கடவுள் என்றால் என்ன?

181 views
Skip to first unread message

Kasiganesan Ranganath

unread,
Jan 26, 2010, 12:45:04 AM1/26/10
to mint...@googlegroups.com
 
 
இதெல்லாம் பெரிய விஷயம். நான் சிறுவன். எனக்குத் தெரிந்ததை பணிவோடு தங்கள் முன்வைக்கிறேன். பிழையிருப்பின் மன்னிக்கவும். சுட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

கடவுள் என்பது சுத்தமான தமிழ்ச்சொல். வேறு எந்தமொழியிலும் இதற்கு ஈடான சொல் இல்லை(அந்தர்யாமி, அந்தராத்மா போன்றவை இதற்குச் சமமாகா).

நாம் கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்பது என் கருத்து. ஒருவேளை விதியின் சதியோ என்னமோ.

உதாரணத்திற்குத் திருவரங்கரை எடுத்துக் கொள்வோம்.(இதைச்சொல்வதால் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். நான் அரங்கர்மீது மிகுந்த காதலுள்ளவன். அதனாலேயே என் ஒவ்வொரு மடலிலும் அரங்கன் என்று புனைப்பெயர் இடுகிறேன்.)

அதாவது அரங்கர் பாம்பின்மீது பள்ளிகொண்டதுபோல அமைப்பது அரங்கரிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்காக என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு சிறு நாகப்பாம்பைக் கண்டாலே படை நடுங்குமென்றால் அவ்வளவு பெரிய ஆதி சேஷனிருக்க நாம் கிட்டே நெருங்குவோமா? ஆக கடவுளின்மீது பயம் வரவேண்டும் என்பது அதன் கருத்தாகும். ஆனால் அரங்கரோ இந்த மண்ணின் விளைவு. அவர் ஏன் நம்மைப் பயமுறுத்தவேண்டும். அவர் நிச்சயம் அன்புள்ளம் கொண்டவராகத்தான் இருக்கவேண்டும். இப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை.


எனக்குத்தெரிந்தவரை அன்புதான் எல்லாம். பக்தி என்பதெல்லாம் சும்மா.


அன்பின் வழியதுயிர்நிலை

என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம்.

புழு பூச்சிகளெல்லாம் பக்தி செய்வதில்லையே. ஆனால் அன்பு செய்யும். இதெல்லாம் அறிவியலுக்கு அகப்படாது.

நாமெல்லோரும் அன்புசெய்வோம். நமக்கு அரங்கனருள் நிச்சயம் உண்டு. மூவரும் தேவரும் அவனைக் கண்டதில்லை. ஆனால் நம் அன்புக்கு நிச்சயம் அகப்படுவான்.


அன்புட‌ன்,

அர‌ங்க‌ன்.

karuannam annam

unread,
Jan 26, 2010, 1:41:27 PM1/26/10
to mint...@googlegroups.com

நல்ல

சிந்தனை. விரித்து எழுதுங்கள்.

அன்பு

என்பதன் வெளிப்பாடு, யாரிடம், எப்பொழுது, எவ்வாறு, ஏன் என்பது பற்றியெல்லாம் எழுதுங்கள்.

நன்றி

 சொ.வினைதீர்த்தான்

2010/1/26 Kasiganesan Ranganath <ranga...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

PENNESWARAN KRISHNA RAO

unread,
Jan 27, 2010, 2:49:51 AM1/27/10
to mint...@googlegroups.com
மூவரும் தேவரும் அவனைக் கண்டதில்லை. ஆனால் நம் அன்புக்கு நிச்சயம் அகப்படுவான்.
 
உங்களைப் போன்றவர்களை எங்களிடம் அனுப்பி இருக்கிறானே.  அதுவே அவன் என்றாவது அகப்படுவான் என்கிறதற்கு நிரூபணமாகிறது அரங்கனாரே.
 
அற்புதமான சிந்தனை உங்களுடையது.  வாழ்த்துக்கள்
 
பென்னேஸ்வரன்

2010/1/27 karuannam annam <karu...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

Rudra

unread,
Jan 27, 2010, 8:29:43 AM1/27/10
to mint...@googlegroups.com
கடவுள் என்ற சொல் தூய தமிழ் சொல்லே. அது இரண்டு சொல் ஒன்றாகியது. கட உள். அதாவது எமக்கு உள்ளே, எமது உள்ளத்தை அறி.  cross inside. the journey within. 



--
AuM NaMaH ShIvAyA
Reply all
Reply to author
Forward
0 new messages