அவ்வையார்

254 views
Skip to first unread message

நினா.கண்ணன்

unread,
Aug 13, 2008, 9:12:08 AM8/13/08
to tamil2friends, muththamiz, minT...@googlegroups.com

அவ்வையார் என்ற பெயரை கேட்டதும் ஓரே ஓரு அவ்வையார்தான் நமக்கு நினைவுக்கு வரும்.ஆனால் உண்மையில் 4 அவ்வையார்கள் தமிழுக்கு தொண்டு புரிந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

                     "ச‌ங்க‌கால‌ அவ்வையார்" என்று அழைக்க‌ப்ப‌டுப‌வ‌ர் 2ம் நூற்றாண்டை சேர்ந்த‌வ‌ர்  "இடைக்கால‌ அவ்வையார்" 10ம் நூற்றாண்டை சேர்ந்த‌வர்,

     நீதி நூலை இயற்றியவர் மூன்றாவது  அவ்வையார் 12ம் நூற்றாண்டை சேர்ந்த‌வர்,


 க‌டைசியாக‌ அடையாள‌ம் காண‌ப்ப‌ட்ட‌ அவ்வையார் 14ம் நூற்றாண்டை சேர்ந்த‌வர்,இவ‌ர் விநாய‌க‌ர் அக‌வ‌ல் பாடியவ‌ர் ,அத‌ற்க்கு பிற‌கு அவ்வையார் அள‌வுக்கு யாரும் உய‌ர‌வில்லை


--
நினா.கண்ணன்



devoo

unread,
Aug 13, 2008, 9:58:01 AM8/13/08
to மின்தமிழ்


On Aug 13, 6:12 am, "நினா.கண்ணன்" <kannan...@gmail.com> wrote:
// அவ்வையார் என்ற பெயரை கேட்டதும் ஓரே ஓரு அவ்வையார்தான் நமக்கு
நினைவுக்கு
வரும்.ஆனால் உண்மையில் 4 அவ்வையார்கள் தமிழுக்கு தொண்டு புரிந்துள்ளதாக
ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.//

விரிவான, வலுவான ஆதாரங்களுடன் எழுதினால் மேலும் தெளிவு பெறலாம்.

தேவ்

Narayanan Kannan

unread,
Aug 13, 2008, 9:25:51 PM8/13/08
to minT...@googlegroups.com
எது சரி?
 
ஔவை?
அவ்வை?
 
Xsitg;ghl;b = mt;itg;ghl;b = mt; itg;ghl;b (விபரீதமாகப் போகிறதே! என்று ஒரு நண்பர் எழுதியுள்ளார்).
 
கண்ணன்


2008/8/13 devoo <rde...@gmail.com>

Hari Krishnan

unread,
Aug 13, 2008, 9:41:25 PM8/13/08
to minT...@googlegroups.com


2008/8/14 Narayanan Kannan <nka...@gmail.com>

எது சரி?
 
ஔவை?
அவ்வை?
 
ஒளவை தான். 
 
 
 
 
Xsitg;ghl;b = mt;itg;ghl;b = mt; itg;ghl;b (விபரீதமாகப் போகிறதே! என்று ஒரு நண்பர் எழுதியுள்ளார்).
 
 
யுனிகோடுக்குள் ஒரு தனிகோடு.  ஒண்ணும் படிக்க முடியல.  (அல்லது ஒருவேளை அவ்வைப்பாட்டியைப் பற்றிய திரேதா யுகத்து ஜோக்கா?)

--
அன்புடன்,
ஹரிகி.

Narayanan Kannan

unread,
Aug 13, 2008, 9:46:56 PM8/13/08
to minT...@googlegroups.com
2008/8/14 Hari Krishnan <hari.har...@gmail.com>


Xsitg;ghl;b = mt;itg;ghl;b = mt; itg;ghl;b (விபரீதமாகப் போகிறதே! என்று ஒரு நண்பர் எழுதியுள்ளார்).
 
 
யுனிகோடுக்குள் ஒரு தனிகோடு.  ஒண்ணும் படிக்க முடியல.  (அல்லது ஒருவேளை அவ்வைப்பாட்டியைப் பற்றிய திரேதா யுகத்து ஜோக்கா?)
 
அடக்கடவுளே! சரிதான்!! அது திரேதா யுகமல்ல! ஈழத்து பாண்டு! இதோ அதன் யுனிக்கோடு (வெட்டி ஒட்டியதில் பிரச்சனை விடுபட்டுப்போனது)
 
ஔவைப்பாட்டி என்று குழந்தையிலிருந்து படித்து வருகிறோம்.
 
இப்போது அவ்வைப்பாட்டி என்று எழுதுகிறோம் என்று வைத்துக் கொண்டால்... ஒரு வம்பர், இப்படியும் இதை எழுதலாமோ? என்று கேட்டு இருக்கிறார்!
 
அவ் வைப்பாட்டி!
 
இவர் காளமேகப்புலவர் வகையறா போலும் :-)
 
க.

Kannan Natarajan

unread,
Aug 13, 2008, 9:51:32 PM8/13/08
to minT...@googlegroups.com
இரண்டுமே சரி.
 
(ஒள)வை   - 1960களுக்கு முன்
(அவ்)வை - 1960களுக்கு பின் - எழுத்து சீர்திருத்தம்
 
ஐயப்பன்,அய்யப்பன் போல, வவ்வால்,வெளவால் என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றாகிவிட்ட நிலையில்,கீழுள்ள சரவணனின் கட்டுரையைப் பார்க்க
 
தமிழ் எழுத்துச் சீரமைப்பின் வரலாறும் அதன் இன்றைய தேவைகளும்...
-------------------------------------------------------------------
சரவணன்

மீண்டும் நாம் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி யோசிக்க வேண்டிய தேவையைக் கணினியின் வருகையும் உறுதிப்படுத்தி உள்ளது. இன்றைய தமிழ் ஆட்சியாளர்களும், தனித்தமிழ் ஆர்வலர்களும் எழுத்துச் சீர்திருத்தத்தை மொழிக்கு எதிரானதாக முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்து வருகின்றனர். அத்தகையவர்களுக்கு எழுத்துச் சீர்திருத்த வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை தற்காலத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் மொழி வரி வடிவம், ஒலி வடிவம் என இரண்டு வடிவங்களுடன் இயங்கி வருகிறது. இதில் ஒலி வடிவமே அடிப்படையானது. எழுத்து வடிவம் என்பதெல்லாம் ஒலி வடிவத்தைப் புரிந்து கொள்ளும் பொருட்டு நாமாக ஏற்படுத்திக் கொண்ட குறியீடுகள்தான். ஆக, இந்தக் குறியீடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதால் தமிழ் மொழிக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடப் போவதில்லை. அதுவுமின்றிக் காலப் போக்கில் மொழியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் இயற்கையானதே.
 
தமிழில் முதன்முதலாக எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனையை செயல்படுத்திக் காட்டியவராக வீரமாமுனிவர் அறியப்படுகிறார். வீரமாமுனிவருக்கு முந்தைய தமிழ் வழக்கில் ஏகாரம், ஓகாரப் பிரிவினைகள் இல்லை. அவருடைய காலத்திற்குப் பின்னரே இவ் வழக்குகள் புழக்கத்திற்கு வந்தன. ஆக, மாற்றம் குறித்த சிந்தனை 1720களிலேயே இருந்ததாக அறிய முடிகிறது.

தொடர்ந்து 1934ல் சென்னையில் நடந்த தமிழன்பர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட எழுத்துச் சீர்திருத்த தீர்மானத்தையடுத்து பெரியார் தன்னுடைய 'குடியரசு' இதழின் வழியாகச் சில சீர்திருத்த முயற்சிகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். அது பற்றிப் பெரியார் கூறும்பொழுது,

"மாற்றுவதும் திருத்துவதும் யாருக்கும் எதற்கும் இழிவாகவோ குற்றமாகவோ ஆகிவிடாது. மேன்மையடையவும் காலத்தோடு கலந்து செல்லவும் எதையும் மாற்றவும் திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய்ப் பாட்டி காலத்தைய பண்டைக் காலத்தைய பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால் அழிபட்டுப் போவோம். பின்தங்கிப் போவோம். மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க் கருவிகள் காலத்துக்கேற்ப மாற்றப்பட வேண்டும்," என்று கூறியதையொட்டி பெரியாருடைய நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளலாம்.

1934ஐத் தொடர்ந்து 1941இல் மதுரையிலும், 1984இல் சென்னையிலும் நடந்த தமிழ் மாநாடுகளின்போது எழுத்துச் சீர்திருத்தம் பற்றி விவாதிக்கப்பட்டுச் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை 'சுதேசமித்திரன்' நாளிதழ் செயல்பாட்டளவில் சிறிது காலம் பயன்படுத்தி வந்து பிற்பாடு கைவிட்டது. மீண்டும் 1951ல்
  • தெ.பொ.மீனாட்சிசுந்தரம்,
  • மு.வரதராசனார்,
  • சேதுப்பிள்ளை

முதலானோர் குழு ஒன்று அரசுக்கு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய அறிக்கை அளித்தது. அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறையில் இறுதி வரை செயல்படுத்திக் காட்டியவர் பெரியார் மட்டுமே. பெரியாரின் சீர்திருத்தங்களில் "னை, னா, னோ, னொ" போன்றவற்றை மட்டும் அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. அதையே நாம் இப்பொழுது பயன்படுத்தி வருகிறோம்.

எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வா.செ. குழந்தைசாமி, ''தமிழில் இன்று நாம் பயன்படுத்தும் 247 ஒலியெழுத்துகளுக்கு 124 வரி வடிவம் தேவையில்லை. சுமார் 30 குறியீடுகளில் 247 ஒலிகளையும் எழுத்து வடிவில் உருவாக்க முடியும். அவ்வளவு எளிமைக்கு இடம் இருக்கும்பொழுது, நாம் அதைத் தவறாது, தாமதிக்காது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்கிறார். ஏன்? 30 குறியீடுகளாகக் குறைக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையாக வா.செ. குழந்தைசாமி, "விசைப்பலகையில் (keyboard) நமது மொழியின் வேகம் ஆங்கிலத்தோடு ஒப்பிடத் தகுந்ததாக இல்லை. ஒரு நிமிடத்துக்கு 45 சொற்கள் ஆங்கிலத்திலும், 41 சொற்கள் தமிழிலும் அடிக்க முடிகிறது. ஆங்கிலத்தை விடவும் தமிழில் வேகம் குறைவாகவே தட்டச்சு செய்ய முடிகிறது,"என்பதை முன் வைக்கிறார்.
 
247 ஒலி எழுத்துகளுக்கு 124 வரி வடிவம் உள்ளதால் அடிப்படை எழுத்துகளைக் குழந்தைகள் மனதில் நிறுத்திப் புரிந்து கொள்வதற்கு நீண்ட நாள்கள் பிடிக்கின்றன. இதனால் அடிப்படைக் கல்வி என்பதை விரைவாக அடைதல் என்பது சாத்தியமில்லாததாக ஆகி விடுகிறது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது பயன்படுத்தி வரும் எழுத்துகளிலுள்ள வளைவுகளும், சுழிவுகளும் கற்றுக் கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன என்கிற வாதமும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
 
ரோமன் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தும் மற்ற பல ஐரோப்பிய மொழிகளுக்கும் ஆங்கிலத்துக்கும் 26 எழுத்துக்கள். ஜெர்மானிய மொழிக்கு 29 எழுத்துக்கள், ரஷ்ய மொழிக்கு 33 எழுத்துக்கள். இன்று உலகில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் 13 மொழிகளில் 8 மொழிகள் முப்பதுக்கும் குறைவான வரி வடிவங்களையே கொண்டுள்ளன.
 
கணினிப் பயன்பாடு வேகமாகப் பரவி வருகிற இந்தக் காலத்தில் கணினிக்குத் தகுந்தவாறு தமிழ் மொழியையும் வடிவமைப்பது குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.
 
ஏன் மாற்ற வேண்டும்?
 
எப்படி மாற்ற வேண்டும்?
 
என்பதெல்லாம் இனி வாசகர்களின் விவாதங்களுக்கு...
 
நன்றி: ஆறாம்திணை

Hari Krishnan

unread,
Aug 13, 2008, 9:53:44 PM8/13/08
to minT...@googlegroups.com


2008/8/14 Narayanan Kannan <nka...@gmail.com>
2008/8/14 Hari Krishnan <hari.har...@gmail.com>

 
ஔவைப்பாட்டி என்று குழந்தையிலிருந்து படித்து வருகிறோம்.
 
அதான் ஔகாரத்தையும் ஐகாரத்தையும் வெறுத்து ஒதுக்கத் தொடங்கிட்டாங்களே எந்தக் காலத்திலேயோ....
 
காலய்யய் பார்த்தால் வேலய்யய் செய்வாய்.  வய்கய்யய்ப் பார்த்தால் நீராடி எழுவாய்.
 
ஔவை அவ்வையாக மாறத் தொடங்கியது ஆரம்ப காலங்களில் எதுகை வசதிக்காக.  இப்போதெல்லாம் வேறு காரணங்களுக்காக. 

Shylaja N

unread,
Aug 13, 2008, 10:09:59 PM8/13/08
to minT...@googlegroups.com
பெரிய   தலைலாம் ்பேசும் இடத்தில்    மதுரகவி  சொன்னதுபோல   மின்மினியாடுவது சாத்தியமோ
சூரியன்  முன்னே?  ஆனாலும்   ஔவை பற்றீ  படித்த போது  அவ்வை என்பது அம்மை  என்பதின் திரிபு  என்றும் 'ஆர்  ' என்னும் உயர்திணை மரியாதைப்பன்மை விகுதி பெற்று அவ்வையார் என மாறி உள்ளது என்றும்  தெரியவந்தது என்பதை  இங்கே
அறிவிக்கலாம் அல்லவா  ?:)

 
2008/8/14, Hari Krishnan <hari.har...@gmail.com>:

Hari Krishnan

unread,
Aug 13, 2008, 10:22:29 PM8/13/08
to minT...@googlegroups.com


2008/8/14 Shylaja N <shyl...@gmail.com>

பெரிய   தலைலாம் ்பேசும் இடத்தில்    மதுரகவி  சொன்னதுபோல   மின்மினியாடுவது சாத்தியமோ
சூரியன்  முன்னே?  ஆனாலும்   ஔவை பற்றீ  படித்த போது  அவ்வை என்பது அம்மை  என்பதின் திரிபு  என்றும் 'ஆர்  ' என்னும் உயர்திணை மரியாதைப்பன்மை விகுதி பெற்று அவ்வையார் என மாறி உள்ளது என்றும்  தெரியவந்தது என்பதை  இங்கே
அறிவிக்கலாம் அல்லவா  ?:)
 
ஓ....தாரளமா அறிவிக்கலாமே.... என்ன ஒண்ணு, அம்மையார் (அதான் Madam, Her Highness...இந்த மடலை அனுப்பிய திருக்கரத்தி) ரொம்ப வெட்கப்படும் சுபாவம் உள்ளவர்கள்.  அதனால்தான் தன் பெயரை வெட்கம் வெட்கம் (Shy லஜ்ஜா) என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது என்று நான் சொல்லவேண்டியிருக்கும்.
 
இது வின்ஸ்லோ அகரதியின் விளக்கம்:
 
ஔவை, (p. 205) [ auvai, ] s. A mother, a matron, an old lady, தாய். 2. A female ascetic- chiefly used of the Jaina sect, தவப்பெண். (p.) 3. An ancient authoress who wrote on moral subjects; she was the eldest of four sisters, who also were authoresses. They were the reputed sisters of திருவள்ளுவர் the author of the Cural, ஔவையார்.
 
இனிமேல் வின்ஸ்லோ, ஓடிஎல் எல்லாவற்றிலும் இந்த நுழைவை ஔகாரத்திலிருந்து அகரத்துக்கு மாற்றும்படி ஒரு கூட்டு விண்ணப்பம் அனுப்புமாறு மின்தமிழைக் கேட்டுக்கொள்கிறேன்.  உடனே அனுப்பஉம்.  (அவ்வை ரைட்டுன்னா, அனுப்பஉம்உம் ரைட்டுதான்.)

Narayanan Kannan

unread,
Aug 13, 2008, 10:26:50 PM8/13/08
to minT...@googlegroups.com
2008/8/14 Hari Krishnan <hari.har...@gmail.com>

 
ஓ....தாரளமா அறிவிக்கலாமே.... என்ன ஒண்ணு, அம்மையார் (அதான் Madam, Her Highness...இந்த மடலை அனுப்பிய திருக்கரத்தி) ரொம்ப வெட்கப்படும் சுபாவம் உள்ளவர்கள்.  அதனால்தான் தன் பெயரை வெட்கம் வெட்கம் (Shy லஜ்ஜா) என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது என்று நான் சொல்லவேண்டியிருக்கும்.
 
 
ஓ! இவர்கள்தானா அந்த பிரபல வங்காளி எழுத்தாளர் ;-)
இவர்கள் மீதுதானே அந்த பட்வா?
 
க.

Shylaja N

unread,
Aug 13, 2008, 10:30:04 PM8/13/08
to minT...@googlegroups.com
?


2008/8/14, Hari Krishnan <hari.har...@gmail.com>:


2008/8/14 Shylaja N <shyl...@gmail.com>
பெரிய   தலைலாம் ்பேசும் இடத்தில்    மதுரகவி  சொன்னதுபோல   மின்மினியாடுவது சாத்தியமோ
சூரியன்  முன்னே?  ஆனாலும்   ஔவை பற்றீ  படித்த போது  அவ்வை என்பது அம்மை  என்பதின் திரிபு  என்றும் 'ஆர்  ' என்னும் உயர்திணை மரியாதைப்பன்மை விகுதி பெற்று அவ்வையார் என மாறி உள்ளது என்றும்  தெரியவந்தது என்பதை  இங்கே
அறிவிக்கலாம் அல்லவா  ?:)
 
ஓ....தாரளமா அறிவிக்கலாமே.... என்ன ஒண்ணு, அம்மையார் (அதான் Madam, Her Highness...இந்த மடலை அனுப்பிய திருக்கரத்தி) ரொம்ப வெட்கப்படும் சுபாவம் உள்ளவர்கள்.  அதனால்தான் தன் பெயரை வெட்கம் வெட்கம் (Shy லஜ்ஜா) என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது என்று நான் சொல்லவேண்டியிருக்கும்>>>>>
 

:):):):):)
 
இதே ஔவை -மன்னிக்க- அவ்வையார்  தனது ஆத்திச்சூடியில் ஔவியம் பேசேல் என்கிறாரே அதுவும்
அவ்வியம்   என்று ஆகுமோ?:)
ஷைல(ஜ்)ஜா!
 

Shylaja N

unread,
Aug 13, 2008, 10:32:50 PM8/13/08
to minT...@googlegroups.com


2008/8/14, Narayanan Kannan <nka...@gmail.com>:
கொரியாக்காரருக்கு குறும்பு  ஜாஸ்தீ!!!!
 
 
ஷை

 
க.

Kannan Natarajan

unread,
Aug 13, 2008, 10:33:24 PM8/13/08
to minT...@googlegroups.com
> அவ்வை ரைட்டுன்னா, அனுப்பஉம்உம் ரைட்டுதான்.

Narayanan Kannan

unread,
Aug 13, 2008, 10:34:59 PM8/13/08
to minT...@googlegroups.com
2008/8/14 Shylaja N <shyl...@gmail.com>


 
கொரியாக்காரருக்கு குறும்பு  ஜாஸ்தீ!!!!
 
 
ஐயோ! தீ யா?
இவர்கள் கண்ணகியுமோ?
 
க.

Shylaja N

unread,
Aug 13, 2008, 10:36:36 PM8/13/08
to minT...@googlegroups.com


2008/8/14, Narayanan Kannan <nka...@gmail.com>:
இல்லை   நான்  சீதை!!(மைதிலி):):):)

 
க.

Narayanan Kannan

unread,
Aug 13, 2008, 10:37:47 PM8/13/08
to minT...@googlegroups.com
2008/8/14 Kannan Natarajan <thar...@gmail.com>

> அவ்வை ரைட்டுன்னா, அனுப்பஉம்உம் ரைட்டுதான்.


வா.செ. குழந்தைசாமி, "விசைப்பலகையில் (keyboard) நமது மொழியின் வேகம் ஆங்கிலத்தோடு ஒப்பிடத் தகுந்ததாக இல்லை. ஒரு நிமிடத்துக்கு 45 சொற்கள் ஆங்கிலத்திலும், 41 சொற்கள் தமிழிலும் அடிக்க முடிகிறது. ஆங்கிலத்தை விடவும் தமிழில் வேகம் குறைவாகவே தட்டச்சு செய்ய முடிகிறது,"என்பதை முன் வைக்கிறார்.

 
இது தனி இழையாகவே பேச வேண்டிய விஷயம்!
 
பேரா.கோவிந்தராஜனின் (சிங்கப்பூர்) 'கணியன்' விசைப்பலகைத் திட்டம் இந்தக் குறைபாடை எந்த எழுத்துச் சீர்த்திருத்தமும் இல்லாமல் செய்யமுடியும் என்று காட்டியிருக்கிறது.
 
கண்ணன்

Narayanan Kannan

unread,
Aug 13, 2008, 10:39:01 PM8/13/08
to minT...@googlegroups.com
2008/8/14 Shylaja N <shyl...@gmail.com>

 
 
இல்லை   நான்  சீதை!!(மைதிலி):):):)
 
 
ஓ! ஹரி பேசும்,,கற்புக்கனலி..சரி..சரி :-)
 
க>

Shylaja N

unread,
Aug 13, 2008, 10:43:07 PM8/13/08
to minT...@googlegroups.com


2008/8/14, Narayanan Kannan <nka...@gmail.com>:
2008/8/14 Shylaja N <shyl...@gmail.com>
 
 
இல்லை   நான்  சீதை!!(மைதிலி):):):)
 
 
ஓ! ஹரி பேசும்,,கற்புக்கனலி..சரி..சரி :-)>>>
 
உங்களுக்கு முன்னாடி   அவரைத் தெரியும்    மரத்தடிப்பழக்கம்!!!  தப்பா  சொன்னா
அரி(றி)ஞ்சுடுவாரில்ல?:):)

 
க>

வேந்தன் அரசு

unread,
Aug 13, 2008, 10:43:33 PM8/13/08
to minT...@googlegroups.com
அவ்வைதான் சரி
 
தமிழில் ஒளகார சொற்கள் மிக குறைவு
 
ஒளவை = அவ்வை
பெளவம் = பவ்வம்
நெளவி = நவ்வி
வெளவால் = வாவல்
 

Hari Krishnan

unread,
Aug 13, 2008, 10:45:49 PM8/13/08
to minT...@googlegroups.com


2008/8/14 Kannan Natarajan <thar...@gmail.com>

> அவ்வை ரைட்டுன்னா, அனுப்பஉம்உம் ரைட்டுதான்.


வா.செ. குழந்தைசாமி, "விசைப்பலகையில் (keyboard) நமது மொழியின் வேகம் ஆங்கிலத்தோடு ஒப்பிடத் தகுந்ததாக இல்லை. ஒரு நிமிடத்துக்கு 45 சொற்கள் ஆங்கிலத்திலும், 41 சொற்கள் தமிழிலும் அடிக்க முடிகிறது. ஆங்கிலத்தை விடவும் தமிழில் வேகம் குறைவாகவே தட்டச்சு செய்ய முடிகிறது,"என்பதை முன் வைக்கிறார்.
 
பயிற்சி என்பதும் ஒரு காரணம்.  முப்பத்தைந்து வருடங்களாகத் தமிழ்த் தட்டெழுத்துப் பயிற்சி உள்ளவன் நான்.  நான் நிமிடத்துக்கு ஐம்பது வார்த்தைகள் (தமிழில்) தட்டுகிறேன்.  ஒரு வார்த்தை என்பதன் வரையறை (definition) என்ன என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும்.  A combination of five characters is considered one word in English typing.  Which is to say, 'along' is one word.  'a long' (include the space in between) are two words; 'a cat' is one word.  தமிழில் கௌ என்பது மூன்று எழுத்துகளாகக் கணக்கில் எடுக்கவேண்டும். 
 
தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி இருந்த காலத்தில் (நான் தட்டெழுத்துப் பயிற்சி நிலையமும் நடத்தியவன்.  என் குடும்பத் தொழிலே அதுதான்) ஆங்கிலத்துக்கு இணையான வேகத்தில் தமிழில் தட்டும் பல மாணவர்களை உருவாக்கியும் இருக்கிறேன்.
 
இன்னொன்று.  பழைய முறை எழுத்திலும் புதிய முறை எழுத்து மாற்றத்தினாலும் எந்தவித வேக மாறுதலும் ஏற்பட்டுவிடவில்லை.  பழைய லை னை எல்லாவற்றையும் அடிக்க இரண்டு கீ தேவைப்பட்டன என்றால் இப்போதும் அதே இரண்டு கீதான் தேவைப்படுகின்றன.  மாறாக, றா, னா போன்றவை பழைய முறையில் ஒற்றை எழுத்தாக இருந்தன.  இப்போது இதே எழுத்துகளுக்கு இரண்டு கீ தேவைப்படுகின்றன.  வேலைச்சுமை அதிகரித்து இருக்கிறதே தவிர, குறையவில்லை. 
 
ஆகவே, தட்டச்சு வேகத்தை இந்த மாறுதல் அதிகரிக்கிறது என்பதெல்லாம் சும்மா கதை.  (டாக்டர் வா செ குழந்தைசாமி அவர்களை தென்றல் இதழுக்காக பேட்டி கண்டவன் என்ற விதத்தில் ஒன்று.  அவருடைய எழுத்துச் சீர்மை முறை முற்றிலும் வேறுபட்டது.)

Hari Krishnan

unread,
Aug 13, 2008, 10:49:10 PM8/13/08
to minT...@googlegroups.com


2008/8/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அது உங்க சவுகரியம்.  திரவுபதி சேலையைப் போல இழுத்துக் கொண்டே போகமுடியும் இந்தத் தலைப்பை.  பவுத்தர்களுடைய தலையைப் போல மொட்டையாக முடித்துக் கொள்கிறேன்

வேந்தன் அரசு

unread,
Aug 13, 2008, 11:05:45 PM8/13/08
to minT...@googlegroups.com


2008/8/13 Hari Krishnan <hari.har...@gmail.com>
Hari Krishnan சார்
 
உங்களுக்காக நான் எழுத வில்லை.  ஆர்வலர்களுக்காக எழுதுகிறேன்
 
 
பெளத்தம், ஒளதடம் ஒளவியம்,  செளகரியம், திரெளபதி எல்லாம் தமிழ் சொற்கள் அல்ல.
 
பிராமியில் "ஒள" வுக்கு தனி எழுத்து இல்லை என்பதும் கருததக்கது
 


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Kannan Natarajan

unread,
Aug 13, 2008, 11:10:35 PM8/13/08
to minT...@googlegroups.com
åô¤òù¤ò¬ô𢠠ªð£Áî¢îõ¬ó   å¼ê¤ô  ñ£ø¢øé¢è¬÷î¢
îõ¤ó,  ªî£ô¢è£ð¢ð¤òó¢   è£ôî¢   îñ¤«ö   êé¢è   è£ôî¢î¤ô¢ õöé¢è¤»÷¢÷¶.  ä, å÷ âù¢Âñ¢ Ã좪ì£ô¤è÷¢, ªñ£ö¤ ºîô¢  ñø¢Áñ¢  ÞÁî¤ò¤ô¢  õ¼ñ¢ â¿î¢¶è÷¢  ðø¢ø¤î¢  ªî£ô¢è£ð¢ð¤òó¢
°ø¤ð¢ð¤ì¢´÷¢÷  õ¤î¤è÷¤ô¤¼ï¢¶  êé¢èè£ôî¢   îñ¤ö¢   å¼ê¤ô
ñ£ø¢øé¢è¬÷𢠪ðø¢Á õ÷ó¢ï¢¶÷¢÷¶.

5.2.1 ä, å÷ - Ã좪ì£ô¤è÷¢

àò¤ªó£ô¤è÷¤ô¢    ä,   å÷    âù¢Âñ¢    Þóí¢´ñ¢
Ã좪ì£ô¤è÷£°ñ¢.  ªî£ô¢è£ð¢ð¤òó¢  è£ôî¢î¤ô¢   äè£óñ¢,  ä
âù¢Áñ¢  Üò¢  âù¢Áñ¢ Þ¼ õ¬èò£è â¿îð¢ðì¢ì¶. Ýù£ô¢
å÷è£óñ¢ Üõó¢ è£ôî¢î¤ô¢ å÷ âù¢Á ñ좴«ñ â¿îð¢ðì¢ì¶;
Üõ¢ âù¢Á â¿îð¢ðìõ¤ô¢¬ô.

Þîø¢°  «ïó¢ ñ£ø£èê¢ êé¢è è£ôî¢î¤ô¢ äè£óñ¢, ä âù¢Á
ñ좴«ñ  â¿îð¢ð좴÷¢÷¶ ; Üò¢  âù¢Á  â¿îð¢ðìõ¤ô¢¬ô.
ê£ù¢ø£èê¢  êé¢è  è£ôî¢  îñ¤ö¢ Þôè¢è¤òé¢è÷¤ô¢  äõó¢, ä,
äñ¢ð¶ «ð£ù¢ø ªê£ø¢è÷¢ Üò¢õó¢. Üò¢ï¢¶, Üò¢ñ¢ð¶ âù¢ø£ø¢
«ð£ô  âï¢î   æó¤ìî¢î¤½ñ¢    â¿îð¢ðìõ¤ô¢¬ô.   Ýù£ô¢
å÷è£ó«ñ£  êé¢èè£ôî¢  îñ¤ö¤ô¢  å÷ âù¢Áñ¢ Üõ¢ âù¢Áñ¢
Þ¼ õ¬èò£è â¿îð¢ð좴÷¢÷¶.

ªð÷õñ¢ (èìô¢) âù¢ø ªê£ô¢ ªð÷õñ¢ âù¢Áñ¢ ðõ¢õñ¢
âù¢Áñ¢  â¿îð¢ð좴÷¢÷¶.  Þ«î«ð£ôè¢   ªè÷¬õ (Üôó¢,
ðö¤ê¢ªê£ô¢) âù¢ø  ªê£ô¢ èõ¢¬õ âù¢Áñ¢ ªè÷¬õ  âù¢Áñ¢
â¿îð¢ð좴÷¢÷¶.

郎øò¤¼ñ¢ ªð÷õñ¢ °¬øðì ºèªè£í¢´                            (°ø¤ë¢ê¤ð¢ð£ì¢´ : 47)

ðõ¢õñ¢ ñ¦ñ¤¬êð¢ ð£ô¢èî¤ó¢ ðóð¢ð¤
                       (ªð£¼ïó£ø¢Áð¢ð¬ì : 135)

ðèô¢õó¤ù¢ èõ¢¬õ Ü뢲¶ñ¢     (Üèï£ÛÁ, 118 :6)
áóªù£´ â¿ï¢î ªè÷¬õ«ò£ ªðó¤«î
                             (Üèï£ÛÁ, 186 :7)

சங்க காலத் தமிழில் ஔகாரம் எவ்வெவ்வாறு எழுதப்பட்டது?
 
"ஔ"  என்றும் "அவ்"  என்றும்   இருவகையாக எழுதப்பட்டது.
 

Albert Fernando

unread,
Aug 13, 2008, 11:32:45 PM8/13/08
to minT...@googlegroups.com
ஒலியனியலைப்  பொறுத்தவரை   ஒருசில  மாற்றங்களைத்
தவிர,  தொல்காப்பியர்   காலத்   தமிழே   சங்க   காலத்தில் வழங்கியுள்ளது. 
ஐ, ஒள என்னும் கூட்டொலிகள், மொழி முதல்  மற்றும் 
இறுதியில்  வரும் எழுத்துகள்  பற்றித்  தொல்காப்பியர்
குறிப்பிட்டுள்ள  விதிகளிலிருந்து  சங்ககாலத்   தமிழ்   ஒருசில
மாற்றங்களைப் பெற்று வளர்ந்துள்ளது.
5.2.1 ஐ, ஒள - கூட்டொலிகள்
உயிரொலிகளில்    ஐ,   ஒள    என்னும்    இரண்டும்
கூட்டொலிகளாகும்.  தொல்காப்பியர்  காலத்தில்   ஐகாரம்,  ஐ
என்றும்  அய்  என்றும் இரு வகையாக எழுதப்பட்டது. ஆனால்
ஒளகாரம் அவர் காலத்தில் ஒள என்று மட்டுமே எழுதப்பட்டது;
அவ் என்று எழுதப்படவில்லை.
இதற்கு  நேர் மாறாகச் சங்க காலத்தில் ஐகாரம், ஐ என்று
மட்டுமே  எழுதப்பட்டுள்ளது ; அய்  என்று  எழுதப்படவில்லை.
சான்றாகச்  சங்க  காலத்  தமிழ் இலக்கியங்களில்  ஐவர், ஐந்து,
ஐம்பது போன்ற சொற்கள் அய்வர். அய்ந்து, அய்ம்பது என்றாற்
போல  எந்த   ஓரிடத்திலும்    எழுதப்படவில்லை.   ஆனால்
ஒளகாரமோ  சங்ககாலத்  தமிழில்  ஒள என்றும் அவ் என்றும்
இரு வகையாக எழுதப்பட்டுள்ளது.
பௌவம் (கடல்) என்ற சொல் பௌவம் என்றும் பவ்வம்
என்றும்  எழுதப்பட்டுள்ளது.  இதேபோலக்   கௌவை (அலர்,
பழிச்சொல்) என்ற  சொல் கவ்வை என்றும் கௌவை  என்றும்
எழுதப்பட்டுள்ளது.
நிறையிரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு                            (குறிஞ்சிப்பாட்டு : 47)
பவ்வம் மீமிசைப் பால்கதிர் பரப்பி
                       (பொருநராற்றுப்படை : 135)
பகல்வரின் கவ்வை அஞ்சுதும்     (அகநானூறு, 118 :6)
ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிதே
                             (அகநானூறு, 186 :7)
சங்க காலத் தமிழில் ஔகாரம் எவ்வெவ்வாறு எழுதப்பட்டது?
 
"ஔ"  என்றும் "அவ்"  என்றும்   இருவகையாக எழுதப்பட்டது.
 


2008/8/13 Kannan Natarajan <thar...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Aug 13, 2008, 11:59:40 PM8/13/08
to minT...@googlegroups.com
அவ்வையும் ஒளவையும் ஒரே மாதிரி ஒலிப்பு இல்ல
 
அவ்வை - avvai 
ஒளவை -awai அல்லது auai

ஒளவை யில் வ் ஒலிக்கப்படாது
அவ்வை யில் வ் ஒலிக்கப்படும்

Kannan Natarajan

unread,
Aug 14, 2008, 12:10:28 AM8/14/08
to minT...@googlegroups.com
அவ்வை - "av" vai
ஒளவை   - "ou" vai
 
ஒளவை யில் "ஒள" ஒலிக்கப்படும்
அவ்வை யில் "வ்" ஒலிக்கப்படும்
 
ஒரு வேளை,"ஒளவை" - "ஒ" "ள" "வை" என்று தவறாக உச்சரிக்காமல் இருப்பதற்கு "அவ்வை" பயன்படுத்துவதில் பலன் கண்டனரோ:-) :-)
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்


 
2008/8/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அவ்வையும் ஒளவையும் ஒரே மாதிரி ஒலிப்பு இல்ல

devoo

unread,
Aug 14, 2008, 3:53:04 AM8/14/08
to மின்தமிழ்


On Aug 13, 6:12 pm, "நினா.கண்ணன்" <kannan...@gmail.com> wrote:
// அவ்வையார் என்ற பெயரை கேட்டதும் ஓரே ஓரு அவ்வையார்தான் நமக்கு
நினைவுக்கு
வரும்.ஆனால் உண்மையில் 4 அவ்வையார்கள் தமிழுக்கு தொண்டு புரிந்துள்ளதாக
ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.//

அன்பர்கள் சொல்லியல், ஒலியியல், வரிவடிவ இயல் அனைத்தையும் முடிப்பதற்குள்
ஐந்தாம் ஔவை (அய்ந்தாம் அவ்வை) அவதாரம் எடுத்து விடுவார்! ஆமாம் இழையைத்
தொடங்கிய அன்பர் நினா கண்ணன் எங்கே?
இழை பஞ்சாகிப் பருத்திச் செடிக்குள் புகுவதற்கு முன் அவர் விடை தந்தால்
நல்லது.
தேவ்

Kannan Natarajan

unread,
Aug 14, 2008, 4:55:23 AM8/14/08
to minT...@googlegroups.com
> ஆமாம் இழையைத் தொடங்கிய அன்பர் நினா கண்ணன் எங்கே?
> இழை பஞ்சாகிப் பருத்திச் செடிக்குள் புகுவதற்கு முன் அவர் விடை தந்தால்
> நல்லது.
 
ஒளவை 3,4,5தோ - இத்தேடல் நம் அனைவருக்கும் தகும். நினா கண்ணனுக்கு மட்டுமல்ல.
 
"ஓதுவது ஒழியேல்!"
 
தமிழார்வமகலா,
கண்ணன் நடராசன்

Kannan Natarajan

unread,
Aug 22, 2008, 1:25:44 AM8/22/08
to minT...@googlegroups.com
ஆலயம்: ஔவையார் திருத்தலங்கள்!
 
முக்கடலும் முத்தமிடுகின்ற குமரி மாவட்டத்து நாஞ்சில் நாட்டுப் பகுதியில் ஔவையார்க்கு திருத்தலங்கள் அமைந்துள்ளன. அத்திருத்தலங்களில்,
  • தாழக்குடியிலும்
  • குறத்தியறையிலும்
உள்ள திருத்தலங்கள் முதன்மையானவையாகும்.
 

தாழக்குடி ஔவையார் திருக்கோவில் தாடகை மலையடிவாரத்தில், தோவாளைச் சாணல் கரையோரத்தில் நாவற்மரச் சோலையும் மாந்தோப்புகளும் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. நாவற்சோலையைப் பார்க்கும்போது "பாலமுருகன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்ற கேள்வியினை எழுப்பி ஔவையாரது அறிவினையும் ஞானத்தையும் சோதித்தது நமக்கு ஞாபகம் வருகிறது.

 
நாஞ்சில் நாட்டு மக்கள்,
  • ஆடி மாத செவ்வாய்க்கிழமையும்,
  • தை மாத செவ்வாய்க்கிழமையும்

"கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி" என வாயாற வாழ்த்துப் பாடிக் கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டு செல்கிறார்கள். ஔவையார்க்கு அரிசியால் கொழுகட்டையும், கூழும் செய்து கோவில் சுவரில் சூலத்தைக் காவியால் வரைந்து அதற்கு, தான் சமைத்த கூழும், கொழுகட்டையும் படைத்து உண்டு மகிழ்ந்து செல்வார்கள்.

இத் திருக்கோவிலிலிருந்து நான்கு மைலுக்கு வடக்கே அழகிய பாண்டிபுரம் பகுதியில் குறத்தியறையில் ஔவையார்க்கு ஐந்துகிரி மலையில் குகைக் கோவில் உள்ளது. அழகிய பாண்டிபுரம் பகுதியை அதியமான் அரசாண்டதாகப் பழைய வரலாறு கூறுகிறது. பழைய வரலாற்றினை நோக்குங்கால், ஔவையார்க்கு இம்மலையில் குகைக்கோவில் அமைந்திருப்பது மிகப் பொருத்தமாகும். குறத்தியறையை நாஞ்சில் குறவன் ஆண்டதாகப் பழைய வரலாற்றிலிருந்து அறிகிறோம். இத் திருக்கோவிலுக்குச் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

பண்டைய காலங்களில் அழகிய பாண்டிபுர பகுதியிலும் அனந்தபுர பகுதியிலும் வாழ்கின்ற மக்கள் தங்களின் பெண் குழந்தைகளுக்குத் திருமணத்துக்கு எட்டு நாட்களுக்கு முன்னால் வந்து இவ்வம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து கோவிலுக்குச் சென்று பார்த்ததும் தங்கத் தாம்பாளத் தட்டில் தங்க ஆபரணங்கள் இருக்கும். அதை எடுத்துச் சென்று மணமக்களுக்கு அணிவித்து மணமுடிப்பார்கள். திருமணம் முடிந்து எட்டு நாட்கள் கழித்து இந்த ஆபரணங்களை அதே தாம்பாளத் தட்டில் வைத்து கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வருவார்கள். வரும்போது "எடுத்தேன்" என்று அசரீரி கேட்கும் என்பதும் ஐதீகம்.

அந்த வழக்கத்தை அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவன், "பார்த்தேன்" என்று பதில் கூறியதும் "அடைத்தேன்" என்று பதில் அசரீரி கேட்டதாகவும் அன்று முதல் இந்நிகழ்ச்சி நின்று விட்டதாகக் கூறுகிறார்கள்.

 
நாஞ்சில் நாட்டு மக்கள் இத் திருக்கோவில் கடவுள்களை "ஔவையாரம்மன்" என்று அழைப்பதோடு தம் குழந்தைகளுக்கு ஔவையார் என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.
 
சன்மிஷ்டை
 
நன்றி: தினமணி கதிர்

வைரம்

unread,
Aug 22, 2008, 11:46:38 PM8/22/08
to மின்தமிழ்
Auvaiyar is one of the most famous poet in Tamil Literature. But has
there been only one Auvaiyar ?

I still remember when I went to cast my first vote for election in
Chepauk, I saw two candidates with identical names, and the name was
M.Karunanidhi. I also heard there were several people named
Vijayakanth standing in the constituency where Vijayakanth was
standing. So if some one is popular there are surely going to be
impersonators with the same name. This trend can be found in Tamil
Literature too.

http://karkanirka.wordpress.com/2008/08/20/how-many-auvaiyars/


Vairam

On Aug 13, 8:12 am, "நினா.கண்ணன்" <kannan...@gmail.com> wrote:
> அவ்வையார் என்ற பெயரை கேட்டதும் ஓரே ஓரு அவ்வையார்தான் நமக்கு நினைவுக்கு
> வரும்.ஆனால் உண்மையில் 4 அவ்வையார்கள் தமிழுக்கு தொண்டு புரிந்துள்ளதாக
> ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
>
>                      "ச‌ங்க‌கால‌ அவ்வையார்" என்று அழைக்க‌ப்ப‌டுப‌வ‌ர் 2ம்
> நூற்றாண்டை சேர்ந்த‌வ‌ர்  "இடைக்கால‌ அவ்வையார்" 10ம் நூற்றாண்டை சேர்ந்த‌வர்,
>
>      நீதி நூலை இயற்றியவர் மூன்றாவது  அவ்வையார் 12ம் நூற்றாண்டை சேர்ந்த‌வர்,
>
>  க‌டைசியாக‌ அடையாள‌ம் காண‌ப்ப‌ட்ட‌ அவ்வையார் 14ம் நூற்றாண்டை சேர்ந்த‌வர்,இவ‌ர்
> விநாய‌க‌ர் அக‌வ‌ல் பாடியவ‌ர் ,அத‌ற்க்கு பிற‌கு அவ்வையார் அள‌வுக்கு யாரும்
> உய‌ர‌வில்லை
>
> --
> நினா.கண்ணன்

Ramesh

unread,
Aug 23, 2008, 5:57:27 AM8/23/08
to minT...@googlegroups.com
அவ்வை னா பாட்டி னு தானே அர்த்தம்.?
தெலுங்கில் 'அவ்வா' னா பாட்டி.
'அவ்வை' ங்கிறது சிறந்த பெண்பாற்புலவர்களுக்கு கொடுக்கின்ற வாழ்நாள் சாதனை பட்டமாக இருந்திருக்கலாம்.

2008/8/14 Shylaja N <shyl...@gmail.com>



--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

Kannan Natarajan

unread,
Aug 23, 2008, 11:52:05 PM8/23/08
to minT...@googlegroups.com
 
> 'அவ்வை' ங்கிறது சிறந்த பெண்பாற்புலவர்களுக்கு கொடுக்கின்ற வாழ்நாள் சாதனை பட்டமாக இருந்திருக்கலாம்!
 
சிலரை "அம்மையார்" என குறிப்பிடுவது அவர்களை உயர்வாக மதிப்பதால்(மாண்புமிகு), எ.கா: காரைகால் அம்மையார்.
 
அம்மை என்ற சொல்லிலிருந்து "ம" திரிந்து "வ" என்று மாறியிருக்கலாம்! செம்மை - செவ்வை ஆனது போல்!
 
ஒரு வேளை,ஆத்திச்சூடி தந்த அம்மையார் பெயர் தெரியாமல்,அந்த அம்மையார் - ஒளவையார் என பெயர் பெற்றிருக்கலாம்! இவை எல்லாம் ஆழ்ந்து நினைப்பது, நமக்கோ வேண்டியது தெளிவான,மெய்ப்பிக்கின்ற சான்று. அதுவரை அனைத்தும் உய்த்துணர்வு தான்.
 
பி.கு: உயிரெழுத்துக்கள் 12, அதில் ஒரு எழுத்தை குறைப்பது(ஒள) குறைதான். மற்றைய மொழிகளில் எழுத்து குறைப்பு நிகழ்வுகளைப் பற்றி மின்குழு அன்பர்கள் தெரிவிப்பின் நலம் பயக்கும்.

நினா.கண்ணன்

unread,
Sep 5, 2008, 8:11:13 AM9/5/08
to minT...@googlegroups.com
அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் பலபுலவர்கள் இருந்துள்ளனர் என்பது வெளிப்படை. சங்ககால ஒளவையார் அதியமானுக்கு நல்ல நண்பர். நீண்டநாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையார் நீண்டநாள் வாழவேண்டும் எனக் கருதி அவருக்குக் கொடுத்தான் அதியமான் என்பது வரலாற்றுக்கதை சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைப்பாடியுள்ளார்.

பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடிய அவ்வையார் ஒருவர். விநாயகரை வழிபடுபவர்கள் விநாயகர் அகவலைத்தான் முதல் நூலாகக் கொள்வர். மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. அதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்.

அடுத்த ஒளவையார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். சங்ககால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர். இரண்டாம் அவ்வையார் பக்தர்களோடு வாழ்ந்தவர். மூன்றாம் ஒளவையார் குழந்தைகளோடு வாழ்ந்தவர். குழந்தைகளுக்காக நீதி நூல்களை எழுதியவர். சிறுவயதில் மனப்பாடம் செய்து கொண்டு, வயதான பின்பு பொருளைத் தெளிவாக உணரும் நிலையில் அமைந்த பாடல்கள்.

நான்காவது அவ்வையார் தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடியவர். முருகன் குழந்தைநிலையில் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று அவ்வைப்பாட்டியிடம் கேட்க, அவன் மரத்தை உலுப்ப, பழங்கள் மண்ணில் விழ, பழத்திலுள்ள மண்ணை நீக்க ஒளவை ஊத, 'பழம் சுடுகிறதா? பாட்டி, என்ற கதையுடன் தொடர்புடைய ஒளவையார் மிகச் சிறந்த கருத்துள்ள தனிப்பாடல்களைப் பாடியுள்ளார்.

Reply all
Reply to author
Forward
0 new messages