பெண்களின் ஆபரணங்களாகும் பொன் #2

342 views
Skip to first unread message

Krishnan S

unread,
Aug 29, 2013, 11:01:48 PM8/29/13
to tamil_ulagam, mint...@googlegroups.com
பெண்களின் ஆபரணங்களாகும் பொன்  #2

சகஸ்ராரத்திற்கான அணிகலன்.  

1.   உச்சந்தலையில் அணிவது "பில்லை"-  2.   நெற்றியில் தொங்கவிடும் " நெற்றி சுட்டி" ஆக்ஞாவிற்கான அணிகலன்.    3.   கழுத்தில் 'ஆரணி' என ஒன்று அணியப்படுகிறதே,   அது விசுக்திக்கான அணி.  4.   சங்கிலியோடு -  பதக்கத்தை இணைத்து  (மார்புவரை அணிகிறோமே அது "அனாகதத்திற்கான அணீ.     5.   இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும் "ஒட்டியாணம்"- மணிபூரகத்துக்கான அணி.  6.   இடையில் தளர்வாய் தொங்கவிட்ட மாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான அணி.-   7.   மூலாதாரத்திற்கான அணியை பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.                            

  மனமும் எண்ணமும் - புத்தியும், சித்தியும் - விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த புள்ளிகளில்தான்..,  இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்கம்.  இப்போது அதன் முக்கியம் புரிந்திருக்கும்....?  அந்த ஏழு புள்ளிகளில், சகஸ்ராரம் - எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மாயிருக்கும் இடம்.                                                     

ஆக்ஞா - நான் எனும் சுயம் அடையாளப்படும் இடம்;      விசுக்தி - நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம் – பேச்சாய் - மொழியாய் வெளிப்படுத்தும் மையம்.   அனாகதம்  - நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு  உடன்பட்டோ,          முரண்பட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.  -     மணிபூரகம் - வெளி உலகின் பிரதிபலிப்பை கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய ஏற்பு மையம்.   சுவாதிஷ்டானம்- செரிமானத்திற்கு பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும் மையம்  -- மூலாதாரம் -  ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று  - அடுத்த செயலுக்கு ஊக்கம் பெறும் மையம்.                       

இவ்வுல வாழ்க்கையில் - பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான் உள்வாங்குகிறோம்.   உணர்கிறோம்,, தன்வயமாக்குகிறோம்., சக்தி பெறுகிறோம். இறைக்கு அர்ப்பணிக்கிறோம்.   நகை மோகம் நங்கையரை மட்டுமின்றி இன்று ஆடவரையும் ஆட்டிப்படைகிறது. பொட்டுத் தங்கம் கூட போடாத நிலையில் பூவையரின் அங்கங்கள் மூலியாக அழுது வடிவது போல் தருவது என்னமோ ண்மைதான்.

  ஆனால் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள் புதுப்பொலிவில் '’ நகை' ப்பது''  போலத் தோன்றுவதாலோ என்னவோ, நம் ஆன்றோர்கள் அந்த அணிகளுக்கு நகை’' என்னும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள்.  அணி என்னும் சொல்லும் 'அணிதல்'  மற்றும் அலங்கரித்தல் என்னும் இரு பொருள் தந்து நகைகளுக்கு மறுபெயராக விளங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் பலப் பெண்களை முதிர் கன்னியாக்கி, வனிதையரை வதைக்கும் இந்த வரதட்சணை கொடுமையில் முக்கிய இடமும், பங்கேற்பதும் இந்த நகை என்றால் அது மிகையான நகையல்ல.   சரி... இந்த நகைகள் தோன்றின வரலாறும் தொன்மையும் பார்த்தால் சுவையும் வாய்ந்தது.

    தொடக்கம் காட்டு விலங்களை வேட்டையாடி வாழ்ந்த கற்காலம் அது. நம் மூதாதையர் புலிப்பல், யானைத் தந்தம் போன்ற ஆகியவற்றை மிருகங்களின் நரம்புகளாகிய நான்களில் கோர்த்து கழுத்து, இடுப்பு, கைகளில் அணித்திருந்தார்கள். காலச்சுழற்சியில் பருத்தி, பஞ்சு,  நூல் என்று நாகரிகம் கிளைகளை பரப்பிய போது நரம்புகளுக்கு பதில் நூலில் கோர்த்து அணியும் வழக்கம் ஏற்பட்டது. பின்னர் இயற்கைத்தாய் வழங்கிய முத்து,பவளம், மணி போன்றவற்றில் மனம் லயித்த அவர்கள், அவற்றில் துளையிட்டு கோர்த்து அணியும் நிலைக்கு முன்னேறினர். நூல் என்பதைக் குறிக்க ' இழை ' என்னும் இன்னொரு தமிழ்ச் சொல்லும் இருந்ததால், அந்நூலில் கோர்த்து அணிந்த அணிகளுக்குஇழை'  என்று பெயரிட்டனர். காலப்போக்கில் தங்கம், வெள்ளி போன்ற உலோங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் அவற்றை உருக்கி இழுத்த கம்பிகளில் மணி, பவளம், போன்றவற்றை கோர்த்து செய்யப்பட்ட போதிலும் அந்த ஆபரணங்களுக்கும் ' இழை ' என்னும்  பழைய பெயரே நிலைத்து விட்டது.                                          '     ஆயிழை '    [ஆய் + இழை -- ஆராய்ந்து செய்த ஆபரணம்] - '    அணியிழை  '[ அழகிய ஆபரணம் ]  என்பன போன்ற இலக்கிய வழக்கு சொற்கள் இதனை உறுதி செய்கின்றன. இதே முறையில் முறுக்கிய கயிறு என்னும் பொருள் தரும் 'வடம்' என்னும் தமிழ்ச் சொல், பழங்காலத்தில் கயிற்றில் உருவான ஆபரணங்களை குறித்து நின்றது. இன்று பொற்கம்பிகள் முறுக்கி செய்த ஒருவகை அணிகலனுக்கு  'வடம்' என்னும் அந்த பழம் பெயர் வழங்குவதை அறிவோம்.

   அடையாளத்திற்காக தோன்றிய அணிகள் அக்கால மக்கள் செயற்கரிய ஒரு செயலை செய்து முடிக்க உறுதி பூணுங்கால், அதன் நினைப்பு எப்போது தமக்கிருக்க வேண்டும் என்ற குறிகோளில் தம் முன்னங் கைகளில் ' கங்கணம் ' என்னும் ஒரு வகை வளையத்தை அணிந்தனர்.  இன்றும் கூட 'ஒரு காரியத்தை செய்து முடிப்பேன்' என்று அக்கருமத்திலேயே கண்ணாக இருப்பார்கள். அவர் கையில் எதுவும் கட்டா விடினும் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார் என்று குறிப்பிடுகிறோம் இல்லையா? அந்த கங்கணத்தின் மறு வார்ப்பு தான் பின்னால் உருவான காபு, கடகம், வளையல்,வங்கி போன்ற கையணிகள். பண்படாத காட்டுப்பாதைகளில் படுத்து உறங்கும் பாம்பு போன்ற நச்சுப் பிராணிகளில் அரவம் கேட்டு விலகவும், புள்ளினங்கள் காலடியோசை கேட்ட மாத்திரம் பயந்தோடவும் அக்கால ஆடவரும் மகளிரும் கால்களில் அணிந்திருக்கும் அணிகலன் சுழலும், தண்டையும், சிலப்பும் இன்று எல்லோருமே அணியும் மோதிரத்தின் முன்னோடிதான் பழைய கணையாழி. அன்றைய அரச குடும்பத்தாரும், அரச கட்டளையை நிறைவேற்றும் அமைச்சர்,தளபதி, தூதர், ஒற்றர் போன்ற பொறுப்பான பதவியினரும் மட்டுமே கணையாழி அணிவர். ஆழி என்பதற்கு 'சக்கரம்' என்று அர்த்தம்.

     கண்ணபிரானது சக்கராயுதம் போல அரசனின் ஆணை சக்கரம் அவனது ஆட்சி எல்லைக்குள் விரைந்து பாயும் என்பதால், மன்னனின் ஆணையை செயல்படுத்தும் அதிகாரிகள் இன்றைய அடையாள அட்டைகள் போல அவற்றைப் பயன்படுத்தினர். பின்னாளில் விரலுக்கு அழகு சேர்க்க விரும்பிய எல்லோருமே அணியத் தொடங்கியதும் அது மோதிரமாகி விட்டது.அங்கலெல்லாம் தங்கமாக மின்னவேண்டும் என்ற ஆபரண மோகம் சங்க காலத்திலேயே மங்கையர் மனத்தில் புகுந்துவிட்டது போலும். கால் விரலில் அணியும் மெட்டி முதல் சுருங்கூந்தல் வகிட்டில் தொங்கும் நெற்றிச்சுட்டி வரை  என்று பாவலர்கள் அணிகளின் பெயரால் ஐம்பெருங்காபியங்களை ஆக்கித்தரும் அளவுக்கு அன்றே நகை மோகம் இருந்திருக்கிறது.

  அயல் நாடுகளில் அந்நிய செலாவணிக்கே பயன்படும் தங்கம்  ஆடம்பர சின்னங்களாய் நம்மவர்கள் அங்கங்களில் அடைந்து கிடக்கின்றன. '' நான் விரும்புவதெல்லாம் அணிகலன் ஆடம்பர மின்றி அசோக வனத்தில் இருந்த சீதையைத்தான் ''   என்ற அண்ணல் காந்தியின் ஆதங்கத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்.  இன்றைய நவ நாகரீக அணிமணிகலனுக்கு நமது கோவிலுள்ள சிலைக்கு அணிவிக்கப்பட்ட நகைகளின் மறு பதிப்பு கூட கூறலாம். ' கோவில்களுள் கோவில் ' என்றும் '  தேவாலய சக்கரவர்த்தி ' என்றும் 'தென் திசை மேரு ' என்றும் அழைக்கப்படும் இராஜ ராஜீசுவரம் கோவிலை எழுப்பியவர் முதலாம் இராஜாராஜன். இந்தப் பேரரசர் ஒரு பேராற்றலின் மொத்த உரு. இவருடைய 29 ஆண்டுக்கால ஆட்சியில் 20 ஆண்டுகள் பேரரசை விரிவடையச் செய்வதிலேயே கழிந்தன. கடைசி பத்து ஆண்டுகள் இவர் கோவில் கட்டுவதிலும், கலை வளர்ப்பதிலும் கவனத்தை செலுத்தினார். இந்தக் காலக் கட்டத்தில்தான் தமிழரின் கலைகள் வளர்ச்சியடைந்தன. காலம் காலமாக இருந்து வந்த சிற்ப, கட்டட அணுகுமுறைகளில் மாறுதல் வந்தன. உலோகத்தை உருக்கி சிலைகள் செய்யும் கலை விரிவடைந்ததும் இந்த மாமன்னரின் கடைசி பத்து ஆண்டு ஆட்சிதான். 52 கோவில்கள் கட்டப்பட்டன. 66 படிமங்கள். அவற்றில் இராஜ ராஜன் அளித்தவை 23.

    [கழுத்து அணி = ஒற்றைச் சரமாலை ] ; காறை[கழுத்து அணி ] ; கச்சோலம் =  [ இடை அணி] ; கலாவம் =  [இடை அணி];                        காந்த நாண் புள்ளிகை = [கழுத்து அணி];   மோதிரம்[இரத்தினம் , முத்து ];  முத்து மாத்திரை = [காது அணி] ... -           என்கிறது கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர் இராஜ ராஜனின் ஆணை.

(தொடர்ச்சி நாளை)

அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

Rathinam Chandramohan

unread,
Sep 2, 2013, 1:15:21 PM9/2/13
to mint...@googlegroups.com
ஆனால் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள் புதுப்பொலிவில் '’ நகைப்பது''  போலத் தோன்றுவதாலோ என்னவோநம் ஆன்றோர்கள் அந்த அணிகளுக்கு '  நகை’' என்னும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள். 
Now Nagaiyum pochu. Punnagaiyum pochu. Because of speculative trading of Gold.
Ariya thagavalkalukku nandri


2013/8/30 Krishnan S <krishna...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India
Reply all
Reply to author
Forward
0 new messages