பெண்ணீயம் என்ற சொல்லே பரிசீலனைக்குரியது..

289 views
Skip to first unread message

இசையினியன்

unread,
Apr 25, 2018, 9:22:59 PM4/25/18
to மின்தமிழ்
பெண்ணீயம் என்ற சொல்லே பரிசீலனைக்கு உரியது. எப்போது பெண்ணியம் பற்றி பேச வேண்டி இருக்கிறதோ அப்போது கட்டாயம் ஆணியம் பற்றி பேசி ஆக வேண்டி சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆணியத்திற்கு சில வரைமுறைகளையும் பெண்ணியத்திற்கு சில வரை முறைகளையும் நிர்ணயிக்க வேண்டி இருக்கிறது. இந்த வரையறைகளே பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது. வரையறைகள் மனத்திற்கு மனம் மாறுபாடு அடைகிறது. எப்போது இந்த வரையறைகள் களையப்படுகிறதோ அப்போதே ஆண், பெண் பிரச்சனைகள் களையப்பட்டுவிடும்.

பெண்ணியம்:ஆணியம் பிரச்சனைகள் தீர்க்கப்பட பெண், ஆண் பாகுபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.

ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி என்பதில் அதாவது கல்விக் கூடங்களே பாகுபாட்டை விதைக்கின்றன. கல்வியில் இருந்து பிரச்சனை ஆரம்பமாகிறது. உலகம் வளர்ந்து விட்டது என கூறிக் கொள்ளும் போதும் ஏன் இன்னும் இந்தப் பிரிவினைகள் தேவைப்படுகின்றது? பிரிவினைதான் பிரச்சனைக்குக் காரணம்.

எனக்குத் தெரிந்தவரை இருபாலர் கல்விக்கூடத்தில் படித்த மாணவமாணவியருக்கும், ஒருபாலர் கல்விக்கூடத்தில் படித்த மாணவமாணவியருக்கும் மனஅளவில் வேறுபாடுகள் இருப்பதைக் காண முடியுகிறது.

சமுதாயத்தில் பெண்ணியம் எனச் சொல்லி அரசியல் நடத்தியோர் பலரிருக்க ஏன் இன்றும் ஆண் பெண் இடையே உரசல்கள் இருக்கின்றன? எனவேதான் நான் கூறுகின்றேன், பெண்ணியம் என்ற சொல்லாடலே தவறானது. பெண்ணுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை ஒருவருக்கு இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட்டது எனச் சொல்வோம், ஆணுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை ஒருவருக்கு இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட்டது எனச் சொல்வோம் அதை விடுத்து பெண்இனத்திற்கே எதிரானது என்றும், ஆண்இனத்திற்கே எதிரானது என்றும் கூறுவது என்பது ஒரு இயக்கம் வைத்துக் கொண்டு ஒருசாரர் ஆண் இனத்திற்கு எதிராக செயல்படுவோர் மாதிரியும், மற்றொருசாரர் திட்டம் தீட்டிக் கொண்டு பெண் இனத்திற்கு எதிராக செயல்படுவோர் மாதிரியும் கூறுவது முன்னேற்றம் அடையாத மனப்பான்மையையேக் காட்டுகிறது. மனப்பான்மை மாறும் போதுதான் ஒரு நற்சமுதாயம் உருவாகும்.

உலகில் தோன்றிய உயிர்கள் சமம் என்ற மனப்பான்மை எப்போது வருகிறதோ அப்போதுதான் ஒரு நேர்த்தியான சமுதாயம் அமையும். ஆண் பெண் இருவரும் சேர்ந்தது தானே உலகம்!

ஆண்களுக்கு நிகராக இப்போது பெண்களும்.. என்ற சொல்லாடலும் தவறு போன்றே தெரிகிறது. எப்படி என்றால் ஒரு பெண்ணின் உழைப்பை ஆண்களுக்கு நிகர் எனக் கூற முடியும்? அது போன்றே ஒரு ஆணின் உழைப்பை பெண்ணுக்கு நிகர் எனக் கூற முடியும்? அப்பெண்ணின் உழைப்பு அவருக்கே தெரியும். ஆணின் உழைப்பு அவருக்கே தெரியும்.

பெண்ணின் உழைப்பையும் அதில் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றியும் கூறுவதை விடுத்து ஒப்பிடு செய்வது ஏனோ? உழைப்பைப் பற்றிக் கூறுவதைவிடுத்து, ஆண்களுக்கு நிகர் என ஒப்பிடு செய்வது, கூறுவது மேலும் பாகுபாட்டையே ஏற்படுத்தும். மேலும் அப்பெண்ணின் உழைப்பை ஒப்பீடு செய்வதும் கூட ஒரு இனப்பாகுபாடு காரியமேயன்றி வேறு இல்லை. அவரது உழைப்பை குறைத்து மதிப்பிடுவதற்குச் சமம் ஆகும்.

S. Jayabarathan

unread,
Apr 26, 2018, 12:03:53 AM4/26/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan
/// உலகில் தோன்றிய உயிர்கள் சமம் என்ற மனப்பான்மை எப்போது வருகிறதோ அப்போதுதான் ஒரு நேர்த்தியான சமுதாயம் அமையும். ஆண் பெண் இருவரும் சேர்ந்தது தானே உலகம்////

ஏற்றத் தாழ்வுகள் பெருகும்  உலகில்,  இந்த சமப்பாடு நிலை ஒருபோதும் வரப்போவதில்லை.  

இல்லை, தேவையற்றது என்று கண்மூடிப் புறக்கணித்தாலும், பெண்ணியம், ஆணியம், அலியியம் ஆகிய மூன்றும் உரிமைப் பிரச்சனையாய்  உள்ளன.  இப்போது இந்தியா வெங்கும் நிகழும் வன்புணர்ச்சிக் கொடுமைகளைப் பார்த்தால், ஆணிய ஆணவம் சட்டத்துக்கு அஞ்சாது, தனது கோரப் பற்களால் பெண்களைக் கொல்லும் கொடூரங்கள் புரியும்.  

கடவுள் இருபாலாருக்கும் இணையான ஞானம், திறமை, சமப்பாடு கொடுத்திருந்தாலும், ஆண் பெண்ணை இரண்டாம் தர இடத்தில்தான் வைத்து தாழ்ச்சியாகவே நடத்துகிறான். 

சி. ஜெயபாரதன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Apr 26, 2018, 11:15:25 AM4/26/18
to vannan vannan, Pitchai Muthu, tamilmantram, vallamai, mintamil, vaiyavan mspm
நண்பர் வண்ணன்,

மக்கள் தொகை பெருகும் போது குற்றவாளிகள் எண்ணிக்கை மிகையாகும் என்றால், அவற்றைக் கட்டுப்படுத்த அதே விகிதத்தில் காவல்துறையும், நீதி மன்றங்களும் இந்தியாவில் அதிகரித்துள்ளனவா ?  இல்லையே.

சி. ஜெயபாரதன் 

2018-04-26 2:51 GMT-04:00 vannan vannan <vanna...@gmail.com>:
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றி மற்ற நாடுகளுடன்  ஒப்பிடும் போது நம் நாட்டின் மக்கள்  தொகை ,மற்றும் வெப்ப நிலை  இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
கி வ  வண்ணன் 

செல்வன்

unread,
Apr 26, 2018, 11:29:50 AM4/26/18
to mintamil
வகுப்பில் முதல் ரேன்க் வாங்கும் மாணவன் கடைசி பெஞ்ச் மாணவனை பார்த்து "நானும் கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு போவேன், சைட் அடிப்பேன், படிக்கமாட்டேன்" என சொல்லுவதுக்கு ஒப்பானதுதான் தற்போது பேசபடும் பெண்ணியம்.

முன்பு பெண்ணியம் என்றால் மகளிருக்கு படிப்பு, வேலை வாய்ப்பில் சம வாய்ப்பு, வரதட்சிணை கொடுமை எதிர்ப்பு என நேர்மையான காரணங்களுக்காக இருந்தது/.

இப்போது ஆண்களுக்கு சமமாக கெட்டுபோவது தான் பெண்ணியம் என்ற அளவில் வந்து நிற்கிறது.

பெண்ணியம் என்பது பெண்களை உயர்த்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய தாழ்த்துவதாக அமையகூடாது.

S. Jayabarathan

unread,
Apr 26, 2018, 11:42:47 AM4/26/18
to mintamil, vallamai, tamilmantram
அதற்கு ஆதாரங்கள் உண்டா செல்வன் ?

சி. ஜெ.

செல்வன்

unread,
Apr 26, 2018, 11:53:16 AM4/26/18
to mintamil, vallamai
எதற்கு ஆதாரம் வேண்டும் ஐயா?
--

செல்வன்

S. Jayabarathan

unread,
Apr 26, 2018, 3:00:25 PM4/26/18
to vallamai, mintamil
////இப்போது ஆண்களுக்கு சமமாக கெட்டுபோவது தான் பெண்ணியம் என்ற அளவில் வந்து நிற்கிறது.

பெண்ணியம் என்பது பெண்களை உயர்த்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய தாழ்த்துவதாக அமையகூடாது.///

இவற்றுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன ?

சி. ஜெ.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Kandiah MURUGATHASAN

unread,
Apr 26, 2018, 3:08:08 PM4/26/18
to mint...@googlegroups.com, vallamai
பெண்ணியம் என்றால் முதலில் பெண்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வன்

unread,
Apr 26, 2018, 3:20:32 PM4/26/18
to vallamai, mintamil
2018-04-26 13:59 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
////இப்போது ஆண்களுக்கு சமமாக கெட்டுபோவது தான் பெண்ணியம் என்ற அளவில் வந்து நிற்கிறது.

பெண்ணியம் என்பது பெண்களை உயர்த்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய தாழ்த்துவதாக அமையகூடாது.///

இவற்றுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன ?

சி. ஜெ.

மேலைநாடுகளில் இதனால் பெண்கள் ஆண்களுக்கு சமமாக தண்ணி அடித்து, சிகரெட் பிடித்து இப்போது கஞ்சாவும் அடிக்கிரார்கள்.

சிகரெட் பிடிப்பது தப்பு, மது அருந்துவது தப்பு என சொல்பவர்கள் பழைய பஞ்சாங்கம் ஆகி இப்போது இந்தியாவிலும் இந்த லிவிங் டுகெதர், கலாயனம் செய்துகொள்ளாமல் கர்ப்பம் தரிப்பது, பெண்கள் பார், பப்புக்கு போவது பேஷன் ஆகி வருகிறது.

இதை எல்லாம் பல இழைகளில் குழுவில் விவாதித்துள்ளோம்.

--

செல்வன்

தேமொழி

unread,
Apr 26, 2018, 5:52:16 PM4/26/18
to மின்தமிழ்

On Thursday, April 26, 2018 at 12:08:08 PM UTC-7, tamilstorywriters wrote:
பெண்ணியம் என்றால் முதலில் பெண்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சரியான விளக்கம்.

தாங்கள் சமமாக நடத்தப்படவில்லை அதனால் பாதிப்பு அல்லது இழப்பு என்று உணர்வோர் உரிமைக்குரல் கொடுப்பார்கள்.

அவர்கள் எந்தப் பிரிவினராகவும் இருந்தாலும் சரி.  ஆண், பெண், கருப்பு, சிவப்பு, இந்து, முஸ்லிம்   என எந்தப் பிரிவில் உள்ளவரும்   பாதிப்பு எனக் கருதினால் முறையிட்டால்  அவர்கள் கோணத்தைப் புரிந்து கொள்ள முயலவேண்டும்.  நாமே அவர்கள் கேட்பது குறித்து நம் பார்வையில் இருந்து ஒரு முடிவு எடுத்துக் கொண்டு அவர்கள் மீது திணிக்க முடியாது.

உங்களுடையது  சரியான துவக்கம்  என்பது எனது கருத்து.  நன்றி. 

.... தேமொழி 

தேமொழி

unread,
Apr 26, 2018, 5:56:38 PM4/26/18
to மின்தமிழ்
மக்கட்தொகையைக் கணக்கில் கொண்டுதான் ஸ்டாண்டர்ட்டைஸ்  செய்து கிரைம் ரேட் எனப் புள்ளிவிவரம் தருவார்கள்.

இங்கு 1000 பெண்களில் இவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

அந்த நாட்டில்  1000 பெண்களில் இவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள்  என்பது போன்றவை ஒப்பிட வசதியாக இருக்கும்.

ஆனால் ...வெப்ப நிலை ???  இந்தக்  காரணம்/தொடர்பு  புரியவில்லை. 

எங்கு அடுத்தவர் உரிமையை மதிப்பது மற்றும்  மனித நேயம் அதிகமோ அங்கு அத்துமீறல்கள் குறையும். 

..... தேமொழி 

S. Jayabarathan

unread,
Apr 26, 2018, 9:16:02 PM4/26/18
to vallamai, mintamil
​///​
மேலைநாடுகளில் இதனால் பெண்கள் ஆண்களுக்கு சமமாக தண்ணி அடித்து, சிகரெட் பிடித்து இப்போது கஞ்சாவும் அடிக்கிரார்கள்.
சிகரெட் பிடிப்பது தப்பு, மது அருந்துவது தப்பு என சொல்பவர்கள் பழைய பஞ்சாங்கம் ஆகி இப்போது இந்தியாவிலும் இந்த லிவிங் டுகெதர், கலாயனம் செய்துகொள்ளாமல் கர்ப்பம் தரிப்பது, பெண்கள் பார், பப்புக்கு போவது பேஷன் ஆகி வருகிறது.
​///

இவர்கள் விதிவிலக்குப் பெண்டிர். விதிவிலக்குப் பெண்டிர் எத்தனை சதவீதம் இருப்பார் ???  விதிவிலக்குகளைப்  பொதுவிதிக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது !  தமிழகத்தில் பொதுவிதிப் பெண்டிர் ஒழுக்கமானவர்.​  அவரைச் சீண்டி அவமதிப்பவர் ஆணாதிக்க ஆடவர்.  

தமிழ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள கயவர் [%] ஆடவரா ? பெண்டிரா ?  ஆடவர் அதிக அளவில் கயவராய் இருப்பதால்தான் , பெண் வன்முறை நிகழ்ச்சிகள் எண்ணிக்கையில் மிகுதி.  

​பத்துக் கயவர் மாணவராக இருப்பதால் பல்கலைக் கழகத்தின் பெயர் கெடலாம். ஆனால் தரம் கெடாது.​

சி. ஜெயபாரதன்

--

செல்வன்

unread,
Apr 27, 2018, 12:02:37 AM4/27/18
to vallamai, mintamil

2018-04-26 20:15 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
​///​
மேலைநாடுகளில் இதனால் பெண்கள் ஆண்களுக்கு சமமாக தண்ணி அடித்து, சிகரெட் பிடித்து இப்போது கஞ்சாவும் அடிக்கிரார்கள்.

சிகரெட் பிடிப்பது தப்பு, மது அருந்துவது தப்பு என சொல்பவர்கள் பழைய பஞ்சாங்கம் ஆகி இப்போது இந்தியாவிலும் இந்த லிவிங் டுகெதர், கலாயனம் செய்துகொள்ளாமல் கர்ப்பம் தரிப்பது, பெண்கள் பார், பப்புக்கு போவது பேஷன் ஆகி வருகிறது.
​///

இவர்கள் விதிவிலக்குப் பெண்டிர். விதிவிலக்குப் பெண்டிர் எத்தனை சதவீதம் இருப்பார் ???  விதிவிலக்குகளைப்  பொதுவிதிக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது !  தமிழகத்தில் பொதுவிதிப் பெண்டிர் ஒழுக்கமானவர்.​  அவரைச் சீண்டி அவமதிப்பவர் ஆணாதிக்க ஆடவர்.  

தமிழ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள கயவர் [%] ஆடவரா ? பெண்டிரா ?  ஆடவர் அதிக அளவில் கயவராய் இருப்பதால்தான் , பெண் வன்முறை நிகழ்ச்சிகள் எண்ணிக்கையில் மிகுதி.  

​பத்துக் கயவர் மாணவராக இருப்பதால் பல்கலைக் கழகத்தின் பெயர் கெடலாம். ஆனால் தரம் கெடாது.​

சி. ஜெயபாரதன்

நீங்கள் தற்கால சினிமாக்களை பார்ப்பது இல்லை போல.

லிவிங் டுகெதர் கலாசாரத்தை போற்றிபுகழும் படங்களை மணிரத்தினம் மாதிரி முற்போக்கு இயக்குனர்கள் எடுத்து வருகிறார்கல். இளைஞர்கள் பட்டாளம் அதை போற்றிபுகழ்கிறது.

தீபிகா படுகோனே மாதிரி முற்போக்குவாதிகள் ப்ரீ செக்ஸை ஆதரித்து வைரலாகும் விடியோக்களை வெளியிட்டு முற்போக்கு பட்டம் பெற்றுவருகிறார்கள். அதிலும் கல்யானம் செய்துகொண்ட பின்னும் யாருடனும் உறவுகொள்வது என சுதந்திரம் என எல்லாம் அந்த விடியோவில் வெளிவந்து அதை முற்போக்குவாதிகள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொன்டாடுகிரார்கள்.

இந்திய பெண்கள் பொதுவில் மிக சிறப்பாகவே இருக்கிறார்கள். அவர்களைஇப்படி பெண்ணியம் எனும் பெயரால் மேலைநாட்டு குப்பை கலாசாரத்தை பரப்பி கெடுக்க முயலும் முட்டாள்களையே நான் சாடினேனே ஒழிய பெண்களை அல்ல. பெண்கள் நம் நாட்டின் கண்கள். 

--

செல்வன்

Innamburan S.Soundararajan

unread,
Apr 27, 2018, 2:12:52 AM4/27/18
to vallamai, mintamil
இந்திய பெண்கள் பொதுவில் மிக சிறப்பாகவே இருக்கிறார்கள். அவர்களைஇப்படி பெண்ணியம் எனும் பெயரால் மேலைநாட்டு குப்பை கலாசாரத்தை பரப்பி கெடுக்க முயலும் முட்டாள்களையே நான் சாடினேனே ஒழிய பெண்களை அல்ல. பெண்கள் நம் நாட்டின் கண்கள். 

~ ஆமாம்ப்பா.

--

Suba

unread,
Apr 27, 2018, 4:37:24 AM4/27/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram

2018-04-26 2:51 GMT-04:00 vannan vannan <vanna...@gmail.com>:
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றி மற்ற நாடுகளுடன்  ஒப்பிடும் போது நம் நாட்டின் மக்கள்  தொகை ,மற்றும் வெப்ப நிலை  இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
கி வ  வண்ணன் 

வெப்ப நிலை அதிகரிப்பது பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

தெய்வீகம். நன்னெறி ஆகியவை எல்லாம் புத்தகத்தில் மட்டும் தான். நடைமுறையில் இல்லை ..

சுபா

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

Innamburan S.Soundararajan

unread,
Apr 27, 2018, 6:44:58 AM4/27/18
to mintamil, Subashini Kanagasundaram
'வெப்பம்' சப்பைக்கட்டு, சார்/மேடம்.

செல்வன்

unread,
Apr 27, 2018, 1:44:07 PM4/27/18
to mintamil
வெப்பம் தான் காரணம் என்றால் குளிர்நாடுகளில் ஏன் பலாத்காரம் செய்கிறார்கள்?

நொண்டிகுதிரைக்கு தடுக்கி விழுந்ததுதான் சாக்கு என எதையாவது சொல்லவேண்டியது :-)

On Fri, Apr 27, 2018 at 5:44 AM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
'வெப்பம்' சப்பைக்கட்டு, சார்/மேடம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

செல்வன்

செல்வன்

unread,
Apr 27, 2018, 7:03:15 PM4/27/18
to செல்வன்
"தாய்ப்பால் கொடுப்பது இயற்கை" என அரசு விளம்பரம் கொடுப்பது பெண்ணியத்துக்கு எதிரானது என பெடியாட்ரிக்ஸ் ஜர்னலில் வெளியான ஆய்வுகட்டுரையில் முற்போக்கு ஆராய்ச்சியாளர்கள் ரூம் போட்டு உட்கார்ந்து கண்டுபிடித்துள்ளனர்.

A spate of recent work challenges the extent of these benefits, and ethical criticism of breastfeeding promotion as stigmatizing is also growing.1 Building on this critical work, we are concerned about breastfeeding promotion that praises breastfeeding as the “natural” way to feed infants. This messaging plays into a powerful perspective that “natural” approaches to health are better, a view examined in a recent report by the Nuffield Council on Bioethics.2 Promoting breastfeeding as “natural” may be ethically problematic, and, even more troublingly, it may bolster this belief that “natural” approaches are presumptively healthier. This may ultimately challenge public health’s aims in other contexts, particularly childhood vaccination.

Referencing the “natural” in breastfeeding promotion, then, may inadvertently endorse a controversial set of values about family life and gender roles, which would be ethically inappropriate

எதை இந்த கோமாளிகள் காண்ட்ராவர்சியல் என சொல்கிரார்கள் என புரிகிறதா?

இது தான் தற்போது பெண்ணியத்தின் நிலை. தாய்ப்பாலுக்கு எதிராக குரல் கொடுப்பதுதான் பெண்ணியம், முற்போக்கு என ஆகிவிட்டிருக்கிறது

kanmani tamil

unread,
Apr 30, 2018, 9:27:40 AM4/30/18
to mintamil
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ரூம் போட்டு தாய்ப்பால் கொடுப்பதை ஆதரித்தார்.
இங்கே யாரும் அதைக் கேள்வி கேட்கவில்லை.............மாறாக அவை இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன .'தாய்மார்கள் பாலூட்டும் அறை ' ---ஒன்று போல அலுமினியம் ஃ பீடிங் போட்ட கண்ணாடி (opaque) அறை.
ஒவ்வொரு ஆண்டும் தாய்ப்பால் வாரம் என்று ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. வளர்ந்து வரும் இளைய சமுதாயம் தாய்ப்பாலின் சிறப்பை அறிந்து .... நடைமுறையை மாற்றக்கூடாது என்பதற்காக ......அந்த வாரத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவரும் தாய்ப்பால் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்......சமூக அக்கறையுள்ள மருத்துவர்களும் ,கல்விக்கூடத்தலைவர்களும்   இந்நிகழ்ச்சிகளை பொறுப்புணர்வோடு செய்கின்றனர்........நான் 9 ஆண்டுகள் நடத்தியிருக்கிறேன்.
யு.எஸ்.பெண்ணியம் வேறு ;நம் நாட்டு பெண்ணியம் வேறு.
சுருங்கி வரும் உலகில் மேலைப் பெண்ணியம் நம் நாட்டைத் தாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது .
மணிரத்னம் கூட 'live to-gether culture' பற்றிப் படமெடுத்த போது இறுதியில் திருமணத்தின் அவசியத்தைத் தான்  வலியுறுத்தினார்.
கண்மணி 

தேமொழி

unread,
Apr 30, 2018, 3:25:32 PM4/30/18
to mint...@googlegroups.com
///யு.எஸ்.பெண்ணியம் வேறு ;நம் நாட்டு பெண்ணியம் வேறு.///

பெண்ணியம் குறித்து விவாதிக்கும் பொழுது, முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்று அதை வரையறுத்து, அதன் புரிதலுடன் விவாதிப்பது பொருள் கொண்டதாக இருக்கும்.

பாலின வேறுபாட்டால் உரிமை இழப்பது, கட்டுப்படுத்தப்படுவது, அந்த வேறுபாட்டால்  பொருள் பதவி உரிமை ஆகியன  கைவிட்டுப்போவது குறித்த விழிப்புணர்வுடன் அதனை மாற்றியமைக்கும் நோக்கில்  பெண்ணுக்கு சமவுரிமை வேண்டுவது பெண்ணியம்.

குறிப்பாகப் பெண்ணியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெளிவாகக் கூறிவிட்டு தொடர்வது சரியாக இருக்கும்.

நான் பார்த்தவரை ஆண்களுக்குச் சமமாக உரிமை எதிர்பார்க்கிறார்கள் என்று கண்டிப்பது ஒருசிலரின் பெண்ணிய வரையறை.  அதில் என்ன தவறு?  என்று மறுகேள்விதான்  கேட்கப்பட வேண்டும்.

ஆண்கள் தங்கள் கோணத்தில் வரையறுத்து இது பெண்ணியம் என்று சொல்வதைப் பெண்கள் ஏற்றுக் கொண்டு அதே வழியிலேயே நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் பெண்ணியம் என்பது வேறுபடுகிறது  என்று அவர்கள்  இழுப்புக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருப்பது பெண்ணியம் அல்ல. 

பொறுக்கியெடுத்த ஓரிரு மாறுபட்ட நிகழ்வைக் காட்டி, அடுத்தவர் கருத்தை திசை திருப்பும் வகையில் பெண்ணியச் சிந்தனை  என்பது கேவலமானது என்ற கோணத்தை முன்னிறுத்தும் வகையில் ஒரு கோணம் வைக்கப்பட்டால் அதன் வழியே சென்று பெண்ணியம் என்ன என்பதை விளக்கிக் கொண்டிருப்பது, அதுவும் பெண்கள் செய்வது குறித்து இங்கு சிந்திக்க வேண்டும்.

உணர்வுகள் அனைவருக்கும் ஒன்றே, எல்லோருக்கும் பசிக்கும், தாக்கினால் வலிக்கும் போன்ற அடிப்படை உயிரின மனிதநேய வழியில்  ஒருவருக்கு மறுக்கப்படும் உரிமை, அல்லது வாய்ப்பு குறித்து பேசினால் அது  பெண்ணியம்.

அமெரிக்காவோ... ஆப்பிரிக்காவோ  பெண்கள் அனைவரும் ஒருவரே, உணர்ச்சிகள் வாழ்வின் எதிர்பார்ப்புகள் ஒன்றே.  அந்தப் பரந்த உரிமை/சமத்துவம்  எதிர்பார்ப்புக்  கற்றையில் யார் எந்த அளவு தங்கள் உரிமைகளைப் பெற்றுள்ளார்கள் என்பதே வேறுபாடு.  

சொத்தில் உரிமை இல்லை, திருமணத்தில் உரிமை இல்லை, குழந்தையாகப் பெண் பிறந்தாலோ உயிரே இல்லை என்பது போன்றவை ஒரு இடத்தில் கூக்குரலாக இருக்கும். 

அதற்குப் போராட வேண்டிய நிலையே மற்றொரு நாட்டில் தேவையிருக்காது. கல்வி, சொத்து, உரிமை, மருத்துவ உதவி, அதிகாரப் பதவி போன்றவை பெண் என்ற அடிப்படையில் மறுக்கப்படுவது நாட்டுக்கு நாடு கலாச்சாரப் பின்னணியின் அளவில் மாறுபடும்.  பெண்களுக்கு அது சமமாகக் கிடைப்பதற்கு வழியில் இடையூறு செய்பவர்கள் பழமையில் ஊறி அவ்வாறு வளர்க்கப்பட்ட பெண்களாகவேயும் இருப்பார்கள்.

நிர்மலாதேவி..இங்கு  நினைவு வரவேண்டும்.    

அதைவிட்டு பெண்கள் உரிமை கேட்பதை நையாண்டி செய்து கொண்டிருக்கும், அந்த உரிமைக்குரலைக் கேவலமாக சித்தரிக்கும் சூழ்ச்சி நிறைந்த செய்கைகளைக் கூர்ந்து நோக்காது அமெரிக்க பெண்ணியம், ஆஸ்திரேலிய பெண்ணியம் என்பது தேவையற்ற திசைதிருப்பும் முயற்சி.

நேற்றுவரை பெண்கள் எப்படி உடை உடுத்தவேண்டும் என்று காட்ட,  ஐபோன்-செல்போன் வாங்கி அதற்கு சேப்டி கார்ட் போடும் மகளுக்கு "தந்தை"  அறிவுறுத்தும் வாட்சப் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதனைப் படித்த பெண்கள் பகிரமாட்டார்கள் என்ற சீண்டுதல் வேறு பதிவின் இறுதியில் வைக்கப்படுகிறது. 

பெண்களின் உரிமையை மதிக்கும்படி வாழ மகனுக்கு அறிவுரை  கூறும் கதைகளை ஆசீஃபா, மதராசா நிகழ்வுகளுக்குப் பின்னரும் இன்னமும் பார்க்க இயலவில்லை நான்.

மாறாக, அது போன்ற செய்திகள் வந்தால் உடனே பெண்கள் உடை நடை போன்றவற்றை "பாதுகாப்பு" என்ற பெயரில் கூறிக் கட்டுப்படுத்தும் பதிவுகள்தான் வேகமெடுக்கின்றன.  

இடத்திற்கு இடம் கலாச்சார பின்னணி மாறுபடும் என்பது தெரிந்தாலும் பெண்களின் வாழ்வுரிமை அடிப்படையில் ஒன்று என்பது புரிந்து கொள்வது அடிப்படை. 

அடுத்த நாட்டில் நிலைமையை நன்கு  தெரிந்து கொண்டு வாழ்ந்தாலும்,  செர்ரி பிக்கிங் செய்து தங்கள் கோணத்தில் செய்திகளை வழங்குகிறார்கள் என்பது குறித்து தெளிவாக இருப்பது தேவை.

அமெரிக்காவில் பிரஸ்ட் பம்ப வைத்து தாய்ப்பாலை  குழந்தைக்குச் சேகரித்து வைத்துவிட்டு வேலைக்குப் போகும் பெண்கள் இருக்கிறார்கள், அது போன்ற கருவிகள் வழக்கத்தில் உள்ள நாடு அமெரிக்கா என்று அறிவது முக்கியம். 

வணிகமயமான ஒரு நாட்டில் இது போன்ற கருவிகள், தயாரித்து இவ்வளவு விற்கப்படுகிறது என்றால், அதற்கு வாடிக்கையாளர் இல்லாமல் நடக்காது என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். 

தாங்களே  தங்கள் போக்கில் அடுத்த நாட்டுப் பெண்களை உண்மை அறியாது கூறுவதையோ , அல்லது தங்கள் கொள்கைகளைத் திணிக்க அடுத்த கலாச்சார வாழ்வினரைக் கேவலப்படுத்தி, உண்மையை மறைத்து  தங்கள் இனம் உயர்வு எனக் காட்டுவதோ தவறு.

உண்மையான கேவலம், இறந்த கணவனுடன் பெண்ணை எரிப்பது, widows of vrindavan என்ற கலாச்சாரம் வேண்டுபவர்கள் அறுத்துக் கட்டுபவர் என்று மறுமணத்தை நையாண்டிதான் செய்வார்கள்.

அப்படிச் செய்தால்தான் பெண்களின்  மறுமண உரிமை துளிர் விடாது.  கேவலம் என்று புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகும்.

இதனால் யாருக்கு நன்மை என்பதைச் சிந்திக்க மறுக்கும் கூட்டம் பெண்ணியம் என்பதன் அரிச்சுவடி கூட படிக்கத் தகுதியற்ற ஒன்று. 

காலச்சாரக் காவலர்கள் பெண்கள் மட்டும் என்று எண்ணுவதை முதலில் நிறுத்த வேண்டும்.  காலச்சாரம் ஆடையில் இல்லை.  அதுவும் அது பெண்களின் ஆடையில்  மட்டும் இல்லை.  காலச்சாரம் மனிதர்களை நடத்தும் விதத்தில் இருக்கிறது.  மாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று மனிதரைக் கொல்லும் நாட்டிற்கு கலாச்சாரக் காவலர்கள் பெண்களின் நடை உடை பாவனையா?  

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவது இல்லையாம் என்பதை வெறுப்பவர்கள்தான் பெண்களின்   அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு குறித்து அதிகம் பேசுவார்கள். 

வேண்டுவது:  முதலில் பெண்ணியம் என்றால் தங்கள் கோணம் என்ன என்று பதிவு செய்வது, பிறகு தங்கள் கருத்துகளை அந்தப் புரிதலின் அடிப்படையில் பதிவது. 

..... தேமொழி

செல்வன்

unread,
Apr 30, 2018, 3:37:20 PM4/30/18
to mintamil
2018-04-30 8:27 GMT-05:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

யு.எஸ்.பெண்ணியம் வேறு ;நம் நாட்டு பெண்ணியம் வேறு.
சுருங்கி வரும் உலகில் மேலைப் பெண்ணியம் நம் நாட்டைத் தாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது .
மணிரத்னம் கூட 'live to-gether culture' பற்றிப் படமெடுத்த போது இறுதியில் திருமணத்தின் அவசியத்தைத் தான்  வலியுறுத்தினார்.
கண்மணி 

ஆம்.

இந்திய பெண்ணியம் குடும்பம் எனும் அமைப்புக்குள் ஆணும், பெண்ணும் சமமாக வாழவேண்டும். அந்த அமைப்பு செழிக்கவேண்டும் எனும் நோக்கம் கொண்டது. வரதட்சிணை எதிர்ப்பு,பெண்கள் பணிக்கு செல்லும் உரிமை முதலானவைகளை அந்த நோக்கில் முத்துலட்சுமி ரெட்டி முதல் பல பெண்ணியவாதிகள் ஆதரித்தனர்.

மேலைநாடுகளில் கணவன், திருமனம், குடும்பம் எனும் அமைப்பையே அழிக்கும் வகையிலான பெண்ணியம் முன்னிறுத்தபடுகிறது. இப்படிப்பட்ட முட்டாள்தனமான ஆய்வுகளை முன்நிறுத்தி படித்தவர்கள் அதை முற்போக்கு என சமூகத்தில் நிலைநாட்டுகின்றனர். இதன் விளைவுகள் சுமார் பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க குழந்தைகள் திருமணமாகாத தாய்களுக்கு பிறக்கின்றன. விளைவுகள் மிக பயங்கரமாக உள்ளன

  • 63% of youth suicides are from fatherless homes (US Dept. Of Health/Census) – 5 times the average.
  • 90% of all homeless and runaway children are from fatherless homes – 32 times the average.
  • 85% of all children who show behavior disorders come from fatherless homes – 20 times the average.  (Center for Disease Control)
  • 80% of rapists with anger problems come from fatherless homes –14 times the average.  (Justice & Behavior, Vol 14, p. 403-26)
  • 71% of all high school dropouts come from fatherless homes – 9 times the average.  (National Principals Association Report)

  • 43% of US children live without their father [US Department of Census]
  • 90% of homeless and runaway children are from fatherless homes. [US D.H.H.S., Bureau of the Census

  • 71% of pregnant teenagers lack a father. [U.S. Department of Health and Human Services press release, Friday, March 26, 1999]
  • 63% of youth suicides are from fatherless homes. [US D.H.H.S., Bureau of the Census]
  • 85% of children who exhibit behavioral disorders come from fatherless homes. [Center for Disease Control]
  • 90% of adolescent repeat arsonists live with only their mother. [Wray Herbert, “Dousing the Kindlers,” Psychology Today, January, 1985, p. 28]
  • 71% of high school dropouts come from fatherless homes. [National Principals Association Report on the State of High Schools]
  • 75% of adolescent patients in chemical abuse centers come from fatherless homes. [Rainbows f for all God’s Children]
  • 70% of juveniles in state operated institutions have no father. [US Department of Justice, Special Report, Sept. 1988]
  • 85% of youths in prisons grew up in a fatherless home. [Fulton County Georgia jail populations, Texas Department of Corrections, 1992]
  • Fatherless boys and girls are: twice as likely to drop out of high school; twice as likely to end up in jail; four times more likely to need help for emotional or behavioral problems. [US D.H.H.S. news release, March 26, 1999]

 இதைதான் முற்போக்கு என சொல்லி இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய முயற்சி நடக்கிறது.
--

செல்வன்

செல்வன்

unread,
Apr 30, 2018, 9:41:46 PM4/30/18
to செல்வன்
"ஆண்மை (masculinity) என்பது ஒரு மனநிலை குறைபாடு" என அறிவித்து, ஆண்மையை அகற்றும் முயற்சியில் ஒரு கோர்ஸை அறிமுகம் செய்துள்ளது டெக்சாஸ் பல்கலைகழகம்.

"ஆண்கள் என்றால் வெற்றி அடையவேண்டும், குடும்பத்துக்கு சம்பாதிக்கும் பிரெட் வின்னர் ஆக இருக்கவேண்டும் (!), பிறரது துன்பத்தை களைய முனையவேண்டும், ஆக்டிவ் ஆக இருக்கவேண்டும்" என்பது போல கருத்தாக்கம் சமூகத்தில் நிலவுவதாகவும், இதை அகற்றுவதே (!) இந்த கோர்ஸின் நோக்கம் எனவும் டெக்சாஸ் பல்கலைக்ழகம் அறிவித்துள்ளது.

இதன் பெயர் MasculinUT

நாலாப்க்கமும் இருந்து கண்டனங்கள் குவிய இப்போது டேமேஜ் கண்ட்ரோல் மோடில் ஈடுபட்டுள்ளது இப்பல்கலைகழகம்.

ஆண்களிடமிருந்து ஆண்மை குணாதிசயத்தை அகற்றி வேறு எதை புகுத்த போகிறார்கள்? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் :-)

University of Texas to Treat Masculinity as a 'Mental Health' Issue

The Counseling and Mental Health Center at the University of Texas at Austin recently launched a new program to help male students “take control over their gender identity and develop a healthy sense of masculinity.”

Treating masculinity as if it were a mental health crisis, “MasculinUT” is organized by the school’s counseling staff and most recently organized a poster series encouraging students to develop a “healthy model of masculinity.”

The program is predicated on a critique of so-called “restrictive masculinity.” Men, the program argues, suffer when they are told to “act like a man” or when they are encouraged to fulfill traditional gender roles, such as being “successful” or “the breadwinner.”

Though you might enjoy “taking care of people” or being “active,” MasculinUTwarns that many of these attributes are actually dangerous, claiming that “traditional ideas of masculinity place men into rigid (or restrictive) boxes [which]... prevent them from developing their emotional maturity.”

“If you are a male student at UT reading this right now, we hope that learning about this helps you not to feel guilty about having participated in these definitions of masculinity, and instead feel empowered to break the cycle!” the program offers.

https://pjmedia.com/trending/university-of-texas-to-treat-masculinity-as-a-mental-health-issue/

இசையினியன்

unread,
May 2, 2018, 12:36:25 AM5/2/18
to மின்தமிழ்
இதே மனநிலை குறைபாடு இனா சமுகத்திற்கும், அரசியலுக்கும், நீதித்றைக்கும், காவல்றைக்கும் பிடித்து இருக்கின்றது என்பது என்னமாே இலை மறைக் காய்.
---

Suba

unread,
May 2, 2018, 7:19:15 AM5/2/18
to மின்தமிழ்
2018-04-30 21:25 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
///யு.எஸ்.பெண்ணியம் வேறு ;நம் நாட்டு பெண்ணியம் வேறு.///

பெண்ணியம் குறித்து விவாதிக்கும் பொழுது, முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்று அதை வரையறுத்து, அதன் புரிதலுடன் விவாதிப்பது பொருள் கொண்டதாக இருக்கும்.

பாலின வேறுபாட்டால் உரிமை இழப்பது, கட்டுப்படுத்தப்படுவது, அந்த வேறுபாட்டால்  பொருள் பதவி உரிமை ஆகியன  கைவிட்டுப்போவது குறித்த விழிப்புணர்வுடன் அதனை மாற்றியமைக்கும் நோக்கில்  பெண்ணுக்கு சமவுரிமை வேண்டுவது பெண்ணியம்.

குறிப்பாகப் பெண்ணியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெளிவாகக் கூறிவிட்டு தொடர்வது சரியாக இருக்கும்.

நான் பார்த்தவரை ஆண்களுக்குச் சமமாக உரிமை எதிர்பார்க்கிறார்கள் என்று கண்டிப்பது ஒருசிலரின் பெண்ணிய வரையறை.  அதில் என்ன தவறு?  என்று மறுகேள்விதான்  கேட்கப்பட வேண்டும்.

ஆண்கள் தங்கள் கோணத்தில் வரையறுத்து இது பெண்ணியம் என்று சொல்வதைப் பெண்கள் ஏற்றுக் கொண்டு அதே வழியிலேயே நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் பெண்ணியம் என்பது வேறுபடுகிறது அவர்கள் என்று  இழுப்புக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருப்பது பெண்ணியம் அல்ல. 

பொறுக்கியெடுத்த ஓரிரு மாறுபட்ட நிகழ்வைக் காட்டி, அடுத்தவர் கருத்தை திசை திருப்பும் வகையில் பெண்ணியச் சிந்தனை  என்பது கேவலமானது என்ற கோணத்தை முன்னிறுத்தும் வகையில் ஒரு கோணம் வைக்கப்பட்டால் அதன் வழியே சென்று பெண்ணியம் என்ன என்பதை விளக்கிக் கொண்டிருப்பது, அதுவும் பெண்கள் செய்வது குறித்து இங்கு சிந்திக்க வேண்டும்.

உணர்வுகள் அனைவருக்கும் ஒன்றே, எல்லோருக்கும் பசிக்கும், தாக்கினால் வலிக்கும் போன்ற அடிப்படை உயிரின வேறுபாட்டில் ஒருவருக்கும் மறுக்கப்படும் உரிமை, அல்லது வாய்ப்பு குறித்து பேசினால் அது  பெண்ணியம்.

அமெரிக்காவோ... ஆப்பிரிக்காவோ  பெண்கள் அனைவரும் ஒருவரே, உணர்ச்சிகள் வாழ்வின் எதிர்பார்ப்புகள் ஒன்றே.  அந் பரந்த உரிமை/சமத்துவம்  எதிர்பார்ப்புக்  கற்றையில் யார் எந்த அளவு தங்கள் உரிமைகளைப் பெற்றுள்ளார்கள் என்பதே வேறுபாடு.  

சொத்தில் உரிமை இல்லை, திருமணத்தில் உரிமை இல்லை, குழந்தையாகப் பெண் பிறந்தாலோ உயிரே இல்லை என்பது போன்றவை ஒரு இடத்தில் கூக்குரலாக இருக்கும். 

அதற்குப் போராட வேண்டிய நிலையே மற்றொரு நாட்டில் தேவையிருக்காது. கல்வி, சொத்து, உரிமை, மருத்துவ உதவி, அதிகாரப் பதவி போன்றவை பெண் என்ற அடிப்படையில் மறுக்கப்படுவது நாட்டுக்கு நாடு கலாச்சாரப் பின்னணியில் அளவில் மாறுபடும்.  பெண்களுக்கு அது சமமாகக் கிடைப்பதற்கு வழியில் இடையூறு செய்பவர்கள் பழமையில் ஊறி அவ்வாறு வளர்க்கப்பட்ட பெண்களாகவேயும் இருப்பார்கள்.

நிர்மலாதேவி..இங்கு  நினைவு வரவேண்டும்.    

அதைவிட்டு பெண்கள் உரிமை கேட்பதை நையாண்டி செய்து கொண்டிருக்கும், அந்த உரிமைக்குரலைக் கேவலமாக சித்தரிக்கும் சூழ்ச்சி நிறைந்த செய்கைகளைக் கூர்ந்து நோக்காது அமெரிக்க பெண்ணியம், ஆஸ்திரேலிய பெண்ணியம் என்பது தேவையற்ற திசைதிருப்பும் முயற்சி.

நேற்றுவரை பெண்கள் எப்படி உடை உடுத்தவேண்டும் என்று காட்ட,  ஐபோன்-செல்போன் வாங்கி அதற்கு சேப்டி கார்ட் போடும் மகளுக்கு "தந்தை"  அறிவுறுத்தும் வாட்சப் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதனைப் படித்த பெண்கள் பகிரமாட்ட்ர்கள் என்ற சீண்டுதல் வேறு பதிவின் இறுதியில் வைக்கப்படுகிறது. 

பெண்களின் உரிமையை மதிக்கும்படி வாழ மகனுக்கு அறிவுரை  கூறும் கதைகளை ஆசீஃபா, மதராசா நிகழ்வுகளுக்குப் பின்னரும் இன்னமும் பார்க்க இயலவில்லை நான்.

மாறாக, அது போன்ற செய்திகள் வந்தால் உடனே பெண்கள் உடை நடை போன்றவற்றை "பாதுகாப்பு" என்ற பெயரில் கூறிக் கட்டுப்படுத்தும் பதிவுகள்தான் வேகமெடுக்கின்றன.  

இடத்திற்கு இடம் கலாச்சார பின்னணி மாறுபடும் என்பது தெரிந்தாலும் பெண்கள் அடிப்படையில் ஒன்று என்பது புரிந்து கொள்வது அடிப்படை. 

அடுத்த நாட்டில் நிலைமையை நன்கு  தெரிந்து கொண்டு வாழ்ந்தாலும்,  செர்ரி பிக்கிங் செய்து தங்கள் கோணத்தில் செய்திகளை வழங்குகிறார்கள் என்பது குறித்து தெளிவாக இருப்பது தேவை.

அமெரிக்காவில் பிரஸ்ட் பம்ப வைத்து தாய்ப்பாலை  குழந்தைக்குச் சேகரித்து வைத்துவிட்டு வேலைக்குப் போகும் பெண்கள் இருக்கிறார்கள், அது போன்ற கருவிகள் வழக்கத்தில் உள்ள நாடு அமெரிக்கா என்று அறிவது முக்கியம். 

வணிகமயமான ஒரு நாட்டில் இது போன்ற கருவிகள், தயாரித்து இவ்வளவு விற்கப்படுகிறது என்றால், அதற்கு வாடிக்கையாளர் இல்லாமல் நடக்காது என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். 

தாங்களே  தங்கள் போக்கில் அடுத்த நாட்டுப் பெண்களை உண்மை அறியாது கூறுவதையோ , அல்லது தங்கள் கொள்கைகளைத் திணிக்க அடுத்த கலாச்சார வாழ்வினரைக் கேவலப்படுத்தி, உண்மையை மறைத்து  தங்கள் இனம் உயர்வு எனக் காட்டுவதோ தவறு.

உண்மையான கேவலம், இறந்த கணவனுடன் பெண்ணை எரிப்பது, widows of vrindavan என்ற கலாச்சாரம் வேண்டுபவர்கள் அறுத்துக் கட்டுபவர் என்று மறுமணத்தை நையாண்டிதான் செய்வார்கள்.

அப்படிச் செய்தால்தான் பெண்களின்  மறுமண உரிமை துளிர் விடாது.  கேவலம் என்று புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகும்.

இதனால் யாருக்கு நன்மை என்பதைச் சிந்திக்க மறுக்கும் கூட்டம் பெண்ணியம் என்பதன் அரிச்சுவடி கூட படிக்கத் தகுதியற்ற ஒன்று. 

காலச்சாரக் காவலர்கள் பெண்கள் மட்டும் என்று எண்ணுவதை முதலில் நிறுத்த வேண்டும்.  காலச்சாரம் ஆடையில் இல்லை.  அதுவும் அது பெண்களின் ஆடையில்  மட்டும் இல்லை.  காலச்சாரம் மனிதர்களை நடத்தும் விதத்தில் இருக்கிறது.  மாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று மனிதரைக் கொள்ளும் நாட்டிற்கு கலாச்சாரக் காவலர்கள் பெண்களின் நடை உடை பாவனையா?  

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவது இல்லையாம் என்பதை வெறுப்பவர்கள்தான் பெண்களின்   அச்சம் மேடம் நாணம் பயிர்ப்பு குறித்து அதிகம் பேசுவார்கள். 

​அருமை👏🌷. ​

kanmani tamil

unread,
May 2, 2018, 8:20:27 AM5/2/18
to mintamil
பெண்ணியம் குறித்து விவாதிக்கும் பொழுது, முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்று அதை வரையறுத்து, அதன் புரிதலுடன் விவாதிப்பது பொருள் கொண்டதாக இருக்கும்.
பாலின வேறுபாட்டால் உரிமை இழப்பது, கட்டுப்படுத்தப்படுவது, அந்த வேறுபாட்டால்  பொருள் பதவி உரிமை ஆகியன  கைவிட்டுப்போவது குறித்த விழிப்புணர்வுடன் அதனை மாற்றியமைக்கும் நோக்கில்  பெண்ணுக்கு சமவுரிமை வேண்டுவது பெண்ணியம்.
ஒத்துக்கொள்ளக்கூடிய கொள்கை 
குறிப்பாகப் பெண்ணியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெளிவாகக் கூறிவிட்டு தொடர்வது சரியாக இருக்கும்.
நாம் பேசும் பெண்ணியம் எதிர்கால சந்ததியைப் பாதிக்காமல் , குடும்ப அமைப்பைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது நான் வகுத்துக் கொள்ளும் வரையறை. 
நான் பார்த்தவரை ஆண்களுக்குச் சமமாக உரிமை எதிர்பார்க்கிறார்கள் என்று கண்டிப்பது ஒருசிலரின் பெண்ணிய வரையறை.  அதில் என்ன தவறு?  என்று மறுகேள்விதான்  கேட்கப்பட வேண்டும்.
என்னிடம் அப்படிப்பட்ட வரையறை இல்லை தேமொழி .இன்னும் சொல்லப்போனால் ..........நான் நிர்வாகத்துறைக்கு வந்த 2 ஆண்டுகளுக்குள் எனக்கு அடியில் வேலை பார்த்த 100 ஆண்களுக்கும் ,150 பெண்களுக்கும் பால் பேதமின்றி சமமாகச் சம்பளம் கொடுக்க வழிவகை செய்தவள். இத்தனைக்கும் சம்பளம் கொடுத்தது தனியார் அறக்கட்டளை நிறுவனம்.
ஆண்கள் தங்கள் கோணத்தில் வரையறுத்து இது பெண்ணியம் என்று சொல்வதைப் பெண்கள் ஏற்றுக் கொண்டு அதே வழியிலேயே நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் பெண்ணியம் என்பது வேறுபடுகிறது அவர்கள் என்று  இழுப்புக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருப்பது பெண்ணியம் அல்ல.
அந்த அளவுக்கு மென்மையான வளைந்து கொடுக்கக்கூடிய ஆளுமையா நான்? இல்லை ........என்னைப்  பற்றி நானே சொல்வது அழகல்ல ...முறையல்ல. ஆனாலும் நான் பெண்ணியவாதி இல்லை என்ற விமர்சனம் பற்றிக் கவலையே படமாட்டேன்.  
பொறுக்கியெடுத்த ஓரிரு மாறுபட்ட நிகழ்வைக் காட்டி, அடுத்தவர் கருத்தை திசை திருப்பும் வகையில் பெண்ணியச் சிந்தனை  என்பது கேவலமானது என்ற கோணத்தை முன்னிறுத்தும் வகையில் ஒரு கோணம் வைக்கப்பட்டால் அதன் வழியே சென்று பெண்ணியம் என்ன என்பதை விளக்கிக் கொண்டிருப்பது, அதுவும் பெண்கள் செய்வது குறித்து இங்கு சிந்திக்க வேண்டும்.
நானென்ன குழந்தையா? என்னை யாரும் திசை திருப்ப முடியாது.
உணர்வுகள் அனைவருக்கும் ஒன்றே, எல்லோருக்கும் பசிக்கும், தாக்கினால் வலிக்கும் போன்ற அடிப்படை உயிரின வேறுபாட்டில் ஒருவருக்கும் மறுக்கப்படும் உரிமை, அல்லது வாய்ப்பு குறித்து பேசினால் அது  பெண்ணியம்.
உண்மை 
அமெரிக்காவோ... ஆப்பிரிக்காவோ  பெண்கள் அனைவரும் ஒருவரே, உணர்ச்சிகள் வாழ்வின் எதிர்பார்ப்புகள் ஒன்றே.  அந் பரந்த உரிமை/சமத்துவம்  எதிர்பார்ப்புக்  கற்றையில் யார் எந்த அளவு தங்கள் உரிமைகளைப் பெற்றுள்ளார்கள் என்பதே வேறுபாடு.  
சரி 
சொத்தில் உரிமை இல்லை, திருமணத்தில் உரிமை இல்லை, குழந்தையாகப் பெண் பிறந்தாலோ உயிரே இல்லை என்பது போன்றவை ஒரு இடத்தில் கூக்குரலாக இருக்கும். அதற்குப் போராட வேண்டிய நிலையே மற்றொரு நாட்டில் தேவையிருக்காது. கல்வி, சொத்து, உரிமை, மருத்துவ உதவி, அதிகாரப் பதவி போன்றவை பெண் என்ற அடிப்படையில் மறுக்கப்படுவது நாட்டுக்கு நாடு கலாச்சாரப் பின்னணியில் அளவில் மாறுபடும்.  பெண்களுக்கு அது சமமாகக் கிடைப்பதற்கு வழியில் இடையூறு செய்பவர்கள் பழமையில் ஊறி அவ்வாறு வளர்க்கப்பட்ட பெண்களாகவேயும் இருப்பார்கள்.
நாட்டுக்கு நாடு வேறுபடும் பின்னணி உண்டு. நான் இடையூறு செய்யும் பழைமைவாதி இல்லை 
நிர்மலாதேவி..இங்கு  நினைவு வரவேண்டும்.    
தொடர்பு புரியவில்லை 
அதைவிட்டு பெண்கள் உரிமை கேட்பதை நையாண்டி செய்து கொண்டிருக்கும், அந்த உரிமைக்குரலைக் கேவலமாக சித்தரிக்கும் சூழ்ச்சி நிறைந்த செய்கைகளைக் கூர்ந்து நோக்காது அமெரிக்க பெண்ணியம், ஆஸ்திரேலிய பெண்ணியம் என்பது தேவையற்ற திசைதிருப்பும் முயற்சி.
பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்க நிர்பந்தப்படுத்த வேண்டிய சூழலையும் ,அதை உரிமையில் தலையீடு என்று சொன்ன பெண்ணியவாதிகளையும் அடியொட்டி யு.எஸ்.பெண்ணியம் என்று மட்டும் தான் கூறினேன்.ஆஸ்திரேலியப் பெண்ணியம் பற்றியெல்லாம் பேசவில்லை.
நேற்றுவரை பெண்கள் எப்படி உடை உடுத்தவேண்டும் என்று காட்ட,  ஐபோன்-செல்போன் வாங்கி அதற்கு சேப்டி கார்ட் போடும் மகளுக்கு "தந்தை"  அறிவுறுத்தும் வாட்சப் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதனைப் படித்த பெண்கள் பகிரமாட்ட்ர்கள் என்ற சீண்டுதல் வேறு பதிவின் இறுதியில் வைக்கப்படுகிறது. 
பெண்களின் உரிமையை மதிக்கும்படி வாழ மகனுக்கு அறிவுரை  கூறும் கதைகளை ஆசீஃபா, மதராசா நிகழ்வுகளுக்குப் பின்னரும் இன்னமும் பார்க்க இயலவில்லை .
 என் மகனை என் பெண்ணியக் கொள்கைகளுக்கு ஏற்பத்தான் வளர்த்தேன். உனக்கென்று ஒரு மனைவி வரும்போது நீ இப்படியெல்லாம் அவளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று .........ஆயிரமாயிரம் ஆண்டுகளாக குருதியில் ஊறியிருக்கும் பண்புகளை அவ்வளவு சீக்கிரமாக மாற்றி விட முடியுமா என்ன!! தேமொழி ! வாழ்க்கையில் நீங்கள் நிற்கும் காலக்கட்டத்தைக் கடந்து அடுத்த காலகட்டத்தில் நிற்கிறேன் நான்.  
மாறாக, அது போன்ற செய்திகள் வந்தால் உடனே பெண்கள் உடை நடை போன்றவற்றை "பாதுகாப்பு" என்ற பெயரில் கூறிக் கட்டுப்படுத்தும் பதிவுகள்தான் வேகமெடுக்கின்றன.  
அதுவும் தேவை தானே 
இடத்திற்கு இடம் கலாச்சார பின்னணி மாறுபடும் என்பது தெரிந்தாலும் பெண்கள் அடிப்படையில் ஒன்று என்பது புரிந்து கொள்வது அடிப்படை. 
ஏற்றுக் கொள்கிறேன் 
அடுத்த நாட்டில் நிலைமையை நன்கு  தெரிந்து கொண்டு வாழ்ந்தாலும்,  செர்ரி பிக்கிங் செய்து தங்கள் கோணத்தில் செய்திகளை வழங்குகிறார்கள் என்பது குறித்து தெளிவாக இருப்பது தேவை.
அமெரிக்காவில் பிரஸ்ட் பம்ப வைத்து தாய்ப்பாலை  குழந்தைக்குச் சேகரித்து வைத்துவிட்டு வேலைக்குப் போகும் பெண்கள் இருக்கிறார்கள், அது போன்ற கருவிகள் வழக்கத்தில் உள்ள நாடு அமெரிக்கா என்று அறிவது முக்கியம். 
வணிகமயமான ஒரு நாட்டில் இது போன்ற கருவிகள், தயாரித்து இவ்வளவு விற்கப்படுகிறது என்றால், அதற்கு வாடிக்கையாளர் இல்லாமல் நடக்காது என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். 
இது கொடுமையாக எனக்குத் தோன்றுகிறது தேமொழி .உண்மையில் நெஞ்சு நடுங்குகிறது. இது என்ன அவலம். இப்படி ஒரு இழிநிலைக்கு ஏன் பெண்கள் தள்ளப்பட்டனர் ?எனக்கு இன்று தூக்கம் வருமா என்பது சந்தேகம் . 
ஒரு மாடு கூட தன்  கன் றுக்குத் தானே தான் பால் கொடுக்கும் .மாட்டை வைத்து வாணிபம் செய்பவன் தான் இயந்திரத்தின் உதவியுடன் பால் கறப்பான் .அப்படியென்றால் ஒரு மாட்டை விடக் கேவலமான நிலையில் அங்கே பெண்கள் இருக்கிறார்கள். உங்களால் எப்படி இதை ஏற்றுக்கொள்ள முடிகிறது? நீங்கள் அங்கேயே வாழ்வதால் உங்களுக்கு இதை அன்றாடம் கண்டு கேட்டு மரத்து விட்டதா? தாய் சேய் உறவையே கேள்விக்குறியாக்கி விட்டு எதை நோக்கி யு.எஸ்.பெண்கள் ஓடுகிறார்கள்? நான் யு.எஸ்.பெண்ணியம் என்று முத்திரை குத்தியதில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 
அங்கிருக்கும் வாழ்வியல் சூழல் அவர்களை இந்த நிலைமைக்குத் தள்ளி விட்டது என்றால் நான் அவர்கள் மேல் பரிதாபம் கொள்கிறேன். எந்த நிலையிலும் தமிழ் நாட்டிற்கு இந்த இழிவான பாதை வேண்டாம்.  
தாங்களே  தங்கள் போக்கில் அடுத்த நாட்டுப் பெண்களை உண்மை அறியாது கூறுவதையோ , அல்லது தங்கள் கொள்கைகளைத் திணிக்க அடுத்த கலாச்சார வாழ்வினரைக் கேவலப்படுத்தி, உண்மையை மறைத்து  தங்கள் இனம் உயர்வு எனக் காட்டுவதோ தவறு.
உண்மையான கேவலம், இறந்த கணவனுடன் பெண்ணை எரிப்பது, widows of vrindavan என்ற கலாச்சாரம் வேண்டுபவர்கள் அறுத்துக் கட்டுபவர் என்று மறுமணத்தை நையாண்டிதான் செய்வார்கள்.
அது கேவலம் இல்லை ..............அவலம்..........பெற்றவளும் பாவம் .பிள்ளையும் பாவம் . 
நான் மறுமணத்தை நையாண்டி செய்பவள் அல்லள். 
அப்படிச் செய்தால்தான் பெண்களின்  மறுமண உரிமை துளிர் விடாது.
இங்கே இப்போது பெண்ணுக்கு மறுமணம் செய்வது ஃ பாஷன் ஆகி விட்டது.
  கேவலம் என்று புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகும்.
இதனால் யாருக்கு நன்மை என்பதைச் சிந்திக்க மறுக்கும் கூட்டம் பெண்ணியம் என்பதன் அரிச்சுவடி கூட படிக்கத் தகுதியற்ற ஒன்று. 
காலச்சாரக் காவலர்கள் பெண்கள் மட்டும் என்று எண்ணுவதை முதலில் நிறுத்த வேண்டும்.  காலச்சாரம் ஆடையில் இல்லை.  அதுவும் அது பெண்களின் ஆடையில்  மட்டும் இல்லை.  காலச்சாரம் மனிதர்களை நடத்தும் விதத்தில் இருக்கிறது.  மாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று மனிதரைக் கொள்ளும் நாட்டிற்கு கலாச்சாரக் காவலர்கள் பெண்களின் நடை உடை பாவனையா?  
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவது இல்லையாம் என்பதை வெறுப்பவர்கள்தான் பெண்களின்   அச்சம் மேடம் நாணம் பயிர்ப்பு குறித்து அதிகம் பேசுவார்கள். 

வேண்டுவது:  முதலில் பெண்ணியம் என்றால் தங்கள் கோணம் என்ன என்று பதிவு செய்வது, பிறகு தங்கள் கருத்துகளை அந்தப் புரிதலின் அடிப்படையில் பதிவது. 
கண்மணி 

தேமொழி

unread,
May 2, 2018, 4:58:58 PM5/2/18
to mint...@googlegroups.com

On Wednesday, May 2, 2018 at 5:20:27 AM UTC-7, kanmanitamilskc wrote:
பெண்ணியம் குறித்து விவாதிக்கும் பொழுது, முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்று அதை வரையறுத்து, அதன் புரிதலுடன் விவாதிப்பது பொருள் கொண்டதாக இருக்கும்.
பாலின வேறுபாட்டால் உரிமை இழப்பது, கட்டுப்படுத்தப்படுவது, அந்த வேறுபாட்டால்  பொருள் பதவி உரிமை ஆகியன  கைவிட்டுப்போவது குறித்த விழிப்புணர்வுடன் அதனை மாற்றியமைக்கும் நோக்கில்  பெண்ணுக்கு சமவுரிமை வேண்டுவது பெண்ணியம்.
ஒத்துக்கொள்ளக்கூடிய கொள்கை 
குறிப்பாகப் பெண்ணியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெளிவாகக் கூறிவிட்டு தொடர்வது சரியாக இருக்கும்.
நாம் பேசும் பெண்ணியம் எதிர்கால சந்ததியைப் பாதிக்காமல் , குடும்ப அமைப்பைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது நான் வகுத்துக் கொள்ளும் வரையறை. 

குடும்ப அமைப்பு குலையாமல் இருப்பது ஆண் பெண் இருவர் பொறுப்பு.  அது பெண்ணியத்தின் கீழ்  வருவதில்லை. அவ்வாறு காட்டப்படுவது  ஆணியச் சிந்தனையின் பிழை. 

ஒரு பெண் குடும்பம் என்பதை விட்டு வெளியேற நினைத்தால் அதற்கு பற்பல காரணங்கள் இருக்கலாம், இருக்கவும் கூடும்.  

தங்கள் காலில் நிற்கத் துணிவு கொண்டவர்கள் தாங்கள் குடும்பம் என்ற அமைப்பால் அவமதிக்கப்பட்டாலோ, சுரண்டப்பட்டாலோ, உணர்வுகள் மதிக்கப்படாமல் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட கேளிக்கைப் பாவை அல்லது  வீட்டு வேலை செய்யும் ரோபோட் போல நடத்தப்படுவதை உணர்ந்தாலோ வெளியேறிவிடுவார்கள்.  

நிகழ்வுக்கு மூல காரணம் என்ன என்பதையும்  பார்க்கத் தேவை.  பெண்கள் வெளியேற நினைத்தால், குடும்பம் குலையக்கூடாது என்று நினைத்தால் அதற்கேற்ப வாழும்  சூழ்நிலையில் மாறுதல் தேவை.   அதைத் தவிர்த்து பெண்கள் குடும்ப அமைப்பை விட்டு வெளியேறுகிறார்கள் என்றால் அது பெண்ணியம் என்பதன் குறைபாடு என முடிவுக்கு வருவது பிழை.

மனதிற்கு ஒப்பாத இடத்தில்  வாழ வேண்டும் என்பது யாருக்கும் தலையெழுத்து  கிடையாது.
மதுரை மீனாட்சி கல்யாண ஊர்வலம் குறித்த உங்கள் கருத்து ஒரு எடுத்துக்காட்டு.  அதுபோல தாலி என்று ஒன்றைக் கட்டிவிட்டு மனவுணர்வுகளை மதிக்காத, வஞ்சிக்கப்படும் இடத்தில்  ஒரு பெண் இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல.

இது ஒரு கோணம், எத்தனையோ கோணம் இருக்கலாம்,  47 நாட்கள் படம் ஒரு கோணம் காட்டியது, எத்தனையோ பெண்கள் அடி உதை வாங்கிக் கொண்டு புழுங்கிக் கொண்டிருக்கலாம்.  டொமஸ்டிக் வயலன்ஸ் என்பது இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு மனப்பான்மை. "கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்தது போல" என்று பழமொழியையே உருவாக்கிப் பேசிக்கொண்டிருக்கும் வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்க்கைமுறை.

அடித்தாலும் பிடித்தாலும் ஆயிரம்தான் சொன்னாலும் கணவன் என்று எத்தனையோ பேச்சு வழக்கில்.
அது குடும்ப விசயம்  என்று அடுத்தவர் தலையிடல் தடுக்கப்படும். உள்ளே நுழைந்து பார்த்தால்தான் உண்மை நிலை தெரியும்.

சென்ற நூற்றாண்டுவரை சமூகக் கட்டுப்பாட்டுக்கு அஞ்சி பெண்கள் வாழவேண்டிய நிலை, வெளியேறினால் தங்கள் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள், அவர்கள் எதிர்காலம் என்ன  என்று கலங்கிய நிலை.
பெண்களைக் கட்டுப்படுத்த அவர்களுக்குக் கல்வி, சொத்து, வேலைவாய்ப்பு என்ற எல்லாவற்றையும் மறுத்து வெளியேறவே அவர்களுக்குத் தன்னம்பிக்கை வரவிடாமல் செய்திருந்த காலம், பிறந்த வீடு கூட உதவாது, அவர்களுக்கும்  குடும்பப் பெயர் கெடுகிறது என்ற கவலை, அத்தகைய சமூகக் கட்டமைப்பு. 

இதுபோன்ற சமூகக் கட்டுப்பாடு பெண்களைப் பாதித்தது, இன்றும் பாதிக்கிறது.

எப்படி கலாச்சாரம் காப்பாற்றப்படுவது பெண்கள் பொறுப்பு இல்லையோ அது போல குடும்ப அமைப்பு குலையாமல் காப்பாற்றப்படுவது பெண்கள் கையில் மட்டுமே இல்லை.
குடும்பம் சிதைகிறது நாடு குலைகிறது என்றால் ஒளவை அன்றே சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது தேவை... 'நாடா கொன்றோ, காடா கொன்றோ, அவலா கொன்றோ, மிசையா கொன்றோ, எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' 

எல்லோருக்கும் வாழ்வு ஒரு முறைதான்.
இதில் பெண்கள்  தங்கள் மனக்குமுறலோடு வாழ்வு நடத்தி குடும்ப அமைப்பைக் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

யாவரும் அறிந்த ஒரு எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டும் என்றால்... திரைப்படத்தில் இருந்து காட்டலாம். 

முதல்மரியாதை...
யாரையோ காதலித்து கருவுற்ற பெண்ணை யாருக்கோ குடும்ப மானம் போகிறது என்று  திருமணம் செய்து வைப்பது. 
அதாவது குடும்ப மானத்தைக் காப்பாற்றிவிட்டார்களாம்.
அந்தப்பெண்ணுக்குத் தாலி கட்டிய பிறகு ஏறெடுத்தும் பார்க்காத, குடும்பம் நடத்தாத கணவன். இப்படி ஒரு குடும்பம் தேவையா?
அந்த ஆளைப்  பஞ்சாயத்தில் ஒரு படகோட்டிப் பெண்ணுடன் இணைத்து மக்கள் பேசும்பொழுது, ஆமாம் அந்தப் பெண்ணை வச்சிருக்கேன் என்று சொல்லுவதை இயல்பு எனக் காட்டுவது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்  நிலை. இப்பொழுது குடும்ப மானம் கப்பலேறவில்லையா?
இங்கு உறவு  உண்மையோ பொய்யோ ... குடும்ப அமைப்பிற்கு வெளியே  அடுத்த பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று ஆணால் நெஞ்சை நிமிர்த்தி  சொல்ல இயலும், பெண்ணால் தன்னை காதலித்தவனை மணந்து  கொள்ளக் கூட முடியாது. குடும்ப வாழ்வே பொய்யாகிப் போகும். 

இக்கதை எவ்வாறு குடும்பம் என்ற அமைப்பு மாறுபட்ட எதிர்பார்ப்பைப் பாலின வேறுபாட்டில் காட்டுகிறதோ, அதுபோலத்தான் குடும்பம் என்ற அமைப்பைப் பெண் மீறினால் அது பெண்ணின் குற்றம் எனப் பார்க்கப்படுவதும். 
குடும்பம் என்பது அனைவரின் பொறுப்பு.
ஒருவரின் ஏமாற்றத்தில் , இயலாமையில், வேதனையில்  கட்டமைக்கப்பட வேண்டும் என்பது மனிதநேயச் சிந்தனையல்ல. 

நான் பார்த்தவரை ஆண்களுக்குச் சமமாக உரிமை எதிர்பார்க்கிறார்கள் என்று கண்டிப்பது ஒருசிலரின் பெண்ணிய வரையறை.  அதில் என்ன தவறு?  என்று மறுகேள்விதான்  கேட்கப்பட வேண்டும்.
என்னிடம் அப்படிப்பட்ட வரையறை இல்லை தேமொழி .இன்னும் சொல்லப்போனால் ..........நான் நிர்வாகத்துறைக்கு வந்த 2 ஆண்டுகளுக்குள் எனக்கு அடியில் வேலை பார்த்த 100 ஆண்களுக்கும் ,150 பெண்களுக்கும் பால் பேதமின்றி சமமாகச் சம்பளம் கொடுக்க வழிவகை செய்தவள். இத்தனைக்கும் சம்பளம் கொடுத்தது தனியார் அறக்கட்டளை நிறுவனம்.

பாராட்டுகள் கண்மணி 

தேமொழி

unread,
May 2, 2018, 5:27:52 PM5/2/18
to mint...@googlegroups.com

On Wednesday, May 2, 2018 at 5:20:27 AM UTC-7, kanmanitamilskc wrote:
பெண்ணியம் குறித்து விவாதிக்கும் பொழுது, முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்று அதை வரையறுத்து, அதன் புரிதலுடன் விவாதிப்பது பொருள் கொண்டதாக இருக்கும்.
பாலின வேறுபாட்டால் உரிமை இழப்பது, கட்டுப்படுத்தப்படுவது, அந்த வேறுபாட்டால்  பொருள் பதவி உரிமை ஆகியன  கைவிட்டுப்போவது குறித்த விழிப்புணர்வுடன் அதனை மாற்றியமைக்கும் நோக்கில்  பெண்ணுக்கு சமவுரிமை வேண்டுவது பெண்ணியம்.
ஒத்துக்கொள்ளக்கூடிய கொள்கை 
குறிப்பாகப் பெண்ணியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெளிவாகக் கூறிவிட்டு தொடர்வது சரியாக இருக்கும்.
நாம் பேசும் பெண்ணியம் எதிர்கால சந்ததியைப் பாதிக்காமல் , குடும்ப அமைப்பைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது நான் வகுத்துக் கொள்ளும் வரையறை. 
நான் பார்த்தவரை ஆண்களுக்குச் சமமாக உரிமை எதிர்பார்க்கிறார்கள் என்று கண்டிப்பது ஒருசிலரின் பெண்ணிய வரையறை.  அதில் என்ன தவறு?  என்று மறுகேள்விதான்  கேட்கப்பட வேண்டும்.
என்னிடம் அப்படிப்பட்ட வரையறை இல்லை தேமொழி .இன்னும் சொல்லப்போனால் ..........நான் நிர்வாகத்துறைக்கு வந்த 2 ஆண்டுகளுக்குள் எனக்கு அடியில் வேலை பார்த்த 100 ஆண்களுக்கும் ,150 பெண்களுக்கும் பால் பேதமின்றி சமமாகச் சம்பளம் கொடுக்க வழிவகை செய்தவள். இத்தனைக்கும் சம்பளம் கொடுத்தது தனியார் அறக்கட்டளை நிறுவனம்.
ஆண்கள் தங்கள் கோணத்தில் வரையறுத்து இது பெண்ணியம் என்று சொல்வதைப் பெண்கள் ஏற்றுக் கொண்டு அதே வழியிலேயே நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் பெண்ணியம் என்பது வேறுபடுகிறது அவர்கள் என்று  இழுப்புக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருப்பது பெண்ணியம் அல்ல.
அந்த அளவுக்கு மென்மையான வளைந்து கொடுக்கக்கூடிய ஆளுமையா நான்? இல்லை ........என்னைப்  பற்றி நானே சொல்வது அழகல்ல ...முறையல்ல. ஆனாலும் நான் பெண்ணியவாதி இல்லை என்ற விமர்சனம் பற்றிக் கவலையே படமாட்டேன்.  
பொறுக்கியெடுத்த ஓரிரு மாறுபட்ட நிகழ்வைக் காட்டி, அடுத்தவர் கருத்தை திசை திருப்பும் வகையில் பெண்ணியச் சிந்தனை  என்பது கேவலமானது என்ற கோணத்தை முன்னிறுத்தும் வகையில் ஒரு கோணம் வைக்கப்பட்டால் அதன் வழியே சென்று பெண்ணியம் என்ன என்பதை விளக்கிக் கொண்டிருப்பது, அதுவும் பெண்கள் செய்வது குறித்து இங்கு சிந்திக்க வேண்டும்.
நானென்ன குழந்தையா? என்னை யாரும் திசை திருப்ப முடியாது.
உணர்வுகள் அனைவருக்கும் ஒன்றே, எல்லோருக்கும் பசிக்கும், தாக்கினால் வலிக்கும் போன்ற அடிப்படை உயிரின வேறுபாட்டில் ஒருவருக்கும் மறுக்கப்படும் உரிமை, அல்லது வாய்ப்பு குறித்து பேசினால் அது  பெண்ணியம்.
உண்மை 
அமெரிக்காவோ... ஆப்பிரிக்காவோ  பெண்கள் அனைவரும் ஒருவரே, உணர்ச்சிகள் வாழ்வின் எதிர்பார்ப்புகள் ஒன்றே.  அந் பரந்த உரிமை/சமத்துவம்  எதிர்பார்ப்புக்  கற்றையில் யார் எந்த அளவு தங்கள் உரிமைகளைப் பெற்றுள்ளார்கள் என்பதே வேறுபாடு.  
சரி 
சொத்தில் உரிமை இல்லை, திருமணத்தில் உரிமை இல்லை, குழந்தையாகப் பெண் பிறந்தாலோ உயிரே இல்லை என்பது போன்றவை ஒரு இடத்தில் கூக்குரலாக இருக்கும். அதற்குப் போராட வேண்டிய நிலையே மற்றொரு நாட்டில் தேவையிருக்காது. கல்வி, சொத்து, உரிமை, மருத்துவ உதவி, அதிகாரப் பதவி போன்றவை பெண் என்ற அடிப்படையில் மறுக்கப்படுவது நாட்டுக்கு நாடு கலாச்சாரப் பின்னணியில் அளவில் மாறுபடும்.  பெண்களுக்கு அது சமமாகக் கிடைப்பதற்கு வழியில் இடையூறு செய்பவர்கள் பழமையில் ஊறி அவ்வாறு வளர்க்கப்பட்ட பெண்களாகவேயும் இருப்பார்கள்.
நாட்டுக்கு நாடு வேறுபடும் பின்னணி உண்டு. நான் இடையூறு செய்யும் பழைமைவாதி இல்லை 
நிர்மலாதேவி..இங்கு  நினைவு வரவேண்டும்.    
தொடர்பு புரியவில்லை 

நானாக இருந்தால் (அல்லது நீங்களாக இருந்தாலோ) , அதாவது மற்றொரு பெண் என்ற முறையில் இவ்வாறு ஏற்பாடு செய்யச் சொன்ன ஆண்களின் நிலைதான் முதலில் சந்தி சிரித்திருக்கும்.

மாறாக இங்கு தரகு வேலையை முன்னெடுத்து பெண்களைக் கேவலப்படுத்தும் நிலைக்குக் கொண்டு செல்பவர் ஒரு பெண் எனக் குறிப்பிட விரும்பினேன். அதுதான் தொடர்பு. 

அதைவிட்டு பெண்கள் உரிமை கேட்பதை நையாண்டி செய்து கொண்டிருக்கும், அந்த உரிமைக்குரலைக் கேவலமாக சித்தரிக்கும் சூழ்ச்சி நிறைந்த செய்கைகளைக் கூர்ந்து நோக்காது அமெரிக்க பெண்ணியம், ஆஸ்திரேலிய பெண்ணியம் என்பது தேவையற்ற திசைதிருப்பும் முயற்சி.
பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்க நிர்பந்தப்படுத்த வேண்டிய சூழலையும் ,அதை உரிமையில் தலையீடு என்று சொன்ன பெண்ணியவாதிகளையும் அடியொட்டி யு.எஸ்.பெண்ணியம் என்று மட்டும் தான் கூறினேன்.ஆஸ்திரேலியப் பெண்ணியம் பற்றியெல்லாம் பேசவில்லை.

எந்த ஒரு கருத்து குறித்தும் மாறுபட்ட கோணங்கள் உள்ளவர்கள் இருப்பது உலக  இயல்பு, breastfeeding awareness day என்பதும் இங்கு உண்டு. குழந்தை பிறந்தபிறகு மருத்துவமனையிலேயே விளக்கம் தரவும் நேரம் ஒதுக்குவார்கள்.  

ஒரு சில பெண்கள் துணிச்சலாக பொதுவிடங்களில் குழந்தைக்குப் பாலூட்டுவதைப் படமெடுத்துப் போட்டு இது இயற்கை, நான் பெண் என்பதில் எனக்குப் பெருமை, ஆதரவு தருகிறேன்  என்பது போலவும் நடப்பார்கள், அவர்கள்  செய்கையையும் ஏற்றுக் கொள்ளமுடியாமல்  கண்டிப்பவர்களும் உள்ளனர். 

பெண்களை இழிவுப்படுத்துவதைப் பொறுக்கமுடியாமல் மேலாடையை நீக்கி போராட்டம் நடத்தும் பெண்களும் உள்ளனர்.

நம் நாட்டிலும்தான் மேலாடைக்கு வரி கேட்ட பொழுது கேரளாவில் தனது மார்பை வெட்டி வரிகேட்டவர் கையில் கொடுத்த கோவக்காரப் பெண்ணும் உண்டு.  இனத்திற்காக, உரிமைக்காகச் சினம் கொண்டு எதிர்த்துப் போராடிய பெண்களைத்தான் நம் நாட்டில் நாட்டார் வழக்கில் உள்ள தாய்த்தெய்வங்களாகவும் வணங்குகிறார்கள். 

கொள்கைகளில் பல எல்லைகளில் மக்கள் இருப்பர். அதில் தீவிரவாத செயல்களும் உண்டு. தன்மையாகக் கையாளும் போக்கும் உண்டு. 

நேற்றுவரை பெண்கள் எப்படி உடை உடுத்தவேண்டும் என்று காட்ட,  ஐபோன்-செல்போன் வாங்கி அதற்கு சேப்டி கார்ட் போடும் மகளுக்கு "தந்தை"  அறிவுறுத்தும் வாட்சப் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதனைப் படித்த பெண்கள் பகிரமாட்ட்ர்கள் என்ற சீண்டுதல் வேறு பதிவின் இறுதியில் வைக்கப்படுகிறது. 
பெண்களின் உரிமையை மதிக்கும்படி வாழ மகனுக்கு அறிவுரை  கூறும் கதைகளை ஆசீஃபா, மதராசா நிகழ்வுகளுக்குப் பின்னரும் இன்னமும் பார்க்க இயலவில்லை .
 என் மகனை என் பெண்ணியக் கொள்கைகளுக்கு ஏற்பத்தான் வளர்த்தேன். உனக்கென்று ஒரு மனைவி வரும்போது நீ இப்படியெல்லாம் அவளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று .........ஆயிரமாயிரம் ஆண்டுகளாக குருதியில் ஊறியிருக்கும் பண்புகளை அவ்வளவு சீக்கிரமாக மாற்றி விட முடியுமா என்ன!! தேமொழி ! வாழ்க்கையில் நீங்கள் நிற்கும் காலக்கட்டத்தைக் கடந்து அடுத்த காலகட்டத்தில் நிற்கிறேன் நான்.  

பாராட்டுகள் கண்மணி  
 
மாறாக, அது போன்ற செய்திகள் வந்தால் உடனே பெண்கள் உடை நடை போன்றவற்றை "பாதுகாப்பு" என்ற பெயரில் கூறிக் கட்டுப்படுத்தும் பதிவுகள்தான் வேகமெடுக்கின்றன.  
அதுவும் தேவை தானே 

தான் எவ்வாறு கௌரவமாக  மதிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை பெண்களுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் என்றுமே உண்டு.  இன்று ஆண்களும் பெண்களும் உடை வேறுபாடு இல்லாமல் அணிந்து  கொள்கிறார்கள்.

பொதுவிடங்களில், தினசரி வாழ்வில் நான் பார்த்தவரை பெண்கள் எந்த வகை உடையணிந்தாலும் மதிக்கப்படும் நிலையில்தான் இருப்பதை  நான் இந்த முறை இந்தியா வந்தபொழுதும் பார்த்தேன்.

பெண்களுக்கு அறிவுரை கூறும்  அளவு ஆண்களுக்கான அறிவுரை இருப்பதில்லை என்பதுவே எனது குறை. இதைப் பெண்களை கட்டுப்படுத்த எடுக்கும் ஒரு வாய்ப்பாக  மறைமுக முயற்சியாக மட்டுமே  என்னால் காண முடிகிறது 

தேமொழி

unread,
May 2, 2018, 5:49:41 PM5/2/18
to மின்தமிழ்

On Wednesday, May 2, 2018 at 5:20:27 AM UTC-7, kanmanitamilskc wrote:
ஏன் வீட்டில் இருக்கும்பொழுது இப்பெண்கள்  வழக்கமான முறையில்தானே குழந்தைக்குப் பாலூட்டுகிறார்கள். தாய் சேய் உறவு இதில் கேள்விக்குறியாகவோ, கேலியாக்கவோ வழியில்லையே.

அறிவியல் தொழில்முறை வளர்ச்சியில் தங்கள் தாய்ப்பாலையே சேமித்து குழந்தைக்கு வைக்க முடியும் என்ற நிலையை வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொள்வதில் தவறென்ன?

வாழ்வையும் வேலையையும் தங்கள் தேவைக்கேற்ப கையாளுகிறார்கள் என்பதுவே புரிந்து கொள்ளப்பட வேண்டியது. 

நானும் என்னுடன் பணிபுரிந்த 'ஹெதர்' என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த பொழுது பிரஸ்ட் பம்ப் ஒன்றுதான் பரிசளித்தேன், அவர் அதை வாங்க வேண்டும் என்றும் அது குறித்தும் அடுத்தவரிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்து அதையே பரிசளிக்க எண்ணினேன்.

அமுல், கிளாக்சோ போன்ற பால்பவுடர் கொண்டு பாலூட்டும் வழக்கம் நம் நாட்டிலேயே உண்டே.  
(நான் பிறந்ததில் இருந்து கொழு கொழு குண்டுக் குழந்தையாக இருந்ததால் (இப்பொழுதும் இருப்பதால்) என்னை கிளாக்சோ பேபி விளம்பரத்திற்கு என் அப்பாவிடம் கேட்டார்கள் என்றும், அப்பா அம்மாவிடம் கேட்ட பொழுது என் பிள்ளைக்கு கண் பட்டுவிடும் என்று அம்மா மறுத்துவிட்டதாகச் சொன்ன கதையும் உண்டு இவையெல்லாம் 1960 களின் கதை.)
ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே பால்பவுடர் கலக்கிக் கொடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகளும் உள்ளனர்.  பெரும்பான்மையான பெண்கள் வெளியிடத்தில் வேலைக்குப் போக வேண்டும் என்று நினைக்காத காலம் அது.
தாய் சேய்  உணர்வு பாழ்பட்டதா?

இங்கு அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவைப் பல்கலைக்கழகங்களில் அன்னையர் தினம் அன்று வைக்க விரும்புவார்கள்.  இதுவும் யூஎஸ் பெண்ணியம்.
பாஸ்போர்ட் வாங்கவேண்டுமென்றாலோ,  இன்னமும் பிள்ளைகள் குறித்த  சில முக்கியமான ஆவணங்களில் கையெழுத்து வேண்டுமென்றாலோ அம்மா கையெழுத்தும் இல்லாமல் அனுமதி பெற முடியாது என்பது யூஎஸ் பெண்ணியம்.

செல்வன்

unread,
May 2, 2018, 7:53:05 PM5/2/18
to mintamil
2018-05-02 16:49 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

அது நம்பிக்கையின்மையின் சின்னம்.

விவாகரத்து பெற்ற தந்தையர் பிள்ளையை பார்க்கமுடியாமல் பிள்லையை வெளிநாடுகளுக்கு அழைத்துசெல்வதை தடுக்க உருவான விதிமுறை.

சொந்த தந்தை தான் பெற்ற பிள்லையை கடத்தி சென்று தான் பார்க்கமுடியும் என்பது எல்லாம் நிலவுவது மிகப்பெரும் அசிங்கமும், அவமானமும் ஆகும்

--

செல்வன்

செல்வன்

unread,
May 2, 2018, 7:57:48 PM5/2/18
to mintamil
2018-05-02 16:49 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இங்கு அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவைப் பல்கலைக்கழகங்களில் அன்னையர் தினம் அன்று வைக்க விரும்புவார்கள்.  இதுவும் யூஎஸ் பெண்ணியம்.

கல்யாணம் செய்துகொள்வதற்கு முன்னால் கணவனும், மனைவியும் நுபிடல் அக்ரிமெண்ட் என சொல்லி "உன்னை விவாகரத்து செய்தால் இன்னின்ன விதிக" என எழுதி ஒப்பந்தம் போட்டு பதிப்வு செய்துகொன்டு தான் கல்யானம் செய்துகொள்வார்கள்.

இந்தியாவில் எந்த தம்ன்பதியாவது அப்படி ஒரு விசயத்தை சிந்திக்கும் நிலைஉயாவது உண்டா? 

Tom Cruise and Katie Holmes
Taking a page out of Larry Fortensky's book, Katie Holmes used a prenup to make marrying Tom Cruise a more lucrative proposition. T
he details: for each year the couple stays married, Holmes collects $3 million or they've been together for 11 years, whichever comes first. The best part? If they do last that long, the prenup is null and void and Holmes receives half of Cruise's entire fortune. One has to wonder what attorney told Cruise this would be a good idea!

6. Catherine Zeta-Jones and Michael Douglas
Next in the "making marriage pay" category is Catherine Zeta-Jones. Her prenup with "Wall Street" star Michael Douglas entitles her to $2.8 million per each year the marriage remains in effect. When Zeta-Jones was asked about the agreement she had the following to say:

"I think prenups are brilliant," Zeta-Jones chirps in the January issue of Vanity Fair, admitting that under her prenup with Douglas, "I get taken care of very well."

Prenups for pets, babysitters, and pool guys
Strange as it may sound, some prenuptial agreements even cover what happens to pets: both dead and alive! According to attorney Leon F. Bennett, who has represented Marlon Brando, Kelsey Grammer and Dennis Hopper, this is quite common. From Newsday:

Bennett once handled a case that dictated the destination of a couple's taxidermied horse. Even gardeners, baby sitters and pool men have been addressed.

--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 8:03:57 PM5/2/18
to மின்தமிழ்
பெண்ணிடம் வரதட்சிணை  வாங்குவது, பெண் பிறந்தால் இனி வீட்டுக்கு வராதே என்பது, கள்ளிப்பால் ஊற்றிக்  கொன்றுவிடுவது போன்றவைதான்  அசிங்கமும், அவமானமும் ஆகும்

தேமொழி

unread,
May 2, 2018, 8:04:09 PM5/2/18
to மின்தமிழ்
இந்தியாவில் ப்ரீ நுப்டியல் ஒப்பந்தம்  வந்தால் நல்லதுதான்.  வரவேற்கப்பட வேண்டிய மாறுதலாக இருக்கும். 

செல்வன்

unread,
May 2, 2018, 8:08:15 PM5/2/18
to mintamil
2018-05-02 19:03 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பெண்ணிடம் வரதட்சிணை  வாங்குவது, பெண் பிறந்தால் இனி வீட்டுக்கு வராதே என்பது, கள்ளிப்பால் ஊற்றிக்  கொன்றுவிடுவது போன்றவைதான்  அசிங்கமும், அவமானமும் ஆகும்

நிச்சயமாக.

ஆனால் இதற்கான தீர்வு கல்யாணமே வேண்டாம் என்பதும், குடும்ப அமைப்பு வேண்டாம் என்பதும், ஆண்கள் எனக்கு அவசியமே இல்லை என்பதும் அல்ல.

இந்திய பிரச்சனைகளுக்கு இந்திய பெண்ணியமே தீர்வு. அமெரிக்க பெண்ணியம் அல்ல.
 
செல்வன்

செல்வன்

unread,
May 2, 2018, 8:09:59 PM5/2/18
to mintamil
On Wed, May 2, 2018 at 7:04 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இந்தியாவில் ப்ரீ நுப்டியல் ஒப்பந்தம்  வந்தால் நல்லதுதான்.  வரவேற்கப்பட வேண்டிய மாறுதலாக இருக்கும். 

அது ஆண்களுக்கு தான் சாதகமாக இருக்கும். 

--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 8:20:57 PM5/2/18
to மின்தமிழ்

திருமணத்திற்கு பிறகு பெரிய பணக்கார ஆண்கள், மற்றொரு இளவட்டம் கிடைத்துச் சென்று   ஏமாற்றாமல் இருக்க பெண்கள் செய்ய வேண்டிய வேலை ப்ரீ நுப்டியல்.
 
அமெரிக்காவில் ஐந்து கல்யாணம் செய்தால் அரசனும் போண்டியாவான். பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ள எதையும் வெறுப்பது நமது மக்கள் வழக்கம். 

தேமொழி

unread,
May 2, 2018, 8:22:15 PM5/2/18
to மின்தமிழ்

On Wednesday, May 2, 2018 at 5:08:15 PM UTC-7, செல்வன் wrote:

2018-05-02 19:03 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பெண்ணிடம் வரதட்சிணை  வாங்குவது, பெண் பிறந்தால் இனி வீட்டுக்கு வராதே என்பது, கள்ளிப்பால் ஊற்றிக்  கொன்றுவிடுவது போன்றவைதான்  அசிங்கமும், அவமானமும் ஆகும்

நிச்சயமாக.

ஆனால் இதற்கான தீர்வு கல்யாணமே வேண்டாம் என்பதும், குடும்ப அமைப்பு வேண்டாம் என்பதும், ஆண்கள் எனக்கு அவசியமே இல்லை என்பதும் அல்ல.

பெண்ணியம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுடன் பேசுவது வீண்  வேலை.  

செல்வன்

unread,
May 2, 2018, 8:24:20 PM5/2/18
to mintamil
2018-05-02 19:20 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

திருமணத்திற்கு பிறகு பெரிய பணக்கார ஆண்கள், மற்றொரு இளவட்டம் கிடைத்துச் சென்று   ஏமாற்றாமல் இருக்க பெண்கள் செய்ய வேண்டிய வேலை ப்ரீ நுப்டியல்.
 
அதே ஒரு ஆண் "உனக்கு எந்த ஜீவனாம்சமும் இல்லை." எனகூட ப்ரீநூபிடல் அக்ரிமெண்ட் போடமுடியும். சட்டபடி வரும் சொற்ப உரிமையும் பறிபோகும்.

அமெரிக்காவில் ஐந்து கல்யாணம் செய்தால் அரசனும் போண்டியாவான். பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ள எதையும் வெறுப்பது நமது மக்கள் வழக்கம். 

அதனால் தான் அமெரிக்கர்கள் கல்யாணம் செய்துகொள்வது இல்லை. திருண விகிதம் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. இப்ப மகிழ்ச்சியா? :-) 
--

செல்வன்

செல்வன்

unread,
May 2, 2018, 8:25:37 PM5/2/18
to mintamil
2018-05-02 19:22 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Wednesday, May 2, 2018 at 5:08:15 PM UTC-7, செல்வன் wrote:

2018-05-02 19:03 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பெண்ணிடம் வரதட்சிணை  வாங்குவது, பெண் பிறந்தால் இனி வீட்டுக்கு வராதே என்பது, கள்ளிப்பால் ஊற்றிக்  கொன்றுவிடுவது போன்றவைதான்  அசிங்கமும், அவமானமும் ஆகும்

நிச்சயமாக.

ஆனால் இதற்கான தீர்வு கல்யாணமே வேண்டாம் என்பதும், குடும்ப அமைப்பு வேண்டாம் என்பதும், ஆண்கள் எனக்கு அவசியமே இல்லை என்பதும் அல்ல.

பெண்ணியம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுடன் பேசுவது வீண்  வேலை.  

டிக்சனரி, விக்கிபிடியாவை படித்து பெண்ணீயம் என்றால் இதுதான் என நீங்கள் நினைத்துக்கொள்வதுதான் பிரச்சனை :-) 

--

செல்வன்

செல்வன்

unread,
May 2, 2018, 8:30:15 PM5/2/18
to mintamil
ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் பெண்ணியம் என டிக்சனரையில் போட்டுள்ளது. அவ்வளவுதான்., அதான் பெண்ணியம் என மட்டையடி அடிப்பது யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத nuance அற்ற நிலையையே காட்டுகிறது

டிக்சனரியில்

எல்லா மதத்தையும் சமமாக நினைப்பவன் தான் இந்து. இந்திய இந்து மதம், பிஜி தீவு இந்துமதம் என தனி தனியாக எதுவும் இல்லை. எல்லா நாடுகள், ஊர்களிலும் இந்துமதம் ஒன்றுதான் என நினைப்பது போன்ர வேடிக்கை இது

ஊர் ஊருக்கு இந்து சமய பழக்கங்கள் மாறுபடும். அதை புரிந்துகொள்ள nuance அவசியம். டிக்சனரியை வேதநூலாக நினைத்துக்கொன்டால் நான் பொறுப்பல்ல. இந்திய பெண்கள் பிரச்சனை வேறு, அம்ரிக்க பெண்கள் பிரச்சனை வேறு. யு எஸ் பெண்ணீயம் வேறு, இந்திய பெண்ணியம் வேறு
--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 8:38:55 PM5/2/18
to மின்தமிழ்

On Wednesday, May 2, 2018 at 5:24:20 PM UTC-7, செல்வன் wrote:

2018-05-02 19:20 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

திருமணத்திற்கு பிறகு பெரிய பணக்கார ஆண்கள், மற்றொரு இளவட்டம் கிடைத்துச் சென்று   ஏமாற்றாமல் இருக்க பெண்கள் செய்ய வேண்டிய வேலை ப்ரீ நுப்டியல்.
 
அதே ஒரு ஆண் "உனக்கு எந்த ஜீவனாம்சமும் இல்லை." எனகூட ப்ரீநூபிடல் அக்ரிமெண்ட் போடமுடியும். சட்டபடி வரும் சொற்ப உரிமையும் பறிபோகும்.

செய்யட்டுமே, அடுத்தவர் பணத்திற்கு ஏங்கி ஏமாற்ற நினைக்கும் பெண்களும் காணாது போவார்கள்.

அது நல்ல முறை  ஆணையும் பாதுகாக்கும்.

இல்லை உண்மையாகவே காதலிக்கும் பெண்ணிற்கும்,  தரமுடியாது என்று சொல்லும் ஆணின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க ஒரு  வாய்ப்பும் கிடைக்கும்.

வெட்டுச் சீட்டாட்டம் என்று தெரிந்து ஒப்பந்தம் போட்டால் யாரும் எதுவும் செய்ய வழியில்லை.

அது எல்லோருக்கும் நன்மை பயக்கும் ஒப்பந்த முறை.  

மற்றும் அது பணம் என்ற அடிப்படையில் மற்றும் பார்க்கப்படுவதல்ல 

ஒருவர் உரிமையில் மற்றவர் தலையிடுவது எதுவரை என்று விளக்கம் அளித்து ஒப்பந்தம் செய்து கொள்வது.  பின்னால் ஏமாற்றப் பட்டோம் என்ற உணர்வு வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உடன்பாடு.

தேமொழி

unread,
May 2, 2018, 8:40:23 PM5/2/18
to மின்தமிழ்
I would like to see some data please 

--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 8:44:09 PM5/2/18
to மின்தமிழ்

On Wednesday, May 2, 2018 at 5:30:15 PM UTC-7, செல்வன் wrote:
ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் பெண்ணியம் என டிக்சனரையில் போட்டுள்ளது. அவ்வளவுதான்., அதான் பெண்ணியம் என மட்டையடி அடிப்பது யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத nuance அற்ற நிலையையே காட்டுகிறது

அகராதியில் இருப்பதெலாம் உண்மை அல்ல. 

ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட பொருள் இருப்பது உலக நியதி என்று சொல்கிறீர்கள்.

இது என்ன திருத்தம் பொன். சரவணன் இழையா?

செல்வன்

unread,
May 2, 2018, 10:30:48 PM5/2/18
to mintamil
2018-05-02 19:38 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Wednesday, May 2, 2018 at 5:24:20 PM UTC-7, செல்வன் wrote:

2018-05-02 19:20 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

திருமணத்திற்கு பிறகு பெரிய பணக்கார ஆண்கள், மற்றொரு இளவட்டம் கிடைத்துச் சென்று   ஏமாற்றாமல் இருக்க பெண்கள் செய்ய வேண்டிய வேலை ப்ரீ நுப்டியல்.
 
அதே ஒரு ஆண் "உனக்கு எந்த ஜீவனாம்சமும் இல்லை." எனகூட ப்ரீநூபிடல் அக்ரிமெண்ட் போடமுடியும். சட்டபடி வரும் சொற்ப உரிமையும் பறிபோகும்.

செய்யட்டுமே, அடுத்தவர் பணத்திற்கு ஏங்கி ஏமாற்ற நினைக்கும் பெண்களும் காணாது போவார்கள்.

அது நல்ல முறை  ஆணையும் பாதுகாக்கும்.

இல்லை உண்மையாகவே காதலிக்கும் பெண்ணிற்கும்,  தரமுடியாது என்று சொல்லும் ஆணின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க ஒரு  வாய்ப்பும் கிடைக்கும்.

வெட்டுச் சீட்டாட்டம் என்று தெரிந்து ஒப்பந்தம் போட்டால் யாரும் எதுவும் செய்ய வழியில்லை.

அது எல்லோருக்கும் நன்மை பயக்கும் ஒப்பந்த முறை.  

மற்றும் அது பணம் என்ற அடிப்படையில் மற்றும் பார்க்கப்படுவதல்ல 

ஒருவர் உரிமையில் மற்றவர் தலையிடுவது எதுவரை என்று விளக்கம் அளித்து ஒப்பந்தம் செய்து கொள்வது.  பின்னால் ஏமாற்றப் பட்டோம் என்ற உணர்வு வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உடன்பாடு.

இதைத்தான் கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்க பெண்ணியத்தை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தல் என்கிறேன்

ஒரு விசயம் இந்திய சூழலில் எப்படி பயன்படும், யாருக்கு தீங்கு விளைவிக்கும், பெண்களுக்கு அதன் பாதிப்பு என்ன...எதையும் அலசி ஆராயாது "இந்தியாவுக்கு ப்ரிநூபிடல் ஒப்பந்தம் வரவேண்டும்" என்கிறீர்கள்.

இந்தியாவில் பெண்கள் நிலை மிக பலகீனமானது. இருக்கும் உரிமைகளையும் இப்படி ஒப்பந்தம் போட்டு ஒழித்துவிட்டு அதை பெண்ணீயம் என வேறு சொல்லிக்கொள்வது நகைச்சுவையான விசயம்.

 இம்மாதிரி மேலைநாட்டு வழக்கங்களை ஈயடிச்சான் காப்பி அடித்து கொன்டுவரும் விசயத்தை தான் இழையில் கண்டித்து வருகிறேன் 

--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 10:45:07 PM5/2/18
to மின்தமிழ்
அடடா பரிதவிக்கும் இந்தியப் பெண்கள்  வாழ்வில் என்ன ஒரு அக்கறை. புல்லரிக்கிறது.

காப்பியெல்லாம் அடிக்க வேண்டியத் தேவை இந்தியப் பெண்களுக்கு  இருப்பதாகத்  தெரியவில்லை. 

ஆண்களைவிட அதிக அளவு படிப்பும் அதிக எண்ணிக்கையில் படித்த பெண்கள் உள்ளனர்.  இந்தியப் பெண்கள் யாரும் பாப்பாக்கள் அல்ல. அவர்கள் திட்டம் போட்டுத் தங்களுக்கு எது தேவை தேவையில்லை என முடிவெடுப்பார்கள்.  அவர்கள் போக்கில் தடையிடாமல் இருந்தாலே போதும்.

அயல்நாட்டுக் கூகுள் உருவாக்கிய தளத்தைப் பயன்படுத்திக் கொண்டே மேலைநாட்டு வழக்கங்களை ஈயடிச்சான் காப்பி அடித்துக் கொண்டுவரும் விசயத்தைத் தான் இழையில் கண்டித்து வருகிறேன் எனக் கூறுவதை ... நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

செல்வன்

unread,
May 2, 2018, 10:53:51 PM5/2/18
to mintamil
2018-05-02 21:45 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அடடா பரிதவிக்கும் இந்தியப் பெண்கள்  வாழ்வில் என்ன ஒரு அக்கறை. புல்லரிக்கிறது.

என் தேசம். அதன் பெண்கள். அக்கறை நிச்சயமாக இருக்கும்.

காப்பியெல்லாம் அடிக்க வேண்டியத் தேவை இந்தியப் பெண்களுக்கு  இருப்பதாகத்  தெரியவில்லை. 

பிறகு ஏன் ப்ரிநூபிடல் ஒப்பந்தம் இந்தியாவுக்கு வரவேண்டும் என்கிறீர்கள்? அது காப்பி அல்லாமல் என்ன?

ஆண்களைவிட அதிக அளவு படிப்பும் அதிக எண்ணிக்கையில் படித்த பெண்கள் உள்ளனர்.  இந்தியப் பெண்கள் யாரும் பாப்பாக்கள் அல்ல. அவர்கள் திட்டம் போட்டுத் தங்களுக்கு எது தேவை தேவையில்லை என முடிவெடுப்பார்கள்.  அவர்கள் போக்கில் தடையிடாமல் இருந்தாலே போதும்.

அவர்கள் பாப்பாக்கள் அல்ல. அதனால் தான் 100% இந்திய பெண்கள் அம்மாதிரி ஒப்பந்தங்களை போட்டுகொள்வதில்லை :-)

அயல்நாட்டுக் கூகுள் உருவாக்கிய தளத்தைப் பயன்படுத்திக் கொண்டே மேலைநாட்டு வழக்கங்களை ஈயடிச்சான் காப்பி அடித்துக் கொண்டுவரும் விசயத்தைத் தான் இழையில் கண்டித்து வருகிறேன் எனக் கூறுவதை ... நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கிழிந்தது கிருஷ்ணகிரி. கூகிள் இந்தியா என்பது இந்திய கம்பனி என்பதாவது தெரியுமா, தெரியாதா? :-)

Google India Private Limited is a Private incorporated on 16 December 2003. It is classified as Non-govt company and is registered at Registrar of Companies, Bangalore. Its authorized share capital is Rs. 90,000,000 and its paid up capital is Rs. 10,738,790.It is inolved in Other computer related activities [for example maintenance of websites of other firms/ creation of multimedia presentations for other firms etc.]
 
--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 11:05:23 PM5/2/18
to மின்தமிழ்
///கூகிள் இந்தியா என்பது இந்திய கம்பனி என்பதாவது தெரியுமா, தெரியாதா? :-)///

Google LLC[5] is an American multinational technology company that specializes in Internet-related services and products, which include online advertising technologies, search engine, cloud computing, software, and hardware. Google was founded in 1998 by Larry Page and Sergey Brin while they were Ph.D. students at Stanford UniversityCalifornia

///ஏன் ப்ரிநூபிடல் ஒப்பந்தம் இந்தியாவுக்கு வரவேண்டும் என்கிறீர்கள்? அது காப்பி அல்லாமல் என்ன?////

யார் இவர்கள்?

https://www.google.com/search?q=indian+university+girls&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwiYlfbtxujaAhUB0lMKHbFQBW8Q_AUICigB&biw=1920&bih=949

தங்களுக்கு வேண்டியதை பின்பற்றும் இக்காலப் பெண்கள் 

செல்வன்

unread,
May 2, 2018, 11:10:25 PM5/2/18
to mintamil
2018-05-02 22:05 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இந்தியாவில் பயனாகும் கூகிள் தேடுபொறி கூகிள் இந்தியாவினுடையது. இந்திய அரசின் கட்டுபாட்டில் இருப்பது

அமெரிக்காவில் பயனாகும் கூகிள் தேடுபொறி கூகிள் அமெரிக்காவினுடையது. அமெரிக்க அரசின் கட்டுபாட்டில் இருப்பது

இவர்கள் தான் ப்ரிநூபிடல் ஒப்பந்தத்தை புறக்கணித்துவிட்டார்களே? பிறகு ஏன் அதை பிடித்துக்கொண்டு "இந்தியாவுக்கு வேண்டும், வேண்டும்" என்கிறீர்கள்? :-)
 
--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 11:15:59 PM5/2/18
to மின்தமிழ்

On Wednesday, May 2, 2018 at 8:10:25 PM UTC-7, செல்வன் wrote:

2018-05-02 22:05 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
///கூகிள் இந்தியா என்பது இந்திய கம்பனி என்பதாவது தெரியுமா, தெரியாதா? :-)///

Google LLC[5] is an American multinational technology company that specializes in Internet-related services and products, which include online advertising technologies, search engine, cloud computing, software, and hardware. Google was founded in 1998 by Larry Page and Sergey Brin while they were Ph.D. students at Stanford UniversityCalifornia

இந்தியாவில் பயனாகும் கூகிள் தேடுபொறி கூகிள் இந்தியாவினுடையது. இந்திய அரசின் கட்டுபாட்டில் இருப்பது

அமெரிக்காவில் பயனாகும் கூகிள் தேடுபொறி கூகிள் அமெரிக்காவினுடையது. அமெரிக்க அரசின் கட்டுபாட்டில் இருப்பது

உண்மையைத் திரிக்கும் முயற்சியை ஊக்குவித்துத்  தொடர்வதில் எனக்கு உடன்பாடில்லை.  

///ஏன் ப்ரிநூபிடல் ஒப்பந்தம் இந்தியாவுக்கு வரவேண்டும் என்கிறீர்கள்? அது காப்பி அல்லாமல் என்ன?////

யார் இவர்கள்?

https://www.google.com/search?q=indian+university+girls&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwiYlfbtxujaAhUB0lMKHbFQBW8Q_AUICigB&biw=1920&bih=949

தங்களுக்கு வேண்டியதை பின்பற்றும் இக்காலப் பெண்கள் 

இவர்கள் தான் ப்ரிநூபிடல் ஒப்பந்தத்தை புறக்கணித்துவிட்டார்களே? பிறகு ஏன் அதை பிடித்துக்கொண்டு "இந்தியாவுக்கு வேண்டும், வேண்டும்" என்கிறீர்கள்? : 

தேவை தரவுகள், 
தரவுகள் அளிக்க வேண்டிய  பிற பட்டியலுடன்  இதையும் இணைத்து 'file 13'  இல் வைக்கவும்

--

செல்வன்

செல்வன்

unread,
May 2, 2018, 11:22:06 PM5/2/18
to mintamil
2018-05-02 22:15 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

உண்மையைத் திரிக்கும் முயற்சியை ஊக்குவித்துத்  தொடர்வதில் எனக்கு உடன்பாடில்லை.  

எது உண்மை இல்லை?

கூகிள் தேடுபொறி இந்திய அரசின் கட்டுபாட்டில் இருக்கிறது என்பது உண்மை இல்லையா?

அல்லது கூகிளை இந்தியாவுக்கு அவர் அனுமதித்தது இந்திய அரசு என்பது உண்மை இல்லையா?

நன்றாக குழப்புகிறீர்கள்.

இவர்கள் தான் ப்ரிநூபிடல் ஒப்பந்தத்தை புறக்கணித்துவிட்டார்களே? பிறகு ஏன் அதை பிடித்துக்கொண்டு "இந்தியாவுக்கு வேண்டும், வேண்டும்" என்கிறீர்கள்? : 

தேவை தரவுகள், 
தரவுகள் அளிக்க வேண்டிய  பிற பட்டியலுடன்  இதையும் இணைத்து 'file 13'  இல் வைக்கவும்

இந்தியாவில் கல்யாணத்துக்கு முன்னால் ப்ரிநூபிடல் ஒப்பந்தம் போடுவது வழக்கமா இல்லையா என்பது தெரியகூட உங்களுக்கு சுட்டி, கூகிள், விக்கிபிடியா அவசியம் :-) ஹா...ஹா....:-) காமடியோ. காமடி 

--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 11:27:52 PM5/2/18
to மின்தமிழ்
50 பவுன் நகை வேண்டும், ஐம்பது லட்சம் வேண்டும், அப்பொழுதுதான் கழுத்தில் தாலி ஏறும் என்பதெலாம் "திருமணத்திற்கு முன் போடும் ஒப்பந்தம்" எல்லாம் ஒப்பந்தமே இல்லையா?

என்னே என் அறியாமை!!!

செல்வன்

unread,
May 2, 2018, 11:31:37 PM5/2/18
to mintamil
2018-05-02 22:27 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
50 பவுன் நகை வேண்டும், ஐம்பது லட்சம் வேண்டும், அப்பொழுதுதான் கழுத்தில் தாலி ஏறும் என்பதெலாம் "திருமணத்திற்கு முன் போடும் ஒப்பந்தம்" எல்லாம் ஒப்பந்தமே இல்லையா?

என்னே என் அறியாமை!!!

வரதட்சிணை ஒப்பந்தம் யார் போடுகிறார்கள்? பெண்ணும், மாப்பிள்ளையுமா அல்லது சம்பந்திகள் இருவரும் அவர்களுக்குள் போட்டுகொள்வதா?

சட்டபடி அது செல்லுபடி ஆகுமா?
 
--

செல்வன்

தேமொழி

unread,
May 2, 2018, 11:43:16 PM5/2/18
to மின்தமிழ்
இந்தியாவில் சட்டத்திற்கும்  மதிப்பிருகிறதா? அப்புறம் இந்தக் காவிரி என்பது .. சரி ...சரி ...அது இசையினியன் இழை...
இன்றைய இந்தியாவில் திருமணங்கள் ஆகப் பெரும்பான்மை பெற்றோர் முன்னெடுப்பதில் உள்ளது.
அதனால் ப்ரீ நுப்டியல் என்பது அதுதான்.

ப்ரீ நுப்டியலில்  உள்ள கன்டென்ட் என்ன என்பது அந்தந்த  நாட்டில் வாழும்  பெண்கள் வாழ்வின் நிலைக்குச்  சான்று இந்தியாவோ...அது அமெரிக்காவோ ...இல்லை அன்டார்டிக்காவோ 

--

செல்வன்

செல்வன்

unread,
May 3, 2018, 12:06:52 AM5/3/18
to mint...@googlegroups.com
On Wed, May 2, 2018 at 10:43 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Wednesday, May 2, 2018 at 8:31:37 PM UTC-7, செல்வன் wrote:

ஆக பெற்றொர் போட்டுகொள்ளும் வரதட்சிணை ஒப்பந்தங்கள் தான் ப்ரீநூபிடல் ஒப்பந்தங்கள். அவற்றுக்கு சட்டபூர்வ் அங்கீகாரம் அளிக்கவேண்டுவது தான் பெண்ணியம்...

நான் சரியா தான் புரிந்துகொண்டுள்ளேனா???

ப்ரீ நுப்டியலில்  உள்ள கன்டென்ட் என்ன என்பது அந்தந்த  நாட்டில் வாழும்  பெண்கள் வாழ்வின் நிலைக்குச்  சான்று இந்தியாவோ...அது அமெரிக்காவோ ...இல்லை அன்டார்டிக்காவோ 

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
May 3, 2018, 12:15:28 AM5/3/18
to மின்தமிழ்
மீண்டும் கோனார் நோட்ஸ் வேண்டும் என்ற கோரிக்கை.

On Wednesday, May 2, 2018 at 9:06:52 PM UTC-7, செல்வன் wrote:
On Wed, May 2, 2018 at 10:43 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Wednesday, May 2, 2018 at 8:31:37 PM UTC-7, செல்வன் wrote:

2018-05-02 22:27 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
50 பவுன் நகை வேண்டும், ஐம்பது லட்சம் வேண்டும், அப்பொழுதுதான் கழுத்தில் தாலி ஏறும் என்பதெலாம் "திருமணத்திற்கு முன் போடும் ஒப்பந்தம்" எல்லாம் ஒப்பந்தமே இல்லையா?

என்னே என் அறியாமை!!!

வரதட்சிணை ஒப்பந்தம் யார் போடுகிறார்கள்? பெண்ணும், மாப்பிள்ளையுமா அல்லது சம்பந்திகள் இருவரும் அவர்களுக்குள் போட்டுகொள்வதா?

சட்டபடி அது செல்லுபடி ஆகுமா?

இந்தியாவில் சட்டத்திற்கும்  மதிப்பிருகிறதா? அப்புறம் இந்தக் காவிரி என்பது .. சரி ...சரி ...அது இசையினியன் இழை...
இன்றைய இந்தியாவில் திருமணங்கள் ஆகப் பெரும்பான்மை பெற்றோர் முன்னெடுப்பதில் உள்ளது.
அதனால் ப்ரீ நுப்டியல் என்பது அதுதான்.

ஆக பெற்றொர் போட்டுகொள்ளும் வரதட்சிணை ஒப்பந்தங்கள் தான் ப்ரீநூபிடல் ஒப்பந்தங்கள். அவற்றுக்கு சட்டபூர்வ் அங்கீகாரம் அளிக்கவேண்டுவது தான் பெண்ணியம்...

நான் சரியா தான் புரிந்துகொண்டுள்ளேனா???

ப்ரீ நுப்டியலில்  உள்ள கன்டென்ட் என்ன என்பது அந்தந்த  நாட்டில் வாழும்  பெண்கள் வாழ்வின் நிலைக்குச்  சான்று இந்தியாவோ...அது அமெரிக்காவோ ...இல்லை அன்டார்டிக்காவோ 

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

kanmani tamil

unread,
May 3, 2018, 2:06:27 PM5/3/18
to mintamil

kanmani tamil

unread,
May 3, 2018, 2:44:11 PM5/3/18
to mintamil
///குடும்ப அமைப்பு குலையாமல் இருப்பது ஆண் பெண் இருவர் பொறுப்பு./// themozhi wrote on 2.5.18
இது நூற்றில் ஒரு வார்த்தை .அதாவது நூற்றுக்கு நூறு உண்மை.
 
 ///அது பெண்ணியத்தின் கீழ்  வருவதில்லை ///
ஒரு பெண் விட்டு விடுதலையாக முடிவு செய்யும் போது அது பெண்ணியத்தின் கீழ் தான் வருகிறது . இல்லை என்று சொல்வது தப்பிக்க நினைக்கும் மனப்போக்கு.

///ஏன் வீட்டில் இருக்கும்பொழுது இப்பெண்கள்  வழக்கமான முறையில்தானே குழந்தைக்குப் பாலூட்டுகிறார்கள். தாய் சேய் உறவு இதில் கேள்விக்குறியாகவோ, கேலியாக்கவோ வழியில்லையே. அறிவியல் தொழில்முறை வளர்ச்சியில் தங்கள் தாய்ப்பாலையே சேமித்து குழந்தைக்கு வைக்க முடியும் என்ற நிலையை வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொள்வதில் தவறென்ன? வாழ்வையும் வேலையையும் தங்கள் தேவைக்கேற்ப கையாளுகிறார்கள் என்பதுவே புரிந்து கொள்ளப்பட வேண்டியது. நானும் என்னுடன் பணிபுரிந்த 'ஹெதர்' என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த பொழுது பிரஸ்ட் பம்ப் ஒன்றுதான் பரிசளித்தேன், அவர் அதை வாங்க வேண்டும் என்றும் அது குறித்தும் அடுத்தவரிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்து அதையே பரிசளிக்க எண்ணினேன்.///

வாழ்வையும் வேலையையும் தேவைக்கேற்ப கையாளும் போது தாய் சேய் உறவுக்குரிய இடம் பின்னுக்குத் தள்ளப்படுவது ஏன்?
அறிவியல் தொழில் முறை வளர்ச்சி மனித உறவுகளை பாதிப்பதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்?
வீட்டில் இருக்கும்போது வழக்கமான முறையில் பாலூட்டும் பெண்கள் அன்றாடம் வேலைக்குப்போகும் போது குழந்தைப்பராமரிப்பை இரண்டாம் பட்சமாக்குவது ஏன்? 
பட்டவர்த்தனமாகக் கேட்கிறேன்.
நானும் 40 ஆண்டுகாலம் பணிக்குச் சென்றவள். இரண்டு மக்களைப் பெற்று வளர்த்து இன்று மூன்று பேரன்பேத்திகளைக் கொஞ்ச பிள்ளைப்பேறு பார்த்தவள்.
எல்லாம் பணிக்காலத்தில் தான்.
காலையிலோ /மாலையிலோ ---எப்போது வேலைக்குக் கிளம்புவதாக இருந்தாலும் அரை மணி நேரத்திற்கு முன் பிள்ளைக்குப் பாலூட்டுவது தானே பெற்றவளின் முதல் கடமையாக இருக்க வேண்டும். அப்படி நினைத்து ---அதற்கேற்ப தனது work scheduleஐ மாற்றிக் கொண்டால் இந்த இயந்திர மயமான தாய்ப்பாசம் இல்லாமல் குழந்தைக்கு வயிறு நிறைவதுடன் உண்மையான மனநிறைவு கிடைக்குமே.
புட்டிப்பால் கொடுப்பதைப் பற்றிச் சுட்டியுள்ளீர்கள்.
அதுவும் அறியாமையின் விளைவாகத் தானே நிகழ்ந்தது. அதற்கு யாரும் பெண்ணியக்கொடி பிடிக்கவில்லை .
புட்டிப்பால் கொடுப்பது பெண்ணுரிமை என்று............ சொல்லியிருந்தால் அதுவும் கண்டனத்திற்குரியதே.  

கண்மணி 

kanmani tamil

unread,
May 3, 2018, 3:01:30 PM5/3/18
to mintamil
///அமுல், கிளாக்சோ போன்ற பால்பவுடர் கொண்டு பாலூட்டும் வழக்கம் நம் நாட்டிலேயே உண்டே.  
(நான் பிறந்ததில் இருந்து கொழு கொழு குண்டுக் குழந்தையாக இருந்ததால் (இப்பொழுதும் இருப்பதால்) என்னை கிளாக்சோ பேபி விளம்பரத்திற்கு என் அப்பாவிடம் கேட்டார்கள் என்றும், அப்பா அம்மாவிடம் கேட்ட பொழுது என் பிள்ளைக்கு கண் பட்டுவிடும் என்று அம்மா மறுத்துவிட்டதாகச் சொன்ன கதையும் உண்டு இவையெல்லாம் 1960 களின் கதை.) ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே பால்பவுடர் கலக்கிக் கொடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகளும் உள்ளனர்.  பெரும்பான்மையான பெண்கள் வெளியிடத்தில் வேலைக்குப் போக வேண்டும் என்று நினைக்காத காலம் அது. தாய் சேய்  உணர்வு பாழ்பட்டதா?///

இதற்குரிய காரணம் பெண்ணுரிமை இல்லை.
விளம்பர மோகம் .
ரேடியோவில் கேட்பதை எல்லாம் பிள்ளைக்குக் கொடுப்பது தான் கெளரவம் என்று எண்ணும் போலி நாகரிகம்.
இதுவும் போற்றுவதற்குரியது இல்லை தான்.அதற்குத்தான் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.
 ஒரு இயந்திரம் குறுக்கே நுழைந்தால் தாய் சேய் உறவு அதற்கேற்ப பாதிக்கப் படத்தான் செய்யும்.
இன்று தொலைகாட்சி விளம்பர மோகம்.
என் பேத்தி 8 மாதத்தில் பிறந்தவள். மருத்துவ மனையிலிருந்து கூட்டிக் கொண்டு வரும்போதே பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலோடு உள்ளே நுழைந்த ........
கதையெல்லாம் நடந்தது. நான் போலீஸ்காரி வேலை பார்த்துக் கொண்டுதான் பேத்தி வளர்த்தேன்.
கண்மணி  

தேமொழி

unread,
May 3, 2018, 6:42:50 PM5/3/18
to மின்தமிழ்

On Thursday, May 3, 2018 at 11:44:11 AM UTC-7, kanmanitamilskc wrote:
///குடும்ப அமைப்பு குலையாமல் இருப்பது ஆண் பெண் இருவர் பொறுப்பு./// themozhi wrote on 2.5.18
இது நூற்றில் ஒரு வார்த்தை .அதாவது நூற்றுக்கு நூறு உண்மை.
 
 ///அது பெண்ணியத்தின் கீழ்  வருவதில்லை ///
ஒரு பெண் விட்டு விடுதலையாக முடிவு செய்யும் போது அது பெண்ணியத்தின் கீழ் தான் வருகிறது . இல்லை என்று சொல்வது தப்பிக்க நினைக்கும் மனப்போக்கு.

புத்தர் துறவு வாழ்வு மேற்கொள்ளக் குடும்பத்தை விட்டு வெளிநடந்ததை எந்த இயத்தில் வகைப்படுத்திப்  பார்ப்பீர்கள்?

அதற்குக் கூறும் பதிலை  மனநிம்மதி வேண்டி  ஒரு பெண்ணும் தனது குடும்ப வாழ்வில் இருந்து வெளியேறும்  சூழ்நிலைக்கு இணையாக  ஒப்பிடலாம்.

இந்த  இடத்திலும் ஆண் பெண் எடுக்கும் முடிவை  நான்  ஒருங்கே வைத்துப் பார்க்கிறேன். 

///ஏன் வீட்டில் இருக்கும்பொழுது இப்பெண்கள்  வழக்கமான முறையில்தானே குழந்தைக்குப் பாலூட்டுகிறார்கள். தாய் சேய் உறவு இதில் கேள்விக்குறியாகவோ, கேலியாக்கவோ வழியில்லையே. அறிவியல் தொழில்முறை வளர்ச்சியில் தங்கள் தாய்ப்பாலையே சேமித்து குழந்தைக்கு வைக்க முடியும் என்ற நிலையை வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொள்வதில் தவறென்ன? வாழ்வையும் வேலையையும் தங்கள் தேவைக்கேற்ப கையாளுகிறார்கள் என்பதுவே புரிந்து கொள்ளப்பட வேண்டியது. நானும் என்னுடன் பணிபுரிந்த 'ஹெதர்' என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த பொழுது பிரஸ்ட் பம்ப் ஒன்றுதான் பரிசளித்தேன், அவர் அதை வாங்க வேண்டும் என்றும் அது குறித்தும் அடுத்தவரிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்து அதையே பரிசளிக்க எண்ணினேன்.///

வாழ்வையும் வேலையையும் தேவைக்கேற்ப கையாளும் போது தாய் சேய் உறவுக்குரிய இடம் பின்னுக்குத் தள்ளப்படுவது ஏன்?
அறிவியல் தொழில் முறை வளர்ச்சி மனித உறவுகளை பாதிப்பதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்?
வீட்டில் இருக்கும்போது வழக்கமான முறையில் பாலூட்டும் பெண்கள் அன்றாடம் வேலைக்குப்போகும் போது குழந்தைப்பராமரிப்பை இரண்டாம் பட்சமாக்குவது ஏன்? 
பட்டவர்த்தனமாகக் கேட்கிறேன்.
நானும் 40 ஆண்டுகாலம் பணிக்குச் சென்றவள். இரண்டு மக்களைப் பெற்று வளர்த்து இன்று மூன்று பேரன்பேத்திகளைக் கொஞ்ச பிள்ளைப்பேறு பார்த்தவள்.
எல்லாம் பணிக்காலத்தில் தான்.
காலையிலோ /மாலையிலோ ---எப்போது வேலைக்குக் கிளம்புவதாக இருந்தாலும் அரை மணி நேரத்திற்கு முன் பிள்ளைக்குப் பாலூட்டுவது தானே பெற்றவளின் முதல் கடமையாக இருக்க வேண்டும். அப்படி நினைத்து ---அதற்கேற்ப தனது work scheduleஐ மாற்றிக் கொண்டால் இந்த இயந்திர மயமான தாய்ப்பாசம் இல்லாமல் குழந்தைக்கு வயிறு நிறைவதுடன் உண்மையான மனநிறைவு கிடைக்குமே.
புட்டிப்பால் கொடுப்பதைப் பற்றிச் சுட்டியுள்ளீர்கள்.
அதுவும் அறியாமையின் விளைவாகத் தானே நிகழ்ந்தது. அதற்கு யாரும் பெண்ணியக்கொடி பிடிக்கவில்லை .
புட்டிப்பால் கொடுப்பது பெண்ணுரிமை என்று............ சொல்லியிருந்தால் அதுவும் கண்டனத்திற்குரியதே.  

வேலைக்குக் கிளம்பும் முன்னரோ அல்லது பின்னரோ தாய்ப்பால் கொடுப்பவர்கள் அதைச் சேமித்தும் வைத்துவிட்டு அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் இடைப்பட்ட நேரத்திலும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்க வழி செய்வதைப் பாராட்ட அல்லவா வேண்டும்.

இங்கே சட்டப்படி குடும்ப விடுப்பு  (maternity leave) மூன்று மாதங்கள். குழந்தை பிறக்கும் நாள் வரை வேலை செய்துவிட்டு, குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு விடுமுறையைப் பயன்படுத்தி தாய்ப்பால் கொடுத்து இரவு, பகல் என்று பராமரித்துவிட்டு, அதற்குப் பிறகு குழந்தை திட உணவு உட்கொள்ளும் காலத்தில் பால் கொடுக்கும் இடைவெளி நீண்ட  பிறகு பணிக்குத் திரும்பும் பெண்களுக்கு இந்தப் பழிச்சொல் தேவைதானா என்பது எனது கேள்வி.

அடுத்த பதிலில் உள்ள ....
புட்டிப்பால் கொடுக்கப்பட்ட காலம் குறித்தும் ....
///ஒரு இயந்திரம் குறுக்கே நுழைந்தால் தாய் சேய் உறவு அதற்கேற்ப பாதிக்கப் படத்தான் செய்யும்.///....
குறித்தும்.

பிரஸ்ட் பம்ப்  பயன்படுத்தி தாய்ப்பால் சேகரித்து வைப்பதையும் நான் பெண்ணியம் என்று குறிப்பிடவில்லை.
(அதைக் குறிப்பிட்ட காரணமே தாய்ப்பால் கொடுப்பதை எதிர்க்கும் அமெரிக்க பெண்கள் என்ற பிழையான கருத்தைச் சுட்டிக் காட்ட ... ஆனால் அதுவும் எதிராகவே திரும்பும் என்பது நான் எதிர்பார்த்திராத ஒன்று)
புட்டிப்பால் கொடுப்பதையும் நான் பெண்ணியம் என்று குறிப்பிடவும் இல்லை.  
புட்டிப்பால் கொடுத்தது  விளம்பரமோகம் என்று எடுத்துக் கொள்ளவும்  தேவை இல்லை.  

சிலர் அவ்வாறும் செய்திருக்கலாம், தாய்ப்பாலைவிட ஊட்டச் சத்து மிக்கது என்ற அறியாமையிலோ மாயையிலோ தனது குழந்தைக்குச் சிறந்ததை அளிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் செய்திருக்கலாம்/செய்யலாம்.  குழந்தைக்கு தாய்ப்பால் அளவு போதவில்லை என்று மருத்துவர் அறிவுரையிலும் செய்திருக்க வாய்ப்புண்டு. 

ஆனால் அவ்வாறு பார்த்து பார்த்து வளர்த்த  பச்சைக்குழந்தை;   பிறந்த கொஞ்ச நாளுக்குத் தாயை உறங்கவே விடாமல் செய்து, இடைவிடாமல்  அழுது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை படுக்கையை நனைத்து (டையாப்பர் மாற்றி), தாய்ப்பால் கொடுக்கப்பட்டு பார்த்துப் பார்த்து வளர்த்தவர்களின் தாய்கள்தான்  இன்று முதியோர் இல்லத்திலும் விடப்படுகிறார்கள் என்றால்..... 
தாய்கள் பலன் எதிர்பார்க்காமல் கடமைச் செய்தார்கள்/செய்கிறார்கள்.  
அந்தத் தாய் சேய் உறவு என்ன பலனளித்தது என்றும் நாம் வாழும் காலத்திலேயே அறிந்து கொள்ள  நல்ல வாய்ப்பும் கிடைக்கிறது. 

அதனால் அந்த மாயையில் இருந்து விடுபடுவோம்.

அம்மா அப்பாவைப் போல உண்மையான அக்கறை கொண்டு யாரும் குழந்தையை  வளர்ப்பது இல்லைதான்.  ஆனால் குழந்தைக்கு அவர்களை முகம் பார்த்து அடையாளம் காணும் நிலை இருந்தாலும் யாரிடமும் வளரும் காலமும் அதுதான்.  எந்த நினைவும் இருந்திராத,யாரால் வளர்க்கப்படுகிறோம் என்பதைக் குழந்தை  அறியாத காலகட்டம் அது (அதனால்தானே அந்த வயதுக் குழந்தைகள் தத்தெடுக்கப்படுகிறார்கள்). 

உங்கள் பேரக்குழந்தைகளோ, உங்கள் குழந்தைகளோ  கூட்டுக் குடும்பத்தில் பாட்டிகள் (கவனிக்கவும் தாத்தாக்கள் அல்ல) கவனிப்பில் பராமரிக்கப்பட வாய்ப்பிருந்திருக்கலாம்.  

அமெரிக்க வாழ்வு நிலை வேறு.  பள்ளி முடிந்த பின்னர் ஆணோ பெண்ணோ தங்கள் சொந்தக்காலில் நின்று உழைத்து, தனது கல்விச்செலவை தானே ஏற்றுப்படித்து, வேலைக்குச் சென்று, பிற்காலத்திலும் பெற்றெடுத்த பிள்ளைகள் உதவியில் வாழ விரும்பாத மக்களின் கலாச்சாரம்.  

அவ்வாறு வாழும் கூட்டத்திலேயே தாய்க்குக் கொடுக்கப்படும் மதிப்பு நம் இந்தியப் பின்புலத்தில் காணவில்லை என்பதுதான்,      நினைவு தெரிந்த நாள் முதல் கொண்டு சுமார் ஒரு கால் நூற்றாண்டு இந்தியாவிலும்  ஒரு கால்நூற்றாண்டு அமெரிக்காவிலும் வாழ்ந்த நான் ஒப்பிட்டு அறிந்து கொண்டிருப்பது. 

என் மகளுக்கு இன்னமும் குழந்தை பிறக்கவில்லை, மகனுக்குத் திருமணம் ஆகவில்லை. இருவரும் கல்வியைத் தொடர்வதால் நான் பேரக்குழந்தைகள் குறித்து இப்பொழுது எதிர்பார்க்கவில்லை.  ஆனால் அந்தக் கட்டத்தில்  மகள்/மருமகள் முடிவுகளில் நான் இடையிடமாட்டேன்.
தங்கள் குழந்தைக்கு எது சிறந்ததென்று  (30 வயதையும்  கடந்து தக்க முடிவெடுக்கும் அறிவு பெற்றவர்களாக  அவர்கள் இருப்பார்கள் என்பது எனது எண்ணம்) அவர்கள்  தாய் என்ற நிலையில் எடுக்கும் முடிவுகள் அவர்கள் உரிமை என்பது எனது நிலைப்பாடாக இருக்கும். 

..... தேமொழி

கண்மணி 

kanmani tamil

unread,
May 4, 2018, 6:01:56 AM5/4/18
to mintamil
///புத்தர் துறவு வாழ்வு மேற்கொள்ளக் குடும்பத்தை விட்டு வெளிநடந்ததை எந்த இயத்தில் வகைப்படுத்திப்  பார்ப்பீர்கள்?
அதற்குக் கூறும் பதிலை  மனநிம்மதி வேண்டி  ஒரு பெண்ணும் தனது குடும்ப வாழ்வில் இருந்து வெளியேறும்  சூழ்நிலைக்கு இணையாக  ஒப்பிடலாம். இந்த  இடத்திலும் ஆண் பெண் எடுக்கும் முடிவை  நான்  ஒருங்கே வைத்துப் பார்க்கிறேன்.///

புத்தர் செய்த தவறை சாக்காகக் காட்டி; பெண்ணியம் என்ற பெயரில் பெண்கள் எல்லோரும் குடும்பத்தை உடைத்தால் அது சரி என்று ஆகி விடாது.
பெண்ணியத்தை குடும்பத்தை உடைப்பதற்கு உரிய கருவியாகப் பயன்படுத்தக் கூடாது.

புத்தர் குடும்பத்தைப் பிரிந்து வெளியேறிய ஆண் என்பது முற்றிலும் உண்மை..... அவர் வேறு பெண்ணைத்  தேடிப்  போகவில்லை; அவரிடம் குடி இல்லை;போதை இல்லை;... நோயைப் பார்த்தார்;இறப்பைப் பார்த்தார்;வயோதிகத்தைப் பார்த்தார்;மனநோய் மிகுந்தது......அமைதியைத் தேடி சீக்கிரமாகவே வனப்பிரஸ்தம் மேற்கொண்டார்......தனக்குப் பிறகு ஆட்சியில் அமர வேண்டிய வாரிசைப் பெற்றுக் கொடுத்த நிம்மதியில் வாழ்க்கையையே விட்டு விலகினார்.மனைவியையும் மகனையும் அவர்களுக்கு உரிமை உடைய அரண்மனையில் விட்டுவிட்டுத் தான் துறந்தார்.
இங்கே பாதிக்கப்பட்ட அவரது மனைவிக்கும் குழந்தைக்கும் ஒரு பிடிமானம் இருந்தது.புத்தர் தான் மட்டும் அரண்மனையில் இருந்துகொண்டு மனைவியையும் மகனையும் ஓட்டி விட்டிருந்தால் அவரைச் சான்றுகாட்டிப் பேசலாம் .
ஒரு மனநோயாளி செய்த தவறை நம் இயலாமைக்குச்  சப்பைக்கட்டு கட்ட துணைக்கு அழைக்கக் கூடாது.     
இங்கே ஓரோர் மனிதர் நாலு குழந்தையோடு மனைவியை நடுத்தெருவில் விட்டுவிட்டு இமயமலைக்கு ஓடிப் போய்விடுகிறார்கள். நாலு சம்ஸ்கிருத சுலோகங்களைக் கற்றுக்கொண்டு நாடெங்கும் பூஜிக்கத்த தக்க சாமியாராக வலம் வருகிறார்கள். இதில் நதிமூலம் ,ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று சொலவடை வேறு.

kanmani tamil

unread,
May 4, 2018, 6:36:09 AM5/4/18
to mintamil
///இங்கே சட்டப்படி குடும்ப விடுப்பு  (maternity leave) மூன்று மாதங்கள். குழந்தை பிறக்கும் நாள் வரை வேலை செய்துவிட்டு, குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு விடுமுறையைப் பயன்படுத்தி தாய்ப்பால் கொடுத்து இரவு, பகல் என்று பராமரித்துவிட்டு, அதற்குப் பிறகு குழந்தை திட உணவு உட்கொள்ளும் காலத்தில் பால் கொடுக்கும் இடைவெளி நீண்ட  பிறகு பணிக்குத் திரும்பும் பெண்களுக்கு இந்தப் பழிச்சொல் தேவைதானா என்பது எனது கேள்வி. ///

மறைந்த முதல்வர் பெண் என்பதாலோ .....என்னவோ கொஞ்சம் பிள்ளை வளர்ப்பதற்கு நல்லது செய்தார்......
 மகப்பேறு விடுப்பை 6மாத காலமாக்கினார். 
  குழந்தை பிறக்கும் நாள்வரை வேலை செய்வது தான் சுகப்பிரசவத்திற்கு நல்லது.
ஆரோக்கியமில்லாத தாய்க்குத்தான் பெட்ரெஸ்ட் தேவை 
தாய்ப்பால் கொடுத்து இரவுபகல் பிள்ளையைப் பராமரிப்பதை சொல்லிக் காட்ட வேண்டிய தேவை என்ன?
அது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டுதானே இருக்கிறது.
எது பழிச்சொல்?
பிள்ளைக்குத் தாய் வேலைக்குச் செல்லுமுன் பால் கொடுத்தால் என்ன என்று கேட்பதா?
ஒருநாள் வேலையிலிருந்து திரும்பி மறுநாள் வேலைக்குச் செல்லும்வரை ஒழுங்காக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை பாலூட்டியிருந்தால் (தூங்கும் நேரம் தவிர) பிள்ளைக்கு தேவையான திட உணவே போதுமானதல்லவா?
இங்கே எல்லாம் அப்படித்தான் நடக்கிறது.
தவிரவும் குழந்தைக்கு தாயின் அரவணைப்புக்கும் பிறரது கையாளலுக்கும் நன்கு வேறுபாடு தெரியும்.
வேலைக்காரி ஊட்டி வளர்க்கும் பிள்ளை வேலைக்காரியிடம் தான் ஒட்டுகிறது என்று இங்கு என்னிடம் நிறையபேர் அழுதிருக்கிறார்கள் .
அறிவியல் சாதனம்(இயந்திரம் ) ஊட்டி வளர்க்கும் பிள்ளை யாரிடம் ஓட்டும்?
அதுவும் இயந்திரத்தன்மை பெற்றுவிடாதா?
இந்தத் தொல்லையிலிருந்து விடுபடத்தான் என் மகன் பிறந்தவுடன் 3ஆண்டுகள் சம்பளமில்லா விடுப்பு எடுத்தேன்.
break of service ஆனாலும் பரவாயில்லை .
4இன்க்ரிமெண்ட் கட் ஆனது.
எடுத்த விடுமுறையில் வீணாக்காமல் பிஹெச் .டி .தொடங்கினேன்.
அரசு குறிப்பிட்ட காலத்திற்கு முன் ஆய்வை  முடித்ததால் நஷ்டமான இன்க்ரிமெண்ட் சரியாகி விட்டது. 
 எனக்கு உங்கள் breast pump பற்றியும் அதை பயன்படுத்தும் முறை பற்றியும் ரொம்பத் தெளிவு இல்லை .
கண்மணி 

kanmani tamil

unread,
May 4, 2018, 7:41:02 AM5/4/18
to mintamil
///ஆனால் அவ்வாறு பார்த்து பார்த்து வளர்த்த  பச்சைக்குழந்தை;   பிறந்த கொஞ்ச நாளுக்குத் தாயை உறங்கவே விடாமல் செய்து, இடைவிடாமல்  அழுது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை படுக்கையை நனைத்து (டையாப்பர் மாற்றி), தாய்ப்பால் கொடுக்கப்பட்டு பார்த்துப் பார்த்து வளர்த்தவர்களின் தாய்கள்தான்  இன்று முதியோர் இல்லத்திலும் விடப்படுகிறார்கள் என்றால்..... 
தாய்கள் பலன் எதிர்பார்க்காமல் கடமைச் செய்தார்கள்/செய்கிறார்கள்.  
அந்தத் தாய் சேய் உறவு என்ன பலனளித்தது என்றும் நாம் வாழும் காலத்திலேயே அறிந்து கொள்ள  நல்ல வாய்ப்பும் கிடைக்கிறது. 
அதனால் அந்த மாயையில் இருந்து விடுபடுவோம்.///

குழந்தை பெற்றால் கொஞ்ச நாளைக்குத் தூக்கம் கெடத்தான் செய்யும்.
இதை இப்போது சொல்லிக் காட்ட வேண்டிய தேவை என்ன?
தாய் சேய் உறவு மாயையா???!!!
தேமொழி ---உங்கள் அம்மாவுக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் உறவு மாயையா?
நீங்களோ உங்கள் உடன்பிறந்தவர்களோ பெற்றோரை சுமையாகக் கருதி ஒதுக்கினீர்களா?
இந்தத் தலைமுறையில் அந்த எண்ணிக்கை மிகுதியாவது கலாச்சாரச் சீரழிவைக் காட்டுகிறது.
தனிக்குடித்தன அவலத்தின் மிச்சம்.
அது சீர்திருத்தப்பட வேண்டிய ஒன்று.
பெண்கள் விவாகரத்து வாங்கி சுதந்திரமாக வெளியேறியவுடன் அந்தச் சிக்கல் தீர்ந்து விடுமா?
நீங்கள் பெண்ணியத்துடன்  பிரச்சினைகளையும் போட்டுக் குழப்புகிறீர்கள்.
கண்மணி  

kanmani tamil

unread,
May 4, 2018, 7:50:56 AM5/4/18
to mintamil
///உங்கள் பேரக்குழந்தைகளோ, உங்கள் குழந்தைகளோ  கூட்டுக் குடும்பத்தில் பாட்டிகள் (கவனிக்கவும் தாத்தாக்கள் அல்ல) கவனிப்பில் பராமரிக்கப்பட வாய்ப்பிருந்திருக்கலாம். ///

ஒன்றுமில்லை தேமொழி ---உங்களுக்கு அனுபவமின்மை 
இன்னும் 10 ஆண்டுகள் கழித்து உங்கள் கொள்கை மாறும்.
அப்போது தனிக்குடித்தனம்  நடத்தினால் கூட --------தாத்தா எப்படி பேரக் குழந்தைகளோடு ஒன்றுவார் என்று புரியும்.
யு.எஸ்.வாழ்க்கை எப்படியோ ?!------இப்போது என் மகன் தனிக்குடித்தனம் தான் ......ஆனாலும் நீங்கள் மேலே சொல்லியிருக்கும் கருத்து அடியோடு தவறு.  
வயோதிகத்தில் இந்த இன்பத்திற்கு மேல் வேறு என்ன வேண்டும்?
அதனால்தான் யு.எஸ்.பெண்ணியம் வேண்டாம் என்கிறேன்.
கண்மணி 

kanmani tamil

unread,
May 4, 2018, 8:01:59 AM5/4/18
to mintamil
///அமெரிக்க வாழ்வு நிலை வேறு.  பள்ளி முடிந்த பின்னர் ஆணோ பெண்ணோ தங்கள் சொந்தக்காலில் நின்று உழைத்து, தனது கல்விச்செலவை தானே ஏற்றுப்படித்து, வேலைக்குச் சென்று, பிற்காலத்திலும் பெற்றெடுத்த பிள்ளைகள் உதவியில் வாழ விரும்பாத மக்களின் கலாச்சாரம்.  
அவ்வாறு வாழும் கூட்டத்திலேயே தாய்க்குக் கொடுக்கப்படும் மதிப்பு நம் இந்தியப் பின்புலத்தில் காணவில்லை என்பதுதான்,      நினைவு தெரிந்த நாள் முதல் கொண்டு சுமார் ஒரு கால் நூற்றாண்டு இந்தியாவிலும்  ஒரு கால்நூற்றாண்டு அமெரிக்காவிலும் வாழ்ந்த நான் ஒப்பிட்டு அறிந்து கொண்டிருப்பது./// 
ஒரு தற்காலிக அலை அடிப்பதை பெரிதுபடுத்துகிறீர்கள்.
ஊடகமும் ,உலகமயமாக்கலும் ,நுகர்வோர் கலாச்சாரமும்  நம் வாழ்க்கை முறையை பாதிக்கின்றன.
அது நிரந்தரமில்லை.
பாட்டி தாத்தா மாணவர் குழு ஒன்றை நானே 4ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வைத்து விட்டுத்தான் ஒய்வு பெற்றேன் .பேரன்கள் பள்ளிகளில் தவறாமல்  ஆண்டுதோறும் நடக்கும்   பாட்டி தாத்தா கூட்டத்திற்குப் போகிறேன்.
நீங்கள் நினைப்பது போல் இந்தியப் பின்புலம் கெட்டு விடவில்லை.
சுருங்கிய உலகத்தில் ஊடகங்களின் தாக்கம் நம்மை பயமுறுத்துகிறது.
அவ்வளவு சீக்கிரத்தில் இந்தப் பண்பாட்டை மாற்றி விட முடியாது........அதனால் தான் யு.எஸ்.பெண்ணியம் வேண்டாம்.
கண்மணி 

செல்வன்

unread,
May 4, 2018, 8:34:48 AM5/4/18
to mintamil

2018-05-04 6:50 GMT-05:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///உங்கள் பேரக்குழந்தைகளோ, உங்கள் குழந்தைகளோ  கூட்டுக் குடும்பத்தில் பாட்டிகள் (கவனிக்கவும் தாத்தாக்கள் அல்ல) கவனிப்பில் பராமரிக்கப்பட வாய்ப்பிருந்திருக்கலாம். ///

ஒன்றுமில்லை தேமொழி ---உங்களுக்கு அனுபவமின்மை 
இன்னும் 10 ஆண்டுகள் கழித்து உங்கள் கொள்கை மாறும்.
அப்போது தனிக்குடித்தனம்  நடத்தினால் கூட --------தாத்தா எப்படி பேரக் குழந்தைகளோடு ஒன்றுவார் என்று புரியும்.
யு.எஸ்.வாழ்க்கை எப்படியோ ?!------இப்போது என் மகன் தனிக்குடித்தனம் தான் ......ஆனாலும் நீங்கள் மேலே சொல்லியிருக்கும் கருத்து அடியோடு தவறு.  
வயோதிகத்தில் இந்த இன்பத்திற்கு மேல் வேறு என்ன வேண்டும்?
அதனால்தான் யு.எஸ்.பெண்ணியம் வேண்டாம் என்கிறேன்.
கண்மணி 

பயனிர் வுமன் எனும் சமையல் கலை நிபுணர் பற்றிய (உண்மை) தொலைகாட்சி நிகழ்ச்சி.

அப்பெண்மணி கணவனுடன் வசிக்கிறார். அவரது தந்தையும், தாயும் விவாகரத்து செய்து ஆளுக்கு இன்னொருவரை கல்யாணம் செய்துகொண்டு வசிக்கிறார்கள். 

அன்னையர் தினத்தன்று அன்னையையும்ம் அன்னையின் கணவர், அன்னையின் குழந்தைகளை அழைத்து தனியாக விருந்து. தந்தையர் தினத்தன்று தந்தையின் குடும்பத்தை அழைத்து விருந்து என சமைத்து பரிமாறும் நிகழ்ச்சியை ஒளீபரப்பினார்கள்.

பெற்ற தாய்,தந்தையை இப்படி பார்க்கவேண்டிய நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது. ஆனால் இதுதான் அமெரிக்க பெண்ணியம்

தேமொழி

unread,
May 4, 2018, 12:57:23 PM5/4/18
to மின்தமிழ்

On Friday, May 4, 2018 at 3:01:56 AM UTC-7, kanmanitamilskc wrote:
///புத்தர் துறவு வாழ்வு மேற்கொள்ளக் குடும்பத்தை விட்டு வெளிநடந்ததை எந்த இயத்தில் வகைப்படுத்திப்  பார்ப்பீர்கள்?
அதற்குக் கூறும் பதிலை  மனநிம்மதி வேண்டி  ஒரு பெண்ணும் தனது குடும்ப வாழ்வில் இருந்து வெளியேறும்  சூழ்நிலைக்கு இணையாக  ஒப்பிடலாம். இந்த  இடத்திலும் ஆண் பெண் எடுக்கும் முடிவை  நான்  ஒருங்கே வைத்துப் பார்க்கிறேன்.///

புத்தர் செய்த தவறை சாக்காகக் காட்டி; பெண்ணியம் என்ற பெயரில் பெண்கள் எல்லோரும் குடும்பத்தை உடைத்தால் அது சரி என்று ஆகி விடாது.
பெண்ணியத்தை குடும்பத்தை உடைப்பதற்கு உரிய கருவியாகப் பயன்படுத்தக் கூடாது.

இங்குதான் கோணம் மாறுபடுகிறது.

நான் குடும்பத்தை உடைப்பதாக வெளியேறுபவர்களைக்  கருதுவதில்லை. 

வாழும் சூழல் ஒத்துவராததால் வெளியேறுகிறார்கள் என்று சொல்கிறேன். அதற்கேற்றவாறு சூழ்நிலையை மாற்றுங்கள் என்று சொல்கிறேன்.

மனதளவில் அல்லது உடலளவில் பாதிப்பு ஏற்பட்டால் எந்த இடத்திலும் பெண்கள் தங்க வேண்டியதில்லை.

முதலில் பெண் ஏன் அந்த நிலைக்குச் செல்கிறாள் என்று காரணம் தேடுங்கள்... நோய் நாடி நோய் முதல் நாடி.... 

அதை விட்டு நீ அங்கேயே இரு  என்ற நிர்ப்பந்தம் செய்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

சூழ்நிலைக்கு ஏன் பெண்ணையே குறை சொல்கிறீர்கள்.

நான் முதலில் பல காரணங்கள் இருக்கும் என்று அவமதிக்கப்படும் சூழல், வன்முறை நிறைந்த குடும்ப வாழ்க்கை என பல மாறுபட்ட கோணங்களையும் காண்பித்தேனே.

எது நேர்ந்தாலும் ஒரு பெண் மனம்புழுங்கிக் கொண்டு வாழ்வது தேவை என்பது ஏன் தோன்றுகிறது? 

புத்தர் குடும்பத்தைப் பிரிந்து வெளியேறிய ஆண் என்பது முற்றிலும் உண்மை..... அவர் வேறு பெண்ணைத்  தேடிப்  போகவில்லை; அவரிடம் குடி இல்லை;போதை இல்லை;... நோயைப் பார்த்தார்;இறப்பைப் பார்த்தார்;வயோதிகத்தைப் பார்த்தார்;மனநோய் மிகுந்தது......அமைதியைத் தேடி சீக்கிரமாகவே வனப்பிரஸ்தம் மேற்கொண்டார்......தனக்குப் பிறகு ஆட்சியில் அமர வேண்டிய வாரிசைப் பெற்றுக் கொடுத்த நிம்மதியில் வாழ்க்கையையே விட்டு விலகினார்.மனைவியையும் மகனையும் அவர்களுக்கு உரிமை உடைய அரண்மனையில் விட்டுவிட்டுத் தான் துறந்தார்.
இங்கே பாதிக்கப்பட்ட அவரது மனைவிக்கும் குழந்தைக்கும் ஒரு பிடிமானம் இருந்தது.புத்தர் தான் மட்டும் அரண்மனையில் இருந்துகொண்டு மனைவியையும் மகனையும் ஓட்டி விட்டிருந்தால் அவரைச் சான்றுகாட்டிப் பேசலாம் .
ஒரு மனநோயாளி செய்த தவறை நம் இயலாமைக்குச்  சப்பைக்கட்டு கட்ட துணைக்கு அழைக்கக் கூடாது.     
இங்கே ஓரோர் மனிதர் நாலு குழந்தையோடு மனைவியை நடுத்தெருவில் விட்டுவிட்டு இமயமலைக்கு ஓடிப் போய்விடுகிறார்கள். நாலு சம்ஸ்கிருத சுலோகங்களைக் கற்றுக்கொண்டு நாடெங்கும் பூஜிக்கத்த தக்க சாமியாராக வலம் வருகிறார்கள். இதில் நதிமூலம் ,ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று சொலவடை வேறு.

புத்தர் ஒரு மனநோயாளியா?

இதற்கு மேல் இதை முன்னெடுத்துச் செல்வது புத்தரை அவமதிக்கும் செயல்.

தேமொழி

unread,
May 4, 2018, 1:22:52 PM5/4/18
to மின்தமிழ்

On Friday, May 4, 2018 at 3:36:09 AM UTC-7, kanmanitamilskc wrote:
///இங்கே சட்டப்படி குடும்ப விடுப்பு  (maternity leave) மூன்று மாதங்கள். குழந்தை பிறக்கும் நாள் வரை வேலை செய்துவிட்டு, குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு விடுமுறையைப் பயன்படுத்தி தாய்ப்பால் கொடுத்து இரவு, பகல் என்று பராமரித்துவிட்டு, அதற்குப் பிறகு குழந்தை திட உணவு உட்கொள்ளும் காலத்தில் பால் கொடுக்கும் இடைவெளி நீண்ட  பிறகு பணிக்குத் திரும்பும் பெண்களுக்கு இந்தப் பழிச்சொல் தேவைதானா என்பது எனது கேள்வி. ///

மறைந்த முதல்வர் பெண் என்பதாலோ .....என்னவோ கொஞ்சம் பிள்ளை வளர்ப்பதற்கு நல்லது செய்தார்......
 மகப்பேறு விடுப்பை 6மாத காலமாக்கினார். 
  குழந்தை பிறக்கும் நாள்வரை வேலை செய்வது தான் சுகப்பிரசவத்திற்கு நல்லது.
ஆரோக்கியமில்லாத தாய்க்குத்தான் பெட்ரெஸ்ட் தேவை 
தாய்ப்பால் கொடுத்து இரவுபகல் பிள்ளையைப் பராமரிப்பதை சொல்லிக் காட்ட வேண்டிய தேவை என்ன?
அது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டுதானே இருக்கிறது.
எது பழிச்சொல்?
பிள்ளைக்குத் தாய் வேலைக்குச் செல்லுமுன் பால் கொடுத்தால் என்ன என்று கேட்பதா?

இது நீங்களாகவே அனுமானம் செய்து முன்னெடுத்துச் செல்வது. யார் சூழ்நிலை  என்ன, அதில் என்ன செய்தார்கள்  என்பது குறித்து அறியாமல் நாமே சொல்லிக் கொண்டிருப்பது தேவையற்றது. 

ஒருநாள் வேலையிலிருந்து திரும்பி மறுநாள் வேலைக்குச் செல்லும்வரை ஒழுங்காக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை பாலூட்டியிருந்தால் (தூங்கும் நேரம் தவிர) பிள்ளைக்கு தேவையான திட உணவே போதுமானதல்லவா?
இங்கே எல்லாம் அப்படித்தான் நடக்கிறது.
தவிரவும் குழந்தைக்கு தாயின் அரவணைப்புக்கும் பிறரது கையாளலுக்கும் நன்கு வேறுபாடு தெரியும்.
வேலைக்காரி ஊட்டி வளர்க்கும் பிள்ளை வேலைக்காரியிடம் தான் ஒட்டுகிறது என்று இங்கு என்னிடம் நிறையபேர் அழுதிருக்கிறார்கள் .
அறிவியல் சாதனம்(இயந்திரம் ) ஊட்டி வளர்க்கும் பிள்ளை யாரிடம் ஓட்டும்?
அதுவும் இயந்திரத்தன்மை பெற்றுவிடாதா?
இந்தத் தொல்லையிலிருந்து விடுபடத்தான் என் மகன் பிறந்தவுடன் 3ஆண்டுகள் சம்பளமில்லா விடுப்பு எடுத்தேன்.
break of service ஆனாலும் பரவாயில்லை .
4இன்க்ரிமெண்ட் கட் ஆனது.
எடுத்த விடுமுறையில் வீணாக்காமல் பிஹெச் .டி .தொடங்கினேன்.
அரசு குறிப்பிட்ட காலத்திற்கு முன் ஆய்வை  முடித்ததால் நஷ்டமான இன்க்ரிமெண்ட் சரியாகி விட்டது. 
 எனக்கு உங்கள் breast pump பற்றியும் அதை பயன்படுத்தும் முறை பற்றியும் ரொம்பத் தெளிவு இல்லை .

கண்மணி, நானும் திருமணம் ஆனதிலிருந்து வேலை செய்ய முடியாமல் இருக்க நேர்ந்த விசா என்ற நிலையில்  இருந்த காலத்தில் இருந்து இளங்கோ பள்ளி செல்லத் துவங்கும் வரை காலத்தை வீணாக்காமல் படித்துக் கொண்டும் குழந்தைகளைப் பராமரித்துக் கொண்டும் அந்த இடைவெளியைக் கடத்தினேன்.  அந்த இடைவெளியில்தான் அமெரிக்காவில் இரண்டு முதுநிலைப்பட்டங்களும் முனைவர் பட்டமும் பெற்றேன். இனி ஆய்வகத்தில் அதிகநேரம் செலவழிக்க வைக்கும் படிப்பு முடியாது என்றுதான் அறிவியல் துறையைக் கைவிட்டு கல்விப்போக்கையும் மேலாண்மை நிர்வாகம் என்ற திசைக்கு மாற்றிக் கொண்டேன்.

ஆனால் நான் எல்லோரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டேன்.
மக்களின் வாழும் சூழ்நிலைகள் வேறு, அவரவரும் அவரவர் சூழ்நிலைக்கு தக்கவாறுதான் தகவகமைத்துக் கொள்ள  முடியும்.இளந்தாய்மார்கள் தேவை பெரும்பாலான மக்களில் இருந்து வேறுபட்டது என்பதால்தான்  அதற்கு இயன்றவரை வசதி வாய்ப்பு சட்டங்கள் உருவாக்குவதைத் தொழில் நுட்ப வளர்ச்சி, அரசாங்க சட்டங்கள் போன்றவை உதவும் நோக்கில் அமைக்கப்படுகின்றன. அதைப் பயன்படுத்த விரும்புவது தனிப்பட்டோர் விருப்பம். 

நீங்கள் ஒரு தலைமுறை பின் சென்று பார்த்தீர்கள் என்றால், நான் எல்லாவற்றையும் அனுசரித்து என் குடும்பத்தைக் கவனித்து வேலை பார்த்தேன், படித்தேன் என்று நீங்கள் சொல்வதைக் குறை சொல்லும் மூதாதையர் இருப்பார்.  அப்படியாவது வேலை பார்க்க படிக்க என்ன தேவை? ஒரு பெண்ணுக்கு குடும்பம்தானே முக்கியம்.  இதையெல்லாம் செய்ய நினைப்பவர் எதற்குத் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளையும் கணவரையும் தொல்லைக்கு உள்ளாக்குகிறார்கள் என்று ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சொல்லும் மனநிலையில் இருந்தார்கள் என்பதை உங்களால் மறுக்க இயலுமா?

பெண்கள் வேலை என்றால் குடும்பத் தொழிலில் உதவி, ஊதியமற்ற  உழைப்பு, வயல் தோட்ட வேலை, நெசவு என்று குடும்பத் தொழிலை ஒட்டி இருந்தது, இல்லை என்றால் வீட்டு வேலைக்காரி என்று இருந்தது.
பிறகு ஆசிரியை, மருத்துவம் (அதுவும் பெண்களுக்கு மகப்பேறு உடல்கூறு நோய்களுக்குப் பெண்களே இருப்பது என்று மருத்துவச்சி போன்ற மனப்பான்மையில்) ஒப்புக் கொண்டார்கள்.  
இன்றைய நிலை வேறு வாழ்வு வேறு. 

தேமொழி

unread,
May 4, 2018, 1:38:28 PM5/4/18
to மின்தமிழ்

On Friday, May 4, 2018 at 4:41:02 AM UTC-7, kanmanitamilskc wrote:
///ஆனால் அவ்வாறு பார்த்து பார்த்து வளர்த்த  பச்சைக்குழந்தை;   பிறந்த கொஞ்ச நாளுக்குத் தாயை உறங்கவே விடாமல் செய்து, இடைவிடாமல்  அழுது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை படுக்கையை நனைத்து (டையாப்பர் மாற்றி), தாய்ப்பால் கொடுக்கப்பட்டு பார்த்துப் பார்த்து வளர்த்தவர்களின் தாய்கள்தான்  இன்று முதியோர் இல்லத்திலும் விடப்படுகிறார்கள் என்றால்..... 
தாய்கள் பலன் எதிர்பார்க்காமல் கடமைச் செய்தார்கள்/செய்கிறார்கள்.  
அந்தத் தாய் சேய் உறவு என்ன பலனளித்தது என்றும் நாம் வாழும் காலத்திலேயே அறிந்து கொள்ள  நல்ல வாய்ப்பும் கிடைக்கிறது. 
அதனால் அந்த மாயையில் இருந்து விடுபடுவோம்.///

குழந்தை பெற்றால் கொஞ்ச நாளைக்குத் தூக்கம் கெடத்தான் செய்யும்.
இதை இப்போது சொல்லிக் காட்ட வேண்டிய தேவை என்ன?
தாய் சேய் உறவு மாயையா???!!!

அதுசரி, பாலூட்டும் முறை மாறினாலே குழந்தை தாய் சேய்  உறவு தொலைந்தது, பிணைப்பு போனது, பந்த பாசம் அறுந்தது  என்று நானா சொன்னேன்?

அதற்காகத்தான் ஒரு தாய் ஒரு குழந்தையை வளர்க்க மேலும் செய்யும் கடமைகளையும் காட்டினேன். 

இப்படித்தான் மைக்ரோவேவ் கொண்டு சமைத்துக் கொடுத்தால் பிள்ளைகளுக்குப் பாசம் வராது என்று மற்றொருவர் சொன்னார்.

அந்த அளவு தாய் சேய்  உறவு என்று பெரிது படுத்திப் பேசும் நிலையின் முடிவு போற்றத்தக்கதாக சில இடங்களில் இல்லை என்பதை முதியோர் இல்லங்கள் சொல்லும்.

நானென்ன சொல்லத் தேவை?

தேமொழி ---உங்கள் அம்மாவுக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் உறவு மாயையா?
நீங்களோ உங்கள் உடன்பிறந்தவர்களோ பெற்றோரை சுமையாகக் கருதி ஒதுக்கினீர்களா?
இந்தத் தலைமுறையில் அந்த எண்ணிக்கை மிகுதியாவது கலாச்சாரச் சீரழிவைக் காட்டுகிறது.
தனிக்குடித்தன அவலத்தின் மிச்சம்.

தனிக்குடித்தனம் என்பது பண்டைய தமிழர் வழக்கம். சிலம்பு படித்த உங்களுக்கு நான் சுட்டிக்காட்டும் தேவையா?

அது சீர்திருத்தப்பட வேண்டிய ஒன்று.
பெண்கள் விவாகரத்து வாங்கி சுதந்திரமாக வெளியேறியவுடன் அந்தச் சிக்கல் தீர்ந்து விடுமா?
நீங்கள் பெண்ணியத்துடன்  பிரச்சினைகளையும் போட்டுக் குழப்புகிறீர்கள்.

இல்லை நீங்கள்தான் குழப்புகிறீர்கள்.  பிடிக்காத சூழ்நிலையில் எந்த உயிரினமும் இருக்காது, வேறிடத்தில் சென்றால் பிரச்சனை தீருமா என்பது வேறு விவாதம்.  

ஒரு நிகழ்ச்சி கேள்விப்பட்டேன்.  இஸ்லாம் என்று நினைவு.  மணவிலக்கு  கேட்ட பெண்ணை ஒரு அறையில் தண்டனை போல அடைத்து வைத்து மனம்மாற அவகாசம் கொடுத்தாராம் நீதிபதி, வெளிவரும் நாளில் மனம் மாறியதா என்று பெண்ணைக் கேட்டாராம். அந்தப் பெண் இன்னமும் கொஞ்சம் தண்டனையை நீட்டுங்கள், இங்குதான் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்றாராம்.  உடனே பெண்ணின் மனநிலை புரிந்து மணவிலக்கு கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாம்.  

..... தேமொழி 
 
கண்மணி  

தேமொழி

unread,
May 4, 2018, 1:49:16 PM5/4/18
to மின்தமிழ்

On Friday, May 4, 2018 at 4:50:56 AM UTC-7, kanmanitamilskc wrote:
///உங்கள் பேரக்குழந்தைகளோ, உங்கள் குழந்தைகளோ  கூட்டுக் குடும்பத்தில் பாட்டிகள் (கவனிக்கவும் தாத்தாக்கள் அல்ல) கவனிப்பில் பராமரிக்கப்பட வாய்ப்பிருந்திருக்கலாம். ///

ஒன்றுமில்லை தேமொழி ---உங்களுக்கு அனுபவமின்மை 
இன்னும் 10 ஆண்டுகள் கழித்து உங்கள் கொள்கை மாறும்.
அப்போது தனிக்குடித்தனம்  நடத்தினால் கூட --------தாத்தா எப்படி பேரக் குழந்தைகளோடு ஒன்றுவார் என்று புரியும்.
யு.எஸ்.வாழ்க்கை எப்படியோ ?!------இப்போது என் மகன் தனிக்குடித்தனம் தான் ......ஆனாலும் நீங்கள் மேலே சொல்லியிருக்கும் கருத்து அடியோடு தவறு.  
வயோதிகத்தில் இந்த இன்பத்திற்கு மேல் வேறு என்ன வேண்டும்?
அதனால்தான் யு.எஸ்.பெண்ணியம் வேண்டாம் என்கிறேன்.

தாத்தாக்கள் பாட்டிகள் எல்லோரும் பேரக்குழந்தைகளுடன் அன்புடன் நடப்பார்கள் என்பதற்கும், அமெரிக்க பெண்ணியத்திற்கும் என்னதான் தொடர்பு? 

முதலில் அமெரிக்க பெண்ணியம் என்றால் என்ன?

இங்கும் தேவை ஏற்படும் காலங்களில் பெற்றோருடன் இருக்கும் வளர்ந்த பிள்ளைகளும், முதுமையான நிலையில் இருக்கும் பெற்றோர் பிள்ளைகளுடன் வசிக்கும் வாழ்க்கை முறையும்தான் இருக்கிறது.  சென்ற டிப்ரெசஷன்  சமயம் இது அதிகரித்தது. பெண்கள் என்ன எல்லோரையும் அடித்தா துரத்துகிறார்கள்? 

நான் வளர்ந்த காலத்திலேயே தாத்தாவோ பாட்டியோ எங்களுடன் தொடர்ந்து இருந்ததில்லை.  ஒவ்வொரு பிள்ளை வீட்டிலும் கொஞ்ச நாள் இருப்பார்கள், பிறகு அவர்களுக்கு எங்களைவிட தங்கள் கிராமத்து வழக்கையும் சுற்றமும்தான் சிறப்பு எனத் தோன்றும்.  வந்து சிலவாரங்களில் இந்த ஃபேன் காத்து உடலுக்குச் சூடு போன்ற விளங்கிக் கொள்ள முடியா காரணங்களைக் கூறி விடைபெற்றுப் போய்விடுவார்கள்.  

..... தேமொழி

கண்மணி 

தேமொழி

unread,
May 4, 2018, 2:00:16 PM5/4/18
to mint...@googlegroups.com

On Friday, May 4, 2018 at 5:01:59 AM UTC-7, kanmanitamilskc wrote:
///அமெரிக்க வாழ்வு நிலை வேறு.  பள்ளி முடிந்த பின்னர் ஆணோ பெண்ணோ தங்கள் சொந்தக்காலில் நின்று உழைத்து, தனது கல்விச்செலவை தானே ஏற்றுப்படித்து, வேலைக்குச் சென்று, பிற்காலத்திலும் பெற்றெடுத்த பிள்ளைகள் உதவியில் வாழ விரும்பாத மக்களின் கலாச்சாரம்.  
அவ்வாறு வாழும் கூட்டத்திலேயே தாய்க்குக் கொடுக்கப்படும் மதிப்பு நம் இந்தியப் பின்புலத்தில் காணவில்லை என்பதுதான்,      நினைவு தெரிந்த நாள் முதல் கொண்டு சுமார் ஒரு கால் நூற்றாண்டு இந்தியாவிலும்  ஒரு கால்நூற்றாண்டு அமெரிக்காவிலும் வாழ்ந்த நான் ஒப்பிட்டு அறிந்து கொண்டிருப்பது./// 
ஒரு தற்காலிக அலை அடிப்பதை பெரிதுபடுத்துகிறீர்கள்.
ஊடகமும் ,உலகமயமாக்கலும் ,நுகர்வோர் கலாச்சாரமும்  நம் வாழ்க்கை முறையை பாதிக்கின்றன.
அது நிரந்தரமில்லை.

ஆமாம், உலகம் மாறிக்கொண்டேதான் இருக்கும். அதற்கேற்ப மாறுவதுதான் மனித வாழ்க்கை. 
பிள்ளைகள் படித்தால் வேலைத் தேவைக்காக வெளிநாட்டிற்கும் போவார்கள். வெளிநாடோ உள்நாடு  அவர்கள் போகுமிடமெல்லாம்  பெற்றோரும் போய் தங்க முடியாது என்பது காலம் தந்த மாற்றம். 

பாட்டி தாத்தா மாணவர் குழு ஒன்றை நானே 4ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வைத்து விட்டுத்தான் ஒய்வு பெற்றேன் .பேரன்கள் பள்ளிகளில் தவறாமல்  ஆண்டுதோறும் நடக்கும்   பாட்டி தாத்தா கூட்டத்திற்குப் போகிறேன்.
நீங்கள் நினைப்பது போல் இந்தியப் பின்புலம் கெட்டு விடவில்லை.
சுருங்கிய உலகத்தில் ஊடகங்களின் தாக்கம் நம்மை பயமுறுத்துகிறது.
அவ்வளவு சீக்கிரத்தில் இந்தப் பண்பாட்டை மாற்றி விட முடியாது........அதனால் தான் யு.எஸ்.பெண்ணியம் வேண்டாம்.

மீண்டும் அமெரிக்க பெண்ணியம் ?  
இந்தியாவில் வீட்டிற்கு வெளியில் வேலை பார்க்கும் பெண்கள் என்ற நிலை மாறுதல்  அமெரிக்க பெண்ணியத்தைப் பின்பற்றுவதா ?
பெண் தனது காலில் நின்று  படித்து உழைத்து, தனது வாழும் வாழ்க்கை முறையை மனம் விரும்பியபடி அமைத்துக் கொள்வது தேவையில்லை என்று சொல்கிறீர்களா?
பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்பதை துணைப்பாடநூலாக தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளியில் வைக்கத் தேவை என நான் பலமுறை சொல்லிக்கொண்டிருப்பது மீண்டும் நினைவு வருகிறது. 

..... தேமொழி

கண்மணி 

தேமொழி

unread,
May 4, 2018, 2:06:21 PM5/4/18
to மின்தமிழ்
///பெற்ற தாய்,தந்தையை இப்படி பார்க்கவேண்டிய நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது. ஆனால் இதுதான் அமெரிக்க பெண்ணியம்/// 

தாய் வேறொருவரை மணந்து கொள்கிறார் சரி.  அதாவது கல் புல்  என்று கூறிக்கொண்டு ஒரு புருசன் பின்னால் போகாமல் வேறொரு புருசன்  பின் போனார் என்கிறீர்கள், இதை அமெரிக்கப் பெண்ணியம் என்றும் சொல்கிறீர்கள் சரி. புரிந்து கொள்ள முயல்கிறேன்.

தந்தையும்  வேறொருவரை மணந்து கொள்கிறார்  சரி. இதைப் பார்த்து வருத்தப்படும் பொழுது, அந்தத் துக்கத்தைப் பொருட்படுத்தாமல் இந்தத் தந்தையின் மறுமணம் எப்படி அமெரிக்க பெண்ணியத்தின் கீழ் வருகிறது என்றும் எனக்கு விளக்கவும்  

செல்வன்

unread,
May 4, 2018, 5:12:09 PM5/4/18
to mintamil
2018-05-04 13:06 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

///பெற்ற தாய்,தந்தையை இப்படி பார்க்கவேண்டிய நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது. ஆனால் இதுதான் அமெரிக்க பெண்ணியம்/// 

தாய் வேறொருவரை மணந்து கொள்கிறார் சரி.  அதாவது கல் புல்  என்று கூறிக்கொண்டு ஒரு புருசன் பின்னால் போகாமல் வேறொரு புருசன்  பின் போனார் என்கிறீர்கள், இதை அமெரிக்கப் பெண்ணியம் என்றும் சொல்கிறீர்கள் சரி. புரிந்து கொள்ள முயல்கிறேன்.

தந்தையும்  வேறொருவரை மணந்து கொள்கிறார்  சரி. இதைப் பார்த்து வருத்தப்படும் பொழுது, அந்தத் துக்கத்தைப் பொருட்படுத்தாமல் இந்தத் தந்தையின் மறுமணம் எப்படி அமெரிக்க பெண்ணியத்தின் கீழ் வருகிறது என்றும் எனக்கு விளக்கவும்  

மறுமணம் செய்வதை நான் குறைகூறவில்லை.

ஆனால் அமெரிக்க குழந்தைகள் தன்னை பெற்ற தாய், தந்தையுடன் வாழும் விகிதம் மிக குறைந்துவிட்டது.

சராசரி அமெரிக்க திருமணத்தில் ஆயுள் 7 ஆன்டுகள் மட்டுமே

இரண்டில் ஒரு திருமணம் தோல்வியுறுகிறது

13 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளில் 50% குழந்தைகள் தாயின் காதலர்/கணவருடன் தான் வாழ்கிறார்கள்.

இப்படி அபூர்வமாக நடக்கவேண்டிய ஒரு விசயம் ஒரு வழக்கமாக ஆகிவிட்டதையே நான் குறைகூறுகிறேன்

பெற்ற தாய் தந்தையுடன் வசிக்காது வளர்ப்புதந்தை/ தாயுடன் வசிப்பது 13 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு பல உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதற்கான காரணம்:

பெண்ணிய இயக்கங்கள் முன்னெடுத்த ப்ரி செக்ஸ் கலாசாரம். இதை தட்டிகேட்ட கன்சர்வேடிவ்களை "பழைய பஞ்சாங்கம்" என இகழ்ந்தார்கள். பாலியல் சுதந்திரம் திரைப்படங்கள், ஊடகங்களில் போற்றபட்டது. திருமணத்துக்கு முன் 10 பார்டனரை ஆணும், பெண்ணும் மாற்றுவதால் திருமணம் ஆனபின்னும் அப்படி மாற்ற தயங்குவதில்லை.

கல்யாணத்துக்கு முன் செக்ஸ், பிள்ளை பெற்றுக்கொள்வது ஊக்குவிக்கபட்டது. இதனால் லிவிங் டெஉகதர் கலாசாரம் பரவி திருமண விகிதம் குறைந்து, திருமணம் என்ற அமைப்பு இன்றி குடும்பங்கள் பிரிவது மிக எளிதான விசயமாக ஆகிவிட்டது.

இந்த நிலைதான் இந்தியாவுக்கு வரகூடாது என்கிறேன்

  • Only 45 percent of children "do well" after divorce.
  • 41% are doing poorly, worried, underachieving, deprecating, and often angry.
  • Fifty percent of the women and 30 percent of the men were still intensely angry with their former spouses.
  • "Most felt the lack of a template, a working model, for a loving relationship between a man and a woman."
  • Divorced parents provide less time, less discipline, and are less sensitive to the children as they are caught up in their own divorce and its aftermath.
  • Many parents are unable to separate their needs from the children's needs and often share too much of their personal life with their children, placing the children in a precarious emotional state, vulnerable to grandiosity or to depression within what is left of their families.
  • The majority of parents of divorce are chronically disorganized and unable to parent effectively.
  • As diminished parenting continues, it permanently disrupts the child's once normal emotional growth and functioning.

செல்வன்

unread,
May 4, 2018, 5:25:57 PM5/4/18
to mintamil
கற்புநெறி உள்ள இந்திய சமூகத்தில் ஒரு 10% ஆண்கள் ஒழுக்கம் கெட்டு திரிந்தாலும் தாம் செய்வது தவறு, வெளியே தெரியகூடாது, தெரிந்தால் மானம் போய்விடும் என அஞ்சியே வாழ்ந்தார்கள். விசயம் வெளியே தெரிந்தால் அவர்களை அவர்களது தாய், தந்தை, உறவினர்கள் என ஒரு பெரிய கூட்டமே கண்டித்து திருத்த தயாராக இருந்தது

90% ஆண்களும் , 99% பெண்களும் ஒழுக்கமாகவே வாழ்ந்தார்கள். ஒழுக்கமாக குடிக்காத, சிகரெட் பிடிக்காத, ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் ஆண்கள் பலகோடி

ஆனால் இந்த 10% நெறிதவறிய ஆண்களை முன்னுதாரணமாக காட்டி "ஆண்களுக்கு கற்பு இல்லை, ஒழுக்கம் இல்லை. அதனால் பெண்களும் அப்படி இருப்பதுதான் பாலியல் சுதந்திரம். கற்பு என்பது கட்டுமிராண்டி கோட்பாடு" என பிரச்சாரம் செய்து அமெரிக்காவில் பள்ளி மானவிகள் கூட ஆணுறையுடன் பள்ளிக்கு போகும் நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

இந்தியாவுக்கும் அதே நச்சு கலாசாரம் இப்போது பாலியல் சுதந்திரம் எனும் பெயரில் இறக்குமதி ஆகிறது

ஆண்கள் குடிக்கிரார்கள், பெண்கள் ஏன் குடிக்ககூடாது, ஆண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள், பெண்கள் ஏன் பிடிக்ககூடாது என ஏட்டிக்கு போட்டி பெண்ணியமாக மாறி ஆண்கள் செய்யும் தவறுகளை பெண்களும் செய்வதுதான் பெண்ணியம், அதை தட்டி கேட்பவன் பழைய பஞ்சாங்கம் ஆணாதிக்கவாதி என்ற நிலை வந்துள்ளது.

--

செல்வன்

தேமொழி

unread,
May 4, 2018, 5:36:05 PM5/4/18
to மின்தமிழ்
சுருக்கமாக...கண்மணி கோணத்தில் போகிறீர்கள் ....

"பெற்றோர்  மணவிலக்கு பெறுவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்" என்பது மையக் கருத்து.

அதாவது பெற்ற குழந்தையுடன்; அம்மாவும் அப்பாவும் இணைந்து அவர்களை வளர்க்க வேண்டும் 
(திருமணம்/அல்லது புரிந்து கொண்ட ஒரு உடன்பாடு அது அவரவர் விருப்பம்) 
என்பது வேண்டப்படுவது.

அவரவர் பிள்ளை அவரவர் பொறுப்புதான்,  குழந்தைகளின் எதிர்காலமும் பெற்றோர் பொறுப்புதான்.  

இதுவரை யாருக்கும் கருத்து வேறுபாடில்லை.

இவ்வாறு இருவரும் பொறுப்பேற்கவேண்டும் என்று சொல்வதைவிட்டு இதற்குப் பெண்ணியத்தை இடையில் நுழைக்க என்ன தேவை.

இதற்கு ஏன்  குறிப்பாக  பெண்களைச் சுட்டுகிறீர்கள்? 

அந்த அப்பாவின் மறுமணத்திற்கு பெண்ணியத்தைக் காரணம் சொன்னதை இன்னமும்  விவரிக்கவில்லையே ...

தேமொழி

unread,
May 4, 2018, 5:37:12 PM5/4/18
to மின்தமிழ்
பாலியல் சுதந்திரத்திற்கும் தனது குழந்தையை வளர்க்கும் கடமையைச் செய்வதற்கும் என்ன தொடர்பு.

குடிப்பது எல்லாம் ஒளவை காலத்திலேயே இருந்ததே, களவு நெறி என்பதும்தான் தமிழகத்தில் இருந்ததே.

இதை ஏன் இறக்குமதி என்கிறீர்கள். 

செல்வன்

unread,
May 4, 2018, 5:48:48 PM5/4/18
to mintamil
2018-05-04 16:36 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
சுருக்கமாக...கண்மணி கோணத்தில் போகிறீர்கள் ....

"பெற்றோர்  மணவிலக்கு பெறுவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்" என்பது மையக் கருத்து.

அதாவது பெற்ற குழந்தையுடன்; அம்மாவும் அப்பாவும் இணைந்து அவர்களை வளர்க்க வேண்டும் 
(திருமணம்/அல்லது புரிந்து கொண்ட ஒரு உடன்பாடு அது அவரவர் விருப்பம்) 
என்பது வேண்டப்படுவது.

அவரவர் பிள்ளை அவரவர் பொறுப்புதான்,  குழந்தைகளின் எதிர்காலமும் பெற்றோர் பொறுப்புதான்.  

இதுவரை யாருக்கும் கருத்து வேறுபாடில்லை.

இவ்வாறு இருவரும் பொறுப்பேற்கவேண்டும் என்று சொல்வதைவிட்டு இதற்குப் பெண்ணியத்தை இடையில் நுழைக்க என்ன தேவை.

இதற்கு ஏன்  குறிப்பாக  பெண்களைச் சுட்டுகிறீர்கள்? 

அந்த அப்பாவின் மறுமணத்திற்கு பெண்ணியத்தைக் காரணம் சொன்னதை இன்னமும்  விவரிக்கவில்லையே ...

இதற்கு பாலியல் சுதந்திரம் கோட்பாடு எப்படி காரணமாக இருந்தது என விளக்கியுள்ளதை படிக்கவில்லை போலும். 

--

செல்வன்

செல்வன்

unread,
May 4, 2018, 5:52:48 PM5/4/18
to mintamil
2018-05-04 16:37 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பாலியல் சுதந்திரத்திற்கும் தனது குழந்தையை வளர்க்கும் கடமையைச் செய்வதற்கும் என்ன தொடர்பு.

குடிப்பது எல்லாம் ஒளவை காலத்திலேயே இருந்ததே, களவு நெறி என்பதும்தான் தமிழகத்தில் இருந்ததே.

இதை ஏன் இறக்குமதி என்கிறீர்கள். 

அவ்வை காலத்தில் இந்த அளவு குடிப்பழக்கம் இல்லை. அக்கால கள்ளில் இந்த அளவு போதை ஏறாது.

சங்ககாலத்தில் இருந்த களவுமுறை வேறு, அக்கால பெண்கள் தாம் திருமணம் செய்யபோகும் ஆணுடனே களவில் ஈடுபட்டனர். கட்டற்ற பாலியல் சுதந்திரம் எனும் கோட்பாடு அன்று இல்லை. அந்த ஆண் தன்னை விட்டு வெளியூர் போனால் வேறு மணம் செய்துகொள்ளாமல் அவனை நினைத்தே வாழ்ந்தார்கள். சங்ககால தமிழ்பெண்களின் ஒழுக்க முறை மேலைநாட்டு பெண்ணீயம் கூறும் ப்ரிசெக்ஸ் கோட்பாடு சீர்கேட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது 

--

செல்வன்

தேமொழி

unread,
May 4, 2018, 5:53:57 PM5/4/18
to மின்தமிழ்
விளங்கவில்லை மீண்டும் விளக்குங்கள்,  பாலியல் சுதந்திரத்திற்கும் பெண்ணியத்திற்கும் என்ன தொடர்பு?

--

செல்வன்

செல்வன்

unread,
May 4, 2018, 5:59:23 PM5/4/18
to mintamil
2018-05-04 16:53 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

விளங்கவில்லை மீண்டும் விளக்குங்கள்,  பாலியல் சுதந்திரத்திற்கும் பெண்ணியத்திற்கும் என்ன தொடர்பு?

பாலியல் சுதந்திரத்தை முன்னெடுத்ததே  பெண்ணிய இயக்கங்கள் தான்

விக்கிபிடியாவில் விளக்கமான கட்டுரை உள்ளது

Coinciding with second-wave feminism and the women's liberation movement initiated in the early 1960s, the sexual liberation movement was aided by feminist ideologues in their mutual struggle to challenge traditional ideas regarding female sexuality and queer sexuality.

The feminist movements insisted and focused on the sexual liberation for women, both physical and psychological. The pursuit of sexual pleasure for women was the core ideology, which subsequently was to set the foundation for female independence.

--

செல்வன்

தேமொழி

unread,
May 4, 2018, 6:37:39 PM5/4/18
to மின்தமிழ்
மீண்டும்.... ஒரு முறை முயல்வேன் ... கோனார் நோட்ஸ் எழுதுவதில் எனக்குத் திறமை இல்லை என்பது எனது பொறுப்புத் துறப்பு நிலைமை 

ஒரு அப்பாவும் அம்மாவும் மணவிலக்கு பெறுகிறார்கள்.  

அந்த அம்மா பிறகு மறுமணம் செய்கிறார்.  
காரணம்:   இந்தக் கொடுமைக்கெல்லாம்  காரணம் "அமெரிக்கப்" பெண்ணியம்தான்...

அந்த அப்பாவும் மறுமணம் செய்கிறார் .
காரணம்:  இந்தக் கொடுமைக்குக் காரணமும்கூட  "அமெரிக்கப்" பெண்ணியம்தான்...
எப்படி ?   விளக்குக.

தேமொழி

unread,
May 4, 2018, 6:38:22 PM5/4/18
to மின்தமிழ்
நன்றி...இருந்தது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.  

--

செல்வன்

செல்வன்

unread,
May 4, 2018, 7:30:45 PM5/4/18
to mint...@googlegroups.com
On Fri, May 4, 2018 at 5:37 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
மீண்டும்.... ஒரு முறை முயல்வேன் ... கோனார் நோட்ஸ் எழுதுவதில் எனக்குத் திறமை இல்லை என்பது எனது பொறுப்புத் துறப்பு நிலைமை 

ஒரு அப்பாவும் அம்மாவும் மணவிலக்கு பெறுகிறார்கள்.  

அந்த அம்மா பிறகு மறுமணம் செய்கிறார்.  
காரணம்:   இந்தக் கொடுமைக்கெல்லாம்  காரணம் "அமெரிக்கப்" பெண்ணியம்தான்...

அந்த அப்பாவும் மறுமணம் செய்கிறார் .
காரணம்:  இந்தக் கொடுமைக்குக் காரணமும்கூட  "அமெரிக்கப்" பெண்ணியம்தான்...
எப்படி ?   விளக்குக.

இதற்கு அமெரிக்க பெண்ணியவாதிகள் முன்னெடுத்த ப்ரி செக்ஸ் கலாசரம் தான் காரணம் என முந்தைய மடல்களில் விளக்கபட்டுள்ளது

On Friday, May 4, 2018 at 2:59:23 PM UTC-7, செல்வன் wrote:

2018-05-04 16:53 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

விளங்கவில்லை மீண்டும் விளக்குங்கள்,  பாலியல் சுதந்திரத்திற்கும் பெண்ணியத்திற்கும் என்ன தொடர்பு?

பாலியல் சுதந்திரத்தை முன்னெடுத்ததே  பெண்ணிய இயக்கங்கள் தான்

விக்கிபிடியாவில் விளக்கமான கட்டுரை உள்ளது

Coinciding with second-wave feminism and the women's liberation movement initiated in the early 1960s, the sexual liberation movement was aided by feminist ideologues in their mutual struggle to challenge traditional ideas regarding female sexuality and queer sexuality.

The feminist movements insisted and focused on the sexual liberation for women, both physical and psychological. The pursuit of sexual pleasure for women was the core ideology, which subsequently was to set the foundation for female independence.

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
May 4, 2018, 10:55:39 PM5/4/18
to மின்தமிழ்

On Friday, May 4, 2018 at 4:30:45 PM UTC-7, செல்வன் wrote:

On Fri, May 4, 2018 at 5:37 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
மீண்டும்.... ஒரு முறை முயல்வேன் ... கோனார் நோட்ஸ் எழுதுவதில் எனக்குத் திறமை இல்லை என்பது எனது பொறுப்புத் துறப்பு நிலைமை 

ஒரு அப்பாவும் அம்மாவும் மணவிலக்கு பெறுகிறார்கள்.  

அந்த அம்மா பிறகு மறுமணம் செய்கிறார்.  
காரணம்:   இந்தக் கொடுமைக்கெல்லாம்  காரணம் "அமெரிக்கப்" பெண்ணியம்தான்...

அந்த அப்பாவும் மறுமணம் செய்கிறார் .
காரணம்:  இந்தக் கொடுமைக்குக் காரணமும்கூட  "அமெரிக்கப்" பெண்ணியம்தான்...
எப்படி ?   விளக்குக.

இதற்கு அமெரிக்க பெண்ணியவாதிகள் முன்னெடுத்த ப்ரி செக்ஸ் கலாசரம் தான் காரணம் என முந்தைய மடல்களில் விளக்கபட்டுள்ளது

எனக்கென்னவோ கீழுள்ள முறை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது.

On Wednesday, May 2, 2018 at 5:33:47 PM UTC-7, செல்வன் wrote:

ஜென்டர் டிப்ரன்ஸ் எதுவும் இதில் கிடையாது. குந்தியை கணவனே பிற ஆண்களிடன் அனுப்பி பிள்ளை பெற வைக்கிறான். அவள் கற்புடையவளாக தான் கருதபட்டாள். ஐவரை மணந்த திருவுபதியும் பத்தினி தெய்வமாகவே வழிபடபடுகிராள்.
 
On Friday, May 4, 2018 at 2:59:23 PM UTC-7, செல்வன் wrote:

2018-05-04 16:53 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

விளங்கவில்லை மீண்டும் விளக்குங்கள்,  பாலியல் சுதந்திரத்திற்கும் பெண்ணியத்திற்கும் என்ன தொடர்பு?

பாலியல் சுதந்திரத்தை முன்னெடுத்ததே  பெண்ணிய இயக்கங்கள் தான்

விக்கிபிடியாவில் விளக்கமான கட்டுரை உள்ளது

Coinciding with second-wave feminism and the women's liberation movement initiated in the early 1960s, the sexual liberation movement was aided by feminist ideologues in their mutual struggle to challenge traditional ideas regarding female sexuality and queer sexuality.

The feminist movements insisted and focused on the sexual liberation for women, both physical and psychological. The pursuit of sexual pleasure for women was the core ideology, which subsequently was to set the foundation for female independence.

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

kanmani tamil

unread,
May 5, 2018, 2:21:29 AM5/5/18
to mintamil
தேமொழி முன்னே நடந்த மடலாடல்களிலிருந்து நான் புரிந்து கொண்டது :
                                                                                                                                             யு.எஸ். பெண்ணியம் என்ற தொடர் உங்களுக்குத் பிடிக்கவில்லை.
                                                                                                                                             ஒரு குடும்பச்சிக்கலை மனைவி கோணத்தில் இருந்து பார்க்கிறீர்கள் /கணவன்                                                                                                                                                                                                                                            கோணத்திலிருந்து பார்க்கிறீர்கள் 
ஏற்கெனவே பெண்ணியம் பற்றிய எனது கொள்கையைக் கேட்டிருந்தீர்கள் ;நானும்சொல்லியிருந்தேன்.
வருங்கால சந்ததிக்கு ஊறு  நிகழாத வகையில் செயல்படும் பெண்ணியம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது .அதனால் தான் கணவன் மனைவி பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் கூட குழந்தை குறுக்கே வருகிறது.
அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்கு எது நல்லதோ அதை சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய கடமை பெற்றோர் இருவருக்கும் உண்டு. இதைத்தான் பாரம்பரியம் /பண்பாடு என்று சொல்கிறோம்.
நான் சிறுமியாக இருந்த காலத்தில் பாட்டிமார் பேசக் கேட்டிருக்கிறேன்.யாராவது புதிதாகத் திருமணம் ஆன பெண்ணைப் பற்றிப் பேசினால் அவர்களுக்குள் எழும் முதல் கேள்வி "உண்டாயிட்டாளா? சும்மா தான் இருக்காளா?" என்பது தான்...... ஒரு பெண் குழந்தைப்பேறு அடைந்து விட்டால் அவளது குடித்தனத்தில் என்ன பிரச்சினை வந்தாலும் அங்கே இணைக்கும்பாலமாகக் குழந்தை இருக்கும் என்னும் விளக்கமும் தெளிவும் நான் முதிர்ச்சி அடைந்த பிறகு தான் எனக்குப்   புரிந்தது .நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சமூகத்தில் இது தான் ஆண்டாண்டு காலமாகப் போற்றப்படும் விழுமியம்/மதிப்பீடு .இதைத் தான் பெண்ணியத்திற்கும் அடிப்படை ஆதாரமாக/அஸ்திவாரமாக நான் கருதுகிறேன். இந்த கோட்பாட்டு  வானத்தை மெத்திக் கட்டப்படும் கட்டிடம் தான் நிலையாக,வலுவாக இருக்கும் .

இதிலிருந்து மாறுபட்ட கோணத்தை நீங்கள் கூறிய போது அதை  யு,எஸ்.பெண்ணியம் என்றேன்.அந்தத் தொடர் பிடிக்கவில்லை என்றால் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.வேறு என்ன பெயர் நீங்கள் கொடுத்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.

பெண்ணியம் உலகம் முழுமைக்கும் பொது...........ஒத்துக்கொள்ள வேண்டிய கருத்து............ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் போது சூழ்நிலைக்கும் பண்பாட்டுப் பின்னணிக்கும்  ஏற்ப அது மாற்றமடைகிறது..........அதனால் தான் வேறு பெயர்கள் தேவைப்படுகின்றன.

பேசுகின்ற பெண்ணியம் ஏட்டளவில் இருக்கும்........வலுவற்றதாகும்..... வேற்று ஆரவாரமாகி விடக்கூடும் .
செயல்படும் பெண்ணியம் தான் உயிரோட்டமுடையது.
தமிழகப் பெண்ணியம் என்ற தொடருக்கு நேரான அமெரிக்க இயக்கத்திற்கு என்ன பெயர் ?சொல்லுங்கள் ;அதையே பயன்படுத்துகிறேன்.நீங்கள் தான் சரியான ஆள்;25 ஆண்டுக்காலம் தமிழகத்தில் .....இன்னோரு 25 ஆண்டுக்காலம் யு.எஸ்.இல்.....

செல்வன் அவர்கள் தன் மனதைப் பாதித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து ஒரு நிஜமான சான்றாதாரம் காட்டினார்..........அவரது ஆதங்கத்தின் காரணம் அங்கே குழந்தையின் மன ஆரோக்கியம் பற்றியோ ; மகிழ்ச்சி பற்றியோ ;நிறைவு பற்றியோ பெற்றோர் இருவரும் நினைத்துப் பார்க்கவில்லை. வாழ்க்கை முழுவதும்; அந்தக் குழந்தைக்கு எத்தனை வயதானாலும் ; எவ்வளவு சம்பாதித்தாலும் ;எவ்வளவு உயரே உயரே பறந்தாலும் -----------நிரப்பப்படாத பள்ளமாக அந்த சோகமும் ஏக்கமும் இருக்கும்.

நீங்கள் உங்கள் பாலிசிக்கேற்ப வெற்றி பெற்ற சான்றாதாரம் காட்டுங்கள் -----------case study
நான் ரசித்த வெற்றிகரமான பெண்ணியவாதியை ---------x,yஎன்று பெயரிட்டு நானும் காட்டுகிறேன்.
நாம் கலந்து மடலாடுவது தெளிவடையத்தானே.
கண்மணி       

செல்வன்

unread,
May 5, 2018, 4:06:57 AM5/5/18
to mintamil
2018-05-04 21:55 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

எனக்கென்னவோ கீழுள்ள முறை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது.

அது வடநாட்டு வழக்கம். தமிழ் மரபு அல்ல 

--

செல்வன்

தேமொழி

unread,
May 5, 2018, 4:34:18 AM5/5/18
to மின்தமிழ்
இதைவிட ஒரு சால்ஜாப்பு யாரால் கொடுக்க இயலும்?

--

செல்வன்

தேமொழி

unread,
May 5, 2018, 4:47:18 AM5/5/18
to மின்தமிழ்

On Friday, May 4, 2018 at 11:21:29 PM UTC-7, kanmanitamilskc wrote:
தேமொழி முன்னே நடந்த மடலாடல்களிலிருந்து நான் புரிந்து கொண்டது :
                                                                                                                                             யு.எஸ். பெண்ணியம் என்ற தொடர் உங்களுக்குத் பிடிக்கவில்லை.
                                                                                                                                             ஒரு குடும்பச்சிக்கலை மனைவி கோணத்தில் இருந்து பார்க்கிறீர்கள் /கணவன்                                                                                                                                                                                                                                            கோணத்திலிருந்து பார்க்கிறீர்கள் 

எனது கோணம்  =  முன்னரே சொன்னதுதான் 
பாலின வேறுபாட்டால் உரிமை இழப்பது, கட்டுப்படுத்தப்படுவது, அந்த வேறுபாட்டால்  பொருள் பதவி உரிமை ஆகியன  கைவிட்டுப்போவது குறித்த விழிப்புணர்வுடன் அதனை மாற்றியமைக்கும் நோக்கில்  பெண்ணுக்கு சமவுரிமை வேண்டுவது பெண்ணியம்.
இது உலகம் முழுவதும் பொருந்தும் வரையறை.

ஏற்கெனவே பெண்ணியம் பற்றிய எனது கொள்கையைக் கேட்டிருந்தீர்கள் ;நானும்சொல்லியிருந்தேன்.
வருங்கால சந்ததிக்கு ஊறு  நிகழாத வகையில் செயல்படும் பெண்ணியம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது .அதனால் தான் கணவன் மனைவி பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் கூட குழந்தை குறுக்கே வருகிறது.
அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்கு எது நல்லதோ அதை சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய கடமை பெற்றோர் இருவருக்கும் உண்டு. இதைத்தான் பாரம்பரியம் /பண்பாடு என்று சொல்கிறோம்.

குழந்தைகள் பெற்றோருக்குப் பொது, குழந்தைகள்  நலன் கருதி முடிவெடுக்க வேண்டியது ****பெண்ணின் பொறுப்பு மட்டுமல்ல****

நான் சிறுமியாக இருந்த காலத்தில் பாட்டிமார் பேசக் கேட்டிருக்கிறேன்.யாராவது புதிதாகத் திருமணம் ஆன பெண்ணைப் பற்றிப் பேசினால் அவர்களுக்குள் எழும் முதல் கேள்வி "உண்டாயிட்டாளா? சும்மா தான் இருக்காளா?" என்பது தான்...... ஒரு பெண் குழந்தைப்பேறு அடைந்து விட்டால் அவளது குடித்தனத்தில் என்ன பிரச்சினை வந்தாலும் அங்கே இணைக்கும்பாலமாகக் குழந்தை இருக்கும் என்னும் விளக்கமும் தெளிவும் நான் முதிர்ச்சி அடைந்த பிறகு தான் எனக்குப்   புரிந்தது .நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சமூகத்தில் இது தான் ஆண்டாண்டு காலமாகப் போற்றப்படும் விழுமியம்/மதிப்பீடு .இதைத் தான் பெண்ணியத்திற்கும் அடிப்படை ஆதாரமாக/அஸ்திவாரமாக நான் கருதுகிறேன். இந்த கோட்பாட்டு  வானத்தை மெத்திக் கட்டப்படும் கட்டிடம் தான் நிலையாக,வலுவாக இருக்கும் .

இதிலிருந்து மாறுபட்ட கோணத்தை நீங்கள் கூறிய போது அதை  யு,எஸ்.பெண்ணியம் என்றேன்.அந்தத் தொடர் பிடிக்கவில்லை என்றால் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.வேறு என்ன பெயர் நீங்கள் கொடுத்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.

உங்கள் கருத்து உங்கள் உரிமை.    
குழந்தைகள் நலன் எனச் சுட்டிக்காட்டி பெண்ணை மட்டும் கட்டுப்படுத்தும் நிலையை முன்னெடுப்பதில், அதைப் பெண்ணியம் என்ற கோட்பாட்டுடன் இணைப்பதில் எனக்கு அடிப்படை வேறுபாடு உண்டு.  

பெண்ணியம் உலகம் முழுமைக்கும் பொது...........ஒத்துக்கொள்ள வேண்டிய கருத்து............ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் போது சூழ்நிலைக்கும் பண்பாட்டுப் பின்னணிக்கும்  ஏற்ப அது மாற்றமடைகிறது..........அதனால் தான் வேறு பெயர்கள் தேவைப்படுகின்றன.

பண்பாட்டுப் பின்னணி என்பதிலும் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு.  மனித நேயம் என்பது மட்டுமே பொதுவான பண்பாடு.  யாரையும் தியாகச் செம்மலாக இருக்கக் கட்டாயப்படுத்த முடியாது.  
*****அடுத்து இந்தியப் பண்பாடு என்ன என்று தனி திசை திருப்பிப் பாருங்கள் வரும் கருத்துகள் வியப்பளிக்கும்.****

பேசுகின்ற பெண்ணியம் ஏட்டளவில் இருக்கும்........வலுவற்றதாகும்..... வேற்று ஆரவாரமாகி விடக்கூடும் .
செயல்படும் பெண்ணியம் தான் உயிரோட்டமுடையது.
தமிழகப் பெண்ணியம் என்ற தொடருக்கு நேரான அமெரிக்க இயக்கத்திற்கு என்ன பெயர் ?சொல்லுங்கள் ;அதையே பயன்படுத்துகிறேன்.நீங்கள் தான் சரியான ஆள்;25 ஆண்டுக்காலம் தமிழகத்தில் .....இன்னோரு 25 ஆண்டுக்காலம் யு.எஸ்.இல்.....

அப்படி வேறுபாடு கிடையாது என்பதைத்தான்,  உணர்வுகள் அனைவருக்கும் ஒன்றே, எல்லோருக்கும் பசிக்கும், தாக்கினால் வலிக்கும் போன்ற அடிப்படை உயிரின மனிதநேய வழியில்  ஒருவருக்கு மறுக்கப்படும் உரிமை, அல்லது வாய்ப்பு குறித்து பேசினால் அது  பெண்ணியம் என முன்னர் குறிப்பிட்டிருந்தேன். 
சட்டத்திலும் நான் உலகப்பொதுவாக மத இன மொழி நிற வேறுபாடற்ற  யூனிபார்ம்  சிவில் கோட்  எதிர்பார்க்கும் ஆள் நான். என்னைப் பொறுத்தவரை அனைத்தும் மனித உயிர். அனைவருக்கும் கட்டுப்படுத்தப்படாமல் வாழ உரிமையுண்டு.  

செல்வன் அவர்கள் தன் மனதைப் பாதித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து ஒரு நிஜமான சான்றாதாரம் காட்டினார்..........அவரது ஆதங்கத்தின் காரணம் அங்கே குழந்தையின் மன ஆரோக்கியம் பற்றியோ ; மகிழ்ச்சி பற்றியோ ;நிறைவு பற்றியோ பெற்றோர் இருவரும் நினைத்துப் பார்க்கவில்லை. வாழ்க்கை முழுவதும்; அந்தக் குழந்தைக்கு எத்தனை வயதானாலும் ; எவ்வளவு சம்பாதித்தாலும் ;எவ்வளவு உயரே உயரே பறந்தாலும் -----------நிரப்பப்படாத பள்ளமாக அந்த சோகமும் ஏக்கமும் இருக்கும்.

செல்வன் மனதைப் பாதிக்கலாம்.  அவருக்குப் பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் தேவை என்ற வரையறை உண்டு. 
அவர் பேச்சை நான் பொருட்படுத்துவதில்லை.  பெண்களுக்கும்  ஒரு கோணம் கருத்து இருக்கும் என்ற அடிப்படைப் புரியாதவர்கள் பெண்ணியம் பேசினால் அதை ஏற்க வேண்டும் என நான் விரும்புவதில்லை.  அவர் கருத்து அவர் உரிமை.  அதற்கு மாற்றுக் கோணம் இருக்கிறது எனக் காட்ட விரும்புவதே எனது கோணமாக பதிவை வைக்க முயல்வேன்.  
அவரது கோணம் என்ன என்பதுதான் அப்பாவும் மற்றொரு திருமணம் செய்வதையும்  பெண்கள் பாலியல் சுதந்திரத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகிறாரே அப்பொழுதே தெளிவாக எனக்குப் புரிகிறது.

பெரும்பாலும் அமெரிக்காவில் உறவு பிரிவது, மணவிலக்கு கேட்கப்படுவது எக்ஸ்ட்ரா மறைட்டல்  அஃப்பேர்ஸ் என்பதால்.  நம் ஊர் போல மனைவி ஒப்புதலுடன் மற்றொரு திருமணம்.... நடக்காது. 
உனக்கு நான் எனக்கு நீ என்ற ஒப்பந்தம் மீறப்பட்டால் அதுவே மணவிலக்குக்கு அடிப்படை. 
இந்தியா போல சின்னவீடு என்பதெல்லாம் நடைமுறை வழக்கில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
துணைவி துணைவர் தாக்கப்பட்டால் மறுவினாடி அது போலீஸ் கேஸ்.  அதன் அடிப்படை காட்டியே மணவிலக்கு கேட்டால் கொடுக்கப்படும்.
இந்தியாவில் இது எந்த அளவில் நடைமுறையில் இருக்கிறது.
அமெரிக்கா வந்த இந்தியப் பெண்கள் இது போல போலீசுக்குச் சென்றால் குடும்பமே அவர்களுக்கு ஒத்துழைப்பதில்லை என்றும் காட்டப்படும் பதிவுகளை இந்தியா கரண்ட் கட்டுரையை இங்கேயே நான் கொடுத்திருந்தேன்.
தெற்காசிய நாடுகளில்  இருந்து வந்தோர் குடும்ப வன்முறை ரிப்போர்ட் செய்யப்படுவதில்லை என்பது அமெரிக்காவில் காவல்துறை அறிந்த செய்தி.
எந்தத் தாயும் தனது குழந்தை தாக்கப்படுவதை ஏற்றுக் கொண்டு தங்கள் பிள்ளை தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டியதில்லை, எந்த ஆணோ பெண்ணோ மணவாழ்க்கையில் துணையால் மனதளவில் அவமதிக்கப்பட்டோ உடலளலவில் பாதிக்கப்பட்டோ அதை ஏற்றுக்கொண்டு பிள்ளைகளுக்காக குடும்ப அமைப்பில் இருக்க வேண்டிய கட்டாயமில்லை. 
முதலில் தனிமனித உரிமை முக்கியம். 

எந்த ஒரு முடிவிலும் யாருக்கு இழப்பு என்பது என்பது ஆராயத் தேவை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தில் வரும்.
செல்வன்  மனதைப் பாதித்த அந்த நிகழ்வு, முதலில் பெற்றோருக்குத் தனித்தனியே விருந்து கொடுத்த பெண்ணைப் பாதித்ததா  என்பதுதான் முதல் கேள்வியாக இருந்திருக்க வேண்டும்.
அப்பொழுதும் அவர் பாதிக்கப்படவில்லை என்பதுதான் அவர் தொலைக்காட்சி வரை புகழ் பெற்ற நிலை காட்டுகிறது. 
அவ்வாறு பெற்றோர் பிரிந்து போனதால் அந்தப் பெண் வாழ்வு பாதித்தது என்பதை அந்தப் பெண் நினைத்து, இதற்கு யார் பொறுப்பு என்று அந்தப் பெண் ஆராய வேண்டும். அப்படிப் பார்த்த பொழுது அவருக்குப் பெற்றோர் இருவர் கோணமுமே  சரி என்று புரிந்ததால்தான் அவர் இருவருடனும் தொடர்புடன் இருக்கிறார்.  

நீங்கள் உங்கள் பாலிசிக்கேற்ப வெற்றி பெற்ற சான்றாதாரம் காட்டுங்கள் -----------case study

மேலிருப்பது கூட ஒரு கேஸ் ஸ்டடிதான்.  

நான் ரசித்த வெற்றிகரமான பெண்ணியவாதியை ---------x,yஎன்று பெயரிட்டு நானும் காட்டுகிறேன்.
நாம் கலந்து மடலாடுவது தெளிவடையத்தானே.

உண்மை, உரையாடினால்தான் பல்வேறு கோணங்கள் இருப்பது தெரியும். நன்றி.

..... தேமொழி

கண்மணி       

செல்வன்

unread,
May 5, 2018, 6:51:19 AM5/5/18
to mintamil
2018-05-05 3:47 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

எந்த ஒரு முடிவிலும் யாருக்கு இழப்பு என்பது என்பது ஆராயத் தேவை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தில் வரும்.
செல்வன்  மனதைப் பாதித்த அந்த நிகழ்வு, முதலில் பெற்றோருக்குத் தனித்தனியே விருந்து கொடுத்த பெண்ணைப் பாதித்ததா  என்பதுதான் முதல் கேள்வியாக இருந்திருக்க வேண்டும்.
அப்பொழுதும் அவர் பாதிக்கப்படவில்லை என்பதுதான் அவர் தொலைக்காட்சி வரை புகழ் பெற்ற நிலை காட்டுகிறது. 
அவ்வாறு பெற்றோர் பிரிந்து போனதால் அந்தப் பெண் வாழ்வு பாதித்தது என்பதை அந்தப் பெண் நினைத்து, இதற்கு யார் பொறுப்பு என்று அந்தப் பெண் ஆராய வேண்டும். அப்படிப் பார்த்த பொழுது அவருக்குப் பெற்றோர் இருவர் கோணமுமே  சரி என்று புரிந்ததால்தான் அவர் இருவருடனும் தொடர்புடன் இருக்கிறார்.  

பாதிப்பு இல்லை என யார் சொன்னார்கள்?

பயனிர் வுமன் எனும் அப்பெண்ணின் தாய் கெரி என்பவர் 33 ஆண்டுகள் தன் முதல் கணவருடன் வாழ்ந்தவர்.

அதன்பின் தன் சர்ச் பாதிரியாருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டு தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு பாதிரியாரை மணந்துகொண்டார் (புராட்டஸ்டண்ட் பிரிவுகளில் பாதிரியார்கள் மணம் செய்ய அனுமதி உண்டு)

தன் பெற்றோரிடம் விவாகரத்து செய்யவேன்டாம் என பயனிர் வுமன் மன்றாடி அழுதார். பயனில்லை. இந்த சம்பவம் நடக்கையில் பயனிர் வுமனுக்கே திருமணம் ஆகியிருந்தது. திருமணமான பெண்ணுக்கே தன் பெற்றோரின் விவாகரத்து இப்படி வலிக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு எப்படி இருக்கும்?

திருமண வயதில் பெண் இருக்க பாதிரியாருடன் கள்ளதொடர்பு வைத்துகொள்பவரை எல்லாம் என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை. ஆனால் இதற்கு காரணம் அமெரிக்க பெண்ணீய இயக்கங்களின் பாலியல் புரட்சிதான்.

--

செல்வன்

செல்வன்

unread,
May 5, 2018, 6:59:31 AM5/5/18
to mintamil
தன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்தபோதும் அவரை மன்னித்து ஏற்க பயனிர் வுமனின் தந்தை தயாராகவே இருந்தார்.

விவாகரத்தை அவர் விரும்பவில்லை. அவர் ஒரு புகழ்பெற்ர சர்ஜன். ஊரில் மதிப்புடன் வாழ்ந்தவர்.

ஆனால் தாய் கேட்காமல் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டில் கூட விவாகரத்தை தான் விரும்பவில்லை என கூறியே மனுதாக்கல் செய்து, பின்னர் வேறு வழியில்லை என தெரிந்தபின்னரே விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டார் தந்தை வில்லியம்ஸ்

According to court documents, Drummond’s dad did not want out of the marriage.

“The defendant desires to continue to live in a loving and supportive marriage with the plaintiff,” William Smith’s response stated.

William ultimately caved. According to court docs, the divorce was finalized on March 7, 1997. Although it was 20 years ago, the insider admitted the affair is still talked about today in Bartlesville.

https://radaronline.com/exclusives/2018/01/pioneer-woman-ree-drummonds-humiliation-exposed-affair-tore-family-apart/

தேமொழி

unread,
May 5, 2018, 1:12:02 PM5/5/18
to மின்தமிழ்
பயோனிர் வுமன் கதை குறித்து எடுத்துக்காட்டு காட்டுவதற்கு எனது மறுமொழி ...

அந்தந்த பகுதி மக்களே அதன் கொள்கைகளை முடிவு செய்வார்கள். எத்தனைகெத்தனை அளவு அது பிறமக்களால் ஏற்கபடுகிறதோ அத்தனைகத்தனை அளவு அது பரவி பொதுக்கொள்கையாக நிலைபெறும். இப்படி ஒரு ஜனநாயக வழிமுறை இங்கே உள்ளது. [...]

இது அந்தந்த ஊர் மரபு என தான் கொள்ளவேண்டும். [...] இது இம்மண்ணின் ஜனநாயகத்திற்கான சான்று 

sounds familiar ? >>> https://groups.google.com/d/msg/mintamil/PJ4VZtovZEM/FVnr7Pw1BgAJ   apply this statement here

தேமொழி

unread,
May 5, 2018, 1:12:11 PM5/5/18
to mint...@googlegroups.com
நீங்கள் பெண்களைக் குறித்தும் அவர்கள் உரிமைகளைக் குறித்தும் காட்டும் எடுத்துக்காட்டுகளுக்கும் (முற்போக்கு ஜோக்கு போன்ற இழைகளில்)  அவர்கள் உரிமைகள் சுதந்திரம் குறித்து விமர்சிப்பதற்கும் ....

நான் பெண்களைக் குறித்தும் அவர்கள் உரிமைகளைக் குறித்தும் காட்டும் எடுத்துக்காட்டுகளுக்கும்  உள்ள "அடிப்படை வேற்றுமை"  என்னவென்று விளக்கிக் காட்டுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் நோக்கம் பெண்கள் தனது சொந்த காலில் நின்று தனக்கென அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைக்குத் தடைகளை உருவாக்கும் நோக்கில்.... 
எக்ஸ்ட்ரீம் கேசஸ் போல பொறுக்கியெடுத்த சில நிகழ்வுகளைக் காட்டி இதனால் எல்லாமே கெட்டுவிடும் என்று அச்சுறுத்தும் முறை, இது வழக்கமான பழமை விரும்பும் கன்செர்வேடிவ்கள்முன்னெடுக்கும்  முறை. இதில் பெண்கள் தடம் மாறுவதை மட்டுமே காட்டிக் கொண்டிருப்பார்கள்.  ஆண்கள் தடம் மாறுவதைப் பற்றியே பேச்சிருக்காது.  எடுத்துக்காட்டு ஆர்னால்ட் சுவிஷனைகர், இங்கிலாந்து இளவரசர் எக்ஸ்ட்ரா மறைட்டல் அஃப்பேர் என்பதால் இளவரசி டயானா கசப்புற்று மணவிலக்கு பெற்றது போன்ற மக்களுக்கு நன்கு  தெரிந்த எடுத்துக்காட்டுகள் மறைக்கப்படும், அவை குறித்த பேச்சே காட்டப்படாது, வெகு குறைவான பெண்கள் தடம் மாறுவதைக் காட்டி பெண்கள் விலக நினைப்பதை இது போல தவறான வழியில் செல்லும் முயற்சி என்று மட்டுமே தொடர்ந்து காட்டப்படும்.

எனது நோக்கம் என்றும் பெரும்பான்மையான நிகழ்வுகளைக் காரணம் காட்டி பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டிய அவசியத்தைக் காட்டும். எடுத்துக்காட்டு http://www.vallamai.com/?p=49037  அடுத்து தருகிறேன்.  
தனிப்பதிவாகவும் போடுகிறேன்...அடுத்து...

இது போல தேவை என்ற அடிப்படையில்தான் வரதட்சிணைக் கொடுமை, ஒடுக்கப்பட்டோர் வன்முறை தடுப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
அது ஒரு சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் காரணம் காட்டி நீக்கிவிட நினைக்கும் முறையில்தான் பெரும்பாலோர் வாழ்வு குறித்த சட்டங்கள், சட்ட  அச்சத்தின் காரணமாக இன்று தவிர்க்கப்படும் நடவடிக்கைகள் மீண்டும்  வளர இப்பொழுது வழி வகுக்கப்படுகிறது. 

யார் கண்ணில் எது படுகிறதோ அதை வைத்துத்தான் அவர்கள் தங்கள் கருத்தை முன் வைப்பார்கள், 
ஆனால் தேவை பெரும்பான்மையான நிகழ்வு என்ன என்பது குறித்ததாக இருக்கவேண்டும். 

நாம் பெண்களைக் குறித்தும் அவர்கள் உரிமைகளைக் குறித்தும் காட்டும் எடுத்துக்காட்டுகளுக்கு  உள்ள "அடிப்படை வேற்றுமை"  என்னவென்று இப்பொழுது  விளங்கியிருக்கும். 

உங்களது கோணத்தை நீங்களே முடிவு செய்து கொண்டு அதற்காகப் பாடுபடுவது உங்கள் உரிமை. 

இதற்கான சான்றுகள் தேடி அலைய வேண்டுமா  என்ன ... நாம் இருவர் குறிக்கும் நிகழ்வுகள்... மனிதர்கள்... அவை எவற்றைக்  குறிக்கின்றன என, நமது பதிவுகளே சான்றுகளாக குழும இழைகளில் இரைந்து கிடக்கின்றன...

தேமொழி

unread,
May 5, 2018, 1:13:15 PM5/5/18
to மின்தமிழ்

இந்த வார வல்லமையாளர்!

ஆகஸ்ட் 11, 2014

இவ்வார வல்லமையாளர்கள்
வல்லமைமிகு “வழிகாட்டும் ஒளி” குழுவினர் 
வல்லமைமிகு பிரேமா, ரேவதி, சுஜாதா, வைதேகி ஆகியோர்

வழிகாட்டும் ஒளிகள்
பெண்களுக்கெதிரான கொடுமைகளில் இருந்து அவர்களைக் காக்கும் நோக்குடன் வழிகாட்டும் ஒளி’நிறுவனத்தைத் துவக்கி வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா குழுவினர் மற்றும் அவர்களது சேவையை நமக்கு தனது கட்டுரையின் மூலம் அறிவித்த ‘குங்குமம் தோழி’யின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி ஆகியோர் இவ்வார வல்லமையாளர்களாக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்கள்.

இவ்வார வல்லமையாளர் விருதிற்காக “வழிகாட்டும் ஒளி” குழுவினரைப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் கவிஞர் காவிரிமைந்தன் அவர்கள். வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்காக ஒருங்கிணைந்து செயலாற்றும் இப்பெண்மணிகளை இவ்வாரத்தின் வல்லமையாளர்களாக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து, வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா ஆகிய மூவருமே வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்கள்.

வழிகாட்டும் ஒளிகள்3

நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்து அமைதியான குடும்ப வாழ்வை எதிர்நோக்கும் பெண்களில் பலருக்கு அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக  வாழ்க்கை அமைந்துவிடுகிறது.  பலருக்குக் கிடைத்த துணையே துன்பத்திற்கு துவக்க விழாநடத்தும் வேலையைச் செவ்வனே செய்பவர்களாக அமைகிறார்கள்.  உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவத்திற்கு உத்திரவாதம் தருகிறார்கள்.  போதும் இந்த வாழ்க்கை என்று சலிப்படையும் பெண்கள் பலர்.  இவர்களில் ஒருவர் வழிகாட்டும் ஒளியின் தலைவி பிரேமா.

இவர் காதலித்துக் கைபிடித்து பதினைந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவரால் அடைந்த துன்பங்கள் பல.  வேறுவழியின்றி கணவரைப் பிரிந்து வாழ்ந்தவருக்கு கணவராலும் சமூகத்தாலும் தொடர் தொல்லைகள்.  ஆதரவு தந்த அன்புள்ளங்களால் மீண்ட  இவருக்கு மீண்டும் சோதனையாக ஒரு விபத்து.  அதிலிருந்து உயிர் பிழைத்த இவர் தனக்கு மறுவாழ்வு கிடைத்ததன்  காரணம் பிறருக்கு உதவுவதற்காக என்ற முடிவெடுத்து ‘நேசம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, இயலாத மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார்.  அப்பொழுது பெண்களுக்கெதிரான கொடுமைகளில் சிக்கிக் கொண்ட தன்னைப் போன்ற பெண்கள் பலரை சந்திக்க நேர்ந்ததால் அவர்களுக்கு ஆதரவுதர விரும்பி  ‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டும், உறவுகளின்றியும்  தனித்துவிடப்பட்ட பெண்களுக்காக  தனது பணியைத் தொடங்கி இருக்கிறார்.  ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பின் வழியாக அந்தப் பெண்களின் தகுதிக்கேற்ற பணியில் அவர்களை அமர்த்தி, அவர்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க உதவியிருக்கிறார்.  குடும்பத்தாரால் கைவிடப்பட்டு தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கையில் வெளிச்சத்தையும் காட்டுகிற ஓர் அமைப்பு  இவருடைய ‘வழிகாட்டும் ஒளி’.

இந்த அமைப்பின் செயலாளர் ரேவதி, எம்.ஏ படித்தவர், பெற்றோர் பார்த்து மணமுடித்து வைக்கப்பட்டவர்.  இவரது கணவருக்குப் படித்த பெண்களின் மேல் நம்பிக்கை இல்லாத காரணத்தினால்  இவரைச் சந்தேகித்து சித்திரவதை செய்திருக்கிறார்.  மனஉளைச்சல் தாள முடியாது தனது படிப்பை மட்டும் நம்பி மூன்று வயது மகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். தனியாக உன்னால் வாழ்ந்து விட முடியுமா என்று கணவர் இட்ட சவாலைப் ஏற்று, ஆசிரியத் தொழில் புரிந்து தனது மகனை வளர்த்து எம்.பி.ஏ. வரை படிக்க வைத்துள்ளார்.  தனது அண்ணனுடன் பணிபுரியும் பிரேமாவின் தொடர்பு கிடைக்க, தன்னைப் போன்று துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு உதவ ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்புடன் தன்னை  இணைத்துக் கொண்டுள்ளார்.

சிறுவயதில் திருமணமான பொழுது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்திராதவர் பொருளாளர் சுஜாதா, வேலைவெட்டி இன்றி நாள்முழுவதும் குடிபோதையில் இருந்த அவரது கணவரால் குடும்பத்தில் அமைதி இன்றிப் புழுங்கியபடி வாழ்ந்திருக்கிறார். அதன் உச்சக்கட்டமாக, குடிபோதையில் சச்சரவு ஏற்பட்டு நடுஇரவில் கணவனால் துரத்தப்பட்டு நடுத்தெருவிற்கு இவர் வந்த பொழுது இவருடன் வெளியேற்றப்பட்டவர்கள் இவரது பத்து வயது மகளும், ஒன்றேகால் வயது கைக்குழந்தையான மகனும்.  நீ தற்கொலை செய்து கொள்ளும் வரை உன்னைத் துன்புறுத்துவேன் என்று அச்சுறுத்திய கணவனுக்கு எதிராக தனது குழந்தைகளுக்காக வாழவேண்டி, பள்ளித் தோழி உதவியுடன் வேலை பெற்று பணி செய்து கொண்டே படித்து எம்.ஏ. முடித்திருக்கிறார். தற்பொழுது பொதுமக்கள் தொடர்புப் பணியாளராக பணிபுரிகிறார். ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் இவர் பிரேமாவை எதிர்கொள்ள, அவரது பணியால் ஈர்க்கப்பட்டு ‘வழிகாட்டும் ஒளி’யின் பொருளாளராக அந்த அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

வழக்கறிஞர், உளவியல் நிபுணர்கள் போன்றவர்களை தங்கள் அமைப்பில் கொண்டு முடிந்தவரை பெண்கள் தங்கள் நிலையைக் கையாள ஆலோசனைகள் வழங்கும் ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு, அவை உதவாத நிலையில் பெண்களுக்கு மாற்றுவழியாக அவர்களது திறனுக்கேற்ற பணியில் அமர்த்தி தன்னிறைவுடன் வாழ உதவி செய்து வருகிறது.  அல்லல்களில் இருந்து மீண்ட இந்த மூன்று பெண்மணிகளும் தங்களைப் போன்று வாழ்வில் அல்லலுறும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறார்கள். இவர்களது கதைகளையும் ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு பற்றியும் குங்குமம் தோழி இதழில் கட்டுரை எழுதி மக்களுக்கு இவர்களது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறார் குங்குமம் தோழி பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி அவர்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சிசுக்கொலைக்கு எதிராக தேசிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு ‘லாட்லி ஊடக விருது’ என்று அழைக்கப்படும் விருதுகளை வழங்கிவருகிறது. இந்த அமைப்பின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை வெளிக்கொணரும் விழிப்புணர்வுச் செய்திக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, சிறந்த படைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ‘லாட்லி ஊடக விருது’கள்  (Laadli Media and Advertising Awards for gender sensitivity) இந்த அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.  குங்குமம் தோழி இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி, தாம் எழுதிய ‘வழிகாட்டும் ஒளி’ என்ற கட்டுரைக்காக  தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான  லாட்லி ஊடக விருதினைப்  (ஃபார் பெஸ்ட் கேம்ப்பெயின்) பெற்றார். ஆந்திர உயர்நீதி மன்ற நீதிபதி திரு சந்திரகுமாரும், பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பின் இயக்குனர் டாக்டர் ஏ.எல்.சாரதாவும் சென்ற 2013 டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இவ்விருதை வைதேகிக்கு வழங்கினார்கள்.

வழிகாட்டும் ஒளிகள்2

பெண்கொடுமைகளுக்கெதிராக பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுக்கு ஆதரவான செயல்களைப் புரிந்துவரும் இப்பெண்மணிகள் யாவருமே, தற்கால இளம்பெண்கள். தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள நல்ல வழிகாட்டிகளாக இருப்பதற்காகப் பாரட்டப்பட வேண்டியவர்கள். இக்கருத்தை மிக அழகாக தனது பரிந்துரை மடலில் முன்வைத்துள்ளார் கவிஞர் காவிரிமைந்தன். இதோ  அவருடைய ஆக்கப்பூர்வமான பரிந்துரை:

”இல்லற வாழ்க்கை என்கிற ஒன்றை.. மரபு வழியில் தேர்ந்தெடுத்து .. அமைகின்ற துணை சரியில்லாமல் போய்விடும்போது இன்னலுறும் லட்சோபலட்சம் மக்கள்.. தங்கள் வாழ்க்கையை.. கண்ணீரால்தான் எழுதுகிறார்கள்.  விதி என்கிற ஒற்றை வார்த்தையால் சமூகம் அதை அலட்டிக்கொள்ளாமல் மேற்பார்வையிடுகிறது.  கதைகளிலும்.. திரைப்படங்களிலும் மட்டுமல்ல.. இதுபோன்ற சம்பவங்கள்.. கைவிடப்பட்ட அகலிகைகளாக ..  அடுத்த கட்டம் என்ன என்பதை தீர்மானிக்க முடியாதவர்களாக .. வாழ்க்கையே சூனியமாகிவிட்டதாக கருதும் சராசரி பெண்களின் வரிசையில் நின்றுவிடாமல்..  வாழ்ந்து காட்டுவோம் என்று தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்ததோடு..  இதுபோல் ஜீவிக்க முடியாமல் போராடும் பலருக்கும் “வழிகாட்டும் ஒளி ” என்கிற அமைப்பு ரீதியான உங்களின் மேலாண்மை.. வெறும் வார்த்தைகளால் பாராட்டி .. வாழ்த்துக்களால் நிறைவுபெறும் ஒன்றல்ல.

நேர்மையற்ற நெஞ்சம் கொண்டோர்..  தேவையற்ற பழக்கங்களால் வாழ்வைக் கெடுத்துக்கொள்வதோடு தன்னைச் சார்ந்திருப்போர் வாழ்க்கையையும் பாழாக்கும் அவலங்கள் நிறைந்துவரும் இன்றைய சூழலில்..  வழிகாட்டும் ஒளி .. போன்ற அமைப்புகள் தேவையான ஒன்று என்பதை சுட்டிக்காட்டும் அதே நேரம்..  அரசாங்கம் .. மத்திய மாநில அரசுகள்.. இது போன்ற தூய தொண்டாற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி.. அங்கீகாரம் வழங்க வேண்டும்..”

படங்கள் உதவி:  
ஆர்.சந்திரசேகர்  &  http://tamilscreen.com/laadli-media-award-for-gender-sensitivity-r-vaidehi/

தகவல் உதவி:   
ஆர்.வைதேகி, குங்குமம் தோழி இதழ்

நன்றி:
குங்குமம் தோழி இதழ் வலைத்தளம் 
https://kungumamthozhi.wordpress.com/

வழிகாட்டும் ஒளி!
https://kungumamthozhi.wordpress.com/2014/01/04/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF/

குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!
https://kungumamthozhi.wordpress.com/2013/12/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A/

வழிகாட்டும் ஒளி!
http://dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1210

குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=72023

செல்வன்

unread,
May 5, 2018, 2:01:24 PM5/5/18
to mintamil
2018-05-05 12:12 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பயோனிர் வுமன் கதை குறித்து எடுத்துக்காட்டு காட்டுவதற்கு எனது மறுமொழி ...

அந்தந்த பகுதி மக்களே அதன் கொள்கைகளை முடிவு செய்வார்கள். எத்தனைகெத்தனை அளவு அது பிறமக்களால் ஏற்கபடுகிறதோ அத்தனைகத்தனை அளவு அது பரவி பொதுக்கொள்கையாக நிலைபெறும். இப்படி ஒரு ஜனநாயக வழிமுறை இங்கே உள்ளது. [...]

இது அந்தந்த ஊர் மரபு என தான் கொள்ளவேண்டும். [...] இது இம்மண்ணின் ஜனநாயகத்திற்கான சான்று 

sounds familiar ? >>> https://groups.google.com/d/msg/mintamil/PJ4VZtovZEM/FVnr7Pw1BgAJ   apply this statement here

அந்த ஊரில்  அவருக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், சொந்தம், பந்தம், பொதுமக்கள் அவரது தாயை எப்படி கேவலமாக பேசுவார்கள் எனகூட புரிந்து கொள்ள முடியாத அளவில் தான் உங்கள் பெண்ணியம் சார்ந்த புரிதல் உள்ளது.

பெண்கள், மக்களின் மனோநிலையை கூட புரிந்துகொள்ளாமல் இம்மாதிரி  விசயங்களை பூசிமெழுகுவதும், கண்டிக்க முன்வராதத்தும் நீங்கள் எந்த அளவு இந்திய/அமெரிக்க மக்களின் மெய்ன்ஸ்ட்ரிம் கருத்தில் இருந்து விலகி இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது.
 
செல்வன்

unread,
May 5, 2018, 2:10:09 PM5/5/18
to mintamil
2018-05-05 12:12 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நீங்கள் பெண்களைக் குறித்தும் அவர்கள் உரிமைகளைக் குறித்தும் காட்டும் எடுத்துக்காட்டுகளுக்கும் (முற்போக்கு ஜோக்கு போன்ற இழைகளில்)  அவர்கள் உரிமைகள் சுதந்திரம் குறித்து விமர்சிப்பதற்கும் ....

நான் பெண்களைக் குறித்தும் அவர்கள் உரிமைகளைக் குறித்தும் காட்டும் எடுத்துக்காட்டுகளுக்கும்  உள்ள "அடிப்படை வேற்றுமை"  என்னவென்று விளக்கிக் காட்டுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் நோக்கம் பெண்கள் தனது சொந்த காலில் நின்று தனக்கென அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைக்குத் தடைகளை உருவாக்கும் நோக்கில்.... 
எக்ஸ்ட்ரீம் கேசஸ் போல பொறுக்கியெடுத்த சில நிகழ்வுகளைக் காட்டி இதனால் எல்லாமே கெட்டுவிடும் என்று அச்சுறுத்தும் முறை, இது வழக்கமான பழமை விரும்பும் கன்செர்வேடிவ்கள்முன்னெடுக்கும்  முறை. 

எல்லாம் மெய்ன்ஸ்ட்ரீம் முற்போக்கு ஊடகங்களில் வருவதுதான். முற்போக்கு ஊடகங்களில் வருவதும், இலரி க்ளின்டன் , ப்ரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்கள் பேசுவதும் எல்லாம் எக்ஸ்ட்ரீம் உதாரணம் என சப்பைகட்டு கட்டி ஒதுக்க இயலாது

பெண்களின் உண்மையான முன்னேற்றத்துக்கு பாடுபடுவோரை நான் சிறப்பித்தும் வந்திருக்கிறேன். உண்மையான பெண்ணியம் என்ன என்பதை இவர்களிடம் கற்றுகொள்லலாம்.பெண்களை பலாத்காரம் செய்வோரை, பிற்போக்குவாதிகளை இன்னொரு இழையில் அம்பலபடுத்தியும் வருகிறேன். என்னிடம் சார்பு நிலை இல்லை. இந்திய மக்களுக்கு நன்மை அளிக்கும் கோட்பாடுகளை வரவேற்கிறேன். மேலைநாட்டு இறக்குமதி கோட்பாடுகளை எதிர்க்கிறேன்

எனது தேர்வான பெண் வல்லமையாளர்கள்

--

செல்வன்

செல்வன்

unread,
May 5, 2018, 2:13:12 PM5/5/18
to mintamil
ப்ரியங்கா சோப்ரா பேசியதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன் என ஒரு இழையில் சொல்லி, எழுதி தேதியுடன் கையெழுத்து போட்டுகொடுத்துவிட்டு இரண்டாவது நாளில் "எல்ஸ்ட்ரீம் உதாரணம், எதிர்க்கிறேன்" என அந்தர்பல்டி அடிப்பது வேடிக்கையானது. ஆனால் மு.எ.ஜோக் இழைதலைப்பை மெய்ப்பிக்கும் விசயம் :-)

நான் கொடுப்பதெல்லாம் எக்ஸ்ட்ரீம் உதாரணம் என கருதினால் அதற்கு கீழேயே "இதை நான் கண்டிக்கிறேன்" என ஒரு வரியை கட்பேஸ்ட் செய்தால் போதும். செய்வீர்களா? முடியுமா? முடியாது. ஏன்? கொள்கைப்பற்று :-)

--

செல்வன்

தேமொழி

unread,
May 5, 2018, 2:24:38 PM5/5/18
to mint...@googlegroups.com

On Saturday, May 5, 2018 at 11:01:24 AM UTC-7, செல்வன் wrote:
2018-05-05 12:12 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பயோனிர் வுமன் கதை குறித்து எடுத்துக்காட்டு காட்டுவதற்கு எனது மறுமொழி ...

அந்தந்த பகுதி மக்களே அதன் கொள்கைகளை முடிவு செய்வார்கள். எத்தனைகெத்தனை அளவு அது பிறமக்களால் ஏற்கபடுகிறதோ அத்தனைகத்தனை அளவு அது பரவி பொதுக்கொள்கையாக நிலைபெறும். இப்படி ஒரு ஜனநாயக வழிமுறை இங்கே உள்ளது. [...]

இது அந்தந்த ஊர் மரபு என தான் கொள்ளவேண்டும். [...] இது இம்மண்ணின் ஜனநாயகத்திற்கான சான்று 

sounds familiar ? >>> https://groups.google.com/d/msg/mintamil/PJ4VZtovZEM/FVnr7Pw1BgAJ   apply this statement here

///அந்த ஊரில்  அவருக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், சொந்தம், பந்தம், பொதுமக்கள் அவரது தாயை எப்படி கேவலமாக பேசுவார்கள் எனகூட புரிந்து கொள்ள முடியாத அளவில் தான் உங்கள் பெண்ணியம் சார்ந்த புரிதல் உள்ளது.

பெண்கள், மக்களின் மனோநிலையை கூட புரிந்துகொள்ளாமல் இம்மாதிரி  விசயங்களை பூசிமெழுகுவதும், கண்டிக்க முன்வராதத்தும் நீங்கள் எந்த அளவு இந்திய/அமெரிக்க மக்களின் மெய்ன்ஸ்ட்ரிம் கருத்தில் இருந்து விலகி இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது.///

அதையே மாற்றி நம் ஊர் இரண்டு பெண்டாட்டி கதைகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கு என்ன பதில் கிடைக்கும்? 

குறிப்பாக ஆத்திக வழி  கண்ணதாசன், நாத்திக வழி கருணாநிதி?

மேலும் நான் குறிப்பிட்ட பிறர்... ஆர்னால்ட், பிரின்ஸ் சார்லஸ் .... குறிப்பிடாதா பில் கிளிண்டன், பில் காஸ்பி ....நீட்டிக் கொண்டே போகலாம் பட்டியலை. 

எங்குமே... நம் நாடோ அல்லது அயல் நாடோ எத்தனைப் பேர் குடும்ப ஒப்பந்தத்தில் இருக்கும் பொழுதே அதை மதிக்காமல் தடம் மாறுகிறார்கள்? எத்தனை விழுக்காடு மக்கள் இவர்கள்?

அவர்களை முன்மாதிரியாக எடுத்து மற்றவர் தனிப்பட்ட வாழ்வை அலசுவதா பெண்ணியம் ?

அல்லது பலநூற்றாண்டுகளாக உரிமை, சொத்து, கல்வி, வாழ்வு ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமவுரிமை கிடைக்க வழிவகுப்பது பெண்ணியமா?

இது இங்கு நீங்கள் காட்டிய அனைத்துப் பதிவுகளுக்கும்.

ஸ்ரீதேவி!!!!... என்ன சாதித்தார் அந்தப் பெண்மணி ... அடுத்தவர் குடி கெடுத்த பெண்ணை,  உங்கள் ஒழுக்க வாழ்விற்கு ஒரு உதாரணமாகக் காட்டுவீர்களா?

என்ன ஒரு கொள்கைப்பற்று !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தலைத் தலையாக அடித்துக் கொள்ளலாம். 

தனது சொந்தக்காலில் நிற்கும் சிந்தனைத் துணிவு உள்ள பெண்களைப் பாராட்டுவதில் தவறில்லை.

"Great minds discuss ideas; average minds discuss events; small minds discuss people."

kanmani tamil

unread,
May 5, 2018, 3:34:17 PM5/5/18
to mintamil
மகிழ்ச்சி தேமொழி .
நீங்கள் தமிழகத்துப் பெண்கள் மூவரை மாதிரிகளாக எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்.
என்னைக் கவர்ந்த பெண்ணியவாதியும் தமிழகத்துப் பெண் தான்.............குறிப்பாக சிவகாசி சிற்றூரைச் சேர்ந்த பெண்.

ஒரு கணவன் =' x '
உயர்ந்த அரசுப்பதவியில் இருந்த தந்தைக்கு ஒரே ஆண்வாரிசாகத் தோன்றிய செல்லப்பிள்ளை .
திருமணம் முடிந்தது .....மனைவி =' y  '.   S.S.L.C படித்தவள்.
வீட்டுப் பெரியவருக்கு நல்ல சம்பாத்தியம்......அவரே குடும்பப் பொறுப்பை ஏற்றார். மகனுக்கு தந்தை செல்வாக்கால் தனியார் நிறுவனத்தில் வேலை.
அவன் சம்பாத்தியத்தை யாரும் கேட்கவில்லை......அவன் குடித்தே தீர்த்தான்......3குழந்தைகள் பெற்று விட்டான்......பொறுப்பே வர வழியில்லை.1977.......
 தந்தை இயற்கை எய்தினார்......குடும்பம் தள்ளாடியது......அவன் போதையில் தள்ளாடினான்......தந்தையின் பென்ஷன் தாய்க்கு வந்து சேரும்......
3 குழந்தைகளுக்கான பள்ளிச்செலவும் பிற செலவுகளும்......' y 'க்கு  வாழ்க்கை நரகமானது.
 S.S.L.C.படித்த பெண்ணுக்கு சிவகாசியில் 'தீப்பெட்டி  கெட்டு ஒட்டும்' வேலை தவிர வேறேதும் கிடைக்காது. எந்நேரமும் பசைக்கையோடு இருக்க வேண்டும். கந்தக நெடியுடன் ........

 அவள் தன்  மூன்று குழந்தைகளோடு புகுந்த வீட்டை விட்டு வெளியேறினாள் .
தனக்கு ஆதரவாகத் தன் விதவைத் தாயுடன் சென்று சேர்ந்து விட்டாள் .
குட்டி ஜப்பான் என்று பெயர் பெற்றாலும் கல்வியிலும் ,சிந்தனைப்போக்கிலும் மிகவும் பின்தங்கியிருந்த ஊர் இது......நன்கு தெளிவு படுத்த வேண்டுமென்றால் ......அப்போது நான் வேலை பார்த்த பெண்கள் கல்லூரியில் 45 பேராசிரியைகள் .அதில் ஒருவர் கூட சிவகாசியில் பிறந்து வளர்ந்தவர் இல்லை. இந்தச் சூழலில் தனியொரு பெண்ணாக துணிந்து ஊர் ஊராகச் சென்று அச்சுப்பணிக்கு ஆர்டர் எடுத்து ; ஒவ்வொரு அச்சு அலுவலகமும் ஏறி இறங்கி  ;மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து ......இன்று இரண்டு பிள்ளைகளுக்குத் திருமணமும் முடித்து விட்டார்.
ஒருமகன் உலகம் சுற்றி வருகிறான்.(M.N.C)
இரண்டாவது மகன் தாய் தொடக்கி வளர்த்த தொழிலை தான் கற்று அவளுக்கு ஒய்வு கொடுக்கிறான்.
மகள் நல்ல படிப்பு படித்து ,மணம் முடித்து வெளியூரில் இருக்கிறாள்.
இன்று ' y ' இந்தச் சிற்றூரில்  தொழில் முனையும் குறிப்பிடத்தக்க பெண்களில் ஒருவர்.
ஆனால் 'x  ' 10 ஆண்டுகளுக்கு முன்னரே வேலை செய்த அலுவலகத்திலிருந்து துரத்தப்பட்டு விட்டான்.
' x ' ன் உடன்பிறந்த அக்கா எனக்குத் தெரிந்தவர்......'y'யைக் குறை சொல்வார்.......தம்பியின் நிலைக்கு 'x'தான் காரணம் என்பார் .

தேமொழி இங்கு நான் குறிப்பிட விரும்புவது என்ன தெரியுமா?
அவள் விவாகரத்து செய்யவில்லை.
இப்போது சொத்தும்  சேர்த்து விட்டாள். 
ஆனாலும் இனியும் விவாகரத்து செய்யமாட்டாள் .
இன்னொரு அழகு என்ன தெரியுமா?
அவளது 3 குழந்தைகளும் அந்தக் குடிகாரத் தந்தையை கவனித்துக் கொள்கிறார்கள்.
அதற்கு அவள் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
மூத்த மகன் தந்தை தங்குவதற்கு வாடகைக்கு இடம் பிடித்துக் கொடுத்துள்ளான்.
இளையவன் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று கணக்கு வைத்து மாதந்தோறும் செலவுக்குப் பணம் கொடுக்கிறான்.
மகள் தன்  அப்பா கோவில் குளம் சென்றுவர அவ்வப்போது பணத்தை கவனமாகக் கொடுக்கிறாள்.
'x'ன்  உடன்பிறந்த தங்கை எனக்கு நெருக்கமானவர்."எங்க அண்ணே கைல காசு இருந்தா தான் அக்கா குடிப்பான்;இல்லேன்னா அவன்கிட்ட ஒரு பிரச்சினையும் கிடையாது.இவுங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்க எவ்வளவு பாடுபட்டிருப்போம் ......இப்ப பிள்ளைங்க பாத்துக்குதுக "
ஊர் என்ன சொல்லுது தெரியுமா! "குடுக்குற காச கொஞ்சம் கூடக் குடுக்கக் கூடாதா?எப்பிடி சமாளிப்பான்?"!!!
எப்போதாவது ஊருக்குள் செல்லும் போது 'y 'இருசக்கர வாகனத்தில் பறந்து கொண்டிருப்பதைப் பார்ப்பேன்.என் மனது 'சபாஷ் ' y ''என்று அலறும்.

என் உடன்பிறந்த தங்கை ......முனைவர் பட்டத்திற்காக Women Entrepreneurs என்ற தலைப்பில் ஆய்வு செய்தாள் .அவள் தரவுகளை சேகரிக்க மூன்று தொழில் நகரங்களைத் தேர்ந்து எடுத்தாள் .அதில் ஒன்று சிவகாசி .அவளுக்காக சென்று 'y 'யை பேட்டி எடுத்த போது அவரது விதவைத் தாய் கூறியது:
"ஒங்கப்பா செத்தப்புறம் ஒங்கள எப்புடி வளத்தேன் ;என்னைய பேட்டி எடுக்கச் சொல்லேன்."   

தேமொழி--- இது தான் தமிழகத்துப் பெண்ணியம்.
 குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கும் பெண்ணியம்.
அவள் உள்ளே இருந்து புழுங்கவும் இல்லை
இந்தக் குடும்பம் சிதையவில்லை. 
தன்  தேவைக்கேற்ப உருவத்தை /அமைப்பை மாற்றிக் கொண்டுள்ளது.
அவள் தனது நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டாள்.
இன்னொரு உண்மையும் தெரிந்து கொள்ள வேண்டும் ---'கலம் கம்பு போட்டாலும் காடை காட்டுக்கு ...'---இந்த உண்மை 'y 'க்குத் தெரியும்.
இப்ப சொல்லுங்க ......ஆதிக்கம் யார்கிட்ட இருக்கு?
கண்மணி  

--

தேமொழி

unread,
May 5, 2018, 4:21:21 PM5/5/18
to மின்தமிழ்

சட்டப்படி விவாகரத்து என்பது கேட்காமல் இருப்பது  பலசமயம் பெண்கள் எடுக்கும் தற்காப்பு முடிவு.
எங்கள் வீட்டின் அருகில் சிறு குழந்தைகளுடன் இருந்த ஒரு இளம் கைம்பெண் பிறர் ஊடுருவலைத் தடுக்க இரவில் தனது கணவனின் ஆவி தினமும் வருவதாகக் கதைகட்டிப் பேச ஆரம்பித்தார். அச்சத்துடன் பிறர் விலக வேண்டும் என்பது அவர் திட்டம்.  அவர் கணவரை அவர் மறக்கவில்லை என்று காட்டும் முயற்சி. அவருக்கு அடுத்த ஆண்கள், மறுமணம் என்பதில் எல்லாம் அக்கறையில்லை என்பதை அவர் குறிப்பால் உணர்த்துவதற்காகச்  செய்த நாடகம். 
புரிந்து கொள்ள  வேண்டியவர்கள் புரிந்திருப்பார்கள், இல்லையா?

அடுத்த ஆண்கள்  தங்களுக்கு   வாய்ப்பு கிடைத்ததாக, வழி திறக்கப்பட்டதாக நினைத்து அணுகாமல் இருக்க எட்டி நிற்க வைக்க எடுக்கும் முயற்சி மணவிலக்கு கோரிக்கை வைக்காமல் இருப்பது.  கேட்டால் கூட கணவனே அவ்வாறுதான் அசிங்கமாகப் பேசி செய்தி பரப்புவான். அவனுக்கு வேண்டியது குற்றம் தன் மீது இல்லை பெண் மீது காட்ட வேண்டும் என்ற நோக்கமாக இருக்கும். பழி போட கிடைக்கும் வாய்ப்பு. சட்டப்படி மணவிலக்கு கொடுத்தால் அவன் மகிழ்ச்சியுடன் அடுத்த பெண்ணையும் சித்திரவதை செய்யப் போவான். 

அதாவது, பொதுவாகச்  சட்ட வழியில்  பிரிவு  கேட்டால் அந்த  மணவிலக்கு முயற்சிக்கு வேறுபொருள் உடனே கொடுக்கப்படும்  (அடுத்த வாழ்க்கைக்கு  அடி போடுவது என்று நம் ஊரில் வெகு இயல்பாகப் பேசப்படும் நிலை). அதைத் தவிர்த்து   தாங்கள் எடுக்கும் பிரிவு முடிவின் உள்நோக்கம் அடுத்த ஆணை நாடுவதற்கு அல்ல என்று காட்டும் பெண்ணின்  முயற்சி. இந்த நிலையும்  மாற சில காலம் ஆகும் நம் நாட்டில்.

என்று மக்கள்  அடுத்தவர் தனிப்பட்ட வாழ்வில் நமக்கென்ன அக்கறை, அதை வைத்து ஒருவரைப்பற்றி  முடிவெடுக்க நாம் யார் ? அது அவர்கள் வாழ்க்கை என்ற நினைவு மக்கள் எண்ணத்தில் உருவாகிறதோ அதுவரை ..........மக்களின் மனப்பான்மை என்பது....

பெண்ணியம் என்பதைப் பெண்களின் "ஒழுக்கத்துடன்" இணைத்தே மக்கள் பேசுவதாக இருக்கும் 

உண்மையில் பெண்ணியம் என்பது "உரிமை" என்பதன் வழியில் பார்க்கப்பட வேண்டியது.

ஒழுக்கம் வேறு ....    தன்மதிப்பு எதிர்பார்க்கும் உரிமை வேறு.... 

..... தேமொழி  

தேமொழி

unread,
May 5, 2018, 4:40:05 PM5/5/18
to மின்தமிழ்
மேலும் சிறந்த பெண்ணியவாதி என்று பார்க்க நான் பெண்களை மட்டும் பார்ப்பதில்லை.  ஆண்கள் பலர் உள்ளனர்.

குறிப்பாக,  சென்ற நூற்றாண்டின் சிறந்த பெண்ணியவாதிகள் பெரியார் ... பாரதியார்... பாரதிதாசன் ... அம்பேத்கர்...எழுத்து மூலம் இவர்கள் பெண்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தது வரலாற்றில் நிலைத்துவிட்டது. அவர்கள் போலன்றி   செயலாலும் வாழ்ந்து காட்டியவர்களும்  உள்ளனர்.

பெண்களே குரல் எடுக்கும் நிலை வேறு... அது உரிமைப் போராட்டம்.

எந்த வகையிலும் பாதிக்கப்படாத ஆண்களும் பெண்கள் நல்வாழ்வில் சமவுரிமையில் அக்கறை காட்டுவது  என்பது பெண்களின் முயற்சிக்கும் ஒருபடி மேலே என்பதால் நான் சிறந்த பெண்ணியவாதி என்ற பட்டத்தை 
தயக்கமின்றி  ஆண்களுக்கே வழங்க விரும்புவேன்.

..... தேமொழி 

தேமொழி

unread,
May 5, 2018, 4:58:19 PM5/5/18
to மின்தமிழ்
நன்றி இந்தக் கேஸ் ஸ்டடிக்கு... இதனை இரண்டாகப் பிரித்து விவாதத்திற்கு எடுப்போம்.
குறிப்பாகச் செல்வன் தனது கோணத்தில்  விவரிக்கலாம், அது மேலும் அவருக்குப் பல உண்மைகளைத் தெளிவு படுத்தும்...
நான் x  ...y... க்கு பெயர் கொடுத்துவிடுகிறேன். குறிப்பிட உதவியாக இருக்கும்.

On Saturday, May 5, 2018 at 12:34:17 PM UTC-7, kanmanitamilskc wrote:

தேமொழி

unread,
May 5, 2018, 5:15:50 PM5/5/18
to மின்தமிழ்

On Saturday, May 5, 2018 at 1:58:19 PM UTC-7, தேமொழி wrote:
நன்றி இந்தக் கேஸ் ஸ்டடிக்கு... இதனை இரண்டாகப் பிரித்து விவாதத்திற்கு எடுப்போம்.
குறிப்பாகச் செல்வன் தனது கோணத்தில்  விவரிக்கலாம், அது மேலும் அவருக்குப் பல உண்மைகளைத் தெளிவு படுத்தும்...
நான் x  ...y... க்கு பெயர் கொடுத்துவிடுகிறேன். குறிப்பிட உதவியாக இருக்கும்.

குடும்பம் - 1:
ஒரு கணவன் =' குமார் '
உயர்ந்த அரசுப்பதவியில் இருந்த தந்தைக்கு ஒரே ஆண்வாரிசாகத் தோன்றிய செல்லப்பிள்ளை .
திருமணம் முடிந்தது .....மனைவி =' வாசுகி  '.   S.S.L.C படித்தவள்.
வீட்டுப் பெரியவருக்கு நல்ல சம்பாத்தியம்......அவரே குடும்பப் பொறுப்பை ஏற்றார். குமாருக்கு  தந்தை செல்வாக்கால் தனியார் நிறுவனத்தில் வேலை.
அவன் சம்பாத்தியத்தை யாரும் கேட்கவில்லை......அவன் குடித்தே தீர்த்தான்......3 குழந்தைகள் பெற்று விட்டான்......பொறுப்பே வர வழியில்லை.1977.......
 தந்தை இயற்கை எய்தினார்......குடும்பம் தள்ளாடியது......அவன் போதையில் தள்ளாடினான்......தந்தையின் பென்ஷன் தாய்க்கு வந்து சேரும்......
3 குழந்தைகளுக்கான பள்ளிச்செலவும் பிற செலவுகளும்......' வாசுகி 'க்கு  வாழ்க்கை நரகமானது.
S.S.L.C.படித்த பெண்ணுக்கு சிவகாசியில் 'தீப்பெட்டி  கெட்டு ஒட்டும்' வேலைத் தவிர வேறேதும் கிடைக்காது. எந்நேரமும் பசைக்கையோடு இருக்க வேண்டும். கந்தக நெடியுடன் ........

அவள் தன்  மூன்று குழந்தைகளோடு புகுந்த வீட்டை விட்டு வெளியேறினாள் .
தனக்கு ஆதரவாகத் தன் விதவைத் தாயுடன் சென்று சேர்ந்து விட்டாள் . 

கேஸ் ஸ்டடி அனாலிசிஸ்: 
குமார்   வளர்க்கப்பட்டது இணைந்தே வாழ்ந்த பெற்றோர்களால்.
குமாரும் அவன் உடன்பிறப்பும்  அக்கறையுடன் அம்மா அப்பாவால்  வளர்க்கப்பட்டதாகத்தான் தெரிகிறது.
குமாரின் அப்பாவிற்கு நல்ல வேலை, மகனுக்கு வேலை வாங்கி வாழ்க்கையில் நிலை நிறுத்த உதவியவர்.
அம்மா, அக்காலத்து அம்மா..அதாவது கொடுக்கப்பட்ட குறிப்புகளின்படி 1930 களில் பிறந்திருக்கக்கூடிய ஒரு அம்மையார். 
நிச்சயம் குடும்பத்தலைவி என்ற அந்தப் பொறுப்பைத்  தவிர தனக்கென வேறு வேலை, பதவி, பணம் என்றெலாம் எதிர்பார்க்காமல் குடும்பப் பொறுப்பில் மட்டுமே அக்கறை செலுத்தியிருப்பார். 

எனது கேள்வி:
நம் நாட்டு வழக்கப்படி பெற்றோர்கள் பிரியாமல் இணைந்து  அக்கறையுடன் பொறுப்புடன் வளர்க்கப்பட்ட குமார் உருப்படாமல் போக என்ன காரணம்.
தந்தையின் மேற்பார்வை இருக்கிறது, தாயாரின் அன்புமிக்க பராமரிப்பு இருக்கிறது, ஆனால் பிள்ளை உருப்படவில்லை.  
எங்கே பிழை ?

It is loading more messages.
0 new messages