Kuvalai Malar

414 views
Skip to first unread message

Kandiah MURUGATHASAN

unread,
Nov 30, 2016, 4:35:07 AM11/30/16
to mint...@googlegroups.com
காசிக்குப் போகும் சன்னியாசி 
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி !
இல்லறமே உகந்ததா ? 
துறவறம் உகந்ததா ?
துறவறத்தில் இல்லறம் நன்றா ..!
இல்லறத்தில் துறவறம் நன்றா !
கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கையோ..
கன்னிச்சாமிகளின் வாழ்க்கையோ ..! 
முத்தி தருமா ?
அந்தக் காலத்தில் துறவு அல்லது துறவி என்றதும் உற்றார் உறவினர்கள்இ சொத்து சுகங்களைத் துறந்து காடுகளில் போய் தனித்திருப்பது என்பதாகவும்இ இக் காலத்திலோ மடம் ஒன்றை அமைத்து அதில சிஷ்யர்கள் புடை சூழ சகல சுகபோகங்களுடன் வாழ்வதுமே துறவு என்பதான எண்ணப் போக்கு பொதுவில் நிலவுகிறது.
சித்தரியலில் துறவு என்பது மேலே சொன்ன புற பற்றுக்ள் போலல்லாதுஇ அகப் பற்றுக்கள் அனைத்தையும் துறத்தலே துறவாக கருதப் படுகிறது. அகத்தியர்இ சிவவாக்கியர் போன்ற சித்தர் பெருமக்கள் குடும்ப அமைப்புகளில் இருந்தவாறே பற்றுகளைத் துறந்து வாழ்ந்தது நாம் அறிந்ததே. லாஹிரி மகாசயர் குடும்ப அமைப்பில் இருந்தவாறே பற்றுகளைத் துறந்தவர் என்று அவரது குரு மகாமுனி பாபாஜி அவர்களாலேயே பாராட்டப்பட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே
எந்த மாதிரியான பற்றுக்களை எல்லாம் நாம் பற்றியிருக்கிறோம் என்பதற்கு உதாரணமாய் திருமூலரின் இந்த பாடலைக் கொள்ளலாம். நிலத்தை உழுததும்இ பெய்த மழையால் மகிழ்ந்த உழவன்இ உழவு செய்யும் பொழுது களையாகிய குவளை மலர்கள் விளைந்துள்ளதைக் காண்கிறான். அம் மலர்கள் தன் மனைவியின் கண்கள் போல் உழவனுக்கு மயக்கம் தரஇ களையாகிய குவளை மலர்களைக் களையாமல் விடுகிறானாம் அதனால் அவன் பயிர்கள் அழிந்து விடுகிறதாம். அதே போல் மனதில் தோன்றும் களையாகிய பற்றுக்களைத் துறக்காமல் அதன் பால் மயக்கம் கொண்டு வாழ்வைத் தொலைக்கிறோம் என அழகாக விளக்குகிறார் திருமூலர்.
பிறந்தும் இறந்தும் பல பேதைமை யாலே
மறந்து மலாவிருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளியாமே
மேலும் அறியாமையால் பிறந்தும் இறந்தும் அவற்றை மறந்தும் ஆணவ மலம் என்னும் இருளில் மனிதர்கள் மூழ்கி உள்ளதை சுட்டிக் காட்டுகிறார் திருமூலர். மேலான குருவின் வழிகாட்டுதலில் பற்றுக்களைத் துறக்கும் நேரத்தில்இ உயிர்களுக்குள் சுடர் விட்டு விளங்கும் பேரொளியான சிவன் நமக்குள்ளும் துலங்குவார் என்பதை துறவால் ஏற்படும் பயனாக கூறுகிறார்.
மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே
அனைத்தையும் துறந்தவன்; ஒருவரும் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளியாய் உள்ளவன்; எமனைத் துறந்தவர்களுக்கு நண்பன்; விருப்புஇ வெறுப்புக்கள் அற்றவன்; எப்பொருளிலும் பற்றில்லாதவன் என இத்தனை சிறப்புகளை கொண்ட சிவனின் நிலையை நாம் அடைய வேண்டுமெனில் நாம் நம்மை சூழ்ந்துள்ள பற்றுகளை அறிந்து விலக்க வேண்டும் என்கிறார் திருமூலர்.



(குவளை மலர் என்றால் என்ன?.தாமரை என்றும் பொருள்படுமா? விளக்கம் தாருங்கள்.)

தேமொழி

unread,
Nov 30, 2016, 5:40:23 PM11/30/16
to மின்தமிழ்


On Wednesday, November 30, 2016 at 1:35:07 AM UTC-8, tamilstorywriters wrote:

உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே
எந்த மாதிரியான பற்றுக்களை எல்லாம் நாம் பற்றியிருக்கிறோம் என்பதற்கு உதாரணமாய் திருமூலரின் இந்த பாடலைக் கொள்ளலாம். நிலத்தை உழுததும்இ பெய்த மழையால் மகிழ்ந்த உழவன்இ உழவு செய்யும் பொழுது களையாகிய குவளை மலர்கள் விளைந்துள்ளதைக் காண்கிறான். அம் மலர்கள் தன் மனைவியின் கண்கள் போல் உழவனுக்கு மயக்கம் தரஇ களையாகிய குவளை மலர்களைக் களையாமல் விடுகிறானாம் அதனால் அவன் பயிர்கள் அழிந்து விடுகிறதாம். அதே போல் மனதில் தோன்றும் களையாகிய பற்றுக்களைத் துறக்காமல் அதன் பால் மயக்கம் கொண்டு வாழ்வைத் தொலைக்கிறோம் என அழகாக விளக்குகிறார் திருமூலர்.

(குவளை மலர் என்றால் என்ன?.தாமரை என்றும் பொருள்படுமா? விளக்கம் தாருங்கள்.)

 
குவளை மலர் அல்லி மலர் வகையைச் சார்ந்தது. 

கீழே  செங்கை பொதுவன் ஐயா தரும் விளக்கம்.



குவளை
Kuvalai flower
Red water-lily
This is one among the 99 flowers gathered by girls and used to make-up their leaves-dress.. 
This is a scene in clandestine love. The heroine with her friend-maid after a heavy-fall at noon played gathering flowers on a rock-bed. Then they made them garlands and leaves-dress and wear them to enjoy. 
Poem – Kurinjipattu, belongs to 2nd century B.C. 

குவளை, 
தண் கயக் குவளை,
தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.
  • குவளை குளத்தில் பூக்கும் மலர்.
  • குவளை மணம் நிறைந்த மலர்.
  • நெய்தல் உப்பங்கழியில் பூக்கும் மலர்.
  • குவளை சிவப்பு நிறத்தில் பூக்கும்.
  • ஆம்பல் வெள்ளை நிறத்தில் பூக்கும்.
  • தாமரை நடுவில் பொகுட்டு என்னும் தளம் கொண்டது.
  • குவளை, நெய்தல், ஆம்பல் பூக்கள் நடுவில் பொகுட்டுத்தளம் இல்லாமல் இதழ்-அடுக்குகளாகவே இருக்கும்.
இந்த வேறுபாடுகளை நினைவில் கொள்ளவேண்டும்.
 





..... தேமொழி

N. Ganesan

unread,
Nov 30, 2016, 7:40:25 PM11/30/16
to மின்தமிழ்


On Wednesday, November 30, 2016 at 2:40:23 PM UTC-8, தேமொழி wrote:

கற்கநிற்க தளம்.

நா. கணேசன் 
Reply all
Reply to author
Forward
0 new messages