--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
விளக்கம் சொன்னமைக்கு மிக்க நன்றி அய்யா.. இது பழமையானது என்பதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.ஒரு யூகம் தான். இதன் காலத்தை தாங்கள் விளக்கினால் மிக மகிழ்வேன்.நன்றி அய்யா
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/h9M2irjwIfk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
வசிட்ட நதிக்கரையின் ஓரத்தில் பைக் விரைவாக போய்க்க்கொண்டிருந்தது.....முன்னால் பின்னால் வரும் வாகனங்களை கவனித்தாலும் கண்ணின் கடையோரம் ஆற்றங்கரையில் ஏதாவது கோயில் தெரிகிறதா..?தனியாக சிலைகள் இருக்கிறதா என்பதை கவனித்துக்கொண்டே சென்றது..
பட்டென்று மின்னல் அடித்தால் போல் ஒரு செங்கல் தளி...
வண்டி நான் சொல்லாமலேயே தன் வேகத்தை குறைத்தது....சாலையோரம் சென்று அமைதியாய் நின்றது..
ரொம்ப பழமையான கோயில் போல தெரிந்தது..அருகிலே இரண்டு பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தது..எப்படி உள்ளே போவது...சுற்றி முள் நிறைய வளர்ந்து நின்றது...ஒரு வழியாய் சுற்றிக்கொண்டு கோயிலை நெருங்கினேன்...அது இப்போது வழிபாட்டில் இல்லை என்பது புரிந்தது..கருவறை கும்மிருட்டாக இருந்தது...சிலந்தி நிறைய கூடு கட்டியிருந்து...
மிக சிறிய செங்கல் தளிதான்..கருவறைக்கு முன் உள்ள பகுதிக்குள் நுழைந்தேன்..ஏதோ குகைக்குள் நுழைந்த உணர்வு..
கருவறையில் ஓரே ஒரு சிலை மட்டும் தெரிந்தது...கூர்ந்து கவனித்த போது அது அய்யனாராக இருக்கும் என தோன்றியது..சரி உள்ளே நுழைந்து படம் எடுக்கலாம் என நினைத்த போது கருவறை உள்ளே ஏதோ நீளமாய் தரையில் தெரிந்தது..கயிறா...? இல்லை பாம்மா...?
நெஞ்சு பக்..பக்கென அடித்துக்கொண்டது...இப்ப எப்படி போட்டோ எடுப்பது...?உள்ளே போய் ஒரு வேளை -[]ம்பாயிருந்து
நம்மை போட்டு தள்ளிட்டா...?
இரண்டு அடி பின்னால் எடுத்து வைத்தேன்...செல் காமிராவை ஜூம் செய்து முடிந்த வரை போட்டோ அவசரம் அவசரமாய் எடுத்தேன்...எனக்கென்னவோ இது பல்லவர் கால அய்யனாரா இருக்குமோன்னு தோணுது...உங்களுக்கு எப்படி தோணுதுன்னு சொல்லுங்க....
மகதை மண்டலத்தின் மற்றுமோர் பொக்கிசமாய் இது இருக்க கூடும்...!!!
By செந்தலை ந.கவுதமன்
First Published : 28 February 2010 01:05 AM IST
பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் ஒருவேளை அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை - தி.வே.கோபாலையர் இருந்தால் போதும்! அவர் நினைவிலிருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும்''
தமிழறிஞர் பலரும் இப்படி ஒருமுகமாய் போற்றுமளவுக்கு "மாந்தக்கணினி' யாகத் தமிழுலகை வலம் வந்தவர் தி.வே.கோபாலையர்.
ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், புலமையாளர், ஆய்வாளர், பன்மொழிப்புலவர் எனப் பல நிலையிலும் தம்மையும் தம் புலமையின் ஆளுமையையும் தொடர்ந்து வெளிப்படுத்தியவர்.
மன்னார்குடியில், 1925-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி வேங்கடராமய்யர்-இலக்குமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தோர் ஆறுபேர். தம்பியர் நால்வர். தங்கையர் இருவர்.
அரசுப் பணியில் எழுத்தராக இருந்தவரின் மூத்த மகனாகப் பிறந்த இவர், திருவையாறு அரசர் கல்லூரியில் நான்காண்டுகள் பயின்று, 1945-இல் புலவர் பட்டக் கல்விகற்று மாநில அளவில் முதல் மாணவராகத் தேறினார். 1951-இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டமும் 1958-இல் ஆனர்சு பட்டமும் பெற்ற இவர், இரண்டிலும் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்க "பண்டிதர்' தேர்வை 1953-இல் எழுதி, அதிலும் முதல் மாணவராகத் திகழ்ந்தார்.
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், திருக்காட்டுப்பள்ளி சிவகாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றிய தி.வே.கோபாலையர், 1963-இல் புலவர் கல்வியை முதன்முதலில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய திருவையாறு அரசர் கல்லூரி முதல்வர் ஆனார். இவரைப் பொறுத்தவரை ஆசிரியர், பேராசிரியர், முதல்வர் எல்லாப் பதவியும் ஒன்றுதான்.
மரபுவழித் தமிழாசிரியர்களில் இவரே கடைசித் தலைமுறை! குருகுலக் கல்வி போலத்தான் இவர் வகுப்பறை இருக்கும். வலுவான தமிழறிவும் ஆர்வமும் உள்ளோர் மாணாக்கர்களாய்க் கிடைத்துவிட்டால், கால எல்லை பாராமல் கற்பித்துக்கொண்டே இருப்பார். முடியில்லாத தலையை அவ்வப்போது இடக்கையால் தடவி விட்டுக்கொள்வார். அடுத்தநொடி தமிழ் வெள்ளமாய் இவர் நாவிலிருந்து பாய்ந்து வரும்.
"என்ன பாடம்?' என்று கேட்டபடி வகுப்பறைக்குள் நுழைவார். நூலின் பெயரைச் சொல்வோம். "எந்தப் பகுதி?' என்பார். நினைவூட்டுவோம். ஒருகாலைக் குத்துக்கால் இட்டபடி நாற்காலியில் அமர்ந்து கொள்வார். புத்தகத்தைத் தொடமாட்டார். பக்கம் பக்கமாய் புத்தகம் இவர் மனக்கண்ணில் விரிந்து நகர்ந்தபடி இருக்கும்.
தொல்காப்பியம், சங்க இலக்கியம் என எதைக் கற்பித்தாலும் வரிமாறாமல் தொடர்ந்து சொல்லும் ஆற்றல் பெற்றவர். வயது வேறுபாடின்றி எல்லாச் செய்திகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வார்.
தொல்காப்பிய உரைகள் அனைத்தும் இவர் நாவிலிருந்து தொடர்ச்சியாய் வந்து விழும். நச்சினார்க்கினியர் மீது மட்டும் இவருக்குத் தனிப்பற்று உண்டு.
""கராத்தின் வெய்யது தோள்'' எனத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வருகிறதே! எனக்கே புரியவில்லை. மாணவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?'' என்று உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் இவரிடம் ஐயம் கேட்பார்கள்.
ஐயம் எழுப்பிய பேராசிரியரை அமைதியாய் உற்றுப் பார்த்தபடி தி.வே.கோபாலையர், ""கராத்தின் என்பது பிழை. "காரத்தின் என்பதே சரி. புண்ஆற சித்த மருத்துவத்தில் காரத் துணிதானே வைப்பார்கள்! "திணைமாலை நூற்றைம்பது' என்ற நூலில் உள்ள வரி அது. ஏடெழுதுவார் செய்த பிழையால் "கராத்தின்' என இன்றும் பிழையாகப் பதிப்பிக்கப்படுகிறது'' என்று கூறுவார்.
எந்த ஐயம் எழுப்பப்பட்டாலும் எளிதாகக் கடந்து செல்வார். ஆராய்ச்சித் துளிகளை வெகு எளிதாக பேச்சில் வீசியபடி இருப்பார். "நின்' என்பதற்குப் பன்மை "நீம்'. சீவகசிந்தாமணியில் மட்டும்தான் அதற்குச் சான்று உள்ளது. "நீமே வென்றி' என்ற பாடலை இசையோடு பாடிக்காட்டுவார்.
சீவகசிந்தாமணி மற்றும் கம்பராமாயணம் முழு நூலையும் இவர் வாய்மொழியாகவே பாடல்களை வரிசை மாறாமல் பாடுவார். தொல்காப்பிய நூற்பாக்களை உரையாசிரியர் அனைவரின் உரைகளோடும் சேர்த்தே கூறுவார்.
தமிழோடு ஆங்கிலம், சம்ஸ்கிருதம், இந்தி முதலிய நூல்களையும் படித்தபடி இருப்பார். தேவைப்பட்டால் மட்டுமே வகுப்பில் அவற்றை அரிதாகத் தொட்டுக்காட்டுவார். பெரும்புலவர் என்ற நினைப்போ, முதல்வர் என்ற ஆரவாரமோ இல்லாமல் எப்போதும் எங்கும் நடந்தேதான் செல்வார். எதிர்ப்படும் மாணவர்களிடம் இயல்பாகப் பேசிப்பழகும் குணமுடையவர்.
இவர் முதல்வராய்ப் பணியாற்றிய திருவையாறு அரசர் கல்லூரியில் இருமுறை இவரை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. இருமுறையும் இவர் பணி நீக்கத்துக்கு ஆளானார். நிறைகுடமாகத் திகழ்ந்த இவர், நிம்மதியாக ஆசிரியப் பணியாற்றிய காலம் மிகவும் குறைவுதான்!
இரண்டாம் முறை பணிநீக்கத்துக்கு ஆளானபோது, கல்லூரிப் பணியையே இவர் கை கழுவினார். புதுவை பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தில் 1979-இல் ஆய்வாளராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கி, தமது 82-ஆம் வயது வரை நிம்மதியாக அங்கேயே பணியைத் தொடர்ந்தார்.
பின்னர், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இலக்கண நூல் பதிப்பாசிரியர் ஆனார். நன்னூல் பதிப்பின் வழியாக 1835-இல் தொடங்கிய தமிழ் இலக்கணப் பதிப்பு மரபை, 1970-க்குப் பின் வளப்படுத்தும் வாய்ப்பை தி.வே.கோபாலையர் பெற்றார்.
இலக்கண விளக்கம் (1972), இலக்கணக் கொத்து (1973), பிரயோக விளக்கம் (1973) முதலான நூல்கள் இவரால் பதிப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு நூலைப் பதிப்பிக்கும் முன்பும் அதன் ஓலைச்சுவடிகளையும் அச்சு நூல்களையும் ஒன்றுதிரட்டி ஒப்புநோக்கி, அதில் தமக்குச் சரி எனப்படுவதை மட்டும் மூலமாக வைப்பது இவரின் பதிப்பு முறை.
தமிழ், வடமொழி இருமரபிலும் தேர்ந்த புலமை பெற்றவராகத் திகழ்ந்த காரணத்தால், இலக்கண உலகில் செம்பதிப்புகளையும், பயன்பாட்டுப் பதிப்புகளையும் உருவாக்கிய மிகச்சிறந்த பதிப்பாசிரியராக தி.வே.கோபாலையரால் புகழ்பெற முடிந்தது. இவரது வாழ்நாள் சாதனையாகத் திகழ்வது, சென்னை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட (24.10.2005) "தமிழ் இலக்கணப் பேரகராதி' பதினேழு தொகுப்புகள்தான்.
இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொல்காப்பியம் செம்பதிப்பு - 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. கம்பராமாயணம் தொடர்பாக ஏழு நூல்களை எழுதியுள்ளார். மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்புக்கும், சேனாவரையம் பிரெஞ்சு மொழி பெயர்ப்புக்கும், "சோழர் கலைப்பணி' ஆங்கில நூலின் தமிழாக்கத்துக்கும் இவரின் பன்மொழிப் புலமை பயன்பட்டுள்ளது.
புதுவையில் வாழ்ந்த தி.வே.கோபாலையர், 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி காலமானார்.
இலக்கண ஐயம் எழும்போதெல்லாம், தி.வே.கோபாலையர் பெயரும் சேர்ந்தே எழும் சூழல், இன்னும் நெடுங்காலத்துக்குத் தொடரும்.
அய்யன் அய்யனார் சாஸ்தா எனப்பலப்பெயர்களில் உருவங்கள் பெரிதும் மாறுபட்டு காணமுடிகின்றது தனிக் கோயிலுடனும் காணலாம் இவர் எல்லைகாவல் தெய்வம் எனக் கொள்ளவேண்டும் கிராம தேவதைகள் வரிசையில் வரும் இவருக்கு தேவியர்களும் காணமுடியும் இவர்தான் அய்யப்பனாயும் ம் இருக்கின்றார் ஐயமில்லை
விளக்கம் சொன்னமைக்கு மிக்க நன்றி அய்யா.. இது பழமையானது என்பதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.ஒரு யூகம் தான்.
இதன் காலத்தை தாங்கள் விளக்கினால் மிக மகிழ்வேன்.
--
அய்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/h9M2irjwIfk/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Thursday, January 21, 2016 at 7:38:53 PM UTC-8, N. Ganesan wrote:இன்று இவரது பிறந்த நாள் ... 90 வயது...

தமிழ் நூற்கடல் என்று அழைக்கப்பட்ட தி.வே.கோபாலையர், 1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில்தான் பிறந்தார். தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளரார் என பன்முகத் தன்மையுடன் திகழ்ந்த இவர், சமஸ்கிருதம், ஆங்கிலம், ஃப்ரெஞ்சு மொழிகளிலும் வல்லவர். திருப்பனந்தாள் மற்றும் திருவையாறு கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், கம்ப ராமாயணப் படலச் சுருக்கம், சுந்தர காண்டம் உள்ளிட்ட நூல்களையுடத எழுதியுள்ளார். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். தமிழக அரசின் திரு.வி.க விருது, கபிலர் விருது என பல விருதுகளைப் பெற்ற இவர், 2007ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி திருச்சியை அடுத்த திருவரங்கத்தில் இயற்கை எய்தினார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.