2013 ஆங்கிலப் புத்தாண்டு வெளியீடு - ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல்

1,702 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Jan 1, 2013, 2:15:39 AM1/1/13
to மின்தமிழ், Subashini Tremmel

மின் தமிழ் வாசகர்களுக்காகக் காரைக்குடி டாக்டர்.காளைராசன் அவர்கள் ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் என்ற நூலினை மின்னாக்கம் செய்து வெளியிட உள்ளார்கள். இந்த நூலினை இங்கே வெளியிடுவதில் மின்தமிழ்-தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றது.

- சுபாஷிணி

வணக்கம்.

ஸ்ரீ சங்கரர் பாரத பூமி முழுவதையும் மூன்று முறை வலம் வந்து நேபாளம் முதல் திருச்செந்தூர் ஈறாக உள்ள பல புண்ணிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டைகளையும் செய்தருளினார்.  பத்ரிகாச்ரமத்திலும், துவாரகையிலும், ஜகந்நாதத்திலும், சிருங்ககிரியிலும் மடங்களை ஸ்தாபனம் செய்த பின்னர், அவர் காஞ்சீபுரத்தை அடைந்து, சர்வக்ஞ பீடமேறி, அங்கு காமகோடி பீடித்தையும் ஸ்தாபனம் செய்து அருளியுள்ளார்.

பாரத மக்கள் செய்த பெருந்தவத்தின் பயனாக,
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68ஆவது ஆசார்ய சுவாமிகளாகத் தனது 13ஆவது வயதில் பீடம் ஏறியருளியுள்ளார். 
ஸ்ரீ ஆதி சங்கரரின் அவதாரமெனவே உலகோர் கருதுகின்றனர்.
சுவாமிகளது வரலாற்றையும் சநாதன தர்மத்திற்கு அவர்கள் ஆற்றிய பெரும் பணிகளையும் தொகுத்து,

சில அரிய படங்களுடன் ஸ்ரீ ஸு.ஸாம்பமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தொகுத்து 
“ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்“ என்ற தலைப்பில் நூல் ஒன்று சென்னை பி.ஜி.பால் அண்டு கம்பெனியினரால் மார்ச்சு 1957ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது.

டாக்டர்.காளைராசன்

Inline image 4Inline image 2Inline image 3Inline image 1

1 004.jpg
1 005.jpg
1 003.jpg
1 002.jpg

Innamburan Innamburan

unread,
Jan 1, 2013, 2:26:11 AM1/1/13
to mint...@googlegroups.com
இந்த பணியை விட புத்தாண்டை துவக்க உகந்த பணி வேறு யாதுமில்லை.
யாவருக்கும் சுபிக்ஷம் என்ற நன்நிமித்தமிது. 
இன்னம்பூரான்

2013/1/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

1 004.jpg
1 002.jpg
1 003.jpg
1 005.jpg

Geetha Sambasivam

unread,
Jan 1, 2013, 3:35:11 AM1/1/13
to mint...@googlegroups.com
அருமையான வெளியீடு சுபா.  நன்றி.

2013/1/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

மின் தமிழ் வாசகர்களுக்காகக் காரைக்குடி டாக்டர்.காளைராசன் அவர்கள் ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் என்ற நூலினை மின்னாக்கம் செய்து வெளியிட உள்ளார்கள். இந்த நூலினை இங்கே வெளியிடுவதில் மின்தமிழ்-தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றது.

- சுபாஷிணி

வணக்கம்.

ஸ்ரீ சங்கரர் பாரத பூமி முழுவதையும் மூன்று முறை வலம் வந்து நேபாளம் முதல் திருச்செந்தூர் ஈறாக உள்ள பல புண்ணிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டைகளையும் செய்தருளினார்.  பத்ரிகாச்ரமத்திலும், துவாரகையிலும், ஜகந்நாதத்திலும், சிருங்ககிரியிலும் மடங்களை ஸ்தாபனம் செய்த பின்னர், அவர் காஞ்சீபுரத்தை அடைந்து, சர்வக்ஞ பீடமேறி, அங்கு காமகோடி பீடித்தையும் ஸ்தாபனம் செய்து அருளியுள்ளார்.
சில அரிய படங்களுடன் ஸ்ரீ ஸு.ஸாம்பமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தொகுத்து 
“ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்“ என்ற தலைப்பில் நூல் ஒன்று சென்னை பி.ஜி.பால் அண்டு கம்பெனியினரால் மார்ச்சு 1957ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது.

கி.காளைராசன்

unread,
Jan 1, 2013, 4:31:36 AM1/1/13
to mint...@googlegroups.com
வணக்கம்.
இந்த இனிய ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று நல்லதொரு பதிவினை வழங்குமாறு என்னை நன்னெறிப்படுத்திய அம்மையார் சுபாஷினிடெர்மல் அவர்களுக்கு நன்றி.

2013/1/1 Innamburan Innamburan <innam...@gmail.com>

இந்த பணியை விட புத்தாண்டை துவக்க உகந்த பணி வேறு யாதுமில்லை.
யாவருக்கும் சுபிக்ஷம் என்ற நன்நிமித்தமிது. 
இன்னம்பூரான்
மின்தமிழ்ப் பெரியோர் ஆசியுடன் மகாப்பெரியவரை பற்றிய இந்நூலைத் தினமும்  பதிப்பிக்க முயற்சிக்கிறேன்.

பாராட்டுத் தெரிவித்துள்ள அம்மையார் கீதா அவர்களுக்கும் எனது நன்றி.

மின்தமிழருக்குப் மகாப்பெரியவரின் திருவருளைச் சிந்தித்து,

அன்பன்
கி.காளைராசன்

Tthamizth Tthenee

unread,
Jan 1, 2013, 9:36:51 AM1/1/13
to mint...@googlegroups.com
ஒரு கொடுப்பினை இருந்தால்தான் இவரைப் போன்ற மஹான்களின்  பதிவுகளை நாம் எடுத்து பதிய முடியும்
காளைராசன் கொடுத்து வைத்தவர்
வளர்க அவர் தொண்டு
 
பெரியவர்  திரு உருவப் படத்தை  பெயின்ட் ஆப்ஷனில் போட்டு ஏதோ என்னால் முடிந்த அளவு சரி செய்திருக்கிறேன்.
 
அந்தப் படத்தையும் இணைக்கிறேன்.
ஒரு பக்கத்தை  நேர் செய்தும் இணைக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2013/1/1 கி.காளைராசன் <kalair...@gmail.com>
1 004.jpg
1 002.jpg

DEV RAJ

unread,
Jan 1, 2013, 2:04:33 PM1/1/13
to mint...@googlegroups.com
பெயிண்ட் ஆப்ஷனில் போட்டது புத்தம் புதியதுபோல்
உள்ளது, பெரியவர்களின் மங்காப் புகழைப்போல !
அடியார்களுக்கு அவர் வாரி வழங்கிய
அருளை அவர்கள் இன்னும் பேசி முடிக்கவில்லை,
அவர் மறைந்து இரு பதின்மங்கள் முடிந்த பின்னரும்.

பாராட்டுகள், தேனி சார்

தேவ்

N. Kannan

unread,
Jan 1, 2013, 2:42:25 PM1/1/13
to mint...@googlegroups.com
2013/1/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

மின் தமிழ் வாசகர்களுக்காகக் காரைக்குடி டாக்டர்.காளைராசன் அவர்கள் ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் என்ற நூலினை மின்னாக்கம் செய்து வெளியிட உள்ளார்கள். இந்த நூலினை இங்கே வெளியிடுவதில் மின்தமிழ்-தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்கின்றது.

- சுபாஷிணி

ஒரு சுற்று வந்துவிட்டோம் சுபா!

ஜெர்மனியில் நண்பர் குந்தாருடன் ‘அநந்தம்’ ('E'ternal) project ஆரம்பித்த புதிதல் முதலில் நான் போனது காஞ்சி மடம்தான். அப்படி அமைந்தது. குருவருளுடன் தொடங்கியதுதான் நம் முயற்சிகள்.

நா.கண்ணன்

தேமொழி

unread,
Jan 1, 2013, 6:06:18 PM1/1/13
to mint...@googlegroups.com

உங்கள்  கைவண்ணம் அசத்தல் தமிழ்த்தேனீ அவர்களே.:)))

நானும் நூலைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 

..... தேமொழி 

Geetha Sambasivam

unread,
Jan 2, 2013, 12:51:38 AM1/2/13
to mint...@googlegroups.com
ஆஹா, அசத்தல் அருமையாக இருக்கிறது பெரியவரின் படம். வாழ்த்துகள். உங்கள் தொண்டு சிறக்கப் பிரார்த்தனைகள்.

2013/1/1 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஒரு கொடுப்பினை இருந்தால்தான் இவரைப் போன்ற மஹான்களின்  பதிவுகளை நாம் எடுத்து பதிய முடியும்
காளைராசன் கொடுத்து வைத்தவர்
வளர்க அவர் தொண்டு
 
பெரியவர்  திரு உருவப் படத்தை  பெயின்ட் ஆப்ஷனில் போட்டு ஏதோ என்னால் முடிந்த அளவு சரி செய்திருக்கிறேன்.
 
அந்தப் படத்தையும் இணைக்கிறேன்.
ஒரு பக்கத்தை  நேர் செய்தும் இணைக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

coral shree

unread,
Jan 2, 2013, 1:16:30 AM1/2/13
to mint...@googlegroups.com
அன்புச் சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றியும்.

அன்புடன்
பவளா

2013/1/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.
1 005.jpg
1 004.jpg
1 002.jpg
1 003.jpg

கி.காளைராசன்

unread,
Jan 2, 2013, 2:35:45 AM1/2/13
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

ஆஹா, அசத்தல் அருமையாக இருக்கிறது பெரியவரின் படம். வாழ்த்துகள்.
வீட்டில் பெயிண்ட் அடிப்பதுபோன்ற படம் பார்த்துள்ளேன்.
பெயிண்ட் ஆப்ஷனில் இப்படியொரு பிரமாதமான வேலையைப் பார்த்து அசந்து போய் விட்டேன்.

2013/1/1 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஒரு கொடுப்பினை இருந்தால்தான் இவரைப் போன்ற மஹான்களின்  பதிவுகளை நாம் எடுத்து பதிய முடியும்
காளைராசன் கொடுத்து வைத்தவர்
வளர்க அவர் தொண்டு
தங்களது அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா,

கி.காளைராசன்

unread,
Jan 2, 2013, 2:36:46 AM1/2/13
to mint...@googlegroups.com
அன்புச் சகோதரிக்கு வணக்கம்.

2013/1/2 coral shree <cor...@gmail.com>

அன்புச் சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றியும்.
மகிழ்ச்சி, நன்றி.

கி.காளைராசன்

unread,
Jan 2, 2013, 4:28:35 AM1/2/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel, thiruppuvanam, naga rethinam

ஸமர்ப்பணம்

---

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு

ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி

ஸ்வாமிகளின்

பிரதம சிஷ்யர்களாக விளங்கும்

ஸ்ரீமத்

பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவரய

ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு

இந்நூல்

பக்தியுடன் ஸமர்ப்பணம் செய்யப்படுகிறது.

முகவுரை

        புண்ணிய பூமியான நம் பரதகண்டத்தில் தருமத்தை நிலை நாட்டுவதற்காகப் பகவானுடைய திரு அவதாரங்கள் பற்பல காலங்களில் நிகழ்ந்ததுண்டு: அவைகளில், திரேதாயுகத்தில் நேர்ந்த ஸ்ரீ ராமாவதாரமும், துவாபர யுகத்தில் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் எல்லோரும் அறிந்தனவே.  இவ்வகையில், இக்கலியுகத்திலும் சில அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் ஸ்ரீ ஆதி சங்கரரது அவதாரம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.  முன் யுகங்களில் வந்த மேற்கண்ட அவதார புருஷர்கள் மன்னர்களின் வழியில் தோன்றி அதர்மத்தை எதிர்த்துத் தர்ம யுத்தம் புரிந்து சத்தியத்தை நிலைநாட்டினார்கள்.  ஆனால், ஸ்ரீ பரமேசுவரரின் அவதாரமெனக் கருதப்படும் ஸ்ரீ ஆதி சங்கரரோ, சிவகுரு என்னும் ஓர் அந்தணருக்கும் ஆரியாம்பிகை என்னும் அவர் பத்தினிக்கும் திருமகனாகக் கேரளநாட்டில் காலடி என்னும் தலத்தில் அவதாரம் செய்தார்.  இந்த மகான் மிக இளம் பருவத்திலேயே துறவுபூண்டு, தம் உபதேசங்களினாலும், பிரசாரங்களினாலும் பாரத பூமியில் தருமத்தை நிலைக்கச் செய்தார்.  அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் முப்பத்திரண்டு ஆண்டுகளேயாகும்.

        ஸ்ரீசங்கரரது அவதார காலம் கலியுகம் 2593 (கி.மு.509) நந்தன வருஷமெனப் பல மேதாவிகள் ஆராய்ச்சிகள் மூலம் முடிவு செய்துள்ளார்கள்.  இக்கருத்தில் வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் பெரியோர்கள் சிறந்த ஆராய்ச்சியின்பின் கொண்ட இந்த முடிவே நமக்கும் ஒத்ததாகும்.  மேலும், ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபனம் செய்த மடங்கள் பாரதநாட்டில் எல்லாப் பாகங்களிலும் இன்றும் பிரகாசிக்கின்றன.  அந்த மடங்களின் குருபரம்பரைகளைப் பரிசீலனை செய்யும்போதும் ஆதி சங்கரரது காலம் இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.

        சங்கரர் பாரத பூமி முழுவதையும் மூன்றுமுறை வலம் வந்து தம் உபதேசங்களால் மக்களது அஞ்ஞான இருளைப் போக்கி, வேத தர்மங்களுக்கு உட்பட்டிருந்தும், கொள்கைகளிலும் முறைகளிலும் மாறுபட்டிருந்த சைவம், வைஷ்ணவம், ஸெளரம், சாக்தம், காணபதம், கௌமாரம் முதலான பல மதங்களையும் சீர்திருத்தம் செய்தார்.  அதனால், அவர் ஷண்மத ஸ்தாபனாசாரியார் என்னும் பெயரையும் பெற்றார்.  அவர் நேபாளம் முதல் திருச்செந்தூர் ஈறாகவுள்ள பல புண்ணிய ஸ்தலங்களையும் தரிசித்து, ஆங்காங்கே ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டைகளையும் செய்தருளினார்.  பத்ரிகாச்ரமத்திலும்,

தொடரும்....

Sri Jagath Guru Sarithiram.doc

Karuannam Annam

unread,
Jan 2, 2013, 6:22:32 AM1/2/13
to mint...@googlegroups.com
 பெரியவர் சந்திரசேகரசுவாமிகள் பற்றிய நூல் முயற்சிக்கு நண்பர் காளைராசனுக்கு வாழ்த்துக்கள்.
பெரியவர் ஜெயேந்திரருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பரிவ்ராஜகாசார்யவரய என்ற அடைமொழியின் பொருள் அறிய விருப்பம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

2013/1/2 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--

Innamburan Innamburan

unread,
Jan 2, 2013, 8:46:08 AM1/2/13
to mint...@googlegroups.com
இணைப்பைப் படிக்கமுடியவில்லை.

2013/1/2 Karuannam Annam <karu...@gmail.com>

பழமைபேசி

unread,
Jan 2, 2013, 9:03:55 AM1/2/13
to மின்தமிழ்
ஐயாவோடு இணைந்து நானும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

//ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று//

ஆங்கிலப் புத்தாண்டு என ஒன்று இல்லை. கிரிகோரி நாட்காட்டிப் புத்தாண்டு
அல்லது கிரிகோரியப் புத்தாண்டு என்பதுதான் மெய். :-o)

On Jan 1, 3:31 am, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> வணக்கம்.
> இந்த இனிய ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று நல்லதொரு பதிவினை வழங்குமாறு என்னை
> நன்னெறிப்படுத்திய அம்மையார் சுபாஷினிடெர்மல் அவர்களுக்கு நன்றி.
>

> 2013/1/1 Innamburan Innamburan <innambu...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 2, 2013, 10:03:50 AM1/2/13
to mint...@googlegroups.com
என்னால் இணைப்பைப் பார்க்க முடிகிறது.  ஆனால் எழுத்துரு சரியாக இல்லை.  கொஞ்சம் கஷ்டப் பட்டே படிக்க வேண்டியுள்ளது. :(

2013/1/2 கி.காளைராசன் <kalair...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Jan 2, 2013, 10:10:14 AM1/2/13
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,
அம்மையார் கீதா அவர்களுக்கும் வணக்கம்.
2013/1/2 Innamburan Innamburan <innam...@gmail.com>

இணைப்பைப் படிக்கமுடியவில்லை.
பதிவில் உள்ளதே இணைப்பிலும் உள்ளது.
ஆனால் word file ஆக உள்ளது.  அவ்வளவே.

எனவே இணைப்பைப் படிக்க வேண்டாம்.

அன்பன்

N. Kannan

unread,
Jan 2, 2013, 11:49:57 AM1/2/13
to mint...@googlegroups.com
அன்பின் காளை:

தாங்கள் கீதா சில நேரம் செய்வது போல் plain text ஆக ஒரு மின்னஞ்சல் போல்
வழங்குங்கள். இணைப்பைத் தவிர்க்கவும். கட்டாயம் formated text தேவையெனில்
அம்முறையில் பதியவும் (இம்முறையில் படங்கள், வண்ணங்கள் இணைக்கமுடியும்).
plain text ஆக இருந்தால் அப்படியே மரபு விக்கியில் போடவும் முடியும்.

நா.கண்ணன்

2013/1/2 கி.காளைராசன் <kalair...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

கி.காளைராசன்

unread,
Jan 2, 2013, 7:33:59 PM1/2/13
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2013/1/2 பழமைபேசி <pazam...@gmail.com>

ஆங்கிலப் புத்தாண்டு என ஒன்று இல்லை. கிரிகோரி நாட்காட்டிப் புத்தாண்டு
அல்லது கிரிகோரியப் புத்தாண்டு என்பதுதான் மெய். :-o)
மிகவும் சரி.
இனிமேல் கிரிகோரி.

பழமைபேசி

unread,
Jan 2, 2013, 7:36:41 PM1/2/13
to மின்தமிழ்
ச்சும்மா உங்ககூட ஒரு விளையாட்டு. இஃகி!!

On Jan 2, 6:33 pm, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> வணக்கம் ஐயா,
>

> 2013/1/2 பழமைபேசி <pazamaip...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Jan 2, 2013, 7:51:12 PM1/2/13
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2013/1/2 N. Kannan <navan...@gmail.com>
அன்பின் காளை:

தாங்கள் கீதா சில நேரம் செய்வது போல் plain text ஆக ஒரு மின்னஞ்சல் போல்
வழங்குங்கள். இணைப்பைத் தவிர்க்கவும்.
ஆமாம் ஐயா,
அப்படியே செய்கிறேன்.

அன்பன்
கி.காளைரான்

கி.காளைராசன்

unread,
Jan 2, 2013, 7:52:04 PM1/2/13
to mint...@googlegroups.com, Dev Raj
வணக்கம் ஐயா,

2013/1/2 Karuannam Annam <karu...@gmail.com>

 பெரியவர் சந்திரசேகரசுவாமிகள் பற்றிய நூல் முயற்சிக்கு நண்பர் காளைராசனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றியுடையேன்.
 
பெரியவர் ஜெயேந்திரருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பரிவ்ராஜகாசார்யவரய என்ற அடைமொழியின் பொருள் அறிய விருப்பம்.
பண்டிட்ஜி அவர்கள் அன்புள்ளம் கொண்டு விளக்கம் அளித்து உதவுமாறு வேண்டுகிறேன்.

அன்பன்

கி.காளைராசன்

unread,
Jan 2, 2013, 8:04:12 PM1/2/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel, thiruppuvanam, naga rethinam

ஸமர்ப்பணம்

---

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு

ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி

ஸ்வாமிகளின்

பிரதம சிஷ்யர்களாக விளங்கும்

ஸ்ரீமத்

பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவரய

ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு

இந்நூல்

பக்தியுடன் ஸமர்ப்பணம் செய்யப்படுகிறது.

பக்கம் xi 

முகவுரை

        புண்ணிய பூமியான நம் பரதகண்டத்தில் தருமத்தை நிலை நாட்டுவதற்காகப் பகவானுடைய திரு அவதாரங்கள் பற்பல காலங்களில் நிகழ்ந்ததுண்டு: அவைகளில், திரேதாயுகத்தில் நேர்ந்த ஸ்ரீ ராமாவதாரமும், துவாபர யுகத்தில் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் எல்லோரும் அறிந்தனவே.  இவ்வகையில், இக்கலியுகத்திலும் சில அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் ஸ்ரீ ஆதி சங்கரரது அவதாரம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.  முன் யுகங்களில் வந்த மேற்கண்ட அவதார புருஷர்கள் மன்னர்களின் வழியில் தோன்றி அதர்மத்தை எதிர்த்துத் தர்ம யுத்தம் புரிந்து சத்தியத்தை நிலைநாட்டினார்கள்.  ஆனால், ஸ்ரீ பரமேசுவரரின் அவதாரமெனக் கருதப்படும் ஸ்ரீ ஆதி சங்கரரோ, சிவகுரு என்னும் ஓர் அந்தணருக்கும் ஆரியாம்பிகை என்னும் அவர் பத்தினிக்கும் திருமகனாகக் கேரளநாட்டில் காலடி என்னும் தலத்தில் அவதாரம் செய்தார்.  இந்த மகான் மிக இளம் பருவத்திலேயே துறவுபூண்டு, தம் உபதேசங்களினாலும், பிரசாரங்களினாலும் பாரத பூமியில் தருமத்தை நிலைக்கச் செய்தார்.  அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் முப்பத்திரண்டு ஆண்டுகளேயாகும்.

        ஸ்ரீசங்கரரது அவதார காலம் கலியுகம் 2593 (கி.மு.509) நந்தன வருஷமெனப் பல மேதாவிகள் ஆராய்ச்சிகள் மூலம் முடிவு செய்துள்ளார்கள்.  இக்கருத்தில் வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் பெரியோர்கள் சிறந்த ஆராய்ச்சியின்பின் கொண்ட இந்த முடிவே நமக்கும் ஒத்ததாகும்.  மேலும், ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபனம் செய்த மடங்கள் பாரதநாட்டில் எல்லாப் பாகங்களிலும் இன்றும் பிரகாசிக்கின்றன.  அந்த மடங்களின் குருபரம்பரைகளைப் பரிசீலனை செய்யும்போதும் ஆதி சங்கரரது காலம் இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.

        சங்கரர் பாரத பூமி முழுவதையும் மூன்றுமுறை வலம் வந்து தம் உபதேசங்களால் மக்களது அஞ்ஞான இருளைப் போக்கி, வேத தர்மங்களுக்கு உட்பட்டிருந்தும், கொள்கைகளிலும் முறைகளிலும் மாறுபட்டிருந்த சைவம், வைஷ்ணவம், ஸெளரம், சாக்தம், காணபதம், கௌமாரம் முதலான பல மதங்களையும் சீர்திருத்தம் செய்தார்.  அதனால், அவர் ஷண்மத ஸ்தாபனாசாரியார் என்னும் பெயரையும் பெற்றார்.  அவர் நேபாளம் முதல் திருச்செந்தூர் ஈறாகவுள்ள பல புண்ணிய ஸ்தலங்களையும் தரிசித்து, ஆங்காங்கே ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டைகளையும் செய்தருளினார்.  பத்ரிகாச்ரமத்திலும்,

பக்கம் xii
(இமாசலத்தில்) துவாரகையிலும், ஜகந்நாதத்திலும், சிருங்ககிரியிலும் மடங்களை ஸ்தாபனம் செய்த பின்னர், அவர் காஞ்சீபுரத்தை அடைந்து, சர்வக்ஞ பீடமேறி, அங்கு காமகோடி பீடத்தையும் ஸ்தாபனம் செய்து, அவ்விடத்திலேயே நிர்விகல்ப சமாதி அடைந்தார்களெனச் சிவ ரகஸ்யம்.  மார்க்கண்டேய சம்ஹிதை, ஆனந்தகிரி சங்கர விஜயம்.  முதலிய பழமையான நூல்களிலிருந்தும், சமீப காலத்தில் ராஜசூடாமணிமகி என்பவரால் இயற்றிப்பட்ட சங்கராப்யுதயம்,  இராமபத்ர தீக்ஷிதர் இயற்றிய பதஞ்சலி விஜயம் முதலான காவியங்களிலிருந்தும் தெளிவாகின்றது.  வங்காள பாஷையில் 1892-வது ஆண்டில் வெளியிட்ப்பட்ட வங்காள சகல கலா நிகண்டுவின் (The Bengali Encyclopedia)  மூன்றாவது பாகத்தில், காஞ்சி என்ற தலைப்பின்கீழ், ‘அது ஸப்த புரிகளில் ஒன்று; ஓர் மகாபீட ஸ்தானம்; மேலும் அது ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளது சமாதி ஸ்தானம்; அந்நகரத்திலுள்ள ஸ்ரீ காமாக்ஷியம்மையின் ஆலயத்தில் பூர்ணபுருஷாகிருதியாக ஸ்ரீ ஆதி சங்கரரது சிலாவிக்ரகம் அமைந்திருக்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பெரிய காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ சங்கரமடத்தில் ஸ்ரீ ஆதிசங்கராசாரியரின் பிரதம சீடரான ஸ்ரீ ஸுரேச்வரருக்கு ஆலயமும் பிம்பமும் அமைந்தள்ளன.   ஸுரேச்வரரது பூர்வஆசிரமப் பெயரான மண்டனமிச்ரரின் பெயரால் காஞ்சியில் அக்ரகாரம் ஒன்றும் இருந்துவருவதை நாம் இன்றும் காணலாம்.  இன்னும் காஞ்சியில் வரதராஜர், ஏகாம்பரர், காமாக்ஷி முதலான தேவாலயங்களிலெல்லாம் ஸ்ரீ சங்கரரின் பிம்பங்கள் காணப்படுவதுடன், காஞ்சியை அடுத்த திருவொற்றியூர் முதலான தலங்களில் உள்ள வேறு ஆலயங்களிலும் அவை புராதனமாகவே ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளன.  இக்காரணங்களினால் காஞ்சி நகரத்திற்கும் ஸ்ரீ ஆதிசங்கரருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது என்பதை நாம் உணரலாம்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் இதுவரை 68 ஆசாரியர்கள் எழுந்தருளியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  அவர்களில் பலர் பெரிய தவசிகள்; பலர் சிறந்த கவிஞர்கள்;  பலர் தலைசிறந்த யோகிகள்; பலர் சாஸ்திரங்கள் பல கற்றவர்கள்; பலர் பக்திமார்க்கத்தை உலகிற் பரப்பியவர்கள்.

இப்பொழுது ஸ்ரீ காமகோடி பீடத்தில் 68ஆவது ஆசார்ய ஸ்வாமிகளாகப் பிரகாசிக்கும் ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி

தொடரும்.....

LK

unread,
Jan 2, 2013, 8:05:56 PM1/2/13
to mint...@googlegroups.com
ஆஹா நன்றி அய்யா 

2013/1/3 கி.காளைராசன் <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
www.bhageerathi.in

கி.காளைராசன்

unread,
Jan 3, 2013, 4:21:13 PM1/3/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel, thiruppuvanam, naga rethinam
பக்கம் xiii
ஸ்வாமிகள் ஸ்ரீ ஆதி சங்கரரின் அவதாரமெனவே கருதப்பட்டு வருவதை உலகம் அறியும். அவர்களுடைய வரலாற்றையும், சநாதன தர்மத்திற்குஅவர்கள் ஆற்றிவரும் பெரும் பணிகளையும்  சிறிதளவாகவேனும் எடுத்துக்கூறும் நோக்கத்துடன் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. அம்மகான் வைதிக மார்க்கத்தையும், வேதாந்த தத்துவத்தையும் பாதுகாக்கச் செய்துவரும் அரிய முயற்சிகளையெல்லாம் இச்சிறு புத்தகத்தில் எழுதிவிடுவதென்பது இயலாத காரியமாகும்.  ஆனால், அத்துறையில் சிறிய தொரு முயற்சியே யானினும் இதனை உலகம் ஏற்குமென்றே எண்ணுகின்றேன்.  ஒருபுறம் மடத்தின் அன்றாட நிர்வாகம், மற்றொருபுறம் தம்மை நாடி வரும் சிஷ்யர்களை உய்விக்கச் செய்வதில் அவர்கள் காட்டும் ஆர்வம், தினந்தோறும் பலமணி நேரம் அவர்கள் செய்து வரும் ஸ்ரீசந்திமௌளீச்வர பூஜை, இவற்றிற்கிடையே அவர்கள் தாம் மேற்கொண்ட துறவறத்தைச் சாஸ்திரவிதிகளுக்குச் சிறிதும் மாறுபடாமல் காத்துவரும் சிறப்பு, ஆகிய இவை போன்றவற்றை அவர்களைத் தரிசித்தவர்களே அறிவர்.  இவற்றோடு அவர்கள் தம் ஆசிரமத்திற்குரிய கடுந் தவத்தினாலும் உபவாசத்தினாலும் தமது சரீரத்தை இளைக்கச் செய்து, பசி, தூக்கம் இவைகளை முற்றிலும் வென்று, ஒவ்வொரு நாளின் முழு நேரத்தையும் சமூகம் சீர்திருத்த வழிகளென்ன என்பதைப்பற்றி ஆலோசித்து, அத்துறைகளுக்கு ஏற்றபடி அவ்வப்போது உபதேசித்தும், ஆற்றியும் வரும் அரும் பணிகளை உலகம் நன்கு அறியும்.

1907-வது ஆண்டில்  ஸ்வாமிகள், தமது 13-ஆவது பிராயத்தில் பீடத்தி லமர்ந்தார்கள்.  அக்காலம் முதல் அவர்கள் பல வருடங்கள் தொடர்ந்து யாத்திரைகளில் அமர்ந்து ஆங்காங்குள்ள மக்களுக்குத் தரிசனமளித்தும், அவர்களைக் கருணையுடன் அனுக்கிரகித்தும் வருகிறார்கள்.  அவர்கள் அவ்வப்போது மேற்கொண்டுள்ள விஜய யாத்திரைகளைப் பற்றிய குறிப்புக்களின் சில பகுதிகள் இப்பதிகத்தில் சேர்க்கப் பெற்றுள்ளன. ஸ்வாமிகள் விஜயம் செய்த ஸ்தலங்களின் விசேஷங்களும் ஆங்காங்கே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.  அவர்களின் உபதேச மொழிகள் சிலவும் இதில் காணப்படும்.  மகாபண்டிதர்களும் வியக்கத்தக்கவாறு சாஸ்திர ஞானம் படைத்த நமது ஸ்வாமிகளின் அருள்மொழிகள், பண்டிதர் பாமரர் யாவருக்கும் பயன் தரக்கூடியனவாயிருக்கும்.  இவ்வுபதேசங்களில் அவர்களின் மேதை, கருணை, இவற்றின் சிகரங்களை நாம் காணலாம்.   ஸ்வாமிகளின் அபாரமான ஞாபக சக்தியையும், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் முதலான பாஷைகளை அவர்கள் எளிதில் கையாளும் வன்மையை

பக்கம் xiv... தொடரும்......

கி.காளைராசன்

unread,
Jan 4, 2013, 6:06:17 PM1/4/13
to mint...@googlegroups.com, thiruppuvanam, naga rethinam

பக்கம் xiv
யும் கண்டு வியப்படையாதார் இலர்.  பாமரர்களும் அறியும் வண்ணம் அத்வைத சித்தாந்தத்திற்கு ஸ்வாமிகள் விளக்கம் கூறிவருவது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்நூலைத் தொகுக்கப் பல வெளியீடுகள் உதவியாக இருந்தன.  ஸ்வாமிகளின் யாத்திரையின் தினசரிக் குறிப்புக்களும் பெரிதும் பெயன்பட்டன.  ஸ்வாமிகள் அவர்களின் யாத்திரைகள் சம்பந்தமாய், வாடமொழி, ஹிந்தி, தெலுங்கு முதலான பாஷைகளில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்ப்பதில் புலமை வாய்ந்த பல அன்பர்கள் மனமார இப்பணில் உதவியுள்ளார்கள்.  இத்துறையில் புதுக்கோட்டை மல்லாதி ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சாஸ்திரிகளின் சேவை குறிப்பிடத் தக்கது.  அவர்கள் யாவர்க்கும் அடியேனது நன்றி உரித்தாகும்.

மேலும் அடியேன் பல வருடங்களாகச் சேகரித்துவைத்த நிகழ்ச்சிக் குறிப்புகளை ஓர் புத்தகவடிவமாக அமைப்பதில் எனக்கு அவ்வப்போது ஆலோசனைகள் பலகூறி, புத்தகம் முழுவதையும் பரிசீலனை செய்து ஆங்காங்கு பொருத்தமான தலைப்புகள் அமைத்தும், அச்சில் ஏறிய பொழுது பிழைகள் திருத்தியும் பேருதவிபுரிந்த சென்னைஇராசதானிக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ ஆர். விச்வநாத ஐயர், எம்.ஏ., அவர்களுக்கும், இப்புத்கத்தை வெகு சீரிய முறையில் மிக விரைவில் அச்சிட்டுக் கொடுத்த சென்னை லிபர்ட்டி அச்சகத்தின் உரிமையாளர் ஸ்ரீ டி.ஆர்.ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களுக்கும், இதைவெளியிடும் பணியை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்று மக்களுக்குப் பேருபகாரம் செய்த சென்னைப் பிரசுரகர்த்தர்கள் B.G.பால் அண்டு கம்பெனியின் நிர்வாகி ஸ்ரீ K. நீலகண்ட ஐயர், B.A. அவர்களுக்கும் எனது நன்றி உரியதாகும்.  இதை ஸ்வாமிகளின் பொன்விழா நினைவு மலராக வெளியிட அனுமதித்த அவ்விழாக் கமிட்டியாருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலைத் தொகுக்கும் காலத்தில் அயர்வு, மறதி முதலியவற்றால் பல அரிய சம்பவங்களும், ஸ்ரீ மடத்தின் தொண்டில் ஈடுபட்ட பல அன்பர்களின் பெயர்கள் முதலியனவும் விடப்பட்டிருக்கக்கூடும்.  நூலில் சில பிழைகளும் புகுந்திருக்கக் காரணமுண்டு.  இவைபோன்ற எல்லாக் குறைகளையும் அன்பர் உலகம் க்ஷமிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

ஸு.ஸாம்பமூர்த்தி சாஸ்திரி
சென்னை
2 மார்ச்சு 1957.

--------------------------------------------------------

ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்

பக்கம் 1 மற்றும் 2 கிடைக்கப்பெறவில்லை.

பக்கம் 3...
இளமையும் கல்வியும்

...வாங்கி வைத்து விடவேண்டுமென்று எண்ணம் கொண்டார்.  1850-வது வருடத்தில், அப்போழுது இருந்த ஆசாரிய ஸ்வாமிகள் கும்பகோணத்திலிருந்து திருவையாற்றிற்கு ஒரு முறை ஸ்வாமி தரிசனத்திற்குச் சென்றார்கள்.  பிறகு, அவர்கள் பங்காருகாமாக்ஷி அம்னையும் தரிசிக்க விரும்பித் தஞ்சைக்கும் விஜயமானார்கள்.  தஞ்சையில் கடைசியாக அரசாண்ட சிவாஜி மகாராஜா அவர்கள் ஸ்வாமிகளைத் தமது அரண்மனைக்கு அழைத்து, அவர்களுக்குரிய மரியாதைகளை யெல்லாம் செய்து, அவர்களுக்குக் கனகாபிஷேகமும் செய்தார்.  தங்க நாணயங்களால் அபிஷேகம் செய்வதையே கனகாபிஷேகம் என்பர்.  அன்று மன்னர் செய்த கனகாஷேகத்தில் ஐயாயிரம் தங்க வராகன் நாணயங்கள் இருந்தன.  அந்த நாயணங்கள் யாவற்றையும் கணபதிசாஸ்திரிகள் மிகுந்த ஜாக்கிரதையுடன் சேகரித்துப் பத்திரப்படுத்தி வைத்தார்.  ஆனால், ஸ்வாமிகளோ மடத்தில் அதிகப் பொருளிருந்தால் அதைக் காப்பாற்றுவதில் மிகுந்த அக்கரை கொள்ளவேண்டி வருமென்றும், ஆத்ம விசாரத்திற்கு அது இடையூறாக இருக்குமென்றும், அதனால் அப்பொருள் முழுவதையும் வித்வான்களுக்கு அப்பொழுதே பகிர்ந்து கொடுத்து விடலாமென்றும் கருதினார்கள்.

ஆனால், கணபதி சாஸ்திரிகளின் உள்ளமோ அப்பணத்தைக் கொண்டு மடத்திற்கு நிலம் வாங்குவதில் ஈடுபட்டிருந்தது.  இவ்விஷயத்தில் சாஸ்திரிகள் ஸ்வாமிகளது அநுமதியை ஒருவாறு பெற்றுப் பிறர் அறியாதவாறு அப்பொற்காசுகளுடன் குதிரை மீது அமர்ந்து கபிஸ்தலம் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார்.  கபிஸ்தலத்தில் இருந்த மூப்பனார் என்னும் பெரிய பிரமுகர் இவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்து இவரது எண்ணத்தையும் கேட்றிந்தார்.  அக்காலத்தில் கும்பகோணத்துக்குக் கிழக்கே உள்ள அணக்குடி என்ற ஊரிலிருந்த அணக்குடிப்பிள்ளை என்ற மிராசுதார் தம் நிலங்கள் சிலவற்றை விற்க எண்ணம் கொடிருந்ததாக மூப்பனார் கேள்வியுற்றிருந்தார்.  அந்த மிராசுதாரை அணக்குடிப் பிள்ளை என்று மரியாதைப் பெயருடனேயே குறிப்பிடுவது வழக்கம்.  மூப்பனார் சாஸ்திரிகளுக்குத் தகுந்த பந்தோபஸ்துக்களைச் செய்து அளித்து, தமது காரியஸ்தர் ஒருவருடன் அவரை அணக்குடிக்கு அனுப்பிவைத்தார்.  சாஸ்திரிகள் அணக்குடிக்குச் சென்று பிள்ளை அவர்களிடம்....
-------------------------------------------------------------

பக்கம் 4....
தாம் கொண்டுவந்த நிதியைக் கொடுத்து, அதற்கு ஈடாக மடத்திற்கு எவ்வளவு நிலம் சாஸனம் செய்ய முடியுமோ அவ்வளவு நிலத்தைச் சாஸனம் செய்யும்படி கேட்டுக் கொண்டு, மேலும் அதிக நேரம் அங்கே தங்காமல் தஞ்சைக்குச் சென்றுவிட்டார்.  சாஸ்திரிகளது தூய எண்ணத்தையும், அவருக்கு மடத்திலிருந்த அபிமானத்தையும் கண்டு வியந்த பிள்ளை அவர்களும் சில மாதங்களில் கும்பகோணத்திற்கு இரண்டு மைல்கள் தூரத்திலுள்ள கருப்பூர் என்னும் கிராமத்தில் தமக்குச் சொந்தமாயிருந்த 40 வேலி பூமியை மடத்திற்குச் சாஸனம் செய்து கொடுத்தார்.  இன்று மடத்திற்குச் சொந்தமாயுள்ள கிராமங்களுள் அதிக வருமானம் தருவது இந்தக் கருப்பூர்க் கிராமமே ஆகும்.

கணபதி சாஸ்திரிகளுக்குக் குமாரர்கள் மூவர்.  அவர்களுள் மூத்தவரான சுப்பிரமணிய சாஸ்திரிகளே நம் ஸ்வாமிகளின் தந்தையாவார்.  சுப்பிரமணிய சாஸ்திரிகள் பிறந்த வருடம் 1855.  கணபதி சாஸ்திரிகள் தம் குமாரருக்கு உரிய காலத்தில் உபநயனம் செய்வித்து வேதப் பயிற்சியையும் அளித்தார்.  பின்னர் அவர், அவருக்கு ஆங்கிலக் கல்வியிலும் பயிற்சி செய்வித்தார்.  1872-ஆவது ஆண்டில் சுப்பிரமணிய சாஸ்திரிகள் கும்பகோணம் கவர்ன்மெண்டு கலாசாலையில் மெட்ரிகுலேஷன் பரீக்ஷையில் முதன்மையாகத் தேறினார்.  கலாசாலையில் அவருக்கு இணைபிரியா நண்பராக அப்பொழுது பழகிவந்தவர், பிற்காலத்தில் பிரபல இஞ்சினீயராக விளங்கிய திருவிசைநல்லூர் ஸ்ரீநீலகண்ட சாஸ்திரிகளாவார்.  இருவரும் பிராயம் முதிர்ந்து ஓய்வு பெற்ற பிறகும் பல முறை சந்தித்து வருவது வழக்கம்.

கலாசாலையை விட்ட பின்னர் சுப்பிரமணிய சாஸ்திரிகள் கும்பகோணத்தில் ராவ்பகதூர் எஸ்.அப்பு சாஸ்திரிகள், சுவாமி நாத ஐயர் முதலான பிரமுகர்கள் கும்பேச்வர ஸ்வாமி தெற்கு வீதியில் ஆரம்பித்திருந்த பள்ளியில் ஓர் உபாத்தியாயராக அமர்ந்தார்.  அக்காலத்தில் கும்பகோணம் கவர்ன்மெண்டு கலாசாலையின் தலைவராக இருந்த ஸ்ரீ கோபால ராவின் சிபார்சினால் இந்த உத்தியோகம் இவருக்குக் கிடைத்தது.  அந்தப் பள்ளியே இன்று....
-----------------------------------------------------
பக்கம் 5....தொடரும்....

கி.காளைராசன்

unread,
Jan 5, 2013, 9:53:15 AM1/5/13
to mint...@googlegroups.com, thiruppuvanam, naga rethinam
பக்கம் 5..
கும்பகோணம் நகரில் நேடிவ் ஹைஸ்கூல் என்னும் பெயருடன் விளங்குகிறது.  அங்கு சிலகாலம் வேலை பார்த்த பின்னர், சாஸ்திரிகள் திருவாரூருக்கடுத்த காவாலகுடி என்ற கிராமதித்தில் பிரபல மிராசுதாராக இருந்த தியாகராஜ முதலியாருக்குக் கல்விப் பயிற்சி அளிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டார்.  சில வருடங்கள் அவர் அங்கு வேலையில் அமர்ந்திருந்து, பின்னர் சர்க்கார் கல்வி இலாகாவில், முதலில் ஓர் உபாத்தியாயராகவும், பிறகு சூபர்வைசராகவும் அமர்ந்து தென்னர்க்காடு ஜில்லாவில் விருத்தாசலம், சிதம்பரம், பரங்கிப் பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி மஞ்சகுப்பம் முதலான பல ஊர்களில் 30 வருடங்களுக்கு மேல் உத்தியோகம் வகித்துவந்தார்.  சுப்பிரமண்ய சாதிரிகள் நல்ல கலா ரசிகர்.  அந்நாளில் சங்கீதத்தில் மிகச் சிறப்புடன் விளங்கிய மகாவித்வான் மகா வைத்யநாத ஐயரின் கச்சேரிகளைக் கேட்பதில் சாஸ்திரியாருக்கு ஆவல் அதிகம் உண்டு.  அந்த மகா வித்வானின் கச்சேரியைக் கேட்ட பெருமையினால் அவருக்குப் பிற்கால வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்பதில் அதிக ஆர்வமும் உண்டாகவில்லை.  அவர் தாமே சுத்த கர்னாடக பாணியில் நன்றாகப் பாடும் வன்மையும் பெற்றிருந்தார்.

அன்னை மகாலக்ஷ்மி அம்மாள்
தஞ்சையை அரசாண்ட முதல் நாயக்க மன்னராகிய சேவப்ப நாயக்கரிடம் அமைச்சராக அமைந்து நாட்டின் நிர்வாகத்தைத் திறம்பட நடத்திவந்த ராஜா கோவிந்த தீக்ஷிதரது மரபே நம் ஸ்வாமிகளின் தாய்வழி மரபாகும்.  கோவிந்த தீக்ஷிதர் மகா வித்வானாக விளங்கி வேள்விகள் பல நடத்தி உள்ளார்.  மேலும் இவர் தம் காலத்தில் ஐயன் என்னும் சிறப்புப் பெயரையும் பெற்று விளங்கினார்.  இன்று, ஐயன் வாய்க்கால், ஐயன்குளம், ஐயன் தெரு, ஐயன்கடை எனச் சோழ நாட்டின் பல பாகங்களிலும் விளங்கி வருவனவெல்லாம் இவர் பெயரால் தோன்றியுள்ளவைகளாகும்.  சோழநாட்டில் காவிரியன் இரு கரைகளிலும் பல தலங்களில் உள்ள கருங்கல் படிக்கட்டுகளையும், மண்டபங்களையும் அமைத்த பெருமை இந்தக் கோவிந்த தீக்ஷிதரைச் சார்ந்ததாகும்.  மேலும், சோழ நாட்டிலும் திருவண்ணாமலையிலும் இவர் ஆலயத் திருப்பணிகள் பல செய்துள்ளார், பல....
-----------------------------------.

பக்கம் 6 ....
இடங்களில் குளங்களையும், நீர்ப்பாசனக் கால்வாய்களையும் இவர் வெட்டியுள்ளார்(• 1).

கோவிந்த தீக்ஷிதர் தம் ஓய்வு நாட்களைக் கும்பகோணத்திற்கடுத்த பட்டீசுவரம் என்னும் பாடல் பெற்ற தலத்தில் கழித்து வந்தார்.  அவருடையதும், அவரது மனைவியாரதுமான முழு உருவக் கற்சிலைகள் அவ்வூர்ச் சிவாலயத்தின் உட்புறத்தில் காணப்பெறுகின்றன.  இந்தத் தீக்ஷிதர் பரம்பரையிலே வந்த மகாலக்ஷ்மி அம்மையே நம் ஸ்வாமிகளை உலகுக்கு அளித்த பாக்கியவதியாவார்.

திருவையாற்றிற்குக் கிழக்கே 4 மைல் தூரத்தில், காவிரியின் வடகரையிலமைந்துள்ள ஈச்சங்குடி என்னும் அழகிய கிராமத்தில், மகாலக்ஷ்மி அம்மையார், நாகேச்வர சாஸ்திரி என்னும் அந்தணோத்தமருக்கும் அவருடைய தரும பத்னி மீனாட்சி அம்மையாருக்கும் புதல்வியாகத் தோன்றினார்.  தஞ்சை ஜில்லாவில் ஈச்சங்குடி என்னும் கிராமம் பல மகா வித்வான்களையும், மேதாவிகளையும் நாட்டிறகு அளித்த பெருமையைப் பெற்ற அக்ரஹாரங்களில் ஒன்றாகும்.  இந்த அக்ரஹாரத்தில் யாவரும் வேதம் பயின்று, நித்ய அக்னிஹோத்திரிகளாக அக்காலத்தில் விளங்கி வந்தனர்.

உபமன்யூ வாஸிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த நாகேச்வர சாஸ்திரிகள் ரிக் வேதத்தை லக்ஷணத்துடன் அத்தியயனம் செய்து, தர்ம, சாஸ்திரங்களிலும், பிரயோகங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினார்கள்.  கும்பகோணத்திலும், திருவையாற்றிலும் பல குடும்பங்கள் அவரைத் தம் ஆசார்ய ஸ்தானத்தில் அமர்த்தி மிகவும்  மதிப்புடன் ஆதரித்து வந்தன.  அக் குடும்பங்களில் கும்ப கோணத்தில் நம் ஸ்வாமிகளின் பாட்டனார் கணபதி சாஸ்திரிகளுடைய குடும்பமும் ஒன்றாகும்.  நாகேச்வர சாஸ்திரிகள் ஒரு
------------------
(• 1) சரித்திரப் பிரசித்தி பெற்ற இவரது வரலாறு அனந்தப்பூர் அரசாங்கக் கலாசாலையில் ஆங்கிலப் பேராசிரியராயிருந்த என்.கே. வெங்கடேசன் பந்துலுவால் ஆங்கிலத்தில் , சென்ற 1933-வது வருடத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  மைசூரைச் சார்ந்த சாமராஜநகர் வித்வான் வேங்கடரமண சாஸ்திரி என்பவர்  “தமிழ் நாட்டின் கர்னாடக மந்திரி“ என்னும் பெயருடன் இவரது வரலாற்றைக் கன்னடபாக்ஷையில் வெளியிட்டுள்ளார்.

--------------------------------------
பக்கம் 7..... தொடரும்.....

கி.காளைராசன்

unread,
Jan 6, 2013, 4:43:00 PM1/6/13
to mint...@googlegroups.com, thiruppuvanam, naga rethinam
உபமன்யூ வாஸிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த நாகேச்வர சாஸ்திரிகள் ரிக் வேதத்தை லக்ஷணத்துடன் அத்தியயனம் செய்து, தர்ம, சாஸ்திரங்களிலும், பிரயோகங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினார்கள்.  கும்பகோணத்திலும், திருவையாற்றிலும் பல குடும்பங்கள் அவரைத் தம் ஆசார்ய ஸ்தானத்தில் அமர்த்தி மிகவும்  மதிப்புடன் ஆதரித்து வந்தன.  அக் குடும்பங்களில் கும்ப கோணத்தில் நம் ஸ்வாமிகளின் பாட்டனார் கணபதி சாஸ்திரிகளுடைய குடும்பமும் ஒன்றாகும்.  நாகேச்வர சாஸ்திரிகள் ஒரு...
------------------
(• 1) சரித்திரப் பிரசித்தி பெற்ற இவரது வரலாறு அனந்தப்பூர் அரசாங்கக் கலாசாலையில் ஆங்கிலப் பேராசிரியராயிருந்த என்.கே. வெங்கடேசன் பந்துலுவால் ஆங்கிலத்தில் , சென்ற 1933-வது வருடத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  மைசூரைச் சார்ந்த சாமராஜநகர் வித்வான் வேங்கடரமண சாஸ்திரி என்பவர்  “தமிழ் நாட்டின் கர்னாடக மந்திரி“ என்னும் பெயருடன் இவரது வரலாற்றைக் கன்னடபாக்ஷையில் வெளியிட்டுள்ளார்.

--------------------------------------
பக்கம் 7....
...முறை கணபதி சாஸ்திரிகளின் வீட்டில் நடைபெற்ற ஒரு விசேஷத்திற்குக் கும்பகோணம் வந்தபொழுது, அவர் தம் குமாரி மகாலக்ஷ்மியைக் கணபதி சாஸ்திரிகளின் புதல்வரான சுப்ரமணியத்திற்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கத் தாம் விரும்புவதாகவும், அந்தத் தானத்தைக் கணபதி சாஸ்திரிகள் ஏற்றுக் கொண்டு தம்மைப் பெருமைப்படுத்த வேண்டு மென்றும் விண்ணப்பித்துக் கொண்டார்.  அச் சொற்களைக் கேட்ட கணபதி சாஸ்திரிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.  தானாக வந்த மகாலக்ஷ்மியைத் தள்ளுவாரும் உண்டோ? மேலும், ஆசாரிய ஸ்தானத்திலுள்ள பெரியார் தம் குமாரியைத் தம் புதல்வனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுப்பதாகத் தாமே கூறியதில் அவர் மிகப் பெருமை கொண்டார்.  பிள்ளைகளுக்குத் தகுந்த பெண்களைத் தேடி யாசிக்கும் காலமாக அக்காலம் அமைந்திருந்தது.  மாகலக்ஷ்மி அம்மையாரது ஏழாவது பிராயத்திலும், சுப்ரமணிய சாஸ்திரிகளது பதினெட்டாவது வயஸிலும் அவ்விருவருக்கும் வேதோக்தமாக ஈச்சங்குடியில் விவாகம் நடந்தேறியது.

தம் கணவருடன் இல்லறத்தைச் செவ்வையாய் நடத்தி வந்த மகாலக்ஷ்மி அம்மையார் அடக்கமே உருவானவர்.  அவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் முதலான பாஷைகளில் தோத்திரப் பாடல்களைப் பாடி மகிழ்வதிலும், கணவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதிலும், குழந்தைகளை நல்லவழியில் பராமரித்து வருவதிலும் தம் காலத்தைச் செலவிட்டு வந்தார்.  மேலும் பெண்களுக்குரிய விருதங்கள் யாவற்றையும் ஒன்று விடாது, அவ்வக் காலங்களில், அந்த அம்மையார் அனுஷ்டித்து வந்தார்.  சுகங்கள் வரும் காலத்தில் அதிகச் சந்தோஷத்தையும், துக்கம் ஏற்படும் பொழுது அதிகக் கவலையையும் அடையாமல், எல்லாம் கடவுள் செயல் என்ற நம்பிக்கையுடன் நல்ல விவேகியாக அந்த அம்மையார் வாழ்ந்து வந்தார்.  அவருடன் பிறந்தவர்கள் ஐவர். அவர்களில் இருவர் பெண்கள், மூவர் ஆண்கள்.  அம்மையரின் கடைசிச் சகோதரர் சுப்ரமண்ய சாஸ்திரிகள் ரிக் வேதம் நன்கு பயின்று, சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் முதலான பாஷைகளையும் கற்று, அறுபது வருடங்களுக்கு மேலாக மடத்தின் ஆஸ்தான வித்வத் சபையில் இருந்து கொண்டு இன்றும் பணியாற்றிவருகிறார்.

பக்கம் 8 ..... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Jan 7, 2013, 6:49:48 AM1/7/13
to mint...@googlegroups.com, thiruppuvanam, naga rethinam
Inline image 1
1_018.jpg

கி.காளைராசன்

unread,
Jan 7, 2013, 8:17:54 PM1/7/13
to mint...@googlegroups.com, thiruppuvanam, naga rethinam
பக்கம் 8..
ஸ்வாமிகளின் தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் விழுப்புரத்தில் சாலைகளின் மேற் பார்வையாளராக உத்தியோகம் வகித்து வந்த சமயம் அவருக்கு இரண்டாவது புதல்வராக, சாலியவாகன சகாப்தம் 1817-ஜய வருடம் வைகாசி மாதம் 8-ஆம் தேதி (1894-மே-மாதம் 20-ஆம் தேதி) விழுப்புரம் என்னும் நகரில் நம் ஸ்வாமிகள் அவதரித்தார். அவர்களின் ஜாதக நகலைப் பிற்சேர்ப்பில் காண்க.   முதல் குமாரருக்குக் கணபதி எனப் பெயரிட்டிருந்தமையை ஒட்டித் தந்தையார் தம் இரண்டாவது குமாரருக்கு முருகப் பெருமான் திருநாமமான சுவாமிநாதன் என்று பெயரிட்டார்.  சுப்ரமண்ய சாஸ்திரிகளின் குல தெய்வமும் சுவாமி மலையில் எழுந்தருளி இருப்பவருமான ஸ்ரீ சுவாமிநாத சுவாமியே, ஆகையால், குலதெய்வத்தின் பெயரையே சாஸ்திரியார் தம் மகவுக்கிட்டு மகிழ்ந்தாரெனவும் கூறலாம்(•1).

சாஸ்திரிகளுக்கு நம் ஸ்வாமிகளைத் தவிர நான்கு புதல்வர்களும், ஒரு பெண்ணும் உண்டு. அவர்கள் முறையே ஸ்வாமிகளுக்கு மூத்தவரான கணபதி சாஸ்திரி, இளையவர்களான, லலிதாம்பாள் அம்மையார், சாம்பமூர்த்தி சாஸ்திரி, சிவம் என்றழைக்கப்படும் சதாசிவ சாஸ்திரி, குஞ்சு சாஸ்திரி என அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி என்பவர்களாவர்.  கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள் மடத்தின் பரம்பரைப் புரோகிதராக இருந்த மாயவரம் பிரம்மஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளிடம் ரிக் வேதம் கற்று, நம் ஸ்வாமிகளின் பிரதான சிஷ்யராக இப்பொழுது விளங்கும் ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கும், அவர்களது இளமைப் பருவத்தில் வேதம் கற்பித்த பாக்கியத்தைப் பெற்றார்கள்.  சுப்பிரமண்ய சாஸ்திரிகள் 1329-வது வருடம்ஜூலை மாதம் தமது 74-வது வயதில் இம்மண்ணுலகை நீத்தார்.

தந்தையார் தம் குலத்திற்குரிய சம்ஸ்காரங்களையெல்லாம் அவ்வக்காலங்களில் சுவாமிநாதருக்குச் செய்வித்து, உரிய காலத்தில் (1905-வது வருடம், திண்டிவனத்தில்) உபநயனத்தையும்.....
--------------------
(•1) விழுப்புரத்தில் ஸ்வாமிகள் ஜனித்த வீட்டை விலைக்கு வாங்கி அதை ஓர் சங்கராலயமாக அமைக்க வேண்டுமென ஆவ்வூர் பிரமுகர் வக்கீல் சிதம்பர ஐயரும், மற்ற சீடர்களும் முயற்சித்து வருகிறார்கள்.)

பக்கம் 9 .... தொடரும்.

கி.காளைராசன்

unread,
Jan 9, 2013, 3:51:43 AM1/9/13
to mint...@googlegroups.com, thiruppuvanam, naga rethinam
பக்கம் 8..
...நடத்தி வைத்தார்.  உபநயன காலத்தில் பீடத்தின் 66-வது ஆசாரிய ஸ்வாமிகள் சுவாமிநாதரை ஆசீர்வதித்துப் பிரஸாதம் அனுப்பி யிருந்தார்கள்.  சாஸ்திரிகளின் நண்பரான சூணாம்பட்டு ஜமீன்தார் திவான்பகதூர் அருணாசல முதலியாரும், பாலகருக்குகந்ததோர் பரிசை அளித்தார்.  சுவாமிநாதரின் மேதா விலாஸத்தை இளமைப் பருவத்திலேயே கண்ட சாஸ்திரிகள், பாலகரின் எட்டாவது பிராயம் வரை அவரைப் பள்ளிக்கு அனுப்பாமல், தாமாகவே அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து வந்தார்.  மேலும் தம் மைந்தருக்கு வெகு இளைமைப் பருவத்திலேயே சங்கீதத்தில் பயிற்சியும் அளித்து வந்ததார்.  விளையும் பயிர் முளையிலேயே என்னும் முதுமொழிப்படி ஒரு முறை கண்டதையும், ஒரு முறை கேட்டதையும் சிறிதும் மறவாத நுண்ணறிவு படைத்த தன்மையுடன் சுவாமிநாதர் விளங்கினார்.  மகாலக்ஷ்மி அம்மாள் தம் குழந்தைகளுக்குத் தாம் அறிந்த ஸ்தோத்திரச் செய்யுட்களை யெல்லாம் சொல்லிவைப்பார்.  இளஞ் சுவாமிநாருக்கு அவற்றை மனப்பாடம் செய்வதில் விருப்பம் அதிகம்.  சம்ஸ்கிருதம் கற்க அப்பொழுது சுவாமிநாதருக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.  தந்தையார் திண்டிவனத்தில் இருந்தபொழுது, அவர் அவ்வூர் ஆர்க்காடு அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் இரண்டாவது பாரத்தில் தம் மைந்தரை முதன் முதலாகப் பள்ளிப் படிப்புக்குச் சேர்த்தார்.  சுவாமிநாதர் தம் இளைமைப் பருவத்திலேயே மிகுந்த ஹாஸ்யச் சுவையுடன் பேசிவருவது வழக்கம்.  ஒரே மொழியில் பல பொருள்களையும் அடக்கியும் பேசுவார்கள்.  தந்தையார் தமது தனயர்களுள் அவரை மிகுந்த பிரேமையுடன் வளர்த்து, ஓர் கிளியின் பெயரை அவருக்குச் செல்வப் பெயராக இட்டிருந்தார்.

பள்ளிப் படிப்பும், பரிசுக் குவியல்களும்
சுவாமிநாதர் ஒவ்வொரு வகுப்பிலும் முதன்மையாக விளங்கி, முதன்மையாகவே தேறி, வருட இறுதிப் பரிசளிப்பு விழாக்களில் எல்லாம் முதல் பரிசுகளையும் தாமே பெற்று வந்ததார்.  பைபிள் என்னும் கிறிஸ்தவ மதநூலில் தேர்ச்சி பெற்றதற்கு முதல் பரிசும் அவருக்கே கிடைத்து வந்தது.  பரிசு பெற்ற புத்தகங்கள் பல வீட்டில் குவிந்து விடும்.

அக்காலத்தில் அப்பள்ளியில் இருந்த கிறிஸ்துவ ஆசிரியர்களெல்லாரும் சுவாமிநாதரிடம் மிகுந்த அன்பு காட்டி வந்தனர்.

பக்கம் 10 .... தொடரும்.

Geetha Sambasivam

unread,
Jan 9, 2013, 5:46:46 AM1/9/13
to mint...@googlegroups.com
ஸ்ரீ ஆதிசங்கராசாரியரின் பிரதம சீடரான ஸ்ரீ ஸுரேச்வரருக்கு ஆலயமும் பிம்பமும் அமைந்தள்ளன.   //

மடத்திலே பார்த்த நினைப்பு இல்லை.  மறுபடி போகையிலே பார்க்கவேண்டும்.

2013/1/3 கி.காளைராசன் <kalair...@gmail.com>

ஸமர்ப்பணம்

அன்பன்
கி.காளைராசன்

--

Geetha Sambasivam

unread,
Jan 9, 2013, 5:49:09 AM1/9/13
to mint...@googlegroups.com
ஆங்காங்கே காணப்படும் எழுத்துப் பிழைகளைக் கவனத்தில் கொள்ளும்படி வேண்டுகிறேன்.  தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

2013/1/4 கி.காளைராசன் <kalair...@gmail.com>

அன்பன்
கி.காளைராசன் 

--

கி.காளைராசன்

unread,
Jan 9, 2013, 5:51:28 AM1/9/13
to mint...@googlegroups.com
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

2013/1/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஆங்காங்கே காணப்படும் எழுத்துப் பிழைகளைக் கவனத்தில் கொள்ளும்படி வேண்டுகிறேன்.  தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
மிக்க மகிழ்ச்சி,
இப்போதுதான் தாங்கள் சுட்டிய வரியில் உள்ள பிழையைத் திருத்திக் கொண்டுள்ளேன்.

தாங்கள் அன்புள்ளம் கொண்டு பிழையிருக்கும் வரிகளைச் சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்ள உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Geetha Sambasivam

unread,
Jan 9, 2013, 5:52:25 AM1/9/13
to mint...@googlegroups.com
பக்கம் 1 மற்றும் 2 கிடைக்கப்பெறவில்லை.//

ஆஹா! :(

2013/1/5 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 9, 2013, 5:56:37 AM1/9/13
to mint...@googlegroups.com

2013/1/5 கி.காளைராசன் <kalair...@gmail.com>

ஸமர்ப்பணம்

கும்பகோணம் நகரில் நேடிவ் ஹைஸ்கூல் என்னும் பெயருடன் விளங்குகிறது.  அங்கு சிலகாலம் வேலை பார்த்த பின்னர், சாஸ்திரிகள் திருவாரூருக்கடுத்த காவாலகுடி என்ற கிராமதித்தில்= கிராமத்தில்  பிரபல மிராசுதாராக இருந்த தியாகராஜ முதலியாருக்குக் கல்விப் பயிற்சி அளிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டார்.  சில வருடங்கள் அவர் அங்கு வேலையில் அமர்ந்திருந்து, பின்னர் சர்க்கார் கல்வி இலாகாவில், முதலில் ஓர் உபாத்தியாயராகவும், பிறகு சூபர்வைசராகவும் அமர்ந்து தென்னர்க்காடு = தென்னாற்காடு  ஜில்லாவில் விருத்தாசலம், சிதம்பரம், பரங்கிப் பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி மஞ்சகுப்பம் முதலான பல ஊர்களில் 30 வருடங்களுக்கு மேல் உத்தியோகம் வகித்துவந்தார்.  சுப்பிரமண்ய சாதிரிகள் நல்ல கலா ரசிகர்.  அந்நாளில் சங்கீதத்தில் மிகச் சிறப்புடன் விளங்கிய மகாவித்வான் மகா வைத்யநாத ஐயரின் கச்சேரிகளைக் கேட்பதில் சாஸ்திரியாருக்கு ஆவல் அதிகம் உண்டு.  அந்த மகா வித்வானின் கச்சேரியைக் கேட்ட பெருமையினால் அவருக்குப் பிற்கால வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்பதில் அதிக ஆர்வமும் உண்டாகவில்லை.  அவர் தாமே சுத்த கர்னாடக பாணியில் நன்றாகப் பாடும் வன்மையும் பெற்றிருந்தார்.

அன்னை மகாலக்ஷ்மி அம்மாள்
தஞ்சையை அரசாண்ட முதல் நாயக்க மன்னராகிய சேவப்ப நாயக்கரிடம் அமைச்சராக அமைந்து நாட்டின் நிர்வாகத்தைத் திறம்பட நடத்திவந்த ராஜா கோவிந்த தீக்ஷிதரது மரபே நம் ஸ்வாமிகளின் தாய்வழி மரபாகும்.  கோவிந்த தீக்ஷிதர் மகா வித்வானாக விளங்கி வேள்விகள் பல நடத்தி உள்ளார்.  மேலும் இவர் தம் காலத்தில் ஐயன் என்னும் சிறப்புப் பெயரையும் பெற்று விளங்கினார்.  இன்று, ஐயன் வாய்க்கால், ஐயன்குளம், ஐயன் தெரு, ஐயன்கடை எனச் சோழ நாட்டின் பல பாகங்களிலும் விளங்கி வருவனவெல்லாம் இவர் பெயரால் தோன்றியுள்ளவைகளாகும்.  சோழநாட்டில் காவிரியன்=யின் இரு கரைகளிலும் பல தலங்களில் உள்ள கருங்கல் படிக்கட்டுகளையும், மண்டபங்களையும் அமைத்த பெருமை இந்தக் கோவிந்த தீக்ஷிதரைச் சார்ந்ததாகும்.  மேலும், சோழ நாட்டிலும் திருவண்ணாமலையிலும் இவர் ஆலயத் திருப்பணிகள் பல செய்துள்ளார், பல....
-----------------------------------.

பக்கம் 6 ....
இடங்களில் குளங்களையும், நீர்ப்பாசனக் கால்வாய்களையும் இவர் வெட்டியுள்ளார்(• 1).

கோவிந்த தீக்ஷிதர் தம் ஓய்வு நாட்களைக் கும்பகோணத்திற்கடுத்த பட்டீசுவரம் என்னும் பாடல் பெற்ற தலத்தில் கழித்து வந்தார்.  அவருடையதும், அவரது மனைவியாரதுமான முழு உருவக் கற்சிலைகள் அவ்வூர்ச் சிவாலயத்தின் உட்புறத்தில் காணப்பெறுகின்றன.  இந்தத் தீக்ஷிதர் பரம்பரையிலே வந்த மகாலக்ஷ்மி அம்மையே நம் ஸ்வாமிகளை உலகுக்கு அளித்த பாக்கியவதியாவார்.

திருவையாற்றிற்குக் கிழக்கே 4 மைல் தூரத்தில், காவிரியின் வடகரையிலமைந்துள்ள ஈச்சங்குடி என்னும் அழகிய கிராமத்தில், மகாலக்ஷ்மி அம்மையார், நாகேச்வர சாஸ்திரி என்னும் அந்தணோத்தமருக்கும் அவருடைய தரும பத்னி மீனாட்சி அம்மையாருக்கும் புதல்வியாகத் தோன்றினார்.  தஞ்சை ஜில்லாவில் ஈச்சங்குடி என்னும் கிராமம் பல மகா வித்வான்களையும், மேதாவிகளையும் நாட்டிறகு அளித்த பெருமையைப் பெற்ற அக்ரஹாரங்களில் ஒன்றாகும்.  இந்த அக்ரஹாரத்தில் யாவரும் வேதம் பயின்று, நித்ய அக்னிஹோத்திரிகளாக அக்காலத்தில் விளங்கி வந்தனர்.

உபமன்யூ வாஸிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த நாகேச்வர சாஸ்திரிகள் ரிக் வேதத்தை லக்ஷணத்துடன் அத்தியயனம் செய்து, தர்ம, சாஸ்திரங்களிலும், பிரயோகங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினார்கள்.  கும்பகோணத்திலும், திருவையாற்றிலும் பல குடும்பங்கள் அவரைத் தம் ஆசார்ய ஸ்தானத்தில் அமர்த்தி மிகவும்  மதிப்புடன் ஆதரித்து வந்தன.  அக் குடும்பங்களில் கும்ப கோணத்தில் நம் ஸ்வாமிகளின் பாட்டனார் கணபதி சாஸ்திரிகளுடைய குடும்பமும் ஒன்றாகும்.  நாகேச்வர சாஸ்திரிகள் ஒரு
------------------
(• 1) சரித்திரப் பிரசித்தி பெற்ற இவரது வரலாறு அனந்தப்பூர் அரசாங்கக் கலாசாலையில் ஆங்கிலப் பேராசிரியராயிருந்த என்.கே. வெங்கடேசன் பந்துலுவால் ஆங்கிலத்தில் , சென்ற 1933-வது வருடத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  மைசூரைச் சார்ந்த சாமராஜநகர் வித்வான் வேங்கடரமண சாஸ்திரி என்பவர்  “தமிழ் நாட்டின் கர்னாடக மந்திரி“ என்னும் பெயருடன் இவரது வரலாற்றைக் கன்னடபாக்ஷையில் வெளியிட்டுள்ளார்.

--------------------------------------
பக்கம் 7..... தொடரும்.....

--

Geetha Sambasivam

unread,
Jan 9, 2013, 6:05:06 AM1/9/13
to mint...@googlegroups.com

2013/1/5 கி.காளைராசன் <kalair...@gmail.com>

ஸமர்ப்பணம்

---

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு

ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி

ஸ்வாமிகளின்

பிரதம சிஷ்யர்களாக விளங்கும்

ஸ்ரீமத்

பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவரய

ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு

இந்நூல்

பக்தியுடன் ஸமர்ப்பணம் செய்யப்படுகிறது.

பக்கம் xi  

முகவுரை

        புண்ணிய பூமியான நம் பரதகண்டத்தில் தருமத்தை நிலை நாட்டுவதற்காகப் பகவானுடைய திரு அவதாரங்கள் பற்பல காலங்களில் நிகழ்ந்ததுண்டு: அவைகளில், திரேதாயுகத்தில் நேர்ந்த ஸ்ரீ ராமாவதாரமும், துவாபர யுகத்தில் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் எல்லோரும் அறிந்தனவே.  இவ்வகையில், இக்கலியுகத்திலும் சில அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் ஸ்ரீ ஆதி சங்கரரது அவதாரம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.  முன் யுகங்களில் வந்த மேற்கண்ட அவதார புருஷர்கள் மன்னர்களின் வழியில் தோன்றி அதர்மத்தை எதிர்த்துத் தர்ம யுத்தம் புரிந்து சத்தியத்தை நிலைநாட்டினார்கள்.  ஆனால், ஸ்ரீ பரமேசுவரரின் அவதாரமெனக் கருதப்படும் ஸ்ரீ ஆதி சங்கரரோ, சிவகுரு என்னும் ஓர் அந்தணருக்கும் ஆரியாம்பிகை என்னும் அவர் பத்தினிக்கும் திருமகனாகக் கேரளநாட்டில் காலடி என்னும் தலத்தில் அவதாரம் செய்தார்.  இந்த மகான் மிக இளம் பருவத்திலேயே துறவுபூண்டு, தம் உபதேசங்களினாலும், பிரசாரங்களினாலும் பாரத பூமியில் தருமத்தை நிலைக்கச் செய்தார்.  அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் முப்பத்திரண்டு ஆண்டுகளேயாகும்.

        ஸ்ரீசங்கரரது அவதார காலம் கலியுகம் 2593 (கி.மு.509) நந்தன வருஷமெனப் பல மேதாவிகள் ஆராய்ச்சிகள் மூலம் முடிவு செய்துள்ளார்கள்.  இக்கருத்தில் வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் பெரியோர்கள் சிறந்த ஆராய்ச்சியின்பின் கொண்ட இந்த முடிவே நமக்கும் ஒத்ததாகும்.  மேலும், ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபனம் செய்த மடங்கள் பாரதநாட்டில் எல்லாப் பாகங்களிலும் இன்றும் பிரகாசிக்கின்றன.  அந்த மடங்களின் குருபரம்பரைகளைப் பரிசீலனை செய்யும்போதும் ஆதி சங்கரரது காலம் இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.

        சங்கரர் பாரத பூமி முழுவதையும் மூன்றுமுறை வலம் வந்து தம் உபதேசங்களால் மக்களது அஞ்ஞான இருளைப் போக்கி, வேத தர்மங்களுக்கு உட்பட்டிருந்தும், கொள்கைகளிலும் முறைகளிலும் மாறுபட்டிருந்த சைவம், வைஷ்ணவம், ஸெளரம், சாக்தம், காணபதம், கௌமாரம் முதலான பல மதங்களையும் சீர்திருத்தம் செய்தார்.  அதனால், அவர் ஷண்மத ஸ்தாபனாசாரியார் என்னும் பெயரையும் பெற்றார்.  அவர் நேபாளம் முதல் திருச்செந்தூர் ஈறாகவுள்ள பல புண்ணிய ஸ்தலங்களையும் தரிசித்து, ஆங்காங்கே ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டைகளையும் செய்தருளினார்.  பத்ரிகாச்ரமத்திலும்,

பக்கம் xii 
(இமாசலத்தில்) துவாரகையிலும், ஜகந்நாதத்திலும், சிருங்ககிரியிலும் மடங்களை ஸ்தாபனம் செய்த பின்னர், அவர் காஞ்சீபுரத்தை அடைந்து, சர்வக்ஞ பீடமேறி, அங்கு காமகோடி பீடத்தையும் ஸ்தாபனம் செய்து, அவ்விடத்திலேயே நிர்விகல்ப சமாதி அடைந்தார்களெனச் சிவ ரகஸ்யம்.  மார்க்கண்டேய சம்ஹிதை, ஆனந்தகிரி சங்கர விஜயம்.  முதலிய பழமையான நூல்களிலிருந்தும், சமீப காலத்தில் ராஜசூடாமணிமகி என்பவரால் இயற்றி =றப்பட்ட சங்கராப்யுதயம்,  இராமபத்ர தீக்ஷிதர் இயற்றிய பதஞ்சலி விஜயம் முதலான காவியங்களிலிருந்தும் தெளிவாகின்றது.  வங்காள பாஷையில் 1892-வது ஆண்டில் வெளியிட்ப்பட்ட வங்காள சகல கலா நிகண்டுவின் (The Bengali Encyclopedia)  மூன்றாவது பாகத்தில், காஞ்சி என்ற தலைப்பின்கீழ், ‘அது ஸப்த புரிகளில் ஒன்று; ஓர் மகாபீட ஸ்தானம்; மேலும் அது ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளது சமாதி ஸ்தானம்; அந்நகரத்திலுள்ள ஸ்ரீ காமாக்ஷியம்மையின் ஆலயத்தில் பூர்ணபுருஷாகிருதியாக ஸ்ரீ ஆதி சங்கரரது சிலாவிக்ரகம் அமைந்திருக்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பெரிய காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ சங்கரமடத்தில் ஸ்ரீ ஆதிசங்கராசாரியரின் பிரதம சீடரான ஸ்ரீ ஸுரேச்வரருக்கு ஆலயமும் பிம்பமும் அமைந்த=துள்ளன.   ஸுரேச்வரரது பூர்வஆசிரமப் பெயரான மண்டனமிச்ரரின் பெயரால் காஞ்சியில் அக்ரகாரம் ஒன்றும் இருந்துவருவதை நாம் இன்றும் காணலாம்.  இன்னும் காஞ்சியில் வரதராஜர், ஏகாம்பரர், காமாக்ஷி முதலான தேவாலயங்களிலெல்லாம் ஸ்ரீ சங்கரரின் பிம்பங்கள் காணப்படுவதுடன், காஞ்சியை அடுத்த திருவொற்றியூர் முதலான தலங்களில் உள்ள வேறு ஆலயங்களிலும் அவை புராதனமாகவே ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளன.  இக்காரணங்களினால் காஞ்சி நகரத்திற்கும் ஸ்ரீ ஆதிசங்கரருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது என்பதை நாம் உணரலாம்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் இதுவரை 68 ஆசாரியர்கள் எழுந்தருளியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  அவர்களில் பலர் பெரிய தவசிகள்; பலர் சிறந்த கவிஞர்கள்;  பலர் தலைசிறந்த யோகிகள்; பலர் சாஸ்திரங்கள் பல கற்றவர்கள்; பலர் பக்திமார்க்கத்தை உலகிற் பரப்பியவர்கள்.

இப்பொழுது ஸ்ரீ காமகோடி பீடத்தில் 68ஆவது ஆசார்ய ஸ்வாமிகளாகப் பிரகாசிக்கும் ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி

பக்கம் xiii 
ஸ்வாமிகள் ஸ்ரீ ஆதி சங்கரரின் அவதாரமெனவே கருதப்பட்டு வருவதை உலகம் அறியும். அவர்களுடைய வரலாற்றையும், சநாதன தர்மத்திற்குஅவர்கள் ஆற்றிவரும் பெரும் பணிகளையும்  சிறிதளவாகவேனும் எடுத்துக்கூறும் நோக்கத்துடன் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. அம்மகான் வைதிக மார்க்கத்தையும், வேதாந்த தத்துவத்தையும் பாதுகாக்கச் செய்துவரும் அரிய முயற்சிகளையெல்லாம் இச்சிறு புத்தகத்தில் எழுதிவிடுவதென்பது இயலாத காரியமாகும்.  ஆனால், அத்துறையில் சிறிய தொரு முயற்சியே யானினும் இதனை உலகம் ஏற்குமென்றே எண்ணுகின்றேன்.  ஒருபுறம் மடத்தின் அன்றாட நிர்வாகம், மற்றொருபுறம் தம்மை நாடி வரும் சிஷ்யர்களை உய்விக்கச் செய்வதில் அவர்கள் காட்டும் ஆர்வம், தினந்தோறும் பலமணி நேரம் அவர்கள் செய்து வரும் ஸ்ரீசந்திமௌளீச்வர பூஜை, இவற்றிற்கிடையே அவர்கள் தாம் மேற்கொண்ட துறவறத்தைச் சாஸ்திரவிதிகளுக்குச் சிறிதும் மாறுபடாமல் காத்துவரும் சிறப்பு, ஆகிய இவை போன்றவற்றை அவர்களைத் தரிசித்தவர்களே அறிவர்.  இவற்றோடு அவர்கள் தம் ஆசிரமத்திற்குரிய கடுந் தவத்தினாலும் உபவாசத்தினாலும் தமது சரீரத்தை இளைக்கச் செய்து, பசி, தூக்கம் இவைகளை முற்றிலும் வென்று, ஒவ்வொரு நாளின் முழு நேரத்தையும் சமூகம் சீர்திருத்த வழிகளென்ன என்பதைப்பற்றி ஆலோசித்து, அத்துறைகளுக்கு ஏற்றபடி அவ்வப்போது உபதேசித்தும், ஆற்றியும் வரும் அரும் பணிகளை உலகம் நன்கு அறியும்.

1907-வது ஆண்டில்  ஸ்வாமிகள், தமது 13-ஆவது பிராயத்தில் பீடத்தி லமர்ந்தார்கள்.  அக்காலம் முதல் அவர்கள் பல வருடங்கள் தொடர்ந்து யாத்திரைகளில் அமர்ந்து ஆங்காங்குள்ள மக்களுக்குத் தரிசனமளித்தும், அவர்களைக் கருணையுடன் அனுக்கிரகித்தும் வருகிறார்கள்.  அவர்கள் அவ்வப்போது மேற்கொண்டுள்ள விஜய யாத்திரைகளைப் பற்றிய குறிப்புக்களின் சில பகுதிகள் இப்பதிகத்தில் = இங்கே பதிகமா, புத்தகமா? சேர்க்கப் பெற்றுள்ளன. ஸ்வாமிகள் விஜயம் செய்த ஸ்தலங்களின் விசேஷங்களும் ஆங்காங்கே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.  அவர்களின் உபதேச மொழிகள் சிலவும் இதில் காணப்படும்.  மகாபண்டிதர்களும் வியக்கத்தக்கவாறு சாஸ்திர ஞானம் படைத்த நமது ஸ்வாமிகளின் அருள்மொழிகள், பண்டிதர் பாமரர் யாவருக்கும் பயன் தரக்கூடியனவாயிருக்கும்.  இவ்வுபதேசங்களில் அவர்களின் மேதை, கருணை, இவற்றின் சிகரங்களை நாம் காணலாம்.   ஸ்வாமிகளின் அபாரமான ஞாபக சக்தியையும், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் முதலான பாஷைகளை அவர்கள் எளிதில் கையாளும் வன்மையை

பக்கம் xiv
யும் கண்டு வியப்படையாதார் இலர்.  பாமரர்களும் அறியும் வண்ணம் அத்வைத சித்தாந்தத்திற்கு ஸ்வாமிகள் விளக்கம் கூறிவருவது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்நூலைத் தொகுக்கப் பல வெளியீடுகள் உதவியாக இருந்தன.  ஸ்வாமிகளின் யாத்திரையின் தினசரிக் குறிப்புக்களும் பெரிதும் பெ=பயன்பட்டன.  ஸ்வாமிகள் அவர்களின் யாத்திரைகள் சம்பந்தமாய், வா=வடமொழி, ஹிந்தி, தெலுங்கு முதலான பாஷைகளில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்ப்பதில் புலமை வாய்ந்த பல அன்பர்கள் மனமார இப்பணியில் உதவியுள்ளார்கள்.  இத்துறையில் புதுக்கோட்டை மல்லாதி ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சாஸ்திரிகளின் சேவை குறிப்பிடத் தக்கது.  அவர்கள் யாவர்க்கும் அடியேனது நன்றி உரித்தாகும்.

மேலும் அடியேன் பல வருடங்களாகச் சேகரித்துவைத்த நிகழ்ச்சிக் குறிப்புகளை ஓர் புத்தகவடிவமாக அமைப்பதில் எனக்கு அவ்வப்போது ஆலோசனைகள் பலகூறி, புத்தகம் முழுவதையும் பரிசீலனை செய்து ஆங்காங்கு பொருத்தமான தலைப்புகள் அமைத்தும், அச்சில் ஏறிய பொழுது பிழைகள் திருத்தியும் பேருதவிபுரிந்த சென்னைஇராசதானிக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ ஆர். விச்வநாத ஐயர், எம்.ஏ., அவர்களுக்கும், இப்புத்கத்தை வெகு சீரிய முறையில் மிக விரைவில் அச்சிட்டுக் கொடுத்த சென்னை லிபர்ட்டி அச்சகத்தின் உரிமையாளர் ஸ்ரீ டி.ஆர்.ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களுக்கும், இதைவெளியிடும் பணியை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்று மக்களுக்குப் பேருபகாரம் செய்த சென்னைப் பிரசுரகர்த்தர்கள் B.G.பால் அண்டு கம்பெனியின் நிர்வாகி ஸ்ரீ K. நீலகண்ட ஐயர், B.A. அவர்களுக்கும் எனது நன்றி உரியதாகும்.  இதை ஸ்வாமிகளின் பொன்விழா நினைவு மலராக வெளியிட அனுமதித்த அவ்விழாக் கமிட்டியாருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலைத் தொகுக்கும் காலத்தில் அயர்வு, மறதி முதலியவற்றால் பல அரிய சம்பவங்களும், ஸ்ரீ மடத்தின் தொண்டில் ஈடுபட்ட பல அன்பர்களின் பெயர்கள் முதலியனவும் விடப்பட்டிருக்கக்கூடும்.  நூலில் சில பிழைகளும் புகுந்திருக்கக் காரணமுண்டு.  இவைபோன்ற எல்லாக் குறைகளையும் அன்பர் உலகம் க்ஷமிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

ஸு.ஸாம்பமூர்த்தி சாஸ்திரி
சென்னை
2 மார்ச்சு 1957.

--------------------------------------------------------

ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்

பக்கம் 1 மற்றும் 2 கிடைக்கப்பெறவில்லை.

பக்கம் 3...
இளமையும் கல்வியும்

...வாங்கி வைத்து விடவேண்டுமென்று எண்ணம் கொண்டார்.  1850-வது வருடத்தில், அப்போழுது இருந்த ஆசாரிய ஸ்வாமிகள் கும்பகோணத்திலிருந்து திருவையாற்றிற்கு ஒரு முறை ஸ்வாமி தரிசனத்திற்குச் சென்றார்கள்.  பிறகு, அவர்கள் பங்காருகாமாக்ஷி அம்னையும் தரிசிக்க விரும்பித் தஞ்சைக்கும் விஜயமானார்கள்.  தஞ்சையில் கடைசியாக அரசாண்ட சிவாஜி மகாராஜா அவர்கள் ஸ்வாமிகளைத் தமது அரண்மனைக்கு அழைத்து, அவர்களுக்குரிய மரியாதைகளை யெல்லாம் செய்து, அவர்களுக்குக் கனகாபிஷேகமும் செய்தார்.  தங்க நாணயங்களால் அபிஷேகம் செய்வதையே கனகாபிஷேகம் என்பர்.  அன்று மன்னர் செய்த கனகாஷேகத்தில் ஐயாயிரம் தங்க வராகன் நாணயங்கள் இருந்தன.  அந்த நாயணங்கள் யாவற்றையும் கணபதிசாஸ்திரிகள் மிகுந்த ஜாக்கிரதையுடன் சேகரித்துப் பத்திரப்படுத்தி வைத்தார்.  ஆனால், ஸ்வாமிகளோ மடத்தில் அதிகப் பொருளிருந்தால் அதைக் காப்பாற்றுவதில் மிகுந்த அக்கரை =கறை கொள்ளவேண்டி வருமென்றும், ஆத்ம விசாரத்திற்கு அது இடையூறாக இருக்குமென்றும், அதனால் அப்பொருள் முழுவதையும் வித்வான்களுக்கு அப்பொழுதே பகிர்ந்து கொடுத்து விடலாமென்றும் கருதினார்கள்.

ஆனால், கணபதி சாஸ்திரிகளின் உள்ளமோ அப்பணத்தைக் கொண்டு மடத்திற்கு நிலம் வாங்குவதில் ஈடுபட்டிருந்தது.  இவ்விஷயத்தில் சாஸ்திரிகள் ஸ்வாமிகளது அநுமதியை ஒருவாறு பெற்றுப் பிறர் அறியாதவாறு அப்பொற்காசுகளுடன் குதிரை மீது அமர்ந்து கபிஸ்தலம் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார்.  கபிஸ்தலத்தில் இருந்த மூப்பனார் என்னும் பெரிய பிரமுகர் இவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்து இவரது எண்ணத்தையும் கேட்றிந்தார்.  அக்காலத்தில் கும்பகோணத்துக்குக் கிழக்கே உள்ள அணக்குடி என்ற ஊரிலிருந்த அணக்குடிப்பிள்ளை என்ற மிராசுதார் தம் நிலங்கள் சிலவற்றை விற்க எண்ணம் கொடிருந்ததாக மூப்பனார் கேள்வியுற்றிருந்தார்.  அந்த மிராசுதாரை அணக்குடிப் பிள்ளை என்று மரியாதைப் பெயருடனேயே குறிப்பிடுவது வழக்கம்.  மூப்பனார் சாஸ்திரிகளுக்குத் தகுந்த பந்தோபஸ்துக்களைச் செய்து அளித்து, தமது காரியஸ்தர் ஒருவருடன் அவரை அணக்குடிக்கு அனுப்பிவைத்தார்.  சாஸ்திரிகள் அணக்குடிக்குச் சென்று பிள்ளை அவர்களிடம்....
-------------------------------------------------------------

பக்கம் 4....
தாம் கொண்டுவந்த நிதியைக் கொடுத்து, அதற்கு ஈடாக மடத்திற்கு எவ்வளவு நிலம் சாஸனம் செய்ய முடியுமோ அவ்வளவு நிலத்தைச் சாஸனம் செய்யும்படி கேட்டுக் கொண்டு, மேலும் அதிக நேரம் அங்கே தங்காமல் தஞ்சைக்குச் சென்றுவிட்டார்.  சாஸ்திரிகளது தூய எண்ணத்தையும், அவருக்கு மடத்திலிருந்த அபிமானத்தையும் கண்டு வியந்த பிள்ளை அவர்களும் சில மாதங்களில் கும்பகோணத்திற்கு இரண்டு மைல்கள் தூரத்திலுள்ள கருப்பூர் என்னும் கிராமத்தில் தமக்குச் சொந்தமாயிருந்த 40 வேலி பூமியை மடத்திற்குச் சாஸனம் செய்து கொடுத்தார்.  இன்று மடத்திற்குச் சொந்தமாயுள்ள கிராமங்களுள் அதிக வருமானம் தருவது இந்தக் கருப்பூர்க் கிராமமே ஆகும்.

கணபதி சாஸ்திரிகளுக்குக் குமாரர்கள் மூவர்.  அவர்களுள் மூத்தவரான சுப்பிரமணிய சாஸ்திரிகளே நம் ஸ்வாமிகளின் தந்தையாவார்.  சுப்பிரமணிய சாஸ்திரிகள் பிறந்த வருடம் 1855.  கணபதி சாஸ்திரிகள் தம் குமாரருக்கு உரிய காலத்தில் உபநயனம் செய்வித்து வேதப் பயிற்சியையும் அளித்தார்.  பின்னர் அவர், அவருக்கு ஆங்கிலக் கல்வியிலும் பயிற்சி செய்வித்தார்.  1872-ஆவது ஆண்டில் சுப்பிரமணிய சாஸ்திரிகள் கும்பகோணம் கவர்ன்மெண்டு கலாசாலையில் மெட்ரிகுலேஷன் பரீக்ஷையில் முதன்மையாகத் தேறினார்.  கலாசாலையில் அவருக்கு இணைபிரியா நண்பராக அப்பொழுது பழகிவந்தவர், பிற்காலத்தில் பிரபல இஞ்சினீயராக விளங்கிய திருவிசைநல்லூர் ஸ்ரீநீலகண்ட சாஸ்திரிகளாவார்.  இருவரும் பிராயம் முதிர்ந்து ஓய்வு பெற்ற பிறகும் பல முறை சந்தித்து வருவது வழக்கம்.

கலாசாலையை விட்ட பின்னர் சுப்பிரமணிய சாஸ்திரிகள் கும்பகோணத்தில் ராவ்பகதூர் எஸ்.அப்பு சாஸ்திரிகள், சுவாமி நாத ஐயர் முதலான பிரமுகர்கள் கும்பேச்வர ஸ்வாமி தெற்கு வீதியில் ஆரம்பித்திருந்த பள்ளியில் ஓர் உபாத்தியாயராக அமர்ந்தார்.  அக்காலத்தில் கும்பகோணம் கவர்ன்மெண்டு கலாசாலையின் தலைவராக இருந்த ஸ்ரீ கோபால ராவின் சிபார்சினால் இந்த உத்தியோகம் இவருக்குக் கிடைத்தது.  அந்தப் பள்ளியே இன்று....
-----------------------------------------------------
பக்கம் 5....தொடரும்....

Geetha Sambasivam

unread,
Jan 9, 2013, 6:08:30 AM1/9/13
to mint...@googlegroups.com

2013/1/7 கி.காளைராசன் <kalair...@gmail.com>

பக்கம் 7....
...முறை கணபதி சாஸ்திரிகளின் வீட்டில் நடைபெற்ற ஒரு விசேஷத்திற்குக் கும்பகோணம் வந்தபொழுது, அவர் தம் குமாரி மகாலக்ஷ்மியைக் கணபதி சாஸ்திரிகளின் புதல்வரான சுப்ரமணியத்திற்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கத் தாம் விரும்புவதாகவும், அந்தத் தானத்தைக் கணபதி சாஸ்திரிகள் ஏற்றுக் கொண்டு தம்மைப் பெருமைப்படுத்த வேண்டு மென்றும் விண்ணப்பித்துக் கொண்டார்.  அச் சொற்களைக் கேட்ட கணபதி சாஸ்திரிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.  தானாக வந்த மகாலக்ஷ்மியைத் தள்ளுவாரும் உண்டோ? மேலும், ஆசாரிய ஸ்தானத்திலுள்ள பெரியார் தம் குமாரியைத் தம் புதல்வனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுப்பதாகத் தாமே கூறியதில் அவர் மிகப் பெருமை கொண்டார்.  பிள்ளைகளுக்குத் தகுந்த பெண்களைத் தேடி யாசிக்கும் காலமாக அக்காலம் அமைந்திருந்தது.  மாக=மஹாலக்ஷ்மி அம்மையாரது ஏழாவது பிராயத்திலும், சுப்ரமணிய சாஸ்திரிகளது பதினெட்டாவது வயஸிலும் அவ்விருவருக்கும் வேதோக்தமாக ஈச்சங்குடியில் விவாகம் நடந்தேறியது.

தம் கணவருடன் இல்லறத்தைச் செவ்வையாய் நடத்தி வந்த மகாலக்ஷ்மி அம்மையார் அடக்கமே உருவானவர்.  அவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் முதலான பாஷைகளில் தோத்திரப் பாடல்களைப் பாடி மகிழ்வதிலும், கணவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதிலும், குழந்தைகளை நல்லவழியில் பராமரித்து வருவதிலும் தம் காலத்தைச் செலவிட்டு வந்தார்.  மேலும் பெண்களுக்குரிய விருரதங்கள் யாவற்றையும் ஒன்று விடாது, அவ்வக் காலங்களில், அந்த அம்மையார் அனுஷ்டித்து வந்தார்.  சுகங்கள் வரும் காலத்தில் அதிகச் சந்தோஷத்தையும், துக்கம் ஏற்படும் பொழுது அதிகக் கவலையையும் அடையாமல், எல்லாம் கடவுள் செயல் என்ற நம்பிக்கையுடன் நல்ல விவேகியாக அந்த அம்மையார் வாழ்ந்து வந்தார்.  அவருடன் பிறந்தவர்கள் ஐவர். அவர்களில் இருவர் பெண்கள், மூவர் ஆண்கள்.  அம்மையரின் கடைசிச் சகோதரர் சுப்ரமண்ய சாஸ்திரிகள் ரிக் வேதம் நன்கு பயின்று, சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் முதலான பாஷைகளையும் கற்று, அறுபது வருடங்களுக்கு மேலாக மடத்தின் ஆஸ்தான வித்வத் சபையில் இருந்து கொண்டு இன்றும் பணியாற்றிவருகிறார்.

பக்கம் 8 ..... தொடரும்...

--

Geetha Sambasivam

unread,
Jan 9, 2013, 6:11:44 AM1/9/13
to mint...@googlegroups.com

2013/1/9 கி.காளைராசன் <kalair...@gmail.com>

பக்கம் 9 .... 
...நடத்தி வைத்தார்.  உபநயன காலத்தில் பீடத்தின் 66-வது ஆசாரிய ஸ்வாமிகள் சுவாமிநாதரை ஆசீர்வதித்துப் பிரஸாதம் அனுப்பி யிருந்தார்கள்.  சாஸ்திரிகளின் நண்பரான சூணாம்பட்டு ஜமீன்தார் திவான்பகதூர் அருணாசல முதலியாரும், பாலகருக்குகந்ததோர் பரிசை அளித்தார்.  சுவாமிநாதரின் மேதா விலாஸத்தை இளமைப் பருவத்திலேயே கண்ட சாஸ்திரிகள், பாலகரின் எட்டாவது பிராயம் வரை அவரைப் பள்ளிக்கு அனுப்பாமல், தாமாகவே அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து வந்தார்.  மேலும் தம் மைந்தருக்கு வெகு இளை=ளமைப் பருவத்திலேயே சங்கீதத்தில் பயிற்சியும் அளித்து வந்தார்.  விளையும் பயிர் முளையிலேயே என்னும் முதுமொழிப்படி ஒரு முறை கண்டதையும், ஒரு முறை கேட்டதையும் சிறிதும் மறவாத நுண்ணறிவு படைத்த தன்மையுடன் சுவாமிநாதர் விளங்கினார்.  மகாலக்ஷ்மி அம்மாள் தம் குழந்தைகளுக்குத் தாம் அறிந்த ஸ்தோத்திரச் செய்யுட்களை யெல்லாம் சொல்லிவைப்பார்.  இளஞ் சுவாமிநாருக்கு அவற்றை மனப்பாடம் செய்வதில் விருப்பம் அதிகம்.  சம்ஸ்கிருதம் கற்க அப்பொழுது சுவாமிநாதருக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.  தந்தையார் திண்டிவனத்தில் இருந்தபொழுது, அவர் அவ்வூர் ஆர்க்=ற்காடு அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் இரண்டாவது பாரத்தில் தம் மைந்தரை முதன் முதலாகப் பள்ளிப் படிப்புக்குச் சேர்த்தார்.  சுவாமிநாதர் தம் இளைமைப் பருவத்திலேயே மிகுந்த ஹாஸ்யச் சுவையுடன் பேசிவருவது வழக்கம்.  ஒரே மொழியில் பல பொருள்களையும் அடக்கியும் பேசுவார்கள்.  தந்தையார் தமது தனயர்களுள் அவரை மிகுந்த பிரேமையுடன் வளர்த்து, ஓர் கிளியின் பெயரை அவருக்குச் செல்வப் பெயராக இட்டிருந்தார்.

பள்ளிப் படிப்பும், பரிசுக் குவியல்களும்
சுவாமிநாதர் ஒவ்வொரு வகுப்பிலும் முதன்மையாக விளங்கி, முதன்மையாகவே தேறி, வருட இறுதிப் பரிசளிப்பு விழாக்களில் எல்லாம் முதல் பரிசுகளையும் தாமே பெற்று வந்ததார்.  பைபிள் என்னும் கிறிஸ்தவ மதநூலில் தேர்ச்சி பெற்றதற்கு முதல் பரிசும் அவருக்கே கிடைத்து வந்தது.  பரிசு பெற்ற புத்தகங்கள் பல வீட்டில் குவிந்து விடும்.

அக்காலத்தில் அப்பள்ளியில் இருந்த கிறிஸ்துவ ஆசிரியர்களெல்லாரும் சுவாமிநாதரிடம் மிகுந்த அன்பு காட்டி வந்தனர்.

பக்கம் 10 .... தொடரும்.

கி.காளைராசன்

unread,
Jan 9, 2013, 6:17:04 AM1/9/13
to mint...@googlegroups.com
மிக மிக நன்றிGeetha Sambasivam's profile photo

35B.gif

தேமொழி

unread,
Jan 9, 2013, 1:49:57 PM1/9/13
to mint...@googlegroups.com
துரைக்கு போட்டியாக இவ்வாறு படம் போடவும் ஒருவர் இருக்கிறாரா???!!!

..... தேமொழி

Geetha Sambasivam

unread,
Jan 10, 2013, 2:01:15 AM1/10/13
to mint...@googlegroups.com
ஹாஹா, அது என் ப்ரொஃபைல் படம்.

360.gif

கி.காளைராசன்

unread,
Jan 10, 2013, 3:30:43 AM1/10/13
to mint...@googlegroups.com, thiruppuvanam, naga rethinam
அவர்கள் தங்களை அறியாமலே, பிற்காலத்தில் பெரியதோர் மேதாவியாக வரக்கூடிய மாணவர்  ஒருவரைத் தம் பள்ளி பெற்றிருந்ததை உணராமல் உணர்ந்து பெருமை கொண்டார்கள் போலும்.  சுவாமிநாதர் மூன்றாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது, அக்காலத்தில் பள்ளிக்கூட உதவி இன்ஸ்பெக்டராக இருந்த மஞ்சகுப்பம் சிங்காரவேலு முதலியார் என்றவர் பள்ளியின் மேற்பார்வையின் பொருட்டு ஒரு முறை அங்கே வந்திருந்தார்.  முதலியார் சுவாமிநாதரது முகத்தோற்ற ஒளியில் ஈடுபட்டு, அவரைச் சில கேள்விகள் கேட்க, அவைகளுக்கெல்லாம் தங்கு தடையின்றிச் சுவாமிநாதர் பதிலளித்ததைக் கண்டு வியப்படைந்தார்.  சுவாமிநாதரை அவர் பிற மேல் வகுப்புகளுக்கும் அழைத்துச் சென்று, அங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அச்சிறுவரை அறிமுகப்படுத்தி, அவர்களின் வகுப்புக்களுக்குரிய பாடங்களிலிருந்தும் கேள்விகளை அம்மாணவரிடம் கேட்கச் சொல்ல, சிறுவர் சுவாமிநாதர் தயங்காமல் அவைகளுக்கும் விடையளித்தார்.  அப்பொழுது அந்த மேலதிகாரி தமக்குக் கீழ் உத்தியோகம் வகித்து வந்த சுப்ரமணிய சாஸ்திரிகளின் புதல்வரே அச் சிறுவர் என்பதை ஆசிரியர்கள் மூலமாக அறிந்து, சாஸ்திரிகளை அழைத்து, ‘உமது புதல்வன் பெரிய மேதாவியாக விளங்கப் போகிறான்‘ எனக் கூறினார்.  அந்த மொழிகளைக் கேட்ட சாஸ்திரிகள் மனம் மகிழ்ந்து, தம் முகக் குறிப்பினால் தம் நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொண்டார்.  தம் புதல்வர் உலக ஞான குருவாகப் பின்னர் விளங்கப் போகிறார் என்ற எண்ணம் சாஸ்திரிகளது உள்ளத்தில் அப்பொழுது தோன்றவில்லை.  அரசாங்கத்தில் பெரியதொரு உத்தியோத்தை வகித்துச் சீரும், சிறப்பும் பெற்றுத் தம் தனயர் விளங்குவார் என்ற எண்ணம் மட்டிலும் அப்பொழுது சாஸ்திரிகளுக்கு உதித்தது.  அரசாங்க உத்தியோகத்தையே வாழ்க்கையின் லக்ஷ்யமாகப் பெரும்பாலோரும் எண்ணியிருந்த காலம் அது.

ஷேக்ஸ்பியர் நாடகம் நடித்தது
சுவாமிநாதர் பள்ளியில் 1906-வது ஆண்டில் நான்காவது பாரத்தில் பயின்று வந்தபொழுது, மாணவர்கள் பள்ளியின் வருடாந்தக கொண்டாட்டத்திற்கென ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில மகா கவி எழுதிய, “ஜான் மன்னர்“ என்னும் நாடகத்தை நடிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.  அந்த நாடகத்தில் ஆர்தர் இள...

பக்கம் 11... தொடரும்....

Geetha Sambasivam

unread,
Jan 10, 2013, 3:41:11 AM1/10/13
to mint...@googlegroups.com
படித்து ரசித்தேன்.

2013/1/10 கி.காளைராசன் <kalair...@gmail.com>

பக்கம் 8..
ஸ்வாமிகளின் தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் விழுப்புரத்தில் சாலைகளின் மேற் பார்வையாளராக உத்தியோகம் வகித்து வந்த சமயம் அவருக்கு இரண்டாவது புதல்வராக, சாலியவாகன சகாப்தம் 1817-ஜய வருடம் வைகாசி மாதம் 8-ஆம் தேதி (1894-மே-மாதம் 20-ஆம் தேதி) விழுப்புரம் என்னும் நகரில் நம் ஸ்வாமிகள் அவதரித்தார். அவர்களின் ஜாதக நகலைப் பிற்சேர்ப்பில் காண்க.   முதல் குமாரருக்குக் கணபதி எனப் பெயரிட்டிருந்தமையை ஒட்டித் தந்தையார் தம் இரண்டாவது குமாரருக்கு முருகப் பெருமான் திருநாமமான சுவாமிநாதன் என்று பெயரிட்டார்.  சுப்ரமண்ய சாஸ்திரிகளின் குல தெய்வமும் சுவாமி மலையில் எழுந்தருளி இருப்பவருமான ஸ்ரீ சுவாமிநாத சுவாமியே, ஆகையால், குலதெய்வத்தின் பெயரையே சாஸ்திரியார் தம் மகவுக்கிட்டு மகிழ்ந்தாரெனவும் கூறலாம்(•1).

சாஸ்திரிகளுக்கு நம் ஸ்வாமிகளைத் தவிர நான்கு புதல்வர்களும், ஒரு பெண்ணும் உண்டு. அவர்கள் முறையே ஸ்வாமிகளுக்கு மூத்தவரான கணபதி சாஸ்திரி, இளையவர்களான, லலிதாம்பாள் அம்மையார், சாம்பமூர்த்தி சாஸ்திரி, சிவம் என்றழைக்கப்படும் சதாசிவ சாஸ்திரி, குஞ்சு சாஸ்திரி என அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி என்பவர்களாவர்.  கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள் மடத்தின் பரம்பரைப் புரோகிதராக இருந்த மாயவரம் பிரம்மஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளிடம் ரிக் வேதம் கற்று, நம் ஸ்வாமிகளின் பிரதான சிஷ்யராக இப்பொழுது விளங்கும் ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கும், அவர்களது இளமைப் பருவத்தில் வேதம் கற்பித்த பாக்கியத்தைப் பெற்றார்கள்.  சுப்பிரமண்ய சாஸ்திரிகள் 1329-வது வருடம்ஜூலை மாதம் தமது 74-வது வயதில் இம்மண்ணுலகை நீத்தார்.

தந்தையார் தம் குலத்திற்குரிய சம்ஸ்காரங்களையெல்லாம் அவ்வக்காலங்களில் சுவாமிநாதருக்குச் செய்வித்து, உரிய காலத்தில் (1905-வது வருடம், திண்டிவனத்தில்) உபநயனத்தையும்.....
--------------------
(•1) விழுப்புரத்தில் ஸ்வாமிகள் ஜனித்த வீட்டை விலைக்கு வாங்கி அதை ஓர் சங்கராலயமாக அமைக்க வேண்டுமென ஆவ்வூர் பிரமுகர் வக்கீல் சிதம்பர ஐயரும், மற்ற சீடர்களும் முயற்சித்து வருகிறார்கள்.)

பக்கம் 9 .... 
...நடத்தி வைத்தார்.  உபநயன காலத்தில் பீடத்தின் 66-வது ஆசாரிய ஸ்வாமிகள் சுவாமிநாதரை ஆசீர்வதித்துப் பிரஸாதம் அனுப்பி யிருந்தார்கள்.  சாஸ்திரிகளின் நண்பரான சூணாம்பட்டு ஜமீன்தார் திவான்பகதூர் அருணாசல முதலியாரும், பாலகருக்குகந்ததோர் பரிசை அளித்தார்.  சுவாமிநாதரின் மேதா விலாஸத்தை இளமைப் பருவத்திலேயே கண்ட சாஸ்திரிகள், பாலகரின் எட்டாவது பிராயம் வரை அவரைப் பள்ளிக்கு அனுப்பாமல், தாமாகவே அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து வந்தார்.  மேலும் தம் மைந்தருக்கு வெகு இளை=ளமைப் பருவத்திலேயே சங்கீதத்தில் பயிற்சியும் அளித்து வந்தார்.  விளையும் பயிர் முளையிலேயே என்னும் முதுமொழிப்படி ஒரு முறை கண்டதையும், ஒரு முறை கேட்டதையும் சிறிதும் மறவாத நுண்ணறிவு படைத்த தன்மையுடன் சுவாமிநாதர் விளங்கினார்.  மகாலக்ஷ்மி அம்மாள் தம் குழந்தைகளுக்குத் தாம் அறிந்த ஸ்தோத்திரச் செய்யுட்களை யெல்லாம் சொல்லிவைப்பார்.  இளஞ் சுவாமிநாருக்கு அவற்றை மனப்பாடம் செய்வதில் விருப்பம் அதிகம்.  சம்ஸ்கிருதம் கற்க அப்பொழுது சுவாமிநாதருக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.  தந்தையார் திண்டிவனத்தில் இருந்தபொழுது, அவர் அவ்வூர் ஆர்க்=ற்காடு அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் இரண்டாவது பாரத்தில் தம் மைந்தரை முதன் முதலாகப் பள்ளிப் படிப்புக்குச் சேர்த்தார்.  சுவாமிநாதர் தம் இளைமைப் பருவத்திலேயே மிகுந்த ஹாஸ்யச் சுவையுடன் பேசிவருவது வழக்கம்.  ஒரே மொழியில் பல பொருள்களையும் அடக்கியும் பேசுவார்கள்.  தந்தையார் தமது தனயர்களுள் அவரை மிகுந்த பிரேமையுடன் வளர்த்து, ஓர் கிளியின் பெயரை அவருக்குச் செல்வப் பெயராக இட்டிருந்தார்.

பள்ளிப் படிப்பும், பரிசுக் குவியல்களும்
சுவாமிநாதர் ஒவ்வொரு வகுப்பிலும் முதன்மையாக விளங்கி, முதன்மையாகவே தேறி, வருட இறுதிப் பரிசளிப்பு விழாக்களில் எல்லாம் முதல் பரிசுகளையும் தாமே பெற்று வந்ததார்.  பைபிள் என்னும் கிறிஸ்தவ மதநூலில் தேர்ச்சி பெற்றதற்கு முதல் பரிசும் அவருக்கே கிடைத்து வந்தது.  பரிசு பெற்ற புத்தகங்கள் பல வீட்டில் குவிந்து விடும்.

அக்காலத்தில் அப்பள்ளியில் இருந்த கிறிஸ்துவ ஆசிரியர்களெல்லாரும் சுவாமிநாதரிடம் மிகுந்த அன்பு காட்டி வந்தனர்.

பக்கம் 10...
அவர்கள் தங்களை அறியாமலே, பிற்காலத்தில் பெரியதோர் மேதாவியாக வரக்கூடிய மாணவர்  ஒருவரைத் தம் பள்ளி பெற்றிருந்ததை உணராமல் உணர்ந்து பெருமை கொண்டார்கள் போலும்.  சுவாமிநாதர் மூன்றாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது, அக்காலத்தில் பள்ளிக்கூட உதவி இன்ஸ்பெக்டராக இருந்த மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் என்றவர் பள்ளியின் மேற்பார்வையின் பொருட்டு ஒரு முறை அங்கே வந்திருந்தார்.  முதலியார் சுவாமிநாதரது முகத்தோற்ற ஒளியில் ஈடுபட்டு, அவரைச் சில கேள்விகள் கேட்க, அவைகளுக்கெல்லாம் தங்கு தடையின்றிச் சுவாமிநாதர் பதிலளித்ததைக் கண்டு வியப்படைந்தார்.  சுவாமிநாதரை அவர் பிற மேல் வகுப்புகளுக்கும் அழைத்துச் சென்று, அங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அச்சிறுவரை அறிமுகப்படுத்தி, அவர்களின் வகுப்புக்களுக்குரிய பாடங்களிலிருந்தும் கேள்விகளை அம்மாணவரிடம் கேட்கச் சொல்ல, சிறுவர் சுவாமிநாதர் தயங்காமல் அவைகளுக்கும் விடையளித்தார்.  அப்பொழுது அந்த மேலதிகாரி தமக்குக் கீழ் உத்தியோகம் வகித்து வந்த சுப்ரமணிய சாஸ்திரிகளின் புதல்வரே அச் சிறுவர் என்பதை ஆசிரியர்கள் மூலமாக அறிந்து, சாஸ்திரிகளை அழைத்து, ‘உமது புதல்வன் பெரிய மேதாவியாக விளங்கப் போகிறான்‘ எனக் கூறினார்.  அந்த மொழிகளைக் கேட்ட சாஸ்திரிகள் மனம் மகிழ்ந்து, தம் முகக் குறிப்பினால் தம் நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொண்டார்.  தம் புதல்வர் உலக ஞான குருவாகப் பின்னர் விளங்கப் போகிறார் என்ற எண்ணம் சாஸ்திரிகளது உள்ளத்தில் அப்பொழுது தோன்றவில்லை.  அரசாங்கத்தில் பெரியதொரு உத்தியோத்தை வகித்துச் சீரும், சிறப்பும் பெற்றுத் தம் தனயர் விளங்குவார் என்ற எண்ணம் மட்டிலும் அப்பொழுது சாஸ்திரிகளுக்கு உதித்தது.  அரசாங்க உத்தியோகத்தையே வாழ்க்கையின் லக்ஷ்யமாகப் பெரும்பாலோரும் எண்ணியிருந்த காலம் அது.

ஷேக்ஸ்பியர் நாடகம் நடித்தது
சுவாமிநாதர் பள்ளியில் 1906-வது ஆண்டில் நான்காவது பாரத்தில் பயின்று வந்தபொழுது, மாணவர்கள் பள்ளியின் வருடாந்தக=ரக்  கொண்டாட்டத்திற்கென ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில மகா கவி எழுதிய, “ஜான் மன்னர்“ என்னும் நாடகத்தை நடிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.  அந்த நாடகத்தில் ஆர்தர் இள...

பக்கம் 11... தொடரும்....

கி.காளைராசன்

unread,
Jan 11, 2013, 5:13:20 AM1/11/13
to mint...@googlegroups.com, thiruppuvanam, naga rethinam
பக்கம் 8..
வரசன் என்னும் முக்கிய பாத்திரத்தைத் தாங்கி நடிக்கத் தகுதியான மாணவன் கிடைக்கவில்லை.  அப்பொழுது பன்னிரண்டு பிராயமே நிரம்பிய சுவாமிநாதரின் நினைவு தலைமை ஆசிரியருக்கு வந்தது.  அந்த ஆசிரியர் அச் சிறுவரை அழைத்து, அந்தக் கதாபாத்திரத்தை அவரே தாங்கி நடிக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.  சுவாமிநாதருக்குத் தலைமை ஆசிரியர் இவ்விதம் கூறியதில் மிகுந்த பெருமை ஏற்பட்டது.  அந்த நாடகத்தில் தாமும் நடிக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு முன்பே இருந்தது.  ஆனால் பிராயத்தின் காரணமாக வகுப்பாசிரியர் அவரைப் புறக்கணித்திருந்தார்.  தலைமை ஆசிரியர் அளித்த இந்தச் சந்தோஷச் செய்தியை சுவாமிநாதர் தம் தாய் தந்தையரிடம் தெரிவித்து, நாடகத்தில் நடிக்கத் தகுதியான உடைகளைத் தைத்துத் தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.  பழமையில் ஊறிய அந்தப் பெற்றோர்கள் தங்கள் புதல்வன் நாடகத்தில் நடிப்பதை விரும்பவில்லை.  ஆனால் அருமைப் புதல்வரின் ஆசையைப் புறக்கணிக்கவும் அவர்கள் மனம் கொள்ளவில்லை.  இந்த நிலையில் அவர்கள் சுவாமிநாதருக்குத் தேவையான உடைகளைத் தைத்துக் கொடுத்து, நாடகத்தில் நடிப்பதற்கும் ஒருவாறு அனுமதியளித்தார்கள்.  இரண்டே நாட்களில் சுவாமிநாதர் அந்த நாடகத்தில் வரும் சம்பாஷணைகளையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டார்.  சொல் வன்மை படைத்த அச்சிறுவர், யாவரும் வியக்கும் வண்ணம் மிகத் திறமையுடன் அந்த நாடகத்தில் நடித்து எல்லோரின் நன் மதிப்பையும் பெற்றார்.  அவரது ஒவ்வொரு பேச்சிற்கும், ஒவ்வொரு நடிப்பிற்கும் எல்லோரும் கைகளைத் தட்டி, அவரை மேன்மேலும் உற்சாகப் படுத்தினார்கள்.  பின்னர் கேட்கவும் வேண்டுமா?  அவ்விளைஞர் தம் திறன் முழுவதையும் அன்று காட்டி யாவரையும் திகைக்க வைத்து விட்டார்.  அந்த நாடகத்தில் சுவாமிநாதருக்கே முதல் பரிசு கிடைத்து.  ஆசிரியர்களெல்லோரும் மறுநாள் சாஸ்திரிகளது இல்லத்திற்கு வந்து சுவாமிநாதரது திறனைப் பற்றி அவரிடம் கூறித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.  சுவாமிநாதரின் தாயோ தம் அருமைக் குழந்தைக்கு எவரது திருஷ்டியாவது பட்டுவிடுமோ எனப் பயந்து மிகுந்த கவலைகொண்டார்.  அதற்கென அக் குழந்தைக்கு அன்று திருஷ்டியும் கழித்தார்.
---------------
பக்கம் 12...

2. குருநாதரின் சந்திப்பும், துறவும், பீடாதிபத்தியமும் 
காமகோடி பீடித்தின் 66-ஆவது பீடாதிபதிகளும், ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்ற பெயரையே தாங்கியவர்களுமான பரமகுரு ஸ்வாமிகள் தென்னார்க்காடு ஜில்லா, திண்டிவனம் தாலூக்கா, பெருமுக்கல் என்னும் சிற்றூரில் விசுவாவசு வருடம் (1906) சாதுர்மாஸ சங்கல்பத்தை நடத்தி வருங்கால், சிறுவர் ஸ்வாமிநாதரது தந்தையார் குடும்பத்துடன் ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தார்கள்.  அப்பொழுது நித்திய பூஜையில் வீற்றிருந்த ஸ்வாமிகளின் கருணாகடாக்ஷம் பாலகர் சுவாமிநாதர் மீது விழுந்தது.  பூஜை முடிந்ததும் ஸ்வாமிகள் சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் அவரது குடும்ப நலனைப்பற்றிப் பரிவுடன் விசாரித்தார்கள்.  தமக்குப் பின்னர் காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகும் ஒரு மகா புருஷனை இந்தப் பாலகர் உருவத்தில் அவர்கள் கண்டார்கள் போலும்.  தம் உள்ளத்தில் அவ்விதத் தீர்மனத்தையே அவர்கள் அப்பொழுதே செய்து கொண்டார்களோ என்றும் பின் நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.  சாஸ்திரிகளின் குடும்பம் ஸ்வாமிகளின் தரிசனத்துக்கென இரண்டு நாட்கள் பெருமுக்கலில் தங்கியிருந்தது.  அப்பொழுது ஸ்வாமிகள் இளைஞர் சுவாமிநாதரை அடிக்கடிச் சந்தித்துப் பல கேள்விகளை யெல்லாம் கேட்டு, அதிசயிக்கத் தக்க அப்பாலகரது மறுமொழிகளாலும், அவரது வசீகர முகத் தோற்றத்தினாலும, மேதையினாலும் மகிழ்ச்சிபெற்று, ‘இவன் ஒரு மகாபுருஷனாக விளங்கப் போகிறான்‘ என்று அங்குக் கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்கள்.  இம்மொழிகளைக் கேட்ட தந்தையாரின் மகிழ்ச்சிக்கு அளவே யில்லை.  ஆனால் 13 வயதுள்ள தம் புதல்வர் துறவு பூண்டு தம்மையும், தம் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து விடுவாரென அவர் அப்பொழுது சிறிதும் எண்ணவில்லை.  சாஸ்திரிகள் ஸ்வாமிகளிடம் விடை பெற்றுக் கொண்டு தாம் அப்பொழுது உத்தியோகம் பார்த்து வந்த திண்டிவனத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.  ஆயினும் ஸ்வாமிகள் சுவாமிநாதரை அடிக்கடி மடத்தின் முகாமிற்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டு வந்தார்கள்.  அவ்விதமே சாஸ்திரிகளும் பின் பல முறை தம் குமாரரை ஸ்வாமிகளிடம் ....

Inline image 1

பக்கம் 13.... தொடரும்....

12 படம்.jpg

செல்வன்

unread,
Jan 11, 2013, 9:40:31 PM1/11/13
to mint...@googlegroups.com
தொடர்ந்து படித்து வருகிறேன் காளைராசன் ஐயா. தொடருங்கள்

--
செல்வன்

கி.காளைராசன்

unread,
Jan 12, 2013, 1:54:26 AM1/12/13
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

On Sat, Jan 12, 2013 at 8:10 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:
தொடர்ந்து படித்து வருகிறேன் காளைராசன் ஐயா. தொடருங்கள்

சும்மா....தொடர்ந்து படித்து வரக்கூடாது.
ஏதாவது பிழைத்திருத்தம் இருந்தால் சொல்ல வேண்டும்.

அன்பன்
360.gif

Geetha Sambasivam

unread,
Jan 12, 2013, 4:15:20 AM1/12/13
to mint...@googlegroups.com
பிழைகள் குறைந்துள்ளன.  பிழைகள் உள்ள இடத்தில் கொஞ்சம் bold எழுத்தில் காட்டியுள்ளேன்.

2. குருநாதரின் சந்திப்பும், துறவும், பீடாதிபத்தியமும் 
காமகோடி பீடி=டத்தின் 66-ஆவது பீடாதிபதிகளும், ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்ற பெயரையே தாங்கியவர்களுமான பரமகுரு ஸ்வாமிகள் தென்னார்க்=ற்காடு ஜில்லா, திண்டிவனம் தாலூ=லுகா, பெருமுக்கல் என்னும் சிற்றூரில் விசுவாவசு வருடம் (1906) சாதுர்மாஸ சங்கல்பத்தை நடத்தி . வருங்கால், சிறுவர் ஸ்வாமிநாதரது தந்தையார் குடும்பத்துடன் ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தார்கள்.  அப்பொழுது நித்திய பூஜையில் வீற்றிருந்த ஸ்வாமிகளின் கருணாகடாக்ஷம் பாலகர் சுவாமிநாதர் மீது விழுந்தது.  பூஜை முடிந்ததும் ஸ்வாமிகள் சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் அவரது குடும்ப நலனைப்பற்றிப் பரிவுடன் விசாரித்தார்கள்.  தமக்குப் பின்னர் காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகும் ஒரு மகா புருஷனை இந்தப் பாலகர் உருவத்தில் அவர்கள் கண்டார்கள் போலும்.  தம் உள்ளத்தில் அவ்விதத் தீர்மனத்தையே அவர்கள் அப்பொழுதே செய்து கொண்டார்களோ என்றும் பின் நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.  சாஸ்திரிகளின் குடும்பம் ஸ்வாமிகளின் தரிசனத்துக்கென இரண்டு நாட்கள் பெருமுக்கலில் தங்கியிருந்தது.  அப்பொழுது ஸ்வாமிகள் இளைஞர் சுவாமிநாதரை அடிக்கடிச் சந்தித்துப் பல கேள்விகளை யெல்லாம் கேட்டு, அதிசயிக்கத் தக்க அப்பாலகரது மறுமொழிகளாலும், அவரது வசீகர முகத் தோற்றத்தினாலும, மேதையினாலும் மகிழ்ச்சிபெற்று, ‘இவன் ஒரு மகாபுருஷனாக விளங்கப் போகிறான்‘ என்று அங்குக் கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்கள்.  இம்மொழிகளைக் கேட்ட தந்தையாரின் மகிழ்ச்சிக்கு அளவே யில்லை.  ஆனால் 13 வயதுள்ள தம் புதல்வர் துறவு பூண்டு தம்மையும், தம் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து விடுவாரென அவர் அப்பொழுது சிறிதும் எண்ணவில்லை.  சாஸ்திரிகள் ஸ்வாமிகளிடம் விடை பெற்றுக் கொண்டு தாம் அப்பொழுது உத்தியோகம் பார்த்து வந்த திண்டிவனத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.  ஆயினும் ஸ்வாமிகள் சுவாமிநாதரை அடிக்கடி மடத்தின் முகாமிற்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டு வந்தார்கள்.  அவ்விதமே சாஸ்திரிகளும் பின் பல முறை தம் குமாரரை ஸ்வாமிகளிடம் ....

Inline image 1

பக்கம் 13.... தொடரும்....

12 படம்.jpg

கி.காளைராசன்

unread,
Jan 12, 2013, 10:05:58 AM1/12/13
to mint...@googlegroups.com
வணக்கம் 

2013/1/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>

பிழைகள் குறைந்துள்ளன.  பிழைகள் உள்ள இடத்தில் கொஞ்சம் bold எழுத்தில் காட்டியுள்ளேன்.

மிக்க நன்றி,

அன்பன்
35B.gif

கி.காளைராசன்

unread,
Jan 12, 2013, 10:11:17 AM1/12/13
to mint...@googlegroups.com
2. குருநாதரின் சந்திப்பும், துறவும், பீடாதிபத்தியமும் 
காமகோடி பீடி=டத்தின் 66-ஆவது பீடாதிபதிகளும், ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்ற பெயரையே தாங்கியவர்களுமான பரமகுரு ஸ்வாமிகள் தென்னார்க்=ற்காடு ஜில்லா, திண்டிவனம் தாலூ=லுகா, பெருமுக்கல் என்னும் சிற்றூரில் விசுவாவசு வருடம் (1906) சாதுர்மாஸ சங்கல்பத்தை நடத்தி . வருங்கால், சிறுவர் ஸ்வாமிநாதரது தந்தையார் குடும்பத்துடன் ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தார்கள்.  அப்பொழுது நித்திய பூஜையில் வீற்றிருந்த ஸ்வாமிகளின் கருணாகடாக்ஷம் பாலகர் சுவாமிநாதர் மீது விழுந்தது.  பூஜை முடிந்ததும் ஸ்வாமிகள் சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் அவரது குடும்ப நலனைப்பற்றிப் பரிவுடன் விசாரித்தார்கள்.  தமக்குப் பின்னர் காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகும் ஒரு மகா புருஷனை இந்தப் பாலகர் உருவத்தில் அவர்கள் கண்டார்கள் போலும்.  தம் உள்ளத்தில் அவ்விதத் தீர்மனத்தையே அவர்கள் அப்பொழுதே செய்து கொண்டார்களோ என்றும் பின் நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.  சாஸ்திரிகளின் குடும்பம் ஸ்வாமிகளின் தரிசனத்துக்கென இரண்டு நாட்கள் பெருமுக்கலில் தங்கியிருந்தது.  அப்பொழுது ஸ்வாமிகள் இளைஞர் சுவாமிநாதரை அடிக்கடிச் சந்தித்துப் பல கேள்விகளை யெல்லாம் கேட்டு, அதிசயிக்கத் தக்க அப்பாலகரது மறுமொழிகளாலும், அவரது வசீகர முகத் தோற்றத்தினாலும, மேதையினாலும் மகிழ்ச்சிபெற்று, ‘இவன் ஒரு மகாபுருஷனாக விளங்கப் போகிறான்‘ என்று அங்குக் கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்கள்.  இம்மொழிகளைக் கேட்ட தந்தையாரின் மகிழ்ச்சிக்கு அளவே யில்லை.  ஆனால் 13 வயதுள்ள தம் புதல்வர் துறவு பூண்டு தம்மையும், தம் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து விடுவாரென அவர் அப்பொழுது சிறிதும் எண்ணவில்லை.  சாஸ்திரிகள் ஸ்வாமிகளிடம் விடை பெற்றுக் கொண்டு தாம் அப்பொழுது உத்தியோகம் பார்த்து வந்த திண்டிவனத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.  ஆயினும் ஸ்வாமிகள் சுவாமிநாதரை அடிக்கடி மடத்தின் முகாமிற்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டு வந்தார்கள்.  அவ்விதமே சாஸ்திரிகளும் பின் பல முறை தம் குமாரரை ஸ்வாமிகளிடம் ....

பக்கம் 13...
அழைத்துச் சென்றார்.  குருநாதரின் அருளும் சிறுவருக்குப் பெருகத் தொடங்கிற்று.

இவ்வாறு நிகழ்ந்து வந்த காலத்தில் ஒரு நாள், திண்டிவனத்தில் சுவாமிநாதரை வீட்டில் காணவில்லை. பெற்றோர்கள் தவித்தார்கள்.  ஊரிலுள்ள குளம், கிணறுகள் எல்லாம் துருவிப் பார்த்தாகிவிட்டன.  அருமைப் புதல்வரும் அகப்படவில்லை.  இவ்வாறு இரண்டு நாட்கள் உணவு உறக்கமின்றிப் பெற்றோர்கள் தவித்தனர்.  மறுநாள் 5-மைல் தூரத்திலுள்ள ஸ்வாமிகளின் முகாமிலிருந்து ஒருவர் திண்டிவனத்திற்கு வந்து, சுவாமிநாதர் ஸ்வாமிகளைக் காண அவ்விடம் வந்திருப்பதாகவும், சௌக்கியமாயிருப்பதாகவும் கூறி, இந்தச் செய்தியைச் சொல்லி வரும்படி ஸ்வாமிகள் கட்டளையிட்டார்களென்றும் தெரிவித்தார்.  அப்பொழுது பெற்றோர்களும் அவருடைய நண்பர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.  சுவாமிநாதரும் மேலும் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.

துறவும் பீடாதிபத்தியமும்
1907-ஆவது வருடம் பிப்ரவரி முதல் வாரத்தில் ஸ்ரீ ஸ்வாமிகளின் முகாமிலிருந்து திண்டிவனத்திற்கு, சுப்ரமண்ய சாஸ்திரிகள் பெயருக்கு ஒரு தந்திச் செய்தி கிடைத்தது.  அதில் சுவாமிநாதரை அழைத்துக் கொண்டு சாஸ்திரிகள் உடனே புறப்பட்டு வரவேண்டும் எனக் கண்டிருந்தது.  இச்செய்தி கிடைக்குங்கால் சுப்ரமண்ய சாஸ்திரிகள் உத்தியோக அலுவலாகத் திருச்சி சென்றிருந்தார்.  ஏதோ முக்கியமான காரியமாகத்தான் ஸ்வாமிகள் அழைத்திருக்க வேண்டுமென எண்ணிய சாஸ்திரிகள் நண்பர்கள், அவரது குடும்பத்தை ரெயில் மூலம் காஞ்சீபுரத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.  காஞ்சீபுரத்திற்கு 30 மைல் தூரத்திலுள்ள கலவை என்னும் ஊரில் அப்பொழுது ஸ்வாமிகள் முகாம் செய்திருந்தார்கள்.  காஞ்சீபுரத்தில் இருந்த மடத்தின் அதிகாரிகள் மகாலக்ஷ்மி அம்மையாரிடம் யாதொரு விஷயமும் தெரிவிக்காமல், சிறுவர் சுவாமிநாதரை மட்டிலும் நேராகக் கலவைக்கு ஒரு குதிரை வண்டியில் அழைத்துச் சென்று விட்டார்கள்.  மற்றவர்கள் இரண்டு நாட்கள் கழித்துக் கலவையை அடைந்தார்கள்.

திண்டிவனத்திற்குச் செய்தி தந்தி மூலமாக அனுப்பிய பொழுது ஆசாரிய ஸ்வாமிகளின் உடலில் வைசூரி கண்டிருந்தது,
பக்கம் 14... தொடரும்... 

செல்வன்

unread,
Jan 12, 2013, 6:01:48 PM1/12/13
to mint...@googlegroups.com

2013/1/12 கி.காளைராசன் <kalair...@gmail.com>

சும்மா....தொடர்ந்து படித்து வரக்கூடாது.
ஏதாவது பிழைத்திருத்தம் இருந்தால் சொல்ல வேண்டும்.

உங்களுக்கு பிழைதிருத்தம் சொல்லும் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது காளைராசன் ஐயா:-). அதனால் தான் ப்ரூப் ரீடிங், பிழைதிருத்தத்தில் எல்லாம் நான் இறங்குவதில்லை
360.gif

கி.காளைராசன்

unread,
Jan 13, 2013, 9:17:03 AM1/13/13
to mint...@googlegroups.com, hol...@gmail.com
வணக்கம் ஐயா,

தொடர்ந்து படித்து வாருங்கள் ஐயா,
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு உன்னத  சரித்திரம் இது.

2013/1/13 செல்வன் <hol...@gmail.com>

உங்களுக்கு பிழைதிருத்தம் சொல்லும் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது காளைராசன் ஐயா:-). அதனால் தான் ப்ரூப் ரீடிங், பிழைதிருத்தத்தில் எல்லாம் நான் இறங்குவதில்லை

முன்பு ஒருமுறை வேறு ஒருஇழையில், தங்களது பதிவில் எழுத்துப்பிழை உள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டபோதும் தாங்கள் இவ்வாறு சொல்லியிருந்தீர்கள் என்பது நினைவிற்கு வருகிறது.

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

அன்பன்

கி.காளைராசன்

unread,
Jan 13, 2013, 9:27:41 AM1/13/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
அவர்கள் தாம் இன்னும் அதிக நாட்கள் ஜீவித்திருக்கமுடியாது என்னும் எண்ணத்துடன் தமக்குப் பின் பீடத்தில் சுவாமிநாதரையே அமர்த்தவேண்டுமென்று தீர்மானித்தவராகி, இளைஞர் சுவாமிநாதரைக் கலவைக்கு அழைத்துவரும்படிக் கட்டளையிட்டிருந்தார்கள்.  ஆனால் எதிர்பாராத வகையில் சிறுவர் வந்து சேரும் முன்னரே ஸ்வாமிகள் (பராபவ வருடம் மாசி கிருஷ்ண அஷ்டமியில்) சித்தி அடைந்து விட்டார்கள்.  தாம் சித்தி அடைவதற்கு முன், அவர்கள் தம்முடைய சீடராயிரந்தவரும் ருக் வேதத்தை நன்கு பயின்றவருமான லக்ஷ்மீகாந்தன்(•) என்னும் 18 பிராயமுள்ள பிரும்மசாரிச் சிறுவருக்கு உபதேசம் செய்து வைத்தார்கள். காமகோடிபீ டத்திலமரும் ஆசாரியர்கள் பிரும்மசரியத்திலிருந்தே சந்நியாசம் பெற வேண்டுமென்றும் ருக் வேதத்தைச் சார்ந்தவர் களாயிருக்க வேண்டுமென்றும் நியதி உண்டு.

காமகோடி பீடத்தில் இவ்வாறு உபதேசம் பெற்றுப் பட்டமேறி, 67-ஆவது ஆசாரிய ஸ்வாமிகளாக விளங்கிய பெரியாரும் பீடமேறி 8 நாட்களே அதில் அமரும்படியான பாக்யத்தைப் பெற்றார்கள்.  தம் குருநாதரின் சரீரத்திற்கு ஏற்பட்ட அதே நோயால் இவர்களும் பீடிக்கப்பெற்று எதிர்பாராத விதமாகச் சித்தி அடைந்து விட்டார்கள்.  சித்தி அடையுமுன் அவர்கள் தம் குருவின் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை நினைத்தவர்களாகி, இளைஞர் சுவாமிநாதரையே தமக்கு அடுதத பீடாதிபதியாக அங்கீகரித்தார்கள்.  பின்னர் அவருக்கு முறைப்படி ஆசிரமும் கொடுக்கப்பட்டது.  இவ்வைபவம் பராபவ வருடம் மாசி மாதம் 2-ஆம் தேதி புதன்கிழமை (13-2-1907) அன்று நிகழ்ந்தது.  அப்பொழுது அவருக்குப் பிராயம் 13.  அன்று முதல் நம் ஸ்வாமிகள் ஆதி சங்கரரால் நிறுவப்பெற்ற ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக அமர்ந்து, ஜகத்துக்கு அருள் புரிந்து வருகிறார்கள்.  அவர்கள் ஏற்றுக்கொண்ட தீக்ஷாநாமம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி என்பதாகும்.

ஸ்வாமிகள் சந்நியாசம் ஏற்றுக் கொள்ளுமுன் நிகழ்ந்த நிகழ்ச்சி எவர் மனத்தையும் உருக்குவதொன்றாகும்.  பதின்மூன்....

(•) இந்த லக்ஷ்மீகாந்தன் என்னும் இளைஞர் நமது ஸ்வாமிகளின் தாயாரான மகாலக்ஷ்மி அம்மாளின் மூத்த சகோதரியின் புதல்வராவார்.இவர் கும்பகோணத்திற்கடுத்த திருவிசைநல்லுரைச் சார்ந்தவர்.

பக்கம் 15... தொடரும்.....

ஸ்ரீ ஜகத்குருவின் திவ்ய சரித்திரம் படித்து வரும் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அன்பன்

கி.காளைராசன்

unread,
Jan 14, 2013, 7:19:25 AM1/14/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 15...
...றாவது பிராயத்தில் துறவு பூண்டு, மிகக் கடுமையான தவம், த்யானம், பூஜை, வைராக்யம், ஆகார நியமம் இவைகளை மேற்கொள்ளுவதென்பது சாமான்யமாக யாராலும் எளிதில் ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று,  தாய், தந்தையருக்கோ தாம் மிகவும் அருமையாகப் போற்றி வளர்த்த தம் சுவாமிநாதரை இக்கடுமையான தவத்தில் ஈடுபடுத்தவும் அவரைப் பிரிந்து வாழவும் மனம் தாங்வில்லை.  மடத்தின் அதிகாரிகளோ, ‘உங்களுக்கு மற்ற மூன்று  புதல்வர்களிருக்க, இவ்வொரு மைந்தரை உலக க்ஷேமத்தின் பொருட்டும், சிஷ்யர்களின் நம்மையின் பொருட்டும ஏன் உதவக்கூடாது?‘ என்று வினவி வற்புறுத்தினார்கள்.   அவர்களுக்கு யாது விடை கொடுப்பதென அவர்களுக்கு விளங்க வில்லை.   இக்கடுமையான சோதனையில் அவர்கள் மனம் உழன்றது.  இந்த மனக் கவலையை நீக்கும் வகையில் நம் ஸ்வாமிகள் அப்பொழுது அவர்களை வணங்கி, ‘நீங்கள் ஏன் தயங்க வேண்டும்? எனக்கோ குருநாதன் அருள் பரிபூரணமாக இருக்கிறது.  நான் இதைக் காப்பாற்றுவேன்.  நீங்கள் எனக்கு முழு மனஸுடன் அனுமதி கொடுங்கள்‘ எனப் பணிவுடன் தெரிவித்தார்கள்.  குழந்தையின் இவ்வறிவுடைச் சொற்கள் பெற்றோர்களின் உள்ளத்தை உருக்கிவிட்டனவென்பதில் ஐயமில்லை.  பின் அவர்கள் ஒருவாறு மனஸைத் தேற்றிக்கொண்டு சந்நியாசத்திற்கு அனுமதியும் தந்ததார்கள்.  இதுவரையில் சாமிநாதராக விளங்கியவர் முண்டனம், தண்டம், கமண்டலு, காஷாயம் இவைகளை ஏற்றுக் கொண்டு, ஆதி சங்கரர் போலவே சந்நியாசி ஆகித் தேஜோ மயமாய் விளங்கிய தங்கள் அருமைப் புதல்வரைப் பெற்றோர்கள் பின்னர் சந்திக்கவேயில்லை.  ஆசாபாசங்களை நீக்கவே துறவு ஏற்றுக் கொள்ளப்படுவதால் தாய் தந்தையர் போன்ற நெருங்கிய உறவினர் சந்நியாசிகளை நேரில் காணும் வழக்கமில்லை.  நம் ஸ்வாமிகளின் பெற்றோர் தங்கள் புதல்வர் மக்களின் துன்பங்களைப் போக்கி அவர்களை நல்வழிப்படுத்த அவதரித்த மகான் என்ற எண்ணம் பெற்றுத் தங்கள் உள்ளத்தில் பெருமை கொண்டார்களோ, அல்லது உலகெல்லாம் போற்றும் அவரைத் தங்களால் காணமுடியவில்லையே என நினைந்து வருந்தினார்களோ, யார் அறிவர்? ஆனால் ஒன்று மாத்திரம் இவ்விஷயத்தில் தெளிவாயிற்று.  பிற்காலத்தில் யாரேனும் அப்பெற்றோர்களை....

பக்கம் 16....தொடரும்....

கி.காளைராசன்

unread,
Jan 15, 2013, 8:34:58 AM1/15/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
...அடைந்து ஸ்வாமிகளைப் பற்றி ஏதாவது கேட்டால், அவர்கள் மௌனத்தையே மேற்கொண்டிருந்தார்கள்.  உலகினில் புதல்வனைப் பெற்ற பயனை அடைந்த உத்தமர்கள் அல்லரோ அவர்கள்?

கும்பகோணத்திற்கு விஜயம்
பதினெட்டாவது நூற்றாண்டில் நம் நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாகத் தஞ்சை மகாராஷ்டிர மன்னர்களின் காலத்தில், காமகோடி பீடத்தின் நிர்வாக ஸ்தலமானது காஞ்சியிலிருந்து கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது என்ற செய்தியை முன்பே கூறினோம்.  அந்நிகழ்ச்சி 62-ஆவது ஆசாரிய ஸ்வாமிகள் காலத்தில் ஏற்பட்டது.  அவர்கள் காஞ்சியிலிருந்து கும்பகோணத்துக்குச் செல்லும் வழியில் உடையார்பாளையச் சமஸ்தானாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்கி, அவ்வூரில் சிலகாலம் தங்கியிருந்தார்களெனத் தெரிகிறது. பிறகு அவர்கள் தஞ்சையிலும் சில காலம் தங்கினார்கள்.  பின்னரே அவர்கள் கும்பகோணத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு மடத்தை நிறுவிக்கொண்டு அங்கே தங்கினார்கள்.  அதுமுதல் கும்பகோணமே மடத்தின் நிர்வாக ஸ்தானமாக அமைந்தது.

நம்ஆசாரிய ஸ்வாமிகள் ஆசாரிய பீடம் ஏற்றுக் கொண்டது வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள கலவை என்ற கிராமத்தில் என்று கூறினோம். அவர்கள் அப்பதவியை மேற்கொண்ட அவ்வாண்டிலேயே கும்பகோணத்திற்குப் பிரயாணமானார்கள்.  வழியில் தம் தாய் தந்தையர் வசித்துவந்த ஊராகிய திண்டிவனத்தில ஸ்வாமிகள் மூன்று நாட்கள் தங்கினார்கள்.

பொதுவாக ஆசாரிய ஸ்வாமிகள் ஓர் ஊருக்கு விஜயம் செய்கிறார்களென்றால் அவ்வைபவம் அந்த ஊர் முழுவதுமே ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படும்.  ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஸ்வாமிகளை வரவேற்கத்தக்க ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்யத் தொடங்குவார்கள்.  மக்களெல்லோரும் கூட்டம் கூட்டமாக ஸ்வாமிகளைத் தரிசிக்க வருவார்கள்.  எங்கும் வேத கோஷமும், வாத்ய ஒலியும் முழங்கும். ஸ்வாமிகள் யானை மீதோ, பல்லக்கின் மீதோ, பவனி வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.  மடத்தின் பரிவாரங்களாக வரும் யானை, குதிரை, ஓட்டகம் இவைகளைக் காணக் குழந்தைகளின் கூட்டம் ஆங்காங்கே

பக்கம் 17... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Jan 17, 2013, 5:14:58 AM1/17/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பொதுவாக ஆசாரிய ஸ்வாமிகள் ஓர் ஊருக்கு விஜயம் செய்கிறார்களென்றால் அவ்வைபவம் அந்த ஊர் முழுவதுமே ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படும்.  ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஸ்வாமிகளை வரவேற்கத்தக்க ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்யத் தொடங்குவார்கள்.  மக்களெல்லோரும் கூட்டம் கூட்டமாக ஸ்வாமிகளைத் தரிசிக்க வருவார்கள்.  எங்கும் வேத கோஷமும், வாத்ய ஒலியும் முழங்கும். ஸ்வாமிகள் யானை மீதோ, பல்லக்கின் மீதோ, பவனி வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.  மடத்தின் பரிவாரங்களாக வரும் யானை, குதிரை, ஓட்டகம் இவைகளைக் காணக் குழந்தைகளின் கூட்டம் ஆங்காங்கே....

பக்கம் 17...
...காணப்பெறும்.  மடத்தின் அதிஷ்டான தெய்வமாகிய ஸ்ரீ சந்திரமௌளீச்வரர், ஸ்ரீ திருபுரசுத்தரி அம்மன் இவர்களுக்கு ஸ்ரீ ஸ்வாமிகள் செய்யும் பூஜைகளைக் காண ஏராளமான ஜனங்கள் நீராடித் தூய்மையான மனஸுடன் கூடியிருப்பர்.  பூஜை முடிந்ததும் ஸ்வாமிகளால் கொடுக்கப்பெறும் அபிஷேக தீர்த்தத்தைப் பக்தர்கள் மிகுந்த பணிவுடன் தங்கள் உள்ளங் கைகளில் பெற்று உட்கொள்ளுவர்.   இந்தத் தீர்த்தத்தை ஏற்குமுன்னர், வேறு ஆகாரம் எதையும் கொள்ளாமலேயே பக்தர்கள் அதற்காகக் காத்திருப்பார்கள்.  இந்தத் தீர்த்தத்தால் உடலின் அழுக்குகள் நீங்குவதுடன், மனஸும் மாசு அகன்று தூய்மை அடையுமென்று பக்தர்கள் நம்புகிறார்கள்.  பல அடியார்கள் கோஷ்டி கானமாகப் பஜனை செய்வார்கள்.   புலவர்கள் ஸ்வாமிகளைத் தரிசித்து அவர்களிடம் தங்கள் புலமையைக் காட்டிப் பொன்னாடை முதலிய சன்மானங்களைப் பெற்றுப் போவார்கள். பணம் படைத்தவர்கள் பொன்னால் அமைக்கப்பெற்ற ஸ்ரீ ஆதி சங்கரரது பாதுகைகளுக்குப் பொற்காசுகளினாலோ, வெள்ளி நாயணயங்களினாலோ அர்ச்சனை செய்வார்கள்.  இதற்குப் பாதபூஜை என்பது பெயர்.  மத பேதன்றியும், ஜாதி பேதமின்றியும் ஸ்ரீ ஸ்வாமிகளை வரவேற்கும் பணியில் யாவரும் கலந்து கொள்வர்.  இவ்வைபவம் எல்லாம் ஸ்வாமிகள் முகாம் செய்யும் ஒவ்வோர் ஊரிலும் சாதாரணமாக நடைபெறும் காட்சிகளாகும்.

நம் ஸ்வாமிகள் திண்டிவனத்திற்கு 1907-இல் விஜயம் செய்த காட்சியோ ஒரு தனிச் சிறப்பைப் பெற்றது.  அதுவரை குழந்தைப் பருவத்திலும், பன்னிரண்டு வயது வரையிலுள்ள பாலகன் பருவத்திலும் பார்த்துப் பழகிய சுவாமிநாதரை அவ்வூர்வாசிகள் அப்பொழுது உலகத்தை உய்விக்கும் ஞானாசிரியராகக் கண்டார்கள்.  சந்திரன் போன்ற முக மண்டலம், பால சூரியனை ஒத்த தேஜஸ், புதனை ஒத்த ஞானம், இவைகளெல்லாம் ஒருங்கே அடைந்த ஓர் உருவம் அவர்களுக்கு காட்சியளித்தது.  இவ்வுருவத்தைக் கண்டதுமே பெரியோர் சிறியோர், பெண்டிர் யாவரும், ஸ்வாமிகள் தங்கள் ஊரைச் சேர்ந்தவரென்ற பெருமையினால், ஏராளமாகக் கூடி, அவரை வணங்கத் தொடங்கினார்கள்.  ஸ்வாமிகள் கல்வி பயின்ற திண்டிவனம், ஆர்க்காடு அமெரிக்கன் மிஷன் உயர்நிலைப்பள்ளியின் கிறிஸ்தவ ஆசிரியர்களும், உடன் பயின்ற....

பக்கம் 18...
...மாணவர்களும் ஸ்வாமிகளைக் காண ஆவல் கொண்டார்கள்.  ஸ்வாமிகளும் ஒவ்வொரு ஆசிரியரிடத்திலும் தனித்தனியே உரையாடி, அவர்கள் யாவரையும் மகிழ்வித்து, அவர்களுக்குத் தக்க வெகுமதிகளையும் அளித்தார்கள்.  பள்ளி மாணவர்களுக்கெல்லாம் தரிசனம் கொடுத்து அவர்கள் யாவருக்கும் சிற்றுண்டிகளும், பரிசுகளும் வழங்கினார்கள்.

பட்டாபிஷேகம்
ஆசாரிய பீடத்தில் அமர்கிறவர்கள் சந்நியாசிகளே ஆனாலும் அவர்கள் ஜகத் ரக்ஷணையே மேற்கொண்டவர்களாகையால் அவர்களைச் சக்ரவர்த்திகளைப் போலப் பாவிப்பதே இந்நாட்டின் தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும்.  ஆதி சங்கரர் காத்திலேயே, அவருக்கு அக்காலத்தில் காஞ்சியில் அரசாண்ட இராஜசேன மன்னர் பல அரசாங்க விருதுகளை அளித்திருந்தார்.  அவற்றுள் முக்கியமானவை யானை மீது ஏறிப் பவனி வருவதற்கு உரிய அம்பாரி, தந்தச் சிவிகை, வெண்சாமரம், வெண்பட்டுக் குடைகள், கட்டியம் கூறுவோர் தோள்களில் தாங்கி வரும் தங்கத்தடி, வெள்ளித்தடி முதலியனவும், நகரா, பேரி, காளம், கடகம், சங்கம், மிருதங்கம்,வீணை, புல்லாங்குழல் போன்ற வாத்யங்கள் முதலியனவும் ஆகும்.

நம் ஸ்வாமிகளுக்கு முறைப்படியே பட்டாபிஷேகம் செய்து, அவ்வைபவத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டமென்று சீடர்கள் பல்லோரும் விரும்பினார்கள்.  இவ்வைபவம் பிலவங்க வருடம் சித்திரை மாதம் 27-ந்தேதி (9-5-1907) வியாழக்கிழமை, கும்பகோணம் மடத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பெற்றது.  நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் கணக்கற்ற மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டார்கள்.  அரசாங்க உத்தியோகஸ்தர்களும், வித்வத் ஜனங்கள் பல்லோரும்அங்கு வந்திருந்தார்கள்.  தஞ்சையின் கடைசி மன்னரான சிவாஜி மகாராஜாவின் இராணிகள் இருவரும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி ஸ்வாமிகளுக்கு எல்லாவிதமான இராஜ மரியாதைகளையும் செய்வித்தார்கள்.  விழா நாட்களாகிய மூன்று தினங்களிலும், அறுபது பேர்கள் அடங்கிய தஞ்சைப் பாண்டு கோஷ்டியார் தம் இன்னிசைகளால் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி வந்தனர்.  தேவாலயங்களிளெல்லாம் விசேஷ பூஜைகள் நடந்தன.  அன்று ஸ்வாமிகள் எல்லாக் கோயில்களுக்கும் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து...

பக்கம் 19....
...கொண்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.  வித்வான்களுக்கும் கலைஞர்களுக்கும் ஏராளமான வெகுமதிகள் அளிக்கப்பட்டன.

நல்ல முகூர்த்தத்தில் ஸ்வாமிகளுக்குக் கங்காஜல அபிஷேகம் நடந்தேறிப் பட்டாபிஷேகம் செய்யப் பெற்றது.  அபிஷேகம் முடிவு பெற்றவுடன், ஸ்வாமிகள் ஸிம்மாஸனத்தில் கொலுவீற்றிருந்தார்கள்.   அப்பொழுது சிஷ்யர்கள் தங்கள் காணிக்கைகளையும் மரியாதைகளையும் ஸ்வாமிகளுக்குச் செலுத்தினார்கள். அன்றிரவு ஸ்வாமிகள் மடத்து யானைமீது அம்பாரியில் ஆரோகணஞ் செய்துகொண்டு, ஸகல ஸன்னாகங்களுடன் நகரில் பவனி வந்த காட்சி யாவரையும் மெய்மறக்கச் செய்தது.  இவ்வாறு நம் ஸ்வாமிகள் தம் பதின்மூன்றாம் பிராயத்தில் ஜகத்குருப் பட்டம் தாங்கித் தம் ஆட்சியை மேற் கொண்டார்கள்.

3. முதல் விஜய யாத்திரை
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் அடிக்கடி யாத்திரைகளை மேற்கொண்டு மக்களுக்குத் தரிசனம் அளித்து, அவர்களுக்கு உபதேசங்கள் செய்து, அவர்களை உய்விக்கச் செய்வதைத் தொன்று தொட்டே தம் கடமைகளுள் ஒன்றாகக் கொண்டிருந்தார்கள்.  நம் ஸ்வாமிகளும் தாம் பட்டமேறிய பின் இவ்வாறு யாத்திரையொன்றைச் செய்ய வேண்டுமென்று கருதியிருந்தார்கள்.  அதற்குத் தக்க சந்தர்ப்பம் ஒன்றும் கிடைத்தது.

திருச்சிராப்பள்ளிக்கடுத்த ஜம்புகேச்வரம் என்ற திருவானைக்கா க்ஷேத்திரம் உலகப் பிரசித்தி பெற்றது.  அங்குள்ள கோயிலைச் சங்ககாலத்து மன்னன் கோச்செங்கட்சோழன் கட்டினான் என்பர்.  அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேச்வரி அம்பிகைக்கு ஆதிசங்கரர் தாடங்கப் பிரதிஷ்டை செய்தார்.  1908-ஆம் வருஷம், அக்கோயிலுக்குக் கானாடுகாத்தான் சா.ராம.குடும்பத்தார்கள் பல லக்ஷ ரூபாய்கள் செலவிட்டுத் திருப்பணி செய்து, அவ்வருக்ஷம் பிப்ரவரி மாதத்தில் (பிலவங்க, தை) கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறிப்பிட்டிருந்தார்கள்.  அக்காலத்தில் தென்னிந்தியாவில் நடந்தேறிய கும்பாபிஷேகங்களில் இது மிகச் சிறந்த ஒன்றாகும்.  சிருங்ககிரி ஸ்ரீ சாரதா...

பக்கம் 20.....
...பீடாதிபதி அவர்களான ஸ்ரீ ஜகத்குரு நரசிம்மபாரதி அவர்களும் அவ்வைபவத்திற்கு எழுந்தருளி யிருந்தார்கள்.  கும்பாபிஷேகத்திற்கெனத் தனியே நியமிக்கப் பெற்றிருந்த அதிகாரி ஸ்ரீராஜமையர் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்து வந்தார்.

இந்தக் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க வேண்டுமென்று திருவானைக்காவிலிருந்து நம் ஸ்வாமிகளுக்கு அழைப்பு வந்தது.  விஜய யாத்திரையைத் தொடங்க விருப்பங்ககொண்டிருந்த அவர்களுக்கு இஃது ஓர் அரிய சுப சகுனமாயிற்று.  அவர்கள் நல்ல வேளையில் மடத்தினின்று புறப்பட்டு, கும்பாபிஷேக தினத்துக்கு ஒரு வாரம் முன்பே ஜம்புகேச்வரம் போய்ச் சேர்ந்தார்கள்.  அவர்களுடைய முன்னிலையில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

65-ஆவது பீடாதிபதிகளின் அதிஷ்டான தர்சனம்
அதன்பின் ஸ்வாமிகளுக்குத் தமக்குமுன் 65-ஆவது குருவாயிருந்த ஸ்ரீ மகாதேவேந்திர ஸரஸ்வதி அவர்களின் அதிஷ்டானத்தைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று.  அந்த அதிஷ்டானம் இராமநாதபுரம் ஜில்லா, இளையாற்றங்குடி என்ற கிராமத்தில் இருக்கிறது.  அவ்விடத்துக்குப் போகும் வழியில் கடியாப்பட்டி, கோனாப்பட்டு, கீழச்சேவல்பட்டி என்ற கிராமங்களிலுள்ள செட்டி நாட்டுப் பிரமுகர்களும் பொதுமக்களும் அவர்களை வரவேற்று மாரியாதை செய்தார்கள்.  அவ்வவ் விடங்களில் சிற்சில நாட்கள் தங்கிப் புதுக்கோட்டை நகரை ஸ்வாமிகள் அடைந்தார்கள்.  புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் பரம்பரையினரும், மக்களும் பழங்காலந்தொட்டே பீடத்தில் பற்றுக் கொண்டவர்களாதலால், அப்பொழுது பால வடிவத்தில் வரும் குருநாதரைத் தரிசிக்க அவர்கள் மிகுந்த கோலாகலத்துடன் கூடி ஸ்வாமிகளுக்கு வரவேற்பு அளித்து, 15 நாள்களுக்கு மேல் ஸ்வாமிகளை அந்நகரத்தில் தங்கச் செய்தார்கள்.  மன்னரின் இளைய சகோதரர் ஸ்ரீ விஜய ரெகுநாத துரைராஜாவும், திவான் வெங்கடராமதாஸ் நாயுடுவும் மற்ற அரசாங்க அதிகாரிகளும் ராஜமரியாதைகளுடன் ஸ்வாமிகளை வரவேற்று உபசரித்தனர்.

இளையாற்றங்குடி கோயில் செட்டி நாட்டிலுள்ள நகரத்தார் கோயில்களுள் பழமை வாய்ந்ததாகும். ஒரு காலத்தில் நகரத்தார் எல்லோருக்கும் அதுவே பொதுக் கோயிலாக இருந்த...

பக்கம் 21....
...தென்றும், பிறகே அவர்களுக்குள் 9 பிரிவுகள் ஏற்பட, (மாத்தூர், வைரவன்கோயில், இரணியூர், பிள்ளையார்பட்டி, நேமம், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி என்ற இடங்களில்) வேறு பிர பலமான கோயில்கள் உண்டாயின என்றும் கூறுவர்.  இளையாற்றங்குடியில் கோயில் கொண்டவர் ஸ்ரீ நித்ய கல்யாணி சமேத கைலாச நாதர்.

காமகோடி பீடத்தில் 65-ஆவது ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ மகாதேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 1889-ஆம் வருடத்தில் செட்டி நாட்டிற்கு யாத்திரையாகச் சென்றிருந்தபோது, இளையாற்றங்குடியில் சில மாதங்கள் தங்கியிருந்தார்கள்.  அவ்வூர் ஆலயத்தைச் சார்ந்த நகரத்தார்கள் ஸ்வாமிகளிடம் மிகுந்த மரியாதை காட்டி, அவர்கள் தங்குதற்குரிய வசதிகள் யாவற்றையும் அமைத்துக் கொடுத்திருந்தார்கள்.  ஸ்வாமிகள் ஒரு நாள் அவ்வூரைக் கால் நடையாகச் சுற்றி வந்த போது, புதர் அடர்ந்த ஓர் இடத்தைக் கண்டு, அதில் ஒரு நாழிகை தங்கினார்கள்.  மறுநாள் அவர்கள் தேவஸ்தான டிரஸ்டியிடம் அந்த இடத்தை மடத்திற்குக் கொடுக்க இயலுமா என்று கேட்க, ஸ்வாமிகளின் கருத்தை உணராத அந்த டிரஸ்டியார் கோயிலுக்கு அருகிலேயே அகன்ற வேறொரு ஸ்தலத்தை ஸ்வாமிகளுக்குக் கொடுப்பதாக வாக்களித்தார்.  ஆனால் ஸ்வாமிகளோ தாம் குறித்த இடமே வேண்டுமென்று வற்புறுத்தினார்.

இது நிகழ்ந்த ஒரு வாரத்திற்குள் ஸ்வாமிகளுக்கு நோய் கண்டு, உடல்நலம் குன்றி, அவர்களும் நிர்விகல்ப சமாதியை அடைந்தார்கள்.  அந்த நாள் விரோதி வருஷம் பங்குனி மாதம் 8-ந் தேதி (20-3-1860) வியாழக்கிழமை, அமாவாசையாகும்.   ஊரார் முன் நடந்த செய்தியைக் கேட்டு வியப்படைந்து ஸ்வாமிகள் குறிப்பிட்ட இடத்திலேயே அவர்களுக்குச் சமாதியை அமைத்து, அவ்விடத்துக்கருகில் ஒரு சிவலிங்கத்தையும் ஆதிசங்கரர் விக்ரகத்தையும் பிரதிஷ்டை செய்தார்கள்.  அந்தக் கோயில் இன்றும் இளையாற்றங்குடி தேவஸ்தானத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நம் ஸ்வாமிகள் சிறந்த குரு பக்தியுடையவர்களாதலால் அவ்வூருக்குச் செல்லவேண்டும் என்ற நோக்கங் கொண்டே திருவானைக்காவிலிருந்து புறப்பட்டார்கள்.  புதுக்கோட்டை....

பக்கம் 22...
...யிலிருந்து அவ்வூருக்குச் சென்று அதிஷ்டானத்தைத் தரிசித்துக் கொண்டு திரும்பவும் வழியில் திருவானைக்காவில் தங்கி, தமது முதல் சாதுர்மாஸ சங்கல்பத்தை அவ்வூரிலே முடித்துக்கொண்டு, தஞ்சாவூர் வழியாகக் கும்பகோணத்திற்குத் திரும்பினார்கள்.

தஞ்சையில் ராணி ஜீஜாம்பாபாயி ஸாகேபாவும், ராணி ஸ்ரீ ராமாம்பாபாயி ஸாகேபாவும், சீனியர் பிரின்ஸ் பிரதாபசிம்ஹ ராஜா ஸாகேபும், மற்ற அரச பரம்பரையினரும் அரண்மனையில் ஸ்வாமிகளை வரவேற்றுப் பிக்ஷை, பாதபூஜைகளைச் செய்தனர்.  பொதுமக்களும் இந்த வரவேற்பில் கலந்துகொண்டு ஸ்வாமிகளின் அருளுக்குப் பாத்திரமானார்கள்.  அச்சமயம் பொதுமக்கள் ஏற்பாடு செய்த ஓர் ஊர்வலம் தஞ்சை நகரில் அதுவரையிலும் கண்டிராத ஒரு காட்சியாக விளங்கியது.  மாலை 7 மணிக்குப் புறப்பட்ட ஊர்வலம் இரவு இரண்டு மணிக்கே மடத்தைத் திரும்பவும் அடைந்தது. 

மகாமகத்திற்குக் கும்பகோணம் திரும்புதல் 
பன்னிரு வருஷங்களுக்கொருமுறை வரும் மாசிமகத் திருநாள் கும்பகோணத்தில் மகாமகம் என்ற பெரிய திருவிழாவாகும். மேலே கூறிய யாத்திரையை முடித்துக் கொண்டு, நம் ஸ்வாமிகள் 1909-ஆம் வருடம் மார்ச்சு மாதம் கும்பகோணத்திற்குத் திரும்பினார்கள்  அவ்வருக்ஷம் மகாமக வருஷம்.  அதற்கென அரசாங்கத்தாரும், பொது மக்களும் விசேக்ஷ ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.  மடத்திலும் யாத்திரிகர்களுக்காக ஏராளமான இட வசதியும் உணவு வசதியும் செய்து கொடுக்கப்பட்டன. மகாகமகத்தன்று ஸ்வாமிகளை யானையின் மீது அம்பாரியிலமர்ந்து, தஞ்சை அரசர் குடும்பத்தினர் முன் செல்ல, மகாமகக் குளத்திற்கு ஸ்நானத்திற்கு சென்ற காட்சி, அவ்வருட மகாமகத்தில் ஒருதனிச் சிறப்பு வாய்ந்த விழாவாகக் காணப்பட்டது.

-----------------

பக்கம் 23....

4. வித்தியாப்பியாசம்
1909, 1910 இந்த இரண்டு வருடங்களிலும், மடத்தின் ஆஸ்தான பண்டிதர்களால் கும்பகோணத்திலேயே ஸ்வாமிகளுக்குச் சம்ஸ்கிருத காவியங்கள், நாடகங்கள் இவைகளில் பயிற்சியும், வேதப் பயிற்சியும் செய்து வைக்கப்பட்டன.  இந்த இரண்டு வருடங்களாலேயே ஸ்வாமிகளின் அறிவின் பெருமையைப் பண்டிதர்கள் கண்டு ஆச்சரிய மடைந்தனர்.  பக்தர்களும், மடத்தின் சீடர்களும் அதிகமாக ஸ்ரீ ஸ்வாமிகளைத் தரிசிக்க வரத் தொடங்கினார்கள்.  அதனால் சாஸ்திரப் பயிற்சிக்கும் கும்பகோணத்தில் வசிப்பது சிறிது இடையூறாகக் காணப்பட்டது.  வித்தியாப்பியாஸத்தை உத்தேசித்து ஏகாந்தமான ஓர் இடம் நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியமாகிவிட்டது.  அகண்ட காவேரியின் வடகரையில், முசிரிக்கு மேற்கே ஐந்து மைலில், இயற்கை அழகுகள் அமைந்த மகேந்திர மங்கலம் என்னும் கிராமத்தை இதற்கென மடத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டார்கள்.  அந்தக் கிராமத்தில் அன்னதானக் கட்டளைக்கென மடத்திற்கு மதுரையில் அரசாண்ட கடைசி நாயக்க மன்ன விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் சாலிவாகன சகம் 1603-ஆம் ஆண்டில், (1708) பூதானம் செய்திருந்தார்.

மகேந்திர மங்கலம் திருச்சி, நாமக்கல் ரஸ்தாவில், தொட்டியத்திற்கு இப்பால் உள்ளது.  அக்காலத்தில் அதற்குப் போக்குவரத்து வசதிகள் அதிகமாக இல்லை.  அக்கிராமத்தை அடை வேண்டுமானால், காவிரியின் தென் கரையிலுள்ள லாலாபேட்டை என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி, ஒரு மைல் அகலமுள்ள காவிரியைப் பரிசலில் கடந்து செல்ல வேண்டும்.  இவ்வளவு சிரமத்தையும் பொருட்படுத்தாது ஸ்வாமிகளின் தரிசனத்துக்கு வரக்கூடியவர்கள் சிலரே இருப்பர்.  ஆகையால் இந்த இடம் ஸ்வாமிகளின் வித்தியாப்பியாஸத்திற்கு மிகவும் ஏற்றதெனத் தெரிந்தெடுக்கப் பெற்றது.  பூஜையும், மடத்தின் மற்ற நிர்வாக ஸ்தலங்களும் அக்ரஹாரத்தில் தனிகர், சிங்கம் ஐயங்கார் இல்லத்தில் வைக்கப்பட்டன.  காவிரியின் கரையில், தண்ணீர் நிலைக்கு அருகிலேயே ஒரு சிறு பர்ணசாலை நிர்மாணிக்கப் பெற்றது.

1911-ஆம் வருடம் கும்பகோணத்திலிருந்து அந்தக் கிராமத்திற்கு ஸ்வாமிகள் பயணமானார்கள். மகேந்திர மங்கலத்துக்குச்...

பக்கம் 24...
...செல்லும் வழியில் ஸ்வாமிகள் லால்குடி என்ற ஊரில் தங்கி, அங்குச் சங்கராலயதையும், ஒரு குருகுலத்தையும் ஸ்தாபனம் செய்தார்கள்.  அந்தக் குருகுலத்திலிருந்து வித்தியாப்யாஸம் செய்த பலர் இன்று மகா வித்வான்களாக விளங்குகிறார்கள்.

கல்விமுறை
ஸ்வாமிகள் வித்யாப்யாஸம் செய்த முறை தனிமையானது.  சாதாரணமாக மக்கள் தமக்குக் கல்வி கற்பிக்கின்றவர்களைத் தம் ஆசாரியர்களென மதித்து, அவர்களிடம் பக்தி செலுத்திக் கல்வி பெறுவார்கள்.  ஸ்வாமிகளுக்குக் கல்வி கற்பித்த பண்டிதர்களோ ஸ்வாமிகளைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டவர்கள்.  பாடம் ஆரம்பிக்கும் முன்னரும், முடிந்த பின்னரும், அவர்கள் ஸ்வாமிகளை வணங்குவார்கள்.  இப்படிப்பட்ட ஓர் நிலையிலிருந்தும், ஸ்வாமிகள் பாடங்கள் கற்கும்பொழுது மிகுந்த கவனத்துடனும் அக்கரையுடன் கல்வியில் முன்னேற வேண்டுமென்ற எண்ணத்துடனும், வித்துவான்களிடம் மிகுந்த மரியாதையுடன் கல்வி கற்று வந்தார்.  அக்காலத்தில் அவர்கள் கற்ற கலைகள் வியாகரணம், தர்க்கம், வேதாந்தம் ஆகியவைகளாகும்.  பின்னர், மீமாம்சையும் கற்றுக் கொள்ளப் பெற்றது.  ஸ்வாமிகளின் மேதையினால் பண்டிதர்களின் பணி வெகு எளிதாகி விட்டது.  1911, 1912, 1913 ஆகிய இந்த மூன்று வருடங்களில் நம் நாட்டில் பிரசித்திபெற்ற பண்டிதர்களுக்கும், தலைவர்களுக்கும் அந்தக் கிராமம் ஒரு யாத்திரை ஸ்தலம் ஆயிற்று.  இக்காலத்தில், ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு முறையாகக் கல்வி உதவியவர்களுள், பைங்காநாடு பஞ்சாபகேச சாஸ்திரிகள், மஹாமஹோபாத்யாய சாஸ்திர ரத்னாகர தி.வெங்கடசுப்பா சாஸ்திரிகள், சாஸ்திர ரத்னாகர விஷ்ணுபுரம் சாமி சாஸ்திரிகள், திருவிசை நல்லூர் வெ.வேங்கடராம சாஸ்திரிகளும் குறிப்பிடத் தக்கவர்கள்.  இன்னும் அக்காலத்தில் மடத்து ஆஸ்தான வித்வான்களாக இருந்து ஸ்வாமிகளின் வித்யாப்யாஸத்தில் ஊக்கமளித்தவர்களுள், மஹாமஹோபாத்யாய பைங்கா நாடு கணபதி சாஸ்திரிகள், மஹாமஹோபாத்யாய கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள், கோடி கன்னிகாதானம் உபயவேதாந்த ராஜகோபல தாதாச்சாரியார் முதலானவர்கள் முக்கியமானவர்கள்.

இவ்வளவு கல்விகளோடு, ஸ்வாமிகள் ஆங்கிலத்துடன் பிரஞ்சு பாஷையும் கூடக் கற்றுவந்தாரென்றால், அது யாவருக்கும்....

பக்கம் 25...தொடரும்....

Geetha Sambasivam

unread,
Jan 17, 2013, 6:55:25 AM1/17/13
to mint...@googlegroups.com

2013/1/14 கி.காளைராசன் <kalair...@gmail.com>
2. குருநாதரின் சந்திப்பும், துறவும், பீடாதிபத்தியமும் 
காமகோடி பீடி=டத்தின் 66-ஆவது பீடாதிபதிகளும், ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்ற பெயரையே தாங்கியவர்களுமான பரமகுரு ஸ்வாமிகள் தென்னார்க்=ற்காடு ஜில்லா, திண்டிவனம் தாலூ=லுகா, பெருமுக்கல் என்னும் சிற்றூரில் விசுவாவசு வருடம் (1906) சாதுர்மாஸ சங்கல்பத்தை நடத்தி . வருங்கால், சிறுவர் ஸ்வாமிநாதரது தந்தையார் குடும்பத்துடன் ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தார்கள்.  அப்பொழுது நித்திய பூஜையில் வீற்றிருந்த ஸ்வாமிகளின் கருணாகடாக்ஷம் பாலகர் சுவாமிநாதர் மீது விழுந்தது.  பூஜை முடிந்ததும் ஸ்வாமிகள் சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் அவரது குடும்ப நலனைப்பற்றிப் பரிவுடன் விசாரித்தார்கள்.  தமக்குப் பின்னர் காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகும் ஒரு மகா புருஷனை இந்தப் பாலகர் உருவத்தில் அவர்கள் கண்டார்கள் போலும்.  தம் உள்ளத்தில் அவ்விதத் தீர்மனத்தையே அவர்கள் அப்பொழுதே செய்து கொண்டார்களோ என்றும் பின் நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.  சாஸ்திரிகளின் குடும்பம் ஸ்வாமிகளின் தரிசனத்துக்கென இரண்டு நாட்கள் பெருமுக்கலில் தங்கியிருந்தது.  அப்பொழுது ஸ்வாமிகள் இளைஞர் சுவாமிநாதரை அடிக்கடிச் சந்தித்துப் பல கேள்விகளை யெல்லாம் கேட்டு, அதிசயிக்கத் தக்க அப்பாலகரது மறுமொழிகளாலும், அவரது வசீகர முகத் தோற்றத்தினாலும, மேதையினாலும் மகிழ்ச்சிபெற்று, ‘இவன் ஒரு மகாபுருஷனாக விளங்கப் போகிறான்‘ என்று அங்குக் கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்கள்.  இம்மொழிகளைக் கேட்ட தந்தையாரின் மகிழ்ச்சிக்கு அளவே யில்லை.  ஆனால் 13 வயதுள்ள தம் புதல்வர் துறவு பூண்டு தம்மையும், தம் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து விடுவாரென அவர் அப்பொழுது சிறிதும் எண்ணவில்லை.  சாஸ்திரிகள் ஸ்வாமிகளிடம் விடை பெற்றுக் கொண்டு தாம் அப்பொழுது உத்தியோகம் பார்த்து வந்த திண்டிவனத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.  ஆயினும் ஸ்வாமிகள் சுவாமிநாதரை அடிக்கடி மடத்தின் முகாமிற்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டு வந்தார்கள்.  அவ்விதமே சாஸ்திரிகளும் பின் பல முறை தம் குமாரரை ஸ்வாமிகளிடம் ....
  பக்கம் 13...
அழைத்துச் சென்றார்.  குருநாதரின் அருளும் சிறுவருக்குப் பெருகத் தொடங்கிற்று.

இவ்வாறு நிகழ்ந்து வந்த காலத்தில் ஒரு நாள், திண்டிவனத்தில் சுவாமிநாதரை வீட்டில் காணவில்லை. பெற்றோர்கள் தவித்தார்கள்.  ஊரிலுள்ள குளம், கிணறுகள் எல்லாம் துருவிப் பார்த்தாகிவிட்டன.  அருமைப் புதல்வரும் அகப்படவில்லை.  இவ்வாறு இரண்டு நாட்கள் உணவு உறக்கமின்றிப் பெற்றோர்கள் தவித்தனர்.  மறுநாள் 5-மைல் தூரத்திலுள்ள ஸ்வாமிகளின் முகாமிலிருந்து ஒருவர் திண்டிவனத்திற்கு வந்து, சுவாமிநாதர் ஸ்வாமிகளைக் காண அவ்விடம் வந்திருப்பதாகவும், சௌக்கியமாயிருப்பதாகவும் கூறி, இந்தச் செய்தியைச் சொல்லி வரும்படி ஸ்வாமிகள் கட்டளையிட்டார்களென்றும் தெரிவித்தார்.  அப்பொழுது பெற்றோர்களும் அவருடைய நண்பர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.  சுவாமிநாதரும் மேலும் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.

துறவும் பீடாதிபத்தியமும்
1907-ஆவது வருடம் பிப்ரவரி முதல் வாரத்தில் ஸ்ரீ ஸ்வாமிகளின் முகாமிலிருந்து திண்டிவனத்திற்கு, சுப்ரமண்ய சாஸ்திரிகள் பெயருக்கு ஒரு தந்திச் செய்தி கிடைத்தது.  அதில் சுவாமிநாதரை அழைத்துக் கொண்டு சாஸ்திரிகள் உடனே புறப்பட்டு வரவேண்டும் எனக் கண்டிருந்தது.  இச்செய்தி கிடைக்குங்கால் சுப்ரமண்ய சாஸ்திரிகள் உத்தியோக அலுவலாகத் திருச்சி சென்றிருந்தார்.  ஏதோ முக்கியமான காரியமாகத்தான் ஸ்வாமிகள் அழைத்திருக்க வேண்டுமென எண்ணிய சாஸ்திரிகள் நண்பர்கள், அவரது குடும்பத்தை ரெயில் மூலம் காஞ்சீபுரத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.  காஞ்சீபுரத்திற்கு 30 மைல் தூரத்திலுள்ள கலவை என்னும் ஊரில் அப்பொழுது ஸ்வாமிகள் முகாம் செய்திருந்தார்கள்.  காஞ்சீபுரத்தில் இருந்த மடத்தின் அதிகாரிகள் மகாலக்ஷ்மி அம்மையாரிடம் யாதொரு விஷயமும் தெரிவிக்காமல், சிறுவர் சுவாமிநாதரை மட்டிலும் நேராகக் கலவைக்கு ஒரு குதிரை வண்டியில் அழைத்துச் சென்று விட்டார்கள்.  மற்றவர்கள் இரண்டு நாட்கள் கழித்துக் கலவையை அடைந்தார்கள்.

திண்டிவனத்திற்குச் செய்தி தந்தி மூலமாக அனுப்பிய பொழுது ஆசாரிய ஸ்வாமிகளின் உடலில் வைசூரி கண்டிருந்தது,
 பக்கம் 14... தொடரும்... 
அவர்கள் தாம் இன்னும் அதிக நாட்கள் ஜீவித்திருக்கமுடியாது என்னும் எண்ணத்துடன் தமக்குப் பின் பீடத்தில் சுவாமிநாதரையே அமர்த்தவேண்டுமென்று தீர்மானித்தவராகி, இளைஞர் சுவாமிநாதரைக் கலவைக்கு அழைத்துவரும்படிக் கட்டளையிட்டிருந்தார்கள்.  ஆனால் எதிர்பாராத வகையில் சிறுவர் வந்து சேரும் முன்னரே ஸ்வாமிகள் (பராபவ வருடம் மாசி கிருஷ்ண அஷ்டமியில்) சித்தி அடைந்து விட்டார்கள்.  தாம் சித்தி அடைவதற்கு முன், அவர்கள் தம்முடைய சீடராயிரந்தவரும= சீடராயிருந்தவரும் ருக் வேதத்தை நன்கு பயின்றவருமான லக்ஷ்மீகாந்தன்(•) என்னும் 18 பிராயமுள்ள பிரும்மசாரிச் சிறுவருக்கு உபதேசம் செய்து வைத்தார்கள். காமகோடிபீ டத்திலமரும் ஆசாரியர்கள் பிரும்மசரியத்திலிருந்தே சந்நியாசம் பெற வேண்டுமென்றும் ருக் வேதத்தைச் சார்ந்தவர் களாயிருக்க வேண்டுமென்றும் நியதி உண்டு.

காமகோடி பீடத்தில் இவ்வாறு உபதேசம் பெற்றுப் பட்டமேறி, 67-ஆவது ஆசாரிய ஸ்வாமிகளாக விளங்கிய பெரியாரும் பீடமேறி 8 நாட்களே அதில் அமரும்படியான பாக்யத்தைப் பெற்றார்கள்.  தம் குருநாதரின் சரீரத்திற்கு ஏற்பட்ட அதே நோயால் இவர்களும் பீடிக்கப்பெற்று எதிர்பாராத விதமாகச் சித்தி அடைந்து விட்டார்கள்.  சித்தி அடையுமுன் அவர்கள் தம் குருவின் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை நினைத்தவர்களாகி, இளைஞர் சுவாமிநாதரையே தமக்கு அடுதத பீடாதிபதியாக அங்கீகரித்தார்கள்.  பின்னர் அவருக்கு முறைப்படி ஆசிரமும்=ஆசிரமமும் கொடுக்கப்பட்டது.  இவ்வைபவம் பராபவ வருடம் மாசி மாதம் 2-ஆம் தேதி புதன்கிழமை (13-2-1907) அன்று நிகழ்ந்தது.  அப்பொழுது அவருக்குப் பிராயம் 13.  அன்று முதல் நம் ஸ்வாமிகள் ஆதி சங்கரரால் நிறுவப்பெற்ற ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக அமர்ந்து, ஜகத்துக்கு அருள் புரிந்து வருகிறார்கள்.  அவர்கள் ஏற்றுக்கொண்ட தீக்ஷாநாமம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி என்பதாகும்.

ஸ்வாமிகள் சந்நியாசம் ஏற்றுக் கொள்ளுமுன் நிகழ்ந்த நிகழ்ச்சி எவர் மனத்தையும் உருக்குவதொன்றாகும்.  பதின்மூன்....

(•) இந்த லக்ஷ்மீகாந்தன் என்னும் இளைஞர் நமது ஸ்வாமிகளின் தாயாரான மகாலக்ஷ்மி அம்மாளின் மூத்த சகோதரியின் புதல்வராவார்.இவர் கும்பகோணத்திற்கடுத்த திருவிசைநல்லுரைச் சார்ந்தவர்.

பக்கம் 15...
...றாவது பிராயத்தில் துறவு பூண்டு, மிகக் கடுமையான தவம், த்யானம், பூஜை, வைராக்யம், ஆகார நியமம் இவைகளை மேற்கொள்ளுவதென்பது சாமான்யமாக யாராலும் எளிதில் ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று,  தாய், தந்தையருக்கோ தாம் மிகவும் அருமையாகப் போற்றி வளர்த்த தம் சுவாமிநாதரை இக்கடுமையான தவத்தில் ஈடுபடுத்தவும் அவரைப் பிரிந்து வாழவும் மனம் தாங்வில்லை.  மடத்தின் அதிகாரிகளோ, ‘உங்களுக்கு மற்ற மூன்று  புதல்வர்களிருக்க, இவ்வொரு மைந்தரை உலக க்ஷேமத்தின் பொருட்டும், சிஷ்யர்களின் நம்மை=நன்மையின் பொருட்டும ஏன் உதவக்கூடாது?‘ என்று வினவி வற்புறுத்தினார்கள்.   அவர்களுக்கு யாது விடை கொடுப்பதென அவர்களுக்கு விளங்க வில்லை.   இக்கடுமையான சோதனையில் அவர்கள் மனம் உழன்றது.  இந்த மனக் கவலையை நீக்கும் வகையில் நம் ஸ்வாமிகள் அப்பொழுது அவர்களை வணங்கி, ‘நீங்கள் ஏன் தயங்க வேண்டும்? எனக்கோ குருநாதன் அருள் பரிபூரணமாக இருக்கிறது.  நான் இதைக் காப்பாற்றுவேன்.  நீங்கள் எனக்கு முழு மனஸுடன் அனுமதி கொடுங்கள்‘ எனப் பணிவுடன் தெரிவித்தார்கள்.  குழந்தையின் இவ்வறிவுடைச் சொற்கள் பெற்றோர்களின் உள்ளத்தை உருக்கிவிட்டனவென்பதில் ஐயமில்லை.  பின் அவர்கள் ஒருவாறு மனஸைத் தேற்றிக்கொண்டு சந்நியாசத்திற்கு அனுமதியும் தந்தார்கள்.  இதுவரையில் சாமிநாதராக விளங்கியவர் முண்டனம், தண்டம், கமண்டலு, காஷாயம் இவைகளை ஏற்றுக் கொண்டு, ஆதி சங்கரர் போலவே சந்நியாசி ஆகித் தேஜோ மயமாய் விளங்கிய தங்கள் அருமைப் புதல்வரைப் பெற்றோர்கள் பின்னர் சந்திக்கவேயில்லை.  ஆசாபாசங்களை நீக்கவே துறவு ஏற்றுக் கொள்ளப்படுவதால் தாய் தந்தையர் போன்ற நெருங்கிய உறவினர் சந்நியாசிகளை நேரில் காணும் வழக்கமில்லை.  நம் ஸ்வாமிகளின் பெற்றோர் தங்கள் புதல்வர் மக்களின் துன்பங்களைப் போக்கி அவர்களை நல்வழிப்படுத்த அவதரித்த மகான் என்ற எண்ணம் பெற்றுத் தங்கள் உள்ளத்தில் பெருமை கொண்டார்களோ, அல்லது உலகெல்லாம் போற்றும் அவரைத் தங்களால் காணமுடியவில்லையே என நினைந்து வருந்தினார்களோ, யார் அறிவர்? ஆனால் ஒன்று மாத்திரம் இவ்விஷயத்தில் தெளிவாயிற்று.  பிற்காலத்தில் யாரேனும் அப்பெற்றோர்களை....

பக்கம் 16....தொடரும்....

--

Geetha Sambasivam

unread,
Jan 17, 2013, 6:56:49 AM1/17/13
to mint...@googlegroups.com

பக்கம் 16..
...அடைந்து ஸ்வாமிகளைப் பற்றி ஏதாவது கேட்டால், அவர்கள் மௌனத்தையே மேற்கொண்டிருந்தார்கள்.  உலகினில் புதல்வனைப் பெற்ற பயனை அடைந்த உத்தமர்கள் அல்லரோ அவர்கள்?

கும்பகோணத்திற்கு விஜயம்
பதினெட்டாவது நூற்றாண்டில் நம் நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாகத் தஞ்சை மகாராஷ்டிர மன்னர்களின் காலத்தில், காமகோடி பீடத்தின் நிர்வாக ஸ்தலமானது காஞ்சியிலிருந்து கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது என்ற செய்தியை முன்பே கூறினோம்.  அந்நிகழ்ச்சி 62-ஆவது ஆசாரிய ஸ்வாமிகள் காலத்தில் ஏற்பட்டது.  அவர்கள் காஞ்சியிலிருந்து கும்பகோணத்துக்குச் செல்லும் வழியில் உடையார்பாளையச் சமஸ்தானாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்கி, அவ்வூரில் சிலகாலம் தங்கியிருந்தார்களெனத் தெரிகிறது. பிறகு அவர்கள் தஞ்சையிலும் சில காலம் தங்கினார்கள்.  பின்னரே அவர்கள் கும்பகோணத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு மடத்தை நிறுவிக்கொண்டு அங்கே தங்கினார்கள்.  அதுமுதல் கும்பகோணமே மடத்தின் நிர்வாக ஸ்தானமாக அமைந்தது.

நம்ஆசாரிய ஸ்வாமிகள் ஆசாரிய பீடம் ஏற்றுக் கொண்டது வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள கலவை என்ற கிராமத்தில் என்று கூறினோம். அவர்கள் அப்பதவியை மேற்கொண்ட அவ்வாண்டிலேயே கும்பகோணத்திற்குப் பிரயாணமானார்கள்.  வழியில் தம் தாய் தந்தையர் வசித்துவந்த ஊராகிய திண்டிவனத்தில ஸ்வாமிகள் மூன்று நாட்கள் தங்கினார்கள்.

பொதுவாக ஆசாரிய ஸ்வாமிகள் ஓர் ஊருக்கு விஜயம் செய்கிறார்களென்றால் அவ்வைபவம் அந்த ஊர் முழுவதுமே ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படும்.  ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஸ்வாமிகளை வரவேற்கத்தக்க ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்யத் தொடங்குவார்கள்.  மக்களெல்லோரும் கூட்டம் கூட்டமாக ஸ்வாமிகளைத் தரிசிக்க வருவார்கள்.  எங்கும் வேத கோஷமும், வாத்ய ஒலியும் முழங்கும். ஸ்வாமிகள் யானை மீதோ, பல்லக்கின் மீதோ, பவனி வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.  மடத்தின் பரிவாரங்களாக வரும் யானை, குதிரை, ஓட்டகம் இவைகளைக் காணக் குழந்தைகளின் கூட்டம் ஆங்காங்கே

பக்கம் 17... தொடரும்...

--

Geetha Sambasivam

unread,
Jan 17, 2013, 7:06:46 AM1/17/13
to mint...@googlegroups.com

2013/1/17 கி.காளைராசன் <kalair...@gmail.com>

பக்கம் 17...
...காணப்பெறும்.  மடத்தின் அதிஷ்டான தெய்வமாகிய ஸ்ரீ சந்திரமௌளீச்வரர், ஸ்ரீ திரு=ரிபுரசுத்தரி அம்மன் இவர்களுக்கு ஸ்ரீ ஸ்வாமிகள் செய்யும் பூஜைகளைக் காண ஏராளமான ஜனங்கள் நீராடித் தூய்மையான மனஸுடன் கூடியிருப்பர்.  பூஜை முடிந்ததும் ஸ்வாமிகளால் கொடுக்கப்பெறும் அபிஷேக தீர்த்தத்தைப் பக்தர்கள் மிகுந்த பணிவுடன் தங்கள் உள்ளங் கைகளில் பெற்று உட்கொள்ளுவர்.   இந்தத் தீர்த்தத்தை ஏற்குமுன்னர், வேறு ஆகாரம் எதையும் கொள்ளாமலேயே பக்தர்கள் அதற்காகக் காத்திருப்பார்கள்.  இந்தத் தீர்த்தத்தால் உடலின் அழுக்குகள் நீங்குவதுடன், மனஸும் மாசு அகன்று தூய்மை அடையுமென்று பக்தர்கள் நம்புகிறார்கள்.  பல அடியார்கள் கோஷ்டி கானமாகப் பஜனை செய்வார்கள்.   புலவர்கள் ஸ்வாமிகளைத் தரிசித்து அவர்களிடம் தங்கள் புலமையைக் காட்டிப் பொன்னாடை முதலிய சன்மானங்களைப் பெற்றுப் போவார்கள். பணம் படைத்தவர்கள் பொன்னால் அமைக்கப்பெற்ற ஸ்ரீ ஆதி சங்கரரது பாதுகைகளுக்குப் பொற்காசுகளினாலோ, வெள்ளி நாயணயங்களினாலோ அர்ச்சனை செய்வார்கள்.  இதற்குப் பாதபூஜை என்பது பெயர்.  மத பேதமின்றியும், ஜாதி பேதமின்றியும் ஸ்ரீ ஸ்வாமிகளை வரவேற்கும் பணியில் யாவரும் கலந்து கொள்வர்.  இவ்வைபவம் எல்லாம் ஸ்வாமிகள் முகாம் செய்யும் ஒவ்வோர் ஊரிலும் சாதாரணமாக நடைபெறும் காட்சிகளாகும்.

நம் ஸ்வாமிகள் திண்டிவனத்திற்கு 1907-இல் விஜயம் செய்த காட்சியோ ஒரு தனிச் சிறப்பைப் பெற்றது.  அதுவரை குழந்தைப் பருவத்திலும், பன்னிரண்டு வயது வரையிலுள்ள பாலகன் பருவத்திலும் பார்த்துப் பழகிய சுவாமிநாதரை அவ்வூர்வாசிகள் அப்பொழுது உலகத்தை உய்விக்கும் ஞானாசிரியராகக் கண்டார்கள்.  சந்திரன் போன்ற முக மண்டலம், பால சூரியனை ஒத்த தேஜஸ், புதனை ஒத்த ஞானம், இவைகளெல்லாம் ஒருங்கே அடைந்த ஓர் உருவம் அவர்களுக்கு காட்சியளித்தது.  இவ்வுருவத்தைக் கண்டதுமே பெரியோர் சிறியோர், பெண்டிர் யாவரும், ஸ்வாமிகள் தங்கள் ஊரைச் சேர்ந்தவரென்ற பெருமையினால், ஏராளமாகக் கூடி, அவரை வணங்கத் தொடங்கினார்கள்.  ஸ்வாமிகள் கல்வி பயின்ற திண்டிவனம், ஆர்க்காடு அமெரிக்கன் மிஷன் உயர்நிலைப்பள்ளியின் கிறிஸ்தவ ஆசிரியர்களும், உடன் பயின்ற....

பக்கம் 18...
...மாணவர்களும் ஸ்வாமிகளைக் காண ஆவல் கொண்டார்கள்.  ஸ்வாமிகளும் ஒவ்வொரு ஆசிரியரிடத்திலும் தனித்தனியே உரையாடி, அவர்கள் யாவரையும் மகிழ்வித்து, அவர்களுக்குத் தக்க வெகுமதிகளையும் அளித்தார்கள்.  பள்ளி மாணவர்களுக்கெல்லாம் தரிசனம் கொடுத்து அவர்கள் யாவருக்கும் சிற்றுண்டிகளும், பரிசுகளும் வழங்கினார்கள்.

பட்டாபிஷேகம்
ஆசாரிய பீடத்தில் அமர்கிறவர்கள் சந்நியாசிகளே ஆனாலும் அவர்கள் ஜகத் ரக்ஷணையே மேற்கொண்டவர்களாகையால் அவர்களைச் சக்ரவர்த்திகளைப் போலப் பாவிப்பதே இந்நாட்டின் தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும்.  ஆதி சங்கரர் காலத்திலேயே, அவருக்கு அக்காலத்தில் காஞ்சியில் அரசாண்ட இராஜசேன மன்னர் பல அரசாங்க விருதுகளை அளித்திருந்தார்.  அவற்றுள் முக்கியமானவை யானை மீது ஏறிப் பவனி வருவதற்கு உரிய அம்பாரி, தந்தச் சிவிகை, வெண்சாமரம், வெண்பட்டுக் குடைகள், கட்டியம் கூறுவோர் தோள்களில் தாங்கி வரும் தங்கத்தடி, வெள்ளித்தடி முதலியனவும், நகரா, பேரி, காளம், கடகம், சங்கம், மிருதங்கம்,வீணை, புல்லாங்குழல் போன்ற வாத்யங்கள் முதலியனவும் ஆகும்.

நம் ஸ்வாமிகளுக்கு முறைப்படியே பட்டாபிஷேகம் செய்து, அவ்வைபவத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்ட=டுமென்று சீடர்கள் பல்லோரும் விரும்பினார்கள்.  இவ்வைபவம் பிலவங்க வருடம் சித்திரை மாதம் 27-ந்தேதி (9-5-1907) வியாழக்கிழமை, கும்பகோணம் மடத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பெற்றது.  நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் கணக்கற்ற மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டார்கள்.  அரசாங்க உத்தியோகஸ்தர்களும், வித்வத் ஜனங்கள் பல்லோரும்அங்கு வந்திருந்தார்கள்.  தஞ்சையின் கடைசி மன்னரான சிவாஜி மகாராஜாவின் இராணிகள் இருவரும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி ஸ்வாமிகளுக்கு எல்லாவிதமான இராஜ மரியாதைகளையும் செய்வித்தார்கள்.  விழா நாட்களாகிய மூன்று தினங்களிலும், அறுபது பேர்கள் அடங்கிய தஞ்சைப் பாண்டு கோஷ்டியார் தம் இன்னிசைகளால் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி வந்தனர்.  தேவாலயங்களிளெல்லாம் விசேஷ பூஜைகள் நடந்தன.  அன்று ஸ்வாமிகள் எல்லாக் கோயில்களுக்கும் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து...
1909, 1910 இந்த இரண்டு வருடங்களிலும், மடத்தின் ஆஸ்தான பண்டிதர்களால் கும்பகோணத்திலேயே ஸ்வாமிகளுக்குச் சம்ஸ்கிருத காவியங்கள், நாடகங்கள் இவைகளில் பயிற்சியும், வேதப் பயிற்சியும் செய்து வைக்கப்பட்டன.  இந்த இரண்டு வருடங்களா=ளிலேயே ஸ்வாமிகளின் அறிவின் பெருமையைப் பண்டிதர்கள் கண்டு ஆச்சரிய மடைந்தனர்.  பக்தர்களும், மடத்தின் சீடர்களும் அதிகமாக ஸ்ரீ ஸ்வாமிகளைத் தரிசிக்க வரத் தொடங்கினார்கள்.  அதனால் சாஸ்திரப் பயிற்சிக்கும் கும்பகோணத்தில் வசிப்பது சிறிது இடையூறாகக் காணப்பட்டது.  வித்தியாப்பியாஸத்தை உத்தேசித்து ஏகாந்தமான ஓர் இடம் நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியமாகிவிட்டது.  அகண்ட காவேரியின் வடகரையில், முசிரிக்கு மேற்கே ஐந்து மைலில், இயற்கை அழகுகள் அமைந்த மகேந்திர மங்கலம் என்னும் கிராமத்தை இதற்கென மடத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டார்கள்.  அந்தக் கிராமத்தில் அன்னதானக் கட்டளைக்கென மடத்திற்கு மதுரையில் அரசாண்ட கடைசி நாயக்க மன்ன விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் சாலிவாகன சகம் 1603-ஆம் ஆண்டில், (1708) பூதானம் செய்திருந்தார்.

மகேந்திர மங்கலம் திருச்சி, நாமக்கல் ரஸ்தாவில், தொட்டியத்திற்கு இப்பால் உள்ளது.  அக்காலத்தில் அதற்குப் போக்குவரத்து வசதிகள் அதிகமாக இல்லை.  அக்கிராமத்தை அடை வேண்டுமானால், காவிரியின் தென் கரையிலுள்ள லாலாபேட்டை என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி, ஒரு மைல் அகலமுள்ள காவிரியைப் பரிசலில் கடந்து செல்ல வேண்டும்.  இவ்வளவு சிரமத்தையும் பொருட்படுத்தாது ஸ்வாமிகளின் தரிசனத்துக்கு வரக்கூடியவர்கள் சிலரே இருப்பர்.  ஆகையால் இந்த இடம் ஸ்வாமிகளின் வித்தியாப்பியாஸத்திற்கு மிகவும் ஏற்றதெனத் தெரிந்தெடுக்கப் பெற்றது.  பூஜையும், மடத்தின் மற்ற நிர்வாக ஸ்தலங்களும் அக்ரஹாரத்தில் தனிகர், சிங்கம் ஐயங்கார் இல்லத்தில் வைக்கப்பட்டன.  காவிரியின் கரையில், தண்ணீர் நிலைக்கு அருகிலேயே ஒரு சிறு பர்ணசாலை நிர்மாணிக்கப் பெற்றது.

1911-ஆம் வருடம் கும்பகோணத்திலிருந்து அந்தக் கிராமத்திற்கு ஸ்வாமிகள் பயணமானார்கள். மகேந்திர மங்கலத்துக்குச்...

பக்கம் 24...
...செல்லும் வழியில் ஸ்வாமிகள் லால்குடி என்ற ஊரில் தங்கி, அங்குச் சங்கராலயத்தையும், ஒரு குருகுலத்தையும் ஸ்தாபனம் செய்தார்கள்.  அந்தக் குருகுலத்திலிருந்து வித்தியாப்யாஸம் செய்த பலர் இன்று மகா வித்வான்களாக விளங்குகிறார்கள்.

கல்விமுறை
ஸ்வாமிகள் வித்யாப்யாஸம் செய்த முறை தனிமையானது.  சாதாரணமாக மக்கள் தமக்குக் கல்வி கற்பிக்கின்றவர்களைத் தம் ஆசாரியர்களென மதித்து, அவர்களிடம் பக்தி செலுத்திக் கல்வி பெறுவார்கள்.  ஸ்வாமிகளுக்குக் கல்வி கற்பித்த பண்டிதர்களோ ஸ்வாமிகளைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டவர்கள்.  பாடம் ஆரம்பிக்கும் முன்னரும், முடிந்த பின்னரும், அவர்கள் ஸ்வாமிகளை வணங்குவார்கள்.  இப்படிப்பட்ட ஓர் நிலையிலிருந்தும், ஸ்வாமிகள் பாடங்கள் கற்கும்பொழுது மிகுந்த கவனத்துடனும் அக்கரை=கறையுடன் கல்வியில் முன்னேற வேண்டுமென்ற எண்ணத்துடனும், வித்துவான்களிடம் மிகுந்த மரியாதையுடன் கல்வி கற்று வந்தார்.  அக்காலத்தில் அவர்கள் கற்ற கலைகள் வியாகரணம், தர்க்கம், வேதாந்தம் ஆகியவைகளாகும்.  பின்னர், மீமாம்சையும் கற்றுக் கொள்ளப் பெற்றது.  ஸ்வாமிகளின் மேதையினால் பண்டிதர்களின் பணி வெகு எளிதாகி விட்டது.  1911, 1912, 1913 ஆகிய இந்த மூன்று வருடங்களில் நம் நாட்டில் பிரசித்திபெற்ற பண்டிதர்களுக்கும், தலைவர்களுக்கும் அந்தக் கிராமம் ஒரு யாத்திரை ஸ்தலம் ஆயிற்று.  இக்காலத்தில், ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு முறையாகக் கல்வியில்  உதவியவர்களுள், பைங்காநாடு பஞ்சாபகேச சாஸ்திரிகள், மஹாமஹோபாத்யாய சாஸ்திர ரத்னாகர தி.வெங்கடசுப்பா சாஸ்திரிகள், சாஸ்திர ரத்னாகர விஷ்ணுபுரம் சாமி சாஸ்திரிகள், திருவிசை நல்லூர் வெ.வேங்கடராம சாஸ்திரிகளும் குறிப்பிடத் தக்கவர்கள்.  இன்னும் அக்காலத்தில் மடத்து ஆஸ்தான வித்வான்களாக இருந்து ஸ்வாமிகளின் வித்யாப்யாஸத்தில் ஊக்கமளித்தவர்களுள், மஹாமஹோபாத்யாய பைங்கா நாடு கணபதி சாஸ்திரிகள், மஹாமஹோபாத்யாய கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள், கோடி கன்னிகாதானம் உபயவேதாந்த ராஜகோபல தாதாச்சாரியார் முதலானவர்கள் முக்கியமானவர்கள்.

இவ்வளவு கல்விகளோடு, ஸ்வாமிகள் ஆங்கிலத்துடன் பிரஞ்சு பாஷையும் கூடக் கற்றுவந்தாரென்றால், அது யாவருக்கும்....

பக்கம் 25...தொடரும்....

--

கி.காளைராசன்

unread,
Jan 18, 2013, 6:24:59 AM1/18/13
to mint...@googlegroups.com
வணக்கம் 
35B.gif

கி.காளைராசன்

unread,
Jan 19, 2013, 5:26:54 AM1/19/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 25....
ஆச்சரியத்தையே அளிக்கும்.  காலஞ்சென்ற கீர்த்தனாச்சாரிய ஸி.ஆர்.சீனிவாச ஐயங்கார் அக்காலத்தில் அடிக்கடி ஸ்வாமிகளிடம் வந்து போவதுண்டு.  மகாராஷ்டிர பாஷையையும் அதிலுள்ள நூல்களையும் கற்பதில் ஸ்வாமிகளுக்கு அவா மிகுதியாய் இருந்ததால், பம்பாய் மாகாகணத்திலிருந்து மகாராஷ்டிர பண்டிதர் ஒருவரைத் தருவித்து மூன்று வருடங்களுக்கு மேல் அவரை மடத்தில் தங்கச் செய்து வைத்தனர்.  அவரிடம் ஸ்வாமிகள் பல மகாராஷ்டிர நூல்களையும் ஆராய்ச்சி செய்துள்ளார்.  தமிழில் ஸ்வாமிகளுக்கு இருந்த ஆர்வம் எல்லாவற்றையும் விட அதிகமாகும்.  ஓய்வு நேரங்களில் ஆவர்கள் சில புலவர்களின் துணைகொண்டு தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் பயின்று வந்தார்கள்.  தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், திருக்குறள் ஆகியவைகளையும் அவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தார்கள்.  கலைகளுக்குத் தனிமையான காலத்தை அவர்கள் ஒதுக்கிக் கொள்ளவில்லை.  கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களுடன் ஓய்வு கிடைக்கும் நேரங்களிலெல்லாம் பேசிக்கொண்டுவரும் பொழுதே, அக்கலைகளின் நுட்பங்களை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.  அவற்றுள் சங்கீதக்கலை ஸ்வாமிகளின் மனஸை மிகவும் கவர்ந்தது.

அடிக்கடி ஸ்வாமிகள் தம் பர்ணசாலையை விட்டு அகண்ட காவிரியின் நடுவில் அமைந்த திட்டுக்களுக்குச் சென்று, அவ்விடம் நெடுநேரம் தங்கி, இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்திருப்பார்கள், ஆநேக சமயங்களில் அவர்கள் தனிமையில் தியானத்திலும் அங்கு அமர்ந்து விடுவார்கள்.  இயற்கைக் காட்சிகளையெல்லாம் படம் பிடிப்பதில் ஸ்வாமிகளுக்கு மிகுந்த ஆசையுண்டு.  அக்காலத்தில் ஒருவர் போட்டோ காமிராவுடன் ஸ்வாமிகளைத் தெடாந்து வருவது வழக்கம்.  அவரைக் கொண்டு பல இயற்கைக் காட்சிகளைப் படம் எடுக்கும்படி ஸ்வாமிகள் கட்டளை இடுவார்கள். காமிராவிலிருக்கும் நுட்பங்களெல்லாம் ஸ்வாமிகளுக்கு நன்கு தெரியுமாதலால், படம் நன்றாக விழக்கூடிய ஆலோசனைகளைப் படம் பிடிப்போருக்கு ஸ்வாமிகள் அடிக்கடி கூறுவதுண்டு.  மேலும் மாற்றுக் கண்ணாடியைக் கழுவுதல், பிரதிகள் எடுத்தல், இவைகளிலும் தம் அரிய யோசனைகளை ஸ்வாமிகள் அவருக்குக் கூறுவார்கள்.  கணிதம், சோதிடம், வானசாஸ்திரம், இவைகளிலும் ஸ்வாமிகள் நல்ல விற்பன்ன...

பக்கம் 26...
...ராக ஆனார்கள்.  இவைகளில் பயிற்சி பெறுவதற்கென அவர்கள் திருவையாறு சுந்தரேச ச்ரௌதிகளின் சீடரான மரூர், இராமஸ்வாமி சாஸ்திரிகளைப் பல வருடங்கள் மடத்திலேயே இருக்கும்படி செய்து, அவரது குடும்பத்தையும் ஆதரித்து வந்தார்கள்.  தேவாரம் பாடம் கேட்பதில் ஸ்வாமிகளுக்கு ஆர்வம் அதிகம்.  நல்ல இசையுடன் பாடுகிறவர்கள் மடத்துக்கு வரும்பொழுதெல்லாம், ஸ்வாமிகள் பல மணி நேரம் அவர்களுடன் கூட இருந்து, தம் மனஸிற்கிசைந்த தேவாரங்கள் பலவற்றைப் பாடச்சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.  திருவாய்மொழி முதலிய வைணவப் பிரபந்தங்களிலும் ஸ்வாமிகளுக்கு நல்ல பற்று உண்டாயிற்று.

மகேந்திர மங்கலத்தில் நம் ஸ்வாமிகள் தங்கியது 1911 முதல் 1914வரையிலுள்ள காலமாகும்.  1914-இல் ஸ்வாமிகள் கும்பகோணம் திருப்பினார்கள்.  அவர்களுக்கு வித்தியாப்யாஸ இடமாயிருந்த மகேந்திரமங்கலத்தில், அதன் ஞாபகார்த்மாகக் காவிரியின் கரையில் ஒரு சங்கர ஆலயம் நிறுவப்பெற்றது.  ஸ்வாமிகள் மகேந்திர மங்கலத்திலிருந்து திரும்பியபோது அவர்களுக்குப் பிராயம் இருபது.  இக்காத்தினுள் அவர்கள் பல துறைகளிலும் அறிவு நிரம்பி விளங்கினார்கள்.  புராணங்கள், ஸ்தல வரலாறுகள், கல்வெட்டுக்கள் ஆகியவறைப் பற்றிய அறிவு, நவீன உலக ஞானம் ஆகிய பல துறைகளிலும் அவர்களுக்கு நல்ல பரிசயம் ஏற்பட்டிருந்தது.  ஒருமுறை அறிந்தவற்றை அவர்கள் என்றும் மறப்பதில்லை.  தம்மைக் காண வரும் அறிஞர்களிடமிருந்து தாம் அறிந்தவற்றோடு, தம் ஊகத்தால் ஒவ்வொரு அறிவின் தத்துவத்தையும் ஆராய்ந்து உண்மையைக் கண்டு கொள்வதில், நம் ஸ்வாமிகள் மகா மேதைகளுள் ஒருவராகத் திகழ்கின்றார்கள். பிறரோடு பழகும் திறமைகளிலும் ஒவ்வொருவருடைய தாரதம்யத்தைச் சீர்தூக்கி அறியும் நிபுணத்துவத்திலும் அவர்களுக்கு இணையாக மிகச் சிலரையே கூறலாம்.

ஸ்வாமிகள் கும்பகோணத்தில் தங்கிருந்தபொழுது, சுமார் 30 மைல் தூரத்திலுள்ள கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருடத்திற் கொருமுறை விஜயம் செய்து, தஞ்சைப் பெரிய கோவிலின் அமைப்பில் கட்டப்பட்டுள்ள அவ்வாலயத்தின் மிகப் பெரிய சிவலிங்கத்தைத் தரிசித்து, சிதிலமடைந்த அக்கோவிலின் ...

பக்கம் 27...
..சிலாசாஸனங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்துவருவார்கள்.  இவ்வாராய்ச்சியில் ஸ்வாமிகளுக்கு உதவியவர்களில், சிலாசாஸன இலாகா பி.வி. ஜகதீச ஐயரையும், இஞ்சினீயர் அனந்தாழ்வாரையும் குறிப்பிடலாம்.  இவ்வாறு நம் ஸ்வாமிகள் தம் இருபதாவது பிராயத்துக்குள்ளேயே தம் பதவிக்கேற்ற வித்யா விலாஸத்துடன் விளங்கலானார்கள்.

5. 1911-முதல் 1915-வரையில் மடத்தின் நிர்வாகம்.
ஜில்லா கோர்டு நிர்வாகத்தில் மடம்
அக்காலத்தில் ஸ்வாமிகள் மைராக இருந்ததால், அவர்களுக்கு இருபத்தோராவது பிராயம் பூர்த்தியாகும்வரையில், மடத்து நிர்வாகம் ஜில்லா கோர்ட்டின் பாதுகாப்பில் இருக்க வேண்டுமென்று மடத்தில் அக்கரை கொண்ட சில சீடர்கள் சென்னை அரசாங்கத்தாருக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்கள்.  கோர்ட்டு நிர்வாகத்தில் கொண்டு வரக்கூடிய அளவில் மடத்தின் சொத்துக்கள் இல்லாமலிருந்தும், அதன் நன்மையைக் கருதி மடத்தைக் கார்டியன் அண்டு வார்ட்ஸ் சட்டப்படி நடத்தக் கோர்ட்டார் உத்திரவு இட்டார்கள்.  கோயம்புத்தூர் ஜில்லா கொளிஞ்சிவாடி கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீமான் ஸி.எச். வேங்கடரமண ஐயர் என்னும் பிரமுகர் கார்டியனாக நியமிக்கப்பட்டார்.  1911-ஆம் வருடம் முதல் 1915-ஆம் வருட மே மாதம்வரை, மடத்தின் நிர்வாகம் அவர் மூலம் நடைபெற்று வந்தது.  1915ஆம் வருடம் மே மாதம் நடைபெற்ற சங்கர ஜயந்தி அன்று, ஸ்வாமிகளுக்கு இருபத்தோராவது ஆண்டு பூர்த்தியாகவே, அன்று முதல் மடத்தின் நிர்வாகத்தை ஸ்வாமிகளே நேரில் ஏற்றுக் கொண்டார்கள். பெயரளவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளப்பட்டதே யொழிய, சர்வமுக்கியார்நாமா என்னும் அதிகாரம் பெற்ற ஏஜண்டு ஒருவராலேயே மடத்தின் நிர்வாகக் காரியங்களெல்லாம் கவனித்து வரப்பட்டன.  அக்காலத்தில், பாலப்பருவம் தொடங்கியே ஸ்வாமிகளிடம் விசேஷப் பற்றும் பக்தியும் கொண்டிருந்த திருப்பாதிரிப்புலியூர் வாசியான பசுபதி ஐயர் என்னும் சீடர் ஊதியமின்றி மடத்தின் நிர்வாகத்தை ஏற்று, எல்லாத் துறைகளிலும் திறம்பட பணியாற்றி வந்தார்.  பழைய கால வழக்கப்படி எந்தத் தஸ்தா....

பக்கம் 28...
...வேஜுவிலும் ஸ்வாமிகள் கையெழுத்திடுவதில்லை.  ஏஜண்டுகளுக்குப் பவர் கொடுக்கும் பொழுதும், மடத்தின் ஸ்ரீமுக முத்திரையே உபயோகப்படுத்தப்பட்டு வருவது வழக்கம்.

இந்த முறையில் 1915-ஆவது வருட சங்கர ஜயந்தி மடத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சீடர்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.  வேத நூல்களின் சாரங்களை யாவரும் எளிதில் அறியும் பொருட்டு, ஆரிய தருமம் என்னும் தமிழ்ச் சஞ்சிகையை மடத்தின் மாதவெளியீடாக அன்று ஸ்வாமிகள் ஆரம்பித்து வைத்தார்கள்.  ஸ்ரீரங்கம் வாணிவிலாஸ் அச்சகத்திலிருந்து ஸ்ரீ டி.கே. பாலசுப்ரமணிய ஐயர் மேற்பார்வையில் அந்தச் சஞ்சிகை உயரிய முறையில் வெளிவந்தது.  மடத்தின் நிர்வாகத்திலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.  சிஷ்யர்களின் நமையின் பொருட்டுப் பல பாஷைகளில் மடத்தின் சரித்திரம் வெளியிடப் பெற்றது.  மடத்திலுள்ள தாமிரப்பட்டையங்கள் திருவனந்தபுரம் சிலாசாஸனப் பரிசோதகர் ஸ்ரீ டி.ஏ.கோபிநாத ராஜ் அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டுப் புத்தக வடிவமாக வெளிவந்தது.
---------------

6. நவராத்திரி உற்சவம்
லக்ஷதீபம், லக்ஷார்ச்சனை
1916-ஆவது வருடம் அக்டோபர் மாதத்தில் கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் நவராத்திரி விழாவானது மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகைக்கு லக்ஷார்ச்சனை செய்யப்படும், நெய்யினால் லக்ஷ விளக்குகள் ஏற்றப்பட்டும், லக்ஷம் பிராமணர்களுக்கு அன்னமளிக்கப்பட்டும் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவைப் பற்றி ஸ்ரீ சி.சுப்ரமண்ய பாரதியார் தமது கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“உலகத்தார் பராசக்தியை நல்ல மழை அருள்புரியும் சரத் காலத்தின், முதல் ஒன்பது இரவும், வணங்கிப் பூஜைகள் செய்ய வேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு, மிகப் பயனுடைய காரியம், மேலானவழி.  கும்பகோணம் சங்கர மடத்தில் இந்தப் பூஜை மிகவும் கோலாகலமாக நடத்தப்....

பக்கம் 29...
...போவதாகப் பத்திரிகையில் ஒரு தந்தி போட்டிருந்தது. சகஜமான விசேஷம்.  தேசம் முழுவதும் இப்படி நடப்பது நல்லது.  சங்கர மடத்திலும் எனக்கு ஒருவிதமான ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப் பார்த்தேன்.  அந்தத் தந்தியிலே பாதி சாஸ்திரம், வர்த்தமான தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு வினோதம்.  ஆனால் அதில் கண்ட சாஸ்திரம் உண்மையாக இருந்தது.  நான் எதிர் பார்க்கவில்லை.  எனவே தந்தியைப் படித்த பொழுது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.

கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது - இந்த பூஜைகளின் நோக்கம் உலக நன்மை.  நவராத்திரி காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்று வித வடிவம் கொண்டு துஷ்டரையெல்லாம் அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைத்தாள்.  மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக, தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல் இன்றுவரை பாரத தேசத்தில் எல்லாப் பக்கங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.  தேவி உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள்.  இவளே மாயை, இவளே சக்தி, செய்பவளும் செய்கையும் செய்கைப் பயனும் இவளே, தந்தையும் தாயும் இவள், இவளே பரப்ருமம்“ (பாரதி நூல்கள், கட்டுரை- பக்கம் 32, 33)

இவ்விழாவை ஏற்பாடு செய்தவர்களில் முதன்மையானவர்கள் தஞ்சை ஜில்லா மிராசுதார்களான பில்லூர் அபிராமி ஐயர், வில்லியனூர் வைத்தியநாத ஐயர், கோட்டூர் கிருஷ்ணஐயர், கொத்தங்குடி ஸ்ரீநிவாச ஐயர், கல்லூர் வெங்கப்ப ஐயர், சென்னை கணேஷ் கம்பெனியின் சொந்தக்காரர் ஸ்ரீ எம்.ஆர்.ராமசேஷ ஐயர், சித்தமல்லி சுப்ரமண்ய ஐயர் ஆகியோராவர்.  இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஊக்கம் அளித்து விசேஷமாகப் பொருளுதவி புரிந்தவர்களில், திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரான் ஸ்வாமிகள் அவர்களையும், ஆண்டிப்பட்டி ஜமீன்தார் சா.ராம.மு.சித.பெத்தாச்சி செட்டியார் அவர்களையும், நந்தவரம் இராஜாப்பையர் அவர்களையும் முதன்மையாகக் குறிப்பிடலாம்.  மடத்தின் முதல் முற்றத்தில்...

பக்கம் 30..
சித்திர வேலைகள் அமைந்த அற்புதமான ஒருபெரிய கொட்டகை அமைக்கப்பெற்றிருந்தது. 

துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி இம்மூன்று தேவிமார்களும் கிழக்கு நோக்கி ஆவாகனம் செய்யப்பெற்றிருந்தனர்.  அன்றாடம் புஷ்பங்களும் மலைபோல் வந்து குவிந்தன.  தேவியின் பூஜையில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் லலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்லி ஒவ்வொரு நாளும் பலமுறை அர்ச்சனை செய்தனர்.  பித்தளையினால் செய்யப்பட்ட 12,000 அகல் விளக்குகளை சுவரில் லிங்க வடிவமாகவும், ரிஷப வடிவமாகவும், யானை வடிவமாகவும், துவாரபாலகர் வடிவமாகவும் அமைத்து, அவற்றில் நெய் ஊற்றி விளக்குகள் ஏற்றிப் பத்து இரவிலும் எரிய விட்டிருந்தனர்.  ஒருபுறம் ஆழமான ஓம குண்டங்களில் புரோகிதர்கள் கொழுந்து விட்டெரியும் அக்னி .ஜ்வாலையை எழுப்பிச் சண்டீஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம் இவைகளைச் செய்து வந்தனர்.  நூற்றுக்கணக்கான வித்வான்கள் இராமாயணம், பாகவதம், தேவிமகாத்மியம், சௌந்தர்யலஹரி, பகவத்கீதை இவைகளைப் பாராயணம் செய்தனர் மூன்று வேதங்களிலும் வல்லவர்கள் வேத கோஷத்தை ஒருபுறம் ஒலிக்கச் செய்தனர்.  புலவர்கள் தங்கள் புலமையை விளக்கி மற்றொரு புறம் சொற்பொழிவுகள் ஆற்றிவந்தனர்.

அப்பிகைக்குப் பிரியமான வீணை முதலான வாத்தியங்களின் நாதம் எப்பொழுதும் ஒலித்தவண்ணமாக இருந்தது.  அக்காலத்தில் நம் நாட்டில் வாழ்ந்த எல்லாச் சங்கீத வித்வான்களும், பாகவத சிகாமணிகளும் போட்டியிட்டுக்கொண்டு தங்கள் தங்கள் கலைத்திறன்களைத் தேவிக்கு அர்ப்பணம் செய்தார்கள்.  சரஸ்வதிபூஜை யன்று இராமநாதபுரம் பூச்சி ஐயங்காரென்னும் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்களின் கச்சேரியும், மதுரை புஷ்பவனம் ஐயரின் கச்சேரியும் மிகவும் சோபையை அளித்தன. அந்த விழாவில் இராமனாதபுரம் பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்களின் கச்சேரி தஞ்சை ஜில்லா ரசிகர்களைப் பரம ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது.  ஸ்வாமிகள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவ்வப்போது நேரில் விஜயம் செய்து, அடியார்களை மகிழ்வித்த காட்சி என்றும் மறக்க முடியாததாகும்.  ஏறக்குறை 300 தொண்டர்கள் இவ்விழாவில் தொண்டாற்றினார்கள்.  ரூபாய் 50,000 வரையில் (அன்னதானம் நீங்கலாக) இவ்விழாவுக்குச் செலவு செய்யப்பட்டது.  லக்ஷம் பேர்...

பக்கம் 31...தொடரும்...

கி.காளைராசன்

unread,
Jan 20, 2013, 3:16:27 AM1/20/13
to mintamil, thiruppuvanam, naga rethinam

2013/1/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>
...களுக்கு மேல் அன்னதானம் செய்யும் பணியை மகான் தேப்பெருமாள் நல்லூர் சிவன் அவர்கள் ஏற்று நடத்தினார்கள்.  ஒவ்வொரு நாளும் பதினாயிரம் மக்களுக்குமேல், சேர்ந்தாற்போல் பத்து நாட்களுக்கு அறுசுவையுடன் அன்னமிட வேண்டிய உணவுப் பொருள்களைச் சேகரிக்க எவ்வளவு பிரயாசை வேண்டுமென ஆலோசித்தால் அஃது ஓர் ஆச்சர்யத்தையே விளைக்கும்.   திவான் சேஷையா சாஸ்திரிகள் வீட்டில் ஒரு பண்டக சாலை நிறுவப் பெற்றது.  தஞ்சை ஜில்லா மிராசுதார்களும், வியாபாரிகளும் ஒரு மாதத்துக்கு முன் தொடங்கியே தங்கள் காணிக்கைகளாக உணவுப் பொருள்களை இவ்விழாவுக்கென அனுப்பிவைத்தார்கள். அரிசி மூட்டைகள் ஆயிரக்கணக்காக வந்து குவிந்தன.  நுற்றுக்கணக்கான மரப் பீப்பாய்களில் மோரை அடைத்து அவற்றைத் தண்ணீரில் மிதக்க விட்டிருந்தார்கள்.  சுமார் 200 சமையல் சிப்பந்திகள் பணிசெய்தனர்.  மடத்தின் தோட்டத்தில் ஒரே தடவையில் 1000 பேர்கள் உட்கார்ந்து புசிக்கும் வசதியுடன் பெரிய பந்தல்கள் அமைக்கப் பெற்றிருந்தன.  பனிக்குன்று போன்ற அன்னக் குவியல்கள், யானைகளை முழுகவடிக்கும் அண்டாக்களில் சாம்பார், ரசம் முதலிய மற்ற உணவுப் பொருள்கள் ஆகியவை தாயரிக்கப் பெற்றன.  இவையெல்லாம் சிவனது தனிமையான மேல் பார்வையில் நடைபெற்றன.  எல்லாம் அமைதியுடன் யாவருக்கும் எவ்விதமான குறைவுமின்றி நடந்தேறியது.  ஒழுங்கைப் பாதுகாப்பதில் சிவன் மிகவும் கண்டிப்பானவர்.  எந்தச் சிப்பந்தியும் அல்லது உணவருந்த வருபவரும் அவரது கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடக்கவேண்டும்.

பத்தாவது நாளாகிய விஜயதசமி அன்று இரவில், ஸ்ரீஸ்வாமிகள் உள்ளூர்த் தேவாலயங்களுக்கு விஜயம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டார்கள்.   அனறு யானைமீது அம்பாரியில் ஸ்வாமிகள் பவனி வந்த காட்சியைப் பல்லாயிர மக்கள் கண்டு களித்தனர்.  சுமார் ஒரு மைல் நீளமுள்ள அந்த ஊர்வலத்தை ஆண்டிப்பட்டி ஜமீன்தார் பெத்தாச்சி செடியாரும், திருப்பனந்தாள் காசி மடம் ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரான் ஸ்வாமிகளும் முன்னின்று நடத்தி வைத்தனர்.  இருபுறமும் நூற்றுக்கணக்கான பவர் விளக்குகள், கண்ணைக் கவரும் வாண வேடிக்கை, ஆறு ஜதை நாயனம், மூன்று ஜதை பாண்டு, வேத பாராயணம்....

பக்கம் 32 ....தொடரும்...

கி.காளைராசன்

unread,
Jan 22, 2013, 5:58:45 AM1/22/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
தேவார கோஷ்டி, பஜனை கோஷ்டி, நான்கு யானைகள், நாட்டியக் குதிரைகள் இவைகளுடன் அன்று தேஜோமயமாய் விளங்கிய ஸ்வாமிகளின் திருமேனியைத் தரிசித்து அனைவரும் பாக்யசாலிகளானார்கள்.
-----------------------

7. கல்விக்கும் கலைகளுக்கும் ஊக்கமளித்தமை - அத்வைத சபைக்கூட்டமும் பண்டிதர்களுக்குப் பாராட்டும்
1917-ஆவது வருட ஆகஸ்ட் மாதம், கும்பகோணம் அத்வைத சபையின் வருடாந்தக் கூட்டம் முடிவு பெற்றவுடன், ஸ்வாமிகள் ஒரு வித்வத் சபையைக் கூட்டி, அக்காலத்தில் மகா வித்வான்களாக விளங்கிய பிரும்மஸ்ரீ பழமார்நெறி இராமஸ்வாமி சாஸ்திரிகள், பிரும்மஸ்ரீ திருவிசைநல்லூர் வேங்கட சுப்பா சாஸ்திரிகள், ஆகிய இவர்களுக்குச் சாஸ்திர ரத்னாகரம் என்னும் பட்டத்தை வழங்கி, இரட்டை சால்வை, வெள்ளிஜாரி முதலிய சன்மானங்கள் செய்து அவர்களைக் கௌரவித்தார்கள்.  இந்தப் பட்டத்தை அதன் பிறகு நாளது வரையில் பல வித்வான்கள் பெற்றிருக்கிறார்கள்.  அவர்களின் பெயர்கள் கீழே குறிப்பிட்டுள்ளன.
1. மன்னார்குடி மகாமகோபாத்யாய யக்ஞசாமி சாஸ்திரிகள்
2. சிதம்பரம் மகாமகோபாத்யாய தண்டபாணிசாமி தீக்ஷிதர்.
3. புதுக்கோட்டை சமஸ்தான தானாதிகாரி திருவையாறு விச்வநாத சாஸ்திரிகள்
4. தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகள்
5. விஜயநகரம் மகாமகோபாத்யாய தாத சுப்பராய சாஸ்திரிகள்
6. குண்டீர் திண்டுகூரி நரசிம்ம சாஸ்திரிகள்
7. கல்கத்தா சர்வ கலாசாலை மகாமகோபாத்யாய என். எஸ். அனந்த கிரஷ்ண சாஸ்திரிகள்.
8. கல்கத்தா சர்வ கலாசாலை மகாமகோபாத்யாய ஏ.சின்னசாமி சாஸ்திரிகள்
9. காசி ஹிந்து சர்வகலாசாலை டி.இராமச்சந்திர தீக்ஷிதர்

பக்கம் 33.. தொடரும்....

கி.காளைராசன்

unread,
Jan 22, 2013, 6:42:02 AM1/22/13
to mintamil, thiruppuvanam, naga rethinam

 பக்கம் 32 ....

பக்கம் 33...
10. காசி மகா பண்டிதர் ராஜேச்வர சாஸ்திரி திராவிட்
11. மடம் ஆஸ்தான வித்வான் டி.வி. லெக்ஷ்மி நாராயண சாஸ்திரிகள்
12. சிதம்பரம் ராமசுப்பா சாஸ்திரிகள்
13. சென்னை, சமஸ்கிருத காலேஜ் போலகம் ராமா சாஸ்திரிகள்
14. திருச்சி, போலகம் சுந்தர சாஸ்திரிகள்
15. கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஸ்ரீ பாதம் லெக்ஷ்மி நரசிம்ம சாஸ்திரிகள்
16. எல்லூரு, மண்டவிக வெட்கட சாஸ்திரிகள்
17. சென்னை அரசாங்கக் கவிஞர் மகாமகோபாத்யாய மதுரை கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்
18. பம்பாய் பாரத வித்யா பவனத்தின் பேராசிரியர் டி.ஏ. வெட்கடேச்வர தீக்ஷிதர்
19. புதுக்கோட்டைச் சமஸ்தான தானதிகாரி காளி ரங்காச்சாரியார்
 
இவர்கள் யாவரும் ஸ்வாமிகளால் அவ்வப்போது நன்கு கௌரவிக்கப்பட்டு மடத்திலிருந்து தகுந்த சன்மானங்களையும் அடைந்திருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு உதவி
அதேவருடம் கல்லூரி மாணவர்கள் நமது மதத்தில் பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதை எண்ணி, அவர்களுக்கென ஆங்கிலத்தில் ஒரு கட்டுரைப் போட்டியை ஸ்வாமிகள் ஏற்படுத்தினார்கள்.  ‘காலத்தின் மாறுபாடுகளை அநுசரித்துச் சநாதன தர்மத்தைக் காப்பாற்றும் முறையை எவ்விதம் நிர்ணயிக்கலாம்‘ என்பது அப்போட்டி வியாஸத்தின் தலையங்கம்.  சென்னை, திருச்சி, மதுரை முதலிய பெரிய நகரங்களின் கலாசாலை மாணவர்கள் இந்த வியாஸத்தை ஆங்கிலத்தில் எழுதிப் போட்டியில் கலந்துகொண்டனர்.  வெற்றி பெற்ற வியாஸங்கள் எழுதிய முதல் மூன்று மாணவர்களுக்கு முறையே பணப்பரிசு, புத்தகங்கள் முதலானவை வழங்கப்பட்டன.  இதில் முதல் பரிசு பெற்றவர், பின்பு சென்னைச் சர்வகலாசாலையில் சரித்திரப் பேராசிரியராக இருந்த வி.ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் ஆவர்.  அந்த வருடத்திலும்....

பக்கம் 34.... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Jan 24, 2013, 7:24:25 AM1/24/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
அடுத்த வருடங்களிலும் ஸ்வாமிகள் கல்லூரி மாணவர்களுக்கும், கலாசாலை மாணவர்களுக்கும் உபகாரச் சம்பளம் கொடுப்பதென ஓர் ஏற்பாடும் செய்தார்கள், மதக் கல்வி போதிக்கப்படும் கல்விச் சாலைகளுக்குப் பொருளுதவி செய்து வந்தார்கள்.

ஏழைகளுக்கு வைத்திய வசதி
அக்காலத்தில், மடத்தில் ஓர் ஆயுர்வேத வைத்யசாலையை நிறுவி ஏழைகளுக்கு இலவசமாக வைத்திய வசதி கிடைக்கும்படி ஸ்வாமிகள் செய்திருந்தார்கள்.  மயிலாப்பூர் வெக்ட்ரமண வைத்திய கலாசாலையில் தேறிய, வைத்ய விசாரத் ஜகத் ரக்ஷக சாஸ்திரிகளும், வைத்திய விசாரத் திருவண்ணாமலை கிருஷ்ண சாஸ்திரிகளும், இந்த வைத்திய சாலையில் வைத்தியர்களாக அமர்ந்திருந்தார்கள்.

கலைகளுக்கு ஊக்கமளித்தது
1914-ஆவது வருடம் முதல் 1918-ஆவது வருடம் வரை ஸ்வாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்த காலத்தில், வடமொழி தென்மொழி வித்வான்களும், சங்கீத வித்வான்களும், மற்றும் கல்வியில் ஆர்வமுள்ள அன்பர்கள் பலரும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்து கொண்டிருந்தனர்.  அநேகமாக ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் மடத்தில் வித்வான்களின் சபைகள் கூடவதுண்டு.  அப்பொழுது காரசாரமாகச் சாஸ்திர விசாரங்கள் நடைபெறும்.  ஸ்வாமிகள் எல்லோருடைய கட்சிகளையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு, முடிவில் ஒவ்வொருவருடைய கட்சியின் உண்மைகளையும் விளக்கி யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு விவாதத்தை முடிக்கும் அழகைப் பார்த்து யாவரும் ஆச்சரியமடைவார்கள்.

அந்நாளில் அஷ்டாவதானிகள், சதாவதானிகள் என்னும் பெயர் பெற்ற பல்கலைப் புலவர்கள் இந்தச் சபைகளுக்கு வந்து தங்கள் புலமைகளைக் காட்டுவதுண்டு.  சதாவதானி என்பவர் நூறு விஷயங்களின் கேள்விகளை மனஸில் வாங்கிக் கொண்டு, பின்னர் அவைகளுக்கு ஒன்று விடாமலும், தவறு இல்லாமலும் விடை கூறுவர்.  அஷ்டாவதானி என்பவர் ஒரே காலத்தில் எட்டு விஷயங்களை மனஸில் வாங்கிக் கொண்டு பதில் கூறுவர்.  அவர்கள் பல பாஷைகளிலும் கவிதை இயற்றுவதில் வல்லவர்களாயிருப்பர்.  கணிதம், ஜோதிஷம், தர்க்கம், வேதாந்தம், மீமாம்சை, வியா....

பக்கம் 35... 
கரணம், இவைகளை நன்கு கற்றவர்களாகவுமிருப்பர்.  அவர்களது திறனைப் பரீக்ஷிக்கும்போது  பண்டிதர்கள் அவர்களைச் சுற்றி உட்கார்ந்திருப்பார்கள்.  வடமொழியிலோ, தென்மொழியிலே ஒருவர் ஒரு செய்யுளின் முதலடியை மாத்திரம் கூறிவிட்டு அடுத்த வித்வானிடம் அந்தப் பரீக்ஷையை விட்டு விடுவர்.  அடுத்திருப்பவர் ஒரு கணித சாஸ்திரியாக இருந்தால், ஒரு பெரிய கணக்கை அவரிடம் கூறிவிட்டு அதன் விடைக்காக் காத்திருப்பார்.  மற்றொருவர் ஒரு சோதிடராக இருக்கக்கூடும்.  அவர் ஒரு ஜாதகத்தை வாயால் கூறிவிட்டு அதனுடைய இராசி பலனையும் அம்சபலனையும் அந்த அவதானியிடமிருந்து தெரிந்துகொள்ள ஆவலுள்ளவராகவிருப்பார்.  சங்கீத வித்வானொருவர் ஓர் அபூர்வராகத்தைப் பாடுவார். ஒருவர் ஒரு புஷ்பத்தின் பெயரைச் சொல்லிவைப்பார்.  இராமாயணத்தில் ஓர் குறிப்பிட்ட செய்கையை நிகழ்த்திய ஓர் அரக்கனது பெயரைச் சொல்லும்படி ஒருவர் கேட்பார்.  இவ்விதமாக இன்னும் பல கேள்விகள் பிறக்கும்.  கேள்விகள் முடித்ததும் இவ்விதப் பரீக்ஷைக்கு உட்படும் கலாவல்லவர்கள் வரிசைக் கிரமமாக அவைகளுக்கு ஒரு தவறுகூட இல்லாது விடைகளைக் கூறிக்கொண்டே வருவார்கள்.  பார்ப்பவர்களுக்கு இக்காட்சி ஆச்சரியதை அளிக்கும்.

ஸ்வாமிகளும் அவதானமும்
ஒரு சமயம் ஸ்வாமிகளைக் காண மிகவும் வயோதிகரான ஸ்ரீ வைஷ்ணவ சாதாவதானி ஒருவர் மடத்திற்கு வந்திருந்தார். வழக்கம்போல் வித்வான்கள் அவரை இவ்விதமாகப் பரீக்ஷைகளுக்கெல்லாம் உள்ளாக்கினார்கள். வித்வான்கள் கேள்விகளை யெல்லாம் கேட்டு வரும்போதே, ஸ்வாமிகள் மற்றொருவரைக் கொண்டு, தாம் கூறிவரும் விடைகளைக் குறித்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தார்கள்.  அந்தப் பெரியவர் சற்றும் தயங்காமல் விடைகளை அளித்தார்.  ஸ்வாமிகள் செல்படி குறித்து வைத்திருந்த விடைகளும், அவர் கூறிய விடைகளும், ஒன்றாகவே இருந்தன.  ஸ்வாமிகளின் மேதையைப் பற்றி அங்கிருந்த அனைவருக்கும் ஓர் வியப்புண்டாயிற்று.  ஸ்வாமிகள் அந்த சதாவதானிக்குக் காஷ்மீர் சால்வையையும், பிற வெகுமானங்களையும் அளித்து அவரைப் பெருமைப்படுத்தினார்கள்.  பின்னர் சில வருடங்கள் அடிக்கடி அவர் மடத்திற்கு வருவதுண்டு.  இவ்விதம் அக்....

பக்கம் 36.... தொடரும்....

கி.காளைராசன்

unread,
Jan 25, 2013, 12:03:36 PM1/25/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 32 ....
...காலத்தில் பல கலைஞர்கள் ஸ்வாமிகளிடம் வந்து தங்கள் கலைத் திறன்களைக் காட்டிச் சன்மானங்கள் பெற்றுப் போவார்கள்.  அந்நாளில் பெரியதொரு சர்க்கஸ் கம்பெனியை நடத்திவந்த ப்ரொபெஸர் இராமமூர்த்தி என்றவரும் ஸ்ரீஸ்வாமிகளைத் தரிசித்து, யோகாப்யாஸ சம்பந்தமான சில சந்தேகங்களை ஸ்வாமிகளிடம் கேட்டு அவற்றில் விளக்கம் பெற்றுக் கொண்டார்.  அந்தக் கனவான் பின்பொரு தடவை ஸ்வாமிகளைப் பற்றித் தம் நண்பர் ஒருவரிடம் கூறியபோது, ‘பிரும்மசரியத்தின் சக்தியை ஸ்வாமிகளிடம் தான் பார்த்ததாயும் அந்தச் சக்தியைக் கொண்டு உலகில் சாதிக்கமுடியாதன எல்லாவற்றையும் சாதிக்கலாம்‘ என்றும் கூறினராம்.

1917-ஆவது வருடம் தர்பங்கா மகாராஜா தமது தென்னாட்டு யாத்திரையின்போது கும்பகோணத்திற்கு வந்து, மூன்று நாட்கள் அவ்விடம் தங்கி, ஸ்வாமிகளைத் தரிசித்து தென்னாட்டையும் வடநாட்டையும் ஒற்றுமைப்படுத்தும் தேவாலயங்கள், பண்பாடு இவைகளைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்.  ஸ்வாமிகளது தவ மகிமையில் அவர் ஈடுபட்டு, ஸ்வாமிகளை வட நாட்டுக்கு விஜயம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இரு மேதாவிகளுடன் விஞ்ஞான ஆராய்ச்சி
கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியின் பௌதிகப் பேராசிரியராகவும், பின்னர் பிரின்ஸிபாலாகவும் விளங்கிய ஸ்ரீமான் பி.இராகோபால ஐயர் ஸ்வாமிகளின் கலையறிவைவும், மேதையையும் நண்பர்கள் மூலம் கேள்வியுற்று, அவர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாட வேண்டுமென்று அவாவுள்ளவராகவிருந்ததார்.  ஆயினும் வைதிக ஆசார நியமங்களுடன் விளங்கும் ஒரு சந்யாசியும், பீடத்திற்கு அதிபதிகளுமான ஸ்வாமிகள், தம்மை மதித்துத் தம் பெருமைக் கேற்றவாறு தம்மை வரவேற்றுத் தம்முடன் உரையாடுவர்களாவென்னும் சந்தேகத்தை உள்ளத்தில் கொண்டே, அவ்விதச் சந்திப்பை அவர் வெகுநாள் ஒத்திப் போட்டுக் கொண்டேயிருந்தார்.  ஆயினும் ஒரு நாள் அவர் தமது மனஸை ஒருவாறு திடப்படுத்திக்கொண்டு, ஸ்வாமிகளைத் தரிசித்து விடுவதெனத் தீர்மாணினத்தவராய் மடத்திற்கு வந்து சேர்ந்ததார்.  ஆசாரியஸ்தானத்தில் உள்ள ஸ்வாமிகளுக்கு எவ்விதம் வந்தனை வழிபாடுகளைச் செய்ய வேண்டுமென்பதை அவர் உண்மையில்....

பக்கம் 37... தொடரும்....

கி.காளைராசன்

unread,
Jan 29, 2013, 7:33:21 PM1/29/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 32 ....
பக்கம் 37....
...அறிந்தவரல்லர்.  அப்படியிருந்தும் அவரது உள்ளத்திலிருந்த அன்பை மட்டும் ஸ்வாமிகள் உணர்ந்து கொண்டு, அவரை ஆதரவுடன் ஏற்று, அவரிடம் பேசத் தொடங்கினார்கள்.  முதலில் கல்லூரியைப் பற்றியும் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றியும் பேச்சுக்கள் நடைபெற்றன.  தொடர்ந்து, விஞ்ஞானத்தைப் பற்றிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின. பௌதிக சாத்திரத்தின் நுட்பங்கள் பலவற்றை எளிதில் விவரிக்கும் ஸ்வாமிகளின் புத்தி நுட்பத்தைக் கண்டு இராஜகோபால ஐயர் வியந்தார்.  இவருவரும் அந்தச் சம்பாஷணையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், மராமத்திலாகா சூப்பரிண்டெண்டிங் இஞ்சினியராக இருந்த பி.வி.மாணிக்கநாயக்கர் ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார்.  ஸ்வாமிகளுக்கு அவர் பல வருடங்கள் முன்பே அறிமுகமானவர்.  அவர் ஸ்வாமிகளிடம் ஆழ்ந்த பக்தியும் மதிப்பும் கொண்டவர்.  அவர் தமக்கு முன் வந்து ஸ்வாமிகளுடன் பேசிக்கொண்டிருப்பவர் யாரென்பதை அறிந்தவரல்லர்.  ஆயினும் சம்பாஷணைகளின் போக்கிலிருந்து அவரைத்தெரிந்துகொள்ள வேண்டுமென்று நாயக்கர் விரும்பினார்.  ஸ்வாமிகளே நாயக்கருக்கு ஐயரை அறிமுகப்படுத்தினார்.  நாயக்கரும் கணித சாஸ்திரத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றவர்.   பின்னர் வான சாஸ்திரத்தைப் பற்றிய பேச்சு தொடங்கிற்று.  இந்தக் கலையில் நமது புராதன வழிக்கும், மேனாட்டார் வழிக்கும் உள்ள ஒற்றுமைகளை ஸ்வாமிகள் விளக்கிக் கொண்டு வந்ததார்கள்.  அவர்கள் கூறிய விளக்கங்களைக் கல்லூரியிலிருந்து ஒரு தூரதிருஷ்டிக் கண்ணாடியை வரவழைத்து மேலும் தெளிவுபடுத்தினார்கள்.  வான சாஸ்திரங்களின் நுணுக்கங்களை ஸ்வாமிகள் தெளிவுபடுத்தியதைக் கண்டு அந்த இரு விஞ்ஞானிகளும் மிகவும் வியப்படைந்தனர்.   சர்வ கலாசாலைப் படிப்பு இல்லாமலேயே, இப் பயிற்சிகளெல்லாம் ஸ்வாமிகளுககு எவ்விதம் ஏற்பட்டன என்று அவர்கள் பெரிதும் வியப்பை அடைந்து, தாங்கள் சர்வகலாசாலையின் உயர்தர பட்டதாரிகள் என்னும் பெருமையை மறந்தவர்களானார்கள்.  அன்று முதல் ஐயர் பல தடவைகள் மடத்திற்கு வந்து போய்க்கொண்டிருந்ததார்.  ஸ்வாமிகளிடம் உரையாடுவதே தமது வாழ்க்கையின் லக்ஷியங்களில் சிறந்ததென அவர் மதித்தார்.

ஸ்ரீ பி.வி. மாணிக்க நாயக்கர் சம்ஸ்கிருதத்தையும் பிற மொழிகளையும் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எளிதாக உச்சரிக்கவும்....
பக்கம் 38... தொடரும்....

கி.காளைராசன்

unread,
Jan 30, 2013, 6:45:55 PM1/30/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 32 ....
பக்கம் 38...
...எழுதவும் ஓர் நூதன முறையைக் கண்டுபிடித்து, அதை ஓர்  புத்தக வடிவமாகவும் வெளியிட்டிருந்தார்.  ஸ்வாமிகள் அவரது அந்த முயற்சியை வெகுவாகப் பாராட்டி, அந்தப் புத்தகத்திற்கு ஓர் ஸ்ரீமுகம் கொடுத்திருந்தார்கள்.  நாயக்கர் வெளியூர்கள் செல்லும் போதெல்லாம் தமது நூதன முறையைப் பற்றிக் கற்றவர்களின் கூட்டங்களில் பேசி, இந்த முறையைப் பின்பற்றும்படி யாவரையும் கேட்டுக் கொள்வதுண்டு.  இது சம்பந்தமாய் நாயக்கர் தஞ்சையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ஸ்வாமிகள் தம் ஆராய்ச்சிக்கு அநுக்ரஹம் செய்துள்ளமையையும் விளம்பரப்படுத்தினார்.

ஆந்திர ஜமீன்தாரின் அன்பளிப்பு
விசாகப்பட்டினம் ஜில்லா ஷேர்முகம்மதுபுரம் ஜமீன்தார் ராஜா.ஏ.வி. ஜெக்காராவ் என்பவர் விசாகையில் ஓர் வான சாஸ்திர ஆராய்ச்சி நிலையத்தைப் பல லக்ஷ ரூபாய்கள் செலவிட்டு நிறுவியிருந்தார்.  அவர் உலகம் முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து, பல வான சாஸ்திரிகளைச் சந்தித்து அவர்கள் மூலம் அக்கலையின் விசேஷ நுட்பங்களை அறிந்து, அவைகளை நம் நாட்டிற்குப் பயன்படும்படி செய்யும் தொண்டை மேற்கொண்டிருந்தார்.  ஒரு சமயம் அவர் ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார்.  வான சாஸ்திரத்தில் ஸ்வாமிகளுக்கு இருக்கும் ஞானத்தைக் கண்டு அவர் வியப்படைந்து, அவர் இத்தாலியில் பல்லாயிரம் ரூபாய்கள் கொடுத்து வாங்கிய சுமார் நான்கடி நீளமும், ஆறங்குல குறுக்களவுமுள்ள மிகவும் நுட்பமான துரதிருஷ்டிக் கண்ணாடி ஒன்றை ஸ்வாமிகளின் ஆராய்ச்சிக்காக அளித்தார்.

பிற மதங்களில் சம திரஷ்டி
கடவுளை ஒப்புக் கொண்ட மதம் எந்த மதமாக இருந்தாலும் ஸ்வாமிகளுக்கு அதனில் நல்ல மதிப்புண்டு.  அந்த அந்த மதத்தினர் அவரவர்கள் மதத்திலிருந்துகொண்டே கடவுளை வழிபட வேண்டுமென்பது ஸ்வாமிகளின் அபிப்பிராயமாகும்.  பலர் ஸ்வாமிகளின் பரந்த நோக்கத்தையும், சகிப்புத் தன்மையையும் நேரில் கண்டும் கேள்வியுற்றுமிருந்தனர்.  ப்ரம்மஞான சபையைச் சேர்ந்த ஸ்ரீ ஜினராஜதாஸர் ஸ்வாமிகளை ஒருமுறை தரிசித்து உலக மதங்களைப் பற்றி விரிவாக உரையாடி, ஸ்வாமிகளின் பரந்த நோக்கங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

பக்கம் 39... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Jan 31, 2013, 8:20:52 AM1/31/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 32 ....
சங்கீதக் கலைக்கு ஆதரவு
சங்கீதத்திலுள்ள சாஸ்திரீயமான அம்சங்களைச் சுவைப்பதில் ஸ்வாமிகளுக்கு இணையாக எவரையும் கூறமுடியாது.  பெரிய வித்வான்கள் மடத்திற்கு வந்து கச்சேரிகள் நடத்தும் பொழுதெல்லாம் அவர்கள் பாடும் கீர்த்தனைகளின் பொருள்களிலும், ராகம், தாளம் இவைகளின் நுட்பங்களிலும், ஸ்வாமிகள் தமது கவனத்தைச் செலுத்தி, வித்வான்கள் வியப்படையும்படியாகப் பல கேள்விகளைக் கேட்டுத் தம் சந்தேகங்களையும் அவர்களிடம் தெரிவிப்பதுண்டு. தெலுங்கு மொழியில் ஸ்வாமிகளுக்கு இருக்கும் பயிற்சியினால் ஸ்ரீ தியாகையர் முதலியவர்களுடைய கீர்த்தனைகளின் பொருள்களை ஸ்வாமிகள் வித்வான்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.  பொருளை அறிந்தே கீர்த்தனைகளைப் பாடவேண்டுமென்றும், ஆகையால் வித்வான்கள் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய இம்மூன்று மொழிகளையாவது நன்கு கற்கவேண்டுமென்றும், பழைய காலத்தில் வித்வான்கள் இவ்விதம் பல பாஷைகளைக் கற்று வந்திருந்தார்களென்றும் ஸ்வாமிகள் அடிக்கடி வற்புறுத்திக் கூறுவர்.  ஸ்ரீ சாமா சாஸ்திரிகள், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், இவர்களின் கிருதிகள் வித்வான்களிடையில் அதிகமாகப் பழக்கத்தில் இல்லாததைக் கண்டு, தம்மிடம் வரும் வித்வான்களை அவ்விருவருடைய சாகித்தியங்களையும் பாடம் செய்து கொள்ளும்படி ஸ்வாமிகள் கூறுவதுண்டு.

அக்காலத்தில் சங்கீத வித்வான்களும், கதாகாலக்ஷேபங்கள் செய்வதில் ஈடுபட்டிருந்த பாகவதர்களும் ஸ்வாமிகள் முன்னிலையில் தங்கள் கச்சேரிகளையும், கதாகாலக்ஷேபங்களையும் நிகழ்த்தி அவர்களின் ஆசியைப் பெறுவதை ஒப்பற்ற பெருமையாகக் கருதி வந்தார்கள்.

மகாவைத்தியநாத ஐயரின் முக்கிய சிஷ்யரும், ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் சிஷ்ய பரம்பரையில் வந்தவரும், பல மாணவர்களுக்குக் குருவாக அமைந்திருந்தவருமான உமையாள்புரம் சுவாமிநாதையர் அக்காலத்தில்  கும்பகோணத்தில் தங்கியிருந்தார்.  அவர், அநேகமாக ஒவ்வொரு நாளும் ஸ்வாமிகளைத் தரிசிக்க வருவார். அவரிடம் ஸ்வாமிகள் சங்கீதக் கலையைப் பற்றிச் சர்ச்சைகள் பல செய்வதுண்டு.  ஸ்வாமிகள் அவருக்கு ‘நாதானுபவ ஸாரக்ஞ‘ என்னும் பட்டத்தை அளித்தார்கள்,  திருக்கோடி காவல் கிருஷ்ண....

பக்கம் 40...தொடரும்....

கி.காளைராசன்

unread,
Feb 1, 2013, 4:01:42 AM2/1/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 32 ....
....ஐயர் ஒரு முறை மடத்திற்கு வந்து ஸ்வாமிகள் முன்னிலையில் பிடில் வாசித்துத் தமது ஆபூர்வமான வாசிப்பினால் ஸ்வாமிகளை மகிழச் செய்தார்.

மாயவரம் வீணை வைத்தியநாத ஐயர் தம் புதல்வர்கள் சபேச ஐயருடனும், கிருஷ்மூர்த்தியுடனும் அடிக்கடி ஸ்வாமிகளைத் தரிசிக்க வருவதுண்டு.  சபேச ஐயர் மிகவும் அபூர்வமாக வீணை வாசிப்பார்.  தமது மெல்லிய குரலுடன் வீணையின் நாதத்தை இணைத்து அவர் கச்சேரி செய்வதைக் கேட்பவர்களெல்லாம் பரவசமடைவார்கள்.  அம்பிகையின் பேரில் அவர் கீர்த்தனைகளைப் பாடி வீணை வாசிக்கும்போது ஸரஸ்வதியின் மேதாவிலாசம் அவரிடம் காணப்படும்.   தம் புதல்வர் சபேச ஐயர் கச்சேரிகள் செய்ய முற்பட்ட பிறகு, வைத்தியநாத ஐயர் கச்சேரி செய்வதை நிறுத்திவிட்டார்.  ஒரு நாள் ஸ்வாமிகள் முன்னிலையில் சபேச ஐயர் மிகவும் அபூர்வமாக வீணை வாசித்துக் கொண்டிருந்தார்.  வைத்தியநாத ஐயரும் அவர் முன் உட்கார்ந்து கொண்டு தம்மை அறியாமேலேயே, ‘சபாஷ் என் அப்பனே‘ எனக்கூறினார்.  அப்பொழுது ஸ்வாமிகள் வைத்தியநாத ஐயரைப் பார்த்துப் புன்னகையுடன், ‘சபை நடுவில் நீங்கள் உங்கள் புதல்வனுடைய ஞானத்தை வெளிப்படையாகப் புகழலாகாது, மற்றவர்கள் புகழ்ந்தால்தான் தங்கள் புதல்வனுக்குப் பெருமை ஏற்படும்.  தாங்கள் மட்டும் தங்கள் மனத்திற்குள்ளேதான் புதல்வன் கலைத்திறனை அனுபவிக்க வேண்டும்‘ எனச் சொன்னார்கள்.  அப்பொழுது வைத்தியநாத ஐயர் ஸ்வாமிகளை வணங்கி, ‘வயதான எனக்கு இந்தச் சிறிய விஷயம் புலனாகவில்லை.  இனி மகா சந்நிதானத்தின் உத்திரவுப்படி நடந்து கொள்ளுகிறேன்‘ எனத் தெரிவித்துக்கொண்டார்.

அக்காலத்தில் அடிக்கடி நாகராஜ ராவின் புல்லாங்குழல் கச்சேரி ஸ்வாமிகளின் சந்நிதானத்தில் நடைபெறுவதுண்டு. கச்சேரிக்குப் பக்கவாத்யமாக செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயர் பிடில் வாசிப்பார்.  சாக்கோட்டை ரங்கு ஐயங்கார் மிருதங்கமும், உமையான்புரம் சுந்தரம் ஐயர் கடமும் அநேகமாக இதில் சேர்ந்திருக்கும்.  அப்பொழுதெல்லாம் வெகுநேரம் ஸ்வாமிகள் கச்சேரிகளில் அமர்ந்திருந்து ரசமான கட்டங்களில் வித்வான்களை உற்சாகப்படுத்துவதுண்டு.

பக்கம் 41... தொடரும்...

Subashini Tremmel

unread,
Feb 1, 2013, 7:46:20 AM2/1/13
to மின்தமிழ், thiruppuvanam, naga rethinam, Subashini Tremmel
நான் தினமும் வாசிக்க முடியாவிட்டாலும் தொகுப்பாக அவ்வப்போது வாசித்துக் கொண்டே வருகின்றேன். உங்கள் சீரிய இப்பணிக்கு என் நல்வாழ்த்துக்கள். 

சுபா

2013/2/1 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
கி.காளைராசன்

unread,
Feb 1, 2013, 9:53:36 AM2/1/13
to mint...@googlegroups.com, thiruppuvanam, naga rethinam, Subashini Tremmel
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

2013/2/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

நான் தினமும் வாசிக்க முடியாவிட்டாலும் தொகுப்பாக அவ்வப்போது வாசித்துக் கொண்டே வருகின்றேன். உங்கள் சீரிய இப்பணிக்கு என் நல்வாழ்த்துக்கள். 
மிக்க நன்றி,
என்னை இப்பணிக்குத் தூண்டியது தாங்கள்தான்.
தாங்கள் போட்டது 1
நான் தினமும் எழுவது 00000000000000000000000000000000000000000
அன்பன்

கி.காளைராசன்

unread,
Feb 1, 2013, 10:18:47 AM2/1/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 41...
திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் கும்பகோணத்திலேயே வசித்து வந்ததால் அவருடைய கதாகாலக்ஷேபங்களும் அக்காலத்தில் அடிக்கடி மடத்தில் நடைபெறுவதுண்டு.  ஒலிபெருக்கி இல்லாத அந்த நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது கதையைக் கேட்டு மகிழ்ச்சியுறுவார்கள்.  ரசிகர்களின் தன்மையை அறிந்து அவர்களின் ருசிக்குத் தக்கவாறு பேசுவதிலும், பாடுவதிலும் சாஸ்திரிகளுக்கு இணை வேறு எவரையும் கூற முடியாது.  அவர் கதைக்கு அந் நாளில் வித்வான் அழகநம்பிப்பிள்ளையும், அவருக்குப்பின் கோதண்டராம ஐயரும் மிருதங்கம் வாசித்து வந்தார்கள்.  இனிய சாரீரம் படைத்த குஞ்சு என்னும் சௌராஷ்டிரரும், நல்லூர் விசுவநாத ஐயரும், மாதிரிமங்கலம் நடேச ஐயரும் சாஸ்திரிகளுக்குப் பின் பாட்டுக்களைப் பாடிவந்தனர்.  சாஸ்திரிகள் தாம் சங்கரரது சரித்திரத்தைக் கதாகாலக்ஷேபம் செய்யும் முறையில் கீர்த்தனங்களாகவும், வசனங்களாவும் சிறந்த வித்வான்களின் உதவியைக் கொண்டு அமைந்திருப்பதாயும், அதனை ஸ்வாமிகளும் கேட்டருள வேண்டுமென்றும் விக்ஞாபித்துக் கொண்டார்.  ஸ்வாமிகளும் அவரது கோரிக்கையை அகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, மடத்தில் சங்கர விஜயத்தைக் காலக்ஷேபம் செய்ய அனுமதித்தார்கள்.  சாஸ்திரிகள் ஏழு பாகங்களாக அக்கதையைப் பிரித்து, ஏழு நாட்கள் மடத்தில் பிரவசனம் செய்தார்.  சாஸ்திரிகள் மிகவும் அருமையாகச் செய்த  இந்தக் கதா காலக்ஷேபத்திற்கு வெளியூர்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் ரசிகர்கள் ஆயிரக்கணக்காகக் கூடி, அதுவரை யாவராலும் நிகழ்த்தப்படாத அந்தக் கதையைக் கேட்டு மகிழ்ந்தனர்.  ஒவ்வொரு நாளும் ஸ்வாமிகள் முழு நேரமும் கதையில் அமர்ந்திருந்து சாஸ்திரிகளைப் பெருமைப்படுத்தினார்கள்.  சாஸ்திரிகளது மேதையை மெச்சி முடிவு நாளன்று அவருக்குப் பீதாம்பரம், தோடா முதலான சன்மானங்களை ஸ்வாமிகள் செய்து அவரைக் கௌரவித்தார்கள். 

மேலும் அந்த நாளில் கதாகாலக்ஷேபங்கள் செய்வதில் மிகப் பிரசித்தியுடன் விளங்கிய சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர், தஞ்சாவூர் பஞ்சாபகேச பாகவதர், பாலக்காடு அனந்தராமன பாகவதர், ஹரிகேசவநல்லூர் முத்தையா பாகவதர், கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர், மாங்குடி சிதம்பர பாகவதர், பழனி சுப்பிரமண்ய பாகவதர், ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியார் முதலான...
பக்கம் 42...தொடரும்....

கி.காளைராசன்

unread,
Feb 2, 2013, 12:44:05 AM2/2/13

பக்கம் 42....
வித்வான்கள் ஸ்வாமிகள் சந்நிதானத்தில் கதாகாலக்ஷேபங்கள் செய்து ஸ்வாமிகளால் கௌரவிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து உயர்ந்த சன்மானங்களையும் அடைந்திருக்கிறார்கள்.  தம் இளம் பிராயத்திலேயே இத்துறையில் பிரசித்தி அடைந்த சூலமங்கலம் சௌந்தரராஜபாகவதரையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.  அந்த நாளில் கீதாப் பிரவசனம் செய்வதில் பிரக்யாதி பெற்றிருந்த மகா வித்வான் திருவையாறு லக்ஷ்மணாச்சாரியாரும் ஸ்வாமிகளது சந்நிதானத்தில் கதாகாலக்ஷேபம் செய்து ஸ்வாமிகளது புகழுக்குப் பாத்திரமாகி அவர்களிடம் ஒப்பற்ற சன்மானங்களைப் பெற்றிருக்கிறார்.  ஹரிகதா காலக்ஷேபங்களுக்குப் பிறப்பிடமான மகாராஷ்டிர தேசத்திலிருந்து பாகவதர் ஒருவர் தமது கோஷ்டியுடன் கும்பகோணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.  அவர் சிவாஜியின் குருவான ஸமஸ்த ராமதாஸ் சுவாமிகளின் சிஷ்ய பரம்பரையைச் சார்ந்த மோர்காம்கர் பீடத்தின் மடாதிபதி ஆவர்.  அவர் நம் ஸ்வாமிகளைத் தரிசித்து மடத்திலும் மூன்று கதாகாலக்ஷேபங்களைச் செய்தார்.  அந்தக் கதைகள் மகாராஷ்டிர பாஷையில் அமைந்திருந்த போதிலும் பாட்டுக்களும், வசனங்களும் உள்ளத்தை உருக்குமாறு பக்தி ரசத்துடன் அமைந்திருந்ததினால் மக்கள் அவற்றை நன்கு ரசித்தார்கள்.  

சங்கீத மும்மணிகளுள் ஸ்ரீ சாமா சாஸ்திரிகளின் கிருதிகளை அதிகமாகப் பாடம் செய்த ஓர் மத்துவப் பெரியார் ஸ்வாமிகளைத் தரிசிக்க ஒரு முறை வேலூரிலிருந்து வந்திருந்தார்.  அம்பிகையின் பேரில் அமைந்துள்ள அந்தக் கிருதிகளை முறைப்படி இனிய சாரீரத்துடன் அவர் பாடியதை ஸ்வாமிகள் கேட்டு ஆனந்தம் அடைந்து அவரைப் பதினைந்து நாட்கள் மடத்திலிருக்கச் செய்து ஒவ்வொரு நாளும் பூஜா காலத்தில் சந்நிதியில் அவரைக் கொண்டு அந்தக் கீர்த்தனங்களைப் பாட உத்திரவிட்டார்கள்.  சாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளைப் பாடக் கேட்பதில் ஸ்வாமிகளுக்குத் தனிப்பட்ட அவா உண்டு.

மதுரையிலிருந்து சங்கீத வித்வான் ஒருவர் ஸ்வாமிகளைத் தரிசிக்க ஒரு முறை வந்திருந்தார்.  அவர் பெயர் கிருஷ்ண ஐயங்கார்.  அவர் ஸ்வாமிகளிடம் தமது வித்தையை வெளிப்படுத்த ஆவல் கொண்டார்.  ஸ்வாமிகளும் சுருதி பக்கவாத்யங்கள் எதுவுமில்லாமலேயே பாடும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.  அவர் பியா....

பக்கம் 43 .... தொடரும்....

கி.காளைராசன்

unread,
Feb 3, 2013, 11:38:33 PM2/3/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 41...
...கடை ராகத்தை ஒரு மணி நேரம் ஆலாபனம் செய்து பாட, ஸ்வாமிகள் இன்பத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  இந்த வித்வான் அந்த ராகத்தைப் பாடுவதில் நிபுணரென்றும் அவருக்குப் பியாகடை கிருஷ்ண ஐயங்காரென ஒரு சிறப்புப் பெயர் உண்டென்றும் பின்னர் தெரியவந்தது.

கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரும் ஸ்வாமிகள் முன்னிலையில் கச்சேரிகள் செய்து ஸ்வாமிகளது பாராட்டைப் பெற்றிருக்கிறார்.  வாளாடி கிருஷ்ண ஐயர் கச்சேரியும் பலமுறை ஸ்வாமிகள் சந்நிதானத்தில் நடைபெறுவதுண்டு.  மைசூர் பிடாரம் கிருஷ்ணப்பா, வீணை சேஷண்ணா, வீணை சுப்பண்ணா முதலான மகா வித்வான்கள் அக்காலத்தில் தஞ்சைப் பக்கம் வரும்போதெல்லாம் ஸ்வாமிகளைத் தரிசித்து மடத்தில் கச்சேரிகள் செய்து விட்டுப் போவது வழக்கம்.  கோட்டு வாத்யம் என்னும் மகாநாடக வீணையைக் கையாளுவதில் மிகவும் பிரசித்தியாக அந்நாளில் விளங்கியவர் சகாராம் ராயர் என்பவராவர்.  அவர் திருவிடைமருதூரில் வசதித்து வந்தார்.  அவரும் ஸ்வாமிகளின் முன்னிலையில் பலமுறை கச்சேரிகள் செய்து ஸ்வாமிகளிடமிருந்து சன்மானங்களைப் பெற்றிருக்கிறார்.  பம்பாய் காந்தர்வ மகா வித்யாலயத்தின் அதிபர் பண்டித விஷ்ணு திகம்பர் என்பவர் அக்காலத்தில் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஓர் மகா வித்வானாக விளங்கிவந்தார்.  அதனுடன் அவர் ஓர் உயரிய பாகவதோத்தமருமாவர்.  அவர் தமது பெரிய பக்த கோஷ்டியாருடன் ஸ்வாமிகளைத் தரிசித்து அவர்களின் முன்னிலையில் வடநாட்டுச் சம்பிரதாயமான பஜனையைச் செய்தார்.  பக்தி பரவசத்துடன் அமைந்திருந்த அந்த பஜனையை ஸ்வாமிகள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

பெண் வித்வான்கள் கச்சேரிகள் செய்யும்பொழுதோ, தனிமையில் பாடும்பொழுதோ ஸ்வாமிகள் நேரில் அமர்ந்து கேட்பது வழக்கமில்லை.  அவ்வாறு கேட்பது அவர்களது ஆச்ரம தருமத்திற்கு விரோதமாகையால், பெண்மணிகளின் சங்கீதக் கச்சேரிகள் மடத்தில் நிகழ்வதற்கு அதிகச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை.  ஆயினும் வீணை தன அம்மாள், பெங்களூர் நாகரெத்தினம் அம்மமாள் அவர்களைப் போன்ற சில வித்வம்ஸினீகள் ஸ்வாமிகளது பிரத்யேக அனுமதியைப் பெற்று மடத்தில் கச்சேரிகள் செய்துள்ளார்கள்.  இவர்களைப் பூஜா காலத்தில் ஸ்வாமி ஸந்நிதானத்தில் இருந்து....

பக்கம் 44... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Feb 5, 2013, 2:01:22 AM2/5/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 41...
...தங்கள் வித்தையை அர்ப்பணம் செய்யும்படி ஸ்வாமிகள் உத்திரவிடுவார்கள்.  அப்பொழுது ஸ்வாமிகள் பூஜையிலமர்ந்திருப்பார்களாதலால் ஸ்வாமிகள் முன்னிலையிலும் இந்தத் தெய்வீகக் கலையை வெளிப்படுத்த அவர்களுக்கும் வாய்ப்பு நேருவதுண்டு.  மற்றும் சில பெண்மணிகளும் இவ்வாய்ப்பை அடைந்துள்ளார்கள்.  இவ்வரிசையில் இக்கால வித்வம்ஸினீகளான ஸ்ரீமதி பட்டம்மாளையும், ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மியையும் குறிப்பிடலாம்.  அவர்களும் ஸ்வாமிகளின் சந்நிதானத்தில் தங்கள் கலையை அர்ப்பணம் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றுள்ளார்கள்.

இக்கால சங்கீத வித்வான்கள் பலரும் ஸ்வாமிகளின் முன்னிலையில் கச்சேரிகள் செய்து அவர்களது ஆசியைப் பெற்றுள்ளார்கள்.  அவர்கள் எல்லோரைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவதென்றால் தற்கால சங்கீத வித்வான்களின் பெயர்கள் அடங்கிய பெரியதோர் அட்டவணையாகவே இப்பகுதி அமைந்துவிடும்.  எல்லோர் மனஸையும் குளிரச் செய்யும் வகையில் ஹாஸ்யமாகவும், அர்த்தபுஷ்டியுடனும் ஸ்வாமிகள் வார்த்தைகள் சொல்லும் திறன் படைத்தவர்களாதலால் ஸ்வாமிகளது முன்னிலையில் பெரிய வித்வான்களின் சங்கீதக் கச்சேரிகள் நடைபெறும்பொழுது ஸ்வாமிகளது திருவாக்கிலிருந்து அவ்வப்போது வரும் சொற்களை யாவரும் ஆவலுடன் நோக்கியிருப்பர்.

இசையில் சமஸ்கிருத இசை, தெலுங்கு இசை, கன்னடஇசை, தமிழ் இசை என்ற பாகுபாடுகள் ஸ்வாமிகளது உள்ளத்தில் என்றுமே தோன்றியதில்லை.  முத்துஸ்வாமி தீக்ஷிதர் கம்பீரமாகச் சம்ஸ்கிருதத்தில் பாடியதும், இராமதாஸ் ஸ்வாமிகள், ச்யாமா சாய்திரிகள், தியாகய்யர் இவர்கள் அழகிய தெலுங்கில் பாடியதும், புரந்தர தாஸர் இனிய கன்னடத்தில் பாடியதும், அருணாசல கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை, கோபாலகிருஷ்ணபாரதி, வேதநாயகம் பிள்ளை முதலானோர் தேன் மொழியான தமிழ் மொழியில் பாடியதும் ஒரே கடவுளைக் குறிப்பிடுவதால் இவர்கள் இயற்றிய கீர்த்தனங்கள் யாவற்றையும் எவ்வித ஏற்றத் தாழ்வுமில்லாமல் ஸ்வாமிகள் ரசித்து வருவார்கள்.  பக்தர்கள் உள்ளம் உருகிப் பாடியது எந்த மொழியில் இருந்தாலும் அவையாவும் ஏற்றுக் கொள்ளத் தக்கவைதாம் என்பதே ஸ்வாமிகளது திருவுள்ளத்தின் சம்மதமாகும்.  வேதநாயகம் பிள்ளை கீர்த்....

கி.காளைராசன்

unread,
Feb 5, 2013, 5:36:27 AM2/5/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 41...
பக்கம் 45....
...தனங்களில் ஸ்வாமிகளுக்கு ஒரு விசேஷ பற்று உண்டு.  தமிழ்க் கீர்த்தனங்கள் பல பாடியுள்ள பாபநாசம் சிவனுக்கு 1950-ஆவது ஆண்டில் நடைபெற்ற அவரது சஷ்டியப்த பூர்த்தியின் பொழுது ‘சிவபுண்யகான மணி‘ என்னும் பட்டத்தை ஸ்வாமிகள் அளித்துத் தமிழ் இசையைப் பெருமைப் படுத்தியுள்ளார்கள்.

தக்ஷிணாமூர்த்தி பிள்ளை மிருதங்க வாத்யத்துடன் கூடின காரைக்குடி சகோதரர்களின் வீணை வாசிப்பை தேவகானத்திற்கே ஒப்பிடல் வேண்டும்.  இந்தக் கோஷ்டியின் சங்கீத வினிகை இரண்டொரு முறை ஸ்வாமிகளின் சந்நிதானத்தில் நடைபெற்றதுண்டு.  இந்த வித்வான்களின் திறனை ஸ்வாமிகள் புகழ்ந்து அவர்களைப் பாராட்டியுள்ளார்கள்.  ஸ்வாமிகள் செட்டிநாட்டில் யாத்திரை செய்தபொழுது தக்ஷிணாமூர்த்தி பிள்ளை பக்தி மேலீட்டினால் ஸ்வாமிகளின் பேரில் சில பாட்டுக்களைக் கவனம் செய்து அவற்றை எழுதி மௌனத்துடன் ஸ்வாமிகளிடம் சமர்ப்பணம் செய்தார்.   அவற்றைத் தாம் படிக்க எண்ணம் கொள்வில்லையென்றும், ஸ்வாமிகளது திருக்கண்களினால் அவற்றைப் பார்வை யிட்டாலே போதுமென்றும் அவர் மேலும் விண்ணப்பித்துக் கொண்டார்.  புகழை விரும்பாத அவரது தூய எண்ணத்தைப் பற்றி ஸ்வாமிகள் பக்தர்கள் பலரிடம் தெரிவித்து அவரைப் பெருமைப்படுத்தினார்கள்.  மைசூரைச் சார்ந்தவரும், வீணை வாசிப்பதில் மிகப் புகழ் பெற்றவருமான வெங்கடகிரியப்பா என்னும் வித்வான் ஸ்வாமிகள் சந்நிதானத்தில் சில கச்சேரிகளை நடத்தியிருக்கிறார்.  அவருக்கு ஸ்வாமிகள் ‘வைணிகசிகாமணி‘ என்னும் பட்டத்தையும், இரட்டைச் சால்வை, இரட்டைத் தோடா இவைகளையும் பரிசாக அளித்தார்கள்.

மடத்திற்கு ஆஸ்தான சங்கீத வித்வான் ஒருவரை நிரந்தரமாக நியமனம் செய்யவேண்டுமென ஸ்வாமிகள் எண்ணம் கொண்டு, ஸ்ரீவாஞ்சியம் இராமச்சந்திர ஐயர் என்ற இளம் வித்வான் ஒருவரை 1952-ல் அப்பதிவியில் அமர்த்தி, அவருக்கு, ’ஆஸ்தான கீர்த்தனமணி‘ என்ற பட்டத்தையும் சூட்டியருளினார்கள்.

சங்கீத வித்வான்களின் பிராயத்திலும், திறமையிலும் இன்று தலைசிறந்து விளங்குகிறவர் மைசூர் வாசுதேவாசாரியார் ஆவர்.  இவர் கன்னடத்திலும், சம்ஸ்கிருதத்திலும் சிறந்த கீர்த்தனைகளை....
பக்கம் 46.... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Feb 6, 2013, 5:13:07 AM2/6/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 41...
...இயற்றும் வன்மை பொருந்தியவர்.  அவ்விரண்டு பாஷைகளிலும் இவர் நல்ல பாண்டித்யம் அடைந்து சங்கீத சாஸ்திரத்திலும், புராணங்களிலும் ஆராயச்சிகள் பல நடத்தியுள்ளார்.  இப்பொழுது சென்னையில் வசித்து வரும் இவர் காஞ்சீபுரத்திற்குச் சில சமயங்களில் சென்று ஸ்வாமிகளைத் தரிசித்துச் சங்கீத சம்பந்தமாகவும், தாம் நிகழ்த்தியுள்ள ஆராய்சிகளைப் பற்றியும் ஸ்வாமிகளிடம் உரையாடி வந்ததோடு தாம் இயற்றியுள்ள கீர்த்தனங்களைப் பாடியும் காட்டியுள்ளார்.  இவரிடம் ஸ்வாமிகளுக்கு மிகுந்த மதிப்பு உண்டு.  இந்த நூற்றாண்டில் சங்கீதத்தில் இவருக்கு நிகரான வித்வான் வேறு எவரும் இருந்ததில்லையென ஸ்வாமிகள் பக்தர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

கர்னாடக சங்கீதத்திற்குத் தனிச்சிறப்பைத் தவருவது நாதஸ்வர வாத்தியம்.  பாமரர்களும் அனுபவித்து ரசிக்கக் கூடிய அந்த வாத்தியத்தைக் கையாளுவது மிகவும் கடினம்.  பல பெரிய சங்கித வித்வான்கள் கூட நல்ல நாதஸ்வர வாசிப்பைக் கேட்டுத் தங்களது ஞானத்தைப் பெருக்கிக் கொள்வது வழக்கம்.  இந்த வாத்தியம் திமிரி என்னும் பெயருடன் சிறிய அளவிலும், மற்றும் நடுத்தர அளவிலும், பாரி என்னும் பெயருடன் பெரிய அளவிலும் அமைந்துள்ளன.  திமிரியும், பாரியும் சில குறிப்பிட்ட தேவஸ்தானதங்களில் கையாளப்படுகின்றன.  சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா நாதஸ்வரக்காரர்களாலும் கையாளப்பட்டு வந்த நடுத்தர அளவுள்ள வாத்தியமானது தற்காலம் மறைந்து வருகிறது. வித்வான்கள் வாத்தியத்தின் நீளத்தைத் தங்கள் சௌகரியத்தை முன்னிட்டு அதிகரித்துக் கொண்டுவிட்டார்கள்.  பூர்வகாலந்தொட்டு மடத்தில் வாசித்து வரும் நாதஸ்வரம் சுமார் 15 அங்குல நீளமுள்ள திமிரி வாத்தியமேயாகும்.  இந்த வாத்தியத்தைச் சென்ற நூற்றாண்டில் சுப்ரமண்யம் என்னும் ஒரு மகா வித்வான் மடத்தில் வாசித்து வந்தார்.  அக்காலத்தில் மிருதங்கமே திமிரி நாயனத்திற்குப் பக்க வாத்தியமாக அமைந்திருந்தது.  பூஜா காலத்தில் கும்பகோணம் மடத்தின் வெளித்திண்ணையில் அவர் அமர்ந்து நாதஸ்வரம் வாசிக்கும்போது தெருவில் நடமாடும் ஜனங்கள் அந்த வாத்தியத்திலிருந்து வெளிவரும் அபூர்வ நாதத்தையும், சுத்தமான சங்கீதத்தையும் அனுபவித்து மெய்ம்மறந்து மடத்தின் வாயில்முன் பெருங் கூட்டமாகக் கூடி....

பக்கம் 47...தொடரும் ....

கி.காளைராசன்

unread,
Feb 6, 2013, 4:40:59 PM2/6/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 41...
பக்கம் 47....
....விடுவார்களென முதியவர்கள் கூறியுள்ளார்கள்.  நமது ஸ்வாமிகள் காலத்திலும் மிகுந்த மேதையாக விளங்கி இளமையிலேயே மறைந்த நாராயணன் என்னும் வித்வானும், பின்னர் கும்பகோணம் கந்தஸ்வாமி நாதஸ்வரக்காரரும், அவர் குமாரர் இரத்தினமும், கும்பகோணம் சின்னையாவும் இந்த வாத்யத்தை நன்கு கையாண்டு வந்தார்கள்.  இன்றும் ஸ்வாமிகள் நித்ய பூஜைகளில் இந்தச் சிறந்த வாத்யமானது வாசிக்கப்பட்டு வருகிறது.

1934 - ஆவது ஆண்டில் ஸ்வாமிகள் காசிக்கு விஜயம் செய்த பொழுது அங்கு ஓர் ஹிந்துஸ்தானி சங்கீத மகாநாடு நடைபெற்றது.  அந்த மகா நாட்டிற்கு மடத்தின் நாதஸ்வர வித்வானையும், அழைத்திருந்தார்கள்.  ஸ்வாமிகளின் அனுமதியின்பேரில் அந்த மகாநாட்டில் அந்த வித்வான் திமிரி வாத்தியத்தில் சில ஹிந்துதானி அபூர்வ ராகங்களை வாசித்ததைக் கேட்ட அங்குக் கூடியிருந்த வடநாட்டு வித்வான்கள் யாவரும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.  நம் நாட்டில் தற்காலம் மிகப் பிரசித்தியாயுள்ள வித்வான்களும் ஸ்வாமிகளின் முன்னிலையில் நாதஸ்வரம் வாசித்து அவர்களது ஆசியைப் பெற்றுள்ளார்கள்.  ஸ்வாமிகளின் யாத்திரையுடன் வந்துகொண்டிருக்கும் நாதஸ்வர கோஷ்டியைச் சார்ந்த சுமார் ஆறு குடும்பங்களைச் சென்ற 40 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்வாமிகள் அன்புடன் ஆதரிந்து வருவது இங்குக் குறிப்பிடத்தக்கது.
..............

8. இருபத்தோராண்டு விஜய யாத்திரை
(1919 - 1939 தொடக்கம்)

நம் நாட்டிலுள்ள திவ்ய ஸ்தலங்களைத் தரிசிக்கவும், திவ்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்யவும், சிஷ்யர்களுக்கு ஸத்உபதேசங்களைச் செய்யவும் ஸ்வாமிகள் 1919-ஆவது வருடம் மாச்சு மாதம் சிவராத்திரி அமாவாசை அன்று கும்பகோணத்திலிருந்து யாத்திரை புறப்பட்டார்கள்.  இந்த யாத்திரையில் சுமார் 200 பேர்களுக்கு மேற்பட்ட சிப்பந்திகளும், 30 மாட்டுவண்டிகளும் மற்றும் யானை, குதிரை, ஒட்டகம், பசு முதலான கால்நடைகளும் தந்தச் சிவிகை....

பக்கம் 48... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Feb 7, 2013, 6:48:33 AM2/7/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
Inline image 1

scan0001.jpg

கி.காளைராசன்

unread,
Feb 10, 2013, 7:57:44 AM2/10/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
Inline image 1
scan0004.jpg

கி.காளைராசன்

unread,
Feb 13, 2013, 8:14:55 AM2/13/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 41...
...முதலான விருதுகளும் ஸ்வாமிகளைப் பின் தொடர்ந்தன.  அன்று காலை ஸ்வாமிகள் மடத்தின் பூஜா கிருகத்தின் தென் பிரகாரத்திலுள்ள விநாயகரை வணங்கி, மடத்தின் தோட்டத்தில் சமாதியடைந்திருக்கும் மூன்று பூர்வாசார்யர்களின் பிருந்தாவனங்களையும் தரிசித்து, அந்தணர்களுக்கு யாத்திரா தானம் வழங்கிக் காவிரி நதியின் பகவத் படித்துறை என்னும் ஸ்நான கட்டத்திற்கு மேற்குப் புறமாகப் படிக்கட்டுகளுடன் புதிதாக அமைக்கப்பெற்ற தருமக் கட்டிடத்தில், முதல் நாள் சந்திர மௌளீச்வரர் பூஜையைச் செய்தார்கள்.  (அந்தக் கட்டிடம் டிபுடி கலெக்டர் வி. துரைசாமி ஐயரின் புதல்வர் வி.டி. ஸ்வாமிநாத ஐயரின் முயற்சியினால் கட்டப் பெற்றதாகும்).  அன்று ஸ்வாமிகளுக்குப் பிக்ஷை பாத பூஜை முதலியவைகளை ஸ்ரீ ஸ்வாமிநாத ஐயரே செய்து வைத்தார்.  சுமார் நான்கு மாதங்கள் கும்பகோணத்திலுள்ள பக்தர்கள் ஸ்வாமிகளை அவரவர் இல்லங்களுக்கு வரவழைத்துப் பிக்ஷை, பாத பூஜை முதலான வழிபாடுகளைச் செய்தார்.

வேப்பத்தூரில் வியாஸ பூஜை சாதுர் மாஸ ஸங்கல்பம்
ஆஷாட (ஆனி அல்லது ஆடி) மாதத்தில் வரும் பூர்ணிமையை வியாஸ பூர்ணிமை எனக் கூறுகின்றோம்.  வேதாந்த சூத்திரங்கள் இயற்றிய வியாஸ பகவானைக் குறித்து அன்று பூஜை செய்யப்படுகிறது.  அவர் உலக ஆசாரியராகக் கருதப்படுகிறார். நம் நாட்டில் இந்தப் பூஜையை அநேகமாகச் சந்நியாசிகளே செய்துவருகிறார்கள்.  விந்திய மலைக்கு வடக்கே யுள்ள நாட்டில் இந்த நாளைக் குருபூர்ணமி என்று கூறி, அந்நாளில் ஒவ்வொருவரும் தங்கள் வித்யாகுருக்களை வணங்கி, அவர்களுக்குப் பாத காணிக்கைகள் செலுத்துகிறார்கள்.  தேவ வியாஸர் வேதங்களுக்குச் சாகைகளையும் பிரித்து இயற்றினவர்.  பிரும்மசூத்திரங்கள் ஜீவப்ரம ஐக்கியத்தைப் போதிக்கின்றன.  அந்தச் சூத்திரங்களுக்குச் சங்கரர், இராமாநுஜர், மத்துவர் இம் மூன்று ஆசாரியர்களும் பாஷ்யம் செய்துள்ளார்கள்.  இம்மூன்று ஆசாரிய புருஷர்களுக்கும் வியாஸபகவானே முதல் ஆசாரியராதலால் அந்த நாளை அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத சம்ப்ரதா யங்களைச் சார்ந்த சந்நியாசிகள் யாவரும் கொண்டாடுவது வழக்கமாயிருக்கிறது.

பக்கம் 49.... தொடரும்....

கி.காளைராசன்

unread,
Feb 15, 2013, 7:09:15 AM2/15/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 41...
காமகோடி மடத்தில் விசேஷ நாட்களில் இது ஒரு முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.  வியாஸ பூஜைக்கென ஒரு தனி மண்டபம் நிர்மாணிக்கப்பெற்று, அந்த மண்டபத்தின் மத்தியில் முழு அக்ஷதை பரப்பிய வெள்ளிப் பீடத்தில் கிருஷ்ண விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, அந்த விக்ரகத்தைச் சுற்றிலும் தேவதைகளையும், ரிஷிகளையும் குரு பரம்பரையில் வந்த ஆசாரியர்களையும் எலுமிச்சம் பழங்களில் ஆவாகனம் செய்து, அவர்கள் யாவருக்கும் தனித்தனியே பூஜைகள் நடத்தப்பெறும்.  கீதை 10-வது அத்யாயம் 37-ஆவது சுலோகத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவான் தாம் முனிவர்களுள் வேதவியாஸராக விளங்குவதாகக் கூறியிருப்பதற்கிணங்கி, வேத வியாஸருக்கு உரித்தான இந்தப் பூஜையைக் கிருஷ்ண பகவானுக்கே அர்ப்பணம் செய்வது மடத்தின் தொன்று தொட்ட வழக்கம்.  சுமார் 6 மணி நேரம் நடைபெறும் இந்தப் பூஜை முழுவதையும் ஸ்வாமிகள் தமது திருக்கரங்களினாலேயே செய்து முடிப்பார்கள்.  பூஜா காலங்களில் நாட்டின் முக்கியமான தேவலாயங்களிலிருந்து பிராசதங்களும், ராஜாக்கள், ஜமீந்தார்கள் முதலான பிரமுகர்களிடமிருந்து காணிக்கைகளும் மடத்திற்கு வந்து சேரும்.  ஆயிரக்கணக்கில் சிஷ்யர்களும் நாட்டின் பல பாகங்களிலிருந்து பூஜையைக் காண்பதற்கெனக் கூடுவார்கள்.

1919-ஆவது வருடத்து வியாஸபூஜையை கும்பகோணத்திற்குக் கிழக்கே ஐந்து, மைல் தூரத்திலுள்ள வேப்பத்தூரில் நடத்த வேண்டுமென்று அந்த ஊர் மகா ஜனங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஸ்வாமிகள் பூஜையை அங்கேயே வெகு விமரிசையாக நடத்தினார்கள்.  அந்த ஊரும் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளதால் ஸ்வாமிகள் தங்குவதற்கு வசதியுடன் இருந்தது.  வியாஸ பூஜைக்குப் பிறகு மழைக்கால மாதலால் சந்நியாசிகள் நான்கு மாதங்கள் அதே இடத்தில் தங்கியிருக்க வேண்டுமென்பது நியதி. மழைக்காலத்தில் சந்நியாசிகள் கால் நடையாக யாத்திரை செல்லும் பொழுது பூச்சிகள் முதலான சிறிய ஜீவஜந்துக்கள் அவர்கள் காலிற் பட்டு மரணமடையக் கூடும் என்பதற்காகவும், எவ்வித ஜீவஹிம்சையும் சந்நியாசிகள் செய்ய கூடாதென்பதற்காகவும், இந்த நியதி ஏற்பட்டுள்ள....(சில எழுத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை).....

பக்கம் 50... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Feb 15, 2013, 7:28:26 AM2/15/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 41...
...நான்கு மாதங்களையும் சாதுர்மாஸம் என்பர். அந்த நான்கு மாதங்களையும் நான்கு பக்ஷங்களாக வைத்துக் கொண்டு, சந்நியாசிகள் ஒரே ஊரில் ஆஷாட பூர்ணமியிலிருந்து இரண்டு மாதங்கள் தங்கிவருவது வழக்கமாயிருக்கிறது.  இவ்விதம் தங்குவதைப் பூர்ணமி அன்று சந்நியாசிகள் சங்கல்பமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.  இதற்குச் சாதுர்மாஸ சங்கல்பம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.  வேப்பத்தூர் மகா ஜனங்கள் அந்த இரண்டு மாதங்களிலும் ஸ்வாமிகளின் பரிவாரங்களுக்கும், ஸ்வாமிகளைத் தரிசிக்க வரும் சிஷ்ய கோடிகளுக்கும் ஏராளமான செலவில் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.  அவ்வருடத்து நவராத்திரி பூஜையும் அவ்விடத்திலேயே நடைபெற்றது.

இந்தப் பூஜைகளுக்குப் பிறகு, தஞ்சை ஜில்லாக் கிராமங்களில் யாத்திரை செய்து கொண்டு ஸ்வாமிகள் 1920-ஆவது வருடம் மார்ச்சு மாதம் கும்பகோணத்திற்கு அடுத்த சிறுகளத்தூருக்கு விஜயமானார்கள். அவ்வூர் பெரிய தனவந்தரான கன்னிவாடி ஜமீந்தார் கல்கத்தா என்.ஆர்.ஐயர் அவர்கள் தம் இல்லத்தில் ஸ்வாமிகளை வரவேற்று, விஜய யாத்திரை தினத்தின் முதல் வருடக் கொண்டாட்டத்தை அவ்வூரில் வெகு விமரிசையாக நடத்திவைத்தார்கள்.  பிறகு ஸ்வாமிகள் திருவாரூருக்கு எழுந்தருளினார்கள்.  திருவாரூரில் சிஷ்யர்கள் அவர்களது விஜயத்தை மிகுந்த சிறந்த முறையில் கொண்டாடி ஸ்வாமிகளை வழிபட்டார்கள்.  அங்கு அவர்கள் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் ஸ்வாமிகள் தியாகராஜ ஸ்வாமி ஆலயத்திற்கு ஸ்வாமி தரிசனத்திற்காகச் சென்று வருவார்கள்.

1920-ல் மஹோதய புண்யகாலம்
1920-ஆவது வருஷம் ஏற்பட்ட மஹோதய புண்ய காலத்திற்கு ஸ்வாமிகள் வேதாரண்யத்திற்கு விஜயம் செய்து, சமுத்திர ஸ்நானங்களைச் செய்து கொண்டு, அவ்விடம் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள்.  மஹோதய ஸ்நானம் கோடிக் கரையில் நடந்தது.  ஆதி ஸேது எனக் கூறப்படும் இந்தத் தலத்தின் அருகிலுள்ள அகத்தியம்பள்ளி முதலான க்ஷேத்திரங்களையும் ஸ்வாமிகள் அப்பொழுது ...... செய்து கொண்டார்கள்.  அங்கிருந்து ஸ்வாமிகள் நாகப்....

பக்கம் 51.... தொடரும்....

கி.காளைராசன்

unread,
Feb 20, 2013, 7:44:28 AM2/20/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 41...
...பட்டினத்திற்கு விஜயம் செய்து, அவ்விடம் பொதுமக்களால் நன்கு வரவேற்கப்பட்டு நீலாயதாக்ஷி அம்மன் கோயிலில் தங்கினார்கள்.  கோயிலில் ஸ்வாமிகளை வரவேற்கும்பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்குக் கூடியிருந்தனர்.  நாகை நீலலோசனி பத்திராதிபர் ஜி.சதாசிவம் பிள்ளை ஸ்வாமிகளின் பேரில் ஐந்து பாட்டுக்கள் தொகுத்து அக் கூட்டத்தில் படித்தார்.

மாயவரத்தில் 1920- ஆவது வருடத்து வியாஸ பூஜை
1920-ஆவது வருடத்து வியாஸ பூஜையை ஸ்வாமிகள் மாயவரத்தில் நடத்திப் பின்னர் மூன்று மாதங்கள் அவ்விடம் தங்கியிருந்ததும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.  அப்பொழுது பள்ளிகளில் பயிலும் பிரம்மசாரிச் சிறுவர்கள் சுமார் முந்நூறுபேருக்கு வேத வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.  அவர்கள் யாவரும் சூரியயோதயத்திற்கு முன்பு காவிரியில்  நீராடி, சந்தியாவந்தனம் செய்து, ராஜான் தோட்டத்தில் அமைந்திருந்த கொட்டகைகளில் சமிதாதானம் என்னும் ஹோமத்தைச் செய்து, தகுந்த ஆசிரியர்கள் மூலம் வேதப் பயிற்சி பெற்றுவந்த அழகை அன்று  கண்டவர்கள் என்றும் மறப்பதற்கில்லை.  அப்பொழுது அந்த இடம் பழமையான ரிஷி ஆசிரமங்களையும் அவைகளில் பயின்ற ரிஷி புதல்வர்களையும் நினைவிற்குக் கொண்டு வந்தது.  2-11-1920 அன்று, அப்பொழுதிருந்த தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ பண்டார சந்நிதிகள் ஸ்வாமிகளை மாயவரத்தில் சந்தித்து அவர்களுக்குத் தக்க மரியாதைகளைச் செய்தனர்.

ஸ்வாமிகள் மாயவரத்தில் தங்கியிருந்த பொழுது குரானில் நல்ல தேர்ச்சி பெற்ற இஸ்லாமியர் ஒருவர் ஸ்வாமிகளிடம் நேரில் உரையாட வேண்டுமென்ற அவாவைத் தெரிவித்தார்.  அவரோ இரண்டு கண்களும் தெரியாதவர்.  ஆனால் நல்ல  சொல்வன்மை படைத்தவர்.  ஸ்வாமிகள் அவரை மாலை நான்கு மணிக்கு வரும்படி கட்டளையிட்டிருந்தார்கள்.  அதன்படி குறித்த காலத்திற்கு மடத்திற்கு அவர்  வந்து சேர்ந்தார்.  அப்பொழுது வித்வான்களின் சபை ஒன்று கூடியிருந்தது.  இந்துமதத் தத்துவங்களைப் பற்றி அந்த வித்வான்கள் விளக்கம் செய்து கொண்டிருந்தார்கள்.  பக்தர்களின் கூட்டமும் அதிகமாயிருந்தது.  வித்வான்கள் பேசி முடித்ததும், ஸ்வாமிகள் இஸ்லாமியரைத் தம் பக்கத்தில் ......(சில எழுத்துக்கள் கிடைக்கப் பெற வில்லை)....

பக்கம் 52... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Feb 26, 2013, 6:56:38 AM2/26/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 51....

பக்கம் 52...
...அவரது மதத்திலுள்ள பொதுவான தர்மங்களைப் பற்றி விவரிக்கும்படி கட்டளையிட்டார்கள்.  அவர் ஸ்வாமிகள் வீற்றிருந்த இடத்தை நோக்கி ‘மகான்களாகிய தங்கள் முன்னிலையில் நான் என்ன சொல்லப்போகிறேன்? எல்லா மதங்களும் முடிவில் கடவுளையடையும் மார்க்கத்தையே கூறுகின்றன.  அவனைவிடப் பெரிய வஸ்து எங்குமில்லை.  தங்களிடம் அக்கடவுளை நான் என் உள்ளத்தில் காண்கிறேன்.  எவ்விடத்தில் அன்பு இருக்கிறதோ அவ்விடத்தில் கடவுளைக் காணலாம்.‘ எனக்கூறிவிட்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்.  அப்பொழுது அங்குக் கூடியிருந்தோர் யாவரும் அந்த இஸ்லாமியரின் பக்தியைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

அவ்வருட நவராத்திரி பூஜை ஆனைதாண்டவபுரத்தில் நடைபெற்றது.  அவ்விழாவிற்குப் பின் ஸ்வாமிகள் மாயவரம், சீகாழி தாலூகா கிராமங்களில் விஜயம் செய்தார்கள்.  அப்பொழுது திருக்கடையூர், திருப்புன்கூர், வைத்தீச்வரன் கோவில் முதலிய க்ஷேத்திரங்களில் அவர்கள் ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டார்கள்.  வைதீச்வரன் கோவில் கட்டளை ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரத் தம்பிரான் அவர்கள் ஸ்வாமிகளைப் பூரண கும்பத்துடன் வரவேற்றுத் தேவஸ்தான மரியாதைகளுடன் தக்க முறையில் உபசரித்தார்.  பின்னர் 1920-ஆவது வருடம் மார்கழி மாதம் ஸ்வாமிகள் சீகாழியில் தங்கி, ஸ்ரீ சட்டநாத ஸ்வாமியைத் தரிசனம் செய்து கொண்டார்கள்.  இத்தலம் உமாதேவியார் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய பெருமை பெற்றதாகும்.  இந்த யாத்திரையில் சீகாழியைச் சுற்றியுள்ள எல்லாச் சிவ க்ஷேத்திரங்களையும் ஸ்வாமிகள் தரிசித்தார்கள்.  ஸ்வாமிகள் சீகாழியில் தங்கியிருத்த பொழுது, ஸ்ரீமான் சிதம்பரநாத முதலியார் தாம் நடத்திவரும் உயர்தரப் பள்ளிக்கு ஸ்வாமிகளை விஜயம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.  அதன்படி ஸ்வாமிகளும் அந்தப் பள்ளிக்கு விஜயம் செய்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உபதேச மொழிகளை அருளினார்கள்.  சிறந்த தருமமான வித்யாதானத்தைக் குழந்தைகளுக்கு முதலியார் அளித்து வருவதற்காக அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் ஸ்வாமிகள் மிகவும் பாராட்டினார்கள்.  சீகாழியில் ஸ்வாமிகள் தங்கயிருந்தபொழுது குன்னம் சுப்பிரமணிய ஐயர்,.....(சில எழுத்துக்கள் கிடைக்கவில்லை)  சகோதரர் இரகுபதி ஐயர், வக்கீல் சுவேதாரண்ய ஐயர், ....

பக்கம் 53... தொடரும்....

கி.காளைராசன்

unread,
Feb 27, 2013, 5:42:21 AM2/27/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 51....
...வக்கீல் எஸ்.சுப்பிரமணிய ஐயர், தென்பாதி திருநாராயணபிள்ளை இவர்களும் இன்னும் மற்றும் பல பிரமுகர்களும் மடத்தின் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  ஸ்வாமிகள் சீகாழிக்குத் கிழக்கேயுள்ள திருவெண்காடு என்னும் க்ஷேத்திரத்திற்கு விஜயம் செய்து அவ்விடம் சுவேதாண்யசுவரரைத் தரிசனம் செய்து கொண்டார்கள்.  அத்தலத்திலேயே நிர்விகல்ப சமாதியிலிருக்கும் காமகோடி பீடத்தின் 57-ஆவது ஆசாரிய ஸ்வாமிகளான பரம சிவேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தையும் அவர்கள் தரிசித்துக் கொண்டார்கள்.  அந்தப் பரமசிவேந்திர ஸ்வாமிகள் ஸ்ரீசதாசிவ ப்ரும்மத்தின் ஞானகுருவாக விளங்கியவர்கள்.

ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாரத பூமியிலுள்ள நூற்றெட்டு வைணவத் திருப்பதிகளில் பன்னிரண்டு திவ்ய தேசங்கள் சீகாழி தாலுகாவில் அமைந்துள்ளன.  அவையாவன-
1. தாடாளங்கோயில்
2. திருநகரி
3. திருநாங்கூர்
4. வைகுந்த விண்ணகரம்
5. அரிமேய விண்ணகரம்
6. செய்கோயில்
7. திருத்தெற்றி அம்பலம்
8. திருமணக்கூடம்
9. பார்த்தன்பள்ளி
10.திருக்காவளம்பாடி
11.திருவள்ளகம்
12.திருத்தேவனார்தொகை.

இந்தத் திவ்ய தேசங்களையெல்லாம் ஸ்வாமிகள் தரிசித்து ஆங்காங்குப் பெருமாளைச் சேவித்துக் கொண்டார்கள்.  பின்னர் ஸ்வாமிகள் காவிரிப்பூம்பட்டினம் சென்று காவிரி ஆறு கடலில் சேரும் இடத்தில் நீராடினார்கள்.

1921-ஆவது மகாமகம்
1921-ஆவது வருடத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகத்தின் பொழுது ஸ்வாமிகள் தாராசுரத்திற்குப் பக்கத்திலுள்ள பட்டீச்வரம் என்னும் தலத்தில் பழமையான சிவாலயத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள்.  அப்பொழுது மகாமகம் நேர, ஸ்வாமிகள் அதற்காகக் கும்பகோணம் சென்றார்கள்.  1919-ல் ஸ்வாமிகள் சங்கல்ப யாத்திரை தொடங்கிவிட்டதால், கும்பகோணத்திலுள்ள தம் மடத்திற்கு அப்பொழுது விஜயம் செய்யவில்லை.  மடத்தில் வழக்கம்போலத் தேப்பெருமா நல்லூர் சிவன் அவர்களது சமாராதனை மிகச் சிறப்பாக நடந்தேறியது.  மகாமகக்குளம் தென்கரையிலுள்ள மண்டபத்தில் ஸ்வாமிகள் தங்கி, தடாகத்தில் மகாமகத்தன்று ஸ்நானம் செய்தார்கள்  பல்லாயிரங்கணக்கான சிஷ்யர்கள் ஸ்வாமிகளை அப்பொழுது தரிசித்துக் கொண்டாடனர்.

பக்கம் 54... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Mar 1, 2013, 6:40:57 AM3/1/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 51....
பக்கம் 54....
பாரத நாட்டில் மிகவும் மகிமை வாய்ந்த இத்தத் தடாகத்திற்கு ஓர் மைய்ய மண்டபம் இல்லாததை ஸ்வாமிகள் உணர்ந்து, அந்நாளில் தேசப் பணியில் ஈடுபட்டவரும், தண்ணீர்க் குன்னம் உடையார் வம்சத்தைச் சோந்தவருமான இராமபத்திர உடையாரிடம் இப்பணியைச் செய்து முடிக்கும்படி சொல்லி, அதற்காக ரூபாய் ஐந்நூறு மூலதனமாக மடத்திலிருந்து கொடுக்கம்படி ஸ்வாமிகள் உத்திரவிட்டார்கள்.  பொது ஜனங்களிடம் மேலும் பொருள் சேர்த்து உடனே ஒரு சிறு மண்டபம் கட்ட முயற்சி எடுக்கப்பட்டது.  தண்ணீர் மட்டத்திற்கு மேல் ஒரு மேடை மட்டும் தான் இதுவரை அவ்வேலை முடிந்துள்ளது.

அந்த மகாமகத்தில் பொதுஜன சேவை செய்யச் சென்னை முஸ்லீம் இளைஞர் சங்கத்திலிருந்து சுமார் இருநூறு தொண்டர்கள் கும்பகோணத்திற்கு வந்திருந்தார்கள்.  ஜனக் கூட்டத்தில் அவர்கள் செய்த ஒப்பற்ற பணியை ஸ்வாமிகள் நேரில் கண்டு மகிழ்ந்தார்கள்.  அவர்கள் யாவரும் இருபத்திரண்டு வயதிற்குட்பட்ட வாலிபர்கள்.  நல்ல திடகாத்திரம் படைத்தவர்கள்.  தொண்டாற்றும் ஆவல் அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.  அவர்களை நேரில் கண்டு அருள்புரிய வேண்டுமென்று ஸ்வாமிகளுக்கு ஓர் எண்ணம் உதித்தது.  ஸ்வாமிகள் விருப்பப்படி அவர்கள் யாரும் மடம் முகாம் செய்திருந்த பட்டீச்வரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.  அவர்களுக்கு மடத்தில் நல்ல உணவளிக்கப்பட்டது.  ஸ்வாமிகள் அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசி அவர்களுடைய பெற்றோர்களைப் பற்றியும், கல்வியைப் பற்றியும் அன்புடன் விசாரித்தார்கள்.   அவர்கள் சேவையைப் பாராட்டி ஒரு வெள்ளிக் கோப்பையை ஸ்வாமிகள் அவர்களது சங்கத்திற்கு அப்பொழுது பரிசாக அளித்தார்கள்.  அவ்வருட மகாமகத்தில் காங்கிரஸ் தலைவர் பந்துலு ஐயரின் தலைமையிலும் பல தொண்டர்கள் நல்ல பணியாற்றினார்கள்.  அத்தொண்டர்களையும் ஸ்வாமிகள் நேரில் பாராட்டி, அவர்களுக்கும் ஒரு வெள்ளிக் கோப்பையைப் பரிசாக அளித்தார்கள்.

அம்மகாமகத்தின் பொழுது கும்பகோணத்திற்கு வந்திருந்த பழுத்த தேசபக்தரான சுப்ரமணியசிவம் என்பவர் தம் உடல் நிலையையும் பொருட்படுத்தாது பட்டீச்வரம் வந்து ஸ்வாமிகளைத் ....(சில எழுத்துக்கள் கிடைக்கவில்லை) வேண்டி ஜனக்கூட்டத்தினிடையே ஓர் புறத்தில் காத்து....

பக்கம் 55... தொடரும்....

கி.காளைராசன்

unread,
Mar 3, 2013, 8:02:23 AM3/3/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 51....
...நின்றார்.  ஸ்வாமிகள் அவரை அதற்கு முன் சந்திக்கவில்லை.  ஆயினும் வெகு தூரத்தில் நின்று கொண்டிருந்த அவரைக் கண்டவுடன் தொண்டர்களை அனுப்பி அவரைத் தம்மிடம் அழைத்து வரச் செய்தார்கள்.  தன்பால் ஸ்வாமிகளுக்கு ஏற்பட்ட கருணையைக் கண்டு சிவம் உள்ளம் பூரித்தார்.  தேசத்தின் விடுதலையில் பூரணமாக ஈடுபட்டிருந்த அவர் அப்பொழுது துறவிக்கான காஷாய உடையைத் தரித்திருந்தார்.  அந்நிய ஆட்சியிலிருந்து பாரத பூமியானது சீக்கிரம் விடுபட வேண்டுமென்றும், மக்கள் எல்லோரும் கடவுள் பக்தியோடு இருக்க வேண்டுமென்றும், இவ்விரண்டிற்கும் ஸ்வாமிகளின் ஆசி பரிபூரணமாகத் திகழ வேண்டுமென்றும் அவர் ஸ்வாமிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டடார்.  அவ்விதமே நடைபெறுமென்று ஸ்வாமிகள் அருள் புரிந்தார்கள்.

அந்த வருடத்து வியாஸ பூஜையையும் சாதுர்மாஸ சங்கல்பத்தையும், ஸ்வாமிகள் குற்றாலத்துக்குச் சமீபமுள்ள கதிராமங்கலத்தில் நிறைவேற்றினார்கள்.  அதற்கடுத்த ஒரு வருடம் தஞ்சை ஜில்லா சீகாழி, மாயவரம், நன்னிலம், மன்னார்குடி தாலுகாக் கிராமங்களில் விஜய யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அப்பொழுது ஸ்வாமிகள் காவிரியின் வடகரை, தென்கரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களையும், வைணவ திவ்ய தேசங்கள் பலவற்றையும் தரிசித்து, ஒவ்வொரு ஆலயத்திலுள்ள விக்ரஹங்களுக்கும் பட்டுப் பீதாம்பரம் அணிவித்து வழிபட்டார்கள்.  எவ்வளவு சிறிய ஆலயமாயினும் அது ஸ்வாமிகளின் கவனத்தைக் கவராமல் இருந்ததில்லை.

ஹரிஜனங்களுக்குத் தரிசனம் அளித்தது
தஞ்சை ஜில்லாவில் ஸ்வாமிகள் யாத்திரை செய்து கொண்டிருந்தபொழுது குடவாசலிலிருந்து கொரடாச்சேரி செல்லும் மார்க்கத்தில் செல்லூர் என்னும் கிராமத்தில் ஹரிஜனங்கள் முதியோர், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 200 பேர்கள் நீராடி, விபூதி அணிந்து, ஸ்வாமிகளைத் தரிசிப்பதற்காகச் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.  அவர்களைக் கண்டதும் ஸ்வாமிகள் தமது சிவிகையை நிறுத்தும்படி உத்தரவிட்டு, சிவிகையிலிருந்து கீழே இறங்கி, அவர்கள் யாவருக்கும் தரிசனம் அளித்தார்கள்.  அப்பொழுது ஸ்வாமிகள் அவர்களைப் ....(சில எழுத்துகள் கிடைக்கவில்லை)....

பக்கம் 56...
...களின் எஜமானர்களான மிராசுதார்கள் அவர்களை அன்புடன் நடத்துகிறார்களாவென்றும், அவர்கள் ஆகாரத்திற்குப் போதுமான தானியத்தைக் கொடுக்கிறார்களாவென்றும் கேட்க, அவர்கள் ஆகாரத்திற்குக் குறைவில்லாமல் தங்களுக்குத் தான்யம் கிடைக்கிறதென்றும் தாங்கள் சந்தோஷமாகவே வாழ்ந்துவருவதாகவும் தெரிவித்தனர்.  மேலும் ஸ்வாமிகள் அவர்கள் செய்துவரும் கடவுள் வணக்கங்களைப் பற்றியும் கேள்விகளைக் கேட்டார்கள்.  அவர்கள் விசேட நாள்களில் தங்கள் ஜாதித் தெய்வங்களுக்குப் பூஜை போடுவதாகவும், காலர, அம்மை முதலான நோய்கள் வரும்பொழுது வழக்கமாகத் தெய்வங்களுக்குப்  பூஜையிட்டு வீடுகளைச் சுத்தமாய் வைத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்கள்.  ஸ்வாமிகள் மடத்துக் காரியஸ்தர்களைப் பக்கத்திலுள்ள குடவாசலுக்கு அனுப்பிப் புதுஆடைகள் வாங்கிவரச் செய்து, அவற்றை அவர்களுக்கு அளித்து அவர்களை ஆசிர்வதித்தார்கள்.  ஸ்வாமிகளின் கருணையைக் கண்டு அவர்கள் அகமகிழ்ந்தனர்.  வெகு நேரம் ஸ்வாமிகளை அவ்விடம் தங்க வைத்துவிட்டதற்காக அவர்கள் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள்.  இவ்விதம் ஸ்வாமிகள் விஜய யாத்திரை செல்லும் பொழுது, பாதைகளில் ஹரிஜனங்களைக் காண நேரரும்போதெல்லாம் சிவிகையை நிறுத்தச் செய்து அவர்களுக்குத் தரிசனம் கொடுத்து நல்வாழ்த்துக் கூறிச் செல்வது வழக்கம்.

அவ்வாண்டு கதிராமங்கலத்தில் சாதுர்மாஸ சங்கல்பம் முடித்துக் கொண்ட பிறகு ஸ்வாமிகள் நன்னிலம் தாலுகாவிலுள்ள கிராமங்களில் விஜய யாத்திரை செய்யத் தொடங்கினார்கள்.  அந்தத் தாலுகாக்களில் வசிக்கும் 18 கிராமத்து வாத்திமர்கள் என்று கூறப்படும் அந்தணப் பிரிவைச் சார்ந்தவர்கள் தங்கள் கிராமங்களுக்கு ஸ்வாமிகளை விஜயம் செய்ய வேண்டுமென விண்ணப்பித்துக் கொண்டனர்.  வாத்திமர் எனப்படுகின்றவர்கள், தமிழ்நாட்டு அந்தணர்களில் சிறியதோர்பிரிசை சார்ந்தவர்கள்.  சுமார் ஆயிரம் குடும்பங்களைக் கொண்டு அவர்களது சமுகம் விளங்குகின்றது.  ஆனைதாண்டவபுரம், கோனேரிராஜபுரம், சிப்பராஜபுரம், விஷ்ணுபுரம், தேதியூர், முடிகொண்டான், .....(எழுத்துக்கள் கிடைக்கவில்லை), அரசவனங்காடு, முழையூர், புலியூர் முதலான....

பக்கம் 57...
கிராமங்கள் வாத்திமர் கிராமங்களாகும். ஆசாரத்தையும், சீலத்தையும் இவர்கள் கைக்கொண்டவர்கள்.  அவற்றுடன் லஷ்மீ கடாக்ஷமும் பெற்று நல்ல வசதியுடன் வாழ்கின்றவர்கள்.   செட்டாகவும், கட்டுப்பாடாகவும் இருந்து எளிய முறையில் வாழ்க்கையை நடத்துகின்றவர்கள்.  அப்படியிருந்தும் அவசியமான சந்தர்ப்பங்களில், கோவில் திருவிழாக்களையும் வைதீக காரியங்களையும், அவர்கள் தம் இல்லங்களில் நடைபெறும் கலியாணங்களையும் ஏராளமான பணச் செலவில் மிகச் சிறப்புடன் யாவரும் மெச்சத் தக்கவாறு செய்து முடிப்பார்கள்.  வேதம் ஓதுபவர்களையும், மற்றும் சாஸ்திரம் கற்றவர்களையும் இச்சமுகத்தார் மிகப் பரிவுடன் ஆதரித்து வருகின்றனர்.  சுமர் 70 ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரத்திலும்,புதுக்கோட்டையிலும் திவான் உத்தியோகம் வகித்து வந்த சர்.ஏ.சேஷையா சாஸ்திரிகள் இந்த மரபைச் சார்ந்தவர்களாவார்.  இப்பொழுது அவருடைய சுவீகார புதல்வரின் பேரன். அ.சேஷையா சாஸ்திரி என்பவரே நமது ஸ்வாமிகளிடம் அதிகாரம் பெற்று மடத்தின் ஸ்ரீகார்யம் என்னும் உயர்ந்த பதவியை வகித்து வருகிறார்.  கும்பகோணம் அத்வைத சபையின் ஸ்தாபகர்களில் ஒருவரான கோனேரி ராஜபுரம் சாம்பசிவ ஐயர் என்னும் பெரியார் இவ்வாத்திமர் வகுப்பைச் சார்ந்தவராவர்.   இவர் கும்பகோணத்தில் ஸ்ரீவித்யா அச்சுக்கூடம் என்னும் ஓர் அச்சுக் கூடத்தை அமைத்து, அத்வைதசித்தி, சித்திப் பிரம்மாநந்நிதயம், அப்பய்ய தீஷிதரது சிவத்தத்துவ விவேகம் முதலிய நூல்களை வெளியிட்டார்.  பெரிய வாத்திமக் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஸ்வாமிகள் சுமார் ஒவ்வொரு மாதத்திற்கு மேல் தங்கி அவர்கள் பக்தியுடன் செய்துவைத்த பிக்ஷை, பாதபூஜை முதலியவற்றை ஏற்றுக் கொண்டார்கள்.

நன்னிலம் தாலுகாவிலுள்ள கிராமங்களில் யாத்திரையை முடித்துக் கொண்டு ஸ்வாமிகள் மன்னார்குடி தாலுகாவிலுள்ள கிராமங்களில் பெரும்பான்மையாக யாத்திரையைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.  ஸ்வாமிகள் விஜயம் செய்த ஒவ்வொரு ஊரிலும் சமுகத்தினர் யாவரும் மிகவும் ஒற்றுமையுடன் ஸ்வாமிகளது பணியில் ஈடுபட்டிருந்தனர்.  மன்னார்குடி....(சில எழுத்துகள் கிடைக்கவில்லை)...

பக்கம் 58..... தொடரும்....

Geetha Sambasivam

unread,
Mar 3, 2013, 8:36:14 AM3/3/13
to mint...@googlegroups.com

2013/1/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>

பக்கம் 25....
ஆச்சரியத்தையே அளிக்கும்.  காலஞ்சென்ற கீர்த்தனாச்சாரிய ஸி.ஆர்.சீனிவாச ஐயங்கார் அக்காலத்தில் அடிக்கடி ஸ்வாமிகளிடம் வந்து போவதுண்டு.  மகாராஷ்டிர பாஷையையும் அதிலுள்ள நூல்களையும் கற்பதில் ஸ்வாமிகளுக்கு அவா மிகுதியாய் இருந்ததால், பம்பாய் மாகாகணத்திலிருந்து மகாராஷ்டிர பண்டிதர் ஒருவரைத் தருவித்து மூன்று வருடங்களுக்கு மேல் அவரை மடத்தில் தங்கச் செய்து வைத்தனர்.  அவரிடம் ஸ்வாமிகள் பல மகாராஷ்டிர நூல்களையும் ஆராய்ச்சி செய்துள்ளார்.  தமிழில் ஸ்வாமிகளுக்கு இருந்த ஆர்வம் எல்லாவற்றையும் விட அதிகமாகும்.  ஓய்வு நேரங்களில் ஆஅவர்கள் சில புலவர்களின் துணைகொண்டு தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் பயின்று வந்தார்கள்.  தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், திருக்குறள் ஆகியவைகளையும் அவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தார்கள்.  கலைகளுக்குத் தனிமையான காலத்தை அவர்கள் ஒதுக்கிக் கொள்ளவில்லை.  கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களுடன் ஓய்வு கிடைக்கும் நேரங்களிலெல்லாம் பேசிக்கொண்டுவரும் பொழுதே, அக்கலைகளின் நுட்பங்களை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.  அவற்றுள் சங்கீதக்கலை ஸ்வாமிகளின் மனஸை மிகவும் கவர்ந்தது.

அடிக்கடி ஸ்வாமிகள் தம் பர்ணசாலையை விட்டு அகண்ட காவிரியின் நடுவில் அமைந்த திட்டுக்களுக்குச் சென்று, அவ்விடம் நெடுநேரம் தங்கி, இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்திருப்பார்கள், ஆஅநேக சமயங்களில் அவர்கள் தனிமையில் தியானத்திலும் அங்கு அமர்ந்து விடுவார்கள்.  இயற்கைக் காட்சிகளையெல்லாம் படம் பிடிப்பதில் ஸ்வாமிகளுக்கு மிகுந்த ஆசையுண்டு.  அக்காலத்தில் ஒருவர் போட்டோ காமிராவுடன் ஸ்வாமிகளைத் தெடாதொடர்ந்து வருவது வழக்கம்.  அவரைக் கொண்டு பல இயற்கைக் காட்சிகளைப் படம் எடுக்கும்படி ஸ்வாமிகள் கட்டளை இடுவார்கள். காமிராவிலிருக்கும் நுட்பங்களெல்லாம் ஸ்வாமிகளுக்கு நன்கு தெரியுமாதலால், படம் நன்றாக விழக்கூடிய ஆலோசனைகளைப் படம் பிடிப்போருக்கு ஸ்வாமிகள் அடிக்கடி கூறுவதுண்டு.  மேலும் மாற்றுக் கண்ணாடியைக் கழுவுதல், பிரதிகள் எடுத்தல், இவைகளிலும் தம் அரிய யோசனைகளை ஸ்வாமிகள் அவருக்குக் கூறுவார்கள்.  கணிதம், சோதிடம், வானசாஸ்திரம், இவைகளிலும் ஸ்வாமிகள் நல்ல விற்பன்ன...

பக்கம் 26...
...ராக ஆனார்கள்.  இவைகளில் பயிற்சி பெறுவதற்கென அவர்கள் திருவையாறு சுந்தரேச ச்ரௌதிகளின் சீடரான மரூர், இராமஸ்வாமி சாஸ்திரிகளைப் பல வருடங்கள் மடத்திலேயே இருக்கும்படி செய்து, அவரது குடும்பத்தையும் ஆதரித்து வந்தார்கள்.  தேவாரம் பாடம் கேட்பதில் ஸ்வாமிகளுக்கு ஆர்வம் அதிகம்.  நல்ல இசையுடன் பாடுகிறவர்கள் மடத்துக்கு வரும்பொழுதெல்லாம், ஸ்வாமிகள் பல மணி நேரம் அவர்களுடன் கூட இருந்து, தம் மனஸிற்கிசைந்த தேவாரங்கள் பலவற்றைப் பாடச்சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.  திருவாய்மொழி முதலிய வைணவப் பிரபந்தங்களிலும் ஸ்வாமிகளுக்கு நல்ல பற்று உண்டாயிற்று.

மகேந்திர மங்கலத்தில் நம் ஸ்வாமிகள் தங்கியது 1911 முதல் 1914வரையிலுள்ள காலமாகும்.  1914-இல் ஸ்வாமிகள் கும்பகோணம் திருப்பினார்கள்.  அவர்களுக்கு வித்தியாப்யாஸ இடமாயிருந்த மகேந்திரமங்கலத்தில், அதன் ஞாபகார்த்மாகக் காவிரியின் கரையில் ஒரு சங்கர ஆலயம் நிறுவப்பெற்றது.  ஸ்வாமிகள் மகேந்திர மங்கலத்திலிருந்து திரும்பியபோது அவர்களுக்குப் பிராயம் இருபது.  இக்காத்தினுள் அவர்கள் பல துறைகளிலும் அறிவு நிரம்பி விளங்கினார்கள்.  புராணங்கள், ஸ்தல வரலாறுகள், கல்வெட்டுக்கள் ஆகியவறைப் பற்றிய அறிவு, நவீன உலக ஞானம் ஆகிய பல துறைகளிலும் அவர்களுக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டிருந்தது.  ஒருமுறை அறிந்தவற்றை அவர்கள் என்றும் மறப்பதில்லை.  தம்மைக் காண வரும் அறிஞர்களிடமிருந்து தாம் அறிந்தவற்றோடு, தம் ஊகத்தால் ஒவ்வொரு அறிவின் தத்துவத்தையும் ஆராய்ந்து உண்மையைக் கண்டு கொள்வதில், நம் ஸ்வாமிகள் மகா மேதைகளுள் ஒருவராகத் திகழ்கின்றார்கள். பிறரோடு பழகும் திறமைகளிலும் ஒவ்வொருவருடைய தாரதம்யத்தைச் சீர்தூக்கி அறியும் நிபுணத்துவத்திலும் அவர்களுக்கு இணையாக மிகச் சிலரையே கூறலாம்.

ஸ்வாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபொழுது, சுமார் 30 மைல் தூரத்திலுள்ள கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருடத்திற் கொருமுறை விஜயம் செய்து, தஞ்சைப் பெரிய கோவிலின் அமைப்பில் கட்டப்பட்டுள்ள அவ்வாலயத்தின் மிகப் பெரிய சிவலிங்கத்தைத் தரிசித்து, சிதிலமடைந்த அக்கோவிலின் ...

பக்கம் 27...
..சிலாசாஸனங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்துவருவார்கள்.  இவ்வாராய்ச்சியில் ஸ்வாமிகளுக்கு உதவியவர்களில், சிலாசாஸன இலாகா பி.வி. ஜகதீச ஐயரையும், இஞ்சினீயர் அனந்தாழ்வாரையும் குறிப்பிடலாம்.  இவ்வாறு நம் ஸ்வாமிகள் தம் இருபதாவது பிராயத்துக்குள்ளேயே தம் பதவிக்கேற்ற வித்யா விலாஸத்துடன் விளங்கலானார்கள்.

5. 1911-முதல் 1915-வரையில் மடத்தின் நிர்வாகம்.
ஜில்லா கோர்ட்டு நிர்வாகத்தில் மடம்
அக்காலத்தில் ஸ்வாமிகள் மைராக இருந்ததால், அவர்களுக்கு இருபத்தோராவது பிராயம் பூர்த்தியாகும்வரையில், மடத்து நிர்வாகம் ஜில்லா கோர்ட்டின் பாதுகாப்பில் இருக்க வேண்டுமென்று மடத்தில் அக்கரைகறை கொண்ட சில சீடர்கள் சென்னை அரசாங்கத்தாருக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்கள்.  கோர்ட்டு நிர்வாகத்தில் கொண்டு வரக்கூடிய அளவில் மடத்தின் சொத்துக்கள் இல்லாமலிருந்தும், அதன் நன்மையைக் கருதி மடத்தைக் கார்டியன் அண்டு வார்ட்ஸ் சட்டப்படி நடத்தக் கோர்ட்டார் உத்திரவு இட்டார்கள்.  கோயம்புத்தூர் ஜில்லா கொளிஞ்சிவாடி கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீமான் ஸி.எச். வேங்கடரமண ஐயர் என்னும் பிரமுகர் கார்டியனாக நியமிக்கப்பட்டார்.  1911-ஆம் வருடம் முதல் 1915-ஆம் வருட மே மாதம்வரை, மடத்தின் நிர்வாகம் அவர் மூலம் நடைபெற்று வந்தது.  1915ஆம் வருடம் மே மாதம் நடைபெற்ற சங்கர ஜயந்தி அன்று, ஸ்வாமிகளுக்கு இருபத்தோராவது ஆண்டு பூர்த்தியாகவே, அன்று முதல் மடத்தின் நிர்வாகத்தை ஸ்வாமிகளே நேரில் ஏற்றுக் கொண்டார்கள். பெயரளவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளப்பட்டதே யொழிய, சர்வமுக்கியார்நாமா என்னும் அதிகாரம் பெற்ற ஏஜண்டு ஒருவராலேயே மடத்தின் நிர்வாகக் காரியங்களெல்லாம் கவனித்து வரப்பட்டன.  அக்காலத்தில், பாலப்பருவம் தொடங்கியே ஸ்வாமிகளிடம் விசேஷப் பற்றும் பக்தியும் கொண்டிருந்த திருப்பாதிரிப்புலியூர் வாசியான பசுபதி ஐயர் என்னும் சீடர் ஊதியமின்றி மடத்தின் நிர்வாகத்தை ஏற்று, எல்லாத் துறைகளிலும் திறம்பட பணியாற்றி வந்தார்.  பழைய கால வழக்கப்படி எந்தத் தஸ்தா....

பக்கம் 28...
...வேஜுவிலும் ஸ்வாமிகள் கையெழுத்திடுவதில்லை.  ஏஜண்டுகளுக்குப் பவர் கொடுக்கும் பொழுதும், மடத்தின் ஸ்ரீமுக முத்திரையே உபயோகப்படுத்தப்பட்டு வருவது வழக்கம்.

இந்த முறையில் 1915-ஆவது வருட சங்கர ஜயந்தி மடத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சீடர்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.  வேத நூல்களின் சாரங்களை யாவரும் எளிதில் அறியும் பொருட்டு, ஆரிய தருமம் என்னும் தமிழ்ச் சஞ்சிகையை மடத்தின் மாதவெளியீடாக அன்று ஸ்வாமிகள் ஆரம்பித்து வைத்தார்கள்.  ஸ்ரீரங்கம் வாணிவிலாஸ் அச்சகத்திலிருந்து ஸ்ரீ டி.கே. பாலசுப்ரமணிய ஐயர் மேற்பார்வையில் அந்தச் சஞ்சிகை உயரிய முறையில் வெளிவந்தது.  மடத்தின் நிர்வாகத்திலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.  சிஷ்யர்களின் நன்மையின் பொருட்டுப் பல பாஷைகளில் மடத்தின் சரித்திரம் வெளியிடப் பெற்றது.  மடத்திலுள்ள தாமிரப்பட்யங்கள் திருவனந்தபுரம் சிலாசாஸனப் பரிசோதகர் ஸ்ரீ டி.ஏ.கோபிநாத ராஜ் அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டுப் புத்தக வடிவமாக வெளிவந்தது.
---------------

6. நவராத்திரி உற்சவம்
லக்ஷதீபம், லக்ஷார்ச்சனை
1916-ஆவது வருடம் அக்டோபர் மாதத்தில் கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் நவராத்திரி விழாவானது மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகைக்கு லக்ஷார்ச்சனை செய்யப்படும், நெய்யினால் லக்ஷ விளக்குகள் ஏற்றப்பட்டும், லக்ஷம் பிராமணர்களுக்கு அன்னமளிக்கப்பட்டும் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவைப் பற்றி ஸ்ரீ சி.சுப்ரமண்ய பாரதியார் தமது கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“உலகத்தார் பராசக்தியை நல்ல மழை அருள்புரியும் சரத் காலத்தின், முதல் ஒன்பது இரவும், வணங்கிப் பூஜைகள் செய்ய வேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு, மிகப் பயனுடைய காரியம், மேலானவழி.  கும்பகோணம் சங்கர மடத்தில் இந்தப் பூஜை மிகவும் கோலாகலமாக நடத்தப்....

பக்கம் 29...
...போவதாகப் பத்திரிகையில் ஒரு தந்தி போட்டிருந்தது. சகஜமான விசேஷம்.  தேசம் முழுவதும் இப்படி நடப்பது நல்லது.  சங்கர மடத்திலும் எனக்கு ஒருவிதமான ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப் பார்த்தேன்.  அந்தத் தந்தியிலே பாதி சாஸ்திரம், வர்த்தமான தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு வினோதம்.  ஆனால் அதில் கண்ட சாஸ்திரம் உண்மையாக இருந்தது.  நான் எதிர் பார்க்கவில்லை.  எனவே தந்தியைப் படித்த பொழுது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.

கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது - இந்த பூஜைகளின் நோக்கம் உலக நன்மை.  நவராத்திரி காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்று வித வடிவம் கொண்டு துஷ்டரையெல்லாம் அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைத்தாள்.  மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக, தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல் இன்றுவரை பாரத தேசத்தில் எல்லாப் பக்கங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.  தேவி உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள்.  இவளே மாயை, இவளே சக்தி, செய்பவளும் செய்கையும் செய்கைப் பயனும் இவளே, தந்தையும் தாயும் இவள், இவளே பரப்ருமம்“ (பாரதி நூல்கள், கட்டுரை- பக்கம் 32, 33)

இவ்விழாவை ஏற்பாடு செய்தவர்களில் முதன்மையானவர்கள் தஞ்சை ஜில்லா மிராசுதார்களான பில்லூர் அபிராமி ஐயர், வில்லியனூர் வைத்தியநாத ஐயர், கோட்டூர் கிருஷ்ணஐயர், கொத்தங்குடி ஸ்ரீநிவாச ஐயர், கல்லூர் வெங்கப்ப ஐயர், சென்னை கணேஷ் கம்பெனியின் சொந்தக்காரர் ஸ்ரீ எம்.ஆர்.ராமசேஷ ஐயர், சித்தமல்லி சுப்ரமண்ய ஐயர் ஆகியோராவர்.  இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஊக்கம் அளித்து விசேஷமாகப் பொருளுதவி புரிந்தவர்களில், திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரான் ஸ்வாமிகள் அவர்களையும், ஆண்டிப்பட்டி ஜமீன்தார் சா.ராம.மு.சித.பெத்தாச்சி செட்டியார் அவர்களையும், நந்தவரம் இராஜாப்பையர் அவர்களையும் முதன்மையாகக் குறிப்பிடலாம்.  மடத்தின் முதல் முற்றத்தில்...

பக்கம் 30..
சித்திர வேலைகள் அமைந்த அற்புதமான ஒருபெரிய கொட்டகை அமைக்கப்பெற்றிருந்தது. 

துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி இம்மூன்று தேவிமார்களும் கிழக்கு நோக்கி ஆவாகனம் செய்யப்பெற்றிருந்தனர்.  அன்றாடம் புஷ்பங்களும் மலைபோல் வந்து குவிந்தன.  தேவியின் பூஜையில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் லலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்லி ஒவ்வொரு நாளும் பலமுறை அர்ச்சனை செய்தனர்.  பித்தளையினால் செய்யப்பட்ட 12,000 அகல் விளக்குகளை சுவரில் லிங்க வடிவமாகவும், ரிஷப வடிவமாகவும், யானை வடிவமாகவும், துவாரபாலகர் வடிவமாகவும் அமைத்து, அவற்றில் நெய் ஊற்றி விளக்குகள் ஏற்றிப் பத்து இரவிலும் எரிய விட்டிருந்தனர்.  ஒருபுறம் ஆழமான ஓம குண்டங்களில் புரோகிதர்கள் கொழுந்து விட்டெரியும் அக்னி .ஜ்வாலையை எழுப்பிச் சண்டீஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம் இவைகளைச் செய்து வந்தனர்.  நூற்றுக்கணக்கான வித்வான்கள் இராமாயணம், பாகவதம், தேவிமகாத்மியம், சௌந்தர்யலஹரி, பகவத்கீதை இவைகளைப் பாராயணம் செய்தனர் மூன்று வேதங்களிலும் வல்லவர்கள் வேத கோஷத்தை ஒருபுறம் ஒலிக்கச் செய்தனர்.  புலவர்கள் தங்கள் புலமையை விளக்கி மற்றொரு புறம் சொற்பொழிவுகள் ஆற்றிவந்தனர்.

அப்பிகைக்குப் பிரியமான வீணை முதலான வாத்தியங்களின் நாதம் எப்பொழுதும் ஒலித்தவண்ணமாக இருந்தது.  அக்காலத்தில் நம் நாட்டில் வாழ்ந்த எல்லாச் சங்கீத வித்வான்களும், பாகவத சிகாமணிகளும் போட்டியிட்டுக்கொண்டு தங்கள் தங்கள் கலைத்திறன்களைத் தேவிக்கு அர்ப்பணம் செய்தார்கள்.  சரஸ்வதிபூஜை யன்று இராமநாதபுரம் பூச்சி ஐயங்காரென்னும் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்களின் கச்சேரியும், மதுரை புஷ்பவனம் ஐயரின் கச்சேரியும் மிகவும் சோபையை அளித்தன. அந்த விழாவில் இராமனாதபுரம் பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்களின் கச்சேரி தஞ்சை ஜில்லா ரசிகர்களைப் பரம ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது.  ஸ்வாமிகள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவ்வப்போது நேரில் விஜயம் செய்து, அடியார்களை மகிழ்வித்த காட்சி என்றும் மறக்க முடியாததாகும்.  ஏறக்குறை 300 தொண்டர்கள் இவ்விழாவில் தொண்டாற்றினார்கள்.  ரூபாய் 50,000 வரையில் (அன்னதானம் நீங்கலாக) இவ்விழாவுக்குச் செலவு செய்யப்பட்டது.  லக்ஷம் பேர்...

பக்கம் 31...தொடரும்...

Geetha Sambasivam

unread,
Mar 3, 2013, 8:38:47 AM3/3/13
to mint...@googlegroups.com

2013/1/20 கி.காளைராசன் <kalair...@gmail.com>

 பக்கம் 31...
...களுக்கு மேல் அன்னதானம் செய்யும் பணியை மகான் தேப்பெருமாள் நல்லூர் சிவன் அவர்கள் ஏற்று நடத்தினார்கள்.  ஒவ்வொரு நாளும் பதினாயிரம் மக்களுக்குமேல், சேர்ந்தாற்போல் பத்து நாட்களுக்கு அறுசுவையுடன் அன்னமிட வேண்டிய உணவுப் பொருள்களைச் சேகரிக்க எவ்வளவு பிரயாசை வேண்டுமென ஆலோசித்தால் அஃது ஓர் ஆச்சர்யத்தையே விளைக்கும்.   திவான் சேஷையா சாஸ்திரிகள் வீட்டில் ஒரு பண்டக சாலை நிறுவப் பெற்றது.  தஞ்சை ஜில்லா மிராசுதார்களும், வியாபாரிகளும் ஒரு மாதத்துக்கு முன் தொடங்கியே தங்கள் காணிக்கைகளாக உணவுப் பொருள்களை இவ்விழாவுக்கென அனுப்பிவைத்தார்கள். அரிசி மூட்டைகள் ஆயிரக்கணக்காக வந்து குவிந்தன.  நுற்றுக்கணக்கான மரப் பீப்பாய்களில் மோரை அடைத்து அவற்றைத் தண்ணீரில் மிதக்க விட்டிருந்தார்கள்.  சுமார் 200 சமையல் சிப்பந்திகள் பணிசெய்தனர்.  மடத்தின் தோட்டத்தில் ஒரே தடவையில் 1000 பேர்கள் உட்கார்ந்து புசிக்கும் வசதியுடன் பெரிய பந்தல்கள் அமைக்கப் பெற்றிருந்தன.  பனிக்குன்று போன்ற அன்னக் குவியல்கள், யானைகளை முழுகடிக்கும் அண்டாக்களில் சாம்பார், ரசம் முதலிய மற்ற உணவுப் பொருள்கள் ஆகியவை தாயதயாரிக்கப் பெற்றன.  இவையெல்லாம் சிவனது தனிமையான மேல் பார்வையில் நடைபெற்றன.  எல்லாம் அமைதியுடன் யாவருக்கும் எவ்விதமான குறைவுமின்றி நடந்தேறியது.  ஒழுங்கைப் பாதுகாப்பதில் சிவன் மிகவும் கண்டிப்பானவர்.  எந்தச் சிப்பந்தியும் அல்லது உணவருந்த வருபவரும் அவரது கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடக்கவேண்டும்.

பத்தாவது நாளாகிய விஜயதசமி அன்று இரவில், ஸ்ரீஸ்வாமிகள் உள்ளூர்த் தேவாலயங்களுக்கு விஜயம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டார்கள்.   அனறு யானைமீது அம்பாரியில் ஸ்வாமிகள் பவனி வந்த காட்சியைப் பல்லாயிர மக்கள் கண்டு களித்தனர்.  சுமார் ஒரு மைல் நீளமுள்ள அந்த ஊர்வலத்தை ஆண்டிப்பட்டி ஜமீன்தார் பெத்தாச்சி செட்டியாரும், திருப்பனந்தாள் காசி மடம் ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரான் ஸ்வாமிகளும் முன்னின்று நடத்தி வைத்தனர்.  இருபுறமும் நூற்றுக்கணக்கான பவர் விளக்குகள், கண்ணைக் கவரும் வாண வேடிக்கை, ஆறு ஜதை நாயனம், மூன்று ஜதை பாண்டு, வேத பாராயணம்....

பக்கம் 32 ....தொடரும்...

Geetha Sambasivam

unread,
Mar 3, 2013, 8:40:36 AM3/3/13
to mint...@googlegroups.com

2013/1/22 கி.காளைராசன் <kalair...@gmail.com>

7. கல்விக்கும் கலைகளுக்கும் ஊக்கமளித்தமை - அத்வைத சபைக்கூட்டமும் பண்டிதர்களுக்குப் பாராட்டும்
1917-ஆவது வருட ஆகஸ்ட் மாதம், கும்பகோணம் அத்வைத சபையின் வருடாந்தக் கூட்டம் முடிவு பெற்றவுடன், ஸ்வாமிகள் ஒரு வித்வத் சபையைக் கூட்டி, அக்காலத்தில் மகா வித்வான்களாக விளங்கிய பிரும்மஸ்ரீ பழமார்நெறி இராமஸ்வாமி சாஸ்திரிகள், பிரும்மஸ்ரீ திருவிசைநல்லூர் வேங்கட சுப்பா சாஸ்திரிகள், ஆகிய இவர்களுக்குச் சாஸ்திர ரத்னாகரம் என்னும் பட்டத்தை வழங்கி, இரட்டை சால்வை, வெள்ளிஜாரி முதலிய சன்மானங்கள் செய்து அவர்களைக் கௌரவித்தார்கள்.  இந்தப் பட்டத்தை அதன் பிறகு நாளது வரையில் பல வித்வான்கள் பெற்றிருக்கிறார்கள்.  அவர்களின் பெயர்கள் கீழே குறிப்பிட்டுள்ளன.
1. மன்னார்குடி மகாமகோபாத்யாய யக்ஞசாமி சாஸ்திரிகள்
2. சிதம்பரம் மகாமகோபாத்யாய தண்டபாணிசாமி தீக்ஷிதர்.
3. புதுக்கோட்டை சமஸ்தான தாதனாதிகாரி திருவையாறு விச்வநாத சாஸ்திரிகள்
4. தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகள்
5. விஜயநகரம் மகாமகோபாத்யாய தாத சுப்பராய சாஸ்திரிகள்
6. குண்டீர் திண்டுகூரி நரசிம்ம சாஸ்திரிகள்
7. கல்கத்தா சர்வ கலாசாலை மகாமகோபாத்யாய என். எஸ். அனந்த கிரஷ்ண சாஸ்திரிகள்.
8. கல்கத்தா சர்வ கலாசாலை மகாமகோபாத்யாய ஏ.சின்னசாமி சாஸ்திரிகள்
9. காசி ஹிந்து சர்வகலாசாலை டி.இராமச்சந்திர தீக்ஷிதர்

பக்கம் 33.. தொடரும்....

Innamburan Innamburan

unread,
Mar 3, 2013, 9:32:25 AM3/3/13
to mint...@googlegroups.com
காளைராஜன், கீதா இருவரின் இழைகள் முந்தியபக்கம், பிந்தியபக்கம் என்ற வகையில் கொஞ்சம் குழப்பம். அது சரி செய்து கொள்ளலாம். பிரச்னையில்லை. நான் நான்கு செய்திகளை இணைக்க விரும்புகிறேன். மேலும் சில உள்ளன. முடிவில் கூறுகிறேன்.

1. சில நாட்கள் முன்னால் புதுக்கோட்டையிலும் திவான் உத்தியோகம் வகித்து வந்த சர்.ஏ.சேஷையா சாஸ்திரிகள் அவர்களை பற்றி உ.வே.சா. அவர்கள் எழுதியதை ஒரு இடத்தில் குறிப்பிட்டேன்.
2. 'இப்பொழுது அவருடைய சுவீகார புதல்வரின் பேரன். அ.சேஷையா சாஸ்திரி என்பவரே நமது ஸ்வாமிகளிடம் அதிகாரம் பெற்று மடத்தின் ஸ்ரீகார்யம் என்னும் உயர்ந்த பதவியை வகித்து வருகிறார். ' ~ 'அ' என்றால் 'அமராவதி'. நாங்கள் உசிலம்பட்டியில் இருந்தபோது, ஸ்வாமிகள் அங்கு விஜயம் செய்தார். எனக்கு மூன்றோ/நான்கோ வயது. முதலில் மடத்தின் சர்வாதிகாரி ஒரு புரவியில் அமர்ந்து, ஊருக்கு, பெரியவா வந்து கொண்டிருக்கும் செய்தியை கூறினார். அவர் இந்த அ.சேஷையா சாஸ்திரி என்று நினைக்கிறேன். பிறகு ஊரார் எல்லையில் நின்று (நானும் தான், அப்பாவுடன்) பூர்ணகும்ப மரியாதை செய்து அவரை வரவேற்றார்கள்.
3. முடிகொண்டான், .....(எழுத்துக்கள் கிடைக்கவில்லை) ~ 'கணபதி அக்ரஹாரமா' பாருங்கள்.
4. '...பாதைகளில் ஹரிஜனங்களைக் காண நேரும்போதெல்லாம் சிவிகையை நிறுத்தச் செய்து அவர்களுக்குத் தரிசனம் கொடுத்து நல்வாழ்த்துக் கூறிச் செல்வது வழக்கம்...' ~ நான் அலஹாபாதில் இருந்த போது, ஶ்ரீ ஜயேந்திர ஸ்வாமிகள் வந்து இருந்தார். ஒரு குக்கிராமத்தில். வந்தது பூரணகும்பமேளாவுக்கு. அச்சமயம் மைக்கேல் யார்க் என்ற பீ பீ ஸி நிருபர் எங்களை அழைத்துச்சென்றார். குடில் வாசலில் ஒரு பெரிய ஹரிஜனக்கூட்டம். ஶ்ரீ ஜயேந்திர ஸ்வாமிகள் சகஜமாகப் பழகி அருள் வழங்கினார். நான் மைக்கேல் யார்க்கிடம், அவர்களுடைய பக்தி எனதை விட பல மடங்கு மேல் என்றேன். 
அன்புடன்,
இன்னம்பூரான்

Geetha Sambasivam

unread,
Mar 4, 2013, 12:56:47 AM3/4/13
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
அன்பார்ந்த ஐயா, 

காளைராஜன் அவர்களின் பதிவைப் பிழை திருத்தம் மட்டுமே செய்கிறேன்.  அதனால் முந்தி, பிந்தி எனத் தெரிகிறது.  நான் பார்த்துத் திருத்திய பக்கங்களை வெட்டி விடுகிறேன்.  இந்த இழையைப் பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன.  நேற்றுத் தான் மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன்.  நன்றி, வணக்கம். 

2013/3/3 Innamburan Innamburan <innam...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.காளைராசன்

unread,
Mar 4, 2013, 3:15:24 AM3/4/13
to mint...@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2013/3/3 Innamburan Innamburan <innam...@gmail.com>
காளைராஜன், கீதா இருவரின் இழைகள் முந்தியபக்கம், பிந்தியபக்கம் என்ற வகையில் கொஞ்சம் குழப்பம். அது சரி செய்து கொள்ளலாம். பிரச்னையில்லை.
ஆமாம் ஐயா,
அவர்கள் பிழைதிருத்திக் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
நாமெல்லாம்,
( ஸ்ரீ) ஹரி(யின்) ஜனங்கள் அல்லவோ...

அன்பன்

கி.காளைராசன்

unread,
Mar 7, 2013, 7:51:05 PM3/7/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 51....
நன்னிலம் தாலுகாவிலுள்ள கிராமங்களில் யாத்திரையை முடித்துக் கொண்டு ஸ்வாமிகள் மன்னார்குடி தாலுகாவிலுள்ள கிராமங்களில் பெரும்பான்மையாக யாத்திரையைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.  ஸ்வாமிகள் விஜயம் செய்த ஒவ்வொரு ஊரிலும் சமுகத்தினர் யாவரும் மிகவும் ஒற்றுமையுடன் ஸ்வாமிகளது பணியில் ஈடுபட்டிருந்தனர்.  மன்னார்குடி....(சில எழுத்துகள் கிடைக்கவில்லை)...

பக்கம் 58...
...பூவனூரைச் சார்ந்த பெரிய சிவபக்தரான ராஜு முதலியார் என்பவர் அப்பொழுது ஸ்வாமிகளை அவ்வூருக்கு விஜயம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.  அதற்கிணங்கி ஸ்வாமிகளும் அங்குச் சுமார் பத்து நாட்கள் தங்கியிருந்தார்கள்.  அவ்வூரில் முதலியார் அவர்கள் நடத்தி வந்த தேவார பாடசாலைக்கு அடிக்கடி ஸ்வாமிகள் சென்று மாணவர்களைக் கொண்டு தேவாரங்களைப் பாடச் செய்து, அவைகளின் பொருளிலும், இசையிலும் மனஸைச் செலுத்தி இன்புற்றார்கள்.  அப்பாடசாலையின் மாணவர்களுக்குப் பட்டு முதலிய சாமான்களை அவர்கள் அளித்து ஆசீர்வதித்தார்கள்.  நாட்டில் இன்று தேவாரம் ஓதுவதில் மிகத் தேர்ச்சி பெற்ற வித்வான்களில் பலர் பூவனூர்ப் பாடசாலையில் கற்றவர்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஸ்வாமிகள் மன்னார்குடியில் சுமார் ஒரு மாத காலம் தங்கியிருந்தார்கள்.  அவ்வூரில் தங்கியிருந்தபொழுது ஸ்வாமிகள் நேஷனல் உயர்நிலைப்பள்ளிக்கு விஜயம் செய்து மாணவர்களுக்குப் பல உபதேசங்களை அருளினார்கள்.  அவ்விடம் இராஜகோபால ஸ்வாமி ஆலயத்திலும் அவர்கள் தரிசனம் செய்து கொண்டார்கள்.  அங்கிருந்து அவர்கள் வடுவூர் சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ இராம விக்கிரஹத்தையும் தரிசித்துக் கொண்டார்கள்.  பிரபல மிராசுதாரரான குன்னியூர் சாம்பசிவ ஐயர் அவர்களின் விருப்பப்படி குன்னியூரில் ஸ்வாமிகள் சிலகாலம் தங்கியிருந்தார்கள்.  பின்னர் சித்தமல்லி, ஆலங்காடு முதலான ஊர்களுக்கு விஜயம் செய்து, பிறகு பட்டுக்கோட்டை, அறந்தாங்கி மார்க்கமாக ஆவுடையார் கோவிலுக்கு 1922-ஆவது வருடம் ஜுலை மாதம் முதல் வாரத்தில் விஜயம் செய்தார்கள்.  அக்காலத்தில் சித்தமல்லி மிராசுதார் சுப்பிரமண்ய ஐயர் ஸ்வாமிகளுடன் கூட இருந்து மடத்திற்குப் பணியாற்றி வந்தார்.  இவர் பல சாஸ்திரங்களைக் கற்ற மகாவித்வான், மகாமகோபாத்யாய மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளிடம் சிஷ்யராக இருந்து கல்வி கற்றவர்.

ஆவுடையார் கோவிலில் சாதுர்மாஸ விரதம்
ஸ்வாமிகள் 1922-ஆவது வருடம் வியாஸ பூஜையை ஆவுடையார் கோவிலில் நடத்தி அவ்விடம் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார்கள்.  திருப்பெருந்துறை யென்னும் இந்தத் தலமானது தமிழ்நாட்டுச் சிவத் தலங்களுள் மிகவும் ....

பக்கம் 59... தொடரும்... 

கி.காளைராசன்

unread,
Mar 8, 2013, 11:44:56 PM3/8/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 51....
...பெருமை பெற்று விளங்குகிறது.  அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சர் வாதவூரர் என்னும் மாணிக்கவாசகரைத் தனக்குக் குதிரைகள் வாங்கி வரும்படி நாற்பத்தொன்பது கோடி பசும் பொன்களுடன் அனுப்ப, அவர் இந்தத் தலத்தில் தங்கி, ஆத்மநாதரது தரிசனதில் ஈடுபட்டிருந்தபொழுது, ஆலயத்தின் பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தின் அடியிலுள்ள பீடத்தில் பதினாறு வயதுள்ள அந்தண உருவத்துடன் ஈசன் அவர்முன் தோன்றி சிவஞான போதத்தை அவருக்கு உபதேசித்து அருளினார்.  மாணிக்கவாசகர் தாம் கொண்டுவந்த பொருளையெல்லாம் இந்த ஆலயத்தின் திருப்பணியில் செலவிட்டுவிட்டார்.

இவ்வாலயத்திலுள்ள சிற்பக் கலையின் நுட்பங்களை வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாது.   இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் நன்கு பரிபாலிக்கப்பட்டு வருகிறது.  அநேகமாக ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும் ஆத்மநாத ஸ்வாமி தேவஸ்தானத்துக்குச் சென்று, அங்கு ஸ்வாமி சந்நிதியையும், யோகாம்பிகை சந்நிதியையும், மாணிக்கவாசகர் சந்நிதியையும், குருந்த மரத்தையும் தரிசனம் செய்து வந்தார்கள்.  அந்த ஊரில் தங்கியிருந்தபொழுது ஸ்வாமிகளிடம் மிகவும் பக்திகொண்ட நெய்க்குப்பை ஏகாம்பர சேர்வைக்காரர் சலியாத ஊக்கத்துடன் மடத்திற்கு வேண்டிய பணிகளையெல்லாம் செய்து வைத்தார்.  அவ்வூரிலே சாதுர்மாஸ சங்கல்பம் முடிவுபெற்று விசுவரூப யாத்திரை அன்று (8-9-1922) திருவாவடுதுரை ஆதீன கர்த்தரவர்கள் ஆவுடையார் கோவிலில் தமது கட்டளைத் தம்பிரான் மூலமாக ஸ்வாமிகளுக்குப் பிக்ஷை முதலிய மரியாதைகளைச் செய்து வைத்தார்கள்.  அவ்விடம் மடத்தின் சேவையில் ஈடுபட்டவர்களில், பட்டுக்கோட்டை வக்கில் வெங்கடேசுவர ஐயர், தேவஸ்தானம் ஸ்தானிகம் ஆத்மநாத நம்பியார் இவர்களைக் குறிப்பிடலாம்.

முதல் இராமேசுவர யாத்திரை
ஆவுடையார் கோவிலிலிருந்து ஸ்வாமிகள் உப்பூர், தேவிப்பட்டினம் வழியாக இராமேச்வரத்திற்குப் பயணமானார்கள்.  ஸ்வாமிகள் பாம்பன் ஜலசந்தியை ரயில் பாலத்தின் மீது நடந்து சென்று கடக்கத் தென்னிந்திய ரயில்வே அதிகாரிகள் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.  மற்றச் சாமான்களையும் வண்டிகளையும் படகுகளின் மூலம் ஏற்றி அனுப்புவதற்.....(சில எழுத்துக்கள் கிடைக்கவில்லை)...

பக்கம் 60... தொடரும்...
 
கி.காளைராசன்

unread,
Mar 11, 2013, 6:45:09 AM3/11/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 51....
...பம் மரக்காயர் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து உதவினார்.  மரக்காயரும் ஸ்வாமிகளை நேரில் சந்தித்து ஸ்வாமிகளின் அருளைப் பெற்றார்.  இராமேச்வரத்தில் தேவஸ்தான அதிகாரிகளும், பரம்பரை பண்டாக்களும் தேவஸ்தான  மரியாதைகளுடன் இராமநாதஸ்வாமி தரிசனத்தை ஸ்வாமிகளுக்குச் செய்து வைத்தார்கள்.  இராமநாதலிங்கம் பாரத நாட்டிலுள்ள 12 ஜோதி லிங்கங்களுள் ஒன்றாகும்.  துந்துபி வருடம் (1922) புரட்டாசி மாதம் பூர்ணமி அன்று, ஸ்வாமிகள் இராமசேதுவில் (கங்கையில் கலப்பதற்கென) மணல் எடுத்துக் கொண்டார்கள்.  அந்த மணலும் பவ வருடம் (ஆடிமாதம் பத்தாம் தேதி புதன் கிழமை (25-7-1934) அலகாபாத் என்னும் பிரயாகை திருவேணி சங்கமத்தில் சேர்க்கும் வரையில்) ஸ்வாமிகளின் பூஜையிலேயே இருந்து வந்தது.

தனுஷ்கோடியில் ஸ்வாமிகள் நவராத்திரி பூஜையை முடித்துக் கொண்டு மகோததி, இரத்னாகரம் என்னும் இரண்டு கடல்கள் சேரும் இடத்தில் விதிப்படி மூன்று நாட்கள் நீராடி, வேத மோதிய அந்தணர்களுக்கு ஏராளமான பொருள்களைத் தானமாகக் கொடுத்தார்கள்.  சுமார் பதினாயிரம் ரூபா வரையில் அங்குத் தானங்கள் கொடுக்கப்பட்டன.  ஸ்வாமிகள் தனுஷ்கோடியிலிருந்து மறுபடியும் இராமேச்வரம் வந்து அவ்விடம் பக்தர்கள் செலுத்திய பிக்ஷை, பாதபூஜை முதலியவைகளை ஏற்றுக் கொண்டு ஒரு வாரம் தங்கி யிருந்தார்கள்.

கதர் அபிமானம்
கதராடைகள் விற்பனைக்கு வந்து சுமார் 1918-ஆவது வருடம் முதல், ஸ்வாமிகள் கதர் வஸ்திரத்தையே உடுத்து வருகிறார்கள்.  எவ்வளவு முரட்டு வஸ்திரமானாலும் கதர் அணிவதில் ஸ்வாமிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.  தனுஷ்கோடியில் ஸ்வாமிகள் நீராடிய பொழுது மடத்தின் சிப்பந்திகள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஜோடி கதர் வஸ்திரம் கொடுத்து, மில்நூல் ஆடைகளைத் தரித்திருந்தவர்களை அழைத்து அவ்வாடைகளைக் கடலில் எறிந்து விடும்படி கட்டளை யிட்டார்கள்.  சிப்பந்திகளுக்குக் கொடுப்பதற்கென எட்டு முழம் வேஷ்டிகளில் சுமார் 200 ஜோடிகள் அன்று மதுரையிலிருந்து தருவிக்கப்பட்டன.  காந்தியடிகளின் திட்டங்களில் கதர் உற்பத்தியும் முக்கியமான அம்சமாக விளங்கி வந்தன அந்நாளில்.  சீமை .....(சில எழுத்துக்கள் கிடைக்கவில்லை) நெருப்பில் எரிப்பது தேசபக்தர்களின் பணிகளில்....

பக்கம் 61... தொடரும்...

கி.காளைராசன்

unread,
Mar 11, 2013, 7:15:49 AM3/11/13
to mintamil, thiruppuvanam, naga rethinam
பக்கம் 61....
... ஒன்றாக அமைந்திருந்தது.  அன்னியநாட்டுத் துணிகளை ஜனங்கள் முன்னிலையில் எரிப்பதைவிடக் கடலில் எறிவது ஒரு சாவதானமான முறையாயும், சாத்வீகமான முறையாயும் இருக்குமென்று ஸ்வாமிகள் எண்ணினார்கள் போலும்.  மடத்தின் சிப்பந்திகள் பலர் அன்று முதல் கதராடையே உடுத்துவதென்று சங்கல்பம் செய்து கொண்டனர்.

மிராசுதார் ஆத்ம ஞானியானது
கோடிக்கரையில் நீராடிவிட்டு ஸ்வாமிகள் ஒருநாள் கடற்கரை ஓரமாக நடந்து வந்தபொழுது அடியார்கள் கூட்டம் ஏராளமாக ஸ்வாமிகளைப் பின்தொடர்ந்து வந்தது.  மடத்தில் நெருங்கிய தொடர்புள்ள மிராசுதார்கள் பலர் ஸ்வாமிகளுடன் வந்தார்கள். வழியில் அவர்கள் ஏழை மக்களுக்குக் காசும் துணியும் கொடுத்து வந்தார்கள்.  வழக்கம் போல் பிச்சை வாங்குவோரின் கூட்டத்தில் ‘நான் முந்தி, நீ முந்தி‘ என்ற போட்டியுடன் சிறிது குழப்பமும் நேர்ந்தது.  அப் பிச்சைக்காரர்களில் ஒருவன் தன்னை அறியாதவாறு ஸ்வாமிகளை வழிமறைத்து நின்றுவிட்டான்.  உடன் வந்த மிராசுதார் ஒருவருக்கு அதனால் சினம் ஏற்பட்டு, அந்த ஏழையைத் தம் கைத்தடியினால் அவர் ஓர் அடி அடித்து விட்டார்.  அந்த அடி தாங்காமல் அவனது உடலிலிருந்து சிறிது இரத்தமும் வெளிப்பட்டு விட்டது.  கருணையே உருவெடுத்த ஸ்வாமிகள் இதைக் கண்டு மனம் சகியாதவராகி, அந்த மிராசுதாரை நோக்கி, “நீங்கள் சாஸ்திரங்களை நன்கு கற்று அறிந்திருக்கிறீர்கள்.  ஈச்வரன் உங்களுக்கு வேண்டிய அளவு பொருளையும், நல்ல அறிவையும் கொடுத்திருக்கிறார், சாந்தமும் ஜீவகாருண்யமும், எல்லாப் பிராணிகளிடத்திலும் தயையும், உங்களுக்குச் சாஸ்திரங்களிலிருந்து ஏற்பட்டிருக்க வேண்டும்.  மனிதன் எல்லாவற்றிலும் முதன்மையாக சினத்தை அடக்க வேண்டும்‘ - என்று கூறிவிட்டு மடத்தின் சிப்பந்திகள் மூலம் அடிபட்ட பிச்சைக்காரனுக்குச் சிகிச்சை செய்வித்து அவன் கோரிய இடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடும் செய்தார்கள்.  ஸ்வாமிகளின் மொழிகள் மிராசுதாரின் உள்ளத்தைத் தொட்டது.  அவர் தாம் செய்த தவறை உணர்ந்து வருந்தினார்.  அந்த மிராசுதார் அன்று முதல் சினத்தை அடக்கியவராகித் தமது வாழ்நாளின் பிற்பகுதியில் முறைப்படி சந்நியாச ஆசிரமும் பூண்டு ஆத்மஞானியாக விளங்கலாயினார்.

பக்கம் 62... தொடரும்...
It is loading more messages.
0 new messages