விளங்காயும் விளாங்காயும் (வெண்பா இயற்றும் மரபு)

30 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 24, 2018, 5:25:11 AM9/24/18
to housto...@googlegroups.com, மின்தமிழ், vallamai, panbudan
எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தல் போல, இலக்கியங்கள் எழுதப்பெற்றபின்னர் இலக்கணம் உருவாகிறது என்கிறது பழஞ்செய்யுள். பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேரா. இராம. சுப்பிரமணியனின் விளங்காயும், விளாங்காயும் அத்தகைய இலக்கணவிதிகளில் ஒன்றின் விளக்கக் கட்டுரை. அதனைத் தேடித் தந்தேன். இலக்கணம், இலக்கியம் முறையே லக்‌ஷணம், லக்‌ஷியம் என்னும் வடசொற்களில் இருந்து உருவாகிப் பிராகிருதம், தமிழ் போன்றவற்றில் வழங்கும் என்று அறிஞர்கள் இந்தியச் செம்மொழிகளின் உறவுகளைத் துலங்கச்செய்துள்ளனர். கமில் சுவெலெபில் இலக்கணம், இலக்கியம் என்ற சொற்கள் உருவாதலை விரிவாக ஆராய்ந்துள்ளார். அவரது நூல்களிலும் கட்டுரைகளிலும் பல்லாண்டு முன்னர் படித்துள்ளேன். தமிழ்ப் பேராசிரியர்கள் எழுதிய தமிழ்க் கட்டுரைகளில் இச் செய்தியை விரிவாக எழுதியிருப்பவர் பேரா. இராம. சுப்பிரமணியன் தான். அக்கட்டுரையைச் சில நாட்களில் பகிர்கிறேன். 

நேற்று ஆர். பாலகிருஷ்ணன் சிந்து நாகரீகம் தமிழகம், தென்னிந்தியா வந்த வரலாற்றைப் பேசும் சொற்பொழிவைக் கேட்க நேரம் எடுத்துக்கொண்டேன். Interesting lecture about Indus valley culture's ceramic traditions appearing in Megalithic period pottery of Tamil Nadu. பொறுமையாய்க் கேட்கவேண்டிய காணொளி இஃது:  https://www.youtube.com/watch?v=93mqRKgoezU
பட்டுப்பாதை (SIlk Route), மணக்கறிப் பாதை (Spice Route, கறி = கறிமிளகு) போல, பானைப் பாதை (Pot Route) என்பது Bronze Age Civilization of North India reaching Tamil country in the Iron Age, 1000 years later & starting of Paddy agriculture, Horses, Iron smelting (that gave birth to Damascus steel technology) in Tamil Nadu.
ஆர். பாலகிருஷ்ணன், I.A.S  அவர்களின் குரு ஐராவதம் மகாதேவன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவர் 50+ ஆண்டுகள் உழைத்து தமிழ் நாட்டுக்கு ப்ராமி வந்த வரலாறும், தமிழ் எழுத ப்ராமி எழுத்து மூன்று முறை மாறிய படிநிலைகளும், அதில் புள்ளி உருவாவதும், வரிவடிவம் பற்றிப் பேசும் தொல்காப்பியத்தில் புள்ளி இடம்பெறும் உன்னத நிலையும், அதனால் தொல்காப்பியர் காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு என நாணயங்கள், கல்வெட்டுக்களால் உறுதிபடத் தொல்லியல் தரும் செய்தியை தன் க்ளாஸிக் நூலில் (Early Tamil Epigraphy) விளக்கியுள்ளார்கள். தொல்லியலும், கல்வெட்டுகளும் காட்டும் தொல்காப்பியர் காலம் இதுதான். ஐராவதத்தின் ஆய்வுக்கொடையை ரிச் சாலமன் (Jl. of American Oriental Society) விரிவாக எழுதியுள்ளார். பெர்க்கிலி, ஹார்வர்ட், இனி ஹூஸ்டன் என்று பல பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியர் பீடங்கள் அமைந்துள்ள நிலையில் ஐராவதம் போன்ற முன்னோடிகளின் ஆய்வுகள் இன்னும் விரிவாகும். தொல்காப்பியமும் படிக்கப்பெறும். பொருள் அதிகாரம், அதன் வடமொழி தொடர்புகள், ... 

விளாங்காய்ச் சீரை விலக்குதற்காக, இராசிபுரம் முதுபுலவர் கி. அரங்கசாமி பாடிய அண்ணா அறுபது நூல்வாழ்த்துக்கு “அரங்க சாமி” என வகையுளி ஆக்கியுள்ளார் மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை:

அண்ணா அறுபதெனும் அன்புமகு டஞ்சூட்டிப்
பண்ணார் கவிதை பலதந்தான் - நண்பார்
கவியரங்க சாமியெனும் கண்ணியன்மற் றிந்நூல்
புவியிற் சிறக்கப் புகழ்ந்து.
                                                        - மகாவித்துவான் மேவீவே.

இராசைப் புலவர் கி. அரங்கசாமி திராவிடப் பரணி, கலிங்கத்துப் பரணி போற் பாடியவர்.
அதுவும், தமிழ் எண்ம நூலகத்தில் கிடைக்கிறது. அரிய படைப்பு.

N. Ganesan

1892-ஆம் ஆண்டில் பாம்பன் சுவாமிகள் விளாங்காய்ச்சீரைத் தவிர்க்க வேண்டி எழுதியிருக்கிறார். பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டில்” இருந்து : “ வெண்பாவுக்குரிய காய்ச்சீர் நான்கனுள் இடையிற் குறினெடிலிணைந்த நிரையசையுடையனவும், இரண்டு மாஞ்சீராகப் பிரிக்கத்தகுவனுமான ‘தம்பிரானே’ என்பதுபோன்ற கூவிளங்காயும், ‘சருவசாரம்’ என்பது போன்ற கருவிளங்காயும் வெண்பாவில் வரவொண்ணாவெனவும், வரின் ஓசைநயங் கெடுமெனவு மறிக. கலிப்பாவில் வரும் காய்ச்சீர்கட்கு மிந்நியாயங் கொள்க.” பின்னர், கிவாஜ, திருமுருகன் அறிவுரை தந்து வழிகாட்டினர். ஆனால், ஆழமாக ஆராய்ந்து இளம்பூரணர், பரிமேலழகர் உரைகளில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டதெல்லாம் கண்டு கூறினவர் பேரா. இராம. சுப்பிரமணியன் அவர்களே. 1960களில் இருந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துகையில் இந்த இலக்கண விதியைக் கற்பித்துள்ளார். ஆனால்,  நான் இப்பதிவில் இணைத்துள்ள கட்டுரை 1998-ல் அச்சில் வெளியான நூல்தான்.

இதற்கு ஓர் ஒப்பீடாக, ஆறுமுக நாவலர் வாழ்க்கையிலிருந்து சான்று காட்டலாம். அவர் பாதிரியார்களிடம் இருந்து விலகி, வசனநடையில் தமிழும் சைவமும் வளர்க்கப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். அதுபோழ்து, அகத்தியர் மாணவர்கள் பன்னிருவர் பெயர்கள் என வரிசையாய்த் தொகுத்துக் கற்பித்தார். இது நாடெங்கும் பரவியது. ஆங்கில நூலிலும் சைமன் காசிச்செட்டியால் இடம்பெற்றது. அதற்கப்புறமே, “தமிழ்” என்ற கட்டுரை ஆறுமுக நாவலர் பாலபாடம் (இறுதித்தொகுதியில்) அச்சானது. அதுபோல், தமிழறிஞர்கள் நெடுங்காலம் போதிக்கும் செய்திகள் அச்சில் வருதற்கு வருடங்கள் பல கழிந்துவிடுகின்றன.

எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தல்போல், விளாங்காய்ச் சீர் விலக்கல் விதி உருவாக இவர் கட்டுரை உதவியிருக்கிறது. அவர் இலக்கணக்கடலாக வாழ்ந்தவர். அவரது ஒளிப்படம் இணையத்தில் இடம்பெறச் செய்யவேண்டும்.

இப்பதிவில், பேரா. இராம. சுப்பிரமணியன் கட்டுரையை வருடி இணைத்துள்ளேன். மரபுச் செய்யுள் முனைவோருக்குப் பயனாகும். அரிமா, தமிழவேள் இராம. சுப்பிரமணியன், கணக்கு வழக்கு (இலக்கிய இலக்கணம்), திருமகள் நிலையம், 1998, பக். 75-79

நா. கணேசன்

கவிஞர் ஹரிகிருஷ்ணன் புலவர் ச. சீனிவாசன் கட்டுரை தந்துள்ளார்:

N. Ganesan

unread,
Sep 24, 2018, 5:25:12 AM9/24/18
to housto...@googlegroups.com, மின்தமிழ், vallamai, panbudan, Iravatham Mahadevan

எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தல் போல, இலக்கியங்கள் எழுதப்பெற்றபின்னர் இலக்கணம் உருவாகிறது என்கிறது பழஞ்செய்யுள். பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேரா. இராம. சுப்பிரமணியனின் விளங்காயும், விளாங்காயும் அத்தகைய இலக்கணவிதிகளில் ஒன்றின் விளக்கக் கட்டுரை. அதனைத் தேடித் தந்தேன். இலக்கணம், இலக்கியம் முறையே லக்‌ஷணம், லக்‌ஷியம் என்னும் வடசொற்களில் இருந்து உருவாகிப் பிராகிருதம், தமிழ் போன்றவற்றில் வழங்கும் என்று அறிஞர்கள் இந்தியச் செம்மொழிகளின் உறவுகளைத் துலங்கச்செய்துள்ளனர். கமில் சுவெலெபில் இலக்கணம், இலக்கியம் என்ற சொற்கள் உருவாதலை விரிவாக ஆராய்ந்துள்ளார். அவரது நூல்களிலும் கட்டுரைகளிலும் பல்லாண்டு முன்னர் படித்துள்ளேன். தமிழ்ப் பேராசிரியர்கள் எழுதிய தமிழ்க் கட்டுரைகளில் இச் செய்தியை விரிவாக எழுதியிருப்பவர் பேரா. இராம. சுப்பிரமணியன் தான். அக்கட்டுரையைச் சில நாட்களில் பகிர்கிறேன். 

நேற்று ஆர். பாலகிருஷ்ணன் சிந்து நாகரீகம் தமிழகம், தென்னிந்தியா வந்த வரலாற்றைப் பேசும் சொற்பொழிவைக் கேட்க நேரம் எடுத்துக்கொண்டேன். Interesting lecture about Indus valley culture's ceramic traditions appearing in Megalithic period pottery of Tamil Nadu. பொறுமையாய்க் கேட்கவேண்டிய காணொளி இஃது:  https://www.youtube.com/watch?v=93mqRKgoezU
பட்டுப்பாதை (SIlk Route), மணக்கறிப் பாதை (Spice Route, கறி = கறிமிளகு) போல, பானைப் பாதை (Pot Route) என்பது Bronze Age Civilization of North India reaching Tamil country in the Iron Age, 1000 years later & starting of Paddy agriculture, Horses, Iron smelting (that gave birth to Damascus steel technology) in Tamil Nadu.

'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே'

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்
https://www.bbc.com/tamil/india-45615010?ocid=socialflow_facebook

kanmani tamil

unread,
Sep 24, 2018, 11:33:28 AM9/24/18
to mintamil
பானைப்பாதை பற்றிய காணொளி மிகவும் மதிப்புடைய தரமான ஆய்வுப்போக்கைச் சொல்கிறது.
அக்காணொளியின் கருத்துக்கள் ஊன்றிப் படித்து மனதில் இருத்த வேண்டியவை .
கருதுகோள் அளவில்  இருந்த சில அனுமானங்களுக்குத் தக்க சான்றாகவும் அமையக்கூடியது.
கண்மணி  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

kanmani tamil

unread,
Sep 27, 2018, 8:45:23 AM9/27/18
to mintamil
பேராசிரியர் ராமசுப்ரமணியன்  கட்டுரை படித்தேன்.
எனக்கு அக்கருத்துக்களில் உடன்பாடு இல்லை.
 வள்ளுவருக்கு இயல்பாக அமைந்த மொழிநடைக்கு அவர் தன் சொந்தக் கருத்தை ஏற்றிக் கூறுவதாகப் படுகிறது.
 இப்படியும் சில ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.
 மரபுக்கவிதை எழுதும் ஆர்வலர் யாராக இருந்தாலும் வழிகாட்டியாக அமையும் தகுதி அமிதசாகரருக்கு மட்டுமே உண்டு என்பது என் கருத்து.
உங்களைப்போல் ஆசையாக மரபுக்கவிதை எழுதுவோருக்கு அமிதசாகரரைக் காட்டிலும் இராம .சுப்ரமணியன் கருத்து கையாள எளிதாக இருக்கிறது போலும். 
நான் அப்படி எழுதுவதில்லை; ஆதலால் எதுவும் பெரிதாகப் படவில்லை.
மரபுக்கவிதை எழுதும் உங்கள் ஆர்வத்திற்கு என் பாராட்டுக்கள்.
கண்மணி  
 
Reply all
Reply to author
Forward
0 new messages