சாதவாகன மன்னர் தமிழ் நாணயங்கள்

196 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jul 27, 2012, 8:16:30 AM7/27/12
to seshadri sridharan
சாதவாகன வேந்தர்கள் உஜ்ஜைனியில் இருந்து ஆந்திர - கருநாடகத்தின் வட பகுதிகளை ஆண்டவர்கள். அசோகன், தன் ஆட்சியின் கீழ் இருந்த சாதவாகனரைத் தான் ஆந்திரர் எனக் குறிப்பிடுகிறான். இவர்களுடைய ஆட்சி தமிழகத்தில் நீட்சி பெற்றதற்கான சான்று ஏதும் இல்லை. எனினும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக வெளியிட்ட காசுகளின் ஒரு பக்கத்தில் தம் பெயரைத் தமிழில் குறித்து வைத்து உள்ளனர். இதுவரை ஆறு காசுகள் கிட்டி உள்ளன.. இவை சங்க கால தமிழக வட எல்லை எது என்பதை தீர்மானிப்பதில் முகாமையான பங்கு கொண்டுள்ளது. சாதவாகன மன்னர்களால் வெளியிட்ப்பட்ட பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட இரு மொழி நாணயங்கள் தனித்தன்மை வாய்ந்தவை (R. Nagaswamy 1981, P. 132 - 139). இவை யாவும் ஆந்திர மாநிலத்தில் தான் கிட்டின. நாணயங்களின் முன்பக்கத்தில் அரசனின் உருவமும் அதைச் ச்ற்றி நாணயத்தின் ஓரமாக பிராகிருத மொழியில் இவர்களது பெயர் காணப்படுகின்றன. பின் பக்கத்தில் பல சின்னங்களும் இவற்றை சுற்றி முன்பக்கத்தில்  உள்ளவாறே சாதவாகன மன்னர் பெயர் தமிழ் மொழியில் எழுதப்பட்டு உள்ளது.. தமிழ் மன்னர் அல்லாத வேற்றவரால் முதன்முதலாக தமிழில் வெளியிடப்படட் மிகப் பழைய நாணயங்கள் இவையே. இவற்றை வெளியிட வேண்டிய காரணம் ஆந்திர கருநாடக பகுதிகளில் கி.ரு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியும் அப்பகுதி மக்கள் அறிந்த மொழியாக இருந்ததே ஆகும். தமிழ் அறிந்தோருக்கு தமிழிலும் அறியாதாருக்கு பிராகிருதத்திலும் இந் நாணயங்களை சாதவாகனர் வெளியிட வேண்டிய தேவை இருந்தது . இந்த ஆறு நாணயங்களின் விவரம் கீழே: 

  1. ராஞோ வசிடி புதஸ ஸிரி புலுமாவிஸ (பிரா)  > அரசனகு வசிட்டி மகனகு திரு புலுமாவிகு (தமிழ்)
  2. ராஞோ வசிடி புதஸ ஸிரி ஸாதகணிஸ  (பிரா)  > அரசனகு வசிட்டி மகனகு திரு சதகணிகு   (தமிழ்)
  3. (ராஞோ) வசிடி புதஸ சிவ ஸிரி புலுமாவிஸ (பிரா) > அரசனகு வசிட்டி மகனகு சிவதிரு புலுமாவிகு (தமிழ்)
  4. ராஞோ வசிடி புதஸ சிறீ கட ஸாத கணிஸ (பிரா) >      - - - - - -  -   -   - ---- -- - - - - - - -  சிட்டி மகனகு (தமிழ்)
  5. ராஞோ கௌதமி புதஸ சிறீ யஞ்ஞ ஸாத கணிஸ > அரசனகு கௌதமி புதகு ஸிரு யஞ்ஞ சதகணிகு (தமிழ்)
  6. ராஞோ வசிடி புதஸ சிறீ விஜய ஸாத கணிஸ (பிரா) >  அரசனகு வசிட்டி புதகு திரு விஜய (சதகணிகு)
                          (R. Nagaswamy 1981, P.132 -134)


தமிழ் இலக்கியம் குறிப்பிடும் தமிழக வட எல்லை இன்று நம்பப்படுவது போல் திருப்பதி மலை அல்ல என்ற கருத்து கீழ் உள்ள தலைப்பில் ஏற்கென்வே அலசப்பட்டது. அதைக் கீழ் உள்ள மின்தமிழ்த் தொடுப்பில் காணவியலும்.


 தென் இந்தியாவில் அசோகன் - தமிழ் மன்னர் ஆட்சி எல்லை

தென் இந்தியாவில் அசோகன் ஆட்சி எல்லை பகுதிகளும் தமிழ் மன்னர் ஆட்சி எல்லையும்  குறித்து ஒரு கருத்துரை.  அதன் வழி தமிழகத்தின் வட எல்லைத் தீர்மானம்
 

சேசாத்திரி

கி.காளைராசன்

unread,
Jul 28, 2012, 8:38:55 AM7/28/12
to mint...@googlegroups.com, seshadri sridharan
வணக்கம் ஐயா,

2012/7/27 seshadri sridharan <ssesh...@gmail.com>
சாதவாகன வேந்தர்கள் உஜ்ஜைனியில் இருந்து ஆந்திர - கருநாடகத்தின் வட பகுதிகளை ஆண்டவர்கள். எனினும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக வெளியிட்ட காசுகளின் ஒரு பக்கத்தில் தம் பெயரைத் தமிழில் குறித்து வைத்து உள்ளனர். இதுவரை ஆறு காசுகள் கிட்டி உள்ளன..
அருமையான தகவல்கள் அடங்கியுள்ளன.
இந்தக் காசுகளின் படங்கள் இருந்தால் அவற்றையும் பதிவு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நல்லதொரு பதிவிற்கு நன்றி ஐயா,

அன்பன்
கி.காளைராசன்

DEV RAJ

unread,
Jul 28, 2012, 1:23:04 PM7/28/12
to மின்தமிழ்

சாதவாகன - செந்தமிழ்ப்பெயரா ?
எந்த வேரிலிருந்து தோன்றியது ?


தேவ்

On Jul 27, 5:16 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> சாதவாகன வேந்தர்கள் உஜ்ஜைனியில் இருந்து ஆந்திர - கருநாடகத்தின் வட பகுதிகளை
> ஆண்டவர்கள். அசோகன், தன் ஆட்சியின் கீழ் இருந்த சாதவாகனரைத் தான் ஆந்திரர்
> எனக் குறிப்பிடுகிறான். இவர்களுடைய ஆட்சி தமிழகத்தில் நீட்சி பெற்றதற்கான
> சான்று ஏதும் இல்லை. எனினும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக வெளியிட்ட காசுகளின்
> ஒரு பக்கத்தில் தம் பெயரைத் தமிழில் குறித்து வைத்து உள்ளனர். இதுவரை ஆறு
> காசுகள் கிட்டி உள்ளன.. இவை சங்க கால தமிழக வட எல்லை எது என்பதை
> தீர்மானிப்பதில் முகாமையான பங்கு கொண்டுள்ளது. சாதவாகன மன்னர்களால்
> வெளியிட்ப்பட்ட பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட இரு மொழி நாணயங்கள் தனித்தன்மை
> வாய்ந்தவை (R. Nagaswamy 1981, P. 132 - 139). இவை யாவும் ஆந்திர மாநிலத்தில்
> தான் கிட்டின. நாணயங்களின் முன்பக்கத்தில் அரசனின் உருவமும் அதைச் ச்ற்றி
> நாணயத்தின் ஓரமாக பிராகிருத மொழியில் இவர்களது பெயர் காணப்படுகின்றன. பின்
> பக்கத்தில் பல சின்னங்களும் இவற்றை சுற்றி முன்பக்கத்தில்  உள்ளவாறே சாதவாகன
> மன்னர் பெயர் தமிழ் மொழியில் எழுதப்பட்டு உள்ளது.. தமிழ் மன்னர் அல்லாத
> வேற்றவரால் முதன்முதலாக தமிழில் வெளியிடப்படட் மிகப் பழைய நாணயங்கள் இவையே.
> இவற்றை வெளியிட வேண்டிய காரணம் ஆந்திர கருநாடக பகுதிகளில் கி.ரு. 2 ஆம்
> நூற்றாண்டு முதல் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியும் அப்பகுதி மக்கள்
> அறிந்த மொழியாக இருந்ததே ஆகும். தமிழ் அறிந்தோருக்கு தமிழிலும் அறியாதாருக்கு
> பிராகிருதத்திலும் இந் நாணயங்களை சாதவாகனர் வெளியிட வேண்டிய தேவை இருந்தது .
> இந்த ஆறு நாணயங்களின் விவரம் கீழே:
>

>    1. ராஞோ வசிடி புதஸ ஸிரி புலுமாவிஸ (பிரா)  > அரசனகு வசிட்டி மகனகு திரு


>    புலுமாவிகு (தமிழ்)

>    2. ராஞோ வசிடி புதஸ ஸிரி ஸாதகணிஸ  (பிரா)  > அரசனகு வசிட்டி மகனகு திரு


>    சதகணிகு   (தமிழ்)

>    3. (ராஞோ) வசிடி புதஸ சிவ ஸிரி புலுமாவிஸ (பிரா) > அரசனகு வசிட்டி மகனகு


>    சிவதிரு புலுமாவிகு (தமிழ்)

>    4. ராஞோ வசிடி புதஸ சிறீ கட ஸாத கணிஸ (பிரா) >      - - - - - -  -   -   -


>    ---- -- - - - - - - -  சிட்டி மகனகு (தமிழ்)

>    5. ராஞோ கௌதமி புதஸ சிறீ யஞ்ஞ ஸாத கணிஸ > அரசனகு கௌதமி புதகு ஸிரு யஞ்ஞ


>    சதகணிகு (தமிழ்)

>    6. ராஞோ வசிடி புதஸ சிறீ விஜய ஸாத கணிஸ (பிரா) >  அரசனகு வசிட்டி புதகு


>    திரு விஜய (சதகணிகு)
>
>                           (R. Nagaswamy 1981, P.132 -134)
>
> தமிழ் இலக்கியம் குறிப்பிடும் தமிழக வட எல்லை இன்று நம்பப்படுவது போல்
> திருப்பதி மலை அல்ல என்ற கருத்து கீழ் உள்ள தலைப்பில் ஏற்கென்வே அலசப்பட்டது.
> அதைக் கீழ் உள்ள மின்தமிழ்த் தொடுப்பில் காணவியலும்.
>
>  தென் இந்தியாவில் அசோகன் - தமிழ் மன்னர் ஆட்சி எல்லை
>

> *தென் இந்தியாவில் அசோகன் ஆட்சி எல்லை பகுதிகளும் தமிழ் மன்னர் ஆட்சி


> எல்லையும்  குறித்து ஒரு கருத்துரை.  அதன் வழி தமிழகத்தின் வட எல்லைத்

> தீர்மானம்*
> **https://groups.google.com/forum/?fromgroups#!topic/mintamil/AJabYo-_XMs

seshadri sridharan

unread,
Jul 28, 2012, 11:40:18 PM7/28/12
to mint...@googlegroups.com
சாதவாகனர் தாய் மொழி மராட்டி பிராகிருதம்.  சாதவாகன என்பது தமிழ் அல்ல. சிலர் சாத்து வணிகர் என்பதே சாதவாகன ஆனதாக சொல்லுவர். இது ஏற்கும் படி இல்லை. 

[சாதவாகனர் காசுகள் செய்ய பயன்படுத்திய ஐந்து வார்ப்புக்கூடுகள் தமிழகத்தில் செய்த காஞ்சிபுரம் அகழாய்வில் கிடைத்துள்ளன.[3]இவற்றில் மேற்குறிப்பிட்ட சின்னங்களான மன்னனின் தலை, அவர்களின் பெயர், யானை உருவம் போன்றவற்றை அச்சிடுவதற்கான அச்சுகள் உள்ளன.[4] இவ்வார்ப்புக்கூடுகள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இவை தமிழகத்தில் புழக்கத்தில் விடுவதற்கு தயாரிக்கப்பட்டவையா அல்லது ஆந்திரப் பொருட்களை வாங்குவதற்கு தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டவையா என்று கூற முடியா வண்ணம் உள்ளது.[5]http://tawp.in/r/320a]

இன்னும் சிலர் இந்த வார்ப்புக் கூடுகள் காஞ்சியில் கிடைத்ததை வைத்து சாதவாகனர் தமிழகத்தின் வட பகுதியை ஆண்டிருக்கலாம் என்றும் கருத்துரைத்து உள்ளனர். ஆனால் இவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளத் தவறிவிட்டனர். இதாவது ஆறு சாதவிகன மன்னர் காசுகள் என்றால் ஒரு மன்னருடைய ஆட்சி 20 முதல் 25 ஆண்டுகள்  நிலைத்தது எனக் கொண்டால் சற்றொப்ப 120 முதல் 150 ஆண்டுகள் தமிழகத்தின் வட பகுதி அவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது ஏற்க முடியாத கூற்றாக உள்ளது. ஏனெனில் அதே கால கட்டத்தில் தான் தமிழகத்தில் தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன், கரிகாலன், சேரன் செங்குட்டுவன் போன்றார் ஆண்டுள்ளனர், 

ஆந்திர தொல்லியல் துறையிடம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பண்டைக் காசுகள் உள்ளதாக சொல்லப்படுகின்றது. அதில் சாதவாகனர் காசுகளும் உண்டு.  ஆந்திர தொல்லியல் துறை நேர்மைத் திறம் கொண்டு அவற்றில் இது போல் வேறு ஏதேனும் காசுகளில் இப்படி இரு மொழிப் பெயர் குறிப்பு உள்ள செய்தி இருத்தால் மறைக்காமல் அதை வெயிட வேண்டும். அதோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பண்டைய காசுகள் பல இருப்பதாகவும் அவற்றை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகின்றது. அதிலும் சாதவாகனர் காசுகள் உண்டெனப்படுகின்றது.  உண்மையை ஏழுமலையான் தான் வெளிக்காட்ட வேண்டும். எங்கே? அவன் கோவிலில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் அப்பகுதி தமிழ்ப் பகுதி என்பதை காட்டுவதால் அதை தங்கத் தகடால் மூடி மறைக்கப் பார்த்தார்கள் நயன்(நீதி)மன்றத் தடையால் அது நிறுத்தப்பட்டது. இது இன்றைய நிலவரம்.

சேசாத்திரி

2012/7/28 DEV RAJ <rde...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages