அய்யாவா? ஐயாவா?

350 views
Skip to first unread message

kalairajan krishnan

unread,
Feb 22, 2011, 6:13:05 AM2/22/11
to mintamil, tamil_ulagam
சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர்.
ஆனால், சிலர் "அய்யா" என்று எழுதுகின்றனர்.

எப்படியும் எழுதலாம் என்பது ஒருமுறை,
இலக்கணம் இப்படித்தான் கூறுகிறது, எனவே, அப்படித்தான் எழுத வேண்டும்
என்பது ஒருமுறை,

எதுசரி?

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமைந்த
அய்யனரா? ஐயனரா? என்ற கட்டுரையின் ஒருபகுதியை இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன்,

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி"
தமிழ்க்குடியாகும். உயிர் உடல் ஆயுதம் இவற்றோடு தோன்றிய தமிழர் தாம்
பேசும் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும். மெய்யெழுத்துக்களையும்
ஆயுத எழுத்துக்களையும் உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை
வளர்த்துள்ளனர்,

ஒரு இயந்திரத்தைத் தயாரித்தவர், அதற்கான Operation Manual கொடுப்பது
போன்று, சங்கத்தமிழர் தமிழுக்கு இலக்கணம் ஏற்படுத்திக்
கொடுத்துள்ளனர்,

தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள்
என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள்
ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை
அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம்
ஒலிக்கும். எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப்
பெற்றனவாகத் திகழ்கின்றன. உதாரணமாக "மகன்" என்று சொல்லுக்கும் "மகான்"
என்ற சொல்லுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. பகவனுக்கும்
பகவானுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வாறாகப் பல உதாரணங்களைக் கூறலாம்,
எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது
குறைத்தாலோ பொருள் மாறுபடும்.

சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர்.
ஆனால், சிலர் "அய்யா" என்று எழுதுகின்றனர்.

ஐயா என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத் தாகும். இரண்டு மாத்திரை அளவு
உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ள தாகும். "ய்"
என்பது மெய் யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று
எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.

ஐ நெடில் = 2 அளவு
அ குறில் = 1 அளவு
ய் ஒற்று = ½ அளவு
அய் = 1+½ = 1 ½ அளவு

"ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயா" என்றால் "தலைவா" என்று
மரியாதை நிமித்தமாக அழைப்பது என்று பொருள்.

"அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை. "அய்யா" என்றாலும் பொருள் ஏதும் இல்லை!

எனவே மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தும் ஒரு சொல்லைக்
குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும்.
நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும்.
எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும்.
"அய்யா" என்ற பொருளற்ற சொல்லைத் தவிர்க்கலாம்,

அன்பன்
கி. காளைராசன்

--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/

அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

வேந்தன் அரசு

unread,
Feb 22, 2011, 7:29:08 AM2/22/11
to mint...@googlegroups.com


22 பிப்ரவரி, 2011 6:13 am அன்று, kalairajan krishnan <kalair...@gmail.com> எழுதியது:

சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர்.
ஆனால், சிலர் "அய்யா" என்று எழுதுகின்றனர்.

எப்படியும் எழுதலாம் என்பது ஒருமுறை,
இலக்கணம் இப்படித்தான் கூறுகிறது, எனவே, அப்படித்தான் எழுத வேண்டும்
என்பது ஒருமுறை,

 
மாத்திரை கணக்குப்படி ஐயா என்பதுதான் சரி. தொல்காப்பியர் ஐக்கு மாத்திரை விலக்குககள் கொடுத்து இருப்பதாக கேள்வி.
 
ஆனால் ஐ அளபெடை எடுக்கலாம்
அய் எடுக்குமா?
 
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

devoo

unread,
Feb 22, 2011, 6:51:46 AM2/22/11
to மின்தமிழ்
ஐயா அவர்கள் சொல்வதே சரி.

அரனவனிடத்திலே ஐங்கரன் வந்து தன் *ஐய *என் செவியை மிகவும் அறுமுகவன்
கிள்ளினான் என்றே சிணுங்கிடவும்
அத்தன் வேலவனை நோக்கி.....

*ஐய* எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுகவே......


*ஐய* நின்னுடை அன்பர்கள் எல்லாம்
அழிவில் இன்பமுற் றருகிருக்
கின்றார்
வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
வீணனேன்இங்கு வீழ்கதிக்
கிடமாய்
வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
வருவ தோர்ந்திலன் வாழ்வடை
வேனோ
செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
தில்லை ஓங்கிய சிவானந்தத்
தேனே


*ஐய* இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
வெய்ய நெஞ்சினர் எட்டொனா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே

இதில் துய்ய, வெய்ய, செய்ய என அடுத்தடுத்து வரினும் முதலில் ‘அய்ய’ என்று
ஆளப்படவிலை.

பெரியோர்கள் சென்றதே பாதை - மஹாஜநா: யேந கதோ ஸ பந்தா:

நாம் என்ன ‘பந்தா’ பண்ணினாலும் எடுபடாது


தேவ் 


On Feb 22, 5:13 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:

> திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,http://www.freewebs.com/thirupoovanam/

kalairajan krishnan

unread,
Feb 23, 2011, 6:03:48 AM2/23/11
to mint...@googlegroups.com
ஐயா ​வேந்தன் அரசு அவர்களுக்கு வணக்கம்,

> மாத்திரை கணக்குப்படி ஐயா என்பதுதான் சரி. தொல்காப்பியர் ஐக்கு மாத்திரை
> விலக்குககள் கொடுத்து இருப்பதாக கேள்வி.

ஐயா, விளக்கம் கீழே உள்ளது,

> ஆனால் ஐ அளபெடை எடுக்கலாம்

எடுத்தாலும், எழுதும் போது "ஐ" என்றுதான் எழுத வேண்டும்,
உச்சரிப்பில்தான் அளபெடை நிகழும்,


ஐகாரக் குறுக்கம்,(தமிழ் இணைய பல்கலைக்கழகத்தில் முகவரியில் உள்ளபடி)
ஐகாரக் குறுக்கம் தொடர்பாகக் காரிகையில்
சொல்லப்படாத ஒரு விதியை மாணவர்கள் தெரிந்துகொள்ள
வேண்டும். சொல்லின் முதல், இடை, கடை என
மூன்றிடங்களிலும் ஐகாரம் குறுகும் என்பது இலக்கணம்.
அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினால் ஐயர் என்பதை
அயர், ஐயிரு என்பதை அயிரு என்பனபோல அலகிட
வேண்டியிருக்கும். ஆகவே சில இலக்கண ஆசிரியர்கள்
மொழி முதலில், அதாவது சீரின் முதலில் வரும் ஐகாரத்தை
நெடில் போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
கொண்டு தனியே பிரித்து நேரசையாகக் கொள்ள வேண்டும்
என இலக்கணம் வகுத்துள்ளனர். ஐயர் > ஐ-யர்; ஐயிரு >
ஐ-யிரு என அலகிட வேண்டும்.

எடுத்துக்காட்டு :


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். - (திருக்குறள் - 774)

(பறியா = பறித்து ; நகும் = சிரிப்பான்)

மேற்காட்டிய வெண்பாவில் கைவேல் என்பதில் சீரின்
முதலில் உள்ளது ஐகாரக்குறுக்கமே யாயினும் கை-வேல் எனத்
தனி நேரசையாக அலகிட்டால்தான் வெண்பா இலக்கணம்
அமையும். (குறில்போலக் கொண்டு நிரையசையாக அலகிட்டால்
இலக்கணம் சிதையும்.)

எனவே
அய்யா என்று எழுதுவது பிழையாகும்,
ஐயா என்று எழுதுவதே நலமாகும்,

அன்பன்
கி.காளைராசன்

வேந்தன் அரசு

unread,
Feb 23, 2011, 7:06:43 AM2/23/11
to mint...@googlegroups.com


23 பிப்ரவரி, 2011 6:03 am அன்று, kalairajan krishnan <kalair...@gmail.com> எழுதியது:

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். - (திருக்குறள் - 774)

(பறியா = பறித்து ; நகும் = சிரிப்பான்)

   மேற்காட்டிய வெண்பாவில் கைவேல் என்பதில் சீரின்
முதலில் உள்ளது ஐகாரக்குறுக்கமே யாயினும் கை-வேல் எனத்
தனி நேரசையாக அலகிட்டால்தான் வெண்பா இலக்கணம்
அமையும். (குறில்போலக் கொண்டு நிரையசையாக அலகிட்டால்
இலக்கணம் சிதையும்.)

எனவே
அய்யா என்று எழுதுவது பிழையாகும்,
ஐயா என்று எழுதுவதே நலமாகும்,
 
மேலும் அய்யா நீளம் அதிகம்
 
 
கதையால் என்று எழுத கதயால் எழுதணுமோ? அல்லது கதய்யால்?--
 
ஏற்கன்வே ஒற்று பிரச்சனை. இனி இரட்டு பிரச்சனை.

kalairajan krishnan

unread,
Feb 23, 2011, 7:18:19 AM2/23/11
to mint...@googlegroups.com
ஐயா ​வேந்தன் அரசு அவர்களுக்கு வணக்கம்
>
> மேலும் அய்யா நீளம் அதிகம்
>
>
> கதையால் என்று எழுத கதயால் எழுதணுமோ? அல்லது கதய்யால்?--
>
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்,

இந்த "அய்யா" என்ற வார்த்தை நமது தமிழில் எந்த நூலிலும் கிடையாது,
பின் எப்படி வந்தது? எப்போது வந்தது?

வேந்தன் அரசு

unread,
Feb 25, 2011, 10:22:55 PM2/25/11
to mint...@googlegroups.com
நடிகர் விஜய் சரியா விஜை சரியா?
 
--

Raja sankar

unread,
Feb 25, 2011, 10:45:33 PM2/25/11
to mint...@googlegroups.com
//இந்த "அய்யா" என்ற வார்த்தை நமது தமிழில் எந்த நூலிலும் கிடையாது,//

தமிழ் மொழி சீர்திருத்தம் செய்த ஈ வே ராமசாமி என்பவரால் வந்தது.  இன்றும் அவரருடைய தொண்டரடிப்பொடிகள் "ஐ" ஐ அய் என்று தான் எழுதுகிறார்கள். 

தமிழ் காட்டுமிராண்டி பாஷை எனும் கருத்து வைத்திருக்கும் ஆட்கள் சீர்திருத்தம் செய்கிறேன் என்று கிளம்பினால் இப்படிதான். 

ராஜசங்கர்

2011/2/23 kalairajan krishnan <kalair...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 9:09:30 AM2/26/11
to mint...@googlegroups.com


25 பிப்ரவரி, 2011 10:45 pm அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:

//இந்த "அய்யா" என்ற வார்த்தை நமது தமிழில் எந்த நூலிலும் கிடையாது,//

தமிழ் மொழி சீர்திருத்தம் செய்த ஈ வே ராமசாமி என்பவரால் வந்தது.  இன்றும் அவரருடைய தொண்டரடிப்பொடிகள் "ஐ" ஐ அய் என்று தான் எழுதுகிறார்கள். 

தமிழ் காட்டுமிராண்டி பாஷை எனும் கருத்து வைத்திருக்கும் ஆட்கள் சீர்திருத்தம் செய்கிறேன் என்று கிளம்பினால் இப்படிதான். 
 
 
தமிழ் காட்டு மிராண்டி பாசைதான்
 
கல் தோன்றி மண்தோன்றா காலத்தே காட்டுமிராண்டிதான் புவிமிசை இருந்திருப்பான்
 
பெரியார் சொன்னதாலேயே எற்பவனும் அல்லன்
பெரியார் என்பதாலேயே எதிர்ப்பவனும் அல்லன்
 
 
--

Tthamizth Tthenee

unread,
Feb 26, 2011, 9:22:54 AM2/26/11
to mint...@googlegroups.com
இன்னுமொரு சந்தேகம்

அய்யா?  ஐயா?  அல்லது  ஐய்யா?

எது சரி?

அன்புடன்
தமிழ்த்தேனீ
2011/2/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2011, 9:33:30 AM2/26/11
to mint...@googlegroups.com


26 பிப்ரவரி, 2011 9:22 am அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதியது:

இன்னுமொரு சந்தேகம்

அய்யா?  ஐயா?  அல்லது  ஐய்யா?
 
தேனீ ஐயா ஏற்கனவே ஒற்று தொல்லையால் தமிழ்ப்பிள்ளைகள் வாடுகிறார்கள்
இது என்ன இரட்டு பிரச்சனை?
  
 முன்னமே,
 
கதையால் என்று எழுத கதயால் எழுதணுமோ? அல்லது கதய்யால்?--
 
என்று கேட்டு இருக்கேன்
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages