மூலம், காலம், சீலம், கோலம், ஞாலம்

10 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 2, 2025, 11:41:00 PM (2 days ago) Dec 2
to மின்தமிழ்
மூலம், காலம், சீலம், கோலம், ஞாலம்

காலமும் இடத்தினாலே கருத்துணர் வுற்ற போது
மூலமும் சீலம் நோக்கி முழுமையின் ஆய்ந்து ணர்ந்து
ஞாலமே போற்றும் வண்ணம் நன்னெறி முறையில் நின்று
சீலமாம் வாழ்வ ளிக்கும் உளவியல் நூலே செப்பும்
- மயன்

மூலம், காலம், சீலம், கோலம், ஞாலம் ஆகிய ஐந்தில் மூலமே ஞாலமாகிறதால் அவற்றை  விடுத்து காலம், சீலம்,  கோலம் ஆகிய மூன்று நிலைகளை மட்டும் உற்றுநோக்கிச் சுருக்கமாகச் சொல்லும்போது,  காலமே கோளத்திற்கு காரணமாகிறது. எனவே,  காலத்தை காலமாக் கடவுள் என்பான் மயன்.

மூலமானது காலத்தால்- கால விசையால் - காலக்கூறுகளால் - கால அளவுகளால் கோலத்தை தோற்றுவிக்கிறது.
தோற்றுவிக்கப்பட்ட பொருள்கள் இனிமை பெற்றிடச் செய்ய சீலம் தேவைப்படுகிறது. இந்த சீலத்தை விசையின் கட்டுப்பாட்டினால் மூலம் சாதித்துச் கொள்கிறது. (இச்சீலத்தை ஆங்கிலத்தில் 'ரிதம்' என்று சொல்கிறோம்.)
ஒன்றைத்தோற்று விப்பதற்கு அளவுகளும், அவ்வளவுகளில் சீலமும் இன்றியமை யாதன.
இன்னும் நுணுகிப் பார்த்தால் சீலமே பொருளாகிறதென்பது மட்டுமல்லாமல் அதற்கு இனிமையும் பயனும் தரவல்ல தாகிறது.
பக்கம்: xxiv

----------------

ஐந்நெறி ஆக்கமும் ஐங்கலை நோக்கமும்
செந்நெறி மூலத் திருநெறி யாயுறும்
எண்ணுறும் மூலம் விண்ணுறுங் கோலம்
நண்ணுறுங் காலம் நவையிலாச் சீலம்
விண்டுறும் ஞாலம் ஐவகை விளக்கி
தண்டமிழ் ஐந்தியல் சாற்றினன் நெறியே
பக்கம்: 25

நூல்: ஐந்திறம்
நூலாசிரியர்:பழந்தமிழ்ச்சிற்பி மயன்
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp1jZYy  

எல்லாச் சொல்லும் தனித்தனியாகப் புரிவது போல இருக்கிறது, சேர்த்துப் படித்தால் ஒன்றும் புரியாதது போலும் இருக்கிறது 
🤔😵‍💫🥴
 

Reply all
Reply to author
Forward
0 new messages