இந்த வார வல்லமையாளர்

13 views
Skip to first unread message

Dhivakar

unread,
Jan 7, 2013, 12:04:08 AM1/7/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழமுதம், முத்தமிழ்

http://www.vallamai.com/literature/articles/30556/

புதிய வருடத்தில் நான் பேச்ப்போவது மிக மிகப் பழைய விஷயங்கள் சம்பந்தப்பட்டவைதான்.. ஆனால் இவை மட்டும் இல்லையேல் இந்த இடங்களில் மனிதனின் ஆதி நாகரீகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று எதிர்கால மக்களுக்கு எப்படித் தெரிய வரும்.. நான் சொல்வது இந்த மியூசியங்கள்தான்.

பல வருடங்களாகவே எனது பழக்க வழக்கங்களில் இது ஒன்றுதான். இந்தியாவில் எந்த நகருக்கு செல்ல நேர்ந்தாலும் நான் அங்கே தெரிந்து கொள்ள விழைவது அந்த நகரில் மியூசியம் இருக்கிறதா என்பதுதான்.. இப்படித்தான் விஜயவாடாவில் உள்ள மியூசியத்தில் காலத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு நடராஜர் கற்சிலையைக் காண நேரிட்டது. அங்கேயே அந்த நகரின் மத்தியிலேயே ஒரு சிறிய பாறை மலை.. அந்த மலையினைக் குடைந்து சின்னச் சின்ன கோயில்கள். ஒரு குடைவரைக் கோயிலில் மகிஷாசுர மர்த்தனியும் நடராஜரும் செதுக்கப்பட்டுள்ளனர்.. கொஞ்சமும் தவறாமல் அதே பாணியில் இரட்டையர் போல இருந்த நடராஜரின் ஒரு கற்சிலை அந்தப் பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்டு அங்கே உள்ள மியூசியத்தில் சேர்க்கப்ப்பட்டதும் இந்த கற்சிலை கலையில் ஆர்வம் உள்ளவருக்கு விருந்தாக இருந்ததும் நினைவுக்கு வருகிறது.. அதே போல இன்னொரு விஷயமும் அதன் மூலம் அறியலாம். காலத்தால் மகேந்திர பல்லவனின் குடைவரைகளுக்கு முற்பட்டதாக இருப்பதையும், நடராஜர் அந்தப் பழைய காலத்தில் எவ்வாறெல்லாம் இந்தப் பகுதியில் வணங்கப்பட்டு வந்திருக்கிறார் என்பதும் தெரிய வரும்

நான் வம்சதாரா எனும் முதல் நாவல் எழுதுவதற்கான ஒரு நல்வாய்ப்பையும் கொடுத்தது கூட ஒரு மியூசியம்தான். விசாகப்பட்டினத்தில் உள்ள மியூசியத்தில் அந்த பதினோராம் நூற்றாண்டின் தமிழ்க் கல்வெட்டை நான் காண நேரிடாவிட்டால் வம்சதாரா எனும் புத்தகம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
அந்தக் கல்வெட்டைத் தொடர்ந்து சென்றதால்தானே வம்சதாரா வந்தது என்பதை ஏற்கனவே எழுதிப் பதிவு செய்துள்ளேன்.

நம் பாரதமே புராதன பூமி. எத்தனையோ  நேர்த்தியான கலைச் சிற்பங்கள் நிறைந்த பூமி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுமோ என்று தோன்ற வைக்கும்.. இன்னமும் சொல்லப்போனால் உலகில் எந்த ஒரு நகரத்திலும் நேர்த்தியாக செயல்பட்டு வரும் ஒவ்வொரு மியூசியத்திலும் பாரத புராதானக் கலைச் சிற்பங்கள் இல்லாமல் அந்த மியூசியங்கள் புகழ் பெற்றிருக்க முடியாது.. இந்தக் கருத்தை இன்னும் வலுப்படுத்துகிறது திருமதி தேமொழி எழுதிய சான்பிராஸிஸ்கோ நகரைப் பற்றிய கட்டுரையும் அதன் அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும்.(குடதிசை மருங்கில்)


ஆசிய நாடுகளின் கலைபொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும் குறைந்தது ஒரு பத்து  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவைகள் அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதியில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம். - மேலும் படிக்க http://www.vallamai.com/literature/articles/30356/

ஒவ்வொரு நகரத்துக்கும் இந்த அருங்காட்சியகம் என தமிழில் பேசப்பட்ட மியூசியம் மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். நம்மவர்கள் மியூசியத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இன்னமும் பல கலைச் செல்வங்களும் பண்டைய காலத்தில் வணங்கப்பட்ட பல தெய்வச் சிலைகளும் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று சிதறிக் கிடக்கின்றன. ஆனால் அன்னிய நாட்டவர் அப்படியல்ல ..ஆவ்ரி ப்ரெண்டேஜ் போன்றோர் எப்படியெல்லாம அரும்பொருட்கள் சேகரிக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை இக்கட்டுரையைப் படித்தால்தான் தெரியும். நல்லதொரு கட்டுரையை வழங்கி இப்புத்தாண்டைத் தொடக்கி வைத்த தேமொழி அவர்களை இந்த வார வல்லமையாளராக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம். தேமொழிக்கு அன்பான வாழ்த்துகள்.

கடைசி பாரா: தேவா’வின் கவிதை வரிகள். 

அழுகின்ற குழந்தைக்கு 

பசிதீர்க்கும் உள்ளத்துக்கோர்

ஆலயம் கட்டி வணங்குவேன்

வாடுகின்ற மனிதனுக்கு 

ஊக்கமூட்டி ,பகிர்ந்துண்ணும் 

இதயமே இறைவன் வாழும் 

ஆலயம் அன்றோ!

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Jan 7, 2013, 12:07:48 AM1/7/13
to vall...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழமுதம், முத்தமிழ்
 திருமதி தேமொழி எழுதிய அந்தக்  கட்டுரையை நான் படித்தேன்
 பல அரிய செய்திகள் அடங்கியது

 

வல்லமையாளர் விருது பெற்றமைக்கு திருமதி தேமொழி அவர்களுக்கு வாழ்த்துகள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/1/7 Dhivakar <venkdh...@gmail.com>

--
 
 

செல்வன்

unread,
Jan 7, 2013, 12:18:50 AM1/7/13
to vall...@googlegroups.com, மின்தமிழ், தமிழமுதம்
நல்ல தேர்வு. தேமொழிக்கு நல்வாழ்த்துக்கள்

2013/1/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
--
 
 



--
செல்வன்

Geetha Sambasivam

unread,
Jan 7, 2013, 12:34:25 AM1/7/13
to thamiz...@googlegroups.com, மின்தமிழ்
வல்லமை மிகுந்த வல்லமையாளர் தேமொழிக்குக் கிடைத்த விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ஆவ்ரி ப்ரெண்டேஜ் போன்றோர் எப்படியெல்லாம அரும்பொருட்கள் சேகரிக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை இக்கட்டுரையைப் படித்தால்தான் தெரியும். நல்லதொரு கட்டுரையை வழங்கி இப்புத்தாண்டைத் தொடக்கி வைத்த தேமொழி அவர்களை இந்த வார வல்லமையாளராக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம். தேமொழிக்கு அன்பான வாழ்த்துகள்.

கடைசி பாரா: தேவா’வின் கவிதை வரிகள். 

அழுகின்ற குழந்தைக்கு 

பசிதீர்க்கும் உள்ளத்துக்கோர்

ஆலயம் கட்டி வணங்குவேன்

வாடுகின்ற மனிதனுக்கு 

ஊக்கமூட்டி ,பகிர்ந்துண்ணும் 

இதயமே இறைவன் வாழும் 

ஆலயம் அன்றோ!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

shylaja

unread,
Jan 7, 2013, 12:38:19 AM1/7/13
to vall...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழமுதம், முத்தமிழ்
பாரட்டுக்கள் தேமொழி...கட்டுரையை   இப்போ வாசித்தேன்   அருமை

2013/1/7 Dhivakar <venkdh...@gmail.com>

--
 
 



--
SHYLAJA
 

coral shree

unread,
Jan 7, 2013, 1:47:05 AM1/7/13
to vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்


2013/1/7 coral shree <cor...@gmail.com>
தேமொழியின் படைப்புகள் அனைத்தும், ஆழ்ந்த கருத்துக்களும், நேர்த்தியான நடையும், நவீனததுவமும் கொண்டவை. அந்த வகையில் வல்லமையாளர் விருது  பெற தகுதி வாய்ந்த ஒருவரை, அழகான முன்னுரையுடன் தேர்வு செய்து வெளியிட்டமைக்கு திவாகர்ஜிக்கு மனம் நிறைந்த நன்றி.தேமொழியிடமிருந்து இன்னும் இது போன்ற பல தரமான படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

அன்புடன்
பவளா



2013/1/6 Dhivakar <venkdh...@gmail.com>



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

கி.காளைராசன்

unread,
Jan 7, 2013, 2:16:58 AM1/7/13
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் வாசல், தமிழமுதம், முத்தமிழ்
வணக்கம். 
ஒவ்வொரு நகரத்துக்கும் இந்த அருங்காட்சியகம் என தமிழில் பேசப்பட்ட மியூசியம் மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். நம்மவர்கள் மியூசியத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இன்னமும் பல கலைச் செல்வங்களும் பண்டைய காலத்தில் வணங்கப்பட்ட பல தெய்வச் சிலைகளும் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று சிதறிக் கிடக்கின்றன.

வல்லமையாளருக்கு வாழ்த்துகள்.

சிறப்பினை வழங்கிய ஐயா திவாகர் அவர்களுக்கும்,
அதைப் பெற்ற சகோதரி தேமொழி அவர்களுக்கும் பாராட்டுகள்.

அன்பன்
கி.காளைராசன்

Innamburan Innamburan

unread,
Jan 7, 2013, 3:04:31 AM1/7/13
to mint...@googlegroups.com
அன்பின் தேமொழி,
மேலும் வல்லமை பெற என் அன்பான வாழ்த்துக்கள்.
'தேவா' வின் கவிதைத்திறனுக்கும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இன்னம்பூரான்

2013/1/7 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

பழமைபேசி

unread,
Jan 7, 2013, 5:10:35 AM1/7/13
to மின்தமிழ்
வல்லமையாளருக்கு வாழ்த்தும் வணக்கமும்! படைப்புகள் மென்மேலும் பெருகுக!!

On Jan 7, 2:04 am, Innamburan Innamburan <innambu...@gmail.com> wrote:
> அன்பின் தேமொழி,
> மேலும் வல்லமை பெற என் அன்பான வாழ்த்துக்கள்.
> 'தேவா' வின் கவிதைத்திறனுக்கும் என் வாழ்த்துக்கள்.
> அன்புடன்,
> இன்னம்பூரான்
>

> 2013/1/7 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > வணக்கம்.
>
> >> ஒவ்வொரு நகரத்துக்கும் இந்த அருங்காட்சியகம் என தமிழில் பேசப்பட்ட மியூசியம்
> >> மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். நம்மவர்கள் மியூசியத்தையெல்லாம் ஒரு
> >> பொருட்டாகவே கருதுவதில்லை. இன்னமும் பல கலைச் செல்வங்களும் பண்டைய காலத்தில்
> >> வணங்கப்பட்ட பல தெய்வச் சிலைகளும் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று சிதறிக்
> >> கிடக்கின்றன.
>
> > வல்லமையாளருக்கு வாழ்த்துகள்.
>
> > சிறப்பினை வழங்கிய ஐயா திவாகர் அவர்களுக்கும்,
> > அதைப் பெற்ற சகோதரி தேமொழி அவர்களுக்கும் பாராட்டுகள்.
>
> > அன்பன்
> > கி.காளைராசன்
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

துரை.ந.உ

unread,
Jan 7, 2013, 5:16:47 AM1/7/13
to vall...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழமுதம், முத்தமிழ்
Inline image 1

2013/1/7 Dhivakar <venkdh...@gmail.com>

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral
ani-gifs-congratulations-338550058[1].gif

Subashini Tremmel

unread,
Jan 7, 2013, 1:48:58 PM1/7/13
to மின்தமிழ், Subashini Tremmel
தேமொழிக்கு என வாழ்த்துக்கள்.

சுபா


2013/1/7 Dhivakar <venkdh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

தேமொழி

unread,
Jan 7, 2013, 7:41:58 PM1/7/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பாராட்டிய அனைவருக்கும், வல்லமை குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இரண்டே மாதங்களில்,  வல்லமையில் என் முதல் பதிவு வெளி வந்த பின்பு, வல்லமை குழுமம் தொடங்கி, பிறகு மற்ற குழுமங்களின் அறிமுகமும் கிடைத்து, அதன் மூலம் நான் பெற்ற தோழமையும், நலம் விரும்பிகளின் கனிவான அன்பும் மனமகிழ்ச்சி தருகிறது. 
 
 
அன்புடன்

..... தேமொழி 

sk natarajan

unread,
Jan 7, 2013, 7:56:41 PM1/7/13
to vall...@googlegroups.com, mintamil, தேமொழி
தேமொழி அவர்களுக்கு வாழ்த்துகள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/8 தேமொழி <them...@yahoo.com>
Reply all
Reply to author
Forward
0 new messages