உ-ம்:
http://www.infitt.org/ti2000/tamilinaiyam/papers/A2eramok.pdf
http://www.infitt.org/ti2000/tamilinaiyam/papers/A3gopalok.pdf
----------
http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf
http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf
http://www.infitt.org/ti2000/tamilinaiyam/papers/A5kannanok.pdf
http://www.infitt.org/ti2000/tamilinaiyam/papers/A4koduok.pdf
http://www.infitt.org/ti2000/tamilinaiyam/papers/A1vckok.pdf
N. Ganesan
BTW, you can clearly hear the 3-way distiction
in sound for k & c in Dr. VCK's speech:
http://video.google.co.uk/videoplay?docid=-6588419071760471274&hl=en
See this explained in Dr. Navin's paper
http://www.infitt.org/ti2000/tamilinaiyam/papers/B6navin.pdf
Tiru. Avarangal Srivas' paper on Tamil script reform:
http://www.infitt.org/ti2003/papers/56_ssrivas.pdf
>எழுத்துச் சீர்மையை பற்றிய இணையப் பக்கங்களின் முகவரிகளை அனுப்பியதிற்கு நன்றி.
>தமிழன்பகலா,
>கண்ணன் நடராசன்
அன்பின் ந. கண்ணன்,
வணக்கம். ஒருமுறை இலங்கைக்காரர்கள்
யார் சீர்மை முயற்சியில் ஆர்வமுடையவர்கள்?
ஆவரங்கால் சிறீவாசு தெரியும், ஏனையோர்? என்று கேட்டீர்கள்.
மற்றொரு இணையத்தில் பிரபலமானவரைப்
பற்றி அறிவேன். சில விசிடி தயாரிப்பு வினியோகம்
என்று தேர்தல் அரசியலிலும் அவர் பெயர் தமிழ்நாட்டில்
அடிபடுகிறது.
கல்வியாளர் வாசெகு ஐயாவின்
சீர்மை உரையைக் கேட்டிருப்பீர்கள்:
http://tamilvu.org/esvck/index.htm
கூகுள் வீடியோவிலும் முன்னர் தொடுப்புக்
கொடுத்துள்ளேன்.
http://video.google.com/videoplay?docid=-6588419071760471274
இன்னும் சீர்மைக்கான
ஆவணங்களை தமிழ் இணையப் பல்கலைக்
கழகத்தில் ஏற்ற வேண்டும். புலவர் செ. இராசு
அவர்களின் கட்டுரை 1990 பற்றிய குறிப்பு
இம்மடற் கடைசியில்.
இதற்கான வாசெகு எழுத்துருவை முதலில்
வடிவமமைத்தவர் ஒரு யாழ்ப்பாணத் தமிழரே.
1984-ல் இருந்து சென்னையில் வசிப்பவர்,
தமிழ்ப் பேரா. கபிலன் அவர்களின்
கணியத்தமிழ் கும்பெனி, அவரது
பிரபலமான கணினி அறிமுகம்
பற்றிய மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தெரிந்திருக்கலாம்.
http://www.bhashaindia.com/Patrons/SuccessStories/kabilan.htm?lang=ta
http://www.kaniyatamil.com/index.htm
-----------
மேலும் பார்க்க, ஐராவதம் மகாதேவனும், கொடுமுடிச் சண்முகனும்
தினமணி நாளிதழில் (அப்பொழுது ஐராவதம் தினமணி
எடிட்டராக இருந்தார்) நடத்திய வாக்கெடுப்பு, பரிந்துரைகள்
எல்லாம் புலவர் செ. இராசு (அப்போது கல்வெட்டுத்துறைத்
தலைவர், தமிழ்ப் பல்கலை, தஞ்சை) கட்டுரையாக 1990-ல் வடித்துள்ளார்.
அது போன்ற சீர்மைக் கட்டுரைகளை தமிழ் இணையப்
பல்கலையில் ஏற்றவேண்டும்.
பிடிஎஃப் செய்து தர எண்ணியுள்ள கட்டுரை
இந்தியாவின் மிகப் பழமையான இசைக்கல்வெட்டு
- அறச்சலூர்க் கல்வெட்டுக் கண்டுபிடித்த இராசு
ஐயாவினது. இராசு யாழில் நடந்த உலகத்தமிழ்
ஆராய்ச்சி மாநாட்டில் சிங்கள போலீசாரால் துரத்தப்பட்ட
தமிழறிஞர்களில் ஒருவராவார்.
புலவர் செ. இராசு, கல்வெட்டுத்துறை, தமிழ்ப் பல்கலை,
15.7.1990 அன்று விழுப்புரம் திருக்குறள் பேரவை சார்பில்
நடைபெற்ற எழுத்துச் சீர்மை கருத்தரங்கில் வாசித்த
கட்டுரை அது.
மேலும் பின்னர்.
அன்புடன்,
நா. கணேசன்
இச் சொற்பொழிவை மைக்ரோசாப்ட் ’சில்வர்லைட்’ என்னும்
நுட்பம் கொண்டு இணையப் பல்கலை வலையேற்றம் செய்துள்ளது:
“ We have used the Silverlight software( Microsoft Technology) to
provide the video streaming for Ezhuthu Chiiramaippu video, so to view
it you have to install the Silverlight in your system. For Windows
XP, Mac & Linux OS by default it will ask to install the Silverlight.
If you are using the Windows 2000 or older version, for your
convenience we have uploaded the Silverligh in TVU server and provided
the link in the same page itself (http://www.tamilvu.org/esvck/
index.htm). Please download and install it and let us know whether
still the problem persist.“
Do we have to install any Plug-ins in Firefox and Chrome browsers to
watch the video?
இந்த விடியோ ஃபயர்பாக்ஸ் உலாவியில் தெரிய என்ன செய்யவேண்டும்?
கூகுள் குரோம் உலாவியில் தெரிகிறதா? இல்லையேல், என்ன செய்தால்
தெரியும்?
உங்கள் உதவிக்கு நன்றி!
நா. கணேசன்
http://nganesan.blogspot.com
Have you read Tamilmanam today?
TM is 5-years old now!
http://tamilmanam.net
On Apr 15, 8:23 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> I received a letter from the Director, Tamil Virtual University.
> Please read the contents.
>
> ----------------
>
> Respected Sir,
>
> Please find the enclosure.
>
> Dr. P.R. Nakkeeran
> Director
> TVU
>
> -------------------------------------------------------------------------------------------
On Aug 17, 9:02 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> கணேசன் ஐயா,
>
> நீங்கள் பலமாகப் பரிந்துரைக்கும் இந்த எழுத்துச் சீர்மையின் பயன்கள் எனக்குப்
> புரியவில்லை. இதனால் தமிழ் மொழி கற்பது எப்படி எளிதாகும் என்பதும் புரியவில்லை.
> இப்போதிருக்கும் வரிவடிவம் நன்றாகத் தானே இருக்கிறது? ஜூ ஷூ போன்ற கிரந்த
> மொழிகளுக்கு உரிய குறிகளை நாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்திக்
> கொண்டிருக்கும் தமிழ் மொழி எழுத்துக்களின் மேல் ஏன் புகுத்த வேண்டும்? இது வீண்
> குழப்பத்திற்கும் மொழி வளர்ச்சியின் சுணக்கத்திற்குமே வழிவகுக்குமென
> ஐயுறுகிறேன்.
>
> நடராஜன்.
>
> 2009/8/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > Email: naa.gane...@gmail.com
கிரந்தம் எப்போது மொழியானது ;) ?
On Aug 17, 11:31 am, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> 2009/8/17 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
>
> > கிரந்தம் எப்போது மொழியானது ;) ?
>
> அப்படி எழுதியது தவறுதான்.
>
> //ஜூ ஷூ போன்ற கிரந்த மொழிகளுக்கு உரிய குறிகளை //
>
> ”ஜூ ஷூ போன்ற கிரந்த எழுத்துக்களுக்கு உரிய குறிகளை” என்று எழுதியிருக்க
> வேண்டும்.
>
> சுட்டியதற்கு நன்றி.
>
> நடராஜன்.
>
கீழ்விலங்கு பூட்டுவது பனையோலையில்
நாராசத்தால் எழுதும்போது தேவை.
அத் தேவை இன்றில்லை.
உ, ஊ உயிர்மெய்களைப் பிணைப்பதைக்
கீழ் விலங்கு என்கிறது தமிழ் இலக்கணம்.
விலங்கை உடைத்தால் மற்ற உயிர்மெய்கள்
போல ஒழுங்கு ஏற்படும். அம்முறையும்
எழுத்தில் ஏற்படணும்:
http://nganesan.blogspot.com/2009/08/ezhuttu-korppu.html
http://nganesan.blogspot.com/2009/08/singapore.html
...
(அ) ஊகார உயிர்மெய் சுமார் 4% தான் வருகிறது.
எனவே கிரந்த எழுத்துக் குறி போதும் என்று நினைக்கிறேன்.
ஏற்கெனெவே பழக்கமானது. வேறொன்றும் பொருந்தினால்
ஏற்போம்.
(ஆ) ஒரு 20% வருவது உகர உயிர்மெய். அதன் தேர்வு
கன்னடம், மலையாளம், தெலுங்கு போல ஒருவடிவம்
கொடுத்துள்ளேன். வரி நீளம் அதிகரிக்கக் கூடாது
என்பது ஒரு முக்கியக் குறிக்கோளாக இத் தேர்வில்
இருந்தது.
அன்புடன்,
நா. கணேசன்
>
On Aug 17, 1:34 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> எனக்கு இதன் தேவையைப் பற்றிய அடிப்படையே புரியவில்லை. உங்கள் சுட்டிகளில்
> அதற்கான விளக்கம் இல்லை.
>
எல்லாம் அரசாங்கத்தின் கையில் இருக்கிறது.
முன்பு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 தான். இப்பொழுது கருணாநிதி
அவர்களின் சட்டத்தால் இரண்டு தமிழ்ப் புத்தாண்ட நமக்கு ஏற்பட்டுள்ளதே.
முன்பு ஐ, ஔ இப்பொது அய், அவ் என்றும்
எழுதுகிறோமே. பழைய வடிவம் என்று ஒன்று இருந்தாலும்
கற்க, கற்பிக்க எளிமை கருதி றா,ணா,ளை, ...
என்று பல எழுத்தை தமிழர் மாற்றிவிட்டோம் இல்லையா?
மலையாளத்தில் கூட விலங்கு
இருந்தது, பின் அரசாங்கம் அதை உடைத்துவிட்டது.
விலங்கு உடைத்த தமிழ் உயிர்மெய்கள்:
http://dakshinatya.blogspot.com/2009/08/tamil-uyirmey-table.html
(இதன் வடிவம் கன்னடம், மலையாளம், தெலுங்கு
உகர வடிவோடு தொடர்புடையது. எனவே
தமிழுக்கும் பரிந்துரை. காலப்போக்கில் ஏற்கலாம்.)
அதுபோல் விலங்கு போட்ட உயிர்மெய்,
விலங்கை உடைத்த உயிர்மெய் என்றும் அரசால்
உருவாக்க முடியும் அல்லவா? கணினி யுகத்தில்
தென்னாப்பிரிக்கா போன்ற நாட்டில் தமிழில் இருந்து
விலகிச் சில தலைமுறை ஆனாலும்
கற்க விரும்புவோருக்கு நெடுங்கணக்கு மேட்ரிக்ஸ்
சுலபமாக இம்முயற்சி. குழந்தைகளுக்குக் கற்பித்தால்
எளிதில் ஞாபகத்தில் நிறுத்துகின்றனர்.
கோவி. கண்ணன், சிங்கப்பூர், இன்னும் பல
வடிவங்களை மாற்றணும் என்கிறார்:
http://govikannan.blogspot.com
”
கணேசன் ஐயா,
எதிர்ப்புகள் எப்போதும் இருக்கத்தான் செய்யும், தை ஒன்றுக்கு புத்தாண்டு
மாற்றியதற்கும் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்தன.
உயிரெழுத்துக்கள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ) ஐந்து நெடிலுக்கு ஒரு குறியீடு
சேர்த்தால்... மொத்தம் 5 (அ,இ,உ,எ,ஒ) + 1(நெடில் குறியீடு) +1 (ஐ) +
1ஒள + 1 (ஆய்தம்) என 9 எழுத்துக்களில் அடக்கிவிட முடியும். ஏற்கனவே
இருப்பது 13, 4 எழுத்துகள் குறையும். மெய்யெழுத்துகள் 18,
உயிர்மெய்யிக்கு மிகுதியான அளவாக (அதிகப் பட்சம்) 12 குறியீடுகள்
தேவைப்படும், அதிலும் ஒளதடம் என்பதை அவ்தடம் என எழுதலாம், 11
குறியீடுகளாகக் குறைக்கலால், ஒற்றைக் கொம்பை தலைக்கீழாகப் (அல்லது மிரர்
இமேஜ்) போட்டு கொ நெடிலை எழுதினால் துணைக்கால் இல்லாமல் எழுதமுடியும்,
அதே போல் இரட்டை கொம்மையும் மாற்றிப் போட்டால், ஒரு துணைக்காலை நீக்க
முடியும், எழுத்து.....வரி நீளம் குறையும்.
இப்படியாக மாற்றி மொத்தக் எழுத்துக் கணக்கைப் பார்த்தால் ஆங்கில சிறிய
பெரிய எழுத்துகளின் கூட்டல் (26 + 26) ஐ விடக் குறைவாகவே வரும்,
தட்டச்சவும் எளிதாக இருக்கும், ASCII பட்டியலும் எளிதாகிவிடும்.
இவையெல்லாம் உலக தமிழ் மாநாட்டில் பேசப் பட வேண்டியவை, பரிந்துரைப்போம்,
பிற மொழிக்காரர்களைக் காட்டிலும் நம் மொழிக்காரர்களிடம் சரியாக விளகினால்
நம்மவர்கள் தமிழ் எழுத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்வார்கள். கலைஞர்
இதுவரை உலக தமிழ் மாநாட்டை நடத்தியதே இல்லை :)
அன்புடன்
கோவி.கண்ணன்
ஆக மொத்தம் தமிழ் எழுத்துக் குறியீடுகள் 7 + 18 + 18 = “
”
அரசாங்கம் பரிசீலிக்கட்டும். அறிஞர் வாசெகு ஐயா பரிந்துரையை விட
http://www.tamilvu.org/esvck/index.htm
இன்னும் சுருக்கியே நான் சொல்கிறேன். இகர, ஈகாரக் கொக்கிகளை
விட்டுவிடலாம். வலப்புறம் நகர்த்தலால் பெரிதாகப் பிரயோஜனம்
இல்லை. அதனால் ஏறபடும் வரி-நீள அதிகரிப்பை ஈடுகட்ட
கொ, கோ, கௌ இவ்வரிசைகளை ஒவ்வொரு சின்னமாக்கிக் குறைக்கணும்.
அதெல்லாம் பெருமாற்றம். பெரும்பாலோருக்குக் குழப்பம்
என்றே கொடுமுடி சண்முகம், ஐராவதம், வாசெகு, ... போன்றோர்
ஒரு minimal program கொடுக்கின்றனர்.
உ,ஊ விலங்குகள் உடைபட்டால் சாதாரணர்களுக்கும்
தமிழ் உயிர்மெய் மேட்ரிக்ஸ் கற்க, கற்பிக்க எளிது.
தமிழரில் பெரும்விழுக்காடினர்க்கு தமிழ் எழுத இயலாநிலை
தீர உதவும். அரசாங்கத் தலைவர் மட்டும் செய்யவேண்டிய பணி இது.
நா. கணேசன்
On Aug 17, 9:32 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> 2009/8/18 N. Ganesan <naa.gane...@gmail.com>
அன்பின் நடராஜன்,
உங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தெரியுமே.
பெரியார் என்று முன்வைக்கிறபோது
சில சிக்கல்கள் அரசு மட்டத்தில் குறையும் அல்லவா?
The script modernisation committee while submitting its recommendation
to the government in 1969 had **clearly insisted that “the revised
character set should be used only in typewriting and printing and
should not be used for teaching children”**. Contrary to this, the
truncated alphabets appeared in the Malayalam text book of primary
class 1, leading the future generations of students to strange and
dubious language capabilities.
When computerised typesetting (DTP) became popular in 1980s several
software packages and fonts emerged. **Several font designers, working
in institutions outside Kerala and ignorant of Malayalam language,
designed conjuncts casually, generating contradictory character
mapping which is not found in any other languages**. **This is the
greatest example of how an integrated and stable alphabet set of a
language which survived for centuries can become disarrayed and
incoherent**.
It was in response to this non-systemisation of Malayalam that a
campaign under the banner `Rachana` (which means ‘Graceful Writing’)
led by Mr. Chitranja Kumar was launched with the following objectives.
*********************************
# The unique character set developed by a people over centuries,
together, transcending class divisions is not just a geometrical sign
but the symbol of a culture.
# A language should be revised and modernised when deficiencies are
observed in use and communication. And not based on the limitations of
a transient historical phenomenon of a typewriter machine.
# Modern information technology has made it possible to include and
manage the exhaustive character set of Malayalam in any application.
Rather than cut the alphabets to fit a machine, technology should be
tamed to serve the language.
# The original Malayalam alphabets should be made ready for use in the
modern language technology. The current information technology is
perfectly suitable for this task.
**********************************
The people of Kerala have welcomed the initiative of Rachana
wholeheartedly. Leading intellectuals, literary stalwarts and
journalists have supported the venture. Even students brought up with
the truncated alphabets have come forward for the original alphabets
offered by Rachana. During the last four years several books have been
published using the Rachana editor. The autobiography of Guru
Nityachaithanya Yeti is one among them. The Ramayana of Ezhuthachan,
who is considered the father of Malayalam language, has also been
published in Rachana. The Malayalam Bible published in 19th century is
being reprinted in the original script using Rachana currently.
http://www.chintha.com/taxonomy/term/2/9 ;
NG, I know you would be aware of this;
Just want to hear your arguments for these. [The above are basically
my arguments against script reform too]
On Aug 18, 7:56 am, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> அரசை ஈர்ப்பதற்கான ஒரு யுக்தியாகவே பெரியார் இவ்விஷயத்தில்
> பயன்படுத்தப்படுகிறார் என்று நீங்கள் சொல்வதாக நான் புரிந்து கொள்ளலாமா?
>
> வேறு அரசாங்கம் வந்தால் வழிமுறை மாறிவிடுமா?
>
> மத்திய அரசுக்கு வேறு வழிமுறைகளில் முன்வைக்கப்படுமா?
>
> அன்புடன்
> நடராஜன்.
>
> 2009/8/18 N. Ganesan <naa.gane...@gmail.com>
It ought to show in Tamil !!
On Aug 17, 9:56 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> அரசை ஈர்ப்பதற்கான ஒரு யுக்தியாகவே பெரியார் இவ்விஷயத்தில்
> பயன்படுத்தப்படுகிறார் என்று நீங்கள் சொல்வதாக நான் புரிந்து கொள்ளலாமா?
>
> வேறு அரசாங்கம் வந்தால் வழிமுறை மாறிவிடுமா?
>
> மத்திய அரசுக்கு வேறு வழிமுறைகளில் முன்வைக்கப்படுமா?
>
தமிழின் வரிவடிவ மாற்றம் முழுக்க தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கையில்.
டெல்லி தமிழ்நாட்டு முடிவைச் சரி என்று சொல்லும். 4,5 வருஷம் ஆனால்
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஏற்று அரசாணை பிறப்பித்துவிடும்.
வாசெகு, சாலை இளந்திரையன், கொடுமுடி, ஐராவதம், ... அறிவுரையால்
எம்ஜிஆர் மாற்றம் கொண்டுவந்தபோது நிகழ்ந்த மாற்றம் இது.
அன்புடன்
கணேசன்
> அன்புடன்
> நடராஜன்.
>
> 2009/8/18 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
On Aug 17, 9:32 pm, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> தமிழ் கற்பதை எளிமைப் படுத்துவதன் வழிமுறை எழுத்துச் சீர்மையே என்பதற்கு
> பெரியார் சாராத விளக்கங்களையே நான் எதிர்பார்க்கிறேன்.
>
கேட்பதால் சில குறிப்புகள் தருகிறேன்.
வாசெகு ஐயாவின் பேச்சைக் கேட்டீர்களானால்,
அவ்வுரை பெரியார் சீர்மையாக இருக்கிறது:
ஜனவரி 1935-ல் பெரியார் கட்டுரை:
http://www.thamizhkkaaval.net/1108/nanthi1.html
இதனைத் துழாவி எடுத்துப் புதுவை நந்திவர்மன்
என்பவர் கொடுத்துள்ளார்.
வாசெகு பொறியியல் அறிஞர், ஐஎஸ்ஓ ஸ்டாண்டர்ட்ஸை
பாலிடெக்னிக், இஞ்சினீரிங் கல்லூரிகளில்
புகுத்தப் பெரும்பாடு பட்டு உழைத்தவர். அதனால்
20-25 வருடம் கழித்து இன்று பொறியியல்
தொழிற்சாலைகளில் ஒரு பெரும்புரட்சி, குழப்பம் இல்லாமல்
போனது. முன்பெல்லாம் ஆளுக்கொரு ஸ்டாண்டர்ட்.
வாசெகு ஐயாவின் கண்ணோட்டம் சீர்மையில் என்னவென்றால்
எல்லா எழுத்தும் இரண்டு வரிகளுக்குள் உயரத்தில் அடங்க வேண்டும்
என்பார். முன்பு புள்ளியைக் கூட இப்படிச் சொல்வார்.
அதனால் தான் இ,ஈ உயிர்மெய்க் கொக்கிகளை வலப்புறம்
நகர்த்தி வைத்துள்ளார். ஆனால் ஆங்கில எழுத்துக்களே
இரண்டு வரிக்குள் அடங்குவதில்லை. சிலது மேலும்,
சிலது கீழும் உண்டு. நமக்கு புள்ளி உள்ள தனிமெய்கள்,
1-சுழி, 2-சுழி கொம்புகள் உசரத்தில் சற்று மேலே உள்ளன.
த, ஞ, ந, ழ, ற - இவை இரண்டு வரிகளுக்குச்
சற்றுக் கீழே உள்ளன. எனவே தான் வரிநீள அதிகரிப்புச்
செய்யும் இ, ஈ கொக்கிகளை வலப்புறமாய் நகர்த்தல் தேவையில்லை
என்று விட்டுவிட்டேன்.
உ,ஊ உயிர்மெய் விலங்குகள் பூட்டப்பட்டது எழுத்தாணியைப்
பனையோலையில் தேய்த்து எழுத அவசியமாயிற்று,
இன்று தேவையில்லை.
உகரக் குறி கிரந்தத்தில் இருந்து பொருந்தாது.
அது கீழே 50% பொக்கையாய் உள்ளது
“பொக்கைவாய்க் கிழவன் பல்லுப் போனாற் போல்“ :)
எனவே தமிழ்பிராமி, கன்னடம்,
மலையாளம், தெலுங்கு - இவற்றுக்குத் தொடர்புடைய
ஒரு உகரக் குறியைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
வரிநீளம் அதிகரிப்பில்லாமல் பொருந்துகிறது.
த, ஞ, ந, ழ, ற, போல் சற்றுக் கீழே செல்லும்
குறியீடு உகரத்திற்கு எடுத்தால் பழைய கீழ்-விலங்குத் தளை
போல இருக்கும். ஆனால் more efficient.
http://dakshinatya.blogspot.com/2009/08/tamil-uyirmey-table.html
உவேசா மாணவர் கிவாஜ போன்றோர் கிரந்த குறியீட்டைச்
சொன்னார்கள். ஊகார உயிர்மெய் ஒரு சிறு விழுக்காடே (4%
ஏற்கெனவே பழக்கமானது. அதையே வைக்கலாம் இன்னொன்று பொருத்தமானது
என்று அரசு குழு முடிவு செய்தால் ஏற்கலாம்.
இந்த வலைப்பக்களை நெருப்புநரி உலாவியில்
பாருங்கள். எளிதில் படித்துவிடலாம்:
http://nganesan.blogspot.com/2009/08/ezhuttu-korppu.html
http://nganesan.blogspot.com/2009/08/singapore.html
(குழந்தைகளுக்குப் பழக்கிப் பயிற்றினால்,
கீழ்-விலங்கு பூட்டிய உ/ஊ உயிர்மெய்கள்
காலாவதி ஆகும்.)
முதலில் (1) தமிழ் வருஷ புத்தாண்டு இரண்டு,
(2) தனித்தமிழ், கிரந்தத்துடன் எழுதுவது (உ-ம்: ஸ்ரீநிவாஸன், சீனிவாசன்)
(3) ஐ, ஔ - அய், அவ் இலக்கணப்போலி
(4) வடசொல், தமிழ்ச்சொல் பிரயோகங்கள் (உ-ம்: கோபதி, மன்னர்மன்னன் -
பாரதிதாசன் மகன் பேர்)
(4) ஒருங்குறி, ‘டாப் குறியீடுகள்
(5) அலோபதி, சித்த வைத்தியம்
....
என்று பல உகப்புகள் (choices) தமிழர் நடைமுறை வாழ்க்கையில்
உள்ளது தானே. அதுபோல், உயிர்மெய் அட்டவணை மேட்ரிக்ஸுக்கும்
விலங்கு பூட்டிய எழுத்து, விலஙகை உடைத்து விடுதலை ஆன
எழுத்து என்று சாய்ஸ் வரணும். பிறகு எளிமை, செயல்பாட்டுத் திறன்
(efficiency)
காரணமாக உயிர்மெய் விலங்கு சட்டபூர்வமாய் உடைக்கலாம்.
அன்புடன்,
நா. கணேசன்
> அன்புடன்
> நடராஜன்.
The page cannot be found
The page you are looking for might have been removed, had its name
changed, or is temporarily unavailable.
On Aug 19, 6:43 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> தமிழ் அறிஞர்களுக்கும், முனைவர்களுக்கும் வணக்கம்.
>
> இப்பொழுது அறிஞர் வா.செ.கு. ஐயாவின் சீர்மை
> பற்றிய பேருரை தமிழ்நாடு அரசின்
> இணையப் பல்கலையில் ஐஇ, பயர்பாக்ஸ், குரோம்
> உலாவிகளில் நன்குதெரிகிறது.
>
> http://stream1.tamilvu.in/esvck/esvck01.htm
>
> -------
>
> இணையப் பல்கலை இயக்குனர் நக்கீரன் ஐயா
> இன்று எனக்கு எழுதியது:
>
> > Thanks for your comments, Now video- Ezhuthu Chiirammaippu by VCK
> > is working in Windows OS - Firefox and Google Chrome browser , Mac OS
> > – Safari and Firefox browser and Linux OS– Firefox browser. Please try now
> > and let us know whether it is working properly.
இப்பொழுது அறிஞர் வா.செ.கு. ஐயாவின் சீர்மை
பற்றிய பேருரை தமிழ்நாடு அரசின்
இணையப் பல்கலையில் ஐஇ, பயர்பாக்ஸ், குரோம்
உலாவிகளில் நன்குதெரிகிறது.
http://tamilvu.org/esvck/index.htm