த.ம.அ பதிவுகள்: கோவிலூர் ஆதீனம்.

2,048 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Oct 4, 2013, 11:10:55 AM10/4/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
வணக்கம்.

தமிழகத்தின் கோவிலூர் ஆதீனம் நிகழ்த்திவரும் சமூக சமயத்தொண்டினை பகிர்ந்து கொள்ளும் சில விழியப் பதிவுகளை அண்மையில் வெளியிட்டிருந்தோம். 
1. கோவிலூர் ஆலயம் - http://www.youtube.com/watch?v=7NWm8iE1_64
2. கோவிலூர் மடத்தின் ஆதீனகர்த்தர் பேட்டி பகுதி 1 - http://www.youtube.com/watch?v=_AyS-caSqHE
3. கோவிலூர் மடத்தின் ஆதீனகர்த்தர் பேட்டி பகுதி 2 - http://www.youtube.com/watch?v=oS3z72NHsgU
4.  கோவிலூர் ஆதினத்தின் செட்டிநாடு அருங்காட்சியகம் பகுதி 1 - http://www.youtube.com/watch?v=vFQ03XapRwY
5. கோவிலூர் ஆதினத்தின் செட்டிநாடு அருங்காட்சியகம் பகுதி 2 -  http://www.youtube.com/watch?v=v2YON-8xKig

அதன் தொடர்ச்சியாக இவ்வாதீனத்தை அறிமுகப்படுத்தும் தகவல்களின் தொகுப்பாக பல தகவல்களை ஒவ்வொன்றாக இந்த இழையில் பதிந்து வெளியிட உள்ளோம். இப்பதிவுகள் அடங்கிய நூலினை ஆதீனத்தின் திருமடத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது ஆதீனகர்த்தரவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கினார்கள். இந்த நூலில் ஆதீனத்தை அறிமுகப்படுத்தும் பெரிய சிறிய கட்டுரைகளும் பதிவுகளும் அடங்கியிருக்கின்றன. வரலாற்றுப் பதிவு என்றும் இதனைக் குறிப்பிடலாம். இக்கட்டுரைகளை மின்தமிழ் வாசகர்கள் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து இங்கு வெளியிட உள்ளோம். 

இக்கட்டுரைகளைத் தட்டச்சும் பணியை கீதா சாம்பசிவம் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். முதல் பதிவின்  முதல் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது. நவராத்திரி விஷேஷம் தொடங்கும் நன்னாளில் இப்பதிவுகள் தொடங்கப்படுவதை தனி விஷேஷமாகக் கருதுகின்றேன். 

இப்பதிவுகளில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பான வாசகர்களின் கருத்துக்கள் இவ்விழையில் எதிர்பார்க்கப்படுகின்றன. 

சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]

பதிவு 1

தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்

கோவிலூர் ஆதீனத்தின் வேதாந்தப் பரம்பரையில் பனிரண்டாவது பட்டத்தில் அருளாட்சி செலுத்தும் தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் உலக வரைபடத்தில் கோவிலூருக்கு உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்த உத்தமராவார்கள்.  வேதாந்தத்தை யாவருக்கும் பொதுவுடமையாக்கிய புதுமைச் சித்தரான கோவிலூர் ஆண்டவரின் மகன் வழியில் ஆறாவது தலைமுறைப்பேரனான நாச்சியப்ப சுவாமிகள் உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய பெருமான் புகழை உலகெலாம் பரப்பும் உறுதி பூண்டவர்.  வேகமும் விவேகமும் கொண்ட சுவாமிகள் வாழ்க்கை வியக்கத்தக்க நிகழ்ச்சிகளின் தொகுப்பாக விளங்குகிறது.

காரைக்குடிக்கு அருகில் உள்ள மானகிரி என்ற சிற்றூரில் 29--5--1923 இல் கோவிலூர் ஆண்டவரின் குடும்பத்தில் மகன் வழியில் ஆறாவது தலைமுறையில் பேரனாகத் தோன்றினார் நாச்சியப்பர்.  மானகிரியில் திண்ணைப்பள்ளிக்கூடத்திலும் காரைக்குடியில் ஶ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர் உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி கற்றார். அடையாறு பெசன்ட் நினைவுப் பள்ளியில் படித்துப் பள்ளி இறுதித் தேர்வை முடித்து, மாநிலக் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார்.  அப்போழுது கிடைத்த அறிவியல் அறிவு அவர் வாழ்க்கை சிறக்க உதவி செய்தது.  உலகம் போற்றும் கலாக்ஷேத்ரா நிறுவனத்தை 1936-இல் தொடங்கி நடனக்கலைக்கும் இசைக்கலைக்கும் பெருந்தொண்டாற்றிப் பாரத நாட்டின் கலை வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அன்னை ருக்மிணி அருண்டேல் அவர்களின் பேராதரவால் சென்னையில் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் பெற்ற நாச்சியப்பர் மேலை நாடுகளுக்குச் சென்று  கற்று அச்சுக்கலையிலும் நிழற்படக் கலையிலும் நிகரற்றவரானார்.  1957-இல் நியூயார்க்கில் நிழற்படக் கலையைக் கற்று 1963 இல் உலகப் புகழ் பெற்ற கோடக் கம்பெனியில் பணியாற்றினார்.  ஜெர்மனியிலும் லண்டனிலும் நிழற்பட நுட்பங்களைக் கற்றார்.  லண்டன், நியூயார்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் மேடைக்கலை--அரங்க ஒளியமைப்பு ஆகியவை கற்றுத் தேர்ந்தார்.

1944-இல் கலாக்ஷேத்ராவில் தம்மை வளர்த்த ருக்மிணி அருண்டேல் அம்மையாரிடம் நேர்முக உதவியாளராகச் சேர்ந்தார்.  1946-இல்  கலாக்ஷேத்ரா பதிப்பகம் தொடங்கி மரியா மாண்டிசோரி அம்மையாரின் குழந்தைக்கல்வித் திட்டத்துக்கான புத்தகங்களை வெளியிடத் தொடங்கினார்.  1947--இல் கலாக்ஷேத்ராவில் அரங்க நிர்வாகப் பொறுப்பேற்றார்.  ஒளியமைப்பில் புதுமை செய்து புகழ் பெற்றார்.  1953--இல் தம்முடைய 30 ஆவது வயதில் வண்ணப் புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட பெரிய சோதனைச் சாலையை உருவாக்கிப்புகைப்படக் கலையின் மூலம் விளம்பரக் கலையும்  வளர உதவினார்.  1955 முதல் 1972 முடிய கலாக்ஷேத்ராவின் நிர்வாகக் குழுவில் பெரும்பணி ஆற்றினார்.  குவாலியரில் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம், தில்லியில் குமாரசம்பவம், அயல்நாடுகளில் பரதநாட்டியம் என்று உலகம் முழுவதும் கலைப்பணியாற்றச் சென்ற ருக்மிணி அருண்டேல் அவர்கள் குழுவுடன் மேடை நிர்வாகியாகவும், பயண அமைப்பாளராகவும், ஒளியமைப்பு வல்லுநராகவும் சென்று பணியாற்றினார்.  கிழக்கு ஐரோப்பா, இந்தோனேஷியா, காம்போடியா, ஜாவா, பெஜியம், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ்,  ஸ்பெயின் என்று உலக நாடுகளில் இவர் கால்படாத இடமில்லை என்று கூறுமாறு கலாக்ஷேத்ராப் பணி செய்தார்.  1979 முதல்1984 முடிய நியூயார்க்கில் அச்சுக்கலை, நிழற்படக் கலை ஆகியவற்றில் வல்லுநர்களாகத் திகழ்ந்த திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றி உலகப் புகழ் பெற்றார்.  கலாக்ஷேத்ராவின் மதிப்பு மிக்க தூண்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கி, அங்கே மாணவராகவும், உதவியாளராகவும், கலைஞராகவும், அச்சக உரிமையாளராகவும், மேடை நிர்வாகியாகவும், அறக்கட்டளைச் செயலாளராகவும், ஒல்லும்வாரெல்லாம் அறவீனை ஓவாது சொல்லும் வாயெல்லாம் செயவல்லவராகத் திகழ்ந்து , அந்த நிறுவனத்தில் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறக்கச் செய்தார்.

இவ்வாறு சேர்த்த திறமையும் அதிகம்.  சேர்த்த செல்வமும் அதிகம்.  தேடி வந்த புகழும் அதிகம் என்று வாழ்ந்து வந்த சித. நாச்சியப்பரை தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிகராக்கிக் கோவிலூர் ஆதீனத்துக்குக் கொண்டு வர வேண்டுமென்று அன்னை திருநெல்லையம்மை திருவுள்ளம் கொண்டாள்.  இது இவருடைய வாழ்க்கையின் இரண்டாம் பாகம்.  பொன்னைக் கொடுத்த இறைவன் மெய்ப்பொருளும் கொடுக்க நினைத்தான்.  இந்த ஞான வாழ்க்கைக்குப் பன்றிமலை சுவாமிகள் குறிப்புக் காட்டினார்.

1975 ஆம் ஆண்டில் ஆன்மிகச் செல்வர் டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் நாச்சியப்பரைக் காஞ்சி மாமுனிவரிடம் அறிமுகப் படுத்தினார்.  காஞ்சி முனிவர், "நீ நகரத்தார் இல்லையோ!  கோவிலூரார் குடும்பம் என்கிறாய்.  கோவிலூர் மடத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்." என்றார்.  அந்த வாக்கு இருபதாண்டுகளில் பலித்தது.

கல்கியின் திருமகளார் ஆனந்தி ராமச்சந்திரன் அவர்கள் கூறியது போல விதி மாற்றியமைக்கப்பட்டு விட்டது.  கோபால கிருஷ்ண பாரதி பாடியபடி

விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு-- முன்னம்
விட்டகுறை வந்து தொட்டாச்சு

அன்று நந்தனுக்கு நடந்தது இன்று நாச்சியப்பருக்கு நடந்து விட்டது. அதனால் தானே நாச்சியப்ப சுவாமிகள் அமெரிக்காவில் நடராசருக்குக் கோயில் கட்ட எண்ணினார்?  

மக்கள் பிணி தீர்க்கும் இயற்கை மருத்துவராகவும் சிலகாலம் பணியாற்றிய நாச்சியப்பர் மனப்பிணி தீர்க்கும் மருத்துவரானார்.

ஆண்டவர் மரபில் பிறந்த புண்ணியத்தால் மீண்டும் பிரம்ம சபையில் ஆண்டவரே வந்து உட்கார்ந்து விட்டார்.

1995- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் நாள் சிதம்பர செட்டியார் சீதாலக்ஷ்மி ஆச்சியின் திருமகன், ஆண்டவரின் அருட்பேரனாக, வேதாந்த பீடத்தில் வித்தகத் தலைமையேற்று தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிகராக, மக்கள் போற்ற மனத்துறவும் தவத்துறவும் கொண்டார்.  கோவிலூர் மடத்தின் பொற்காலம் கொற்றவாளீஸரால் எழுதப் பட்டு விட்டது.

"எதிலும் விருப்பமின்றி எவரிடத்தும் பகையில்லாமல், சமநோக்குடன் இருந்துவரும் மகாத்மாவின் பின்னே, அவருடைய பாதத்தின் தூசி என் மீது விழுந்து நான் உய்ய மாட்டேனா என்று ஆவலில் நான் போய்க் கொண்டிருக்கிறேன்." என்று பாகவதத்தில் கண்ணன் கூறியபடி பாரதநாட்டுக்கு இன்னொரு துறவு--தமிழகத்துக்கு ஒரு விவேகானந்தர்-- கிடைத்துவிட்டார்.  சனாதன தர்ம உலகப் பல்கலைக் கழகம் தமிழகத்தில் நிறுவப்பட வேண்டும் என்று இறைவன் தீர்மானித்துவிட்டான்.  கோவிலூர் ஆண்டவர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் (Koviluur Andavar Deemed University) தமிழகக் கோயிற்கலைகளையும் பண்பாட்டையும் சிவநெறியையும் வளர்க்கும் வகையில் தோன்ற இருக்கிறது.

இவர்கள் ஆற்றி வரும் பணிகள் விளக்கமாக எழுதப்பட்டுள்ளன.

கோவிலூர் ஆதீனம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் நாச்சியப்ப ஞானதேசிகர் தெளிவான சிந்தனையோடும் தொலைநோக்குடனும் திட்டங்களை வகுத்துச் செய்து வருகிறார்கள்.

தாம் பட்டத்திற்கு வந்ததும் முதற்காரியமாக, குழந்தைகள் பள்ளி தொடங்கினார்கள்.  சிறு வயது முதலே குழந்தைகள் நல்ல கல்வி கற்க வேண்டும்.  குழந்தைகளே சமுதாயத்தின் பெருமைக்குரிய சொத்து--மூலதனம்--தூண்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் குழந்தைகள் பால் பேரன்பும் கொண்டவர்கள்.  ஆதலால் கல்விப் பணியைத் தலையாய பணியாகக் கருதுகிறார்கள்.  ஆகவே தான் இளைஞர்கள் உயர்கல்வி பெற்று உயர்ந்தால் சமூகமும் தானே உயர்ந்து நன்னிலை அடையும் என்பதனால் பெரும் தொகை ஒதுக்கி உதவுகிறார்கள்.

எந்த நாகரிகத்துக்கும் பண்பாட்டிற்கும் அது சார்ந்து நிற்கும் மரபுகளும் கோவில்களும்தான் அடிப்படை.  எல்லா அறங்களும் கலைகளும் கோவிலிற்தான் நடத்தப்பட்டன.  எனவே கோவிலைக் காப்பாற்ற வேண்டும்.  அது சார்ந்த கலைகளைக் காப்பாற்ற வேண்டும்.  கோவில்கள் நடைபெற வேண்டும் எனில் அதற்குரிய சிப்பந்திகளூம் சடங்குகளை நிறைவேற்றுகிற கலைஞர்களும் தேவை என்பதால் நசிந்து வரும் அனைத்துக் கலைகட்கும் புத்துயிர் ஊட்டி வளர்ப்பதற்காகவே கோவிலூரில் கலைகளுக்கான கல்லூரிகள், பெரும் பொருட்செலவில் நடத்தி வருகிறார்கள்.  அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பல்கலைக் கழகமாக நிறுவ வேண்டும் என்ற கனவும் சாமிகட்கு உண்டு.  அது நிறைவேறும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

உணவின்றி யாரும் துயர்படக் கூடாது என்ற மனித நேய உள்ளத்தால் ஆதரவில்லாத அனைவர்க்கும் உதவி வருகிறார்கள்.  நமது பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் சமுதாயமே நசிந்துவிடும் என்ற உனர்வால் பெண்கள் திருமணத்திற்கு தாராளமாக உதவுகிறார்கள்.

கோவிலூர் சார்ந்த எல்லா மடங்களும் தற்சார்புடையதாக, சொந்தக்காலில் நிற்கக் கூடியதாக காலகாலத்திற்கும் வளர்ந்து உயரக்கூடிய நிலையில் இருக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தினால் எல்லா மடங்களிலும் திருமண மண்டபமோ, கடைகளோ கட்டி நிரந்தர வருவாய்க்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

எல்லா மடங்கட்கும் வருகின்ற அன்பர்கள் தங்கித் தரிசிக்கவும் உணவு உண்ணவும் வசதியான தங்கும் அறைகள் கட்டி எல்லா மடங்களிலும் அன்னதானம் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

மடத்தைச் சார்ந்த, மடத்தின் பொறுப்பில் உள்ள கோவில்கள், அதிஷ்டானங்கள் யாவற்றையும் ஒவ்வொன்றாகச் செப்பனிட்டு புதிய மெருகுடன் வசதிகளையும் கூட்டிக் கும்பாபிஷேஹங்கள் செய்து வருகிறார்கள்.  ஒவ்வொரு கோவிலும் பனிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறைஅ பழுது நீக்கவும் கும்பாபிஷேஹங்கள் நடத்தவும் வேண்டுமென அருள் ஆணை இட்டுள்ளார்கள்.

கோவிலூரை ஒரு கல்வி நகரமாக ஆக்கப் பெரிதும் விருப்பம் கொண்டுள்ளார்கள்.  செய்யும் எதனையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளவர்கள் ஆதலால், தரமான கல்வி தந்து இளைஞர்கட்கு ஏற்றம் தர வேண்டும் என்பதில் மிகவும் குறியாக உள்ளார்கள்.  அவர்கள் கனவுகள் மிகவும் பெரியவை, சிறந்தவை, அவை யாவும் நிறைவேற ஆண்டவர் அருள் பாலிக்க வேண்டும்.

சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் பொருள் உதவியால் நடைபெற்று வரும் பணிகள் தொடர்ந்து தரப்பட்டுள்ளன.                        

பதிவு 1 தொடரும்..!

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 4, 2013, 1:26:07 PM10/4/13
to mint...@googlegroups.com
கோவிலூர் மடத்தின் சார்ப்பாக நடைபெற்று வருகிற ஆன்மீக, சமுதாய, கல்விப்
பணிகளைப் பகிர்ந்துகொள்கிற பதிவுகளுக்குத் திருமிகு சுபாவிற்கும்
தட்டச்சுப் பணி சிறப்பாகச் செய்யும் திருமதி கீதாசாம்பசிவம்
அவர்களுக்கும் மிக்க நன்றி.
பன்னிரெண்டாவது ஆதினகர்த்தர் சீர்வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகளின் பணி
அளப்பரியது. ருக்க்மணி அருண்டேல் அம்மா அவர்களின் அபிமானம்பெற்று
அச்சுக்கலை, புகைப்படக்கலை விற்பன்னராகி வளர்பொருளீட்டி அப்பொருளைக்
கல்வி, மரபுக்கலை, ஆன்மீகப் பணிகளுக்கு உரித்தாக்கிய பெருமகனார் அவர்.
அவருக்கு அருமையான நினைவஞ்சலி இப்பதிவு.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

meenavan2

unread,
Oct 5, 2013, 3:09:11 AM10/5/13
to mint...@googlegroups.com

           அன்புடைய சுபா அவ்ர்களே
           கோவிலூர்  ஆதீனத்தின் சிறப்பை வெளியிடத் தொடங்கியமைக்கு நன்றி.
           கோவிலூர் என்ற் த்லைப்பில் ஆதீனத்திற்குத் தாங்கள்  வ்ந்த போது தங்களுக்கு
           வழங்கிய பச்சை வண்ண நூலில் உள்ள் செய்திகளில் இருந்து விவரமாக எழுதி
           இருக்கிறீர்கள்.ன நான் மேற்ப்டி ம்டாலயததில் 10 ஆண்லடுகளாக ம்க்கள் தொடர்பு
           அலுவ்ல்ராய்  இருந்தவ்ன்.அவருடன் பல இட்ங்களுக்கும் சென்றவன்.மடாலயம்
           வெளியிடும் திருநெல்லை என்ற் இதழின் ஆசிரியராக இருந்து வ்ருகிறேன்.எனக்கும்
           இந்த ம்டாலயத்திற்கும் 9 ஆம் பட்டமான இராமநாத ஞான தேசிகர் காலத்தில்
           இருந்து  தொட்ர்பு உண்டு.நாச்கியப்ப ஞான தேசிகர் ஆணைப்ப்டி 14 வேதாந்தப்
           பாட் நூல்களில் 11 நூல்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளேன்.தற்பொழுது
           மடத்தில் நடந்து வரும் இலக்கியப் ப்ணிக்ளைக் கவனித்து வ்ருகிறேன்.மடம் ந்லிவுற்ற
           கால்த்தையும் பொலிவுற்ற காலத்தையும் அறிவேன்.வேண்டும் போது விவரங்கள்
           தருவேன்.தொடர்ந்து காண்போம்.

            காப்பியக் க்விஞர.நா.மீனவன்.

Subashini Tremmel

unread,
Oct 5, 2013, 3:40:16 AM10/5/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/10/5 meenavan2 <meen...@gmail.com>

உங்கள் மடல் மகிழ்ச்சியளிக்கின்றது ஐயா. 
இக்கட்டுரைகள் அனைத்துமே நூலிலிருந்து நேரடியாக தட்டச்சப்படுபவையே. கீதா அவர்கள் தமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்வார்கள். நானும் எனது குறிப்புக்களை அவ்வப்போது சேர்த்து வருவேன்.

தாங்கள் மடாலயத்தில் பல வருடங்கள் இருக்கும் செய்தியைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
திருநெல்லை இதழில் ஆசிரியராக இருக்கின்றீர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
இந்த இதழில் டாக்டர் வள்ளி அவர்கள் எழுதி வரும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தொடர்பான கட்டுரை தொடரை மின் தமிழில் பகிர்ந்து கொள்ளச் சொல்லி கேட்டிருந்தேன். அவருக்கு இன்னமும் ஓய்வு  அமையவில்லை. தாங்கள் தட்டச்சு செய்யப்பட்ட அக்கட்டுரைகளை அவ்வப்போது இங்கே பகிர்ந்து கொள்ள முடியுமா?
 
மடத்திற்கு நான் மார்ச் மாதம் வந்திருந்த சமயம் தாங்கள் அங்கிருந்தீர்களா? நாம் நேரில் சந்தித்திருக்கின்றோமா?

நூலகத்திலும் அருங்காட்சியகத்திலும் சந்தித்த நண்பர்கள் இன்னமும் நினைவில் இருக்கின்றார்கள். அருங்காட்சியகப் பொருப்பாளர்களும் நூலகப் பொருப்பாளர்களுக்கும் என அன்பை தெரிவித்தால் மகிழ்வேன்.

சுபா

            காப்பியக் க்விஞர.நா.மீனவன்.

On Friday, October 4, 2013 10:56:07 PM UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:
கோவிலூர் மடத்தின் சார்ப்பாக நடைபெற்று வருகிற ஆன்மீக, சமுதாய, கல்விப்
பணிகளைப் பகிர்ந்துகொள்கிற பதிவுகளுக்குத் திருமிகு சுபாவிற்கும்
தட்டச்சுப் பணி சிறப்பாகச் செய்யும் திருமதி கீதாசாம்பசிவம்
அவர்களுக்கும் மிக்க நன்றி.
பன்னிரெண்டாவது ஆதினகர்த்தர் சீர்வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகளின் பணி
அளப்பரியது. ருக்க்மணி அருண்டேல் அம்மா அவர்களின் அபிமானம்பெற்று
அச்சுக்கலை, புகைப்படக்கலை விற்பன்னராகி வளர்பொருளீட்டி அப்பொருளைக்
கல்வி, மரபுக்கலை, ஆன்மீகப் பணிகளுக்கு உரித்தாக்கிய பெருமகனார் அவர்.
அவருக்கு அருமையான நினைவஞ்சலி இப்பதிவு.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Geetha Sambasivam

unread,
Oct 7, 2013, 5:21:48 AM10/7/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோயில் திருப்பணிகள்

குருமஹாசந்நிதானம் சீர் வளர்சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் பட்டத்திற்கு வந்த பின் அவர்களுடைய பொருளுதவியாலும், அருள் ஆசியாலும் ஏராளமான அறப்பணிகள் எல்லாத்துறைகளிலும் செய்யப்பட்டுள்ளன.  

அவற்றுள் முதலில் கோயில் திருப்பணிகளைப் பார்ப்போம்.

திருவண்ணாமலை--ஈசான்ய மடம்

1.1997 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி திருவண்ணாமலை -- ஈசான்ய மடத்தில் உள்ள ஈசான்ய ஞானதேசிக சுவாமிகளின் ஜீவ சமாதியைப் பழுது நீக்கி வண்ணமுறப் புதுப்பித்துக் குடமுழுக்கு விழா நடைபெற்றது.  தற்போது ஈசான்ய ஞானதேசிகரின் சமாதி முன்னுள்ள முன் மண்டபத்தை கான்க்ரீட் தரை அமைத்து (தற்போது ஆஸ்பெஸ்டாஸ் கூரை உள்ளது) 2008--2009 இல் மறு கும்பாபிஷேஹம் நடத்துமாறு அருள் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

பொருள் வைத்த சேரி--கோவிலூர் ஆதீனம்

(கோ.ஆ.பொ.மடம்)

2. பொருள் வைத்த சேரி மடம் (கோ.ஆ.பொ.மடம்) 2002--ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அருள்மிகு செளந்தரவல்லி உடனாய சுவர்ணபுரீச்வரர் திருக்கோயில் ஏறக்குறைய ரூபாய் பதினைந்து லட்சம் செலவில் திருப்பணி செய்யப் பெற்றுக் கும்பாபிஷேஹம் செய்யப் பெற்றது.

3. அதே நன்னாளில் ஶ்ரீமத் உகந்தலிங்க ஞானதேசிக சுவாமிகளின் திருக்கோயில் திருப்பணி செய்யப் பெற்றுக் கும்பாபிஷேஹம் செய்யப் பெற்றது.

திருக்களர்--கோவிலூர் ஆதீனம், வீரசேகர ஞான தேசிகர் மடாலயம்

(கோ.ஆ.வீர.மடம்)

4. திருக்களர் மடத்தின் பொறுப்பில் இருப்பதும், நம்முடைய கிராமமுமான மருதவனம் அருள்மிகு பாலாம்பாள் உடனாய மருதவனேஸ்வரர் திருக்கோவில் ஏறக்குறையப் பத்து லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி செய்யப் பெற்றுப் புதிய துர்க்கை சந்நிதியும் உருவாக்கப் பெற்று 26--1--2004-இல் கும்பாபிஷேஹம் மிக விமரிசையாக நடைபெற்றது.

5. 2004 மே மாதம் 24 ஆம் தேதி கோவிலூர் ஆதீனம் ஐந்தாவது பட்டம் வீரசேகர ஞானதேசிக சுவாமிகளின் அதிஷ்டானக் கோவில் சுமார் 5 லட்சம் செலவில் திருப்பணி செய்யப் பெற்றுக் கும்பாபிஷேஹம் செய்யப் பெற்றது.

சிதம்பரம்--கோவிலூர் ஆதீனம் சிதம்பர சுவாமி மடம்

(கோ.சித.மடம்)

6. 2005- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஆறு லட்சம் செலவில் திருப்பணி செய்யப் பெற்றுச் சுவர்ச் சித்திரங்கள் புதுப்பிக்கப் பெற்றுக் கும்பாபிஷேஹம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சபாபதி சுவாமிகள் மடம்

7.திருவண்ணாமலைக்கருகில் உள்ள மேட்டுப்பாளையத்தில் ஶ்ரீமத் சபாபதி சுவாமிகளின் அதிஷ்டானம் திருப்பணி செய்யப்பெற்று முன் மண்டபம் கான்கிரிட் கட்டிடமாகக் கட்டப்பெற்று--8--6--2006 அன்று கும்பாபிஷேஹம் செய்யப் பெற்றது.

எறும்பூர்

(கோ.சித.மடம்)

8. ஶ்ரீமத் தத்துவராய சுவாமிகளின் அதிஷ்டானம் மீண்டும் முழுக்கக் கற்றிருப்பணியாக  ஏறக்குறைய 28 லட்சம் செலவில் புதிய இராஜ கோபுரத்துடன் திருப்பணி செய்யப்பெற்று 4--5--2007 அன்று மிக விமரிசையாக பூஜ்யஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் நம் குருமகாசந்நிதானம் தலைமையில் சிதம்பரம் தீட்சிதர்களால் கும்பாபிஷேஹம் செய்விக்கப் பெற்றது.

ஶ்ரீமத் தத்துவராய சுவாமிகளின் வேதாந்த நூல்களின் பெருமை, முக்கியத்துவம் கருதி வேதாந்த சொற்பொழிவு, இன்னிசைக்கச்சேரிகளுடன் மிக மிக விமரிசையாக கும்பாபிஷேஹம் நடத்தப் பெற்றது.

தற்சமயம் நடைபெற்று வரும் திருப்பணிகள்

1.திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலமான திருக்களர்  கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு அமிர்தவல்லி உடனாய பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்--திருப்பணி நடந்து வருகிறது.  நம் சுவாமிகளின் பொருள் உதவியால் பெரும்பாலான திருப்பணிகளும் கோயம்புத்தூர் திருப்பணிச் செல்வர் உயர்திரு வசந்தகுமார் பொருள் உதவியால் ராஜகோபுரத் திருப்பணியும், இந்து சமய அறநிலைத்துறை சார்பாக சில திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.  சர்வதாரி வரும் ஆண்டு ஆனிமாதம் 30 ஆம் தேதிக்கு 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி குட நீராட்டு விழவிற்குத் தேதி குறித்துள்ளது.

2. திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலுக்குப் புதிய திருத்தேர் ஒன்று இந்து சமய அறநிலைத்துறையின் பொருள் உதவியுடனும் நம் சுவாமிகளின் பொருள் உதவியுடனும் செய்யப்பட்டு வருகின்றது.

3. வளவனூர் சண்முக சுவாமி மடத்தைச் சீரமைத்துச் செய்து புதுப்பிக்க வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடுத்துவரும் உடனடித் திருப்பணிகள்

1. வரும் ஆண்டு ஆவணி மாதம் கோவிலூரில் அருள் பாலித்து வரும் அருள்மிகு திருநெல்லை அம்மன் உடனாய கொற்றவாளீசர் திருக்கோவில் கும்பாபிஷேஹத் திருப்பணி தொடங்கப் பெறும்

2. திருவண்ணாமலை ஈசான்ய ஞானதேசிகர் அதிஷ்டான முன் மண்டபத்தை கான்க்ரீட் தளமாக மாற்றி அமைத்துக் கும்பாபிஷேஹம் செய்வதற்கான வேலைகள் வரும் வைகாசி மாதம் தொடங்கப் பெறும்

கல்விப் பணிகள்

தற்போது நடந்து வரும் கல்வி நிலையங்கள்

1. ஶ்ரீ முக்திராமலிங்க ஆண்டவர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி

2. திருமுறைக் கல்லூரி

3. வேத ஆகமக் கல்லூரி

(கோவிலூரில் நடைபெறும் வேத ஆகமக் கல்லூரி தவிர , நம் குரு மகா சந்நிதானம் மேலும் பதினொரு வேத ஆகமப்  பள்ளிகட்கு ஏறக்குறைய 200 மாணவர்களுக்குப் பொருள் உதவி செய்து வருகிறார்கள்.)

4. நாதஸ்வரக் கல்லூரி

5. தவில் கல்லூரி

6. கோவில் நிர்மாணம் மற்றும் சிற்பக் கல்லூரி

7. பஞ்ச லோகக் கல்லூரி

8. தேர் வாகனக் கல்லூரி

9. 2007 ஆம் ஆண்டு முதல் --கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சிக் கல்வியியல் கல்லூரி தொடங்கப் பெற்றுள்ளது.
                 
(தொடரும்)

Subashini Tremmel

unread,
Oct 7, 2013, 12:30:10 PM10/7/13
to மின்தமிழ், valli N, Koviloor Mutt, Subashini Tremmel
எவ்வளவு சேவைகளை இம்மடம் செய்திருக்கின்றது செய்து வருகின்றது என நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கின்றது. கோவிலூர் மடத்தையும் அங்கிருக்கும் பள்ளிகளையும் மாத்திரமே நான் பார்த்திருக்கின்றேன். ஏனைய விஷயங்களை அறியும் போது பிரமிப்பாக இருக்கின்றது.

சுபா

2013/10/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Oct 8, 2013, 6:41:59 AM10/8/13
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
வணக்கம்.

கோவிலூர் மடத்தின் சிறப்பையும், அதன் தொண்டுகளையும் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது.
திருமதி சுபாஷினி டெர்மல் அவர்களுக்கும்
அம்மையார் கீதா அவர்களுக்கும் நன்றிகள்.

தொடர்ந்து படித்து வருகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

2013/10/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

meenavan2

unread,
Oct 10, 2013, 10:38:01 PM10/10/13
to mint...@googlegroups.com, மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt

                   அன்பு மிகக சுபா அவர்களே
                   தாங்கள் கோவிலூர்  வந்த  மார்ச்சுத் திங்களில் நான்  மடாலயத்திலிருந்து
                   உடல் ந்லக்குறைவு  காரண்மாக வீட்டில் இருந்தேன்.இப்பொழுது வீட்டில்
                   இருந்தே ப்திப்புப் பணிகளைச்  செய்து வ்ருகிறேன்.ம்டாதிபதி அவர்கள்
                   ஏதேனும் விழாக்கள்,முக்கிய அலுவல்கள் இருப்பின் கார் அனுப்பிக் கூட்டிக்
                   கொள்வார்.அக்டோபர் 9 ஆம் நாளிலிருந்து 11 ஆம் நாள் முடிய நாச்சியப்ப
                   சுவாமி  அவ்ர்களின்  குருபூசை விழா நடந்து வருகின்றது.மேலும் முனைவர்
                   வ்ள்ளி அவ்ர்கள் கோவிலூர் மடம் வெளியிடும்  திருநெல்லை இத்ழில் ம்கா
                   வித்துவானைப் ப்ற்றி எழுத்வில்லை.அவர் எழுதிய கோவிலூர்ப்  புர்ர்ணக்
                   குறிப்புகளையே எழ்தி வ்ருகின்றார்.நானே முதலில் கோவிலூர்ப் புரர்ணம்
                    பற்றிய உரை நடையிலான குறிப்புக்களை வெளியிடுகிறேன்.பின்னர் பிள்ளை
                   அவர்களின் பாடல்களையும் வெளியிடுவேன்.

                    காப்பியக் க்விஞர்;நா.மீன்வ்ன்

Subashini Tremmel

unread,
Oct 11, 2013, 7:51:48 AM10/11/13
to meenavan2, மின்தமிழ், Subashini Tremmel

2013/10/11 meenavan2 <meen...@gmail.com>

                   அன்பு மிகக சுபா அவர்களே
                   தாங்கள் கோவிலூர்  வந்த  மார்ச்சுத் திங்களில் நான்  மடாலயத்திலிருந்து
                   உடல் ந்லக்குறைவு  காரண்மாக வீட்டில் இருந்தேன்.இப்பொழுது வீட்டில்
                   இருந்தே ப்திப்புப் பணிகளைச்  செய்து வ்ருகிறேன்.ம்டாதிபதி அவர்கள்
                   ஏதேனும் விழாக்கள்,முக்கிய அலுவல்கள் இருப்பின் கார் அனுப்பிக் கூட்டிக்
                   கொள்வார்.அக்டோபர் 9 ஆம் நாளிலிருந்து 11 ஆம் நாள் முடிய நாச்சியப்ப
                   சுவாமி  அவ்ர்களின்  குருபூசை விழா நடந்து வருகின்றது.மேலும் முனைவர்
                   வ்ள்ளி அவ்ர்கள் கோவிலூர் மடம் வெளியிடும்  திருநெல்லை இத்ழில் ம்கா
                   வித்துவானைப் ப்ற்றி எழுத்வில்லை.அவர் எழுதிய கோவிலூர்ப்  புர்ர்ணக்
                   குறிப்புகளையே எழ்தி வ்ருகின்றார்.நானே முதலில் கோவிலூர்ப் புரர்ணம்
                    பற்றிய உரை நடையிலான குறிப்புக்களை வெளியிடுகிறேன்.பின்னர் பிள்ளை
                   அவர்களின் பாடல்களையும் வெளியிடுவேன்.
நன்றி ஐயா. அப்படியே ஆகட்டும்.
சுபா 

Geetha Sambasivam

unread,
Oct 12, 2013, 9:23:11 AM10/12/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
அடுத்த திட்டங்கள்:

1. சித்த மருத்துவக் கல்லூரி

2. கலை--அறிவியல் கல்லூரி

3. மருத்துவம்/மருந்தியல் சார்ந்த கல்விகள்

கோவிலூர் திருமடத்தின் ஆதரவில் நடைபெற்று வரும் மாண்டிசோரிப் பள்ளிகள்:

1. மாதிரி மாண்டிசோரிப் பள்ளி --சென்னை

2. முக்தி ராமலிங்க ஆண்டவர் மாண்டிசோரி -- கோவிலூர்

3. கம்பன் அறநிலை --மாண்டிசோரி -- காரைக்குடி

4. கோவிலூர் ஆண்டவர் மாண்டிசோரி --ரிஷிகேஷ்

5. வள்ளியம்மை ஆச்சி டிரஸ்ட் - மாண்டிசோரி  --புது வயல்

6. வள்ளியம்மை ஆச்சி டிரஸ்ட் - மாண்டிசோரி --புதுவயல்

7. என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.  --மாண்டிசோரி --தேவகோட்டை

8. கோவிலூர் ஆண்டவர் மாண்டிசோரி --அரியக்குடி

சமுதாயப் பணிகள்

கோவிலூர் ஆதீனம் குரு மகா சந்நிதானம் சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிகர் அவர்களின் பொருள் உதவியுடன் நடந்து வரும் சமுதாயப் பணிகள்.

1. கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர்க்கு உதவித் தொகையாக மாதம் ரூ. 250/- வழங்கி வருகிறார்கள்.  தற்போது ஏறக்குறைய 650 முதியோர்கள் பயன்பெறுகிறார்கள்.  தொகை ரூ. 350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இதனை 1000 நபர்கள் வரை வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்கள்.

2. கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக, கோவில் சார்ந்த கலைகள் கற்கும் மாணவர்கள் 150 பேருக்கு உண்டி உடை உறையுள் தந்து இலவசக் கல்வியும் தந்து உதவுகிறார்கள்.

3. நம் திருமடங்களில் ஏறக்குறைய 50 மாணவர்கள் தங்கிப் பள்லிகட்கு சென்று படித்து வருகிறார்கள்.

4. கடந்த ஆறு ஆண்டுகளாக , ஆண்டு ஒன்றிற்கு ஏற்க்குறைய அறுபது லட்சம் ரூபாய் வரையில் மாணவர்களின் மேற்படிப்பிற்காக திருப்பித் தரும் வட்டியில்லாக் கடன் உதவி செய்து வருகிறார்கள்.  இதுவரை மூவாயிரத்திற்கும் மேலான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

5.  ஆறு ஆண்டுகளாக ஆண்டிற்கு 300-க்கும் மேலான ஏழைப்பெண்கள் திருமணத்திற்கு ரூ. 5000/- வீதம் உதவி வருகிறார்கள்.

குரு மகா சந்நிதானம் சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் அருள் ஆசியாலும் பொருள் உதவியாலும் நடந்துள்ள கட்டிடப் பணிகளின் விபரம்

1999 திருவண்ணாமலையில் ஆறு அறைகளும் -- 60 பேர் தங்கக் கூடிய ஒரு பெரிய ஹாலும் கொண்ட விருந்தினர் மாளிகை. (15 லட்சம்)

2001 அக்டோபர் மாதம் : கோவிலூர் --18 அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகை (32 லட்சம்)

       தியான மண்டபம் + மேல் தளத்தில் உள்ள இரு சிறப்பு விருந்தினர் அறைகள் (6 லட்சம்)
        16 வீடுகள் கொண்ட சிப்பந்திகள் குடியிருப்பு (19 லட்சம்)

2002 ஏப்ரல்  கிழக்கு ரத வீதியில் இரண்டு ஹால்கள் (தற்போது உடற்பயிற்சிக் கல்லூரியின் உடற்பயிறிசித் தளமும் (Multi Gym) நூலகமும் --சிர்பக் கல்லூரியும் உள்ளன.  (30 லட்சம்)

2002 மே  கோவிலூர் ஆண்டவர் திருமண மண்டபம் (65 லட்சம்)

2002 அக்டோபர்  கோவிலூர் வடக்கு ரத வீதியில் 2 ஹால்கள் (தற்போது உடற்பயிற்சிக் கல்லூரியின் ஆய்வுக் கூடங்களும், கேட்டரிங் கல்லூரியும் உள்ளன. (Catering College)  (35 லட்சம்)

2003 ஏப்ரல்  கோவிலூர் கிழக்கு ரத வீதியில் தற்போது கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சிக் கல்லூரி உள்ள கட்டிடம் (22 லட்சம்)

2003 ஜூன் சிதம்பரம் கல்யாண மண்டப உணவு மண்டபம் (29 லட்சம்)

2003 அக்டோபர் கோவிலூர் மேற்கு ரத வீதியில் உள்ள 2 ஹால்கள் (தற்போது ஶ்ரீலஶ்ரீ முக்தி ராமலிங்க ஆண்டவர் பள்ளி உள்ளது. (35 லட்சம்)

2004 ஏப்ரல் கோவிலூர் முதன்மை சாலையில் இருந்து கோவிலைச் சுற்று கான்க்ரீட் சாலை (18 லட்சம்)

2004 மே  திருக்களர் மடம்--(6 அறைகள், 4 சிறிய ஹால்கள், உணவு மண்டபம் போன்ற வசதிகளுடன் புதிதாகக் கட்டித் திறக்கப் பட்டது. ) (45 லட்சம்)

2004 திருவண்ணாமலையில் 8 கடைகள் (6 லட்சம்)

2005 ஏப்ரல்  சிதம்பரம் பொன்னம்பல சாமி திருமண மண்டபம் உணவுச் சாலைக்கு மேல் 12 அறைகளும் + 30 பேர் தங்கக் கூடிய ஒரு ஹாலும் கட்டப் பெற்றது. (30 லட்சம்)
                 
Subashini Tremmel

unread,
Oct 12, 2013, 4:54:12 PM10/12/13
to Geetha Sambasivam, மின்தமிழ், Subashini Tremmel

2013/10/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ஒரு தனி மனிதரின் ஆளுமையில் இது நடந்திருக்கின்றது. கோவிலூர் திருமடம் சமூகச் சேவைக்கு ஒரு உதாரணம். 
முதியோருக்கு உதவித் தொகை, மாணவருக்கு கோயிற் கலைப் பயிற்சி, மாணவர் உயர்படிப்புக்குக் கல்வித் தொகை..
மக்கள் சேவையே மகேசன் சேவை எனப் பொதுவாகச் சொல்வோம். இதனை நேரில் இங்கு காண்கின்றோம். 

மின்தமிழ் அன்பர்கள் என்றாவது ஒரு முறை வாய்ப்பு அமைந்தால் தவறாமல் ஒரு முறையேனும் கோவிலூர் சென்று திருமடத்தையும் பார்த்து வரவேண்டும்.  

சுபா
 
K. Loganathan

unread,
Oct 12, 2013, 10:08:58 PM10/12/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே

இவற்றை எல்லாம் அறிய மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது.  ஞான வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டிய ஆதீனங்கள் அவ்வாறு செய்வதாக் தெரிய்வில்லை என்று என்னுள் ஓர் கருத்து இருந்தது, அது ஓரளவு தளர்ந்து வருகின்றது,

ஆயினும் இந்த நல்ல சிறப்பாக செய்லப்டுகின்றன கோவிலூர் ஆதீனம் போன்று ஏனைய ஆதீனங்களும் இயங்குகின்ற்னவா அல்லது இது கோவிலூர் ஆதினத்திற்கும் மட்டிலும் பொருந்தும் ஒன்றா?

விஷயம் தெரிந்தவர்கள் தக்க விளக்கங்களைத் தந்து உதவினால் மகிழ்வேன்

உலகன்

2013/10/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Oct 13, 2013, 3:14:46 AM10/13/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/10/13 K. Loganathan <k.ula...@gmail.com>

அன்பர்களே

இவற்றை எல்லாம் அறிய மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது.  ஞான வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டிய ஆதீனங்கள் அவ்வாறு செய்வதாக் தெரிய்வில்லை என்று என்னுள் ஓர் கருத்து இருந்தது, அது ஓரளவு தளர்ந்து வருகின்றது,

ஆயினும் இந்த நல்ல சிறப்பாக செய்லப்டுகின்றன கோவிலூர் ஆதீனம் போன்று ஏனைய ஆதீனங்களும் இயங்குகின்ற்னவா அல்லது இது கோவிலூர் ஆதினத்திற்கும் மட்டிலும் பொருந்தும் ஒன்றா?

விஷயம் தெரிந்தவர்கள் தக்க விளக்கங்களைத் தந்து உதவினால் மகிழ்வேன்

தமிழகத்து சைவ ஆதீனங்களில் நான் நேரில் பார்த்த அனுபவத்தில் திருவாவடுதுறை, பேரூர், தருமையாதீனம், திருப்பனந்தாள் மடம், குன்றக்குடி மடம் ஆகியவை கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவை. சிறுவர் பள்ளி, தொடக்கப்பள்ளி, கல்லூரி என அனைத்தும் நடத்துவதோடு ஏழை மாணவ்ர்களுக்கு இலவசக் கல்வி உதவி நிதி கல்லூரி உதவி நிதி என்றவாறு வழங்கி வருகின்றன.  ஆதீனங்கள், சித்த மருத்துவ தொடர் ஆய்வு இலவச மருத்துவம், என்பனவற்றில் ஈடுபாட்டுடன் உள்ளன.

குன்றக்குடி மடம் மிகச் சிறந்த சமூக சேவை செய்வதை முன்னர் தனி பதிவாக வெளியிட்டிருந்தேன். இங்கே காண்க. இந்த குறிப்பில் உள்ளதை விட மேலும் பல சமூகப் பணிகள் உதாரணமாக சுற்று வட்டார கிராம மாணவர்களுக்கு வேளாண்மை கல்லூரி, பெண்களுக்கு கல்வி வழங்க பிரத்தியேக பெண்கள் கல்லூரி, இளைஞர்களுக்கான சஞ்சிகை,  என பல பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பல தொண்டுகளைத் தொடர்ந்து செய்து வரும் இவர்களுடன் இணைந்து செயல்படுவதும் நம்மால் முடிந்த உதவிகளை இவ்வகை முயற்சிகளுக்கு அளிப்பதும் நன்மை பயக்கும்.

சுபா

K R A Narasiah

unread,
Oct 13, 2013, 4:10:42 AM10/13/13
to mintamil
Recently when I was researching on Kalakshetra I came across much information about Swamigal. Two books published by Kalakshetra publishers were reviewed in The Hindu 
You can see it here. It stands testimony to Swamiji's extraordinary capacity.

IT is not easy to see paintings in Tamil Nadu prior to those of the Vijayanagara period. Why? This is because they are either situated in remote places far from the tourist beat, (like Sittannavasal), or are in a terrible state of disrepair that very little is visible (like Pannamalai) or are locked up and visitors kept out (as in Thanjavur). Thus the two books photographed, designed and produced by C. Nachiappan (now Sri-la-Sri Nachiappa Swami of Koviloor Mutt) with assistance from the Rukmini Devi Foundation and published by Kalakshetra Publications, Chennai, are a valuable documentation of the great Tamil heritage of painting.

The first book records the paintings at Sittannavasal, Panamalai and Thanjavur, covering the early Pandya, the early Pallava and the early Chola periods respectively. These sites, which are not easy to visit, were photographed 50 years ago by the Koviloor Swamy. He used an ancient 5"x4" Linhof camera for the Archaelogical Survey of India (ASI) and sent the transparencies to Saraswathy Press in Calcutta for exposing. But they got burnt under powerful lights and were never printed. The Swami retained a set of transparencies that were enhanced by computer technology, recreating the colours that would have brightened up the temples once upon a time. The text is written by the eminent scholar Professor P.R. Srinivasan, although he has quoted extensively from earlier works.

Sittannavasal is an "elongated mass of granite", a remote village 15 km beyond Pudukottai town, not far from the early Chola temples of Narthamalai, consisting of the Eladipattam, a natural cave on top of the hill with beds and pillows cut into the stone floor for use by the monks, and Arivarkovil or the Temple of the (Jaina) Arihants. There is a First Century Tamil Brahmi inscription on a cave bed, and a Ninth Century inscription on a rock nearby informing us of the renovation of the temple. The cave temple has simple pillars and sculptures of Jaina Tirthankaras. The paintings currently visible probably belong to the Seventh Century, since they have Pallava features and are reminiscent of later Ajanta paintings.

The paintings include a dharmachakra on the ceiling, a lotus tank with frolicking animals, creepers and lotuses, young men collecting flowers, dancing apsaras and a barely-visible king and queen, bringing to life the Jaina philosophy of ahimsa and harmony in nature. One apsara, with her right hand in the pataka mudra and the left in the danda hasta, is reminiscent of the bronze figures of the dancing Balakrishna and Balasubrahmanya, while the other is performing thebhujangatrasita karana, associated with the dance of Shiva at Chidambaram. The base of the Sittannavasal paintings is well consolidated, firm yet thin lime plaster, also used for the binding. The painted stucco is made up of three layers: rough plaster, fine plaster and a covering layer of paint.

Little remains of these paintings today, making their appearance in the book a valuable contribution to South Indian art history. As a frequent visitor to Sittanavasal, I have seen the paintings gradually disappear, thanks to the pollution from the stone quarries, which is also probably weakening the hill. The lone watchman belies the archaeological importance of the site, surrounded by ancient dolmens and sacred groves with enormous and elaborately decorated terracotta horses.

The Talagirishvara Temple at Panamalai is rarely visited, but is notable for the single remnant painting of an exquisite female figure, her leg gently bent and resting against a wall, standing beneath a royal umbrella, wearing a tall bejewelled kirita and jewellery typical of the Pallava period. The figure has been shaded to make it appear three-dimensional. This single figure is one of the most beautiful paintings in India, reminiscent of the women of Ajanta, and the photograph brings out all her glory. She resembles Parvati of the Kailasanatha temple, Kanchipuram, and the Ajanta frescoes. There are traces of painting elsewhere in the temple, but nothing identifiable. The fresco secco method was used here as at Sittannavasal.

The best paintings are, of course, those found inside the vimana in the Brihadishvara temple at Thanjavur. The delicate nature of the paintings and the gradual erosion due to pollution have resulted in the ASI locking them up. Today they can only be seen by special permission. The paintings depict scenes from the Shiva Purana. But the elaborate tableaux of domestic, public and palace scenes are an excellent source of information about the Chola period and the court of Rajaraja, who commissioned them. The paintings are huge and animated, bringing alive the greatness of the Lord who destroys evil and ensures peace.

There is a barely-visible Dakshinamurti beneath a banyan tree on which monkeys are playing, while rishis and animals live together in the forest. There is a stillness of body and reverence on the face of the sages worshipping Dakshinamurti, in contrast to the vivacious animals. Flying apsaras and gandharvas complete the scene of palatial proportions.

The Sundaramurty Nayanar story depicts a magnificent Cheraman Perumal on a bejewelled white horse, while an angry Sundaramurti Nayanar wears a white coat! Shiva, in this scene, is an old man. A beautiful tableau is that of Rajaraja listening to his preceptor Karur Devar, the two faces a study of intense concentration.

In another panel, dancing apsaras — their faces a study of abhinaya— and Rajaraja and his wives watch in awe the magnificent ananda tandava, the dance of Nataraja performed in the golden mandapamof Chidambaram. Exquisite jewellery, jasmine-bedecked hairstyles, and beautifully featured people with eyebrows like a bow and compassionate eyes bring alive the massive compositions in bright colours.

The best painting is that of Tripurantaka, Shiva as the destroyer of the demon Tripura. With wide-open eyes and raised arms, Shiva prepares to slay the demon. An animated Durga seated on her roaring lion prepares to attack the demon's hordes with her raised sword. Brahma is a charioteer, while Shukracharya leads the asuras(demons).

What is significant about the Chola paintings of Thanjavur is that there is great emotion in all the faces, whether it is the compassion of the guru counselling Rajaraja, or a contemplative rishi, a devout queen, an animated dancer or an angry Shiva. The photos bring out the varied emotions on the many faces, a feature rarely seen in Indian art.

During the reign of king Vijayaraghava Nayak, the Chola paintings were covered with plaster and painted over, a happy circumstance that probably preserved the earlier Chola murals.

Apart from the paintings, 80 karanas of Bharatanatyam sculpted in granite are printed in black-and-white. Each karana is accompanied by the relevant verse from the Natya Shastra written in the Roman script, with a translation, description and remarks about the figure and the karana. This documentation is an important contribution to both art and dance.

The book includes photographs of the caves and the temples where the paintings are situated, along with some bronzes and sculptures found therein. The stone objects have been printed in black-and-white, thereby emphasising the granular content of the stone and providing a stark contrast to the colourful paintings.

The second book contains a documentation of the paintings in Thanjavur style in the collection of the Koviloor math. Over 100 years ago, a temple and tank were constructed in Koviloor by Sri-la-Sri Veerasekara Gnanadesika Swami of the Koviloor math. He was a great builder whose sense of aesthetics resulted in the construction of 12 beautiful vahanas and an extensive collection of Thanjavur paintings about his Lord Shiva, whose Thiruvilayadal Puranam is depicted in 64 paintings. The collection also includes paintings of Vaishnavite, Kaumara, Ganapatya and Sakta themes. Besides a large Nataraja and Dattatreya, there is also a rare depiction of Sri Narasimha Bharati, the much revered ascetic Shankaracharya of Sringeri Math who lived in the first half of the 20th Century. The paintings are not significant for their age: they are important in that they are a record of the religious preferences and iconographic developments at the beginning of the 20th Century. It is not often that one gets to see a private art collection: Swami Nachiappa has done a great service to art lovers by publishing this book.

Besides the paintings mentioned above, the collection includes the famous story of Kannappa Nayanar and several dynamic forms of Shiva, such as Nataraja, Gajasarmambeswarar and Veerabhadra. Harihara is represented as Sankaranarayana, while Ardhanarishvarar, Dakshinamoorthi and the other forms of Shiva display similar facial and decorative features.

Like all Thanjavur paintings, the central figures are much larger and generally white, plump and round-faced, while the subsidiary figures are relatively smaller, with smaller panels at the bottom or sides of the painting. The gesso relief work typical of Thanjavur paintings comes out in the borders and mandapams that frame the figures, while many are framed by oval cameos.

Like the Thanjavur paintings in the Sarasvati Mahal Palace collection, the paintings are very two-dimensional, with a gentle roundness and depth created by a range of shades from a light central colour to dark edges. While the first book is well written, the paintings in the second book do the talking: the Koviloor paintings are only labelled, with little description, leaving the reader time to study them in depth.

The books are well printed and bring out the riot of colours that characterise Indian painting. Both are one-of-a-kind collections of photographs that have made a great contribution to our knowledge of Indian art. They are essential additions to the library of a lover of Indian art.

Tanjavur Paintings in Koviloor

Sittannavasal Panamalai, Tanjavur Early Chola Paintings;

Narasiah

2013/10/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 13, 2013, 5:45:33 AM10/13/13
to mintamil, Subashini Tremmel
பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.
தஞ்சாவூர் பெயிண்டிங் நூலை திருமிகு சுபா அவர்கள் கோவிலூர் வந்தபோது ஒளிப்படமாக எடுத்துச் சென்றுள்ளார்கள். மின்னாக்கம் செய்வதற்கும் சுவாமிகளிடம் அனுமதி பெற்றுள்ளார்கள். ஒளிப்படங்கள் நேர்த்திக்கிணங்க அப்பணியை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என எண்ணுகிறேன். அவர்களுக்குப் பணிச் சுமையையும் காண்கிறேன். பணி நிறைவேறினால் அளப்பரிய பயனாக அமையும். ஏனென்றால் அப்படங்களை எல்லோரும் காண இயலாது. பெரும்பான்மையான படங்கள் சுவாமிகள் பிரத்யேகப் பூசனை அறையில் உள்ளவை. நாச்சியப்ப சுவாமிகள் புகைப்படக் கலைஞர் என்பதால் நுணுக்கமாகப் பார்க்கௌலகோர்க்கு நற்பேறு.
நன்றி.

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 13, 2013, 5:47:04 AM10/13/13
to mintamil, Subashini Tremmel
உலகோர்க்கு நற்பேறு.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2013/10/13 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

Subashini Tremmel

unread,
Oct 13, 2013, 2:33:40 PM10/13/13
to சொ. வினைதீர்த்தான், மின்தமிழ், Subashini Tremmel

2013/10/13 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.
தஞ்சாவூர் பெயிண்டிங் நூலை திருமிகு சுபா அவர்கள் கோவிலூர் வந்தபோது ஒளிப்படமாக எடுத்துச் சென்றுள்ளார்கள். மின்னாக்கம் செய்வதற்கும் சுவாமிகளிடம் அனுமதி பெற்றுள்ளார்கள். ஒளிப்படங்கள் நேர்த்திக்கிணங்க அப்பணியை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என எண்ணுகிறேன். அவர்களுக்குப் பணிச் சுமையையும் காண்கிறேன். பணி நிறைவேறினால் அளப்பரிய பயனாக அமையும். ஏனென்றால் அப்படங்களை எல்லோரும் காண இயலாது. பெரும்பான்மையான படங்கள் சுவாமிகள் பிரத்யேகப் பூசனை அறையில் உள்ளவை. நாச்சியப்ப சுவாமிகள் புகைப்படக் கலைஞர் என்பதால் நுணுக்கமாகப் பார்க்கௌலகோர்க்கு நற்பேறு.

திரு.சொ.வி.அவர்களே.
 2 படங்களைத் தவிர ஏனையவை மிகத் தெளிவாக வந்துள்ளன. நாம் இருவரும் இணைந்து மின்னாக்கம் செய்த நூல் இது. இவ்வாண்டு நவம்பர் மாத இறுதிக்குள் இந்த மின்னூல் வெளிவரும்.

அன்புடன்
சுபா

நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.  

Innamburan S.Soundararajan

unread,
Oct 13, 2013, 2:40:02 PM10/13/13
to mintamil, சொ. வினைதீர்த்தான், Subashini Tremmel
என்னுடைய கணக்கு சாத்திரம் சரி தான் என்று இந்த அருமையான தொடர் கட்டியம் கூறுகிறது.
என்னுடைய கணக்கு சாத்திரம்:
1 + 1 = 3
1 + 3 = 6
1+ 6 = 10

Tthamizth Tthenee

unread,
Oct 13, 2013, 2:48:56 PM10/13/13
to mint...@googlegroups.com, சொ. வினைதீர்த்தான், Subashini Tremmel
அருமையான கணக்கு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

meenavan2

unread,
Oct 15, 2013, 10:25:03 PM10/15/13
to mint...@googlegroups.com, மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt

திருமிகு சுபா  அவர்களே
கோவிலூர்  ஆதீனம் பற்றிய செய்திகள் தொடர்ந்து  வெளிவ்ருவ்தில் மிக்க ம்கிழ்ச்சி.
கோவிலூர் ஆதீனம் நடத்தி வரும் கல்வி  நிறுவ்னங்களின்  பட்டியல்.
1.கோவிலூர்  ஆண்டவர் பாரம்பரியக் கலை ம்ற்றும் பண்பாட்டுக் கல்லூரிகள்
   அ. திருமுறைக் கல்லூரி                              1995
   ஆ.நாதஸ்வரக் கல்லூரி                               1995
    இ.தவில்  கல்லூரி                                        1995
    ஈ. கல் சிற்பக் கல்லூரி                                  2004
    உ.ஐம்பொன் சிலைக் கல்லூரி                     2005
    ஊ.மரச்சிற்பக் கல்லூரி                                 2006

2.சீர் வ்ள்ர் சீர்  முததுராமலிங்க ஆண்டவர் நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளி                          1995

3.கோவிலூர்  ஆண்டவர்  மாண்டிசோரிப் பள்ளி                                                                         1995

4.கோவிலூர்  ஆண்டவர் உடற்பயிற்சிக் கல்லூரி                                                                        2007

5.கோவிலூர் ஆண்டவர்  யோகா ஆராய்ச்சி  மையம்                                                                  2007

6.நாச்சியப்ப சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரி                                                                            2009

7.கோவிலூர் ஆண்டவர் மெட்ரிக்குலேசன் பள்ளி                                                                         2010

8.கோவிலூர்  ஆண்டவர்; சமுதாயக் க்ல்லூரி                                                                                2010

9.நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிடியல் கல்லூரி                                                                         2013

  (ஊடகக் கல்வி தொடங்க அனுமதி கேட்டுள்ளோம்)

பள்ளி கல்லூரிகளுக்காகப்  பல் பேருந்துகள்  குறைந்த கட்டண்த்தில் இயக்கப்பட்டு  வருகின்ற்ன்.

காப்பியக் க்விஞர்.நா.மீனவன்

On Friday, October 4, 2013 8:40:55 PM UTC+5:30, Suba.T. wrote:

Subashini Tremmel

unread,
Oct 29, 2013, 12:28:57 AM10/29/13
to மின்தமிழ், valli N, Koviloor Mutt
http://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=4233  ..an article published in Hinduism today about Koviloor mutt and Nachiappa Swamikal. 
Thanks to Mr.Narasiah for sharing the link.

Suba

2013/10/16 meenavan2 <meen...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 11, 2013, 5:13:31 AM11/11/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சிக் கல்லூரி

2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சிக் கல்லூரி கோவிலூரில் தேவையான அனைத்து அரசு+பல்கலைக் கழக அனுமதிகளுடன் தொடங்கப் பெற்று நடந்து வருகிறது.  இது தற்போதுள்ள கட்டிடங்களில் நடைபெற்று வருகிறது  12.5 ஏக்கர் பரப்பளவில் இதற்கான விளையாட்டுத் திடல்களும் ஓடு களமும் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

முனைவர் ஏ.எம். மூர்த்தியை (முன்னாள் கல்வித்துறைத் தலைவர், அழகப்ப பல்கலைக் கழகம்) முதல்வராகக் கொண்டு ஐந்து ஆசிரியர்களுடன் முப்பத்தொரு மாணவர்களுடனும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.  

தேவையான அனைத்து ஆய்வுக் கருவிகளும், உபகரணங்களும் நூலகமும் அமைக்கப் பெற்றுள்ளன.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டியற் பல்கலைக் கழகத்தின் சார்பில் கல்லூரிகட்கு இடையேயான தடகளப் போட்டி கோவிலூரில் நடைபெற்றது.

குருமகாசந்நிதானம் தலைமை ஏற்க அழகப்பா பல்கலைக் கழகத் துனை வேந்தர் பேரா. முனைவர் பி. இராமசாமி அவர்கள் போட்டிகளைத் துவக்கி வைத்தார்கள்.  தமிழகத்திலுள்ள பதினொரு உடற்பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து ஏறக் குறையை இருநூறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினார்கள்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.  சுவாமிகள் ஆசி வழங்க, அழகப்பா பல்கலைக் கழகத் துணை வேந்தர் தொடக்க உரை நிகழ்த்தினார்.  16 ஆம் தேதி தவத்திரு சுவாமிகள் தலைமை தாங்கி ஆசி வழங்கினார்கள்.  தமிழ்நாடு உடற்பயிற்சிக் கல்விப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பேராசிரியர் திருமலை சாமி அவர்கள் பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.  அழகப்பா பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் முனைவர் தண்டபாணி அவர்கள் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசினார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கல்வியியற் தலைவர் பேராசிரியர் முனைவர் வைத்தியநாதன் அவர்கள் வெற்றியாளர்களைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.  கல்லூரியின் தாளாளர் மெய்யப்பன் நன்றி கூறினார்கள்.

விழாவும் போட்டிகளும்மிகச் சிறப்பாகவும் திறமையாகவும் நடை பெற்றதாக எல்லாராலும் பாராட்டப் பெற்றன.

*********************************************************************************

குருமகா சந்நிதானம் அவர்களின் 80 ஆண்டு நிறைவு விழா

16--5--2003 அன்று சுவாமிகளின் பிறந்த நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திரத்தன்று காலை ஆயுசு ஹோமம், கணபதி ஹோமம், நவக்ரஹ சாந்தி ஹோமம் ஆகியவற்றுடன் அருள்மிகு திருநெல்லை கொற்றவாளீசர் திருமூர்த்தங்களுக்கு அபிஷேஹ ஆராதனையுடன் வெகு விமரிசையாக நிறைவேறி சுவாமிகட்கு புனித நீராட்டும் நடைபெற்றது.  பெங்களூர் கைலாச ஆஸ்ரமம் திருச்சி மஹா சுவாமிகள், பூஜ்யஶ்ரீ ஸ்வாமி தயாநந்த சரஸ்வதி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தார்கள்.  பெங்களூர் நித்தியானந்த கிரி சுவாமிகளும் மரியாதை செய்து சுவாமியிடம் ஆசி பெற்றார்கள்.  ஏறக்குறைய பத்தாயிரம்  அன்பர்கள் கூடி குருமகா சந்நிதானத்தின் ஆசி பெற்றார்கள்.  யாவர்க்கும் அன்னம் பாலிக்கப்பட்டது.

மாலை வாழ்த்தரங்கம் நடைபெற்றது. திருச்சி மஹா சுவாமிகள், பூஜ்யஶ்ரீ ஸ்வாமி தயாநந்த சரஸ்வதி, குன்றக்குடி அடிகளார் தவப்பெருந்திரு பொன்னம்பல சுவாமிகள், பேரூர் ஆதீனம் இளையவட்டம் மருதாசல அடிகள் ஆகியோர் குருமகா சந்நிதானம் நாச்சியப்ப சுவாமிகளின் குணநலன்களையும் செய்து வரும் பல்வேறு அறப்பணிகளையும் பாராட்டிப் பேசி வாழ்த்தினார்கள்.  மிகப் பெருவாரியான தமிழறிஞர்களும், சாதுக்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வித்வத் சதஸ் (2004)

சுவாமிகள் பட்டம் ஏற்பதற்கு முன்னரே இரண்டு பெரிய கருத்தரங்கங்கள்--வேத ஆகமம் பற்றி நடத்தி உள்ளார்கள்.  பின்னர் 1996, 1998, 2000 ஆகிய ஆண்டுகளில் வேத ஆகம சதஸ் நடத்தினார்கள்.  பட்டம் ஏற்ற பின்னர் 1997 இல் சிலப்பதிகார விழாவும் 2001 இல் திருக்குறள் மகாநாடும் நடத்தினார்கள்.

2004 மே மாதம் நான்காவது வேத ஆகம திருமுறை சிற்ப நாதஸ்வர வித்வத் சதஸ் ஒன்று கோவிலூரில் கூட்டினார்கள்.  தமிழகத்தின் மிகச் சிறந்த வேத விற்பன்னர்களும், தலை சிறந்த சிவாசாரியர்களும் பங்கேற்றனர்.  சிற்ப அரங்கத்தில் பத்மஶ்ரீ முத்தையா ஸ்தபதி, மாலைகண்டான் லெக்ஷ்மண ஸ்தபதி பங்கேற்றார்கள்.  நாதசுவரக்  கருத்தரங்கில் மதுரை எம்.பி.என் பொன்னுச்சாமி, கீழ்வேளூர், கணேச பிள்ளை, பொறையார் வேணுகோபாலப் பிள்ளை போன்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.

திருமுறை அரங்கில் சுவாமிகளின் வெளியீடான தேவார ஒலிப் பேழைகள் ஒன்பதும்--சுவாமிகள் வெளியிட மதுரை கயிலை மணி மு. கண்ணப்பச் செட்டியார் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.  ஒலிப் பேழைகளில் பாடியுள்ள தமிழகத்தின் தலை சிறந்த பனிரெண்டு ஓதுவார்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.

சுதர்ஸன ஹோமம்

2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 முதல் 11 ஆம் நாள் வரை மூன்று நாட்கள் மஹா சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது.  இதற்கான பட்டாச்சாரியார்கள் திருப்பதியில் இருந்து வந்திருந்தார்கள்.  ஶ்ரீதேவி, பூதேவியுடன் உடனாய பெருமாள் திருமூர்த்தங்களும், விசேஷமாகத் திருப்பதியில் இருந்து கொண்டு வரப் பெற்று அபிஷேஹ ஆராதனைகள் நடைபெற்றன.

பெங்களூர் கைலாச ஆஸ்ரமம் திருச்சி மஹா சுவாமிகள் வந்திருந்து சுதர்ஸன ஹோமத்தை முன்னிருந்து நடத்தித் தந்தார்கள்.  மூன்று நாட்களும் பல்லாயிரக் கணக்கான அன்பர்கள் வந்து தரிசனம் செய்து திருவருள் பெற்றார்கள்.  மூன்று நாட்களும் அனைவர்க்கும் அன்னம் பாலிக்கப்பட்டது.

ஆயிரத்தெட்டுக் கலசாபிஷேஹத்துடன் கூடிய அதிருத்ர ஹோமம்

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 முதல் 20 ஆம் தேதி வரை ஆறுகால பூஜையுடன் --1008 கலசங்கள் தாபித்து, 150 சிவாசாரியார்கள் 250 மாணவர்கள் வேத மந்திரம் ஓத மூன்று நாட்கள் அதிருத்ர ஹோமம் நடைபெற்றது.  பிள்ளையார்பட்டி டாக்டர் பிச்சைக் குருக்களும் மாயவரம் சபேசக் குருக்களும் தலைமைக் குருக்களாக இருந்து நடத்தித் தந்தார்கள்.  மஹா மண்டபமாக யாகசாலை அமைந்திருந்தது கண்கொள்ளாக் காட்சி.  வேதாந்தத்தின் தலையாய குருவாகத் திகழ்கின்ற பூஜ்யஶ்ரீ ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், மேலை நாடுகளில் ஆன்மிகத்தைப் பரப்புகிற திருத்தொண்டை மிகச் செம்மையாகச் செய்து வருகிற ஜெர்மனி அன்னை மீரா அவர்கள், கைலாச ஆசிரமத்தின் தற்போதைய மடாதிபதி ஜெயேந்திரபுரி சுவாமிகள் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ஹோமம் பூர்த்தியானவுடன் புனிதக் கலசங்களின் நீரால் அருள்மிகு திருநெல்லை அம்மனுக்கும் அருள்மிகு கொற்றவாளீசருக்கும் அபிஷேஹம் செய்யப் பெற்றது.

எல்லா நாட்களும் பல்லாயிரக் கணக்கான அன்பர்கள் தரிசித்துக் குருவருளும் திருவருளும் பெற்றார்கள்.  

புனித நீராட்டு விழா நடந்து முடிந்த உடனே இதுவரை இப்பகுதி காணாத அளவில் மழை பொழிந்து விண்ணோர்கள் ஆசியினைத் தெரிவித்தது நெகிழ்வான, மறக்க முடியாத அனுபவம்.
                 
Geetha Sambasivam

unread,
Nov 11, 2013, 5:15:08 AM11/11/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
ஊருக்குப் போனது, விருந்தினர் வருகை என்று  வேலைகள் இருந்ததால் தாமதம் ஆனதற்கு மன்னிக்கவும்.

2013/11/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 11, 2013, 2:20:56 PM11/11/13
to Geetha Sambasivam, மின்தமிழ், valli N, Koviloor Mutt, Subashini Tremmel
அது பிரச்சனையேயில்லை கீதா. நேரம் கிடைக்கும் போது தட்டச்சு செய்து தாங்கள் பகிர்ந்து கொள்வதே பெரிய பணி. அதற்கு என் நன்றி.
சுபா

2013/11/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஊருக்குப் போனது, விருந்தினர் வருகை என்று  வேலைகள் இருந்ததால் தாமதம் ஆனதற்கு மன்னிக்கவும்.

2013/11/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Nov 12, 2013, 10:47:45 AM11/12/13
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

2013/11/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>
புனித நீராட்டு விழா நடந்து முடிந்த உடனே இதுவரை இப்பகுதி காணாத அளவில் மழை பொழிந்து விண்ணோர்கள் ஆசியினைத் தெரிவித்தது நெகிழ்வான, மறக்க முடியாத அனுபவம்.

ஆமாம்,
அன்று நாங்கள் செல்லமுடியாமல் போனது.
பின்னர் ஒருநாள் சென்றே வழிபட்டோம்.

நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

அன்பன்
கி.காளைராசன்

Geetha Sambasivam

unread,
Nov 14, 2013, 6:04:34 AM11/14/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
ஆன்மிக வேதாந்தக் கருத்தரங்கு

2005 நவம்பர் 20 முதல் 22 வரை அதிருத்ர ஹோமத்தைத் தொடர்ந்து ஆன்மிகக் (20--11--05 மதியம் ஹோமம் நிறைவுற்றது--மாலை முதல் கருத்தரங்கம் நடைபெற்றது.) கருத்தரங்கு 22 ஆம் தேதி மாலை வரை நடைபெற்றது.  20 ஆம் தேதி மாலை குரு மகாசந்நிதானம் அருட் தலைமையில் ஜெர்மனி மதர் மீரா அவர்கள் புதிதாகக் கட்டிய நூலகக் கட்டிடத்தில் கோவிலூர் ஆண்டவர் நூலகத்தைக் குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தார்கள்.  தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் சுப. அண்ணாமலை அவர்கள் நூலகங்களின் சிறப்புப் பற்றியும் தேவை பற்றியும், ஆண்டவர் பெருமானின் அருட்செயல்கள், வேதாந்த நுண்ணறிவு, தமிழ்ப் புலமை பற்றியும் பாராட்டிப் பேசினார்கள். "பயன்மிகு வாழ்விற்கு வேதாந்தம்" என்னும் தலைப்பில் ஜெயேந்திரபுரி சுவாமிகளும், பூஜ்யஶ்ரீ சுவாமி தயாநந்த சரஸ்வதி அவர்கள் 'கர்ம யோகம்' தொடர் சொற்பொழிவை ஆறாவது வேளையாகச் சிறப்புரை ஆற்றினார்கள்.

மறுநாள் 21 ஆம் தேதி காலை--மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தா மஹாராஜ், கோயம்புத்தூர் ஸ்வாமி சுதீராநந்தா சரஸ்வதி அவர்கள் "கைவல்ய நவநீதம்" பற்றியும் பூஜ்யஶ்ரீ தயானந்த சுவாமி அவர்கள் 'கர்ம யோகம்' பற்றித் தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றினார்கள்.

மாலை குருமகா சந்நிதானம் அருட் தலைமையில் பூஜ்ய ஶ்ரீ ஸ்வாமிகள் தயானந்த  சரஸ்வதி, "கர்மயோகம்" தொடர் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

அடுத்த நாள் 22 காலை --திருவேடகம் ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்வாமி பரானந்தா அவர்கள் "தாயுமானவரும் வேதாந்தமும்" பற்றி உரை நிகழ்த்தினார்கள்.  பின்னர் தொடர்ந்து பூஜ்ய ஶ்ரீ ஸ்வாமி தயானந்தா அவர்கள்  கர்மயோக உரை ஆற்றினார்கள்.  மாலை பேரூர் ஆதினம் இளைய பட்டம் மருதாசல அடிகள் தலைமை ஏற்க, நம் குருமகா சந்நிதானம் கோவிலூர் மரபு வேதாந்த நூல்களை வெளியிட்டார்கள்.  முதற்படியைப் பெற்றுக் கொண்டு, கோவிலூர் மரபு வேதாந்த ஆசானும் நம் எட்டாவது பட்டம் ஶ்ரீலஶ்ரீ சோம சுந்தர ஞான தேசிக மாணாக்கரும் குமார பாளையம், ஆனந்தாஸ்ரமக் குரு முதல்வரும் ஆன  சோம. ஸச்சிதானந்த சுவாமிகள் (சோம. கோபால ஸ்வாமிகள்) கோவிலூர் வேதாந்த மரபு பற்றி மிக அருமையான சொற்பொழிவு ஒன்று நிகழ்த்தி அனைவரையும் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தினார்கள்.

ஆன்மிகக் கருத்தரங்கு நடைபெற்ற மூன்று நாட்களும் இடையறாத கனத்த மழை வெள்ளம் போல பொழிந்தும் தயானந்தாவின் கர்மயோகச் சொற்பொழிவைக் கேட்கத் தவறாது நூற்றுக் கணக்கானோர் வந்தது மிக ஆச்சரியம்.  கோவிலூர் வேதாந்த மரபு நூல்கள் வெளியிட்ட அன்று குமாரபாளையம் ஆனந்தாஸ்ரமச் சீடர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள். கன மழையிலும் அரங்கம் நிரம்பி இருந்தது மிக மகிழ்வாக இருந்தது.

அதி ருத்ர ஹோமம், மற்றும் கருத்தரங்கம் நடைபெற்ற ஐந்து நாட்களும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  முதல் மூன்று நாட்கள் கல்லிடைக்குறிச்சியைச் சார்ந்த ஶ்ரீ துக்காராம் கணபதி மஹராஜ் அவர்கள் வாரக்கரீ சம்ப்ரதாய அபங்க நாம சங்கீர்த்தன ஹரிகதை நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக அனைவரும் பக்திப் பரவசம் அடையும் வண்ணம் நிகழ்த்தினார்கள்.  நான்காம் நாள் ஓதுவா மூர்த்திகள் திருக்களர் இரத்தின சபாபதி ஓதுவார், (கோவிலூர்) சிதம்பாம் ஞானப் பிரகாச ஓதுவார் மற்றும் திருத்தணி சுவாமி நாத ஓதுவார் திருமுறை இன்னிசை அளித்தனர்.  கடைசி நாளாக 22--11--2005 அன்று கர்நாடக இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

2002 ---- தொண்ணூற்று ஆறு ஊர் நகரத்தார் மகாநாடு

2003-- ஶ்ரீலஶ்ரீ நாச்சியப்ப சுவாமிகள் 80 ஆவது பிறந்த நாள்

2004 --- சுதர்சன ஹோமம்  --வித்வத் சதஸ்

2005 --- 1008கலசாபிஷேஹம் --- வேதாந்தக் கருத்தரங்கு

2006 --- இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் வருகை

2007---- உடற்பயிற்சிக் கல்லூரி

2008 ---- ஓவியர்கள் முகாம்

புதிய மடங்கள்

சென்னை --1998

ரிஷிகேஷ் -- 2000

அமெரிக்கா --- 2006

பண்டரிபுரம் --- 2008/2009

meenavan2

unread,
Nov 15, 2013, 8:03:02 AM11/15/13
to mint...@googlegroups.com, மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt

திருமிகு சுபா அவர்களே
கோவிலூர் மடாலயத்தின் சார்பில் நிகழ்ந்த வேதம் திருமுறை ஆகமம் நாதஸ்வரக் கருத்தரங்குகள்.சுதர்சன வேள்வி
நாச்சியப்ப சுவாமிகளின் முத்துவிழா போன்றவை நடந்த பொழுது அதன் அமைப்பாள்ராக இருந்து சிற்ப்புற நடத்தியதில்
எனக்குப்  பெரிய பங்கு உண்டு.மடாலயத்தின் இலக்கியப் பதிப்புப் பணிகளிலும் இன்றும் நான் பெரும் பங்காற்றி  வருகிறேன்,

காப்பிய்க் கவிஞர்.நாமீனவன்

Geetha Sambasivam

unread,
Nov 16, 2013, 4:50:03 AM11/16/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூர் சுவாமிகளின் ஆதரவுடன் நடைபெறும் வேத ஆகமப் பாடசாலைகள்

1. Kanchi Mahaswamigal Sadapathi,

Veda Sivagama Padasalai Trust,

No.66, Sannathi Street, --Tirupparankundram

2. Sri A.V. Swaminatha Sivachariyar,

Sivapuram Vedha Sivagama Padasalai Trust,

No. 32, Mayuranathar South Street, Myladuthurai.

3. S. Hariharan,

S/o., Sri M. Sundara Gurukkal,

HR&CE Vedhagama Paritchadhikari,

Kandamangalam (via) Thirukkattupalli.

4. B. Sarveswara Gurukkal M.A., /M/Phil.,

Srimath Srikanta Sivacharya Trust,

No.11, Nitheeswarar Agraharam, Karaikkal.

5. Sri Dhakshinamurthy Gurukkal,

Sri Brahma Vidyambal Divine Trust,

Sannathi Street, Thiruvengadu, (Sirkali TK)

6. Secretary, M.C. Padasalai,

Krishnankoil Street, Kottaiyur.

7. Principal,

Sri Sankara Gurukulam Acharyal Vidhya Peedam,

No. 79, Perumal Koil Street, Melattur (Tanjore Dt.)

8. Sri Naganatha Agora Sivachariyar,

Vedha Sivagama Padasalai,

No.4, Vellalar Single Street, Myladuthurai.

9. Thindandi Venkata Ramanuja Jeet, 

B.E.M.L. Layout, H.V. Halli,

Raja Rajeswari Nagar,  Bangalore--560 098.

10. M. Ramiah @ Lakshmanan

Tenkasi.
                 
Geetha Sambasivam

unread,
Nov 16, 2013, 5:14:06 AM11/16/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூரில் தொண்ணூற்றாறு ஊர் நகரத்தார்களும் கூடிய எழுச்சி மிகு மாநாடு!

சித்ரபானு ஆண்டு சித்திரைத் திங்கள் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி (3-5-02 முதல் 5-5-02 வரை) மூன்று நாட்கள் நடைபெற்ற எழுச்சிமிகு மாநாட்டினைக் காணக் கண்கோடி வேண்டும்.

இது மாநாட்டு விழாவிற்கு வந்தவர்கள் வராதவர்களிடம் சொல்லிச் சொல்லி மகிழும் அளவிற்கு மாநாடு சிறந்தோங்கியது.

முதல்நாள் மாநாடு :  முதல்நாள் நிகழ்ச்சி மாலை 6-00 மணிக்குத் துவங்க வேண்டும் என்பது ஏற்பாடு.  அன்று காலை 10-00 மணியிலிருந்தே நகரத்தார் பெருமக்கள் திருவிழாவிற்குச் செல்லும் மகிழ்ச்சியோடு ஆச்சிகளும், குழந்தைகளும் ஆர்வத்தோடு கூடத்தொடங்கினர்.

பிரம்மாண்டமான பந்தல்:  மண்டபத்தில் தான் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது என்றாலும் அரங்கத்திற்கு வெளியே சுமார் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் மாபெரும் அலங்காரப் பந்தலை எழிலோடு நிமாணித்திருந்தனர்.  பந்தலில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்தபடியே நிகழ்ச்சிகளைக் காணும் வண்ணம் வண்னத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அதிக அளவில் அலங்காரப் பந்தலில் தயாராக இருந்தன.

குடும்பம் குடும்பமாக:  பேருந்துகளிலும், சிற்றுந்துகளிலும், இரண்டு சக்கர வாகனங்களிலும் அலைஅலையாய்...அணி அணியாய்...குடும்பம் குடும்பமாய் கோவிலூரில் திரளத் தொடங்கியது நகரத்தார் வெள்ளம்.  அனைத்துச் சாலைகளும் கோவிலூர் நோக்கியே பயணப்பட்டன.

விழா நாயகர்:  அன்று மாலை சுமார் 5-30 மணி அளவில் விழாக்குழுவினருடன் துறவுக் கூட்டத்திலிருந்து காவியுடை தரித்த நகரத்தாரின் மண்டேலா சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகள் அழைத்து வரப்பட்டார்.  அருள்மிகு நெல்லை அம்மன் உடனாகிய கொற்றவாளீஸ்வார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப் பெற்றது.  இறையருளோடு மாநாட்டு அரங்கத்திற்கு வருகை தந்தனர்.  கூட்டத்தினரின் பலத்த கரவொலிகளின் நடுவே விழாநாயகர் மேடையில் ஆசி வழங்கியவாறு அமர்ந்தார். முக்கியப் பிரமுகர்களும் மேடையில் இருக்கையில் அமர்ந்தனர்.  இறைவாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

ஆன்மிக குருவின் அருளுரை;  கோவிலூர் ஆதீனத்தின் 12 ஆவது குரு மகா சன்னிதானம் சீர் வளர் சீர் நாச்சியப்ப அடிகள் ஆற்றிய அருளுரையில், "தென்னாட்டில் கோவிலூர் மடம்" ஒன்றுதான் வேதத்தைத் தமிழில் கற்றுத் தருகிறது.  "வேதாந்தம்" எனபப்டுவது ஒருமதம் என நினைக்கிறார்கள்.  தமிழகத்தில்  ஓதுவார்கள் பற்றாக்குறை உள்ளது. காரணம் சம்பளம் குறைவாக இருப்பதாலும் அப்பாவின் தொழிலுக்கு மகன் வர வேண்டாம் என நினைத்து இளைஞர்கள் கம்ப்யூட்டர் கல்விக்குச் சென்று விடுகிறார்கள். கோவிலூர் ஆதீனத்தில் பயின்ற 100 ஓதுவார்கள் தற்போது நல்ல வேலைகளில் உள்ளனர்.  80 பேருக்கு நாதஸ்வரம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.  சிற்பக் கலைப் பயிற்சியும் பயிற்றுவிக்கப் படுகிறது.

2013/11/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 16, 2013, 1:45:30 PM11/16/13
to meenavan2, மின்தமிழ், Subashini Tremmel

2013/11/15 meenavan2 <meen...@gmail.com>

திருமிகு சுபா அவர்களே
கோவிலூர் மடாலயத்தின் சார்பில் நிகழ்ந்த வேதம் திருமுறை ஆகமம் நாதஸ்வரக் கருத்தரங்குகள்.சுதர்சன வேள்வி
நாச்சியப்ப சுவாமிகளின் முத்துவிழா போன்றவை நடந்த பொழுது அதன் அமைப்பாள்ராக இருந்து சிற்ப்புற நடத்தியதில்
எனக்குப்  பெரிய பங்கு உண்டு.மடாலயத்தின் இலக்கியப் பதிப்புப் பணிகளிலும் இன்றும் நான் பெரும் பங்காற்றி  வருகிறேன்,

இதனை அறிந்து கொள்வதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். 

அன்புடன்
சுபா

Subashini Tremmel

unread,
Nov 16, 2013, 1:46:29 PM11/16/13
to Geetha Sambasivam, மின்தமிழ், Subashini Tremmel
தொடர்ந்து தட்டச்சு செய்து இக்கட்டுரைகளைப் பதிந்து வரும் கீதாவிற்கு என் நன்றி.

சுபா

Geetha Sambasivam

unread,
Nov 20, 2013, 5:49:19 AM11/20/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
நிகர்நிலைப் பல்கலைக் கழகம் ஒன்றைத் துவங்கி சுமார் 10 கலைகளில் பாடமும், பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.  நகரத்தார் சமுதாய வளர்ச்சிக்காக 'நகரத்தார் நல்வாழ்வு அறநிலை'(Nagaraththar Welfare Trust) துவங்கப்படவுள்ளது.  இந்த அறநிலைக்கு ரூபாய் 7 கோடி நிதி சேர்த்திடும் திட்டமும் உள்ளது எனக் கூறிய சுவாமிகள் இந்த அறநிலைக்குத் தனது சார்பில் ரூபாய் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்று கூறியதும் கூட்டத்தினரின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமாயிற்று.  மேலும் சுவாமிகள் தனது அருளுரையில்...நகரத்தார் சமுதாய மக்களில் ஒரு பக்கம் வசதி படைத்தவர்கள், மற்றொரு பக்கம் வசதியற்றவர்கள் என்ற நிலையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.  அந்த வசதியில்லாதவர்களைக் கவனிக்க வேண்டும் என்பதே நோக்கம்.  பணக்காரன், ஏழை என்ற பாகுபாட்டை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய முக்கியத் திட்டம்.  நகரத்தாரில் உள்ள சுமார் 35,000 புள்ளிகளில் புள்ளி ஒருவருக்குக் குறைந்த பட்சம் ரூ 1000/- வீதம் அறநிலைக்கு வழங்க வேண்டும்.  வசதியுள்ளவர்கள் அதிகமாகத் தரலாம்.  கட்டாயம் கிடையாது. ஏழுகோடி ரூபாய் சேர்ந்தால் இளைஞர்களின் உயர்கல்விக்கு நிச்சயமாக உதவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  இப்போது வசதியற்ற 600 முதியோர்களுக்கு மாதந்தோறும் கோவிலூர் ஆதீனம் உதவி வருகிறது.

நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் தள்ளிவிடக் கூடாது... அவர்களுக்கு உதவுவது நமது தலையாய கடமை என்ற எண்ணம் வளர வேண்டும். உண்மையிலேயே பெற்றோர்களை வைத்துக் காப்பாற்ற முடியாது கஷ்டப்படும் பிள்ளைகள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பலாம். அப்படிப்பட்ட முதியோர்களுக்குத் தான் உதவிடும் திட்டம் உள்ளது.  இந்தத் திட்டத்திற்கு வெளிநாடுகளில் உள்ள நம்மவர்கள் எல்லாம் அள்ளித் தருவதாக உறுதி கூறி இருக்கிறார்கள்.

நம் சமுதாயத்தில் மூன்று நாள் நடைபெற்ற திருமணங்கள் இப்போது ஒருநாள் மட்டும் நடைபெறுவதாக மாறி இருக்கிறது எனும் இந்த மாற்றம் வரவேற்கக் கூடியதே. என்னுடைய சம்பாத்தியத்தில் நிறைய வட்டி வருகிறது.  அந்த வட்டியை நல்ல காரியங்களுக்கும் நகரத்தார் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வட்டியைச் செலவு செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.

கோவிலூர் ஆதீனம் என்றும் உதவிடும் ஒரு ஆலயமாக சாசுவதமாக இருக்கும் என்பதை மட்டும் நிச்சயமாகக் கூறிக் கொள்கிறேன்.  என்று சுவாமிகள் கூறியதும்...சமூகச் சிந்தனையும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை மாற்ற வேண்டும்.  இளைஞர்களின் கல்விக்கும், முதியோர்களின் அந்தக் கடைசி வாழ்க்கைக்கும் உதவ வேண்டும் என்ற சிந்தனை கொண்டவராக மடாலயத்திலிருந்து மறுமலர்ச்சி கொண்ட ஒரு மகா புருஷர் நகரத்தாருக்குக் கிடைத்திருக்கிறார் என்பதைக் கூட்டத்தினர் முகத்தில் தோன்றிய நம்பிக்கை ஒளியில் காண முடிந்தது.

மேலும் அருளுரையாற்றிய அருளாளர், "சமூகப் பணிகளோடு நின்றுவிடாமல் இலக்கியப் பணியையும் ஆற்றப் போகிறேன்.  சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், மணிமேகலை, சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு இன்னும் பிற இலக்கியங்களையும் சாதாரண மக்களும் படிக்கக் கூடிய அளவிற்கு எளிய தமிழில் வடித்து, நூலாக அச்சிட்டு மக்கள் பதிப்பாக வெளியிடப்படும் என்றபோது... மெல்லத் தமிழ் இனி வாழும்" என்று நம்மவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயமே பெருமைப் படக்கூடிய அளவிற்கு அனைவரின் கண்களுக்கும் மடாலயத்திலிருந்து ஒரு சீர்திருத்தத் தூதுவராக, தமிழன்னையின் மைந்தராக தரிசனம் தந்தார்.

சங்க இலக்கியங்களை மக்கள் பதிப்பாக வெளிவருவதற்கு முனைவர் தமிழண்ணல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படவுள்ளது என பலத்த  கரவொலிகளில் அதிர அரங்கத்தில் இவ்வாறு அருளுரை நிகழ்த்தினார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்:  காலை 9--30 மணிக்கு ஆன்மிக அரங்கம் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு வி.என். சிதம்பரம் செட்டியார் அவர்கள் தலைமையேற்றிருந்தார்கள்.  அன்று தான் அக்னி நக்ஷத்திரம் தொடங்கிய நாள் ஆனால்....அன்று முழுவதும் அடைமழை பொழியத் தொடங்கியது.  வெயிலின் வெப்பத்திற்குப் பதிலாக..... குற்றாலத்தில் நடைபெறும் சாரல் விழாவைப் போன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சி துவங்கியது.  ஆன்மிக அரங்கத் தலைமையுரையாற்றிய வி.என். சிதம்பரம் செட்டியார் அவர்கள் "நகரத்தார் மாநாட்டை அந்த வருண பகவானே நேரில் வந்து வாழ்த்துவதாக நினைக்கிறேன்." கொளுத்தும் அக்னி வெயிலுக்குப் பதிலாகக் குளிரில் நனைந்தபடியே நடைபெறும் இவ்விழாவிற்கு வருணன் வந்ததால் தான் கோவிலூர் மாநகரமே குளிர் நகரமாக மாறிவிட்டது.

கோவிலூர் ஆதீனம் அவர்கள் சன்னிதானத்தில் எல்லாரும் சமம்தான், தலையாய மக்களைத் தந்த தலையாய சமூகம் எனும் பொருளில் பேராசிரியப் பெருமக்கள் உரையாற்ற விருக்கிறார்கள்.  படித்தவர்கள் நிறைந்த இந்த சபையில் படிக்காதவனாகிய நான் பேசுகிறேன் என்றால் படித்தவனும், பாமரனும் சுவாமிகள் சன்னிதானத்தில் ஒன்று என்பதற்கு நானே உதாரணம்.

நான் படிக்கவில்லையே தவிர படிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.  அனுபவங்களால் பட்டறிவு...பட்டப்படிப்பு அறிவுக்குச் சமம் என்பார்கள்.... நான் நிறையவே அனுபவப் பட்டவன் தான். ஆகவே, நான் தலைப்புக்குள் போகவில்லை.

(தொடரும்)

Subashini Tremmel

unread,
Nov 20, 2013, 11:01:05 AM11/20/13
to மின்தமிழ், Subashini Tremmel
கோவிலூர் ஆதீனகர்த்தர் ஸ்ரீ நாச்சியப்ப தேசிகரைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள உதவும் ஒரு பகுதி இது.

2013/11/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>
..

கோவிலூர் ஆதீனம் என்றும் உதவிடும் ஒரு ஆலயமாக சாசுவதமாக இருக்கும் என்பதை மட்டும் நிச்சயமாகக் கூறிக் கொள்கிறேன்.  என்று சுவாமிகள் கூறியதும்...சமூகச் சிந்தனையும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை மாற்ற வேண்டும்.  இளைஞர்களின் கல்விக்கும், முதியோர்களின் அந்தக் கடைசி வாழ்க்கைக்கும் உதவ வேண்டும் என்ற சிந்தனை கொண்டவராக மடாலயத்திலிருந்து மறுமலர்ச்சி கொண்ட ஒரு மகா புருஷர் நகரத்தாருக்குக் கிடைத்திருக்கிறார் என்பதைக் கூட்டத்தினர் முகத்தில் தோன்றிய நம்பிக்கை ஒளியில் காண முடிந்தது.

இது அதிகப்படியான ஒரு கூற்று அல்ல.  ஸ்ரீ நாச்சியப்ப தேசிகரின் செயல் திறமும் சமுதாய நலன் பற்றிய அவரது சிந்தனைகளும் எளிதில் மறந்து விடக்கூடியன அல்ல. அவரது சிந்தனைகளின் வெளிப்பாடாக பல முயற்சிகள் தொடரப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
  
காப்பியக்கவிஞர் மீனவன் அவர்களும் இக்காலகட்டத்தில் அடிகளுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்தார் என்பதும் நமக்கு பெருமை தரும் ஒரு விஷயம்.

சுபா

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 20, 2013, 11:40:19 AM11/20/13
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்ற வள்ளுவத்திற்கு ஏற்ப நாச்சியப்ப சுவாமிகள் எண்ணியதையெல்லாம் செயலாக்கினார். 
1.கல்வி நிலையங்கள் தோன்றிப் பொலிகின்றன.
2.கலையரங்கு தொடங்கிப் பரந்து விரிந்து கட்டிடங்கள் அழகுற எழுந்துள்ளன. 
3.சமுதாயப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெற்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்றும் நடந்து வருகின்றன.
4.அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
5.சங்க இலக்கியங்கள் மக்கள் மதிப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

அனைத்துக் கனவுகளும் நனவாகியுள்ளன. அவற்றைத் தொடர்வதற்கு நாச்சியப்ப சுவாமிகள் அருளால் மிகச் சிறப்பான சீடராக மெய்யப்ப ஞானதேசிகச் சுவாமிகள் அமைந்து பணியைத் தொடர்கிறார்கள்.  

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2013/11/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>

நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் தள்ளிவிடக் கூடாது... அவர்களுக்கு உதவுவது நமது தலையாய கடமை என்ற எண்ணம் வளர வேண்டும். உண்மையிலேயே பெற்றோர்களை வைத்துக் காப்பாற்ற முடியாது கஷ்டப்படும் பிள்ளைகள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பலாம். அப்படிப்பட்ட முதியோர்களுக்குத் தான் உதவிடும் திட்டம் உள்ளது.  
ஆதீனம் என்றும் உதவிடும் ஒரு ஆலயமாக சாசுவதமாக இருக்கும் என்பதை மட்டும் நிச்சயமாகக் கூறிக் கொள்கிறேன்.  என்று சுவாமிகள் கூறியதும்...சமூகச் சிந்தனையும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை மாற்ற வேண்டும்.  இளைஞர்களின் கல்விக்கும், முதியோர்களின் அந்தக் கடைசி வாழ்க்கைக்கும் உதவ வேண்டும் என்ற சிந்தனை
 
"சமூகப் பணிகளோடு நின்றுவிடாமல் இலக்கியப் பணியையும் ஆற்றப் போகிறேன்.  சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், மணிமேகலை, சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு இன்னும் பிற இலக்கியங்களையும் சாதாரண மக்களும் படிக்கக் கூடிய அளவிற்கு எளிய தமிழில் வடித்து, நூலாக அச்சிட்டு மக்கள் பதிப்பாக வெளியிடப்படும்
 
சங்க இலக்கியங்களை மக்கள் பதிப்பாக வெளிவருவதற்கு முனைவர் தமிழண்ணல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படவுள்ளது என பலத்த  கரவொலிகளில் அதிர அரங்கத்தில் இவ்வாறு அருளுரை நிகழ்த்தினார்.

கி.காளைராசன்

unread,
Nov 20, 2013, 6:24:06 PM11/20/13
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
வணக்கம்.

2013/11/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>
நகரத்தார் சமுதாய வளர்ச்சிக்காக 'நகரத்தார் நல்வாழ்வு அறநிலை'(Nagaraththar Welfare Trust) துவங்கப்படவுள்ளது.  இந்த அறநிலைக்கு ரூபாய் 7 கோடி நிதி சேர்த்திடும் திட்டமும் உள்ளது எனக் கூறிய சுவாமிகள் இந்த அறநிலைக்குத் தனது சார்பில் ரூபாய் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்று கூறியதும் கூட்டத்தினரின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமாயிற்று.  

ஒருகோடி மட்டுமல்ல,
சுவாமிஜி அவருடைய பணத்தை யெல்லாம் கொடுத்துள்ளார் என நினைக்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

Geetha Sambasivam

unread,
Nov 24, 2013, 5:27:26 AM11/24/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
தலையாய சமூகம் என்பதற்கு உதாரணமாக ஒரு சில நிகழ்வுகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.  இக்காலத்தில் வருமானவரி, சொத்துவரி என்று அரசாங்கத்தால் விதிக்கப் படுகிறதென்றால் இந்த வழக்கத்தை ஆதியிலே கண்டவர்கள் நகரத்தார்கள் தான்.  தான் ஈட்டிய பொருளைக் காத்து சேமித்து, வகுத்து, பகுத்துக் கொடுத்தவர்கள்.  ஒரு குறிப்பிட்ட தொகையை தர்ம வட்டிக்குக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை தர்ம காரியங்களுக்கு, ஆலயப் பணிக்கு என ஆக்கபூர்வமாகப் பகுத்து வழங்கியவர்கள் தான் நகரத்தார்கள்.  வட்டி என்றதும் அநியாய வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி என்று கூறப்படும் வட்டிகளல்ல.... நியாயமான வட்டி, அதைத் தான் தர்ம வட்டி என்றேன்.  இந்தத் தர்ம வட்டி சதவீதம் தான் அரசுக்கு இன்றைய வரிவிதிப்புக் காரணமான மூலம்.

கோவிலூர் சுவாமிகள் அமெரிக்காவில் புகைப்படக் கலையிலும், அச்சகத் துறையிலும் கொடிகட்டிப் பறந்தவர்கள்.  இந்தத் துறைகளில் உலகத்தில் மிகச் சிறந்தவர்கள் வரிசையில் நமது சுவாமிகளும் ஒருவர். அப்படித் தன் சுய உழைப்பால் ஈட்டிய செல்வத்தையெல்லாம் கோவிலூர் மடத்துக்குக் கொண்டு வந்தார். கொண்டு வந்த செல்வத்தை நலிந்தோருக்குப் பயன்படவேண்டும் என்று விரும்புகிறார்.

பட்டினத்தடிகளும் தன் செல்வங்களை யெல்லாம் தனது கணக்காளரிடம் கொடுத்து, "ஏழை எளியோருக்குக் கொடுத்துவிடு" என்று கூறி துறவறம் மேற்கொண்டார்.  ஆனால் நமது நாச்சியப்ப அடிகளோ,  தான் ஈட்டிய செல்வங்களைத் தானே முன்னின்று ஏழை, எளியோர் மற்றும் அறப்பணிகளுக்கு வாரி வழங்குகிறார் என்றால் வாழும் பட்டினத்தடிகளாக நான் சுவாமிகளைப் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.

அடுத்துத் "தலையாய மக்களைத் தந்த தலையாய சமூகம்" என்ற பொருளில் கண்ணகியைப் பற்றி நா. மீனவன் அவர்களும், காரைக்கால் அம்மையாரைப் பற்றி இராம. செளந்திரவல்லி அவர்களும், பட்டினத்தாரைப் பற்றி முனைவர் அர. சிங்கார வடிவேலன் அவர்களும், பாடுவார் முத்தப்பர் பற்றி பழ.முத்தப்பன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.  கோவிலைச் சார்ந்த குடிகள் என்ற பொருளில் சொ.சொ.மீ. சுந்தரம் அவர்களும் உரையாற்றிய பின்னர், மதிய உணவுக்குப் பிறகு 2-30 மணிக்குக்  குழு விவாத அரங்கம்  நடைபெற்றது.  மாநாட்டில் பங்கேற்றோர் தங்களுக்குள் தனித்தனிக் குழுவாக அமைத்துக் கொண்டு எந்த வகையில் உதவிடலாம் என்று கீழ்க்கண்ட பொருளில் விவாதித்தனர்.

1. கல்வி மேம்பாட்டு உதவிகள்; 2. வேலை வாய்ப்புகள்;  3. மணமுறிவைத் தவிர்த்தல்: 4. முதியோருக்கு உதவுதல்: 5. நலைவடைந்த நகர விடுதிகளின் சீரமைப்பு: 6. மகளிர் மேம்பாடு: 7. திருமண நடைமுறைகள்.

ஆகிய பொருளில் விவாதம் நடத்தி ஆக்க பூர்வமான அறிக்கைகளைத் தயார் செய்தனர்.

மாலை 6--00 மணி அளவில் "மாறி வரும் காலத்தில் நகரத்தார் மாறியது, மாறாதது, மாறக் கூடாதது" என்ற பொருளில் சமூக அரங்கம் நடைபெற்றது.

முனைவர் சுப. அண்ணாமலை தலைமையில் முனைவர் தமிழண்ணல், விசாலாட்சி சுப்பிரமணியன், ச. மெய்யப்பன், பழ. கருப்பையா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.  இரவு 8-00 மணிக்கு "நகரத்தார் இதழ்"களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.  தன வணிகன், நகரத்தார் மலர்,  நகரத்தார் இதழ், ஆச்சி வந்தாச்சு ஆகிய இதழ்களின் ஆசிரியர்களுக்குப் பொன்னாடை அணிவித்து சுவாமிகள் ஆசி கூறினார்கள்.  இதழ்களின் ஆசிரியர்களைப் பாராட்டி கவிஞர் செல்வ--கணபதி உரை நிகழ்த்தினார்.  அன்றைய நிகழ்ச்சி நிறைவுற்று இரவு உணவுக்கு அனைவரும் சென்றனர்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்;  நீதியரசர்,  டாக்டர். அரு. லெட்சுமணன் அவர்கள் தலைமையில் தொடங்கியது.

குழு விவாதம் நடத்தி ஆக்கப்பூர்வமான அறிக்கைகளைத் தயாரித்த குழுவின் தலைவர்கள் அறிக்கையினைச் சமர்ப்பித்து உரையாற்றினர்.  அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை பற்றி அறிஞர்களின் கருத்துரையும் நடைபெற்றது.  தீர்மானங்களை நிறைவேற்றி நகரத்தார் நல்வாழ்வு அறநிலை துவங்குதலும் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றது.

நாச்சியப்ப சுவாமிகள் நிறைவுரையாற்றினார்.  செயலாளர் நா. நாராயணன் நன்றியுரையாற்றினார்.  கூடிக் கலைந்தோம் என்றில்லாமல் நம் நிறைகுறைகளைக் கூட்டிக் கழித்ததாகவும், கூடிக் களித்தோம் என்ற உணர்வோடு மாநாடு நிறைவுற்றது.  இறை வணக்கம் பாடி முடிந்ததும் தேசிய கீதம் முழங்கியது.  இறைப்பற்றும், தேசப் பற்றும் மிக்கவர்கள் நகரத்தார்கள் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்வதாக அமைந்தது.  மூன்று நாள் மாநாட்டில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர். இனி வரும் ஆண்டுதோறும் 96 ஊர் நகரத்தார் மாநாடு நடத்த வேண்டும் என்ற உறுதியோடு மாநாட்டுத் திருவிழா மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கும் உதவவேண்டும் என்ற சுவாமிகளின் தொலை நோக்குத் திட்டமும் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு ஒருவருக்கொருவர் விடைபெற்றுக் கொண்டும், சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டும் தங்கள் இல்லங்களுக்குப் புறப்பட்டனர்.

தொகுப்பு திரு நாகேஷ்

கி.காளைராசன்

unread,
Nov 24, 2013, 8:59:29 AM11/24/13
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
வணக்கம்.

அருள்மிகு நாச்சியப்ப சுவாமி அவர்கள்,
திருப்பூவணத்தில் உள்ள வேதாந்த மடத்தின் செயல்பாடுகளைச் சீரமைத்து, முன்பு போல் அங்கு வேதாந்த வகுப்புகள் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் எனப் பெரிதும் விரும்பினார்கள்.  அடியேன் சுவாமிஜியை முதன்முதலாகச் சந்தித்து ஆசி பெற்ற போது அவர்கள் இந்த விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள்.    அவரது திருவருளால் திருப்பூவணத்தில் வேதாந்தபாடசாலை முன்பு போல் நடைபெறும் நாட்கள் வந்திடும்.

அன்பன்
கி.காளைராசன்

2013/11/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

meenavan2

unread,
Nov 24, 2013, 9:02:20 PM11/24/13
to mint...@googlegroups.com, மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt

வணக்கம் அன்புள்ள காளைராசன் அவர்களே
தாங்கள் என் பகிர்வுகளைப் பலமுறை பாராட்டி எழுதியுள்ளீர்கள்.நன்றி.
கல்வி அறக்கட்டளை ஒன்றை நிறுவி வட்டியில்லாக் கடனாகத் தக்கார்க்கு
உதவ விரும்பிய நாச்சியப்ப சுவாமிகள் ரூபாய் 7 கோடி மூலதனமாகச்
சேர்க்க விரும்பி அந்த அறிவிப்பை வெளியிட்டுத் தாமே முதலில் ஒரு கோடி
ரூபாயை வழங்கினார்கள்.கிட்டததட்ட சுமார் 4 கோடி வ்சூலானது.தொடங்கிய
ஆண்டே அத்திட்டத்தை ந்டைமுறைப் படுத்த விரும்பினார் சுவாமிகள்.சிலர்
செல்வர்கள் பலரை நேரில் சென்று கேட்போம் என்று ஆலோசனை வழங்கினர்.
அதற்கு உடன்படாத சுவாமிகள் தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு மீதம் வேண்டிய
பல கோடி ரூபாய்களைக் கொடுத்து அதற்கான ஒர் ஆண்டு வட்டியினையும் வழ்ங்கினார்கள்.
இன்றளவும் அத்தொகை வழங்கப்பட்டு வருகிற்து.ஆண்டு தோறும் இதற்கான வட்டித்
தொகையாக ரூபாய் சுமார் 70 இலட்ச ரூபாய் வழ்ங்கப்பட்டு வருகின்றது.திருநெல்லைக்
கோவில் திருக்குட நீராட்டுப் பணியும் முந்தையக் காலங்களைப் போல நகரத்தார்களைக்
கொண்ட ஒரு குழுவை அமைத்து நடத்தாமல் மற்றவர்கள் பொருள் உதவியையும் பெறாது
மடாலயத்தின் செலவிலேயே ந்டைபெற்றது.

காப்பியக கவிஞர்.நா.மீனவன்

meenavan2

unread,
Nov 24, 2013, 9:04:15 PM11/24/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel, valli N, Koviloor Mutt

வணக்கம் அன்புள்ள சகோதரி சுபா அவர்களே

தாங்கள் என் பகிர்வுகளைப் பலமுறை பாராட்டி எழுதியுள்ளீர்கள்.நன்றி.
கல்வி அறக்கட்டளை ஒன்றை நிறுவி வட்டியில்லாக் கடனாகத் தக்கார்க்கு
உதவ விரும்பிய நாச்சியப்ப சுவாமிகள் ரூபாய் 7 கோடி மூலதனமாகச்
சேர்க்க விரும்பி அந்த அறிவிப்பை வெளியிட்டுத் தாமே முதலில் ஒரு கோடி
ரூபாயை வழங்கினார்கள்.கிட்டததட்ட சுமார் 4 கோடி வ்சூலானது.தொடங்கிய
ஆண்டே அத்திட்டத்தை ந்டைமுறைப் படுத்த விரும்பினார் சுவாமிகள்.சிலர்
செல்வர்கள் பலரை நேரில் சென்று கேட்போம் என்று ஆலோசனை வழங்கினர்.
அதற்கு உடன்படாத சுவாமிகள் தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு மீதம் வேண்டிய
பல கோடி ரூபாய்களைக் கொடுத்து அதற்கான ஒர் ஆண்டு வட்டியினையும் வழ்ங்கினார்கள்.
இன்றளவும் அத்தொகை வழங்கப்பட்டு வருகிற்து.ஆண்டு தோறும் இதற்கான வட்டித்
தொகையாக ரூபாய் சுமார் 70 இலட்ச ரூபாய் வழ்ங்கப்பட்டு வருகின்றது.திருநெல்லைக்
கோவில் திருக்குட நீராட்டுப் பணியும் முந்தையக் காலங்களைப் போல நகரத்தார்களைக்
கொண்ட ஒரு குழுவை அமைத்து நடத்தாமல் மற்றவர்கள் பொருள் உதவியையும் பெறாது
மடாலயத்தின் செலவிலேயே ந்டைபெற்றது.

காப்பியக கவிஞர்.நா.மீனவன்

Subashini Tremmel

unread,
Nov 25, 2013, 5:31:05 AM11/25/13
to meenavan2, மின்தமிழ், Subashini Tremmel
தகவலுக்கு நன்றி ஐயா.

2013/11/25 meenavan2 <meen...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 29, 2013, 6:22:06 AM11/29/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
நகரத்தார் ரத்தினங்கள்:-

நகரத்தார் ஒவ்வொருவரும் ஒரு ரத்தினம் தான் என்றாலும் தாங்கள் ஏற்றுக் கொண்ட துறைகளில் சாதனை நிகழ்த்தியதற்காகவும், நிகழ்த்திக் கொண்டிருப்பதற்காகவும் நகரத்தாரில் நால்வருக்கு, 'நகரத்தார் ரத்தினங்கள்' என்ற பட்டமும், தங்கப் பதக்கமும் பெற்றுப் பாராட்டுப் பெற்றனர்.  நீதித்துறைச் சாதனை நாயகர் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை  நீதியரசர் டாக்டர் அரு.லெட்சுமணன் அவர்களும், வாழும் தமிழாம் முனைவர் தமிழண்ணல் அவர்களும், பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்கருப்பன் அவர்களும், நகரத்தாரில் இரண்டாவது ஐ.ஏ.எஸ். என்ற பெருமையுடன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்திய விண்வெளித்துறைக் கூடுதல் செயலாளராகப் பணியாற்றி வருபவருமான சொ.சொ. மீனாட்சி சுந்தரம் ஐ.ஏ.எஸ். அவர்களுமாகிய நால்வரும் "அருந்தவச் செல்வர்கள்" என்று சுவாமிகள் பாராட்டுத் தெரிவித்தார்கள்.  ரத்தினங்கள் நால்வரும் ஏற்புரை நிகழ்த்தினர்.

சென்ற பதிவின் முடிவில் வந்திருக்க வேண்டியது விடுபட்டிருக்கிறது.  கவனக் குறைவுக்கு மன்னிக்கவும்.  அந்தக் கட்டுரை முடிவுற்றது. அடுத்த கட்டுரை தொடர்கிறது.

Geetha Sambasivam

unread,
Nov 29, 2013, 6:25:09 AM11/29/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூர்ப் புராணம்

கி.வா. ஜகந்நாதன்

சிவபெருமான் பாரத நாட்டில் எழுந்தருளியுள்ள தலங்கள் ஆயிரத்தெட்டு என்று பொதுவாக ஒரு கணக்குச் சொல்வதுண்டு.  ஆனால் அவற்றைத் திட்டமாக இன்னவை தாம் என்று சுட்டிச் சொல்ல முடியாது.  என்றாலும் காசி, கேதாரம், முதலிய வடநாட்டுத் தலங்களும், தில்லை, மதுரை முதலிய தென்னாட்டுத் தலங்களும் யாவராலும் போற்றப் பெறும் திருப்பதிகள்.  

தென்னாட்டில் தான் சிவ வழிபாடும் சிவத்தலங்களும் மிகுதி.  தேவாரம் பெற்ற தலங்கள் சிவத்தலங்களில் சிறப்புடையவை.  திரு நொடித்தான் மலை முதல் திருக்குற்றாலம் வரையில் பல தலங்கள் மூவரால் பாடப்பெற்றவை.  அவை 274.  அவற்றைப் பாடல் பெற்ற தலங்கள் என்று சொல்வது வழக்கு.

அவற்றில் சிலவற்றிற்குப் புராணங்களும் பிரபந்தங்களும் இருக்கின்றன.  பாடல் பெற்ற தலங்களுக்கு அடுத்தபடியாகச் சிறப்பைப் பெற்று விளங்குபவை புராணம் பெற்ற தலங்கள்.  பல தலங்களுக்கு மூவர் பாடல்கள் இல்லாவிட்டாலும் புராணங்கள் இருக்கின்றன.  காசி அத்தகையவற்றுள் ஒன்று.  மேலைச் சிதம்பரம் என்று சிறப்பிக்கப் பெறும் பேரூருக்குத் தேவாரப் பதிகம் இல்லை; என்றாலும் அதற்கு ஒரு அழகிய புராணம் இருக்கிறது.

அந்த அந்தத் தலங்களில் வாழ்ந்த வடமொழி வாணர்கள் தல புராணங்களை இயற்றினர்.  பிறகு அவற்றைத் தமிழ்ப் புலவர்கள் தமிழ்ச் செய்யுள் வடிவத்தில் மொழி பெயர்த்தார்கள்.  வடமொழியில் உள்ள தல புராணங்களுக்கு இலக்கிய மதிப்பு இருப்பதில்லை.  ஆனால் தமிழில் உள்ள தல புராணங்கள் பல, சிறந்த இலக்கியங்களாக இருக்கின்றன.  பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சுருக்கமான முறையில் பல தமிழ்ப் புராணங்கள் இருந்தாலும், திரிகூட ராசப்பக் கவிராயர், சைவ எல்லப்ப நாவலர், சிவப் பிரகாச சுவாமிகள், சிவக்கொழுந்து தேசிகர், சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர், உமாபதி சிவாசாரியார், புராணத்திருமலை நாதர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய பெரும்புலவர்கள் பாடிய புராணங்கள் இலக்கியச் சுவை மிகுந்தனவாய், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, சைவ சமயச் சிறப்பு முதலியவற்றைக் கூறுவனவாய் விளங்குகின்றன.  ஒரே தலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புராணங்கள் உள்ளன.  மதுரை, சிதம்பரம், மாயூரம், திருப்பெருந்துறை போன்ற தலங்களுக்கு வெவ்வேறு கவிஞர்கள் இயற்றிய வேறு வேறு புராணங்கள் இருக்கின்றன.

புராணம் பாடிய கவிஞர்களுள் அதிகமான புராணங்களைப் பாடியவர் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.  அவர் இருபத்திரண்டு புராணங்களைப் பாடி இருக்கிறார்.  தலங்களுக்குப் பழைய புராணங்கள் இருந்தாலும் பிள்ளையவர்களைக் கொண்டு புதிய புராணம் பாடச் செய்வதில் அக்காலத்துத் தமிழ் மக்கள் ஆர்வங்காட்டினர். நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, துதிகள், வர்ணனைகள், சைவ சமயக் கருத்துக்கள் ஆகியவற்றை அப்புலவர் அமைத்துப் பாடுவதில் வல்லவராக இருந்தமையால் அவரைக் கொண்டு புராணங்களை இயற்றுவித்தனர்.  மாயூரம், திருப்பெருந்துறை முதலிய தலங்களுக்குப் பழைய புராணங்கள் இருந்தாலும் புதிய புராணங்களைப் பிள்ளையவர்கள் இயற்றினார்.  அவரை, "புராணம் பாடும் புலவன்", என்று ஒருவர் பாராட்டியிருக்கிறார்.

பிள்ளையவர்கள் பாடிய புராணங்களுள் ஒன்று கோவிலூர்ப் புராணம்;  செட்டிநாட்டிலுள்ள பல தலங்களுக்கு அவர் புராணம் பாடியிருக்கிறார்; அப்படிப் பாடியதால் அவருக்குப் பொருள் வருவாய் கிடைத்தது.  கோவிலூரில் உள்ள வேதாந்த மடத்தை நிறுவியவரும் முதல் ஞானாசிரியருமான முத்திராமலிங்க தேசிகர் அத்தலத்துத் திருக்கோயிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்து விரிவாக அமைத்தார்; அது முதல் அவ்வாலயம் செவ்வனே பராமரிக்கப்பட்டு வருகிறது.  அவருக்குப் பின் ஆதீனத் தலைவராக எழுந்தருளியிருந்தவர் அருணாசல தேசிகர்.  அவருக்குப் பின் ஞானாசிரியராக வந்தவர் சிதம்பர தேசிகர்.  அவர் காலத்தில் தான் கோவிலூர்ப் புராணம் இயற்றி அரங்கேற்றப் பெற்றது.

(தொடரும்)

2013/11/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 3, 2013, 4:22:49 AM12/3/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் தாம் எழுதிய, "மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தில் இந்தத் தலத்தின் புராணம் தோன்றிய வரலாற்றை எழுதியிருக்கிறார்கள்.  அது வருமாறு:

"அடிக்கடி நேரும் பொருள் முட்டுப்பாட்டினால் இவர் வருந்துவதை இவரிடம் பாடம் கேட்டு வந்த தேவிகோட்டை நாராயணச் செட்டியாரென்பவர் அறிந்து, இவருக்கு எவ்வண்ணமேனும் பொருள் வருவாய் செய்விக்க வேண்டுமென எண்ணினார்.  பாண்டிய நாட்டில் நகர வட்டகையிலுள்ள சிவஸ்தலங்கள் சிலவற்றிற்கு இவரைக் கொண்டு புராணம் இயற்றுவிக்கலாமென்றும் அங்கங்கேயுள்ள பிரபுக்கள் மூலம் அவை காரணமாக இவருக்குத் தக்க பரிசில்கள் கொடுக்கச் செய்யலாமென்றும் நிச்சயித்து, அதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்து வருவாராயினர்.  நகர வைசியப் பிரபுக்கள் இக்கவிஞர் கோமானது பெரும் புகழை அறிந்திருந்தவர்களாதலின், நாராயணச் செட்டியாருடைய முயற்சிகள் பயனுற்றன.  கோயிலூர் வேதாந்த மடத்துத் தலைவராக இருந்த ஶ்ரீ சிதம்பர ஐயாவின் விருப்பப்படி கோயிலூர்ப் புராணம் இவராற் பாடப் பெற்றது,  இவரைக் கோயிலூருக்கு வருவித்துத் தக்கவர்கள் கூடிய சபையில் அந்நூலை அரங்கேற்றுவித்து ஶ்ரீ சிதம்பர ஐயா இவருக்கு உயர்ந்த சம்மானம் செய்ததன்றிப் பல வகையான உதவிகளும் செய்வித்தார்..... சிதம்பர ஐயாவின் விருப்பத்தின்படி வடமொழியில் உள்ளவாறே அந்நூலுள் வேதாந்த விஷயங்கள் அங்கங்கே பலவகையில் அமைக்கப்பெற்றன."

கோயிலூர், காரைக்குடிக்கு அருகில் உள்ளது.  அங்குள்ள வேதாந்த மடாலயம் மிகச் சிறப்புற்றது; வேதாந்த நூல்களை முறைப்படி பாடம் சொல்லி வந்தமையால், அங்கே பயின்ற பல துறவிகள் தமிழ்நாடு முழுவதும் அக்காலத்தில் இருந்தார்கள்.

கோயிலூர்ப் புராணம் பாயிரம், திருநாட்டுப் படலம், திரு நகரப் படலம், நைமிசப் படலம், தல விசேடப் படலம், வீர பாண்டியன் சமிவனம் அடைந்த படலம், மாயப்புலி நீங்கிய படலம், கொற்ற வாளீசப் படலம், உபநிடதப் பொருளுரைத்த படலம், மதுப் பிரியர் துதியுரைத்த படலம், சுவேதராசப் படலம், அன்னதான மகிமை உரைத்த படலம், சுதன்மை அருள் பெறு படலம், தீர்த்த மகிமைப் படலம், சாபவிமோசனப் படலம் ஆகிய பதினைந்து படலங்களையும் 849 செய்யுள்களையும் உடையது.

கோயிலூருக்கு இந்தப் புராண வாயிலாக சமிவனம், வன்னிவனம், சாலிவாடிபுரம், கழனி ஶ்ரீவல்லபம் என்ற பெயர்கள் உண்டென்று தெரிய வருகிறது. வரலாற்றின் மூலமாக, கழனி வாயில், ஏழகப்பெருந்திரு, வீரபாண்டியபுரம், மருதேந்திரபுரம் என்ற பெயர்கள் இத்தலத்திற்கு அமைந்தன என்பதை அறிகிறோம்.

கோயிலூர்ப் புராணத்தில் வரும் வரலாறுகளின் சுருக்கம் வருமாறு:

பாண்டி நாட்டில் உள் திருக்கானப் பேராகிய காளையார் கோயிலில் வீர பாண்டியன் என்னும் அரசன் ஆண்டு வந்தான்.  அவன் அத்தலத்தில் எழுந்தருளிய காளீசரை வழிபட்டு ஒரு வாளைப் பெற்றான்.  அந்த வாளைக் கொண்டு போரில் பகைவரை வென்றான்.  அதனால் அது கொற்றவாள் என்ற சிறப்புடன் விளங்கியது.

ஒரு நாள் வீரபாண்டியன் வேட்டையாடும் பொருட்டு வடக்கே உள்ள காட்டுக்குப் போய்ப் பல விலங்குகளை வேட்டையாடினான்.  அப்போது அவன் முன் ஒரு மான் எதிர்ப்பட்டது.  அது அவன் கைக்கு அகப்படாமல் தப்பியோட அரசன் தன் கைவாளோடு அதைத் துரத்திக் கொண்டு சென்றான்.  அது சமிவனம் என்ற இடத்திற்குச் சென்று மறைந்து விட்டது.

பாண்டியன் அங்கிருந்த பொய்கையில் நீராடிக் கனிகளை உண்டு ஒரு மரத்தின் நிழலில் படுத்து உறங்கலானான்.  அங்கே ஓரிடத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருந்த திருபுவனேசன் அரசனுடைய வடிவாளைக் கவர்ந்தருளினான்.  ஒரு புலியையும் அது உண்பதற்காகத் துரத்தி வரும் மறையவன் ஒருவனையும் இறைவன் தோற்றுவித்தான்.  மறையவன் புலிக்குப் பயந்து பாண்டியனுக்கருகில் வந்து, "அபயம், அபயம்!" என்று கூக்குரலிட்டான்.

பாண்டியன் துயிலுணர்ந்து தன் வாளைப் பார்த்தான்.  காணவில்லை.  அதைத் தேடுவதை விட்டு விட்டு மறையவனைக் காப்பாற்றப் புகுந்தான். புலியைப் பார்த்து, "இந்த மறையவன் உணவின்றி எலும்பும் தோலுமாக இருக்கிறான்.  இவனை உண்டால் உன் பசி தீராது.  இவன் எலும்புகளைக் கடித்தால் உன் பல் தான் நொறுங்கும்.  நான் நன்றாக உணவு உண்டு கொழுத்திருக்கிறேன்.  இவனை விட்டு விட்டு என்னை உண்டு பசியாறு!" என்றான் பாண்டியன்.  "நீ பலரைக் காப்பாற்றுகிறவன்.  உன்னை நம்பிப் பலர் வாழ்கிறார்கள்.  இவனுக்கோ யாரும் இல்லை.  ஆகையால் இவனையே உண்பேன். " என்று அந்த மாயப் புலி கூறியது.  "என் வாள் இருந்தால் உன்னோடு பொருது வென்று இம்மறையவனை மீட்பேன்.  அது கிடைக்கவில்லை.  இந்த மாய உடம்பினால் ஒரு பயனும் இல்லை.  நீ மறுக்காமல் உண்." என்று மறுபடியும் அரசன் வற்புறுத்தினான்.  புலி அவன் சொன்னதைக் கேட்கவில்லை.

வேறு வழி ஒன்றும் தெரியாமல், பாண்டியன் திறந்திருந்த புலிவாயில் தன் தலையைக் கொடுத்தான்.  அந்தக் கணத்தில் புலி மறைய மறையவனும் மறைந்தான்.  பாண்டியன் தனியே நின்றான்.  புலியும் மறையவனும் மறைந்தது கண்டு வியப்படைந்து மயங்கி நின்றான்.

அரசன் போன இடம் தெரியாமல், அவனுடன் வந்தவர்கள் அவனைத் தேடிக் கொண்டு சமி வனத்தையடைந்து அவன் தனியே நிற்பதைக் கண்டார்கள். அவனோடு உரையாடி மகிழ்ந்தார்கள்.

அப்போது அரசன், " இந்த வனத்தைச் சுற்றிப் பார்த்து ஏதேனும் அதிசயம் இருந்தால் அறிந்து வாருங்கள்" என்று அவர்களை விடுத்தான்.  அவர்கள் அவ்வாறே சென்றபோது ஒரு வன்னி மரத்தடியில் ஒரு சுயம்புலிங்கத்தையும் அதனருகில் வாளையும் கண்டனர்.  அங்கே கீழ்ப்பக்கத்தில் ஒரு பொய்கையும் இருந்தது.  அவற்றைப் பார்த்துவிட்டு அரசனிடம் சென்று தாம் கண்டதைச் சொன்னார்கள் வீரர்கள்.

பாண்டியன் அவ்விடம் சென்று சிவலிங்கப் பெருமானைத் தரிசித்துப் போற்றினான். இறைவன் இடபாரூடனாக அவனுக்குக் காட்சி கொடுத்தருளினான். "நாமே உனக்கு அகப்படாமல் வந்த மானையும் புலியையும் மறையவனையும் தோற்றுவித்தோம்.  உன் வாளைக் கவர்ந்தோம்.  அதை நீ எடுத்துக் கொள்." என்று இறைவன் அருளினான். பாண்டியன் அந்தக் கொற்ற வாளை எடுத்துக்கொண்டு இறைவனைப் பணிந்தான்.  "இந்தத் தலத்துக்கு வன்னி வனம் என்ற பெயரும், தேவரீருக்குக் கொற்ற வாளீசர் என்ற திருநாமமும் இனி வழங்க வேண்டும், தேவரீரைப் பணிந்து வழிபடுபவர்கள் தாம் வேண்டும் வரங்களையும் பெற வேண்டும்." என்று அரசன் வேண்டிக் கொள்ள இறைவன் "அவ்வாறே ஆகுக!" என்று அருள் புரிந்து இலிங்கத்துள் மறைந்தான்.

வீரபாண்டியன் அந்தக் காட்டை அழித்து ஆலயம் உண்டாக்கி, அதில் எல்லா வகையான சந்நிதிகளையும் அமைத்து, பூசை, விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தான்.  அங்கே ஒரு நகரத்தையமைத்துப் பல வகையினரையும் குடியேற்றி வாழச் செய்தான்.

ஒரு சமயம் அகத்திய முனிவர் அங்கே எழுந்தருளினார்.  அவர் பாண்டியனுகு இந்தத் தலப்பெருமையை மிக விரிவாக எடுத்துரைத்தார்.

(தொடரும்)

Geetha Sambasivam

unread,
Dec 7, 2013, 4:43:06 AM12/7/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
மதுப்ப்ரியன் என்ற முனிவர் இங்குள்ள பொய்கையில் மூழ்கித் தவம் செய்தான்.  அவன் தவத்தைக் கெடுக்க எண்ணிய இந்திரன் பெருமழை பொழியும்படி செய்தான்.  முனிவன் கலங்காமல் தவம் செய்து கொண்டே இருந்தான்.  இந்திரன் பிரமதேவனிடம் சென்று முனிவன் தவம் செய்வதைச் சொன்னான்.  பிரமன், "அவன் எந்தப் பதவியையும் எண்ணித் தவம் செய்யவில்லை.  நிட்காமியமாகவே அதைச் செய்கிறான்." என்று கூறிவிட்டுத் திருமாலினிடமும், உருத்திரனிடமும் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு சமிவனம் வந்தான்.  அம்மூவரும் மதுப் பிரிய முனிவனை அணுகி, "உனக்கு வேண்டிய வரங்களை நாங்கள் கொடுப்போம்." என்றார்கள்.  முனிவனோ, "பரமசிவனை அறிவது தான் என் கருத்து.  வேறு எதையும் வேண்டிலேன்." என்றான்.  மூவரும் அங்கிருந்து அகல, முனிவன் மீண்டும் தவத்தில் ஆழ்ந்தான்.

அந்தத் தவக் கனல் எங்கும் பரவித் தகித்தது.  அதனைப் பொறாத இந்திரன் பிரமதேவனிடம் சொல்ல, நான்முகன் சமிவனத்தை அடைந்து சிவலிங்கப் பெருமானைப் பணிந்து, "முனிவன் கருத்தை நிறைவேற்றியருள வேண்டும்." என்று வேண்டினான்.  அப்போது இறைவன், "நீயே சென்று அவனுக்குப் பிரம ஞானத்தைப் போதி!" என்று பணித்தார்.

அப்படியே பிரமன் முனிவனை அணுகிச் சிவபெருமானுடைய கட்டளையைத் தெரிவித்து அவனுக்கு உபநிடதப் பொருளை விரிவாக உபதேசித்துத் தன்னுடைய இருப்பிடம் சென்றான்.

முனிவன் சிவபெருமானைப் பணிந்து வழிபட, அப்பெருமான் அவன் முன் தோன்றினான்.  இறைவனைத் தரிசித்த மதுப்பிரிய முனிவன் அப்பெருமானைத் துதி செய்யத் தொடங்கினான்.

அருள் சிற்கன சொரூபதே சோமய அமல
அருள்க யாவைக்கும் சாட்சியாய் அமர் அகளங்க
அருள்க யாரும் சொல் எவைக்கும் மேலாகிய அமர
அருள்க பற்பல மூர்த்தியாய் அமரும்மா தேவ!
போற்றி சந்திர சேகர, புனற்சடாடவியாய்,
போற்றி முக்கண் நாற்புயம் பொலி பூரண புராண
போற்றி மான்மழு ஏந்து பொற்றாமரைக் கரத்தாய்
போற்றி பத்தர் குற்றமும் குணமாய்க் கொண்டு பொறுப்போய்

முனிவன் துதித்ததைக் கேட்ட சிவபெருமான் திருவுள்ளம் மகிழ்ந்து, "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்.," என்றான்.  "எப்போதும் எனக்குத் தேவரீர் அருள் வேண்டும்.  சமிவனத்தில் பஞ்சாக்கர விமானத்தில் திரிபுவனேசன் என்னும் பெயரோடு தேவரீர் விளங்க வேண்டும்.  அம்மை திரிபுவனேசை என்னும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்க வேண்டும்.  தெற்கே ஓடும் நதிக்கு மதுநதி என்ற பெயரும் நதிக்குக் கிழக்கே உள்ள தீர்த்தத்துக்கு மதுபுட்கரிணி என்ற பெயரும் வழங்க வேண்டும்.  இத்தலத்திற்கு வந்து வழிபட்டவர்கள் விருப்பமெல்லாம் நிறைவேற வேண்டும்." என்று முனிவன் வேண்டினான்.  இறைவன் அவன் கேட்ட வரங்களை அருளி லிங்கத்துள் மறைந்தான்.

**************************************************************************************

சுதேவன் என்னும் அரசனுடைய புத்திரன் சுவேதன், சோதிடர்கள், "நீ அற்ப ஆயுளை உடையவன்" என்று சொன்னதைக் கேட்டுத் தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு வனத்துக்குச் சென்றான்.  தண்டகவனத்தில் தவம் செய்து அதன் பயனாகப் பிரமனுடைய சத்தியவுலகம் சென்றான்.  அங்கே சென்ற அவனுக்கு மிகுதியான பசியெடுத்தது.  அதனால் வாடியவன் தன் வருத்தத்தை  நான்முகனிடம் கூறினான்.  "நீ செய்த தவத்தால் இவ்வுலகத்துக்கு வந்தாய்.  ஆயினும் உன் உடம்பைப் பேணினாயேயன்றி அன்னதானம் செய்யவில்லை.  அதனால் இந்தப் பசிப்பிணி வந்தது.  நீ இறந்தபோது காட்டில் விட்ட உடம்பு அங்கே இருக்கிறது.  அதைப் போய் உண்ணுக!" என்று பிரமன் பணித்தான்.  அப்படியே சுவேதன் அங்கே சென்று தன் பிணத்தையே உண்டான்.  அது குறையாமல் வீங்கியது.  பசித்தபோதெல்லாம் தண்டகவனம் சென்று அதை உண்டு வந்தான்.

அங்கே வாழ்ந்த தண்டகன் என்னும் அரக்கன் அங்கிருந்த பிருகு முனிவரின் மகளை விரும்பினான்.  இதை அறிந்த முனிவன் சாபமிட அந்த வனம் எரிந்து பாலையாகிவிட்டது.  அங்கே அகத்திய முனிவர் சென்று மீண்டும் காடு ஆக்கினார்.

அப்போது சுவேதன் பிணத்தை உண்ண வந்தான்.  "ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்று அகத்திய முனிவர் கேட்க, அவன் நிகழ்ந்தவற்றைச் சொல்லி, அம்முனிவரைப் பணிந்து போற்றினான்.  பிறகு தன் கழுத்திலிருந்த முத்து மாலையை முனிவருக்குக் கொடுத்தான்.  அகத்தியர் அதைக் கையில் வாங்கின உடனே சுவேதனுடைய பாவமும், பசியும் போயின;  பிரேதமும் அழிந்தது.

அந்தச் சுவேதனுடைய மகனுக்கும் சுவேதனென்றே பெயர்.  அவன் அகத்திய முனிவர் ஆசிரமத்தை அடைந்து அவரைப் பணிந்து எழுந்தான்.  முனிவர், "உன் தந்தை அன்னதானம் செய்யாமையால் துன்புற்றான்." என்று கூற, அரசன், "எந்தத் தலத்தில் அன்னதானம் செய்வது சிறப்பு?" என்று கேட்க, "சமிவனமே சிறந்தது!" என்று அகத்தியர் கூறி அத்தலத்தின் சிறப்பையும் அன்னதானத்தின் பெருமையையும் எடுத்துரைத்தார்.

அந்த அரசன் வன்னிவனம் (சமிவனம்) சென்று வன்னி விநாயகரைத் தரிசித்துத் திருபுவனேசனையும் வணங்கினான்.  அங்கே விரிவாக நெல் வயல்களை அமைத்து, ஏரி, கால்வாய் ஆகியவற்றை உண்டாக்கினான்.  நெல் நன்றாக வளர்ந்தது.  அதனால் அத்தலம் சாலிவாடி என்ற பெயரைப் பெற்றது.  அரசன் அங்கே இருந்து அன்னதானம் செய்து இறுதியில் சிவபதம் பெற்றான்.  அது முதல் அத்தலத்திற்கு வன்னிவனம், சமிவனம் என்ற பெயர்களோடு, சாலிவாடி, கழனி என்ற பெயர்களும் உண்டாயின.

சிவகுப்தன் என்னும் வணிகன் சாலிவாடியில் வாழ்ந்தான். திருநீறும் உருத்திராக்கமும் பூண்டு திருவைந்தெழுத்தை ஓதி இறைவனிடம் இடையீடில்லாத பக்தி செய்து வந்தான்.  அவன் மனைவி சுதன்மை திரிபுவனேசையிடம் அன்பு பூண்டு வழிபட்டு வந்தாள்.  அவர்களுக்கு ஒரு மகள் பிறக்க, அவளுக்கு அரதனவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.  சிவகுப்தன் அம்பிகையின் திருக்கோயிலுக்கு முன் ஒரு பெரிய கழனியை உண்டாக்கி வேலியிடாமல் வளர்த்து வந்தான்.  அங்கே காவல் காக்கும் பொருட்டுத் தன் மகளாகிய அரதனவல்லியை ஏவினான்.  அவள் தோழிகளுடன் புறப்பட்டுச் சென்றாள்.  ஆனால் கழனியைக் காவாமல் சோலைகளிலும் பொய்கையிலும் சென்று விளையாடிப் பொழுதைக் கழித்தாள்.

கழனிக்குக் காவலின்மையை உணர்ந்த திருபுவனேசை, சுதன்மையின் பக்தியைக் கண்டு திருவுள்ளம் இரங்கி, தானே அரதன வல்லியைப் போலக் கோலங்கொண்டு அந்தக் கழனிக்குச் சென்று காவல் புரியலானாள்.  கரும்பின் அடியில் வரப்பில் அமர்ந்து காவல் புரிந்தாள்.

தன் மகள் பசியோடிருப்பாள் என்று எண்ணி சுதன்மை உணவு கொண்டு வந்து அம்மைக்குப் பரிமாறினாள்.  அம்மையும் அவ்வுணவைச் சுவைத்து உண்டாள்.  சுதன்மை இல்லம் சென்றாள்.  அம்பிகை பிறகு கோயில் சென்று நிகழ்ந்தவற்றை இறைவனிடம் கூறி மகிழ்ந்து தன் சந்நிதிக்குச் சென்றாள்.

விளையாடிக் கொண்டிருந்த அரதனவல்லி வீட்டுக்கு வந்து, "பசிக்கிறது.  சோறு போடு!" என்று அன்னையிடம் கூறினாள்.  அன்னை, "இப்போது தானே சோறு உண்பித்து வந்தேன்?" என்று கூற மகள் தான் கழனிக்குச் செல்லாமல் விளையாடிவிட்டு வந்ததைச் சொன்னாள்.  சுதன்மை இறைவியே இந்தத் திருவிளையாட்டைச் செய்தாள் என்று உணர்ந்து வியந்து உருகினாள்.  யாவரும் இந்த அற்புதத்தை அறிந்து அம்மையைத் துதித்தார்கள்.  சுதன்மை அம்பிகையைப் பரவலானாள்.

கி.காளைராசன்

unread,
Dec 7, 2013, 10:18:28 AM12/7/13
to mint...@googlegroups.com
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

"இந்திர ஞாலம் காட்டிய இயல்பினாய் போற்றி
உத்தரகோச மங்கை வித்தக வேடா போற்றி
பூவண மதனிற் தூவண மேனி காட்டிய தொன்மையோய் போற்றி
வாதவூரில் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பா போற்றி
திருவார் பெருந்துறை செல்வா போற்றி்“

அன்பன்

Rathinam Chandramohan

unread,
Dec 7, 2013, 11:20:14 AM12/7/13
to mint...@googlegroups.com
arumai

2013/12/7 கி.காளைராசன் <kalair...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Subashini Tremmel

unread,
Dec 7, 2013, 2:04:19 PM12/7/13
to Geetha Sambasivam, மின்தமிழ், Subashini Tremmel
தொடர்ந்து தட்டச்சு செய்து பகிர்ந்து வரும் கீதாவிற்கு எனது நன்றி. 

சுபா

2013/11/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 9, 2013, 5:15:27 AM12/9/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt

மெய்யறி வின்ப ரூபம்
மேயபூ ரணியே போற்றி
பொய் அகல் சிவத்தின் நீங்காப்
புண்ணியப் பொருளே போற்றி,
ஐயபல் சக்தி ஆகி
அடியாரைக் காப்பாய் போற்றி,
மையகல் அடியார் எண்ணம்
முடித்திட வல்லாய் போற்றி!"

காமரு கூந்தல் போற்றி
கவின் பொழி வதனம் போற்றி,
மாமரு விழிகள் போற்றி,
வண்தொடிக்கரங்கள் போற்றி,
தேமரு கொங்கை போற்றி,
சிறுகிய மருங்குல் போற்றி,
நாமரு புகழ்சால் நெல்லை 
நாயகி திருத்தாள் போற்றி!"

நெல்லைக் காத்ததனால் அம்பிகைக்கு நெல்லை நாயகி என்ற திருநாமம் உண்டாயிற்று.  சிவகுப்தனும் சுதன்மையும் இறுதியில் சிவபதம் அடைந்தார்கள்.

****************************************************************************************************

மதுராபுரியை ஆண்ட சூரதன்மா என்பவனுடைய மனைவி சுகுணை என்பவள்.  சமண சமயத்தினர் அங்கே வந்து அரசனைச் சமணன் ஆக்கினார்.  அவன் சைவத்தைப் புறக்கணித்துச் சமண சமயத்தைப் பரப்பலானான்.  சமணர்களுக்கே ஆதரவு தந்தான்.  அது கண்டு வருந்திய சுகுணை அவனுக்குப் பலவகையில் அறிவுரை புகன்றும் அவன் கேட்கவில்லை.  அரசன் இறந்தான்.  அவனுடன் சுகுணையும் உயிர் நீத்தாள்.

சுகுணை அகளங்கபுரத்து மன்னன் மகளாகப் பிறந்தாள்.  சூரதன்மாவும் சாகலபுரத்து மன்னன் மகனாகப்பிறந்தான்.  அவனுக்கு முற்பிறவியிற் செய்த பாவத்தால் குட்ட நோய் வந்தது.  மன்னன் மகளாகப் பிறந்த சுகுணைக்கு மணப்பருவம் வந்ததும், சுயம்வரம் நடைபெற்றது.  பல தேசத்து அரச குமாரர்களும் வந்திருந்தனர்.  சாகலபுரத்து மன்னன் மகனாகப் பிறந்து குட்ட நோயால் வருந்திய சூரதன்மாவும் வந்தான்.  அவன் தன் முற்பிறவியில் கணவனாக இருந்தவன் என்பதை உணர்ந்த மன்னன் மகள் யாவரும் நகைக்கவும் மன்னன் வருந்தவும் அவனுக்கே மாலையிட்டாள்.  அவனும் அவளும் சாகலபுரத்தை அடைந்தார்கள்.  மருந்துகளால் அவனுடைய நோய் தீரவில்லை.  அந்தப் பெண்மணி அவனுடன் தல யாத்திரையாகப் புறப்பட்டுக் காசி முதலிய ஊர்களுக்குச் சென்றும் நோய் தீரவில்லை.  இறுதியில் சமிவனம் அடைந்து மதுபுஷ்கரிணியில் நீராடவே அவனுடைய நோய் தீர்ந்தது.

**********************************************************************************************

காளிபுரத்தில் இருந்த வீரசேனன் என்னும் பாண்டியன் வேட்டையாடக் கானகம் சென்றான்.  அங்கே கண்வ முனிவர் ஆசிரமத்துக்கருகில் ஒரு கவரிமானைக் கண்டு அதன் மேல் அம்புவிட அது இறந்து போயிற்று.  கண்வர் வளர்த்த மான் ஆதலால் முனிவர் அது இறந்ததை அறிந்து வருந்தி மன்னனைப் பார்த்துக் கோபத்துடன், "நீ வேடனாகித் திரிக!" என்று சாபமிட்டார்.  உடனே அவன் வேடனாகி மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு காட்டில் திரிந்தான்.  

மந்திரி முதலியோர் அரசன் வராததை அறிந்து அவன் மகனாகிய இராசசேகரனை மன்னனாக்கினார்.

வேடனான அரசன் பல இடங்களில் திரிந்து சமிவனம் வந்தான்.  மது தீர்த்தத்துக்கு அருகில் ஒரு மர நிழலில் தங்கினான்.  அந்தத் தீர்த்தத்தில் இருந்த மீன்கள், "இவன் நம்மைக் கொடியாகக் கொண்ட பாண்டியன், இவன் பாவத்தைப் போக்குவோம்." என்று தம்மில் பேசிக் கொண்டு, துள்ளிக் குதித்தன; அப்போது அந்த நீர் மேலே பட்டதும், அவனுக்குக் கொலை புரியும் எண்ணம் நீங்கியது.  புண்ணிய நினைவு உண்டாயிற்று.  அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி வேட்டுருவம் நீங்கி இறைவனையும் இறைவியையும் இறைஞ்சினான்.

காளியாபுரத்திலிலுள்ளவர்கள் இதனை அறிந்து அவனை வந்து கண்டு தம் நகருக்கு அழைத்து ஏகினர்.  மகன் அரசாள, அவன் யோகம் துய்த்து வாழ்ந்தான் பிறகு சிவபதம் அடைந்தான்.  அன்று முதல் மதுபுட்கரிணிக்குச் சாபவிமோசனம் என்ற பெயரும் அமைந்தது.

**************************************************************************************************************

இந்த வரலாறுகளையெல்லாம் அகத்திய முனிவர் வாயிலாகக் கேட்ட வீரபாண்டியன் திரிபுவனேசனை வழிபட்டான்.  அகத்தியர் அவனுக்குப் பிரம ஞானம் உபதேசித்தார்.  அவன் இறுதியில் விதேக முக்தியை அடைந்தான்.

சொற்கலை, பொருட்சுவை மலிய இந்தப் புராணத்தை இயற்றி இருக்கிறார்,பிள்ளை அவர்கள்.  வேதாந்த மடத்தைச் சார்ந்த கோயிலாதலின் அத்துவித வேதாந்தக் கருத்துக்களையும் பரிபாஷைகளையும் அங்கங்கே அமைத்திருக்கிறார்.  வருணனைகளும் ஐந்திணை இயல்புகளும் இருதுக்களின் இயல்பும், துதிகளும் இப்புராணத்தில் வருகின்றன.

பாயிரத்தில் கோயிலூர் வேதாந்த மடத்தின் முதல் ஞானாசிரியரைப் போற்றுகிறார்.

மேயபெருங்கழனி நகர் கோயிலூர் எனும் பேர்
மேவ இறை ஆலயத்தை விரித்த அருட் பெரியோன்
பாயபுனல் திரண்டாலி ஆயதெனச் சுத்த
பரப்பிரமம் இவ்வுருக் கொண்டுற்றதெனும் புரணன்,
ஆயபுகழ் வேதாந்த சிரவணம் செய்துலகில்
அளவிலர்சை தன்னியமா சுப்புரிந்த அறவோன்
தூய முத்தி ராமலிங்க தேசிகன் என்றுரைக்கும்
சோதிலிங்க சொரூப னென்னும் சோதியை ஏத்தெடுப்போம்

இந்நூலைச் செய்வித்த சிதம்பர தேசிகனைப் பற்றி ஒருசெய்யுளில் சொல்கிறார்.

மேலாய துறவினுக்கோர் துணையாகி உள்ளான்,
விரிந்து பல புவனமும் காண்றிடு சோற்றிற் கண்டோன்
நாலாய மறைமுடிவின் பொருள் விளங்க எடுத்து
நல்மாணவர்க்கருளித் தன்மயமாக்கிடுவோன்;
பாலாய சிவ தருமம் பற்றப்பாலிப்போன்;
பரப்பிரம சுவாநுபூதியிற் சிறந்த மேலோன்,
நூலாய யாவும் உணர்ந்த தவர்மனுவினெடுத்து
நுவலுமொரு சிதம்பர தேசிகனெனும்மா பெரியோன்

கி.காளைராசன்

unread,
Dec 10, 2013, 10:40:41 AM12/10/13
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

தங்களது இந்தப் பதிவால் கோயிலூர் சுயம்புலிங்க வரலாற்றை நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.   தங்களது உழைப்பிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

நன்றியுடன்
அன்பன்
கி.காளைராசன்

2013/12/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

மெய்யறி வின்ப ரூபம்
மேயபூ ரணியே போற்றி
பொய் அகல் சிவத்தின் நீங்காப்
புண்ணியப் பொருளே போற்றி,
ஐயபல் சக்தி ஆகி
அடியாரைக் காப்பாய் போற்றி,
மையகல் அடியார் எண்ணம்
முடித்திட வல்லாய் போற்றி!"

காமரு கூந்தல் போற்றி
கவின் பொழி வதனம் போற்றி,
மாமரு விழிகள் போற்றி,
வண்தொடிக்கரங்கள் போற்றி,
தேமரு கொங்கை போற்றி,
சிறுகிய மருங்குல் போற்றி,
நாமரு புகழ்சால் நெல்லை 
நாயகி திருத்தாள் போற்றி!"

நெல்லைக் காத்ததனால் அம்பிகைக்கு நெல்லை நாயகி என்ற திருநாமம் உண்டாயிற்று.  சிவகுப்தனும் சுதன்மையும் இறுதியில் சிவபதம் அடைந்தார்கள்.

****************************************************************************************************

மதுராபுரியை ஆண்ட சூரதன்மா என்பவனுடைய மனைவி சுகுணை என்பவள்.  சமண சமயத்தினர் அங்கே வந்து அரசனைச் சமணன் ஆக்கினார்.  அவன் சைவத்தைப் புறக்கணித்துச் சமண சமயத்தைப் பரப்பலானான்.  சமணர்களுக்கே ஆதரவு தந்தான்.  அது கண்டு வருந்திய சுகுணை அவனுக்குப் பலவகையில் அறிவுரை புகன்றும் அவன் கேட்கவில்லை.  அரசன் இறந்தான்.  அவனுடன் சுகுணையும் உயிர் நீத்தாள்.

சுகுணை அகளங்கபுரத்து மன்னன் மகளாகப் பிறந்தாள்.  சூரதன்மாவும் சாகலபுரத்து மன்னன் மகனாகப்பிறந்தான்.  அவனுக்கு முற்பிறவியிற் செய்த பாவத்தால் குட்ட நோய் வந்தது.  மன்னன் மகளாகப் பிறந்த சுகுணைக்கு மணப்பருவம் வந்ததும், சுயம்வரம் நடைபெற்றது.  பல தேசத்து அரச குமாரர்களும் வந்திருந்தனர்.  சாகலபுரத்து மன்னன் மகனாகப் பிறந்து குட்ட நோயால் வருந்திய சூரதன்மாவும் வந்தான்.  அவன் தன் முற்பிறவியில் கணவனாக இருந்தவன் என்பதை உணர்ந்த மன்னன் மகள் யாவரும் நகைக்கவும் மன்னன் வருந்தவும் அவனுக்கே மாலையிட்டாள்.  அவனும் அவளும் சாகலபுரத்தை அடைந்தார்கள்.  மருந்துகளால் அவனுடைய நோய் தீரவில்லை.  அந்தப் பெண்மணி அவனுடன் தல யாத்திரையாகப் புறப்பட்டுக் காசி முதலிய ஊர்களுக்குச் சென்றும் நோய் தீரவில்லை.  இறுதியில் சமிவனம் அடைந்து மதுபுஷ்கரிணியில் நீராடவே அவனுடைய நோய் தீர்ந்தது.

**********************************************************************************************

காளிபுரத்தில் (காளிபுரம் என்பது காளையார்கோயிலைக் குறிக்கும்) இருந்த வீரசேனன் என்னும் பாண்டியன் வேட்டையாடக் கானகம் சென்றான்.  அங்கே கண்வ முனிவர் ஆசிரமத்துக்கருகில் ஒரு கவரிமானைக் கண்டு அதன் மேல் அம்புவிட அது இறந்து போயிற்று.  கண்வர் வளர்த்த மான் ஆதலால் முனிவர் அது இறந்ததை அறிந்து வருந்தி மன்னனைப் பார்த்துக் கோபத்துடன், "நீ வேடனாகித் திரிக!" என்று சாபமிட்டார்.  உடனே அவன் வேடனாகி மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு காட்டில் திரிந்தான்.  

மந்திரி முதலியோர் அரசன் வராததை அறிந்து அவன் மகனாகிய இராசசேகரனை மன்னனாக்கினார்.

வேடனான அரசன் பல இடங்களில் திரிந்து சமிவனம் வந்தான்.  மது தீர்த்தத்துக்கு அருகில் ஒரு மர நிழலில் தங்கினான்.  அந்தத் தீர்த்தத்தில் இருந்த கெண்டை மீன்கள், "இவன் நம்மைக் கொடியாகக் கொண்ட பாண்டியன், இவன் பாவத்தைப் போக்குவோம்." என்று தம்மில் பேசிக் கொண்டு, துள்ளிக் குதித்தன;

அப்போது அந்த நீர் மேலே பட்டதும், அவனுக்குக் கொலை புரியும் எண்ணம் நீங்கியது.  புண்ணிய நினைவு உண்டாயிற்று.  அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி வேட்டுருவம் நீங்கி இறைவனையும் இறைவியையும் இறைஞ்சினான்.

காளியாபுரத்திலிலுள்ளவர்கள் இதனை அறிந்து அவனை வந்து கண்டு தம் நகருக்கு அழைத்து ஏகினர்.  மகன் அரசாள, அவன் யோகம் துய்த்து வாழ்ந்தான் பிறகு சிவபதம் அடைந்தான்.  அன்று முதல் மதுபுட்கரிணிக்குச் சாபவிமோசனம் என்ற பெயரும் அமைந்தது.

**************************************************************************************************************

இந்த வரலாறுகளையெல்லாம் அகத்திய முனிவர் வாயிலாகக் கேட்ட வீரபாண்டியன் திரிபுவனேசனை வழிபட்டான்.  அகத்தியர் அவனுக்குப் பிரம ஞானம் உபதேசித்தார்.  அவன் இறுதியில் விதேக முக்தியை அடைந்தான்.

சொற்கலை, பொருட்சுவை மலிய இந்தப் புராணத்தை இயற்றி இருக்கிறார்,பிள்ளை அவர்கள்.  வேதாந்த மடத்தைச் சார்ந்த கோயிலாதலின் அத்துவித வேதாந்தக் கருத்துக்களையும் பரிபாஷைகளையும் அங்கங்கே அமைத்திருக்கிறார்.  வருணனைகளும் ஐந்திணை இயல்புகளும் இருதுக்களின் இயல்பும், துதிகளும் இப்புராணத்தில் வருகின்றன.

பாயிரத்தில் கோயிலூர் வேதாந்த மடத்தின் முதல் ஞானாசிரியரைப் போற்றுகிறார்.

மேயபெருங்கழனி நகர் கோயிலூர் எனும் பேர்
மேவ இறை ஆலயத்தை விரித்த அருட் பெரியோன்
பாயபுனல் திரண்டாலி ஆயதெனச் சுத்த
பரப்பிரமம் இவ்வுருக் கொண்டுற்றதெனும் புரணன்,
ஆயபுகழ் வேதாந்த சிரவணம் செய்துலகில்
அளவிலர்சை தன்னியமா சுப்புரிந்த அறவோன்
தூய முத்தி ராமலிங்க தேசிகன் என்றுரைக்கும்
சோதிலிங்க சொரூப னென்னும் சோதியை ஏத்தெடுப்போம்

இந்நூலைச் செய்வித்த சிதம்பர தேசிகனைப் பற்றி ஒருசெய்யுளில் சொல்கிறார்.

மேலாய துறவினுக்கோர் துணையாகி உள்ளான்,
விரிந்து பல புவனமும் காண்றிடு சோற்றிற் கண்டோன்
நாலாய மறைமுடிவின் பொருள் விளங்க எடுத்து
நல்மாணவர்க்கருளித் தன்மயமாக்கிடுவோன்;
பாலாய சிவ தருமம் பற்றப்பாலிப்போன்;
பரப்பிரம சுவாநுபூதியிற் சிறந்த மேலோன்,
நூலாய யாவும் உணர்ந்த தவர்மனுவினெடுத்து
நுவலுமொரு சிதம்பர தேசிகனெனும்மா பெரியோன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

Geetha Sambasivam

unread,
Dec 22, 2013, 4:34:59 AM12/22/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
வேதாந்தக் கருத்துக்களை இவர் ஆளுவதற்குச் சில உதாரணங்கள்

"பளிங்குப் பாறையில் யானையின் வடிவத்தைக் கண்டு வேடர்கள் யானையென்றெண்ணி வேலை எறிந்து, பிறகு உண்மையை உணர்ந்து நாணுவார்கள்.  அவித்தையையுடையவர்கள் கற்பிதப் பிரபஞ்சத்தை உண்மையென்று கருதி அழலிலிட்ட மெழுகு போல் உருகி, பின் உண்மை தெரிந்து அவா அற்று நாணுதல் போல இருக்கிறது இந்தக் காட்சி?" (நாட்டுப் படலம் 23)

"தத்துவமசி என்பதிலுள்ள மூன்று பதங்களின் உண்மையை முறையாக விசாரம் செய்து பிறகு நிஷ்டை கூடி, எல்லாவற்றையும் தாமாகக் கண்டு இரப்பவர்கள் பலர்.  அவர்களுக்குப் பணி செய்வதை மேற்கொண்டு நிற்கும் குழாங்கள் ஒருசார் இருக்கும். (திருநகரம்.70)

சூத முனிவரைச் சொல்லும்போது:

"சத்திய ஞானானந்த நிட்களமாய்த்
தற்பர சொரூபமாய் விபுவாய்
நித்திய நிமல நிரஞ்சன முதலாய்
நிறைவுறு பேரொளிப் பிழம்பாய்
மெத்திய உயிரின் அபேதமாய் என்றும்
விளங்கிடும் ஒருபர சிவமே
பொத்திய தான் என்றுணர் தரு துணிபோன்
புகழ்மிகு சூதமா முனிவன்"

என்று பாராட்டுகிறார்.  சிவமே தான் என்றுணர்ந்தவன் என்பதில் அத்வைதக் கருத்து அமைந்திருக்கிறது.

உபநிடதப் பொருள் உரைத்த படலத்தால் முழுக்க முழுக்க அத்வைத வேதாந்தக் கருத்துக்களையே சொல்கிறார்.

பிரமத்தை உணரும் உபாயம் எதுவோ அதுவே பிரம வித்தை, அதைப் பற்றிய விரிவான கருத்துக்கள் இப்படலத்தில் வருகின்றன.  பரிபூரணமாய், சச்சிதானந்த சொரூபமாய், பரம அத்துவிதப் பிரத்தியக பின்னமாய் ஒளிரும் பிரமத்தை உணர்தர முக்கியமாகச் சொல்லப்பட்ட உபாயமே பிரம வித்தை (52) என்பது ஒரு பாட்டின் பொருள்.

"கும்பம் முதலிய காரியங்கள் காரணமாகிய மண்ணே ஆவது போலவும், அரவு மாலை தடி முதலிய தோற்றங்கள் கடைசியில் கயிறாக முடிவது போலவும் ஜீவேசுவர ஜகத்தாய்த் தோன்றும் நானாவித நாம ரூபஜகத்தென்பதுவும் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுத்த பரமாத்துவித பரமசிவ சொரூபமேயாம்' (73) என்று ஒரு பாட்டுச் சொல்கிறது.

இவ்வாறு கோவிலூர்ப் புராணம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றின் பெருமையையும், இறைவனுக்கும், இறைவிக்கும் பல திருநாமங்கள் உண்டான வரலாற்றையும், இங்கே வழிபட்டுப் பேறு பெற்றவர் கதைகளையும் சொல்கிறது.  இடையே சிவபெருமான் துதியும், அம்பிகை துதியும் வருகின்றன.  நாடு, நகரம், ஆகியவற்றின் சிறப்பு, ஐந்திணைகளின் வருணனை முதலிய இலக்கிய அமைதியுள்ள பகுதிகளையும் இதில் காணலாம்.

Geetha Sambasivam

unread,
Dec 24, 2013, 5:21:31 AM12/24/13
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
வரலாற்றில் கோவிலூர்

பல நூற்றாண்டுகளுக்கு முன்:
கோவிலூரில் ஒரு சிவன் கோயில், மிகச் சிறு அளவில் காட்டுக்குள் செம்பூரான் கல்லில் இருந்தது.

கி.பி.
1761 சிருங்கேரி சங்கராச்சாரிய சுவாமிகள் வேதாந்த மரபில் வந்த உகந்த லிங்க ஞான தேசிக சுவாமிகள் அவதாரம்

1791 காரைக்குடியில் நகரத்தார் மரபில் ஆண்டவர் முக்திராமலிங்கம் அவதாரம்

1810 காரைக்குடி முக்திராமலிங்கம் பொருள் வைத்த சேரியில் உகந்த குரு சுவாமிகளிடம் வேதாந்த பாடம் பயின்று வாசிட்டம் வரை பாட சமாப்தி செய்தார்.

1818 கழனிவாசல் கொற்றவாள் ஈசுவரர்--திருநெல்லை நாயகி அம்மன் கோயிலை ஆண்டவர் கல் திருப்பணியாக்கினார்.  கோவிலைச் சுற்றி அமைந்துள்ள ஊருக்குக் கோவிலூர் என்று பெயர் வழங்குவதாயிற்று.  படம் நிறுவ அடிகோலப் பெற்று வேதாந்த நூல்களையும் ஞான வாசிட்டம் முதலியவற்றையும் கற்பிக்கத் தொடங்கினர்.

1819 உகந்தலிங்க சுவாமிகள் பரிபூரணம்

1819 உகந்த லிங்க சுவாமிகள் அதிஷ்டானம்::  ஈசான்ய ஞான தேசிக அதிஷ்டானம் மடம்.

1847 யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தொடர்பு

1849 துறவு ஆண்டவர் பரிபூரணம்

1849 மூன்றாவது பட்டமாகக் கருணாநிதி சுவாமிகள் என்ற சிதம்பர இஅயா, சிதம்பர ஞான தேசிகர் என்னும் பெயருடன் அருள் ஆட்சி ஏற்றனர்.

1850 முத்துராமலிங்க ஆண்டவரை மகாலிங்க மூர்த்தியாகவும், துறவு ஆண்டவரை நந்தியாகவும் அமைத்து, இருவருக்கும் ஒன்றாய்க் கருவறை முதலியனவற்றைக் கருங்கல் திருப்பணியாக அமைத்து, கருணாநிதி சுவாமிகள் குடநீராட்டுச் செய்தனர்.

1850 மதுரையில் குட்டைய சுவாமிகள் படம் நிறுவப் பெற்றது.

1850 மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை கோவிலூர்ப் புராணம் பாடினார்கள்.

1858 சிதம்பரம் மூலட்டான ஈசுவரர் கோவிலில் சுவர்ணபந்தன மஹா கும்பாபிஷேஹம் செய்வித்தட்னு (காள யுக்தி--ஆனி 14)

1865 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணியை முடித்து, குடநீராட்டு விழாவைக் கருணாநிதி சுவாமிகள் நடத்தி வைத்தார்கள்.

1876 கருணாநிதி சுவாமிகள் பரிபூரணம்

1876 நான்காவது பட்டமாக இராமசாமி ஞான தேசிக சுவாமிகள் அருளாட்சி ஏற்றார்கள்.  அஷ்ட லெட்சுமி மண்டபமும், கோவிலைச் சுற்றிப் புதிதாகத் திஉர்மதிலும், கோவிலூரில் கட்டினார்கள்.

1883 இராமசாமி ஞான தேசிக சுவாமிகள் பரிபூரணம்

1883 ஐந்தாவது பட்டமாக, திருக்களர் ஆண்டவர் என்றுபெரும்புகழ் பெற்ற வீரப்ப சுவாமிகள் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் என்ற திருநாமத்துடன் கோவிலூரில் அருள் ஆட்சி ஏற்றார்கள்.

அடுத்த பத்து ஆண்டுகளில் கோவிலூர் விரிவடைந்தது.

1890 சிருங்கேரியில் கல் திருப்பணிகள்

1890--1910 திருக்களரில் கல் திருப்பணிகள்--திருக்களர் ஶ்ரீபாரிஜானவனேஸ்வரர் கும்பாபிஷேஹம்

1908 திருநெல்லை நாயகி அம்மனுடன் கூடிய கொற்றவாள் ஈசுவரர் கோயில் குட நீராட்டு விழா (கீலக சித்திரை 11)

1910 பொருள் வைத்த சேரியில் சொர்ணபுரீசுவரர் செளந்தரநாயகி அம்மன் கோவில் திருப்பணி (அந்நாளில்) ஒன்றேகால் லட்சம் ரூபாய்ச் செலவில் நிறைவேறியது.

1911 திருக்களர் ஆண்டவர் பரிபூரணம்.

1911 அண்ணாமலை ஞான தேசிகர் ஆறாவது பட்டமாக எழுந்தருளினார்கள்

1918 அண்ணாமலை ஞான தேசிகர் பரிபூரணம்

1918 ஏழாவது பட்டமாக மகாதேவ ஞான தேசிகர் அருளாட்சி ஏற்றார்கள்.

1927 செப்டம்பர் 11-இல் கோவிலூர் ஆதீனத்தைச் சேர்ந்த சிதம்பரம் கோ. சித. மடாலயத்துக்கு மகாத்மா காந்தியடிகள் வந்து இங்கு ஒருநாள் தங்கி  இருந்தார்கள். காந்தி மகானுக்கு மடாலயத்தின் சார்பில் பரஞ்சோதி சுவாமிகள் பணமுடிப்பும் வரவேற்பும் கொடுத்தார்கள்.

1929 ஏப்ரல் 6--ஆம் நாளில் கானாடுகாத்தான் சா.ராம.மு.அ. அண்ணாமலைச் செட்டியார் அவர்களுக்கு ஆங்கிலேய அரசாங்கத்தாரால் 'செட்டிநாட்டரசர்' என்ற பட்டம் வழங்கப் பெற்றமைக்கு நகரத்தார்கள் கோவிலூரில் பாராட்டு விழா நடத்தினார்கள்.

1929 நகரத்தார்களில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு, பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் பணம் பெற்றுக் கொள்ளும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, திரு சொ. முருகப்பா அவர்களின் முயற்சியால் 96 ஊர்க்கூட்டம் கோவிலூரில் நடைபெற்றது.

( வரலாற்றில் கோவிலூர் தொடரும்)

Geetha Sambasivam

unread,
Jan 6, 2014, 4:04:48 AM1/6/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt

1947 ஏழாவது பட்டம் மகாதேவ ஞான தேசிகர் பரிபூரணம், எட்டாவது பட்டமாக சோமசுந்தர ஞான தேசிகர் சுவாமிகள் அருளாட்சி ஏற்றார்கள்.

1948 எறும்பூரில் தத்துவராய சுவாமிகள் சமாதிக்கோயில் குடநீராட்டு விழா

1954 கோவிலூர் ஆதீனம், இந்து சமய அறநிலையத் துறையின் ஆட்சிக்கு உட்பட்டதில்லை என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது.

1961 பொருள் வைத்த சேரி செளந்தரிய நாயகி அம்மனுடன் கூடிய சொர்ணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேஹம்

1969 ஶ்ரீகாசி முதலிய நகரச் சத்திரங்களின் நிர்வாகம் பர்மாவில் இருந்ததை மாற்றி இந்தியாவில் நிர்வாகச் சபை அமைக்க, கோவிலூரில் 96 ஊர்க்கூட்டம் நடைபெற்றது.

1971 சோமசுந்தர ஞானதேசிகர் பரிபூரணம்

1971 ஒன்பதாவது பட்டமாக இராமநாத ஞான தேசிகர் அருளாட்சி ஏற்றார்கள்.

1972 கோவிலூர் நுழைவாயில் முகப்புக் கோபுரங்கள் புதுப்பிக்கப்பெற்றன.  ஒரு லட்சம் ரூபாய் செலவில் மடம் புதுப்பிக்கப்பெற்றது.

1973 நகரத்தார்களின் திருமணம் முதலிய விசேடச் செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க, கோவிலூரில் 96 ஊர்க்கூட்டம் ஜூன் 16, 17 இரு நாட்களும் நடைபெற்றது.  இதையொட்டிக் குழிபிறை பெரி. சின்னக்கருப்பன் செட்டியார் அவர்கள் தலைமையில் நகரத்தார் மாநாடும் அப்போது பாங்க் ஆப் மதுரை சேர்மனாக இருந்த லெ.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இளைஞர் மாநாடும் கவியரசு கண்ணதாசன் அவர்கள் தலைமையில் கவியரங்கமும் நாட்டரசன் கோட்டை டாக்டர் மணிமேகலை மாதவன் அவர்கள் தலைமையில் மாதர் மாநாடும் நிகழ்ந்தன.

1974 திருப்புவனம் வேதாந்த மடாலயம் கோவிலூர் ஆதீனத்துடன் இணைக்கப்பெற்றது.

1975 இராமேசுவரம் நகரச் சத்திரத்திற்குப் புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்கக் கோவிலூரில் 96 ஊர்க்கூட்டம் நடைபெற்றது.

1976 காளையார் கோவில் மடாதிபதி ஶ்ரீ அரு. இராமநாத சுவாமிகள், கோவிலூர் ஆதீனத்தின் இளவரசாக நியமிக்கப் பெற்றார்கள்.

1977 ஆதீனகர்த்தர் ஶ்ரீ இராமநாத ஞான தேசிக சுவாமிகள் காசியாத்திரை மேற்கொண்டு, அலகாபாத்-பிரயாகைக்குக் கும்பமேளாவுக்கும் சென்று வந்தார்கள்.

1977 கோவிலூரில் சிவன் கோவில் திருப்பணி தொடங்கப்பெற்றது.

1977 காஞ்சி காமகோடி பீடம் புதுப்பெரியவர்கள் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் கோவிலூருக்கு வருகை

1977 கோவிலூரில் ஶ்ரீ சங்கர் குருகுலம் தொடங்கப் பெற்றது.

1978 கொற்றவாள் ஈசுவரர் திருநெல்லை நாயகி அம்மன் கோவில் குடநீராட்டு விழா

1982 ஒன்பதாம் பட்டம் --ஶ்ரீல ஶ்ரீ இராமநாத ஞான தேசிக சுவாமிகள் விதேக முக்தி--அரு. இராமநாத ஞான தேசிக சுவாமிகள் பட்டம் ஏற்றல்.

1986 பத்தாம் பட்டம் அரு. இராமநாத ஞான தேசிகர் முக்தி.  பதினோராம் பட்டம் காசி விசுவநாத சுவாமிகள் பட்டம் ஏற்றல்.

1995 பதினோராம் பட்டம் காசி விசுவநாத சுவாமி முக்தி--ஶ்ரீலஶ்ரீ நாச்சியப்ப ஞான தேசிகர் பட்டம் ஏற்றல்.

கோயிற்திருப்பணிகள்

1977 திருவண்ணாமலை--ஈசான்ய ஞான தேசிகர் கோவில் குடமுழுக்கு

2002 பொருள் வைத்தசேரி--ஶ்ரீ செளந்தரவல்லி உடனாய ஶ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

ஶ்ரீலஶ்ரீ உகந்தலிங்க ஞான தேசிகர் திருக்கோவில் குடமுழுக்கு

2003 மருதவனம் ஶ்ரீ மருதவரீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு

2004 திருக்களர் ஆண்டவர் திருக்கோவில் குடமுழுக்கு

2005 சிதம்பரம் ஶ்ரீமத் பொன்னம்பல சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு

2006 மேட்டுப்பாளையம் (திருவண்ணாமலை) ஶ்ரீமத் சபாபதி சுவாமிகள் திருக்கோவில் குடமுழுக்கு

2007 எறும்பூர் ஶ்ரீமத் தத்துவராய சுவாமிகள் திருக்கோவில் குடமுழுக்கு

நடைபெற்று வரும் திருப்பணிகள்

1. திருக்களர் ஶ்ரீ பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில் திருப்பணி

2. கோவிலூர் திருநெல்லை திருக்கோவில் திருப்பணி

3. ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் திருக்கோவில் திருப்பணி

Geetha Sambasivam

unread,
Jan 7, 2014, 5:32:43 AM1/7/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
யாழ்ப்பாணம் மகாவித்துவான் ஆறுமுக நாவலர் அவர்களும் கோவிலூர் மடமும்

கோவிலூர் மடத்ஹ்டில் இரண்டாவது தலைவராகப் பட்டம் ஏற்று விளங்கியவர்கள் அருணாசல ஞான தேசிக சுவாமிகள்.  இவர்களைத் துறவு ஆண்டவர் என்ற பெயரால் குறிப்பிடுவது வழக்கம்.

அடைமொழி இன்றி, கோவில் என்ற சொல்லால் சுட்டப்படும் தலம் சிதம்பரம்.  அத்தலத்தில் துறவு ஆண்டவர் மிக்க ஈடுபாடு கொண்டு பல ஆண்டுகள் அங்குள்ள கேணி மடத்தில் தங்கியிருந்தார்கள்.  சின்னத் துறவு சுவாமிகளும் உடன் இருந்தார்கள்.

யாழ்ப்பாணம் மகாவித்துவான் ஆறுமுக நாவலர் (1822--1872) அப்போது சித்ம்பரத்திற்குத் தல யாத்திரை வந்திருந்தார்.  நடராசப் பெருமான் வீதி உலா நிகழ்ந்தபோது கோவிலூர் சுவாமிகள் இருவரும் அடியார் குழுக்களுடன் நின்று நடராசப் பெருமானை வழிபட்டுக்கொண்டிருந்ததை ஆறுமுக நாவலர் கூர்ந்து கவனித்தார்.  அவர்களைத் தொடர்ந்து அவரும் கேணி மடத்துக்குச் சென்று அங்கு அவர்களை வணங்கினார்.

"தாம் யார்?" என்று துறவு சுவாமிகள் வினவ,

"யான் வசிப்பது யாழ்ப்பாணத்து நல்லூரில், என் பெயர் ஆறுமுகம்.  நடராசப் பெருமானை வழிபடும் பொருட்டு இங்கு வந்தேன் என்று ஆறுமுக நாவலர் மறுமொழி கூறினார்.

பிறகு இவரைப் பற்றி விவரமாக அறிந்து துறவு ஆண்டவர் தக்க மரியாதை செய்தார்கள்.  ஆறுமுக நாவலர் நாள் தோறும் கேணி மடத்திற்கு வந்து போகலாயினார். ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 மணி முதல் கந்தபுராணத்தை எடுத்துச் சொல்ல ஏற்பாடாயிற்று.

ஒருநாள் துறவு சுவாமிகள், ஆறுமுகத்திடம் 'இன்று முதல் புராணங்களையே எடுத்துச் சொல்லி மக்களிடம் அதைப் பரவச் செய்ய வேண்டுமேயன்றிப் பாதிரியார்களுக்குப் பாடம் சொல்லலாகாது.' என்று ஆணையிட்டார்கள்.

அவ்வாறே பாதிரியார் தொடர்பை நிறுத்திப் புராணச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதிலும், சைவ, ஆகம நூல்களை இயற்றுவதிலும் ஆறுமுக நாவலர் ஈடுபட்டார்.

Geetha Sambasivam

unread,
Jan 7, 2014, 5:34:55 AM1/7/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
சாது சங்கம்

கோவிலூர் மடத்திற்குச் சொந்தமான மடங்கள் 108. என ஶ்ரீலஶ்ரீ காசிகானந்த ஞானாச்சாரிய சுவாமிகள் (ஶ்ரீலஶ்ரீ வீரசேகர ஞான தேசிகரின் மாணாக்கர் மும்மொழி வல்லுநர், திருப்புவன மடத்தைத் தோற்றுவித்தவர்) கணக்கிட்டுள்ளார்.  அவற்றில் பல மடங்கள் சிதிலமான நிலையிலும் சாதுக்களை ஆதரிப்பதற்குப் போதுமான வசதியும் இல்லாமல் இருந்தன.

அவற்றைச் சரி செய்யவும் உதவவும் சாது சங்கம் என்ற அமைப்பை 1951-இல் சுமார் ரூபாய் ஐம்பதாயிரம் மூல தனத்துடன் தொடங்கிப் பணி செய்து வந்திருக்கிறார்கள் என்பது மடங்களின் தோற்றமும், தற்போதைய நிலையும் என்ற அறிக்கை மூலமாகத் தெரிய வருகின்றது.

நூறு மடங்கள் அட்டவணை

1. கோவிலூர், முத்தி ராமலிங்க ஞான தேசிக சுவாமிகள் மடம்

2. திருக்களர், வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் மடம்

3. திருவண்ணாமலை, கந்தப்ப ஞான தேசிக சுவாமிகள், ஈசான்ய மடம்

4. மதுரை, தெற்கு வெளி வீதி, குட்டைய சுவாமிகள் மடம்

5. சிதம்பரம், பொன்னம்பல சுவாமிகள் மடம்

6. சிக்கல், பொருள் வைத்த சேரி, உகந்த லிங்க ஞான தேசிக சுவாமிகள் மடம்

7. மதுரை, தெற்கு வாசல், பிரஹ்மாநந்த சுவாமிகள் மடம்

8. திருவாரூர், மடப்புரம், தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் மடம்

9. சிதம்பரம், மெளன சாமிகள் மடம்.

10. மதராஸ், சூளை, வீர, சுப்பய்ய ஞான தேசிக சுவாமிகள் மடம்

11. மானா மதுரை நாராயண சுவாமிகள் மடம்

12. கோவில்பட்டி, முக்தானந்த சுவாமிகள் மடம்

13. தஞ்சாவூர், கரந்தட்டான் குடி, பால சுவாமிகள் மடம்

14. திருப்புவணம், காசிகாநந்த ஞானாச்சார்ய சுவாமிகள் மடம்

15. துறையூர், சின்ன மடம்

16. காளையார் கோயில், செல்லப்ப ஞான தேசிக சுவாமிகள் மடம்

17. மழபாடி, ஸ்வயம்பிரகாச சுவாமிகள் மடம்

18. சென்னை, வியாசர் பாடி, சிவப்பிரகாச சுவாமிகள் மடம்

19. எறும்பூர், தத்துவ ராய சுவாமிகள் மடம்

20. குடியாத்தம், பிச்சன் ஊர், வேலுச்சாமி மடம்

21. தஞ்சாவூர், சங்கரசாமி மடம்

22. பஞ்ச நதிக்குளம், அரு.வேதாந்த மடம்

23. வேதாரணியம், கந்தசாமி, சாதுக்கள் மடம்

24. சாக்கோட்டை, கோ.ராம.வீரப்ப சாமி மடம்

25. வேப்பஞ்சேரி, நடராஜர் மடம்

26. புனல் வாசல், ராமசாமி சாமி மடம்

27. துறையூர், சிவப்பிரகாச சுவாமிகள் மடம்

28. கோயம்புத்தூர், பேரையூர், சாந்தலிங்க சுவாமிகள் மடம்

29. விருத்தாசலம், குமார தேவர் மடம்

30. திருப்போரூர், சிதம்பர சுவாமிகள் மடம்

2014/1/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jan 7, 2014, 11:48:12 AM1/7/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014/1/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>
யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் பற்ரிய இந்த நிகழ்வுகளை இங்கே இத்தொடரில் வாசித்து அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. தொடர்ந்து தட்டச்சு செய்து நம் வாசிப்பிற்கு வழங்கி வரும் கீதாவிற்கு என் நன்றி.

சுபா 

Geetha Sambasivam

unread,
Jan 9, 2014, 4:43:48 AM1/9/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt

31. திருவண்ணாமலை.பவழக்குன்று, அழகாநந்த சுவாமிகள் மடம்

32. மேட்டுப் பாளையம், சபாபதி சுவாமிகள் மடம்

33. பசுபதி கோயில், ஆறுமுக சாமிகள் மடம் 

34. திரிசிராப்பள்ளி, குன்றிமணிச் சாமி மடம்

35. திருவாரூர், மடப்புரம், சோமநாதன் கோவில் மடம்

36. திருவையாறு, சிங்கப்பூர் சாமி மடம்

37. நொச்சியம், மெய்கண்டார் மடம்

38. ஏகாம்பரக் குப்பம், சிவ சுப்பிரமணிய சாமி மடம்

39. வல்லனாடு, அறிவாநந்த சாமி மடம்

40. திருப்பரங்குன்றம், மகாதேவ சாமி மடம்

41. இடைக்காட்டூர், பரிபூர்ண சாமி மடம்

42. புதுச்சேரி, வேதாநந்த சாமி மடம்

43. இராமநாதபுரம், கைவல்யம், ராமாநந்த சாமி மடம்

44. திருஅண்ணாமலை, பூண்டி, மாணிக்க சாமிகள் மடம்

45. தேவனாம்பட்டு, சுப்பிரமணிய சாமிகள் மடம்

46. பழங்கோவில், பெரிய சாமி மடம்

47. பார்த்திபனூர், கூடல் அம்மாள் மடம்

48. திரிசிராப்பள்ளி, தாரா நல்லூர், சொக்கலிங்க சுந்தர மூர்த்தி சாமி மடம்

49. திரிசிராப்பள்ளி வரகன் ஏரி, திரிபுரை ஞான ஆசிரமம்

50. நாகலாதபுரம் புதூர், அத்வைதாந்த சாமி மடம்

51. வாணியம்பாடி, பொன்னம்பல சாமி மடம்

52. குடியாத்தம், நல்லூர் பேட்டை, வையாபுரிச் சாமி மடம்

53. கார்க்கூர், ராமாசிரமம், சிவராஜாநந்த சாமி மடம்

54. ஶ்ரீரங்கம், பூசப்படித்துறை வேதாந்த மடம்

55. ராமேசுவரம், கந்த மாதந பர்வதம், சிவ ஆசிரமம்

56. காஞ்சீபுரம், மாத்தூர் சாமி மடம்

57. போளூர், விடோபா சாமி மடம்

58. திருக்கழுக்குன்றம் கருணாநந்தா மடம்

59. பீளைமேடு, தபோவனம், சுந்தராநந்த சாமி மடம்

60. தஞ்சாவூர், களிமங்கலம், நடராஜ மூர்த்தி மடம்

61. பழநி, சாது சாமி ஆசிரமம்

62. பழநி, பட்டினச் சாமி மடம்

63. கரிசல் குளம், ஆறுமுக சாமி மடம்

64. சிவகங்கை, மெளனச்  சாமி மடம்

65. செட்டியார் குத்தகை, மொட்டைய  சாமி மடம்

66. குன்றக்குடி, நித்தியாநந்த சாமி மேல மடம்

67. வேலூர், தோப்பாச்  சாமி மடம்

68. மதுரை, யோகாநந்த சாமி மடம்

69. அகிலாண்டபுரம், சங்கரசாமி மடம்

70. குச்சன் ஊர், சோமசுந்தர சாமி மடம்

71. பொதட்டூர் பேட்டை, செ.அ.வ.மடம் 

72. ராமகிருஷ்ண ராஜூ பேட்டை, கந்த சாமி மடம்

73. காரியானூர், தபோ வனம், நடேச சாமி மடம்

74. வளவனூர், ஷண்முகச் சாமி மடம்

75. ஹரிவெற்றி, சதாசிவ சாமி மடம்

76. விருத்தாசலம், கணபதி சாமி மடம்

77. ஆத்தூர், சங்கர நிலையம்

78. பவானி, ராமசாமி மடம்

79. காஞ்சீபுரம் திரிவேணி கிரி சாமி மடம்

80. மழபாடி, சின்ன மடம்

81. ஆண்டியப்பன் காடு, பால் சாமி மடம்

82. பிள்ளையார் பட்டி, கோவிந்தாந்த சாமி மடம்

83. மதுரை, பசுமலை விவேகாநநந்த மடம்

84. இளையான்குடி, சிவாநந்த  சாமி மடம்

85. கல்லல், சாதுக்கள் மடம்

86. புதுக்குடி, லக்ஷ்மிபுரம், சொக்கலிங்க சாமி மடம்

87. பாலூர், சொரூபாநந்த சாமி மடம்

88. பழ முக்கல் (திண்டிவனம் வழி) ஆறுமுக சாமி மடம்

89. சேலம்--குகை ராமாசிரமம்

90. தக்கோலம், சொக்கலிங்க சாமி மடம்

91. கிருஷ்ணகிரி, அண்ணாமலைச் சாமி மடம்

92. திருநெல்வேல்லி, குறுக்குத் துறை, சிவாநந்த சாமிகள் மடம்

93. திரு அண்ணாமலை, ரமண ஆசிரமம்

94. பாடி, சிவப்பிரகாச  சாமி மடம்

95. உத்தரகோசமங்கை, வெள்ளைய சாமி மடம்

96. கப்பல் ஊர், மடம்

97. திருப்புறம்பியம், மடம்

98. உள்ளிக்கோட்டை, மடம்

99. கலசபாக்கம், மடம்

100.சுவாமி மலை, மடம்

கி.காளைராசன்

unread,
Jan 9, 2014, 6:00:12 AM1/9/14
to mintamil, Subashini Tremmel
வணக்கம்.

2014/1/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

தொடர்ந்து தட்டச்சு செய்து நம் வாசிப்பிற்கு வழங்கி வரும் கீதாவிற்கு என் நன்றி.

சுபா 
ஆமாம்.
அரியதொரு ஆன்மிகப் பணியாற்றி வரும் அம்மையார் அவர்களுக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Geetha Sambasivam

unread,
Jan 13, 2014, 4:30:54 AM1/13/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
தத்துவராய சுவாமிகள் மடம், எறும்பூதூர்

தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலத்திற்கும் சேத்தியாத் தோப்பிற்கும் இடையே உள்ள சிற்றூர் எறும்பூதூர்.   இது இப்போது இரும்பூர் என்று மக்கள் வழக்கில் குறிப்பிடப்படுகிறது.  எறும்பூர் என்றும் சொல்கிறார்கள்.

சிதம்பரத்திற்கு மேற்குத் திக்கில் உள்ள இவ்வூரில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஶ்ரீ சொரூபானந்த சுவாமிகள், ஶ்ரீ தத்துவராய சுவாமிகள் என்ற பெயர்களைக் கொண்ட இரு பெரும் ஞானிகள் இருந்தனர்.  அவ்வ்விருவருள் ஶ்ரீ சொரூபானந்த சுவாமிகளிடம் அநுக்கிரகம் பெற்று வடமொழி தென் மொழி இரண்டிலும் வல்லுநராய், சித்தராய், ஞானியாய் விளங்கி விதேக கைவல்யம் அடைந்தவர் ஶ்ரீ தத்துவராய ஞான தேசிக சுவாமிகள்.

தத்துவராய சுவாமிகள் ஈசுவர கீதை, பிரம கீதை என்னும் நூல்களை வடமொழியிலிருந்து தமிழில் செய்யுள் வடிவாய் இயற்றியும் குரு பக்தியின் மிகுதியினால் அடங்கன் முறை (தாலாட்டு முதலிய பதினெட்டுப் பிரபந்தம்) பாடு துறை என்னும் இரு நூல்களையும் இயற்றியுள்ளார்ர்.

சசிவன்ன போதம், அஞ்ஞவதைப் பரணி, மற்றும் சில வேதாந்த சாத்திரங்களையும், சித்தாந்த நூல்களையும் தத்துவராய சுவாமிகள் தாமாகவே இயற்றியுள்ளார்கள்.  பல நூல்களிலிருந்து பெருந்திரட்டு, குறுந்திரட்டு என்ற பெயர்களில் திரட்டு நூல்கள் இரண்டை உலகுக்கு வழங்கியுள்ளார்கள்.  இந்நூல்கள் முழுவதையும் படித்துப் பார்த்து இவற்றின் நயங்களைச் சுவைத்து மகிழ்ந்த சிதம்பரம் கோ.சித. மடாலயத்து அதிபர் ஶ்ரீ பொன்னம்பல ஞான தேசிகர், ஶ்ரீ தத்துவராய ஞான தேசிக சுவாமிகளின் அருமை பெருமைகளை நன்கு உணர்ந்தார்.  ஶ்ரீ தத்துவராய ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயிலின் முன் மண்டபம் பிரகார மண்டபம், பாவுக்கல் வரிக்கல் முதலியவற்றை வெள்ளாற்றில் அணை கட்டுவதற்கு அக்காலத்தில் ஆங்கிலேய அரசு எடுத்துக் கொண்டு போனபோது அதைப் பொன்னம்பல சுவாமிகள் ஓரளவு தடுத்து நிறுத்தினார்கள்.   சுவாமிகள் இவ்வாறு தடுக்கும்போது கருநாகம் இருந்து சீற ஆங்கிலேய ஆட்சியாளர்ர்கள் அந்த முயற்சியை அந்த அளவில் கைவிட்டனர்.

பொன்னம்பல சுவாமிகளுக்கு, தத்துவ ராயரின் நூல்களில் ஈடுபாடு இருந்ததால் அவருடைய சமாதி எங்கு உள்ளது என வினவி, எறும்பூருக்குச் சென்று பார்த்தபோது மேற்கண்டவாறு சமாதிக்கோயில் அழிந்தும், அழிக்கப்பட்டும், இலைக்கள்ளி புதர்களுக்குள் மறைந்தும் இருப்பதைக் கண்டார்.

அதைத் திருப்பணி செய்ய முடிவு செய்தபோது உய்யக்கொண்டான் சிறுவயல் சுப்பிரமணியன் செட்டியார் என்பார் கண் நோய் வாய்ப்பட்டிருந்தார்.   மருத்துவம் செய்யாமலே பொன்னம்பல சுவாமிகள் அருளால் மேற்படி சுப்பிரமணியன் செட்டியார் மீண்டும் கண்ணொளி பெற்றார்.  அவர் பர்மாவுக்குச் சென்று தாமே பெரும்பொருள் ஈட்டி அதைப் பொன்னம்பல சுவாமிகளுக்கு அனுப்பினார். சுவாமிகள் இவ்வாறு செட்டியார் பர்மிய நாட்டிலிருந்து அனுப்பிய பணத்தைக் கொண்டு தத்துவராயருக்குக் கருங்கற் கோயில் கட்டி முடித்தார்.  கோயில் காரியங்கள் முட்டின்றி நடைபெறுவதற்காக, அவ்வூரில் விளை நிலங்களும் வாங்கினார்.  ஆடி மாதத்துச் சதய நட்சத்திரத்தில் தத்துவராயர் குரு பூசை சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகளையும் செய்தார்.

கர்ப்பக்கிரகம், விமானம், அர்த்த மண்டபம், நந்தி மண்டபம், பிராகார மண்டபம் ஆகியவற்றைக் கட்டி முடித்து ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் கி.பி. 1895 அளவில் ஶ்ரீ தத்துவராய ஞான தேசிக சுவாமிகளின் அதிஷ்டானக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்கள். அதன் பிறகு, கோயிலைக் கோவிலூர் ஆதீனத்தில் ஒப்படைத்தார்கள்.  அதிஷ்டானத்துக்கு அன்று முதல் நித்திய பூஜை, குரு பூஜை முதலியன கோவிலூர் ஆதீனத்தின் வாயிலாக நடைபெற்று வருகின்றன.

மேற்படி கோவிலில் விமானம், முன்மண்டபம், பிராகார மண்டபங்களில் சில பகுதிகள் ஆகியவை பழுது பட்டிருந்ததைச் சீர் செய்து சர்வதாரி ஆண்டு ஆனித் திங்கள் 11 ஆம் நாள் (24--6--1948) கோவிலூர் ஆதீனம் எட்டாவது குருமூர்த்தியான ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஞான தேசிகர் அருளாட்சியில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

சிதம்பரம் கோ.சித. மடாலயத்தார் தத்துவராய சுவாமிகள் அருளிச் செய்த பாடுதுறை என்னும் அந்நூலை 1953இல் வெளியிட்டுள்ளார்கள்.  இந்நூலில் சுவாமிகளின் சரித்திரச் சுருக்கம்  உள்ளது.

கோவிலூர் ஆதீனம் ஒன்பதாவது குருமூர்த்திகளான ஶ்ரீலஶ்ரீ இராமநாத ஞான தேசிகர் அவர்களுடைய அருளாட்சியில் ஶ்ரீ தத்துவராய சுவாமிகளின் அதிஷ்டானம் நன் முறையில் பாதுகாக்கப் பெற்று குரு பூஜை முதலியன மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தன.

இப்போது  கோவிலூர் மடாலயத்தின் நேரடி பார்வையில் உள்ளது.  சமீபத்தில் 2007 மே மாதம் 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

எறும்பூர் ஶ்ரீமத் தத்துவராய சுவாமிகள் திருக்கோவில் 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலஸ்தாபனம் செய்யப் பெற்றுத் திருப்பணி தொடங்கப் பெற்றது.

கர்ப்பக் கிரஹத்தைத் தவிர மற்ற அர்த்த மண்டபம், மஹாமண்டபம், திருமதில் போன்ற எல்லாவற்றையும் முழுதுமாக இடித்துப்  புதிய கல் உத்திரங்கள், தூண்கள் செய்து முற்றும் புதிய கல் திருப்பணியாக ஏறக்குறைய 28 லட்சம் செலவில் இரண்டாண்டுக்கு மேல் திருப்பணி செய்து முடிக்கப் பெற்றது.  மேற்படி திருப்பணியை அனுபவம் மிக்க சிற்பக் கலாமணி பத்மஶ்ரீ முத்தையா ஸ்தபதிகளைக் கொண்டு மிக நேர்த்தியாகச் செய்யப் பெற்றுள்ளது.

2007 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி ஆறுகால யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்ஷிதர்களால் கும்பாபிஷேஹம் நடத்தி வைக்கப்பட்டது.  வேதாந்த இலக்கியக் கருத்தரங்குகள் இன்னிசை நிகழ்ச்சிகளுடன் ஏறக்குறைய 6 லட்சம் செலவில் குமாபிஷேகம் செய்யப் பெற்றது.  மேற்படி கும்பாபிஷேஹத்தினை நம் குருமகா சந்நிதானம், ஜகத்குரு பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி மற்றும் பல ஞானத் துறவிகள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருவருளும் குருவருளும் பெற்றார்கள்.  தற்போது எறும்பூர் திருக்கோவிலுக்கு பக்தர்கள் வருவது மிக அதிகரித்துள்ளது.

K. Loganathan

unread,
Jan 13, 2014, 6:33:13 AM1/13/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
நின்னா கீதா அவர்களே

மிக்க நன்றி. தத்துவ ராயர் நல்லவொரு ஞானி என்பதொடு நல்லவொரு வேதாந்தியும் ஆகும். 'தத்துவாமிர்தம்'; அமிர்தசாரம்' போன்ற வேதாந்த நூற்களையும் எழுதியவர்.

ஆனால் இவர் எழுதியதாக கூறப்படும் 'சிவப் பிரகாசப் பெருந்திர்ட்டு" :குறுந்திரட்டு" ஆகியவை இவராலோ அல்லது இவரது குருவும் உறவினருமாகிய சொருபானந்தராலோ இயற்றப்பட்டதாகத் தெரியவில்லை, அது வேதாந்த சார்வற்று சைவ சித்தாந்த சார்புடையதாகத் தெரிகின்றது. அன்றைய நாளில் விளங்கிய எல்லா தத்துவ விசாரணைகளையும் மற்றும் சித்தர் கலைபோன்றவற்றை எல்லாம் தொகுத்து ஓர் மாபெரும் விருட்ச வடிவில் ஒருங்கிணைத்து ஓர் அடிப்ப்டை அறிவின் தொழிறப்ட்டாகக்  காட்டியுள்ளார், இதுவோர் வியக்கத்தக்க சாதனை,

மாயா வாத வேதாந்தியால் இது முடியாத காரியம். அநேகமாக இவ்விருவரது குருவாக விளங்கிய ஒர்ர் சித்தாந்த மரபில் வந்த ஞானியின் படைப்பாக இருந்து அதனை விருத்தி செய்தவராக தத்த்துராயர் இருக்கலாம்.

தாக்கார் இதனை இன்னும் ஆய்ந்து தெளிய வேண்டிய அற்புதமான நூல், இது சிவஞான சித்தியார் போன்ற சித்தாந்த சாதிரங்களை பின்பற்றிச் செல்லும் ஒன்றாகும்,. இவ்வ்கையில் வடமொழி 'சர்வ தரிசன சங்கிரம்' போன்ற ஓர் நூல் இதுவல்ல.

உல்கன்

2014/1/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jan 14, 2014, 2:58:23 AM1/14/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014/1/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>
தத்துவராய சுவாமிகள் மடம், எறும்பூதூர்

..

பொன்னம்பல சுவாமிகளுக்கு, தத்துவ ராயரின் நூல்களில் ஈடுபாடு இருந்ததால் அவருடைய சமாதி எங்கு உள்ளது என வினவி, எறும்பூருக்குச் சென்று பார்த்தபோது மேற்கண்டவாறு சமாதிக்கோயில் அழிந்தும், அழிக்கப்பட்டும், இலைக்கள்ளி புதர்களுக்குள் மறைந்தும் இருப்பதைக் கண்டார்.

அதைத் திருப்பணி செய்ய முடிவு செய்தபோது உய்யக்கொண்டான் சிறுவயல் சுப்பிரமணியன் செட்டியார் என்பார் கண் நோய் வாய்ப்பட்டிருந்தார்.   மருத்துவம் செய்யாமலே பொன்னம்பல சுவாமிகள் அருளால் மேற்படி சுப்பிரமணியன் செட்டியார் மீண்டும் கண்ணொளி பெற்றார்.  அவர் பர்மாவுக்குச் சென்று தாமே பெரும்பொருள் ஈட்டி அதைப் பொன்னம்பல சுவாமிகளுக்கு அனுப்பினார். சுவாமிகள் இவ்வாறு செட்டியார் பர்மிய நாட்டிலிருந்து அனுப்பிய பணத்தைக் கொண்டு தத்துவராயருக்குக் கருங்கற் கோயில் கட்டி முடித்தார்.  கோயில் காரியங்கள் முட்டின்றி நடைபெறுவதற்காக, அவ்வூரில் விளை நிலங்களும் வாங்கினார்.  ஆடி மாதத்துச் சதய நட்சத்திரத்தில் தத்துவராயர் குரு பூசை சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகளையும் செய்தார்.

கர்ப்பக்கிரகம், விமானம், அர்த்த மண்டபம், நந்தி மண்டபம், பிராகார மண்டபம் ஆகியவற்றைக் கட்டி முடித்து ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் கி.பி. 1895 அளவில் ஶ்ரீ தத்துவராய ஞான தேசிக சுவாமிகளின் அதிஷ்டானக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்கள். அதன் பிறகு, கோயிலைக் கோவிலூர் ஆதீனத்தில் ஒப்படைத்தார்கள்.  அதிஷ்டானத்துக்கு அன்று முதல் நித்திய பூஜை, குரு பூஜை முதலியன கோவிலூர் ஆதீனத்தின் வாயிலாக நடைபெற்று வருகின்றன.

மேற்படி கோவிலில் விமானம், முன்மண்டபம், பிராகார மண்டபங்களில் சில பகுதிகள் ஆகியவை பழுது பட்டிருந்ததைச் சீர் செய்து சர்வதாரி ஆண்டு ஆனித் திங்கள் 11 ஆம் நாள் (24--6--1948) கோவிலூர் ஆதீனம் எட்டாவது குருமூர்த்தியான ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஞான தேசிகர் அருளாட்சியில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

சிதம்பரம் கோ.சித. மடாலயத்தார் தத்துவராய சுவாமிகள் அருளிச் செய்த பாடுதுறை என்னும் அந்நூலை 1953இல் வெளியிட்டுள்ளார்கள்.  இந்நூலில் சுவாமிகளின் சரித்திரச் சுருக்கம்  உள்ளது.

கோவிலூர் ஆதீனம் ஒன்பதாவது குருமூர்த்திகளான ஶ்ரீலஶ்ரீ இராமநாத ஞான தேசிகர் அவர்களுடைய அருளாட்சியில் ஶ்ரீ தத்துவராய சுவாமிகளின் அதிஷ்டானம் நன் முறையில் பாதுகாக்கப் பெற்று குரு பூஜை முதலியன மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தன.

இப்போது  கோவிலூர் மடாலயத்தின் நேரடி பார்வையில் உள்ளது.  சமீபத்தில் 2007 மே மாதம் 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

எறும்பூர் ஶ்ரீமத் தத்துவராய சுவாமிகள் திருக்கோவில் 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலஸ்தாபனம் செய்யப் பெற்றுத் திருப்பணி தொடங்கப் பெற்றது.

கர்ப்பக் கிரஹத்தைத் தவிர மற்ற அர்த்த மண்டபம், மஹாமண்டபம், திருமதில் போன்ற எல்லாவற்றையும் முழுதுமாக இடித்துப்  புதிய கல் உத்திரங்கள், தூண்கள் செய்து முற்றும் புதிய கல் திருப்பணியாக ஏறக்குறைய 28 லட்சம் செலவில் இரண்டாண்டுக்கு மேல் திருப்பணி செய்து முடிக்கப் பெற்றது.  மேற்படி திருப்பணியை அனுபவம் மிக்க சிற்பக் கலாமணி பத்மஶ்ரீ முத்தையா ஸ்தபதிகளைக் கொண்டு மிக நேர்த்தியாகச் செய்யப் பெற்றுள்ளது.

2007 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி ஆறுகால யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்ஷிதர்களால் கும்பாபிஷேஹம் நடத்தி வைக்கப்பட்டது.  வேதாந்த இலக்கியக் கருத்தரங்குகள் இன்னிசை நிகழ்ச்சிகளுடன் ஏறக்குறைய 6 லட்சம் செலவில் குமாபிஷேகம் செய்யப் பெற்றது.  மேற்படி கும்பாபிஷேஹத்தினை நம் குருமகா சந்நிதானம், ஜகத்குரு பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி மற்றும் பல ஞானத் துறவிகள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருவருளும் குருவருளும் பெற்றார்கள்.  தற்போது எறும்பூர் திருக்கோவிலுக்கு பக்தர்கள் வருவது மிக அதிகரித்துள்ளது.

வரலாற்று விஷயங்களை நன்கு இக்கட்டுரையில் பதிந்திருக்கின்றார்கள். விரிவாக இந்தக் கோயில் தோன்றிய வரலாற்றினை அறிந்து கொள்ள முடிகின்றது. 
தட்டச்சு எய்தமைக்கும் பகிர்தலுக்கும் நன்றி கீதா.

சுபா

Geetha Sambasivam

unread,
Jan 18, 2014, 4:15:08 AM1/18/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
உகந்தலிங்க ஞானதேசிக சுவாமிகள் மடம்

(கோ.ஆ.பொ.மடம்)

பொருள் வைத்த சேரி ----சிக்கல்

காலடியில் தோன்றிய ஆதிசங்கர அத்வைத மரபில் வந்தவர்கள், உகந்தலிங்க ஞான தேசிக சுவாமிகள் அவர்கள்.  சுவாமிகளின் காலம் 1770--1819. இவர்களிடமே கோவிலூர் ஆண்டவர் வேதாந்த நூல்களைப் பயின்றார்கள்.  1819-இல் இம்மடம் கோவிலூர் ஆண்டவரால் கட்டப்பெற்றது.  அதன் பின்னர் 42 ஆண்டுகள் வீரபத்திர சுவாமிகள் இந்த மடத்தின் தலைவராக இருந்தார்கள்.

திருக்களர் ஆண்டவரின் மாணவர் மெய்யப்ப ஞானதேசிகர் காலத்தில் சொர்ணபுரீசுவரர்--செளந்தரிய நாயகி அம்பாள் கோவிலுக்கு ஒன்றேகால் லட்சம் ரூபாய் செலவில் (1910 ஆம் ஆண்டு அளவில்) திருப்பணி செய்தார்கள்.  மடத்தைப் புதுப்பிக்கவும் விரிவாக்கிக் கட்டவும் ரூ. 50,000/- செலவிட்டார்கள். விளை நிலங்களும் வாங்கினார்கள்.

1910-இல் முடிவு பெற்ற திருப்பணிக்குக்  கோவிலூர் ஆதீனகர்த்தர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகள் சொல்லியவாறு காரைக்குடி நா.வ. மெய்யப்பச் செட்டியாரும், நகரத்தார் பலரும் பெரும் பொருள் வழங்கினார்.  காரைக்குடி சா.நா.அ..சொ. சொக்கலிங்கம செட்டியார் உதவிய பொருளைக் கொண்டு விநாயகர், துர்க்காம்பாள் கோவில்கள் கட்டப்பெற்றன.  மீண்டும் திருப்பணி வேலை நடைபெற்றுக் கும்பாபிஷேஹம் 19--5--1929--இல் செய்யப் பெற்றது.

கோ.ஆ.பொ. மடாலயத்தின் பொருளைக் கொண்டு சொர்ணபுரீசுவரர் கோயிலும், உகந்த ஞான தேசிகர் கோவிலும் புதுப்பிக்கப் பெற்று 1961--இல் கும்பாபிஷேகம் செய்யப் பெற்றது.

இந்த மடத்தின் தலைவராக இருந்திருப்பவர்கள் வருமாறு :-

1. வீரபத்திர சுவாமிகள்

2. சிங்காரவேல் சுவாமிகள்

3. முத்தைய சுவாமிகள்

4. சட்டையப்ப சுவாமிகள்

5. மாரிமுத்து சுவாமிகள்

6. மெய்யப்ப சுவாமிகள்

7. கோவிலூர் ஆதீனம் (ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர சுவாமிகள்)

8. இராமலிங்க சுவாமிகள்

1997-இல் சோம. இராமலிங்க சுவாமிகள் பரிபூரணம் அடைந்த பின்னர், கோ.ஆ.பொ. மடம், கோவிலூர் ஆதீனகர்த்தர் நேரடி மேற்பார்வையில் இருந்து வருகிறது.  2002-இல் கும்பாபிஷேஹங்கள் நடைபெற்றன.  2003-இல் விருந்தினர் மாளிகை கட்டிச் செயல்பட்டு வருகின்றன.  (இவை குறித்துத் தனியே செய்திகள்)

Geetha Sambasivam

unread,
Jan 18, 2014, 4:35:15 AM1/18/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூர் கொற்றவாளீசர் திருக்கோயில்

சாலிவாடி என்றும் கழனிவாசல் என்றும் பெயருடைய ஊரில் சிவகுப்தன் என்ற தன வணிகன் இருந்தான்.  அவன் மனைவி சுதன்மை.  இவர்கள் இருவரும் அரன் நாமம் ஓதித் திருபுவனேசுவரரை பக்தி செய்து வந்தார்கள்.  அவர்களுடைய அருமை மகள் அரதனவல்லி.  சுதன்மை திருபுவனேசையிடம் மிகுந்த பக்தியுடையவள்.

அம்பிகையின் திருக்கோவில் அருகில் சிவகுப்தனுடைய வயல் இருந்தது.  உயர்ந்த சாலிவாடி நெல் கதிர் முற்றத் தொடங்கி இருந்தது. அரதனவல்லியைக் காவலுக்கு அனுப்பினார்கள்.  அவள் விளையாட்டுப் பெண்.  கழனிக்கே போகாமல் மலர்ச்சோலையில் சென்று விளையாடிக் கொண்டிருந்தாள்.

கோவிலில் குடி கொண்டிருந்த தேவி சுதன்மையின் பால் அன்பு கொண்டு தானே அரதனவல்லியாக வடிவமெடுத்து வயலுக்குக் காவலாக நின்றாள்.

நடுப்பகலில், 'குழந்தைக்குப் பசிக்குமே' என்று தயிர்சாதம் பிசைந்து எடுத்துக் கொண்டு பெண்ணைத் தேடிச் சென்றாள் சுதன்மை.  பரப்பின் மீது சமர்த்தாக உட்கார்ந்து கொண்டு கொம்பினால் கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து மகிழ்ந்தாள்.  வெயிலில் சிரமப்படுகிறாளே என்ற பரிவோடு கையில் தயிர்சாதம் எடுத்துப் போட அரதனவல்லி ருசித்துச் சாப்பிட்டாள்.  கொஞ்ச நேரம் கழித்து அரதனவல்லி வந்து 'அம்மா, பசிக்கிறது' என்றாள்.  "என்னடி இது! இப்போது தானே உனக்குச் சாதம் போட்டுவிட்டு வந்தேன்.  ஆவலாகச் சாப்பிட்டாயே!  அதற்குள் பசியா?" என்று திகைத்தாள் சுதன்மை.

அரதனவல்லி தான் வயல்பக்கமே செல்லவில்லை என்று கூறியதும் சுதன்மை அதிசயத்தில் ஆழ்ந்தாள்.  தேவியின் கருணையே இது என்று உணர்ந்து கொண்டாள்.  சிவகுப்தனும் சுதன்மையும் அன்னம் உண்டு அருள் புரிந்த தேவியை மனமுருகிப் போற்றினார்கள்.

நெல்லைக் காத்த அம்பிகைக்கு திருநெல்லை நாயகி என்றும் சாலிவாடீச்வரி என்றும் பெயர் வந்தது.

சிறுமணிச் சம்பாவைச் சமைத்துக் கட்டித் தயிர் விட்டுக் கலந்து மணக்க மணக்கத் தாளித்துக் கொட்டி வாழைக் குருத்தில் சாப்பிட்டால் அன்னை ததியோன்னப் பிரியையாக இருப்பதில் அதிசயமென்னவென்று தோன்றும்.

கோவிலூர்ப் புராணத்தில் உள்ள பலகதைகளில் இதுவும் ஒன்று.  காரைக்குடிக்குச் சமீபத்திலுள்ள கோவிலூர்.  மதுப்ரிய முனிவர் தவம் செய்த தலம். அவருடைய தவச் சிறப்பால் இந்த ஊர்க்குளத்துக்கு மது புஷ்கரிணி என்றும் அருகில் ஓடும் ஆற்றுக்குத் தேனாறு என்றும் பெயர் விளங்குகிறது.

கோவிலூர் இன்னும் பல காரணங்களால் பெருமை பெற்றிருக்கிறது.  கோவிலை வைத்துத் தோன்றிய ஊர் இது.  திரிசிரபுரம் மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் தெள்ளு தமிழில் தலபுராணம் பாடிய ஊர்.  வேதாந்த வடமொழி நூல்களை வடமொழி அறியாதாரும் பயிலத் தமிழாக்கம் செய்து தமிழில் பாடம் சொல்லும் முறையைத் தொடங்கிய ஊர்.  ஆண்டவர் என்ற மகான் வேதாந்த மடம் நிறுவிய ஊர்.  ஞான மார்க்கத்தை, ஆதிசங்கர பகவத் பாதருடைய அத்வைத தத்துவத்தை உணர்ந்த ஞானியர் மடத் தலைவர்களாக விளங்கிய ஊர்.

(தொடரும்)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 18, 2014, 5:53:56 AM1/18/14
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

காவலுக்காக கூலியா?
கூலிக்காக காவலா?
தினைப்புலக்காவல் காத்து கட்டித்தயிர்ச்சாதம் உண்ட கதை அருமை.

2014/1/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

சாலிவாடி என்றும் கழனிவாசல் என்றும் பெயருடைய ஊரில் சிவகுப்தன் என்ற தன வணிகன் இருந்தான்.  

சாலி என்ற பெயரில் 
கழனிவாசலுக்கு அருகே கிராமம் ஒன்று உள்ளது.
அங்கும் ஒரு சிவலிங்கம் உள்ளது.

வேதாந்த வடமொழி நூல்களை வடமொழி அறியாதாரும் பயிலத் தமிழாக்கம் செய்து தமிழில் பாடம் சொல்லும் முறையைத் தொடங்கிய ஊர்.  

தொன்றுதொட்டு இன்றும், வேதாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

Subashini Tremmel

unread,
Jan 19, 2014, 1:36:21 AM1/19/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014/1/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>
கோவிலூர் கொற்றவாளீசர் திருக்கோயில்
..

கோவிலூர்ப் புராணத்தில் உள்ள பலகதைகளில் இதுவும் ஒன்று.  காரைக்குடிக்குச் சமீபத்திலுள்ள கோவிலூர்.  மதுப்ரிய முனிவர் தவம் செய்த தலம். அவருடைய தவச் சிறப்பால் இந்த ஊர்க்குளத்துக்கு மது புஷ்கரிணி என்றும் அருகில் ஓடும் ஆற்றுக்குத் தேனாறு என்றும் பெயர் விளங்குகிறது.

ஆற்றின் பெயர் மிக அழகு.
 
கோவிலூர் இன்னும் பல காரணங்களால் பெருமை பெற்றிருக்கிறது.  கோவிலை வைத்துத் தோன்றிய ஊர் இது.  திரிசிரபுரம் மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் தெள்ளு தமிழில் தலபுராணம் பாடிய ஊர்.  வேதாந்த வடமொழி நூல்களை வடமொழி அறியாதாரும் பயிலத் தமிழாக்கம் செய்து தமிழில் பாடம் சொல்லும் முறையைத் தொடங்கிய ஊர்.  ஆண்டவர் என்ற மகான் வேதாந்த மடம் நிறுவிய ஊர்.  ஞான மார்க்கத்தை, ஆதிசங்கர பகவத் பாதருடைய அத்வைத தத்துவத்தை உணர்ந்த ஞானியர் மடத் தலைவர்களாக விளங்கிய ஊர்.
கோவிலூரில் இருப்பவர்கள் கூட தங்கள் ஊர் பெருமையை அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. இப்படி வாசிப்பது எவ்வளவோ புதிய விஷயங்களை தருகிறது. 

தொடர்ந்து தட்டச்சு செய்து வரும் கீதாவுக்கு நன்றி.
சுபா

(தொடரும்)

Geetha Sambasivam

unread,
Jan 20, 2014, 3:45:48 AM1/20/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதற்கு மனப்பக்குவமே தகுதி: பிறப்பு ஒரு தடையல்ல என்பதை நிலைநாட்டினார் கோவிலூர் ஆண்டவர்.  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியில் நகரத்தார் குடியில் தோன்றிய முக்திராமலிங்கம் சிறு வயதில் சிக்கல் க்ஷேத்திரத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார்.  அருகில் பொருள்வைத்த சேரி என்ற சிற்றூரில் உகந்தலிங்க சுவாமிகள் என்ற ஞானி இருந்தார்.  அவர் நெசவுத்தொழில் செய்பவர். சங்கரருடைய வேதாந்த சாரத்தை அறிந்த பெரியார், அவரிடம் முத்துராமலிங்கத்திற்குப் பக்தி உண்டாயிற்று.  உகந்தலிங்க சுவாமிகள் அவருக்கு வேதாந்த நூல்களைப் பாடம் கூறி வந்தார்.

ஒரு சமயம் இளைஞனாக இருந்த முத்துராமலிங்கத்தைப் பார்த்த வடநாட்டு யோகி ஒருவர், "இவன் உலகத்துக்கே உபதேசிக்கப் பிறந்தவன்" என்றாராம்.  அதுமுதல் அனைவரும் அவரை ஆண்டவர் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

வேதாந்த நூல்கள் பல கற்றபின் கடைசியாக ஞான வாசிட்டம் படித்துப் பூர்த்தி செய்வது முறை.  வசிஷ்ட முனிவர் ஶ்ரீராமபிரானுக்கு உபதேசித்ததன் சாரம் இந்த நூல்.  வாசிட்டம் படித்த பின்னர் குருவுக்கு தக்ஷிணை கொடுத்து மரியாதை செய்து அவர் அனுக்ரஹம் பெற வேண்டும்.  ஆண்டவர் தம் தந்தையிடம் குரு தக்ஷிணைக்குப் பொருள் கேட்டார்.  தகப்பனார்  காதில் விழாத மாதிரி இருந்தார்.  கோபம் கொண்ட ஆண்டவர், "காது செவிடாகி விட்டதா?" என்று கேட்டார்.  அந்த விநாடி முதல் தந்தைக்குக் காது கேட்கவில்லை. பிறகு உகந்தலிங்க சுவாமிகள் கூறியபடி ஆண்டவர் திருநீறு கொடுக்கவே மறுபடியும் காது கேட்க ஆரம்பித்தது.

இப்படி இறைவன் அருளைப் பெற்ற ஆண்டவர் காரைக்குடியிலிருந்த போது கழனிவாசல் தலத்திலுள்ள அருள்மிகு நெல்லையம்மை, கொற்றவாளீசர் இருவரையும் வழிபடுவது வழக்கம்.  ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பகுதியில் ஏழகப் பெருந்தெரு என்ற வணிகப் பெருமக்களின் குடியிருப்பும் அவர்களுக்குப் பாதுகாப்பாக ஒரு படையும் இருந்தது.  இந்தப் பகுதியில் பல ஆலயங்கள் இருந்தன.  அவற்றுள் ஒன்று கொற்றவாளீசர் கோவில்.  வீரசேகர பாண்டியன் என்ற அரசன் இப்பகுதியில் ஆண்டு வந்தான்.  வேட்டையாடச் சென்றபோது அவனுடைய வாள் தொலைந்து போய் விட்டது.  தேடிப் பார்த்தபோது ஒரு சிவலிங்கத்தின் அருகில் அது கிடைத்தது.  மனம் மகிழ்ந்த பாண்டியன் ஈசனுக்குக் கோவில் எழுப்பினான். ராஜகட்கபரமேசுவரர் என்றும் கொற்றவாளீசுவரர் என்றும் அவருக்குப் பெயர் உண்டாயிற்று.

இந்தக் கோவில் நாளாவட்டத்தில் சிதிலமடைந்து மக்கிய கீத்துக்களால் கூரை வேயப்பட்டிருந்தது.  ஒருநாள் ஆண்டவர் அங்கே இருந்தபோது இடி மழையுடன் காற்று வீசவே கூரை விழுந்துவிட்டது.  அப்போதே அவர் நெல்லையம்மனுக்கும் கொற்றவாளீசர்க்கும் கருங்கல் திருப்பணி செய்யச் சங்கல்பம் செய்து கொண்டிருக்க வேண்டும்.  இந்த எண்ணத்தை மிக உன்னதமான முறையில் அவர் நிறைவேற்றினார்.

கோவிலருகிலேயே வேதாந்த மடம் நிறுவி சாதுக்கள் எந்தவித விசாரமும் இன்றி வேதாந்த  பாடங்கள் கேட்டுப் பயனடையவும் தமிழ்நாடெங்கும் ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை பரவவும் வகை செய்தார்.

ஒருவருக்குப் பின் ஒருவராகக் கோவிலூர் மடத்துப் பீடாதிபதிகளாக விளங்கிய ஐந்து மடாதிபதிகள் காலத்தில் திருப்பணிகள் நடைபெற்று இந்தக் கோவில் மிகவும் அழகாக விளங்குகிறது.  திருக்குளம், நீராழி மண்டபம், மாட வீதிகள், பாடசாலை, குடியிருப்பு வீடுகள், ஆண்டவர் பின் வந்தவர்களுடைய அதிஷ்டானக் கோவில்கள் என்று விரிவடைந்து பொலிவு பெற்றது கோவிலூர்.

கோவிலூரில் ஐந்தாவது பட்டத்தில் விளங்கிய திருக்களர் ஆண்டவர் காலத்தைப் பொற்காலமென்று பாராட்டிப் புகழ்கிறார்கள்.  ஆண்டவர் தொடங்கிய திருப்பணிகளை நிறைவேற்றியது இந்த மகானே என்றும் கூறுகிறார்கள்.  மலாயா நாட்டில் வாழ்ந்த நகரத்தார் பெருமக்கள் இவருடைய காலத்தில் கோவிலுக்குப் பொருளை வாரி வழங்கினார்கள்.  நித்திய பூஜைகளும், ஆடிப் பூர உற்சவமும் குறைவின்றி நடைபெறச் செய்ததோடு 1908 ஆம் ஆண்டில் கும்பாபிஷேஹமும் செய்து வைத்தார்.  அப்போது சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஶ்ரீ சச்சிதானந்த சிவ அபிநவ நரசிம்ம பாரதி அவர்கள் தாமே நேரில் வந்திருந்தார்கள்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 20, 2014, 7:21:44 AM1/20/14
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

2014/1/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>

வேதாந்த நூல்கள் பல கற்றபின் கடைசியாக ஞான வாசிட்டம் படித்துப் பூர்த்தி செய்வது முறை.  வசிஷ்ட முனிவர் ஶ்ரீராமபிரானுக்கு உபதேசித்ததன் சாரம் இந்த நூல்.  வாசிட்டம் படித்த பின்னர் குருவுக்கு தக்ஷிணை கொடுத்து மரியாதை செய்து அவர் அனுக்ரஹம் பெற வேண்டும்.  ஆண்டவர் தம் தந்தையிடம் குரு தக்ஷிணைக்குப் பொருள் கேட்டார்.  தகப்பனார்  காதில் விழாத மாதிரி இருந்தார்.  கோபம் கொண்ட ஆண்டவர், "காது செவிடாகி விட்டதா?" என்று கேட்டார்.  அந்த விநாடி முதல் தந்தைக்குக் காது கேட்கவில்லை. பிறகு உகந்தலிங்க சுவாமிகள் கூறியபடி ஆண்டவர் திருநீறு கொடுக்கவே மறுபடியும் காது கேட்க ஆரம்பித்தது.

“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது“
என்ற திருக்குறள் நினைவிற்கு வருகிறது.

தங்களது பதிவின் வழியாகக் கோவிலூர் மடம் பற்றிய செய்திகளை அறிந்துவருகிறேன்.
நன்றி.

அன்பன்
கி.காளைராசன்

Geetha Sambasivam

unread,
Jan 23, 2014, 4:45:10 AM1/23/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூரை நெருங்கும்போதே இரு உயரமான ரதம் போன்ற மண்டபங்கள் தெரிகின்றன.  அங்கிருந்து பார்த்தாலே தூரத்தில் கோபுர தரிசனமாகிறது. அருகில் செல்லச் செல்ல மற்ற கோபுரங்களும் புலனாகின்றன.  கோவிலெதிரே எட்டுப்பட்டை வடிவத்துடன் கூடிய நீராழி மண்டபமும் தெப்பக் குளமும் சில சிறுவர்கள் நீந்தி விளையாடுகிறார்கள்.  குளத்தின் தெற்கு வீதியில் கோவிலூர் மடம்.  வடக்கில் வீடுகள்.  கிழக்கில் தென்னை மரங்கள்.  அமைதி நிலவுகிறது.  ஞானத் தேட்டமுடைய தபோதனர் உறையுமிடம் அல்லவா?

சுதன்மையின் மகளாக வந்து தயிர் சாதம் விரும்பி உண்ட பெருமாட்டியான நெல்லையம்மன் சந்நிதியில் நிற்கிறோம்.  கோவிலூர்ப் புராணம் இந்தத் தேவியை சத்திய ஞானானந்த ரூபி என்றும், அத்வைத சொரூபி என்றும் புகழ்கிறது.

பளபளவென்று இழைத்த கருங்கற்களால் கட்டப்பட்ட கருவறைகள் அதைச் சுற்றி நீர் நிரப்புவதற்காக ஓடை, வேனில் காலத்தில் அம்மை அப்பன் இருவருக்கும் குளிர்ச்சியாக இருக்க நீர் நிரப்புவார்களாம்.  தளத்தில் இத்தாலி தேசத்து மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆடிப்பூர உற்சவத்தின் கடைசி நாள். திருக்கல்யாண மகோத்சவம் நடக்கப் போகிறது.  தேவிக்கு அலங்காரம் நடைபெறுகிறது.  மடத்திலிருந்து மரப்பெட்டியொன்று வருகிறது  திரு செல்லமணி குருக்கள் அதைத் திறக்கிறார்.  அம்பாளுடைய கவசம்.  குமுத மலர்க்கரமும், திருவடிகளும் சாத்தி, கண்டமாலை ஒட்டியாணம் அணிவித்து, புருவத்தில் சந்தனம் இட்டு, மூக்குத்தி புனைந்து மலர் மாலைகளைச் சூட்டியதும் புது மணப்பெண்ணாகவே திகழ்கிறாள்.  குத்துவிளக்குச் சுடர் விட அருட்சுடராக அவள் நிற்கும் அழகு இதயத்தை மலரச் செய்ட்கிறது.

உற்சவமூர்த்திகள் மகா மண்டபத்தில் வீற்றிருக்கிறார்கள்.  முதல் நாள் கைலாச வாகனத்தில் தவமிருந்து இறைவன் தரிசனம் பெற்ற ஆடிப்பூர அம்மனுக்கு அலங்காரம் தொடங்குகிறது.  நீலப்புடவையும் முழுக்கை ரவிக்கையும் அணிந்து அம்மன் காத்திருக்கிறாள்.

புருவமெழுதி சிரத்தில் முடியமைத்தாயிற்று.  முழங்காலை அணைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் அம்மன்.  ஆபரணப் பெட்டி வருகிறது.  ஆகா!  திவ்ய ஆபரணங்கள் ஜொலிக்கின்றன.  மடத்துத் துறவி ஒருவர் ஒவ்வொன்றாக எடுத்துத் தருகிறார்.  அவற்றை அணிவித்துத் தலை கிரீடம் சூட்டியதும் ஆஹா! மணப்பெண் களை வந்துவிட்டது! கடைசியில் பொற்கிளிகளைக் கரத்திலும் புயத்திலும் அமர்த்துகிறார்.  அடடா! இந்தக் கிளிகளின் அழகை விவரிக்கவே முடியாது.  அலகிலிருந்து மரகத மணி ஊஞ்சலாடுகிறது.

மணவாளரான ஸோமாஸ்கந்தனைப் பார்ப்போம்.  பொன் இழையால் கரை போட்ட பட்டு அணிந்து  மான் மழுவேந்தி அமர்ந்திருக்கிறார்.  சிரத்தில் கறுப்புத் துணி சுற்றி, கொம்பினால் இழைத்த திருமுடியைச் சூட்டுகிறார்.  தேவாதி தேவன் அணியும் மகுடம்.  என்ன கனம்!

அரிய வேலைப்பாடமைந்த மாங்காய் மாலை.  பச்சை மரகதம் ஒளி சிதற பலத்த வைரமிழைத்த பதக்கம்.  காசு மாலை, பாகம் பிரியாளான உமையும் காசுமாலை பதக்கங்கள் அணிந்த பொன்னாடை புனைந்தவளாய் ரத்தினத் திருமுடி இலங்க மெல்லிய புன்னகையுடன் அருகே அமர்ந்திருக்கிறார்.

சீர் வரிசைகள் வந்தாயிற்று.  பருப்புத் தேங்காய் வைத்தாயிற்று.  வைரத் திருமாங்கல்யத்தைக் காட்டினார்கள்.  உலகநாயகி அணியும் மங்கல ஆபரணம் காண இன்று நம் கண்கள் கொடுத்து வைத்திருக்கின்றன.

வேதம் முழங்க மறையோர் அக்னி வளர்க்க மணியோசைகள் ஒலிக்க, மேளம் முழங்க திருமாங்கல்ய தாரணம் ஆகிவிட்டது.  ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம்.

சகல கல்யாண குணங்களும் நிரம்பப் பெற்று மஹாதேவனுக்கும் நித்ய கல்யாணிக்கும் நடைபெறும் திருமணம் சகல ஜீவராசிகளுடைய திருக்கல்யாணமும் இதில் அடங்கும்.

இந்த ஆனந்தத்தில் நாம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும்போதே தீபாராதனை தொடங்குகிறது.  அலங்கார தீபக் கால்கள் கலையழகுடன் செய்யப்பட்டவை.  அடுக்கு தீபமும், நாக தீபமும், ரிஷப தீபமும்,கலச தீபமும் எந்தக் காலத்திலோ வெள்ளியில் கழங்கு கழங்காகச் செய்யப்பட்டவை. ஒவ்வொன்றாக ஏற்றி தீபாராதனை செய்யும்போது இறைவனும், இறைவியும் நேரில் காட்சி தருவதாகவே பிரமை ஏற்படுகிறது.

கேரளத்தில் ஒரு கோவிலுக்குச் சென்றிருந்த போது அன்பர் ஒருவர் உங்கள் தமிழ்நாட்டுக் கோவில்கள் எல்லாம் பொருட்காட்சி சாலை மாதிரி இருக்கிறது.  கலை அம்சங்களில் கவனம் ஈர்க்கப் படுகிறது.  எங்கள் கோவில்கள் எளிமையாக இருக்கின்'றன.  இங்கே சுவாமி தான் முக்கியம்.  அமைதி தவழும் சூழ்நிலை தியானம் செய்வதற்கு உதவும்." என்றார்.

தமிழ்நாட்டில் கோவிலை அழகு மயமாகச் செய்வதற்கும், தங்கள் கைவண்ணங்களை ஒவ்வொரு துறையிலும் கலைஞர்கள் காட்டுவதற்கும் ஒரு முக்கியமான காரணம் இருப்பதாகப் படுகிறது.  கோடிக்கணக்கான அழகுப் பொருட்களைப் படைத்த ஈசுவரனுக்கு நமது முயற்சியில் எது தலை சிறந்ததோ அதை அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆவல் எழுவது இயல்பே அல்லவா?  இந்த ஆசையே கலைச்சிறப்பு மிக்க கோவில்களைக் கட்டவும், திவ்விய ஆபரணங்களைச் செய்து சாத்தவும் இசையை அர்ப்பணிக்கவும் நிருத்யம் செய்து காட்டவும் உந்தியிருக்க வேண்டும்.

இறைவனுடைய சிருஷ்டியில் உயர்ந்த நீரையும், நெருப்பையும் மலரையும், மணத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பது போல மனிதனின் படைப்பில் தலை சிறந்தவற்றையும் கோவில்களில் ஈசுவரார்ப்பணம் செய்வதில் பெருமிதமடைந்திருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் தமிழ் நாடெங்கிலும் காணப்படும் சிற்பக் கலையழகு மிளிரும் கோவில்களைக் கட்டி விழாக்கள் நடத்தும் வழிமுறைகளை வகுத்திருக்கவே முடியாது. 

காரைக்குடியில் மகர் நோன்புத் திடலில் நடக்கும் அம்பு போடும் பெருவிழாவைக் காண இரு கண்கள் போதாது.  கோவிலூரிலிருந்து கொற்றவாளீசர் ரிஷப வாகனத்தில் முதல் நாளிரவே புறப்பட்டுக் காரைக்குடி செல்லுவார்.

"பவனி வந்தனரே--மழுவிடை-- பவனை வந்தனரே!
தடுப்பதொரு கரம் கொடுப்பதொரு கரம்
தரித்த சடர் மழு விரித்ததொரு கரம்
எடுத்த சிறு மறி பிடித்ததொரு கரம்
இலங்கும் அணி பணி துவலங்கவே!
அடுத்த ஒரு புல கொடுத்த சோமனும்
ஆனை கொடுத்த விதானச் சேலையும்
உடுத்த திருமருங்கசைய மலரயன்
கொடுத்த பரி கலம் இசையவே!
பவனி வந்தனரே!

என்ற திரிகூட ராசப்பகவிராயரின் திருவுலா வருணனை அப்படியே பொருந்தியிருப்பதைக் காண்கிறோம்.

மறுநாள் தசமியன்று மாலை காரைக்குடி நகரச் சிவன் கோவில் சுவாமி, கொப்புடையம்மன் கோவிலில் குடியிருக்கும் நாயகி, பெருமாள் கோவிலிலிருந்து திருமால் எல்லோரும் தலைப்பாகையும் இடுப்பில் உடைவாளும் அணிந்து கையில் வில்லேந்திப் பகைவர்களை அழிக்கக் குதிரை வாகனத்தில் புறப்படுவார்கள்.  நான்கு சுவாமியும் மகர் நோன்புத் திடலுக்கு வந்ததும் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கும்.  குதிரைகள் சுற்றிச் சுற்றி வருவதும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் ஜனங்கள் அங்குமிங்கும் ஓடுவதும் யுத்தம் நடப்பது போலவே பிரமை தட்டும்.  கடைசியாக எல்லா சுவாமியும் வரிசையாக நிற்கும்போது ஒரே சமயத்தில் தீபாராதனை செய்வார்கள்.  பதினாயிரக் கணக்கான மக்கள் கன்னத்தில் போட்டுக் கொள்வதைப் பார்ப்பதே  ஒரு அனுபவம்.

தற்போது கோவிலூர் ஆதீனகர்த்தராக ஶ்ரீலஶ்ரீ ராமநாத ஞான தேசிக சுவாமிகள் இனிய இயல்புகள் அமையப் பெற்றவர்.  காளையார் கோவில் ஶ்ரீ அருணாசல சுவாமிகளிடம் பயின்றவர்.  காளையார் கோவில் மடம், சிதம்பரம் கோ.சித.மடாலயம், மதுரை குட்டைய சுவாமிகள் மடாலயம் முதலியவற்றுக்கு ஆதீனகர்த்தாவாக இருந்து நிர்வாக்த் திறன் பெற்றவர்.  காசி யாத்திரை செய்ததோடு பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்தவர்.  இவர்களுடைய ஆளுகையில் கோவிலூர் இன்னும் பெருமிதமுற்றுத் திகழும் என எதிர்பார்க்கலாம்.

கோவிலூரில் நெல்லையம்மன் சந்நிதி எதிரேயுள்ள மகா மண்டபம் சிற்ப விசித்திரங்களுடன் கூடியது.  ஒரே கல்லில் செய்த தூண்களில் அதிசயிக்கும்படியான சிற்பங்களைக் காண்கிறோம்.

ஒரு தூணில் சரஸ்வதி தேவி வீணை வாசிக்க வருகிறாள்.  இன்னொரு தூணில் சாரதை அலங்கார பூஷிதையாக தரிசனம் தருகிறாள்.  ஊர்த்தாண்டவ நடராஜா, அவர் பாதங்களுக்கருகே காரைக்கால் அம்மையார், குடமுழா வாசித்துக் கொண்டே கரங்குவித்த நிலையில் பிரும்மா, மீனாட்சி கல்யாண சிற்பம்.

எல்லாவற்றையும் விட நமது கருத்தைக் கவர்ந்தது, மனத்தை உருக்குவது ஶ்ரீமத் ஆண்டவர் அம்பாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் நிலையிலுள்ள சிற்பந்தான்.  வருபவர்களுக்கெல்லாம் சரணாகதி தத்துவத்தை விளக்கும் சிற்பமாக இது விளங்குகிறது.  ஞானத்தை விட பக்தியே எளிது.  பக்தி செய்தாலே முக்தி பெறலாம் என்று நம்மைப் போன்றவர்களுக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது!  ஆதி சங்கரர் பகவத் பாதாளும் பக்தியினால் இன்னும் எளிதில் ஈசுவர அனுக்கிரகத்தைப் பெறலாம் என்று தானே போதித்தார்.  சாத்திரங்களையெல்லாம் படித்து ஞானக் கடலாக விளங்கினாலும் பக்தியில் தான் இந்தப் பிறவியிலேயே சுகம் இருக்கிறது என்று கூறாமல் கூறுகிறார் ஆண்டவர்.

ஆனந்தி. 

Geetha Sambasivam

unread,
Jan 26, 2014, 5:27:51 AM1/26/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
சிற்பச் சிறப்பு மிக்க திருக்கோயில்

கம்பன் அடிப்பொடி

கோவிலூர் என்பது வனப்பு மிக்க ஒரு சிற்றூர்.  கட்டிடக் கலையில் துறை போக்கியவர்கள் எல்லாம் கண்டு மகிழ்ந்து வியந்து பாராட்டும் மேம்பாடு, நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அழகும், சிற்பச் செறிவும் நிறைந்த திருக்கோயில், கண்கவர் மைய மண்டபத்துடன் கூடிய, பேரழகு பிலிற்றும் திருக்குளம்; நேர்மையும், செம்மையும் கூடிய மாட வீதிகள்; கட்டிடப் பொலிவின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் நாற்புறமும அமைக்கப் பெற்ற கட்டிடங்கள் அல்லது சுவர்கள்.  பற்றாகன்ற பண்பினர் தங்கி, ஓதி அவனருள் நாடி, அமைதியுள் ஆழ்ந்து நற்றவம் புரி நன்மடம், இவை எல்லாம் சேர்ந்தது தான் கோவிலூர்.

இப்பொழுது உள்ள கோவிலூர் என்பது தமிழ்நாட்டில் 10 ஆவது நூற்றாண்டில் மிகப் பிரபலமாக இருந்த கழனிவாயில் என்ற ஏழகப் பெருந்தெருவின் ஒரு பகுதியாகும்.  இந்த ஏழகப் பெருந்தெருவில் பல ஆலயங்கள் அன்று பிரபலமாக விளங்கின.  அவற்றுள் கொற்றவாள் ஈசர் கோயில் என்னும் ஆலயமும் ஒன்று மற்றொன்று ஏழகப் பெருமாள் விண்ணகரம்.

இவை அல்லாமல் கொற்றவை கோயில்கள் சிலவும் இங்கு இருந்தன.  இன்றைய தினம் பிரபலமாக உள்ள காரைக்குடி நகரம் இதனுடைய ஒரு பகுதியே ஆகும்.

இன்று வரலாற்றுப் பெருமை மிக்கதும், மிக்க வீரம் செறிந்ததுமான ஏழகப்பெரும்படை இங்குதான் இருந்தது.  அந்தப் பெரும்படைதான் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் நடைபெற்ற பெரும்போரில் சதுர்வேதமங்கலம் என்று இன்று வழங்கும் மட்டியூருக்குப் பக்கத்தில் பொருதி சோழப்படைக்குப் பெருஞ்சேதத்தை உண்டாக்கியதாகும்.  இந்தப் படை அக்காலத்து முறைப்படி தன வணிகர்களைச் சார்ந்து அவர்களால் பேணிப் பரிபாலிக்கப்பட்ட படையாகும்.

இவ்வாறு வரலாற்றுப் பெருமை மிக்க ஊரில் ஏற்கெனவே இருந்த சிவபெருமானுக்குப் பத்தாம் நூற்றாண்டில் இருந்த வீர பாண்டியன் என்னும் மாவீரம்மிக்க மன்னன் தன்னுடைய கொற்றவாள் தொலைந்து போனது பிறகு கிடைக்க அருள் புரிந்ததற்காக ஒர் ஆலயம் எடுப்பித்து அந்தப் பெருமானுக்குக் கொற்றவாள் ஈசர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.

அந்தச் சிறு ஆலயம் பலவகையில் பழுது பட்டிருந்ததை எண்ணி மனம் வருந்திய கோவிலூர் ஆண்டவர் என்று புகழ் பெற்ற ஶ்ரீலஶ்ரீ முத்துராமலிங்க ஞான தேசிக சுவாமிகள் மிக்க சிரத்தை எடுத்துக் கொண்டு அற்புதமான இந்த ஆலயத்தை அமைப்பதற்கு அடிக்கோலி ஏராளமான பொருட்செலவில் ஒரு பகுதியை நிறைவேற்றி முற்றிலும் நிறைவேறுமுன் அவர்கள் விதேக முக்தி அடைந்தார்கள்.

அவர்களுக்குப் பிறகு பீடாதிபதிகளாக வந்த ஶ்ரீலஶ்ரீ துறவு சுவாமிகளும் ஶ்ரீலஶ்ரீ கருணாநிதி சுவாமிகளும் தொடர்ந்து திருப்பணியை நடத்தி வந்தார்கள்.

திருக்களர் ஆண்டவர் என்று பாராட்டப்பெறும் ஶ்ரீலஶ்ரீ வீரப்ப ஞான தேசிக சுவாமிகள் மேலும் திருப்பணியை விரித்துத் திருக்குளம், மைய மண்டபம், திருவீதிகள், ரதமேருக்கள், ரத கூடங்கள் ஆகியவற்றையும் அமைத்துப் பிற்காலத் திருப்பணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக இக்கோவிலை நிர்மாணித்தார்கள்.  அவர்கள் காலத்தில் அதாவது 1908 இல் மிகக் கோலாகலமாகத் திருக்குட நீராட்டு விழா நடைபெற்றது.

வேதம், உபநிடதம் முதலான வைதீக சமய நூல்களை எல்லாம் சிக்கறத் தெளிந்து, அத்துவித உண்மைகளை அற்புதமாக உணர்த்தும் வேதாந்த சாத்திரங்களில் எல்லாம் மேதா விலாசம் பெற்று தேவராதி தோத்திரப்  பனுவல்களில் தோய்ந்து, அன்பும் அறிவும் செறிந்து குளிர்ச்சி மிக்க ஒளியான தண்கதிர் பரப்பிய ஞான பானுவாகத் திகழ்ந்தவர்கள் திருக்களர் ஆண்டவர் அவர்கள்..

தத்துவ சாத்திர, தோத்திரக் கடலில் மட்டுமின்றி பயிர்க்கலை, தொழிற்கலை, கட்டிடக் கலை சிற்பக் கலை முதலான பிற பல கலைகளில் எல்லாம் தோய்ந்து முக்குளித்து முத்தெடுக்கும் பேராற்றல் பெற்றுப் பல்சுவைச் செம்மலாக ஒளிர்ந்த பெருமை திருக்களர் ஆண்டவர் அவர்களுக்கே உரியது. அந்த அறிவின் விளக்கமே கோவிலூரின் அமைப்பு. 

(தொடரும்)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 27, 2014, 6:53:43 PM1/27/14
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

2014-01-26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஏழகப் பெருமாள் விண்ணகரம்.

இவை அல்லாமல் கொற்றவை கோயில்கள் சிலவும் இங்கு இருந்தன.  இன்றைய தினம் பிரபலமாக உள்ள காரைக்குடி நகரம் இதனுடைய ஒரு பகுதியே ஆகும்.

இன்று வரலாற்றுப் பெருமை மிக்கதும், மிக்க வீரம் செறிந்ததுமான ஏழகப்பெரும்படை இங்குதான் இருந்தது.  அந்தப் பெரும்படைதான் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் நடைபெற்ற பெரும்போரில் சதுர்வேதமங்கலம் என்று இன்று வழங்கும் மட்டியூருக்குப் பக்கத்தில் பொருதி சோழப்படைக்குப் பெருஞ்சேதத்தை உண்டாக்கியதாகும்.
அருமையானதொரு வரலாற்றுப் பதிவு.

காரைக்குடி-திருப்பத்தூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் 
உள்ளது சதுர்வேதமங்கலம்.
இங்குள்ள சிவன் கோயிலில் இதுதொடர்பான கல்வெட்டு ஒன்று உள்ளது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

சிரமம்பாராமல் தட்டச்சு செய்து வெளியிடுகின்றீர்கள்.
தங்களது பணி சிறக்க வாழ்த்துகள்.

அன்பன்
கி.காளைராசன்

meenavan2

unread,
Jan 27, 2014, 11:14:30 PM1/27/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt

நண்பர் காளை அவர்களே
பாண்டிய மன்னனின் ஏழகப்பெரும் படையின் ஒரு பிரிவு கோவிலூரில் இருந்ததாக ஒரு குறிப்பை எழுதியுள்ளீர்கள்.இராம நாத
தேசிகர் காலத்தில் நிகழ்ந்த திருக்குட நீராட்டின் போது வெளியிட்ட அவர் ஏழகப் பெருமாள் விண்ணகரம் பற்றி கல் சொன்ன
கதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்கள்.அதனை எழுதி வந்த போது அவர் சொன்ன கருத்து.

பாண்டியர்களின் ஆபத்துதவிப் படைகள் என ஏழு படைப்பிரிவுகள் ஏழு தெருக்களில் இருந்தன.ஆதலால் அதனை ஏழகப் பெருந்
தெரு என்றழைத்தனர்.ஆபத்துதவிப் படைகள் இருக்குமிடத்தில் சிவன் கோவிலும் திருமால் கோவிலும் இருக்கும்.அத்துடன்
கொற்றவை கோவில்களும் இருக்கும்.அதுபோல் கழனி வாசற் பகுதியில் அய்யுளி அம்மன் என்ற கொற்றவை கோவில் உள்ளது.
என்ன காரணம் என்று தெரியவில்லை.சிதைநத நிலையில் உள்ள விண்ணகரம் இதுவரை யாராலும் திருப்பணி செய்யப் பெற
வில்லை.பல ஆலயத் திருப்பணிகள் செய்த ஆதீன கர்த்தர்களும் செய்ய முன் வரவில்லை,

நகரத்தார்களின் ஒன்பது கோவில் பிரிவுகளில் ஒரு கோவிலில்  ஏழகப்பெருந்தெரு என்ற சொல்லோடு கோவிலூரின் ஆதிப்
பெயரான வீரபாண்டிய புரம் என்றும் சேர்த்துச் சொல்லப் பெற்றுள்ளது.அவை நகரத்தார் தங்கள் திருமணங்களில்  எழுதும்
ஒப்புதல் பத்திரமான் இசை குடிமானத்தில் எழுதுவர்.அவ்வாறு எழுதுவது ஒரு பிரிவினர் மட்டுமே.அது

1.கேரள சிங்க வளநாடாகிய ஏழகப் பெருந்திருவான வீரபாண்டிய புரத்தில் (வைரவன் கோவில்)

கோவிலூருக்கு வீரபாண்டிய புரம் என்ற பெயரும் உண்டூ

ஏழகப் பெருந்தெரு என்று எழுதுவதே முறையானது.

குறிப்பு - திருநெல்லை கோவிலைக் கட்ட நினைத்த ஆண்டவர் அதற்கெனத் தயாரித்த் வ்ரைபடத்தில் வடமேற்கு மூலையில்
ஓர் இடத்தை ஒதுக்கிக் காட்டியிருந்தார்.ஆனால் கட்டவில்லை.பன்னிரண்டாம் ஆதீனமும் கோவிலூரை உலகறியச் செய்தவரும்
ஆன சீர் வள்ர் சீர் நாச்சியப்ப ஞான தேசிகர் கொற்ற வாளீசர் கோவில் திருப்பணி செய்தகாலை ஆண்டவர் எழுதிய குறிப்பின் படி
பெருமாளுக்கு ஒரு சந்நதியை ஏற்படுத்தினார்.

காப்பியக் கவிஞர்.மீனவன்

On Friday, October 4, 2013 8:40:55 PM UTC+5:30, Suba.T. wrote:
வணக்கம்.

தமிழகத்தின் கோவிலூர் ஆதீனம் நிகழ்த்திவரும் சமூக சமயத்தொண்டினை பகிர்ந்து கொள்ளும் சில விழியப் பதிவுகளை அண்மையில் வெளியிட்டிருந்தோம். 
1. கோவிலூர் ஆலயம் - http://www.youtube.com/watch?v=7NWm8iE1_64
2. கோவிலூர் மடத்தின் ஆதீனகர்த்தர் பேட்டி பகுதி 1 - http://www.youtube.com/watch?v=_AyS-caSqHE
3. கோவிலூர் மடத்தின் ஆதீனகர்த்தர் பேட்டி பகுதி 2 - http://www.youtube.com/watch?v=oS3z72NHsgU
4.  கோவிலூர் ஆதினத்தின் செட்டிநாடு அருங்காட்சியகம் பகுதி 1 - http://www.youtube.com/watch?v=vFQ03XapRwY
5. கோவிலூர் ஆதினத்தின் செட்டிநாடு அருங்காட்சியகம் பகுதி 2 -  http://www.youtube.com/watch?v=v2YON-8xKig

அதன் தொடர்ச்சியாக இவ்வாதீனத்தை அறிமுகப்படுத்தும் தகவல்களின் தொகுப்பாக பல தகவல்களை ஒவ்வொன்றாக இந்த இழையில் பதிந்து வெளியிட உள்ளோம். இப்பதிவுகள் அடங்கிய நூலினை ஆதீனத்தின் திருமடத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது ஆதீனகர்த்தரவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கினார்கள். இந்த நூலில் ஆதீனத்தை அறிமுகப்படுத்தும் பெரிய சிறிய கட்டுரைகளும் பதிவுகளும் அடங்கியிருக்கின்றன. வரலாற்றுப் பதிவு என்றும் இதனைக் குறிப்பிடலாம். இக்கட்டுரைகளை மின்தமிழ் வாசகர்கள் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து இங்கு வெளியிட உள்ளோம். 

இக்கட்டுரைகளைத் தட்டச்சும் பணியை கீதா சாம்பசிவம் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். முதல் பதிவின்  முதல் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது. நவராத்திரி விஷேஷம் தொடங்கும் நன்னாளில் இப்பதிவுகள் தொடங்கப்படுவதை தனி விஷேஷமாகக் கருதுகின்றேன். 

இப்பதிவுகளில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பான வாசகர்களின் கருத்துக்கள் இவ்விழையில் எதிர்பார்க்கப்படுகின்றன. 

சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]

பதிவு 1

தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்

கோவிலூர் ஆதீனத்தின் வேதாந்தப் பரம்பரையில் பனிரண்டாவது பட்டத்தில் அருளாட்சி செலுத்தும் தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் உலக வரைபடத்தில் கோவிலூருக்கு உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்த உத்தமராவார்கள்.  வேதாந்தத்தை யாவருக்கும் பொதுவுடமையாக்கிய புதுமைச் சித்தரான கோவிலூர் ஆண்டவரின் மகன் வழியில் ஆறாவது தலைமுறைப்பேரனான நாச்சியப்ப சுவாமிகள் உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய பெருமான் புகழை உலகெலாம் பரப்பும் உறுதி பூண்டவர்.  வேகமும் விவேகமும் கொண்ட சுவாமிகள் வாழ்க்கை வியக்கத்தக்க நிகழ்ச்சிகளின் தொகுப்பாக விளங்குகிறது.

காரைக்குடிக்கு அருகில் உள்ள மானகிரி என்ற சிற்றூரில் 29--5--1923 இல் கோவிலூர் ஆண்டவரின் குடும்பத்தில் மகன் வழியில் ஆறாவது தலைமுறையில் பேரனாகத் தோன்றினார் நாச்சியப்பர்.  மானகிரியில் திண்ணைப்பள்ளிக்கூடத்திலும் காரைக்குடியில் ஶ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர் உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி கற்றார். அடையாறு பெசன்ட் நினைவுப் பள்ளியில் படித்துப் பள்ளி இறுதித் தேர்வை முடித்து, மாநிலக் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார்.  அப்போழுது கிடைத்த அறிவியல் அறிவு அவர் வாழ்க்கை சிறக்க உதவி செய்தது.  உலகம் போற்றும் கலாக்ஷேத்ரா நிறுவனத்தை 1936-இல் தொடங்கி நடனக்கலைக்கும் இசைக்கலைக்கும் பெருந்தொண்டாற்றிப் பாரத நாட்டின் கலை வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அன்னை ருக்மிணி அருண்டேல் அவர்களின் பேராதரவால் சென்னையில் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் பெற்ற நாச்சியப்பர் மேலை நாடுகளுக்குச் சென்று  கற்று அச்சுக்கலையிலும் நிழற்படக் கலையிலும் நிகரற்றவரானார்.  1957-இல் நியூயார்க்கில் நிழற்படக் கலையைக் கற்று 1963 இல் உலகப் புகழ் பெற்ற கோடக் கம்பெனியில் பணியாற்றினார்.  ஜெர்மனியிலும் லண்டனிலும் நிழற்பட நுட்பங்களைக் கற்றார்.  லண்டன், நியூயார்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் மேடைக்கலை--அரங்க ஒளியமைப்பு ஆகியவை கற்றுத் தேர்ந்தார்.

1944-இல் கலாக்ஷேத்ராவில் தம்மை வளர்த்த ருக்மிணி அருண்டேல் அம்மையாரிடம் நேர்முக உதவியாளராகச் சேர்ந்தார்.  1946-இல்  கலாக்ஷேத்ரா பதிப்பகம் தொடங்கி மரியா மாண்டிசோரி அம்மையாரின் குழந்தைக்கல்வித் திட்டத்துக்கான புத்தகங்களை வெளியிடத் தொடங்கினார்.  1947--இல் கலாக்ஷேத்ராவில் அரங்க நிர்வாகப் பொறுப்பேற்றார்.  ஒளியமைப்பில் புதுமை செய்து புகழ் பெற்றார்.  1953--இல் தம்முடைய 30 ஆவது வயதில் வண்ணப் புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட பெரிய சோதனைச் சாலையை உருவாக்கிப்புகைப்படக் கலையின் மூலம் விளம்பரக் கலையும்  வளர உதவினார்.  1955 முதல் 1972 முடிய கலாக்ஷேத்ராவின் நிர்வாகக் குழுவில் பெரும்பணி ஆற்றினார்.  குவாலியரில் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம், தில்லியில் குமாரசம்பவம், அயல்நாடுகளில் பரதநாட்டியம் என்று உலகம் முழுவதும் கலைப்பணியாற்றச் சென்ற ருக்மிணி அருண்டேல் அவர்கள் குழுவுடன் மேடை நிர்வாகியாகவும், பயண அமைப்பாளராகவும், ஒளியமைப்பு வல்லுநராகவும் சென்று பணியாற்றினார்.  கிழக்கு ஐரோப்பா, இந்தோனேஷியா, காம்போடியா, ஜாவா, பெஜியம், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ்,  ஸ்பெயின் என்று உலக நாடுகளில் இவர் கால்படாத இடமில்லை என்று கூறுமாறு கலாக்ஷேத்ராப் பணி செய்தார்.  1979 முதல்1984 முடிய நியூயார்க்கில் அச்சுக்கலை, நிழற்படக் கலை ஆகியவற்றில் வல்லுநர்களாகத் திகழ்ந்த திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றி உலகப் புகழ் பெற்றார்.  கலாக்ஷேத்ராவின் மதிப்பு மிக்க தூண்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கி, அங்கே மாணவராகவும், உதவியாளராகவும், கலைஞராகவும், அச்சக உரிமையாளராகவும், மேடை நிர்வாகியாகவும், அறக்கட்டளைச் செயலாளராகவும், ஒல்லும்வாரெல்லாம் அறவீனை ஓவாது சொல்லும் வாயெல்லாம் செயவல்லவராகத் திகழ்ந்து , அந்த நிறுவனத்தில் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறக்கச் செய்தார்.

இவ்வாறு சேர்த்த திறமையும் அதிகம்.  சேர்த்த செல்வமும் அதிகம்.  தேடி வந்த புகழும் அதிகம் என்று வாழ்ந்து வந்த சித. நாச்சியப்பரை தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிகராக்கிக் கோவிலூர் ஆதீனத்துக்குக் கொண்டு வர வேண்டுமென்று அன்னை திருநெல்லையம்மை திருவுள்ளம் கொண்டாள்.  இது இவருடைய வாழ்க்கையின் இரண்டாம் பாகம்.  பொன்னைக் கொடுத்த இறைவன் மெய்ப்பொருளும் கொடுக்க நினைத்தான்.  இந்த ஞான வாழ்க்கைக்குப் பன்றிமலை சுவாமிகள் குறிப்புக் காட்டினார்.

1975 ஆம் ஆண்டில் ஆன்மிகச் செல்வர் டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் நாச்சியப்பரைக் காஞ்சி மாமுனிவரிடம் அறிமுகப் படுத்தினார்.  காஞ்சி முனிவர், "நீ நகரத்தார் இல்லையோ!  கோவிலூரார் குடும்பம் என்கிறாய்.  கோவிலூர் மடத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்." என்றார்.  அந்த வாக்கு இருபதாண்டுகளில் பலித்தது.

கல்கியின் திருமகளார் ஆனந்தி ராமச்சந்திரன் அவர்கள் கூறியது போல விதி மாற்றியமைக்கப்பட்டு விட்டது.  கோபால கிருஷ்ண பாரதி பாடியபடி

விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு-- முன்னம்
விட்டகுறை வந்து தொட்டாச்சு

அன்று நந்தனுக்கு நடந்தது இன்று நாச்சியப்பருக்கு நடந்து விட்டது. அதனால் தானே நாச்சியப்ப சுவாமிகள் அமெரிக்காவில் நடராசருக்குக் கோயில் கட்ட எண்ணினார்?  

மக்கள் பிணி தீர்க்கும் இயற்கை மருத்துவராகவும் சிலகாலம் பணியாற்றிய நாச்சியப்பர் மனப்பிணி தீர்க்கும் மருத்துவரானார்.

ஆண்டவர் மரபில் பிறந்த புண்ணியத்தால் மீண்டும் பிரம்ம சபையில் ஆண்டவரே வந்து உட்கார்ந்து விட்டார்.

1995- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் நாள் சிதம்பர செட்டியார் சீதாலக்ஷ்மி ஆச்சியின் திருமகன், ஆண்டவரின் அருட்பேரனாக, வேதாந்த பீடத்தில் வித்தகத் தலைமையேற்று தவத்திரு நாச்சியப்ப ஞான தேசிகராக, மக்கள் போற்ற மனத்துறவும் தவத்துறவும் கொண்டார்.  கோவிலூர் மடத்தின் பொற்காலம் கொற்றவாளீஸரால் எழுதப் பட்டு விட்டது.

"எதிலும் விருப்பமின்றி எவரிடத்தும் பகையில்லாமல், சமநோக்குடன் இருந்துவரும் மகாத்மாவின் பின்னே, அவருடைய பாதத்தின் தூசி என் மீது விழுந்து நான் உய்ய மாட்டேனா என்று ஆவலில் நான் போய்க் கொண்டிருக்கிறேன்." என்று பாகவதத்தில் கண்ணன் கூறியபடி பாரதநாட்டுக்கு இன்னொரு துறவு--தமிழகத்துக்கு ஒரு விவேகானந்தர்-- கிடைத்துவிட்டார்.  சனாதன தர்ம உலகப் பல்கலைக் கழகம் தமிழகத்தில் நிறுவப்பட வேண்டும் என்று இறைவன் தீர்மானித்துவிட்டான்.  கோவிலூர் ஆண்டவர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் (Koviluur Andavar Deemed University) தமிழகக் கோயிற்கலைகளையும் பண்பாட்டையும் சிவநெறியையும் வளர்க்கும் வகையில் தோன்ற இருக்கிறது.

இவர்கள் ஆற்றி வரும் பணிகள் விளக்கமாக எழுதப்பட்டுள்ளன.

கோவிலூர் ஆதீனம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் நாச்சியப்ப ஞானதேசிகர் தெளிவான சிந்தனையோடும் தொலைநோக்குடனும் திட்டங்களை வகுத்துச் செய்து வருகிறார்கள்.

தாம் பட்டத்திற்கு வந்ததும் முதற்காரியமாக, குழந்தைகள் பள்ளி தொடங்கினார்கள்.  சிறு வயது முதலே குழந்தைகள் நல்ல கல்வி கற்க வேண்டும்.  குழந்தைகளே சமுதாயத்தின் பெருமைக்குரிய சொத்து--மூலதனம்--தூண்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் குழந்தைகள் பால் பேரன்பும் கொண்டவர்கள்.  ஆதலால் கல்விப் பணியைத் தலையாய பணியாகக் கருதுகிறார்கள்.  ஆகவே தான் இளைஞர்கள் உயர்கல்வி பெற்று உயர்ந்தால் சமூகமும் தானே உயர்ந்து நன்னிலை அடையும் என்பதனால் பெரும் தொகை ஒதுக்கி உதவுகிறார்கள்.

எந்த நாகரிகத்துக்கும் பண்பாட்டிற்கும் அது சார்ந்து நிற்கும் மரபுகளும் கோவில்களும்தான் அடிப்படை.  எல்லா அறங்களும் கலைகளும் கோவிலிற்தான் நடத்தப்பட்டன.  எனவே கோவிலைக் காப்பாற்ற வேண்டும்.  அது சார்ந்த கலைகளைக் காப்பாற்ற வேண்டும்.  கோவில்கள் நடைபெற வேண்டும் எனில் அதற்குரிய சிப்பந்திகளூம் சடங்குகளை நிறைவேற்றுகிற கலைஞர்களும் தேவை என்பதால் நசிந்து வரும் அனைத்துக் கலைகட்கும் புத்துயிர் ஊட்டி வளர்ப்பதற்காகவே கோவிலூரில் கலைகளுக்கான கல்லூரிகள், பெரும் பொருட்செலவில் நடத்தி வருகிறார்கள்.  அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பல்கலைக் கழகமாக நிறுவ வேண்டும் என்ற கனவும் சாமிகட்கு உண்டு.  அது நிறைவேறும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

உணவின்றி யாரும் துயர்படக் கூடாது என்ற மனித நேய உள்ளத்தால் ஆதரவில்லாத அனைவர்க்கும் உதவி வருகிறார்கள்.  நமது பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் சமுதாயமே நசிந்துவிடும் என்ற உனர்வால் பெண்கள் திருமணத்திற்கு தாராளமாக உதவுகிறார்கள்.

கோவிலூர் சார்ந்த எல்லா மடங்களும் தற்சார்புடையதாக, சொந்தக்காலில் நிற்கக் கூடியதாக காலகாலத்திற்கும் வளர்ந்து உயரக்கூடிய நிலையில் இருக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தினால் எல்லா மடங்களிலும் திருமண மண்டபமோ, கடைகளோ கட்டி நிரந்தர வருவாய்க்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

எல்லா மடங்கட்கும் வருகின்ற அன்பர்கள் தங்கித் தரிசிக்கவும் உணவு உண்ணவும் வசதியான தங்கும் அறைகள் கட்டி எல்லா மடங்களிலும் அன்னதானம் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

மடத்தைச் சார்ந்த, மடத்தின் பொறுப்பில் உள்ள கோவில்கள், அதிஷ்டானங்கள் யாவற்றையும் ஒவ்வொன்றாகச் செப்பனிட்டு புதிய மெருகுடன் வசதிகளையும் கூட்டிக் கும்பாபிஷேஹங்கள் செய்து வருகிறார்கள்.  ஒவ்வொரு கோவிலும் பனிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறைஅ பழுது நீக்கவும் கும்பாபிஷேஹங்கள் நடத்தவும் வேண்டுமென அருள் ஆணை இட்டுள்ளார்கள்.

கோவிலூரை ஒரு கல்வி நகரமாக ஆக்கப் பெரிதும் விருப்பம் கொண்டுள்ளார்கள்.  செய்யும் எதனையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளவர்கள் ஆதலால், தரமான கல்வி தந்து இளைஞர்கட்கு ஏற்றம் தர வேண்டும் என்பதில் மிகவும் குறியாக உள்ளார்கள்.  அவர்கள் கனவுகள் மிகவும் பெரியவை, சிறந்தவை, அவை யாவும் நிறைவேற ஆண்டவர் அருள் பாலிக்க வேண்டும்.

சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் பொருள் உதவியால் நடைபெற்று வரும் பணிகள் தொடர்ந்து தரப்பட்டுள்ளன.                        

பதிவு 1 தொடரும்..!

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 28, 2014, 12:36:45 AM1/28/14
to mintamil

2014-01-28 meenavan2 <meenav
இராம நாததேசிகர் காலத்தில் நிகழ்ந்த திருக்குட நீராட்டின் போது வெளியிட்ட அவர் ஏழகப் பெருமாள் விண்ணகரம் பற்றி கல் சொன்ன கதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்கள்.
கட்டுரைச் சுருக்கம் தரக் கேட்டுக்கொள்கிறேன். 
 
கழனி வாசற் பகுதியில் அய்யுளி அம்மன் என்ற கொற்றவை கோவில் உள்ளது.
 
இதுவரை சென்றதில்லை. காணவேண்டும். நண்பர் திரு காளைராசனைத் தொடர்புகொண்டு அவருடன் செல்ல எண்ணம்.

என்ன காரணம் என்று தெரியவில்லை.சிதைநத நிலையில் உள்ள விண்ணகரம் இதுவரை யாராலும் திருப்பணி செய்யப் பெற
வில்லை.பல ஆலயத் திருப்பணிகள் செய்த ஆதீன கர்த்தர்களும் செய்ய முன் வரவில்லை,

நகரத்தார்களின் ஒன்பது கோவில் பிரிவுகளில் ஒரு கோவிலில்  ஏழகப்பெருந்தெரு என்ற சொல்லோடு கோவிலூரின் ஆதிப்பெயரான வீரபாண்டிய புரம் என்றும் சேர்த்துச் சொல்லப் பெற்றுள்ளது.அவை நகரத்தார் தங்கள் திருமணங்களில்  எழுதும் ஒப்புதல் பத்திரமான் இசை குடிமானத்தில் எழுதுவர்.அவ்வாறு எழுதுவது ஒரு பிரிவினர் மட்டுமே.அது

1.கேரள சிங்க வளநாடாகிய ஏழகப் பெருந்திருவான வீரபாண்டிய புரத்தில் (வைரவன் கோவில்)
 
இசைகுடிமானம் என்று இருவீட்டார் இசைந்து எழுதும் பிடிமான ஒப்பந்தம் குறித்துத் தனி இழையில் நண்பர்கள் அறியப் பதிவிட வேண்டுகிறேன்.

குறிப்பு - திருநெல்லை கோவிலைக் கட்ட நினைத்த ஆண்டவர் அதற்கெனத் தயாரித்த் வ்ரைபடத்தில் வடமேற்கு மூலையில்
ஓர் இடத்தை ஒதுக்கிக் காட்டியிருந்தார்.ஆனால் கட்டவில்லை.பன்னிரண்டாம் ஆதீனமும் கோவிலூரை உலகறியச் செய்தவரும்
ஆன சீர் வள்ர் சீர் நாச்சியப்ப ஞான தேசிகர் கொற்ற வாளீசர் கோவில் திருப்பணி செய்தகாலை ஆண்டவர் எழுதிய குறிப்பின் படி
பெருமாளுக்கு ஒரு சந்நதியை ஏற்படுத்தினார்.
 
அரிய செய்திகள். பகிர்வுக்கு நன்றி. நேற்றுக் காரைக்குடி வந்தேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Subashini Tremmel

unread,
Jan 28, 2014, 2:37:54 AM1/28/14
to Geetha Sambasivam, மின்தமிழ், valli N, Koviloor Mutt, Subashini Tremmel
கோவிலூர் கோயிலைப் பற்றி அறிமுகம் வழங்கும் நல்லதொரு கட்டுரை.

தொடர் தட்டச்சுப் பணிக்கு கீதாவிற்கு என் நன்றி.

சுபா

2014-01-26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 29, 2014, 4:53:34 AM1/29/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
திருக்களர் ஆண்டவருக்குப் பிறகு, தற்பொழுது பீடாதிபதியாக விளங்கும் ஶ்ரீலஶ்ரீ இராமநாத ஞான தேசிக சுவாமிகளின் பெருமுயற்சியால் இக்கோயிலின் க்ஷீரணத்தாரணத் திருப்பணி தொடங்கப் பெற்றது.  தனவணிகர்கள் தாராளமாக அளித்த லட்சக்கணக்கான அறக்கொடையின் மூலமாக கோயில், திருக்குளம் முதலிய அனைத்தும் முற்றிலும் பழுது பார்க்கப் பெற்று வண்ணம்ம் பூசப் பெற்றுள்ளது.  ஆகம சாஸ்திர ரீதியாக, சிறந்த சிவாசாரியார்கள் பலர் கூடி நான்கு நாள் ஆறு வேளை ஆகம பூஜை செய்து 21--04--1978 வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணிக்கு திருக்குட நீராட்டு விழா சம்பிரமமாக நடைபெற்றது.

பிற்காலக் கோயில்களில் இந்தக் கோயில் அமைப்பைப் போன்ற கோயில் தமிழகத்திலேயே கிடையாது.  கோயிலுக்கு முன்னேயுள்ள திருக்குளத்தின் பொலிவும், அதிலுள்ள மைய மண்டபமும் இதற்கு நிகர்  இதுவே என்று சொல்லத்தக்கவை..

அம்மன் திருவுண்ணாழியும் திருக்கல்யாண மண்டபமும் பூரண சிற்பங்கள் அடங்கியனவாய் முழுதும் பாலிஷ் செய்யப்பட்டிருக்கின்றன.  வரலாற்றுப் பெருமை மிக்க கொற்றவாள் ஈசரும், கயிலாசநாதரும் திருநெல்லை அம்மனும் நித்திய கல்யாணி அம்மனும் உள்ளம் கவரும் மூர்த்திகளாகும்.

பிராகாரங்களுடன் திருமாளிகைப் பத்திகளும் கோயில் மண்டபங்களும் முற்றிலும் மயன்மத நூல் அடிப்படையில் அமைக்கப் பெற்றவை.

ராஜகோபுரங்கள் நாயக்கர் பாணியைச் சார்ந்தவை.  தூண்களில் உள்ள போதிகை முதலியவை நகரத்தார் பாணியைச் சார்ந்தவை.  ஒவ்வொரு தூணிலும் விநாயகர், சுப்பிரமணியர், மீனாட்சி திருக்கல்யாணம், நடராச தாண்டவம், காளி நர்த்தனம் முதலிய பல சிற்பங்கள் இங்கு உள்ளன.  அத்துடன் முன்னாளில் கோயில் எழுப்பிய வீரபாண்டியன் உருநாட்டும், பிற்காலத்தில் இதை இவ்வளவு விரிவாக ஆக்கிய மகான் கோவிலூர் ஆண்டவர் உருநாட்டும் திருநெல்லை அம்மன் சந்நிதியில் தூண்களில் காணப்பெறுகின்றன.

ஒவ்வொரு கோட்டமும், கோட்டத்தில் உள்ள மாடங்கள், கூடுகள், பஞ்சரங்கள், கும்ப பஞ்சரங்கள் முதலியவையும் வேலைப்பாடுகள் மிக்கவை.  அதிஷ்டானத்திலிருந்து கிழீவம் வரையிலும் மிக அழகிய நுணுக்கமான சிற்பத் திறனுடன் விளங்குகின்றன.  இவற்றையெல்லாம் ஆற அமர்ந்து சென்று பார்த்தால் இக்கோயிலின் மதிப்பை இன்று இரண்டு கோடிக்கு மேல் கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வேறு எந்தச் சிவன் கோயிலிலும் இல்லாத முறையில் ஆடவல்லான் என்னும் ந்நடராசப் பெருமான் சந்நிதி சுமார் 200 அடி நீளமுள்ள மண்டபம் உடையதாகப் பெரு வீதியிலிருந்து முற்றும் காணத்தக்கவாறு அமைக்கப் பெற்றுள்ளது. திருமதிலுக்கு வெளியே முகசாலையுடன் அமைந்ததும் வண்ணச் சுதையுடன் கூடியதுமான அழகு மிக்க ராஜகோபுரத்துடனும் கூடிய அமைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Geetha Sambasivam

unread,
Jan 29, 2014, 5:39:45 AM1/29/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூர் திருக்கோயிலின் அமைப்பு

வை. ஜானகிராம ஸ்தபதி, மாமல்லபுரம்

நாட்டுக்கோட்டை நகரத்தாரின் திருத்தலங்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவற்றுள் கோயிலூர் திருத்தலமும் ஒன்றாகும்.

இங்கு அமைந்துள்ள  ஶ்ரீ திருநெல்லை  அம்பாள் உடனமர் கொற்றவாளீசர் ஆலயம் சுவாமி சந்நிதிக் கருவறை நாட்டுக்கோட்டை நகர திருத்தலங்களில் மற்றெங்கும் இல்லாச் சிறப்புடையதாகும்.  கருவறை முக மண்டபம் மஹா மண்டபம் இவை பிற்காலச் சோழர் பாணியை ஒத்த கட்டிடச் சிற்ப அமைப்பை உடையனவாகும்.

அதிஷ்டானம், பாதம், பிரதஸ்தரம் இவைகளின் வர்க்கங்கள் மிகுந்த வேலைப்பாடுடன், சகலவிதமான அலங்கார பூஷணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கருவறை பிரஸ்தர மட்டம் வரை கருங்கற்களாலும், அதன் மேல் அமையப்பட்ட விமானம் செங்கல் சுண்ணாம்பினால் கட்டப்பெற்று 3 தளங்களுடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டு உன்னதமான தோற்றத்துடன் உள்ளது.

இரண்டு கருவறைகளைச் சுற்றிலும் நீராழிபத்தியுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.  கோடைகாலத்தில் இறைவன் இறைவியர்க்குக் குளிர்ச்சியூட்டுவதற்காக இந்த ஏற்பாடு உள்ளது.

 திருநெல்லை அம்பாள் ஆலயம், சோமாஸ்கந்தர் ஆலயம், இவற்றின் கருவறை மேல் மட்டமான பிரஸ்தரம் வரை கருங்கற்களினால் பூரண வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு முழு அளவு மெருகு ஏற்றப்பட்டுள்ளது,  இவ்வாலயத்துச் சிறப்புக்களில் இது குறிப்பிடத் தக்கது.

சுவாமி உள்ள கருவறையின் முன்புறமுள்ள மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கிய வண்ணம் ஆடல் வல்லானின் திருவுருவம் அமையப் பெற்றுள்ளது.  அதன் எதிரே தெற்கு நோக்கிய வண்ணம் 18 அணி ஒட்டித் தூண்களுடன் கூடிய மண்டபம் உள்ளது.  இந்த 18 தூண்களிலும் சுண்டு பாதத்தின் முன்னே யாழிகளுடன் கூடிய தோற்றம் கண்ணையும் கருத்தையும் கவரவல்லது.

அம்பாள் சந்நிதியில் மகாமண்டபத்தின் முன்னே பிராகார பத்தியின் அருகில் 10 தூண்கள் உள்ளன.  இவற்றில் அமைக்கப்பட்ட சிற்பங்களாவன.

வடக்கே உள்ள தூண்களில்

1. மார்க்கண்டேயர்

2.கங்காளநாதர்

3. வீரபத்திரர்

4. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி

5. உமையுடன் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன்

6. மயில் மீது அமர்ந்த வடிவத்தில் ஷண்முகம்

7. வீர சேகர பாண்டியரின் திரு உருவம்

தெற்கே உள்ள தூண்களில்

1. மூஷிக வாகனத்தில் லக்ஷ்மி விநாயகர்

2. கோவிலூர் ஆண்டவர்  தரையில் படுத்து சாஷ்டாங்கமாக  நமஸ்காரம்  செய்வது

3. மீனாக்ஷி கல்யாணத் தோற்றம்.

4. தில்லைக்காளியின் சிற்பம்ம்

5. மீனாக்ஷி திக்விஜய சிற்பம்

6. சாரதாம்பாள், திரு உருவம்

7. சரஸ்வதி சிற்பம்

இந்த விக்ரஹங்கள் சப்த சுவரம் (ஏழு வகை ஓசைகள்) எழுப்பக்கூடிய கற்களைக் கொண்டு வடிக்கப்பட்டவை.  மேற்குறிப்பிட்ட 14 சிற்பங்களும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் திருவுருவ அங்கங்களின் பரிமாணங்கள் மிகச்  சிறப்பான முறையில் செதுக்கப்பட்டுள்ளன.  இவை யாவும்  நாயக்கர் பாணியில் உள்ளது இவ்வாலயத்தின் சிற்பச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்.

நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள நீண்ட பிராகாரங்களில் இரண்டு பக்கங்களிலும் அணி ஒட்டித் தூண்கள் உன்னதத் தோற்றத்துடன் உள்ளன.

மூலத்தானங்களுக்கும் பரிவார தேவதைகளுக்கும் 11 விமானங்களும் 2 சாலா ஹாரமும், கயிலாசநாதர் சந்நிதி மீது சாலா கோபுரமும் நடராசர் சந்நிதி, அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி மூன்றின் மீதும் கோபுரங்களும் அமைந்துள்ளன.

தெற்குப்  பிரகாரத்தின் திருமதில் உட்புறத்தில் 63 நாயன்மார்கள் வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளனர்.

கோயிலின் முன்புறம் கிழக்குத்  திக்கில் சதுரவடிவான தெப்பம் உள்ளது.  அதன் மையப்பகுதியில் நீராழி மண்டபம் 8 பட்டை வடிவில் 16 தூண்களுடன் அமைக்கப்பட்டு அதன் மீது 3 அடுக்குகளுடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டுள்ளது.  இம்மண்டபம் பண்டிகை விருத்த வடிவில் அமையப் பெற்றுள்ளது.  மண்டபத்தின் சுற்றளவு 120 அடி இருக்கும்.  நீர் மட்டத்திற்கு மேல் மண்டபத்தின் உயரம் 45 அடி உள்ளது.  தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றி வந்தால் ஒரு கிலோ மீட்டர் நடந்ததற்குச் சமமாகும்.

நாட்டுக்கோட்டை நகரத் திருத்தலஙக்ளிலே இங்கே ஊருணி நடுவே நீராழி மண்டபம் கவின்மிகு தோற்றத்துடன் அமைந்திருப்பது இவ்வாலய அழகுகளில் சிறப்புடையதாகும்.

ஆலயத்தின் வெளியே சுவாமி கோயிலின் முன்பு கிழக்கேயும் நடராஜர் சந்நிதியின் முன்பு தெற்கேயும் மண்டபங்கள் அமைத்து அதன் மீது சாலாஹாரம் அமைத்திருப்பது சிறந்த வேலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகும்.

விமானங்களிலும் கோபுரங்களிலும், சாலாஹாரங்களிலும், சிவ மூர்த்தங்களும் சிவபுராணச் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

நடராசர் சந்நிதி மீதுள்ள வண்ணக் கோபுரம் தெற்குப் பார்த்துக் காரைக்குடி குன்றக்குடிச் சாலையில் செல்லுவோர் கவனத்தை ஈர்க்கிறது. தக்ஷிணாமூர்த்தி. கோபுரம் தாங்கிகள், புதுமையான வேலைப்பாடுடன் செய்யப்பட்டுள்ள--வாலி சுக்கிரீவன் போர்க்காட்சிகள் ஆகியவை கம்பீரமாக உள்ளன.  கண்ணனின் லீலைகள் கவர்ச்சியான சுதை வேலைகளாக உள்ளன.

சாலாஹாரம் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் 26 தூண்கள் உடையது.  தூணின் உயரம் 12 அடி கொடுங்கை, கோபிகை முதலியவற்றின் உயரம் 2 அடி இருக்கும்.  மண்டபத்தின் பரப்பளவு 750 சதுர அடி.  சாலஹாரத்தில் நடராசர், காளி, ரதி, மன்மதன் முதலிய சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பன.

ஏனைய கோபுரங்களுக்குச் சுனோசெம் பெயின்டு செய்யப்பட்டுள்ளது.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 29, 2014, 7:39:08 AM1/29/14
to Minthamil
படங்கள் எடுக்க வில்லையா?

2014-01-29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

Subashini Tremmel

unread,
Jan 30, 2014, 6:02:04 AM1/30/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014-01-29 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

படங்கள் எடுக்க வில்லையா?

கோயிலைப் பற்றி ஒரு வீடியோ பதிவும், கோவிலூர் ஆதீனகர்த்தரின் ஒரு பதிவும்  என நான்கு பதிவுகளை இதுவரை வெளியிட்டுள்ளோம். அவற்றை இங்கே காணலாம்.

ஆதீனகர்த்தர் பேட்டி

ஆலயம்

கோவிலூர் ஆதீன அருங்காட்சியகம்

இன்னும் படங்களும் அதிகமாக இருக்கின்றன. வரும் வாரத்தில் இந்தப் பக்கத்தை நிறைவு செய்து பின்னர் அதன் விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன். 

சுபா

--

Geetha Sambasivam

unread,
Feb 2, 2014, 4:42:07 AM2/2/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
சிவதருமம் பாலிப்போர்

சொக்கு சுப்பிரமணியன்

கோவிலூர்; கோமேவு வன்னிவனக் கொற்றவாளீசர் வாழும் தலம்; நேரறிவு மயமான நெல்லை நாயகி வளரும் திருக்கோயில்; ஞாலம் போற்றிடும் ஞானியர்கள் அருள்பாலித்த ஞானபீடம்; வெய்யவினை தீர்த்து அடியவர்கள் ஐயம் திரிபை அகற்றிய மெய்த்தவ நல்லாசிரியர்கள் நடம் பயின்ற கலைக்கோயில்; மேலாய துறவினுக்கோர் துணையாகி நின்ற மேன்மக்கள் வாழ்ந்த புண்ணிய பூமி.  நூல் யாவும் உணர்ந்த நுண்ணறிவு மிக்க மெய்யன்பர் மால் அவனும் காணா மறை முதல்வன் புகழ் பாடும் இசை வளரும் நிலயம்; அறவொழுக்கம் வளர்த்திடவே துறவொழுக்கம் கடைப்பிடித்த தூயவர்கள் மறவொழுக்கம் கடிந்து நல்லறவொழுக்கம் வளர்த்த தமிழ்ப் பேரூர்;  பாலாய சிவதருமம் பற்றறப் பாலிப்போர் இத்திருத்தலத்தில் அருள் பாலித்தார்கள்.

கோவிலூர்த் தலம் 'சமிவன க்ஷேத்திரம்' என்று அழைக்கப்பட்டது.  தமிழில், 'வன்னி வனம்', என்பர்.  இந்த 'வன்னிவனத்' தலத்தின் வரலாற்றை வடமொழியில் ஸ்காந்த புராணத்திலிருந்து மொழி பெயர்த்து சமிவன க்ஷேத்திர மான்மிய வசனம் என்னும் நூல் ஒன்று வெளியாகி உள்ளது.  கி.பி. 1928-இல் சுதான விபவ ஆண்டு கார்த்திகைத் திங்கள் வெளியான இந்த நூலைத் திருவிடைமருதூரைச் சேர்ந்த பிச்சு சாஸ்திரி சுவாமிகள் என்பவர் மொழி பெயர்த்திருக்கிறார்.  காரைக்குடி மேல மடத்தைச் சேர்ந்த சேவு. பழ. பழநியப்பய்யா குடும்பத்தார் சென்னையில் சூளையில் இருந்த ஶ்ரீ பாரதி அச்சியந்திர சாலையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள்.

தலங்களுக்குள் தலையான இந்தக் கோவிலூர்த் தலத்திற்குப் பல பெயர்கள் உண்டு என்பதும், கழனிவாசல், சாலிவாடி, ஶ்ரீ வல்லபம், வன்னிவனம் என்பவை அவை என்பதும் இந்நூல் தெரிவிக்கும் முக்கியச் செய்தியாகும்.  ஜீவர்களின் பஞ்சமா பாதகங்களைப் போக்கி நன்னெறி உய்விக்கும் ஆண்டவர் அருட்கோயில் கொண்டிருப்பதால் இத்தலம் மானுடப் பிறப்பெடுத்தோருக்கு எல்லாம் மறை முதல்வனின் நற்பேற்றைப் பெற்றுத் தருவதாக அமைந்திருக்கிறது.  இங்குள்ள மது புஷ்கரணி தீர்த்தம் வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் வல்லமை பெற்றது என்பதையும் கோயிலூர்ப் புராணம் வெளிப்படுத்துகிறது.

சத்திய ஞானானந்தராய், சர்வ பரிபூரணராய், சர்வ சொரூபராய், சர்வ சக்தியுள்ளவராய், ஜனப்பிரியராய் சர்வ பலன் கொடுப்பவராய், சந்திர சேகரராய், மான் மழுதாரியாய் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் திரிபுவனேசுவரர் தயா சமுத்திரம் என்று இந்த நூல் வருணிக்கிறது.

இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் நெல்லையம்மை சத்திய ஞானானந்த ரூபி என்றும், சர்வாத்ம சொரூபி என்றும், சமரச வடிவு என்றும், சர்வபூரணி என்றும் நிரஞ்சனை என்றும், நித்திய சுத்த புத்தமுத்த அகண்ட அத்துவித சொரூபி என்றும் இந்தக் கோயிலூர்ப் புராணம் குறிப்பிடுகிறது. நேரறிவு மயமான நெல்லை நாயகி அருளைச் சிறப்பிக்கின்றது.

கோவிலூர்த் தலத்தின் சிறப்பை விளக்கும் இந்நூல் ஒரு நல்ல புத்தகம் என்பதில் ஐயமில்லை.  இது போன்ற நூல்கள் மக்கள் மன்றத்தில் பரவ அன்னையின் அருளைப் பாலிக்கும் அனைவரும் முயல வேண்டும்.

1978 கும்பாபிஷேஹ மலர்

Geetha Sambasivam

unread,
Feb 2, 2014, 4:43:05 AM2/2/14
to மின்தமிழ்
படங்கள் சுபா பகிர்வார்கள்.  

2014-01-29 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
படங்கள் எடுக்க வில்லையா?

Geetha Sambasivam

unread,
Feb 3, 2014, 5:44:54 AM2/3/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூர் ஆதீனமும் நகரத்தார் கடமையும்

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே நகரத்தார்கள் ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். பட்டினத்தடிகள்  , காரைக்கால் அம்மையார் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள் இவ்வகையில் நமக்குப் பெருமை தருவன.

இக்காலத்தில் இவ்வாறு ஞானமார்க்கத்தில் ஈடுபட்டு நகரத்தார்களை நல்வழிப்படுத்தும் பணியைச் செய்து வருவது கோவிலூர் ஆதீனம் ஆகும்.  

இந்த ஆதீனம், இந்தியாவிலும் இலங்கையிலும் புகழ் பரப்பி இருக்கிறது.  இதனுடைய குருபரம்பரை, புலமையும் சீலமும் செயல்திறனும் மிக்கது.  இந்த ஆதீனத்தின் தலைமை இடம் செட்டிநாட்டின் நடுநாயகமான நகரான காரைக்குடிக்கு அருகே உள்ளது.  கோவிலூர் என்னும் ஊர்ப்பெயரே கேட்கும் தொறும் இன்பம் பயப்பது.

இவ்வளவு புகழ்மிக்க ஓர் ஆதீனத்தைப் பற்றி நம்மவர் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்நோக்கத்தை நிறைவேற்றவே இந்த மலர் வெளியிடப் பெறுகிறது.  நகரத்தார்கள் தங்களூடைய முன்னேற்றம் கருதியும், வாழ்க்கை முறையில் மாறுதல்கள் குறித்தும் முடிவு செய்ய 96 ஊர் நகரக் கூட்டங்களைக் கோவிலூரில் கூட்டுவது மரபு.

கோவிலூரில் ஆதீனகர்த்தர்களாகப் பட்டம் ஏற்று அருளாட்சி செலுத்திவரும் ஞானாசிரியர்கள், நம்மவர்க்கு நல்வழி காட்டி வந்திருக்கிறார்கள் இன்றைய நிலையும் இதுவேயாகும்.  இந்த அருளாளர்களின் அறிவுரைகளை மதித்தும், இப்பெரியவர்களுடைய வேண்டுகோள்களுக்குச் செவி சாய்த்தும் வருபவர்கள் எல்லா நலமும் பெற்றுச் சிறந்து செல்வாக்கோடும் வாழ்ந்து வருவது கண்கூடு.  மாறுபட்டு நடந்து கொள்பவர் நிலை பற்றி எதையும் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

தனிப்பட்ட அன்பர்களைப் பற்றி மேலே சொல்லியது நகரத்தார்கள் வாழும் ஊர்களுக்கும் பொருந்தும்.

ஒவ்வொரு நகரத்தாரும் கோவிலூர் ஆதீன கர்த்தரிடம் மரியாதை காட்டுவதும், அவர்களுடைய அறிவுரைக்குப் பணிந்து நடப்பதும் அவர்களுக்கு நன்மை தரும்.  இது போலவே ஒவ்வொரு ஊர் நகரத்தாரும் தேவையானபோது கோவிலூர் ஆதீனத்தோடு தொடர்பு கொள்வது அறிவுடைமை ஆகும். பிராமணர்கள் தங்கள் இனத்து நலன் கருதி ஆச்சாரியர்களாகவிருக்கும் சுவாமிகள் பலரிடத்திலும் எவ்வளவு ஈடுபாடு வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் சற்றுச் சிந்தித்துப் பார்ப்பது நலம்.

ஒன்பது நகர்க் கோவிலாரும் காரைக்குடி மேலமடத்தில் கூடி, கோவிலூர் ஆதீனத்துக்கு நன்கொடை எழுதும் பழக்கம் 1930 வரை இருந்து வந்தது. இதைப் புதுப்பிக்க வேண்டும்.

நகரத்தார்கள் தங்களுடைய ஊர்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளுக்கும், கும்பாபிஷேகம் முதலியவற்றிற்கும் கோவிலூர் ஆதீனகர்த்தர்களை அழைத்து, நகரக் கோயிலில் பூரண கும்பத்துடன் வரவேற்றுப் பாத காணிக்கை முதலியன வைத்து மரியாதை செய்ய வேண்டும். உலகியல் ஈடுபாடும் போலி நாகரிக முதிர்ச்சியும் நம்மை மயக்கியிருப்பதால் நாம் நமது பண்பாடுகளை நல்ல மரபுகளை அடியோடு மறந்துவிட்டோம்.

மேற்கண்டவாறு நாம் நடந்து கொள்வது நம் நன்மைக்காகவே ஆகும்.  ஞானச் செல்வர்களை மதிப்பதாலும் போற்றுவதாலும் அவர்கள் ஒரு பயனும் பெறப் போவதில்லை.  கங்கை புனிதமாக இருப்பதால் தான் நாம் போய் அதில் ஆடுகிறோம்.

வயதான காலத்தில் ஓர் ஊன்றுகோல் தேவைப்படுகிறது. ஓர் ஊன்றுகோல் தனி ஒருவனுக்குச் செய்யும் உதவிகளை, அருளாளர்கள் சமுதாயம் முழுமைக்கும் செய்கிறார்கள்.

இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்று நம்மவர் உள்ளனர்.  கடல் கடந்த மலேசியா முதலிய நாடுகளிலேயே பிறந்து வளர்ந்து, அந்த நாட்டுக் குடிமக்களாக உரிமை பெற்றும் நகரத்தார் பலர் உள்ளனர்.  எனவே முன் போல நாம் செட்டி நாட்டில் மிகுதியான எண்ணிக்கையிலோ மிகுதியான நாட்களிலோ காணப்படுவதில்லை.  ஒவ்வொருவரும் குடும்பத்தோடு அவரவர் வசதிப்படி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலூர்க்குச் செல்வதை ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும்.  அவ்வாறு செல்லும்போது அங்குள்ள சிவன் கோயிலிலும்,கோவிலூர் ஆண்டவர் முதலியவர்களின் சமாதிக் கோயில்களிலும் வழிபடுவதும் ஆதீனகர்த்தரைக் கண்டு வணங்குவதும் நமது கடமையாகும்.

ஆதீனங்களுக்கு அளவு கடந்த சொத்தும் வருமானமும் இருப்பதாகவும், எனவே அவற்றிற்குப் பணம் தேவையில்லை என்றும் ஓர் எண்ணம் நிலவி வருகிறது.  இது முற்றிலும் தவறு. செய்யப்படும் அறங்கட்கு நாம் தரும் நன்கொடை பெரிதும் உதவும். வளர்க்கப் பயன்படும்.

அரசின் சட்டங்களால் இனாம் நிலங்கள் ஒழிக்கப்பட்டு விட்டதால், கோவிலூர் ஆதீனம் தன் சொத்துக்களின் வருமானத்தை இழந்து விட்டது.  மலேசியா, பர்மா முதலிய நாடுகளிலிருந்து நன்கொடையாகக் கோவிலூர் மடத்துக்குப் பணம் அனுப்பும் வழக்கமும் இப்போது நின்றுவிட்டது.

தற்போது மடத்திற்கென வருவாய் மிகக் குறைந்து விட்டது.  நடந்து வரும் தர்மங்கள் யாவும் குருமகா சந்நிதானம் சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகளின் பொருள் உதவியால் தான் நடைபெற்று வருகின்றன.  அந்த அறங்களில் நம் நகரத்தார் பங்கும் சேர வேண்டும்.  அறங்கள் வளர்ந்து பயன் யாவர்க்கும் கிட்ட நம்முடைய உதவியும் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம்.

நகரத்தார்கள் தாங்கள் வாழும் ஊர்களுக்கும் கோவிலுர் ஆதீன கர்த்தர்களை அழைத்து, அவர்களுடைய அருளுரைப்படி நடப்பது, அவர்களுக்கு நன்மை தரும்.  குறிப்பாக இளைஞர்கள் இந்த ஆதீனத்தைப் பற்றி எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்ளவும் இந்த ஆதீனத்துடன் தொடர்பு கொள்ளவும் வேண்டும்.

ஆன்மிக ஈடுபாடு உடையவர்கள் துறவு பூண விரும்பினால் அவர்களை ஒருவரும் தடுக்க வேண்டுவதில்லை.  அறிவும் ஆற்றலும் பண்பும் சீலமும் உடைய நகரத்தார்கள் ஒரு சிலராவது துறவு நிலையை மேற்கொண்டால் தான் கோவிலூர் ஆதீனம் சீருடனும் சிறப்புடனும் வாழையடி வாழையாக வளர்ந்து வர வாய்ப்பு இருக்கும். கோவிலூரில் நகரத்தார்கள் மட்டுமே பட்டத்திற்கு வர உரிமையுடையவர்கள் என்பது நம் சிந்தனைக்கு உரியது.

புதிய வரலாறு படைப்போம்

கோவிலூருடன் நம் உறவைப் புதுப்பித்துக் கொள்வோம்.  ஆதீனகர்த்தர்களின் அருமையையும் பெருமையையும் போற்றி வாழ்த்துவோம். வாழ்த்துவது நாம் வாழ்வதற்கே.

Subashini Tremmel

unread,
Feb 3, 2014, 7:22:03 AM2/3/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Sun, Feb 2, 2014 at 10:43 AM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
படங்கள் சுபா பகிர்வார்கள்.  

 வரும் வார இறுதியில் அனேகமாக பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா

2014-01-29 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
படங்கள் எடுக்க வில்லையா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

K. Loganathan

unread,
Feb 3, 2014, 7:37:11 AM2/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
நின்னா கீதா அவர்களே

இதைப் படித்ததும் என்னுள் ஓர் கேள்வி எழுந்தது. இப்படிக்கேட்கின்றானே என்று சினந்து  ஏதாவது சொல்லமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

சாதாரண மக்கள்  தேவர் என்றும் வன்னியர் என்றும் செட்டியார்கள் என்றும் இன்னும் பலவாறு சாதிப் பெருமைகளைப் பேசி பெருமைபடுவது தவறு என்றாலும் மன்னிக்கலாம். ஆனால ஓர் ஆதீன கர்த்தார் இப்படிப்பேசுவது எப்ப்டி பொருந்தும் என்று தெரியவில்லை, சிவஞானத்தில் ஆத்ம ஞானத்தில் சிறப்புற்றிருப்போரே ஆதீனங்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்கள்.  ஆயினும் ஓர் சாதியினருக்கே பாடுபடும் வகையில் ஓர் ஆதீனத்தை வழி நடாத்தி செல்வது ஆன்மீகம் அல்ல என்றே படுகின்றது.

இப்படிப்பட்டோர் காவி உடுத்டுவவதின் பொருள் என்ன? எதை அவர்கள் துறந்துள்ளார்கள்?

இது கோவிலூர் ஆதினத்தை நோக்கி மாத்திரம் நான் கேட்க வில்லை, தமிழ் நாட்டில் இயங்கும் பல ஆதீனங்கள் இப்படித்தான் என்று கேள்விப்ப்டுகின்றேன்

இப்படி ஓர் ஆதீனமே இயங்கினால் 'ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்" என்பதெல்லாம் என்ன ஆவது? இது போன்ற ஞான வாக்குகளை ஆதரிக்காத போற்றாத ஆதீனங்கள உண்மையான ஆதீனங்கள் என்று கூற வருமா?

மேலும் காரைக்கால அம்மையார் பட்டினத்ததடிகள் போன்றோரை நகரத்தார் அல்லது செட்டியார்கள் என்கின்றீர்கள், யான் அறிந்த வரையில் இவ்விருவரும் அப்படி எங்கும் கூறியதில்லை, அவர்கள் சாதியை போற்றியவர்கள்  இல்லை, அப்படியிருக்க அவர்களை நகரத்தார் சாதியில் அடக்குவது நியாயமா?

மீண்டும் கூறுகின்றேன்

இந்தக் கேள்விகள் எல்லாம் உண்மையான ஓர் ஆதீனம் எப்படி இயங்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே. சாதி அடிப்படையில் இயங்கௌம் ஆதீனம் ஓர் உண்மையான ஆதீனமாக இருக்க முடியாது.

உலகன்

2014-02-03 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Feb 3, 2014, 7:43:09 AM2/3/14
to மின்தமிழ்
உலகன் ஐயா,

இதைத் தட்டச்சும் வேலை மட்டுமே எனக்கு.  மற்றபடி பதில் அளிப்பது என் வேலை அல்ல. :)))) புரிந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன்......

2014-02-03 K. Loganathan <k.ula...@gmail.com>:

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 4, 2014, 1:50:00 AM2/4/14
to vallamai, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com

2014-02-03 K. Loganathan <k.ula...@gmail.com

சாதாரண மக்கள்  தேவர் என்றும் வன்னியர் என்றும் செட்டியார்கள் என்றும் இன்னும் பலவாறு சாதிப் பெருமைகளைப் பேசி பெருமைபடுவது தவறு என்றாலும் மன்னிக்கலாம். ஆனால ஓர் ஆதீன கர்த்தார் இப்படிப்பேசுவது எப்ப்டி பொருந்தும் என்று தெரியவில்லை,
 
ஆதினகர்த்தர் அவ்வாறு பேசவில்லை ஐயா. கும்பாபிடேக மலரில் யாரோ எழுதி வந்துள்ள ஒரு கட்டுரையின் பகுதி தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. சீர்திருத்தக் கருத்து எழுதுவதாக எண்ணி அரைகுறை அறிதலோடு எழுதுவது வருத்தத்திற்குரியது. 

ஆயினும் ஓர் சாதியினருக்கே பாடுபடும் வகையில் ஓர் ஆதீனத்தை வழி நடாத்தி செல்வது ஆன்மீகம் அல்ல என்றே படுகின்றது. இப்படிப்பட்டோர் காவி உடுத்டுவவதின் பொருள் என்ன? எதை அவர்கள் துறந்துள்ளார்கள்?
 
நாச்சியப்ப சுவாமிகளின் தனிப்பட்ட வருவாயிலிருந்து நிறுவப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் பல நூறு மாணவர்கள் அனைத்துப்ப் பிரிவினரும் ஆகும். நகரத்தார் சமூக மாணவர்கள் .01 சதவிகிதம் கூட இருக்காது. 

ஒரு சாதியினருக்குப் பயன்படும் வகையில் ஆதீனம் நடத்தப்படுகிறது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நாச்சியப்ப சுவாமிகள் தனிப்பட்ட முறையில் சில அறக்கட்டளைகள் ஏற்படுத்தியுள்ளார். ஆதீனப் பயன்பாடு கோவிலுக்கு மட்டுமே.   

இப்படி ஓர் ஆதீனமே இயங்கினால் 'ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்" என்பதெல்லாம் என்ன ஆவது? இது போன்ற ஞான வாக்குகளை ஆதரிக்காத போற்றாத ஆதீனங்கள உண்மையான ஆதீனங்கள் என்று கூற வருமா?
 
கோவிலூர் ஆதினம் எப்படி இயங்குகிறது என அறிந்துள்ளீர்களா? குறைபட்ட அறிதலோடு தயவுசெய்து பொதுமைப் படுத்தாதீர்கள். 

மேலும் காரைக்கால அம்மையார் பட்டினத்ததடிகள் போன்றோரை நகரத்தார் அல்லது செட்டியார்கள் என்கின்றீர்கள், யான் அறிந்த வரையில் இவ்விருவரும் அப்படி எங்கும் கூறியதில்லை, அவர்கள் சாதியை போற்றியவர்கள்  இல்லை, அப்படியிருக்க அவர்களை நகரத்தார் சாதியில் அடக்குவது நியாயமா?
 
அடக்குவதால் சமூகத்திற்கு விளையும் தனிப்பட்ட பயனேதும் இல்லை. சமூக இளைஞர்களைச் சமூகத்தின் பால் ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப் பயன்படலாம்.  

ஆதீனத்தின் சொத்துக்கள் அனைத்தும் நகரத்தாருடைய நன்கொடை. வேறு சமுதாயத்தினர் கொடை ஏதும் நான் அறிந்து இல்லை.
 
கொடையில் நகரத்தார் சமுதாய மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பது கீழ்க்கண்ட கட்டுரையாளரின் குறிக்கோள். ஏனென்றால் 1930 வரை காரைக்குடி மேலமடத்தில் நகரத்தார் கூடி ஊர்வாரியாக அனைவரும் நன்கொடை அளித்துள்ளனர். அச்சமுதாயக் கடமை கட்டுரையில் வலியுறுத்தப் படுகிறது. இன்று பெரும்பகுதிப் பணி நாச்சியப்ப சுவாமிகள் என்ற ஒருவர் பங்களிப்பாக உள்ள நிலையில் சமுதாயக் கடமையாக வழிபாடும் கொடையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கொடை ஊருக்கானது. அந்தச் சமுதாயத்திற்கானது மட்டும் அல்ல. ஒருநாள் உணவு வேளையில் கலந்துகொண்டால் பொதுமைப்படித்திப் பேசுவது எவ்வளவு முரண் என்பது தெரியவரும்.
நன்றி
சொ.வினைதீர்த்தான். 
 
2014-02-03 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

கோவிலூர் ஆதீனமும் நகரத்தார் கடமையும்

இவ்வளவு புகழ்மிக்க ஓர் ஆதீனத்தைப் பற்றி நம்மவர் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்நோக்கத்தை நிறைவேற்றவே இந்த மலர் வெளியிடப் பெறுகிறது. 

ஒன்பது நகர்க் கோவிலாரும் காரைக்குடி மேலமடத்தில் கூடி, கோவிலூர் ஆதீனத்துக்கு நன்கொடை எழுதும் பழக்கம் 1930 வரை இருந்து வந்தது. இதைப் புதுப்பிக்க வேண்டும்.

நகரத்தார்கள் தங்களுடைய ஊர்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளுக்கும், கும்பாபிஷேகம் முதலியவற்றிற்கும் கோவிலூர் ஆதீனகர்த்தர்களை அழைத்து, நகரக் கோயிலில் பூரண கும்பத்துடன் வரவேற்றுப் பாத காணிக்கை முதலியன வைத்து மரியாதை செய்ய வேண்டும். உலகியல் ஈடுபாடும் போலி நாகரிக முதிர்ச்சியும் நம்மை மயக்கியிருப்பதால் நாம் நமது பண்பாடுகளை நல்ல மரபுகளை அடியோடு மறந்துவிட்டோம்.

மேற்கண்டவாறு நாம் நடந்து கொள்வது நம் நன்மைக்காகவே ஆகும்.  ஞானச் செல்வர்களை மதிப்பதாலும் போற்றுவதாலும் அவர்கள் ஒரு பயனும் பெறப் போவதில்லை. 
வயதான காலத்தில் ஓர் ஊன்றுகோல் தேவைப்படுகிறது. ஓர் ஊன்றுகோல் தனி ஒருவனுக்குச் செய்யும் உதவிகளை, அருளாளர்கள் சமுதாயம் முழுமைக்கும் செய்கிறார்கள்.

Geetha Sambasivam

unread,
Feb 4, 2014, 1:55:52 AM2/4/14
to மின்தமிழ், vallamai, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
தெளிவான விளக்கங்களுக்கு நன்றி ஐயா. எனக்கு இது குறித்த போதிய புரிதல் இல்லாததால் எதுவும் சொல்ல முடியவில்லை. 

2014-02-04 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:

meenavan2

unread,
Feb 4, 2014, 2:58:49 AM2/4/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்

Subashini Tremmel

unread,
Feb 4, 2014, 3:01:12 AM2/4/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014-02-03 K. Loganathan <k.ula...@gmail.com>:

நின்னா கீதா அவர்களே

இதைப் படித்ததும் என்னுள் ஓர் கேள்வி எழுந்தது. இப்படிக்கேட்கின்றானே என்று சினந்து  ஏதாவது சொல்லமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

சாதாரண மக்கள்  தேவர் என்றும் வன்னியர் என்றும் செட்டியார்கள் என்றும் இன்னும் பலவாறு சாதிப் பெருமைகளைப் பேசி பெருமைபடுவது தவறு என்றாலும் மன்னிக்கலாம். ஆனால ஓர் ஆதீன கர்த்தார் இப்படிப்பேசுவது எப்ப்டி பொருந்தும் என்று தெரியவில்லை, சிவஞானத்தில் ஆத்ம ஞானத்தில் சிறப்புற்றிருப்போரே ஆதீனங்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்கள்.  ஆயினும் ஓர் சாதியினருக்கே பாடுபடும் வகையில் ஓர் ஆதீனத்தை வழி நடாத்தி செல்வது ஆன்மீகம் அல்ல என்றே படுகின்றது.

இப்படிப்பட்டோர் காவி உடுத்டுவவதின் பொருள் என்ன? எதை அவர்கள் துறந்துள்ளார்கள்?

இது கோவிலூர் ஆதினத்தை நோக்கி மாத்திரம் நான் கேட்க வில்லை, தமிழ் நாட்டில் இயங்கும் பல ஆதீனங்கள் இப்படித்தான் என்று கேள்விப்ப்டுகின்றேன்

இப்படி ஓர் ஆதீனமே இயங்கினால் 'ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்" என்பதெல்லாம் என்ன ஆவது? இது போன்ற ஞான வாக்குகளை ஆதரிக்காத போற்றாத ஆதீனங்கள உண்மையான ஆதீனங்கள் என்று கூற வருமா?

மேலும் காரைக்கால அம்மையார் பட்டினத்ததடிகள் போன்றோரை நகரத்தார் அல்லது செட்டியார்கள் என்கின்றீர்கள், யான் அறிந்த வரையில் இவ்விருவரும் அப்படி எங்கும் கூறியதில்லை, அவர்கள் சாதியை போற்றியவர்கள்  இல்லை, அப்படியிருக்க அவர்களை நகரத்தார் சாதியில் அடக்குவது நியாயமா?

மீண்டும் கூறுகின்றேன்

இந்தக் கேள்விகள் எல்லாம் உண்மையான ஓர் ஆதீனம் எப்படி இயங்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே. சாதி அடிப்படையில் இயங்கௌம் ஆதீனம் ஓர் உண்மையான ஆதீனமாக இருக்க முடியாது.

உலகன்

திரு.சொ.வினைதீர்த்தான் அவர்களும் தங்கள் கேள்விக்கு  பதிலளித்திருந்தார். 
இக்கட்டுரைகளை மடத்திலிருந்து அவர்கள் அனுமதி பெற்று எடுத்து வந்து இங்கு பதிப்பிக்கும்முயற்சியை தொடங்கியதால் நானும் பதிலளிக்க கடமை  பட்டிருக்கின்றேன்.

1.இக்கட்டுரைகள் ஆதீன கர்த்தரால் எழுப்பட்டவையல்ல. ஒரு மலரில் வெளிவந்தவை. திருமடத்தின் பல்வேறு நடவடிக்களைப் பதியும் ஒரு நல்ல ஆவணம் என்ற காரணத்தால் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

2. இதனை கீதா தட்டச்சு செய்து மட்டுமே பகிர்ந்து கொள்கின்றார்கள். 

3. கோவிலூர் திருமடத்தின் அறிமுகப் பகுதியை சென்ற ஆண்டில் நான் விவரித்திருந்தேன். அதில் நாச்சியப்ப சுவாமிகளின் சமூகப் பார்வையும் அதன் தொடர்ச்சியான மடம் சார்பில் நடைபெறும் பல்வேறு சமூக நல நடவடிக்கைகளையும் குறிப்பிட்டிருந்தேன். 

இத்திருமடத்தில் கல்லூரிகளும் தேவார, வேத இசை, சிற்பக் கல்லூரி என கல்வியை முன்வைத்து இலவசமாக பல சமூக நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் இணைய எந்த சாதி சமூக பாகுபாட்டையும் இம்மடம் கடைபிடிப்பதில்லை. ஆர்வமுள்ள மாணவர் யாவரும் கல்ந்து பயன் பெற இம்மடம் உதவுகின்றது.  அன்னதானம் பொது நடவடிக்கைகள் என பல தொடர்ச்சியான சமூக அக்கறை கொண்ட நிகழ்வுகளைச் செய்து வரும் ஒரு சிறந்த ஆதீனம் இது. 

நான் நேரில் சென்று பார்த்ததால் இவற்றை நன்கு உணரவும் முடிந்தது. 

தாங்கள் கோவிலூர் மடம் என்னும் இத்தொகுப்பை வாசிப்பதும் நான் சென்ற இழையில் பகிர்ந்து கொண்ட விழியப் பதிவுகளைக் காண்பதும் இந்த மடத்தை பற்றி சரியாக அறிந்து கொள்ள உதவும். 

சுபா

K. Loganathan

unread,
Feb 4, 2014, 3:25:15 AM2/4/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
அன்பின் வினைதீர்த்தான் அவர்களே 

மிக்க நன்றி. நான் தொடர்ந்து சில கேள்விகள் கேட்பதற்கு மன்னிக்க வேண்டும். சமய வாழ்க்கையில் சாதி பேதம் இருக்கக்கூடாது என்று நான் நினைக்கின்றேன் என்பது மட்டுமல்ல, மேலான ஞானிகள் அனைவரும் அப்படித்தான் நினைக்கின்றார்கள்.  சைவ சமயத்தில் சாதி இல்லை, இருக்கக்கூடாது,  இதேப் போலத்தான் பிரபத்தியை வற்புறுத்தும் வைணவத்திலும்

அப்படி இருக்க நகரthதார் சமுதாயம் இன்றளவு கோயில் விவகாரங்களிற் கூட சாதி வேற்றுமையைக்  கொண்டு வருவது வேதனைத் தருவதாக இருக்கின்றது

கீழே அந்த கட்டுரையிலிருந்து ஓர் பகுதி.

//

ஆதீனத்தின் சொத்துக்கள் அனைத்தும் நகரத்தாருடைய நன்கொடை. வேறு சமுதாயத்தினர் கொடை ஏதும் நான் அறிந்து இல்லை.

//

இங்கு கோயிலிற்காக நன்கொடை திரட்டுவதிலும் சாதி பிரிவினைக் கொண்டு வருகின்றார்கள். காரணம் கோயில் செய்ல்களெல்லாம் நகரதார்க்கே இருக்க வேண்டும் யாராவது கேள்வி கேட்டால், பணமெல்லாம் நகரத்தார் நன்கொடையே என்று பதில் வரும்

பினாங்கிலு இதே கதைதான். செட்டியார் கோயில்களால் செட்டியார் அல்லாதாருக்கு எந்த நன்மையும் இல்லை,

மற்ற சமுதாய நிகழ்சிகளில்( திருமணம் போன்றவற்றில்) சாதி பேதம் பார்த்தாலும் இறைவன் திருமுன்பு இது தேவையா? என்பதே என் கேள்வி.

இது ஒருவகையான செல்வச் செருக்கால் வருவது என்றும் தோன்றுகின்றது.

அன்பினை வளர்ப்பதற்கே தெய்வ வழிபாடும் திருக்கோயில்களும் ஆதீனங்களும். வலுவான சாதிக் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு எப்படி உண்மையான சமய வாழ்க்கையை நடத்த முடியும் என்று தெரியவில்லை,

இதனால. யாரையும் புண்படுத்தும் இந்த கேள்விகளை நான் கேட்கவில்லை, உண்மைச் சமய வாழ்க்கை மலர வேண்டும் என்பதற்காக்வே  இவை.

உலகன்

2014-02-04 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 4, 2014, 5:01:32 AM2/4/14
to vallamai, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com

2014-02-04 K. Loganathan <k.ula...@gmail.com>:

கீழே அந்த கட்டுரையிலிருந்து ஓர் பகுதி.

//

ஆதீனத்தின் சொத்துக்கள் அனைத்தும் நகரத்தாருடைய நன்கொடை. வேறு சமுதாயத்தினர் கொடை ஏதும் நான் அறிந்து இல்லை.

//
மேற்கண்ட சொற்கள் என்னுடைய சொற்கள். கட்டுரைச் சொற்கள் இவையல்ல. முழுமையாக அறிந்துகொண்டு கருத்துரையுங்கள் என்பதே மீண்டும் என் வேண்டுகோள். கொடை நகரத்தாருடையது. பயன் சாதிசமய வேறுபாடற்ற சமுதாயத்திற்கானது என்று நான் கண்டதைப் பகிர நான் பயன்படுத்திய சொற்கள்.
 
பினாங்கிலு இதே கதைதான். செட்டியார் கோயில்களால் செட்டியார் அல்லாதாருக்கு எந்த நன்மையும் இல்லை,
 
நகரத்தார் மொத்தம் மக்கள்தொகை 150000 தான். மலேசியாவில் இருப்பவர்கள் சில ஆயிரம் இருக்கும். நூறாண்டாகப் பல்லாயிரக்கான மக்கள் வழிபடக் கட்டிகாத்துள்ளார்கள். வழிபட யாரையும் தடை செய்வது இல்லை. செட்டியாருக்கென்று தனி வழிபாட்டு நேரமில்லை. உணவிடலில்லை. இதைவிட என்ன நன்மை சமுதாயம் எதிர்பார்க்க முடியும். அனைவரும் வழிபடக் காப்பாற்றித் தந்துள்ளதைத் தவிர வேறு என்ன நன்மை செய்துவிட முடியும்?

இதனால. யாரையும் புண்படுத்தும் இந்த கேள்விகளை நான் கேட்கவில்லை, உண்மைச் சமய வாழ்க்கை மலர வேண்டும் என்பதற்காக்வே  இவை.
நீங்கள் கேள்வி கேட்பது தவறில்லை ஐயா. ஆனால் குறைபட்ட அறிதலோடு கேள்வி கேட்பதே புண்படுத்துகிறது. ஆதினகர்த்தர் கூறாததைக் கூறியதாக எழுதியதற்கு வருத்தம் தெரிவிக்காமையும், பொதுமைப்படுத்தியதும் புண்படுத்துகிறது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.  

Geetha Sambasivam

unread,
Feb 5, 2014, 4:52:03 AM2/5/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூர் ஆதீன வரலாறு

இன்றைக்கு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகட்கு முன்னர் செட்டிமார்  நாட்டின் திலகமெனத் திகழும் காரைக்குடி நகரத்தில் நகரத்தார்களின் தவப்பயனாக அவதரித்தவர், "கோவிலூர் ஆண்டவர்" எனக் குவலயம் போற்றும் ஶ்ரீ முக்திராமலிங்க ஞான தேசிகர்.  இவர் கருவிலே திருவுடையாராக இருந்தமையின் தமது பால பருவமான பதின்மூன்றாம் ஆண்டளவிலேயே சிக்கல்  பொருள்வைத்த சேரியில் சென்று ஞானாசிரியரை அடைந்து, முறைப்படி குருமுகமாக ஞான நூல்களைக் கற்று, பதினாறு வயது பூர்த்தியாகு முன்னே ஞானானுபூதிச் செல்வராகப் பல அற்புதச் செயல்கள் நிகழ்த்தலானார்..  அக்காலம், "நாட்டுக் கோட்டை நகரத்தார்' என வழங்கும் தன வணிகப் பெருமக்கள் கடல் கடந்து சென்று தங்கள் வாணிபத்தை வளமுறப் பெருக்கிய காலமாகும். 

"திரை கடலோடியும் திரவியம்" சேர்ப்பதிலேயே கருத்தூன்றிய நகரத்தார் சமூகம், தேடிச் சென்று திருத்தலங்களில் திருப்பணிகள் செய்யவும், அறக்கட்டளைகள் அமைக்கவும், என்றும் அழியா வரலாற்றுப் புகழ் மிகுந்து வளமுடன்  வாழவும் வழி வகுத்த சிறப்பு, ஶ்ரீ சற்குரு முத்துராமலிங்க ஞான தேசிகருக்கு உண்டு.

ஶ்ரீ முக்திராமலிங்க ஞான வள்ளல் காரைக்குடியை அடுத்த கோவிலூரில் திருக்கோவில் கொண்டு விளங்கும் அம்பிகை திருநெல்லையிடம் ஈடுபாடு கொண்டிருந்து அடிக்கடி அம்பிகையின் அருட்காட்சி காணப்பெறும் பெரும்பேறு அவர் பெற்றிருந்தார்.  அம்பிகை அருள் பாலித்த வண்ணம் ஆலயத்தை நகரத்தார்களின் உதவி கொண்டு பெரும் அளவில் கலைத் திறன் பொதிந்த கருங்கல் திருப்பணியாக்கச் செய்யத் திருவுளம் கொண்டார்.

ஞானப் பேரொளியாக விளங்கும் சற்குரு முக்திராமலிங்க வள்ளலின் அருட்செயல்கள் நாடெங்கிலும் பரவலாயிற்று.  பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தால் ஞானவேட்கை  மிக்க நல்லறிஞர் பலரும்  நாடி வந்து, ஞான நூல் கற்பாராயினர்.  தம்மைச் சரணாக வந்தடைந்த பக்குவர்கட்கு, "அஞ்சலென்ன அபயம் கொடுத்தருளி' பரமார்த்திகப் பேருண்மைகளைப் பலவாறாகத் தெளிய உணர்த்திப் பரமானந்தப் பேற்றை அருள் புரிந்தார்  சற்குரு முத்துராமலிங்கர்..

நாளுக்கு நாள் பெருகி வரும் ஜாதி, இன வேறுபாடற்ற அடியார் குழாம் உணவுக்கும் உடைக்கும் இருக்கைக்கும் அலைந்து திரியாமல் அவர்கள் ஓரிடத்தில் தங்கி அமைதியாகத் தத்துவ விசாரம் செய்யவும், ஜபம், தபம், தியானம் முதலான ஆத்ம சாதனைகள் செய்து வரவும், திருமடம் ஒன்று அமைக்கத் திருவுளம் கொண்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்த வேளையில் அம்பிகை திருநெல்லையே காட்சி தந்து அருள் பிரசாதம் வழங்கியருளினாள்.

வடமொழியில் உள்ள வேதாந்த சித்தாந்த உண்மைகளை வடமொழிப் பயிற்சியில்லாத தமிழ்ப் பெருமக்களும் உணர்ந்து, உய்யும் நெறி நிற்கும் வகையில் தமிழில் "நாநாஜீவ வாதக் கட்டளை" தொடங்கி, "ஞான வாசிட்டம்" ஈறான பதினாறு நூல்கள் கிரமப் பாடமாக வகுத்தது, கோவிலூர் திருமடாலயத்தின் சிறப்பான பணியாகும்.

ஞானப் பேரொளியாக விளங்கிய ஶ்ரீ ஆண்டவரை அடைக்கலமாக அடைந்து குருபரன் குற்றேவல் செய்து ஞான அநுபூதி பெற்ற அடியார்கள் அனந்தம்.  அவர்களில் பலர் ஆங்காங்கு தமக்குற்ற தலங்களில் திருமடம் அமைத்துக் கொண்டு கோவிலூர் மரபினை விளங்கச் செய்து வருகின்றனர்.  கோவிலூர் மரபின் வழிவழியாக அமைந்துள்ள திருமடங்கள் தற்போது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் சுமார் 100-க்கு மேல் உள்ளன.

ஶ்ரீ ஆண்டவரின் வியத்தகு மாண்பினை,

கார்கொண்ட புயல் வண்ணன் மலரயன் வருந்தியும்
காணாத பெரு வாழ்வெனும்
கறைமிடற்றிறை ராச கட்கபர மேசுவரன்
கருணையுருவோ டமர்ந்து
கனவெழில்கொள் மணிமாட நிலவுசமி வனமெனக்
கழறுமுயர் பதியில் வாசன்
கனதனமறு சீடர் தம(து) அகவிருள் துரத்தவரு
கருதரிய ஞாநதபனன்
போர் கொண்ட காமக் குரோதரே பாதியம்
புகல் குற்றம் நீங்கு புனிதன்
பொறையறி(வு) அடக்கம் அருள் முதலநற் குணமொடு
பொருந்திவளர் உற்ற முதல்வன்
புவனம் மூன்றிலும் இவன் புகழ் சென்றிடற்கிடம்
போதா(து) எனச் சிறந்தோன்
பொருளிலர்(து) உயர்சுத்த வேதாந்த சாத்திரம்
போதம் மிக்கு உள் நிபுணன்
போர் கொண்ட நிர்மல சமாதி சாட்சாத்கஅர
பிரதாப மிகு சிரேஷ்டன்
பெருமை நிறை தருமுத்து ராமலிங்கக் குரு"

என்று சைவப் பெரியார், யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் பெருமான் போற்றிப் பாராட்டுகிறார்.

வடமொழி தெரியாதவர்கள் வேதாந்தம் படிப்பதற்கு வகை செய்த மடம் என்ற அளவில் கோவிலூர் ஆதீனம் வேதாந்த தத்துவ வரலாற்றில் தனி இடம் பெற்று மிளிர்கிறது.  கலயத்தில் கஞ்சி ஏந்திக் கொண்டு கோவிலூருக்கு வந்து மாணாக்கர் பலர் வேதாந்தம் படித்தனர் என்பதிலிருந்து  படித்தவர்களுடைய ஆர்வமும் படிப்பித்தவர்களுடைய தனிச் சிறப்பும் புலனாகும்.  இந்த ஆதீனத்தில் பயின்ற மாணாக்கர் பட்டியல் இவ்வெளியீட்டில் கொடுக்கப் பெற்றிருக்கிறது.  இதை ஊன்றி ஆராய்ந்தால், ஆண்டவர்  முக்திராமலிங்க ஞான தேசிகர் கோவிலூரில் வேதாந்தப் பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவியுள்ளார் என்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிய வரும்.  கோவிலூர் மண்டலி என்று கூறிக்கொண்டு துறவிகள் வடநாட்டு யாத்திரை சென்று, மரியாதையுடன் எங்கும் வரவேற்கப்படுவது மரபு.

Geetha Sambasivam

unread,
Feb 8, 2014, 6:31:22 AM2/8/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூர் திருமடத்தின் கிளை மடங்கள்

குறிப்பு: கோவிலூர் என்னும் பெயரில் தஞ்சை மாவட்டத்தில் இரு ஊர்களும் மதுரை மாவட்டத்தில் ஓர் ஊரும், சேலம் மாவட்டத்தில் ஓர் ஊரும் உள்ளன.  பிற மாவட்டங்களிலும் கோவிலூர்கள் இருக்கக் கூடும்.  எனவே காரைக்குடியை அடுத்த கோவிலூர் என்று குறிப்பிடுவது, ஐயப்பாட்டைத் தவிர்க்க உதவும்.  அஞ்சல்களில், கோவிலூர்--630 307, காரைக்குடி(அருகில்) என்று குறிப்பிட வேண்டும்.

1. கோவிலூர் மடாலயம்
கோவிலூர்--630 307
காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம்
தொடர்பு:
திரு மெ.மெ. மெய்யப்பன்/திரு நா,நாராயணன்
தொலைபேசி: 04565--236846

2. .ஈசான்ய மடம்
புதிய பேருந்து நிலையம் அருகில்
திருவண்ணாமலை--606 601
தொலைபேசி : 04175--252649
பொறுப்பாளர்:
திரு இராம. அண்ணாமலை @ மீனாட்சி சுந்தரம்
(விருந்தினர் அறைகள் வசதி உண்டு)

3. சண்முக சுவாமி மடம்
விழுப்புரம்--பாண்டி சாலை
வளவனூர்--605 108
பொறுப்பாளர்:
தவத்திரு சண்முக சுவாமிகள்

4. சபாபதி சுவாமிகள் மடம்
தென்பள்ளிப்பாட்டு
மேட்டுப் பாளையம்
லசப்பாக்கம் --606 751.
திருவண்ணாமலை மாவட்டம்
பொறுப்பாளர்: 
தவத்திரு முருகானந்த சுவாமிகள்

5. கோ.சித மடாலயம்
(பொன்னம்பல சுவாமி மடம்)
50, மன்னார்குடி சாலை
சிதம்பரம்--608 001.
தொலைபேசி: 04144--220030
பொறுப்பாளர்: திரு சிவ, இராமநாதன்
(விருந்தினர் அறை வசதி உண்டு)

6. கோ. சித. மடாலயம்
(தத்துவராய சுவாமிகள் மடம்)
விருத்தாசலம் சாலை
எறும்பூர் --608 704
(சேத்தியா தோப்பு அருகில்)
பொறுப்பாளர்: திரு சிவ இராமநாதன்

7. கோ.வீர. மடாலயம்
(திருக்களர் ஆண்டவர் மடம்)
திருக்களர் --614 710
நடுவக் களப்பால் வழி
மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்
தொலைபேசி :04367---204354
பொறுப்பாளர்: திரு சக்தி மெய்யப்பன்
(விருந்தினர் அறை வசதி உண்டு)

8. கோ.ஆ.பொ. மடாலயம்
பொருள் வைத்த சேரி (புறவச் சேரி)
சிக்கல் (அருகில்) --611 108
தொலைபேசி :04365--245753
பொறுப்பாளர்: திரு ஆர்.  சோமசுந்தரம்
(விருந்தினர் அறை வசதி உண்டு)

9. நாராயண சுவாமி மடம்
முதன்மைச் சாலை
அண்ணா சிலை அருகில்
மானாமதுரை --630 606
சிவகங்கை மாவட்டம்.
பொறுப்பாளர்: மேலாளர் கோவிலூர் மடாலயம்

10. காசிகாநந்த சுவாமி மடம்
மதுரை முதன்மைச் சாலை
திருப்புவனம் --630 611
சிவகங்கை மாவட்டம்
தொலைபேசி: 04575--265684
பொறுப்பாளர்:  திரு இராமநாதன் செட்டியார்

11. குட்டைய சுவாமி மடம்
164, தெற்கு வெளி வீதி,
மதுரை --625 001.
தொலைபேசி: 0452--230017
பொறுப்பாளர்:
திரு அ.வெ.சொக்கலிங்கம் செட்டியார்

12. கா.செ.வேதாந்த மடம்
தெற்கு ரத வீதி
காளையார் கோவில் --623 551
சிவகங்கை மாவட்டம்
தொலைபேசி: 04575 --232108
பொறுப்பாளர்:
திரு அ.வெ.சொக்கலிங்கம் செட்டியார்

13. கோவிலூர் மடாலயம்
50-52, முப்பையா செட்டி தெரு
(மாம்பலம் இரயில் நிலையம், மேட்லி சாலை பாலம் அருகில்)
மேற்கு மாம்பலம், சென்னை --600 033.
தொலைபேசி: 044--24719122
பொறுப்பாளர்:  திரு க.லெ. கண்ணப்பன்
(விருந்தினர் அறை வசதி உண்டு)

14. சுவாமிகளின் சென்னை அலுவலகம்:
கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ்
84, கலாக்ஷேத்ரா சாலை
திருவான்மியூர், சென்னை --600 041
தொலைபேசி: 044 --24521390
பொறுப்பாளர் : திரு மு. பழநி

15. கோவிலூர் வேதாந்த மடம்
(சுவாமி தயானந்த ஆஸ்ரமம் அருகில்)
அ.பெ. எண். 20, புராணி ஜாடி
ரிஷிகேஷ் --249 201
உத்தராஞ்சல்
தொலைபேசி: 0135 --2436968
பொறுப்பாளர்: திருமதி விசாலாட்சி மெய்யப்பன்
(விருந்தினர் அறை வசதி உண்டு)

16. கோவிலூர் வேதாந்த மடம்
20, தெற்கு படேல் நகர்,
படேல் நகர் மெட்ரோ ஸ்டேஷன் அருகில்
புது தில்லி --110 008
பொறுப்பாளர்:  திருமதி விசாலாட்சி மெய்யப்பன்
(விருந்தினர் அறை வசதி உண்டு)

17. கோவிலூர் ஆதீனம் வேதாந்த சென்டர் இன்க்,
சுவாமி தயானந்த ஆஸ்ரமம் அருகில்
அ.பெ. எண். 953145, ரூட் 31 என்
பெனிங்டன், நியூ ஜெர்சி-- 08534
தொலைபேசி: 001--609--4662000
                  001-609-4662622
பொறுப்பாளர்:  திரு ராமு.வீரப்பன்

Innamburan S.Soundararajan

unread,
Feb 8, 2014, 8:33:44 AM2/8/14
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கொஞ்ச நஞ்சமில்லை. எல்லா விவரங்களுக்கும் அருமையாக தொடுக்கப்பட்டுள்ளன.

வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 9, 2014, 12:34:45 AM2/9/14
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

அருமையான செய்திகளைப் பதிவு செய்து வருகின்றீர்கள்.
நன்றி.

2014-02-08 17:01 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
கோவிலூர் திருமடத்தின் கிளை மடங்கள்

குறிப்பு: கோவிலூர் என்னும் பெயரில் தஞ்சை மாவட்டத்தில் இரு ஊர்களும் மதுரை மாவட்டத்தில் ஓர் ஊரும், சேலம் மாவட்டத்தில் ஓர் ஊரும் உள்ளன.  பிற மாவட்டங்களிலும் கோவிலூர்கள் இருக்கக் கூடும்.  எனவே காரைக்குடியை அடுத்த கோவிலூர் என்று குறிப்பிடுவது, ஐயப்பாட்டைத் தவிர்க்க உதவும்.  அஞ்சல்களில், கோவிலூர்--630 307, காரைக்குடி(அருகில்) என்று குறிப்பிட வேண்டும்.

10. காசிகாநந்த சுவாமி மடம்
மதுரை முதன்மைச் சாலை
திருப்பூவணம் --630 611
சிவகங்கை மாவட்டம்
தொலைபேசி: 04575--265684
பொறுப்பாளர்:  திரு இராமநாதன் செட்டியார்
இங்கு,
தை 24ஆம் நாள் (06.02.2014) வியாழக்கிழமை காலை 9.00மணியளவில் 
கும்பஅபிஷகம் சிறப்பாக நடைபெற்றது.

அன்பன்
கி.காளைராசன்

Geetha Sambasivam

unread,
Feb 10, 2014, 4:14:39 AM2/10/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கோவிலூர் மரபில் பாடத்திட்டமாக உள்ள 16 வேதாந்த சாஸ்திரங்கள்

1.நாநாசீவ வாதக் கட்டளை
(சேஷாத்ரி சிவனார் இயற்றியது)

2. கீதாசாரத் தாலாட்டு
(திருவேங்கட நாதர் இயற்றியது)

3. சசிவன்ன போதம்
(எறும்பூர் தத்துவராய சுவாமிகள் இயற்றியது)

4. மஹாராஜத் துறவு
(விருத்தாசலம் குமார தேவர் இயற்றியது)

5. வைராக்கிய சதகம்
(பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் இயற்றியது)

6. வைராக்கிய தீபம்
(பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் இயற்றியது)

7. இலட்சணா விருத்தி
(கருணாநிதி என்னும் சிதம்பர ஞான தேசிகர் இயற்றியது)

8. வேதாந்த சூடாமணி
(துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள் இயற்றியது)

9. கைவல்ய நவநீதம்
(நன்னிலம் தாண்டவராய சுவாமிகள் இயற்றியது)

10. விவேக சூடாமணி
(திருவிடைமருதூர் உலகநாத சுவாமிகள் இயற்றியது)

11. அஞ்ஞவதைப் பரணி
(எறும்பூர், தத்துவராய சுவாமிகள் இயற்றியது)

12. பஞ்ச தசி
(நித்தியானந்த சுவாமிகள் வீர. சுப்பையா சுவாமிகள் இயற்றியது)

13. ஈசுவர கீதை
(எறும்பூர், தத்துவராய சுவாமிகள் இயற்றியது)

14. பிரம்ம கீதை
(எறும்பூர், தத்துவராய சுவாமிகள் இயற்றியது)

15. பகவத் கீதை
(பாட்டனார் இயற்றியது)

16. ஞான வாசிட்டம்
(வீரை.  ஆளவந்தார் இயற்றியது)

குறிப்பு: வீர சைவ மடங்களான பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் மடம் விருத்தாசலம் குமாரதேவர் மடம், ஆகியவற்றில் வெளியிடப் பெற்றுள்ள மூன்று நூல்கள் கோவிலூரில் பாடமாகக் கற்பிக்கப் பெறுகின்றன.  இவற்றின் எண்கள் 4, 5, 6.

Geetha Sambasivam

unread,
Feb 14, 2014, 4:12:24 AM2/14/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt

கோவிலூர் ஆதீனகர்த்தர்கள்

எந்நாட்டவர்க்கும் இறைவனாம் தென்னாடுடைய சிவபெருமான் அருள்மிகு உமையோடு அமர்ந்து அருள் காக்கும் ஆலயங்கள் ஆயிரமாயிரம் இருப்பினும் சிவபெருமான் தன் நாடு எனக் கொண்டது தென்பாண்டி நாடே!

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வீரசேகர பாண்டியன் ஈசனிடம் ஏற்பட்ட ஈடில்லா நேசத்தின் காரணமாக சிவனுக்கு ஸ்தலம் அமைக்க எண்ணி, "ராஜ கட்க பரமேசுவரர்" என்னும் கொற்றவாளீசுவரர் திருநெல்லையப்பன் சமேதராக காரைக்குடிக்கு மேற்கே கோவிலூரில் அமைத்தார்.

இத்திருத்தலம் கிழக்கே திருப்பெருந்துறையும் தெற்கே திருக்கானப்பேரும், மேற்கே திருப்பத்தூரும் வடக்கே திருமெய்யரும் ஆன பாடல் பெற்ற திருத்தலங்கள் சூழ அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க புராணப் பெருமையுடன் விளங்கும் இப்புனிதப்பதி, "ஶ்ரீவல்லபம்", "சமிவன க்ஷேத்திரம்", "வன்னிவனம்", என்னும் சிறப்புப் பெயர்களூடன் "கழனிவாயில்", "ரசத் பெருந்தெரு" "வீரபாண்டியபுரம்", "மருகேந்தீரபுரம்", என்னும் வேறு பெயர்களாலும் புகழ்ந்து பல ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது.  இவ்வூரில் மதுப்பிரிய முனிவர் என்னும் மகான் தவம் செய்த காரணத்தால் இவ்வூர்க்குளத்துக்கு மதுபுஷ்கரணி என்றும் இவ்வூரில் ஓடும் நதிக்குத் தேனாறு என்றும் வேறு பெயர்களும் உண்டு.  இத்தெய்வீகத் திருத்தலத்தை திரிசிரபுரம் ஶ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கோவிலூர்ப் புராணம் என தெள்ளு தமிழில் புகழ்ந்து தலபுராணம் பாடியுள்ளார்.

இன்றைக்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி நகரத்தார் வழியில் தோன்றிய முத்திராமலிங்கம் தன் பெற்றோருடன் நாகப்பட்டினம் அருகில் உள்ள சிக்கலில் வசித்து வந்தார்.  தன் தந்தையுடன் ஒருநாள் அருகிலுள்ள சிற்றூரான பொருள் வைத்த சேரிக்குச் சென்றார்.  அவ்வூரில் நெசவுத் தொழிலை ஜீவனத் தொழிலாகக்  கொண்டு ஶ்ரீ உகந்தலிங்க சுவாமிகள் திருவள்ளுவரைப்போல நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை மூன்று பங்குகளாகப் பிரித்து முதல் பகுதியை மறுநாள் நெய்வதற்கு நூல் வாங்கவும், இரண்டாம் பகுதியை வீட்டுச் செலவுக்கும், மூன்றாம் பகுதியை அடியார்களுக்கு அமுது அளிக்கவும் பயன்படுத்தி வந்தார்.  வேதாந்த நூல்களைக் கற்பித்துப் பலருக்கும் வேதாந்த ஞான உபதேசகராகவும் விளங்கினார்.  இவர் சிருங்கேரி மடத்தின் அருளாளர்களை குருஸ்தானமாகக் கொண்டு ஞான மார்க்கத்தை உபதேசித்து வந்தார்.

முத்திராமலிங்கத்துக்கு ஶ்ரீ உகந்தலிங்க ஸ்வாமிகளிடம் அளவிடமுடியாத பக்தியும், பாசமும் ஏற்பட்டது.  அன்று முதல் அவரும் ஒரு மாணவராகப் பாடம் கேட்டு வந்தார். ஒரு சமயம் வடநாட்டு சாது இவரைச் சந்தித்தபொழுது இவரிடம் உள்ள தெய்வீக உள்ளுணர்வை உணர்ந்து "இவன் உலகத்துக்கே உபதேசிக்கப் பிறந்தவன்" என வாழ்த்தி அனுப்பினார்.  அன்று முதல் முத்திராமலிங்கத்தை எல்லோரும் "ஆண்டவர்" என அழைக்கத் தொடங்கினார்கள்.  வேதாந்த ஞான நூல்களான "நாநாஜீவ வாதக்கட்டளை", "கீதாசாரத் தாலாட்டு", "சசிவன்ன போதம்", "மஹாராஜத் துறவு", "அஞ்ஞைவதைப் பரணி", "வேதாந்த சூடாமணி" , "விவேக சூடாமணி," "பஞ்சதசி", "கைவல்ய நவநீதம்", "ஈசுவர கீதை", பகவத்கீதை", "ப்ரம்ம கீதை" "ஞான வாசிட்டம்", எனும் பதினாறு நூல்களாகும்.  இந்தப் பதினாறாவது நூலான ஞான வாசிட்டத்துடன் பாடம் பூர்த்தி செய்வது முறை.  வசிட்ட முனிவர் ஶ்ரீ ராமபிரானுக்கு உபதேசித்த வேத நூலின் சாரமே இப்பதினாறாவது நூலாகும்.

ஶ்ரீ ஆண்டவர் சுவாமிகள் தன் குருநாதரைப் போலவே சிருங்கேரி  ஆதிசங்கராச்சாரியாரின் மரபில் வந்த அருளாளர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி வந்தார்.  ஞான மார்க்கத்தில் ஈடுபட மனப்பக்குவத் தகுதி தேவை எனவும், வேதாந்தத்தில் பூர்ணத்துவம் பெற மதம், குலம், ஜாதி, சம்பிரதாயங்கள் தடையில்லை என்றும், பக்தியே முக்திக்கு வழி எனவும் உபதேசித்தார்.  கோவிலூரில் வேதாந்த பாடத்தை நிறுவியர் ஶ்ரீ ஆண்டவர் சுவாமிகளேயாகும்.  வேதாந்த வடமொழி நூல்கள் அனைத்தையும் எல்லோரும் எளிதாகப் படித்துப் பக்குவம் பெறத் தமிழிலேயே மொழி மாற்றம் செய்து எளிய தமிழில் பாடங்களைச் சொல்லும் முறையையும் ஏற்படுத்தினார்.  வேதாந்த மடங்களை நிறுவி சாதுக்கள் எவ்வித விசாரமுமின்றி வேதாந்த பாடம் கற்க ஏற்பாடு செய்தார்.

(தொடரும்)

Geetha Sambasivam

unread,
Feb 16, 2014, 4:09:50 AM2/16/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
ஒரு சமயம் ஶ்ரீ ஆண்டவர் சுவாமிகள் திருநெல்லை அம்மன் சமேத கொற்றவாளீசுவரர் கோவிலுக்குத் தரிசனம் செய்யச் சென்றார்.  அங்கு செம்பூரான் கல்லினால் கட்டப்பட்ட அக்கோவில் சுவர்கள் சேதமடைந்து மேல் கீற்றுக் கூரையும் காற்றினால் சரிந்து கிடந்ததைக் கண்ணுற்றார்.  மிகவும் மனம் கலங்கிய நிலையில் எவ்வாறேனும் இவ்வாலயத்தைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ய முடிவு செய்தார்.  ஶ்ரீமத் ஆண்டவனின் எண்ணம் நிறைவேற நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தாராளமாகப்பொருள் உதவி செய்தனர்.  ஶ்ரீமத் ஆண்டவரின் திருக்கரத்தால் வரையப் பெற்று அடிகோலப் பெற்றதான இத்திருக்கோவில் அடுத்து வந்த ஶ்ரீலஶ்ரீ சிதம்பர ஞான தேசிகராலும், திருக்களர் ஆண்டவர் என போற்றப்படும் ஶ்ரீலஶ்ரீ வீரசேகர ஞான தேசிகராலும், ஶ்ரீலஶ்ரீ இராமநாத ஞான தேசிகராலும் திருப்பணி செய்யப்பட்டு, குடநீராட்டு விழா நடத்தி, சீரும் சிறப்பும், வனப்பும் மிக்க ஒப்புயர்வு பெற்ற பெரும் திருக்கோவிலாக எல்லா அங்க அமைப்புகளுடன் நிறை செய்து, சுற்றுவீதிகள், திருக்குளம், மையமண்டபம் நுழைவாயில், ரதக் கூடங்கள், வளைவுடன் கூடிய ரதமேருகள் அனைத்தையும் நிறுவிப் புதுப்பித்து, வேத பாடசாலை, குடியிருப்புகள் ஆகிய நற்பணிகளையும் நகரத்தார் பலரும் பொருள் உதவி செய்யச் செவ்வனே செய்து முடித்தார்கள்.  அரசர்கள் காலத்து கோவில் திருப்பணிகளுக்குப் பின்பு முதல் முதலாகக் கோவில் திருப்பணி செய்தவர் ஆண்டவரே. நாட்டுக்கோட்டை நகரத்தார்களைக் கோவில் திருப்பணியில் முழுமையாக ஈடுபடச் செய்த பெருமை ஶ்ரீமத் ஆண்டவர் சுவாமிகளையே சாரும்.  கோவிலூர் மடத்தில் ஶ்ரீ குட்டைய சுவாமிகள் ஶ்ரீ ஆண்டவரின் சிஷ்யராக விளங்கினார்.  அவர் தேவகோட்டை நகரத்தார் வழியில் ஐந்து வீட்டார் என்னும் குடும்பத்தில் பிறந்தவர்.  ஶ்ரீ ஆண்டவர் இவரை சிவரகசியம் என்னும் நூலில் 25 மூர்த்தம் வைப்பது சிவப்பணி எனக் கூறி மதுரைக்கு அனுப்பி வைத்தார்.  அதை ஶ்ரீ குட்டைய சுவாமிகள் சிறப்பாக நிறைவேற்றி வைத்தார்கள்.

இவர் ஶ்ரீ மீனாட்சி அம்மனுக்கு நாள் தோறும் நிகழும் அர்த்தசாமக் கட்டளையில் மூக்குத்தி மாலை அனுப்பிக் கட்டளை நிறைவேற்றி வைப்பது வழக்கம்.  இவ்வழக்கு இன்றும் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது மடாதிபதியாக தேவகோட்டை ஶ்ரீலஶ்ரீ அருணாசல ஞான தேசிகர் பரிபாலனம் செய்தார்கள்.  மடத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வந்த அவர் ஒன்றரை ஆண்டு காலத்துக்குப் பின் தன் உடன்பிறந்த தம்பி கருணாநிதி என வழங்கும் ஶ்ரீலஶ்ரீ சிதம்பர ஞான தேசிகரிடம் ஒபடைத்தார்.  இவர் ஶ்ரீமத் ஆண்டவர் விட்டுச் சென்ற ஆன்மிகப் பணிகளைத் திறம்படச் செய்து சிதம்பரம்--ஈஸ்வரன் கோவில், மதுரையில் சொக்கநாதர் மீனாட்சி அம்மனின் கும்பாபிஷேஹம், கோவிலூரில் திருக்குளமும், மையமண்டபமும் அமைத்தார்கள்.  லட்சணாவிருத்தி, பிரும்ம நாமாவளி, குரு ஸ்துதி குசுமாஞ்சலி, என்ற நூல்களையும் வெளியிட்டார்கள்.  மடத்துக்கு விளை நிலங்கள், தென்னை தோப்புகள் வாங்கி விஸ்தரித்தார்.  இவரிடம் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் வேதாந்த பாடம் பயின்றார்கள்.  96 ஊர் நகரத்தார்களின் கூட்டம் நடைபெறப் பெரும் கல்யாண மண்டபத்தைக் கோவிலூரில் நிறுவினார்கள்.

இவருக்குப் பின் நான்காவது மடாதிபதியாகக் காரைக்குடி ஶ்ரீலஶ்ரீ ராமசாமி ஞானதேசிகர் பட்டத்துக்கு வந்தார்.  சுமார் ஏழு ஆண்டுகள் இவர் அருளாட்சி செய்தார்.  கோவிலூரில் ஶ்ரீ ஆண்டவர் கோவிலைச் சுற்றி மதில் சுவர் கட்டி, அஷ்டலட்சுமி மண்டபமும் மடத்துக்கு உணவு படைக்கும் கூடமும் கட்டினார்கள். 

ஐந்தாவது மடாதிபதியான திருக்களர் ஆண்டவர் எனப் பெயர் பெற்ற ஶ்ரீலஶ்ரீ வீரசேகர ஞான தேசிகர் அவர்கள் தஞ்சை ஜில்லா மன்னார்குடியை அடுத்துத் திருக்களரில் அமிர்தவல்லி சமேத பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலையும், வேதாந்த மடம், பிரும்ம சபை, நெற்களஞ்சியம், மலர்மிகு நந்தவனம், பசுமடம் ஆகிய திருப்பணிகளைச் செய்தார்.

1908-ஆம் ஆண்டு சிருங்கேரி மடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஶ்ரீ சச்சிதானந்த சிவ அபிநய நரசிம்ம பாரதி முன்னிலையில் திருநெல்லை அம்மன் சமேத கொற்றவாளீசுவரர் குட நீராட்டு விழாவைச் சிறப்பாகச் செய்தார்கள்.  சிருங்கேரியில் சாரதாம்பாள் கோவிலையும் கருங்கற்களால் நிர்மாணித்து இத்திருப்பணிச் செலவும் முழுவதும் கோவிலூர் மடத்தின் மூலமாகவே செலவு செய்தார்கள்.  இன்றும் சாரதாம்பாள் கோவிலும் திருநெல்லையம்மன் ஆலயமும் ஒரே மாதிரித் தோற்ற அமைப்பில் உள்ளதைக் காணலாம்.  திருக்களரில் பஞ்ச மூர்த்திகளுக்கு ஐந்து தேர்கள் செய்து வைத்தார்கள். இவருக்கு ராஜரிஷி என்ற பட்டமும் உண்டு.  சிருங்கேரி பீடத்திற்கும் கோவிலூர் மடத்துக்கும் இவர் காலத்தில் மிக்க நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

(தொடரும்)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 17, 2014, 5:20:31 AM2/17/14
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Mar 15, 2014, 5:14:02 AM3/15/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
திருநெல்லையம்மன் சந்நிதியில் எதிரே உள்ள மஹாமண்டபம், சிற்ப விசித்திர வேலைப்பாடுகளுடன் கூடியது.  ஒரே கல்லினால் செய்த தூண்களில் அதிசயிக்கும்படியான சிற்ப வடிவமைப்புக்களைக் காணலாம்.  ஒரு தூணில் ஶ்ரீ சாரதாதேவி அலங்கார பூஷிதையாக தரிசனம் தர, மற்றொன்றில் ஊர்த்துவ தாண்டவராஜாவின் பாதங்களுக்கு அருகில் காரைக்காலம்மையார், வேறு தூணில் குடமுழா வாசித்துக் கொண்டு கரம் குவித்த நிலையில் பிரம்மா, மீனாட்சி கல்யாணச் சிற்பம், எல்லாவற்றையும் ஶ்ரீமத் ஆண்டவன் அம்பாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து சரணாகதி தத்துவத்தை விளக்கி, ஞானத்தை விட பக்தியே சிறந்தது பக்தி செய்தாலே முக்தி என்னும் பிறவிப் பயனை அடையலாம் என்ற தத்துவத்தை இச்சிற்பம் வலியுறுத்துகிறது.

நான்காவது பட்டம் வரை மடாதிபதிகள் முழங்கால் வரை வெண்மையான வஸ்திரமும், கழுத்தில் வெண்மையான ரிப்பன் போன்ற துணியில் உத்திராட்சம் அணியும் வழக்கம் இருந்து வந்தது.  ஐந்தாவது மடாதிபதியான ஶ்ரீ திருக்களர் ஆண்டவர் சிருங்கேரி குரு பீடத்தின் முறையைப் பின்பற்றிக் காவி உடையையே அணியலானார்.   இன்று வரை அப்பழக்கம் கோவிலூர் மடாதிபதிகளால் அனுசரித்து வரப்படுகிறது.  இவரிடம் உள்ள வாக்கு பலித்ததால் எல்லோரும் இவரை மிகவும் போற்றி மதித்தனர்.  கோவிலூர் மடம் மேலும் விஸ்தரிக்கப்பட்டு திருவண்ணாமலை, பொருள் வைத்த சேரி, திருக்களர், சிதம்பரம், திருப்புவனம் ஆகிய ஊர்களிலும், கிளை மடங்களாக வளவனூர், மேட்டுப்பாளையம், எறும்பூர், தத்துவராய சுவாமிகள் மடம், காரியனூர், மதுரை போன்ற ஊர்களிலும் பரவியது.

இவர் அருளாட்சி செய்த காலத்தைப் பொற்கால ஆட்சி என மக்களால் புகழப்படுகிறது.  கல்கி பத்திரிகையில் காஞ்சி பரமாச்சாரியார் இவரை துர்வாச முனிவரின் மறு அவதாரம் எனப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.

அதன் பின் ஆறாவது மடாதிபதியாக தேவகோட்டை ஶ்ரீலஶ்ரீ அண்ணாமலை ஞான தேசிகர் பட்டத்துக்கு வந்தவுடன் திருக்களர்  ஆண்டவர் விட்டுச் சென்ற தெய்வீகத் திருப்பணிகளை நிறைவு செய்தார்கள்.  சிருங்கேரியில் நரசிம்ம பாரதி சுவாமிகளின் சமாதிக்குக் கோயில் எழுப்பினார்.  இவர் காசியில் இருந்தபொழுது இருவருக்கும் நெருங்கிய ஆன்மிகத் தொடர்பு உண்டு. சிருங்கேரியில் ஶ்ரீ சாரதா தேவிக்குக் கும்பாபிஷேஹம் நடக்க ஏற்பாடு செய்தார்.  மைசூர் மஹாராஜா கிருட்டின இராஜேந்திரர் இவரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று கெளரவித்துள்ளார்கள்.

ஏழாவது மடாதிபதியாக தேவகோட்டை ஶ்ரீலஶ்ரீ மகாதேவ ஞான தேசிகர் தன் குரு திருக்களர் ஆண்டவர் ஊரான திருக்களரில் மடாலயத்தையும் ஆண்டவர் சமாதிக் கோவிலையும் சிறப்பித்து இரண்டிலும் அமுதுபடி செலவும் நடத்தி வந்தார்கள்.  விளை நிலங்கள் சுமார் நானூறு ஏக்கருக்கும் மேல் இவர் காலத்தில் வாங்கப் பெற்றது.  நானூறு மாணவர்கள் இவர்களிடம் வேதாந்த பாடம் கற்றுப் பல கிளை மடங்களை உருவாக்கியுள்ளார்கள். அந்நாளில் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகளும், ஶ்ரீ ரமண மஹரிஷிகளும் திருவண்ணாமலை மடத்தில் தினமும் இவரிடம் சம்பாஷித்து மடத்தில் தினமும் உணவு அருந்திச் சென்றுள்ளார்கள்.  மூலிகைகளைக் கொண்டு மருந்துகள் தயாரித்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்து குணப்படுத்தி வந்துள்ளார்கள். இவர் காலத்தில் கோவிலூர் மடம் சீரும் சிறப்புமாக ஆன்மிகப் பொலிவுடன் சிறந்து விளங்கியது.

அதன் பின் எட்டாவது மடாதிபதியாகக் காரைக்குடி ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஞானதேசிகர் பட்டத்துக்கு வந்தார்கள்.  

இவர் கோவிலூர், சிதம்பரம், எறும்பூர், திருக்களர், பொருள் வைத்த சேரி மானாமதுரை ஆகிய பல மடங்களுக்கும் தாமே ஏக மடாதிபதியாக இருந்து பரிபாலனம் செய்தார்கள்.  சிருங்கேரி மடாதிபதி ஒரு சமயம் இவரிடம் எல்லாத் திருப்பணிச் செலவுகளையும் கோவிலூர் மடத்தின் மூலமாகவே சிருங்கேரியில் செலவிடுகிறீர்கள்.  கோவிலூர் மடத்தையும் கவனிக்க வேண்டாமா எனக் கனிவுடன் கூறியுள்ளார்.

அதன் பின் ஒன்பதாவது மடாதிபதியாகப் பட்டத்துக்கு வந்த ஶ்ரீலஶ்ரீ ராமநாத ஞான தேசிகர் கோவிலூர் மடத்தைத் தற்கால வசதிக்கேற்ப நவீன முறையில் புதுப்பித்து இருமுறை மலாய் நாடு சென்று பொருள் ஈட்டி வந்து திருவண்ணாமலை அம்பாள் கோவிலுக்குத் தேர் செய்து வைத்தார்கள். திருவண்ணாமலையில் சேவாஸ்ரமம் நிறுவி, ஏழை மாணவர்களுக்குக் கல்வியும் உறைவிடம், உணவு, சீருடை அளித்து ஆங்கில மொழிப் பயிற்சியும் அளித்து வந்தார்கள்.  இன்று அப்பள்ளி மிகவும் வளர்ச்சியடைந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இளமையிலிருந்தே சுவாமிகளுக்கு அருணகிரி நாதரிடம் ஈடுபாடு அதிகம்.  முதன்முதலில் திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு விழா துவக்கியதோடு, ஆண்டு தோறும் அவ்விழா சிறப்புற நடத்தப் பேராதரவும் கொடுத்து வந்தார்கள்.  கோவிலூரில் இவர் காலத்தில் முகப்புத் தேர் மண்டபங்கள் பழுது பார்க்கப்பட்டன.

கோவிலூர் ஶ்ரீ ஆண்டவர் மடத்துக்குப் பத்தாவது மடாதிபதியாக ஶ்ரீலஶ்ரீ அரு.ராமநாத ஞான தேசிகர் பரிபாலனம் செய்தார்.  அதன் பின் 1986--ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16--ஆம் நாள் ஶ்ரீ காசி விஸ்வநாத ஞான தேசிகர் அவர்கள் பட்டத்துக்கு வந்தவுடன் எல்லா மடங்களையும் கோவிலூர் மடத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து, அந்தந்த மடங்களின் வரவு செலவுகளைச் சீர் செய்து அந்தந்த மடமே செலவிட உத்தரவிட்டார். மாதந்தோறும் சிந்தனைப் பூங்கா நடத்த ஏற்பாடு செய்தார்.  சிதைந்து போன தேர்களைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்துள்ளார்.  வேதாந்த வகுப்புகள், மக்கள் சேவை, ஏழை மாணவர்களுக்குக் கல்வியுடன் உணவு, உடை, மருத்துவச் செலவு ஆகிய எல்லா உதவிகளையும் செய்தார்.

திருமந்திரம், சித்தர் பாடல் ஆகியவற்றில் எந்நேரமும் ஆழ்ந்த பற்றும், கற்பதும் கேட்பதும் முருகனின் அற்புதம் எனக் கந்தனின் திருமந்திரத்தை எல்லோருக்கும் உபசரிப்பார்.  தேவி, தேவி என ஆசீர்வதித்துத் திருநீறு இட்டு மனமுருக வாழ்த்துவார்.  குழந்தைகளிடம் ஆன்மிக உணர்வு வளரத் தம்பி, பாப்பா, படித்துப் பாரு எனப் புத்தகங்கள் இன்னும் பல ஆன்மிக உணர்வு கொண்ட புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்கள்.

தற்போது பன்னிரண்டாவது மடாதிபதியாகப்பொறுப்பேற்று இருப்பவர் ஶ்ரீலஶ்ரீ நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்.

நம் நகரத்தார் பெருமக்களை, மன்னர் பின்னோராக ஆலயத்திருப்பணீகளில் ஈடுபடச் செய்தவர்களும் உலகம் முழுவதும் வேதாந்தத்தைப் பரப்பிய கோவிலூர் திருமடத்தை உருவாக்கியவர்களுமான, கோவிலூர் ஆண்டவர் என வழங்கும் ஶ்ரீலஶ்ரீ முத்திராமலிங்க ஞான தேசிக சுவாமிகளின் மகன் வழி 6 ஆவது தலைமுறைப் பேரன் ஆவார்கள் நமது நாச்சியப்ப சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Innamburan S.Soundararajan

unread,
Mar 15, 2014, 8:50:17 AM3/15/14
to mintamil, Subashini Tremmel, valli N, Koviloor Mutt
வைகறையில் நல்லதொரு வருகை நன்நிமித்தமாக அமைந்தது. கட்டி வைத்துக்கொண்டேன்.

1.மூக்குத்தி மாலை அனுப்பிக் கட்டளை நிறைவேற்றி வைப்பது வழக்கம்.  இவ்வழக்கு இன்றும் நடைபெற்று வருகிறது. 
~ மேலதிக விவரம் வேணுமே.
2.ஶ்ரீலஶ்ரீ நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்.
~ இவர்கள் தானே பிரபல ஃபோட்டோகிராஃபர், பூர்வாசிரமத்தில்? மேலதிக விவரம் வேணுமே.

அன்புடன்,
இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Mar 15, 2014, 11:19:08 PM3/15/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
கட்டுரைகளின் ஆரம்பப் பகுதியில் இவரைக் குறித்த தகவல்கள் கிடைக்கும் ஐயா.  அல்லது மரபு விக்கியிலும் இணைத்துள்ளதால் அங்கேயும் ஆதீனங்கள் என்னும் தலைப்பில் கோவிலூர் ஆதீனம் என்னும் உப தலைப்பில் கிடைக்கும்.  மத்தியானமாய்ச் சுட்டியை இணைக்கிறேன்.

Geetha Sambasivam

unread,
Mar 16, 2014, 5:19:06 AM3/16/14
to மின்தமிழ், Subashini Tremmel, valli N, Koviloor Mutt
காரைக்குடியில் பிறந்த பிள்ளையார்பட்டிக் கோவிலைச் சேர்ந்த நாச்சியப்ப சுவாமிகள் தமது 15 ஆவது வயதில், காரைக்குடிக்கு இனி வருவது இல்லை என்ற வைராக்கியத்துடன் சென்னை வந்து, திருவான்மியூர் "கலாக்ஷேத்ரா"வில் திருமதி ருக்மிணி அருண்டேல் அம்மையாரின் ஆதரவில் படிப்பை முடித்து, அம்மையார் நிறுவிய ஆலமரம் போன்ற கலாக்ஷேத்ரா தொண்டு நிறுவனத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு சிறு வயது முதலே தொண்டு மனப்பான்மையுடன் வளர்ந்தவர்கள்.

அச்சுக்கலையின் நுணுக்கங்களை ஜெர்மன் நாட்டுக்குச் சென்று பயின்று கலாக்ஷேத்ராவின் ஓர் அங்கமான, "கலாக்ஷேத்ரா அச்சகம்" மற்றும் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகியாக நீண்டகாலம் பணியாற்றிப் பின்னாளில் அம்மையாரின் ஆசியோடு அதன் உரிமையாளராக ஆனார்கள்.

அச்சுக்கலையிலும், புகைப்படக்கலையிலும் கை தேர்ந்த நிலையில் வெளிநாட்டு நூல்களுக்கு இணையாக இங்கு சென்னையில் பதிப்பித்து நூல்களை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தமது அயராத உழைப்பின் மூலம் பெரும் பொருள் ஈட்டினார்கள்.

கோவிலூர் ஆதீனமாகத் தாம் பொறுப்பேற்று இருப்பது தமக்கு குருநாதர் இட்ட கட்டளை என்ற பணிவோடும், கோவிலூர் மடத்தை மகாதேவ ஞான தேசிகர் காலத்தில் இருந்தது போல் ஆன்மிகக் கல்வி வழங்கும் தலை சிறந்த மடமாக விளங்கச் செய்ய வேண்டும் என்ற துடிப்போடும் நிர்வகித்து வருகிறார்கள்.

திருநெல்லையம்மை தம்மை இந்த நோக்கம் நிறைவேற ஒரு தொண்டனாகவே பணி செய்ய வாய்ப்புத் தந்திருக்கிறார் என்று நம்பிப் பல பணிகளைத் தொடங்கி இருக்கிறார்கள் சுவாமிகள்.

சுவாமிகள் மடாதிபதியாகப் பதவி ஏற்ற தினமே கோவிலூரில் ஒரு சிறுவர் பள்ளி தொடங்கப்பெற்றது.

குழந்தைக்கல்வியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நாச்சியப்ப சுவாமிகள் சின்னஞ்சிறு வயதில் வெறும் ஏட்டுக்கல்வி கற்றுக் கொடுப்பது மட்டும் போதாது நல்லொழுக்கம், தெய்வபக்தி, கலைத்திறமை, கைவினைத் திறன் இவற்றையும் சொல்லிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத உறுதி உடையவர்கள்.

கோவில்கள் இருக்கின்றன. மக்களுக்குப் பக்தியும் இருக்கிறது.  ஆனால் கோவிலில் பணி செய்வோர் குறைந்து வருகிறார்கள்.  போதிய ஊதியம் இன்மை தான் காரணம்.  பல்லாயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வேரூன்றிய கோவில் கலாசாரம் நம் கண் எதிரே மங்கிக் கொண்டு வருகிறதே எனக் கவலை கொண்ட சுவாமிகள், மேல் நாட்டினர் பலர் பொருளாதார வளர்ச்சியினால் மட்டுமே வாழ்க்கை செம்மையாக அமைய முடியாது என்பதை உணர்ந்து ஆன்மிக அனுபவத்தைத் தேடி பாரத நாட்டை நோக்கி வருகிறார்கள் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

அப்படி இருக்கும்போது நமது நாட்டில் ஆன்மிகம் தழைத்தோங்க என்னென்ன செய்ய வேண்டும்?

தவத்திரு நாச்சியப்ப சுவாமிகள் மடாதிபதியாகப் பதவி ஏற்ற மூன்று மாதத்துக்குள் கோவிலூரில் வேதாகமப் பாடசாலை, திருமுறைக்கல்லூரி, நாதசுரத்  தவில் இசைக்கல்லூரி எல்லாம் தொடங்கப்பெற்றுள்ளது.  மேலும் தேர் செய்யும் பயிற்சிக்கூடம், வாகனங்கள் செய்முறை, திருவாபரணங்கள் செய்முறை போன்றவை கற்றுக் கொடுக்க வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்துள்ளார்கள்.  தேர் வாகனக் கல்லூரி, சிற்பக்கல்லூரிகள் தொடங்கப் பெற்றன.

தென் நாட்டுக் கோவில்களும் கோவில்களைச் சார்ந்து வளர்ந்த எல்லாக் கலைகளும் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும், நாட்டில் ஆன்மிகம் தழைக்க வேண்டும்.  இந்தியப் பண்பாடு நிலைபெற வேண்டும் என்பதை எல்லாம் குறிக்கோளாகக் கொண்டு ஶ்ரீலஶ்ரீ நாச்சியப்ப சுவாமிகள் பாடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கோவிலூர் மடாலயம் ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ வேண்டும் என்று பெரு விருப்பம் கொண்டு செயலாற்றி வருகிறார்கள்.

இந்த எண்ணத்தைச் செயலாக்கும் பொருட்டு முதலில், இந்தியப் பண்பாடு--ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Indology) என்ற ஆய்வு மையத்தை நிறுவியுள்ளார்கள்.  இதன் மூலம் நாடு தழுவிய பண்பாடுகளையும் மரபுகளையும் ஆராய்ச்சி செய்யவும் நூல்கள் வெளியிடவும், அ/றிஞர்களை ஊக்குவிக்கவும் மொழிகளையும் மற்ற பல வேறுபாடுகளையும் கடந்து இந்த ஆராய்ச்சிகள் நடைபெறவும் தவத்திரு நாச்சியப்ப சுவாமிகள் திருவுளம் கொண்டு பணி புரிந்து வருகிறார்கள்.

இதற்கு அடுத்து "சனாதன தர்ம உலகப் பல்கலைக் கழகம்" ஒன்றைக் கோவிலூரில் 250 ஏக்கர் நிலப்பரப்பிலும் ஆரம்பிக்கப் பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  சனாதன தர்மத்துக்கு உட்பட்ட எல்லாக் கலைகளையும் மொழிகளையும் இலக்கியங்களையும் பழம்பெரும் சின்னங்களையும் ஆராய்ந்து வெளியிட இப்பல்கலைக் கழகம் ஊக்குவிக்கும்.

இந்திய நன்னாட்டின் மேம்பாட்டுக்காகவும் சனாதன தர்மத்தை நிலை நிறுத்தவும் கோவிலூர் தவத்திரு நாச்சியப்ப சுவாமிகள் மேற்கொண்டுள்ள இந்தப் பணிகளுக்கு உலகம் முழுவதிலுமுள்ள அன்பர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறோம்.

It is loading more messages.
0 new messages