழன்றும் உழவே தலை", என உழவின் உயர்வைக் குறள் சொல்கிறது.

"உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை", என ஒளவையின் நல்வழி உயர்ந்த
வாழ்க்கைக்குத் திசைகாட்டுகிறது.

உணவு எனப்படுவது நிலமும், நீரும் என உணவின் பிறப்பிடத்தைக் கூறி உழவனைப்
பசிப்பிணி மருத்துவன் என புறநானூறு இலக்கணப்படுத்துகிறது.

குறிஞ்சி என்னும் மலை சார்ந்த வனங்களின் மழை வளத்தால் வழியும் நீர்,
முல்லை வழி ஆறுகளாகி, மருத நிலத்தில் நகர்ந்து செந்நெல் வயல்களைச்
செழிக்கச் செய்தபின் மீன் வளம் பெருகிக் காணும் நெய்தலை ஒட்டிய கடலில்
சங்கமிக்கும்.

மழை வளம் குன்றி குறிஞ்சியும், முல்லையும் வறண்டால் பாலை என சங்கத் தமிழ்
நிலங்களை வரிசைப்படுத்துகிறது.

இந்நிலங்களில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களின் உணவு முறைகள்,
உறைவிட வழிகளை எல்லாம் வகை வகையாய்த் தொகுத்து தமிழ் இலக்கியங்கள் பதிவு
செய்திருக்கின்றன.

நாடு பூராவிலும் பூகோள, மண்வள, இயற்கை தட்பவெட்ப பருவகால மழையின்
அளவுகள், தன்மைகளின் அடிப்படையில் பண்டைய அனுபவம் மற்றும் அறிவியல்
பூர்வமான பயிர்வாரி முறை, மழை நீர், நிலத்தடி நீர் பயன்பாடுகள், பிரதேச
உணவுப் பழக்கங்கள் அமைந்தாலன்றி நாட்டின் உணவுப் பாதுகாப்பு கானல்
நீராகிவிடும்.

பருப்பு, பயறு, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் விளையத்தக்க
நிலங்களுக்கெல்லாம் பாசன வசதிகளைச் செய்து கொடுத்த கண்மூடித்தனமான
செயல்களால் சாகுபடியில் கரும்பு, நெல் ஒருபுறமும், பருப்பு பயறு எண்ணெய்
வித்துகள் மறுபுறமும் நிலைகுலைந்து விளைச்சல் சரிவடைந்தது.

எள்ளும், கொள்ளும் விளைந்த நிலங்களில் நெல், கரும்பு என்றானால் மரபுவழி
நஞ்சைப் பாசனம் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தியில் தடுமாற்றங்கள் வராதா?

தினை, சாமை, சீரகம், கடுகு, கேழ்வரகு, பழவகைகள், மூலிகைகள் என்று
விளையும் மலைப்பிரதேசங்களில்கூட நிலத்தடி நீரை வைத்து நெல்லும் கரும்பும்
பயிரிட அனுமதித்தால் மலைப்பகுதிகளும் விரைந்து வறண்டு, அங்கு வாழும்
உயிரினங்கள் தாகத்தால் மடிவது பதற்றமான நிலையல்லவா?

நீர், நிலப் பயன்பாடுகளில் சென்ற 35 ஆண்டுகளில் முரண்பாடுகள்
முற்றிவிட்டன.

புவிவெப்பமும் சேர்ந்து குடிநீருக்காக மலைஉச்சி வன உயிரினங்களும்,
நிலப்பரப்பு மக்களும் ஒருசேர அலைவதற்கு முற்றிலும் சுயநலத்தை உள்ளடக்கிய
பாசனத் திட்டங்களும், நீர்பராமரிப்பும் திறமையற்ற அரசு நிர்வாகங்களுமே
மூலகாரணங்கள்.

மக்கள் தொகை குறைவாகவும், தட்ப வெப்பநிலை மிதமாகவும், கொண்டுள்ள மேலை
நாடுகள் தங்களுக்கு ஏற்புடையது என வகுத்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறை,
உணவுப் பழக்கம், நவீன கருவிகளின் பயன்பாடு போன்றவற்றையெல்லாம் வரம்பின்றி
இந்தியாவுக்குள் புகுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயலாகும்.

மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம் கொண்டு பலதரப்பட்ட தட்பவெப்ப
மண்டலங்களையும் அவற்றுக்கு ஏற்புடையதான இயற்கையோடு இயைந்த உணவு மற்றும்
உற்பத்தி சாதனங்களையும் புறந்தள்ளினால் வேலை இல்லாத் திண்டாட்டமும்,
எரிசக்தி பற்றாக்குறையும், சுற்றுப்புறச்சூழல் கேடும் தோன்றிவிடும்
என்பதைச் சிந்திக்கத் தவறுவது விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில்
குதிப்பதற்கு நிகரான நிலைப்பாடாகும்.

இந்தியாவில் மிகைப்பட்ட வேளாண் எந்திர உபயோகங்களினால் நன்மைக்கு மாறாகத்
தீமைகளே அதிகமாகும். விவசாய வேலைகளில் இயன்ற அளவு மனித உழைப்புக்கு
முன்னுரிமை தருவதன் மூலம் வலுவான சமூக அமைதியையும் நலமிகுந்த பொது
ஒழுக்கத்தையும் நிலைநிறுத்த முடியும்.

நிலத்தடி நீரைப் பாசனத்துக்காகப் பயன்படுத்தும் போதும், அளவின்றி இரசாயன
உரங்களைப் பயிர்களுக்குத் தொடர்ந்து இடும் போதும், வளம் குறைந்து விளை
நிலங்கள் மலட்டுத் தன்மைக்கு வந்துவிடும். இரசாயன பூச்சிக்கொல்லி
மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகள் நன்மை செய்யும் புழு பூச்சிகளையும்
அழித்துவிடுவதால் காலப்போக்கில் உயிரினங்களின் இயல்பான உணவு சுழற்சி
முறைகளில் தடைகள் முற்றி சுற்றுப்புறச் சூழல்களுக்குக் கேடுகள்
சூழ்ந்துவிடும்.

ஆட்சி அதிகாரம் தங்கள் வசமே என்பார்க்கும், கொலையின் கொடிய முரடர்க்கும்,
கல்விஇல்லாத குருடர்க்கும், நீதியைத் தேடி அலுத்துப் போனதாய்க் கூறும்
தீவிரவாத வன்முறையாளர்க்கும்கூட பசி வந்தால் ஆற்றுவது உணவு ஒன்றுதான்.
வாழும் மனிதர்க்கெல்லாம் உணவு என்பதையே முதல்நிலையில் வைக்க
வேண்டியதாகிறது.

வேலை இல்லை என்னும் ஓலமும், வேலைக்கு ஆள் இல்லை என்கிற அவலமும்
அகல்வதற்கு இதைவிடவும் வேறு எது சரியானது, எளிதானது.

எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று மூன்று ஆண்டுகளாகத் திரிந்த பத்து
வாலிபர்கள் வாய்ப்பு ஏதும் இருந்தால் தங்களுக்கு வழிகாட்டும்படி
கேட்டார்கள்.

விவசாய வேலைக்குத் தயாரா என்று வினவியதற்கு தாங்கள் பட்டதாரிகள்
என்றும், தங்களிடம் உள்ள நிலங்களில்கூட வேலை பார்க்க விருப்பம்
இல்லாமல்தான் வேறு வேலை தேடி அலைவதாகவும் சொன்னார்கள்.

அவர்களில் சிலர் குழந்தைகளோடு இருப்பதும், மனைவியின் கூலியை வைத்தே
தங்களது குடும்பம் நடப்பதாகவும் அறிய முடிந்தது. பத்துபேருமே பத்தாம்
வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை எதிலுமே சொல்லிக் கொள்ளும்படியாய்
மதிப்பெண் பெறவில்லை என்பதை அறிய வேதனை மிகுந்தது.

தகுதி, திறமை என்று எதையும் பெற்றிராத அவர்களிடம் இருந்தது வயதும் உடலும்
மட்டும்தான்.

10ம் வகுப்போடு இவர்களை வடிகட்டியிருந்தால் தாங்கள் வாழும் இடங்களிலேயே
குலத்தொழில், அல்லது வேளாண்மையில் ஈடுபட்டு இந்நேரம் தக்க அனுபவமும்,
பயிற்சியும் பெற்று சொந்தக் காலில் நிற்கும் சுயமரியாதையான வாழ்வை உறுதி
செய்திருக்க முடியும்.

ஆனால் நம் ஊர் விவசாயத்தில்தான் என்ன இருக்கிறது உழவடை, அறுவடை என்று
எல்லாவற்றுக்குமே எந்திரங்கள் புழங்கிவிட்டன. அதனால் உடலுழைப்புக்கான
வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன.

மலை முதல் கடற்கரை வரையிலும் இப்போது குடிக்கத் தண்ணீர் இல்லாத நிலையும்
எப்படி வந்தது என்கிற கேள்வி வலுவடைகிறது. இயற்கை வழி மண்டல வழியான
பயிர்வாரி முறை தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்று உலக உணவுப்
பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜோக்கிம் வான் பிரெளன்
2008ம் ஆண்டு கூறியதை தீர ஆராய்வது இப்போது அவசியம் ஆகிறது.

ஆகவே, தேவையை உள்ளடக்கிய தன்னிறைவான உற்பத்திக்கு நதிப்படுகை வழி
பயிர்வாரி முறையும், விளைநிலங்களில் இயற்கை சார்ந்த பயிர் சுழற்சி
முறையும் அவசியம்.
"பானை சோற்றுக்கு பருக்கை பதம்" என்பதுபோல இதை அந்த பத்து பட்டதாரிகளின்
நிலையை வைத்தே இன்றைய நடைமுறைகளை விருப்பு, வெறுப்பின்றி விவாதிக்க


வேண்டும்.

மலிவான கல்விச் சாளரங்களின் வழியாய் உயர்கல்வி மாயைக்குள் நுழைந்து
பட்டமும் பெற்ற பின்னர் போட்டிகளில் தாக்குப்பிடிக்க முடியாத அநேகர் அந்த
10 பேரைப் போலவே திகைத்துப் போயுள்ளனர்.

சுயநலத்தில் ஆளுமையைத் தொலைத்து நிற்கும் ஆட்சியில், போலி மருந்து
தயாரித்து விற்பது போன்ற சமூக விரோதச்செயல்களுக்கு படித்த பலரும் வலிந்து
தள்ளப்படுகிற துயரம் பெருகி வருகிறது. உணவுத் தேடலின் அருமையை
இவர்களுக்குப் புரிய வைக்க அரசாங்கம் தவறிவிட்டது.

உற்றுநோக்கினால் 50 சதத்திற்கும் கீழ் பிளஸ் டூ படிப்பிலும் 60
சதத்திற்கு கீழ் பட்டப்படிப்பிலும், 75 சதத்திற்கு கீழ் மருத்துவம்,
சட்டம், பொறியியல் முதலான உயர் கல்வியிலும் மாணவர்களைச் சேர்ப்பது
வேண்டாத ஒன்று என்கிற முடிவுக்கு வந்தே தீரவேண்டும்.
பட்டதாரிகளில் பலர் திறமை என்று எதுவுமின்றி எதிலும் நிலைக்க முடியாமல்
சும்மா இருப்போர் பெருகுவதால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும்.

ஆக, அனைவருக்கும் கல்வி என்பதை 10ம் வகுப்போடு அல்லது 14 வயதுக்குள்
முடித்துவிடவேண்டும்.

அடுத்தகட்ட படிப்புக்கு விதை நேர்த்தி செய்வதுபோல தேவைக்கு ஏற்றாற்போல்
தரம் பார்த்து அனுமதிக்கிற நடைமுறையைத் துணிந்து தோற்றுவிக்க வேண்டும்.

உயர் கல்வி என்பது ஓர் அலங்காரப்பொருள் அல்ல, ஆடம்பரத்துக்கு ஆனதும்
கிடையாது, ஒளிரும் அறிவையும், மிளிரும் திறமையையும் மெருகேற்றிக் கொள்கிற
அரியதோர் வாய்ப்பு என கருதும் மனப்பாங்கு கொள்கைத் திட்டங்களை வடித்து
வழங்கும் அரசாங்கத்திடம் முதலில் இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் 10 முதலாளிகளை வலுவடையச் செய்வதைக் காட்டிலும் 10
இலட்சம் விவசாயிகளை தலைநிமிரச் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது.

வேளாண்மையை மறந்து வெள்ளாமையை இழந்து, விவசாயம் விளங்காத ஒன்று என்று
கருதி உயர்கல்வித் தொழில் முதல் கார் தொழில் வரை வரிச்சலுகைகளைத் தரும்
ஆட்சியில் முரண்பாடுகள் முற்றி மக்களின் கும்பி எரிந்து குடலும் கருகிப்
போவது உறுதி.

சி.வையாபுரி

devoo

unread,
Apr 12, 2010, 1:34:17 PM4/12/10
to மின்தமிழ்
வீழ்ந்து கிடக்கும் வேளாண்மை

உணவுக்கு உத்தரவாத மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த இருப்பது
வரவேற்க வேண்டிய ஒரு செய்தி. அதேசமயம் அந்த உணவை உற்பத்தி செய்யும்
விவசாயிகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரமான விவசாயத்துக்கும்
எந்த உத்தரவாதமும் இல்லாமல் தொடர்கின்ற நிலை வேதனைக்குரியது.

அமெரிக்காவின் பிரெய்ரி பகுதியிலும், ரஷியாவின் ஸ்டெப்பி
பகுதியிலும் கோதுமை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும்,
தென் அமெரிக்காவில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கும்,
ஐரோப்பிய நாடுகளில் பழத்தோட்டம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும்,
தென் கிழக்காசிய நாடுகளில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கும்
ஒரு சராசரி இந்திய விவசாயி எதிர்கொள்ளும் பிரச்னை எதுவும் கிடையாது.

இந்திய விவசாயத்துக்கு ஆதாரமான பருவமழைதான் விவசாயிகளின்
மிகப்பெரிய பிரச்னை என்பதை மறுப்பதற்கில்லை. பருவக்காற்று
முன் கூட்டியோ அல்லது தாமதமாகவோ வீசினாலும் அல்லது பொய்த்துப்
போனாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டும்தான். மேலும், இவற்றின்
எதிர்மறை விளைவான வெள்ளம், வறட்சி ஆகியவற்றினாலும்
விவசாயிகள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

பருவ மழையின் பாதகங்களை நிலத்தடி நீராதாரத்தைக் கொண்டுதான்
நமது விவசாயிகள் சமாளித்து வருகின்றனர். அதற்கும் பெரும்
சோதனையாக மின்வெட்டு உருவெடுத்துள்ளது. தொழிற்சாலைகளுக்கு
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 22 மணி நேரம் வரை மின்சாரம்
வழங்குகின்ற அரசு, விவசாயத்துக்குத் தொடர்ச்சியாகப் பத்து மணி
நேரம்கூட மின்சாரம் அளிக்க மறுப்பதால் வேளாண் உற்பத்தி
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்தப் பாசனப் பரப்பில்
44 விழுக்காடு நிலங்கள் கிணற்றுப் பாசனத்தை நம்பியே உள்ளன.
90 விழுக்காடு காய்கனிகள் கிணற்றுப்பாசன நிலங்களிலிருந்துதான்
விளைவிக்கப்படுகின்றன. விவசாயத்துக்கான மின்வெட்டின் காரணமாக
விளைபொருள் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இப்போதைய
விலைவாசி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

பசுமைப் புரட்சியின் சாதனைகளில் முக்கியமானது இந்திய விவசாயிகளை
ரசாயன உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்கும் பழக்கப் படுத்தி
அடிமைகளாக்கியதாகும். ரசாயன உரங்கள் மண்வளத்தையும் நுண்ணுயிர்ப்
பெருக்கத்தையும் அழித்ததோடல்லாமல் மறைமுகமாகக் கால் நடை வளர்ப்பையும்
வெகுவாகக் குறைத்துவிட்டது. கால்நடை வளர்ப்பு என்பது பால் மற்றும்
இறைச்சி
உற்பத்திக்காக மட்டுமன்றி இயற்கை உரமான சாண எரு உற்பத்திக்காகவும்
மேற்கொள்ளப்பட்டு வந்தது. இயற்கை உரத்தையும் இரட்டிப்பு வருமானத்தையும்
வழங்கிய கால் நடைகளின் இடத்தை ரசாயன உரப் பயன்பாடு ஆக்கிரமித்து அழித்து
விட்டது. இதனால் பால் உற்பத்தியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே
வருகிறது.
பால் விலை லிட்டருக்கு ரூபாய் நாற்பதை நெருங்கும் நாள் வெகு தொலைவில்
இல்லை.

விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தாம்
வழங்குகின்ற கடன் தொகையில் 40 விழுக்காடு வரை ரசாயன உரமாக
வலிந்து திணிக்கும் போக்கு தொடர்கிறது. இதன் காரணமாக இயற்கை
விவசாயத்தில் ஈடுபடுகின்ற ஒரு சிலரும் ரசாயன உரப் பயன்பாட்டிலிருந்து
விடுபட இயலாத சூழ்நிலை நிலவுகிறது. உர நிறுவனங்களுக்கு கோடிகோடியாய்
கொட்டிக் கொடுக்கப்படும் மானியத் தொகை விவசாயிகளின் வாழ்வில்
எத்தகைய முன்னேற் றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான்
இன்றுவரை தொடரும் யதார்த்த நிலை. உழுதுண்டு வாழ்ந்தவரைக் கடனில்
உழல வைத்ததில் ரசாயன உரத்தின் பங்கே அதிகம்.

இடுபொருள் செலவே இல்லாத பாரம்பரியமான நமது இயற்கை விவசாயத்தை
மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்கும் வேளாண்
பல்கலைக்கழகங்களுக்கும் உள்ளது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்
காப்பீடு
செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக் கான இழப்பீடு கேட்டு
வீதியில்
இறங்கிப் போராட வேண்டிய நிலையி லேயே உள்ளனர். பயிர்க்காப்பீட்டுத்
திட்டம்
என்பதே ஒரு பெயரளவுக் கான திட்டமாகத்தான் இருக்கிறது. பயிர்க்காப்பீட்டு
நடைமுறை விதிகள் ஒரு சாதாரண எளிய விவசாயி அணுகக்கூடிய வகையில்
அமையவில்லை என்பதுதான் உண்மை நிலை.

பல்வேறு சிரமங்களுக்கிடையே விளைவிக்கப்படும் விளைபொருளுக்குப்
போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து விவசாயிகள் நஷ்டத்தையே
எதிர்கொள்கின்றனர். இடைத்தரகர்களாலும் வியாபாரிகளாலும் விவசாயிகள்
சுரண்டப்படும் நிலை தொடர்கிறது. பல மாவட் டங்களில் நியாயவிலை ஒழுங்குமுறை
விற்பனைக்கூடங்கள் முடங்கிப் போயுள் ளன. இவை மீண்டும் செயல்பட
உரிய நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும். ஓராண்டில் பல மாதங்கள்
மூடிக்கிடக்கிற சட்டப் பேரவைக்குப் புதிய கட்டடம் கட்டுகிற அரசு,
மாவட்டந்தோறும்
காய் கனிகளை நீண்ட நாள்களுக்குப் பாதுகாத்து வைக்க உதவும் குளிர் பதனக்
கிடங்குகளை அமைக்க முன்வர வேண்டும். இதன்மூலம் விவசாயிகளும்
பொதுமக்களும் பயன்பெறுவதோடு வியாபாரிகளின் சுரண்டலையும் விலை
வீழ்ச்சியையும் தடுக்க முடியும்.

மக்கள்தொகை வேகமாகப் பெருகி வருகிற வேளையில் விளைநிலங்களின்
பரப்பளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வருவது, உணவு உற்பத்தியில்
எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். நாடு முழுவதும் விளைநிலங்களை
வரையறுத்து அவற்றைத் தொழில் துறை மற்றும் பிறதுறை பயன்பாட்டுக்காக
ஆக்கிரமித்தலைத் தடுக்கச் சட்டம் இயற்ற வேண்டும். இல்லாவிட்டால்,
சட்டத்தில்
மட்டும் உணவுக்கு உத்தரவாதம் அளித்துவிட்டு நடைமுறையில் உணவுத்
தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க முடியாத நிலை தொடரும் என்பது கவனத்தில்
கொள்ளத்தக்கது.

அன்னிய முதலீடு இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு
அனைத்துத் துறைகளிலும் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற் காக எவ்வளவு
சலுகைகள் அளிக்க முடியுமோ அவ்வளவு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
வேளாண் துறையிலும் அன்னிய முதலீட்டைக் கொண்டுவர குறுக்கு வழி
ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதுதான் சிறப்புப் பொருளாதார
மண்டலம். அயல்நாட்டு நிறுவனங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்
வேளாண் உற்பத்தியில் ஈடுபட எவ்விதத் தடையுமில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

விவசாய நிலங்களை வளைத்துப் போட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
உருவாக்கப்படுவதன் உள்நோக்கமும் அதுவாகத்தான் இருக்க முடியும். இத்தகைய
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் மரபணு மாற்றம்
செய்யப்பட்ட பயிர்களின் பரிசோதனைச் சாலைகளாக மாறப்போகும் ஆபத்தும்
நம்மை எதிர் நோக்கியே உள்ளது.

வளர்ச்சியின் பலன்களைப் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கும் சென்றடையச்
செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார்.
கடந்த ஐந்தாண்டுகளில் கிராமப்புற விவசாயிகளுக்கு எந்த மாதிரியான
பலன்கள் சென்றடைந்துள்ளன என்பதற்கு பிரதமர்தான் விளக்கமளிக்க வேண்டும்.

மத்திய அரசு கூறி வருகின்ற வளர்ச்சியின் விளைவாக கிராமப்புற
விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடும், மின்சாரத் தட்டுப்பாடும், விவசாயக்
கூலியாள்கள் கிடைக்காமையும்தான் அதிகரித்துள்ளது. மொத்த உள் நாட்டு
உற்பத்தியிலும் வேலைவாய்ப்பிலும் விவசாயத்தின் பங்களிப்பு ஆண்டுக்காண்டு
கணிசமாகக் குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத் தக்கது.

நேற்றுவரை நதிநீருக்காக, பருவமழைக்காக, உரத்துக்காக, இலவச
மின்சாரத்துக்காக, பயிர்க்கடனுக்காக, பயிர்க்காப்பீட்டின்
இழப்பீட்டுக்காகக்
காத்துக் கிடந்த நமது விவசாயிகள், இனி விதைக்காகவும் காத்துக் கிடக்கிற
அவலநிலை மரபணு மாற்று விதை நிறுவனங்களால் உருவாகப் போகிறது.
பி.டி.பருத்தியால் விவசாயிகளின் தற்கொலை குறையவில்லை என்ற
உண்மையை பி.டி. ரகப் பயிர்களை அனுமதிப்பதற்கு முன்னர் அரசு ஆராய்ந்து
பார்க்க வேண்டும்.லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட மான்சாண்டோ போன்ற
பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்திய வேளாண் தொழில்நுட்பச் சந்தையில்
நுழையும்போது அறியாமையிலும் ஏழ்மை நிலையிலும் உள்ள நமது விவசாயிகள்
எளிதில் வீழ்த்தப்படுவார்கள். தனியார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும்
விதைகளைப் பரிந்துரை செய்யும் வழக்கத்தை நமது வேளாண் பல்கலைக்
கழகங்களும் அதன் விஞ்ஞானிகளும் கைவிட வேண்டும்.

இந்திய விவசாயத்தைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்கள் வகுத்தளிக்கும்
அறிவியல் நுட்பங்களைக் காட்டிலும் விவசாயிகளின் பாரம்பரி யமும்
பட்டறிவும்தான் சாகுபடி நுட்பங்களைத் தீர்மானிக்கின்றன. இதனைப்
பல்கலைக்கழகங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், ரசாயன உரங்கள்
மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாத,
இடுபொருள் செலவற்ற புதிய சாகுபடி நுட்பங்களை ஆராய்ச்சி செய்யவும்,
அறிமுகம் செய்யவும் முன்வர வேண்டும்.

வேளாண்மை என்பது தொழில் அன்று; அது ஒரு சேவை. அதனால் தான் வள்ளுவர்
"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு'
என்றார். வேளாண்மை என்பதே பிறர்க்கு உணவளிக்கும் பெருஞ்சேவை.
இத்தகைய பெரிய சேவை புரியும் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான
உதவிகளும் உரிய மதிப்பும் வழங்கப் பட வேண்டும். அப்பொழுதுதான் நமது
உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.


ப. குணசேகரன்


தின மணி

> இந்தியாவில் மிகைப்பட்டவேளாண்எந்திர உபயோகங்களினால் நன்மைக்கு மாறாகத்


> தீமைகளே அதிகமாகும். விவசாய வேலைகளில் இயன்ற அளவு மனித உழைப்புக்கு
> முன்னுரிமை தருவதன் மூலம் வலுவான சமூக அமைதியையும் நலமிகுந்த பொது
> ஒழுக்கத்தையும் நிலைநிறுத்த முடியும்.
>
> நிலத்தடி நீரைப் பாசனத்துக்காகப் பயன்படுத்தும் போதும், அளவின்றி இரசாயன
> உரங்களைப் பயிர்களுக்குத் தொடர்ந்து இடும் போதும், வளம் குறைந்து விளை
> நிலங்கள் மலட்டுத் தன்மைக்கு வந்துவிடும். இரசாயன பூச்சிக்கொல்லி
> மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகள் நன்மை செய்யும் புழு பூச்சிகளையும்
> அழித்துவிடுவதால் காலப்போக்கில் உயிரினங்களின் இயல்பான உணவு சுழற்சி
> முறைகளில் தடைகள் முற்றி சுற்றுப்புறச் சூழல்களுக்குக் கேடுகள்
> சூழ்ந்துவிடும்.
>
> ஆட்சி அதிகாரம் தங்கள் வசமே என்பார்க்கும், கொலையின் கொடிய முரடர்க்கும்,
> கல்விஇல்லாத குருடர்க்கும், நீதியைத் தேடி அலுத்துப் போனதாய்க் கூறும்
> தீவிரவாத வன்முறையாளர்க்கும்கூட பசி வந்தால் ஆற்றுவது உணவு ஒன்றுதான்.
> வாழும் மனிதர்க்கெல்லாம் உணவு என்பதையே முதல்நிலையில் வைக்க
> வேண்டியதாகிறது.
>
> வேலை இல்லை என்னும் ஓலமும், வேலைக்கு ஆள் இல்லை என்கிற அவலமும்

> அகல்வதற்கு இதைவிடவும் ...
>
> read more »

Ramesh

unread,
May 1, 2010, 10:03:58 PM5/1/10
to mint...@googlegroups.com
அஸ்ஸாமில் தேயிலைப் பண்ணைத் தோட்டம் ஒன்று இயற்கை வேளாண்மை முறைக்கு மாறியது.

ஸ்வாமி வால்மீகி ஐயங்காரா என்பவர் 'விருக்ஷ ஆயுர்வேதம்' எனும் பழங்கால இந்திய முறையை பின்பற்றி ஒரு இயற்கை வேளாண்மை முறையை உருவாக்கி, பினோத் ஸகாரியா என்பவரின் தோட்டத்தில் அதைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார். இந்த முறை மண்ணிற்கு உரம் ஊட்டக்கூடியதாகவும், ரசாயன உரங்களின் தீமைகளன்றியும், நல்ல லாபம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. 

ரசாயன உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தியதில் 9 லக்ஷ்ம் கிலோ உற்பத்தியான தோட்டத்தில் வெறும் மூன்றரை லக்ஷ்ம் கிலோ என்னுமளவிற்கு உற்பத்தி குறைந்தது. விருக்ஷ ஆயுர்வேத முறைப்படி மாறியதில் இப்போது சுமார் 6 லக்ஷ்ம் கிலோ வரை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் அஸ்ஸாம் தேயிலைக்கும் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறையை இந்தியாவிலுள்ள அனைத்து தேயிலை விவசாயிகளுக்கும் பின்பற்ற வேண்டுமென திரு.பினோத் ஸகாரியா கருதுகிறார்.

மேலும் படிக்க: http://news.bbc.co.uk/2/hi/south_asia/8640016.stm

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

devoo

unread,
May 1, 2010, 10:47:17 PM5/1/10
to மின்தமிழ்
* வ்ருக்ஷ ஆயுர்வேதம் *

आयुर्वेद अग्नि २८०.१७( वात, पित्त, कफ के लक्षण ), २८२ *( वृक्ष
आयुर्वेद विज्ञान )*

http://www.angelfire.com/puranastudy/pur_index2/pva32.htm

PURAANIC SUBJECT INDEX ல் வ்ருக்ஷ ஆயுர்வேதம் எண் 282ஆக இடம் பெறுகிறது;
மராத்தியில் புத்தகம் வெளியாகியுள்ளது; சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்ட
முறை என்றும் தெரிகிறது

தேவ்

devoo

unread,
Jun 10, 2010, 12:44:19 AM6/10/10
to மின்தமிழ்
மரபணு மாற்றுப்பயிர்


பொறுப்பேற்க வேண்டியது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்


எல்லா மாநிலங்களிலும் பரவலாக எதிர்ப்பு தோன்றியதையடுத்து, குறிப்பாக
இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்ற கருத்துக் கேட்பு
கூட்டங்களில் காணப்பட்ட ஏகோபித்த எதிர்ப்பைக் கண்டு, மரபீனி மாற்றுக்
கத்தரிக்காயை அறிமுகம் செய்வதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய
அரசு. இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டோம் என்ற சொல்லத் துணிவில் லாமல்,
தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


மக்களுக்கும் வேளாண் தொழில்துறையினருக்கும் ஏற்புடைய வகையில் அறிவியல்
உண்மைகள் நிறுவப்படும் வரை, சுற்றுச் சூழலுக்கும் மனித உடலுக்கும் தீமை
விளைவிக்காது என்பதை நீண்ட காலச் சோதனைகள் நடத்தி முடிவுகள்
காணப்படும்வரை இந்த பி.டி. கத்தரிக்காயை நிறுத்தி வைப்பதாக மத்திய
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.


இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டித்தான் இத்தனை நாள்களாக விவசாயிகள்
போராடி வந்தனர். ஆனாலும், அதே காரணங்களை அரசே தன் வாயால் சொல்லி,
நிறுத்தி வைப்பதுதானே அரசின் வழக்கம். அந்த வழிவழி வந்த நடைமுறை மாறாமல்,
ஏதோ தாங்களாகவே நிறுத்தி வைப்பதைப்போல பி.டி.கத்தரிக்காயை மூட்டை கட்டி
வைக்கத் தீர்மானித்தார்கள். கடைசியாக, இப்போதாகிலும் இத்தகைய நல்ல முடிவு
எடுத்தார்களே என்பதற்காக மத்திய அரசைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


பி.டி. கத்தரிக்காய் தடை செய்ததில் வெற்றி அடைந்த களிப்பில் இன்னும் சில
கடமைகளை வேளாண் போராளிகள் மறந்துவிடக்கூடாது. இந்தியாவில், கத்தரிக்காய்
போன்று 46 வகை உணவுத் தாவரங்களுக்கு இத்தகைய மரபீனி மாற்று வடிவங்கள்
சோதனை அடிப்படையில், வளர்க்கப்பட்டு வருகின்றன. இவையும் மெல்ல மெல்லத்
தலைகாட்டும் என்பதை மறந்து விடக் கூடாது. இவற்றில் கத்தரிக்காய்போல,
அனைவராலும் உண்ணப்படும் முக்கிய பயிரான நெல் ரகமும் இருக்கிறது.


கத்தரிக்காய் மீதான எதிர்ப்புகள் அதிகமாக இருந்ததால், சற்றே கிடப்பில்
போடப்பட்ட மரபீனி மாற்று நெல் ரகங்கள் தற்போது வேறு வடிவம் கொள்ளவும்,
அவற்றை வீரிய ரகங்களாகச் சந்தைக்குள் கொண்டுவரவும் புதியபுதிய உத்திகளைக்
கையாளுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இவை வீரிய ரகங்களாகச் சந்தையில்
அறிமுகம் செய்யப்பட்டால், அவற்றை பிரித்தறியும் திறன் நம்மில் பலருக்கும்
கிடையாது. ஆகவே, வேளாண் போராளிகள் இத்தகைய மரபீனி மாற்று ஆய்வுக்காக
களத்தில் சாகுபடி நிலையில் உள்ள அனைத்துப் பயிர்க ளையும் கண்டறிந்து
அத்தகைய சோதனை முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு
உள்ளது.


பி.டி. கத்தரிக்காய் எதிர்ப்பு வெற்றியில் முடிந்ததற்கு காரணம், இதை
அனைவரும் சாப்பிடு கிறோம் என்பதுடன் இப்பயிர் அனைத்து மாநிலங் களிலும்
பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது என்பதும்தான். கத்தரிக்காய் அல்லாமல்,
சில மாநிலங்கள் மட்டுமே விளைவிக்கும் சில வகை உணவுப் பயிர்களுக்கு மரபீனி
மாற்று அறிமுகம் செய்யப் பட்டிருந்தால் நிச்சயமாக முழுமையான எதிர்ப்புத்
தோன்றியிருக்காது. சில மாநிலங்களில் மட்டும் எதிர்ப்பு எழுந்து,
பிசுபிசுத்துப் போயி ருக்கும்.


இத்தகைய குளறுபடிகள் அனைத்துக்கும் அரசையும் இதற்கான பொறுப்பு வகிக்கும்
ஆட்சி யாளர்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. இந்தக்
குளறுபடிக்கு மிகப்பெரும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இந்திய வேளாண்
ஆராய்ச்சியாளர்களும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.


பி.டி. கத்தரிக்காய் அறிமுகம், சாகுபடி இவற்றுக்கு மூல ஆதார நிறுவனம்
மான்சாண்டோ. இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான மைக்கோ மூலமாகத்தான்
இந்தியாவில் பி.டி, கத்தரிக்காய் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது எந்த வித
ஆபத்தையும் விளைவிக்காது என்று பரிந்துரை செய்த நிறுவனம் இந்திய வேளாண்
ஆராய்ச்சி நிறுவனம்.


இந்திய ஆட்சியாளர்களைவிட, இந்திய ஆராய்ச்சியாளர்களைக் கைக்குள்
போட்டுக்கொள்வதில் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வெற்றிதான்,
இத்தகைய தேவையற்ற மரபீனி மாற்று உணவுப் பொருள்கள் இந்தியாவுக்குள்
நுழையக் காரணமாக அமைந்துவிடுகின்றன.


இந்தியாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக்
கழகம் ஆகியவற்றின் பல ஆராய்ச்சிகளுக்கு நிதிநல்கை பெருந்தகையாளர்களாக
மான்சாண்டோ, ஃபோர்டு போன்ற பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் ஆராய்ச்சி செய்வதோடு, ஆய்வு தொடர்பான பல்வேறு தகவல்களைப்
பெறும் களப்பணிக்கு, நம் ஆராய்ச்சியாளர்களை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற
நாடுகளுக்கு நிதிநல்கையுடன் அழைத்துச் செல்லவும் செய்கி றார்கள். இந்த
ஆராய்ச்சியாளர்கள்தான் அரசு மற்றும் பல்கலைக்கழகப் பணிக ளில் உயர்
பதவிக்கு வருபவர்களும்! பழைய நட்பு புதுப்பிக்கப் படுகிறது. அன்பினால்
நெருக்கடி தந்து, தங்களுக்குச் சாதகமான மரபீனி மாற்றுப் பயிர்களை
இந்தியச் சந்தையில் நுழைக்கும் அனைத்து கருத்து ருக்க ளையும் தயாரிக்க
வைக்கிறார்கள். பிறகுதான் ஆட்சியாளர்களை மயக்கும் வித்தையை இந்த
பன்னாட்டு நிறுவனங்கள் கையில் எடுக்கின்றன.


இந்த நிலைமை ஏற்படக் காரணம் இந்திய அரசு, வேளாண் ஆராய்ச்சிகளில் போதிய
ஆர்வம் காட்டாமல், போதிய நிதி ஒதுக்காமல், இவ்வாறாக அன்னிய
நிதிநல்கைகளைப் பெற்றுக் கொள் வதை அனு மதிப்பதுதான் என்றால் அது
மிகையாகாது. இந்திய அரசுப் பணத்தில் இந்திய ஆராய்ச்சி யாளர்கள் தங்கள்
ஆய்வுகளை நடத்தவும், பன்னாட்டு நிதிநிறுவனம், அல்லது அத்தகைய தொடர்பு கள்
உள்ள நிறுவனங்களின் நிதிநல்கையைத் தவிர்ப்பதும் இந்திய வேளாண்
ஆராய்ச்சியாளர்கள் முழுக்க முழுக்க இந்தியத் தன்மையோடு நிலைத்து நிற்க
நிச்சயம் உதவியாக இருக்கும்.


நன்றி : தினமணி


தேவ்

செல்வன்

unread,
Jun 10, 2010, 1:15:44 AM6/10/10
to mint...@googlegroups.com
விவசாயிகளை கம்யூனிஸ்டுகளும், பிற கட்சியினரும் கண்டதை சொல்லி பயமுறுத்தி போராட வைத்து ஜி.எம் விவசாய பொருட்களை தடை செய்து வைத்துள்ளனர்.இதுக்கு அரசும் பயந்து போய் தடை போட்டுள்ளது.

இந்திய விவசாயம் இம்மாதிரி தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் இருந்தால் நலிவுக்கு தான் போகும்.

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விவசாயிகள் பெருமளவு பயிரிட்டு நல்ல லாபம் எடுக்கின்ரனர்.உதாரணத்துக்கு அமெரிக்காவில் பயிரிடப்படும் பஞ்சில் மரபணு மாற்றப்பட்ட பஞ்சின் சதவிகிதம் 60% பஞ்சு, சோயாபீன்ஸில் 90%.

Genengcrops.gif
ஆனால் நாம் தான் நல்ல முன்னேறிய நாட்டை பார்த்து எதையும் கற்றுகொள்வதில்லை என உறுதியாக அல்லவா இருக்கிறோம்?

--
செல்வன்

www.holyox.tk

"கட்டிபிடிக்கும் போது ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்துதான் கட்டிப்புடிகிறாங்க. ஆனா கற்புன்னு வரும் போது ஆம்பள காணாம போயிடறான். என்னைக்கு கற்புக்குள்ள ரெண்டு பேருமே வராங்களோ அப்பத்தான் பாலியல் குற்றங்கள் குறையும்" - K. பாக்யராஜ்

Suba.T.

unread,
Apr 1, 2014, 9:04:11 AM4/1/14
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இயற்கை வேளாண்மை தொடர்பாக பார்த்த ஒரு செய்தி.. இந்த இழைக்கு பொறுத்தமாக இருக்கலாம் என்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா

மீண்டும் எளிதில் புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைப் பயன்படுத்தித்தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். ஆனால், உலகமோ மாபெரும் குப்பைமேடாக மாறி வருகிறது, பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதைவிட இயற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த செயல்களைச் செய்வது, பூமி சீர்கெடும் விகிதத்தை குறைக்க உதவும்.

அப்படிப்பட்ட ஒரு செயலை தன் வீட்டிலேயே செய்துவருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த பாலமூர்த்தி. இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரிடம் இயற்கை வேளாண்மை பயிற்சி எடுத்த இவர், அதைச் செயல்படுத்தி வருகிறார்.

வீட்டின் முன்னும் பின்னும் பசுமை நிறைந்த செடி, கொடிகளை வளர்த்து வருகிறார். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரை வகைகளை இவற்றில் இருந்தே அறுவடையும் செய்கிறார். தான் கற்றுக்கொண்ட இயற்கை வேளாண் நுட்பங்கள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் பயிலரங்குகளும் நடத்துகிறார். வீடுகளில் இயற்கைத் தோட்டம் அமைக்க வழிகாட்டி, அவற்றை அமைத்தும் தருகிறார்.

நாடும் வீடும் நலம் பெறும்

‘‘வருங்கால சந்ததிக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து, இயற்கையைப் பாதுகாப்பதுதான். நாம் அனுபவிப்பதை அவர்களுக்கும் விட்டுச்செல்ல ஏதாவது செய்ய வேண்டும் தானே? நானும் என் பங்கைச் செலுத்த முயற்சிக்கிறேன். நம்மாழ்வாரின் புத்தகங்கள் எனக்குப் புதிய பாதையைக் காட்டின.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லது என்ற தெளிவு பிறந்தது. அதன்பிறகு அவருடைய வழிகாட்டுதலில் என் வீட்டிலும் தோட்டம் அமைத்துவிட்டேன். விதைகளையும், இலை, தழைகளை மக்கவைத்து இயற்கை உரங்களையும் நாங்களே உற்பத்தி செய்கிறோம்,’’ என்கிறார் பாலமூர்த்தி.

வீட்டில் தோட்டம் அமைத்த பிறகு வெங்காயத்தை மட்டும்தான் வெளியே வாங்குகிறார்களாம். விரைவில் வெங்காயத்தைப் பயிரிடும் திட்டமும் இருக்கிறதாம். இயற்கை ஆர்வமுள்ள பலருக்கு, பாலமூர்த்தி நல்ல முன்னுதாரணம்.

நன்றி: தமிழ் ஹிந்து

Suba.T.

unread,
Apr 1, 2014, 9:06:15 AM4/1/14
to மின்தமிழ், Subashini Tremmel
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளோருக்கு...

சுபா

இயற்கை அதிசயங்கள்: மலைக்க வைக்கும் மெகா மண்புழுக்கள்


மண்புழுக்களுக்கு ‘விவசாயி களின் நண்பன்’ எனும் பட்டப்பெயர் இருப்பது உங்களுக்குத் தெரியும். சரி, மண்புழுக்களின் சராசரி நீளம் எவ்வளவு என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கான உங்கள் பதில் சென்டிமீட்டர் கணக்கில் இருந்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பது சராசரி மண் புழுக்கள்.

ஆனால், ஒரு மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மெகா சைஸ் மண்புழுக்கள் இருக்கின்றன, தெரியுமா? முதல் பார்வைக்கு நீள மான பாம்போ என்று நினைக்க வைக்கக்கூடிய அளவுக்கு நீளமாக வும் பருமனாகவும் காட்சி அளிக்கும் மண்புழுக்கள் இருக்கின்றன.

ஜெய்ண்ட் ஜிப்ஸ்லாண்ட் மண்புழுக்கள் என்று அழைக்கப்படும் இந்தப் புழுக்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அந்தக் கண்டத்தில் மட்டுமே இவற்றைப் பார்க்கலாம் என்று உயிரியல் நிபுணர்கள் சொல்கின்றனர். ஆஸ்திரேலியாவில்கூட , தென் கிழக்குப் பகுதியான விக்டோரியா மாகாணத்தில் பாஸ் நதிக்கரை பகுதியில் மட்டுமே இவை காணப் படுகின்றன.

இவை சராசரியாக ஒரு மீட்டர் நீளம், 2 செ.மீ. சுற்றளவுடன் 200 கிராம் எடைகொண்டவை. இவற்றின் உடல் விரிவடையும்போது இரண்டு மீட்டர் வரை நீளம் கொண்டிருக்கும். 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடிய இந்த மண்புழுக்களில் 3 மீட்டர் அளவுக்குப் பெரிதான வைகூட இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

மெகா மண்புழுக்களாக இருந்தாலும், பெரும்பாலும் இவை மனிதர்களின் கண்களில் படுவதில்லை. இதற்குக் காரணம் இவை பெரும்பாலும் மண்ணுக்கு 5 மீட்டர் ஆழத்தில் வசிப்பதுதான். பொதுவாக மண்புழுக்கள் கழிவுகளைக் கழிக்க, பூமிக்கு மேலே வரும் பழக்கம் இருக்கிறது. ஆனால் இந்த மெகா மண்புழுக்கள் எல்லாவற்றையும் மண்ணுக்கு அடியிலேயே முடித்துக்கொள்வதால், பெரும்பாலும் மேல் பகுதிக்கு வருவதேயில்லை. இவை மிகவும் நுட்பமானவை. மண்ணில் காலடி ஓசை கேட்டாலே பூமிக்கு அடியில் இருக்கும் இடத்தை விட்டு இவை முன்னே நகர்ந்து சென்றுவிடும். உள்ளே இவை ஊர்ந்து செல்லும் ஓசை, மேலே விநோதமான ஒலியாகக் கேட்கும் என்றும் சொல்கின்றனர்.

இந்த மண்புழுக்கள் 1870களில் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது ஆஸ்திரேலியாவின் வாருங்கல் பகுதியில் இவற்றைக் கண்ட சர்வேயர்கள், விக்டோரியா தேசிய அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த பேராசிரியர் பெட்ரி மெக்காய்தான், இவை புதிய மண்புழு இனத்தைச் சேர்ந்தவை என்று ஆய்வு செய்து கூறினார். அதன் பிறகு இவற்றுக்கு மெகாஸ்கொலைட்ஸ் ஆஸ்த்ரலிஸ் (Megascolides australis.) எனப் பெயரிடப்பட்டது.

ராட்சத மண்புழுக்களாக இருந்தாலும் இவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் இவற்றுக்குப் பாதுகாப்பாக இருந்த யூகலிப்டஸ் காடுகள், விவசாயத்துக்காகப் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதுதான். அது மட்டுமல்ல, இவை இனப் பெருக்கம் செய்யும் வேகமும் கொஞ்சம் மந்தம். இந்த மண் புழுக்கள் இடும் முட்டை 4 முதல் 7 செ.மீ. அளவுக்குப் பெரி தாக இருக்கும். ஒரு முட்டையில் ஒரு மண்புழுதான் உருவாகும். ஆனால், அந்த மண்புழுவும் ஒரு வருட காலம் அடைக்காக்கப்பட்ட பிறகுதான் உருவாகும்.

இந்த மண்புழுக்களை ஆஸ்தி ரேலியாவில் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்துள்ளனர். உலகிலேயே மிகப் பெரிய புழு என்று சொல்லப்படும், இந்த மண்புழுக்கள் பற்றிக் குறைவான விவரங்களே தெரியவந்துள்ளன.

இந்த மண்புழுக்களுக்காக ஒரு திருவிழாவே நடத்தப்பட்டு வருகிறது. விக்டோரியா மாகாணத் தின் கொரும்பாரா கிராமத்தில் இந்த விழா நடைபெறுகிறது. சுமார் 3,000 மக்கள் வசிக்கும் இந்தக் கிராமம் 1970களில் பொருளாதாரச் சீர்குலைவுக்கு ஆளானபோது, இங்குள்ள ராட்சத மண்புழுக்களை வைத்துச் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுத்து பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தியுள்ளனர். அதற்கு நன்றிக் கடனாகத்தான் மண்புழு விழா நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுலா செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள் பட்டியலில் இந்த மண்புழுக்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஜிப்ஸ்லாண்ட் மண்புழு பற்றி அறிய: http://museumvictoria.com.au/discoverycentre/ infosheets/giant-gippsland-earthworm/

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Dev Raj

unread,
Apr 1, 2014, 5:04:56 PM4/1/14
to mint...@googlegroups.com

இயற்கை அதிசயங்கள்: மலைக்க வைக்கும் மெகா மண்புழுக்கள்

மண்புழுக்களுக்கு ‘விவசாயி களின் நண்பன்’ எனும் பட்டப்பெயர் இருப்பது உங்களுக்குத் தெரியும். சரி, மண்புழுக்களின் சராசரி நீளம் எவ்வளவு என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கான உங்கள் பதில் சென்டிமீட்டர் கணக்கில் இருந்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பது சராசரி மண் புழுக்கள்.

ஆனால், ஒரு மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மெகா சைஸ் மண்புழுக்கள் இருக்கின்றன, தெரியுமா? முதல் பார்வைக்கு நீள மான பாம்போ என்று நினைக்க வைக்கக்கூடிய அளவுக்கு நீளமாக வும் பருமனாகவும் காட்சி அளிக்கும் மண்புழுக்கள் இருக்கின்றன.

ஜெய்ண்ட் ஜிப்ஸ்லாண்ட் மண்புழுக்கள் என்று அழைக்கப்படும் இந்தப் புழுக்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அந்தக் கண்டத்தில் மட்டுமே இவற்றைப் பார்க்கலாம் என்று உயிரியல் நிபுணர்கள் சொல்கின்றனர். ஆஸ்திரேலியாவில்கூட , தென் கிழக்குப் பகுதியான விக்டோரியா மாகாணத்தில் பாஸ் நதிக்கரை பகுதியில் மட்டுமே இவை காணப் படுகின்றன.


Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 2, 2014, 1:01:11 AM4/2/14
to Minthamil
Quite interesting!


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Suba.T.

unread,
May 15, 2014, 3:45:56 AM5/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஃபேஸ்புக்கில் வந்த ஒரு பதிவு. 
இந்த இழையில் பகிர்ந்து கொள்கின்றேன். 


நாங்க விவசாயம் படிச்சாலும், 'வி சாட்’லயும் இருப்போம்!’' என்று சிரிக்கிறார்கள்... பெரியகுளம், தோட்டக்கலைத்துறை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள்! விவசாயம் பற்றி, வற்றாமல் பேசுபவர்களிடம் 'சாட்’டியதில் இருந்து!

''நாங்க பி.எஸ்சி., தோட்டக்கலைத்துறை (Horticulture) படிப்பில் சேர்ந்தப்போ, எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், 'உலகம் எங்கயோ போயிட்டிருக்கு... நீங்க என்னடானா தோட்டம், செடி, வயல், வரப்புனு படிக்க கிளம்பிட்டீங்களே’னு சிரிச்சாங்க. என்ன பண்றது... 'குட்மார்னிங்'னு தன்னிச்சையா சொல்ற நம்ம மக்களுக்கு, 'வணக்கம்' சொல்ல மட்டும் வர்றதில்ல. இப்போ பாதுக்காக்கப்பட வேண்டிய விஷயங்கள் ரெண்டு. ஒண்ணு... மொழி, அடுத்தது... விவசாயம். அதனாலதான் நாங்க விவசாயம் படிக்க முடிவெடுத்தோம். வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை வரும்போதுதான் தெரியப்போகுது... விவசாயம் படிச்சவங்களுக்குக் கிடைக்கப்போற மவுசு'' என்று பெருமையாகச் சொன்ன சௌமியாவைத் தொடர்ந்தார், யாமினி...

''எங்க படிப்புல ஒரு செமஸ்டர் முழுக்க ஒரு கிராமத்துல தங்கி விவசாயிகள்கிட்ட பாடம் படிக்கணும். அந்த வகையில, அவங்களோட சேர்ந்து தோப்புக்குப் போறது, தோட்ட வேலை பார்க்கறது, உழுறது, வாய்க்கால் வரப்பு வெட்டுறது, விதைகளை நடுறது, தண்ணி பாய்ச்சுறது, களையெடுக்குறதுனு எல்லாத்தையும் கத்துக்கிட்டிருக்கோம் தெரியும்ல'' என்று யாமினி சொல்ல...

''இப்பவே எங்களுக்கு விவசாயம் அத்துப்படி. எங்ககிட்ட ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்துப் பாருங்க... வெள்ளாமை குலுங்கும். அப்படித்தான் எங்க காலேஜ்ல எங்களுக்கு ஒதுக்கின ஒரு ஏக்கர் நிலத்தில், 75 மாணவர்களும் சேர்ந்து விவசாயம் பார்த்தோம். தளதளனு தக்காளியை விளைவிச்சு எடுத்து, அப்படியே காலேஜ் ஹாஸ்டலுக்கு கொடுத்துட்டோம். இதையெல்லாம் வேறவேற காலேஜ்ல படிக்கற எங்க ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொன்னப்போ, 'அய்யோ... எங்க படிப்பு எல்லாம் ஒரே போர். நாங்களும் அக்ரியே படிச்சுருக்கலாம்!’னு ஏங்குறாங்க!'' என்று சந்தோஷப்பட்டார் சௌமியா.

''விவசாயக் குடும்பப் பொண்ணுங்க, ஒரு ஐடியாவோட அக்ரி படிப்புகளை படிப்பாங்க. அவங்களுக்கு படிப்பில் பெரிய ஆச்சர்யங்கள் அவ்வளவா இருக்காது. ஆனா, 'அரிசிச் செடி எப்படி இருக்கும்?’னு கேட்கற அளவுக்கு விவசாயத்தில் இருந்து தூரமா வளர்ந்த பொண்ணுங்க இந்தப் படிப்பில் சேரும்போது, ஒவ்வொரு விஷயமும் அதிசய ஆச்சர்யமா இருக்கும். அப்படித்தான் எனக்கும் இருந்துச்சு. காலையில எழுந்ததும் வயல் வரப்புல நடக்கற சுகமே தனி. ஆரம்பத்துல விவசாயக் கருவிகளைப் பயன்படுத்துறது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. போகப் போக பழகிடுச்சு. இப்போ நான் ஒரு அக்மார்க் விவசாயினி!'' என்று சிரித்தார் வினோதினி!

''ஆர்ட்ஸ், சயின்ஸ், இன்ஜினீயரிங், மெடிக்கல்னு படிக்கறவங்களுக்கு ஆறேழு மணி நேரம் கிளாஸ்ரூம்லயே கிடக்குறது எவ்வளவு கடுப்பா இருக்கும்? ஆனா, நாங்க ரெண்டு மணி நேரம் மட்டும்தான் கிளாஸ் ரூம்ல இருப்போம்... நாலு மணி நேரம் வயல்காடுதான். செம்மல்ல! தொட்டி ரோஸ் வாங்கிட்டுப் போய் அதுக்குத் தண்ணி ஊத்தத் தெரியாம இருந்தவதான் நான். இப்போ, செடிகளை இயற்கை எருவும் மணலும் கலந்து அடைச்ச பாக்கெட்ல ஊன்றி, அல்லது விதைகளை இட்டு, தேவையான ஊட்டச்சத்தைக் கொடுத்து, வீட்டுல புதுசா பிறந்த பாப்பா மாதிரி கண்ணும் கருத்துமா பார்த்து வளர்த்து, அதை எடுத்துட்டுப் போய் நிலத்துல அதுங்களோட இனத்துகூட சேர்க்கறதுனு... கலக்கிக்கிட்டிருக்கேன். பாடப்புத்தகத்தை வெச்சுக்கிட்டு முட்டி முட்டி 'மக்’ அடிக்கற வேலை, இங்க இல்லவே இல்லை!''னு சிலிர்ப்போட சொன்னாங்க தமிழோவியா.

''இவங்கதான் எங்க தலைமை விவசாயி...!'' என்று மகேஸ்வரியும் அபிநயாவும் தெய்வானையை அறிமுகப்படுத்த...

''நான் விவசாயக் குடும்பத்துப் பொண்ணு. அதனால வாய்க்கா வரப்பிலிருந்து... பாத்தி கட்டுறது வரை எல்லாம் லாகவமா செய்வேன். எந்தப் பட்டத்துல என்ன விதைக்கணும்னு சொல்ற அளவுக்கு விவசாயம் கத்துக்கிட்டாச்சு. 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் அய்யாவுக்கு, அடுத்த தலைமுறை விவசாயத்தை காப்பாத்தணும்ங்கிறது பெருங்கனவு. இந்தப் படிப்பு மூலமா அதை நாங்க நிறைவேத்துவோம். மண்ணோட வளத்தைக் கெடுக்கக்கூடாது, இயற்கை விவசாயத்தை பரவலா செயல்படுத்தணும்... எதிர்காலத்தில் இந்த உறுதியில் இருந்து தவறாம உழைப்போம்!'' என்று சீரியஸாகப் பேசியவர்,

''ம்ம்ம்... எல்லாரும் மண்வெட்டியை எடுத்து வரப்பு போடுங்க...'' என்றழைக்க, சுறுசுறுப்பானது தோட்டம்!

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 15, 2014, 6:17:41 AM5/15/14
to Minthamil
மண்புழுக்கள் பற்றி ஒரு செய்தி:

கேள்வி:  மண் புழுக்களில் ஆண் பெண் எப்படி வித்தியாசம் கண்டு பிடிப்பது?

பதில்:  கவலையை விடுங்கள்.  மண்புழுக்கள் ஆண் பெண் இரண்டும் கலத்தவை.  அதற்காக அலி என்று நினைத்திட வேண்டாம்.  அவற்றின் உடலைலே ஆண் பெண் இரு உறுப்புகலும் உண்டு!


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Jul 23, 2015, 6:13:44 AM7/23/15
to மின்தமிழ், Subashini Tremmel

உங்கள் கிராமத்தை நாங்கள் தத்தெடுத்து , சீமை கருவேலமரத்தை அழித்து , நல்ல மரங்கள் நட்டு , பராமரித்து தருகின்றோம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது.

1. உங்கள் மின்னஞ்சல் மற்றும் பெயரினை 7806919891 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்.

2. உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்படும். அதை அச்சு (பிரிண்ட்) எடுத்துக்கொள்ளவும்.

3. விண்ணப்ப பெறுநரில் " கிராம தலைவர் மற்றும் பொதுமக்கள் , கிராம முகவரியை நிரப்பவும்.

4. கீழே இப்படிக்கு என்ற இடத்தில் கிராம தலைவர் முத்திரை (சீல்) இட்டு கையெழுத்து வாங்கவும்.

5. விண்ணப்பத்தின் பின்புறம் மக்களின் கையெழுத்து பெறவும்.

6. அதை புகைப்படம் எடுத்து வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும். அல்லது விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து aaproj...@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

7. அனுப்பிய பிறகு உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக பெறப்பட்டவுடன் MM-AAPROG என்ற பெயரில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

8. பெறப்பட்ட ஒருவார காலத்திற்குள் உங்கள் கிராமத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம், விவசாயிகள் விடுதலைக் கழகம்.
www.aaproject.org

(தகவலை அனைத்து தளங்களிலும் பகிர்ந்து உதவவும் நன்றி)

Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை

G Sannah

unread,
Aug 2, 2015, 2:48:50 PM8/2/15
to தேமொழி, 10th...@gamil.com, Abdul....@havasmediame.com, Aganazhigai Pon Vasudevan, ahmed taqiuddin, ahmedta...@yahoo.com, Aloor Shanavas, Amaithi Arasu, ambedkar in, anant...@yahoo.co.uk, Anbu Chezian, Anbu Selvam, anbuche...@gmail.com, ann...@googlegroups.com, antibribe...@yahoogroups.com, aprrn_...@googlegroups.com, Aranga Mallika, Arivu Amudhan, arkite...@yahoogroups.com, ARONSAMUVEL A, ashok raj, Ashok Ramaraj, aslam basha, Athirvu Athirvu, attorneygirija...@gmail.com, Bagavandoss, Paul, Bakiyaraj Poongavanam, bala aravazhi, Bala J, balaji subramani, balamurugan k, BalaSubramani A, barathi thambi, Baskaran -, bas...@yahoo.in, BHADRAIAH SALLA, Bhagwan Singh, bharat-...@googlegroups.com, Bodhini Valavan, Chandru, chandru g, che.v...@gmail.com, che...@justdial.com, chithra bala, Christudas Gandhi, cwebworld c, Dalit Students Federation, Dalits Media Watch, day...@cpcl.co.in, development_communic...@yahoogroups.com, Dhana paul, dhanap...@gmail.com, dhilli babu, Dickens Leonard M., dilip kumar, Dr Durai Raja Sekaran, drc-...@googlegroups.com, DrDekal Varadharajulu, DURAIRAJ G, eame...@forum-asia.org, edi...@murasoli.in, edi...@uyirmmai.com, elan cheziyan, Elango Viduthalai, ela...@yahoo.co.in, Elumalai Marimuthu, Er.D.RAJ MATHAN, Eramasamy Kittu, Eugene Culas, Evangeline Anderson-Rajkumar, ezhil zoom, famember...@forum-asia.org, fame...@forum-asia.org, fio...@yahoo.co.in, franci...@utoronto.ca, G Sannah, g_sa...@yahoo.com, Gail Omvedt, Gana Pathy, Glorious Steve, gm rahim, gnana thilagar, Gopi Muthukrishnan, GORRINGE Hugo, govind...@yahoo.com, Gowthama meena, green...@googlegroups.com, Guna Sekar, h.gor...@ed.ac.uk, Hajrath Al-Haj Dr. Syed Kamil Sahib Qadiri, Henry Thiagaraj, hrd-ale...@googlegroups.com, humanright...@googlegroups.com, HumJa...@yahoogroups.co.in, icyo-to-...@googlegroups.com, IH...@yahoogroups.com, in-o...@googlegroups.com, in...@googlegroups.com, ind...@googlegroups.com, in...@globaltiesus.org, in...@iteletutor.com, International Commission for Dalit Rights, isaacka...@gmail.com, Jagannath G, jan-s...@yahoogroups.com, Jay Seelan, Jaya Rani, Jeevamani B, jhar...@yahoogroups.co.in, jkdn...@yahoogroups.com, john jayaharan, jpjpapr...@gmail.com, junction sathish, Kalachuvadu Magazine, Kalaiy Arasan, Kalifa Sahib, Kani Amuthan, Kannan M, kannan_...@yahoo.co.in, Karan Karki, karthik guevara, karuna prasad, Kavin Malar, kavini...@gmail.com, Kavitha Muralidharan, kavithas...@gmail.com, Keetru Nandhan, Kiruba Munusamy, kmsbaalaji, krubagm...@gmail.com, ks.pav...@yahoo.co.in, Kumarappa K, kumarar...@yahoo.co.in, Kurumpakara Majeed, Kutti Revathi, lokdhar solutions, loksatta_...@yahoogroups.com, M C Raj Casimir, M Lakshman, M.saravana, m.vijay baskar, mac...@yahoo.co.in, manalma...@gmail.com, Manalveedu harikrishnan, Mani vannan, markandey katju, MC Rajan, mcstealth mcstealth, Meenakshi Mahadevan, Michael Collins, mint...@googlegroups.com, mloc...@aol.com, Mohan Subramaniyan, mohan venkatragavan, mrservice2000, Muruga Boopathy, murugan murugan, murugasivakumar sakyabuddhan, nalan...@gmail.com, nalan...@yahoo.co.in, nalan...@yahoo.com, NARESH KUMAR, natraj sudar, natsv...@yahoo.co.in, ncprimai...@yahoogroups.com, ncpriworki...@yahoogroups.com, neame...@forum-asia.org, nedunchezhian chezhian, Neerai Mahe, Nellai Ram, Nilavan Nilavan, Nirmal Kumar, O P Siddharth, P Chandrasekharan, padma nabhan, palani gopal, Paramasivam Munusamy, parthiba...@yahoo.com, Paulraj Dayanandan, Pavendhan Govindan, political...@yahoogroups.com, Poo Vizhian, prabhak...@gmiail.com, press....@kslmedia.in, psud...@yahoo.com, Puthiya dharisanam, pw...@yahoogroups.com, R.R. Srinivasan, Raghunathan Yessar, Raj Poonga, Rajini Kanth, raksha art foundation, rti...@yahoogroups.com, Rupa Viswanath, s.dine...@gmail.com, Sahitya Akademi, sakya...@yahoogroups.com, samember...@forum-asia.org, same...@forum-asia.org, Sami Durai, sapa_...@googlegroups.com, sapa...@googlegroups.com, sa...@googlegroups.com, Saptarshi Bhattacharya, Saratha Pugalenthi, sasi kumar, sathish kill, sathish...@gmail.com, sathiya chelliyan, Seithy seithykal, selva kumar, selva raj, senthil kumar, shen...@yahoo.co.in, Sibi Chander, Singh Jai, sinthanai Selvan, Siva sankaran, skh...@outlook.in, sma barathi, soupaavendhan soupaa, Sridhar Kannan, Subashini Tremmel, Sudheer Sendhil, Sumitra Kamalanathan, sureshbab...@yahoo.co.in, Surya Amirtham, T.N. Gopalan, Tamilarasan Karuppayan, Tamilpavai pavai, tamizh vanan, Thamaraivannan T, Thamizheanthi Neelamegam, Thamizheanthi Neelamegam, Theodore tony george, thol thirumaavalavan, urja-de...@googlegroups.com, uyirmmai *, vaasag...@gmail.com, VADU....@hotmail.fr, VADU....@hotmail.com, vadu....@hotmail.fr, Vadusr...@gmail.com, Valluvan Isaac, VCK senthamizh, veera rajendiran, Veerapandian, Veerapandian A, Vel Uvan, Venkat Sasi, venk...@humanrightsinitiative.org, Vignesh V, Water...@yahoogroups.com, wecare wecare, writer samas, Yaazh Dhileeban, Yakkan Yakkan, Yazhan Aathi, yuvaraj yuva, zainu...@yahoo.com, zenconst...@yahoo.com, Zenconst...@gmail.com, சவுக்கு இணையதளம், செல்வன், தளவாய் சுந்தரம், திருமா சஜன்

Mohanarangan V Srirangam

unread,
Aug 3, 2015, 2:52:34 AM8/3/15
to min tamil
ஓ! நான் தொடங்கிய இந்த இழை இன்னும் தொடர்கிறது போலும். இது ஒரு விதத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் நான் இந்த இழையை முடித்துவிட்டேன். இனி இதைத் தொடரும் எண்ணம் இல்லை. பலரும் பல விதமாக எழுதும் வாய்ப்பு இருப்பதால், என்னால் தொடர்ந்து இந்த இழையைக் கண்காணிக்க முடியாது என்பதால், வேறு தலைப்பில் புது இழை ஆரம்பித்தல் நலம் என்று தோன்றுகிறது. தவறாகக் கொள்ள வேண்டாம். புரிந்து கொள்வதற்கு நன்றி.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
It is loading more messages.
0 new messages