கிண்ணிமங்கலம் தமிழ் பிராமிக் கல்வெட்டில் புள்ளிகள்

148 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Jul 16, 2020, 4:22:44 AM7/16/20
to மின்தமிழ்
அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கிண்ணிமங்கலம் தமிழ் பிராமிக் கல்வெட்டில் புள்ளிகள் இருப்பதாகச் சில படங்களில் தெரிகிறது. அதனுடைய பெரிதுபடுத்திய படம் கிடைக்குமா?
இந்தப் பிராமி எழுத்துக்களின் எழுத்தமைப்பினைப் பார்க்கும்போது அதன் காலம் நிச்சயமாக கி.மு.தான். மாங்குளம் எழுத்துக்களுடன் ஒத்துவருகிறது. புள்ளிகள் இருப்பது உறுதியானால் ஐராவதனாரின் theory- க்கு மண்டையில் மற்றோர் அடி! 
(ஏற்கனவே புள்ளியுள்ள தமிழ் பிராமி - கி.மு.காலத்தியது - பற்றி இங்குக் குறிப்பிட்டிருக்கிறேன்.)
ப.பாண்டியராஜா

தேமொழி

unread,
Jul 16, 2020, 1:31:14 PM7/16/20
to மின்தமிழ்
ஐயா, நான் தேடிய வரை தி  இந்து செய்தித்தாள் கொடுத்த படமே சிறந்த படம் 

4JULTH-Brhami2-Kinnimangalam-TheHinduNews.jpg

4JULTH-Brhami2-Kinnimangalam-TheHinduNews

இதைத்தான் பலரும் பயன்படுத்தி தங்கள் கருத்துகளை முன் வைத்து வருகிறார்கள். 
4JULTH-Brhami2-Kinnimangalam-TheHinduNews.jpg

தேமொழி

unread,
Jul 16, 2020, 1:41:10 PM7/16/20
to மின்தமிழ்

06 Jul 2020 

கி.மு.6-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!- கிண்ணிமங்களத்திலும் தொல்லியல் ஆய்வு நடத்தப்படுமா?



archaeological-survey-in-kinnimangalam

மதுரை

மதுரை - தேனி சாலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எதிரே உள்ளது கிண்ணிமங்களம் கிராமம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் பள்ளிப்படை கோயிலும், அதையொட்டிய மடமும் (பள்ளிப்படை கோயில் என்பது மன்னர்கள், அல்லது பெரும் வீரர்கள் நினைவாக அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் கோயில்) மிகப் பழமையானது. கடந்தாண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அந்தக் கோயில் அருகே நிலத்தைத் தோண்டியபோது பழங்காலப் பொருட்கள் கிடைத்தன.

அவற்றை ஆய்வு செய்து வந்த கல்வெட்டு ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர், அங்குள்ள தூண்களில் தமிழ்ப் பிராமி (தமிழி) எழுத்துக்கள் இருப்பதை இரு நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். இதுகுறித்து காந்திராஜன் கூறியபோது, "அந்த கல்தூணில் 'ஏகன் ஆதன் கோட்டம்' என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டு கி.மு. 6-ம் நூற்றாண்டிற்கும் கி.மு. 2-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.

பொதுவாக, பாண்டிய நாட்டில் உள்ள குன்றுகளில் பல தமிழி கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டு இருந்தாலும், தூண் ஒன்றில் தமிழி எழுத்துக்கள் தமிழ்நாட்டில் முதன்முறையாக இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் ஓரடி உயரமுள்ள மற்றொரு சதுரக்கல்லில், 'இறையிலியாக ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி ஈந்தார்' என்று வட்டெழுத்தில் எழுதப்பட்ட ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இது 8 அல்லது 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

ஏற்கெனவே, மதுரை கீழடியிலும், அதையொட்டியுள்ள அகரம் கிராமத்திலும் தொடர்ச்சியாகத் தொல் பொருட்கள் கிடைத்துவரும் நிலையில், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்துப் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையப் புரவலரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு கூறுகையில், "ஆதன் எனும் பெயர் சங்க காலத்தில் பெரிதும் வழக்கில் இருந்துள்ளது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் நிறைய உள்ளன. கீழடியில் பானை ஓடு ஒன்றில் அப்பெயர் பொறிக்கப்பட்டிருந்ததும் அகழாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பெயர் இப்போது தூண் கல்வெட்டில் கிடைத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

இந்த கல்வெட்டுக்களைக் கண்டறிந்து வெளிப்படுத்திய நண்பர் காந்திராஜன் மற்றும் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பகுதியில் தமிழகத் தொல்லியல் துறை முறையான, முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு மேலும் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதேபோல, சு.வெங்கடேசன் எம்.பி.யும் கிண்ணிமங்களத்தில் முறையாக ஆய்வு செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். கூடவே, தனது முதல் நாவலின் தலைப்பில் 'கோட்டம்' என்ற சொல் இடம்பெற்றுள்ளதையும், இரண்டாம் நாவலான 'வேள்பாரி'யில் வரும் முதல் கதாபாத்திரத்தின் பெயர் 'ஆதன்' என்பதையும் சுட்டிக்காட்டி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் வெங்கடேசன்.





-----------------------------------------------------------------------------------------
4JULTH-Brhami2-Kinnimangalam-TheHinduNews.jpg
The Hindu - 562967.jpg
The Hindu-15940318242484.jpg

தேமொழி

unread,
Jul 16, 2020, 1:45:04 PM7/16/20
to மின்தமிழ்

கிண்ணிமங்கலம் காணொளி ஒன்று - https://youtu.be/SpqXLPnnZPc?t=60

உங்கள் கருத்துகளை இன்னமும் கொஞ்சம் விரிவாக நேரம் கிடைக்கையில் பதிவு செய்யுங்கள் ஐயா 

Pandiyaraja

unread,
Jul 17, 2020, 3:53:25 AM7/17/20
to மின்தமிழ்
மிக்க நன்றி,தேமொழி அம்மை!
நீங்கள் அனுப்பிய படங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரிகின்றன. அடுத்து, நீங்கள் கொடுத்திருக்கும் காணொளியிலும் புள்ளிகள் மிகத் தெளிவாகக் காட்டப்படுள்ளன. இதன் காலம் கி.மு.6-ஆம் நீற்றாண்டு முதல், கி.மு 2 ஆம் நூற்றாண்டுவரை என்றும் செய்தியில் பார்த்தேன். இதன்படி, மிகப் பழங்காலத்திலும் (கி.மு) புள்ளிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். புள்ளிகளைப் பற்றித் தொல்காப்பியர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.கி.பி காலத்திய பிராமிக் கல்வெட்டில்தான் இதுவரை புள்ளிகள் இருந்ததால் தொல்காப்பியரை கி.பி காலத்தவர் என்று தொல்லறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டதை கணேசன் போன்றவர்கள் வேதவாக்காகக் கொண்டு தொல்காப்பியரை மிகவும் பின்னுக்குஇழுத்து மகிழ்ச்சியடைவர். அவர்களது கூற்று பொய்யாகும் என்று கணேசனாரிடமே ஒருநாள் கூறினேன். இப்போது அது உண்மையாகிவிட்டது. எழுத்துக்களின் அமைதியைக்கொண்டு நோக்கும்போது கிண்ணிமங்கலம் மாங்குளம் கல்வெட்டைப்போன்றது. மாங்குளம் கி.மு.காலத்திஅய்து என்று மகாதேவன் அவர்களே ஒத்துக்கொள்வார்.
ப.பாண்டியராஜா

kiNNimangkalam.jpg

தேமொழி

unread,
Oct 12, 2020, 2:52:57 PM10/12/20
to மின்தமிழ்
kinnimangalam inscription.jpg

[9:38 AM, 10/12/2020]  Archaeologist Dr. S. Rajavelu: 
இதில் ஏ வில் எங்கு புள்ளி உள்ளது என கூறவும்
‌அடுத்து ஏகன் ன் இது சொரசொரப்பான கல்லில்‌ உள்ள  தழுமாபுகள் ஆதன் ன் னும்‌அவ்வாறே கோட்டம் இல்‌ எழுதப்பட்ட புள்ளிகள் ‌இல்லை.   எழுத்து கீறல்கள் கூரிய ஆணியில்   மெலிதாக எழுதி உள்ளனர். வெள்ளை போடாமலேயே அவை நன்றாகவே புள்ளிகள் இன்றி தெரிகின்றன.

இது எவ்வித மையும் இன்றி நீரில் கழுவிய‌ பின் எடுக்கப்பட்டது‌ . நேர்த்தியாக மெல்லிய உளியால் எழுதி‌உள்ளனர். புள்ளி‌ இருப்பின் கோட்டுருவம் போல் இந்த சிவப்பு நிற‌கல்லில் நேர்த்தியாக புள்ளி தெரியும் எங்கே உள்ளது? அவசர‌கோலத்தில் புள்ளிகளை அள்ளித் தெளித்துள்ளனர் நமது நண்பர்கள். 

புள்ளி தமிழி யின் ஒரு முக்கிய மைல் கல் அது காலத்தை கணிக்க உதவும் கண்ணாடி.   இத்தமிழி கல்வெட்டை  பின் தள்ளி இயலாது. இதில் காலம் கணிக்க டெஸ்ட் லெட்டர்ஸ் களையும் நான் சொல்வேன் தாதப்பட்டி நடுகல் லுக்கு இது முன்னோடி ஆ வலப்பக்க விரிவு நடுவில் சேராமல் உள்ளது. அதியமான் கல்வெட்டு அ அசோகன் அ போன்று சேர்ந்திருக்கும். எனவே அது கிமு 3ஆம் நூ. கிண்ணிமங்கலம் அதை விட காலத்தால் முற்பட்டது. எனினும்நான் இதனை கிமு 3 நூ க்கு தான் தள்ளி உள்ளேன்‌ . கிமு 6 நூ கணக்கில் வைத்து. அறிவியல் காலக்கணிப்பை இங்குள்ள தமிழக ஆய்வாளர்களே புறக்கணிப்பது நல்லதல்ல


[11:40 AM, 10/12/2020] Prof. Dr. Ravi CUTN Thiruvarur Uni HoD Tamil: 
ஏகன் ஆதன் கோட்டம் என்று படிக்க முடிகிறது.
1.ஏகமுமாய் இருக்கிற (ஆதன் = கடவுள் ,அருகக் கடவுள். கோட்டம் = கோயில்) அருகக் கடவுள், சமணக் கடவுளின் கோயில். எனக் கொள்ளலாம். சமண அடையாளங்கள் எதுவும் இல்லாத சூழலில் கோட்டம் என்பதற்கு பாசறை என்ற பொருள் இருப்பதால் போர்ப் பயிற்சியளிக்கும் இடமாகவும் கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த இடத்தைக் களப்பணி ஆய்வுக்கு உட்படுத்தினால் தெளிவு பெற முடியும்.

கோட்டத்திற்குப் பாசறை என்ற பொருள் இருப்பதால் ஏகன் என்பவனுடைய ஆதனாகிய குருவினுடைய பெயரில் போர்ப் பயிற்சியளிக்கும் இடம் எனக் கொள்ளலாம்.

ஏகன் = ஒருவனது பெயர் , கடவுள். என்ற பொருள்கள் உண்டு
ஆதன் = அருகன்,குரு என்ற பொருள்கள் உண்டு.
கோட்டம் = பாசறை, கோயில். என்ற பொருள்கள் உண்டு

#THFi-Marabu Pathukaavalargal whatsapp group discussion 


Pandiyaraja

unread,
Oct 13, 2020, 1:51:53 AM10/13/20
to மின்தமிழ்
" இதில் ஏ வில் எங்கு புள்ளி உள்ளது என கூறவும் "
'’ஏ’-வுக்குப் புள்ளி கிடையாது. ‘ஏ’ எழுதி அதன் உள்ளே புள்ளி வைத்தால்,அது ‘எ’. அதே போல் ‘ஓ’ எழுதி மேலே புள்ளி வைத்தால் அது ‘ஒ’.
எகர ஒகர உயிர்மெய்களுக்கும் அவ்வாறே.
ப.பாண்டியராஜா.
மற்ற புள்ளிகள், இடப்பட்ட புள்ளிகளா, உளியால் செத்துக்கப்பட்ட தழும்புகளா என்பது நேரில் பார்த்துத்தான் முடிவுசெய்ய முடியும்

தேமொழி

unread,
Mar 24, 2021, 6:55:39 PM3/24/21
to மின்தமிழ்

பார்க்க:  
கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும்: சொ.சாந்தலிங்கம், மதுரை
Reply all
Reply to author
Forward
0 new messages